ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்-இரண்டாம் அத்யாயம் -ஸ்ரீ லீலா ஸூகாச்சார்யார்–

அபி நவ நவநீத சினிகம அபீத துக்தம் -ததி கண பரி திக்தம் முக்தமங்கம் முராரே
திசது புவன க்ருஷுர சேதி தபிஞ்ச குச சாவீ நவ சிகி பிஞ்ச லஞ்சிதம் வஞ்சிதம் வா -2 -1–
கடை வெண்ணெய் உண்ணும் கண்ணன் -மயில் பீலி தரித்த கேசா பாசம் -நீல மேக ஸ்யாமளன் -பிறவி துயர் போக்கவே ஆவிர்பாவம் –

யம் த்ருஷ்ட்வா யமுனாம் பிபாசுர நிஸாம் வ்யூஹோ கவாம் ஹாகதே-வித்யுத் வனிதி நீல கண்ட நிவஹோ யம் த்ருஷ்டும் உள் காந்ததே
உத்தம் சாய தமல பல்லவமிதி யாம் சிந்ததி யம் கோபிக்-காந்தி காளிய சசநஸ்ய வபுஷஸ்ச பவனி பது ந –2-2-
அவன் தேஜஸ் தடாகம் -யமுனா நீர் போலே குடிக்க ஆ நிரைகள்–மேக சியாமள திரு மேனி கண்டு மயில்கள் தொகை விரித்து ஆடுமே –
மயில் பீலி புது இலை என்று நினைத்து கோபிகள் தங்கள் காதுகளில் வைப்பர் -அவன் தேஜஸ் தானே காளியனையும் முடித்தது –

தேவ பயத் பயசி விமலே யாமுனே மஜ்ஜதீனம் -யாசந்தி நாமனு நய பதைர் வஞ்சிதன்யம் ஸுகாணி
லஜ்ஜை லோலை ரலசை விலஸை ருன்மிஷத் பஞ்ச பாணைர் கோப ஸ்த்ரீனாம் அநந்ய குசுமைர் அர்ச்சித கேசவோ ந -2–3-
கோபிகள் வஸ்திர அபகரண லீலானுபவம் –

மாதர் நாத பரம் அநு சித்தம் யத் கலானாம் புரஸ்த-தஸ்த சங்கம் ஜடரா பிடரி போர்தே வர்த்திதசி
தத் ஷந்தவ்யம் சஹஜ சரலே வத்சலா வாணி குர்யாம் பிராயச்சித்தம் குண கண நயாகோப வேஷஸ்ய விஷ்ணோ -2–4-
நம் நாதன் அன்றோ உன் மகன் ஆனான் –

அங்குலி அக்ரை அருண கிரணைர் முக்த சம்ருத்தந்தரம் வாரம் வாரம் வதன மருதா வேணு நாத பரன்ன
வித்யா ஷங்கிரும் விகாச கமலாச்சயா விஸ்தார நேத்ரம் -வந்தே வ்ருந்தாவன ஸூ சரிதம் நந்த கோபால ஸூநும்-2–5-
வேணு நாதம் அம்ருதம் கொடுக்கும் திரு விரல் திரு நகங்களை அனுபவிக்கிறார் –

மந்தம் மந்தம் மதுர நினதைர் வேணு மபூரயந்தம் -வ்ருந்தம் வ்ருந்தாவன புவிகவாம் சரயந்தம் சரந்தம்
சந்தோ பாஹே சத மக முக த்வம்சினாம் தனவானாம் ஹந்தரம் தாம் கதய ரசனே கோப கன்யா புஜங்கம் -2–6-
ஆநிரை -மேய்த்து -கானம் இசைத்து -விரோதி நிரசன சீலனை அனுபவிக்கிறார் –

வேணி மோலே விரசித கனஷ்யாம பிஞ்சவா சூடோ -வித்யுலேகா வலயித திவ ஸ்நிக்த பீதாம்பரேண
மா மாலிங்கன் மரகத மணி ஸ்தம்ப கம்பீர பாஹு ஸ்வப்ன த்ருஷ்டஸ் தருண துளசி பூஷனோ நீல மேக -2–7-
பீதாம்பரம் -மயில் பீலி சூடிய கேச பாசம் -மேக ஸ்யாமளன் -திரு துளசி சாத்திய கோலம் அனுபவம் –

கிருஷ்ண ஹ்ருத்வா வசன நிசயம் கூல குஞ்சாதி ரூடே முக்த கசின் முகுர் அனயை கின்வதி வ்யஹரந்தி
சப்ரூ பங்கம் சத ரஹசிதம் சத்ரபம் சானுராகம் ச்சாயா சவுரி கர தள கதனி அம்பா ரன்யா சகர்ஷ-2–8-
கோபிகள் வஸ்திர அபஹரண லீலை அனுபவம் –

அபி ஜனுஷி பரஸ்மின் நாத புண்யோ பவேயம் -தத புவி யமுனா யாஸ்தா த்ருசோ வம்ச நள
அனுபவதி யா ஏஷ ஸ்ரீ மத் ஆபிரா ஸ்தனோ ராதாரமணி சமீபன்யாஸ தன்யம் அவஸ்தாம் .-2–9-
யமுனா தீர மூங்கில் வம்ச பிறவி வேண்டுகிறார் –

ஆயி பரிச்சினு சேத பிரதரம்போஜ நேத்ரம் -கபரே களித சஞ்சத் பிஞ்சு தாமபி ராமம்
வல்லபி துபல நீலம் வல்லவி பக தேயம் -நிகில நிகம வல்லி மூல கண்டம் முகுந்தம் -2–10-
வேத மூல புருஷன் அன்றோ இவன் –

ஆயி முரளி முகுந்த ஸ்மேரா வக்தரவிந்த-ஸ்வசன மதுர சம்ஜே த்வாம் பிரணம்யத்ய யசே
அதர மணி சமீபம் ப்ரப்தவத்யம் பவத்வம் கதய ரகசி கர்ணே மத்ருசம் நந்த ஸூ நோ -2–11-
திருப் புல்லாங்குழல் இடம் தன் நிலைமை முகுந்தன் இடம் சொல்லி சேர்க்க பிரார்த்தனை –

சஜல ஜலத நீலம் வல்லவீ கேளி லோலம் -ஸ்ரீத சுர தரு மூலம் வித்யுத் உல்லசி சேலம் –
நாத் அசுரர் முனி ஜலம் சன்மநோ பிம்ப லீலம் சுர ரிபு குல கலம் நவ்மி கோபால பாலம் -2–12-
முனிவர்கள் தேவர்கள் வணங்கும் கோபால பாலன் அன்றோ –

அதர பிம்ப விதம்பித வித்ருமம் -மதுர வேணு நினத விநோநிதம்
கமல கோமள கம்ர முகாம்புஜம் -கமபி கோப குமார முபாஸ்மஹே—2–13-
வேணு கான இனிமை அனுபவம் –

அதர விநிவேசய வம்ச நாளம் விவராண் யஸ்ய சலீலாம் அங்குலிபி –
முஹூர் அந்தரயன் முஹூர் விவ்ருன்வன் மதுரம் கயதி மாதவோ வனதே -2–14-
மாதவனுடைய வேணு கான அனுபவம் இங்கும்

வதநே நவநீத கந்த வாஹம் வசநே தஸ்கரசாதுரீ துரீணம்
நயநே குஹ நாச்ருமாச்ரயே தாச்சரணே கோமல தாண்டவம் குமாரம் –க்ருஷ்ண கர்ணாம்ருதம் -2–15-
லீலா சுகர் அனுபவம் -திருப்பவளத்தில் முடை நாற்றம் -பேச்சு சாமர்த்தியம் -பொய்க்கண்ணீர் –பையவே நிலை –நவநீத நாட்யம் அழகை அனுபவிக்கிறார் –

அமுன கில கோப கோப நாதம் யமுனா ரோதசி நந்த நந்தநேந
தமுன வன சம்பவ பாப ந கிமி நாசவ் சரணார்த்தினாம் சரண்ய-2–16-
சரணாகத ரக்ஷகன் அன்றோ –

ஜகத் ஆதரணீய ஜர பவம் ஜலஜா பத்ய வ விசார கம்யம்
தனுதாம் தனுதாம் ஷிவே தாரணாம் சுர நாதோபால சுந்தரம் மஹோ ந -2–17-
தேவர்க்கும் தேவாவோ –

ஸா கபி சர்வ ஜெகதாமபி ரம சீம காம்ய நோ பவது கோப கிசோர மூர்த்தி
யா ஷேகரே சுருதி கிராம் ஹ்ருதி யோக பாஜாம் பதாம்புஜ ச சுலபா விரஜா சுந்தரிணாம்-2–18-
வேத ப்ரதிபாத்யன் -முனிவர்கள் திரு உள்ள நிவாஸன் -காபி வல்லபன் -நம் ரக்ஷகன் –

அத்யந்த பால மதசீ குஸுமா பிரகாசம் திக்வசஸாம் கனக பூஷண பூஷிதாங்கம்
வித்ரஸ்த கேச மருணா தரய தக்க்ஷம் கிருஷ்ணம் நமாமி மானஸ வாசுதேவ சிஸூனும்-2–19-
கரியான் -மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ-வணங்குவோம் –

ஹஸ்தங்கி நிக்வனித கங்கண கிங்கிணீகம்-மத்யே நிதம்ப மவலம்பித ஹேமா ஸூத்ரம்
முக்தா கலப முக்லி க்ருத காகபக்ஷம் வந்தமஹே வ்ரஜ சரம் வாசுதேவ பாக்யம் –2–20-
கங்கணம் தங்க ஸூத்ரம்-அனுபவம் –

விருந்தாவனே த்ருமதலேஷூ கவாம் கணேஷு வேதவசன ஸமயேஷூ ச த்ருச்யதே யத்
தத் வேணு வேதன பரம் சிகி பிஞ்ச சூடம் ப்ரஹ்ம ஸ்மரமி கமலேக்ஷண மப்ர நீலம் -2–21-
வேத பிரதிபாத்யனே ஆநிரை கூட்டத்தில் மயில் பீலி தரித்த கேசபாசம் -வேணு நாதம் -ப்ரஹ்மம் சேவிப்போம் –

வியத்யஸ்த பத மவதம்ஸி த பர்ஹி பர்ஹம் ஸசீ க்ருதனான நிவேசித வேணு ரந்தரம்
தேஜ பரம் பரம கருணிகம் புரஸ்தாத் பிராண பிரயாண ஸமயே மம சந்நிதி தாம் -2–22-
அந்திம திசையிலும் பால கிருஷ்ணன் திருக் கோலம் சேவை சாதித்து அருளுவான் –

கோஷா பிரகோஷா சமனய மதோ குணேன மத்யே பபந்த ஜனனி நவ நீத சோரம்
தத் பந்தனம் த்ரை ஜெகதம் உதர ஆஸ்ரயேண மாக்ரோச கரணம் அஹோ நிதராம் பபூவ-2–23-
உலகுண்ட பெருவாயனை அன்றோ உதரத்தில் பந்தித்தாள்-

சைவ வயம் ந கலு தத்ர விசரணீயம் பஞ்சாக்ஷர ஜெப பரா நிதராம் ததபி
சேதோ மதீய மதசி குஸுமவ பாசம் ஸ்மேரணனம் ஸ்மார்த்தி கோப வதூ கிஸோரம்–2–24-
சைவர்களும் பால கிருஷ்ணன் சேஷ்டிதங்களில் ஆழ்வார்களே-

ராதா புனது ஜகத் அச்யுத தத சித்த மந்தானம குலயதீ ததி ரிக்த பத்ரே
தஸ்ய ஸ்தான ஸ்தபக சஞ்சல லோல த்ருஷ்டிர் தேவோபி தோஹநதிய வ்ருஷபம் நிருந்தன்-2–25-
பரஸ்பர மால் கொண்டு தயிர் இல்லாமல் கடையும் ராதாவும் காளை இடம் பால் கறக்கும் கிருஷ்ணனும் நம்மை புனிதம் ஆக்குவார் –

கோ தூளி தூசரித கோமள குந்தளக்ரம் கோவர்த்தன தாரண கேளி க்ருத பிரயாசம்
கோபி ஜனஸ்ய குச குங்கும முத்ரிதங்கம் கோவிந்த மிந்து வதனம் சரணம் வ்ருஜம -2–26-
ஆநிரை கிளப்பும் தூசி பூண்ட கேசா பாசம் -கோபிகள் கொங்கை குங்கும குழம்பு பூண்ட திரு மார்பன் -கோவிந்தனை சரண் அடைவோம் –

யத்ரோ மந்த்ர பரி பூர்த்தி விதவ தக்க்ஷா-வராஹ ஜன்மனி பப்பூ வுரமீ சமுத்திர –
தம் நாம நாதம் அரவிந்த த்ருசம் யசோதா பணித்வ யந்திர ஜலை ஸ்நப்யாம் பபூவ -2–27-
ஸ்ரீ வராஹ நாயனார் ஏக தேசம் பூமி இருக்க யசோதா பிராட்டி தன் இரண்டு கை நீராலே நீராட்டும் படி அன்றோ தன்னை தாழ விட்டுக் கொண்டான் –

வரமிமம் உபதேச மத்ரி யத்வம் நிகம வனேஷு நிதந்த சர கின்ன
விசிநுத பவனேஷு வல்லவீணா முகனிஷ்தர்த முலூகலே நிபதம் -2–28-
வேதாரண்யம் தேடி காண முடியாத ப்ரஹ்மம் உரலோடு கட்டி இருப்பதை வந்து காணீரே –

தேவகி தனைய பூஜன பூத பூதநாரீ சரணோதக தவ்த
யத்யகம் ஸ்ம்ருத தனஞ்சய ஸூத கிம் கரிஷ்யதி ச மே எம தூத -2–29-
எம தமர் அணுக முடியாமல் அன்றோ அடியேனை பாவனம் ஆக்கி அருளுகிறார் பாலகிருஷ்ணன் –

பஸதாம் பாவ பயைக பேஷஜம் -மனசே மம முஹுர் முஹூர் முஹூ
கோப வேஷ உபதேதுஷா ஸ்வயம் யாபி கபி ரமணீயத விபோ -2–30-
கோப வேஷமே சம்சார பேஷஜம் –

கமலம்பித கதம்ப மஞ்சரீ கேசர் அருண கபோல மண்டலம் -நிர்மலம் நிகம வக கோசரம் நீலிமான மவலோகயமஹே-2–31-
நீல மேக ஸ்யாமளன் -கேசாபாசம் -வாசா மகோசரம் –

சசி சஞ்சலித லோசநோத்பலம் -சமி குத்மளித கோமளாதரம் -வேகவத்கித கரங்குளீ முக்தம் வேணு நாத ரசிகம் பஜாமாகே -2–32-

ஸ்யந்தானே கருட மந்தித த்வஜே குண்டின சத நயன திரோபிதா
கேன சின வதமல பல்லவ ச்யாமளேன புருஷேண நீயதே -2–33-
ஸ்ரீ ருக்மிணி தேவையை தேரில் கொண்டு போவதைக் கண்டேனே –

ம யத பாண்ட பதி பீமராத் யாம் திகாம்பர கோபி தமல நீல
விந்யஸ்த ஹஸ்தோபி நிதான பிம்பே தூர்த்த சமகர்ஷக்தி சித்த விதம் -2–34-
பீமரதி நதி அருகில் சென்றால் உங்கள் மனம் மற்றும் அனைத்தும் கொள்ளை கொள்வான் ஜாக்கிரதை –

அங்கனம் அங்கனம் அந்தரே மாதாவோ -மாதவம் மாதவம் ச அந்தரே அங்கனம்
இதம கல்பித மண்டலே மத்யக சஞ்சுகவ் வேணுனா தேவகி நந்தன -2–35-
ராஸ லீலை அனுபவம் –

கேகி கேகாத் ருதநேக பங்கேருஹா லீனா ஹம்சாவளி ஹ்ருத்யத ஹ்ருத்யத
கம்ச வம்சதவீ தஹா தாவாநலா சஞ்சகவ் வேணுநா தேவகி நந்தன -2–36-
கம்ச குலம் நாசகன் -வேணு நாதம் மயில்களை ஆட வைக்கும் –

க்வபி வீணாபிராரா வீணாகம்பித க்வபி வீணாபிரா கிண்கிணி நர்த்தித-
க்வபி வீணப்பிரமந்தரம் கபித சஞ்சகவ் வேணுநா தேவகி நந்தன -2–37-
வேணு நாதம் அனுபவம் –

சரு சந்திரவளி லோசனை ஸ்ஷும்பிதோ-கோப கோ வ்ருந்த கோபாலிக வல்லப –
வல்லவீ வ்ருந்த வ்ருந்தரக காமுக சஞ்சகவ் வேணுநா தேவகி நந்தன -2–38-

மௌலி மாலா மிலன் மத ப்ருங்கீ லதா பீத பீத ப்ரியா விப்ர மலிங்கித –
ஸ்ரஸ்த கோபீ குச போக சம்மேலித சஞ்சகவ் வேணுநா தேவகி நந்தன -2–39-

சாரு சமேகரா பச பம விபுர் வைஜயந்தி லதா வாசி தோரஸ்தல
நந்த விருந்தவனே வசிதா மத்யகா சஞ்சகவ் வேணுநா தேவகி நந்தன -2–40-

பலிகா தலிகா தள லீலாலயா சங்க சந்தர்சித ப்ருல்லத விப்ரம –
கோபிகா கீதா தத வதன ஸ்வயம் சஞ்சகவ் வேணுநா தேவகி நந்தன -2–41-

பாரிஜாதம் சம்ருத்ய ரதவயோ-ரூபய மச பசா குணைர் ரெங்கனே
ஷீத ஷீதே வதே யாமுனியியே ததே சஞ்சகவ் வேணுநா தேவகி நந்தன -2–42-

அக்ரே தீர்க்க தரோய மர்ஜூன தரு ஸ்தஸிகிரதோ வர்த்தினி-ச கோஷம் சமுபைதி தத் பரிசரே தேச கலிந்தத்மஜம்-
தஸ்ய ஸ்தீரத்மல கணந தாலே சக்ரம் கவம் சரயன்-கோப க்ரீடாதி தர்சயிஷ்யதி சகே பந்தன மவ்யஹதம் -2–43-
யமுனா தீர கோபாலனே நமக்கு பரமபதம் அருள்வான் –

கோ தூளி சரிதா கோமள கோப வேஷம் -கோபால பால குஸதை ரணுகம்ய மனனம்
சாயந்தனே பிரதி க்ருஹம் பசு பந்தனார்தம் கச்சந்த மச்யுத சிஷும் ப்ரணதோஸ்மி நித்யம் -2–44-
ஆநிரை தூளி பூஷணம் -க்ருஹம் தோறும் சென்று ஆநிரைகளை கட்டுகிறான் -அச்யுதனை வணங்குவோம் –

நிதிம் லாவண்யனாம் நிகில ஜகத் ஆச்சர்ய நிலயம்-நிஜ வாஸம் பாஸம் நிரவதிக நிஸ்ரேய சரசம்
சுத தர சாரம் ஸூ ஹ்ருத பரி பகம் ம்ருக த்ருகம்-ப்ரபத்யே மாங்கல்யம் பிரதம மயி தேவம் க்ருத தியாம் -2–45-
ஆராவமுதன் -ஸூஹ்ருத் -அவனை சரண் அடைவோம் –

ஆதம்ரபனி கமலா ப்ரணய பிரதோத -மாலோல ஹர மணி குண்டல ஹேமா சூத்ரம்
ஆவிஸ்ரமம்பு கணம் அம்பு நீல மவ்யா-ததியம் தனஞ்சய ரத பரணம் மஹோ ந -2–46-
அர்ஜுனன் ரத பூஷணம் அவன் -நம்மை ரஷித்து அருளுவான் –

நக நியாமித குந்துன் பாண்டவஸ்யன் தனஸ்வா -நனு தின மபி ஷிஞ்சான் அஞ்சலிஸ்தை பயோபி
ஆவது விதத கத்ர ஸ்தோத்ர நிச்யுத மௌலிர் -தரிசன வித்ருத ரஸ்மிர் தேவகி புண்ய ராஸி-2–47-
தேவகி புண்ய பலனே பார்த்த சாரதியாக ஆவிர்பாவம் –

விரஜ யுவதி ஸஹாயே யவ்வனோல் லஸீகயே-சகல ஷுப விலாச குந்த மந்தர ஹாஸே
நிவஸது மம சித்தம் தத் பதயத வ்ருதம் முனி சரஸிஜ பானவ் நந்த கோபால ஸூநவ் -2–48-

அரண்யாநீ மர்தர ஸ்மித மதுர பிம்பதர ஸுதா சரண்யா ஸங்க்ரதை சப்பதி மத்யன் வேனூ நிநாதை
தரண்ய சனந்தோத் புலக முப கூடங்க்ரி கமல சரண்யாணா மத்யஸ்ச ஜெயது சரீரி மதுரிமா-2–49-
திண்ணிய கழலே சரண் –

விதக்த கோபால விலாசினீனாம் சம்போக ஷிஹ் நங்கித சர்வ காத்ரம்
பவித்ரா மாம்னாய கிராம கம்யம் ப்ரஹ்ம ப்ரபத்யே நவ நீத சோரம் -2–50-

அந்தர் க்ருஹே க்ருஷ்ண மவேஷ்ய சோரம் பத்வா கவாடம் ஜநநீம் கதைகா
உலூகலே தாமநிபத்த மேநம் தத்ராபி த்ருஷ்ட்வா ஸ்திமிதா பபூவ –கிருஷ்ண கர்ணாம்ருதம் -2–51-
தன் வீட்டில் வெண்ணெய் திருடிய கண்ணனை வீட்டுக்கு உள்ளே வைத்து கதவைப் பூட்டிவிட்டு யசோதையிடம் சொல்ல சென்றவள்
அங்கு உரலோடே கட்டுண்டு கிடப்பதை கண்டு ஆச்சர்யப் பட்டாள்-

ரத்ன ஸ்தலே ஜனுசர குமார -ஸங்க்ரந்த மத்மீய முகாரவிந்தம் ஆதது கமஸ்ததள பஜேதா த்விலோக்ய தாத்ரீ வதனம் ருரோத-2–52-
தான் தவழும் பொழுது தனது நிழலை பளிங்கு தரையிலே கண்டு முகத்தை தடவைப் பார்த்து முடியாமல் அழும் முக்தன் –

ஆனந்தேன யசோதயா சமாதிதம் கோபங்கனாபிஸ் சிரம் -சசங்கம் வள விதிவிஷா ஸகுசுமை சிதை ப்ரிதவுக குலம்
சேர்ஷ்யம் கோப குமாரகை சகுதுகம் பவ்ரைர் ஜனை சஸ்மிதம் -யோ த்ருஷ்டஸ புனதுநோ முரைபு ப்ரோத் க்க்ஷிப்த கோவர்த்தன -2–53-
கோவர்த்தன தாரி நம்மை புனிதம் ஆக்கி அருளுவான் –

உபசதத் மவித புராணா பரம் பரஸ்தான் நிஹிதம் குஹாயாம்
வயம் யசோதா சிசு பால லீலா கதா ஸுதா சிந்துஷு லேலயாம-2–54-
பால கிருஷ்ணன் சேஷ்டிதங்கள் -அமுத கடலிலே ஆழ்ந்தே கால ஷேபம் நமக்கு –

விக்ரேது காமா கில கோப கன்யா முராரிரோ பதர்பித சித்த வ்ருத்தி
ததியதிகம் மோஹ வசாத்தவோசத் கோவிந்த தாமோதர மாதவேதி -2–55-
தயிர் விற்கும் கோப கன்னி -இவன் நினைவாலே கோவிந்த தாமோதர மாதவ வாங்கலையோ என்ற வ்ருத்தாந்தம் –

உலூகலம் வா யமினாம் மநோ வா கோபங்கனானாம் குச குத்மலம் வா
முராரி நம்நா கலபஸ்ய நூன மலன மஸீத் த்ரயமேவ பூமவ் -2–56-
இந்த யானையை உரலோடும் -முனிவர் ஹிருதயத்திலும் -கோபிகள் கொங்கைகளிலுமே கட்ட முடியும் –

கராரவிந்தேன பாதாரவிந்தம் மகரந்தவிந்தே விநிவேசயந்தம்
வடஸ்ய பத்ரஸ்ய புதே சயானாம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி -2–57-

ஷாம்போ ஸ்வாகத மஸ் ஸ்யதாமித இதோ வாமேந பத்மாசன கிரௌஞ்சரே குசலம் சுகம் சுர பதே விதேசநோ த்ருஸ்யஸே –
இதம் ஸ்வப்ன கதஸ்ய கைதப ஜித ஸ்ருத்வ யசோதா கிரா கிம் கிம் பாலாக ஜல்ப சீதி ரஷிதம் தூ தூ க்ருதம் பது ந -2–58-
ஸ்வப்னத்தில் பால கிருஷ்ணன் ஜலப்பிப்பதை கேட்டு யசோதை ரக்ஷணத்துக்கு வேண்டுயவற்றை செய்தாள் –

மாதா கிம் யது நாத தேஹி சஷகம் கிம் தேன பது பய ஸ்தன் நஸ்தியத்ய கதஸ்தி வா நிசி நிசா கா வந்த கரயோ-2–59-
ஆமீலக்க்ஷி யுகம் நிஸநி உபகத தேஹீதி மதுர் முஹுர் வக்க்ஷோ ஜம்பர கர்ஷனோத்யத கர கிருஷ்ணஸ்ச புஷ்னது ந -2–59-
பால் குடிக்க சேஷ்டிதங்கள் செய்த பால கிருஷ்ணனே ரக்ஷகன் –

காளிந்தீ புளினோ தரேஷு முசலி யாவத் கதா கேளிதும் தாவத் கர்பூரிதம் பா பிப ஹரே வர்திஷ்யதே தே ஷிகா
இதம் பால தயா பிரதாரண பரம் ச்ருத்வா யசோதா கிரா பயன்ன ஸ்வ ஷிகாம் ஸ்ப்ருசன் ப்ரமுதித ஷீரேத பீதே ஹரி -2–60-
நம்பி மூத்த பிரான் யமுனை கரை மணலில் விளையாட பால கிருஷ்ணனை பால் அருந்தினால் கேசம் வளரும் என்றாள் யசோதை
-பாதி குடித்து கேசம் தொட்டு பார்த்து வளர்ந்ததே அம்மா என்று மகிழ்ந்து அருளிச் செய்தான் -அந்த ஹர்ஷமே நம்மை ரஷிக்கும்-

கைலாசோ நவ நீத இதி ஷித்ரியம் ப்ரக் ஜக்த ம்ருல்லோஷ்ததி -ஷீரோதோபி நிபீத துக்ததி லஸத் ஸ்மேரே ப்ரஹுல்லே முக்தே
மதா ஜீமா திவ்ய த்ருதம் சஹிதய நஷ்டஸ்மி த்ருஷ்ட்டி கயா -தூ தூ வத்ஸக ஜீவ ஜீவ சிரம் இதயுக்த்தோம் நோ ஹரி -61-
பிள்ளை வாயுளே கைலாசம் கண்டு -ஜீரணிக்காத வெண்ணெயோ / பூமியைக் கண்டு உண்ட மண்ணோ/பாற் கடலைக் கண்டு ஜீரணியாத பாலோ /
இப்படி பிள்ளை ஜீரணிக்க முடியாமல் ஏதோ கெட்ட சாபமோ -ரக்ஷை அளித்தாள் யசோதை -அந்த பால கிருஷ்ணனே நமக்கு ரக்ஷை –

கிஞ்சித் குஞ்சித லோசனஸ்ய பிபத பர்யாய பீதம் ஸ்தனம் சத்ய ப்ரஸ்நுத துக்த பிந்தும பரம் ஹஸ்தேன சம்மர்ஜத
மாத்ரை கங்குலி லலிதஸ்ய சிபுகே ஸ்மேர் அநன்யஸ் யதரே ஸுரே ஷீர கனன்வித நிபதித தந்த திதி பது ந -2–62-
ஒரு கையால் முலை தடவி மாற்று ஒன்றில் பால் குடித்து சிரிக்கும் பால கிருஷ்ணன் நமக்கு ரக்ஷணம் –

உத்துங்க ஸ்தன மண்டலோ பரிலஸத் ப்ரலம்ப முக்த மனே ரந்தர் பிம்பித மிந்த்ர நீல நிகர சயனு கரி த்யுதி
லஜ்ஜ வ்யாஜம் உபேத்ய நம்ர வதன ஸ்பஷ்டம் முராரேர் வபு-பஸ்யந்தி முதித முதேஷு பவதாம் லட்சுமி விவோஹத்சவே-2–63-
ருக்மிணி சமேத கிருஷ்ணன் -நமக்கு ரக்ஷை –

கிருஷ்னன் அம்பா கதேன ரந்து மதன ம்ருத் பக்ஷிதம் ஸ்வேச்சயா-ததியம் கிருஷ்ண க ஏவமஹ முசலி மித்யம்பா பஸ்யானனம்
வ்யாதேஹீதி விதரிதே சிசு முக்தே த்ருஸ்த்வ சமஸ்தம் ஜெகன் -மத யஸ்ய விஸ்மய பதம் பயத் சன் அ கேசவ -2–64-
பிள்ளை வாயில் வையகம் கண்டாள் யசோதை –

ஸ்வாதி ச பத்னி கில தாரகாணாம் முக்த பலானம் ஜன நீதி ரோஷத்
ச ரோஹிணி நிலமசூத ரத்னம் -க்ருதஸ்பதம் கோப வதூ குசேஷு -2–65-

ந்ருத்யந்த மத்யந்த விலோக நீயம்-கிருஷ்ணம் மணி ஸ்தம்ப கதம் ம்ருகக்க்ஷி
நிரீக்க்ஷ்ய சக்ஷத்திவ கிருஷ்ண மக்ரே த்விதா விதேன நவநீத மேகம் -2–66-
பிரதிபிம்பம் கண்டு வெண்ணெயை இரண்டு கூறாக்கி யசோதை -பிரமிக்கும் படி பண்ணினான் –

வத்ஸ ஜஃருஹி விபத்தமகதம் ஜீவ கிருஷ்ண சரதம் சதம் சதம்
இதியுதீர்ய சுசிரம் யசோதயா த்ருஸ்ய மனம் பஜாமஹே -2–67-
பல்லாண்டு பாடி திருப்பள்ளி உணர்த்தும் யசோதை –

ஒஷ்டம் ஜிக்ரன் சிசுருதி திவ்ய சும்பிதோ வல்லவீபி கண்டம் கிருஹன அருந்த பதம் கடம் அலிங்கிதங்க
தோஷ்ணா லஜ்ஜா பத மாபிம்ருசன் அங்க மரோபிதங்கோ தூர்த ஸ்வாமி கரது துரிதம் தூரதோ பாலகிருஷ்ணா -2–68-
கோபீ வல்லபன் பால கிருஷ்ணன் நமக்கு ரக்ஷகன் –

யதே லஷ்மணா ஜானகி விரஹினாம் மாம் கேதயந்த்யம் புத-மர்மாநைவ ச கதயந்த்யல மமே க்ரூர கதம்ப நில
இதம் வ்யாஹ்ருத பூர்வ ஜென்ம சரித்தோ யோ ராதயா வீக்க்ஷித சேர் ஷியாசம் கிதயா ச நஷ்க்ஹ்யது ஸ்வப்னயமனோ ஹரி -2–69-
பூர்வ அவதார சீதா விரஹம்-படுத்தும் பாடடை ஸ்வப்னத்தில் சொல்ல ராதா கேட்டாள்-மிதுனம் நமக்கு ரக்ஷை –

ஒஷ்டம் முஞ்ச ஹரே பிபேமி பவத பனைர் ஹதா பூதனா கண்ட லேசா மமும் ஜஹீதி தலிதா வலிங்க நோர்ஜ்ஜுனவ் –
மா தேஹி கிசுரிதம் ஹிரண்ய கசிபுர் நீஹோ நவை பஞ்சத மிதம் வரிதா ரத்ரி கீலி ராவதால் லக்க்ஷ்யப ஹசோதரி-2–70-
ஸ்ரீ ருக்மிணி தேவி உடன் விளையாடும் ஸ்ரீ கிருஷ்ணன்-மிதுனம் நமக்கு ரக்ஷை –

ராமோ நாம பபுவ ஹூம் தடபல சீதேதி பூம் தவ் பிதுர் வச பஞ்ச வடீ வனே விஹரத ஸ்தமஹத் ராவண
நிதரர்தம் ஜனனி கதமிதி ஹரே ஹூங்கரேண ஸ்ருண்வத சவ்மித்ரே க்வ தனுர் தனு தனுரிதி வயாக்ராகிர பந்து நா -2–71-
ராம கதை சொல்லி தூங்கப் பண்ண -லக்ஷ்மணா எங்கே என் கோதண்டம் -என்றவன் நம் ரக்ஷகன் –

பலோபி சைலோ தரணக்ரா பாணி நீலோபி நிரந்தர தம ப்ரதீப
தீரோபி ராதா நயனவபதோ ஐரோபி சம்சார ஹர கதஸ்த்வம்-2–72-
கோவர்த்தன தாரி ஸ்ரீ ராதா வல்லவனே நம் ரக்ஷகன் –

பாலாய நீல வபுஷே நவ மிங்கிணீக ஜாலபி ரம ஜகநாயா திகம்பராய
சார்தூல திவ்ய நக பூஷண பூஷிதாயா நந்தத் மஜாயா நவநீத முஸே நமஸ்தே -2–73-
புலி நக பூஷண தாரி நந்த கோபன் குமரனே ரக்ஷகன் –

பாணவ் பாயாச பக்தமஹித ரசம் பிப்ரன் முதா தஷிணே சவ்யே சரத் சந்த்ர மண்டலே நிபம் ஹய்யங்க வீனம் ததத்
காந்தே கல்பித புண்டரீக நகாப்யுதாம தீர்த்தம் வஹன் தேவோ திவ்ய திகம்பரோ திசது ந ஸுக்ஹ்யம் யசோதா சிசு -2–74-
வலது திருக்கையில் பாயாசம் -இடது திருக்கையில் வெண்ணெய் உருண்டை -புலி நகம் திருக் கழுத்தில் பூஷணம் -பால கிருஷ்ணன் நம் ரக்ஷகன் –

கிண்கிணி கிண்கிணி ரபஸை ரங்கன புவி யுகளம் கங்கண பாத யுகளம் கங்கண கர பூஷணம் ஹரிம் வந்தே -2–75-
கிண்கிணி ஒலி இடுப்பிலும் கையிலும் திவ்ய ஆபரணங்கள் –

சம்பதே ஸுரே பீன மம்பமயஸ யந்த மனு யந்திம் லம்பல கமலாம்பே தம் பாலம் தனு விளங்க ஜம்பலம்-2–76-
ஆ நிரைகள் உடன் ஓடும் கோபாலனே நம் பாலகன் –

அஞ்சித பிஞ்ச சூடம் சஞ்சித ஸுஜன்ய வல்லவீ வலயம் -அதர மணி நிஹித வேணும் பாலம் கோபால மணியஸ் மவலம்பர்-2–77-
கோபீ வல்லபன் -வேணு நாதம் -மயில் பீலி -தரித்த கோபாலனே நம் ரக்ஷகன் –

பிரகலாத பாக்யம் நிகம கணமக குஹாந்த்ர தேயம் -நரஹரி பதபி தேயம் விஹூத விதேயம் மமநு சந்தேயம் -2–78-
வேத குகையுள் நித்ய வாஸம் செய்யும் ஸ்ரீ நர சிம்ஹரே நம் வணங்கும் பர ப்ரஹ்மம் –

சம்சாரி கிம் சரம் கம்சரேச் சரண கமல பரி பஜனம் ஜ்யோதி கிமந்தரே யத்தந்தகாரே அநு ஸ்மரணம்-2–79-
கம்சாந்தகனே நம்மை சம்சாரம் தாண்டுவிப்பான் –

கலச நவ நீத சோரே கமல த்ருக் குமுத ஹந்த்ரிக பூரே-விஹரது நந்தகுமாரே சேதோ மம கோப சுந்தரி ஜாரே-2–80-
நந்த கோபன் குமரனையே நித்யம் ஸ்மரிப்போம்

கஸ்த்வம் பால –பலாநுஜ கிமிஹதே–மந் மந்திரா சங்கயா-யுக்தம் தத் நவநீத பாண்ட குஹரே ஹஸ்தம் கிமர்த்தம் ந்யதா
மாத காஞ்சனா வத்ஸாகம் ம்ருகயிதும் மாகா விஷாதம் க்ஷணாத்-இத்யேவம் வநவல்ல வீ ப்ரதிவஸ க்ருஷ்ணஸ்ஸ புஷ்ணாநுந -2–81-
இந்த கிருஷ்ண கோபி சம்வாதமே நம்மை ரக்ஷிக்கட்டும் –

கோபாலா ஜிரே கர்த்தமே விஹரஸே விப்ரத்வாரே லஜ்ஜசே-ப்ரூஷே கோகுல ஹும் க்ருதவ் ஸ்துதி சதை மௌனம் விதத்ஸே விதாம்
தாஸ்யம் கோகுல பும்ஷலேஷூ குருஷே ஸ்வம்யம் ந தாந்தத்ம்சு -நாதம் கிருஷ்ண தவங்கிரி பங்கஜ யுகம் ப்ரேமாச்சலம் மஞ்சுளம் -2–82-
ஆயர் பிள்ளைகள் உடன் விளையாடுகிறாய் -யாக பலனாக வருவதில் விளம்பம் -கன்றுகள் குரலுக்கு ஓடுகிறாய் -பக்தர்கள் கூக்குரலுக்கு விளம்பம்
-கோப குமாரிகள் பின் செல்கிறாய் -முனிவர்களுக்கு கால விளம்பம் -சரணாகதர்களுக்கே உன்னை உடனே காட்டி அருளுகிறாய் –

நமஸ் தஸ்மை யசோதாயா தாய தாயஸ்து தேஜஸே-யதி ராதா முகோம்போஜம் போஜம் போஜம் வியவர்தத -2–83-
வாசா மகோசரம் அன்றோ யசோதை இளம் குமரன் ராதா வல்லபன் –

அவதாரா சந்த்வன்யே சரஸிஜ நயனஸ்ய சர்வாதி பத்ரா கிருஷ்ண தன்ய கோ வா பிரபவதி கோ கோப கோபிகா முக்த்யை -2–84-
கோ கோப கோபிகளுக்கு கிருஷ்ண அவதாரமே –

மத்யே கோகுல மண்டலம் பிரதி திசம் சம்பர வோஜ்ஜரும்பிதே -ப்ரதர்தஹ மஹோத்சவ நவ கனஷ்யாமம் ரணன் நூபுரம்
பாலே பால விபூஷணம் கதிரநாத் சத் கிண்கிணி மேகலாம் கதே வ்யாகர நகஞ்ச சைஸவ கால கல்யாணி கர்த்ஸ்நியம் பஜே -2–85-
நீல மேக ஸ்யாமளன் -நூபுரம் கிண்கிணி ஒலி -கஸ்தூரி திலகம் -புலி நக பூஷணம் -பால கிருஷ்ணனை வணங்குவோம் –

சஜல ஜலத நீலம் தர்ஷிதோதரா லீலம் கர தள த்ருத ஷைலம் வேணு நாதை ரசாலம் –
விரஜ ஜன குல பாலம் காமினி கேளி லோலம் களித லலித மாலம் நவ்மி கோபால பாலம் -2–86-
நீல மேக ஸ்யாமளன் -கோவர்த்தன தாரி -வேணு நாதம் கொண்டு விரஜா மக்கள் உள்ளம் கவர் கள்வன் -பால கிருஷ்ணனை வணங்குவோம்-

ஸ்மித லலித கபோலம் ஸ்நிக்த சங்கீத லோலம் -லலித சிகுர ஜாலம் ஸுர்ய சத்ர்ய லீலம் —
சத முக ரிபு கலம் சதா கும்பப சேலம் குவலய தள நீலம் நவ்மி கோபால பாலம் -2–87-
கோபால பாலன் -பீதாம்பர தாரி -தேவர் விரோதி நிராசன சீலன் –

முரளி நினத லோலம் முக்த மயூர சூடம் தளித தனுஜ ஜாலம் தன்ய ஸுஜன்ய லீலம்
பர ஹித நவ ஹேலம் பத்ம சத்மனுகூலம் நவ ஜல தர நீலம் நவ்மி கோபால பாலம் -2–88-
மயில் பீலி தரித்து -நீல மேக ஸ்யாமளன் – கோபால பாலனை வணங்குவோம் –

சரஸ குண நிகாயம் சச்சிதானந்த காயம் சமித சகல மாயம் சத்ய லஷ்மி ஸஹாயம்
சமதம சமுதாயம் சந்தி சர்வாந்தராயம் சஹ்ருத ஜன தாயம் நவ்மி கோபால பாலம் -2–89-
சமதமம் நிறைந்தார்க்கு வைத்த மா நிதி பால கிருஷ்ணன் –

லக்ஷ்மி களத்ரம் லலிதப்ஜ நேத்ரம் பூர்மேந்து வக்த்ரம் புரூஹூதா மித்ரம் -காருண்ய பத்ரம் கமநீய காத்ரம் -வந்தே பவித்ரம் வாசு தேவ புத்ரம் -2–90-

மதமய மத மயது ராகம் யமுனாம் வா தீர்ய வீர்ய சலிர்ய -மம ரதி மம ரதிரஸ் க்ருதி சமான பர க்ரியத் கிருஷ்ணா -2–91-
பால கிருஷ்ணனே நம் பிரதிபந்தகங்களை போக்கி அருளட்டும் –

மௌலவ் மயூர பர்ஹம் ம்ருக மத திலகம் சரு லலத பத்தே கர்ண த்வந்வே ச தலீ தள மதி ம்ருதளம் மவ்க்திகம் நாசிகாயாம்
ஹரோ மந்தாரா மால பரிமள பரித கௌஸ்துபஸ் யோப கண்டே பணவ் வேணுஸ் சா யஸ்ய விரஜ யுத பத பீதாம்பரோ ந -2–92-
புல்லாங்குழல் கையிலே /கோபிகள் சூழ /மயில் பீலி தரித்த கேசா பாசம் /கௌஸ்துபம் திரு மார்பு /மந்தார மலர் அணிந்த பால கிருஷ்ணன் –

முராரி நா வாரி விஹார காலே ம்ருகேஷாணாணாம் -முஷிதம் சுகானாம் –
கர த்வயம் வா குச சம்ஹதிர் வா பரமேளனம் வா பரிதானம் ஆஸீத் 2–93-
கோபிகள் வஸ்திரம் அபகரண லீலை –

யாசாம் கோப அங்க னானாம் லசதசித த்ரா லோல லேலா கடாஷா யான் நசா சரு முக்தா மணி ருசி நிகுரா வ்யோம கங்கா ப்ரவாஹே
மீ நயந்தேபி தாஸம் அதிரப சலச சரு நீலால காந்த ப்ருங்க யாந்தே யதாங்கிரி த்வய சரசிருஹே பது பீதாம்பரோ ந -2-94-
கண்ணன் கடாக்ஷம் -கங்கா பிரவாகம் போலே கோபிகள் மேலே –

யத் வேணு ஸ்ரேணி ரூப ஸ்தித சுஷிர முஹோத் கீம நாத ப்ரபிந்நா யேநாக்க்ஷயா ஸ்தத் ஷணேந த்ருதித நிஜ பதி பிரேம பந்த ஹாபூவூ
அஸ்த வ்யஸ்தாலகந்த ஸ்புரதரா குச த்வந்த்வா நபி பிரதேச காமா வேச பிரகத்ப ப்ரகதித புலகா பது பீதாம்பரோ ந -2–95-
பீதாம்பர தாரி -வேணு நாதம் -கோபீ வல்லபன் -நம் ரக்ஷகன் –

தேவக்யா ஜடர குரே சமுத்தித க்ரீதோ கவாம் பாலின நந்த நானக துந்துபேர் நிஜ ஸுதா பண்யேந புண்யத்மனா
கோபால வலி முக்த ஹரே தராலோ கோபி ஜனாலன் க்ருதி-ஸ்தயேயாத்வோ ஹ்ருதி சந்ததம் சமுத்துர கோப்பேந்திர நீலோ மணி — 2 -96- –
இந்திர நீல மணி -தேவகி திருக் குமரன் -எடுத்த பேராளன் நந்த கோபன் -கோபிகள் பூஷணம் -அன்றோ இவன் –

பீடே பீடே நிஷண்ண பாலககலே திஷ்டன் ச கோபாலகோ -யந்த்ராந்த ஸ்தித துக்த பாண்டமபாக்ருஷ்யாச் ஸாத்ய கண்டாரவம்
வந்த்ரோ பாந்த க்ருதாஞ்சலி க்ருதி சிர கம்பம் பிபன் ய பய -பாயாதா கத கோபிகா நயனயோர் கண்டுஷ பூத்கார க்ருத் –கிருஷ்ண கர்ணாம்ருதம் -2–97-
மணை மேல் மணையாக அடுக்கி வைத்து அதன் மேல் அமர்ந்த தோழன்மார் தோளின் மேல் நின்று கொண்டு உறியின் மேல் -பானை அசைய
அறியும் படி கட்டிய மணியின் நாக்கை கைகளால் பிடித்துக் கொண்டு ஒலிக்க முடியாதபடி பண்ணி பாலை ஹர்ஷமாக தலையை ஆட்டிக் கொண்டே குடிக்க
-அங்கே வந்த கோபிகை கண்களில் சிதறி விழும்படி உமிழ்ந்து விட்டு ஓடினானாம் –

யஞ்ஜை ரீஜிமஹே தானம் ததிமஹே பத்ரேஷு நூனம் வயம் -வ்ருதன் போஜிமஹே தபஸ்ச க்ருமஹே ஜன்மாந்தரே துஸ்சரம்-
ஏனஸ்மக மபூத நன்ய சுலபா பக்திர் பாவ த்வேஷினி சாணுர தவிஷி பக்த கன்மஷ முஷி ஸ்ரேயபுஷி ஸ்ரீ ஜூஷி -2–98-
சாணூர நிரசனன் -சம்சார பிரதிபந்த நிரசனன் -கிருஷ்ணன் மேலே பக்தி ரசம் கடல் போலே விளைய என்ன தபம் செய்தேனோ –

த்வயி பிரசன்ன மம கிம் குணேந த்வயை பிரசன்ன மம கிம் குணேந ரக்தே விரக்தே ச வரே வதூனம் நிரதக குங்கும பித்ர பங்க -2–99-
உன் பிரசாதம் கிடைத்த பின் நல் வினைகள் உபாயம் ஆகாதே -பிரசாதம் இல்லா விடில் இவற்றால் என்ன பயன் -பதி இல்லாமல் பூ சூடி என்ன பலன் –

காயந்தி ஷாந்த வசன ஸமயே சனந்த மிந்து ப்ரபாம் ருந்தந்யோ நிஜ தந்த காந்திர் நிவாஹைர் கோப அங்கன கோகுலே
மத் நந்த்யோ ததி பாணி கங்கண ஜனல் கருணாகரம் ஜவ-த்யவத் கத்வசநஞ்சல யம நிசம் பீதாம்பரோவ் யத் ச வ -2–100-
கோபிகள் தயிர் கடையும் பொழுது மகிழ்ந்து -அவன் புகழை பாட -வளையல்களும் சப்திக்க-அந்த பீதாம்பர தாரி நம்மை ரக்ஷிக்கட்டும் –

அம்சலம்பித வம குண்டல பரம் மந்தோன் நாத ப்ருல்லதம் -கிஞ்சித் குஞ்சித கோமள தரப்புதம் சமி பிரசரேக்ஷணம்
ஆலோ லங்குலி பல்லவைர் முரளி கமா பூரயந்தம் முதா மூலே கல்ப தரோஸ்த்ரி பங்கி லலிதம் ஜானி ஜெகன் மோஹனம் -2–101-
தன்னை தந்த கற்பகம் -மோஹிக்கும் படி அன்றோ புல்லாங்குழல் வாசிக்கிறான் –

மல்லை சைலேந்திர கல்ப சிசுரித ரஜனை புஷ்ப சபோங்கன் நபிர் -கோபைஸ்து ப்ரக்ருதத்ம திவி குலிச ப்ருத விஸ்வ கையோ ப்ரமேய
க்ருத கம்ஸேன கலோ பய ஸஹித த்ருஸ யோகுபிர் த்யேய மூர்த்தி -த்ருஷ்டோ ரங்கவதாரே ஹரி ரமர கணநாதா க்ருத்பது யுஷ்மான் -2–102-
சாணூர கம்ச நிரசனன் -கோபி வல்லபன் -ரக்ஷகன் –

சம்விஷ்டோ மணி விஷ்ட ரங்க தள மத்யசி லஷ்மி முகே கஸ்தூரி திலகம் முதா விரசயன் ஹர்ஷத் குசோவ் ஸம்ஸ்ப்ருசன்
அன்யோன்ய ஸ்மித சந்த்ரிகா கிசலையை ரரதயன் மன்மதம் கோபி கோப பரிவ்ருதோ யாது பதி பயத் ஜெகன் மோஹன -2–103-
கோப கோபிகள் சூழ்ந்த யது ராஜ -கஸ்தூரி திலகம் -ஸ்ரீ ருக்மிணி சமேதன் -நம் ரக்ஷகன் –

ஆக்ருஷதே வசனஞ்சலே குவலய ஷ்யமத்ரபத க்ருத த்ருஷ்ட்டி சம்வலித ரூசா குச யுகே ஸ்வர்ண ப்ரபே ஸ்ரீ மதி
பால கஸ்சன சூத பல்லவ இதி ப்ரந்தஸ்மித ஸ்ய ஸ்ரீயம் -ஸ்லிஷ்டம் ஸ்தமேத ருக்மணிம் நாத முகிம் க்ருஷ ச புஷ்ணாது ந -2–104-
ஸ்ரீ ருக்மிணி சமேத கிருஷ்ணனே ரக்ஷகன் –

உருவியம் கோபி மஹீதரோ லகு தரோ தோர்பியம் த்ருதோ லீலய-தேன த்வம் திவி பூதலே ச சத்தம் கோவர்தனோ கீயஸே
த்வாம் த்ரை லோக்ய தரம் வஹாமி குசயோர் அக்ரே ந தத் கனியதே கிம் வா கேசவ பாஷணேந பஹுணா புண்யைர் யசோ லப்யதே-2–105-
கோவர்த்தன தாரி -புவியும் இரு விசும்பும் நின்னகத்தே -நீயோ என் கொங்கை மேல் வைத்து கிடந்த மலர் மார்பன் –

சந்த்ய வந்தன பத்ரமஸ்து பவதே போ ஸ்நான துப்யம் நமோ போ தேவோ பிதனஸ்சா தர்பண விதோ நகம் ஷமா ஷம்யதம்
யத்ர க்வபி நிஷித்ய யாதவ குலோதம்சஸ்ய கம்சத்விஷ ஸ்மாரம் ஸ்மரமகம் ஹராமி தடலாம் மன்யே கிமன்யேன மே -2–106-
கம்சாந்தகனை மனசில் நினைக்கவே போதுமே –

ஹே கோபாலக ஹே கிருபா ஜல நிதே ஹே சிந்து கன்யா பதே ஹே கம்சாந்தகா ஹே கஜேந்திர கருணா பாரிணா ஹே மாதவா
ஹே ராமானுஜர் ஹே ஜெகத்ரயோ குரோ ஹே புண்டரீகாஷா மாம் ஹே கோபி ஜன நாதா பாலய பரம் ஜானாமி நத்வம் விநா—2–107-

கஸ்தூரி திலகம் லலாட பலகே வக்ஷஸ்தலே கௌஸ்துபம் நாசக்ரே நவ மவ்க்ஷிதம் கர தலே வேணும் கரே கங்கணம்
சர்வாங்க ஹரி சந்தனம் ச கல்யாண் கண்ட ச முக்தவளீம் கோப ஸ்த்ரீ பரிவேஷ்திதோ விஜயதே கோபால சூடாமணி -2–108-

லோகன் உன்மததன் ஸ்ருதிர் முகர்யன் ஷோனிருஹான் ஹர்ஷயன் சைலான் விதர்வயன் ம்ருகான் விவசயன் கோ வ்ருந்தமனந்தயன்
கோபன் ஸம்ப்ரமயன் முனீம் முகலயன் சப்த ஸ்வரான் ஜ்ரும்பயன் ஓங்காரார்த்த முதீரயன் விஜயதே வம்சீதி நாத சிசோ -2–109-
வேணு நாதம் மூலம் பிராணவார்த்தம் அருளி மகிழ்விக்கும் பாலகிருஷ்ணனுக்கு பல்லாண்டு –

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லீலா சுகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: