பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -அவதாரிகை தொகுப்பு –பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

முதல் ஆழ்வார்கள் அனுபாவ்ய வஸ்துவை நிஷ்கரிஷிக்க-அதுக்கு களை பிடுங்குகிறார் –
ஷேத்ரஞ்ஞர் பக்கலிலே ஈஸ்வரத்வ புத்தியைப் பண்ணி -அனர்த்தப் படுகிற சம்சாரிகளுக்கு ஈஸ்வரனுடைய பரத்வத்தை
உபபாதித்து அவர்களை அநீச்வரர் என்கிறார் –

1-ப்ரஹ்மாதிகள் சம்சாரத்தைப் பிரவர்த்திப்பிக்க பிரதானர் ஆனார் போலே–தந் நிவ்ருத்திக்கு ப்ரதானன் ஆனேன் நான் என்கிறார் –

2-விசாரிக்கும் போது சர்வேஸ்வரன் ஒருத்தனே என்று சொல்வார்கள் –ஒருத்தனும் அவனுடைய பெருமையை பரிச்சேதிக்க அறியார்கள் –
ஸ்ருதி ஸ்ம்ருதிகள் எங்கும் ஆராயும் அர்த்தத்தின் உடைய-நிர்ணயமும் இவ்வளவே -எல்லா சாதனா அனுஷ்டானம் பண்ணினவர்களுக்கும்
அவற்றுக்கும் பலம் சர்வேஸ்வரன் பக்கலில் நின்றும் என்கை-

3-அவன் காட்டக் கண்ட நான் அறிந்தபடி-ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு அறியப் போகாது-

4-தாம் அறிந்தபடியை உபபாதிக்கிறார் -சர்வ சப்த வாச்யன் ஆனவனை-எல்லா பொருளுக்கும் சொல்ல வேண்டும்படி நின்றவனை-தொகுத்து சொன்னேன் –

5-தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவராதிகளிலே-அந்தராத்மதயா பிரகாசித்து நின்ற இவ்வர்த்தம் தேவரே அறிந்து அருள வேணும் –

6-வேறு ஒருத்தர் அறிவார் இல்லையோ என்ன -பாஹ்ய குத்ருஷ்டிகளால்-அறியப் போமோ -என்கிறார்-

7-அகிஞ்சநனாக -எனக்கு உன்னை ஒழிய வேறு ஒரு அபாஸ்ரயம் இல்லை -பூர்ணனான உனக்கு அபூர்ணனான என்னை ஒழிய-அபாஸ்ரயம் இல்லை –
உன்னுடைய சேஷித்வ ஸ்வரூபத்தாலும்-என்னுடைய சேஷத்வ ஸ்வரூபத்தாலும்-விடப் போகாது –

8-உன்னை ஒழிய வேறு ஓன்று அறியேன் என்கிறது என் என்னில்–வேறு உள்ளது கழுத்துக் கட்டி யாகையாலே என்கிறார் –

9-வேறு ஒருத்தர் துணை இல்லை என்றது-பூர்ணராக சம்ப்ரதிபன்னர் ஆனவர்களுக்கு-தம் தாம் குறையை இவனுக்கு அறிவித்து-தங்கள் அபேஷிதம் பெருகையாலே -என்கிறார் –

10-அவனுடைய ஸ்ப்ருஹணீயமான திரு மேனி-ச்வரூபதுக்கே மேல் ஓன்று இல்லை என்று இருக்கிற-நமக்குக் காண குறை உண்டோ -ப்ரஹ்மருத்ராதிகள் வாழ்த்த மாட்டரே-

11-சர்வேஸ்வரன் உடைய-திருநாமத்தை மாறாமல் நினைத்து-உதாரமான கையைக் கூப்பி-உங்கள் தலையை தாழ்த்தி வணங்குமின்கள்-என்று பர உபதேசம் செய்கிறார்

12-உன்னை மதியாதவர்களை– சதுர்வித யோநிகளிலும் போய்-விழும்படிக்கு ஈடாக நினைத்தாய்-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானைப் பற்றின பற்று-விடும்படிக்கு ஈடாக
சங்கல்பம் இன்றிக்கே-திரு ஆழியை விடுகைக்கு அன்றோ நினைத்தாய் –

13-மோஷ ப்ரதன் என்று வேதத்திலே பிரதிபாதிக்கப் படுமவன் -நித்ய சூரிகளுக்கு பிராப்யன் ஆனவன் -நாராயணன் -சர்வேஸ்வரன் -என்கிறார் –

14-சர்வ ரக்ஷகனானவனுடைய திரு நாமங்களைப் பேசப்பெறாதே -இருக்கும் பாஹ்ய குத்ருஷ்டிகள்-அனர்த்தப் படுவார் என்றும்-பரம ப்ராப்யர் நாராயணன் என்றும்-உபபாதிக்கிறார்

15-மார்கண்டேயனும் கரியே என்று காட்டி அருளுகிறார் –

16-ஈஸ்வரன் அசத்திய பிரதிஞ்ஞனாய்-ரஷிப்பான் ஆன பின்பு-நம்முடைய சத்ய தபஸ் சமாதிகளைக் கொண்டு என்–என்கிறார் –

17-ஞானாதிகனான ருத்ரனும் தன்னை-ஆஸ்ரயித்தவர்களுக்கு இவ்வர்த்தத்தை இறே சொல்லிற்று-என்கிறார்-

18-குறி கொண்டு பகவானையே பஜிக்கும் அதிலும்-ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு-பற்றுகை சீரீயது- என்கிறார் –

19-பிரதானவர்களுக்கும் அறிவு கெடும் இடத்தில்-ரஷிக்கும் நீயே எனக்கு-எல்லா வித அபிமத சித்தியும் செய்வாய் -என்கிறார்-

20-அண்டாந்தர வர்த்திகளான சந்திர ஆதித்யர் களுமான-இப் பதார்த்தங்களும் எல்லாம் உன் ஆதீனம்-உன்னை ஒழிய ஜகத்துக்கு-ப்ருதுக் ஸ்திதியும்
ப்ருதுக் உபலம்பமும் இல்லை -உன் பிரசாதம் அடியாக-பெரும் பேறு மட்டுமே நிலை நிற்பது -என்கிறார் –

21-இப்படி பூரணன் ஆனவனுக்கு ஆஸ்ரித அர்த்தமாக-வரும் சீற்றத்தைச் சொல்லுகிறது -நரசிம்ஹத்தை தத் காலத்தில்-அனுபவித்தாற் போலே பேசுகிறார் –

22-ஸ்ரீ நரசிம்ஹ வ்ருத்தம் ப்ரஸ்துதமானது-பின்னாட்டுகிறது -ஆஸ்ரயிக்க பாருங்கோள்–என்கிறார்-

23-அறிந்த தசையிலும் அறியாத தசையிலும்-சர்வேஸ்வரனே ரஷகனாக அறுதி இட்ட பின்பு-தன் அபிமத சித்திக்கு இவன் செய்ய வேண்டும்-ஸூ க்ருதம் உண்டோ –
சத்தா பிரயுக்தையான இச்சை இவனுக்கு உண்டாகில்-மேல் உள்ளத்துக்கு அவன் கடவன் ஆகில்-இவன் செய்யும் அம்சம் என் என்கிறார் –

24-ஆஸ்ரிதர் உகந்த வண்ணத்தன்ஆச்ரித பக்ஷபாதி என்கிறார் –

25-ஆஸ்ரித அர்த்தமான செயல் ஒழிய தனக்கு என்ன ஒரு செயல் இல்லை என்கிறார்

26-நான் தேவதாந்திர சமாஸ்ரயணம் பண்ணேன்-என்னும் இடத்துக்கு ஆள் பிடித்துத்-தொழுவித்துக் கொள்ளும் ருத்ரன் சாஷி -ஸ்ரமஹரமான வடிவை
உடைய நீயே-மேலும் இந்த நன்மை நிலை நிற்கும் படியாக பார்த்து அருள வேணும்

27-பார்த்து அருள வேணும் என்று-அபேஷித்தபடியே அவன் பார்க்கப் பெற்ற படியைப் பேசுகிறார் –

28-பெருமாள் -வில் பிடித்த படியில்- பிரத்யஷமாக கண்டு அனுபவிப்பது போலே -ஈடுபட்டு அருளுகிறார்-

29-பெருமாள் -வில் பிடித்த படியில்- பிரத்யஷமாக கண்டு அனுபவிக்கும் ஈடுபாடு தொடர்கிறது இதிலும் –

30-என் ஹிருதயத்தில் புகுருகைக்கு-அவசர ப்ரதீஷனாய் கோயிலிலே கண் வளர்ந்து அருளி-அவகாசம் பெற்று-என் ஹிருதயத்தில் நிற்பது இருப்பது ஆகிறவனுக்கு
திருப் பாற் கடலிலே படுக்கையில் கண் உறங்குமோ

31-நீங்கள் ஆஸ்ரயணீயாராக நினைத்தவர்களுக்கும்-ருத்ராதிகளுக்கும் -இடர் வந்த இடத்தில் அவ்விடரைப் பரிகரிக்கும்-அவனை அன்றோ பற்ற அடுப்பது –என்கிறார் –

32-ஹேய ப்ரத்ய நீகமான குணத்தை உடையவன் திருவடிகளை-ஆஸ்ரயியுங்கோள்-என்கிறார்-

33-அசாதாரணையான நப்பின்னைப் பிராட்டிக்கும்-அல்லாதாருக்கும் ஒக்க-விரோதியைப் போக்குமவன்- என்கிறார் –

34-உகந்து அருளின தேசங்களிலே எனக்காக அவன் வர்த்திக்க-வரில் பொகடேன் கெடில் தேடேன் – என்று இருக்கவோ என்கிறார் –

35-பிராட்டிக்கும் கூசித் தொட வேண்டும் திருவடிகளை கொண்டு- காடும் மேடும் அளந்து திருமேனி அலற்றதோ-
நீர்க்கரையைப் பற்றி கண் வளருகிறதும் ஸ்ரமத்தின் மிகுதி என்று இருக்கிறார்-மங்களாசாசனம் பண்ணாத -லௌகிகர் படியைக் கண்டு வெறுப்பனோ –என்கிறார்-

36–பல இடத்தில் கண் வளர்ந்து அருளுகிறதும்-ஆயாசத்தால் என்று இருக்கிறார் -பல திவ்ய தேசங்களில்
கண் வளர்ந்து அருளுகிறதும்-தான் புகுரப் புக்கால் ஆணை இடாதார் ஹிருதயத்தில்ப புகுருகைகாக-என்கிறார் –

37-ஆதி நெடுமாலை விவரிக்கிறது –

38-தேவதாந்தரங்கள்-ஈச்வரோஹம் -என்று சூத்திர ஜந்துக்கள் வாலாட்டுமா போலே-பண்ணும் அபிமானமும்-அத்தேவதைகளை ஆஸ்ரயிக்கைக்கா
பண்ணும்-வ்யாபாரமாகிற காட்டழைபபும்-அவன் நெகிழ்ந்த போது ஒழியும் -முடியும்

39-இப்படிக்கு ஒத்த திருமலையைக் கூட-திருக் கூடல் இழைப்பன் -என்கிறார் –

40-அல்லாத மலைகளைச் சொல்லுகிறவோபாதி-திருமலை-சொல்ல-ஒதப்படுகிற வேதத்தாலே பிரதிபாதிகப் படுகிற-
பெரிய பிராட்டிக்கு வல்லபன் ஆனவன் திருவடிகள் ஆகிற வலையிலே-அகப்பட்டு இருந்தேன்-என்கிறார் –

41-திருமலை யை உடைய நீ என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தாய் -நான் திருமலையை அடைந்து காணல் உறுகின்றேன்-என்கிறார் –

42-பிரயோஜனாந்த பரரும் தங்கள் அதிகாரம் பெறுவது-இத் திருமலையிலே அவனை ஆஸ்ரயித்து-என்கிறார் –

43-சதுர் முகனும்-லலாட நேத்ரனும்-திருமலையில் ஒரு கால் ஆஸ்ரயித்து போம் அளவு அன்று -சமாராதான காலங்கள் தோறும்
சமாராதான-உபகரணங்களைக் கொண்டு வந்து ஆஸ்ரயிப்பார்-என்கிறது –

44-அறிவுடையாரும் அறிவு கெடும் தசையில்-ஹிதைஷியாய் ரஷிக்குமவன் நிற்கிற திருமலையிலே-படு கரணரான போதே சென்று ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

45-வெறும் சம்சாரிகளுக்கே அன்று -நித்ய சூரிகளுக்கும் பிராப்யம் திருமலை –என்கிறார் –

46-திருமலையில் வர்த்திக்கும் குறவர்-வில் எடுத்தபடி எதிர்க்கும் திருமலையே அறிவில்லாதாரோடு அறிவுடையாரோடு வாசியற-எல்லாரும் ஆஸ்ரயிகப் பெறில் நன்று-

47-திருமலையில் வர்த்திக்கும் நித்ய சூரிகளைச் சொல்லுகிறது

48-திருமலை பிராபகமாக-வேறு ஓன்று பிராப்யமாகை அன்றிக்கே-இது தானே ப்ராப்யமாக ஆஸ்ரயிப்பார்கள் நித்ய சூரிகள்-

49-சர்வேஸ்வரனுடைய திரு நாமத்தை சொல்லுவதே-எல்லார்க்கும் அடுப்பது-

50-உன்னுடைய ரஷணததுக்கு நானே கடவன் -நீ சோகிக்க வேண்டா -என்று அருளிச் செய்த சரம ஸ்லோகார்த்தம் என் நெஞ்சிலே கிடக்கும்-

51-சம்சாரத்தில் எம்பெருமான் ரஷகன் என்று இருக்கிற-எனக்கு-விரோதி இல்லாத தேசத்திலே இருக்கிறவர்கள்-என்னோடு ஒப்பரோ –

52-என்னோடு ஒப்பார் உண்டோ என்று சொல்லுவான்-என் என்னில்-இது அன்றோ நாடு அனர்த்தப் படுகிறபடி என்கிறார்-

53-சக்கரவர்த்தி திருமகனை ஒழிய வேறு ஓன்று-சமாஸ்ரயணீ யமாக நினைத்து இரேன்

54-சர்வாதிகனான ஈஸ்வரன் என்று அறியாதவர்கள்-பரக்க கற்கிறது எல்லாம் சம்சார ப்ரவர்தகர் ஆகைக்கு –

55-ஒரு பிரயோஜனம் பெறா விடிலும் ஸ்தோத்ரம் பண்ண வேண்டும் படி-ஸ்ரமஹரமான வடிவை உடையவன்-திருவடிகளை ஏத்த வல்லார் ஆர்

56-காமனுக்கு உத்பாதகனுக்கு ஒருத்தரும்-உபமானம் இல்லாமைக்கு விசேஷஞ்ஞரோடு-அவிசேஷஞ்ஞரோடு வாசி இல்லாமை கண்டிகோளே-

57-அவஸ்யம் அனுபோக்யத்வம் -என்கிற-புண்ய பாபங்களுக்கு நிர்வாஹகனானவனே -அனாயாசேன -நம்முடைய வலிய பிரதிபந்தங்களைப் போக்குவான்-
-ப்ரஹ்மாத்மகம் இல்லாதது ஒன்றுமே இல்லையே –

58-என்னுடைய ஹிருதயத்தை இருப்பிடமாகக் கொண்டு-அஞ்ஞான அந்தகாரங்களைப் போக்கி-அத்தாலே எனக்கு உபகாரகனாய்-
என் பக்கலிலே அபிநிவிஷ்டனாய் இருக்கிறான்

59-அவன் தாழ பரிமாறுகிற படியைக் கண்டு-முறை அறிந்து பரிமாற வேண்டும்

60-தேவர் திருவடிகளை காண்கையே ஸ்வ பாவமான என்னை-ஆரோ நமக்கு அகப்படுவார் என்று பார்க்கும் அதுவே-
ஸ்வ பாவமாக இருக்கிற நீ-காலம் எல்லாம் இப்படியேயாகப் பார்த்து அருள வேணும்

61-தன் ஆஞ்ஞை செல்லும்படி நடத்தினவன்-தானே வந்து அபிநிவிஷ்டனான சம்பத்து எனக்கு உள்ளது -அது தானும் இன்று-

62-ஞானத்துக்கு விஷயம் ஸ்ரீ ய பதி தானே-தங்களோடு ஒக்க கர்ப்ப வஸ்யராய்-கர்ப்ப வாஸம் பண்ணுகிறவர்களை
ஆஸ்ரயணீயராக தங்களோடு ஒத்த-அறிவு கேடராக எண்ணி இழக்கிறார்கள்

63-கீழிற் பாட்டில் இப்படி செய்திலர் என்று வெறுத்தார் லோகத்தை -இதில் தமக்குள்ள ஏற்றம் சொல்லுகிறது –

64-நமக்கு உத்பாதகனானவன் -ஸ்வாமியாய் வத்சலன் ஆகையாலே நாராயண சப்த வாச்யனாய்-நம்முடைய சம்சார சம்பந்தத்தை அறுக்கும்
திருநாமத்தை உடையவனைச் சொல்லுவதே-இவ்வாத்மாவுக்கு உறுவது –

65-பரமபத ப்ராப்திக்கு ஸ்மர்தவ்யனுடைய நீர்மையாலே-ஸ்மரண மாதரத்துக்கு அவ்வருகு வேண்டா-

66-கூரியர் ஆனவர்கள்-சார அசார விவேகஞ்ஞர்கள்- தேவதாந்தர பஜனம் பண்ணார்கள் இ றே-என்கை-

67– சர்வ ஸ்வாமியாய்-என் நாவுக்கு நிர்வாஹனாய்-ஜ்ஞான குணங்களுக்கு எல்லாம் ஆஸ்ரயமாய்-இருக்கிறவனை-ஏத்துகையே உத்தேச்யம்-

68-பகவத் பரிகரமே பலம் என்னும் இத்தை-ஸ்வ புருஷ ம்பி வீஷ்ய-என்கிற ஸ்லோகத்தின்-படியே விவரிக்கிறார்-

69-கவி பாடுகைக்கு ஸ்வரூப ரூப குணங்களால்-குறைவற்று நின்றவனை யாத்ருச்சி கமாக-லபித்தேன்
ஆராய்ந்து பார்க்கில் வேதாந்த ரகசியமும்-அத்தனையே –

70-வேதாந்த ரகசியம் இது என்று இருந்தபடி-எங்கனே என்னில்-நான் ஒருத்தனும் இன்றாக அறிந்ததோ-பிரசித்தம் அன்றோ -என்கிறார் –

71-பிரளயம் கொண்ட பூமியை எடுத்து ரஷித்தது-அறியாது இருந்த அளவேயோ -சம்சார பிரளயத்தில் நின்றும் எடுக்க
அவன் அருளிச் செய்த வார்த்தையைத் தான்-அறியப் போமோ -என்கிறார்-

72-நீர் ஓதினீர் ஆகில் இதுக்குப் பொருள் சொல்லும்-என்னச் சொல்லுகிறார்

73-அவன் என்றும் உண்டாக்கி வைத்த பரம பதத்தை-நீல கண்டன்-அஷ்ட நேத்திரன் ஆன ப்ரஹ்மா-என்கிறவர்களால் காணப் போகாது
க்ருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்கிறவன்-உபாயபாவம் இவர்களால் அறியப் போகாது- என்றுமாம்-

74-ந ஷமாமி கதாசன-ந நத்யஜேயம் கதஞ்சன –ஆஸ்ரிதர் பக்கலில் அபகாரம் பண்ணினாரை ஒரு நாளும்-பொறேன் என்ற வார்த்தைக்கும் –
மித்ர பாவம் உடையாரை மகாராஜர் தொடக்கமானவர்-விடவரிலும் விடேன் என்ற வார்த்தைக்கும்-அவிருத்தமாக செய்து அருளின படி –

75-நாக்கொண்டு மானிடம் பாடேன்–என்கிறார்-

76-ஸ்ருத்யாதிகளில் ஆப்த தமனமாகக் கேட்ட-மனுவும் என்றும் ஒதுவித்துப் போகிற நாலு வேதமும்-இவை எல்லாம்
ஆச்சர்யபூதன் சங்கல்ப்பத்தால் உண்டான உண்மை உடையவை -என்கிறார்-

77-வேறு ஒரு இடத்திலும் போகாதபடி -திரு உள்ளத்தாலே கொண்டு-என் பக்கலிலே மனஸை வைத்தான் –
ஆதலால் பாபம் என்று சொல்லப் படுகிறவை அடைய மாயும் –

78-அபிமத விஷயத்தில் ப்ராவண்யத்தை விளைத்தவனை-அநங்கன் ஆக்கினவன் -நெஞ்சும் கூட-ஸ்ரவண மாத்ரத்திலே பரவசமான படியைக் கண்டால் –
இவ்வஸ்துவை சாஷாத் கரித்து ப்ரணாமாதிகளைப்-பண்ணினார்க்கு எத்தனை நன்மை பிறவாது -என்கிறார்-

79-பகவத் விஷயத்தில் ருசி உடையவர்கள்-அவனை ஏகாந்தமாக அனுபவிக்கலாம் தேசம் பரமபதம்-என்று ஆசைப்பட்டு அதுக்கு காற்கட்டாய் ஆயிற்று என்று
-சொல்லலாம்படி அபிமானித்த சரீரத்தை -சரீரம் வ்ரணவத் பச்யேத் -என்னும்படி யாக நோயாக விரும்புவர்கள் -என்கிறார்-

80-பிரளயம் தேடி வந்தாலும் அத்தனை போதும்-தெரியாதபடி மறைத்து காத்து ரஷித்த-கிருஷ்ணனை விரைந்து அடையுங்கோள் -என்கிறார்-

81-மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ-என்னும்படி-பகவத் விஷயம் கிட்டாமைக்கு கதவு மனஸ் என்றுமாம் –
காண்கைக்கும் பரிகரம் மனஸ் என்றுமாம் –

82-எல்லாரும் தன்னை ஆசைப்பட இருக்குமவன்-என்னை ஆசைப்பட்டு ஹிருதயத்திலே கலந்தான்-அழகாலே எல்லாரையும் அகப்படுத்தும் காமனுக்கும்-உத்பாதகன் ஆனான் –

83-இப்படி எல்லாம் ஆவது-தன் பக்கல் ந்யச்த பரர் ஆனவர்களுக்கு-எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யானாகக் கொடுக்கும்-என்கிறார்-

84-கிருஷ்ணனை தொழுகையே-தொழிலாக காதல் பூண்ட எனக்கு ரஜஸ் தமஸ் தலை எடுத்த போது -ஈச்வரோஹம் -என்று இருக்குமவன் ஒப்பு அன்று -என்கிறார்-

85-எதிரிகள் சதுரங்கம் பொரப் பொருவீரொ என்று அழைக்க-இவர் சொல்லும்படி -எனக்கு தொழில் புராணனான சர்வேஸ்வரனை ஏத்த-

86-அல்லாதாருக்கும் சர்வேஸ்வரன் உளன் என்று உபபாதித்தேன்-நீயும் இவ்வர்த்தத்தை உண்டு என்று நினைத்து இரு என்று
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்-

87-தம்மை ஒக்கும் அகிஞ்சனவர்க்கு இவன் நிர்வாஹகன் ஆனபடியைக் காட்டுகிறார்

88-இப்பாட்டிலும் அவ்வர்த்தத்தையே விஸ்தரிக்கிறார் –

89-இங்கே பாகவதர்களை ஆஸ்ரயிக்கையாலே-அங்கே நித்ய சூரிகளுக்கு அடிமை செய்யப் பெறுவார் -என்கிறது-

90-விலஷணமான பகவத் கைங்கர்யத்தில் அதிகரித்து-ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ளார்க்கும் அப்படியே வர்த்திக்க வேண்டி-இருக்கப் பெற்றவர்கள்
-திருவேங்கடமுடையான் திருவடிகளிலே நிரந்தரமாக-ஆஸ்ரயித்தவர்கள்-
அதிலும் விலஷணமான பாகவத பிராப்தி காமராய்-அது பெற்றவர்கள் பாகவதராலே அங்கீ க்ருதர் ஆனவர்கள் -என்கிறார்-

91-நித்ய சூரிகளோபாதி இங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களும்-ப்ரஹ்மாதிகளுக்கு பூஜ்யர் -என்கிறார்-

92-கர்ப்பத்திலே இருந்த நாள் தொடங்கி-எம்பெருமான் என்னை நோக்கிக் கொண்டு போருகையாலே- சிரீ தரனுக்கு-ஆளாகவும் பெற்று-வ்யாமுக்தனானவனை-
என் நெஞ்சிலே வைத்து-என்றும் ஒக்க-நின்றபோதொடு இருந்த போதொடு வாசி அன்றிகே-மறந்து அறியேன் -என்கிறார்-ஜாயமான கடாஷம் பண்ணுகையாலே –

93-ரஷிக்கைக்கு உறுப்பான-ஸ்வாபாவிகமான சேஷி சேஷ பாவமான-சம்பந்தத்தை யுடையவனே
இஸ் சம்பந்தத்தை மெய்யாக அறிந்தவர்-உன்னை விடத் துணியார் -என்கிறார்-

94-அத்யந்த ஹேயன் ஆகிலும்-என்னை விஷயீ கரித்து அருள வேணும்-என்னிலும் தண்ணி யாரையும்-யதிவா ராவணஸ்வயம்-என்னும்படியே
வஸ்து ஸ்த்திதி அழகியதாக அறியுமவர்கள் என்றும்-விஷயீ கரிக்கப் படுமவர் -என்கிறார்-

95-ப்ரஹ்மாதிகளுக்கு என்னைக் கண்டால் கூச வேண்டும் படி-ஜ்ஞான பக்திகளாலே பூரணன் ஆனேன்-அதுக்கு மேலே புண்ய பலம் புஜிக்கும்-
ஸ்வர்க்காதி லோகங்களையும்-புண்யார்ஜனம் பண்ணும் பூமியையும் உபேஷித்து அவற்றில் விலஷணமாய் இடமுடைத்தான-
ஸ்ரீ வைகுண்டம் காணலாம்படி-இப்போது பரபக்தி யுக்தனானேன்- என்கிறார்-

96-இப்போது ஈசனுக்கும் நான்முகனுக்கும் தெய்வம் என்று எனக்கு-கை வந்தது -இப்போது நீ யானபடியே உன்னை அறிந்து இருந்தேன் -சர்வத்துக்கும் காரணன் நீ-
இதுக்கு முன்பு அறிந்தனவும்-இனி மேல் அறியக் கடவ பதார்த்தங்களும் எல்லாம் நீ இட்ட வழக்கு- -நிர்ஹேதுகமாக ரஷிக்கும் ஸ்வ பாவனாய்-
அதுக்கடியான சேஷியான நாராயணன் நீ–இப்பொருள் எனக்கு அழகியதாக கை வந்தது -என்கிறார்-

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: