ஸ்ரீ ஷமா ஷோடசீ -ஸ்வாமி வேதாச்சார்ய பட்டர் —

திருவரங்கச் செல்வனாரின் -க்ஷமை குணத்தை -போற்றி -ஸ்ரீ கூரத் தாழ்வானின் திருக் குமாரர் -ஸ்ரீ வேத வியாச பட்டரின் –
திருக்குமாரர்-ஸ்ரீ வேதாச்சார்ய பட்டர் அருளிச் செய்த ஸ்தோத்ர கிரந்தம் –

யச் சக்ரே ரங்கிணஸ் ஸ்தோத்ரம் ஷாமா ஷோடசி நாமகம்
வேத வியாஸஸ்ய தநயம் வேதாச்சார்யம் தமாஸ்ரயே —

பகவத் த்வராயை நம -ஸ்ரீ பட்டர் போலே இங்கு ஸ்வாதந்தர்யம் தடுக்க வல்ல க்ஷமை குணம்
எப்பொழுதும் ஓங்கி நிலை நிற்க வேண்டும் -என்று விண்ணப்பிக்கிறார்

ஸ்ரீ ரெங்கேச யயா கரோஷி ஜெகதாம் ஸ்ருஷ்ட்டி பிரதிஷ்டா ஷயான்
அத்ராமுத்ர ச போக மஷய ஸூகம் மோக்ஷஞ்ச தத்தத் த்ருஷாம்
த்வத் ஸ்வாதந்தர் யம பாஸ்ய கல்பித ஜகத் ஷேமாதி ஹ்ருதயா ஸ்வத
ஷாந்திஸ் தே கருணா சகீ விஜயதாம் க்ஷேமாய சர்வாத்மநாம் –1-

அழகிய மணவாளா -உன்னுடைய க்ஷமை குணம் மூலமாகவே ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் செய்து அருளுகிறாய் –
அனைவரும் இஹ லோக ஆமுஷ்மிக ஐஸ்வர்யம் பெற அருளியும் -அநந்ய பிரயோஜனரை உன் பால் ஈர்த்து அருளியும் –
உன்னுடைய ஸ்வாதந்தர்யம் நீக்கப்பட்டு லோகத்தில் க்ஷேமம் நிலை நாட்டப்பட்டு –
உன்னுடைய தயை குணத்துக்கு தோழியாக க்ஷமை உள்ளதே
தயை குணம் ஸ்ரீ ரெங்க நாச்சியாருடையது —
க்ஷமை ஸ்ரீ பூமா தேவிக்கு அசாதாரணம் -ஆண்டாள் அரங்கன் கைத்தலம் பற்றியதால்
அவளை நாயகியாகவும் ஸ்ரீ தேவி தோழி யாகவும் அருளிச் செய்து ஆண்டாளை தஞ்சம் என்று அடைகிறார்-

ஸ்ரீ ரெங்கேச யயா கரோஷி ஜெகதாம் ஸ்ருஷ்ட்டி பிரதிஷ்டாய ஷயான்
அத்ராமுத்ர ச போக மஷய ஸூகம் –அத்ர போகம் -அமுத்ர போகம் -அக்ஷய ஸூகம் -கைவல்யம் என்றவாறு
மோக்ஷஞ்ச தத்தத் த்ருஷாம் –அவ்வவற்றில் விருப்பம் உடையவர்களுக்கு
இஹ லோக போகம் அம்முஷ்மிக போகம் கைவல்யம் -பரமானந்த மோக்ஷம் இவற்றை அளிக்க
த்வத் ஸ்வாதந்தர்யம் அபாஸ்ய கல்பித ஜகத் ஷேமா ஸ்வத அதி ஹ்ருதயா-இயற்கையாகவே ஷமா உமக்கு பரம பாக்யம் அன்றோ
ஷாந்திஸ் தே கருணா சகீ விஜயதாம்
கருணா சகீ -தத்புருஷ -பஹு வ்ரீஹி சமாசமாக கொண்டு -கருணையும் சாமையும் கூடியே இருந்து
க்ஷேமாய சர்வாத்மநாம்-சகல சேதனருடைய ஷேமத்துக்காக நித்ய மங்களமாக விளங்கட்டும் என்றவாறு

ஆஸீர் நமஸ்கரியா வஸ்து நீர்த்தேசம் -இவற்றுக்காக மங்கள ஸ்லோகத்துடன் உபக்ரமிப்பார்கள்-
இது க்ஷமை-கல்யாண குணத்துக்கு ஆஸீர் –
இந்த கல்யாண குணம் நீடூழி நின்று லோகத்துக்கு சேம வைப்பாகட்டும் என்றவாறு
ரக்ஷணத்துக்கு க்ஷமை வேண்டுமானால் ஸ்ருஷ்ட்டி சம்ஹாரங்களுக்கும் க்ஷமை வேண்டுமோ என்னில்-
ஒவ்கபத்யம் அனுக்ரஹ கார்யம்
கரண களேபரங்களை அநீதி பிரவ்ருத்திகளுக்கு ஹேதுவாக்கி அநர்த்தப்படுவதை ஒடுக்கி
வைப்பதாக சம்ஹாரமும் அனுக்ரஹ காரியமே

———————

நீரோ உத்தமர் அன்றோ -பாபமே செய்யாதவர் -பொறுமை குணத்தை தஞ்சம் என்ன ஹேது என் -என்று
பகவான் திரு உள்ளதாக இத்தை அருளிச் செய்கிறார் –

பாபாநாம் பிரதம அஸ்ம் யஹம் பவதி சாஸ்திரம் பிரமாணம் பரம்
ஸ்ரீ ரெங்கேச ந வித்யதே அத்ர விசய சந்த்யேவ தே சாக்ஷிண
ப்ருஷ்ட்வா தான் அதுநா மயோதிதமிதம் சத்யேன க்ருஹ்யேத் சேத்
சத்யம் ஹ்யுக்தமிதி க்ஷமஸ்வ பகவன் சர்வம் ததஸ்மத்க்ருதம் –2-

நானே நாநா வித நரகங்கள் புகும் பாபங்களை செய்துள்ளேன் –
சர்வஞ்ஞன் நீர் உம்மால் சாக்ஷிக்கு வைக்கப் பட்ட வருண பகவாதிகள் இடம் கேட்டால்
அறியலாம் -இப்போது எதற்கு மன்னித்து அருள வேணும் என்னில் -பொய்யையே பேசும் இந்த இருள் தரும் மா ஞாலத்தில்
உண்மையை ஒத்துக் கொண்ட அடியேன் என்பதால் -தன்னடியார் –அது செய்யார் என்றவன் அன்றோ நீர் –

தே சாக்ஷிண–சூர்ய சந்த்ர வருணாதிகள் அவனுக்கு சாஷிகள் அன்றோ
பவதி சேத் சாஸ்திரம் பிரமாணம் பரம்-மத்யம தீபமாக்கி முன்னும் பின்னும் அந்வயம்
சத்யேன-சத்யத் வேன-என்றவாறு –தத்வேன–பாட பேதம்
செய்த பாவங்கள் இல்லை செய்யாதே இசைந்து போகும் அடியேனை க்ஷமைக்கு இலக்காக்குவதே தகுதி என்கிறார் ஆயிற்று

————————————–

த்வத் ஷாந்தி கலு ரெங்கராஜ மஹிதீ தஸ்யா புநஸ் தோஷணே
பர்யாப்தம் ந சமஸ்த சேதன க்ருதம் பாபம் ததோ மாமகம்
லஷ்யம் நேதி ந மோக்து மர்ஹஸி யத குத்ராபி துல்யோ மயா
நான்யஸ் சித்யதி பாபக்ருத் தததுநா (-தத நயா -) லப்தம் து நோ பேஷயதாம் –3-

உலகோர் பாபங்கள் அனைத்தும் சேர்ந்தாலும் உம்முடைய க்ஷமைக்கு அவல் பொறி போல் அன்றோ –
அதற்கு சவால் விடும் படி அன்றோ –
அடியேன் செய்து கொண்டு இருக்கும் பாபங்கள் -அலட்சியம் செய்யாமல் காத்து அருளுவாய் –

ஹே ரெங்கராஜ த்வத் ஷாந்தி மஹிதீ கலு -உனது பொறுமைக்குணம் மிகப் பெரிய வயிறு உடைத்தது அன்றோ
மஹிதீ-மகத்தான குஷியை உடையது என்றுமாம்
தஸ்யா தோஷணே புநஸ் சமஸ்த சேதன
க்ருதம் பாபம் ந பர்யாப்தம் -அத்தை வயிறார உணவு கொடுத்து திருப்தி செய்யும் விஷயத்தில் லோகத்தில் உள்ள
ஸமஸ்த சேதனர்கள் செய்த பாபங்களும் போராதே
ததா மாமகம் பாபம் ந லஷ்யம்
இதி மோக்தும் ந அர்ஹஸி -ஆகவே அடியேன் செய்த பாபங்கள் எந்த மூலைக்கு என்று அலஷியம் செய்யலாகாது
யத மயா துல்யோ பாப க்ருத் அந்ய குத்ராபி ந சித்யதி -என்னோடே ஒத்த பாபிஷ்டன் உலகில் வேறு எங்கும் தேற மாட்டான் அன்றோ –
நின் ஒப்பார் இல்லா என் அப்பனே என் ஒப்பாரும் இல்லையே இந்த நீசத் தன்மைக்கு
தததுநா (-தத நயா -) லப்தம்-தத் அது நா லப்தம் து ந உபேஷயதாம்-எனவே இப்போது லபிக்கப் பெற்ற இதனை உபேக்ஷிக்க வேண்டா

மயி திஷ்டதி துஷ்க்ருதாம் ப்ரதானே மித தோஷா நிதரான் விசிந்வதீ த்வாம் அபராத தசதைர் பூர்ண குஷி
கமலா காந்த தயே கதம் பாவித்ரீ -தயா ஸ்லோகம் பெரும்பாலும் இத்தை ஒக்கும்

———————————————

புண்யம் பாபமிதி த்வயம் கலு தாயோ பூர்வேண யத் ஸாத்யதே
தத் த்வத் விஸ்ம்ருதி காரகம் தநுப்ருதாம் ரங்கேச சஞ்சாயதே
பச்சாத் யஸ்ய து யத் பலம் ததிஹ தே துக்கச்சித ஸ்மாரகம்
தேநாதேன க்ருதம் ததேவ சிசுநேத் யஸ்மத் க்ருதம் ஷம்யதாம்—-4–

புண்ய பலனாக ஐஸ்வர்யம் அனுபவம் -உன்னை மறக்கடிக்கப் பண்ணும் –
பாப பயனாக துன்பம் வரும் பொழுது தானே உன் நினைவு –
அடியேனுக்கு உன் நினைவேயாக இருப்பதால் பாபங்களையே செய்தவனாக தான் இருக்க வேண்டும்
இதுவே சாட்சி -இதுவே ஹேதுவாக என்னை பொறுத்து அருள வேணும் –

ஹே ரங்கேச புண்யம் பாபமிதி த்வயம் கலு -உலகில் புண்யம் பாப்பம் இரண்டு தானே உள்ளது
தாயோ பூர்வேண யத் ஸாத்யதே தத் த்வத் விஸ்ம்ருதி காரகம் தநுப்ருதாம் சஞ்சாயதே-முதலில் சொன்ன புண்யம் மூலம்
பெரும் சம்பத்து தானே உன்னை மறக்கப் பண்ணுகிறது
பச்சாத் யஸ்ய து யத் பலம் ததிஹ தே துக்கச்சித ஸ்மாரகம் -பாபா பயனாக வரும் துக்கம் அன்றோ ஆர்த்தி ஹரனான
உன்னை நினைக்கப் பண்ணுகிறது
தேநாதேன க்ருதம் ததேவ சிசுநேத் யஸ்மத் க்ருதம் ஷம்யதாம்-ஆகையால் இந்த பையல்-நம்மை அனைவரதும் நினைக்கச் செய்வதான
அந்த பாபத்தையே செய்து போந்தான் என்று திரு உள்ளம் பற்றி தீவினைகளை எல்லாம்
க்ஷமிக்கது தக்கவை அன்றோ என்று சமத்காரமாகப் பேசுகிறார்

————————————————————-

புண்யம் யத் தவ பூஜனம் பவதி சேத் ததகர்த்துரிஷ்டே க்ருதே
தத் ஸ்யாத் ரங்க பதே க்ருத ப்ரதிக்ருதம் சர்வே அபி தத் குர்வதே
பாபம் சேத் அபராத ஏவ பவதஸ் தத்கர்த்ரு சம்ரக்ஷணே
ஷாந்திஸ் தே நிருபாதிகா நிருபமா லஷ்யதே தத் ஷம்யதாம்-5–

வர்ணாஸ்ரமம்-நழுவாதவர்களுக்கு மட்டுமே நீ அருளுவது தனக்கு செய்த நல் காரியத்துக்கு நன்றி செலுத்தும்
பிரதியுபகாரமாகவே தான் ஆகும் –
அபராதிகளில் மிக்க என்னை மன்னித்து அருளினால் தான் உனது க்ஷமை குணம் வீறு படும் -என்றவாறு –

ஹே ரங்க பதே புண்யம் இதி யத் தவ பூஜனம் பவதி சேத் -புண்யம் உன்னை வழிபாடு செய்வதாக முடிகின்றது
தத கர்த்துர் இஷ்டே க்ருதே தத் க்ருத ப்ரதிக்ருதம் ஸ்யாத்-அந்த புண்யம் செய்தவனுக்கு நீ இஷ்ட சித்தியைப்
பண்ணிக் கொடுத்தால் அது பிரதி உபகாரம் அன்றோ
சர்வே அபி தத் குர்வதே-அவ்வித கார்யத்தை லோகத்தார் செய்கின்றார்கள்
பாபம் சேத் பவதஸ் அபராத ஏவ -உன் விஷயத்தில் அபராதம் செய்து உன் திரு உள்ளம் நோவு படுவதே பாபமாகும் அன்றோ
ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமை ஆஜ்ஜா யஸ் தாம் உல்லங்க்ய வர்த்ததே ஆஜ்ஜாஸ் சேதீ மம துரோகி மத பக்தோபி ந வைஷ்ணவ –
அவனே சோதிவாய் அருளினான்
வர்ணாஸ்ரம ஆசாரவதா புருஷேண பர புமான் விஷ்ணுர் ஆராத்யதே பந்தா நான்யஸ் தத் தோஷ காரகா -என்று
வர்ணாஸ்ரமத்துடன் கூடிய பகவத் ஆராதனம் புண்யம்
தத் கர்த்ரு சம்ரக்ஷணே சதி தே ஷாந்திஸ் நிருபாதிகா நிருபமா லஷ்யதே-அப்படிப்பட்ட பாபிஷ்டனை நீ ரஷிப்பது அன்றோ
உன்னுடைய ஷமா குணத்துக்கு உபாதி அற்றதாகவும் ஒப்பற்றதாகவும் ஆகும்
நிர்ஹேதுக விஷயீ காரமே தன்னேற்றம்
தத் ஷம்யதாம்-ஆகவே க்ஷமித்து அருளும் –

———————————————————

ந த்வித்ராணி க்ருதான்யநேந நிரயைர் நாலம் புன கல்பிதை
பாபாநாம் இதி மத்க்ருதே தததிகான் கர்த்தும் ப்ரவ்ருத்தே த்வயி
தேப்ய அப்யப்யதிகாநி தான்யஹமபி ஷூத்ர கரோமி ஷணாத்
தத் யத்னஸ் தவ நிஷ்பல கலு பவேத் தத் தே க்ஷமைவ ஷமா –6-

நாநா வித நரகங்களை நீ ஸ்ருஷ்டித்தாலும் அவை போதாது என்னும் படி அன்றோ
நான் பாபங்களை செய்து முடிக்க வல்லவனாய் உள்ளேன்
ஆகவே நீ என்னை தண்டிக்க நினைத்து போட்டி போட்டு என்னை வெல்ல வைக்காமல் -வீணாக முயலாமல் –
என்னை பொறுத்து அருளுவதே உனக்கு உசிதம் –

ரங்கபதே அ நே ந க்ருதாநி–பாபாநி ந த்வித்ராணி -இந்தப்பையலால் செய்யப்பட பாபங்கள் ஸ்வல்பமானவை அல்ல –
பாபாநாம் ந கல்பிதை நிரயைர் ந அலம் இதி மத் க்ருதே தததி காந் கர்த்தும் த்வயி ப்ரவ்ருத்தே அதி ஷூத்ர -ஆதலால் ஏற்படுத்தி
உள்ள நரகங்கள் போதாதவை என்று நீ -மத் க்ருதே-என் பொருட்டு -மேலும் அதிக ஷூத்ர நரகங்களை ஸ்ருஷ்டிக்க முயன்றால்
அஹம் அபி ஷணாத் தேப்ய அபி அப்யதிகாநி தாநி கரோமி -அல்பனான அடியேனும் ஒரு நொடிப்பொழுதில்
முன்னிலும் அதிகமான பாபங்களை செய்திடுவேன்
தத் தவ யத்ன நிஷ்பல கலு பவேத் தத் ஷமா ஏவ தே ஷமா -ஆகவே உன் முயற்சி பலன் அற்று ஆகி விடுமே –
ஆனபின்பு ஷமிப்பது தான் உனக்குத் தகுதியாகும்

——————————————————-

சம்பூயாகில பாதகைர் பஹு விதம் ஸ்வம் ஸ்வம் பலம் தீயதாம்
சர்வம் ஸஹ்ய மிதம் மம த்வயி ஹரே ஜாக்ரத்யபி த்ராதரி
துக்காக் ராந்த மவேஷ்ய மாம் இஹ ஜநோ துஷ்டா சயஸ் த்வத் குணான்
ஷாந்த்யாதீன் ப்ரதி துர்வசம் யதி வதேத் சோடும் ந தத் சக்யதே –7-

பாபங்களை செய்து பழகி நீ கொடுக்கும் தண்டைகளையும் அனுபவிப்பதில் பழகிப் போந்த என்னால் பொறுக்க முடிந்தாலும்
நீ அன்றோ திரு உள்ளம் போற நொந்து போவாய் –
உன் அடியார்களும் உனது ஷமையை குறைவாக பேச -அத்தை என்னால் பொறுக்க முடியாதே –

ஹரே அகில பாதகைர் சம்பூயா பஹு விதம் ஸ்வம் ஸ்வம் பலம் தீயதாம் -நான் செய்த அநேக பாபங்களும் ஓன்று சேர்ந்து
அவற்றின் பலன்களை தாராளமாகக் கொடுக்கட்டும்
அகில பதாகை -இந்த ஜென்மத்தில் செய்தவை -மேலும் செய்ய சங்கல்பித்தவை- ஜன்மாந்தரங்களில் செய்தவை –
செய்யப் போகுமவை -த்விஷந்த பாப க்ருத்யாம் -அசல் பிளந்து ஏறிட்டவை முதலான அனைத்தையும் சொன்னவாறு –
இதம் சர்வம் மம ஸஹ்யம் -இவற்றை எல்லாம் நான் சகித்தே ஆக வேண்டும்
ஆனாலும்
இஹ துஷ்டா சயஸ் ஜநோ -இவ்வுலகில் துர்புத்தி உள்ள ஜனங்கள்
த்ராதரி த்வயி ஜாக்ரதி அபி மாம் துக்க ஆக்ராந்தம் அவேஷ்ய –ரக்ஷகனான நீ ஜாகரூகனாக இருக்கவும் –
என்னை பாப பலன்களாக துக்கங்களை அனுபவிப்பிப்பவனாகக் கண்டு
ஷாந்தி ஆதீன் த்வத் குணான் ப்ரதி துர்வசம் வதேத் யதி தத் சோடும் ந சக்யதே –ஷமாதி கல்யாண குணங்களை பற்றி
சொல்லத்தகாத வார்த்தைகளைச் சொல்லும் அவத்யத்தை அடியேனால் சகிக்க முடியாதாகுமே

யத் யத் பவ்யம் பவது பகவன் பூர்வ கர்ம அனுரூபம் –என்று சொல்லிக் கொண்டே எத்தையும் அடியேன் அனுபவிக்க வேண்டியதே –
தன் காய் பொறாத கொம்பு உண்டோ என்று சகிப்பேன்
ஆனால் வாய் கொண்டு சொல்ல ஒண்ணாத அவத்யங்களை உனது கல்யாண குணங்களின் மேல் சொல்வதை சகிக்க முடியாதே
ஸ்தோத்ர ரத்னத்தின் -அபூத பூர்வம் மம பாவி கிம் வா -ஸ்லோகத்தை தழுவியது இது

———————————————————–

ஷாந்திர் நாம வரோ குணஸ் தவ மஹான் ஸ்ரீ ரெங்க ப்ருத்வீ பதே
சோயம் சந்நபி சாபராத நிவஹாபாவே ந வித்யோ ததே
தஸ்மான் நைகவிதாபராதகரணே நிஷ்டாவதா நித்யச
ப்ராப்நோத்யேஷ மயா ப்ரகாசமாதுலம் ப்ராப்ஸ்யாம் யஹம் ச ப்ரதாம் –8-

உன்னிடம் ஸமஸ்த கல்யாண குணக் கூட்டங்கள் இருந்தாலும் ஷமையே பிரதானம் -அத்தை வெளிப்படுத்த –
நாட்டமும் சபதமும் கொண்டு குற்றங்களை செய்த என்னால் அன்றோ -என்பதால் புகழ் எனக்கே அன்றோ –

ஸ்ரீ ரெங்க ப்ருத்வீ பதே
தவ ஷாந்திர் நாம வரோ குணஸ் மஹான்–உனது மிகச் சிறந்த ஷமா என்னும் குணம் மஹா வைபவம் பொருந்தியது –
சோயம் சந் அபி சாபராத நிவஹ அபாவே ந வித்யோ ததே -இக்குணமானது இரா நின்றதே யாகிலும்
அபராதிகள் கூட்டம் இல்லை யாகில் பிரகாசிக்க மாட்டாதே
தஸ்மான் நைகவித அபராத கரணே நித்யச நிஷ்டாவதா மயா ஏஷ அதுலம் பிரகாசம் ப்ராப்நோதி-ஆதலால் பலவகை அபராதங்கள்
செய்வதில் அநவரதம் ஊக்கமுள்ள அடியேனாலே இந்த ஷமா குணமானது ஒப்பற்ற பிரகாசத்தை அடைகின்றது –
அஹம் ச ப்ரதாம் ப்ராப்ஸ்யாமி -அடியேனும் உன்னுடைய ஷமாகுணத்தை பிரகாசிக்கச் செய்தவன் என்ற பெரும் புகழை அடைய போகிறேன்
சாபராத நிவஹாபாவே–சாபராத என்பதை நிர்வாகத்துக்கு விசேஷணம் ஆக்கி –
அபராதங்களோடு கூடின கூட்டம் என்று கொள்வது பொருந்தாது
சாபராதா நாம் நிவஹ-கூட்டம் என்ற போதே யாருடைய கூட்டம் -என்ற கேள்விக்கு –
அபராதி ந –அபராதிகள் கூட்டம் -என்றபடி

———————————————-

மத் பாப ஷபணாய யோஜயசி சேத் கோரேண தண்டேந மாம்
ரங்காதீஸ்வர கேவலாக கரணாத் துக்கம் மம ஸ்யான் மஹத்
தத் த்ரஷ்டுர் பவத அபி துக்க மதுலம் கோரம் தயாளோ பவேத்
தஸ்மாத் தே அபி ஸூகாய மத்க்ருதமிதம் சர்வம் த்வயா ஷம்யதாம் –9-

அனுபவித்தே கழிக்க வேண்டும்படியான பாபங்களை செய்வதால் தண்டித்தே தீர வேண்டி இருந்தாலும் –
நான் படும் துன்பங்களை
பரம தயாளுவான நீ கண்டு படும் துயரம் விலக்கிக் கொள்ளும் பொருட்டாகவாவது எனக்கு அருளுவாய் –

தயாளோ ரங்காதீஸ்வர மத் பாப ஷபணாய கோரேண தண்டேந மாம் யோஜயசி-என்னுடைய பாபங்களை
தொலைக்க கொடிய தண்டனையுடன் சேர்ப்பாயாகில்
சேத் கேவல அக கரணாத் மம மஹத் துக்கம் ஸ்யாத் -நான் வெறும் பாபங்களையே செய்து இருப்பதனால்
எனக்கு அவற்றால் மகத்தான துக்கம் உண்டாகும்
தத் த்ரஷ்டுர் பவத அபி அதுலம் கோரம் துக்கம் பவேத்-நான் படும் துக்கத்தைக் காணப்போகிற பரம தயாளுவான
உனக்கும் ஒப்பற்ற கொடிய துக்கம் உண்டாகும்
ஸ்வ துக்கத்தை ஸ்வயமேவ விளைத்துக் கொள்வது நல்லதோ
தஸ்மாத் தே அபி ஸூகாய மத் க்ருதம் இதம் சர்வம் த்வயா ஷம்யதாம் -ஆகவே நீயும் ஸூகப்படுவதற்காக
நான் செய்துள்ள இவற்றை எல்லாம் பொறுப்பதே நலம்

—————————————

தேவ த்வாம் சரணம் ப்ரபன்னம் அபி மாம் துக்கான் அநந்ய ஆஸ்ரயம்
பாதந்தே யதி சர்வ பாப நிவஹாத் த்வாம் மோக்ஷயிஷ்யாமி அஹம்
இத்யுக்தம் தவ வாக்யமர்த்த விதுரம் ஜாயேத யத்வா பவான்
தத்ரா சக்த இதி ப்ரதேத ஹி ததோ மாம் ரக்ஷது த்வத் ஷமா –10-

உன்னையே சரண் அடைந்தேன் -நீ உரைத்து அருளிய சரம ஸ்லோகம் பொய்க்கலாமோ –
சர்வ சக்தன் ஸத்ய வாக்யன் அன்றோ நீ –
நீ அருளிச் செய்த வார்த்தை பொய்யாகாமல் இருக்க எனது பாபக் கூட்டங்களை பொறுத்தே ஆக வேண்டும் —
சரம ஸ்லோகத்தை கேடயமாக எடுக்கிறார் –

தேவ த்வாம் சரணம் ப்ரபன்னம் அபி மாம் துக்கான் -உன்னையே தஞ்சமாகப் பற்றி இருக்கிற என்னையும் துக்கங்களானவை
அநந்ய ஆஸ்ரயம் -யதா ததா-பாதந்தே யதி–வேறு ஒரு புகல் இன்றிக்கே என்னையே பற்றி நின்று நலியுமாகில்
-அஹம் த்வாம் சர்வ பாப நிவஹாத் மோக்ஷயிஷ்யாமி
இதி யுக்தம் தவ வாக்யம் அர்த்த விதுரம் ஜாயேத-நீ அருளிச் செய்த சரம ஸ்லோக ஸ்ரீ ஸூக்திகள் பொருள் அற்றதாகி விடுமே
யத்வா பவான் தத்ர அசக்த இதி ப்ரதேத ததோ த்வத் ஹி ஷமாம் மாம் ரக்ஷது -ஆகவே உனது ஷமாகுணம்
அடியேனை ரஷித்து அருளட்டும்
இப்படிப்பட்ட அவத்யத்தை சம்பாதித்திக் கொள்வதில் காட்டிலும் –
என் உடம்பில் அழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ என்றும்
உன்னுடைய பாபங்களை நான் க்ஷமித்து அருள நீ சோகிக்கக் கடவையோ என்றும்
அருளிச் செய்தபடி என்னை ரஷித்து கைக் கொள்வதே நன்று
அநந்ய ஆஸ்ரயம் என்பதை மாம் -என்பதற்கு விசேஷணமாகவும் கொள்ளலாம்

—————————————————–

ந த்வம் ஷாம்யஸி சேதிதம் மம க்ருதம் நாஸ்த்யத்ர காசித் ஷதி
பூர்வம் யத் சம பூத்த தேவ ஹி புநர் ஜாயேத தத் ஜாயதாம்
யத்வா ஸ்யாததிகம் ச ச அபி ஸூ மஹான் லாப அஸ்து மே தாத்ருஸ
ஸ்வாமின் தாஸ ஜனஸ் தவாயமதிகம் ஸ்வைரேண தூரீ பவேத் –11–

ஸ்வாமின் இழவு உன்னது அன்றோ -நானோ சொத்து -பாபமே செய்து அதனால் விளையும் துன்பத்தில் பழகி விட்டேன்
உனது உடைமையை இழக்க ஒண்ணாது என்பதாலேயே என்னை பொறுத்தே அருள வேணும் –

ஸ்வாமின் மம க்ருதம் இதம் த்வம் ந ஷாம்யஸி சேத் அத்ர காசித் ஷதி நாஸ்தி
எனது பாபத்தை நீ ஷமியாது ஒழி யில் இதில் யாதொரு ஹானியும் இல்லை
பூர்வம் யத் சம பூத் தத் ஏவ ஹி புநர் ஜாயேத தத் ஜாயதாம் –இதுவரையில் பாப பலனாக என்ன நேர்ந்ததோ
அதுவே யன்றோ மீண்டும் மீண்டும் நேரப் போகிறது -அது தாராளமாக நேரட்டும்
யத்வா அதிகம் ச ஸ்யாத் ச அபி
அல்லது முன்னிலும் அதிகமாகவே நேர்ந்தாலும் நேரட்டும்
கல்ப கோடி சதே நாபி ந ஷமாமி வஸூந்தரே -என்கிறபடியே நிக்ரஹத்துக்கே இலக்கு ஆகும் அளவில் எனக்கு ஒரு ஹானியும் இல்லை
மே ஸூ மஹாத் லாப -அதுவும் எனக்கு பெரிய லாபமாக ஆயிடுக –
அஸ்து மே தாத்ருஸ அயம் தவ தாஸ ஜனஸ் அதிகம் ஸ்வைரேண தூரீ பவேத்-அப்படிப்பட்ட இந்த உனது தாச ஜனமானது
மிகவும் யதேஷ்டமாக விலகி அகன்று ஒழியும்
உனது திருவடிகளைச் சார்ந்தவன் ஆகாமே அகன்று ஒழிய அன்றோ நேரும்
ஆகவே உன் சரக்கு தப்பிப் போகாமல் நோக்கிக் கொள்ளப் பாராய் –

———————————————

ஸோஹம் ஷூத்ர தயா ஜூ குப்சிததமம் துஷ் கர்ம நித்யம் ஸ்மரன்
குர்வன் காமம் அசுத்த ரீதிர பவம் ஸ்ரீ ரெங்க ப்ருத்வீ பதே
ஏதத் தே மஹதோ விசுத்த மனசா ஸ்மர்த்தும் ந யுக்தம் கலு
ஷாந்த்யா விஸ்மர தத் ததோஹம ஸூகான் முக்தோ பவேயம் ஸூகீ –12-

உனது பரிசுத்த திரு உள்ளத்தால் எனது தாழ்ந்த பாபங்களை எண்ணி அழுக்கடைக்க வைக்காமல்
பொறுமைக் குணத்தால் மன்னித்து அருளி இருவருக்கும் பயன் பெறலாமே –

ஸ்ரீ ரெங்க ப்ருத்வீ பதே –ஸோஹம் ஷூத்ர தயா-ஜூ குப்சிததமம்-துஷ் கர்ம நித்யம் ஸ்மரன் காமம் குர்வன் அசுத்த ரீதி–நீசனாகையாலே
வெறுக்கத்த தக்க துஷ்கர்மத்தை-இடைவிடாது சிந்தித்து மனம் போனபடி செய்து அசுத்த தன்மை யுடையேனானேன்
அபவம் ஏதத் மஹத தே -விசுத்த மனசா-ஸ்மர்த்தும் ந யுக்தம்-இந்நிலையானது மஹானான உனக்கு பரிசுத்தமான
திரு உள்ளத்தில் ஸ்மரிக்கத் தகாது அன்றோ
கலு தத் ஷாந்த்யா விஸ்மர தத் அஹம் அஸூகாத் முக்த ஸூகீ பவேயம் -அத்தை ஷமா குணத்தினால் மறந்து விடுக –
அப்படி மறக்கும் அளவில் அடியேன் துக்கத்தின் நின்றும் விடுபட்டு ஆனந்த சாலியாக ஆவேன் –
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என்று இருக்கும் அடியேனுக்கு இது தகும் –
தண்டிக்காகவது நீ என் குற்றங்களை ஸ்மரித்து உனக்கு அவத்யம் விளைய வேண்டி இல்லாமல் ஷாந்தியால்
இவற்றை அறவே மறப்பதே இருவருக்கும் ஷேமமாகுமே –

——————————————————-

தத் தத் கர்ம பல அநு ரூப மகிலோ லோகஸ் த்வயா ஸ்ருஜ்யதே
தஸ்மாத் கர்ம வசம் வதத்வ மதிகம் வக்தும் த்வாபி ஷமம்
ஸ்ரீ ரெங்கேஸ்வர தத் பிரசாந்தி விதயே ஷாந்த்யா நிராக்ருத்ய மே
சர்வம் பாதக மாசு தர்சய பவத் ஸ்வாதந்தர்ய மத்யுஜ்வலம் -13—

நீ ஸ்வதந்திரனாய் இருந்து வைத்தும் கர்ம வசப்பட்வரைப் போலே கர்மம் அடியாக பலா பலங்களை வழங்க வேண்டுமோ –
எனது பாவக் குவியல்களை பொறுத்துக் கொண்டு உனது ஸ்வாதந்தர்யம் நன்கு வெளிப் படட்டுமே –

ஸ்ரீ ரெங்கேஸ்வர
தத் தத் கர்ம பல அநு ரூப மகிலோ லோகஸ் த்வயா ஸ்ருஜ்யதே -கர்ம அனுரூபமாக உன்னால் ஸ்ருஷ்டிக்கப்படுகின்றன
தஸ்மாத் கர்ம வசம் வதத்வ மதிகம் வக்தும் த்வாபி ஷமம் -அந்த கர்மபாரதந்தர்யம் அதிகமாக உனக்கு சொல்லப் பிராப்தி ஆகும்
வைஷம்ய நைர்க்ருண்ய ந சாபேஷத்வாத் -இப்படி அன்றோ ஸ்ருஷ்டியிலும் லோக நிர்வாகத்திலும்
தத் பிரசாந்தி விதயே மே சர்வம் பாதக ஷாந்த்யா நிராக்ருத்ய
பவத் ஸ்வாதந்தர்ய மத்யுஜ்வலம் ஆசு தர்சய-அந்த கர்ம பாரதந்த்ரம் குலைவதற்காக எனது சர்வ பாபங்களையும்
ஷமா குணத்தால் தள்ளி கர்ம பாரதந்தர்யமாகிற அபக்யாதியை சம்பாதிக்காமல்
உனது ஸ்வாதந்தர்யத்தை மிக புகர் பெற்றதாக சீக்கிரம் காட்டி அருள வேண்டும் –

——————————————————-

ஸ்ரீ ரெங்கேச வசோ மதீய மதுநா வ்யக்தம் தவயா ஸ்ரூயதாம்
புண்யம் தத் பல சங்க மாத்ர விரஹாத் பூயோ ந மாம் ப்ராப்நுயாத்
பாபம் நைவ ததா பலம் விதநுதே சக்யம் ந தத் வாரணம்
தத் ஷாந்த்யா தவ ஸக்யமேவ ததிதம் சத்யம் த்வயா கல்ப்யதாம் –14–

பல தியாகத்தால் புண்ணிய பலன்கள் ஒட்டாதே / பாபங்கள் அனுபவித்து கழிக்க முடிய அளவு அல்லவே
உனது க்ஷமை ஒன்றாலே பாப மூட்டைகளை விலக்க முடியும் –

ஸ்ரீ ரெங்கேச
வசோ மதீய அதுநா மதீயம் வச வ்யக்தம் த்வயா வ்யக்தம் ஸ்ரூயதாம் -அடியேனுடைய வார்த்தை ஓன்று
உன்னால் நன்றாக கேட்கப்பட வேண்டும்
அது யாது என்னில்
புண்யம் தத் பல சங்க மாத்ர விரஹாத் பூயோ ந மாம் ப்ராப்நுயாத் -புண்யமாவது அதன் பலனை விரும்பாத அளவில்
பெரும்பாலும் அது வந்து என்னை சேராது–விரஹாத் -என்றது விரஹே சதி -என்றபடி
பாபம் து ததா நைவ பலம் விதநுதே தத் வாரணம் சக்யம் ந –பாபமோ என்றால் அப்படி அன்று –
அதன் பலனை விரும்பாமல் போனாலும் அதன் பலனை கொடுத்தே தீரும் -அதனைத் தடுப்பது அசாத்யம்
தத் தவ ஷாந்த்யா ஸக்யமேவ தத் இதம் சத்யம் த்வயா கல்ப்யதாம்-அப்படித் தடுப்பது உன் ஷமாகுணத்தாலே தானே சாத்தியமாகும் –
ஆகவே இந்த ஷமாகுணம் உன்னால் செய்யப் படட்டும் –

புண்யஸ்ய பலம் இச்சந்தி புண்யம் நேச்சந்தி மாநவா -ந பாப பலம் இச்சந்தி பாபம் குர்வந்தி சந்ததம் – என்னக் கடவது இறே-

——————————————————

ஸ்ரீ ரெங்கேஸ்வர புண்ய பாப பலயோ ஸ்வாதீந தாம் குர்வதோ
ஸர்வேஷாம் ஸூக துக்கயோ ஸ்வயம் அஹம் மக்நாசயோ மாமபி
ஸ்மர்த்தும் ந பிரபவாமி கிம் புநரஹம் த்வாம் அந்தரந்த ஸ்திதம்
தத் தே த்வம் ஷமயா நிரஸ்ய குரு மே த்வத் த்யான யோக்யாம் தஸாம் –15–

கர்மவசப்பட்டு உள்ளதால் ஆத்ம ஞானம் இல்லாமல் உழல்கின்றோம் –
தஹராகாசத்தில் நிரந்தரமாக உள்ள உன்னையும் எண்ணாமல் இருந்தாலும்
பிரதிபந்தகங்களை போக்கி நான் உன்னையே எப்பொழுதும் நிரந்தரமாக தியானித்து
இருக்கும் படியான நிலைமையை ஏற்படுத்தி அருள வேண்டும் –

ஸ்ரீ ரெங்கேஸ்வர
ஸர்வேஷாம் ஸ்வாதீந தாம் குர்வதோ புண்ய பாப பலயோ ஸூக துக்கயோ –உலகில் எல்லோரையும் தம் வசப்படுத்திக் கொள்கிற
புண்ய பாப பலனாக இன்ப துன்பங்களில் ஸ்வயமாகவே ஈடுபட்டுள்ள அடியேன்
ஸ்வயம் மக்நாசயோ அஹம் மாம் அபி-என்னையே ஸ்மரிக்க சக்தி அற்றவனாக உள்ளேன்
அஹம் மாம் அபி ஸ்மர்த்தும் ந பிரபவாமி அந்தர் அந்த (ஸ்மர்த்தும்) கிம் புந -உள்ளுக்குள்ளே பதிந்து கிடக்கிற உன்னை
ஸ்மரிக்க கில்லேன் என்பதைச் சொல்லவும் வேணுமோ
தத் த்வம் தே ஷமயா நிரஸ்ய த்வத் த்யான யோக்யாம் தஸாம் மே குரு -உனது அடியேன் இப்படி பாழே பட்டுப் போகலாமா –
அந்த அசக்தியை உன்னுடைய ஷமாகுணத்தாலே போக்கி உன்னையே விடாமல்
அநவரதம் சிந்திக்கும் படி அடியேனை ஆக்கி அருள வேணும் –

—————————————————–

அல்பம் சேத் அநவே ஷணீய சரணா வாரோப்யதாம் மத்க்ருதம்
கிஞ்சித் பூரி பவேதிதம் யதி குரூன் சம்ப்ரேஷ்ய மே த்யாஜ்யதாம்
யத்வா அநந்த மனந்தவைபவ ஜூஷோ ரங்க ஷமா வல்லப
த்வத் ஷாந்த்யா கலு லஷ்யதாம் மநுகுணாமா நீயதாம் த்வத் தயா –16-

கொஞ்சம் பாபியாக இருந்தால் உனது பெரும் தன்மையே போதுமே –
கொஞ்சம் அதிகமானால் முன்னோர்கள் புண்ய பலமாக அருளலாம் –
பாபங்கள் கணக்கற்றவை என்பதால் ஷமையை காட்ட வாய்ப்பு என்று எண்ணி
அவற்றை இலக்காக்கி மன்னித்து அருளுவாய் –

ரங்க ஷமா வல்லப
மத் க்ருதம் அல்பம் சேத் அநவே ஷணீய சரணவ் ஆரோப்யதாம் -நான் செய்த பாபங்கள் தேவரீர் திரு உள்ளத்தால்
சிறியதாகவே தொற்றுமானால் காணாக் கண் இட்டு இருக்க அமையும்
இதம் கிஞ்சித் பூரி பவேத் யதி மே குரூன் சம்ப்ரேஷ்ய த்யாஜ்யதாம் -யான் செய்த பாபங்கள் அதிகமாகவே தோற்றுமானால்
அடியேனுடைய ஆசார்யார் கடாக்ஷத்தால் விடப்படட்டும் –
பிதாமஹம் நாதமுனிம் விலோக்ய ப்ரஸீத மத் வ்ருத்த மசிந்தயித்வா
யத்வா அநந்தம் யதி தத் அனந்த வைபவ ஜூஷோ த்வத் ஷாந்த்யா அநு குணாம் லஷ்யதாம் த்வயா ஆநீயதாம்-என்னுடைய
அபரிமிதமான பாபங்கள் அபரிமித வைபவம் வாய்ந்த தேவரீருடைய ஷமாகுணத்துக்கு பொருத்தமான
இலக்காக இருக்கும் தன்மையை தேவரீரால் பெறட்டும்
ஆகவே எந்த விதத்தாலும் அடியேனுடைய பாபங்கள் தேவரீருடைய நிக்ரஹத்துக்கு உறுப்பாக ஒண்ணாது
என்று விஞ்ஞாபித்தார் ஆயிற்று

————————————————-

ஸந்த்யக்த சர்வ விஹித க்ரியம் அர்த்த காம
ச்ரத்தாளும் அந்வஹம் அனுஷ்டித நித்தய க்ருத்த்யம்
அத்யந்த நாஸ்திகம் அநாத்ம குண உபபன்னம்
மாம் ரங்கராஜ பரயா க்ருபயா க்ஷமஸ்வ –17-

ஸ்ரீ ரெங்கராஜனே -சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட எல்லா காரியங்களையும் அறவே விட்டனாகவும்
அர்த்த காமங்களிலேயே ஊற்றம் உள்ளவனாகவும்
சாஸ்திரங்களில் கர்ஹிக்கப் பட்ட தீ வினைகளையே நிச்சலும் செய்து போருமவனாயும்
மிகவும் நாஸ்திகனாயும்
தீயகுணங்கள் நிரம்பியவனாயும்
இருக்கிற அடியேனைப் பரம கிருபையினால் க்ஷமித்து அருள வேணும்

———————————————–

ஸ்ரீ மான் கூராந்வவாயே கலஜல நிதவ் கௌஸ்து பாப அவதீர்ண
ஸ்ரீ வேத வ்யாஸ பட்டாரக தநயவரோ ரங்க ராஜஸ்ய ஹ்ருதய
வேதாசார்யாக்ர்ய நாம விதித குண கணோ ரங்கிணஸ் ஸ்தோத்ர மேதத்
சக்ரே நித்யா பிஜப்யம் சகல தநு ப்ருதாம் சர்வ பாபாப நுத்த்யை–18-

ஸ்ரீ கௌஸ்துபம் போன்ற ஸ்ரீ வேதாச்சார்ய பட்டர் ஸ்வாமி நமது பாப மூட்டைகளை போக்கிக் கொள்ள
ஸ்ரீ ரெங்கநாதன் க்ஷமை விஷயமாக இந்த ஸ்தோத்ரம் அருளிச் செய்தார் –

ஸ்ரீ மான் கூராந்வவாயே கலஜல நிதவ் கௌஸ்து பாப அவதீர்ண-ஸ்ரீ கூரகுலமாகிற பாற்கடலில்
ஸ்ரீ கௌஸ்துப மணி போலே திரு அவதரித்தவரும்
ஸ்ரீ வேத வ்யாஸ பட்டாரக தநயவரோ –ஸ்ரீ வேத வ்யாஸ புத்தருடைய திருக் குமாரரையும்
ரங்க ராஜஸ்ய ஹ்ருதய -ஸ்ரீ ரெங்கராஜருடைய திரு உள்ளம் உகந்தவராயும்
வேதாசார்யாக்ர்ய நாம விதித குண கணோ –ஜகத் பிரசித்தமான திருக் குணத்திரளை யுடையவருமான
ஸ்ரீ வேதாச்சார்ய பட்டர் என்பவர்
ரங்கிணஸ் ஸ்தோத்ர மேதத் சக்ரே நித்யா பிஜப்யம் சகல தநு ப்ருதாம் சர்வ பாபாப நுத்த்யை–ஸ்ரீ ரெங்கநாதன் விஷயமான
ஸ்தோத்ரமாகிய இந்த ஷாமா ஷோடசியை ஸமஸ்த பிராணிகளுக்கும் சகல பாபங்களும் தீருகைக்கு
நித்யம் அனுசந்திக்கத் தக்கதாக அருளிச் செய்தார் –

இது இந்த ஸ்வாமியுடைய பிரதான சிஷ்யர் அருளிச் செய்தது

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாச்சார்ய பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

One Response to “ஸ்ரீ ஷமா ஷோடசீ -ஸ்வாமி வேதாச்சார்ய பட்டர் —”

 1. ganesantk1947 Says:

  ஸ்ரீ கௌஸ்துபம் போன்ற
  ஸ்ரீ வேதாச்சார்ய பட்டர் ஸ்வாமி
  நமது பாப மூட்டைகளை போக்கி கொள்ள
  ஸ்ரீ ரெங்கநாதன் க்ஷமை விஷயமாக
  அருளிச் செய்த
  இந்த ஸ்தோத்திரத்தை அறிந்து இன்புற்றேன் !

  ஸ்ரீ கோயில் கந்தாடை
  அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
  ஸ்ரீ வேதாச்சார்ய பட்டர் ஸ்வாமிகள்
  திருவடிகளே சரணம் .
  ஸ்ரீ பெரிய பெருமாள்
  பெரிய பிராட்டியார்
  ஆண்டாள் ஆழ்வார்
  எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: