ஸ்ரீ ராமானுஜர் —960-திரு நக்ஷத்ரம் -பிங்கள வருஷம் -24-4–1977-சித்திரை செய்ய திருவாதிரை –

ஸ்ரீ ராமானுஜர்-ஸ்ரீ கூரத் தாழ்வான் அருளிச் செய்த தனியன் –
யோ நித்யம் -ய-திக்குற்ற கீர்த்தி -பிரசித்தமான வைதிக ஸார்வ பவ்வ்மர் / நித்யம் -எப்போதும் -எந்நாளும்
அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம -வ்யோமோஹத-தத் இதராணி த்ருணாய மேநே-தென்னத்தியூர் கழலிணைக் கீழ் பூண்ட அன்பாளன் -/
அரங்கன் கழல் சென்னி வைத்து தான் அதில் மன்னும் / பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா வஞ்சர்கர்க்கு அரிய இராமானுசன்
-பக்தி விரக்திகள் குடி கொண்ட கோயில் அன்றோ
அஸ்மத் குரோ பகவத –உண்மை நல் ஞானம் உரைத்த -மெய் மதிக் கடல் அன்றோ -மெய் ஞானத்து இராமானுசன்
அஸ்ய தயைக ஸிந்தோ -அஸ்ய ராமாநுஜஸ்ய -உன் தன் பெரும் கருணை -எதிராசர் இன்னருள் -காரேய் கருணை –
கார் கொண்ட வண்மை -குணம் திகழ் கொண்டல் -சேஷ ராமானுஜன்
சரணவ் சரணம் பிரபத்யே -நையும் மனம் உன் குணங்களை யுன்னி -என் நா இருந்து -எம் ஐயன் இராமானுசன் என்று அழைக்கும் கையும் தொழும்/
ஏய்ந்த பெரும் கீர்த்தி ராமானுஜ முனி தன் வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன் –
——————
-பிங்கள வருஷம் –சித்திரை செய்ய திருவாதிரை -சக வருஷம் -939-/-கி பி -1017-/-திருவவதாரம் -120-திரு நக்ஷத்ரம் –
இவரது -16-திரு நக்ஷத்திரத்தில் திருத் தகப்பனார் ஆசூரி கேசவ சோம யாஜியார் -பரம பதம் அடைந்தார் என்பர் –
முதலாம் குலோத்துங்க சோழன் காலம் -1070-முதல் -1118-/ திரு நீற்றுச் சோழன் -என்றும் இவனுக்கு பெயர் /
தில்லை கோவிந்த ராஜர் சந்நிதியை இடித்து மூலவர் விக்ரஹத்தை கடலில் எறிந்தவன் –
தில்லை நடராஜர் சன்னிக்கு பொன் வேய்ந்து -பொன் வேய்ந்த பெருமான் என்ற பெயரும் இவனுக்கு உண்டு –
எம்பெருமானார் -திரு நாராயண புரத்துக்கு -79-திரு நக்ஷத்ரம் -கி பி-1096-சென்று -20-வருஷங்கள் –எழுந்து அருளி இருந்தார் –
-1118-வரை இங்கேயே எழுந்து அருளி இருந்தார் –
பிட்டி தேவன் –1104–1141 —
-1098-பஹு தான்ய வருஷம் -திரு நாராயண பெருமாள் பிரதிஷ்டை–
பேலூர் ஸ்ரீ நாராயணன் திருக் கோயில் ஸ்ரீ முதலியாண்டான் -சக வருஷம் –1039- /கி பி 1017-பிரதிஷ்டை –
கி பி -1116-விஷ்ணு வர்த்தன்-அதிகமான் என்னும் அரசனை -குலோத்துங்க சோழன் இவனே -கங்கபாடி போரில் தோற்கடித்தான் –
மாருதி ஆண்டான் -திருவனந்த புர தாசர் / யதிராஜ தாசர் /மேலாக தாசர் / திருக்குறுங்குடி தாசர் / வஞ்சி புரம் தாசர் / ஸ்ரீ ரெங்கம் பட்டர் / விஷ்ணு வர்த்தன்
-ஆகிய எழுவருக்கும் ஸ்வாமி தானே திரு நாராயண புரத்தில் ஓலைச் சுவடியில் ஸ்ரீ வைஷ்ணவ ஆஞ்ஞா பத்திரிகை எழுதி அருளி கொடுத்துள்ளார்
–1118-வருஷம் குலோத்துங்கன் கழுத்தில் புண்ணாகி புழுத்து மாண்டான்
அதன் பின்னே ஸ்ரீ ராமானுஜர் மீண்டும் ஸ்ரீ ரெங்கம் எழுந்து அருளினார் –
அவன் மகன் விக்ரம சோழன் அகளங்கன் -என்றும் இவனுக்கு பெயர் –தனது தந்தை செயல்களுக்கு வருந்தி –
-ஸ்ரீ ராமாயணமும் திருவாய்மொழியும் உள்ளவரை வைஷ்ணவம் அழிவே அழியாது என்றான்
எம்பெருமானார் இவனுடைய ஆதரவால் மீண்டும் இடிந்த கோயில்களை கட்டி அருள -இன்றும் அகளங்கன் திருச் சுற்று உண்டே –
ஸும்ய வருஷம் –கி பி -1130-கட்டி தேவ யாதவ ராயன் -என்பவன் ஆதரவுடன் எம்பெருமானார் ஸ்ரீ கோவிந்த ராஜர் உத்சவரை பிரதிஷ்டை செய்து அருளினார் –
முன்பே இங்கே ஸ்ரீ பார்த்த சாரதி பெருமாள் எழுந்து அருளி இருந்தார் –

முதல் குலோத்துங்க சோழன் -1070- -1118-/ விக்ரம சோழன் -1118–1123-/ இரண்டாம் குலோத்துங்க சோழன் -1123–1146-/ கருணாகர தொண்டைமான் -1111-/

—1047-/-1050-பஞ்ச சம்ஸ்காரம் -மதுராந்தகம் -ஸ்ரீ பெரிய நம்பி –/ ராமானுஜ -தாஸ்ய திருநாமம் -ஸ்ரீ -பெரியநம்பி சாதித்து அருளினார்
ஸ்ரீ யதிராஜர் /ஸ்ரீ லஷ்மண முனி -சந்யாச ஆஸ்ரமம் ஸ்ரீ காஞ்சி / ஸ்ரீ ரெங்கம் எழுந்து அருளியது
-1120-/-1125-ஸ்ரீ கத்ய த்ரயம் -சாதித்து நமக்காக சரணாகதி அனுஷ்டானம் –
தஞ்சம்மா திருக்கல்யாணம் -16-திரு நக்ஷத்திரத்தில் / சந்யாச ஆஸ்ரமம் -32-திரு நக்ஷத்திரத்தில் /
–40–90-ஆக -50-வருஷங்களில் பாதி ஸ்ரீ ரெங்கம் -பாதி திக் விஜயம் செய்தார்
ஆதி சங்கரர் -300-வருஷங்களுக்கு முன் அவதாரம் /
ஸ்ரீ ரெங்கத்துக்கு முதலில் ஸ்வாமி -25-திரு நக்ஷத்ரம் -ஆளவந்தார் உடைய சரம விமலா திவ்ய மேனி தர்சனம் கண்டு திரும்பினார் –
ஆளவந்தார் 125-திருநக்ஷத்ரம் -917-தொடங்கி -1042-வரை /-917- தாது வர்ஷ திருவவதாரம் /
கோவிந்த ராஜர் -பிரதிஷ்டை -பங்குனி உத்தரம் -சௌம்ய வருஷம் -1130-ஸ்வாமிக்கு -113-திரு நக்ஷத்ரம் -கத்தி தேவா அரசன் உதவியுடன் /

ஆக -கி பி -1017-பிங்கள வருஷம் திருவவதாரம் -சித்திரை சுக்ல பக்ஷம் பஞ்சமி வியாழக்கிழமை -திருவவதாரம்
-8-திரு நக்ஷத்ரம் உபநயனம் -/-16-திரு நக்ஷத்ரம் – திருக் கல்யாணம் /-25-வருஷம் திக் விஜயம் /-110-திரு நக்ஷத்ரம் ஸ்ரீ கோவிந்த ராஜர் பிரதிஷ்டை /
கிபி –1096-மேல் நாடு எழுந்து அருளும் பொழுது –79-திரு நக்ஷத்ரம் –1118-வரை -இருந்து /-22-வருஷங்கள் –
–1098-பஹுதான்ய வர்ஷம் -திரு நாராயணன் பிரதிஷ்டை /-81-திரு நக்ஷத்ரம்
-1117-ஹேவிளம்பி வருஷம் -பஞ்ச நாராயணர்கள் பிரதிஷ்டை -கேசவ நாராயணன் /கீர்த்தி நாராயணன் /வீர நாராயணன் /விஜய நாராயணன் /ஸ்ரீ லஷ்மி நாராயணன் -தொண்டனூர்
-1118-ஸ்ரீ ரெங்கம் திரும்புதல் /–101-திரு நக்ஷத்ரம்
–1130-ஸும்ய வருஷம் -திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜன் பிரதிஷ்டை –113-திரு நக்ஷத்ரம்
–1137-பிங்கள ஆண்டு மாசி மாசம் – திரு நாடு அலங்கரித்தல் –120-திரு நக்ஷத்ரம் –

தீர் லப்தா –தகாரம் -ஒன்பது / லகாரம் மூன்று / தகாரம் ஒன்பது -939-/ சக ஆண்டு -78-கூட்டி 1017-புத்தி ஏற்பட்டது –
தர்மோ நாஷ்டா -1137-/ தகாரம் ஒன்பது -மகாரம் ஐந்து -நகரம் -பூஜ்யம் /டகாரம் ஓன்று –9501-/ மாற்றி -1059 -78- கூட்டி 1137–

மகா காருணீகர் திரு குருகை காவல் அப்பன் திரு குமாரர் -திருக் குமாரர் -வரத விஷ்ணு நடாதூர் அம்மாள் -ஒரு மருமகன் –
மாசி சுக்ல பக்ஷம் தசமி சனிக்கிழமை -எம்பார் மடியில் திருமுடி வைத்து -வடுக நம்பி மடியில் திருவடி வைத்து –தன்னுடைச் சோதி எழுந்து அருளி
பசுபதி கோயில் -தஞ்சாவூர் ஐயம்பேட்டை -அருகில் பெரிய நம்பி ஆச்சார்யர் திருவடி அடைந்த தேசம் –

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராயாகி லாத்மநே
ஸ்ரீ மதே நிர்மலா அனந்த அதன்வதே விஷ்ணு வேதமே –ஸ்ரீ வேதாந்த சாரம் மங்கள ஸ்லோகம் –

ஸ்ரீய காந்த அனந்தோ வர குண கணை காஸ் பதவபு
ஹதா சேஷா வத்ய பரம கபதோ வாங்மனசயோ
அபூமிர் பூமிர்யோ தனஜனத்ருசாமதி புருஷோ
மனஸ்தத் பாதாப்ஜே பரிசரண சக்தும் பவதுமே –ஸ்ரீ வேதாந்த தீபம் மங்கள ஸ்லோகம்
—————-
ஸ்ரீ பாஷ்ய ரஸ அனுபவம் -ஸ்ரீ உ. வே அண்ணங்கராச்சார்யர் ஸ்வாமிகள் –

அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பக்தி ரூபாபன்ன ஞானம் -எம்பெருமான் பக்கல் ஸ்ரீ பாஷ்யகாரர் விரும்புவது மேல் எழுந்த பொருள் –ஐந்து விசேஷணங்கள்
சகல லோகங்களையும் படைத்து அளித்து துடைப்பத்தை லீலையாக கொண்டவன்
தன்னை வணங்கும் வெவ்வேறு வகைப்பட்ட பிராணி சமூகங்களுக்கும் முக்தி அளிக்கும் ரக்ஷணத்தை விரதமாக கொண்டவன்
வேதாந்த விழுப் பொருளின் மேல் இருந்த விளக்கு —வேதாந்தங்களில் மிக விளங்கு அருளுபவன்
ஸ்வரூபத்தாலும் திருக் குணங்களாலும் மிக பெரியவன் -திரு மகள் கொழுநன் -இத்தகைய பரம புருஷன் மதி நலம் அருள வேண்டும் என்ற பிரார்த்தனை –

நம்மாழ்வார் பரமாக -மேல்
அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே-
ஆதி -காரண பூதனான எம்பருமான் உடன் லீலா ரசம் அனுபவிக்கிறார் ஆழ்வார்
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பி -/ விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை —
அன்றிக்கே -அகிலம் -எல்லாமே எம்பெருமானாக கொண்ட ஆழ்வார்
-உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் -இதுவே முக்கிய யோஜனை
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே-
மந்த்ர ரத்ன பிரகிரியையாலும் / அ நதிக்ரமணீயம் ஹி சரண க்ரஹணம் -என்கிற நியாயத்தாலும் -ரக்ஷண பாரத்தை திருவடிகளே வஹிக்கும்
திருவடிகள் தானே ஸ்ரீ சடாரி -ஸ்ரீ சடகோபன் -ஜெகதாம் அபி ரஷனே த்ராயணாம் அதிகாரம் மணி பாதுகே வஹந்த்யோ–ஸ்ரீ பாதுகா சகஸ்ரம் -ப்ரபாவ பத்ததி -42-
ஸ்ருதி சிரஸி விதீப்தே
உபநிஷத் -தத் விப்ராஸோ விபன்யவோ ஜாக்ர்வாம்சஸ் சமிந்ததே -என்று ஆழ்வாரை சொல்லுமே
விப்ராஸ -விப்ரா -நசூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா-என்கிறபடியே விப்ரத்வ சித்தி பெற்றவர் ஆழ்வார்
வினன்யவ-ஸ்துதி கர்த்தாக்கள் -தேவில் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வத் கவிஞ்ன்-பாவில் சிறந்த திருவாய்மொழி பகற் பண்டிதனே –
ஜாக்ர்வாம்சஸ் -கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே -உறக்கம் அற்று இருப்பவர் தானே ஆழ்வார்
அன்றிக்கே
ஸ்ருதியாம் தீப்தே ஸ்ருதி சிரஸி விதீப்த-என்று கொண்டு ஸ்ருதி -திருவாய்மொழி -அதில் தீப்தர் -ஆழ்வார்
-பதிகம் தோறும் குருகூர்ச் சடகோபன் -என்று விளங்குபவர் அன்றோ
திருவாய்மொழி முடிவில் அனுசந்திப்பதால் ஸ்ருதி சிரஸி–அதிலே விசேஷண தீப்தர் ஆழ்வார்
ப்ரஹ்மணி-
ஸர்வத்ர பிருஹத்த்வ குண யோகேன ஹி ப்ரஹ்ம சப்த -புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என் செவியின் வழியே புகுந்து என்னுள்ளாய்
அவிவின்றி யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
எம்பெருமான் ப்ரஹ்மம் -ஆழ்வார் பர ப்ரஹ்மம் என்பதையே பரஸ்மின் ப்ரஹ்மணி -என்கிறார் இங்கும் –
ஸ்ரீ நிவாஸே -பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –
சது நாகவர ஸ்ரீ மான் / அந்தரிக்ஷத கத ஸ்ரீ மான் / லஷ்மனோ லஷ்மி சம்பன்ன /
-கைங்கர்ய ஸ்ரீ ஆழ்ந்த ஆழ்வார் இடமே கைங்கர்ய சரியை பிரார்த்தித்து பெறுவோம் –
——————————–
ஜீவாத்வைதம்
ஸ்வ ஞானம் ப்ராபக ஞானம் ப்ராப்ய ஞானம் முமுஷூபி-ஞான த்ரயம் உபாதேயம் ஏதத் அந்நியம் நகிஞ்சன –
தஸ்ய ஆத்ம பரதேஹேஷூ சதோபி ஏகமயம் யத் விஞ்ஞானம் பரமார்த்தோஸு த்வைதிந அதத்ய தர்சின-
ஜடாபாரதர் ஆத்ம பரதேஹேஷூ -என்று ஒறுமையிலும்
இதம் சரீரம் கௌந்தேய க்ஷேத்ரம் இத்யபி தீயதே -ஏதத் ய வேத்தி தம் ப்ராஹூ ஷேத்ரஞ்ஞ இதி தத்வித –
ஷேத்ரஞ்ஞம் சாபி மாம் வித்தி சர்வ க்ஷேத்ரேஷூ பாரத –ஸ்ரீ கீதை -13-1 /2-
சர்வ க்ஷேத்ரேஷூ -பன்மை -ஷேத்ரஞ்ஞன் -ஒருமை
நத்வேவாஹம் ஜாதி நாசம் நத்வம் நேமே ஜநாதிப-2–12-என்று
அஹம் த்வம் இமே -பிரித்து பல ஆத்மாக்களாக சொல்லி
ஒன்றே என்ற தெளிந்த அறிவு -இரண்டாக அறிபவர் பேத ஞானம் உள்ளவர்கள்
ஐததாத்ம்யம் இதம் சர்வம் ச ஆத்மா தத் த்வம் அஸி ஸ்வேதகேதோ
த்வைத சித்தாந்திகள் -அதைவ மஸி ஸ்வேதகேதோ என்று பிரித்து ஆத்ம பரமாத்மா பேதத்தை நிர்வஹிப்பர்
சரீரம் க்ஷேத்ரம் -ஜீவன் ஷேத்ரஞ்ஞன் -ஈஸ்வரன் -மாம் –சாமாநாதி கரணமாக பேசி விசிஷ்டாத்வைதம்
தர்சனம் பேத ஏவ ச -தேவ பெருமாள் –
நித்யோ நித்யா நாம் சேதனச் சேதநா நாம் ஏகோ பஹு நாம் யோ விததாதி காமான் தம் ஆத்மஸ்தம் யே அநு பஸ்யந்தி தீரா தேஷாம் சாந்தி ஸாஸ்வதீ நேத்ரேஷாம்-ஸ்ருதி
நித்யாநாம்– சேதநாநாம் -பஹு நாம் -பன்மையில் ஜீவாத்மாக்களை சொல்லி நித்ய சேதன ஏக -என்று பரமாத்மாவை சொல்லிற்று
நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -மம சாதரம்யம் ஆகதா -ஐக்கியம் பேச வில்லை –
ஜீவர்கள் நித்யர்கள் -அணுக்கள் -ஞான ஸ்வரூபங்கள் -ஞான குணாக்கர்கள் -பகவத் சேஷ பூதர்கள் —
இப்படி வேற்றுமை அற்று இருத்தல் பற்றி ஜீவாத்வைதம் -பிரகாரத்வைதம் -பிரகாரானே அத்வைதம் -பிரகாரத்வைதம் -பிரகாரங்களால் வந்த ஒற்றுமை -என்றவாறு –
—————————————
இருளை போக்கும் ஆதித்யன் —
அஞ்ஞானத்தை அனுஷ்டானத்தால் போக்கும் ராம திவாகரன்
உபதேசத்தால் ஆந்தரமான அந்தகாரத்தை போக்கிய அச்யுத பானு
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -வகுள பூஷண பாஸ்கரர்
லோக திவாகரர் கலியன்
பாப த்வான் தஷயாயச ஸ்ரீ மான் ஆவிர்பூதவ் ராமானுஜ திவாகர –
சாஷாத் ஆதி சேஷ அம்ச புத்தர் -நம் ராமானுஜன் -சேஷ ராமானுஜன் –
தஸ்மை ராமாநுஜார்யாய நம பரம யோகிநே -ய ஸ்ருதி ஸ்ம்ருதி ஸூத்ராணாம் அந்தர் ஜ்வரம் ஆஸீஸமத் –
-தன் மத அநு சாரேண-பூர்வர்கள் திரு உள்ளபடியே வியாக்யானம்
சேமுஷீ பக்தி ரூபம் -மதி நலம் -பக்தி ரூபா பன்ன ஞானம் –
தத்வம் ஏகோ ஹரி நாராயண பர -த்யேயோ நாராயண சதா -சர்வ ஸ்ருதிஷூ அநு கதம்
ஞான -தர்சன -ப்ராப்திகளுக்கு –பக்தி உபாயம் -சாஸ்திர சித்தம் –
தமேவ வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயனாய வித்யதே –என்று -தமேவ விதித்வா-என்றும் உபநிஷத்துக்களில் சொல்லப் பட்ட ஞானத்துக்கும்
பக்த்யாது அநந்யயா சக்யா –என்று ஸ்ரீ கீதையில் சொல்லிய பக்திக்கும் சாமஞ்ஞஸ்தையைக் காட்டும் வகையில் ஸ்வாமி வியாக்யானம் –

-545-ஸூ த்ரங்கள் / சங்கரர் -555-/ மாதவர் –564-
ந இஹ நாநாஸ்தி கிஞ்சன / ம்ருத்யோஸ் சம்ருத்யுமாப் நோதி ய இஹ நா நேவ பஸ்யதி
ஸத்கார்ய வாதம் -தத் அந்நயத்வம் –ஸ்வம் இல்லாமல் ஸ்வாமி கிடையாதே -ப்ரஹ்மம் காரணம் / சித்துக்களும் அசித்துக்களும் கார்யம்
-ஸ்வரூப அந்யதா பாவம் அசித்துக்களுக்கும் / ஸ்வ பாவ அந்யதா பாவம் சித்துக்களும்
ஸ்வாமி -ஆதாரம் -நியந்தா -அசேஷமும் சேஷமாய் கொண்ட சேஷி -பிரகாரி -சரீரி -நீ -உன்னை தவிர வேறு ஒருவரும் இல்லையே
ஸ்வ சஜாதீய த்வதீய ராஹித்யம் உள்ளதாய் -ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணமாய் -ஸ்வ தந்திரனாய் -விசேஷயமாய்-பிரகாரியாய்
-சகல சேதன அசேதனத்தையும் தனக்கு பிரகாரமாகக் கொண்டுள்ளவன் பரமாத்மா –
தண்ட குண்டலங்கள் போல் அன்றிக்கே வஸ்த்ரத்தின் வெண்மை போலே பிரிக்க முடியாத -பிரகார பிரகாரி பாவம்
குருகூர் அதனுள் பரன் திறம் அன்றி மற்று இல்லை -இது தான் பிரகார்யத்வைதம் –ப்ரஹ்மாத்வைதம் –
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு -திரு மழிசை ஆழ்வார் என்றும்
வேணுர் அந்தர விபேதேந பேத -என்றும் -ஷட் ஜாதி சம்ஜித-த்வைதிந அதத்ய தர்சின –என்றும் ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகங்கள் –
வேணுவின் த்வாரங்கள் வழியே ஒரே காற்று -ஆறுவிதம் –
பகவத் சேஷத்வம் -ஏக ஆகாரம் -வைசிஷ்ட்யம் –
வித்யா விநய சம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநீ ஸூநிசைவ ஸ்வ பாகேச பண்டிதா சம தர்சின –ஸ்ரீ கீதையும் இதையே சொல்லும் –
இப்படி ஜீவாத்வைதம் ஆகிற ப்ரகாரத்வைத விஷயமாய் -எம்பெருமானார் -பூர்வாச்சார்யர்கள் திரு உள்ளக் கருத்து –
———————
ஸ்ரீ கீதா சாரம் – ஸ்ரீ உ வே -வேளுக்குடி ஸ்வாமிகள் –
சர்வ உபநிஷதோ -காவோ தோக்தா கோபால நந்தன –பார்த்தோ வத்சோ சுதீர் போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத் –ஸ்ரீ கீதை
-ஏகம் சாஸ்திரம் தேவகி புத்ர கீதம் -தத்வ உபதேசம் –
மத்த பரதரம் நான்யத் கிஞ்சிதஸ்தி தனஞ்சய –தானே மேலான தத்வம் பரம் பொருள் –
ஸ்வ தர்ம ஞான வைராக்ய ஸாத்ய பக்தி ஏக கோசர நாராயண பர ப்ரஹ்ம கீதா சாஸ்திர சமீரித -ஸ்ரீ கிருஷ்ணனாய் திருவவதரித்த
ஸ்ரீ மன் நாராயணனே கீதையில் வர்ணிக்கப் பட்ட பரம் பொருள் –
வேதன உபாசன சேவா த்யா நாதிகள் என்று சொல்லுமது ஸாத்ய சாதன பக்தியாக சாஸ்திர சித்தம் –சாதன பக்தி பரமாக ஸ்ரீ கீதா சாஸ்திரமும்
சரம ஸ்லோகம் ஸ்வ தந்திரமான பிரபத்தியே -அங்க பிரபத்தி இல்லை என்பதை கத்ய த்ரயத்திலும் வெளியிட்டு அருளினார் எம்பெருமானார்
கீதையின் செம்மைப் பொருள் தெரியப் பாரினில் சொன்ன இராமானுசன் -என்று கொண்டாடுகிறோம் –
தாத்பர்ய சந்திரிகையில் ஸ்ரீ தேசிகனும் -யதி பரிப்ருடோ யத்கீதா நாமதர்சய தஞ்சஸா -நிகம் பரிஷன் நேதீயாம் சம் நிரா மயமாசயம் –
ஜனன பதவீ யாதாயாத ஸ்ரமாபஹாரம்தியம் -ஜநயது சமே தேவ -ஸ்ரீ மான் தனஞ்சய சாரதி –ஆழ்வார் -ஸ்ரீ மன் நாத முனிகள்
உபதேச பரம்பரையா வந்த செம்மை பொருள்கள் அன்றோ –
-18-நாள் போர் -18-அத்தியாயங்கள் -அவாப்த ஸமஸ்த காமனும் ஆச்சார்ய பாதத்தை ஆசைப் படுகிறான் –
முதல் ஷட்கம் -கர்ம காண்டம் /நடுவில் -உபாசன ஷட்கம் /கடைசி ஞான ஷட்கம் /-என்பர் சிலர்
ஆனால் முதல் ஷட்கத்திலே ஞான உபதேசம் உண்டே -உபாசன ரூபமான ஞானமே உயர்ந்தது என்பதே நம் சித்தாந்தம் –
பூர்வ சேஷ அந்திமோதிதர -என்பர் சங்க்ரஹத்தில்
கட உபநிஷத்தில் -3-வல்லியோடே கூடிய முதல் அத்தியாயத்தில் சித்த அசித் ஈஸ்வர தத்வ த்ரய விவேகத்தை செய்து கர்ம ஞானங்களை அங்கமாக கொண்ட
உபாசன ரூப பக்தி யோகத்தை மோக்ஷத்துக்கு சாதனமாக உபதேசித்து -இரண்டாம் அத்தியாயத்தில் கீழ் சொன்ன அர்த்தங்களை விளக்கினால் போலே இங்கும்
கீழ் இரண்டு ஷடகங்களில் சொன்ன அர்த்தங்களை விளக்கி அவைகளுக்கு உபயுக்தமான வற்றையும் காட்டா நின்றது
அந்திம ஷட்கம் என்பதே பரமாச்சாரியார் திரு உள்ளம் -அந்த கட்டளையிலே ஸ்ரீ கீதா பாஷ்ய நிர்ணயம் –

1-அர்ஜுனன் விஷாத யோகம் -கண்ணன் யோகங்களை உபதேசிக்க காரணமே இது தானே -துரியோதனன் சோகத்துக்கு அர்ஜுனன் சோகத்துக்கு வாசி உண்டே –
அபர்யாப்த்தம்-ஸ்லோகத்துக்கு-ஸ்ரீ பாஷ்யம் –துர்யோதன-ஸ்வயம் ஏவ பீமாபி ரஷிதம் பாண்டவஞ் நாம் பலம் ஆத்மீயம் ச பீஷ்மா
பிரஷிதம் பலம் அபீவீஷ்ய ஆத்ம விஜயே தஸ்ய பலஸ்ய பர்யாப்த்ததாம் ஆசார்யாய நிவேத்யாந்தர் விஷன்னோபவத் –
ஆசூரத் தன்மை யால் வந்த சோகம் துரியோதனனுக்கு / தெய்வத் தன்மையால் வந்த சோகம் அர்ஜுனனுக்கு –
தெய்வ சம்பத்தை உடையவனாய் -போகங்களில் விரக்தி உடைய முமுஷு தானே ஆத்ம ஞான உபதேச பாத்திரம் ஆவான்
கீதா உபதேசம் பெற அதிகார பூர்த்தி முதல் அத்தியாயத்தில் சொல்லப் பட்டது -என்றவாறு –
2–நத்வேவாஹம் ஜாது நாசம் -சர்வேஸ்வரன் கிருஷ்ணன் நான் -நீ -இவர்கள் -ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதத்தையும் -ஜீவ பர பேதத்தையும் குறித்து –
தர்சனம் பேத ஏவ ச -என்பதையே மெய் மதிக் கடல் -பர மதத்தைத்தை நிரசித்து ஸச் சம்ப்ரதாயம் -அருளிச் செய்கிறார் –
3–ஞான யோகத்துக்கு அதிகாரிகளானாலும் சிஷ்டர் உலக நன்மைக்காக கர்மா யோகம் அனுஷ்ட்டிக்க வேண்டும் –சயத பிரமாணம் குருதே லோகஸ் தத் அநுவர்த்ததே –
மேலையார் செய்வனகள் வேண்டுவன -நாச்சியார் ஸ்ரீ ஸூ க்திகளைக் கொண்டே பொருள் பணித்தார்
4–உள்ளுவார் உளுத்து உடன் இருந்து அறிபவன் ஆகையால் -ஜென்ம கர்ம ச மே திவ்யம் -தானே கல்ப ஆதியில் சூரியனுக்கு உபதேசித்ததையும்
திரு வவதார ரகசியத்தையும் -காலம் -காரணம் -பிரயோஜனம் -திவ்யம் -இச்சையால் அவதரிப்பதையும் அருளிச் செய்கிறான்
-அவதார ரகஸ்யம் உள்ளபடி அறிந்தவனுக்கு மறு பிறவி இல்லை -அவன் என்னையே அடைகிறான்
-பிறப்பிலியான நான் பிறந்த பின்பு இவர்களும் பிறக்க வேண்டுமோ -என்கிறான் –
5–அத்தியாயத்தில் கர்மா யோகமே ஞான யோகத்தை விட சீக்கிரம் ஆத்ம சாஷாத்காரம் யோகம் உண்டாக்கும் என்று சிறப்பை அருளிச் செய்கிறான்
6–யோக ப்ரஷ்டனுக்கும் நல் கதி நாளடைவில் உண்டு -என்று சொல்லி -யோகம் அனுஷ்ட்டிக்கும் க்ரமத்தையும் உபதேசித்து
-கடைசியில் கைவல்ய ஞான யோகியை காட்டிலும் தன்னை அடைய வேண்டிய பக்தியை செய்யும் ஞான யோகியே சிறந்தவன் —
பக்தனைக் காட்டிலும் கேவல ஞானி சிறந்தவன் என்று மதிக்கும் மதம் கண்ணன் திரு உள்ளத்துக்கு மாறு படும் என்றவாறு
முதல் ஷடகத்தில் கர்மா ஞான யோகங்களை பரக்க உபதேசித்து அருளுகிறார் –
கர்ம யோகஸ் தபஸ் தீர்த்த தான யஞ்ஞாதி சேவனம்–ஞான யோகோ ஜிதஸ் வாந்தை பரிசுத்தாத்மனி ஸ்திதி
-பக்தி யோக பரை காந்த்ய ப்ரீத்யா த்யாநாதி ஷூ ஸ்திதி –என்று மூன்று யோகங்களின் ஸ்வரூபத்தையும் அருளிச் செய்கிறார் –
நடு ஷட்கம் சாரமானது –
7–தன்னிடம் பெற்று செல்லும் மூன்று வகை அதிகாரிகளும் உதாரண -என்றும் ஞானி தன் ஆத்மா -மம மதம் என்றும் அருளிச் செய்கிறான் –
ஞானிகள் தன்னை விட்டு க்ஷணம் காலமும் பிரியாமல் இருக்குமா போலே தானும் பிரிய மாட்டாமல் -அதனால் தாரகன் -ஆத்மா என்கிறான் –
ஞானி -பகவத் சேஷனாதக ரஸ ஆத்ம ஸ்வரூப வித் -கேவல அதிகாரி பகவத் சம்பந்தத்தை சாணிச் சாரோபாதி சுத்திக்காக நினைக்கிறான் –
வாஸூதேவஸ் ஸர்வமிதி ச மஹாத்மா ஸூ துர்லப
8–கீழ் சொன்ன மூன்று அதிகாரிகளும் -உபாசிக்கும் பிரகாரங்களை -அந்திம ஸ்ம்ருதியையும் -ஐஸ்வர்யார்த்திக்கு புனராவ்ருத்தியையும்
-கைவல்யார்த்திக்கு புணராவ்ருத்தி இல்லை என்னும் இடத்தையும் அருளிச் செய்கிறான்
9–மன்மனா பவ மத பக்த -ஸ்லோகத்தால் பூர்ண பக்தி யோகம் -உபதேசம் -மானுஷீம் தனும் ஆஸ்ரிதம் பரம் பாவம்
-மனுஷ்யத்தவே பரத்வம் -திண்ணன் வீடு திருவாயமொழிக்கி இதுவே மூலம்
பஜனத்வத்தை ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம் -/ பத்ரம் புஷ்டம் -ஸ்வ ஆராத் யத்தை யும் / சமுகம் சர்வ பூதேஷூ -சமத்துவ நிலையும் காட்டி அருளுகிறார்
10–திருக் குணங்களை அனுசந்திக்க பக்தி உண்டாகும் என்றும் விபூதியை பரக்க அனுசந்திக்க பக்தி வெள்ளம் பெருகும் என்றும் கூறப்படுகிறது
11–திவ்ய சஷூ ஸையும் அருளி விஸ்வரூபமும் காட்டி அருளுகிறார் -பக்தியினாலேயே -உள்ளபடி -அறிந்து -கண்டு -அடைய -முடியும் -ஞான தர்சன பிராப்தி அவஸ்தைகள்
சாதனமாக சொன்ன ஞானம் பக்தி ரூபா பன்ன ஞானமே -பக்தி சம்பிரதாயத்துக்கு வளி காட்டி அருளுகிறார்
-12-அதிகாரிகள் தங்கள் சக்திக்கு அனுகுணமாக உபாயங்களை பற்றும் படிகளை கூறி அருளுகிறார் –
13–க்ஷேத்ரம் -ஷேத்ரஞ்ஞம் -வாசி காட்டி அருளி -சரீராத்மா பாவம் -விசிஷ்டாத்வைத அசாதாரணம் என்று காட்டி அருளுகிறார்
14–முக்குண சம்பந்தமே சம்சார ஹேது -பந்தம் தொலைய பக்தியே சிறந்த சாதனம் –
15–ஷர -பத்தன் -அக்ஷர-முக்தன் -புருஷோத்தமன் இதர ஸமஸ்த விலக்ஷணன்
16–தேவாசுர பேதம் -காம க்ரோதாதிகளை விட்டு ஆஸ்திகனாய் சாஸ்திர விதிப்படி நடக்க வேண்டும்
17–சாஸ்திரீய கர்தவ்யங்களில் சிரத்தை வேண்டும்
18–ரஜஸ் தமஸ் இரண்டையும் கழித்து சத்வத்தில் ஒன்றி -அவன் இடம் தஞ்சமாக பற்றி சரம ஸ்லோகார்த்தம் படியே
-சம்சார பந்த நிவ்ருத்தியையும் பரமபதத்தையும் பெறலாம் பக்தி நெறியை காட்டி அருளுகிறார் –
——————————————
ஸ்ரீ சரணாகதி கத்யம் -ப்ருது கத்யம் -பெரிய கத்யம் / ஸ்ரீ ரெங்க கத்யம் -மித கத்யம் -சின்ன கத்யம் / ஸ்ரீ வைகுண்ட கத்யம்
பெரிய கத்யம்-சாமான்ய பகவத் விஷயத்தில் -ஸ்வ பிரார்த்தனை / ஸ்ரீ ரெங்க கத்யம் பெரிய பெருமாள் விஷயமாக -ஸ்வ பிரார்த்தனை /
ஸ்ரீ வைகுண்ட கத்யம் பிறருக்கு கர்தவ்ய உபதேசம்
அஸ்துதே தயைவ சர்வம் சம்பத்ஸ்யதே –ஸ்வ சம்பந்தி சம்பந்தி திஸ்தரணம் அபி சர்வ சப்த அபிப்ரேதம்
———————————–
வைஷ்ணவன் / ஏகாந்தி / பரமை காந்தி /–ஸ்ரீ உ . வே . திருமலை நல்லான் சக்கரவர்த்தி ராமகிருஷ்ண ஐயங்கார்-
வைஷ்ணவன் -உபாயம் வேறு பலன் வேறு -என்று கொண்டு ஸ்ரீ மன் நாராயணனை உபாசிப்பவன்
யஸ்து உபாயதயா நித்ய நைமித்தி காதிகம் -ஸத்க்ரு த்யம் குருதே விஷ்ணு வைஷ்ணவஸ் ச உதாஹ்ருத/
ஏகாந்தி -பகவானே உபாயமும் பலனும் -நித்ய நைமித்திக கர்மாக்கள் அவன் முக மலர்த்திக்காக -கைங்கர்ய ரூபேண
-பகவத் ஆராதன ரூபமாய் -வகுத்த கைங்கர்யம் என்று எண்ணி செய்யும் வைஷ்ண உத்தமன்
விஷ்ணோர் ஆஞ்ஞா தயா யஸ்து ஸத்க்ருத்யம் குருதே புத -ஏகாந்தீதி சமுநிபி ப்ரோஸ்யதே வைஷ்ணவ உத்தம –
பரமை காந்தி -ஏகாந்தியிலும் மேம் பட்டவன் -ஏக அந்தம் -பகவானே உபாயம் உபேயம் என்று இருப்பவன் போலே அன்று
-போக ரூபமாக பகவத் ஆஞ்ஞா ரூபமான கைங்கர்யம் பண்ணாமல் தரித்து இருக்க மாட்டாதவன்
யஸ்து போகதயா விஷ்ணோ ஸத்க்ருத்யம் குருதே சதா ச ஏவ பிரமை காந்தீ மஹா பாகவதோத்தம —
பகவான் பரம போக்யம் போலே கைங்கர்யமும் பரம போக்கியம்
இத்தகைய பரமைகாந்திக்காக நித்ய கிரந்தம் சாதித்து அருளுகிறார் ஸ்வாமி
அத பரமை காந்திநோ பகவத் ஆராதன பிரயோகம் வஹ்யே –முதல் வாக்கியம்
அத -கத்யத்தில் பிரபத்தி அனுஷ்டானம் பர்யந்தம் உபபாதித்த பின்பு –
அபிகமனம் -உபாதானம் –இஜ்யை -ஸ்வாத் யாயம் -யோகம் -ஐந்து வித கைங்கர்யம் -பஞ்சகால பராயணா
ஸ்நாணம் நித்ய நைமித்திக கர்மாக்கள் -அபிகமனம்
தீர்த்தம் கந்தம் புஷ்ப்பம் பூஜாத்ரவ்யங்கள் சுத்தீகரித்தல் உபாதானம்
இஜ் யை -திருவாராதனம் -பிரதானம்
ஸ்வாத்யாயம் -த்வயம் அர்த்த அனுசந்தாநேந ஸஹ சதைவம் வக்தா யாவச்சரீர பாதம் அதிரைவ ஸ்ரீ ரெங்க ஸூ கம் ஆஸ்வ-என்கிறபடி
த்வய அனுசந்தான ரூபமான சாஸ்திரங்கள் -அருளிச் செயல்கள் -வேதாந்த விசாரம் -பகவத் விஷய விசாரம் -கற்றல் கற்பித்தல்
யோகம் -மனசை ஒருமை படுத்தி பகவத் த்யானம் -ஏவம் சரணம் தமேவ பகவந்தம் த்யாயன் ஆஸீத
எம்பெருமானே தனக்கு சேஷ பூதனான அடியேனை கொண்டு தனக்கு ப்ரீதி விளைவிக்கும் கார்யங்களை செய்வித்துக் கொள்கிறான் -என்ற சாத்விக தியாக எண்ணம் வேண்டும்
மூல மந்த்ரம் திருமந்திரம் -பகவத் த்யானம் -சஹஸ்ரோல்காய ஸ்வாஹா வீர்யாய அஸ்திராய பட்-அஸ்திர மந்த்ரம் -கங்கையாக பாவித்து ஸ்நானம்
சரணாகதி ப்ரகாராச்ச பூர்வ யுக்த / பகவந்தம் அஷ்டாங்கேன ப்ரணாமேன ப்ரணம்ய சரணம் உபகச்சேத்/
அனுபவ ஜனித்த அதி மாத்ர ப்ரீதி காரித பரிபூர்ண கைங்கர்ய ரூப பூஜாம் ஆரபேத –
ஸ்ருதி ஸூ கை ஸ்தோத்ரை ஸ்துத்வா -என்று அருளிச் செயல் அனுசந்தானம் நியமிக்கிறார்
அநு யாகம் -பகவத் ஆராதனம் முடித்து அதிதி ஸத்காரத்துடன் பிரசாதம் சுவீகரித்து -இதுவும் பகவத் ஆராதனத்தில் சேரும்
————————————————————-
எதிகட்கு இறைவனும் எதிராசனும் –ஸ்ரீ உ வே ராமானுஜம் ஸ்வாமிகள்-
யத் பதாம் போருஹ த்யானம் வித்வஸ்த அசேஷ கல்மஷ
வஸ்துதாம் உபயாதோஹம் யாமு நேயம் நமாமிதம் —
பரம் ப்ரஹ்மை வாஞ்ஜம் ப்ரமபரிகதம் சம்சாதிதத்
பர உபாத்யா லீடம் விவசம சுபமஸ்யாஸ் பதமிதி
ஸ்ருதி நியாய பேதம் ஜகதி விதிதம் மோஹநமிதம்
தமோயேநாபஸ்தம் சஹி விஜயதே யமுன முனி –ஸ்ரீ கீதா பாஷ்யம் -ஸ்ரீ வேதாந்த சங்க்ரஹ முதலில் ஸ்ரீ ஆளவந்தாரை
மாயாவாத புஜங்க பங்க கருடஸ் த்ரைவித்ய சூடா மணி -நம் இராமானுஜர் அடி பணிந்து அருளிச் செய்த ஸ்லோகங்கள் –

ஸ்ரீ வைகுண்ட கத்ய ஆரம்பத்திலும் -யாமு நார்ய ஸூ தாம் போதி ஆவகாஹ்ய யதா மதி -ஆதாய பக்தி யோகாக்யம் ரத்னம் சந்தர்சயாம் யஹம் -என்று
பக்தி யோகம் -பிரபத்தியையே ஆளவந்தார் அனுக்ரஹத்தால் தாம் பிரகாசப் படுத்துவதாக அருளிச் செய்கிறார் –
தத் பாதாம் புஜ த்வய பிரபத்தே அந்யத் நமே சாதனமஸ்தி-என்று இந்த கத்யத்தில் அருளிச் செய்கிறார் –

ஆ முதல்வன் இவன் -என்று கடாக்ஷித்து அருளினார்
ஒரு நாளாகிலும் கூடி இருந்தேன் ஆகில் பரம பதத்துக்கு சுருளும் படியும் கட்டி இருப்பேன் -என்று அருளிச் செய்யும் படி அன்றோ கடாக்ஷ வீக்ஷணம்
வியாசர் -போதாயனர் -டங்கர் -த்ரமிடர் -குஹ தேவர் -திரு உள்ளக் கருத்துக்கள் படியே -விசிஷ்டாத்வைத சித்தாந்தம் நிலை நாட்டி அருளுகிறார்
புருஷ நிர்ணயம் / சதுஸ்லோகி /ஸ்தோத்ர ரத்னம் /கீதார்த்த சங்க்ரஹம் /ஆகம ப்ரமாண்யம் /
சித்தி த்ரயம் –ஆத்ம சித்தி -ஈஸ்வர சித்தி – சம்வித் சித்தி -என்ற மூன்று பிரிவுகள் /
பிரகிருதி புருஷ கால வ்யக்த முக்தாயதிச்சா மநுவிதத நித்யம் நித்ர சித்தைர நேகை
ஸ்வ பரி சரண போகை-ஸ்ரீ மதி ப்ரீயமானே பவது மம பரஸ்மின் பூருஷே பக்தி பூமா –மங்கள ஸ்லோகம் –ஆகம சித்தி –
பாமாத்மா ஸ்வரூபம் -இத்தை பின் பற்றியே -அகில புவன -ஸ்ரீ பாஷ்யம் மங்கள ஸ்லோகம் –பக்தியை பிரார்த்திக்கிறார் –
தேஹ இந்திரிய மன பிராண தீப்ய அந்யோ அநந்ய சாதன
நித்யோ வ்யாபீ ப்ரதி க்ஷேத்ரமாத்மா பின்ன ஸ்வதஸ் ஸூகீ –ஆத்ம பற்றி சித்தாந்தம்
ஏக பிரதான புருஷம் விவாதாத்யா சிதம் ஜகத்
சேதன அசேதநாத் மத்வாத் ஏக ராஜகதேசவத் –ஈஸ்வர சித்தி முடிவில் -ஸ்ரீ மன் நாராயண ஏக ராஜர் ரக்ஷணத்தில் அனைவரும் என்றபடி
சம்வித் சித்தியில் -விசிஷ்டாத்வைத சித்தாந்தம் நிலை நாட்டி அருளுகிறார் –
தத்வ த்ரயம் -ஞானம் -ஞாதா -ஜேயம்-மூன்றும் உண்டு / பரா அஸ்ய சக்தி விவிதைவ ஸ்ரூயதே -/ அத்விதீயன் /
இவருடைய ஆத்ம சித்தி சம்வித் சித்தி ஸ்ரீ ஸூ கைதிகளையும் ஸ்ரீ தேவ பெருமாள் அருளையும் கொண்டே
-யஞ்ஞ மூர்த்தியை அருளாள பெருமாள் எம்பெருமானார் ஆக்கி அருளினார் -சித்தி த்ரயமே ஸ்ரீ பாஷ்யத்துக்கு வித்து
ஸ்தோத்ர ரத்னம் -65-ஸ்லோகங்கள் மந்த்ர ரத்ன வியாக்யானமாகவே அமைந்துள்ளது -சதாச்சார்ய சம்பந்தம் கொண்டே
அடியேனை அங்கீ கரித்து அருள வேண்டும் என்றே இவர் பிரார்த்தனை
வேதமும் -காரணந்து த்யேய-என்று உபதேசித்து -தம் தேவம் முமுஷுர்வை சரணமஹம் ப்ரபத்யே -என்று வேத புருஷனின் அனுஷ்டானம் மூலம் காட்டித் தந்து
நியாஸ இதி ப்ரஹ்மா -என்றும் -தஸ்மாத் ந்யாஸமேஷாம் தபாஸாம் அதிரிக்த மாஹு -என்று பிரபத்தியின் மேன்மையை நிஷ்கரிஷித்து உள்ளதே –
கதா ப்ரகர்ஷயிஷ்யாமி–தனக்கேயாக என்னைக் கொள்ளுமீதே போலே -சேதன லாபம் ஈஸ்வரனுக்கு பேறு அன்றோ
இத்தைக் கொண்டே -ஸ்ரீ பாஷ்யம் கடைசியில் -நச பரம புருஷ -சத்ய சங்கல்ப அத்யர்த்த பிரியம் ஞானிநாம் லப்தவா
கதாசிதாவர்தயிஷ்யதி -கை விடான் அன்றோ என்று அருளிச் செய்கிறார் –
மாமேகம் பரம காருணிகம் அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யம் ஆச்ரித வாத்சல்ய ஜலதிம் சரணம் பிரபத்யஸ்வ -என்று சரம சுலோகத்துக்கு ஸ்வாமி
சர்வலோக சரண்யாய ராகவாய -என்றும் -காகுத்ஸா க்ருபயா பர்ய பாலயத் -என்றும் -தர்மஞ்ஞா சரணாகத வத்சலா-என்றும் —
ஸ்ரீ இராமாயண ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டே இந்த ஸ்ரீ கீதா பாஷ்ய ஸ்லோகம் –
நாராயண பரம் ப்ரஹ்ம கீதா ஸாஸ்த்ரீ சமீரித –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -32-ஸ்லோகங்களை கொண்டே ஸ்ரீ கீதா பாஷ்யம்
ஈச்வரே கர்த்ருத்வ புத்தி சத்வோபாதே யந்தி மே
சர்வ கர்மா பரிணாமச்ச சாஸ்திர சாரார்த்த உச்யதே –18-அத்யாய சார ஸ்லோகம் –
பிரபன்னர்களுக்கு பக்தி தேஹ யாத்ரா விசேஷம் -வாஸூ தேவஸ் சர்வம் –எல்லாம் கண்ணன் என்று இருப்பவர் –
————————–
மாறன் அடி பணிந்து உய்ந்தவரும் மாறனும் -ஸ்ரீ உ வே வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள்-
1-துயர் அறு சுடர் அடி -அவன் துயரையே அறுக்கும்/
2-அறியாக் காலத்துள்ளே அடிமைக்கு கண் அன்பு செய்வித்து அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயேல் -பிரகரணத்துக்கு அனுகுணமாக உபகார ஸ்ம்ருதியுடனே
அறியா மா மாயத்தை –அடியேனை -அறியாக் காலத்து அடிமைக்கு கண் அன்பு செய்வித்து -வைத்தாயேல் -ப்ரீதியுடனே -அருளிச் செய்கிறார்
3-விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை -2–7–5—கீழே எம்பெருமான் ஆழ்வாரை தனக்கு ஆக்கின படி சொல்லி –
இப்பாட்டில் தனக்கு ஆக்கின எம்பெருமானுடைய அவயவங்கள் உடைய அழகை ஆழ்வார் வர்ணிக்கிறார் -என்ன –
உடையவர் இப்பாட்டால் தன் அவயவ ஸுந்தர்யத்தாலே என்னைத் தனக்கு ஆக்கினான் -என்று அருளிச் செய்கிறார் –
4–முந்நீர் ஞாலம் எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவானே – -3–2–1-நிராசை யுடன் பேசுவதாக சொல்ல
நான் கிட்டும் நாளை – அடியேன் தரிக்கும் படி -அருளிச் செய்ய வேண்டும் என்கிறார் –
5—எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் –மற்று எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன் -2-9-8-ஒரு நொடி போதாகிலும் –
அனுபவிக்க பார்ப்பதாக திருமாலை ஆண்டான்
ஆழ்வார் பிரக்ருதிக்குச் சேர -பகவத் விஷயத்தில் சிறுக கோலா மாட்டாரே -சேஷி சேஷ முறை தப்பாமல் என் ஹிருதயத்தில் புகப் பெற்றால்
-இப்படிக்கு கலக்கும் இக்காலம் எல்லா வற்றிலும் -இது ஒழிந்த மற்று ஒன்றையும் வேண்டேன் -என்று
மாறன் அடி பணிந்து உய்ந்தவர்க்கு அன்றோ மாயன் திரு உள்ளம் தெரியும் –
6–அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள் இருள் தான் அற வீற்று இருந்தான்- இது வல்லால் – பொருள் தான் எனில் மூ உலகும்
பொருள் அல்ல மருள் தான் ஈதோ மாய மயக்கு மயக்கே – -8–7–3–இங்கு -இது -நாட்டார் தலையாக மதிக்கும் ஐஸ்வர்யம் -என்ன
-வீற்று இருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல இருக்கும் இருப்பை –சேதன லாபம் ஈஸ்வரனுக்கு பேறு -என்பதையே எம்பெருமானார் காட்டி அருளுகிறார் –
7—அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -10- 6-1-என்பதற்கு
நம்முடைய பாக்ய அனுகுணம் -என்ன -ஆஸ்ரித பரதந்த்ரம் -இவர் நியமன பிரகாரம் கார்யம் செய்வானாய் -அவன் பிரணயித்வம் -காட்டுகிறான்
இதையே ந ச பரம புருஷ அத்யர்த்த பிரியம் ஞானிநம் லப்த்வா கதாசித் ஆவிர்த்தயிஷ்யதி -ஸ்ரீ பாஷ்யம் இதை திரு உள்ளம் கொண்டே –
8–தேவார் கோலத்தோடும் திருகி சக்கரம் சங்கினொடும் ஆவா வென்று அருள் செய்து அடியேனோடும் ஆனான் –5–1–9-இதற்கு
திவ்ய ஆயுதங்கள் உடன் பொருந்தினால் போலே என்னுடன் பொருந்தும் படி கலந்தான் -என்ன
கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய் -6–9–1-என்று ஆசைப்பட்ட படி வந்து கலந்தான் -சேஷித்வம் குறையாமல்
அந்த ரூபத்தோடு சொத்தான அடியேனோடும் ஆனான் –என்றார் –
9—வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும் –5–10–4-என்பதற்கு -ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு நடுவில்
-மத்யே விரிஞ்ச கிரிசம் விஷ்ணு பிரதம அவதாரம் -எளிமை தோற்ற -நின்ற -வஞ்சகம் -களவு என்றபடி
புரம் புக்கவாறும்-என்று முதல் அடியிலே திரிபுரம் அழித்த சரித்திரம் பேசுவதால் -கங்கை தரித்தது -பெருமானுடைய உத்க்ருஷ்டம் பேசும்
-அவன் ருத்ரனுக்கு அந்தராத்மாவாகவும் -வில் -பாணம்-இவற்றுக்கும் அந்தராத்மாவாகவும் -திரிபுர சம்ஹாரம் இவன் செய்தான் என்ற
புகழ் வரும்படி அருளினான் -இந்த சரித்திரம் ஆழ்வார் திரு உள்ளத்தில் ஓடுவதை சொல்வதே பிரகரணத்துக்கு சேரும் –
10–பொலிக பொலிக –நித்ய சூரிகள் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ காண வர -அவர்களுக்கு மங்களா சாசனம் -என்ன
ஆதிப்பிரானுடைய பரத்வத்தை பேசி -மற்றது தெய்வம் நாடுதிரே -என்று கீழே சொல்லி
இந்த உலகும் விண்ணாடும் வாசி இல்லாமல் அவர்களும் இங்கே வரலாம் படி இருக்கும் இருப்புக்கு மங்களா சாசனம்
-ஆழ்வார் உபதேசம் கார்யகரமாயிற்று -என்பதை எடுத்துச் சொல்வதில் நோக்கு –
11–என்றைக்கும் என்னை –இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய் நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ -7-9–1-
அர்ஜுனன் தலையில் விஜயத்தை ஏறிட்டால் போலே சர்வேஸ்வரன் அவ லீலையாக பாடி முடித்தான் –
எம்பெருமானார் இதை மேலும் பரிஷ்கரித்து -இவர் தாம் சொன்னார் ஆகிலும் ஒரு படி போகச் சொல்லித் தலைக் காட்டுவர்
-அவனும் தானே சொன்னான் ஆகில் நிரவத்யமாகத் தலைக் கட்டும் –
சிறு பிரஜை எழுத்து இடப் புக்கால் தானே ஏதேனும் ஒரு படி இட்டுத் தலைக் கட்டும் -பிதாவாதல் -உபாத்யாயன் ஆதல் இடப் புக்கால் தானே எழுத்தாய் இருக்கும் —
அங்கண் இன்றிக்கே இவன் கையைப் பிடித்து இடுவிக்கப் புக்கவாறே-இவன் ஓர் இடத்தே இழுக்க குதறிக் கொட்டியாய் ரூபம் அழிந்து சிதறிப் போம் –
அப்படியே என்னை உபகரணமாகக் கொண்டு கவி பாடா நிற்கச் செய்தேயும் எந்நாள் வரும் தோஷம் தன் பக்கல் ஸ்பர்சியாத படி பாடுவித்தான் -என்று
இந்த உபகாரத்தை நினைத்து தரிக்க முடியவில்லை -தரித்து நின்று சொல்லவும் முடியவில்லை –
12–கிளர் ஒளி இளமை –திருமலையை ஆச்ரயிக்கிறார் -அழகரை ஆச்ரயிக்காமல் திருமலையை ஆஸ்ரயிப்பான் என் -எம்மா வீட்டில் நிஷ்கர்ஷித்த ப்ராப்யம்
பெறுகைக்கு திருமலையை ஆஸ்ரயிக்கிறார்-திருமாலை ஆண்டான் பணிக்க -எம்பெருமானார் -இவர் பாட்டுத் தோறும் -ஒல்லை -காலக் கழிவு செய்யேல் -என்று
த்வரிக்கப் புக்க வாறே -இவருக்கு நாம் நினைத்த படி பரிமாறுகைக்கு ஏகாந்த தேசம் ஏதோ -என்று ஞாலத்தூடே நடந்து உழக்கிப் பார்த்து வரச் செய்தே –
இவ்விடம் சால ஏகாந்த ஸ்தலமாக இருந்தது என்று திருமலையில் சந்நிதி பண்ணி -நாம் உமக்கு முகம் தருகைக்காக வந்து நின்றோம் –
நீர் இங்கே வந்து நினைத்த வகைகள் எல்லாம் பரிமாறி அனுபவியும் என்று தெற்குத் திருமலையில் நிற்கிற நிலையைக் காட்டிக் கொடுக்க -இவரும் அத்தை அனுசந்தித்து
பகவான் பிராப்யம் ஆனால் அவன் வர்த்திக்கும் தேசமும் ப்ராப்யம் -திருமலையும் -திருமலையோடு சேர்ந்த அயன் மலையோடு -புற மலையோடு -திருப்பதியோடு
போம் வழியோடு -போகக் கடவோம் என்ற துணிவும் துணிவோடு வாசி யற ப்ராப்ய அந்தர்கதமாய் அனுபவித்து இனியர் ஆகிறார் —
திவ்ய தேசம் அடைவதே நமக்கு கருமம் ஆகும் –இதுவே உடையவர் திரு உள்ளம் –
13–தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்-தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஓத்தே –2–3–1-
ஏக ஜாதி த்ரவ்யங்கள் தன்னிலே கலந்தால் போலே -திருமாலை ஆண்டான் பணிக்கும் படி
தானும் நானுமாக கலவிக்கு உள்ளே எல்லா ரசங்களும் பிறக்கும் படி ஸம்ஸ்லேஷித்தான் என்கிறார் –
சர்வ கந்த சர்வ ரஸ -இந்த கலவி பிரிக்கப் போகாது என்பதற்கு த்ருஷ்டாந்தம் –
14—ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே-6–1–10-/ நானும் இருக்கிறேன் -திருமாலை ஆண்டான் கருத்து /இத்தலையை பிரிந்தால்
இருப்பார் இல்லை என்று தன் பெருமையை நினைந்து அவன் வராமல் இருந்தானாக வேணும் -இத்தலையில் சத்தையை-உயிருடன் இருப்பதை அறிவிக்க சொல்கிறாள் –
எம்பெருமானார் பணிக்கும் படி -அழகான பொருள் தான் –ஆயினும் தமிழர் இன்றியமையாமை என்பது ஓன்று உண்டு உண்மையான ப்ரேமம் உள்ள இடத்தில் –
தலைமகன் இருக்கும் வரை தலைவியும் இருந்தே தீரும் -ஓன்று இருவரும் இருக்க வேண்டும் -அன்றேல் இருவரும் முடிய வேணும் –
ஒருவர் முடிந்தால் மற்றவர் அதுவே காரணமாக முடிந்து விடுவர் – எம்பெருமான் உளராகையால் இங்கு இவ்வாத்மா வஸ்துவும் உண்டு என்பது நிச்சயம் –
ரஷ்ய வர்க்கங்கள் எல்லாரையும் ரஷித்தால் யாயிற்று -சேஷம் இல்லை என்று இருக்கிறராக வேணும் -இன்னும் அவன் ரக்ஷணத்தை அபேக்ஷிக்கும்
நான் ஒருத்தி இருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லுங்கோள்-
இதே போலே -என் தத்துவனை –நாச்சியார் -5-6–எனக்கு சத்தா ஹேதுவானவனை வரும்படி கூவாய் -குயிலை வேண்டுகிறாள் –
தன் சத்தை அவன் என்று இருக்கிறாள் -ராவணன் மாயா சிரசை காட்டின போது-உயிர் விடாமல் பிராட்டி தரித்து இருந்தது –
ஞானம் அன்று இவள் ஜீவனத்துக்கு ஹேது -பெருமாள் சத்தை யாயத்து -அவள் உளர் ஆகையால் இவளும் இருந்தாள் காணும் என்று –
15–செங்கதிர் ஆழி முதல் புகழும் பொரு படை ஏந்திப் போர் புக்கு அசுரரைப் பொன்றுவித்தான் -8–9–3-
அசுரரைக் கொன்று குவித்ததால் வந்த புகரைச் சொல்கிறது–ஹேதி பிச்சேத நாவாத்பி ருதீரித ஜயஸ்வநம்–திவ்ய ஆயுதங்கள் தான் அவனை புகழா நிற்கும்
-புகழும் பொரு படை -பற்றி -இங்கு எம்பெருமானார் நிர்வாகம் -சத்ரோ ப்ரக்யாத வீர்யஸ்ய ரஞ்சநீயஸ்ய விக்ரமை -ராவணன் போன்ற சத்ருக்களும்
கையும் ஆயுதமும் பொருந்த இருந்த படி என் என்று புகழும் படியை சொல்கிறது -அனுகூலரான சேதனர்கள் புகழ்வதில் வியப்பு ஒன்றும் இல்லையே
-பிரதிகூலர் புகழும் படி அன்றோ இவன் பெருமை –
16—மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆ நிரை காய்த்தாய் -பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவேனே-9–4–3-
வரையாதே ரஷித்த மஹா குணம் எனக்கு உதவாமையாலே இழக்கப் புகா நின்றாய் என்று பேகனியா நின்றேன் -உனக்கு அவத்யம் -ஆழ்வாருக்கு துக்கம் இதனால் –
உனக்கு பணி செய்து இருக்கும் தவமுடையேன் -இனிப் போய் ஒருவன் தனக்கு பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய் -பெரியாழ்வார் -5–9–3-
எம்பெருமானார் -இது அழகான பொருள் தான் -ஆயினும் அவன் வாராமையால் தம் இழவுக்கு நோவு பட்டு இருக்கும் ஆழ்வார்
அவன் இழவுக்கு -அவத்யம் வரும் -என்று நோவு பட்டார் என்பது இப்போது உள்ள நிலைக்கு சேராது -இந்த மஹா குணத்துக்கு நான் புறம்பு ஆகிறேனோ -என்று துக்கமே –
17—வேங்கடங்கள் மெய்ம் மேல் வினை முற்றவும் -3-3–6- இதற்கு கடன்கள் -ரிஷிகள் தேவதைகள் பித்ருக்களுக்கு செலுத்த வேண்டிய கடைமைகள் என்றும்
– -மெய்ம் மேல் வினை -சரீர சம்பந்தம் அடியாக வரும் பாபங்கள் -வேம்-நசிக்கும்
இதற்கு எம்பெருமானார் -பூர்வமாக நாசமும் உத்தராக அஸ்லேஷமும் –போய பிழையும் புகுதருவான் நின்றனவும் -தீயினில் தூசாகும் –
-கடன்கள் மேல் வினை முற்றவும் -இது மெய் -சத்யம் -என்று வேதாந்த கட்டளை படியே
உத்தர பூர்வாகயோர் அஸ்லேஷ விநாசவ் -என்றும் -ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மான ப்ரதூயந்தே -என்றும் சொல்லுகிறபடியே -ஏதம் சாரா என்னுமா போலே –
18–முடிவு இவள் தனக்கு ஓன்று அறிகிலேன் என்னும் -மூ வுலகு ஆளியே என்னும் -கடி கமழ் கொன்றைச் சடையன் என்னும் –
நான் முகக் கடவுளே என்னும் -வடிவுடை வானோர் தலைவனே என்னும் வண் திருவரங்கன் என்னும் -7–2–10-
இத்யாதிகளால் சொல்லப் படுகிற வானோர் தலைவனே -என்பர்
எம்பெருமானார் -சாமாநாதிகரண்யத்தால் அந்தர்யாமியாய் இருந்து உபய விபூதி நாதத்வம் என்று பொருள் என்பர் –
19-அறுக்கும் வினை -9–8-1- குறுக்கும் -நாட்டில் நடையாடும் சொல்லால் அருளிச் செய்வதே
20-பணிமானம் பிழையாமே –அடியேனைப் பணி கொண்ட –4–8–2-ஆச்சான் தண்ணீர் அமுது -விருத்தாந்தம்
—————————–
லோக திவாகரும் ராமானுஜ திவாகரும் -ஸ்ரீ உ. வே அண்ணங்கராச்சார்யர் ஸ்வாமிகள் –
பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்-
குறையல் பிரான் அடிக்கீழ் வில்லாத அன்பன் இராமானுசன் /கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான்
ஒலி மிக்க பாடலை யுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலி மிக்க சீயம் இராமானுசன் –
மண்ணியில் நீர் தேங்கும் குறையலூர் சீர்க் கலியன் தோன்றிய ஊர் –
ஜைநேப கண்டீரவ -மத யானைகளுக்கு சிங்கம் -ஸ்ரீ ராமானுஜ சிங்கம்
அங்கமலத்து தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி அரட்ட முக்கி அடையார் சீயம்
கொங்கு மலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன்
பரகாலனும் ஸ்ரீ பெரும்பூதூர் மா முனியும் சீயங்கள் –
விப்ரர்க்கு கோத்ர சரண ஸூத்ர கூடஸ்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள் -பிரபன்ன ஜன கூடஸ்தர் பராங்குச பரகால யதிவராதிகள்-
தமிழ் மா முனி திக்கு சரண்யம் என்றவர்களாலே க்வசித் க்வசித் என்று -கலியும் கெடும் போல் ஸூ சிதம் –
-இவர் தாம் மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையால் -கலியும் கெடும் என்று திருமங்கை ஆழ்வார் உடையவர் அவதரித்து
கலியுக ஸ்வ பாவம் கைலியும் என்று மேல் வரும் அம்சத்தை தரிசித்து அருளிச் செய்தார் –
பூண்ட நாள் சீர்க் கடலை யுத்க்கொண்டு திருமேனி நன்நிறம் ஒத்து உயிர் அளிப்பான் தீர்த்த காரராய் எங்கும் திரிந்து ஞானஹ்ரதத்தைப் பூரித்துத் தீங்கின்றி
வாழ நிதி சொரிந்து -கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து வெளுத்து ஒளித்துக் கண்டு உகந்து பர ஸம்ருத்தியே பேறான அன்பு கூரும் அடியவர்
-உறையில் இடாதவர் -புயல் கை அருள் மாரி குணம் திகழ் கொண்டல் போல்வாரை மேகம் என்னும்
காரார் புயல் கை கலி கன்றி -அங்கமலத்து தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி–குணம் திகழ் கொண்டல் / இராமானுசா எம் செழும் கொண்டல் –
-சீர் முகிலே -காரேய் கருணை இராமானுசா — –உதார குணத்தால் மேக துயர் இருவரும் –

1-உண்ணும் சோறு -6–7-திருவாய்மொழி போலே -கள்வன் கொல்-3–7-தலைமகள் பிரிவுக்கு ஆற்றாத திரு தாயார் பதிகங்கள்
-அது தனிப் போக்கு -இது உடன் போக்கு -என்ற வாசி உண்டு
அஞ்சுவன் வெஞ்சொல் நங்காய் அரக்கர் குழப்பாவை தன்னை வெஞ்சின மூக்கரிந்த விறலோன் திறம் கேட்க்கில் -3-7-4–
மகளின் மூக்கை அரிவான் என்ற அச்சம் இல்லை -பெருமாள் பிராட்டி பிரிவு நினைவூட்டப் படுகிறது -பிராட்டியை கவர்ந்து செல்ல
மூல காரணமே அங்க பங்கம் தானே -முன்பு இருவருமாக புறப்பட்டுச் சென்று பிரிவு நேர்ந்தால் போலே இப்பொழுதும் இத் தம்பதிகளுக்கு
விதி வசத்தால் பிரிவு நேர்ந்து பரிதவிக்க நேருமோ என்றே அச்சம் கொள்கிறாள் -என்று எம்பெருமானார் நிர்வாகம் –
2-ஓழியா வெண்ணெய் யுண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஓண் கயிற்றால் விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி யழுதான் -6–7–4-
எம்பெருமானார் -வங்கி புரத்து நம்பி –திருவாராதன கிராமம் உபதேசிக்க பிரார்த்திக்க -காலம் தாழ்த்து -கூரத் தாழ்வானுக்கும் ஹனுமத் தாசருக்கும்
உபதேசிக்கும் பொழுது வர அஞ்சி நடுங்கின உடையவர் -விம்மி அழுதான் -என்றும் -அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும் -என்று
ஆழ்வார்கள் அருளிச் செய்யா நிற்க -உண்மையில் இப்படி இருக்குமோ -நியாமகன் -நியாம்யர் ஆனவர் இடத்தில் அஞ்சி வருந்தத்தக்க கூடுமோ என்று
சந்தேகம் உண்டாய் இருந்தது -இப்போது உம்மிடத்தில் நான் அஞ்சி வருந்தினேன் ஆகையால் அது சம்பாவிதமே என்று துணியப் பெற்றேன் என்றாராம் –
3-தன் குடிக்கு ஏதும் -நம் குடி என்னாதே -தன் குடி என்கிறாள் ஆயிற்று -எம்பெருமானார் தர்சனம் -என்னுமா போலே –
நம் பிரதிபத்தியால் சொன்னமாகை அன்றிக்கே பெருமாள் இராமானுசன் உடையார் -என்றே அருளிச் செய்வர் –
பெரு விலையனான ரத்னத்தை நடுவே இட்டுக் கோத்தால் முன்னும் பின்னும் ஓக்க விலை போமாப் போலே காண் -என்பர் பிள்ளான் –
4-தென் தில்லைச் சித்திர கூடத்து என் செல்வனை –மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை –பெரிய திருமடல் –
எம்பெருமானார் ஸ்ரீ கோவிந்த ராஜர் பிரதிஷ்டை தில்லை திருச் சித்ர கூடம் போலவே செய்து அருளினார் –
———————-

திருக்கோட்டியூர் நம்பி –
திருக் குருகைப்பிரான் இயற பெயர்-வைகாசி ரோஹிணி திருவவதாரம் –987-செல்வ நம்பி வம்சம் –
செல்வநம்பி குலம் தழைக்கச் சாய்த்து உதித்தோன் வாழியே -வாழி திரு நாம பாசுரம் உண்டே –
105-திரு நக்ஷத்ரம் எழுந்து அருளி இருந்தார்
திருநாங்கூர் மணிமாடக் கோயில் -மூலவர் உத்சவர் சேவை இன்றும் உண்டு
திருக் கோஷ்ட்டியூர் நம்பி சந்நிதியில் பவிஷ்யகார எம்பெருமானார் உத்சவம் இன்றும் சேவை
இவர் திருக் குமாரத்தி தேவகிப் பிராட்டியார் -திரு க் குமாரர் தெற்கு ஆழ்வான்-இருவரையும் உடையவர் சிஷ்யர்கள் ஆக்கினார் –

—————————————————
ஸ்ரீ பார்த்த சாரதி கிருபா லப்த நிஜ அவதார வைபவம் உண்டே நம் ராமானுஜருக்கு -/ ஆத்மாநம் ஸ்ருஜாமி -என்றும் -ஞானீ து ஆத்மைவ மே மதம் -என்றும்
யதா யதாஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத அப்யுத்தா நமதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம் யஹம் -என்றும்
தானே வந்து திருவவதரித்தமை காட்டி அருளுகிறான் –
லஷ்மீ பதேர் யதி பதேச்ச–பரமம் ரஹஸ்யம் சம்வாத ஏஷ சரணாகதி மந்த்ர சாரம் -என்பர் நம் பூர்வர்கள் கத்ய த்ரயத்தை –
பெரிய கோயில் நம்பி -திருத்திப் பணி கொண்டு -ஆழ்வானால் – திருவரங்கத்து அமுதனார் –
—————————
கல் தச்சன் ஐதிக்யம் -கோசாலை காட்டும் பொழுது கல்லின் நடுவில் தேரையும் தண்ணீரும் இருக்கக் கண்டு -கல்லின் நடுவில் உள்ள தேரைக்கு
ஜீவனம் கல்பித்த ஈஸ்வரன் நமக்கும் நடத்துவன் என்று தொழிலை விட்டு பரந்யாசம் பண்ணி திரு முடி குறையிலே நிர் வியாபாரனாய் இருக்க
அழகிய மணவாள பெருமாள் பிரதி தினம் இராமாறு திருவொத்த சாதத்தை கொண்டு போய் அவனை புஜிப்பித்துக் கொண்டு இருக்க சில காலத்துக்கு பின் அவன்
மரித்த செய்தியைக் கேட்டு உடையவர் -இற்றைக்கானாலும் அழகிய மணவாள பெருமாள் வெறும் தலையாய சோறு சுமவாமல் ஸூ கமாய் இருப்பர் -என்று அருளிச் செய்தார் –
————————–
யாதவ ராஜன் -காலத்தில் அப்பனுக்கு சங்கு ஆழி அளித்தார் –
வில்வ நிலையையாக பிராட்டி பேசப்படுகிறாள் / ஸ்ரீஸூக்தியிலும் -ஆதித்ய வர்ணே தபசோதி ஜனதா வனஸ்பதிஸ் தவ வ்ருஷோ அத பிளவை -என்று
உன் சங்கல்பத்தினால் உனக்கு என்று இட்டுப் பிறந்தது -என்று ஓதப்படுவதால் வில்வ தளத்தினால் அர்ச்சிக்கப் படுவது பொருத்தமே
உத்சவ மூர்த்தி -தேவாதி தேவன் -ரக்ஷித்து சிலர் எழுந்து அருள பண்ணி இருக்க -யாதவ ராஜனைக் கொண்டே
மூலவரையும் திருச் சித்ர கூடம் போலவே எழுந்து அருள பண்ணி அருளினார்
ஆனந்த நிலையம் விமானம் புதுப்பித்து -ஸ்ரீ வைகாசன ஆகமம் படி -ஸ்ரீ வராக -ஸ்ரீ நரசிம்ம -ஸ்ரீ வைகுண்டநாத -ஸ்ரீ வேங்கடேசர்களை ப்ரதிஷ்டை செய்வித்து
ஆதி சேஷன் விஷ்வக் சேனன் கருடன் த்வார பாலகர் -ஆகியவர்களை அந்தந்த ஸ்தானங்களில் ஏறி அருள பண்ணுவித்தார்
திருவேங்கடமுடையானுக்கு ஐஸ்வர்யா ஸம்ருத்திக்காக திரு மார்பில் ஸ்ரீ வ்யூஹ லஷ்மியை -உத்தர பல்குனி -வெள்ளிக் கிழமை -சுக்ல பக்ஷ துவாதசி -ஒன்றாக
சேர்ந்த ரத்ன மாலிகா யோகத்தில் -திருமார்பில் உள்ள ஸ்வர்ண கண்டிகையில் பிரதிஷ்டை செய்வித்தார்
இதனால் -வேங்கடேச ஸ்வசுராபிதானர்-மாமனாராகவும் போற்றப் படுபவர் –
திரு மஞ்சனத்தின் பொழுது நாச்சியார் திருமொழி சேவையும் ஏற்படுத்தி அருளினார்
மலையப்பனை உத்சவ பேரமாகவும்-வேங்கடத்துறைவாரை கௌதுக பேரமாகவும் -ஏற்பாடு செய்து அருளினார்
வீர நரசிம்ம தேவன் திரு நாகாபரணங்கள் திரு ஹஸ்தங்களுக்கு சமர்ப்பித்தார் –
திரு வேங்கடத்து அரி -தனிக் கோயிலில் திருமலையில் -இருக்க
பெருமாளுக்கு ஈசான்யத்தில் விமான அபிமுகமாய் இருக்கும் படி எழுந்து அருள பண்ணி பிரதிஷ்டிப்பித்து அருளினார்
தண்ணீர் அமுது வழி திருத்தல் உத்சவம் -பெரிய திருமலை நம்பிகள் -நினைவாக -அத்யயன உத்சவம் அனந்தரம் -ஏற்பாடு செய்து அருளினார்
புரட்டாசி ஏழாம் திரு நாள் அனந்தாழ்வான் -லீலை -ஸ்மாரகமாக-அப்ரதக்ஷிணமாக எழுந்து அருளி உத்ஸவம் –
————————
இமையோர் தலைவா -அமரர்கள் அதிபதி -பரன் அடி மேல் குருகூர்ச் சட கோபன் —
இன்றும் அர்ச்சா ஆழ்வார் திரு மார்பில் ஞான முத்திரை உடன் சேவை உண்டே இங்கு –
கலியனும் -மனமே தொழுது எழு தொண்டர்கள் தமக்குப் பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம்பெருமான் –1–4–4-என்று உபக்ரமித்து
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேர் அருளாளன் எம்பிரானை –4–3–1-என்றும்
வானவர் கோனைட் கண்டமை -4–3–10-என்றும்
(தேவ பெருமாளையே தாம் செம் பொன் கோயிலிலே கண்டாராக அருளிச் செய்கிறார் -பரமபத நாதனை சொல்லிற்று ஆகில்
கண்ணால் கண்டமை சொல்ல முடியாதே -தொழுது எழு என்னவும் கூடாதே -அஹம் ஏவ பர தத்வம் -என்றார் இ றே –
ஸ்ரீ ஹஸ்த கிரியின் மேல் கையும் திரு வாழியுமாய் நிற்கிற பெருமாளே ப்ரமேயம் -என்றவாறு )
செற்றவன் தென்னிலங்கை மலங்கத் தேவ பிரான் திரு மா மகளைப் பெற்றும் என்னெஞ்சகம் கோயில் கொண்ட
பேர் அருளாளன் பெருமை பேசிக் கற்றவன் காமரு சீர்க் கலியன் -9–5–10-என்று முடிவிலும் அருளிச் செய்கிறார் –
————————-
தொண்டனூர் ஏரி -திருமலை சாகரம் -என்ற பெயர்
சரவண பெவகுலா ஜைன சன்னதியில் எம்பெருமானார் சந்நிதியின் தாடீ பஞ்சகம் கல் வெட்டும் இன்றும் உண்டே
குகன் தண் மகளான -கனகமாலிகை -யதிசேகரன் -என்னும் யது குல அரசனுக்கு திருக்கல்யாணம்
-ஸ்ரீ ராம பிரியன் -ஸ்ரீ கிருஷ்ணன் உத்சவ பிரதிஷ்டை செய்ய – நாராயணராத்ரி யாதவ கிரி ஆனதே /
யதிராஜ சம்பத்குமாரார் –பீபீ நாச்சியார் திருவடியில் சேவை / தமர் உகந்த திருமேனி /-

கோதற்ற ஞானத் திருப்பாவை பாடிய பாவை தங்கை
வாதுக்கு வல்லவன் ஆண்டான் மருமான் தம்பி எம்பார்
தீதற்ற செல்வப் பிள்ளையோ பிள்ளை நம்பி சிச்சன்
ஏதுக்கு இராமானுசனை எதி என்று இயம்புவது இரு நிலமே-

கஜினி முகமத் துருக்கியில் இருந்து வந்து பஞ்சாபில் ஜெயபாலன் அரசனை வென்றது -1001-/ யமுனையை கடந்தது -1018-/
லாகூர் முழுவதும் துலுக்க ராஜ்ஜியம் ஆனது -1022-/ சோம்நாத் கோயில் கொள்ளை -1024-/ கஜினி இறந்து அவன் பிள்ளை அகமது பட்டம் -1030-/
துலுக்க ராஜ்ஜியம் -1100-பலமாகவே இருந்தது -/ ராமானுஜர் பாதுஷா இடம் சென்றது -1097-முதல் -1100-வரைக்குள் இருக்க வேண்டும் -/
தொண்டனூர் -அருகில் கல் வெட்டு -முகமது வீரன் புதை யுண்டு இருப்பதாக -உள்ளது -அதனால் முகமது படை எடுத்து
ஸ்ரீ ராம பிரியர் விக்ரகம் தலை நகர் டெல்லிக்கு கொண்டு சென்று இருக்க வேண்டும் –
திருக்குறுங்குடியிலும் எம்பெருமானார் ஞான முத்திரை உடன் சேவை –

யஸ் ஸ்வாபாகலே கருணாகரஸ்சான் பவிஷ்ய தாசார்ய பர ஸ்வரூபம்
சந்தரசயா மாச மஹாநுபவம் தம் காரி ஸூ நும் சரணம் ப்ரபத்யே –ஸ்ரீ மன் நாதமுனிகள் ஆழ்வார் விஷயமாகவும் பவிஷ்யதாசார்யர் விஷயமாகவும் அருளிச் செய்தது –

திருக் கோஷ்ட்டியூர் நம்பி திருக் குமாரத்தி தேவகி நாச்சியார் இடம் தமது சரம தசையில் பவிஷ்யதாசார்ய விக்கிரஹத்தை சேர்த்து –
அவர்களே திருக் கோஷ்ட்டியூர் நம்பி அர்ச்சா மூர்த்தியையும் எழுந்து அருள பண்ணினார் -அந்த திவ்ய தேசத்திலே –
ஆழ்வார் விக்கிரஹத்துக்கு முன்பே எழுந்து அருள பண்ணியதால் -அண்ணர் -பின்பு ஆண்டாள் -கோயில் அண்ணர் -அதிசயத்தக்க திரு நாமம் அமைந்தது —
யத்ய தாசாரதி சிரேஷ்ட தத்த தேவ இதரோ ஜனா ச யத் பிரமாணம் குருதே லோகஸ் தத் அநு வர்த்ததே —-ஸ்ரீ கீதை -3–21- என்பதற்கு
-பலர் -ச யத் பிரமாணம் குருதே -சிரேஷ்டர் யாது ஒன்றை பிரமானமாகக் கொள்ளுகிறார்களோ அத்தையே லோகமும் பிரமாணமாக கொள்ளும்
என்று சாமான்ய அர்த்தம் சொல்ல நம் பாஷ்யகாரர் –ஸ்ரேஷ்டர்கள் செய்வனவற்றையே லோகம் பிரமாணமாக கொள்ளும்
-மேலையார் செய்வனகள் -வேண்டுவன கேட்டியேல் -என்பதையே கொண்டு வியாக்யானம் –
சாஸ்திரத்தில் – வேண்டாதனவற்றை விட்டு வேண்டுவன மட்டுமே ஸ்ரேஷ்டர்கள் செய்வார் என்றே தாத்பர்யம் –
பஞ்சாசார்ய பதாஸ்ரயர்/ ஸ்ரீ பெரும்பூதூரில் மணவாள மா முனி சந்நிதியில் -இன்று சேவை சாதிக்கும் மண்ணளந்த பெருமாளே
ஸ்வாமிக்கு முதல் ஆச்சார்யர் -வித்யாப்யாஸம் இவர் திரு முன்பு தான் தொடங்கிற்று என்பர்
தீ மனம் கெடுத்தும் மருவித் தொழும் மனமே தந்தும் அறியாதன அறிவித்த ஆச்சார்யனே உபாயம் உபேயம் என்று விஸ்வஸித்து
பீதக வாடைப் பிரானார் பரம குருவாக வந்து -என்கிறபடியே உறங்கும் பெருமாளே தானே உலாவும் பெருமாளாய் வந்தார் –
எம்பெருமானார் திருவடிகளே சரணம் -உத்தாரகத்வத்தை நிஸ்சம்சயமாக அறுதியிட்டார் -இதற்கு மேல் உயர்ந்த மந்த்ரம் இல்லையே

விஷ்வக்ஸேனா யதிபதி ஆவீர்பூத நேத்ர சாரஸ் த்ரிதண்ட –ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யை மங்காமல் ரசிக்க தாசாரதியை நியமிக்க
-அவர் முதலியாண்டான் ஆனார் -த்ரிதண்ட ஸ்தானீயரானார் –
——————
யதீந்த்ரர் -எல்லா உயிர்கட்க்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தார்-நாராயண வைபவ பிரகாசர் –
யதீந்த்ர பிரவனர்-பல்லுயிர்க்கும் விண்ணின் தலை நின்று வீடு அளிப்பான் அனைத்துளுக்கும் வாழப் பிறந்த
யதிராச மா முனிவன் என்னும் அர்த்தம் சுரந்தார் -ராமானுஜ வைபவ பிரகாசர் -க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் போலே யதீந்த்ர பிரவனர்
உடையவர் -பராங்குச பாத பக்தம் -சடகோபர் தே மலர் தாட்க்கு எய்ந்து இனிய பாதுகாமாம் எந்தை எதிராசன் –

யதிராஜ விம்சதி பிராபக -உபாய பரமான பிரபந்தம் -ராமானுஜம் எதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா-என்று தொடங்கி
-தஸ்மாத் அநந்ய சரணோ பவதீதீ மத்வா-என்று தலைக் கட்டுகிறார் அதில்
ஆர்த்தி பிரபந்தம் -ப்ராப்ய பரம் -வாழி எதிராசன் என்று தொடங்கி -இந்த வரங்கத்து இனிது இரு -என்று தலைக்கட்டு -த்வயம் உத்தரார்த்தம் சரம நிஷ்டை -தாத்பர்யம்
நடுவிலும் -சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி -30-/ அறு சமயச் செடி யதனை அடி யறுத்தான் வாழியே -31–என்றும் அருளி
அவர் அபிமான அந்தர்பூதர் எல்லாருக்கும் ஆகி -எம்பெருமானார் பிரசாதத்தை பெற்று நித்ய விபூதியில் நிரந்தர கைங்கர்ய சாம்ராஜ்யத்தை
பெற்று வாழ்வார்கள் என்பதே ஆர்த்தி பிரபந்தத்தில் தேறிய அர்த்தம்
உன் தன் அபிமானம் உத்தாரகம் என்று சிந்தை தெளிந்து இருக்கச் செய்த நீ அந்தோ எதிராசா சதிராக நின் திருத் தாள் தா -56-என்றும்
இந்த அத்யாவஸ்யம் பிறப்பித்த -மாசில் திருமலை ஆழ்வார் என்னை நேசத்தால் நின் பால் சேர்த்தார் -12-என்றும்
அவர்க்காய் எதிராசர் எம்மை கடுக பரமபதம் தன்னில் ஏற்றுவர் என்ன பயம் நமக்கே -21-என்று துணிவை வெளியிட்டு அருளி
எதிராசர் தம் அபிமானம் என்னும் போதத்தை ஏறிப் பவமாம் புணரி தன்னைக் கடந்து பாதக கரையைக் குறுகுவனே-22-என்று பெருமிதத்துடன் அருளிச் செய்கிறார் –

அனைத்துலகும் வாழப் பிறந்த எதிராசன் மா முநிவன் -41-வாழியே –
ராமானுஜோ விஜயதே யதிராஜ ராஜ-
——————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ. வே அண்ணங்கராச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . திருமலை நல்லான் சக்கரவர்த்தி ராமகிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே -வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே ராமானுஜம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: