ஸ்வ கல்யாண குண அனந்த்ய க்ருத்ஸ்ன ஸ்வாதீன தாமதி
பக்த் யுத்பத்தி விவ்ருத்த்யர்த்தா விஸ்தீர்ணா தஸமோதிதா—ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–14-
ஸ்வ கல்யாண குண அனந்த்ய க்ருத்ஸ்ன ஸ்வாதீன தாமதி -கல்யாண குணங்கள் நியமன சக்தி விபூதிகள் அனைத்தையும் அறிந்து
பக்த் யுத்பத்தி –ப்ரீதி உடன் பக்தி செய்ய உபக்ரமித்து
விவ்ருத்த்யர்த்தா –அத்தை வளர்ப்பதற்காக
விஸ்தீர்ணா தஸமோதிதா-விவரித்து அருளிச் செய்கிறான்
கேட்க கேட்க பக்தி பிறக்கும் -பிறந்த பக்தி வளரும் –
பக்தி யோக-(7-8-9 அத்தியாயங்களில் )யுக்த (சொல்லப்பட்டது) -ச பரிகர (2-3-4-5–6 அத்தியாயங்களில் )-யுக்த (சொல்லப்பட்டது )
இதாநே -பக்தி உத்பத்யே -தத் விவ்ருதயே ச -பகவத நிரங்குச ஐஸ்வர்யாதி கல்யாண குண கண அநந்த்யம்
க்ருத்ஸ்னஸ்ய ஜகதயா தத் சரீர தயா தத் ஆத்மத் வேந தத் ப்ரவ்ருத்யம் ப்ரபந்ததே -(விரித்து உரைக்கிறான் )
யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் -(எந்த சேதனனுக்கு எந்த ஒரு த்ரவ்யம்-அசைத்து சரீரமாகத்தானே இருக்கும் அதுக்கு சரீரம் இல்லையே )
சர்வாத்மநா (எப்பொழுதுமே-அனைத்துப் படிகளாலும் )ஸ்வார்த்தே (தன் பொருட்டே )தாரயிதும் (தாங்கப்பட்டும் )நியந்தும் ச (நியமிக்கப்பட்டுமுள்ள ) சக்யம் சேஷதைக ஸ்வரூபஞ்ச தாது தஸ்ய சரீரம்
உடன் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன் –
சேஷத்வம்– பரகத அதிசய ஆதான இச்சயா உபாதேயத்வம் ஏவ யஸ்ய ஸ்வரூபம் –
உடையவனுக்கு பெருமை செய்யவே அனைத்து ப்ரவ்ருத்திகளும் கொண்டது
சர்வம் கலு இதம் ப்ரஹ்மம் -தத் ஜலான் –(தத் ஜ -தத் ல -தத் ஆன் )சாந்த உபாஸீத -ஸாமாநாதி கரண்யம்
நீராய் நிலனாய் இத்யாதி அனைத்தும் சரீரம் ப்ரஹ்மம் ஜகத் -மட்குடம் –விசேஷணம்- விசேஷ்யம்
———————————————————–
அனைத்துக்கும் ஆதிமூலமாயிருப்பவர் பகவான் 1-6 –
ஈசனது விபூதியைப் பற்றிய ஞானம் பக்தியை வளர்க்கிறது 7-9 –
அதனால் புத்தி யோகம் உண்டாகிறது 10-11 –
தெவிட்டாத இன்பம் தருவது பகவானது விபூதி 12-18 –
தமது சிறப்பு இயல்புகளை பகவான் விளக்குகிறார் 19-40 –
விபூதிகளின் ஸாரம் 41-42.
————–
ஸ்ரீ பகவாநுவாச-
பூய ஏவ மஹா பாஹோ ஸ்ருணு மே பரமம் வச–
யத் தேஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹித காம்யயா —- ৷৷10.1৷৷
ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் கூறுகிறான்
பூ⁴ய = மீண்டும்
ஏவ = உறுதியாக
மஹாபா³ஹோ = வலிமையான தோள்களை உடையவனே
ஸ்²ருணு = கேள்
மே = என்னுடைய
பரமம் = உயர்ந்த
வச: | = வசனங்களை
யத் = அது
தே = உனக்கு
அஹம் = நான்
ப்ரீயமாணாய = அன்பு கொண்டவனான நீ
வக்ஷ்யாமி = சொல்லுகிறேன்
ஹித காம்யயா = உன் நன்மைக்காக
தடக் கையனே -என் பெருமையைக் கேட்டு உகக்கும் உனக்கு -என் விஷயமான பக்தி உண்டாவதும் வளருவதும்
ஆகிற நன்மையின் பொருட்டு மறுபடியும் என் பெருமையை விரித்து உரைக்கும் யாதொரு மேலான வார்த்தையையே
நான் கூறுகிறேனோ -அந்த என்னுடைய மேலான வார்த்தையை கவனமாகக் கேட்பாயாக –
அஸூயை நிலை தாண்டி இப்பொழுது ப்ரியமாக இருக்கும் நிலை
பிரிய ஹித வசனம் -கவனமாக கேள் -தடக்கை படைத்தவனே -உனக்காக நான் சொல்லப் போகிறேன் –
உன்னைப் பார்த்தால் பிரியமாக இருப்பதாக தெரிகிறதே -சொல்லும் பொழுது தடுக்காமல் இருக்கிறாயே –
தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் ஆழ்வாருக்கும் ஆழ்வார் அடி பணிந்தார்க்கும் இவை உள்ளது
வள்ளல் பெரும் பசுக்கள் -முலைக் கடுப்பாலே பீச்சுமா போலே –
ஈனச் சொல் ஆயினுமாக — ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே –
—————
ந மே விது ஸுர கணா ப்ரபவம் ந மஹர்ஷய–
அஹம் ஆதிர்ஹி தேவாநாம் மஹர்ஷீணாம் ச ஸர்வஸ்–৷৷10.2৷৷
ந = இல்லை
மே = என்
விது³ = அறிவது
ஸுரக³ணா: = கணங்கள்
ப்ரப⁴வம் = மகிமை
ந = இல்லை
மஹர்ஷய: = மகரிஷிகளும்
அஹம் = என்
ஆதி = தொடக்கம்
ஹி = நிச்சயமாக
தேவாநாம் = தேவர்களும்
மஹர்ஷீணாம் = மகரிஷிகளும்
ச = மேலும்
ஸர்வஸ = அனைத்தும்
தேவ கணங்கள் எனது பெருமையை அறியார்கள் -மஹ ரிஷிகளுக்கும் அதை அறியார்கள் -ஏன் எனில்
தேவர்களுக்கும் மஹ ரிஷிகளுக்கும் நான் எல்லாப் படியாலும் காரணமாய் இருப்பவன் அன்றோ
சொல்லப் போகிற விஷயம் சாமான்யம் இல்லை -தனக்கும் தன் தன்மை அறிவரியன்–
எல்லா வகைகளிலும் நானே ஜகத் காரணம்
பாப புண்யங்களுக்கு தக்க ஞான சங்கோசங்கள் உண்டே -கர்மா தொலைக்க என்னிடம் வரலாம் –
கிருபையால் போக்கி அருளி ஞானம் அருளுகிறேன் –
ப்ரஹ்மாதி தேவர்களும் -முனிவர்களும் -அறியலாகா -திரு நாமங்கள் -சேஷ்டிதங்கள் -கல்யாண குணங்கள் -அபரிச்சேத்யன் —
தன் பக்தனுக்கு தானே காட்டி- அறியாதது அறிவிக்கும் அத்தன் –
இவர்களை எடுத்தது த்ரிகாலம் உணர்ந்தவர்கள் -அதீந்தர்ய விஷயங்களை பார்க்கும் சக்தர்கள் என்பதால்
வெறிதே அருள் செய்வான் செய்வார்கட்க்கு -மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர்கள் இல்லையே
உள்ளபடி அறியாதவர்கள் -தனக்கும் தன் தன்மை அறிவரியான் அன்றோ
பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன்
அப்ரமேய -கண்ணால் பார்க்க முடிந்தாலும் வைபவம் மனதுக்கும் அப்பால் பட்டவன் அன்றோ
————–
தத் ஏதத் தேவாத் யசிந்த்ய ஸ்வரூப யாதாத்ம்ய விஷய ஜ்ஞாநஂ பக்த் யுத்பத்தி விரோதி பாப விமோசநோபாயம் ஆஹ –பக்திக்கு ஆரம்ப விரோதி பாபங்களைப் போக்கி அருளும் என்கிறான் இதில்
யோ மாம் அஜம் அநாதிம் ச வேத்தி லோக மஹேஸ்வரம்—
அஸம்மூட ஸ மர்த்யேஷு ஸர்வ பாபை ப்ரமுச்யதே–৷৷10.3৷৷
யோ = யாரேனும்
மாம் = என்னை
அஜம் = பிறப்பு இல்லாதவன்
அனாதிம் = தொடக்கம் இல்லாதவன்
ச = மேலும்
வேத்தி = அறிதல்
லோக = உலகில்
மஹேஸ்²வரம் = பெருந்தலைவன்
அஸம்மூட = மயக்கம் அற்ற-தேவதாந்தரங்களுக்கு ஸாம்யம் இல்லாதவன் என்று உணர வேண்டுமே
ஸ = அவன்
மர்த்யேஷு = இறக்கும் மனிதற்குள்ளே
ஸர்வ பாபை: = பாவங்களில் இருந்து
ப்ரமுச்யதே = விடுபடுகிறான்
மனிதர்களுக்குள் மற்றவர்களோடு ஒத்தவனாக எண்ணும் மயக்கம் அற்றவனான எவன் ஒருவன் என்னைப்
பிறப்பு அற்றவனாகவும் -அதிலும் -அநாதி காலமாகப் பிறப்பு அற்றவனாகவும்
லோகேஸ்வரர்களுக்கும் ஈஸ்வரனாகவும் அறிகிறானோ அவன் பக்தி உண்டாவதற்குத் தடையான
எல்லாப் பாபங்களில் இருந்தும் விடுபடுகிறான்
பக்தி பிறக்க பாபங்கள் போக வேண்டுமே –
இதையே -2–3- ஸ்லோகங்களில் சொல்லி மேலே பக்தி வளர்ப்பதை பற்றி சொல்கிறான்
அஜன் -பிறப்பிலி -அன்றோ-அநாதி -இன்று மட்டும் இல்லை என்றுமே – இச்சையால் பல் பிறவி பெருமான் —
சத்யம் ஞானம் அனந்தம் –கர்ம பாவனை ப்ரஹ்மம் பாவனை உபய பாவனை -மூன்றுமே உண்டே –
இவனோ அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாண ஏக குணான்தமகன் –
இதை யாதாத்மா பாவமாக அறிந்து உபாசிப்பவன் இவனை அடைகிறான் –
பிறப்பிலி முன்பே அருளிச் செய்தான் -இங்கு விகாரங்கள் இல்லை -என்கிறான் –
நித்ய நிர்விகார தத்வம் அன்றோ அசித் போலே ஸ்வரூப விகாரங்கள் இல்லை
ஆத்மா போலே ஸ்வபாவ விகாரங்கள் –
முக்தனுக்கும் காதாசித்க விகாரம் உண்டே -அவிகாராய –சதைக ரூப ரூபாய -நித்யன் அன்றோ
இதர ஸமஸ்த விலக்ஷண வைலக்ஷண்யம் சொல்லுகிறது -அசேதனங்களுக்கு ஸ்வரூப -இயற்கைத் தன்மையிலே விகாரம் -சேதனங்களுக்கு ஸ்வபாவ-தன்மையில் மட்டும் விகாரங்கள்
முத்தாத்மாவுக்கு அதுவும் இல்லை -நித்யருக்கு இவனது நித்ய சங்கல்பம் அடியாகவே இவை இல்லை
நம்பாடுவான் ப்ரதிஜ்ஜை இத்தைக் கேட்டதும் அறிந்தான் -ப்ரஹ்ம ரஜஸ்ஸும் அறிந்ததே
அட்டமா சித்திகள் விளக்கம்
அணிமா – அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
மகிமா – மலையைப் போல் பெரிதாதல்.
இலகிமா – காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
கரிமா – கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
பிராத்தி – எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
பிராகாமியம் – தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)
ஈசத்துவம் – நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
வசித்துவம் – அனைத்தையும் வசப்படுத்தல்.
சஜாதீயராக இருந்தும் புண்யங்கள் அடியாக அரசனாகவும் அஷ்ட மஹா ஸித்தியால் உயர்ந்தும் இருப்பது போல் இல்லாமல்
இவனோ இயற்கையாகவே மஹேஸ்வரேஸ்வரன் -விஜாதீயன்
———-
ஏவஂ ஸ்வ ஸ்வபாவ அநுஸஂதாநேந பக்த் யுத்பத்தி விரோதி பாப நிரஸநஂ விரோதி நிரஸநாத் ஏவ அர்ததோ(விரோதி தொலைந்தால் சப்தம் இல்லா விடிலும் அர்த்தத்தால் பக்தி பிறப்பதும் வளர்வதும் சித்திக்கும் ) பக்த் யுத்பத்திஂ ச ப்ரதிபாத்யஸ் வைஷ்வர்ய ஸ்வ கல்யாண குண கண ப்ரபஞ்சாநு ஸஂதாநேந பக்தி வரித்தி ப்ரகாரம் ஆஹ –(பக்தி -மனத்தில் விகாரம் -ஒட்டாமல் பாபங்கள் தடுக்க -உன்னைப் பற்றிய உண்மை அறிந்தால் எவ்வாறு இவை உண்டாகும் என்ன அதுக்குப் பதில் சொல்கிறான் -20 மனப்பான்மைகள் எனது அதீனமாகவே என்று இரண்டு ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறான் )
புத்திர் ஜ்ஞாநம் அஸம்மோஹ க்ஷமா ஸத்யம் தமஸ் ஷம —
ஸுகம் துக்கம் பவோபாவோ பயம் சாபயமேவ ச—-৷৷10.4৷৷
புத்தி = புத்தி-ஆராயும் தன்மை
ஜ்ஞாநம் = ஞானம்
அஸம்மோஹ = மயக்கம் இன்மை
க்ஷமா = பொறுமை
ஸத்யம் = சத்யம்
தம: = அடக்கம்
ஸம: | = அமைதி
ஸுகம் = சுகம்-ஆத்மாவுக்கு அனுகூல அனுபவம்
துகம் = துக்கம்
பவ = உண்மை-உத்கர்ஷம் பெரும் மகிழ்ச்சி –
அபாவ = இன்மை-பிரதிகூல அனுபவத்தால் வரும் பெரும் துக்கம்
பயம் = பயம்-நாளை வரும் எதிர்பார்ப்பால் பயம் -வந்த பின்பு துக்கம் -ராகம் -அனுகூல அனுபவ எதிர்பார்ப்பால் வருவது
ச = மேலும்
அபயம் = பயமின்மை
யமேவ ச = மேலும்
அஹிம்ஸா ஸமதா துஷ்டிஸ் தபோ தாநம் யஸோ யஸஸ்—
பவந்தி பாவா பூதாநாம் மத்த ஏவ ப்ருதக் விதா—–৷৷10.5৷৷
அஹிம்ஸா = துன்புறுத்தாமை-பிறர் துன்பத்துக்கு காரணமாக இல்லாமை
ஸமதா = நடு நிலைமை
துஷ்டி = மகிழ்ச்சி
தபோ = தவம்
தாநம் = தானம்
யஸ = புகழ்
அயஸ = இகழ்
ப⁴வந்தி = உண்டாகின்றன
பா⁴வா = மனப் பாங்குகள்
பூ⁴தாநாம் = உயிரினங்களுக்கு
மத்த = என்னிடம் இருந்து
ஏவ= உறுதியாக
ப்ருத²க்³விதா⁴ = வெவ்வேறான
1-மனத்தின் ஆராயும் திறமை –
2-சித் அசித் ஆகியவற்றின் வேறுபாடுகளைப் பற்றிய உறுதி –
3-ஒன்றை மற்று ஒன்றாக நினைக்கும் மயக்கத்தின் நீக்கம்
4-கோபத்துக்குக் காரணமாய் இருக்கும் போதும் பொறுமையோடு இருத்தல்
5-உண்மை உரைக்கும் மனப்பான்மை
6-வெளி இந்திரியங்களை தாழ்ந்த விஷயங்களில் செல்லாதபடி அடக்குதல்
7-மனத்தை அவ்வாறு அடக்குதல்
8-ஆத்மாவுக்கு அனுகூலமான அனுபவம்
9-அனுகூல அனுபவத்தினால் ஏற்படும் மனத்தின் இன்பமிகும் நிலை
10-பிரதிகூல அனுபவத்தினால் ஏற்படும் மனத்தின் துன்பமிகும் நிலை
11-வரப்போகிற துன்பத்தின் காரணத்தைக் காண்பதினால் உண்டாகும் துன்பம்
12-முன் கூறிய துன்பம் நீங்கி இருத்தல் –ஆகியவையும்
13-பிறர் துன்பத்துக்குக் காரணமாய் இராமை
14-பொருள் வரவு செலவு பற்றித் தன் விஷயத்திலும் பிறர் விஷயத்திலும் சமமான புத்தி உடையனாய் இருத்தல்
15-எந்த ஆத்மாவைக் கண்டாலும் இன்புறும் இயல்புடையனாதல்
16-சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட படி போகத்தைச் சுருக்கி உடலை வருந்துதல்
17-தனது போக்யப் பொருள்களைப் பிறர்க்கு அளித்தல்
18-குணம் உடையவன் என்னும் புகழ்-தோஷம் உள்ளவன் என்னும் பிரசித்தி –ஆகியவையும் முதலான
எல்லா ஜீவ ராசிகளின் பலவகைப்பட்ட மன நிலைகள் எல்லாம் என் சங்கல்பத்தாலேயே உண்டாகின்றன –
விகாரம் அடைய காரணம் இருந்தாலும் விகாரம் அடையாமல் இருப்பதே ஷமா
உள்ளதை உள்ளபடி கண்டு -கண்டதை கண்டபடி சொல்லுவதே சத்யம் -யதா த்ருஷ்ட்டி விஷயம் -நீ கண்டபடி சொல்வதே சத்யம்
கயிற்றைப் பாம்பாக பிரமித்ததும் உண்மை பொய் இல்லையே -சில ஆகாரத்தால் ஒற்றுமை இருப்பதால் தானே சொல்கிறான் -அதுவும் சத்யம் -பூத ஹிதமாகவே இருக்க வேண்டும்-
உள்ளதை உள்ளபடி கண்டு -கண்டதை கண்டபடி சொல்லுவதே சத்யம் -யதா த்ருஷ்ட்டி விஷயம் -நீ கண்டபடி சொல்வதே சத்யம்
கயிற்றைப் பாம்பாக பிரமித்ததும் உண்மை பொய் இல்லையே -சில ஆகாரத்தால் ஒற்றுமை இருப்பதால் தானே சொல்கிறான் -அதுவும் சத்யம் -பூத ஹிதமாகவே இருக்க வேண்டும்-
சம்சயம் விபர்யயம் -மருள் அற்று -புலன்களை பட்டி மேயாத படி நியமித்து –
ஸூகம் துக்கம் அற்று -இவையே -அனுகூல விஷய ஞானம் -பிரதிகூல விஷய ஞானம்
பயம் -அபயம் -புகழ் பழிப்பு -இவை எல்லாமே மானஸ வியாபாரங்கள் –
சங்கல்பம் ஒன்றாலே அனைத்தையும் நியமித்து அருளுகிறார் –
பிரவ்ருத்திகள் நிவ்ருத்திகள் எல்லாம் அவன் அதீனம் என்று அறிந்தால் பக்தி வளரும் –
புத்தி -ஆராயும் திறன் -விவேக ஞானம் -ஞானம் தத்வ விஷய அறிவு -ஆராய்ந்து முடிவு பெற்ற ஞானம் –
ஷமா -பொறுமை -கோபம் தூண்டும் விஷயங்கள் இருந்தாலும் பொறுமை வேண்டுமே – சத்யம் பூத ஹிதம் –
சமதா–ஆத்மநி ஸூஹ்ருத் ஸூ விபஷேஷு ச சமமதித்வம்–ஸ்ரீ கீதா பாஷ்யம்
ந சலதி நிஜ வர்ண தர்மதோ யஸ் சம மதிர் ஆத்ம ஸூஹ்ருத் விபஷ பஷே நஹரதி ந ச ஹந்தி
கிஞ்சி துச்சைஸ் சித மனசம் தமவேஹ விஷ்ணு பக்தம்–ஸ்ரீ விஷ்ணு பிராண ஸ்லோகம் -3-7-20–
சம மதிர் ஆத்ம ஸூஹ்ருத் விபஷ பஷே –இதி பகவத் பராசர வசனம்
இஹ தத்தத் பதைஸ் ஸ்மாரிதம் –ஸ்ரீ தாத்பர்ய சந்திரிகை
சமதா -ஒன்றாக நினைப்பது -நமக்கு வந்தால் போலே பிறருக்கு வந்தால் சுக துக்கம் படுவது என்பது இல்லை –
ஒன்றைத் தொலைக்கவே முடியாதே -நஷ்டம் வரும் பொழுதும் வருத்தப் படாமல் சுகம் வந்தாலும் இன்பப் படாமல் –
இவை நமக்கும் பிறருக்கும் -என்றபடி –
இப்படி இருப்பதே சமதா –
துஷ்டி-ஸந்தோஷம் -தபஸ் -தனம் யசஸ் – அயசஸ் -ஜீவ ராசிகளுக்கு இவன் சங்கல்பத்தாலே ஏற்படும் –
புரியும் பொழுதே பக்தி விதைக்கப் பட்டதாகும் –
நின்றனர் இருந்தனர் –நின்றிலர் இருந்திலர் இத்யாதி
விவேகம் -விமோகம் -அப்யாஸம் -க்ரியா -கல்யாண -அனாவசிய அநு உத்கர்ஷ-சாதன சப்தகம் -தல்லப்ப்தி –
————–
ஸர்வஸ்ய பூத ஜாதஸ்ய ஸரிஷ்டி ஸ்தித்யோஃ ப்ரவர்தயிதாரஃ ச மத் ஸஂகல்பாயத்த ப்ரவரித்தய இத்யாஹ –கீழ் நம் மநோ விகாரம் அவன் அதீனம் -அதுக்கும் மேல் ஸமஸ்த பூதங்களின் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ப்ரவ்ருத்தி இத்யாதிகளை எனது அதீனமே என்கிறான்
மஹர்ஷய ஸப்த பூர்வே சத்வாரோ மநவஸ்ததா.—
மத்பாவா மாநஸா ஜாதா யேஷாம் லோக இமா ப்ரஜா—-৷৷10.6৷৷
மஹர்ஷய: = மக ரிஷிகள்
ஸப்த = எழுவரும்
பூர்வே = முன்னாள்
சத்வாரோ = நான்கு
மநவ = மனுக்களும்
ததா = மேலும்
மத்³பா⁴வா = என்னில் தோன்றினார்கள், என் இயல்பு அடைந்தார்கள்
மாநஸா = மனதில் இருந்து
ஜாதா = பிறந்தார்கள்
யேஷாம் = அவர்கள்
லோக = இந்த உலகில்
இமா: = இந்த
ப்ரஜா: = பிரஜைகள் எல்லாம்
முதல் மன்வந்தரத்தில் இருந்த பிரமனால் மனத்தால் படைக்கப்பட்ட ப்ருகு முதலான ஏழு மஹரிஷிகளும் –
அவ்வண்ணமே நான்கு மனுக்களும்-(ப்ரம்ம ஸாவர்ணிக- ருத்ர ஸாவர்ணிக- தர்ம ஸாவர்ணிக- தக்ஷ ஸாவர்ணிக-ஆகிய நால்வர்) என் சங்கல்பத்தைப் பின் பற்றி நிற்பவர்களே-
எவர்களுடைய சந்நிதியில் இப்போது காணப்படும் ஜீவ ராசிகள் அனைத்தும் உண்டாயினவோ –
அந்த மஹரிஷிகளும் மனுக்களும் என்னைப் பின் பற்றி நிற்பவர்கள் என்று கீழோடே கூட்டிக் கொள்வது
சப்த ரிஷிகள்-மரீசி அத்ரி அங்கிரஸ் புலஸ்தியர் புலக பிறது வசிஷ்டர் -பிருகு போல்வார் –இவரே சிறந்தவர்
சனக சனகாதிகள் -மானஸ புத்திரர்கள்-
சாவர்ண மனு நால்வர் -தக்ஷ பிரஜாபதிகள்- இந்த மனுக்கள் இடம் லோகம் உண்டானதே –
மானஸ நியமனம் -ப்ரஹ்ம நிஷ்டையிலே -இவன் சங்கல்பத்தாலே தானே –
——————–
ஏதாம் விபூதிம் யோகம் ச மம யோ வேத்தி தத்த்வத–
ஸோவிகம்பேந யோகேந யுஜ்யதே நாத்ர ஸம்ஸய—৷৷10.7৷৷
ஏதாம் = இத்தகைய
விபூதிம் = பெருமைகளை
யோக³ம் = யோகத்தையும்-கல்யாண குண சேர்க்கை
ச = நிச்சயமாக
மம = என்னுடைய
யோ = எவன்
வேத்தி = அறிகிறானோ
தத்த்வத: = தத்துவத்தில்
ஸ = அவன்
அவிகம்பேந = அசையாத-(கம்பனம் -நடுக்கம் )-உறுதியான என்றபடி
யோகே³ந = யோகத்தில்
யுஜ்யதே = அமர்கிறான்
அத்ர ஸம்ஸ²ய: = இதில் சந்தேகம் இல்லை
எல்லாப் பொருள்களும் எனக்கு ஆதீனமாய் இருக்கை யாகிற இந்த என் செல்வத்தையும்
தாழ்வுகளுக்கு எதிர் தட்டானவனாய் கல்யாண குணங்களோடு கூடியவனாய் இருக்கும்
என் பெருமையையும் எவன் ஒருவன் உள்ளபடி அறிகிறானோ -அவன் எதனாலும் அசைக்க முடியாத
பக்தி யோகத்தோடு கூடப் பெறுகிறான் -இவ்விஷயத்தில் ஐயம் இல்லை –
விபூதி -ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் அனைத்தும் அவன் அதீனம் —
யாதாம்ய ஞானம் கொண்டு பக்தி உபாசனம் செய்பவர் –
அவனை சங்கை இல்லாமல் நிச்சயமாக அடைகிறார்கள் -யோகம் கல்யாண குண யோகம் –
செங்கோல் உடைய திருவரங்க செல்வன் -அறிபவனுக்கு அசைக்க முடியாத பக்தி யோகம் உண்டாக்கும்
ஸ்வரூப ஞானம் பிறந்த பின்பு -ஸ்வரூப ரூப குண விபவங்கள் எல்லாம் ஐஸ்வர்யத்திலும் யோகத்திலும் -கல்யாண குண சேர்க்கையில் அடக்கலாம் என்பதால் அடிக்கடி இவற்றைச் சேர்த்தே அருளிச் செய்கிறார்
————-
விபூதி ஜ்ஞாந விபாக ரூபாஂ (பரிபக்குவமான தன்மை )பக்தி வரித்திஂ தர்ஷயதி –பக்தி வளர்ப்பதை த்ருஷ்டாந்தம் காட்டி விளக்குகிறான் –
அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த ஸர்வம் ப்ரவர்ததே.–
இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவ ஸமந்விதா—–৷৷10.8৷৷
நான் எல்லா உலகிற்கும் உத்பத்தி காரணம் ஆகிறேன் -என்னாலேயே பொருள்கள் அனைத்தும் செயல் படுகிறது
என்கிற இந்த என்னுடைய இயல்வான தடை அற்ற செல்வத்தையும் கல்யாண குண யோகத்தையும் அனுசந்தித்தே
தலை சிறந்த ஞானிகள் பேர் அன்புடையவர்களாய் எல்லாக் கல்யாண குணங்களோடும் கூடிய என்னை உபாசிக்கிறார்கள் –
அகில காரணன் -ஸ்வபாகிக கல்யாண ஏக குணாத்மிகன்-நித்ய நிரவதிக காருண்யன் -என்பதை அறிந்து –
அநந்ய -பாவம் – கொள்ள வேன்டும் –
இவன் இடம் உத்பத்தி -பிரவ்ருத்தி இவன் அதீனம் -என்று அறிந்து -என்னை உண்மையாக அறிந்து –
ப்ரீதி உடன் பக்தி செய்பவர்கள்
—————–
கதம் –எப்படி பக்தி பண்ணுகிறார்கள் என்பதற்கு பதில் அருளிச் செய்கிறான் இதில்
மச் சித்தா மத் கத ப்ராணா போதயந்த பரஸ்பரம்.–
கதயந்தஸ் ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச৷৷10.9৷৷
மச் சித்தா = சித்தத்தை என்பால் நிறுத்தி
மத் கதப்ராணா = பிராணனை என்னில் நிறுத்தி
போ³த⁴யந்த: = போதனைகளை புரிந்து
பரஸ்பரம் = ஒருவருக்கொருவர்
கத²யந்த = பேசிக் கொண்டு
ச = மேலும்
மாம் = என்னைப் பற்றி
நித்யம் = எப்போதும்
துஷ்யந்தி = இன்புற்று இருக்கிறார்களோ
ச = மேலும்
ரமந்தி = மகிழ்கிறார்கள்
ச = மேலும்
என்னிடம் நெஞ்சை செலுத்தியவர்களாய் -என்னிடம் அமைந்த வாழ்வை உடையவர்களாய் –
தாம் தாம் அனுபவித்த என்னுடைய குணங்களை -ஒருவருக்கு ஒருவர் அறிவிப்பவர்களாய் –
என்னையும் எனது திவ்ய சேஷ்டிதங்களையும் எப்போதும் பேசுகின்றவர்களாய் –
ஸ்வயம் ப்ரயோஜனமான பேச்சாலே இன்புறுகின்றனர் –
கேட்கிறவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லாலே இன்புறுகின்றனர்
துஷ்யந்தி ச ரமந்தி ச
வக்தாரஸ் தத் வசநேந அநந்ய ப்ரயோஜநேந துஷ்யந்தி
ஸ்ரோதாரச் ச தத் ஸ்ரவணேந அநவதிக அதிசய ப்ரியேண ரமந்திதே –ஸ்ரீ கீதா பாஷ்யம்
என்னையே சிந்தனம் -பிராணன் போலே -பிரிந்தால் தரிக்க மாட்டார்களே –
பரஸ்பரம் திவ்ய குண சேஷ்டிதங்களை பேசி —
பேசும் கேட்க்கும் இரண்டு வர்க்க ஹர்ஷங்கள்-பெற்று இருப்பார்கள் –
உன் செய்கை என்னை நைவிக்கும் -அது இது உது எல்லாம் —
பிராணனை அவன் இடம் -தாரகம் என்று உணர்ந்து -மனஸ் நெஞ்சு அவன் இடம் முழுவதும் —
சென்னிக்கு அணியும் சேறு -அடியார் -ஆஹ்லாத சீத நேத்ராம்பு –
மச் சித்தா முதல்-10 பாசுரம் திரு நெடும் தாண்டகம்
மத் கத ப்ராணா-அடுத்த பத்தும் –
போதயந்த பரஸ்பரம்-இறுதி பத்தும் –
கொடுக்கக்- கொள்ளக்- குறையாத அவன் குணங்கள் -ஞானம் மட்டும் பகிர்ந்து கொண்டால் பெருகும் குறையாது –
வைகும் சிந்தையிலும் பெரிதோ நீ அளிக்கும் வைகுந்தம் –
மச் சிந்தா தாமரையாள் கேள்வன் ஒருவனையே நினைக்கும் உணர்வு
மத் கதா பிராணா அக்குளத்தில் மீன்
குண அனுபவம் வாயால் சொல்ல முடியாமல் தடுமாறி இருப்பதே போதயந்தம்
அநந்ய பிரயோஜனமாக சொன்னால் தானே திருப்தி அடைவான் -துஷ்யந்தி -அத்தைக் கேட்டு அனவதிக அதிசய ப்ரீதியால் ரமந்தே
மால் கொல் சிந்தையராய் -மெய்யடியார் –சொல்லிப் பாடி சேறு செய்யும் -சென்னிக்கு அணிவனே-செய்கை நைவிக்கும் -ஆவி ஈரும்
—————–
பரபக்தி நிலை கீழ் -மேல் பரஞான நிலை- சாஷாத்காரம் -நிர்ஹேதுகமாக தானே அருளி -சீக்கிரமே பரம பக்தி சடக்கென ஏற்படுமே
மார்க்கம் வழியிலே பர ஞானம் -தர்சனம் ஆனவுடன் பாப புண்யங்கள் விலகி உடனே பிராப்தி தானே
தேஷாம் ஸதத யுக்தாநாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம்.–
ததாமி புத்தி யோகம் தம் யேந மாமுபயாந்தி தே—-৷৷10.10৷৷
தேஷாம் = அவர்களுக்கு
ஸதத யுக்தாநாம் = எப்போதும் செயல்பட்டுக் கொண்டு-நித்ய சேர்க்கைக்கு ஆசைப்படுபவன்
ப⁴ஜதாம் = பஜனை
ப்ரீதிபூர்வகம் = அன்புடன் என்னை வழிபட்டு
த³தா³மி = நான் தருகிறேன்
பு³த்³தி⁴யோக³ம் = ஞான யோகம்
தம்= அது
யேந = அதனால்
மாம் = என்னிடம்
உபயந்தி = வருபவர்கள்
தே = அவர்கள்
என்னிடம் எப்போதும் சேர்ந்து இருப்பதையே விரும்புகிறவர்களும்-என்னிடம் ஸ்வயம் ப்ரயோஜன
பக்தி செலுத்துகிறவர்களுமான அவர்களுக்கு என்னை அடைவதற்கு உறுப்பான பர ஞானம் ஆகிற
அந்த புத்தியின் யோகத்தை மிக உகப்புடன் நான் அளிக்கிறேன்
நித்யமாகவே பிரியாமல் கைங்கர்யம் செய்யும் மநோ ரதங்களை கொண்டு இருப்பார்க்கு புத்தி யோகம் அருளி –
தன்னிடம் சேர்ப்பித்துக் கொள்கிறான் –
ஸ்வயம் பிரயோஜனம் -ப்ரீதி உடன் பக்தி -புத்தி யோகம் கொடுக்கிறேன் –தரிசன -மானஸ சமானாகாரம் -பர ஞானம் -மநோ விகாரம்
எதனால் என்னை அடைகிறார்களோ அந்த புத்தி
கீழே பர பக்தி -இங்கு பர ஞானம் -அடுத்த நிலை -பர பக்தி
அனுஷ்டித்தவனுக்கு பர ஞானம் -சாஷாத்காரம் போலே மனசுக்கு தோற்றி அருளுகிறேன் –
ஞானம் -தரிசன -பிராப்தி அவஸ்தைகள் –பர பக்தி பர ஞானம் -பரம பக்திகள்- –
ப்ரீதி பூர்வகம் பஜதாம் என்று இல்லாமல் ப்ரீதி பூர்வகம் ததாமி -தான் கொடுப்பதுடன் சேர்த்து –
பக்தி செய்கிறான் என்றாலே ப்ரீதி பூர்வகம் இருக்க வேண்டுமே –
வெகு நாள்களாக கிருஷீ பண்ணுபவன் அவன் தானே -நிர்ஹேதுகமாக தனது பேறாக கொடுக்கிறான் என்றவாறு
———-
விஷயாந்தர ப்ராவண்யம் அழுக்கு இருக்கிறதே -இது போகாமல் சாஷாத்காரம் எப்படி கிட்டும் -ஈடுபடவே இல்லாமல் தர்சனம் எப்படி -என்ற கேள்விக்கு பதில்
தேஷா மேவாநுகம்பார்த மஹமஜ்ஞாநஜம் தம–
நாஸயாம் யாத்ம பாவஸ்தோ ஜ்ஞாந தீபேந பாஸ்வதா৷৷10.11৷৷
தேஷாம் = அவர்களுக்கு
எவ = நிச்சயமாக
அநுகம்பார்த = சிறப்புடன் இரக்கப்பட்டு
அஹம் = நான்
அஜ்ஞாநஜம்= அறியாமை
தம: = இருள்
நாஸயாமி = விலக்குகிறேன்
ஆத்ம பாவ = அவர்கள் மனதில்
ஸ்தோ = இருந்து
ஞாந = ஞானம்
தீபேந = என்ற விளக்கை
பாஸ்வதா = ஒளி விளங்கச் செய்கிறேன்
அந்த ஸ்வயம் ப்ரயோஜன பக்தி நிஷ்டர்கள் இடம் அருளினாலேயே அவர்களுடைய நெஞ்சுக்கு விஷயமானவனாய் –
எனது கல்யாண குணங்களை வெளிப்படுத்தி -என் விஷயமான ஞானம் என்னும் ஒளி மிக்க விளக்காலே
ஞானத்துக்கு விரோதியான பண்டை வினைகளால் உண்டான சப்தாதி விஷய ப்ராவண்யம் ஆகிற
இருளை நான் அழிக்கிறேன்
அநந்ய பக்தர்கள் மேல் பக்ஷ பாதமாக -கர்ம அனுகுணமாக வரும் –மயர்வுகளை அறுத்து மதி நலம் அருளி –
தன்னுடைய அசாதாரண கல்யாண குணங்களை பிரகாசித்து அருளுகிறார் —
பகவத் பக்தி ஞானம் ஒளி கொண்டு இருளைப் போக்கி அருளுகிறார் -கருணையால் –
அஞ்ஞானத்தால் பிறந்த தமஸ் இருட்டை போக்கி அருளுகிறேன் -ஹிருதய கமலத்தில் சேவை சாதித்து கொண்டு போக்கடிக்கிறேன் –
பரம பக்தி தானே மோக்ஷம் கொடுக்கும் -பர ஞானம் கொண்டு என்னை அடைகிறான் என்கிறான் என்னில்
தானே பரம பக்திக்கு கூட்டிச் செல்கிறான் என்றபடி –
அப்படிப்பட்ட பக்தர்கள் ஏற்றம் அறிய அர்ஜுனன் ஆவலாக இருந்தான் –
—————
ஏவஂ ஸகலேதர விஸஜாதீயஂ பகவத் அஸாதாரணஂ ஷ்ரரிண் வதாஂ (கேட்பவர்களுக்கு )நிரதிஷய அநந்த ஜநகஂ கல்யாண குண கண யோகஂ தத் ஐஷ்வர்ய விததிஂ ச ஷ்ருத்வா (கேட்டு )தத் விஸ்தாரஂ ஷ்ரோது காமஃ (அவற்றின் விரிவை கேட்க ஆசை கொண்ட )அர்ஜுந உவாச —
(மடி பிடித்து பிரார்த்தித்து கேட்க்கிறான் )-இது தொடங்கி ஏழு ஸ்லோகங்கள் அர்ஜுனன் கேள்வி-தனக்கு வந்த விஸ்வாஸத்தையும் அஸூயையும் சொல்லிய பின்பே கேள்விகள்
அர்ஜுந உவாச
பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவாந்.–
புருஷம் சாஸ்வதம் திவ்யமாதி தேவமஜம் விபும் —৷৷10.12৷৷
அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்கிறான்
பரம் ப்³ரஹ்ம = பர பிரமம்
பரம் தா⁴ம = பரம பதம்-தாமம் ஜோதிஸ் என்றபடி
பவித்ரம் = தூய்மை
பரமம் ப⁴வாந் = அனைத்திலும் உயர்ந்தவன்
புருஷம் = புருஷம்
ஸா²ஸ்²வதம் = நிரந்தரமானவன்
திவ்யமாதி தே³வம் = திவ்யம் + ஆதி + தேவம் = திவ்யமான ஆதி தெய்வம்
அஜம் = பிறக்காதவன் , தொடக்கம் இல்லாதவன்
விபும் = உயர்ந்தவன்
ஆஹுஸ்த்வாம் ருஷய ஸர்வே தேவர்ஷிர் நாரதஸ் ததா.—
அஸிதோ தேவலோ வ்யாஸ ஸ்வயம் சைவ ப்ரவீஷி மே—–৷৷10.13৷৷
ஆஹு = சொல்கிறார்கள்
த்வாம் = உன்னைப் பற்றி
ரிஷ்ய = ரிஷிகள்
ஸர்வே = அனைவரும்
தேவர்ஷிர் நாரத = தேவ ரிஷி நாரதர்
ததா = மேலும்
அஸிதோ =அசிதா
தே³வலோ : = தேவலர்
வ்யாஸ= வியாசர்
ஸ்வயம் = நீயும்
ச = மேலும்
எவ = நிச்சயமாக
ப்³ரவீஷி = விளக்கினாய்
மே = எனக்கு
அர்ஜுனன் கூறினான் -பர ப்ரஹ்மமாகவும் -பரஞ்சோதியாகவும் -பரம பாவனமாகவும்
ஸ்ருதிகளிலே சொல்லப்படுபவர் தேவரீரே
(இப்படிப்பட்டவனாய் என்று கீழ் சொல்லி தேவரீரை இவ்வாறு சொல்கிறார்கள் நீயும் சொன்னாய் என்பதால் பிரித்து வியாக்யானம்)
எல்லா ரிஷிகளும் அவ்வண்ணமே -தேவ ரிஷியான நாரதரும் அசிதரும் தேவலரும் வியாசரும் உன்னையே
என்றும் இருக்கும் திவ்ய பருஷனாகவும் ஆதி தேவனாகவும் கர்மத்தால் ஏற்பட்ட பிறப்பு இல்லாதவனாகவும் –
எங்கும் வியாபித்து இருப்பவனாகவும் கூறுகிறார்கள் -நீ தானும் எனக்கு இப்படிச் சொல்லுகிறாய் –
தாமம் இடம் -அர்த்தம் ஒளி அர்த்தம் இங்கு இவனைப்பற்றி நீயே பதம் என்பதால் ஒளி
உத்தர பூர்வ ஆகம் -வேத வியாசர் அஸ்லேஷ விநாச அதே வரிசையில் இங்கும் -மேல் வினை முற்றவும் சாரா
ஸ்வ மஹிமையிலேயே திஷ்டதி -ஒவ்வொன்றிலும் பரம் சொல்லி காட்டுகிறான்
நாராயணனைக் காட்டிலும் பர ப்ரஹ்மம் உண்டு என்று கொள்ள இடம் இருப்பதால் ஆளவந்தார் விளக்கி அருளிச் செய்கிறார்
உள்ளும் புறமும் வியாபித்து ப்ரஹ்மம் நாராயணன் என்று அடுத்த வாக்கியமும் உள்ளது
உன்னையே ரிஷிகள் சொல்கிறார்கள் -ஏவகாரம் ஸ்லோகத்தில் இல்லை -சர்வம் வாக்கியம் ச அவதாரணம் -வேறே மாற்று இல்லா விடில்-ஆறு பெருமைகள் –
ஆதிதேவம்-ஆதியாயும் தேவனாயும் என்று ஒன்றாகவே – -லோகவத்து லீலா கைவல்யம் -இன்புறும் இவ்விளையாட்டு உடையவன்
நாராயணனே கண்ணன் என்பதற்கு பிரமாணங்கள் காட்டி அருளுகிறார் மேல்
இது முதல் 10-18-வரை -தனது ஆதரவை ஆவலை சொல்கிறான் -15-வரை-நீ சொன்னதை நம்புகிறேன் –
பிரதிஞ்ஜை -மேல் பிரார்த்தனை மேலும் சொல்ல -ஸ்தோத்ரம் இது –
பரமமான ப்ரஹ்மம் -தான் பெரியதாய் -தன்னைப் போலே பெரியதாகும் –யதோ வா -இத்யாதி –
பரமமான ஜோதிஸும் நீயே -பரம் தாமம் -ஏக தேசமே சூர்ய சந்திரர்கள் -அக்னி பற்றி கேட்க வேண்டுமோ -மங்களம் ஆக்குபவன்-
பன்னலார் பயிலும் பரனே பவித்ரனே –பாபங்களைப் போக்கி பக்தி ஆரம்ப விரோதிகளை போக்கி -பக்தி யோகம் பிறக்கும் —
பூர்வாகம் உத்தராகம் -தீயினில் தூசாகி -தாமரை இலை தண்ணீர் போலே விலக்கி -அஸ்லேஷா விநாஸவ் –
மாரீசன் சுபாஹு -ஒருவனை கொன்று ஒருவனை விலக்கி-
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே –புருஷோத்தமன் -சாஸ்வதம் -தெய்வீகம் -பிறப்பிலி அஜன் -விபு நீக்கமற நிறைந்து —
நான் மட்டும் இல்லை பெரிய ரிஷிகள் ஞானிகளும் இப்படியே சொல்வார்களே –
அடியார்கள் பேசினால் தான் உலகம் அறியும் –
ஸ்வயம் நீ சொன்ன இந்த விஷயத்தையே ரிஷிகளும் ஒத்துக் கொண்டார்கள் –
ஸ்ருதிகள் உன்னையே பரம் ப்ரஹ்மம் -பரம் ஜோதி -பரமாத்மா-பரம் தாமம் -பரம ப்ராப்யம் –
உன்னை அறிய முடியாது என்று அறிந்தவர்களே உன்னை அடைகிறார்கள் –
அவர்கள் உடைய பிரதிபந்தகங்களை நோக்கி -போய பிழையும் புகு தருவான் நின்றனவும் –
தாமரை இலை தண்ணீர் போலே ஒட்டாமலும் -தீயினில் தூசாக்கியும் செய்து அருளி –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பரியங்க உத்ஸ்ருஜ்ய ஆகதோ மதுரா புரீம் —
கிருஷ்ணன் தர்மம் ஸநாதனம் –
ராமோ விக்ரகவான் தர்ம -கோவிந்த பட்டாபிஷேகம் –
சுருதி ஸ்ம்ருதிகள் கிருஷ்ணனே சர்வ ஷ்ரஷ்டா-சர்வ ரக்ஷகன் -நம் கண்ணன் அல்லது கண் அல்லவே –
————–
ஸர்வ மேதத்ருதம் மந்யே யந்மாஂம் வதஸி கேஷவ.–
ந ஹி தே பகவந் வ்யக்தம் விதுர்தேவா ந தாநவா—৷৷10.14৷৷
ஸர்வம் = அனைத்தும்
எதத் = இந்த
ருதம் = உண்மை
மந்யே = நான் ஏற்றுக் கொள்கிறேன்
யந் = எதை
மாம் = எனக்கு
வத³ஸி = நீ சொன்னாயோ
கேஸ²வ = கேசவா
ந = இல்லை
ஹி = உறுதியாக
தே = உன்
ப⁴க³வந் = இறை தன்மை
வ்யக்திம் = சொருபத்தை
விது³ர் = அறிதல்
தே³வா = தேவர்கள்
ந = இல்லை
தா³நவா: = அசுரர்கள்
கேசவனே என்னைக் குறித்து யாதொரு உனது ஐஸ்வர்யத்தையும் கல்யாண குணங்களையும் கூறுகிறாயோ
அந்த இவ் வனைத்தும் உண்மை என்று நினைக்கிறேன் -ஞானம் சக்தி முதலிய குணங்களை உடையவனே –
உன்னைப் பற்றிச் சொல்லக் கூட தேவர்கள் அறிய மாட்டார்கள் அன்றோ –
அஸூர ராக்ஷசர்களும் அறிய மாட்டார்கள் அன்றோ –
சுருதி ஸ்ம்ருதிகள் உன்னை சொல்வது எல்லாம் அர்த்தவாதம் இல்லை -உண்மையாகவே –
அசாதாரண -நிரவதிக -அசங்க்யேய -ஸ்வபாவிக -சர்வஞ்ஞன் சர்வசக்தன் -வீர தீர பராக்ரமன் –
பரம் ஜ்யோதிஸ் -கிலேசம் போக்க வல்லவன் நீயே -சிஷ்யன் -தர்மம் அறியாத மூடனாக இருக்கிறேன்
தீனனாக மன்றாடினேன் -அருளிச் செய்தாய் -பகவன் -ஞான சக்தி –இத்யாதி குணங்கள்
தேவர்கள் தானவர்கள் உன்னைப் பற்றி பேச அர்ஹதை அற்றவர்கள்
————–
ஸ்வயமே வாத்மநாத்மாநம் வேத்த த்வம் புருஷோத்தம.—
பூத பாவந பூதேஷ தேவதேவ ஜகத் பதே—–৷৷10.15৷৷
ஸ்வயம் = தானே
எவ = நிச்சயமாக
ஆத்மான = உன்னால்
ஆத்மாநாம் = உன்னை
வேத்த = அறிவாய்
த்வம் = நீ
புருஷோத்தம = புருஷோத்தமா
பூதபாவந = அனைத்து பூதங்களின்
பூ⁴தேஸ = தலைவனே
தே³வதே³வ = தேவர்களின் தேவனே
ஜக³த்பதே = உலகின் தலைவனே
புருஷோத்தமனே -எல்லாப் பொருள்களையும் உண்டாக்கினவனே -எல்லாப் பொருள்களையும் நியமிப்பவனே –
தேவர்களுக்கும் தேவனாய் இருப்பவனே -லோக ஸ்வாமியே -நீ உனது ஞானத்தாலேயே உன்னை அறிகிறாய்
சர்வஞ்ஞன்–சர்வசக்தன் –மனிசர்க்கு தேவர் போலே தேவர்களுக்கும் தேவன் -ஸர்வேச்வரேச்வரன் –
புருஷோத்தமன் -சர்வ சேஷி -தம் ஈஸ்வரானாம் பரமம் மஹேஸ்வரம்
உன் ஞானத்தால் உம்மை அறிந்து உள்ளீர் -நம் இந்திரியங்கள் பரிமிதம் -அறிய முடியாதே –
நீ அருளிச் செய்ய அறிவோம் -புருஷோத்தமன் –
அபுருஷன் அசித் புருஷன் பத்தாத்மா -உத் புருஷன் முக்தர் –உத்தர புருஷன் நித்யர் –மேம் பட்ட புருஷோத்தமன் நீ –
ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் –
பூத பாவன -எல்லாம் அவன் இடம் உண்டாகும் -பூதேஸ -நியமிக்கிறார் தனது வசத்தில் வைத்து –
தனது ஆதரவை வெளியிட்டான் இது வரை –
—————
வக்துமர்ஹஸ்ய ஸேஷேண திவ்யாஹ் யாத்ம விபூதய–
யாபிர் விபூதிபிர் லோகாநி மாம் ஸ்தவம் வ்யாப்ய திஷ்டஸி——৷৷10.16৷৷
வக்தும் = சொல்ல
அர்ஹஸ் = உன் பெருமைகளை
அஸேஷேண = முழுவதும்
திவ்யா = தெய்வீக
ஹி = நிச்சயமாக
ஆத்ம = உன்
விபூ⁴தய: = மகிமைகளை
யாபி = எதனால்
விபூ⁴திபி = மகிமைகள்
லோகான் = அனைத்து உலகங்களும்
இமாம் = இந்த
ஸ்த்வம் = நீ
வ்யாப்ய = சூழுந்து
திஷ்ட²ஸி = இருக்கிறாயோ
எந்த நியமன விசேஷங்களோடு கூடியவனாய் இந்த உலகங்களை நீ வியாபித்து விளங்குகிறாயோ –
எந்த அற்புதமான நியமன விசேஷங்கள் உனக்கே உரியவையோ அவைகளை ஓன்று ஒழியாமல்
நீயே எனக்கு வெளிப்படுத்த வேணும் –
திவ்யம் -அப்ராக்ருதம் -காட்டவே காணும் படி -விபு -நீயே அருளி அறிய வேன்டும் –
விபூதிகளின் பெருமையை சொல்லி முடிக்க முடியாதே –
உள்ளும் புறமும் வியாபித்து நியமித்து -பிரவ்ருத்திகள் நிவ்ருத்திகள் ஸ்திதி அனைத்தும் உன் அதீனம் –
விபூதி -நியமன விசேஷம் -அனைத்துடன் சேர்ந்து வியாபித்து இருப்பதை -ஒவ்வொன்றையும் ஒவ்வொரு மாதிரி நியமிப்பது –
மலைக்கு ஸ்திர தன்மை கொடுத்து -நதி ஓடிக் கொண்டு இருக்கும் தன்மையுடன் இருக்கும் -உத்பத்தியும் ஸ்திதியும் ப்ரவ்ருத்தியும் ஸ்வரூபத்துத் தக்கபடி இருப்பதே நியமன விசேஷம்
இங்கு விபூதி -செல்வம் -நியமன விசேஷம் -மேல் 19 ஸ்லோகத்தில் நியாம்யம்-நியமிக்கப்படும் பொருள்கள் அர்த்தம் வரும்
பொருளைக் குறிப்பதை ஸ்லோகம் 20-39 வரை பல பொருள்களை எடுத்து அவற்றுள் இவர் இவராக இருப்பதைச் சொல்லப் போகிறான்
பதில் நியமிக்கப்படும் பொருள்கள் பற்றியே சொல்லப் போகிறான் –
ஒன்றோடு கூடியவராய் ஒன்றில் வியாபிக்க முடியாதே -ஆகவே இந்த ஒன்றை நியமிக்கும் சக்தி -நியமன விசேஷத்துடன் கூடியவராய் வியாபிக்கிறீர் என்றபடி-வியாப்பிய திஷ்டதி என்று இருப்பதால் இங்கு இப்படித்தான் பொருள் அருளிச் செய்ய வேண்டும் -அந்தர் யமதி -அந்தப்ரவிஷ்டா ஸாஸ்தா -நியமன சக்தியுடன் வியாப்தி என்றவாறு
—————
கதம் வித்யாமஹம் யோகீ த்வாம் ஸதா பரி சிந்தயந்.—
கேஷு கேஷு ச பாவேஷு சிந்த்யோஸி பகவந் மயா—-৷৷10.17৷৷
நற் குணக் கடலான எம்பெருமானே பக்தி யோக நிஷ்டனான நான் உன்னை எப்போதும்
சிந்திக்க முற்பட்டவனாய் உன்னை எப்படி அறிவேன்
முன் சொல்லாத எந்த எந்த பொருள்களில் என்னால் -அவற்றை நியமிப்பவனாக நினைக்கத் தக்கவனாகிறாய் –
நீயே நியமித்து அருளுபவர்களாக இருக்க –
அபரிச்சின்னமான உன்னை பக்தி யோக நிஷ்டர் பரிச்சின்ன ஞானம் கொண்டு எவ்வாறு தியானிக்க –
————-
கீழ் 20 விஷயங்கள் நம்முடன் சம்பந்தப்பட்டவை -அம்ருதம் போதும் என்ற எண்ணம் வராதே -ஆராவமுதம் அன்றோ
விஸ்தரேண ஆத்மநோ யோகம் விபூதிம் ச ஜநார்தந.—
பூய கதய த்ருப்திர்ஹி ஸ்ருண்வதோ நாஸ்தி மே ம்ருதம்—–৷৷10.18৷৷
விஸ்தரேணாத்மநோ = விஸ்தரே +ஆ த்மநோ = விஸ்தாரமாக, விரிவாக ஆத்ம
யோக³ம் = யோகத்தை
விபூ⁴திம் = பெருமைகளை
ச = மேலும்
ஜநார்த³ந = ஜனார்த்தனா
பூ⁴ய: = மீண்டும்
கத²ய = கதையை
த்ருப்தி = திருப்தி
ஹி = மேலும்
ஸ்²ருண்வதோ = சொற்களை
நாஸ்தி = இல்லை
மே = எனக்கு
அம்ருதம் = அமிர்தம் போன்ற
ஜனார்த்தனனே உன்னுடைய கல்யாண குண சேர்த்தியையும் நியமனத்தையும் மறுபடியும் விரிவாகச் சொல்லுவாய்
உன்னுடைய பெருமை யாகிற அமுதைக் கேட்கின்ற எனக்கு கேட்டது போதும் என்னும் எண்ணம் இல்லை அன்றோ –
உன் மகிமையையும் விபூதிகளின் மஹாத்ம்யத்தையும் விஸ்தாரமாக அருளிச் செய்ய வேன்டும் –
அத்தை கேட்க அபிநிவேசம் மிக்கு உள்ளேன் –
ஹி–ப்ரஸித்தம் அன்றோ
பரீக்ஷித் இதே போல் விஸ்தரமாக கண்ணன் விருத்தாந்தம் கேட்க தசம ஸ்கந்தம் அருளிச் செய்தார் ஸூக மகரிஷி
ஜனமேயன் -வைசம்பாயர் இடம் 125000 ஸ்லோகங்கள் சொல்லி -நான்கு புருஷார்த்தங்கள் வேண்டாம் -கேட்க்கும் ஒன்றே வேண்டும் என்றானே
கண்ணனே தனது வைபவம் சொல்ல கேட்க்கும் ஆசை இருக்கச் சொல்லவும் வேணுமோ
—————–
ஸ்ரீ பகவாநுவாச
ஹந்த தே கதயிஷ்யாமி திவ்யாஹ் யாத்ம விபூதய–(விபூதிர் ஆத்மநஸ் ஸூபா )
ப்ராதாந்யத குரு ஸ்ரேஷ்ட நாஸ்த் யந்தோ விஸ்தரஸ்ய மே—–৷৷10.19৷৷
ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
ஹந்த = இப்போது
தே = உனக்கு
கத²யிஷ்யாமி = சொல்லுகிறேன்
தி³வ்யா = பூரணமான
ஹ்யாத்மவிபூ⁴தய: | = ஹத் + ஆத்ம + விபூதாய = என் பெருமைகளை
ப்ராதா⁴ந்யத: = பிரதானமானவைகளை
குருஸ்²ரேஷ்ட = குருகுலத்தில் சிறந்தவனே
நாஸ்த்யந்தோ = நாஸ்தி + அந்தோ = அந்தம் இல்லாத
விஸ்தரஸ்ய மே = மிக விரிவான
குரு குலத் தலைவனே -என்னுடைய மங்களமான செல்வங்களைக் குறிப்பாகச் சிறப்புடையவற்றை
உனக்குச் சொல்லுகிறேன் கேளாய் -எனது செல்வங்களின் விரிவுக்கு முடிவு இல்லை
ப்ராதான்யமான -முக்கியமானவற்றை சொல்கிறேன் -அனைத்தையும் சொல்லி விவரிக்க முடியாதே —
ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் -சங்கல்பத்தாலே செய்து அருளி அனைவரையும் நியமித்து -அன்றோ இருப்பவன் –
ஹந்த-ஆச்சார்யம்-விஸ்தாரத்துக்கு அந்தம் இல்லை -சில ப்ராதான்யமானவற்றைச் சொல்கிறேன் -உயர்வாலே ப்ராதான்யம் -உத்கர்ஷம் விவஷிதம்
————–
தத்ர ஸர்வ பூதாநாஂ ப்ரவர்தந ரூபஂ நியமநம் –ஆத்ம தயா அவஸ்தாய இதி -உள் புகுந்து ஆத்மாவாய் நியமிக்கிறார் )இமம் அர்தஂ யோக ஷப்த நிர்திஷ்டஂ ஸர்வஸ்ய ஸ்ரஷ்டரித்வஂ பாலயிதரித்வஂ ஸஂஹர்தரித்வஂ ச இதி(ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் -காரணத்வம்-கல்யாண குணங்களை யோக சப்தத்தால் சொல்லி ) ஸுஸ்பஷ்டம் ஆஹ —
அஹமாத்மா குடாகேஸ ஸர்வ பூதாஸயஸ்தித-
அஹமாதிஸ்ச மத்யம் ச பூதாநாமந்த ஏவ ச —৷৷10.20৷৷
அஹமாத்மா = அஹம் + ஆத்மா = அனைத்தின் உள்ளும்
கு³டா³கேஸ = குடா கேசா (அர்ஜுனா)
ஸர்வ = அனைத்து
பூ⁴தாஸ²= பூதங்களின்-யஸ்தி²த: = அனைத்தின் உள்ளே-பூதாஸயஸ்தித-ஜீவ ராசிகளின் ஹ்ருதயத்திலும்
அஹமாதி = அஹம் + ஆதி = அவற்றின் தொடக்கம்
ஸ்ச மத்⁴யம் = அவற்றின் மத்தி (நடு )
ச = மேலும்
பூ⁴தாநாமந்த = பூதாநாம் + அந்தம் = அவற்றின் இறுதி
ஏவ ச = நானே
தூக்கத்தை வென்ற அர்ஜுனா நான் எல்லா ஜீவ ராசிகளின் ஹ்ருதயத்திலும் இருக்கும் அந்தர்யாமியாய் இருக்கிறேன் –
நான் எல்லா ஜீவ ராசிகளுக்கும் முதலில் நடைபெறும் படைப்புக்குக் காரணமாகவும்
இடையில் நடைபெறும் ரக்ஷணத்துக்குக் காரணமாகவும்
கடைசில் நடைபெறும் சம்ஹாரத்துக்குக் காரணமாகவும் இருக்கிறேன்
சரீராத்மா பாவம்-ஆதாரம் -நியமனம் பிரதானம் -அவன் -சரீரம் போலே சேதன அசேதனங்கள் –
உள்ளும் புறமும் வியாபித்து
யஸ்ய பிருத்வி சரீரம் -யஸ்ய ஆத்மா சரீரம் –இருந்தாலும் ந வேத -அறியாமல் -என்றபடி –
சாமானாதிகரணம் -ப்ரஹ்மாத்மிகம் இல்லாத வஸ்துக்களும் இல்லையே –
சரீர ஆத்ம பாவமும் காரண கார்ய பாவமும் -அஹம் சொல்லி மற்றவையும் முதல் வேற்றுமையிலும் சொல்லி -நியமனம் செய்யும் தன்னையும் நியமிக்கப்படும் பொருள்களையும் –
கார்ய சொற்களும் காரணத்தில் பர்வசிக்கும்
ஆக இரண்டு நிபந்தனமும் -சொல்ல பீடிகை இங்கு அருளிச் செய்கிறார் –
———————-
ஏவஂ பகவதஃ ஸ்வ விபூதி பூதேஷு ஸர்வேஷு ஆத்ம தயா அவஸ்தாநஂ(நியாம்ய பொருள்கள் அர்த்தம் இங்கு விபூதிக்கு ) தத் தச் சப்த ஸாமாநாதி கரண்ய நிர்தேஷ ஹேதுஂ ப்ரதிபாத்ய விபூதி விஷேஷாம் ஸாமாநாதி கரண்யேந வ்யபதிஷதி; பகவதி ஆத்ம தயா அவஸ்திதே ஹி ஸர்வே ஷப்தாஃ தஸ்மிந் ஏவ பர்ய வஸ்யந்தி. யதா தேவோ மநுஷ்யஃ பக்ஷீ வரிக்ஷ இத்யாதயஃ ஷப்தாஃ ஷரீராணி ப்ரதிபாதயந்தஃ தத் ததாத்மநி பர்யவஸ்யந்தி.
பின்ன ப்ரவ்ருத்தி நிமித்தானாம் ஏகஸ்மின் – சாமானாதி கரண்யம் -நியந்த்ரு நியாம்ய பாவம் -அரசன் மக்கள் -அப்பா பிள்ளை போல் -சரீராத்மா பாவம் –காரண கார்ய பாவம் –
ஸ்வா பாவிக அப்ருதக் சித்தம் -ப்ரஹ்மதுக்கும் ஜகத்துக்கும் -நமக்கு சரீரம் கர்மம் அடியாகத் தானே -அது போல் இல்லையே ப்ரஹ்மத்துக்கு
பகவதஃ தத்ததாத்மதயா அவஸ்தாநம் ஏவ தத் தச் சப்த ஸாமாநாதி கரண்ய நிபந்தநம்? இதி விபூத் யுப ஸஂஹாரே வக்ஷ்யதி — ‘ந ததஸ்தி விநா யத்ஸ்யாந் மயா பூதஂ சராசரம்.’ (கீதா 10.39–என்னை விட்டு வேறே ஒன்றுமே இல்லை ) இதி ஸர்வேஷாஂ ஸ்வேந அவிநாபாவ வசநாத். அவிநாபாவஷ்ச நியாம்ய தயா(விட்டுப் பிரியா தன்மை நியாம்ய பாவத்தால்-விதி வாய்க்கின்றது காப்பார் யார் )இதி’மத்தஃ ஸர்வஂ ப்ரவர்ததே’ (கீதா 10.8) இதி உபக்ரமோதிதம்.(கீழ் சொல்லப் போகும் 19 ஸ்லோகங்களும் முன்னுரையாக ஸ்வாமி சாதித்து அருளுகிறார் -சரீராத்மா பாவத்தையே முக்யமாகக் கொண்டு சாதிக்கிறார் )
உபக்ரமம் சொல்லி உப ஸம்ஹாரம் சொல்லி -முதல் சொன்னதே பலம் என்றும் -அதுக்கு ஆஷேபம் வந்து பின்னால் சொன்னதே வலிமை-ஆஷேபம் இல்லா விடில் முதலில் சொன்னதே வலிமை -மீமாம்ஸை நியாயம்
அனைத்தும் உண்டு -என்னை விட்டு இவை இல்லை -அப்ருதக் சித்தம் -நடுவில் ஆக்ஷேபமும் இல்லை
ஆகவே அத்வைத வாதம் ஸித்திக்காது –
———
ஆதித்யாநாமஹம் விஷ்ணுர் ஜ்யோதிஷாம் ரவிரம்ஸூமாந்.—–
மரீசிர் மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஸஸீ—৷৷10.21৷৷
ஆதி³த்யாநாம் விஷ்ணு = ஆதித்யர்களில் நான் விஷ்ணுவாக இருக்கிறேன்
ஜ்யோதிஷாம் அம்ஸு²மாந் ரவி: = ஒளிகளில் நான் கதிர் வீசும் சூரியனாக இருக்கிறேன்
மருதாம் மரீசி: = வாயுவில் நான் மரீசி
நக்ஷத்ராணாம் அஹம் ஸ²ஸீ² அஹம் அஸ்மி = நட்சத்திரங்களில் நான் சந்திரனாக இருக்கிறேன்
துவாதச ஆதித்யர்களுக்குள் சிறந்தவனாக விஷ்ணு என்னும் பெயருடைய ஆதித்யன் நானே –
தேஜோ பதார்த்தகளுக்குள் கிரணங்களை யுடைய ஸூர்யனாகிற ஜோதி நானே
49-மருத்துக்களுக்குள் உயர்ந்த மருத்தான மரீசியாக நான்-மரீசி ரிஷி வேறே –
நக்ஷத்திரங்களுக்குத் தலைவனான சந்திரன் நானே
பின்ன ப்ரவ்ருத்தி நிமித்தானாம் ஏகஸ்மின் – சாமானாதி கரண்யம் -நியந்த்ரு நியாம்ய பாவம் -அரசன் மக்கள் -அப்பா பிள்ளை போல் -சரீராத்மா பாவம் –காரண கார்ய பாவம் –
ஆதித்யர்களுக்குள் விஷ்ணு -ஸாஸ்த்ரம் சொல்லியே அறியும் வஸ்துக்களையும்
ப்ரத்யக்ஷமாய் இருக்கும் ஸூர்ய சந்த்ரர்களையும் எடுத்துக் காட்டுகிறான்
சில அவற்றுக்குள்ளும் சில வெளியிலும் உண்டு
ராமனே சரீரம் என்று கொள்ளாமல் வில்லாளிகளின் தன்மை என்னிடம் உண்டு என்றும் சொல்வான்
சஹா அஹம் ஸோஹம் -அத்வைத வாதம் அல்ல -நியந்தரு-நியாம்ய பாவம்
அதிதி காஷ்யபர் பிள்ளைகள் -விஷ்ணு புராணத்தின் படி 12 ஆதித்யர்கள் உள்ளனர். அவர்கள், அம்சன், ஆர்யமான், பாகன், துத்தி, மித்திரன், புஷன், சக்ரன், சாவித்திரன், துவச்த்திரன், வருணன், விஷ்ணு, விவஸ்வத் ஆகியோராகும். மற்ற புராணங்களில் யமன், வருணன், இந்திரன் போன்றோரும் ஆதித்யர்கள் என்றும் உள்ளது
சிரியா எல்லையில் துருக்கி நாட்டிற்குள் எழிலிகாயா (Yazikaya) என்னும் இடத்தில் 12 பெரிய உருவங்கள் பாறை
மீது பொறிக்கப்பட்டுள்ளன. இவர்களும் ஹிட்டைட்ஸ் தொடர்புடையனவே. வேதத்தில் 12 ஆதித்யர்கள் என்று சூரியனின் வடிவங்கள் போற்றப்படுகின்றன. இது சூரியனின் பாதையிலுள்ள 12 மாதங்கள், 12 ராசிகள் என்று பொருள்படும். இதைச் சிறப்பிக்கும் வகையில் அங்கே 12 பெரிய உருவங்கள் உள்ளன. நாட்டின் பெயரே சூர்ய (சிரியா) என்று இருக்கும்போது இதில் வியப்பொன்றும் இல்லை.
சிரியாவின் மிக முக்கிய தெய்வம் தருணாஸ் (Tarhunas) என்று புதிய புத்தகம் கூறுகிறது. நூற்றுக் கணக்கான களிமண் கல்வெட்டுகளைப் படிக்கப் படிக்க புதுப் புது விஷயங்கள் வெளியாகி வருகின்றன. தருணாஸ் (Tarhunas) என்பது வருணன் என்பதன் சிதைந்த வடிவம். இதை புயல், இடி, மின்னலின் தெய்வம் என்று ஹிட்டைட்ஸ் அறிஞர்கள் (Hittitologists) வருணிக்கின்றனர். நாம் இந்திர, வருணன் பற்றிச் சொல்லும் விஷயங்கள் இவை. மழைக்குக் கூட நாம் இந்திர ஜபம் செய்வதில்லை; வருண ஜபம்தான் செய்கிறோம். ஆகவே இடி, மழை தெய்வமான தாருணாஸ்– வாருண –என்பதன் மறு வடிவமே.
ஜகதீ -ப்ராக்ருத உலகங்களில் இது -பரம பதத்தில் அத்யர்க்க தேஜஸ் அங்கு –
————
வேதாநாம் ஸாமவேதோஸ்மி தேவாநாமஸ்மி வாஸவ—
இந்த்ரியாணாம் மநஷ்சாஸ்மி பூதாநாமஸ்மி சேதநா—-৷৷10.22৷৷
வேதா³நாம் ஸாமவேத³: அஸ்மி = வேதங்களில் நான் சாமவேதமாக இருக்கிறேன்
தே³வாநாம் வாஸவ: அஸ்மி = தேவர்களில் நான் இந்திரனாக இருக்கிறேன்
இந்த்³ரியாணாம் மந அஸ்மி = புலன்களில் நான் மனமாக இருக்கிறேன்
ச பூ⁴தாநாம் சேதநா அஸ்மி = மேலும் அனைத்து உயிர்களிலும் நான் உணர்வாக இருக்கிறேன்
வேதங்களுக்கும் சிறந்ததாக சாம வேதம் ஆகிறேன்
தேவைதைகளுக்குள் தலை சிறந்தவனாக இந்திரன் ஆகிறேன்-
வாஸவ-இந்திர பட்டணத்தில் வசிப்பவர்களின் -அதனால் நான்முகன் இங்கே சேரா மாட்டானே
பதினோரு இந்த்ரியங்களுள் சிறந்ததான மனஸ் என்னும் இந்திரியம் ஆகிறேன் –
அறிவுடைய ஜீவ ராசிகளுடைய அறிவாக நான் ஆகிறேன் –
அர்த்தம் அநு சாரேண அந்த பாதத்திலேயே முடிந்தால் ருக்
யஜுஸ் இப்படியும் இருக்கலாம் பாதம் தாண்டியும் அர்த்தம் இருக்கலாம்
இதில் கான ரூபம் சேர்ந்து ஸாமம்-உத்கீத பிரணவம் கொண்டது
மூன்றும் சேர்ந்து அதர்வணம்
(அறிவுடைய ஜீவராசிகளுடைய அறிவாக இருக்கிறேன் -அறிவு அவர்களில் ஓன்று அல்லவே -சம்பந்த சஷ்ட்டி -இதே போல் பலவும் உண்டே-ஸ்த்ரீ லிங்கம் ஸா இங்கு )
[10.22]’ஸர்காணாமாதிரந்தஷ்ச மத்யஂ சைவாஹமர்ஜுந!’ [10.32]’வாதஃ ப்ரவததாமஹம்’ [10.32]’அஹமேவாக்ஷயஃ காலஃ’ [10.33]’உத்பவஷ்ச பவிஷ்யதாம்’ [10.34]’த்யூதஂ சலயதாமஸ்மி’ [10.36]’தேஜஸ்தேஜஸ்விநாமஹம்’ [7.10]’ஜயோஸ்மி வ்யவஸாயோஸ்மி’ [10.36] இத்யாதிஷு நிர்தாரணாபாவாத்; அதோத்ர சந்த்ரஸ்ய நக்ஷத்ர ஜாதீயத்வாபாவாத் ஷஷ்ட் யபிஹிதஸ்ய ஸம்பந்த ஸாமாந்யஸ்ய ப்ரமாண ஸித்த விஷேஷே பர்யவஸாநமிதி பாவஃ.
—————
ருத்ராணாம் ஸங்கரஸ்சாஸ்மி வித்தேஸோ யக் ஷரக்ஷஸாம்.—
வஸூநாம் பாவகஸ்சாஸ்மி மேருஸ் ஸிகரிணாமஹம்—-৷৷10.23৷৷
ருத்ராணாம் ஸங்கர = ருத்ரர்களில் சங்கரனாக
சா அஸ்மி = நான் இருக்கிறேன்
வித்தேஸோ = குபேரனாக இருக்கிறேன்
யக்ஷரக்ஷஸாம் = யக்ஷ இராட்சசர்களில்
வஸூநாம் = வசுக்களில்
பாவகஸ்²சாஸ்மி = நான் அக்கினியாக இருக்கிறேன்
மேரு: ஸி²க²ரிணாமஹம் = மலைகளில் நான் மேருவாக இருக்கிறேன்
பதினோரு ருத்ரர்களுக்குள் தலைவனான சிவனாகவும் இருக்கிறேன்
யக்ஷ ராக்ஷஸர்களுக்குள் பணத்துக்கு அதிபதியான குபேரன் ஆகிறேன்
எட்டு வஸுக்களுள் தலை சிறந்தவனாக பாவகன் –வைஸ்ரவஸின் பிள்ளை -என்ற வஸூ வாகிறேன் –
ஆச்சர்யமான சிகரங்களை யுடைய மலைகளுக்குள் நான் மேரு ஆகிறேன்
ருத்திரர்கள் பதினோரு பேர் இருக்கிறார்கள். அவர்களின் பெயர் புராணங்களில் பல இடங்களில் பலவிதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
அஜைகபதன், அஹிர்புத்னியன், வீரபத்ரன், கிரீசன், சங்கரன், அபராஜிதன், ஹரன், அங்காரகன், பிநாகன், பகன், சம்பு
என்பன அவர்களின் வெவ்வேறு பெயர்களாம். அவர்கள் எல்லாரும் சிவனுடைய அம்சங்களாகின்றனர்.
ருத்திரன் என்பதன் பொருள் ரோதனம் உண்டு பண்ணுபவன், அழச் செய்பவன் என்பதாம்
யக்ஷஸர்கள் ரக்ஷஸர்கள் ஆகிய இருவரும் தேவ கணத்தைச் சேர்ந்தவர்கள். விரைந்தோடிப் பொருள் தேடும்
தன்மையுடையவர்கள் யக்ஷஸர்கள். பொருளைக் காக்கும் இயல்புடையவர்கள் ரக்ஷஸர்கள்.
இவ்விரு தரத்தாரும் குபேரனுடைய சேனைகளாகின்றனர். செல்வம் யாரிடம் சேருகிறதோ அவன் குபேரனாகிறான்.
எங்கு உழைப்பும் சேமிப்பும் இருக்கின்றனவோ அங்குச் செல்வம் பெருகுகிறது.
செல்வம், ஐசுவரியம் அல்லது வல்லமையைத் தருகிறபடியால் அது ஈசுவர ஸம்பத்து எனப்படுகிறது.
வஸுக்கள் எட்டுப்பேர். நிலம், நீர், நெருப்பு, வளி, வெளி, சந்திரன், சூரியன், நக்ஷத்திரம் ஆகிய இவை யெட்டும்
ரூபகப் படுத்தி வஸுக்கள் என்று இயம்பப்படுகின்றன. அக்கினி வெவ்வேறு வடிவெடுத்து உயிர்களை ஓம்புவதால்
வஸுக்களுள் நாள் அக்கினி என்கிறார் பகவான்.
—————-
புரோதஸாம் ச முக்யம் மாம் வித்தி பார்த்த ப்ருஹஸ்பதிம்.–
ஸேநாநீநாமஹம் ஸ்கந்த ஸரஸாமஸ்மி ஸாகர—-10.24৷৷
புரோதஸாம் ப்ருஹஸ்பதிம் = புரோகிதர்களில் முக்கியமானவன் அல்லது தலைவன் பிரகஸ்பதி
மாம் = நான்
வித்³தி⁴ = அறிந்து கொள்
பார்த² = பார்த்தா
ஸேநாநீநாம் = சேனைத் தலைவர்களில்
அஹம் = நான்
ஸ்கந்த: = கந்தன்
ஸரஸாம் = நீர் நிலைகளில்
ஸாக³ர: = கடல்
அஸ்மி = நானாக இருக்கிறேன்
குந்தீ புத்திரனே -புரோஹிதர்களுக்குள் சிறப்புற்றவரான ப்ருஹஸ்பதியாகவும் என்னை அறிவாயாக
சேனைத் தலைவர்களுள் சிறப்புற்ற முருகன் நானே-பிராகிருத பூமியில் -விஷ்வக் சேனரில் வியாவருத்தி –
ஓடாமல் தேங்கி இருக்கும் நீர்–குளங்களுக்குள் சிறப்புற்ற கடல் நானே ஆகிறேன்
முக்யத்வம் இங்கு இருப்பதை எல்லா வற்றிலும் கொள்ள வேண்டும்
————
மஹர்ஷீணாம் ப்ருகுரஹம் கிராமஸ்ம்யேகமக்ஷரம்.—
யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோஸ்மி ஸ்தாவராணாம் ஹிமாலய—৷৷10.25৷৷
மஹர்ஷீணாம் ப்⁴ருகு³ அஹம் = மகரிஷிகளில் நான் பிருகுவாக இருக்கிறேன்
கி³ராம் ஏகம் அக்ஷரம் அஸ்மி = வாக்குகளில் நான் ஓரெழுத்தாக இருக்கிறேன்
யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோ அஸ்மி = யக்ஞங்களில் நான் ஜபயக்ஞமாக இருக்கிறேன்
ஸ்தா²வராணாம் ஹிமாலய: = மலைகளில் நான் இமாலயமாக இருக்கிறேன்
மரீசி முதலான ரிஷிகளுக்குள் சிறந்தவரான ப்ருகு வாகிறேன்-மகா லஷ்மி திருத் தகப்பனார் -இவனே பரத்வம் ஸ்தாபித்த பெருமையும் உண்டே
பெருமாளுடைய சப்தங்களுக்குள் ஒற்றை எழுத்தாகிற பிரணவம் ஆகிறேன்-பொருளுடன் கூடிய சொற்களுக்குள்-கடலோசை போன்றவற்றைத் தவிர்க்க வேண்டுமே
யஜ்ஞங்களுக்குள் சிறந்ததான ஜெப யஜ்ஞமாக ஆகிறேன்–ஹிம்சைக்கு பிரஸ்தாபம் இல்லாமல் -சர்வாதிகாரமாக இருக்கும் ஏற்றம் உண்டே -விதுரன் -ஆஸ்ரமம் இல்லாமல் இருந்தாலும் ஜெப யஜ்ஜம் செய்தானே –
சாமான்ய மலைகளுக்குள் சிறந்ததான இமயமலை யாகிறேன்-சிகரங்களால் அலங்கரிக்கப்பட்ட மலைகளுக்குள் மேரு கீழே பார்த்தோம்
—————–
அஸ்வத்தஸ் ஸர்வ வ்ருக்ஷாணாம் தேவர்ஷீணாம் ச நாரத–
கந்தர்வாணாம் சித்ரரதஸ் ஸித்தாநாம் கபிலோ முநி—৷৷10.26৷৷
அஸ்²வத்த²: ஸர்வவ்ருக்ஷாணாம் = மரங்களில் நான் அரச மரம்
தே³வர்ஷீணாம் ச நாரத³: = தேவ ரிஷிகளில் நான் நாரதன்
க³ந்த⁴ர்வாணாம் சித்ரரத²: = கந்தவர்களில் நான் சித்ரதரன்
ஸித்³தா⁴நாம் கபிலோ முநி: = சித்தர்களில் நான் கபில முனி
எல்லா மரங்களுக்குள்ளும் அரச மரமாகிறேன்–பகவத் ஸந்நிதானம் கொண்ட ஏற்றம்
தேவ ரிஷிகளுக்குள் நாரதர் ஆகிறேன்-மனிதர் அஞ்ஞானம் கெடுக்கும் நாரதர் -ஆத்ம சம்பந்த ஞானம் தருபவர் நாரதர் –
கந்தர்வர்களுக்குள் சித்ரரதன் ஆகிறேன்
அணிமாதி சித்தி பெற்றவர்களுக்கும் கபில முனி யாகிறேன்
- அணிமா – அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
- மகிமா – மலையைப் போல் பெரிதாதல்.
- இலகிமா – காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
- கரிமா – கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
- பிராத்தி – எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
- பிராகாமியம் – தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)
- ஈசத்துவம் – நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
- வசித்துவம் – அனைத்தையும் வசப்படுத்தல்.
————–
உச்சைஸ் ஸ்ரவஸமஷஸ்வாநாம் வித்தி மாமம்ருதோத்பவம்.—
ஐராவதம் கஜேந்த்ராணாம் நராணாம் ச நராதிபம்৷৷10.27৷৷
உச்சை:ஸ்²ரவஸம் = உச்சை சிரவம்
அஸ்²வாநாம் = குதிரைகளில்
வித்தி = உணர் , அறிந்து கொள்
மாம் = நான்
அம்ருதோத்³ப⁴வம் = அமிர்தத்தில் தோன்றிய
ஐராவதம் = ஐராவதம்
க³ஜேந்த்³ராணாம் = யானைகளில்
நராணாம் = மனிதர்களில்
ச நராதி⁴பம் = நான் அரசன்
குதிரைகளுக்குள் திருப்பாற் கடல் அமுதத்தில் உண்டான உச்சைஸ்வரஸ் என்னும்
குதிரையாக என்னை அறிவாய்
சிறந்த யானைகளுக்குள் ஐராவதமாகவும் என்னை அறிவாய்
மனிதர்களுக்குள்ளும் அரசனாக என்னை அறிவாய்
————
ஆயுதாநாமஹம் வஜ்ரம் தேநூநாமஸ்மி காமதுக்.-
ப்ரஜநஷ்சாஸ்மி கந்தர்ப ஸர்ப்பாணாமஸ்மி வாஸுகி–৷৷10.28৷৷
ஆயுதா⁴நாம் = ஆயுதங்களில்
அஹம் வஜ்ரம் = நான் வஜ்ராயுதம்
தேநூநாம் = பசுக்களில்
காமது⁴க் அஸ்மி = நான் காமதேனு
ப்ரஜந: கந்த³ர்ப: அஸ்மி = பிறப்பிப்பவர்களில் நான் மன்மதன்
ச ஸர்பாணாம் வாஸுகி: அஸ்மி = மேலும், பாம்புகளில் நான் வாசுகி
பிராகிருத ஆயுதங்களுக்குள் நான் வஜ்ராயுதம் ஆகிறேன்
பசுக்களுக்குள் நான் காம தேனு ஆகிறேன்
பிரஜைகள் உண்டாவதற்குக் காரணமான மன்மதனாகவும் ஆகிறேன்
ஒரு தலைப் பாம்புகளில் வாசுகி ஆகிறேன்-நாகங்களில் -பல தலை -அநந்தன்
———–
அநந்தஸ்சாஸ்மி நாகாநாம் வருணோ யாதஸாமஹம்.—
பித்ருணாமர்யமா சாஸ்மி யமஸ் ஸம்ய மதாமஹம்৷৷10.29৷৷
அநந்தஸ்²சாஸ்மி நாகா³நாம் = நாகர்களில் நான் அநந்தன்
வருணோ யாத³ஸாமஹம் = நீர் வாழ்வோரில் நான் வருணன்
பித்ரூணாமர்யமா = பித்ருகளில் நான் அரியமான்
சாஸ்மி யம: ஸம்யமதாமஹம் = யமனாக இருக்கிறேன் அடக்கி ஆள்பவர்களில்
பலதலைப் பாம்புகளில் அநந்தனாகவும் இருக்கிறேன்
ஜலத்துக்குள் வசிப்பவர்களுக்குள் நான் வருணன் ஆகிறேன்-ஜந்துக்களுக்குள் -தலைவன் சம்பந்த சாமான்யம்
பித்ருக்களுக்குள் அர்யமாகவும் ஆகிறேன்
தண்டிப்பவர்களுக்குள் நான் யமனாகிறேன்-விவசவானின் பிள்ளை யமனும் யமுனையும்
—————
ப்ரஹ்லாதஸ்சாஸ்மி தைத்யாநாம் கால கலயதாமஹம்.—
ம்ருகாணாம் ச ம்ருகேந்த்ரோஹம் வைநதேயஸ்ச பக்ஷிணாம்—-৷৷10.30৷৷
ப்ரஹ்லாத³ஸ்²சாஸ்மி தை³த்யாநாம் = அசுரர்களில் நான் பிரகலாதனாக இருக்கிறேன்
கால: கலயதாமஹம் | = இயங்குபவற்றில் நான் காலமாக இருக்கிறேன்-கால தத்வம் சொல்ல வில்லை இங்கு –
ம்ருகா³ணாம் ச ம்ருகே³ந்த்³ர = மிருகங்களில் நான் சிங்கமாக இருக்கிறேன்
அஹம் வைநதேயஸ்²ச பக்ஷிணாம் = பறவைகளில் நான் கருடனாக இருக்கிறேன்
அஸூரர்களுக்குள் ப்ரஹ்லாதனாகவும் ஆகிறேன்
துன்பம் விளைக்க எண்ணுகிறவர்க்குக்குள் மரணத்தை விளைக்கும் காலன் ஆகிறேன் நான்-கால தேவன்-கால நிர்ணயம் -மிருத்யு தேவதை மரணம் அடைவிப்பவன் -இருவரும் யம கிங்கரர்கள் யமதர்ம ராஜன் தலைவன் —
விலங்குகளுக்குள் விலங்கு அரசனான ஸிம்ஹம் ஆகிறேன்-நம்பெருமாளுக்கு இன்றும் ஸிம்ஹ கதி முதலில் உண்டே –
பறவைகளுக்குள் கருடனாகவும் ஆகிறேன் நான்
————–
பவந பவதாமஸ்மி ராமஸ் ஸஸ்த்ர ப்ருதாமஹம்.—
ஐஷாணாம் மகரஸ்சாஸ்மி ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ —-৷৷10.31৷৷
பவந: பவதாமஸ்மி = தூய்மை செய்பவற்றில் நான் காற்று
ராம: ஸ²ஸ்த்ரப்⁴ருதாமஹம் = ஆயுதம் தாங்கியவர்களில் நான் இராமன்
ஜ²ஷாணாம் மகரஸ்²சாஸ்மி = மீன்களில் நான் சுறா
ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ = ஆறுகளில் நான் ஜாஹ்ணவி (கங்கை )
அசையும் இயல்பு உடையவற்றுள் காற்று ஆகிறேன் நான்
ஆயுதம் ஏந்தியவர்களுக்குள் நான் சக்ரவர்த்தி திரு மகனான ராமன் ஆகிறேன்
நீரில் வாழும் பெரிய மீன்களுக்குள் மகர மீன் ஆகிறேன்-ரோஷம் அதிகமாய் இருக்குமாம் -மின்னு மா மகர குண்டலங்கள் -தங்களுக்குள்ளும் போட்டி -கண்களையும் மீன்களாகக் கொண்டு சண்டை –
ஓடும் நதிகளுக்குள் கங்கை ஆகிறேன் நான்-சகரம் கல்லின ஏரி தானே சாகரம் கடல் -பிந்து சரஸ் ஹிமாலய மலையில் -கங்கை உத்பத்தி -கோவிந்தா கங்கா கீதா -ககாரங்கள் சேர்ந்து பிறவி அறுக்கும் ஓவ்ஷதங்கள் -பரம பாவனத்வம் -ஹூப்ளி ராமானுஜர் கங்கை கலக்கும் இடத்துக்கும் மங்களாசாசனம் -மாயாபூர் அந்த இடம் இன்று -நதிகள் கலந்த பின்பு கங்கை என்றே பெயர் -ப்ரயாக் ராஜ் திரிவேணி சங்கமம்
வில்லைத் தாங்கும் தன்மை ஒன்றே ஒக்கும்–குணம் சொல்வதில் ரீதி பங்கம் வருமே என்னில் -ஆதித்யாதிகள் -ஷேத்ரஞ்ஞன் -சரீரத்துக்குள் ஆத்மா அந்தராத்மா பகவானுடைய சரீரம் -தர்ம பூதமே -வியக்தி சரீரத்துடன் கூடியது -குணம்- விசேஷணம் போல் இங்கும்
——————-
ஸர்காணாமாதிரந்தஸ்ச மத்யம் சைவாஹமர்ஜுந.—
அத்யாத்மவித்யா வித்யாநாம் வாத ப்ரவததாமஹம்—৷৷10.32৷৷
ஸர்கா³ணாம் = படைப்புகளில்
ஆதி ³ரந்தஸ்ச மத்யம் = ஆதி, அந்தம், மத்யம்
சை வா அஹம் = நான் இருக்கிறேன்
அ ர்ஜுந = அர்ஜுனா
அத்யாத்ம வித்யா வித்யாநாம் = வித்தைகளில் நான் அத்யாத்ம வித்தையாய் இருக்கிறேன்
வாத: ப்ரவத³தாமஹம் = பேசுவோரில் நான் வாதமாக இருக்கிறேன்
அர்ஜுனா ஸ்ருஷ்ட்டிக்கப் படும் அவைகளுக்கு காரணமான படைப்பவர்களும்
கடைசியில் அவற்றை அழிப்பவர்களும் இடையில் அவற்றை ரக்ஷிப்பவர்களும் நானே-பீஜம் மேல் சொல்வதால் நிமித்த காரணம் இங்கு
வித்யைகளுக்குள் ஆத்ம பரமாத்மாக்களைப் பற்றிய அறிவை உணர்த்தும் அத்யாத்ம வித்யை நானே
ஜல்பம் விதண்டா வாதம் என்ற மூவகைப்பட்ட வாதங்களைப் புரிபவர்களுடைய வாத வகைகளுக்குள்
நான் தத்வ நிர்ணயத்தின் பொருட்டு ஏற்பட்ட வாதம் ஆகிறேன்-சலம் -ஏமாற்றுவதும் இவற்றுள் உண்டு –
————–
அக்ஷராணாமகாரோஸ்மி த்வந்த்வஸ் ஸாமாஸி கஸ்ய ச.—-
அஹமேவாக்ஷயஸ் காலோ தாதாஹம் விஸ்வதோமுக—৷৷10.33৷৷
அக்ஷராணாமகாரோஸ்மி = எழுத்துக்களில் நான் அகரம்
த்³வந்த்³வ: ஸாமாஸிகஸ்ய ச = எழுத்து புணர்ச்சிகளில் நான் இரட்டைப் புணர்வு
அஹமேவாக்ஷய: காலோ = அழியாத காலம் நான்
தாதாஹம் விஸ்²வதோமுக = அனைத்து திசைகளையும் பார்க்கும் விராட் ஸ்வரூபன் நான்
எழுத்துக்களுக்குள் நான் அகாரம் ஆகிறேன்
சமாஜ சமூகத்தின் உள்ளும்–(அவ்யயீபாவ-தத்புருஷ -பஹு வ்ரீஹி த்வந்த ஸமாஸம்) -த்வந்த்வ சமாசம் ஆகிறேன்
அழிவற்ற காலமும் நானே-அசித் தத்வம் இங்கே தான்
நாலு புறமும் முகங்களை உடையவனாய் அண்டத்தின் உள் இருக்கும் பொருள்களைப்
படைப்பவனான நான்முகனும் நானே(ருத்ரருக்குள் சங்கரன் நான் என்பான் மேலும்-பூவனும் நாற்றமும் நீயே பரிபாடல் -)
விபக்தி லிங்கம் வசனம் -விக்ருதி -ஒருமை பன்மை வேற்றுமை உருபுகள் ஆண் பால் பெண் பால் முதலியவை சொல்லும் –
அவ்யயீபாவ ஸமாஸம் -பூர்வ பத பிரதானம் உப கங்கையில் யாகம் செய்தால் –
உத்தர பத பிரதானம் ராஜ சேவகன் வந்தான் தத் புருஷ
அந்நிய பதார்த்த ப்ராதான்யம் -பீதாம்பர மஞ்சள் ஆடை -தரித்த பகவான் -பஹு வ்ரீஹி
ராம கிருஷ்ண ஆதவ் -இருவரும் வந்தார் -இரண்டுக்கும் பிரதானம்
————
ம்ருத்யுஸ் ஸர்வ ஹரஸ்சாஹம் உத்பவஸ்ச பவிஷ்யதாம்.–
கீர்த்திஸ் ஸ்ரீர்வாக்ச நாரீணாம் ஸ்ம்ருதிர்மேதா த்ருதி க்ஷமா —৷৷10.34৷৷
ம்ருத்யு: = மரணம்
ஸர்வஹரஸ்²சாஹ = அனைத்தையும் அழிக்கும்
முத்³ப⁴வஸ்²ச ப⁴விஷ்யதாம் | = எதிர்க் காலத்தில் பிறக்கும் பிறப்பு நான்
கீர்தி: = புகழ்
ஸ்ரீர்வாக்ச = உயர்ந்த பேச்சு
நாரீணாம் = பெண் குணங்களில்
ஸ்ம்ருதி = நினைவு
மேதா⁴ த் = மேதமை
ருதி: = ஸ்திதி
க்ஷமா = மன்னித்தல் , பொறுமை
அனைவரது உயிரையும் அபஹரிக்கும் ம்ருத்யுவும் நானே-கீழே தர்ம தேவதை கால தேவன் பார்த்தோம் –
உண்டாகின்ற பொருள்களுக்கு உத்பத்தி யாகிற கிரியையும் நானே-கீழே உத்பத்தி ஸ்திதி சம்ஹாரம் காரணம் -நிமித்தம் காரணம் நான் பார்த்தோம் உண்டாவது பொருள் அல்ல -வில்லை ஏந்துதல் தர்மம் போல் கிரியையே நான்
பெண்களுக்குள் தலைமை பெற்றவளான ஸ்ரீ தேவியும் கீர்த்தி (நீளா)தேவியும் வாக் தேவியும்(ஹயக்ரீவர் பத்னியைச் சொன்னவாறு )
ஸ்ம்ருதி தேவியும் மேதா தேவியும் த்ருதி தேவியும் ஷமா தேவியும் நானே-பண்பையே கொள்ள முடியாது -நாரீணாம் விசேஷணம் இருப்பதால்
நித்யர்கள் நித்தியமாக இருப்பது இவனது நித்ய சங்கல்பத்தாலே தானே
————–
ப்ருஹத்ஸாம ததா ஸாம்நாம் காயத்ரீ சந்தஸாமஹம்.–
மாஸாநாம் மார்கஸீர்ஷோஹம் ருதூநாம் குஸுமாகர—৷৷10.35৷৷
ப்³ருஹத்ஸாம ததா = சாமங்களில் நான் பிருகத் சாமம்
ஸாம்நாம் கா³யத்ரீ ச²ந்த³ ஸா அஹம் = சந்தங்களில் நான் காயத்ரீ
மாஸாநாம் மார்க³ஸீ ர்ஷோ அஹம் = மாதங்களில் நான் மார்கழி
ருதூநாம் குஸுமாகர = பருவங்களில் நான் மலரும் இளவேனில்
அவ்வண்ணமே சாமங்களில் ப்ருஹத் சாமமும் நானே
சந்தஸ் ஸூக்களுக்குள் காயத்ரீ சந்தஸ் ஸூவும் நானே
மாதங்களுக்குள் மார்கழி நானே-கேசவ மாதம் –
ருதுக்களுக்குள் வசந்த ருது நானே–புஷ்பித காலம்
ஒரு பாதத்துக்கு 6-எழுத்துக்கள் -காயத்ரி -நான்கு கால்கள் -காயத்ரி மந்த்ரம் மூன்றே பாதங்கள்-ஒவ்வொன்றிலும் எட்டு எழுத்துக்கள்
உஷ்ணுப் -7
அனுஷ்டுப் 8 -கீதா ஸ்லோகங்கள்
பிருஹத் -9-
பங்க்தி 10-தசரதன்
த்ருஷ்டுப் 11
உஷ்ணுக் 12
—————
த்யூதம் சலயதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம்.–
ஜயோஸ்மி வ்யவஸாயோஸ்மி ஸத்த்வம் சத்த்வவதாமஹம்—৷৷10.36৷৷
த்³யூதம் ச²லயதாமஸ்மி = வஞ்சகரில் சூது நான்
தேஜஸ்தேஜஸ்விநாமஹம் |= ஒளி உடையோரின் ஒளி நான்
ஜயோऽஸ்மி = வெற்றி நான்
வ்யவஸாயோऽஸ்மி = உறுதி நான்
ஸத்த்வம் ஸத்த்வவதாமஹம் = உண்மை உடையோரின் உண்மையாக நான் இருக்கிறேன்
வீடு வாங்கி விற்கும் இடங்கள் -நாட்டுக்குள் சண்டை -வியாபாரம் நடக்கும் இடங்கள் போல்வன -வஞ்சனை புரிபவர்களுடைய வஞ்சனைச் செயல்களுக்கு இருப்பிடமானவற்றுள் சூதாட்டம் நானே ஆகிறேன்–பகடைக்காய் அக்ஷம் -சொக்கட்டான் -சூதாட்டம் இரண்டு வகை -பண பங்கம் த்யூதம் லீலா த்யூதம் -ச ஜீவ தூதம் -பல வகைகள் உண்டே
தேஜஸ்ஸை உடையவர்களுடைய தேஜஸ்ஸூ நானே-ஒளியைச் சொல்ல வில்லை பராபவன சாமர்த்யத்தைச் சொன்னவாறு
ஜெயிப்பவர்களுடைய வெற்றி நானே ஆகிறேன்-கொற்றப் புள் ஓன்று -வெற்றிப்போர்
உறுதி கொள்பவர்களின் உறுதி நானே ஆகிறேன்
சத்துக்கள்-சாது கோட்டியுள் கொள்ளப்படுபவர் —விசாலமான மனமுடையவர்களுடைய அத்தகைய மனமுடை நானே ஆகிறேன்-வில்லை ஏந்தும் தன்மை போல் இங்கும் மனமுடைமை
————-
வ்ருஷ்ணீநாம் வாஸுதேவோஸ்மி பாண்டவாநாம் தனஞ்சய–
முநீநாமப்யஹம் வ்யாஸ கவீநாமுஸ்நா கவி—–৷৷10.37৷৷
வ்ருஷ்ணீநாம் வாஸுதே³வோऽஸ்மி = விருஷிணி குலத்தில் நான் வாசுதேவன்
பாண்ட³வாநாம் த⁴நஞ்ஜய: = பாண்டவர்களில் நான் தனஜ்ஜயன்
முநீநாமப்யஹம் வ்யாஸ: = முனிவர்களில் நான் வியாசன்
கவீநாமுஸ²நா கவி: = கவிகளில் நான் -பிருகு மகரிஷி குமாரர் -உஷாணன்
வ்ருஷ்ணீ குலத்தைச் சேர்ந்த யாதவர்களுக்குள் வாஸூ தேவன் ஆகிறேன்-வஸூ பிரத-அவருக்குத் தன்னைத் தந்த என்றும் -தனக்கும் செல்வம் கொடுத்த வேண்டித் தேவர் இரக்க -சேஷ்டிதங்கள் உடன் கூடிய பிள்ளையாய் இருந்த தன்மை –
பாண்டவர்களுக்கும் அர்ஜுனன் ஆகிறேன்–வெளுத்த ஸ்வபாவம் -வெள்ளைப் புரவித் தேர் -ஜிதேந்த்ரியத்வம் இங்கு விவஷிதம் –
முனிவர்களுக்கும் நான் வியாசர் ஆகிறேன்
கவிகளுக்குள் -க்ராந்த தர்சீ -ஊடுருவிப் பார்ப்பவர் -நான் சுக்ராச்சாரியார் ஆகிறேன்
————–
தண்டோ தமயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீஷதாம்.–
மௌநம் சைவாஸ்மி குஹ்யாநாம் ஜ்ஞாநம் ஜ்ஞாநவதாமஹம்৷৷10.38৷৷
த³ண்டோ³ த³மயதாமஸ்மி = ஆள்பவரிடம் நான் செங்கோல் (தண்டம்)
நீதிரஸ்மி ஜிகீ³ஷதாம் = வெற்றியை விரும்புவோர் இடத்தில் நீதி நான்
மௌநம் சைவாஸ்மி கு³ஹ்யாநாம் = மௌனம் நான் இரகசியங்களில்
ஜ்ஞாநம் ஜ்ஞாநவதாமஹம் = ஞானம் உள்ளவர்களில் ஞானம் நான்
வரம்பை மீறுபவர்களை தண்டிப்பவர்களுடைய தண்டனை ஆகிறேன்-பொதுவான தண்டிப்பதைச் சொல்லாமல் -ஸாஸ்த்ர வரம்பு மீறினதால் தண்டிப்பதை சொன்னவாறு –
வெல்ல விரும்புவர்களுடைய வெல்வதற்கு உறுப்பான நீதி யாகிறேன்-மனப் பான்மையைச் சொன்னவாறு –
மறைக்கும் உபாயங்களிலும் மௌனமாகவே ஆகிறேன்
அறிவுடையார்களுடைய அறிவும் நான் ஆகிறேன்–கீழே சேதனர் அறிவு இங்கு உயர்ந்த மோக்ஷம் பற்றிய ஞானம்
————–
யச்சாபி ஸர்வபூதாநாம் பீஜம் ததஹமர்ஜுந.–
ந ததஸ்தி விநா யத்ஸ்யாந் மயா பூதம் சராசரம் —৷৷10.39৷৷
யச் = அவைகள்
ச அபி= மேலும்
ஸர்வபூ⁴தாநாம் = அனைத்து உயிர்களும்
பீ³ஜம் = விதை, மூலம்
தத = அது
அஹம் = நான்
அர்ஜுந = அர்ஜுனா
ந = இல்லை
தத் = அது
அஸ்தி = விளங்குகின்றது
விநா = இல்லாமல்
யத் = அவைகள்
ஸ்யாத் = இருக்கும்
மயா = என்னால்
பூ⁴தம் = உலகில்
சராசரம் = அசைபவையும், அசையாமல் இருப்பவையும்
அர்ஜுனா எல்லாப் பொருள்களுக்கும் ஆங்கு ஆங்கு யாது ஓன்று உபாதான காரணமாக உள்ளதோ அதுவும் நான்
அசைவனவும் அசையாதவனவுமான பொருள்களுள் அந்தர்யாமியான என்னை விட்டுப் பிரிந்து ஓன்று
இருக்குமோ என்று பார்த்தால் அத்தகையப் பொருள் ஒன்றும் இல்லை
ப்ரத்யக்ஷம் அனுமானம் மூலம் அறியும் அனைத்துக்கும் என்பதற்காக இரண்டு உம்மைத் தொகைகள்-ச அபி-
பீஜம் -உபாதானமாகவே இருக்க வேண்டும் – -39 ஸ்லோகம் அங்கு நிமித்த ஸஹ காரி காரணங்களை சொல்லிற்றே
சேதன அசேதனங்களை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மமே ஸ்வேதகேதுவை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்ம்
அரங்கம் ஆளி என் ஆளி
ஸ்ரீ ரெங்க நாத மம நாத
த்ரவ்யம் அல்லாதவற்றையும் இங்கே சொன்னானே என்னில் -அவையும் யாராவது சேதனனை ஆச்ரயமாகக் கொண்டே இருக்குமே -அந்த சேதனன் இவனுக்கு சரீரமே என்றவாறு
——————-
நாந்தோஸ்தி மம திவ்யாநாம் விபூதீநாம் பரந்தப.–
ஏஷ தூத்தேஸத ப்ரோக்தோ விபூதேர் விஸ்தரோ மயா৷৷10.40৷৷
ந அந்தோ அஸ்தி = முடிவு இல்லை
மம் = என்
திவ்யாநாம் = ஒளி பொருந்திய, தெய்வீகத் தன்மை உள்ள
விபூதீநாம் = பெருமைகளை
பரந்தப = எதிரிகளை வெல்பவனே
ஏஷ = இந்த
தூ = மேலும் , அந்த
உத்தே³ஸ²த: = தோராயமாக. ஒரு குறிப்பிட்ட அளவில்
ப்ரோக்தோ = கூறினேன்
விபூ⁴தேர் = பெருமைகளை, வலிமையை
விஸ்தரோ = விஸ்தாரமாக, விரிவாக
மயா = என்னால்
எதிரிகளை வருத்துமவனே (இந்த குணமும் என்னதே தானே )-என்னுடைய மங்களமான செல்வங்களுக்கு எல்லை யில்லை அன்றோ -திவ்யாநாம்-அப்ராக்ருதம் இங்கே இல்லையே -ஆகவே கல்யாணம் -மங்களம்
இது வரையில் நான் சொன்ன செல்வங்களின் விரிவோ என்னில் என்னால்
ஓர் அளவுக்கு வகைப்படுத்திச் செல்வங்களைக் கூறுவதன் மூலம் (ஏதோ சில காரணங்களால் )சுருக்கமாகச் சொல்லப் பட்டது
————-
விடுபட்ட உயந்தவை அனைத்தும் என்னதே என்றும் விடுபட்ட அனைத்துமே என்னதே என்றும் இதிலும் அடுத்ததிலும் சொல்லி நிகமிக்கிறான்
யத்யத் விபூதி மத் ஸத்த்வம் ஸ்ரீ மதூர் ஜிதமேவ வா.—
தத்ததே வாவகச்ச த்வம் மம தேஜோம் ஸ ஸம் பவம்–৷৷10.41৷৷
யத்³யத்³விபூ⁴திமத் = எது எது பெருமை உடையதோ
ஸத்த்வம் = சத்தியமானதோ
ஸ்ரீமத் = அழகு, கம்பீரம் உடையதோ–தானம் தானியங்களையும் சொன்னவாறு
உர்ஜிதம் ஏவ வ = வலிமை உடையதோ-சோர்வடையாமல் –
தத் தத் ஏவ = அவைகளின்
வக³ச்ச = அறிந்து கொள்
த்வம் = உன்
மம = என்
தேஜோம்ऽஸ = ஒளியின், பெருமையின், மகிமையின்
²ஸம்ப⁴வம் = சம்பவிக்கிறது
எந்த எந்த ஜீவராசி தன்னால் நியமிக்கப்படும் செல்வங்களை உடையதாய் உள்ளதோ -ஒளி உடையதாய் உள்ளதோ
மங்களமான கார்யங்களைத் தொடங்குவதில் -சோர்வடையாமல் -ஊற்றமுடையதாய் விளங்குகிறதோ(மூன்று விசேஷணங்கள் )
அந்த அந்த ஜீவராசியை அளப்பரிய சக்தி யுள்ள என்னுடைய-தேஜோம்ऽஸ- நியமன சக்தியின்(பராபிபவன சாமர்த்தியம் -ஸ்வரூப குணம் )
ஒரு பகுதியினால் உண்டானது என்றே அறிவாயாக-பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் –உபய விபூதிக்கும் செங்கோலுடைய எம்பெருமான் அன்றோ
————–
அதவா பஹுநைதேந கிம் ஜ்ஞாதேந தவார்ஜுந.—
விஷ்டப்யாஹமிதம் க்ருத்ஸ்நமேகாம் ஸேந ஸ்திதோ ஜகத்—-৷৷10.42৷৷
அத = மேலும்
வா = அது, அதைப் பற்றி,
ப³ஹுன = பலப் பல
ஏதேந = அதன் மூலம்
கிம் = எதற்கு ?
ஜ்ஞாதேந = அறிவு, அறிவது
த்வா = நீ
அ ர்ஜுந = அர்ஜுனா
விஷ்டப்ய = தாங்குதல், அறிந்த பின்
அஹம் = நான்
இதம் = இதை
க்ருத்ஸ்நம் = முழுவதும்
ஏகாம்ஸே²ந = ஒரு பகுதியில் , ஒரு கூறில்
ஸ்தி²தோ = நிறுத்தி, சூழ்ந்து
ஜக³த் = உலகை
அன்றிக்கே அர்ஜுனா பலவிதமாகச் சொல்லப்பட்ட இந்த ஞானத்தினால் உனக்கு என்ன பயன்
நான் இவ்வுலகு முழுவதையும் என் சக்தியின் ஒரு சிறு பகுதியால் தரித்து நிற்கிறேன்
அதி அல்ப ஏக தேச சங்கல்ப சக்தியால் -ஸமஸ்த வஸ்துக்களையும் -வஹிக்கிறேன்—
யதா உக்தஂ பகவதா பராஷரேண — ‘யஸ்ய அயுத அயுதாஂஷாஂஷே விஷ்வ ஷக்திரியஂ ஸ்திதா.’ (வி0 பு0 1.9.53) இதி.
ஸ்ரீ விஷ்ணு புராணம் -1–9-53 -இத்தை சொல்லும் –
சித் அசித் ஆத்மகம் -காரண கார்ய அவஸ்தை -ஸூஷ்ம ஸ்தூல -அவஸ்த்தைகள் -சமஸ்தமும் அடங்கும்படி ஸ்வாமி கீதா பாஷ்யத்தில் வியாக்யானம்
விபூதியின் எல்லையை அறிய இதுவரை சொன்னதால் பயன் இல்லையே -அறிய முடியாது என்று அறிவதே பலன் என்றபடி
————————-
மஹாத்ம்யம் –
காசியில் ப்ருங்கீ என்னும் ப்ராஹ்மணன் தபஸ்வீ -சாஸ்திரங்கள் கற்றவன் -சிவன் இவன் இடம் அன்புடன் இருக்க -காரணம் என்ன என்று ஒருவன் வினவ
இவன் முன் ஜென்மத்தில் அன்னப்பறவையாய் கறுத்த நிறத்துடன் தாமரைப்பூவை சமர்ப்பிக்க
இதுவே முன் பிறவியில் ப்ரஹ்மசாரியாக இருந்து
அறியாமல் ஆச்சார்யர் தூங்கும் பொழுது திருவடியை இடர
சாபம் பெற்று அன்னமானது
சிவனை அண்டி போக்கிக் கொள்ள பறந்து வர
தாமரை தடாகம் தாண்டி வரும் பொழுது
ஐந்து மலர்களாக பதமினீ என்ற பெண் இருந்து
என் மேல் பறக்க முடியாது -ஆகவே கறுத்து போனாய்
அவள் பூர்வ கதை கேட்க
முன் ஜென்மத்தில் நான் ப்ராஹ்மணப் பெண்
பறவைகளை பிடித்து கூண்டில் அடைத்து விளையாடிக் கொண்டு இருந்தேன்
நாகணை வாய்ப் புள் -ஒன்றை அடைக்க -எனது கணவர்
அதே போல் ஆவாய் என்று சபிக்க
ஆச்சார்ய சீலனாய் -ரிஷி குமாரர்களால் வளர்க்க ப்பெற்று 10 அத்யாயம் கேட்டு தேவ ஸ்த்ரீ ஆனேன்
ஆடை இல்லாமல் குளிக்க-அங்கு துர்வாசர் வர
தாமரை மலர்களால் என்னை மறைக்க
சபித்து இவ்வாறு ஆனேன்
உன்னால் எனக்கும் என்னால் உனக்கும் சாப விமோசனம் கிடைக்கும் என்று
10 அத்யாயம் பாராயணம் பண்ணி
அந்த தாமரை மலரை சிவன் இடம் சேர்த்து சாப விமோசனம் இருவரும் பெற்றார்கள்-
———————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –