ஓம் நமோ ராமாநுஜாய
ஸ்ரீ மத் ராமானுஜ சரணவ் சரணம் பிரபத்யே ஸ்ரீ மதே ராமாநுஜாய நம
சர்வ கர்மாணி ஸந்த்யஜ்ய ராமானுஜ இதி ஸ்மர -விபூதிம் சர்வ பூதேப்யோ ததாமி ஏதத் விரதம் மம –
——————————-
நசேத் ராமானுஜேத் யேஷா சதுரா சதுரக்ஷரீ –காம வஸ்தாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஸ
ஸ்ரீ மத ராமானுஜ குரவே நம
வரதார்ய குரோ புத்ரம் தத் பாதாப்ஜ ஏக தாரகம்
ஞான பக்த்யாதி ஜலதிம் வந்தே ஸூந்தர தேசிகம்
பாதுகே யதி ராஜஸ்ய கத யந்தி யாதாக்யயா
தஸ்ய தாசரதே பாதவ் சிரஸா தாரயாம் யஹம்
மகரே ஹஸ்த நக்ஷத்ரே சர்ப்ப நேத்ராம்ச சம்பவம்
ஸ்ரீமத் கூர குலாதீசம் ஸ்ரீ வத் ஸாங்கம் உபாசமஹே
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம உக்திம் அதீமஹீ
யதுக்தயஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்
——————————-
திருமந்திர பிரகரணம்
ஓம் நமோ ராமாநுஜாய —
-இந்த மந்த்ரம் தியாக மண்டபமான பெருமாள் கோயில் –திரு அநந்த சரஸின் கரையிலே அநாதிகாரிகளுக்கு சொல்ல வேண்டாம் என்று ஆணை இட்டு-எம்பெருமானார் ஆழ்வானுக்கு பிரசாதிக்க-
அது தன்னையே தாரகமாக விஸ்வசித்து-தம்மை விஸ்வசித்து இருப்பார்களுக்கு இந்த மந்த்ரம் தன்னையே பிரசாதித்து அருளினார்-
நசேத் ராமானுஜேத் யேஷா சதுரா சதுராஷரீ–காமவஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருசா -ஆழ்வான் பணித்த படி
ஆச்சார்யஸ் ச ஹரி சாஷாத் சரரூபி ந சம்சய -என்றும் –
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து –பெரியாழ்வார் திருமொழி -5-2-8-என்றும்
சகல பிரமாணங்களாலே ஸ்ரீ மன் நாராயணனே ஆச்சார்யன் ஆகையாலே
தஸ்மின் ராமானுஜார்யே குரு ரிதி சபதம் பாதி -பெரியவாச்சான் பிள்ளை அருளிய ஸ்லோஹம்
சத்யம் சத்யம் புனஸ் சத்யம் எதிராஜோ ஜகத் குரு -என்றும்
ச ஏவ சர்வ லோகாநாம் உத்தர்த்தா நாத்ர சம்சய -என்றும்
ஆச்சார்ய பதம் என்று தனியே ஒரு பதம் -அது உள்ளது எம்பெருமானார்க்கே -என்று சொல்லுகிறபடியே
ஆச்சார்யா பூர்த்தி எம்பெருமானாருக்கே உண்டாகையாலே
அகார வாச்யர் எம்பெருமானார் ஆகை சித்தம் –
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களாலே நிரசித்து
ஈஸ்வர சத்பாவத்தை அங்கீ கரிப்பித்து
சகல ஜகத் காரண பூதனான ஈஸ்வரனை உண்டாக்கின படியாலும்
ஜ்ஞாநீது ஆத்மைவ மே மதம் -ஸ்ரீ கீதை -7-18- என்கிற ஈஸ்வர வாக்யத்தாலே
ஈஸ்வரன் சரீரமும் எம்பெருமானார் சரீரியுமாகையாலே
சரீரத்துக்கு உண்டான காரணத்வம்
சரீரிக்கே ஆகையாலும் –ஆதி காரணத்வம் எம்பெருமானாருக்கே -என்று சொல்லலாம் –
அதிகாரி நியமம் இன்றிக்கே-ப்ரஹ்ம ஷத்ரிய வைஸ்ய சூத்ராதிகளையும்
ஸ்திரீ பால வ்ருத்த முக-ஜட-அந்த -பதிர -பங்கு -பசு பஷி மிருகாதிகளையும்
ரஷிக்கையாலே சர்வ ரஷகத்வமும் உண்டு என்க-
உகாரார்தம்—அந்ய சேஷத்வ நிவ்ருத்தியும்-அனந்யார்ஹா சேஷத்வமும்
இவ்விடத்தில் அந்ய சேஷத்வ நிவ்ருத்தி ஈஸ்வர சேஷத்வத்தை சொல்லுகிறது
வடுக நம்பி -அடியேன் -உங்கள் பெருமாளை சேவிக்க வந்தால்
எங்கள் பெருமாள் பால் பொங்கிப் போகாதோ -என்ற வார்த்தையை நினைப்பது
நித்ய சத்ருவாய் இ றே இது இருக்கும்
மன ஜ்ஞானே–மகாரோ ஜீவா வாசக–ஜாத்யேகவசனம்-அனைவரையும் குறித்தாலும்
மகராஸ்து தயோர் தாச -என்று யதீந்திர பிரவணர் -மணவாள மா முனியையே சொல்லும் என்பர் ஞானாதிகர்கள்
நமஸ் -அர்த்தம்–ததீய பாரதந்த்ர்யமே சொல்லும்
த்வத் தாஸ தாஸ கணநா சரமாவதௌ யத் தத் தாஸ தைகரசதா விரதா மமாஸ்து -எதி ராஜ விம்சதி -16-
ஈஸ்வர பாரதந்த்ர்யம் சர்வாத்ம சாதாரணம்-எம்பெருமானார் பாரதந்த்ர்யம் -கதிபய சாதாரணம்-ததீய பாரதந்த்ர்யம் -அசாதாரணம்
எம்பெருமானாருக்கு சேஷம் ஆவதே ஸ்வரூபம்–அவர் திருவடிகளில் கைங்கர்யமே புருஷார்த்தம் –
இவை இரண்டுக்கும் சேர்ந்த உபாயம் எம்பெருமானார் திருவடிகளே-ஸ்வரூபத்துக்கும் பிராப்யத்துக்கும் சேர்ந்து இருக்க வேணுமே பிராபகம்
பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி-அப் பேறு அளித்ததற்கு ஆறு ஒன்றும் இல்லை மற்று அச் சரண் அன்றி -45
ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமனத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்யா அபிமானம் ஒழிய வேறு கதி இல்லையே
இதுவே நமஸ் பதார்த்தம்
ராமானுஜ -பதார்த்தம் -அகார விவரணம் என்பதால்-பர ப்ரஹ்மத்தையே குறிக்கும்
அர்ஜுனன் ஒருவனுக்கே உபதேசித்து அருளிய குறைகள் தீர-ஸ்ரீ பார்த்த சாரதியே ராமானுஜராக வந்து அவதரித்து
பூரிதானமாக எல்லாருக்கும் பிரசாதித்து அருளினார்-
ராமானுஜ–ராமா பதம் ஸ்திரீ வாசகம் ஆகையாலே சூடிக் கொடுத்த நாச்சியாரை சொல்லி
அனுஜ -பதத்தாலே அவளுக்கு தம்பி -சந்த அனுவர்த்தித்வம் நினைவு அறிந்து நடந்ததால்
நாறு நறும் பொழில் -வந்தாரோ நம் கோயில் அண்ணர் -கோதை தங்கை யானாள் எவருக்கோ அவர் என்னவுமாம் –
அனுஜ -பதத்தால் சந்த அனுவர்த்தித்வம் சொல்லுகையாலே-
சேஷோ வா சைன்ய நாதோ வா ஸ்ரீ பதிர் வேதி சாத்விகை-விதர்க்காய மகா ப்ராஞ்ஞை எதிராஜாயா மங்களம்
நித்ய கைங்கர்யரான நித்ய சூரிகளை உடையவர் என்பதாலுமாம் –
அடையார் கமலத்து -33-திவ்ய பஞ்சாயுதங்களும் இவரே -என்பதாலுமாம் –
அநந்த பிரதமம் ரூபம் லஷ்மணஸ்ச தத பரம் பலபத்ரஸ் த்ருதீ யஸ்து கலௌ கஸ்சித் பவிஷ்யதி –
சதுர்த்த பதத்துக்கு பொருள் நாமே -என்று தாமே அருளிச் செய்தார் இ றே-
திரு மந்த்ரமும் இந்த ராமானுஜ மந்த்ரத்தை கர்ப்பத்துக்குள்-வைத்துக் கொண்டு இருக்குமே
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொது அது-எம்பெருமானாருக்கு உண்டான பூர்த்தி ஈஸ்வரனுக்கு இல்லை
ஈஸ்வரன் பூர்த்தியும்-பிராட்டிமார் பூர்த்தியும்-நித்ய சூரிகள் ஆழ்வார் பூர்த்தியும்-ஆச்சார்யர்கள் உடைய சகல பூர்திகளும் எம்பெருமானார்க்கே உண்டு –
—————————-
த்வய பிரகரணம்
ஸ்ரீ மத் ராமானுஜ சரணவ் சரணம் பிரபத்யே ஸ்ரீ மதே ராமாநுஜாய நம –
இந்த த்வய மந்த்ரம்-–மிதிலா சாலக்ராமத்தில் -எம்பெருமானார் வடுக நம்பிக்கு பிரசாதித்து–ஸ்ரீ பாத தீர்த்தமும் திருவடிகளையும்-பிரசாதித்து அருளினார்
திருவடிகளும் ஸ்ரீ பாத தீர்த்த கிணறும் இன்றும் சேவிக்கலாம்
எம்பெருமானார் திருவடிகள் ஸ்வாச்சார்யர் ஆகையாலே-ஸ்வா ச்சார்ய பரதந்திர பரகாஷ்டைதையை-உடையவராய் இருக்கையே-
எம்பெருமானாருக்கு மிகவும் உகந்த திரு உள்ளம் ஆகையாலே-இந்த அனுஷ்டானத்தில் நிற்கையே த்வயார்த்துக்கு தாத்பர்யம்
பிரதம பதம் ஸ்ரீ மத் -சம்பத் வாசகம் –உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் சொல்லுகிறது
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை சொல்லுகிறது ஆகவுமாம் -கைங்கர்ய ஸ்ரீ யை சொல்லுகிறது ஆகவுமாம்-
இத்தனை சொன்னாலும் பிரதம அஷர வாச்யர் –ஸ்ரீ வத்சாங்க ஆச்சார்யர் -கூரத் ஆழ்வான் ஒருவரையே குறிக்கும் என்று -நஞ்சீயர் அருளிச் செய்வர் –
ஆழ்வான் யஞ்ஞோபவீத ஸ்தானம் -என்பது பிரசித்தம் இ றே –
சரண பதம் -திரு மேனியை குறிக்கும்–இங்கே மணவாள மா முனியை குறிக்கும்-
———————————————
சரம ஸ்லோக பிரகரணம்
சர்வ கர்மாணி ஸந்த்யஜ்ய ராமானுஜ இதி ஸ்மர -விபூதிம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் விரதம் மம –
இவ்வர்த்தம் ஞான மண்டபத்தில் -திரு நாராயண புரத்தில்-இரவு காலத்தில்
முதலியாண்டான்-எம்பார்-திரு நாராயண புரத்து அரையர்-மாருதி யாண்டான்-உக்கலம்மாள்
இவர்கள் ஐவருக்கும் அருள-மகா மதிகள் இவர்கள் விஸ்வசித்து-மகா ரகசியம் என்று அருளிச் செய்து போந்தனர் –
இவன் அவனை பெற நினைக்கும் போது பிரபத்தியும் உபாயம் அன்று–இவன் இழவையும்-இவனைப் பெற்றால் ஈஸ்வரனுக்கு உண்டாகும் பிரீதியையும் அனுசந்தித்து
ஸ்தனந்த்ய பிரஜைக்கு வியாதி உண்டானால் அது தனது குறையாக நினைத்து-தான் ஔ ஷத சேவை பண்ணும் மாதாவைப் போலே
இவனுக்குகாக தான் உபாய அனுஷ்டானம் பண்ணி ரஷிக்க வல்ல-பரம தாயளன் ஆன பாகவதன் நிழலிலே -அபிமானத்திலே -ஒதுங்கி
வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டும்-போலே சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் அவன் இட்ட வழக்காக்குகை -என்பதால்
ஆசார்ய அபிமான நிஷ்டனுக்கு பிரபத்தியும் த்யாஜ்யம் என்றது ஆயிற்று-
ராமானுஜ -ஸ்மரண மாத்ரமே அமையும்
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் -வேண்டாவோ என்னில்
மன கரணம் பிரதானம்-மற்ற இரண்டும் இதுக்கு சேஷம்-ஜ்ஞானான் மோஷம்-ராமானுஜ -என்று மனசிலே நினைவு உண்டாகவே அமையும் –
எம்பெருமானார் சம்பந்தம் ஒருவனுக்கு உண்டானால்-அவன் சம்பந்த சம்பந்திகளுக்கும் பரம பதம் சித்தம் -என்று தாத்பர்யம்
ஏதத் விரதம் மம –
ரஷிக்கையே ஸ்வபாவம் உள்ள எம்பெருமானார் அருளிய வார்த்தை-நீங்கள் நிர்பரராய் இருக்க வேண்டும் -என்று அருளிச் செய்து அருளினார்-
——————————-
இந்த ரகஸ்ய த்ரயம் நமக்கு வந்த படி
திருமலை நம்பி -எம்பாருக்கு -விற்ற பசுவுக்கு புல் இடுவார் உண்டோ -என்றதும் மீண்டருளிய பின்பு-
எம்பெருமானாரே எம்பாருக்கு உபதேசித்து அருள
அவர் பட்டருக்கு
அவர் நஞ்சீயருக்கு
அவர் நம்பிள்ளைக்கு
அவர் வடக்குத் திரு வீதிப் பிள்ளைக்கு
அவர் பிள்ளை லோகாச்சார்யருக்கு
அவர் கூர குலோத்தம தாசருக்கு
அவர் திருவாய் மொழிப் பிள்ளைக்கு
அவர் மணவாள மா முனிக்கு
அவர் வானமா மலை ஜீயர்- கோயில் கந்தாடை அண்ணன் –
பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் -அப்பிள்ளை –
பிரதிவாதி பயங்கரம் அண்ணன் -எறும்பி அப்பா –
போரேற்று நைனாராச்சாரியர் -அத்தங்கி சிங்கராச்சார்யர்
முதலான அஷ்ட திக் கஜங்களுக்கும் பிரசாதிக்க
அஸ்மத் ஆச்சார்யர் கோயில் கந்தாடை அப்பன் சுவாமிகள் மூலம் நம்மளவும் வரப் பெற்றோமே –
——————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகள் சரணம் –
ஸ்ரீ முதலியாண்டான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடுக நம்பி திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத் தாழ்வான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply