திருப்பாவையில் ஆழ்வார்களை திருப்பள்ளி உணர்த்துவது ஸூசகம் –ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் –

திருப்பாவையில் உறங்குமவர்கள் -மத்சித்தா பரர்கள்– வெளியில் இருந்து திருப் பள்ளி உணர்த்துபவர்கள் மத்கதப்ராணா பரர்கள்-
-எல்லே இளம் கிளியே -போதயந்த பரஸ்பரம் பரமான பாசுரம்
பிள்ளாய்ஜ்ஞான விபாக கார்யமான அஜ்ஞ்ஞானத்தால் வருமவை எல்லாம் அடிக் கழஞ்சு பெரும் -இந்த அஜ்ஞ்ஞானம் காரணமாக
பெரியாழ்வார் பிள்ளாய் என்று அழைக்கப் படுகிறார்
தஸ்மாத் ப்ரஹ்மணா பாண்டித்தியம் நிர்வித்ய பால்யேன திஷ்டாசேத்-பிருஹுதாரண்யம் –5-5-1-பரிபூர்ண ஜ்ஞானம் பெற்று
பால்யத்துடன் இருக்க வேணும் அநா விஷ் குர்வன் அந்வயாத்–ப்ரஹ்ம சூத்ரம் -3-4-49- ப்ரஹ்ம வித்யை அதிகரித்தவன்  செருக்கு
கொள்ளாமல் இருக்க வேண்டும் -இதனாலும் பிள்ளாய் -என்றதாயிற்று
புள்ளும் சிலம்பின காண் -இவருக்கும் தொண்டர் அடிப் பொடி ஆழ்வாருக்கும் சேருமே அதனாலே இந்த அடையாளம் மீண்டும் வரும்
புள்ளரையன் -வைனதேயாம்ச சம்பூதம் விஷ்ணு சித்த மஹம் பஜே -த்யான ஸ்லோஹம் -செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த
மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பர் -திருத் தேர் க்ருத்மான் வடிவம்-க்ருத்யம்சமான பெரியாழ்வார்
-புள்ளரையன் உடைய அம்ச பூதர் -கோயில் வெள்ளை விளி சங்கு -கோ இல் பாண்டிய ராஜன் சபா மண்டபம்
-பாண்டியன் கொண்டாட பட்டர் பிரான் வந்தான் என்று ஈண்டிய சங்கம் எடுத்தூத –
வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர்த் திருச் சக்கரம் எனது கையன் -4-1-7- என்றாரே –இவரே பாட்டுக்கு விஷய பூதர்
-என்று வெள்ளை விளி சங்கு சொல் தொடர் ஸூ சிப்பிக்கும்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் முதலில் -பிறங்கிய பேய்சசி முலை சுவைத்து உண்டிட்டு -1-2-5-
நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப் போய்—1-2-11- என்று கள்ளச் சகடம்
கலக்கழிய காலோச்சியதையும் அனுபவிக்கிறார் –வெள்ளத்தரவில் துயில் அமர்த்த வித்தினை உள்ளத்துக் கொண்டு
-பனிக் கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என் மனக் கடலில் வாழ வல்ல -என்றும்
-அரவத் தமளியினோடும் அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து பரவைத்திரை பல மோதப் பள்ளி கொள்கின்ற
பிரானை பரவுகின்றான் விட்டுசித்தன் -என்று சொல்லிக் கொள்கிறார் –முனிவர்களும் யோகிகளும் -பாசுரங்கள் பாடிய முகத்தால்
குணானுபவ நிஷ்டர் -வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிழி அறுத்த தனத்தைக் கொண்டு ஸ்ரீ வில்லிபுத்தூரில் பிரகார கோபுர
மண்டபங்கள் நிர்மாணித்து –கைங்கர்ய நிஷ்டர் –மெள்ள எழுந்து –பெருமாள் நினைப்பூட்ட -எழுந்து அரி என்ற பேர் அரவம்
ஓம் ஹரி சொல்லியே வேதங்கள் ஆரம்பம்

பேய்ப்பெண்ணே -பெருமாள் திருமொழி மூன்றாம் பதிகம் –மையல் கொண்டு ஒழிந்தேன் -நரகாந்தகன் பித்தனே -உன்மத்தன் காண்மினே
-மணவாளன் தன பித்தனே -எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே –பித்தனாய் ஒழிந்தேன் பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே
-தனிப் பெரும் பித்தனாம் குலசேகரன் – ஒன்பதில் கால் சொன்ன பெயர்
நாயகப் பெண் பிள்ளாய் –கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக் கோன் குலசேகரன் —ஆழ்வார்  கோஷ்டியில் நடுநாயகம் –
பெண்ணே பெண் பிள்ளாய் –ஏர் மலர் பூம் குழல் -ஆலை நீள் கரும்பு –மன்னு புகழ் –கோபிகள் தேவகி கௌசல்யை பாவனை உண்டே
தேசமுடையாய் -தேஜஸ் மிக்கு –ஷத்ரிய தர்மம் –கொல்லி நகர்க்கு இறை -கூடல் கோமான் குலசேகரன்
தேவத்வமும் நிந்தையானவனுக்கு ஒளி வரும் ஜனிகள் போலே –பண்டை நாளில் பிறவி உண்ணாட்டு தேசு இ றே -ஆழி யம் கை பேர்
ஆயற்கு ஆளாம் பிறப்பு –உண்ணாட்டு தேசன்றே –கைங்கர்ய அனுரூபமான ஏதேனும் ஆவேனே -என்கிறார்
ஆனைச்சாத்தம் எங்கும் கலந்து கீசு கீசு என்று பேசின பேச்சரவம் -கிருஷ்ணா கிருஷ்ணா -எங்கும் திரு நாம சங்கீர்த்தனம் –மலையாளப் பேச்சு
காசும் பிறப்பும் கல கலப்ப -ஆபரணம் –ஆரம் கெட பரன் அன்பர் கொள்ளார் என்று அவர்களுக்கே வாரம் கொடு குடம் பாம்பில் கை இட்டவன்
-ஆபரண பிரஸ்தாபம் -கை இட்டது உண்டே -குறை சொல்லிய மந்த்ரிகள் கைகளை பேர்த்ததாகவும் கூளலாம்
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவக் கதை -தயிர் கடைய ஒல்லை நானும் கடைவன் -6-2-
நாரணன் மூர்த்தி கேசவனைப் பாட -நிகமத்தில் -வள்ளல் நலம் திகழ் நாரணன் அடிக் கீழ் நண்ணுவரே -மாவினை வாய் பிளந்து உகந்த மாலை –
நீ கேட்டே கிடத்தியோ -ஸ்ரீ இராமாயண சரிதை கேட்ட சரித்ரம்

கோதுகலமுடைய பாவாய் -அழகும் பாத்விரதையும் உள்ளதால் பாவாய் -ஜ்ஞான பக்தி வைராக்யங்கள் அழகு -உன்னால் அல்லால் யாவராலும்
ஒன்றும் குறை வேண்டேன் -களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -கோதுகலமுடைய பாவாய் நம் ஆழ்வாருக்கே பொருந்தும் -க்ருஷ்ணா த்ருஷ்ணாதத்வம் இவோதிதம் -கிருஷ்ணே த்ருஷ்ணா -க்ருஷ்ணச்ய த்ருஷ்ணா –குதுகலமே வடிவாக –எம்பிரானும் என் மேலானே
-ப்ரியோ ஹி ஜ்ஞானி நோத்யர்த்தம் அஹம் ச மம ப்ரிய –எம் பாவை போய் இனித் தண் பழனத் திருக் கோளூர்க்கே —சூழ் வினையாட்டினேன் பாவையே —
எழுந்திராய் -இவர் வீற்று இருப்பதால் —கீழ் வானம் வெள்ளென்று –தஸ்மை நமோ வகுள பூஷண பாச்கராயா-ஆதித்ய ராமதிவாகர அச்யுத பானுக்களுக்கு போகாத உள்ளிருள் நீங்கி சோஷியாத பிறவிக்கடல் வற்றி விகசியாத போதில் கமலம் மலர்ந்தது வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே
கீழ் வானம்மேல் வானம் –மேல் என்ற்றது உரைக்க வல்லார்க்கு வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம்
வானம் மேகம் -தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் -அடியார்க்கு இன்ப மாரியே-
எருமைரஜஸ் தமஸ் குண பிரசுரர்கள் -சிறு வீடு -கைவல்யம் -சிறுக நினைவதோர் பாசம் உண்டாம் –தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்
-இவர் திருவவதரிப்பதற்கு முன்பே கைவல்ய ஐஸ்வர் யார்திகளாகவே இருந்தார்கள்
மிக்குள்ள பிள்ளை-மேம்பட்ட -இவர்களை சிரித்து இருப்பார் ஒருவர் உண்டு இ றே
போவான் போகின்றாரை போவதே பரம புருஷார்த்தம் போவான் வழிக் கொண்ட மேகங்களே -கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ
-கூவிக் கொள்ளை வந்தந்தோ –வீற்று இருந்த –-ஏற்ற நோற்றேர்க்கு -வண் தமிழ் நோற்க நோற்றேன் –-வெம்மா பிளந்தான் தன்னை –
வான நாயகனே அடியேன் தொழ வந்தருளே -இமையோர் தலைவா -அமரர்கள் அதிபதி
ஆவா வென்று -ஆவா வென இரங்கார் அந்தே வலிதே கொல் மாவாய் பிளந்த மனம் -அடியேற்கு ஆவா வென்னாயே –
ஆராய்ந்து -ஆர் என்னை ஆராய்வார் -உம்முடைய குறையும் தீரும் அருள் -மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் அன்றோ

மாமன் மகளே -கமலாமி வான்யாம் கோதாம் -ஸ்ரீ மகா லஷ்மி -யானால் -பார்க்கவீ லோக ஜனனீ ஷீர சாகர சம்பவ –
-ஆண்டாள் ப்ருகு குலத்தில் தோன்றியவள் -திரு மழிசைப் பிரானும் ப்ருகு குலம் -ரிஷி குலத்தில் பிறந்து பிரம்பன் குடியானவர்
ஆண்டாள் ப்ராஹ்மண குலத்தில் ஆவிர் பவித்து ஆயர் குலத்தை ஆஸ்தானம் பண்ணினாள்
தூ மணி மாடத்து -உட் கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்டிற்றே –
சுற்றும் விளக்கு எரிய -ஜ்ஞான விளக்கு -சாக்கியம் கற்றோம் –யான் அறிந்தவாறு ஆர் அறிவார் -என் மதிக்கு விண் எல்லாம் உண்டோ விலை
தூபம் கமழ -பரிமளம் -மறந்தும் புறம் தொழாதவர் –வலத்திருவடி பெருவிரல் கண்ணைத் திறந்து நெற்றிக்கண் திறந்த
-பெரும் தீயைக் கிளப்பி விட்டு புகை சூழப் பண்ணி
துயில் அணை மேல் கண் வளரும் -நாகணைக் குடந்தை –கிடக்குமாதி நெடுமால் –
துயில் அணை மேல் கண் வளரும் மாமானுடைய மகளே -மஹா மகன் -யதோத்தகாரி ஆராவமுத ஆழ்வார்
மாமீர் -இவருக்கு ஞான போதம் அருளிய –பேயாழ்வார் -மாமீர் என்கிறது
கிருஷ்ணா நாம் வ்ரீஹீனாம் நக நிர்ப்பின்னம் –ஊமையோ -செவிடோ அக்ரபூஜை –சிசுபாலா பிரப்ருதிகள் வசையைக் கேளாமல்
அனந்தல் -பரமைகாந்தி -புற விஷயங்களில் நெஞ்சு செலுத்தாமல் -தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழி பட்டும்
பூசித்தும் போக்கினேன் போது என்றும் தொழில் எனக்கு தொல்லை மால் தன்னாமம் -ஏத்த பொழுது எனக்கு மற்று அதுவே போதும் –
மந்திரப் பட்டாளோ -இவர் ஒருவருக்கு தான் பேயாழ்வார் இடத்தில் மந்திரப் பட்டது பிரசித்தம்
மா மாயன் -மாயம் என்ன மாயமே -மாயமாய மாக்கினாய் உன் மாய முற்றும் மாயமே –மாதவன் -மாதவனை ஏத்தாதார் ஈனவரே
வைகுந்தன் -வைகுந்தச் செல்வனார் சேவடி மேல் பாட்டு –

நோற்று -பேயாழ்வார் -திருக்கண்டேன் -மற்ற இருவரும் விளக்கு ஏற்ற -இவரே வாசல் திறவாதார்நாற்றத் துழாய் முடி
-இரண்டாம் பாசுரம்–பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் -அடுத்து -மலராள் தனத்துள்ளான் தண் துழாய் மார்பன் –
-நிகமத்தில் தண் துழாய் தார் வாழ் வரை மார்பன் –நாராயணன் –திருத் துழாய் -கண்ணன் சேர்த்து பாசுரம் உண்டே
நாமம் பல சொல்லி நாராயணா வென்று நாம் அங்கையால் தொழுதும் நன்னெஞ்சே வா மருவி மண்ணுலகம் உண்டு
உமிழ்ந்த வண்டறையும் தண் துழாய் கண்ணனையே காண்க நம் கண்
-கும்பகர்ணன் தோற்றது –அகஸ்த்ய கும்ப சம்பவ -கும்பத்தை ஜன்ம பூமியாக -தஷிண திக்குக்கு தலைவர் அவர் -இவர் தமிழ் தலைவன்
இவரது திருவந்தாதியிலும் –நடுவில் -அவனே இலங்கா புரம் எரித்தான் எய்து –என்றும் -எய்ததுவும் தென் இலங்கை கோன் வீழ
அரும் கலமே -எம்பெருமான் மிதுனம் பெற்ற அருள் -சத்பாத்ரமே -திருக் கண்டேன் –இத்யாதி
தேற்றமாய் வந்து திற -பேய்த் தனமாக வராமல் என்றபடி –

யோநிஜ்த்வம் என்னும் குற்றம் இல்லாத -கோவலன்திருக் கோவலூர் ஸூ சகம் –மூவரில் பொற் கொடி பூதத்தாழ்வார்
கோல் தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே மால் தேடி ஓடும் மனம்
கணம் -வடசொல்லில் சிறிய -வெண்பாவில் பாடி அருளி –முதல் திருவந்தாதி கறவைக் கணம் –
இரண்டாம் திருவந்தாதி சேர்ந்து கறவைக் கணங்கள் -மூன்றாம் திருவந்தாதி சேர்த்து கற்றுக் கறவை கணங்கள் பல
செற்ற திறல் அழியச் சென்று செருச் செய்யும் –
தீர்த்த கரராமின் திரிந்து –என்றார் புற்றரவல்குல்-இடை அழகு —ஞானம் பக்தி வைராக்கியம் -இடையில் பக்தி
அன்பே தகளியா -தொடங்கி–யாமுடைய அன்பு -நிகமித்து
புன மயில் பொழில் இடத்தே வாழும் மயில் இவரும் திருக் கடல் மல்லை -கடி பொழில் சூழ் கடல் மல்லை
சுற்றத்து தோழிமார் -சுற்றம் பொய்கை பேய் ஆழ்வார் தோழிமார் மற்றைய ஆழ்வார்கள்
முகில் வண்ணன் பேர் பாட -உலகு ஏழும் முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் பூம் பாடகத்து உள்ளிருந்தானை ஏத்தும் என் நெஞ்சு
புன மயில் முகில் வண்ணனைத் தானே பாடும்

நங்காய் -வனச மலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே -தாமரைப் பூவில் தோன்றிய பொய்கை யாழ்வார்
நனைத்து இல்லம் சேறாக்கும்பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுத –கண்ண நீர் கொண்டு அரங்கன் கோயில் திரு முற்றம் சேறு செய் தொண்டர் -இவர் இல்லம் பொய்கையும் சேறானது தானே
கனைத்து -முதலிலே அருளிய ஆழ்வார் -அங்கியான நம்மாழ்வாருக்கு அங்கமான இவர் கனைத்த படி
இளம் கற்று எருமை -எருமை மகிஷி -தேவ தேவ திவ்ய மகிஷி -இவரும் தாமரை மலரில் திருவவதரித்து
இளம் கன்றுடைய -இவர் மாத்ரு ஸ்தானம் மற்ற ஆழ்வார்கள் வத்சம்
கன்றுக்கு இரங்கி -வையத்து அடியவர்கள் வாழ அருளிச் செயல் நினைத்து முலை வழியே நின்று பால் சோர -பகவத் குணங்களை நினைத்தவாறே ஹர்ஷம் உள் அடங்காமல் அருளிச் செயல்கள் வெளி வந்த படி
பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி –பொய்கை என்பதால்
திருக் கோவலூர் வாசல் கடை பற்றியதும் ஸூ சகம்
சினத்தினால் –ஸ்ரீ ராம சரிதைவாளரக்கன் நீண் முடியை பாதமத்தால் எண்ணினான் பண்பு -நாமே அறிகிற்போம் நன்னெஞ்சே -மனத்துக்கு இனியானை
இனித் தான் எழுந்திராய் -பழுதே பல பகலும் போயின என்று இழந்த நாளைக்கு கூப்பிடுகிறவனுக்கு உறங்க விரகு இல்லையே
அனைத்து இல்லாதாரும் அறிந்து -அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன்
நல செல்வன் தன்னுடைய கை -நம் ஆழ்வார் உடைய மதுர கவி ஆழ்வார் -நல செல்வன் எம்பெருமானார் தங்கை ஆண்டாள் என்றுமாம்

போது அரிக் கண்ணினாய் -புஷ்பங்களை ஹரிப்பதில் திருஷ்டி கொண்டவர் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் துளபத் தொண்டாய
தொல் சீர் தொண்டர் அடிப் பொடி -தொடையொத்த துளபமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள்
பாவாய் –பதி வரதா சிரோ மணி –அரங்கனுக்கே -சோழியன் கெடுத்தான் காணும்
புள்ளின் வாய் கீண்டானை கண்ணன் ராமன் கீர்த்திமை பாடி -கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை -மா முனி வேள்வியைக் காத்து அவபிரதமாட்டிய வடுதிறல் அயோத்தி எம்மஅரசே அரங்கத்தம்மா -சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான் –
-கற்றினம் மேய்த்த எந்தை கழல் இணை பணிமின் நீரே
பிள்ளைகள் எல்லாம் –பாவைக் களம் புக்கார்இரவியர் –மணி நெடும் தேரோடு இவரோ –அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று சுடர் ஒளி பரந்தன
பள்ளிக் கிடத்தியோ -அரங்கத்தம்மா பள்ளி எழுது அருளாயே
நன்னாளால் மார்கழி கேட்டை திருவவதாரம்
கள்ளம் தவிர்ந்து -சூதனாய் கள்வனாய்கள்ளமே காதல் செய்து -கள்ளத்தேன் உன் தொண்டாய்-பொன் வட்டில் களவு விருத்தாந்தம்
பூம் பொழில் வாசம் -புள்ளும் சிலம்பின குள்ளக் குளிர -குளித்து மூன்று அனலை -ஓம்பும் -இத்யாதி –

நங்காய் குண பூரணை -பாரதந்த்ர்யம் மிக்க திருப் பாண் ஆழ்வார் -லோக சாரங்க முனிவர் தோள்களிலே ஏறிக் கொண்டாரே
நாணாதாய் நாண் அஹங்காரம் செருக்கு இல்லாமல் –அடியார்க்கு என்னை ஆட்படுத்திய விமலன்
நாவுடையாய் -நாவினில் நின்று மலரும் ஞானக் கலைகள்
பாண் பெருமாள் பாடிய தோர் பாடல் பத்தும் பழ மறையின் பொருள் என்று பரவுமின்கள்
புழக்கடை தோட்டத்திலே வாழ்ந்தவர்
கோயில் திரு மஞ்சனக் காவேரி அருகே வாழ்ந்தவர் வாவி -நீர் நிலை
ஒரு வாய் மலர மற்று ஒரு வாய் மூடின படி ஐயோ அபசாரம் பட்டோமே லோக சாரங்கர்
சன்யாசி பிரஸ்தாபம் இவர் சரிதையில்
சங்கிடுவான் சங்கம் பலர் அறியும்படி
எங்களை –எழுப்புவான் -எழச் செய்கை தூக்கிக் கொள்கை
கையினார் சுரி சங்கு அனல் ஆழியார் –கரியவாகிப் –அப்பெரியவாய கண்கள் சங்கோடு சக்கரம் ஏந்திய –பங்கயக் கண்ணானைப் பாட

எல்லே -சம்பாஷனை உண்டே திருமங்கை ஆழ்வார் இரு தோழிகள் பாடும் பாசுரங்கள் நிறைந்தவை
இளம் கிளியே -கிளி போல் மிழற்றி நடந்து –மென் கிளி போல் மிழற்றும் என் பேதையே
வல்லை –ஆசுகவி சித்ர கவி மதுர கவி விஸ்தார கவி
உன் கட்டுரைகள் -வாசி வல்லீர் -வாழ்ந்தே போம் நீரே
நின் திரு எட்டு எழுத்தும் கற்று நாண் உற்றத் உன் அடியார்க்கு அடிமை
மடலூராது ஒழியேன் நான் -உனக்கு என்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ -கடைக்குட்டி ஆழ்வார்
வல்லானை கொன்றானை -கவள யானை கொம்பொசித்த கண்ணன்-நான்கு யானைகள் -தென் ஆனாய் இத்யாதி –
அரட்ட முக்கி அடையார் சீயம் கொற்ற வேல் பரகாலன் மாற்றாரை மாற்று அழிக்க
மாயன் -மாயனைப் பாடிய மாயன் அன்றோ மாயர்கள் நால்வர் நீர் மேல் நடப்பான் நிழலில் ஒதுங்குவான் தோழா வழக்கன் தாள் உஊதுவான்
புத்த விக்ரஹம் கூட வைதிகமாக்கிய மாயம் உண்டே

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: