ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி–பாசுரங்கள் -77-108-/அவதாரிகை /-ஸ்ரீ மா முனிகள் /ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் / ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் -அருளிச் செய்தவை –

77-தாம் அபேஷித்த படியே திருவடிகளை கொடுத்து அருளப் பெற்று க்ருத்தார்த்தராய் -அவர் செய்த உபகாரங்களை அனுசந்தித்து
-இவை எல்லாம் செய்த பின்பு-இனிச் செய்வதாக நினைத்து அருளுவது ஏதோ ?–என்கிறார்-

கீழ் பாட்டிலே எம்பெருமானாரை குறித்து -தேவரீருடைய திருவடிகளை சர்வதா அனுபவித்துக்-கொண்டு இருக்கும் படி எனக்கு தந்து அருள வேணும் -என்ன –
அவரும் உகந்து அருளி-தாம் அபேஷித்த படியே விலஷணமான கிருபையை பண்ணி -திருவடிகளைக் கொடுக்க -அவரும் க்ர்த்தார்த்தராய் -வேத பிரதாரகரான
குதர்ஷ்டிகளை பிரமாண தமமான அந்த வேதார்த்தங்களைக் கொண்டே நிரசித்தும் -பூமிப் பரப்பு எல்லாம்-தம்முடைய கீர்த்தியை எங்கும் ஒக்க வியாபித்தும் -என்னுடைய ப்ராப்தி பிரதிபந்தக கர்மங்களை வாசனையோடு ஒட்டியும் -இப்படி பரமோதாரரான எம்பெருமானார் எனக்கு
இன்னமும் எத்தை உபகரித்து அருள வேணும் என்று நினைத்து இருக்கிறார் -என்கிறார் –

கோரிய படி திருவருளை ஈந்து அருள -அவைகளைப் பெற்று க்ருதார்த்தராய் -அவர் செய்த உபகாரங்களை அனுசந்தித்து –
இவை எல்லாம் செய்த பின்பு இனிச் செய்யப் போவது ஏதோ –என்கிறார் –
————————–
78-இப்படி செய்த உபகாரங்களை யனுசந்தித்த அநந்தரம் -தம்மைத் திருத்துகைக்காக-அவர் பட்ட வருந்தங்களைச் சொல்லி -இப்படி என்னைத் திருத்தி
தேவரீருக்கு உத்தேச்ய-விஷயத்துக் உறுப்பாக்கின பின்பு வேறொரு அயதார்த்தம் என் நெஞ்சுக்கு-இசையாது -என்கிறார் –

கீழ்ப் பாட்டிலே -லோகத்தை எல்லாம் பிரமித்து அளித்த குத்ர்ஷ்டிகளை பிரபல பிரமாணங்களாலே-நிரசித்து -தம்முடைய பாபங்களை எல்லாம் போக்கி
இன்னும் அதுக்கு மேலே சிறிது கொடுக்க வேணும் என்று நினைத்தார்-என்று எம்பெருமானார் செய்த உபகார பரம்பரையை அடைவே அனுசந்தித்து -இதிலே
தரிசு கிடந்த தரையை செய் காலாகும் படி-திருத்தும் விரகரைப் போலே -இவ்வளவும் விஷயாந்தர ப்ரவணனாய் போந்த என்னைத் திருத்துகைக்காக –
படாதன பட்டு -அரியன செய்து -திருத்தி -தேவரீருக்கு வகுத்த விஷயமான ஸ்ரீயபதிக்கு ஆளாகும்படி பண்ணி அருளின பின்னும்-
வேறு சில அயதார்த்தங்களை என்னுடைய மனசில் வலிய பொருத்திலும் – பொருந்தாதே இருப்பன் –என்கிறார் –

இங்கனம் தமக்கு செய்து அருளிய உபகாரங்களை அனுசந்தித்த பிறகு -தம்மைத் திருத்துவதற்காக அவர் பட்ட வருத்தங்களைச் சொல்லி
இப்படி என்னைத் திருத்தி -தேவரீருக்கு உகந்த விஷயமான திரு மகள் கேள்வனுக்கு உறுப்பாக்கின பின்பு-வேறு ஒரு பொய்ப் பொருளை
என் நெஞ்சில் பொருந்துமாறு செய்ய இயலாது -என்கிறார் –
—————————-
79-எம்பெருமானார் யதார்த்த ஜ்ஞானத்தை கொடுக்கையாலே அயதார்த்தங்கள்-தமக்கு பொருந்தாத படியாயிற்று என்று ஸ்வ நிஷ்டையை யருளிச் செய்தார் கீழ்
உஜ்ஜீவன ருசியும் உண்டாய் இருக்க -அருமந்த ஜ்ஞானத்தை இழந்து –இவ்விஷயத்துக்கு அசலாய் போருகிற லவ்கிகர் படியை அனுசந்தித்து–இன்னாதாகிறார் இதில் –

கீழ்ப் பாட்டில் எம்பெருமானார் தம்முடைய மனோ தோஷத்தைப் போக்கி –அது தன்னைத் திருத்தி –சம்யஜ்ஞ்ஞானத்தை பிறப்பித்து-ஸ்ரீயபதிக்கு சேஷம் ஆக்கின பின்பு
என்னுடைய மனசு வேறு ஒன்றைத் தேடித் போமோ-என்று தம்முடைய அத்யாவச்ய தார்ட்யத்தை அருளிச் செய்து -இதிலே -அந்தப்படியே சம்சாரி சேதனருக்கும்-
அத்யாவசிக்க ப்ராப்தமாய் இருக்க -அது செய்யாதே -ஆத்மாவினுடைய தேக பரிமாண த்வம் -ஷணிகத்வம்-தொடக்கமான வேதார்த்த விருத்தார்ந்தகளை
வாய் வந்தபடி பிரலாபிக்கிற பாஹ்ய குத்ருஷ்டிகளுடைய மத-ப்ரேமேயத்தை வாசனையோடு ஒட்டி விட்ட பின்பு -அந்த மறைக் குறும்பாலே வ்யாப்தமான
பூ லோகத்திலே-சத்யமான அர்த்தத்தை -எம்பெருமானார் இருக்கச் செய்தேயும் சஜாதீய புத்தியாலே-அவரை விட்டு அகன்று வேறு ஒரு தேவதை நம்மை
ரஷிக்க-கடவது உண்டோ என்னும் உள் வெதுப்பாலே சுஷ்கித்துப் போய் வ்யர்த்தமே சம்சயாத்மாக்களாய் நசித்துப்-போகிறவர்கள் படியைக் கண்டு இன்னாதாகிறார் –

எம்பெருமானார் உண்மை யறிவை  உபதேசித்தமையால் எனக்குப் பொய்ப் பொருள்-பொருந்தாத நிலை ஏற்பட்டதென்று -தன் நிலை கூறினார் கீழே-
உலகில் உள்ளோர் உய்வு பெற வேணும் என்னும் ஆசை இருந்தும் -அருமந்த ஜ்ஞானத்தை-உபதேசித்து உஜ்ஜீவிப்பிக்க காத்திருக்கும்
எம்பெருமானாரைத் தெய்வமாக பற்றி –-அவ அருமந்த ஜ்ஞானத்தை பெற கிலாது இழந்து –
வேறு தெய்வத்தை தேடி அலைந்து-உழல்கிறார்களே என்று வருந்திப் பேசுகிறார் –இப்பாசுரத்தில் –
—————————-
80-இவ்விஷயத்தை ஆஸ்ரயிக்க இசையாத சம்சாரிகள் நிலையைக் கண்டு இழவு பட்டார் கீழ் .-உம்முடைய நிஷ்டை தான் இருக்கும் படி என் -என்ன –இவ்விஷயமே
உத்தேச்யம் என்று இருப்பாரை உத்தேச்யம் என்று இருக்கும் அவர்களுக்கே-ஒழிவில் காலத்தில் -திரு வாய் மொழி – 3- 3-1 – படியே நான் அடிமை செய்வேன் -என்கிறார்-

கீழ்ப் பாட்டில் எம்பெருமானார் துர்மத நிரசனம் பண்ணியும் -பிரமாணிகமாக வேத மார்க்க-பிரதிஷ்டாபநம் பண்ணியும் இருக்கச் செய்தே அஜ்ஞான பிரசுரமான இந்த பூலோகத்திலே
இருந்துள்ள சேதனர் அவரை ஆஸ்ரயிக்க இசையாதே -வேறொரு ரஷகாந்தரம் உண்டோ என்று தேடித் தடுமாறி திரிந்து -அவசன்னராய் விட்டாட்கள் என்று அவர்கள் படியை சொல்லி
-இதிலே -அவர்களை போல் அன்றி -அவர்களைக்காட்டில் அத்யந்த விலஷணராய் எம்பெருமானார் திரு நாமத்தையே விஸ்வசித்து இருக்கும் மகாத்மாக்கள் இடத்தில்
பக்த ச்நேகராய் -ஒருக்காலும் அவர்களை விஸ்மரியாதே இருக்குமவர்கள்யாவர் சிலர் –அந்த ததீயர்க்கே சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும்
சர்வ வித கைங்கர்யங்களையும் -சர்வ கரணங்களாலும்-சர்வரும் அறியும்படி -பண்ணக் கடவேன் என்று தம்முடைய நிஷ்டையை சொல்லுகிறார் –

எம்பெருமானாரைத் தெய்வமாக பற்றி உய்வுறாதவர்களும்-சொன்னாலும் -அதனுக்கு இசையாதவர்க்களுமான-சம்சாரிகள் நிலையைக் கண்டு தாம் இழவு பட்டார் கீழே –
சம்சாரிகள் நிலை கிடக்கட்டும் -உம்முடைய நிலை எவ்வாறு உள்ளது -?என்பாரைநோக்கி-எம்பெருமானாரைத் தெய்வமாகப் பற்றும் அளவில் நின்றேன் அல்லேன் –
அவரையே தெய்வமாகப் பற்றி இருப்பாரைத் தமக்கு உரிய தெய்வமாக கருதிக் கொண்டு-இருக்கும் அவர்களுக்கே
ஒழிவில் காலம் எல்லாம் வழுவிலா அடிமை செய்யும் நிலை வாய்க்கப் பெற்றேன் என்கிறார் இதனில் –
———————————
81-எம்பெருமானார் திருவடிகளில் சம்பந்தி சம்பந்திகளுக்கே சர்வ சேஷ வ்ருத்திகளும்-பண்ணுவேன் என்றார் கீழே .
இந்நிலைக்கு -முன்பு இசையாத தமக்கு இந்த ருசி உண்டாயிற்று -எம்பெருமானார் பிரசாதத்தாலே
ஆகையாலே -தமக்கு அவர் செய்த உபகாரத்தை -அவர் தம்மைக் குறித்து விண்ணப்பம் செய்து -தேவரீர் உடைய கிருபைக்கு ஒப்பு இல்லை என்கிறார் –

கீழ்ப் பாட்டில் சர்வோத்தமரான எம்பெருமானார் உடைய சம்பந்தி சம்பந்திகளுக்கே-சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும் சர்வ கரணங்களாலும்
சர்வ வித கைங்கர்யங்களும் செய்யக் கடவேன் என்று அவர்கள் பக்கலிலே தமக்கு உண்டான ஊற்றத்தை சொல்லி -இதிலே –
எம்பெருமானார் திரு முக மண்டலத்தைப் பார்த்து இவ்வளவும் தேவரீருக்கு சேஷ பூதராய்-இருக்கிறவர்கள் திறத்திலே அடிமை தொழில் செய்ய இசையாத என்னை
தாம் உகந்தாரை-தமக்கு அந்தபுர பரிகரமாக்குகிறவர்கள் விஷயத்தில் அடிமை படுத்துகைக்கு உத்தேசிக்கலாய்-தன் அடியார்க்கு அடிமை படாதே இருக்கிறவர்களுக்கு
அந்த திருவடிகளை கொடுக்க இசையாது-இருக்கிற பெரிய பெருமாளுடைய திருவடிகளில் சேர்த்து அருளின தேவரீர் உடைய பரமகிருபைக்கு ஒப்பு இல்லை என்கிறார் –

எம்பெருமானார் அடியார் அடியார் கட்கே -எல்லா அடிமைகளும் செய்வேன் என்றார் கீழே -இதனில் இந்நிலை ஏற்படுவதற்கு முன்பு ஏனைய சம்சாரிகள் போலே
இவ் விஷயத்தில்-இசைவில்லாமல் இருந்த தமக்கு –எம்பெருமானார் அருளாலே -ருசி உண்டாகியதை-நினைத்து அவர் புரிந்த உபகாரத்தை -நேரே அவரைநோக்கி –
விண்ணப்பித்து -தேவரீர் கருனைக்கு ஒப்பு இல்லை –என்கிறார் .
—————————————————-

82-அரங்கன் செய்ய தாளிணைகள் பேர்வின்றி யின்று பெறுத்தும் -என்று கீழ்ச் சொன்ன-பேற்றுக்கு உடலாக தமக்கு பண்ணின உபதேசத்தை அனுசந்தித்து –
வித்தராய் -எம்பெருமானார் என்ன தார்மிகரோ –என்கிறார் –

அரங்கன் செய்ய தாள் இணைகள் பேர்வின்றி இன்று பெறுத்தும் இராமானுச -என்று-கீழ் பிரஸ்த்துதமான பரம புருஷார்த்தத்துக்கு உறுப்பாக சம்சார ப்ரவ்ருத்திகளிலே மண்டி இருந்து
சம்யஜ்ஞ்ஞானத்தை பெற மாட்டாதே -அதி குரூரமான துஷ் கர்மத்தாலே தேகாத்மா அபிமானியாய் கொண்டு -ஒன்றிலும் ஒரு நிலை இன்றிக்கே தட்டித் திரிகிற என்னை
ஆண்டுகள் நாள் திங்கள் -என்றால் போல் சிர காலம்-கூடி இன்றி அன்றிக்கே ஒரு ஷண மாத்ரத்திலே தானே நிஸ் சம்சயமாக தத்வ ஹித புருஷார்த்தங்களை
தத் யாதாம்யத்தளவும் உபதேசித்து -உபமான ரஹீதமான ஸ்ருதயத்தை உடை யேனாம் படி பண்ணி-சர்வ விஷயமாக வர்ஷிக்கும் வர்ஷூ கவலாஹகம் என்னலாம் படி
பரம உதாரரான எம்பெருமானார் என்ன தார்மிகரோ என்று அனுசந்தித்து வித்தார் ஆகிறார்-

இன்று பெறுத்தும் என்று கீழ்க் கூறிய பேற்றினுக்கு உடலாகத் தமக்கு பண்ணின உபதேசத்தை
நினைவு கூர்ந்து -ஈடுபாட்டுடன் எம்பெருமானார் என்ன தார்மிகரோ-என்கிறார் –
——————————-
83-பொருவற்ற கேள்வியனாக்கி -நின்றேன் -என்ன-உம்முடைய ச்ருதத்துக்கு வ்யாவ்ருத்தி எது -எல்லார்க்கும் ஒவ்வாதோ சரணாகதி -என்ன –
-நான் பிரபத்தி பண்ணி பரமபதம் பெறுவார் கோடியில் அன்று -தேவரீர் திருவடிகள் ஆகிற மோஷத்தை -தேவரீர் ஔதார்யத்தாலெ பெருமவன் -என்கிறார்

கீழ்ப் பாட்டில் இவர் தம்முடைய ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக –பொருவற்ற கேள்வியனாக்கி நின்றான் –என்று சொன்னவாறே -அத்தைக் கேட்டருளி
உபமான ரஹீதமான ஸ்ருதத்தை உடையனாம்படி பண்ணி யருளினார்-என்று நீர் நம்மை ச்லாகித்தீர் -உம்மை ஒருவரையோ நாம் அப்படி பண்ணினது
ஒரு நாடாக அப்படி பண்ணி பரம பத்தில்-கொண்டு போகைக்கு பக்த கங்கனராய் அன்றோ நாம் அவதரித்தது -ஆகையாலே உமக்கும் உம்மை ஒழிந்தாருக்கும்
தன்னிலே வ்யாவ்ருத்தி ஏது என்று -எம்பெருமானாருக்கு திரு உள்ளமாக –இவர் அவர் திரு முக மண்டலத்தைப்-பார்த்து நான் என்னை ஒழிந்தார் எல்லாரையும்
போலே பகவத் சரணா கதியைப் பண்ணி பரம பதத்தை பிராப்பிப்போம்-என்று இருந்தேன் அல்லேன் காணும் –தேவரீர் திருவடிகளாகிற மோஷத்தை
தேவரீர் ஔதார்யத்தாலே கிருபை பண்ணப் பெறக் கடவேன் -என்று நேரே விண்ணப்பம் செய்கிறார் –

பொருவற்ற கேள்வி -என்று உமது கேள்வி அறிவை சிறப்பிப்பான் என் -ஏனையோரும் கேள்வி அறிவு பெற்றிலரோ என்ன -ஏனையோர் கேள்வி அறிவு
பிரதம பர்வத்தை பற்றியதாதலின் -பகவானிடம் பிரபத்தி பண்ணி பரம பதத்தை அடைவராய்-நின்றனர் அவர் –
நானோ சரம பர்வத்தின் எல்லை நிலையான ஆசார்யராகிய தேவரீரைப் பற்றிய கேள்வி-அறிவு உடையவனாக ஆக்கப்பட்டமையின் -அவர் கூட்டத்தில் சேராது
தேவரீர் திருவடிகளையே பரம பதமாய் கொண்டு அதனை தேவரீர் வள்ளன்மையால் பெறுமவனாய் உள்ளேன் இது என் கேள்வி யறிவினுடைய பொருவற்றமை –என்கிறார்-
————————–
84-மேல் பெரும் அம்சம் கிடக்கச் செய்தே இதுக்கு முன்பு தான் பெற்றவை தனக்கு-ஒரு அவதி உண்டோ -என்கிறார் –

கீழ்ப் பாட்டிலே பிரதம பர்வ கோஷ்டியிலே அந்வயியாதே இருக்கிற என்னை சரம பர்வமான-எம்பெருமானார் திருவடிகளை பரம ப்ராப்யமாக இவர்
அத்யவசித்து இருக்கிறார் என்று லோகத்தார் எல்லாரும்-அறியும் படி பண்ணி யருளினார் என்று சொல்லி -இதிலே -எனக்கு வகுத்த சேஷியான எம்பெருமானாரை
கண்ணாரக் கண்டு -அந்த காட்சி கொழுந்து விட்டு ஓடிப் படர்ந்து -ததீய பர்யந்தமாக வளருகையாலே-அவர்கள் திருவடிகளில் அடிமைப் பட்டு அதி குரூரமான
துஷ் கர்மங்களை கட்டடங்க விடுவித்துக் கொண்டு -அவருடையகல்யாண குணாம்ர்தத்தை வாயார அள்ளிக் கொண்டு பருகா நின்ற நான்
இன்னமும் பெற்றவற்றை சொல்லப் புக்கால் -மேல் பெற வேண்டுமவற்றுக்கு ஒரு தொகை இன்றிக்கே இருக்கச் செய்தே இவை தன்னை
ஒரு வாசகம் இட்டு என்னால் சொல்லித் தலைக் கட்டப் போகாது என்கிறார் –

எம்பெருமானார் வள்ளன்மையாலே இனிமேல் பெற வேண்டியவை-ஒரு புறம் இருக்க -இதற்கு முன்பு பெற்றவை தாம் -ஒரு கணக்கில் அடங்குமோ -என்கிறார்-
———————————-
85-இராமானுசன் தன்னைக் கண்டு கொண்டேன் —அவன் தொண்டர் பொற்றாளில் தொண்டு கொண்டேன் -என்றீர் -இரண்டில் உமக்கு ஊற்றம் எதிலே என்ன –
எம்பெருமானாருக்கே அனந்யார்ஹ்யமாய் இருப்பார் திருவடிகள் ஒழிய-என் ஆத்மாவுக்கு வேறு ஒரு பற்று இல்லை -என்கிறார் –

இராமானுசன் –தன்னை கண்டு கொண்டேன் -என்றும் -அவர் தொண்டர் பொற்றாளில்-தொண்டு கொண்டேன் –என்றும் தத் விஷயத்திலும் ததீய விஷயத்திலும் ஈடுபடா நின்றீர்
ஆனால் இவ்விரண்டிலும்-வைத்துக் கொண்டு உமக்கு எந்த விஷயத்தில் ஊற்றம் அதிசயித்து இருக்கும் -என்ன -அருகே இருந்து கேட்டவர்களைக் குறித்து -தாம் அதிகரித்துப் போந்த வேதத்தின் உடைய பொருளாய் கொண்டு -அந்த வேத ஸ்ரச்சுக்களான வேதாந்தங்களிலே-ப்ரதிபாத்யனான அவனே நமக்கு வகுத்த சேஷி என்று அறிய பெறாதே
அப்ராப்த விஷயங்களிலே தொண்டு பட்டும்-கதாகதங்களாலே இடர்பட்டும் போருகிற சம்சாரிப்ராயருடைய அறிவுகேட்டை விடுவித்த எம்பெருமானாருக்கு
அனந்யார்ஹரர் ஆனவர்களுடைய திருவடிகளை ஒழிய என் ஆத்மாவுக்கு வேறு ஒரு அபாஸ்ர்யம் இல்லை என்கிறார் –

இராமானுசன் தன்னைக் கண்டு கொண்டேன் -என்றும்-அவன் தொண்டர் பொற்றாளில் தொண்டு கொண்டேன் -என்றும் சொன்னீர் இவ்விரண்டு விஷயங்களிலும்
உமக்கு எதனில் ஈடுபாடு அதிகம் -என்பாரை நோக்கி –எம்பெருமானாரை தொழும் பெரியோர்கள் திருவடிகளைத் தவிர என் ஆத்மாவுக்கு வேறு ஒரு பற்று இல்லை -என்கிறார்-
—————————————
86-இராமானுசனைத் தொழும் பெரியோர் பாதம் அல்லால் என் தன் ஆர் உயிர்க்கு-யாதொன்றும் பற்று இல்லை -என்ற அநந்தரம் -முன்பு அப்ராப்த விஷயங்களை
பற்றி இருப்பாரை பந்துக்களாக நினைத்து -அவர்கள் அளவிலே தாம் ப்ராவண்யராய்-போந்த படிகளை யனிசந்தித்து -இனி அது செய்யேன் –
எம்பெருமானாரை சிந்திக்கும் மனச்சு உடையார் ஆரேனும் ஆகிலும் அவர்கள் என்னை யாள உரியவர் என்கிறார்-

இராமானுசனை தொழும் பெரியோர் பாதம் அல்லால் என் தன் ஆர் உயிர்க்கு யாதொன்றும் பற்று-இல்லையே -என்று தம்முடைய நிஷ்டையை சொன்னார்
இப்பாட்டிலே -முற் காலம் எல்லாம் அப்ராப்த விஷயங்களை-தங்களுக்கு அபாஸ்ர்யமாக பற்றிக் கொண்டு -போந்து அவர்களை பந்துக்களாக நினைத்து -அவர்கள் அளவில்
தாயே தந்தை என்னும் தாரமே கிளை மக்கள் என்கிற படியே தாம் அதி மாத்ரா ப்ரவனராய் போந்த படிகளை அனுசந்தித்து-பீத பீதராய் அப்படி செய்யக் கடவேன் அல்லேன்
தத்வ ஹித புருஷார்த்தங்களை உள்ளபடி அறியக் கடவரான பெரியோர்களாலே ஸ்துத்திக்கப் படுகிற எம்பெருமானாரை சிந்திக்கும் மனசை –
நிதி பெற்றால் போலே லபித்தவர்கள் ஆரேனும் ஆகிலும் அவர்களே என்னை ஆள உரியவர்கள் என்கிறார் –

இராமானுசனை தொழும் பெரியோர் பாதம் அல்லால் வேறு எதுவும் பற்று இல்லாத-நிலை எனக்கு இன்றையது -முன்போ -வேறு விஷயங்களில் ஈடுபட்டு
ஒன்றுக்கும் உதவ மாட்டாத அற்ப மனிசர்களை அண்டி -அந்நிலையை விட மாட்டாது -அவர்களை உறவினராக நினைத்து -அவர்கள் மிக பரிவு கொண்டு இருந்த நிலை .
இனி-அந்நிலை எனக்கு மீளாது -எம்பெருமானார் இடம் ஈடுபடும் உள்ளம் படைத்தவர்-எவராயினும் -அவர் -மேல் உள்ள காலம் எல்லாம் –
என்னை ஆள்வதற்கு -உரிய பெரியவர் ஆவார் -என்கிறார் –
—————————–
87-சேதனருடைய ஜ்ஞான வ்யவசாயங்கள் கலங்கும்படி ஆக்ரமியா நின்றுள்ள-கலி காலத்திலே – உமக்கு இந்த வ்யவசாயம் ஒருபடிப் பட நில்லாது இறே-என்ன –
அது ஆக்கிரமிப்பது எம்பெருமானாராலே உபக்ருதமான ஜ்ஞானத்திலே அனந்விதராய்-இருந்துள்ளவர்களை -என்கிறார் –

அவர் எம்மை நின்று ஆளும் என்று ததீயர் விஷயமாக உமக்கு உண்டான ப்ராவண்யத்தை சொன்னீர்-ஆனால் சேதனருடைய ஜ்ஞான வ்யவஸாய பிரேமங்கள்
கலங்கும்படி ஆக்ரமியா நின்றுள்ள இந்த கலி காலத்திலேயே-உமக்கு இப்படிப்பட்ட அத்யாவசியம் என்றும் ஒக்க ஒருபடி பட்டு இருக்கக் கூடுமோ என்று அருகே இருப்பார் சிலர் கேட்க –
பரத்வ சொவ்லப்யாதி குண பரிபூர்ணர் ஆகையாலே -அளவுடையாராயும் அறிவிலிகளாயும் இருக்கிற அதிகாரிகள்-ஸ்தோத்ரம் பண்ணப் புக்கால் -அவர்களுடைய அதிகாரத்துக்கு தகுதியானபேச்சுக்களாலே பேசுகைக்கு ஈடான-ஸ்வரூப ரூப குண விபூதிகளை உடையரான எம்பெருமானாராலே உபகரிக்கப்பட்ட விலஷண-ஞானத்தை பெறா இருந்தவர்களை
அந்த கலி காலம் ஆக்கிரமித்து ஞான பிரசாதத்தை பண்ணும் இத்தனை ஒழிய-அந்த ஞானத்தை பெற்ற என்னை ஆக்ரமிக்க மாட்டாது
ஆகையாலே எனக்கு இந்த வ்யவசாயம் யாதாத்மா பாவியாக-நடக்கத் தட்டில்லை என்று திரு உள்ளமாக அருளிச் செய்கிறார் –

யாவரையும் கலக்குறும் இக் கலி காலத்திலே-குல கோத்ரம் பாராது -இராமானுசனை கருதும்-உள்ளம் பெற்றவரை -ஆளும் பெரியவராக ஏற்கும் துணிபு நிலை நில்லாதே
-என்பாரை நோக்கி -எம்பெருமானார் -உபதேசித்த ஞானம் வாய்க்காதவர்களுக்குத் தான் கலியினால் கேடு-உண்டாகும் என்கிறார் –
————————————————-
88-எம்பெருமானார் உபகரித்த ஜ்ஞானத்தில் அந்வயம் இல்லாதாரை-கலி தோஷம் நலியும் என்றார் கீழே -அந்த ஜ்ஞானத்தை வுபகரிக்கைக்காக அவர் வந்து
அவதரித்த படியை யனுசந்தித்து -எம்பெருமானார் ஆகிற சிம்ஹம் குத்ருஷ்டிகள் ஆகிற புலிகளை-நிரசிப்பதாக-லோகத்திலே வந்த பிரகாரத்தை சொல்லி
ஸ்தோத்ரம் பண்ணக் கடவேன் -என்கிறார் -இதில் –

கீழ்ப் பாட்டில் எம்பெருமானார் உபதேசித்த ஞானத்தில் அந்வயம் இல்லாதவரை கலி-பிரயுக்தமான தோஷம் ஆக்கிரமித்து நலியும் என்று சொல்லி -இதில் –
அந்த ஞானத்தை லோகத்தார் எல்லாருக்கும்-உபதேசிக்கைக்காக –அவர் விண்ணின் தலை நின்றும் -மண்ணின் தலத்து உதித்தபடியை அனுசந்தித்து –செந்நெல்
விளையா நின்றுள்ள வயல்களை உடைய திருக் குறையலூருக்கு ஸ்வாமியான திரு மங்கை ஆழ்வாருடைய-திவ்ய பிரபந்தமாகிற பெரிய திரு மொழியை
அனுபவித்து களித்து – பிரதி பஷிகளுடைய கந்தத்தையும் சகிக்க மாட்டாதே –பிரபலமான சிம்ஹம் போலே இருக்கிற எம்பெருமானார்
வேத பாஹ்யர் போல் அன்றிக்கே -வேதத்தை பிரமாணமாக-இசைந்து -அதுக்கு விபரீத அர்த்தங்களை சொல்லி
லோகத்தை நசிப்பித்த குத்ருஷ்டிகள் ஆகிய புலிகள்-தன்னரசு நாடாக கொண்டு தடையற நடமாடா நின்ற -அவர்களுடைய மதங்களை
நிரசிக்கைக்காக அவர்கள்-நடையாடும் இந்த பூமியிலே வந்து அவதரித்த பிரகாரத்தை ஸ்துதிக்க கடவேன் என்கிறார் –

எம்பெருமானார் மறை தேர்ந்து அளிக்கும் நல் ஞானத்தில் சேராதாரைக் கலி-நலியும் என்றார் கீழ் ..யாவரும் சேர்ந்து கலியை விலக்கலாம் படியான –
அத்தகைய நல் ஞானத்தை உபகரிப்பதற்காக-அவர் இவ் உலகில் வந்து அவதரித்த படியை-அனுசந்தித்து -அதனால் இத்தகைய வைதிக ஞானம்
உலகினருக்கு கிடைக்க ஒண்ணாதபடி-வேதத்திற்கு -அவப் பொருள் கூறும் குத்ருஷ்டிகள் தொலைந்தமை கண்டு –எம்பெருமானார் ஆகிற சிம்மம்
குத்ருஷ்டிகள் ஆகிற புலிகளைத் தொலைப்பதற்காக-இவ் உலகில் வந்ததாக உருவகம் செய்து -அவரது அவதாரத்தை ஸ்தோத்ரம் பண்ணுவேன் -என்கிறார் –
——————————
89-போற்றுவன் -என்று புகழ்வதாக ஒருப்பட்டவர் -அது நிமித்தமாக-தமக்கு உண்டான பலத்தை எம்பெருமானார் தமக்கு-விண்ணப்பம் செய்கிறார்

கீழ்ப் பாட்டிலே வேத ப்ரதாரகராய் -லோகத்தார் எல்லாரையும் விபரீத ஞானராக பிரமிப்பித்து-நசித்துப் போந்த குத்ருஷ்டிகள் ஆகிற புலிகளை -பக்னர் ஆக்குக்கைக்கு
அவதரித்த -வலி மிக்க சீயமான-எம்பெருமானாரை -ஸ்துதிக்கிறேன் என்று ஸ்வ அத்யாவசாயத்தை ஆவிஷ்கரித்து -இதிலே -தம்முடைய பூர்வ வ்ர்த்ததை
அனுசந்தித்துக் கொண்டு -புகழ்ந்து தலைகாட்ட வரிதான சீல குணத்தை உடையரான-எம்பெருமானார் உடைய திரு முக மண்டலத்தை பார்த்து மகா பிரபாவம் உடைய தேவரீரை
அத்யந்த-அதமனான நான் ஸ்துதிக்கை தேவரீருக்கு அவத்யமாய் தலைக் கட்ட கடவது ஆகையாலே ஸ்துதியாது-ஒழிகையே தேவரீருக்கு அதிசயம் இறே
-ஆனாலும் ஸ்தோத்ரம் பண்ணாது ஒழியில் என்மனசு ஆறி இராது -இப்படி ஆன பின்பு -மூர்க்கு பேசுகின்றான் இவன் -என்று தேவரீர் திரு உள்ளத்தில்
என்ன வோடுகிறதோ என்று நான் அத்தை-நினைத்து எப்போதும் பீதனாய் நின்றேன் என்று விண்ணப்பம் செய்கிறார் –

போற்ற முற்பட்டவர் -தகுதி யற்ற நான் புகழின்-தேவரீர் புகழ் மாசூணாதோ என்று தவிர்ந்து புகழின்-ஏற்றத்தை நிலை நிறுத்தலே நல்லது என்று தீர்மானித்தாலும்
என் மனம் தாங்குகிறது இல்லை -போற்றியே யாக வேண்டி இருக்கிறது –தேவரீர் நினைப்பு இவ் விஷயத்தில் எத் தகையதோ -என்று பயமாய் இருக்கிறது -என்று
தம் நிலையை எம்பெருமானார் இடத்தில் விண்ணப்பம் செய்கிறார்-
———————-
90-இவர் -அஞ்சுவன் -என்றவாறே இவர் பயம் எல்லாம் போம்படி குளிரக் கடாஷிக்க-அத்தாலே நிர்பீகராய் -கரண த்ரயத்திலும் -ஏதேனும் ஒன்றால்-
இவ் விஷயத்தில் ஓர் அநு கூல்யத்தை பண்ணி-பிழைத்து போகலாய் இருக்க சேதனர் ஜன்ம கிலேசத்தை அனுபவிப்பதே என்று இன்னாதாகிறார்-

கீழ்ப் பாட்டில் எம்பெருமானார் உடைய மதிப்பையும் -அவரை ஸ்தோத்ரம் பண்ணாமைக்கு-தமக்கு உண்டான அயோக்யதையும் அனுசந்தித்து -இவ் விஷயத்திலே
-நான் ஸ்துதிப்பதாக போர சாஹாச-கார்யத்துக்கு உத்யோகித்தேன் என்று அணாவாய்த்து -இவர் அஞ்சினவாறே -எம்பெருமானார் –
இவருடைய அச்சம் எல்லாம் தீரும்படி குளிர கடாஷிக்க -அத்தாலே நிர்பரராய் -ஸ்தோத்ரம் பண்ண ஒருப்பட்டு -இதில் லவ்கிகர் படியை கடாஷித்து
-எம்பெருமானார் யோக்யா அயோக்யா விபாகம் அற சர்வரையும்-கடாஷிக்கைக்காக வந்து அவதரிக்கச் செய்தே -இந்த லவ்கிகர் தம்மை ஒருக்கால் ப்ராசுரிகமாக-நினைத்தவர்களுடைய -சோஷியாத பவக்கடலை சோஷிப்பிக்குமவரான -இவரை நினைக்கிறார்கள் இல்லை -என்னை ரஷிக்கைக்காக நான் இருந்த இடம் தேடி வந்த இவரை
-ஈன் கவிகளால் ஸ்துதிக்கிரார்கள் இல்லை -அப்படி ஸ்துதிக்கைக்கு அதிகாரம் இல்லை என்றாலும் ஸ்துதிக்கும் அவர்களுடைய திருவடிகளை-ஆராதிக்கிறார்கள் இல்லை
ஐயோ இவற்றுக்கு எல்லாம் உறுப்பான ஜென்மத்தை பெற்று இருந்தும் அறிவு கேட்டாலே-ஜன்ம பரம்பரைக்கு அது தன்னை ஈடாக்கி கிலேசப்பட்டு போனார்களே என்று இன்னாதாகிறார் –

எம்பெருமானார் கடாஷத்தாலே அச்சம் தீர பெற்ற அமுதனார் -மூன்று கரணங்களுள் ஏதேனும் ஓன்று கொண்டு -எம்பெருமானார் திறத்தில் அநு கூலமான
செயலில் ஈடுபட்டு உய்யலாமே -அங்கன் உய்யாமல் மாந்தர் பிறந்து படும் துன்பத்தில்-அழுந்து கிறார்களே -என்று பிறருக்காக வருந்துகிறார்
—————————————-
91-இவர்கள் இப்படி இருக்கச் செய்தே இவர்களுடைய உஜ்ஜீவனார்த்தமாக-எம்பெருமானார் செய்தருளின க்ருஷியை யனுசந்தித்து அவரைக் கொண்டாடுகிறார் –

கீழ்ப் பாட்டிலே நித்ய சம்சாரிகளாய் இருக்குமவர்களையும் -அல்ப அநு கூலமுடையாரையும் -ஒக்க உத்தரித்த சர்வோத்தமரான எம்பெருமானாரை அநு வர்த்தியாதே -கர்ப்ப நிப்பாக்யராய் போந்தார்கள்-என்று அவர்கள் படியை அடைவே சொல்லி -இதிலே -தமோ குண முஷித சேமுஷீகராய்-ருத்ர ப்ரோக்தமான-ஆகமத்தை உத்தம்பகமாகக் கொண்டு பௌ த்த்யாத்த சாரங்களாய் ருத்ர பஷ பாதிகளான பாசுபதர்-சொல்லுகிற துஸ் தர்க்கங்கள் ஆகிற அந்தகாரத்தை பூ லோகத்தில் நின்றும் அகன்று போம்படி-பண்ணி அருளின எம்பெருமானார் –தம்முடைய நிர்ஹேதுக பரம கிருபையை ஒரு பாட்டம் மழை-பொழிந்தால் போல் லோகத்தில் எங்கும் ஒக்க ப்ரவஹிப்பித்து -சகல ஆத்மாக்களுக்கும் சுலபனாய்-கண்ணுக்கு இலக்காய் இருக்கிற பெரிய பெருமாளே வகுத்த சேஷி என்னும் அர்த்தத்தை நமக்கு எல்லாம்-பூரி தானம் பண்ணினார் –இவர் எத்தனை தார்மிகரோ என்று
-அவர் உபகரித்த உபகாரத்தை அனுசந்தித்து-அவர் தம்மை கொண்டாடுகிறார் –

இன்னும் பிறப்பில் வருந்தும் மாந்தர் உய்வதற்காக எம்பெருமானார் கைக் கொண்ட முயற்சியை-நினைவு கூர்ந்து அவரைக் கொண்டாடுகிறார் –
——————————-
92-சேதனர் இவ் விஷயத்தில் அல்ப அனுகூல்யத்தாலே உஜ்ஜீவிக்கலாய் இருக்க –ஜென்மாதி துக்கங்களை அனுபவிக்கிறபடியையும் -இவர்களுக்கு உஜ்ஜீவன அர்த்தமாக
-எம்பெருமானார் செய்த க்ருஷியையும் அனுசந்தித்தார் -கீழ் -இரண்டு பாட்டாலே –இப்பாட்டில் –தாம் அறிய ஒரு ஹேது அன்றிக்கே -இருக்க -தம்மை அங்கீ கரித்து
அருளுகைக்கும் -அருளுகையும் -அங்கீகரித்து அருளி பாஹ்யாப் யந்தர கரண விஷயமாய் -எழுந்து அருளி இருக்கிறபடியையும்-அது –அனுசந்தித்து -வித்தராய்
-இதுக்கு காரணம் இன்னது என்று -அருளிச் செய்ய வேணும் -என்கிறார் –

எம்பெருமானாரை ஆஸ்ரியாத கர்ப்ப நிர்பாக்யரை நிந்தித்தும் சமயக் ஞான ஹீனராய்-நிஷித்த மார்க்க நிஷ்டர் ஆனவர்களுடைய துர் உபதேசத்தாலே அவசன்னராய் போந்த
சேதனருடைய-அஞ்ஞானத்தை மாற்றி சர்வருக்கும் ஸ்ரீ ய பதியே சேஷி என்று உபதேசித்த பரம தார்மிகர் எம்பெருமானார்-என்று சொல்லிப் போந்தார் கீழ் இரண்டு பாட்டுக்களிலும்
இதிலே எம்பெருமானார் உடைய திருமுக மண்டலத்தைப் பார்த்து -அடியேன் இவ்வளவும் நான் அறிந்ததாக ஒரு சத் கர்மமும் பண்ணினேன் அல்லேன்
அப்படியே உத்தாரகமாய் இருப்பதோர் சூஷ்மமான விசேஷார்த்தத்தை கேட்பதாக பிரசங்கிப்பித்தும் செய்திலேன் -இது என் ரீதியாய் இருக்கச் சாஸ்திர
ப்ரவர்த்தகரானவர்களுக்கும் தொகை இட்டு சொல்ல வரிதான குணவத்தா-பிரதையை உடையரான தேவரீர் இவ்வளவும் வெறுமனே இருந்து -இன்று என்னுடைய
சமீபத்திலே பிரவேசித்து உட் கண்ணுக்கும் கட் கண்ணுக்கும் விஷயமாய் நின்றீர் -இதுக்கு ஹேது தேவரீரே சொல்ல வேணும் என்று-விண்ணப்பம் செய்கிறார் –

தம்மிடம் உள்ள மூன்று கரணங்களுள் -ஏதேனும் ஓன்று கொண்டு -எளிதில் மாந்தர் உய்வுற வழி இருந்தும் -பிறப்பிற்குள்ளாகி வருந்துவதையும் -அத்தகையோரும் உய்வதற்காக எம்பெருமானார் அருள் சுரந்து –மெய்ப் பொருள் சுரந்து -உபகரித்ததையும் -கீழ் இரண்டு பாட்டுக்களாலே அனுசந்தித்தவர் -இப்பாட்டில் -தாமறியத் தம்மிடம்
ஒரு ஹேதும் இல்லாத போது – தம்மை ஏற்று அருளுகைக்கும் -பின்னர் கண் என்னும் வெளிக் கரணத்திற்கும் -நெஞ்சு என்னும் உட் கரணத்திற்கும் விஷயமாய் -நிலை நின்று
எழுந்து அருளி இருப்பதைக் கண்டு –மிக்க ஈடுபாட்டுடன் -இதனுக்கும் காரணம் -இன்னது என்று -அருளிச் செய்ய வேணும் என்று -எம்பெருமானார் இடமே கேட்கிறார் –
—————————
93-அவர் இதுக்கு ஒன்றும் அருளிச் செய்யாமையாலே –நிர்ஹேது கமாகாதே -என்று தெளிந்து-என் பிரபல கர்மங்களை தம்முடைய கிருபையாலே அறுத்து அருளின எம்பெருமானார்
ஒருவர் அபேஷியாது இருக்க -தாமே வந்து -குத்ருஷ்டி மதங்களை நிராகரித்தவர் அன்றோ –அவர் செய்யுமது வெல்லாம் நிர்ஹேதுகமாக வன்றோ -விருப்பது -என்கிறார்-

கீழ்ப் பாட்டிலே எம்பெருமானார் உடைய திரு முக மண்டலத்தை பார்த்து இத்தனை-நாளும் என்னை அங்கீ கரிக்கையில் கால் கண்டித்து கொண்டு இருந்த தேவரீர்
-இப்போது அடியேன் பக்கல்-ஒரு கைம்முதல் இன்றிக்கே இருக்க -இப்படி அங்கீ கரிக்கைக்கு ஹேது ஏது-அத்தை சொல்லிக் காணீர்-என்று இவர் மடியைப் பிடித்தாலும்
அதுக்கு அவர் மறு உத்தரம் சொல்லாதே கவிழ்ந்து தலை இட்டு இருந்தவாறே –இப்படி நிர்ஹேதுகமாக கண்டிடுமோ என்று நினைத்து இதிலே
என்னுடைய பிரபல பாதகங்களை வாசனையோடு கூட தம்முடைய கிருபை யாகிற கட்கத்தை-சங்கல்பம் ஆகிற-உறையில் – நின்றும் உருவி அத்தாலே சேதித்து பொகட்டு
பிரபன்ன குலத்துக்கு எல்லாம் ஒக்க உத்தாரகரான-எம்பெருமானார் ஸ்வ அஞ்ஞான விஜ்ர்ம்பிதமான அபார்த்தங்களை எல்லாம் வேதார்த்தங்கள் என்று
பரம மூடரான குத்ருஷ்டிகள் சொலுகிற ப்ராமக வாக்யங்களை நிவர்ப்ப்பித்த பரம உபாகரர் ஆகையாலே
அவர் செய்வது எல்லாம் நிர்ஹேதுகமாக அன்றோ இருப்பது என்று தெளிந்து தம்மிலே தாமே சமாஹிதராய்-சொல்லுகிறார் –

தாம் கருதிய படியே பதில் கிடையாமையாலே -தம் வினைகளை வேரற களைந்து-தம்மை ஏற்று அருளியது -ஹேது வற்றது-என்று தெளிந்து -அத்தகைய எம்பெருமானார்
எவருமே வேண்டாது இருக்க தாமாகவே வந்து -குத்ருஷ்டி மதங்களை களைந்து –
உலகினர்க்கு உதவினவர் அன்றோ -அவர் செய்யும் அவை யாவையும் -கருணை யன்றி வேறொரு-காரணம் அற்றவைகளாய் அல்லவோ -உள்ளன -என்கிறார்-
——————————-
94-தம்மை நிர் ஹேதுகமாக அங்கீகரித்து -கர்மங்களைப் போக்கின படியை அனுசந்தித்தார் கீழ் ..இப்பாட்டில் எம்பெருமானார் தம்மை ஆஸ்ரயித்தார்க்கு-
பிரபத்தி நிஷ்டை தொடங்கி-பரமபதம் பர்யந்தமாக கொடுத்து அருளுவாரே ஆகிலும் –நான் அவர்கள் குணங்களை ஒழிய ஒன்றையும் விரும்பி புஜியேன் -என்கிறார்-

தம்மை நிர்ஹேதுகமாக அங்கீ கரித்து அநாதியான பாபங்கள் மறுவலிடாதபடி-தம்முடைய கிருபை யாகிற கடாக்ஷத்தாலே சேதித்து அத்தாலே பிரபன்ன ஜன கூடஸ்தரான
எம்பெருமானார் லோகத்திலே அபசித்தாந்தங்களை வேதார்த்தங்களாக பிரமிப்பிக்கும் குத்ருஷ்டிகளை நிரசித்த உபாகரகர் என்று கொண்டாடினார் – கீழ்ப் பாட்டில் –
இப் பாட்டில் -அந்த எம்பெருமானார் தம்மை ஆஸ்ரயித்தவர்க்களுக்கு சர்வோத்தரக ஹேதுவான பிரபத்தி உபாயத்தையும் -தத் உத்தர கால க்ர்த்யமான கைங்கர்ய ரூப சம்பத்தையும்
சரீர அநுரூப சம்பந்தத்தை அறுத்து பொகட்டு –பரம புருஷார்த்த லஷண மோஷத்தையும் அடைவே கொடுத்து அருளுவரே ஆகிலும் -அடியேன் அவருடைய
கல்யாண குணங்களை ஒழிய வேறொன்றை ஆதரித்து புஜியேன் என்று ஸ்வ அத்யவசாயத்தை அருளிச் செய்கிறார் –

காரணம் இன்றி தம்மைக் கைகொண்டு -கன்மங்களை கழலச் செய்தமையைக் கூறினார் கீழே –இப்பாட்டில் எம்பெருமானார் –தம்மைச் சார்ந்தார்க்கு தவம் தொடங்கி
திவம் முடிய அளிப்பரே யாயினும்–நான் அவருடைய குணங்களை ஒழிய வேறு ஒன்றையும் விரும்பி அனுபவியேன்-என்கிறார் –
——————————-
95-எம்பெருமானார் தம்மை ஆஸ்ரயித்தவர்களுக்கு உஜ்ஜீவனத்துக்கு வேண்டுவது எல்லாம்-தாமே உண்டாக்கி உஜ்ஜீவிப்பித்து விடுவர் என்றார் கீழ் .
இப்படி இருக்கிறவருடைய ஜ்ஞான சக்தியாதிகளை அனுசந்தித்த வாறே -இந்த லோகத்தில் உள்ளார்படி யன்றிக்கே -வ்யாவ்ருத்தமாய் இருக்கையாலே –
அச்ப்ருஷ்ட சம்சார கந்தரிலே ஒருவர் பரார்தமாக சம்சாரத்தில் அவதரித்தாராகவே நினைத்து அருளிச் செய்கிறார் -இதில் –

எம்பெருமானார் தம்மை ஆஸ்ரித்தவர்களுக்கு உத்தாரண ஹேதுவான உபாய விசேஷத்தையும் -அத்தாலே உண்டாக கடவ -பகவத் ப்ரீதி ரூப சம்பத்தையும்
ப்ராப்தி பிரதி பந்தகமான பாப விமோசனத்தையும் -தத் அனந்தர பாவியான பரம பத ப்ராப்தியையும் -பண்ணிக் கொடுப்பாரே யாகிலும் -நான் அவருடைய
கல்யாண குணங்களை ஒழிய வேறு ஒன்றை விரும்பி அனுபவியேன் -என்று அருளிச் செய்தார் -கீழ்ப் பாட்டிலே –
இப்பாட்டிலே -சகல ஆத்மாக்களுக்கும் அந்தர்யாமியாய் -அவர்களுடைய சகல பிரவர்த்தி நிவ்ருத்திகளையும்-பண்ணிக் கொடுக்கிற சர்வேஸ்வரனும்
இவரைப் போலே ஆஸ்ரித வ்யாமுக்தன் அல்லன் என்னும் படியாயும் -ஞான வைராக்யாதிகளாலே சம்சாரிகளைக் காட்டில் அத்யந்த வ்யாவ்ர்த்தர் என்னும் படியாயும்
இவர் தான் இருக்கையாலே –பரம பதத்தின் நின்றும் அந்த பரம ப்ராப்யத்தை எல்லார்க்கும் கொடுப்பதாக அச்பர்ஷ்ட சம்சார கந்தரில் ஒருவர் பரார்த்தமாக
இந்த லோகத்தில் -எம்பெருமானாராய் அவதரித்து -சர்வ காலமும் வேதார்த்தத்தை-ப்ரவர்த்திப்பித்தார் என்று அருளிச் செய்கிறார் –

தம்மை சார்ந்தவர்கட்கு உய்வுற வேண்டுமாவை யாவும் தானே உண்டு பண்ணி உதவி-எம்பெருமானார் உய்விப்பதை கூறினார் கீழே .இங்கனம் உய்விக்கும் அவருடைய
அறிவாற்றல்களைக் கண்டு உலகத்தாருக்கு உள்ளவை போன்றவைகள் அல்ல இவை -தனிப்பட்டவையாய் விளங்குகின்றன -ஆதலின் இவர் இவ் உலகத்தவர் அல்லர் .
சம்சார சம்பந்தம் அறவே அற்று இருக்கும் நித்ய சூரிகளில் ஒருவர் -வீடளித்து பிறரை உய்விப்பதற்க்காகவே அவதாரம் செய்தவராய் இருத்தல் வேண்டும் -என்று
தீர்மானித்து -அவதரித்து செய்யும் அவற்றை அனுசந்திக்கிறார் –இந்தப் பாசுரத்திலே –
————————————-
96-மறை நாலும் வளர்த்தனன் -என்றீர்-அவர் சேதனருக்கு உஜ்ஜீவன உபாயமாக வேதாந்த பிரக்ரியையாலே அருளிச் செய்தது-பக்தி பிரபத்தி ரூப உபாய த்வயம் இறே-
அதில் ஸூகர உபாயமான பிரபத்தியிலேயோ உமக்கு நிஷ்டை -என்ன -அதுவும் அன்று –தாம் அபிமத நிஷ்டர் என்னும் அத்தை அருளிச் செய்கிறார் –

கீழ்ப் பாட்டிலே நிக்ரஹ அனுக்ரஹங்கள் இரண்டுக்கும் பொதுவாய் தண்டதரனான-சர்வ ஸ்மாத் பரனிலும்-அஞ்ஞான நிக்ரஹராய் – பரம பதத்தில் நின்றும் ரஷண ஏக தீஷிதராய் வந்து –
அவதரித்த எம்பெருமானார் -நிர்ஹேதுக கிருபையை உடையவர் ஆகையாலே -சேதன சம்ரஷணார்த்தமாக-வேத வேதாந்த பிரவர்த்தனம் பண்ணி அருளினார் என்று
இவர் அருளிச் செய்ய கேட்டு -அருகில் இருப்பார் அந்த வேதாந்தந்களிலே-முமுஷூர்வை சரணமஹம் பிரபத்யே -என்று மோஷ அதிகாரிகளுக்கு சொன்ன
சரணாகதியில் நிஷ்டராய் இருந்தீரோ என்ன -சரணா கதி பெருகைக்கு பிரதி பந்தங்களான பிரபல கர்மங்களாலே -அது தன்னிலும் -மகா விசுவாசம் கிடையாதே
துர்கந்த பிரசுரமாய் -மாம்ஸா ஸ்ர்காதி மயமான சரீரம் கட்டுக்குலைந்து போம் அளவும் சுக துக்க அனுபவம் பண்ணிக் கொண்டு சகாயம் இன்றிக்கே இருக்கும் எனக்கு
அந்த சரமோ உபாயமான எம்பெருமானாரிலும் -சுலபமாய் -சேஷிகளாய் -எனக்கு ஸ்வாமியான அவர் தம்மையே
தந்தை நல் தாயம் தாரம் -இத்யாதிப்படியே சர்வ வித பந்துவாய் அத்யவசித்து -தேவு மற்று அறியேன் -என்று இருக்கும்
மகாத்மாக்களே வழித் துணையாய் -ரஷகராய் -இருப்பார் என்று அத்யவசித்தேன் -ஆகையால் -நான் ததீய அபிமான நிஷ்டன்-என்று அருளிச் செய்கிறார் –

மறை நாலும் வளர்த்தனன் என்றீர்-அவர் வேதாந்தத்தில் கூறிய முறையைப் பின் பற்றி உயிர் இனங்கள்-உய்வதற்கு உபாயங்களாக பக்தியையும் -பிரபத்தியையும்
அன்றோ அருளிச் செய்தார் -அவற்றில் எளிய உபாயமான பிரபத்தியையோ நீர் கைக் கொண்டது -என்ன-
நான் பிரபத்தி நிஷ்டன் அல்லேன்-எம்பெருமானாரைச் சேர்ந்தவர்களுடைய அபிமானத்திலே நிஷ்டை உடையேன் நான்-என்கிறார் –
—————————
97-இப்படி எம்பெருமானார் தம்மள வன்றிக்கே-அங்குத்தை க்கு அனந்யார்ஹராய் இருப்பார்-உத்தேச்யர் என்று இருக்கைக்கு இந்த ருசி உமக்கு
வந்த வழி தான் என் என்ன –அதுவும்-எம்பெருமானார் தம்முடைய கிருபையாலே வந்தது என்கிறார் –

கீழ்ப் பாட்டிலே எம் இறைவர் -இராமானுசனை உற்றவரே -என்று சர்வம் யதேவ நியமே ந மதந்வயாநாம் -என்றால் போலே எம்பெருமானாரை- தேவு மற்று அறியேன்
என்று பற்றி இருப்பாரே -தமக்கு உறு துணை -என்று இவர்-சொன்ன வாறே -உமக்கு அவர்தம் அளவில் அன்றிக்கே -அங்குத்தைக்கு -நிழலும் அடிதாரும் போலே
அனந்யார்ஹராய்-இருப்பாரும் கூட உத்தேச்யர் என்று இருக்கைக்கு ஈடான இந்த ருசி வந்த வழி தான் ஏது என்ன -திக்குற்ற கீர்த்தி -என்னும்படியான இவர்
தம்முடைய வைபவத்தை -கண்களால் கண்டும் செவிகளால் கேட்டும் -தம் பக்கலிலே-அடிமைப்படுவாரை இத்தனை ஒழிய -தமக்கு அனந்யார்ஹராய் இருப்பார்
பிறர்க்கு அடிமைப் படுவார் கிடக்க-தக்கார் என்று திரு உள்ளமாய் –முந்துற முன்னம் தம்முடைய சம்பந்தி சம்பந்திகள் பக்கலிலே என்னை-
அடிமைப்படுத்தினர் ஆகையாலே -இந்த ருசி அடியேனுக்கு அவருடைய கிருபையாலே வந்தது -என்கிறார் –

இப்படி எம்பெருமானார் அளவோடு நில்லாது -அவர் தம்மை உற்றவர்-அபிமானத்திலே நிஷ்டை ஏற்படும் படியான விருப்பம் -எவ்வாறு உமக்கு வந்தது
என்பாரை நோக்கி அதுவும் எம்பெருமானார் கிருபையினாலே வந்தது -என்கிறார் –
—————————————-
98-இப்படி எம்பெருமானார் செய்த உபகாரத்தை பேசினவாறே-இவர் திரு உள்ளமானது -நிருபாதிக பந்துவான ஈஸ்வரன் அநாதி காலம் ஸ்வர்க்க நரக கர்ப்பங்களிலே
தட்டித் திரிய விட்டு இருந்தது -கர்மத்தை கடாஷித்து அன்றோ –பிரகிருதி சம்பந்தம் கிடக்கையாலே துர் வாசனை மேலிட்டு விபரீதங்களிலே போகவும் யோக்யதை உண்டே –
இன்னும் ப்ராப்தி பர்யந்தம் ஆனால் இறே என்று தளர -எம்பெருமானார் தன்னை சரணம் என்றால் -அப்படி ஒன்றிலும் விட்டுக் கொடார்-
ஆகையாலே ப்ராப்தி நிமித்தமாக நீ கிலேசிக்க வேண்டா -என்கிறார் –

இப்படி எம்பெருமானார் தம்முடைய சர்வ உத்கர்ஷ்டமான அதிகாரத்திலே மூட்டின-உபகாரத்தை அனுசந்தித்து ஹ்ர்ஷ்டரானவாறே -இவருடைய திரு உள்ளமானது
நீர் இப்படி சொன்னீரே யாகிலும் -சர்வ நியந்தாவான சர்வேஸ்வரன் -அநாதி காலம் தொடங்கி -தத் தத் கர்ம அனுகுணமாக பலத்தை-கொடுப்பதாக சங்கல்பித்துக் கொண்டு இருக்கிறான் ஒருவன் ஆகையாலே -இவ்வளவும் ஸ்வர்க்க நரக-கர்ப்பங்களிலே இடைவிடாது அடைவே தட்டித் திரிய விட்டு இருந்து -நம்முடைய கர்மத்தை-கடாஷித்து அன்றோ
அக் கர்மங்களை உண்டாக கடவதான பிரகிருதி சம்பந்தம் நமக்கு இன்னும் கிடைக்கையாலே-துர்வாசனை மேலிட்டு திரும்பவும் நிக்ரஹத்துக்கு உடலான -துஷ்கர்மங்களிலே
அன்வயிக்கவும் -யோக்யதை உண்டே -ப்ராப்தி பர்யந்தம் ஆனால் இறே -நீர் இப்படி நிர்பரராய் சொல்லக் கூடுவது என்று தளரா நிற்க -எம்பெருமானார் தம்மை சரணம் என்றால்
அப்படி ஸ்வர்க்க நரகாதிகள் ஒன்றிலும் விட்டுக் கொடுக்கும்-ஸ்வபாவர் அல்லர் ஆகையாலே -இனி பிராப்தி நிமித்தமாக நீ கிலேசிக்க வேண்டாம் என்கிறார் –
——————————
99-நம்மை நம் வசத்தே விடுமே -மனமே நையேல் -என்றவாறே -ஆனாலும் -ஜ்ஞான வ்யவசாயங்களை பங்கிக்கும் பாஹ்ய குத்ருஷ்ட்டி பூயிஷ்டமான
தேசம் அன்றோ -என்ன –எம்பெருமானார் அவதரித்த பின்பு -அவர்கள் எல்லாரும் நஷ்டர் ஆனார்கள் என்கிறார் –

கீழ்ப் பாட்டிலே எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு -நம்மை நம் வசத்தே விடுமே -என்று-இவர் மகா விச்வாசத்தோடே சொன்னவாறே -அது சத்யம் -ஆனாலும்
சமயக் ஞானமும் -தத் அனுரூபமான அனுஷ்டானமும் -இவ்விரண்டையும் அடைவே அறிவிப்பிக்க கடவதான-வேதம் நடையாடாதபடி -அத்தை மூலை யடியே
நடப்பித்துக் கொண்டு உபத்ராவாதிகளான-பாஹ்ய குத்ருஷ்டிகள் தனிக்கோல் செலுத்தும் தேசம் என்பது என்ன -சமஸ்த புருஷார்த்த-பிரதத்வத்தாலே -கற்பகம்-என்று
சொல்லப்படுகிற எம்பெருமானார் இந்த மகா பிர்த்வியில்-அவதரித்த பின்பு அப்படிப்பட்ட நீச சமய நிஷ்டர் எல்லாரும் சமூலகமாக நஷ்டமாய் போனார்கள் -என்கிறார் –

நம்மை நம் வசத்தே விடுமே -மனமே நையல் -என்று மனத்தை தேற்றினார் -கீழ்-நம் வசத்தில் விட மாட்டார் என்னும் நம்பிக்கை குலையாமல் இருக்க வேண்டாமா –
பாஹ்யர்களும் குத்ருஷ்டிகளும் நிறைந்த இவ் உலகத்திலே அவர்களது சேர்க்கையாலே-அது குலைந்து விடில் என் செய்வது என்று -தம் மனம் தளர –
எம்பெருமானார் அவதரித்த பின்பு அவர்கள் அழிந்து ஒழிந்தனர் -தளரற்க-என்கிறார் –
——————————-
100-இப்படி தாம் உபதேசிக்கக் கேட்டு க்ருதார்த்தமாய் -தம்முடைய திரு உள்ளம் -எம்பெருமானார் திருவடிகளிலே போக்யத அனுபவத்தை ஆசைப் பட்டு
மேல் விழுகிற படியை கண்டு –அதின் ஸ்வபாவத்தை அவர்க்கு விண்ணப்பம் செய்து -இனிவேறு ஒன்றைக் காட்டி தேவரீர் மயக்காது ஒழிய வேணும் -என்கிறார்

கீழ்ப் பாட்டில் பிராப்தி நிமித்தமாக தளரா நின்ற தம்முடைய நெஞ்சினாரைக் குறித்து நாம்-சரம பர்வமானவரை ஒருக்கால் தொழுதோமாகில் நம்மை நம் வசத்தே
காட்டிக் கொடார் என்று உபதேசித்து தேற்றி -பூ லோகத்திலே பாஹ்ய குத்ருஷ்டிகள் வியாபித்து -லோகத்தாரை எல்லாரையும் அழிக்கப் புக்கவாறே
வேத-மார்க்க பிரதிஷ்டாபன முகேன -அவர்களை எல்லாரையும் ஜெயித்து -தமக்க கல்பக ஸ்த்தாநீயராய் இருந்த படியை-சொன்னவாறே -ஸ்ரீ ருக்மிணி பிராட்டியார்
கிருஷ்ணனுடைய வைபவத்தை கேட்டு அவனை வரிக்க வேணும் என்று-துடித்தால் போலே -இவருடைய திரு உள்ளமானது எம்பெருமானார் உடைய திருவடித் தாமரைகளில்
உள்ள மகரந்தத்தை வாய் மடுத்து பருகுவதாக பிர்யன்காயமாநமாய் இருக்கிறபடியை கடாஷித்த எம்பருமானார் உடன்-அதனுடைய தசையை விண்ணப்பம் செய்து
இனி வேறு ஒரு விஷயத்தை காட்டி என்னை தேவரீர் மயக்காது ஒழிய-வேணும் என்கிறார் –

இங்கனம் தேற்றப் பெற்ற நெஞ்சு -எம்பெருமானார் திருவடிகளிலே இன்பம் நுகர விழைந்து மேல் விழ-அதனது இயல்பினை
எம்பெருமானாருக்கு விண்ணப்பம் செய்து தேவரீர் வேறு ஒன்றினைக் காட்டி மயக்காது ஒழிய வேணும்-என்கிறார்-
————————–
101-இப்படி எம்பெருமானாருடைய போக்யதையிலே நெஞ்சு வைத்தவாறே-முன்பு இவ் விஷயத்தில் தாம் பண்ணின பாவனத்வ அனுசந்தானம்
அவத்யமாய்த் தோற்றுகையாலே-நான் தேவரீருடைய பாவனத்வத்தை-பேசினதானவிது தேவரீர் போக்யதையை அனுசந்தித்து இருக்குமவர்களுக்கு
அவத்யம் என்று சத்துக்கள் சொல்லுவார்கள்-என்கிறார் –

கீழ்ப் பாட்டிலே எம்பெருமானாருடைய போக்யதையிலே –அருவினையேன் வன் நெஞ்சு –என்னும்படியான தம்முடைய திரு உள்ளமானது -ஈடு பட படியைச் சொல்லி
இப்பாட்டுக்கு கீழ் பல-இடங்களிலும் –தீதில் இராமானுசன் -என்றும் –தூயவன் –என்றும் –எங்கள் இராமானுசன் -என்றும்-தாம் அனுபவித்த பாவநத்வத்தை ஸ்மரித்து
இந்த போக்யதைக்கும் -அந்த பாவனத்வத்துக்கும் -நெடு வாசி உண்டாகையாலும் -இப்படி இருந்துள்ள இவ்விஷயத்துக்கு அது அவத்யமாய்தலைக் கட்டுவதாலையாலும்
அப்போது அத்தை தப்பைச் சொன்னோம் -அத்தாலே அவர்க்கு என் பக்கல்-ப்ரீதி மட்டமாய் போகிறதோ என்று திரு உள்ளம் புண்பட்டு -இதிலே
-பந்தாயா விஷயா சங்கி -என்னும்படியான-மனசை உடையனான -தீர கழிய செய்த துஷ் கர்மத்தாலே -ஜன்ம பரம்பரைகளில் தட்டி திரியா நிற்கிற என்னை
அந்த துஷ் கர்ம பலமான ஜன்ம பரம்பரையாகிற துக்கத்தைப் போக்கி உஜ்ஜீவிக்கும் படி கைக் கொண்டு-கிருபை பண்ணியருளின எம்பெருமானாரே என்று
தேவரீர் உடைய பாவநத்வத்தை கீழ் பல இடங்களிலும்-நான் சொன்ன இது -தேவரீரை அனுசந்தித்து நீர்ப் பண்டம் போலே சிதிலமாய் போமவர்களுக்கு
அவத்யமாய் என்று ஞானாதிகரானவர்கள் சர்வ காலமும் சொல்லுவார்கள் என்று எம்பெருமானாரைப்-பார்த்து விண்ணப்பம் செய்கிறார் –

இங்கனம் எம்பெருமானார் உடைய போக்யதையிலே நெஞ்சு படிந்ததும் -முன்பு தாம்-அவர் திறத்து பண்ணின –பாவனர் -தூய்மை படுத்துமவர் -என்னும் பாவனை
குற்றமாகப் பட -எம்பெருமானாரை நோக்கி தேவரீரது போக்யதையிலே ஈடுபட்டு இருப்பவர்களுக்கு-நான் –பாவனர் -என்னும்பாவனையுடன் பேசினது
குற்றமாக தோன்றும் என்று -நல்லவர்கள் சொல்லுவார்கள் என்கிறார் –
—————————-
102-இப்படி பாவனத்வ அனுசந்தானமும் அசஹ்யமாம்படி -பரம போக்யபூதரான -எம்பெருமானார்-விஷயத்தில் -தம்முடைய அந்தக் கரணத்தொடு-பாஹ்ய கரணங்களோடு
-வாசி யற-அதி மாத்திர ப்ரவண மாய்ச் செல்லுகிற படியைச் சொல்லி –இந்த பூமிப் பரப்பு எல்லாம் கிடக்கச் செய்தே
தேவரீர் ஔ தார்யம் என் பக்கலிலே வர்த்திக்கைக்கு ஹேது என் -என்கிறார் –

கீழ்ப் பாட்டிலே -எம்பெருமானாருடைய போக்யதையில் ஈடு பட வேண்டி இருக்க –அப்படி இராதே -அவருடைய பாவனத்தைக் கொண்டாடினது -அவரை அனுசந்தித்து சிதிலராய் இருக்குமவர்களுக்கு-அசஹ்யமாய் இருக்கும் என்று சொல்லி -இதிலே -அவர்கள் விஷயத்தால் குற்றம் தீரும்படி-அந்த கரணத்தொடு பாஹ்ய கரணங்களோடு வாசி யற -எல்லாம் எம்பெருமானார் பக்கலிலே-அதி மாத்ர ப்ராவன்யத்தாலே சக்தங்களாய் ஆழம்கால் பட்டன என்று சொல்லா நின்று கொண்டு -இந்த பூ லோகத்தில் இருக்கும்
எல்லா சேதனரும் இருக்கச் செய்தே -தேவரீருடைய திவ்ய ஔதார்யம் என் ஒருவன் பக்கலிலும் கிளர்ந்து வருகைக்கு ஹேது என் என்று -அவர் தம்மையே கேட்கிறார் –

இங்கனம் தூய்மைப் படுத்துபவர் என்பது கூடப் பொறுக்க ஒணாத படியான-இனிமை வாய்ந்த எம்பெருமானார் திறத்து -தம் உட் கரணமும் -புறக் கரணங்களும்
எவ்வித பாகுபாடும் இன்றி -தாமே மிகவும் ஈடுபட்டு இருப்பதைச் சொல்லி –இப்பரந்த உலகினிலே அனைவரும் இருக்க -தேவரீருடைய வள்ளல் தனம்
என் மீது வளருவதற்கு ஹேது என்ன -என்று எம்பெருமானாரிடமே வினவுகிறார் –
——————————
103-இப்படி சர்வ கரணங்களும் தம் பக்கலிலே ப்ரவண மாகைக்கு உறுப்பாக-எம்பெருமானார் தம்முடைய ஔதார்யத்தாலே உமக்கு உபகரித்த
அம்சத்தை சொல்லீர் -என்ன-என்னுடைய கர்மத்தை கழித்து -அழகிய ஜ்ஞானத்தை விசதமாகத் தந்து அருளினார் -என்கிறார் –

கீழ்ப் பாட்டிலே தம்முடைய சர்வ கரணங்களையும் எம்பெருமானார் தம் விஷயத்தில்-அதி பிரவணராகும்படி பண்ணி -அனிதர சாதாரணமாகத் தம்முடைய ஔதார்யத்தை தம்மிடையே
வர்ப்பித்து அருளினார் -என்று சொல்லி வித்தரானவாறே -ஆக இப்படி சர்வ கரணங்களும் தம் விஷயத்திலே-யதி ப்ரவணராம் படி ஈடு படுகைக்கு உடலாக அவருடைய
ஔ தார்யத்தாலே இன்னமும் உமக்கு உபகரித்தமை ஏதாகிலும் உண்டோ என்ன -இதிலே -அத்யந்த கோபோவிஷ்டமாய் -அத்விதீயமான-நரசிம்ஹ அவதாரத்தை கொண்டாடி
ஸ்வ ஆஸ்ரிதரான தேவதைகளுடைய ஸ்தானங்களை-ஆக்கிரமித்து -லோகத்தை எல்லாம் பாதிக்கைக்காக கடக ஹஸ்தனாய் தனிக் கோல் செலுத்திக் கொண்டு திரிகிற
ஹிரண்யா சுரனுடைய ஸ்வரூபமான சரீரத்தை துரும்பைக் கிழிக்குமா போலே அநாயாசேன கிழித்துப் பொகட்ட-சர்வேச்வரனுடைய திவ்ய கீர்த்தியை தம்முடைய திரு உள்ளத்திலே எம்பெருமானார் உடைய –ஆத்யாத்மிகாதி துக்கங்களை வாசனையோடு ஒட்டி விட்டு -கரதலாமலகமாக -தத்வ ஹித புருஷார்த்த-யாதாம்ய ஞானத்தை கொடுத்து அருளினார் என்கிறார் –

எம்பெருமானார் தம் வண்மையினால் உமக்கு மட்டும் கரணங்கள் அனைத்தும்-தாமே தம்மிடம் ஈடுப்படும்படியாக உபகரித்தது எவ் வழியாலே என்பாருக்கு
என் கருமத்தை நீக்கி உபகரித்து அருளினார் -என்கிறார் –
————————–
104-உபதேச ஜ்ஞான லாப மாத்ரம் ரசிக்கிற படி கண்டால் -பகவத் விஷயத்தைசாஷாத் கரித்தீர் ஆகில் உமக்கு எப்படி ரசிக்கிறதோ என்று -எம்பெருமானாருக்கு
கருத்தாகக் கொண்டு –பகவத் விஷயத்தை விசதமாகக் காட்டித் தரிலும் -தேவரீர் திரு மேனியில் பிரகாசிக்கிற குணங்கள் ஒழிய நான் வேண்டேன் –
இதுக்கு ஈடான பிரசாதத்தை செய்து அருளில் இரண்டு விபூதியிலும்-கால் பாவுவன் -அல்லது தரியேன் -என்கிறார்-

கீழ்ப் பாட்டில் தத்வ ஹித புருஷார்த்த தத் யாதாம்ய ஞானத்தை சுவ்யக்தமாம்படி-உபதேசித்தார் என்று இவர் இனியராய் இருந்தவாறே -அத்தைக் கண்டு உபதேச மாத்ரத்துக்கே
இப்படி-இனியராய்க் கொண்டு ரசித்து இருந்தீர் –பகவத் விஷயத்தை சாஷாத் கரிக்கும்படி பண்ணிக்-கொடுத்தோம் ஆகில் எப்படி ரசித்து இனியராக கடவீரோ என்று
எம்பெருமானாருக்கு கருத்தாக-நினைத்து -தேவரீர் சகல ஜன மநோ ஹாரி -திவ்ய சேஷ்டிதங்களைப் பண்ணிக் கொண்டு போந்த-கிருஷ்ணனை கரதலாமலகமாக
காட்டித் தரிலும் தேவரீர் உடைய திவ்ய மங்கள விக்ரகத்திலே பிரகாசியா நின்றுள்ள-கல்யாண குணங்களை ஒழிய அடியேன் வேறு ஒரு விஷயத்தை வேண்டேன் என்ன
இவன் இப்படி-மூர்க்கு பேசலாமோ என்று சீறிப்பாறு செய்து அடியேனை சம்சாரமாகிற நரகத்தில் விழப் பண்ணினாலும் -நம்மையே பற்றி இருக்கிறான் இறே என்று
கிருபையாலே –நிரவதிக தேஜோ ரூபமான பரம பதத்திலே-கொண்டு போய் சேர்த்திடிலும்-வர்ஷூ கவலாஹம் போலே பரம உதாரரான எம்பெருமானாரே -தேவரீர் உடைய
திவ்ய மங்கள விக்ரகத்தை அனுபவிக்கைக்கு உடலான நிர்ஹேதுக பரம கிருபையாலே தேவரீர்-செய்து அருளின விபூதி த்வயத்திலும் வைத்துக் கொண்டு
ஏதேனும் ஓர் இடத்தில் கால் பாவி நின்று-தரிப்பன் – இல்லை யாகில் தரிக்க மாட்டேன் என்று ஸ்வ ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து அருளுகிறார் –

உபதேசித்த ஞானமே இப்படி ரசிக்கும்படி இருப்பின் -நேரே கண்ணனைக்-காட்டிக் கொடுத்து விட்டால் எங்கனம் நீர் ரசிப்பீரோ -என்று-எம்பெருமானாருக்கு
கருத்தாகக் கொண்டு –கண்ணனை நன்றாக காட்டித்-தந்தாலும் -தேவரீர் திரு மேனியில் விளங்கும் குணங்களை-ஒழிய நான் வேண்டேன்
இந்நிலையினுக்கு ஏற்றவாறு அருள் புரிந்தால் -சம்சாரத்திலும் பரம பதத்திலும் கால் பாவி நிற்பன் -இன்றேல் தரித்து இருக்க வல்லேன் அல்லேன் -என்கிறார்-
———————–
105-எல்லாரும் சம்சாரம் த்யாஜ்யம் பரம பதம் உபாதேயம் என்று அறுதி இட்டு-வஸ்தவ்யதேசம் அதுவே என்று அங்கே போக ஆசைப்படா நிற்க –
நீர் பரம பதத்தையும் சம்சாரத்தையும் சஹபடியா நின்றீர் –உமக்கு வஸ்தவ்ய தேசமாக நீர் தாம் அறுதி இட்டு இருப்பது எது -என்ன அருளிச் செய்கிறார்

கீழே -எம்பெருமானார் தமக்கு பண்ணி அருளின உபகாரத்தை அனுசந்தித்து-மகா உதாரரான எம்பெருமானாரே -என்று அவரை சம்போதித்து-தேவரீர் சுலபனான கிருஷ்ணனை
கரதலாமலகமாக பண்ணிக் கொடுத்தாலும் –அவன் நித்ய வாசம் பண்ணுகிற பரம பதத்தை கொடுத்தாலும் -அவனுக்கு கிரீடாகந்துக ஸ்தாநீயமான இந்த லீலா விபூதியைக் கொடுத்தாலும் –தேவரீர் உடைய திவ்ய மங்கள விக்ரக-அனுபவம் ஒழிய அவற்றில் ஒன்றும் எனக்கு வேண்டுவது இல்லை -ஆகையால் இவ் அனுபவம் எனக்கு எப்போதும்
நடக்கும்படி கிருபை பண்ணில் தரிப்பன் – இல்லை யாகில் ஜலாதுத்தர்த்த மத்ஸ்யம் போலே தரிக்க மாட்டேன் என்ன
அத்தைக் கேட்டவர்கள் -ஜ நிம்ருதி துரித நிதவ் மே ஜகதி ஜிஹா சாந்த்ரஜாம் பிதா பவத -பவ நு ச ந பசி பரஸ்மின் நிரவதிகா-நந்த நிர்ப்ப ரெலிப்ச – என்கிறபடியே
லோகத்தார் எல்லாரும் சம்சாரம் த்யாஜ்யம் என்றும் -பரம பதம்-உபாதேயம் என்றும் -அறுதி இட்டு அங்கே போக ஆசைப்படா நிற்க -நீர் இவ்விரண்டையும் சஹ படித்து சொன்னீர் –
இனி உமக்கு வஸ்தவ்ய தேசமாக அறுதி இட்டு இருப்பது என் என்று கேட்க –திருப்பாற் கடலிலே-கண் வளர்ந்து அருளின சர்வேஸ்வரனுடைய குணங்களில் ஈடுபட்டு -கலக்கமில்லா
நல் தவ முனிவராலே விரும்பப்பட்ட விலஷண ஞானத்தை உடையரான -பரம வைதிகராலே – தொழுது முப்போதும் -என்கிறபடியே-அநவரதம் சேவிக்கப் படா நின்றுள்ள
திருவடிகளை உடைய எம்பெருமானாரை -தேவும் மற்று அறியேன் -என்று சதா அனுபவம் பண்ணிக் கொண்டு இருக்குமவர்கள் எழுது அருளி இருக்குமிடம்
அவர்கள் அடியேனான-எனக்கு வஸ்தவ்ய தேசம் என்று கீழே தாம் சொன்ன ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து அருளுகிறார் –

எல்லாரும் தோஷம் நிறைந்த சம்சாரத்தை அருவருத்து -பரம பத்திலே
போய் இருக்க ஆசைப்படா நிற்பர் -நீரோ -சம்சாரத்தையும் பரம பதத்தையும்
ஓன்று போலேபேசா நின்றீர் -எங்கு இருப்பினும் சரியே என்றீர் .
நீர் போய் இருக்க ஆசைப்படும் இடம் தான் எது -அதனை சொல்லீர் -என்ன –
அது தன்னை அருளிச் செய்கிறார் –

——————————-
106-இப்படி இவர் தமக்கு -தம் பக்கல் உண்டான அதி மாத்திர ப்ராவண்யத்தை கண்டு -எம்பெருமானார் -இவர் திரு உள்ளத்தை மிகவும் விரும்பி யருள –
அத்தைக் கண்டு உகந்து அருளிச் செய்கிறார் –

திருவடிகளை ஆஸ்ரயித்த மகாத்மாக்கள் –அவர் தம்முடைய குண அனுபவ ஜனித-ஹர்ஷ பிரகர்ஷத்தாலே களித்து சசம்ப்ர்ம ந்ர்த்தம் பண்ணும் இடம் தமக்கு
வாசஸ்தானம் என்று கீழ்ப்பாட்டில் அருளிச் செய்து -இப்பாட்டிலே -வேத -தத் உப ப்ரஹ்மணாதிகளாலே பரிசீலனத்தை பண்ணி இருக்குமவர்கள்
சர்வேஸ்வரனுக்கு உகந்து அருளின நிலங்களாக சொல்லுகிற -ஸ்ரீ வைகுண்டம் வட திருமலை தென் திருமலை-தொடக்கமான திவ்ய தேசங்களோடு கூட
எம்பெருமானாருடைய திரு உள்ளத்திலே அவன் மிக விரும்பி வர்த்திக்குமா போலே –இப்போது –அந்த திவ்ய தேசங்களோடும் – அந்த திவ்ய தேசங்களுக்கு நிர்வாஹனான
சர்வேச்வரனுடனும் கூட வந்து எம்பெருமானார் தாமும் நிரதிசய சுகமாக எழுது அருளி இருக்கிற ஸ்தலம்-தம்முடைய திரு உள்ளம் என்று அனுசந்தித்து பிரீதர் ஆகிறார் –

இப்படித் தம்பால் எல்லை கடந்த ஈடுபாட்டினை கண்ட எம்பெருமானார் -அமுதனாருடைய திரு உள்ளத்தை மிகவும் விரும்பி யருள -அதனை நோக்கி -அக மகிழ்ந்து அருளிச் செய்கிறார் .
—————————-
107-இப்படி தம் பக்கலிலே வ்யாமோஹத்தை பண்ணா நிற்கிற-எம்பெருமானார் உடைய திரு முகத்தைப் பார்த்து -தேவரீருக்கு விண்ணப்பம்
செய்ய வேண்டுவது ஓன்று உண்டு -என்று தம்முடைய அபேஷிதத்தை விண்ணப்பம் செய்கிறார் –

கீழ்ப் பாட்டிலே எம்பெருமானார் தம்முடைய திரு உள்ளத்திலே புகுந்து நிரதிசய ப்ரீதி யோடு கூட-நித்ய வாசம் பண்ணா நின்றார் -என்று தம் அளவிலே
அவர் பண்ணின விஷயீ காரத்தை அனுசந்தித்து – இதிலே-அப்படி பட்ட வியாமோஹத்தையும் நிரவதிக சௌசீல்யத்தையும் உடையவரே என்று சம்போதித்து –
அஸ்திகதமாய் நின்று நலிய கடவ வியாதிகளுக்கு பாஜநமான சரீரங்கள் தோறும் ஜநிப்பது மரிப்பதாய் கொண்டு -அசந்க்யேயமான துக்கங்களை அனுபவித்து
உரு மாய்ந்து முடியிலும் -சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும்—தேவரீருக்கு அனந்யார்ஹராய் இருக்குமவர்கள் பக்கலிலே அதி வ்யாமுக்தனாய்
அவர்களுக்கு க்ரய விக்ரய அர்ஹனாய்-கொண்டு அடிமைப்படும் படி அடியேனைப் பண்ணி அருள வேண்டும் என்று தம்முடைய அபேஷிதத்தை விண்ணப்பம்-செய்கிறார்

தன்னுடைய மேன்மையைப் பாராது -எனது தண்ணிய இதயத்து உள்ளே இன்பமாய்-இடம் கொண்டு இருக்க வேண்டுமானால் -எம்பெருமானாருக்கு என் மீது எவ்வளவு வ்யாமோஹம்
இருக்க வேண்டும் என்று –அவரது வ்யாமோஹத்திலும் சீல குணத்திலும் தாம் ஈடுபட்டமை தோற்ற -அவரை விளித்து -தாம் ஒரு விண்ணப்பம் செய்யப் போவதாகச் சொல்லி –
எத்தகைய துன்பம் நேரும் காலத்திலும் தேவரீர் தொண்டர்கட்கு அன்புடன் நான்-ஆட்படும்படியாக அருள் புரிய வேண்டும் என்று தமக்கு வேண்டியதை-விண்ணப்பம் செய்கிறார்-
————————-
108-நிகமத்தில்-இப்ப்ரபந்த ஆரம்பத்திலே-இராமானுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ -1 – என்ற ப்ராப்யம் தமக்கு யாவதாத்மபாவியாம்படி கை புகுருகையும் -அந்த ப்ராப்ய ருசி ரூப பக்தி பௌஷ்கல்யமே தமக்கு அபேஷிதமாகையாலே –தத் உபய சித்யர்த்தமாக ஸ்ரீ ஆகையாலே -தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு என்றும் சார்வு -மூன்றாம் திருவந்தாதி-100 -என்கிறபடியே சர்வாத்மாக்களுக்கும் என்றும் ஒக்க சார்வாய் -சம்பத் ப்ரதையான-பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிப்போம்-என்கிறார் –

நிகமத்தில் -கீழ் இரண்டு பாட்டிலும் எம்பெருமானார் தம்மை நிர்ஹேதுகமாக-அபிமானித்து தம்முடைய திரு உள்ளத்திலே எழுந்து அருளி இருந்து நித்ய வாசம் பண்ணுகிற
படியையும் -அநந்தரம் தமக்கு ததீய பர்யந்தமாக ப்ரேமம் பிறந்து -அவர்கள் விஷயத்தில் அசேஷ சேஷ-வ்ர்த்திகளும் பண்ணிக் கொண்டு போரும்படி என்னை கடாஷித்து அருள வேணும் என்று தம்முடைய-அபிமத்தை அருளிச் செய்து -இப்பாட்டிலே –எம்பெருமானார் திருவடிகள் ஆகிற செவ்விப்பூவை-நம்முடைய தலை மேலே கலம்பகன் மாலை அலங்கரிப்பாரைப் போலே அலங்கரித்து ஸ்தாவர-பிரதிஷ்டையாக நிறுத்தி அருளினார் ஆகையாலே –அந்த பரிக்ரஹா அதிசயத்தை கொண்டு திவ்ய தம்பதிகளான- ஸ்ரீ -ஸ்ரீயபதிகளை மங்களா சாசனம் பண்ணுவோம் என்று பக்தி தத்வம் எல்லாம் தன்னளவிலே குடி கொண்டது என்னும்படி அத்ய அபி வர்த்தமான தம்முடைய திரு உள்ளத்தோடு கூடி-பலத்தை சொல்லித் தலைக் கட்டுகிறார்
இப் பிரபந்த ஆதியிலே தமக்கு உசாத் துணையாக தம்முடைய மனசைக் கூட்டிக் கொண்டு –எம்பெருமானார் உடைய திரு நாமத்தை சொல்லுவோம் வா என்று -உத்யோகித்தபடியே செய்து –
அத்தாலே தமக்கு பலித்த அம்சத்தை -இருவர் கூடி ஒரு கார்யத்தை பண்ண ஒருப்பட்டு -அது தலைக்கட்டினவாறே அதிலே ஒருவன் தனக்கு தோழனான இரண்டாம் அவனுக்கு அந்த செய்தியை சொல்லுமா போலே-இவரும் தமக்கு சகாவான திரு உள்ளத்தை சம்போதித்து சொல்லுகிறார் -அடியிலே நெஞ்சு என்னும் திரு உள்ளத்தைக்-கூட்டிக் கொண்டு உபக்ரமித்தார் ஆகையாலே -இங்கே நெஞ்சே என்று தம் திரு உள்ளதோடு கூடி-அனுபவித்து தலை கட்டுகிறார் –

இந்தப் பிரபந்தத்தைப் பூர்த்தி செய்பவராய்த்-தொடங்கும் போது -இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -என்றுதாம் அருளிச் செய்த பேறு -தமக்கு ஆத்மா உள்ள அளவும்
கைப்படவும் -அப் பேற்றினைப் பெறும் வேட்கை வடிவமான பக்தி தழைக்கவும் –விரும்பி-அவ் விரண்டும் தமக்கு கை கூடுவதற்காக –ஸ்ரீ தேவி யாதலின் -அனைவராலும் ஆச்ரயிக்கப் படுவாளாய் -அதனுக்கு ஏற்ப -தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு என்றும் சார்வு -மூன்றாம் திருவந்தாதி – 100-என்றபடி-
உயரினம் அனைத்துக்கும் சார்வகிச் செல்வம் அளிப்பவளான-பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிப்போம் என்று அமுதனார் தம் நெஞ்சை நோக்கிக் கூறுகிறார் .

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: