வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை –ஸ்ரீ உ. வே. வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் –

1-ஆழ்வார்கள் பொழுது போக்கு -பகவத் குண அனுபவமே யாத்திரை –
பெரிய திருமலை நம்பியின் திருவாராதன பெருமாள் வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை –ஈடு -1–4–8-
எம்பெருமானாருக்கும் திருவாராதன பெருமாள் வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை –ஈடு -3–6–8-

ஆவிர்பவத்வ நிப்ருதாபரணம் புரஸ்தாத்
ஆகுஞ்சிதைக சரணம் நிப்ருதாந்த பாதம்
தத்நா நிமந்த முகரேண நிப்த்த தாளம்
நாதஸ்ய நந்த பவநே நவநீத நாட்யம் –ஸ்ரீ கோபால விம்சதி -4-

கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான்
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்நினைந்து போக்குவார் இப்போது –பெரிய திருவந்தாதி –.86-

தரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர்
விரித்து உரைத்த வென் நாகத்துன்னை -தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பொரித்தும் போக்கினேன் போது –நான்முகன் -63-

முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் நமக்கு அவை பொழுது போக்காகப் பெற்றோம்
பின்னை ஓன்று தனில் நெஞ்சு பேராமல் பெற்றோம்
பிறர் மினுக்கம் பொறாமை இல்லாப் பெருமையும் பெற்றோமே –ஆர்த்தி பிரபந்தம் -55-

பண்டு பல வாரியரும் பாருலகோர் உய்யப்
பரிவுடன் பணித்து அருளும் பல் கலைகள் தம்மைக்
கண்டது எல்லாம் எழுதி அவை கற்று இருந்தும் பிறர்க்குக்
காதலுடன் கற்பித்தும் காலத்தைக் கழித்தேன் –ஆர்த்தி பிரபந்தம் -28-
——————————–
2-ஏசியே யாயினும் பேசியே போக்குக

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம் இகழோம் –பெரிய திருவந்தாதி -2-

அமைக்கும் பொழுதுண்டே ஆராயில் நெஞ்சே
இமைக்கும் பொழுதும் இடைச்சி குமைத் திறங்கள்
யேசியே யாயினும் ஈன் துழாய் மாயனையே
பேசியே போக்காய் பிழை –பெரிய திருவந்தாதி -38-

யசோதை ஸ்நேஹித்துச் செய்தவற்றை ஸ்நேஹம் இல்லாத நாம் பேசினால் அவனுக்கு ஏச்சாகாதோ என்னில் -ஏச்சாகிலும்
அவனைப் பேசாதே இருக்கிற இடம் தப்பு -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள்

சிறியாத்தான்-என்பவர் பட்டர் இடம் -ராம பிரானுக்கு எல்லா ஏற்றங்களும் உண்டே யாகிலும் -பாண்டவர்களுக்காகக் கழுத்திலே ஓலைக் கட்டித் தூது போன
கிருஷ்ணனுடைய எளிமை ராமபிரானுக்கு இல்லை -என்றாராம் -அதற்கு பட்டர் -ராமபிரான் சக்கரவர்த்திக்குப் பிள்ளையாக இஷுவாகு வம்சத்தில்
அவதரித்த படியால் அவனைத் தூது போகச் சொல்லும் தைரியம் எவருக்கும் இல்லை -என்று பதில் அளித்தாராம் –ஈடு -3–6–8-
இப்படி எளிமைக்கு எல்லை நிலமான கிருஷ்ண அவதாரத்தில் கண்ணபிரான் தன் எளிமையைக் காட்ட எவ்வளவோ செயல்களை
செய்து இருந்தாலும் அவற்றில் எளிமைக்கு எல்லை நிலமான சரித்திரம் -வெண்ணெய் களவு கண்ட சரித்திரம் தானே –
அவாப்த ஸமஸ்த காமனான எம்பெருமான் இடைக் குலத்திலே வந்து பிறந்து வெண்ணெயில் ஆசை கொண்டு அதையும் நேரடியாகக் கேட்டுப் பெறாமலே
திருடி உண்டு -அகப்பட்டுக் கொண்டு -அதற்காக உரலில் கட்டுண்டு அழுது ஏங்கி அவன் ஆடிய கூத்துக்களில் ஆழ்வார்கள் ஆழ்ந்து இருந்தார்கள் –
கிருஷ்ண அவதாரத்தில் வெண்ணெய் களவு கண்டு பவ்யனாயத் திரிந்த நாலு நாளும் யாயிற்று -நம்மாழ்வார் – தமக்கு பிரயோஜன அம்சமாக நினைத்து இருப்பது –
கீழ் பரத்வத்தை மண் பற்று என்று கழிப்பர் -கம்ச வதத்துக்கு மேல் நுனிக்கு கரும்பு என்று கழிப்பர் –8–1–3-இருபத்து நாலாயிரப்படி –
——————————————-
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் அன்றோ –
இடையனாய் வெண்ணெய் உண்ட திருப்பவளத்தை உடையவனை -சக்கரவர்த்தி திருமகன் ஆகில்
வெண்ணெய் யுண்ண போட்டார்கள் என்று கருத்து -பெரியவாச்சான் பிள்ளை
சக்கரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்த அவஸ்தையில் மேன்மையாலே சிலர் ராஜாவாக்கிச் சீராட்டுகையாலே
வந்து வெண்ணெய் களவு காண ஒண்ணாதே -நாயனார் –

சூட்டு நன் மாலைகள் தூயனவேந்தி விண்ணோர்கள் நன்னீர்
ஆட்டி அந்தூபம் தரா நிற்கவே யாங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு வுண்ணப் போந்து இமில் ஏற்று வன் கூன்
கோட்டிடை யாடின கூத்து அடலாயர் தம் கொம்பினுக்கே –திரு விருத்தம் -21-
வெண்ணெய் தொடு வுண்ணப் போந்து-க்ருத்ரிமத்தாலே புஜிக்கப் போந்து -இவன் கையிலே சிலர் இடினும் அநபிமதமாய் இருந்தது -பெரியவாச்சான் பிள்ளை

பிள்ளை உருவாயத் தயிருண்டு அடியேன் உள்ளம் புகுந்த –பெரிய திருமொழி -5–2–3—சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து வெண்ணெய்
அமுது செய்யப் பார்த்தால் இசைவார் இல்லை -அதுக்காகப் பிள்ளை உருவு கொண்டு தயிரை அமுது செய்து -பெரியவாச்சான்பிள்ளை –

அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி
உறியார் நறு வெண்ணெய் உண்டு உகந்தான் காணேடீ –பெரிய திருமொழி -11–5–4-

கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான்
காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்
பற்றி யுரலிடை யாப்பும் உண்டான் –நாச்சியார் திருமொழி -12–8-
வெண்ணெய் தனக்கு தாரகமாகக் கொண்டு அது தானும் நேர் கொடு நேர் கிடையாமே களவு கண்டு -புஜிக்கப் புக்கு -அதுவும் தலைக் கட்ட மாட்டாமே ஓர் அபலை
கையிலே அகப்பட்டு -அவள் வர இழுத்து -ஒன்றோடு கட்டக் கட்டுண்டு -சம்சார பந்த ஸ்திதி மோக்ஷ ஹேதுவான தான் பிரதிகிரியை பண்ண மாட்டாதே நின்றான் –
—————————————-
வெண்ணெயும் மோரும் –
தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும் ஓரோர் குடம் தூற்றிடும் என்று ஆய்ச்சியர் கூடி அழைக்கவும்
நான் இதற்கு எள்கி இவனை நங்காய் -பெரிய திருமொழி —
நின்ற நின்ற அவஸ்தைகள் தோறும் சேஷியாத படி பண்ணினான் யாயிற்று —

மிடறு மெழு மெழுத்தோட வெண்ணெய் விழுங்கிப் போய்
படிறு பல செய்து இப்படி எங்கும் திரியாமே
கடிறு பல திரி கானதரிடைக் கன்றின் பின்
இடற வென் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே –பெரியாழ்வார் -3–2–6 –
அதாவது -தொண்டையானது மெழு மெழுக்கும் படியாக வெண்ணெய் விழுங்கி -வாயில் வெண்ணெய் கொப்பளித்தால் போம்
-கையில் வெண்ணெய் கழுவுதல் தலையிலே துடைத்தல் செய்யலாம் -மிடற்றில் மெழு மெழுப்பு -வெளியில் -தெரியாது
-ஆகையால் க்ருத்ரிமம் -களவு -நித்யமாய்ச் செல்லும் இ றே-

தாழியில் வெண்ணெய் தடங்கை யார விழுங்கிய பேழை வயிற்று எம்பிரான் கண்டாய் –பெரியாழ்வார் -1–4–9-
வெண்ணெய் மீது உள்ள அபிநிவேசத்தால் இவன் திருக் கைகள் விரியும் –
தேன் குழல் உழக்கில் மாவை திணிப்பது போலே -வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான் –திருவாய் -1- 8-5-

நெய் உண்ணோம் பால் உண்ணோம் -என்று சொல்லும் படி அன்றோ அவர்களுக்கு மிச்சம் இல்லாத படி உண்டு விடுவானே –
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வாடி தயிரும் நறு வெண்ணெயும் இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் –நீ பிறந்த பின்னை –பெரியாழ்வார் -2–2–2-என்றும்
கறந்த பாலும் தயிரும் கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய் பிறந்ததுவே முதலாகப் பெற்று அறியேன் எம்பிரான் -2–4–7-என்றும் -உண்டே
தயிரை மோராக்க விட மாட்டேன் -என்று ஆய்ச்சிகள் கையைப் பிடித்துக் கொண்டு தொங்குவானே –
ஆராத வெண்ணெய் விழுங்கி அங்கிருந்த மோரார் குடமுருட்டி –சிறிய திரு மடல் —
கண்ணன் வளருகின்ற இடத்தில் கலப்படம் கூடாதே -சாரமான வெண்ணெய் எடுத்த பின்பு அசாரமான மோரை விரும்பாதது சொல்ல வேண்டுமோ –
பாகவதர் அருகே கழனி மிண்டர் இருந்தால் அஸஹ்யமாமாப் போலே வெண்னெய்க் குடத்து அருகே மோர்க் குடம்
இருந்தது இவனுக்கு அஸஹ்யமாய் இருக்கையாலே உருட்டின படி –
தாமோருருட்டித் தயிர் நெய் விழுங்கிட்டு
தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால்
தாமோதரக் கையால் ஆர்க்கத் தழும்பிருந்த
தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரைக் கண்ணனே சப்பாணி –பெரிய திருமொழி -10- 5-3-
தயிரையும் நேயையும் முறையும் சேர வைப்பவர்கள் பாகவதர்களோடு அபாகவதர்கள் கலந்து இருக்குமா போலே இங்கனே தாவா மோரை உருட்டுவான் –
————————————-
வயிற்றினோடு ஆற்றா மகன் –
அவன் காண்மின்- ஊர் ஆநிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும் -ஆராத தன்மையனாய் அங்கு ஒரு நாள் ஆய்ப்பாடிச்
சீரார் கலையல்குல் சீரடிச் செந்துவர் வாய் வாரார் வன முலையாள் மத்தாரப் பற்றிக் கொண்டு -ஏரார் இடை நோவ எத்தனையோர் போதுமாய்ச்
சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை வேரார் நுதல் மடவாள் வேறோர் கலத்திட்டு -நாரார் உறி ஏற்றி நன்கமைய வைத்தனை –
போரார் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் யுறக்கம் ஓராதவன் போல் உறங்கி அறிவுற்றுத் தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகிருந்த மோரார் குடமுருட்டி முன் கிடந்த தானத்தே -ஓராதவன் போல் கிடந்தானைக் கண்டவளும் –
வாராத் தான் வைத்தது காணாள் வயிறு இடிந்து இங்கு ஆரார் புகுத்துவார் ஐயர் இவர் அல்லால் -நீராம் இது செய்தீர் என்றோர் நெடும் கயிற்றால் –
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே தீரா வெகுளியளாய்ச் சிக்கென வார்த்து அடிப்ப ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் –சிறிய திருமடல்

மையார் தடம் கண் கரும் கூந்தல் ஆய்ச்சி மறைய வைத்த தயிர்
நெய்யார் பாலோடு அமுது செய்த நேமி யங்கை மாயன் –பெரிய திருமொழி -5–1–4-
அவன் அறியாதோர் இடம் தேடி வைக்குமாய்த்து சாந்துப் பரணியில் தயிரை வைக்குமாய்த்து –பெரியவாச்சான் பிள்ளை –
எங்கேனும் வைக்கிற போது இவன் காண்கிறான் என்று பிறகு பிறகு என்று இவள் பார்க்கும் படி –போரார் வேல் கண் மடவாள் –
விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தன் அன்றோ -ஆரப் பொறுத்து இருந்தான் -உண்மையிலே உறங்கியவன் எழுவது போலே சோம்பல் முறித்து
கொட்டாவி விட்டுக் கொண்டு -அவள் திடீர் என்று வந்தாலும் -உறங்கிக் கிடந்தவன் இப்போது தான் எழுகிறான் -என்று அவளுக்குத் தோன்றும் படி இருந்தான் –
தோள்கள் வரை கையிட்டான் என்பதை -எங்கு அறிந்தால் என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க
இவன் தோள்களில் அணிந்து இருந்த சந்தானம் குடத்தின் விளிம்பில் ஒட்டிக் கொண்டு இருந்தது போலும் -என்றார் –
முன் கிடந்த தானத்தே –களவு கண்டான் என்று சொல்லிலும் -படுக்கையோடேயே எழுந்து இருந்து களவு கண்டது -என்று சொல்லும் படி
கால் போட்ட விடத்தே கால் போட்டு -கை போட்ட விடத்தே கை போட்டுக் கிடந்தபடி –
மாறானது இவன் படுக்கையில் வலிந்து ஈரமாக்கின போதும் கூட உணராதவன் போலே படுத்துக்க கொண்டு இருந்தான் –
நெடும் கயிற்றால் –கண்ணி நுண் சிறுத் தாம்பானாலும் -இவன் திருமேனி ஸ்பர்சத்தாலே பெருமை பொருந்திய கயிறாகையாலே அது நெடும் கயிறாயிற்று –
உரலோடே தீரா வெகுளியளாய்ச் சிக்கென வார்த்து அடிப்ப ஆரா வயிற்றினோடு ஆற்றாதான்-அப்போதும் இவனுக்கு வெண்ணெயைப் பற்றியே திரு உள்ளம்
பெரிய திரு நாளிலே சிறைப் பட்டு இருப்பாரைப் போலே வெண்ணெயும் பெண்களும் ஆழி மோழியாய்ச் செல்கிற அமளியில் நாம் புகுந்து இருப்பதே –

அன்றிக்கே- வயிற்றினோடு ஆற்றாதான்-
மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி கண்ணிக்
கயிற்றினால் கட்ட த் தான் கட்டுண்டு இருந்தான்
வயிற்றினோடு ஆற்றா மகன் –பெயர் -91-
உலகை உண்டான் -வயிறு திருப்தி பெற வில்லை -முலை சுவைத்து உண்டான் -இன்னும் திருப்தி பெற வில்லை -வெண்ணெய் எல்லாம் வாரி உண்டான்
ஒன்றிலும் திருப்தி பெற்றிலன் -கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்டது ஒன்றினால் திருப்தி பெற்றான் அத்தனை –
இதுக்குப் பிள்ளை உறங்கா வில்லி தாசர் -வயிற்றை வண்ணானுக்கு இட்டாலோ -என்று பணித்தார் –
————————–
கட்ட வெட்டென்று இருந்தான் —
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி
உரலோடு அறப் பிணித்த நான்று -குரல் ஓவாது
ஏங்கி நினைந்து அயலார் காண இருந்திலையே
ஓங்கோத வண்ணா உரை –பொய்கையார் -24-
பிள்ளை திரு நறையூர் அரையர் -உண்பதற்கு முன்னே அகப்பட்டுக்கொண்டான் -வேறே இடங்களில் வெண்ணெய் விழுங்கி -என்று
உண்ட பின்பு அன்றோ யசோதை கோபம் கொண்டு உரலோடு கட்டினாள் என்று அருளிச் செய்யப் படுகிறது -என்ன
பட்டர் -கண்ணன் வெண்ணெய் திருடியது ஒரு நாள் மட்டுமோ -என்றும் -அவனுக்கு இதுவே யன்றோ காரியம் –
ஒரு நாள் உண்பதற்கு முன்பே பிடி பட்டான் -மற்று ஒரு நாள் உண்ட பிறகு பிடி பட்டான் என்று கொள்ளும் –

கானாயன் கடி மனையில் தயிருண்டு நெய் பருகு நந்தன் பெற்ற ஆனாயன் -பெரிய திருமொழி -5-5-3-
மஹதா தபஸா என்று சக்ரவர்த்தி நாடாள ஒரு பிள்ளை பெற வேணும் என்று நோம்பி நோற்றுப் பெற்றாப் போலே
கவ்யங்கள் பாழ் போக ஒண்ணாது -இவற்றை புஜிப்பான் ஒரு பிள்ளை வேணும் -என்று இதுக்கு அன்றோ இவனைப் பெற்றது –
வெண்ணெய் தான் அமுது செய்ய வெகுண்டு மற்று ஆய்ச்சி யோச்சி
கண்ணியார் குறும் கயிற்றால் கட்ட வெட்டென்று இருந்தான்–பெரிய திருமொழி —
ஸுசீல்யம் ஸுலப்யம் ஆஸ்ரித பாரதந்தர்யம் வெளியிடவே அன்றோ அவதாரம் –
சாமானியன் என்று இடுமீடு எல்லாம் இட அமையும் -என்று இருப்பாரைப் போலே வேறு ஒரு ஹேதுவாய்ச் சொல்லி யன்றியே
இது சொல்லியே நம்மைக் கட்டுவதே என்று இசைந்து இருந்தான் யாயிற்று –
நம்மை வெண்ணெய்க் கள்ளன் என்று நினைத்துத் தானே அடிக்கிறார்கள் -நன்றாக அடிக்கட்டும் -என்று அதையே கொண்டு மகிழ்ச்சியோடு இசைந்து இருந்தான் –
களவு கண்டு அகப்பட்டு கட்டுண்டு அடியுண்டு அழுவதிலே கால ஷேபம் இவனுக்கு –

தோயாவின் தயிர் நெய் அமுது உண்ணச் சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற
தாயால் ஆப்புண்டு இருந்து அழுது ஏங்கும் தாடாளா –பெரிய திருமொழி -7–7-6 –
வாய்க்குப் போந்தார் போந்த படி சொல்லுகிற பழிக்கு அஞ்சாதே மழலைத் தயிரும் நெய்யும் புஜித்தோம் ஆகில் இதுக்கு வருவது ஓன்று உண்டோ -என்றும்
ஒற்றையிட்டுப் பழி சொல்லுகிறார்கள் அன்றே -என்றும் நாட்டார் சொல்லுகிற பழிக்கு லஜ்ஜியாதே இருந்தானாய்த்து —
தாயார் மனங்கள் தடிப்பத் தயிர் நெய்யுண்டே எம்பிராக்கள் –பெரிய திருமொழி -10–5–2-
நல்லது செய்தால் போலே மகிழ்ந்து இருந்தான் –
தொடுவே செய்து இள வாய்ச்சியார் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரானையே –திருவாய் -1–7–6-
தூது செய் கண்கள் அன்றோ –
கட்டுண்டவனை காண வந்த பெண்கள் அனைவரும் அடிக்க -அவதார பிரயோஜனம் பெற்றோமே என்று மகிழ்ந்து இருப்பான்
ஆயர் கொழுந்தாய் அவரால் புடை யுண்ணும் மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை –திருவாய் -1–7–3-
எல்லாருமே இவனை மத்தாலே ஓரடி அடிப்பார்கள் போலும் -பக்தர்கள் இவனைக் கட்டி அடிக்க அடிக்க நன்கு கடைந்து எடுத்த மாணிக்கம் போலே பிரகாசிப்பான்
கட்டின போது வெட்டென்று இசைந்து இருந்தவன் கட்டி அடித்த போது மேலும் பிரகாசத்தோடே விளங்க சொல்ல வேணுமோ -நம்பிள்ளை –
——————————–
அழுகையும் தொழுகையும் –
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும் முகில் இளம் சிறுத் தாமரைக் கையும்
எழில் கோள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும்
அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும் அணி கோள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே–பெருமாள் திருமொழி -7–8-
முழுதும் வெண்ணெய் அளைந்து –தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி -என்றபடி
தொட்டு உண்ணும் -அப்படியே விழுங்கி விட்டால் உடனே தீர்ந்து விடுமே -ஒரு கையில் வைத்து மாரு கை விரலால் குழந்தை இயல்பு போலே உண்ணுவான்
முகில் இளம் சிறுத் தாமரைக் கையும் -செக்கமலத் தளர் போலும் கண் கை கால் செங்கனி வாய் அக்கமலத்தின் இல்லை போலும் திரு மேனி
எழில் கோள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் -அடிக்கவில்லை -அடிக்க ஓங்கினாள் அத்தனையே –
உழந்தாள் நறு நெய் ஆரோ தடா உண்ண இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மதத்தின் பலம் தாம்பாள் ஒச்சப் பயத்தால் தவழ்ந்தான் –பெரியாழ்வார் -1–2–4-
இங்கும் அடிக்க ஒங்க பயத்தால் அதில் இருந்து தப்ப தவழ்ந்தானாம் கண்ணன்
வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும் -கையிலே தயிர் இருந்தால் அகப்பட்டுக் கொள்வோம் என்று அதை இல்லை செய்வதற்காக தயிரை முகத்திலே பூசிக்க கொள்வானாம்
ஈட்டிய வெண்ணெய் யுண்டான் திரு மூக்கு –திருவாய் -7–7-2–அனுகூல ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது தரிக்க மாட்டாதே
வெண்ணெய் களவு காணப் புக்கு கொண்டியிலே பிடியுண்டு பின்பு அத்தை இல்லை செயகைக்காக முகத்திலே தடவிக் கொள்ளுமே –ஈடு
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஓடித் தயிர் உண்ட வாய் துடைத்த மைந்தன் –பெரிய திருமொழி -8–3–5-
அமுது செய்த தயிரைக் காட்டி -நீ களவு கண்டாய் என்பார்கள் என்று பார்த்து அத்தை இல்லை செயகைக்காக முகம் ஏங்கும் தடவிக் கொள்கிற இளிம்பனுக்கு –
யன் நாம நாத நவநீத மசூசுரஸ்த்வம் தச்சாத நாய யதிதே மதிராவிரா ஸீத்-
கிம் முக்த திக்தமமு நா கர பல்லவம் தே காத்ரே ப்ரம்ருஜ்ய நிரகா கில நிர் விசங்க –அதி மானுஷ ஸ்தவம் -39-
கரிய திருமேனி –வெளுத்த தயிர் -சிவந்த ஆதாரம் -பகைத்தொடையில் ஆழ்ந்து அனுபவம்
அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும்
அணி கோள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்
தொழுகையும்-குழந்தை அழுது ஜெயிக்கும் தொண்டர்கள் தொழுது ஜெயிப்பார்கள் -இரண்டையும் செய்தான்
இவை கண்ட யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே-
ஆனந்தோ ப்ரஹ்ம -கண்ணனையே தொல்லை இன்பம் -அபரிச்சின்னனான அவனை யசோதை பரிச்சின்னனாக்கி விட்டாள்-
————————————–
பையவே நிலை
திண்ணக் கலத்துத் திரை யுறிமேல் வைத்த வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும் –பெரியாழ்வார் -2–6–3-
உடையவர்கள் காணுவதற்கு முன்னே கடுகப் போந்து அறியாதவரைப் போலே கிடந்து உறங்கா நிற்கும் –
வெண்ணெய் விழுங்குகிற போதைப் பதற்றத்தில் காட்டில் பதறி உறங்கப் புக்கால் கண் உறங்குமோ -குறு விழிக் கொண்டு
வந்தார் போனார் நிழலாட்டம் பார்த்துக் கொண்டு கிடக்கையாலே இது என்ன பொய்யுறக்கம் என்று பிடித்துக் கொள்ளுவர்கள் இ றே
வெண்ணெய் -என்ற சப்தம் கேட்டதுமே -நான் அல்லேன் என்று அழத் தொடங்குவானே-
ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையில் சீற்றம் உண்டு அழு கூத்த வப்பன் –திருவாய் -6–2–11-
ஊரிலே வெண்ணெய் களவு போயிற்று என்றார்கள் -அவ்வளவில் நாம் இ றே இதுக்கு இலக்கு -என்று அழப் புக்கான் –மடம் மெழுகுவார் ஆர் -என்ன
அஸ்ரோத்ரியன்-மடையன் – என்றார்கள் -இப்பிறப்பு எல்லாம் என்னாலே மெழுகப் போமோ -என்றான் -அது போலே –
நெய்யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ யூன் தாமரைக் கண்கள் நீர் மல்க பையவே நிலையும் வந்து என் நெஞ்சை யுருக்குங்களே–திருவாய் -5–10–3-
தாய் அடிக்க மனம் வைக்க மாட்டாள் -அச்சுறுத்தவே என்பது கூட தெரியாத பிள்ளை –
உன் தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால் நொந்திட மோதவும் கில்லேன் –பெரிய திருமொழி -10-4–8-
அந்த கோல் -தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஓடி –பெரிய திருமொழி -8–3–5-என்றபடி -சிறுகோல் -வைக்கோல் -என்பர் அரும் பதக் காரர்
ஓட தயார் -ஆனால் ஓட தைர்யம் இல்லை -பையவே நிலை -நடனம் ஆடுவது போலே -பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே —
உனக்கானால் தம்பியாவது ஓடலாம் -ஆனால் உன்னுடைய இந்த சேஷ்டித்தமானது என்னை இதில் இருந்து தப்ப முடியாமல்
அகப்படுத்திக் கொண்டு நலிகிறதே -என்கிறார் ஆழ்வார் –

ஹர்த்தும் கும்பே விநிஹித கர ஸ்வாது ஹையங்க வீதம்
த்ருஷ்ட்வா தாமக்ர ஹண சடுலாம் மாதரம் ஜாத ரோஷம்
ப்ரயா தீஷத் ப்ரசலி தபதோ நாபகச்சன் நதிஷ்டன்
மித்யா கோப சபதி நயநே மீலயன் விச்வ கோப்தா –கோபால விம்சதி –

கோப் யாததே த்வயி க்ருதாகசி தாம தாவத்
யாதே தசாச்ருகலி லாஞ்சன சம்பிரமாஷம்
வக்த்ரம் நிநீய பய பாவ நயா சதிதசய
ச மாம் விமோ ஹயதி பீரபி யத்ப்பிபேதி –ஸ்ரீ மத் பாகவதம் –1–8–31-குந்தி இத்தையே சொல்கிறாள் –
—————————————–
9–ஒளியால் சென்று உண்டான் –
வேலிக்குள் நுழைந்து பயிரை நாசம் செய்யும் பட்டிக் கன்று போலே –
அகம் புக்கு அறியாமே சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண் பட்டிக் கன்று –பெரியாழ்வார் -1-6–5-

தெள்ளிய வாய்ச் சிறியான் நங்கைகாள் உறி மேலைத் தடா நிறைந்த
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கியிட்டு
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின் கை எல்லாம் நெய் வயிறு
பிள்ளை பரமன்று இவ் வேழ் உலகும் கொள்ளும் பேதையேன் என் செய்கேனோ –பெரிய திருமொழி -10–7–3–
திருடக் கற்றான் ஒழிய திருட்டை மறைக்க தெரியவில்லையே இவனுக்கு -இவ்வளவும் உண்டால் வயிறு ஜீரணம் ஆகாதே என்று அன்றோ கவலை –

படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு –பெரிய திருமொழி -4–4 -3-
இவனுக்கு நுழைந்து புகுகையாகை இ றே குடிலினுடைய பெருமை –
துன்னு படல் திறந்து புக்கு –பெரிய திரு மடல் –
மேலே படல் இருக்க கீழே நுழைந்ததும் களவு கை வந்ததும் அத்தனை அன்றி அவன் கோல் இட்டுத் திருகி வைக்கும் யந்த்ரம் அறியான்
-பல கால் புக்க வழக்கத்தாலே அறியும் என்கை –
நாள் இளம் திங்களைக் கோள் விடுத்து வேயகம் பால் வெண்ணெய் தொடு உண்ட ஆனாயர் தலைவனே –திருவாய் -3–8–3-
வெண்ணெய் தாழி தட்டுப்பாட்டை ஹர்ஷத்தால் வாடைத் திறந்து – பற்களின் ஒளியையே கை விளக்காகக் கொண்டு -சென்று –
உரு யாரந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று –பெரிய திருமொழி –2–10–6-
த்வாந்தாகாரே த்ருத மணி கணிம் ஸ்வாங்கமர்த்த ப்ரதீபம்
காலே கோப்யோ யர்ஹி க்ருஹக்ருத் யேஷூ ஸூவ்யக்ரசித்தா –ஸ்ரீ மத் பாகவதம் -10–8-
யாரேனும் வரக் கண்டால் வாயை மூடிக் கொள்வான் –
ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பாலுண்டு
பேர்த்தவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு –பெரியாழ்வார் -2–10–5-
த்ரஸ்யன் முகுந்ததோ நவநீத ஸுர்யாத் நிர்புக்ந காத்ரோ நிப்ருதம் சயான
நிஜானி நிஸ்சப்தசாம் சயாஸ் பத்வாஞ்சலிம் பாலா விபூஷணாதி –யாதவாப்யுதம் -4–29-
தான் உள்ள இடம் சதங்கை போன்ற ஆபரண ஒலியால் அறிவார்கள் என்று ஓசைப்படுத்தாமல் இருக்க அஞ்சலி செய்கிறானே -என்ன மௌக்த்யம்-
————————————–
10–ஏலாப் பொய்கள் உரைப்பான்
கடை வெண்ணெய் உண்டாயை அறியும் உலகெல்லாம் யானேயும் அல்லேன் -பொய்கையார் -22-
நெய் தொடுவுண்டு ஏசும்படி யன்னவசம் செய்யும் எம்மீசர் –திருவிருத்தம் -54-
அயர்வரும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து பூமியிலே வந்து அவதரித்துத் தன் பக்கல் ஆசா லேசம் உடையாருடைய ஸ்பர்சம் உள்ள
த்ரவ்யத்தால் அல்லது தரியாதானாய் -அது தான் நேர் கொடு நேர் கிடையாமையாலே -களவு கண்டு அமுது செய்து
தன்னை உதவாத சிசுபாலாதிகள் ஏசும்படி இருக்கிறவர் –

ஆழ் கடல் சூழ் வையாகத்தார் ஏசப் பொய் ஆடிப் பாடித்
தாழ் குழலார் வைத்த தயிர் உண்டான் காணேடீ
தாழ் குழலார் வைத்த தயிர் உண்ட பொன் வயிறு
இவ் வேழ் உலகுண்டும் இடமுடைத்தால் சாழலே–பெரிய திருமொழி –11–5–3-
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு –பெரிய திருமொழி -4–10–1-என்றபடி பஞ்ச லக்ஷம் குடியில்
இடக்கை வலக்கை வாசி அறியாத இடைச்சிகள் கை எடுத்துக் கூப்பிடும் படி வெண்ணெய் அமுது செய்து –

மைந்நம்பு வேல் கண் நல்லாள் முன்னம் பெற்ற வளை வண்ண நன் மா மேனி
தன் நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது அவனிவை செய்து அறியான்
பொய்ந் நம்பி புள்ளுவன் கள்வன் பொதியறை போகின்றவா தவழ்ந்திட்டு
இந்நம்பி நம்பியா ஆய்ச்சியார்க்கு உய்வில்லை என் செய்கேன் என் செய்கேனோ –பெரிய திருமொழி -10–7–4-
வெள்ளிப் பெரு மலைக் குட்டன் பலராமன் இப்படி தீமைகளை செய்ததே இல்லையே
-இவன் அன்றோ பொய்ந் நம்பி -பொய்யே வடிவெடுத்தவன் / கள்வம் பொதியறை -கள்ளத்தனம் கொண்ட கொள்கலம் –

தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு வருவான்
பொன்னேய் நெய்யோடு பாலமுதுண்டு ஒரு புள்ளுவன் பொய்யே தவழும் –பெரியாழ்வார் -3–1–1-
புள்ளுவமாவது -மெய் போலே இருக்கும் பொய் -உண்டு இருக்கச் செய்தேயும் உண்டிலேன் என்கையாலே அஸத்யவாதி என்று தோற்றும் இறே –
ஒரு புள்ளுவன் என்றது -களவுக்கு அத்விதீயன் -என்றபடி
பொய்யே தவழும் -தளர் நடையிட்டுத் திரிகிறவனுக்கு ஷமர் அல்லாதாரைப் போலே தவழுகிறதும் க்ருத்ரிமம் என்று தோற்றும் இறே –

கஸ்த்வம் பால –பலாநுஜ கிமிஹதே–மந் மந்திரா சங்கயா
யுக்தம் தத் நவநீத பாண்ட குஹரே ஹஸ்தம் கிமர்த்தம் ந்யதா
மாத காஞ்சனா வத்ஸாகம் ம்ருகயிதும் மாகா விஷாதம் க்ஷணாத்
இத்யேவம் வநவல்ல வீ ப்ரதிவஸ க்ருஷ்ணஸ்ஸ புஷ்ணாநுந –க்ருஷ்ண கர்ணாம்ருதம் -2–81-

பொய்ந் நம்பி -பெயர் சூட்டுகிறார் திருமங்கை ஆழ்வார் -/
மெய் போலும் பொய் வல்லன் –திருவாய் -10–4–5-/ ஏலாப் பொய்கள் உரைப்பான் –நாச்சியார் -14–3-/பொருத்தம் அன்றோ –
————————————-
11—கண்ணபிரான் கற்ற கல்வி –
வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடையிட்டு அதன் ஓசை கேட்க்கும்
கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக் காக்ககில்லாம் உன் மகனைக் காவாய்
புண்ணில் புளிப்பு எய்தால் ஒக்கும் தீமை புரை புரையால் இவை செய்ய வல்ல
அண்ணற் கண்ணனோர் மகனைப் பெற்ற யசோதை நங்காய் யுன் மகனைக் கூவாய் –பெரியாழ்வார் -2–9–1-

எண்ணெய்க் குடத்தை யுருட்டி இளம் பிள்ளை கிள்ளி எழுப்பி கண்ணைப் புரட்டி விழித்துக் கழண்டு செய்யும் பிரானே –பெரியாழ்வார் -2–4–6-

திருவுடைப் பிள்ளை தான் தீயவாறு தேக்கம் ஒன்றும் இலன் தேசுடையான்
உருக வைத்த குடத்தோடு வெண்ணெய் உறிஞ்சி யுடைத்திட்டுப் போந்து நின்றான் –பெரியாழ்வார் -2–9 -3-

காலை எழுந்து கடைந்த விம்மோர் விற்கப் போனேன் கண்டே போனேன்
மாலை நறும் குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை
மேலையகத்து நங்காய் வந்து காண்மின்கள் வெண்ணையே என்று இருந்த
பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ –பெரிய திருமொழி -10–7–2-
நங்காய் என்று ஒருத்தியை அழைத்தவாறே கண்ணபிரான் தீம்புகளை கேட்க்கையில் உள்ள ஆவலினால் பல பெண்கள்
எழுந்து ஓடி வர எல்லோரையும் நோக்கி -வந்து காண்மின்கள் -என்று பன்மை –

அஞ்சுவன் சொல்லி அழைத்திட நங்கைகாள் ஆயிர நாழி நெய்யாய்
பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகள் உண்கின்று பாகந்தான் வையார்களே –பெரிய திருமொழி -10–7–10-

தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும் ஒரோ குடம் துற்றிடும் என்று
ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்கு எள்கி இவனை நங்காய்
சோத்தம்பிரான் இவை செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்ப கில்லேன்
பேய்ச்சி முலை யுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே–பெரிய திருமொழி -10–7–8-

உன்னை நான் என் கையில் கோலால் நொந்திட மோதவும் கில்லேன் –பெரிய திருமொழி -10–4–8-

அஞ்ச உரப்பாள் யசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் –நாச்சியார் -3–9-
——————————————-
12–யசோதை இளம் சிங்கம்
ஆகண்ட வாரி பரமந்த்ர மேகதேச்யம் பீதாம்பரம் கமல லோசன பஞ்ச ஹேதி
ப்ரஹ்ம ஸ்தநந்தய மயாசத தேவகீதவாம் ஸ்ரீ ரெங்க காந்த ஸூத காம்யதி காபரைவம் –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2–71-
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்து –
மருவு திரு நெற்றியில் சுட்டு யசைதரமணிவாயிடை முத்தம்
தருதலும் உந்தன் தாதையைப் போலும் வடிவு கண்டு கொண்டு உள்ளமுள் குளிர
விரலைச் செஞ்சிறுவாய் இடைச் சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அவ்வுரையும்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே –பெருமாள் திருமொழி -75-

தொல்லை இன்பத்து இறுதி கண்டாள் என்னும் படி அவளை மகிழ்வித்த அவ்வுரைகள் பல பலவே
பூம் கோதை யாய்ச்சி கடை வெண்ணெய் புக்கு உண்ண அங்கு அவள் ஆர்க்கப் புடைக்கப் புடையுண்டு
ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும் ஓங்கோத வண்ணனே –பெரிய திருமொழி -10 -6 -1-
கடைந்து திரட்டிச் சேமித்து வைத்தால் களவு காண்கை அன்றிக்கே கடைந்த போதே நிழலிலே ஒதுங்கிக் களவு கண்டு யாயிற்று அமுது செய்வது –

கும் கும் இதி கிம் ப்ரமதி அம்ப ததி மத்யே
டிம்ப ந நு பூதமிஹ தூரமபயாஹி
அம்ப நவநீதம் இதி சம்வததி கிருஷ்னே
மந்த ஹசிதம் ச மாதுரதி ரம்யம் -இப்படி மழலைச் சொற்களால் மயக்கி யன்றோ வெண்ணெய் உண்டான் –

மாத கிம் யதுநாத தேஹி சஷகம் கிம் தேன பாதும் பய
தன் நாஸ்தி யத்ய கதா அஸ்தி வா நிசி நிஸா கா வா அந்தகார உதயே
ஆமீலியாஷி யுகம் நிஸாப்யுபகாதா தேஹீதி மாதுர் முஹு
வஷோ ஜாம் சுக கர்ஷனோத்ய தகர க்ருஷ்ணஸ்ச புஷ்துணாந –க்ருஷ்ண கர்ணாம்ருத ஸ்லோகம்
மாத-அம்மா / கிம் யதுநாத-என்ன கிருஷ்ணா / தேஹி சஷகம்–ஒரு கிண்ணம் தா / கிம் தேன-எதற்கு /பாதும் பய -பால் குடிக்க /
தன் நாஸ்தி யத்ய -அது இப்போது இல்லை / கதா அஸ்தி வா-பின் எப்போது / நிசி-இரவில் தான் / நிஸா கா வா -இரவு எப்போது வரும் /
அந்தகார உதயே -இருட்ட ஆரம்பிக்கும் பொழுது /ஆமீலியாஷி யுகம் நிஸாப்யுபகாதா-இரண்டு கண்களையும் மூடிக் கொண்டு இருட்டும் வந்து விட்டதே – தேஹீதி-பாலக் கொடு –
மாதுர் முஹு வஷோ ஜாம் சுக கர்ஷனோத்ய தகர க்ருஷ்ணஸ்ச புஷ்துணாந –கள்வனுடைய சாமர்த்திய பேச்சு கேட்க என்ன பாக்யம் செய்தாளோ-

வதநே நவநீத கந்த வாஹம் வசநே தஸ்கரசாதுரீ துரீணம்
நயநே குஹ நாச்ருமாச்ரயே தாச்சரணே கோமல தாண்டவம் குமாரம் –க்ருஷ்ண கர்ணாம்ருதம் -2–15-
லீலா சுகர் அனுபவம் -திருப்பவளத்தில் முடை நாற்றம் -பேச்சு சாமர்த்தியம் -பொய்க்கண்ணீர் –பையவே நிலை –நவநீத நாட்யம் அழகை அனுபவிக்கிறார் –

என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள் -பெரியாழ்வார் -2–2–6 –
ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மாற்றாரும் இல்லை –பெரியாழ்வார் -3–3–1-
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் –திருப்பாவை -1-சேஷ்டிதங்களை கண்ணாரக் கண்ட ஹர்ஷத்தினால் மலர்ந்த கண்கள் –
—————————————-
13–தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன் –
இப்படி யசோதைக்கு தன்னைக் கட்டவும் அடிக்கவும் ஆகும் படி ஆக்கிக் கொடுத்து அவளை வயிறு விளங்கச் செய்த தாமோதரன் –
பிறந்தவாறும் -வளர்ந்தவாறும் –பூதநாதிகள் உயிர் மாளவும்-வெண்ணெய் மாளவும் இறே வளர்ந்தது –
பிரதிகூலர் உயிரும் அனுகூல ஸ்பர்சமுள்ள த்ரவ்யமுமே தாயகமாக வளர்ந்த படி –
பிரதிகூலர் மண்ணுன்னவும் அனுகூலர் கண்ணுன்னவும் இறே வளர்ந்து அருளிற்று –
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன் -பெரியாழ்வார் -2–7–5-
சுரும் குறி வெண்ணெய் தொடு உண்ட கள்வனை –அல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே –திருவிருத்தம் -91-
சுரும் குறி வெண்ணெய் –கல்லாக கயிறு உருவி வைத்த உறி யாயிற்று –
வெண்ணெய் தொடு உண்ட –வைத்த குறி அழியாமே வெண்ணெய் களவு கண்டு அமுது செய்தான்
கள்வனை –களவு தன்னை யாயிற்றுக் களவு கண்டது -ஆகையால் -இது சிலர் களவு கொண்டதல்ல –
தெய்வம் கொண்டதோ நாம் தான் வைத்திலமோ என்னும் படி யாயிற்றுக் களவு கண்டது –

நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க இரங்கிற்றும் –திருவாய் -6–4–4–ஆழ்வார் தம்முடைய திருமேனியில் கயிறு உறுத்தினால் போலே
-நோவ -என்று அழுத்தி -நஞ்சீயர் பாவம் தெரியும் படி சாதிப்பாராம் –
இவ்வளவு உண்டானாகில் இவன் உடம்புக்கு ஆகாதே என்று அன்பின் மிகுதியால் அன்றோ காட்டுகிறாள்
வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக்க அலர்ந்தான் –திருவிருத்தம் -86-
இங்கனே நம்முடைய ஸுசீல்ய ஸுலபயன்கள் நன்கு விலங்காய் பெற்றோமே -அவதார பிரயோஜனம் நிறைவேறப் பெற்றது அன்றோ -என்று திரு முகம் மலர்ந்ததே –
ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை –திருவாய் -1–7–3-
ஆஸ்ரிதர் கட்டி யடிக்க வடிக்கக் களங்கம் அறக் கடையுண்ட மாணிக்கம் போலே திருமேனி புகர் பெற்று வருகிறபடி –
கட்டின அளவுக்கு வெட்டென்று இருக்குமவன் கட்டி யடிக்கப் புக்கால் புகர் பெறச் சொல்லவும் வேணுமோ –
தாம்பால் ஆப்புண்டாலும் -பெரிய திருவந்தாதி -18—என் மகன் இறே -நான் இவனுக்கு நல்லவள் -என்று யசோதைப் பிராட்டி தாம்பினாலே
கட்டினாலும் அவர்கள் கட்டின கட்டு அபிமத விஷயத்தில் சம்ச்லேஷ சின்னம் போலே –

தாம்நா சைவோதரே பத்வா ப்ரத்ய பத்நா துலூகலேது
கிருஷ்ணம் அக்லிஷ்ட கர்மாணமாஹ சேதம மர்ஷிதா
யதி சக்நோஷி கச்சத்வமதி சஞ்சல சேஷ்டிதநு
இதயுக்த்வாத நிஜம் கர்ம சாசகார குடும்பு நீ –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5–6–14-/-15-
கட்டிப் போட்ட பிறகு தன் காரியங்களைச் செய்யச் சென்றால் –பெரிய திரு நாளிலும் சந்த்யா வந்தனம் முட்டாமல் நடத்துவாரைப் போலே –
————————————
14–உன் மாயம் முற்றும் மாயமே
திருடி நெய்க்கு ஆப்பூண்டு நந்தன் மனைவி கடைத் தாம்பால் சோப்பூண்டு துள்ளித் துடிக்கத் துடிக்க அன்று ஆப்புண்டான் –பெரியாழ்வார் -2–1–5-
என் பிள்ளையைக் களவேற்றாதே-உண்டாகில் குண்டியோடு கண்டு பிடித்துக் கட்டிக் கொண்டு வாருங்கோள் என்று முன்பே சொல்லி
வைக்கையாலே தாயாரான தன் முன்னே கட்டோடே அவர்கள் கொண்டு வர -என்பதையே திருடி நெய்க்கு ஆப்பூண்டு -என்கிறார் –
கோம்ய கதாசன ப்ருதக் ப்ருதகுத்ய -க்ருஷ்ண மேத்யை கதைவகதிதும் பிரசுருதாஸ் ததாக –
த்ருஷ்ட்வா ததன்யதே தமேவா நிஜா நத்ருஷ்ட்வா -ஸர்வாச்ச தா நிவவ்ருத்ஸ் வாக்ருஹான் ச லஜ்ஜா –ஸ்ரீ மத் பாகவதம் -10–7–34-
கோபிகள் தனித் தனியே ஒரு கண்ணனை பிடித்து வர யசோதை அருகிலும் கண்ணன் இருப்பதைக் கண்டு வெட்க்கி தங்கள் க்ருஹங்கள் திரும்பினார் –

ததி மதன நிநாதை த்யக்த நித்ர ப்ரபாதே-நிப்ருத பாதமகாரம் வல்லவீ நாம் ப்ரவிஷ்ட
முக கமல சமீரைராசு நிர்வாப்ய தீபாந்-கபலித நவநீத பாது கோபால பால –கிருஷ்ண கர்ணாம்ருதம் -3–87-
தயிர் கடையும் ஓசை கேட்டு எழுந்த பால கிருஷ்ணன் -கோபிகள் அறியா வண்ணம் மெல்லடி நடந்து செந்தாமரை போன்ற திரு வாயாலே ஊதி
விளக்கை அணைத்து வெண்ணெய் வாரி விழுங்குவான் –
பின்னையும் அகம் புக்கு உறியை நோக்கிப் பிறங்கு ஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான் –

பீடே பீடே நிஷண்ண பாலககலே திஷ்டன் ச கோபாலகோ -யந்த்ராந்த ஸ்தித துக்த பாண்டமபாக்ருஷ்யாச் ஸாத்ய கண்டாரவம்
வந்த்ரோ பாந்த க்ருதாஞ்சலி க்ருதி சிர கம்பம் பிபன் ய பய -பாயாதா கத கோபிகா நயனயோர் கண்டுஷ பூத்கார க்ருத் –கிருஷ்ண கர்ணாம்ருதம் -2–97-
மணை மேல் மணையாக அடுக்கி வைத்து அதன் மேல் அமர்ந்த தோழன்மார் தோளின் மேல் நின்று கொண்டு உறியின் மேல் -பானை அசைய
அறியும் படி கட்டிய மணியின் நாக்கை கைகளால் பிடித்துக் கொண்டு ஒலிக்க முடியாதபடி பண்ணி பாலை ஹர்ஷமாக தலையை ஆட்டிக் கொண்டே குடிக்க
-அங்கே வந்த கோபிகை கண்களில் சிதறி விழும்படி உமிழ்ந்து விட்டு ஓடினானாம் –

வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான் –திருவாய் -1–8–5–
கள்ளன் என்று சிலுகிட்டவாறே அவர்கள் தங்களோடு கலந்து அமுது செய்தான் என்னுதல் -ஓர் இளிம்பனும் சதிரனும் களவு கண்டார்கள் -என்ற பட்டர் கதையை ஸ்மரிப்பது —
கண்ணன் தன் தோழனுடைய முகத்தில் வெண்ணெய் பூசிவிட்டு ஓடி விடுவானாம் -இழைத்த வாயன் அகப்பட்டுக் கொள்வான் -என்பதே பட்டர் விளக்கம் –

அந்தர் க்ருஹே க்ருஷ்ண மவேஷ்ய சோரம் பத்வா கவாடம் ஜநநீம் கதைகா
உலூகலே தாமநிபத்த மேநம் தத்ராபி த்ருஷ்ட்வா ஸ்திமிதா பபூவ –கிருஷ்ண கர்ணாம்ருதம் -2–51-
தன் வீட்டில் வெண்ணெய் திருடிய கண்ணனை வீட்டுக்கு உள்ளே வைத்து கதவைப் பூட்டிவிட்டு யசோதையிடம் சொல்ல சென்றவள்
அங்கு உரலோடே கட்டுண்டு கிடப்பதை கண்டு ஆச்சர்யப் பட்டாள்-
உன்னைக் களவிலுரலோடு கட்டி வைத்து உன்னுடைய
அன்னைக்கு ஒருத்தி அறிவித்த போது அலை யாழி யங்கை
தன்னைப் புணர்ந்தருள் தார் அரங்கா அவள் தன் மருங்கில்
பின்னைக் கொடு சென்ற பிள்ளை மற்றார் என்று பேசுகவே –திருவரங்கத்து மாலை
இடுப்பிலும் கண்ணனே -கட்டி வைத்தது தன் குழந்தையாக மாறியது கண்டாள்-
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணின பெரு மாயனின் சில மாயங்களைப் பார்த்தோம் –
—————————————
15–கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன்
உறி வெண்ணெய் தோன்ற உண்டான் -பொய்கையார் -18-களவு வெளிப்படும் படி அன்றோ உண்டான் –
பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறி தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திரு வயிறு ஆர விழுங்கிய அத்தன் –பெரியாழ்வார் -1–9 –7-
நல்ல உரலானால் நடுவே தேடுவார் உண்டாய் இருக்கும் என்றாய்த்து பொத்த உரலைத் தேடி இட்டுக் கொண்டது –

அநந்யார்ஹம் -அன்றோ பொத்த உரலும் –கண்ணி நுண் சிறுத் தாம்பும்-
உறி யாரந்த நறு வெண்ணெய் ஒலியால் சென்று அங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க
தறியார்ந்த கரும் களிறே போலே நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை –பெரிய திருமொழி -2–10 –6–
மதித்து ஊரிலே மூலை படியே உழற்றிக் கொண்டு இருந்த ஆனையானது யாதிருச்சிகமாகப் பிடிபட்டு ஒரு கம்பத்தில் சேர்த்துக் கட்டுண்டு நிற்குமா போலே
தான் கண்டபடி திரிந்து அவள் கட்டுண்டு கண்ணில் பரப்படையப் பரப்பு மாறும்படி கண்ண நீர் மல்கி பிரதிகிரியை அற்று நின்றவனை
-தன்மையானை –மேன்மை இடு சிவப்பு –இதுவே யாயிற்று இவனுக்கு ஸ்வ பாவம் –

ஒளியா வெண்ணெய் யுண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால் விளியா வார்க்க வாய்ப்புண்டு விம்மி யழுதான் –பெரிய திருமொழி -6–7–4-
எம்பெருமானார் -வங்கி புரத்து நம்பி இடம் -எல்லோரையும் நியமிக்கக் கூடிய எம்பெருமானும் கூட யசோதையிடம் அஞ்சி நடுங்கக் கூடுமோ -என்று
சந்தேகம் கொண்டு இருந்தேன் -இன்று சிஷ்யரான உம்மிடத்தில் -கூரத் தாழ்வானுக்கும் ஹனுமத் தாசருக்கும் -திருவாராதன க்ரமம் அருளிச் செய்யும் பொழுது
நீர் பல முறை அணுகி பிரார்த்ததும் சொல்லாமல் இருந்து -இன்று நீர் வந்ததும் அஞ்சி நடுங்கினேன் –
ஆகையால் அது நடந்து இருக்கக் கூடியதே -என்று அறிந்தேன் -என்றாராம் –

மண மருவு தோள் ஆய்ச்சி ஆர்க்கப் போய் உரலோடும் புனர் மருதம் இற நடந்த -பெரிய திருமொழி -8–3–4-
பந்தித்த வற்றை அறுத்துக் கொண்டு போக்கை என்ரிக்கே கட்டின குரலையும் இழுத்துக் கொண்டு போய் –
பகதத்தாதிகள் விட்ட அஸ்திரங்கள் ஆகில் இ றே நேரே மார்வைக் காட்டி நிற்பது -பரிவுடையளாய்க் கட்டினத்துக்கு பிரதிகிரியை இல்லை
-ஆகையால் அத்தையும் இழுத்துக் கொடு போய் –பெரியவாச்சான் பிள்ளை –
பிரதிகூலரான துர்யோதனாதிகள் கட்டின கட்டாகில் இ றே அவிழ்த்துக் கொண்டு போக வல்லது -அனுகூலர் கட்டினால்
அவிழ்த்துக் கொண்டு போக மாட்டான் இ றே -பெரியவாச்சான் பிள்ளை -கண்ணி நுண் சிறுத் தாம்பு வியாக்யானம்
செருக்கனான ஸார்வ பவ்மன் அபிமத விஷயத்தின் கையிலே அகப்பட்டு ஒரு கரு முகை மாலையால் கண்டு உண்டால் அதுக்கு பிரதிகிரியை
பண்ண மாட்டாதே இருக்குமா போலே இ றே இவள் கட்டின கட்டுக்கு பிரதிகிரியை பண்ண மாட்டாதே இருந்த இருப்பும் –
பிறருடைய கர்ம நிபந்தனமாக வரும் கட்டை அவிழ்க்கும் அத்தனை அல்லது தன் அனுக்ரஹத்தால் வந்த கட்டு தன்னாலும் அவிழ்க்கப் போகாது என்கை -நாயனார் –
————————————————
16–எத்திறம் -எத்திறம் -எத்திறம் –
க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வம் -எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே –திருவாய் -8–1–3-
கிருஷ்ணாவதாரத்தில் வெண்ணெய் களவு கண்டு பவ்யனாய்த் திரிந்த நாலு நாளுமாயிற்று இவர் தமக்கு ப்ரயோஜன அம்சமாக நினைத்து இருப்பது –
கீழ் பரத்வத்தை மன் பற்று என்று கழிப்பர் -கம்ச வதத்துக்கு மேல் நுனிக்கு கரும்பு என்று கழிப்பர் —
ஈட்டிய வெண்ணெய் தொடுவுண்ணப் போந்த –திருவிருத்தம் -21-அவதாரம் அன்றோ –

சத்யேவ கவ்ய நிவஹே நிஜதாமநி பூம் நா –பர்யந்த சத்மஸூ கிமர்த்தமஸூ சரஸ் த்வம்
முஷ்ணம்ஸ்ச கிம் வ்யஜகடோ கட சேஷ மக்ரே-கோபி ஜநஸ்ய பரிகாச பதம் கிமாஸீ–அதிமானுஷ ஸ்தவம் -38-

த்வா மன்ய கோப க்ருஹ கவ்யமுஷம் யசோதா குர்வி த்வதீயமவமா நமம் ருஷ்ய மாணா
ப்ரேம்ணாதா தாம பரிணாம ஜூஷாபபந்த -தாத்ருங் ந தே சரிதமார்யஜ நாஸ் சஹந்தே –அதிமானுஷ ஸ்தவம் -40-

வெண்ணெய் திருடி கட்டுப்பட்டு அடிபட்டு ஏச்சுப் பட்டு -ஆழ்வார்களை மோஹிக்க செய்த செயல்கள் அன்றோ –

பத்துடை யடியவர்களுக்கு எளியவன் பிறருக்கு அரிய வித்தகன் மலர்மகள் விரும்பும் நமரும் பெறலடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –திருவாய் -1–3–1-
எங்கானும் இது ஒப்பதோர் மாயம் உண்டே –பெரிய திருமொழி -10–5-
அப்படிப்பட்ட மேன்மையுடையவன் இன்று இங்கனே ஓர் அபலை கையாலே கட்டுண்டு அடியுண்டு நோவுபடுவதே என்று அவன் ஸுலபயத்தை அனுசந்தித்து இனியர் ஆகிறார் —
அன்று உண்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்பூண்டு இருந்தவன் –
அளந்திட்டவன் காண்மின் –ஆப்பூண்டு இருந்தவன் –
உலகு ஏழ் ஆண்டானவன் காண்மின் -ஆப்பூண்டு இருந்தவன்
கடலை படைத்திட்டவன் -காண்மின் -ஆப்பூண்டு இருந்தவன் –
கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு-கடையா நிற்கச் செய்தே பசியராய் இருக்குமவர்கள் சோறு சமையப் பற்றாமல்
வெந்தது கொத்தையாக வாயில் இடுமா போலே கடையப் பற்றாமல் நடுவே அள்ளி அமுது செய்யும் படியைச் சொல்கிறது –
களவினில் -ஆப்பூண்டு -அள்ளி எடுத்தவன் ஆசையுடன் வாயில் இடுவதற்கு முன்னமே பிடிபட்டான்
-உரலோடு ஆப்புண்டான் -குறும்பன் நீ வெள்ளையாகில் போய்க் காணாய் -வார்த்தையும் சொல்லி விட்டாள் –

உரலினோடு இணைந்து இருந்து ஏங்கி –உரல் மூச்சு விடிலும் தான் மூச்சு விடாதே ஜடப்பொருள் போலவே கிடந்தான் –
ஏங்கிய -இது ஒன்றே குரலுக்கும் இவனுக்கும் வாசி -இந்த சுத்தனைக் கள்ளன் என்று கட்டினால் பொறுக்க மாட்டாதே அழத் தொடங்கும் —
அவள் வாய் வாய் என்றால் எரித்த த்வனி இளைய மாட்டாதே பயப்பட்டு நிற்குமே –
எரிவு எத்திறம் -யாதோ வாசோ நிவர்த்தந்தே -மேன்மை கூட பேசுவதற்கு நிலம் இல்லாத போது -நீர்மையோ நிலம் அன்று என்கைக்கும் நிலம் அன்று –
கோயம் குண கதரகோடிகத கியான் வா கஸ்ய ஸ்துதே பதம் அஹோ பாத கஸ்ய பூமி –
மாத்ராயதி த்வமஸி தாமநி ஸந்நிபத்த தச்சராவிணா முதித சாஷூஷ நிர்ஜராணாம்-
பத்நாசி அந்த ஹ்ருதயம் பகவன் குதஸ்தத் சர்வோஹி வஸ்ய விஷயே விவ்ருணோதி வீர்யம் –அதிமானுஷ ஸ்தவம் -41-
வசப்பட்ட ஆழ்வார்கள் இதயத்தை கட்டி வைத்து அன்றோ உன் திரலைக் காட்டுகிறாய் –
———————————
-17-நம்மாழ்வாரும் நவநீதமும் –
உயிரினால் குறைவில்லா உலகு ஏழ் தன்னுள் ஒடுக்கித் தயிர் வெண்ணெய் யுண்டானை –திருவாய் -4–8–1-
தயிரும் வெண்ணெயும் களவு காணப் புகுந்த போது செருப்பு வைத்துத் திருவடி தொழுவாரைப் போலே அந்நிய பரதைக்கு உடலாக ஒண்ணாது என்று
எல்லா லோகங்களுக்கும் வேண்டும் சம்விதானம் தன் சங்கல்பத்தாலே செய்து பின்னையாயிற்று வெண்ணெய் அமுது செய்தது –நம்பிள்ளை –
கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றில் பிள்ளைக்கு ஈடாக போஜனாதிகள் பண்ணுமா போலே உள் விழுங்கின
லோகங்களுக்கு ஜீவனமாகத் தயிர் வெண்ணெய் உண்டான் -நம்பிள்ளை
உண்டாய் உலகு ஏழ் முன்னமே உமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே –திருவாய் -1–5-8 –
சம்வாத ரூபமாக வியாக்யானம் அமைத்து அருளின பூர்வாச்சார்யர்களின் மதிக்கு மண் விண் எல்லாம் கூடி விலை போருமோ-
வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான் போய் கலவாது என் மெய் கலந்தானே –திருவாய் -1–8- -5-
ஆக நம்மாழ்வாரும் நவநீதமும் ஒன்றே அவனுக்கு –
—————————————
18–வண்ணான் தாழியும் தயிர்த் தாழியும் –
மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி கண்ணிக்
கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான்
வயிற்றினோடு ஆற்றா மகன் –பேயாழ்வார் -91-
இதுக்குப் பிள்ளை யுறங்கா வில்லி தாசர் -வயிற்றை வண்ணானுக்கு இட்டாலோ –என்று பணித்தார் –

வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திரு மாலே –ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள்
மண்ணை யுமிழ்ந்த வயிறு –பொய்கையார் -93-
உபய விபூதி உக்தனாய் இருக்கும் இருப்புக்குச் சேருமோ -ஓர் இடைச்சி வெண்ணெய் விழுங்குகை —
பிரளயம் கொள்ளாதபடி வயிற்றிலே வைத்து வெளிநாடு காணப் புறம்பே உமிழ்ந்து ரஷித்த வயிறு இத்தனை வெண்ணெயாலே
நிறைக்க வேண்டி இருந்ததோ -பின்னை உன் வயிற்றை வண்ணானுக்கு இட மாட்டாயோ -என்கிறார் –
ஆய்ச்சி பாலையுண்டு மண்ணையுண்டு வெண்ணெய் யுண்டு –திருச்சந்த விருத்தம் -37-

இந்த வண்ணான் தாழி போன்ற வயிற்றைத் திருப்தி செய்வதற்காகக் கண்ணபிரான் தயிர்த் தாழி ஒன்றில் அகப்பட்டுக் கொண்டான் –
கண்ணனை நான் பார்க்கவே இல்லை என்று போய் சொன்ன தாதி பாண்டன் தானும் மோக்ஷம் பெற்று தயிர்த் தாளிக்கும் மோக்ஷம் பெற்றுத் தந்தானே
ஆபாச தர்மமான ஸத்ய வாக்ய பரிபாலனம் -பற்றி -பெருமாளை காட்டுக்கு போகச் சொல்லி -சக்கரவர்த்தியைப் போலே இழக்கைக்கு உறுப்பு –
முன்னமே வரப் பிரதானத்தைப் பண்ணி வைத்து இப்போதாக மறுக்க ஒண்ணாது என்று ஆபாசமான ஸத்ய தர்மத்தைப் பற்றி நின்று –
ராமோ விக்ரஹவான் தர்ம -என்கிற -பெருமாளோடே கூடி வாழ இருந்த பேற்றை இழந்த சக்கரவர்த்தியைப் போலே ஆபாசமான
உபாயாந்தரங்களிலே அன்வயித்து நிற்கை யாகிறது -கிருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்று சனாதன தர்மமான பகவத் விஷயத்தோடு கூடி
சலுகை யாகிற பேற்றை இழக்கைக்கு உறுப்பாய் விடும் என்கை –
வெண்ணெய் களவு காணப் புக்க இடத்தே தொடுப்புண்டு வந்து தம் அகத்தே புகப் படலைத் திருகி வைத்து
மோக்ஷம் தாராவிடில் காட்டிக் கொடுப்பேன் என்று மோக்ஷம் பெற்ற ததி பாண்டர் –
நாம ரூபங்களுக்கு உள்ளவற்றுக்கு எல்லாம் ஒரு சேதன அதிஷ்டானம் உண்டாகையாலே இதுக்கு மோக்ஷம் கொடுக்க வேண்டும் என்கிற
அவன் நிர்பந்தத்துக்காக மோக்ஷம் கொடுக்கப் பெற்ற தயிர் தாழி –
சிந்திக்க நெஞ்சில்லை நாவில்லை நாமங்கள் செப்ப நின்னை
வந்திக்க மெய்யில்லை வந்திரு போது மொய் மா மலர்ப் பூம்
பக்தித் தடம் புடை சூழ் அரங்கா ததி பாண்டன் உன்னைச்
சந்தித்த நான் முக்தி பெற்றது என் எனோ தயிர்த் தாலியும் –திருவரங்கத்து மாலை -53-
தர்ம சமஸ்தானம் பண்ணப் பிறந்தவன் தானே சர்வ தர்மங்களையும் விட்டு
என்னைப் பற்று என்கையாலே சாஷாத் தர்மம் தானே என்கிறது -முமுஷுப்படி -213-
————————————–
19–வெண்ணெய் யுண்ட வாயன் அணியரங்கன் –
பூதக ஜலம் போலே அந்தர்யாமித்வம் –ஆவரண ஜலம் போலே பரத்வம் -பாற் கடல் போலே வ்யூஹம் -பெருக்காறு போலே விபவங்கள்-
அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் -பின்னானார் வணங்கும் சோதி -அன்றோ –
வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை கண்ணனை -பெரிய பெருமாளைத் திருவடி தொழுதால் அவதாரத்தில் பிற்பட்டார்க்கும் உதவுக்கைக்காகக் கிருஷ்ணன்
வந்து கண் வளர்ந்து அருளுகிறான் -என்று ஸ்மரிக்கலாம் படியாய்த்து இருப்பது —
யசோதைப் பிராட்டி பிள்ளை மனம் கன்றாமல் தீம்பிலே கை வளரும் படி வளர்த்த மொசு மொசுப்பு எல்லாம் தோற்றி இருக்கும்
பெரிய பெருமாளைக் கண்டால் -என்றும் வசிஷ்டாதிகளாலே ஸூசிஷதராய் வளர்ந்து படிந்த விநயம் எல்லாம் தோற்றும் படியான
சக்கரவர்த்தி திருமகனை ஸ்மரிக்கலாம் படி இருக்கும் நம் பெருமாளைக் கண்டால் -என்றும் -பட்டர் அருளிச் செய்வர் –
அஞ்ச உரப்பாள் யசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் -நாச்சியார் -3–9-என்றபடி யசோதையாலே அனுமதிக்கப் பட்ட பின்பு
வெண்ணெயை வாரி வாரி விழுங்குவானே
பெரிய பெருமாளை கிருஷ்ணாவதாரமாக இறே நம் பூர்வாச்சார்யர்கள் அனுசந்திப்பது –
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் யுண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை -என்றார் இறே திருப் பாண் ஆழ்வார் –
திருப் பவளத்தை மோந்து பார்த்தால் இப்போதும் வெண்ணெய் மணக்கும் ஆய்த்து
ப்ரணத வசதாம் ப்ருதே தாமோதாத்வகர கிண–தழும்பை இன்றும் நாம் பெரிய பெருமாள் திருமேனியில் சேவிக்கலாம் –
சேஷியுடைய திரு விலச்சினை –பணைகளிலே –
தாவினவாறே உடை நழுவத் தழும்பைக் கண்டு இடைச்சிகள் சிரித்தார்கள் -அத்தழும்பு தோன்றாமைக்கு இறே
நம் பெருமாள் கணையம் மேல் சாத்துச் சாத்துகிறது -என்று ஜீயர்
யத் பிருந்தாவன பண்டிதம் ததிரவைர் யத் தாண்டவம் சிஷிதம் –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -1–115-
தயிர் கடையும் ஓசைக்கு ஏற்ப தாண்டவம் செய்து பயிற்சி பெற்ற திருவடிகள் அன்றோ
தத்நா நிமந்த முகரணே நிபத்த தாளம் நாதஸ்ய நந்த பவநே நவநீத நாட்யம் –ஸ்ரீ கோபால விம்சதி -4-
ஆக -பெரிய பெருமாள் திரு மேனியில் வெண்ணெய் உண்ட மொசு மொசுப்பு / திருப் பவளத்திலே வெண்ணெய் மணம்/
திரு வுதரத்திலே கட்டுண்டு இருந்த தழும்பு / திருவடிகளில் நவநீத நாட்யம் –
வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளையை நேரிலே சேவித்து அனுபவிக்கலாம் நாமும் இன்றும் –
——————————-
20–புராணங்களில் வெண்ணெய் களவு
ஸ்வல்பே நைவது காலேந ரங்கிநவ் தவ் ததா வ்ரஜேது க்ருஷ்டஜா நு கரௌ விப்ர பபூவது ருபாவபி–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5–6- 10–
இரு பாலகர்களும் தவழ்ந்தனர் –
கரீஷ் பஸ்மை திக்தாங்கவ் ப்ரமமாணா விதஸ்தத ந நிவாரயிதும் ஸேஹே யசோதா தவ் ந ரோஹிணீ-11-
கோமயம் சாம்பல் பூசிக் கொண்டு திரிந்தனர் -யசோதையும் ரோகிணியும் தடுக்க அசக்தர்கள் ஆனார்கள் –
கோவாட மத்யே க்ரீடந்தவ வத்சவாடம் கதவ் புன தத ஹர்ஜாத கோ வத்ஸ புச்சா கர்ஷண தத் பரவ -12–
தொழுவம் சென்று அன்று ஈன்ற கன்றின் வாலை இழுத்தனர் –
யாதா யசோதா தவ் பாலா வேகஸ்தா நசாராவுபவ் -சஸாக நோ வாரயிதும் க்ரீடந்தாவதி சஞ்சலவ் -13-
இரண்டு தீம்பர்களையும் தடுப்பதற்கு யசோதை சக்தி யற்றவள் ஆனாள்
தாம் நா சைவ உதரே பத்தவா ப்ரத்ய பத்தநாது லூகலே -கிருஷ்ணம் அக்லிஷ்ட கர்மாணமாஹ சேதமமர்ஷிதா-14-
தாம்பினால் உரலோடு சேர்த்தி கட்டினாள்
யதி சக்நோஷி கச்ச த்வம் அதி சஞ்சல சேஷ்டிதா -இதயுக்த்வா அத நிஜம் கர்ம சா சகார குடும்பி நீ -14-
சக்தி இருந்தால் இப்போது செல் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு தன் கார்யங்களை செய்யத் தொடங்கினாள்
வெண்ணெய் களவு பற்றி சொல்லாமல் உரலோடு கட்டியதை மட்டும் சொல்லும் ஸ்ரீ விஷ்ணு புராணம் –

தாம் ஸ்தன்யகாம ஆ ஸாத்ய மத்நந்தீம் ஜநநீம் ஹரி -க்ருஹீத்வா ததி மந்த்தானம் ந்யஷேதத் ப்ரீதிமா வஹன்–ஸ்ரீ மத் பாகவதம் -10- 9–4-
முலைப்பால் உண்ண விரும்பி மத்தைப் பிடித்துத் தயிர் கடைய ஒட்டாமல் தடுத்தான் –
தமங்கமா ரூடமபாயயத் ஸ்தனம் ஸ்நேஹஸ் நுதம் சமிதமீ ஷிதீ முகம் –அத்ரூப்தமுத் ஸ்ருஜ்ய ஜவேன சா யயாவுத் சிஸ்யமா நே பவசி தவதிஸ்ரிதே-5-
முலைப்பால் கொடுத்தாள்-அப்பொழுது காய்ச்ச அடுப்பில் வைத்த பால் பொங்கி வழிய சடக்கென எழுந்தாள் யசோதை –
சஞ்சாத கோப ஸ்புரிதா ருணாதரம் சந்தஸ்ய தத்பிர்ததி மந்த்த பாஜநம் -பித்வா ம்ருஷாச்ருர்த்ருஷ தச்மநா ரஹோ ஜகாச ஹையங்கவ மந்த்ரங்கத -6-
அதனால் கோபித்து கல் குழவியால் தயிர் கடைந்த பாத்திரத்தை உடைத்து வீட்டினுள்ளே சென்று வெண்ணெயை எடுத்து ஏகாந்தமாக உண்ணத் தலைப்பட்டான்
உத்தார்ய கோபீ ஸூஸ்ருதம் பய புன ப்ரவிஷ்ய சந்த்ருஸ்ய ச தத்ய மத்ரகம் -பக்நம் விலோக்ய ஸ்வஸூ தஸ்ய கர்ம தஜ்ஜஹாஸ தஞ்சாபி ந தத்ர பச்யதி -7-
காய்ந்த பாலை இறக்கி வைத்து வந்த யசோதை தயிர் பாத்திரம் உடைந்து இருக்க கண்டால் -கண்ணனே செய்த கார்யம் என்று சிரித்தாள் –
ஆனாள் அங்கு கண்ணனை காணவில்லை
உலூக லாங்க்ரே ருபரி வ்யவஸ்த்திதம் மர்காய காமம் தததம் சுசிஸ்மிதம் –ஹையங்கம் ஸுர்யவி சங்கிதே க்ஷணம் நிரீஷ்ய பச்சாத் ஸூதமாக மச்சனை -8-
உரலில் மீது அமர்ந்து வெண்ணெயை குரங்குக்கு கொடுத்து திருட்டு தானம் தோன்ற கள்ள விழி விழிக்கும் கண்ணனை கண்டு மெல்ல பின்புறமாக சென்றாள்-
தாமாத்த யஷ்டிம் ப்ரஸமீஷ்ய ஸத்வரஸ் ஸ்தாதோ வருஹ்யாபச சாரா பீதவத் — கோப்யன்வதா வன்ன யமாப யோகி நாம் ஷமம் பிரவேஷ்டும் தபேசரிதம் மன-9-
கையில் கோலுடன் வந்த யசோதை கண்ட பயந்து ஓட -ரிஷிகள் மனம் அணுக முடியாமல் மயங்கும் -அந்த கண்ணனை துரத்திக் கொண்டு ஓடினாள் –
அந்வஞ்சமாநா ஜனனி ப்ருஹச்சலச் சுரோணி பராக்ராந்த கதிஸ் ஸூ மத்யமா -ஜவேன விஸ்ரம்சித கேச பந்த நச்யுத ப்ரஸூநாநுகதி பராம்ருசத் -10-
தலையில் சூடிய புஷபங்கள் அவிழ்ந்து தரையில் விழும் படி வேகமாக ஓடி அவனை பிடித்தாள்-
க்ருதா கசம் தம் ப்ரருந்தமஷிணி கஷந்தமஞ்சன் மஷிணீ ஸ்வ பாணிநா -உத்வீஷமாணம் பயவிஹ்வலே க்ஷணம் ஹஸ்தே க்ருஹீத்வா பிஷ யந்த்ய வாகுரத் -11-
மை கலைந்த கண்களை கசக்கி -அஞ்சி உள்ள கண்ணனை கைகளில் பிடித்து பயமுறுத்தி அடிப்பது போல் கையை ஓங்கினாள்
த்யக்த்வா யஷ்டிம் ஸூதம் பீதம் விஞ்ஞாயார் பகவத் சலா-இயேஷகில தம் பத்த்தும் தாம்நா தத் வீர்ய கோவிதா -12-
கண்ணன் பயந்து இருப்பதை அறிந்து கோலை எறிந்து விட்டு அவனை கயிற்றால் கட்ட எண்ணினாள்-
ந சாந்தர் ந பஹிர் யஸ்ய ந பூர்வம் நாபி சா பரம் -பூர்வாபரம் பஹிச் சாந்தர் ஜகதோ யோ ஜகச்ச ய-13-
தம்மத்வா ஆத்மஜ மவ்யக்தம் மர்த்ய லிங்கமதோஷஜம் -கோபி கோலூகலே தாம் நா ப பந்த ப்ராக்ருதம்யதா -14-
அந்த பராத்பரனை அன்றோ தனது மகனாக நினைத்து கயிற்றினால் உரலோடு கட்டத் தொடங்கினாள்
தத்தாம பத்யமா நஸ்ய ஸ்வார்ப கஸ்ய க்ருதாகச –த்யங்குலோ நம பூத்தேன சந்ததேன் யச்ச கோபிகா -15-
இரண்டு விறல் கிடை நீளம் குறைவாக இருக்க மற்றொரு கயிற்றைக் கொணர்ந்து அத்துடன் சேர்த்தாள்
யதாஸீத் ததாபி ந்யூனம் தே நான்யதபி சந்ததே-ததபி த்யங்குலம் ந்யூனம் யத்யதா தத்த பந்தனம் -16-
இப்படி எத்தனை கயிறுகள் கொண்டு வந்து சேர்த்தாலும் நீளம் பொறாமல் இரண்டு விறல் கிடை நீளம் குறைவாகவே இருந்தது
ஏவம் ஸ்வகேஹதாமாநி யசோதா சந்த தத்யபி -கோபிநாம் விஸ்ம யந்தீ நாம் ஸ்மயந்தீ விஸ்மிதா பவத் -17-
இப்படி வீட்டில் உள்ளா கயிறுகளை இணைத்துக் கொண்டே இருக்க -கோபிகள் இதைக் கண்டு ஆச்சர்யாப் பட்டார்கள் -யசோதையும் ஆச்சர்யம் உற்றாள்-
ஸ்வமாதுஸ் ஸ்வின்ன காத்ராயா விஸ்ரஸ்தகபர ஸ்ரஜ -த்ருஷ்ட்வா பரிச்ரமம் க்ருஷ்ண க்ருபயாஸீத் ஸ்வ பந்தநே -18-
சிரமப்படும் தாயைக் கண்டு மனம் இரங்கி தன்னைக் காட்டும்படி அனுகூலனாக இருந்தான் –
வத்ஸான் மூஞ்சந்க்வசித ஸமயே க்ரோசா சஞ்ஜாத ஹாஸ -ஸ்தேயம் ஸ்வாத்வத்ய தததிபய கல்பிதைஸ் தேயயோகை
மர்கான்போஷயன் விபஜதி ச சேந்நாத்தி பாண்டம் பிநத்தி-த்ரவ்யாலாபே ஸ்வ க்ருஹ குபைதோ யாதியுபக் ரோச்ய தோகான் -10–8–29-
கன்றுகளை அவிழ்த்து விடுகிறான் -தயிர் பால் குடிக்கிறான் -வெண்ணெயை குரங்குகளுக்கு பங்கிட்டு கொடுத்து தானும் உண்டு விட்டு
வெறும் பாத்திரங்களை உடைத்து விடுகிறான் -படுக்கையில் உறங்கும் குழந்தைகளை அழப்பண்ணுகிறான்-
ஹஸ்தாக்ராஹ்யே ரஸயதி விதிம் பீட கோலூ கலாத்யை -சித்ரம் ஹ்யந்திர நிஹி தவயு நச்சிக்ய பாண்டேஷூ தத்வித்
த்வாந்தாகாரே த்ருத மணி கணம் ஸ்வாங்க மர்த்த ப்ரதீபம் -காலே கோப்யோயர்ஹிக் க்ருஹ ரூத்யேஷூ ஸூ வ்யக்ர சித்தா -30-
உரால் மேலே ஏறி உறியில் உள்ளவற்றை உண்ணுகிறான் -எட்டாத போது கல் வீசி ஓட்டை யாக்கி உள்ளவற்றை உண்ணுகிறான் –
தன் திருமேனி ஒளி கொண்டே இருட்டு அறையில் செல்கிறான் -கோபிகள் வீட்டு வேலை செய்யும் பொழுது பல சேஷ்டைகள் செய்கிறான் –
ஆழ்வார்கள் போன்ற அனுபவம் ஸ்ரீ விஷ்ணு புராணம் -ஸ்ரீ மத் பாகவதம் இல்லையே –
————————————-
21–இதிஹாசங்களில் வெண்ணெய் களவு
தத ச பாலோ கோவிந்தோ நவநீதம் ததா ஷயம் -க்ராஸமா நஸ்து தத்ரயம் கோபீ பிர் தத்ருசே ததா —
தாம்நா தோலூகலே கிருஷ்ணோ கோபீ பிச்ச நிபந்தித –சபா பர்வம் -52-57
உரலோடு கட்டியதையே சொல்லும் –/ நாராயண கதாம் இமாம் -என்று தொடங்கி கங்கை காங்கேயன் உத்பத்திகளை பேசி
எச்சில் வாய் பட்டு -பரிசுத்தம் ஆக்க ஹரி வம்சம் –
அசத் கீர்த்தன காந்தார பரிவர்த்தன பாம்ஸூலாம் –வாசம் ஸுரி கதா லாப கங்கயைவ புனீ மஹே-
ஹரி வம்சத்தில் உள்ள வெண்ணெய் களவு விருத்தாந்தம் –
அதி ப்ரஸக்தவ் க்ரீடாயாம் க்ருஷ்ண சங்கர்ஷணவ் முஹு க்வசித் வேஸ்மதி நிர் கத்ய நவநீதம்ச க்ருஹணத–
வேறு க்ருஹத்தில் இருந்து வெண்ணெய் கொண்டு வந்த கிருஷ்ணன் பலராமன்
சமஷோப்ய தக்ரம் பஹுசோ தாரகவ் தாரகைஸ் ச ஹ -அன்வ பூதாம் ததோ ராஜன் கடாம்ச்ச பரி ஜக்னது
மோர் குடத்தை உடைத்தது
ததி பீதவாது தேவேசவ் தான்கடாம்ச்ச பிபேஷது சிக் யஞ்ச பரி ஜக்ராஹ கிருஷ்ணோ தாரக வேஷவான்
உறியில் வைத்த தயிரைக் குடித்தது –
ஹ்ருத்வா சித்வாச கோவிந்த பபவ் ஷீராணி ஸர்வஸ -தச்சிஷ்டம் சைவ தேவேச ஷீதவ் ச சமவாஷிபத் —
பாலை எல்லாம் குடித்து மீதி உள்ளவற்றை தரையில் கொட்டி விட்டான் கோவிந்தன்
பாயசம் ச சமாநீய க்ருஹாதன்யத்ர விஷிபன்–தாராகேப்யஸ் ததா கிருஷ்ணோ ததவ் கிருஷ்ணோ ததவ் ஸ்வம் சமாசரன்-
இன்னும் ஒரு வீட்டில் இருந்து பாயாசம் எடுத்து வந்து தோழர்களுக்கு கொடுத்தான் கண்ணன்
சிக்யாச்ச கடமாதாய ததனாம் தாரக சத்தம –நிர்பித்யாச்சித்ய பூமவ்து நிஷ்பிபேஷ ச கேசவ –
மோர் பாடையை எடுத்து தூர எறிந்தான்
கேசித் வேசமதி நிர்கத்ய சீக்ய ஸ்த் தான் பயசோகடான் -ஆதாய யுகபத் சேர்வான் பய பித்வா முதா ப்ருசம் -அபிஹத்ய தத சேர்வான் நிஷ்பிபேஷ் ஹசன்ஹவி –
ஒரு வீட்டில் புகுந்து எல்லா பாலையும் பர் சமயத்தில் குடித்து மகிழ்ந்தான் –
ஆச்சித்ய சிக்ய மன்யத்ர ததோ தத்நோ கடன் ஷிபன் -யதாகாமம் தத பீத்வா தார கேப்யஸ் ததோ ததவ் —
மற்று ஒரு உறியில் இருந்து தயிர் குடத்தை எடுத்து பருகி தோழர்களுக்கும் கொடுத்தான்
அத வேகான் முத்தா க்ருஷ்ண க்வசி தன்யத்ர வேஸ்மநி -குப்தான் கடாநுபாதாய த்வரிதோத பபஞ்ஜஹ
வேறு வீட்டுக்குள் சென்று குடங்களை எடுத்து உடைத்தான் –
க்வசித் க்ருத கடன் பூர்ணான் பஹு நாதாய வேஸ்மநி -வ்யபஜத் தார கேப்யஸ்து பக்ஷயன் ஸ்வ்யமாபபவ் –
வேறு ஒரு வீட்டில் நெய் குடங்களை எடுத்து வந்து தோழர்கள் உடன் தானும் உண்டான்
அந்யதோ வேஸ்மன சிக்கியாத் கடாம்ஸ் தக் ரஸ்ய பூரகான்–ஆதாயதூய பஹுதா தஸ்மிந் நீவா முஹு ஷிபன் -வ்யஹஸத்விவிதம் ஹாசன் நநர்த ச ச தாரக –
வேறு ஒரு வீட்டில் மோர் குடத்தை போட்டு உடைத்து சிரித்து நாட்டியம் ஆடினான்
தக்ரேஷூ பய ஷிப்ய தகரம்ச பயசி ஷிபன் -பயோ ஜலிஷூ சம்யோஜ்ய க்ருதமக்ளவ் ஜுஹாவச –
மோரில் பாலக் கொட்டியும் பாலில் மோரைக் கொட்டியும் -பாலில் நீரைக் கொட்டியும் நெய்யை நெருப்பில் கொட்டியும் விளையாடினான் –
ஏவமத்யந்ததோ கோப்யோ விநேதுர் விஸ்வரம் ப்ருசம்–கா கதிர் வத பத்ரேதி கோப்யஸ் சர்வாஸ் ததா ப்ருவன் —
கோபிகள் இன்னல்கள் அடைந்து யசோதையிடம் முறையிட்டார்கள்
அத தாப் யோ யதா நஷ்டம் யசோதா தத்த வத்சலம்-சமாச் வாஸ்ய தத சர்வா ஸ்வம் ஸ்வம் வேசம வ்யகாலயத் –
அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்து திருப்தி செய்து தாமதம் இல்லம் செல்லும் படி செய்தால் யசோதை
ததோ யசோதா சம்க்ருதா கிருஷ்ணம் கமல லோசனம் –உவாச சிசு ரூபேண சாரந்தம் ஜகாத்தை ப்ரபும்
கோபம் கொண்டு தாமரைக் கண்ணனை நோக்கி யசோதை கூறினாள்
ஏஹி வத்ஸ பிப ஸ்தன்யம் துர்வோடும் மம ஸம்ப்ரதி –தாம் நாசைவ உதரே பத்தவா ப்ரத்ய பத்நாது லூகலே -யதி சக்நோஷி கச்சேதி தமுக்த்வா கர்ம சா கரோத்-
வயிற்றில் கயிற்றைக் கொண்டு கட்டி உரலோடு சேர்த்து நன்றாகக் கட்டி முடிந்தால் போ பார்க்கலாம் -என்று சொல்லி தன் கார்யங்களைச் செய்யத் தொடங்கினாள் –
ஆழ்வார்களை போலே எந்த ரிஷிகளுக்கும் காட்டி அருள வில்லையே –
————————
22–இமையோர் தமக்கும் நெஞ்சால் நினைப்பரிது–
உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம் என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன் –எல்லாம் -என்னா நிற்க -ஒழியாமல் -என்றது
-வ்யாஸ வால்மீகிகளுக்கு பிரகாசியாதவையும் இவர்க்கு பிரகாசிகையாலே —
பிரகாசியாமைக்கு அடி சத்வ தாரதம்யம் -அதுக்கடி பிரசாத தாரதம்யம் -கர்ம வஸ்யருமாய் அசுத்த ஷேத்ரஞ்ஞருமான ப்ரஹ்மாதிகளுடைய பிரசாதம் இறே ரிஷிகளுக்கு
இவர்க்கு திருமாலால் -திரு மா மக்களால் –பீதாக வாடைப் பிரானாருடைய பிரசாதத்தாலே இ றே —
ரிஷிகளுக்கு போலே புண்யம் என்று ஒரு கையாலே புதைத்து விடுகிற ஞானம் இல்லாமையால் இவர்க்கு முற்றூட்டாக்கிக் கொடுக்கும் இ றே
சகல அர்த்தங்களும் பகவத் ப்ரேமம் உடையார்க்கு இ றே பிரகாசிப்பது –
பொய்கையாழ்வார் -விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் -என்றும் –
பேயாழ்வார் -மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டும் ஆற்றாதாய் வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி
கண்ணிக் கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான் வயிற்றோடு ஆற்றா மகான் -என்றும் –
திருமழிசை ஆழ்வார் -ஆய்ச்சி பாலையுண்டு வெண்ணெய் யுண்டு மண்ணை யுண்டு -என்றும்
நம்மாழ்வார் -மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்பூண்டு உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் -என்றும்
வெண்ணெய் வார்த்தையுள் சீற்றமுண்டு அழுத கூத்த வப்பன் -என்றும்
மதுரகவி யாழ்வார்-கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பேறு மாயன் -என்றும்
குலசேகர ஆழ்வார் -முழுதும் வெண்ணெய் யளைந்து தொட்டுண்ணும் முகிழ் இளம் சிறுத் தாமரைக் கையும் எழில் கோள் தாம்பு கொண்டு
அடிப்பதற்கு எள்கு நிலையும் -வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும் அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும் தொழுகையும் -என்றும் –
பெரியாழ்வார் -பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறி தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும் மெத்தத் திரு வயிறு
ஆர விழுங்கிய அத்தன் -என்றும் -மிடறு மெழு மெழுத்தோடே வெண்ணெய் விழுங்கிப் போய் -என்றும்
ஆண்டாள் -தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன் -என்றும்
திருப் பாண் ஆழ்வார் –கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் -என்றும் –
திருமங்கை ஆழ்வார் -உறி யாரந்த நறு வெண்ணெய் ஒலியால் சென்று அங்குண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு
ஆர்க்கத் தறி யாரந்த கரும் களிறே போலே நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையான் -என்றும்
ஓராதவன் போல் உறங்கி அறிவுற்று -தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி -ஆராத வெண்ணெய் விழுங்கி அருகிருந்த
மோரார் குடமுருட்டி முன் கிடந்த தானத்தே ஓராதவன் போல் கிடந்தானைக் கண்டவளும் –ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் -என்றும்
அனுபவித்தது போலவோ -ஆழம் கால் பட்ட -நம்மாழ்வாரும்
துஞ்சா முனிவரும் இல்லாதவரும் தொடர நின்ற
எஞ்சாப் பிறவியிடர் கடிவான் இமையோர் தமக்கும்
தஞ்சார் விலாத தனிப் பேரு மூர்த்தி தன் மாயம் செவ்வே
நெஞ்சால் நினைப்பரித்தால் வெண்ணெய் யூண் என்னும் ஈனச் சொல்லே –திருவிருத்தம் -98-
சர்வேஸ்வரனாய் ப்ரஹ்மாதிகளுக்கும் கூட ஆஸ்ரயணீயனாய் அவாப்த ஸமஸ்த காமநோய் இருக்கிறவன் -ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யமே
தனக்குத் தாரகமாய் நேர் கொடு நேர் கிட்டப் பெறாதே இப்படிக் களவு கண்டாகிலும் புஜிக்க வேண்டி அது தான் தலைக் கட்டப் பெறாதே -வயது கையதாக
அகப்பட்டு கட்டுண்டு அடியுண்டு பிரதிகிரியை அற்று உடம்பு வெளுத்துப் பேகணித்து நின்ற நிலை சிலர்க்கு நிலமோ -நம்பிள்ளை ஈட்டு ஸ்ரீ ஸூக்திகள்-
பேசுவார் எவ்வளவு பேசுவார் அவ்வாவே –என்பதற்கு ஏற்ப சிறிது பேசிக் களித்தோம் –

——————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ. வே. வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..

One Response to “வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை –ஸ்ரீ உ. வே. வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் –”

  1. Raji venkat Says:

    “கும் கும் இதி கிம் ப்ரமதி அம்ப ததி மத்யே
    டிம்ப ந நு பூதமிஹ தூரமபயாஹி
    அம்ப நவநீதம் இதி சம்வததி கிருஷ்னே” இந்த ஸ்லோகம் எதில் வருகிறது எனத் தேடிக் கொண்டிருந்தேன்.இது க்ருஷ்ண கர்ணாம்ருதத்தில் இல்லையே.வேறு எதிலேனும் வருகிறதா? தக்க காட்டுகள் தந்து உதவ வேண்டுகிறேன்.அடியேன் __/\__

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: