ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி–பாசுரங்கள் -1-21-/அவதாரிகை /-ஸ்ரீ மா முனிகள் /ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் / ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் -அருளிச் செய்தவை –

1-தம் திரு உள்ளத்தை குறித்து -எம்பெருமானார் உடைய திருவடிகளை நாம் பொருந்தி-வாழும் படியாக அவருடைய திரு நாமங்களை சொல்லுவோம் வா –என்கிறார்-

பிள்ளை அமுதனார் -தமக்கு ஆசார்ய பிரசாதத்தாலே -லப்தமாய் –மந்திர ரத்ன கண்ட த்வயார்த்த யாதாத்ம்ய ஜ்ஞான ரூபமாய் –
பரம ரகஸ்யமாய் இருந்துள்ள -அர்த்த விசேஷங்களை -ஏகஸ் ஸ்வா து ந புஞ் ஜீத -என்கிறபடியே கிண்ணத்தில் இழிவார்க்கு -துணை தேட்டமாமாப் போலே
எம்பெருமானருடைய கல்யாண குண சாகரத்திலே -இழிவதுக்கு துணைத் தேட்டமாய் -உபய விபூதியிலும் ஆராய்ந்தால்
நித்ய விபூதியில் உள்ள நித்ய சூரிகளும் முக்தரும் -சதா பஸ்யந்தி -என்கிறபடியே -பரத்வத்தை முற்றூட்டாக அனுபவித்து -சாம கானம் பண்ணிக் கொண்டு களித்து
நோபஜன ஸ்மரன் நித சரீரம் -என்கிறபடியே -லீலா விபூதியிலே -கண் வையாதே-இருந்தார்கள் ஆகையாலும்
லீலா விபூதியில் உள்ள சம்சாரி ஜனங்கள் ப்ராக்ர்தத்வேன அஜ்ஞ்ஞர் ஆகையாலே-நந்தத்த்யுதித ஆதித்ய நந்தன் த்யச்தமி தேரவவ் -என்றும்-
உண்டியே உடையே உகந்தோடும் இம் மண்டலம் -என்றும்-சொல்லுகிறபடியே உண்டு உடுத்து -புறமே புறமே யாடி -என்கிறபடி
லீலா விபூதியிலே -ஸௌரி சிந்தா விமுகராய் -விஷயாந்தரந்களிலே மண்டி இருக்கையாலும்
எம்பெருமானார் சம்பந்தம் உடைய ஜ்ஞாநாதிகர் எல்லாரும் -பாலே போல் சீர் -என்கிறபடியே-பரம போக்யமான அவருடைய கல்யாண குணங்களை -அனுபவித்து –
காலாழும் நெஞ்சழியும் இத்யாதிப்படியே அவ் அனுபவத்தில் ஆழம்கால் பட்டு -குமிழ் நீருண்டு நின்றார்கள் ஆகையாலும்-இந் நால்வரும் துணை யாகாது ஒழிகையாலே
தம்முடைய சுக துக்கங்களுக்கு எப்போதும் பொதுவாய் இருக்கிற தம் மனசே துணையாக வேண்டும் என்று திரு உள்ளம் பற்றி -அது தன்னையே சம்போதித்து சொல்லுகிறார் –

எம்பெருமானார் திருவடிகளில் பொருந்தி நல் வாழ்வு பெறும்படி அவர் திரு நாமங்களை சொல்லுவோம் வா-என்று அமுதனார் தம் திரு உள்ளத்தை குறித்து அருளி செய்கிறார்-
———————————-
2-என்னுடைய நெஞ்சானது எம்பெருமானாருடைய சீல குணம் ஒழிய-வேறு ஒன்றை நினையாதபடி யாயிற்று-–இது எனக்கு சித்தித்த பெரு விரகு ஒன்றும் அறிகிலேன் என்கிறார் –

கீழில் பாட்டில் -நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -என்று தம்முடைய மனசோடு கூடி உபதேசித்த வாறே-மனசானது அவனுடைய சீல குணத்திலே ஆழம் கால் பட்டு
அநந்ய சிந்தயந்தோமாம் -என்கிறபடியே-அவர் திருவடிகளை அனுபவித்துக் கொண்டு -தத் வ்யதிரிக்தமானவற்றை விரும்பாதே இருந்தது –இது என்ன ஆச்சர்யம் –என்கிறார் –

நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -என்றதும் என்நெஞ்சு எம்பெருமானாரது பழகும் தன்மையில்-மூழ்கி –சீல குணத்தில் ஈடுபட்டு
வேறு ஒன்றையும் நினைக்க கில்லாததாயிற்று -இச் சீரிய நிலை எய்துதற்கு-காரணம் ஏதும் தெரிய வில்லை என்கிறார் –
——————–
3-ப்ராக்ருதரோட்டை சம்பந்தத்தை நீக்கி எம்பெருமானார் திருவடிகளில் சம்பந்தம் உடையவர்கள்-
திருவடிகளிலே என்னை சேர்த்த உபகாரத்துக்கு நெஞ்சே உன்னை வணங்கினேன் என்கிறார் –

கீழ்ப்பாட்டில் தம்முடைய நெஞ்சானது எம்பெருமானார் உடைய சீல குணத்தில்ஈடுபட்ட மாத்ரமன்றிக்கே -இப்படி அனுபவிக்க அனுபவிக்க–அபிநிவேசம் கரை புரண்டு
என்னைக் கொண்டு போய் ததீயர் உடைய திருவடிக் கீழ் சேர்த்தது –இந்த மகா உபகாரத்துக்கு தக்க-
சமர்ப்பணம் தம் பக்கல் ஒன்றும் இல்லை என்று நெஞ்சினாருடைய காலில் விழுகிறார் –

எனக்கு கருவியாகிய நெஞ்சு எம்பெருமானாருடைய மிக்க சீலம் என்னும் குணத்தை ஒழிய -வேறு ஒன்றும் சிந்திக்கிறது இல்லை–இந்நிலை எனக்கு வாய்க்க நான்
ஒரு உபாயமும் அனுஷ்டிக்க வில்லையே -என்று வியந்தார் -இந்தப் பாட்டில் என் நெஞ்சு எனக்கு உரிய-கருவி இல்லாமல் என்னைத் தனக்கு உரியவனாக
ஆக்கிக் கொண்டு விட்டது -விடவே என்னிடம் பேர் இயல்வு ஒன்றும் இல்லாமல்–சீல குணத்தில் ஆழ்ந்து –
அவன் அடியாரார் அளவும் தான் ஈடுபட்டதோடு அமையாமல் -தீய பிறப்பாளரோடு எனக்கு உள்ள உறவை அறுத்து –எம்பெருமானாருக்கு
அன்பர்கள் உடைய அடிகளில் என்னை சேர்த்தும் விட்டது -அவ உபகாரத்துக்காக -அந் நெஞ்சினைப் பணிந்தேன் -என்றார்-
————————————
4-இப்படி இவர் திரு உள்ளத்தைக் கொண்டாடின வாறே –இன்னமும் துர் வாசனையாலே இந் நெஞ்சு தான் நழுவ நிற்குமாகில் உம்முடைய-நிஷ்டைக்கு
ஹானி வாராதோ -என்ன சர்வரும் விரும்பி விவேகித்து அனுபவிக்கும் படி-ஸ்ரீ பாஷ்யமும் கீதா பாஷ்யமும் அருளி-விவேக்கும் படி-
எம்பெருமானார் தாமே நிர்ஹேதுகமாக அங்கீகரிக்கப் பெற்ற-எனக்கு ஒரு ஹானியும் வாராது -என்கிறார் –

-இப்படி மூன்று பாட்டு அளவும் தம்முடைய அபிநிவேச அதிசயத்தை சொல்லினால் –இது ஸ்வகதமாக வந்தது –அத்யந்த பாரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு
சேருமோ -பரகதமாக வந்ததே யாகிலும்-அதுக்கு பிரச்யுதி இல்லையோ என்ன அருளிச் செய்கிறார்-

அடிக் கீழ் சேர்த்த நெஞ்சு -நின்றவா நில்லாது பண்டைய பழக்கம் தலை தூக்கி அந்நிலை யினின்றும்-நழுவி விடில் -உம் நிலை என்னாவது என்ன –
எம்பெருமானார் நிர் ஹேதுக கிருபையாலே கண்டு-கொண்டேன் -என்னைப் பண்டை வல் வினை வேர் அறுத்து தம் பாதத்தினை என் சென்னியில்
வைத்திடலால் எனக்கு ஒரு குறையும் வர வழி இல்லை என்கிறார் –
———————-
5-இப்படி எம்பெருமானார் உடைய விஷயீகார தார்ட்யத்தை அருளி செய்த அநந்தரம் –அவர் திரு நாமங்களை சொல்லுவோம் -என்று முன்பு உபக்ரமித்த படியே
ஸ்தோத்ரம் பண்ணுவதாக-உத்யோகித்தவர் -அதில் நிரவத்யமாக-செய்கை அரிது ஆகையாலே லாஷணிகர் நிந்திப்பார்களே-என்று
நிவ்ருத்ய உன்முகராய்-மீளவும் தாமே சித்த சமாதானம் பண்ணிக் கொண்டு பிரவ்ருத்தர் ஆகிறார் –

கீழ்ப் பாட்டிலே எம்பெருமானார் தம்மை நிர்ஹேதுகமாக விஷயீகரித்தார் என்றுகொண்டாடினார் -இதில் -அந்த ப்ரீதியாலே ப்ரேரிதராய்க் கொண்டு –
அவருடைய குண கீர்த்தனம் பண்ண உத்யோகித்து –குத்ருஷ்டிகளாய் இருப்பார் இதில் ஏதேனும் ஒரு குற்றத்தை ஆரோபித்து -தூஷித்தார்கள் ஆகில் –
அதுவே எனக்கு பூஷணம் -என்று சொல்லா நின்று கொண்டு -இதன் ரசம் அறிந்தவர்கள்-குணமாக விரும்புவார்கள் –என்கிறார் –

எம்பெருமானார் தாமாகவே என்னை அபிமானித்த படியால் -இந்நிலையினின்றும்-நான் நழுவ வழி இல்லை என்றார் கீழே –இனி -சொல்லுவோம் அவன் நாமங்களே
-என்று தொடங்கின படியே துதி செய்ய இழிந்தாராய்-இலக்கணம் வல்லவர்கள் இத் துதியில் குற்றம் குறை கண்டு பழி ப்பார்களே என்று மீண்டு-மறுபடியும்
எம்பெருமானாற்கு அன்பர்கள்-பக்தன் சொன்னது -என்று இதில் குற்றம் குறை காண-இயலாது என்று தேறித் தோத்திரம் செய்ய முற்படுகிறார் –
———————————
6-பத்தி ஏய்ந்த வியல்விதென்று என் பாவினக் குற்றம் காண கில்லார் -என்றார் கீழ்.
அந்த பக்தி தான் தமக்கு உண்டோ என்று பார்த்த இடத்தில் –அதவும் விஷய அனுகுணமாக-தமக்கு இல்லாமையாலே-ஸ்தோத்ர யுக்தரான தம்மை கர்ஹிக்கிறார் –

கீழில் பாட்டிலே மந்த மதிகள் -பழி சொன்னார்கள் ஆகில் -அதுவே தமக்கு பூஷணம் என்றார் –இப்பாட்டிலே -என்னைப் பார்த்து
-கீழ்ப்பாட்டிலே ப்ரஸ்துதரான அஞ்ஞர் சொல்லும் பழிக்கு ஒரு படி-சமாதானம் பண்ணிக் கொண்டு போனதாம் –
என்னைப்பார்த்தால் -சர்வ லோக பிரசித்தரான எம்பெருமானார் உடைய வைபவத்துக்கு தகுதியாய்-இருந்துள்ள பக்தி பிரேமங்களில் ஒன்றாகிலும்
என் பக்கலிலே இல்லை -ஆனாலும் -அவர் தம்மை-ஏத்துவதாக உத்சாஹியா நின்றேன் -எத்தனை சாஹசம் பண்ணத் தொடங்கினேன் என்று – கர்ஹிக்கிறார் –

அன்பர் பக்தி பாட்டு என்று என் பாவினக் குற்றம் காணகில்லார் –ஆதலின் புகழ் முழுதும் உள் பொதியத் துதிப்பேன் என்று ஊக்கம் மிக்கவராய்
முற்பட்டுத் துதிக்கப் பட-வேண்டிய எம்பெருமானாருடைய ரூப குணாதிகளிலே நாட்டம் செலுத்தினார் –
-அவை எம்பெருமானார்-அருளால் அளவிடற்கு அரியனவாய் விரிந்து கிடந்தமை தெரிந்தது இவர்க்கு -பீடு வாய்ந்த இவற்றை பற்றிப் பாடுவதற்கு
ஏற்ற பக்தி தம்மிடம் உண்டோ என்று பார்த்தார் -பாட வேண்டிய விஷயமோ மிகப்பெரியது .பாடுவதற்கு வேண்டிய பக்தியோ இல்லை என்று
சொல்லலாம்படி மிக சிறியது .அங்கனம் இதனை ஆராய்ந்து என் நெஞ்சம் இதனில் ஈடுபட்டது என்று தம்மை இகழ்ந்து-துதிப்பதினின்றும் மீளுகிறார் –
—————————
7-இப்படி தம்முடைய அயோக்யதையை பார்த்து -நமக்கு இது துச்சகம் -என்று மீள நினைத்தவர் –ஆழ்வான் திருவடிகளில் சம்பந்தமுண்டான பின்பு
எனக்கு அசக்ய அம்சம் ஒன்றும் இல்லை -என்று-ஸ்தோத்ரத்திலே பிரவ்ருத்தர் ஆகிறார் –

கீழ்ப் பாட்டிலே ஞான பக்த்யாத்யா அனுபவ ரூபமான தம்முடைய அயோக்யதையை-நினைத்து பிரபந்த ஆரம்பத்திலே பிற்காலித்து-இப்பாட்டிலே-ஆழ்வான் திருவடிகளின்
சம்பந்தம் ஆகிய ராஜ குல மகாத்ம்யத்தை அனுசந்தித்து –இப் பிரபந்த உத்யோகம் கடினம் அல்ல –சுலபமாயே யாய் இருக்கும் என்று-அதிலே ஒருப்படுகிறார்

துதிக்கத் தகுதி இன்மையின் எனக்குத் துதித்தல் அரிய செயல் என்று மீண்டவர் -இப் பொழுது –ஆழ்வான் திருவடி சம்பந்தம் உண்டான பின்பு தகுதி இன்மை
அப்படியே நிற்குமோ ?-அது நீங்கி விட்டமையின் எனக்கு அரியது ஒன்றும் இல்லை என்று மீண்டும் துதிக்க இழிகிறார் –
——————–
8-இனி மேல் எல்லாம் ஸ்தோத்ரம் பண்ணுகிறார் —பொய்கை ஆழ்வார் அருளி செய்த திவ்ய பிரபந்தத்தை திரு உள்ளத்திலே வைத்து கொண்டு
இருக்கும்-பெருமையை உடைய எம்பெருமானார் எங்களுக்கு நாதன் என்கிறார் –

இவ்வளவும் ஸ்தோத்ர உத்போகாதம் –இனி மேல் எல்லாம் ஸ்தோத்ரம் பண்ணுகிறார்-லோகத்தாருடைய அஞ்ஞான அந்தகாரத்தை நிவர்திப்பித்து –
அவர்களுக்கு ஹேய உபாதேய விவேகத்தை உண்டாக்கி -உபகரிப்பதாக ஞான தீபத்தை எடுத்து பொய்கை ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய பிரபந்தத்தை –
தம்முடைய-திரு உள்ளத்திலே ஸூ பிரதிஷ்டிதமாம்படி வைத்த பெருமை உடையரான எம்பெருமானார்-நமக்கு நாதர் என்கிறார் –

கீழ் ஏழு பாட்டுக்களும் முக உரையாய் அமைந்தன –அவைகளும் எம்பெருமானார் பெருமையை புலப்படுத்துவனவாய் அமைதலின்-துதிகளாகவே கொள்ளத்தக்கன -இனி துதியை தொடங்குகிறார் –எம்பெருமானார் பெருமைகளில் ஆழ்வார்கள் சம்பந்தமே சிறந்து விளங்குவது ஆதலின்-அதனைப் பேச முற்பட்டு
பொய்கை ஆழ்வார் அருளி செய்த திவ்ய பிரபந்தத்தை தம் சிந்தையிலே அனுசந்தித்து கொண்டே இருக்கும் பெருமையை கூறி –
அத்தகைய எம்பெருமானார் எங்களுக்கு இறைவர் -என்கிறார் –
———————-
9-பூதத் ஆழ்வார் திருவடிகளைத் தம் திரு உள்ளத்திலே வைத்து அனுபவிக்கும் எம்பெருமானார்
திவ்ய குணங்களைச் சொல்லும் அவர்கள் -வேதத்தை ரஷித்து-லோகத்திலே பிரதிஷ்டிப்பிக்கும்-அவர்கள் என்கிறார் –

கீழ்ப் பாட்டிலே பொய்கை யாழ்வார் சம்பந்தத்தாலே -சர்வோ நாதரான-எம்பெருமானார் தமக்கு ஸ்வாமி என்று அருளிச் செய்தது -இப்பாட்டிலே
சர்வ ஸ்வாமியான சர்வேஸ்வரனை காண்கைக்கு சர்வர்க்கும் உபகரணமாய்-இருந்துள்ள ஹ்ருதயம் -அஞ்ஞான அந்தகாரத்தாலே மோஹித்து போகையாலே
அத்தை நசிப்பதாக பர ஞானம் ஆகிற பரி பூர்ண தீபத்தை ஏற்றி அருளின -பூதத் ஆழ்வாருடைய திருவடிகளை மனசிலே வைத்துக் கொண்டு-அனுபவிக்கிற
எம்பெருமானார் உடைய கல்யாண குணங்களை அனுசந்தித்து சத்துக்களானவர்கள் இந்த லோகத்திலே சகல வேதங்களையும்
பாஹ்ய குத்ருஷ்டிகளால் அழிக்க ஒண்ணாதபடி ரஷித்து சூபிரதிஷ்டமாக வைக்க வல்லவர்கள்-என்கிறார் –

பூதத்தாழ்வார் திருவடிகளைத் தம் திரு உள்ளத்திலே வைத்து அனுபவிக்கும் எம்பெருமானார் கல்யாண
குணங்களை சொல்லும் அவர்கள் -வேதத்தை காப்பாற்றி நிலை நிறுத்தும் அவர்கள் என்கிறார் –
————————-
10-பேயாழ்வார் திருவடிகளை ஸ்துதிக்கும் ஸ்வபாவரான எம்பெருமானார்-விஷயத்திலே சிநேக யுகதர் திருவடிகளை
சிரசா வஹிக்குமவர்கள்-எல்லா காலத்திலும் சீரியர் என்கிறார் –

கீழ் இரண்டு பாட்டாலும் பொய்கை யாழ்வார் பூதத் தாழ்வார் ஆகிற இருவராலும் எடுக்கப் பட்ட-பரி பூர்ண தீபமான திவ்ய பிரபந்தங்கள் இரண்டாலும்
லோகத்திலே ஒருவராலும் பரிகரிக்க அரிதாம் படி-வ்யாப்தமாய் நின்ற அஞ்ஞானம் ஆகிற அந்தகாரம் நசித்த பின்பு-தாம் திருக் கோவலூரில் வீற்று இருந்த
ஸ்ரீயபதியை சாஷாத் கரித்து -அந்த லாபத்தை எல்லார்க்கும் திவ்ய பிரபந்த ரூபேண -உபதேசிக்கும்-பேய் ஆழ்வாருடைய ச்ப்ர்ஹநீயமான திருவடிகளை ஸ்துதிக்கிற
எம்பெருமானார்-விஷயமான ப்ரீதியாலே பரிஷ்கரிக்க பட்டவர்களுடைய ஸ்ரீ பாதங்களை தம்தாமுடைய
தலை மேல் தரிக்கும்-சம்பத்தை உடையவர்கள் சர்வ காலத்திலும் ஸ்ரீ மான்கள் –என்கிறார் –

பேய் ஆழ்வார் -இருள் நீங்கியதும் -தாம் கண்ட இறைக் காட்சியினைத் தம் திவ்ய பிரபந்தத்தால் காட்டும்-வள்ளன்மைக்காக-அவர் திருவடிகளைப் போற்றும்
எம்பெருமானார் திறத்து அன்புடையார் திருவடிகளை தலையில் சூடும் திருவாளர்கள் எல்லா காலத்திலும் சிறப்புடையோர் ஆவர் என்கிறார் –
———————
11-திருப் பாண் ஆழ்வார் திருவடிகளை சிரஸா வஹிக்கும் எம்பெருமானாரைத் தங்களுக்கு-அபாஸ்ரயமாகப் பற்றி இருக்கும் அவர்களுடைய
கார்ய வைலஷண்யம் இந்த லோகத்தில் என்னால் சொல்லித் தலைக் கட்ட ஒண்ணாது-என்கிறார் –

இவ்வளவாக மூன்று பாட்டாலும் -முதல் ஆழ்வார்கள் மூவருடைய சம்பந்தத்தை உடைய-எம்பெருமானாரை கொண்டாடி -இப்பாட்டிலே -தமக்கு இவ்வளவாம்
அதிகாரம் உண்டாகும்படி -முதல் அடியிலே-தம்மை விஷயீ கரித்த பெரிய பெருமாளுடைய திருவடிகளிலே –திரு அவதாரமே பிடித்து -இடைவிடாதே –
நிரவதிக பிரவணராய் –இசைகாரர் -என்று நம் ஆழ்வாரால் கொண்டாடப் பட்ட மகா வைபவத்தை உடையரான –திருப் பாண் ஆழ்வார் திருவடித் தாமரைகளிலே
நிரவதிக பிரவணரான -எம்பெருமானாரை ஆஸ்ரயித்த வருடைய-அனுஷ்டானம் -இந்த மகா பிருதிவியிலே -என்னால் சொல்லித் தலைக் கட்ட போகாது -என்கிறார் –

திருப் பாண் ஆழ்வார் திருவடிகளைத் தலையால் தாங்கும் எம்பெருமானாரைச் சார்வாக கொண்டவர்கள் உடைய
அனுஷ்டானத்தின் சிறப்பு இவ்வுலகில் என்னால் சொல்லித் தலைக் கட்ட ஒண்ணாது என்கிறார் –
———————————
12-திரு மழிசை பிரானுடைய திருவடிகளுக்கு ஆவாசமான திரு உள்ளத்தை உடைய எம்பெருமானாரை-ஆஸ்ரயித்து இருப்பார்க்கு ஒழிய
ச்நேஹியாதவர்கட்கே நான் ச்நேஹித்து இருப்பது -என்கிறார்-

கீழ் நாலு பாட்டாலும் -ஆழ்வாருடைய சம்பந்தத்தை இட்டு எம்பெருமானாரை அனுபவிக்கும்-பிரகரணம் ஆகையாலே -முதல் ஆழ்வாரோடு சம காலராய்
பேயாழ்வார் உடைய பிரசாதத்தாலே-தத்வ ஹித புருஷார்த்த யாதாம்ய ஜ்ஞானரான திரு மழிசை ஆழ்வாருடைய பரஸ்பர சதர்சமான-திருவடிகளை
தம்முடைய திரு உள்ளத்தில் நிறுத்திக் கொண்ட எம்பெருமானாருடைய பரம போக்யமான
திருவடிகளை ஆஸ்ரயித்தவர்களுக்கு ஒழிய வேறு ஒருவருக்கு விதேயமாகாத த்ரட அத்யவசாய பரரான-ஜ்ஞாநிகளுக்கு அடியேன் பக்தனாக நின்றேன் -என்கிறார்-

திரு மழிசைப் பிரான் திருவடிகளுக்கு உறைவிடமான திரு உள்ளத்தை உடைய-எம்பெருமானாரைப் பற்றும் திருவாளரை ஒழிய
மற்றவரை விரும்பாத உறுதிப்பாடு வாய்ந்த ஞாநியரையே தாம் விரும்புவதாக கூறுகிறார் –
——————-
13-ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளை ஒழிய மற்று ஒன்றில்-ஆதாரம் அற்று இருக்கும் எம்பெருமானார் திருவடிகளே எனக்கு ப்ராப்யம் -என்கிறார் –

கீழ்ப் பாட்டிலே திரு மழிசை ஆழ்வார் உடைய சம்பந்தத்தை இட்டு எம்பெருமானாரைக் கொண்டாடி –இப்பாட்டில் -தாம் முந்துற முன்னம் தொண்டு பட்ட
பெரிய பெருமாள் திருவடிகளில் அதி ப்ரவண ராய் –மற்றுமோர் தெய்வம் உண்டே -என்று அவரை ஒழிந்த எம்பெருமான்களை விரும்பாத -பாதிவ்ரத்யத்தை உடையரான
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் உடைய திருவடிகள் ஒழிய வேர் ஒன்றில் ஆதாரம் அற்று இருக்கிற எம்பெருமானார்-திருவடிகளே எனக்கு பிராப்யம் என்கிறார் –

தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளை ஒழிய மற்று ஒன்றில் ஆதரம் அற்று இருக்கும்-எம்பெருமானார் திருவடிகளே நமக்கு ப்ராப்யம் -என்கிறார் –
———————
14-ஸ்ரீ குலசேகரப் பெருமாள் உடைய திவ்ய சூக்தியை பாடுமவர்களை ஏத்தும் எம்பெருமானார்-என்னைப் பிரியாமையாலே -புருஷார்த்த லாபத்துக்கு
துச்சக சாதனங்களை அனுஷ்டிக்கும் ஸ்வபாவம் போகப் பெற்றேன் -என்கிறார் –

இவ் எம்பெருமானார் தம்முடைய பூர்வ அவதாரத்திலே -தாம் ஈடுபட்ட சக்கரவர்த்தி திரு மகன் –விஷயத்திலே அதி வ்யாமுக்த்தரான –ஸ்ரீ குலசேகர பெருமாள்
சூத்ரே மணி கதா இவ -என்னும்படி-முகம் அறிந்தவர் -மாணிக்கங்களை கோக்குமா போலே -சாஸ்திரம் சொல்லைக் களை பறித்து –தம்முடைய திவ்ய சூக்திகளாலே
நிர்மித்த திவ்ய பிரபந்தங்களை -அனுசந்திக்கும் பெரியோர்களுடைய திருவடிகளை ஸ்துதிக்கும் -எம்பெருமானார் என்னை விட மாட்டார் -ஆன பின்பு
புருஷார்த்த லாபத்துக்காக –துஸ் சககங்களான சாதனாந்தரங்களை அனுஷ்டிக்கும் ஸ்வபாவம் போகப் பெற்றேன் -என்கிறார் –

ஸ்ரீ குலசேகர பெருமாள் உடைய கவிகளை பாடும் அவர்களை ஏத்தும் எம்பெருமானார்-என்னை கை விட மாட்டார் -ஆகையாலே இனி
பேறு பெற வேண்டி தவம் செய்யும் கொள்கை இல்லாதவன் ஆயினேன் -என்கிறார்
———————————————
15-பெரியாழ்வார் திருவடிகளிலே பிரவண சித்தரான எம்பெருமானார் குணங்களில்-அனந்விதரைச் சேரேன் -எனக்கு என்ன தாழ்வு உண்டு -என்கிறார் –

-கீழ்ப் பாட்டிலே குலசேகரப் பெருமாள் சம்பந்தத்தை இட்டு -தம்மாலே கொண்டாடப் பட்ட-எம்பெருமானார் -தம்மை பரிகிரகித்த வைபவத்தை சொல்லி -இப்பாட்டிலே –
சர்வ பூத ஸூஹ்ர்த்தாய் சர்வ ரஷகனான சர்வேஸ்வரனை -சாஷாத் கரித்து -அவனுடைய-ரஷகத்யவாதிகளிலே கண் வையாதே –பிரேம தசை தலை எடுத்து
அவனுக்கு என் வருகிறதோ-என்னும் அதி சங்கையாலே-திருப் பல்லாண்டாலே மங்களா சாசனம் பண்ணி -அவனுக்கு காப்பிட்ட-பெரியாழ்வார் உடைய திருவடிகளுக்கு
ஆஸ்ரயம் ஆக்கின திரு உள்ளத்தை உடையரான-எம்பெருமானாருடைய கல்யாண குணங்களை -தங்களுக்கு ஆஸ்ரயமாக பற்றி இராத
மனுஷ்யரை நான் கிட்டேன் -ஆகையாலே எனக்கு இனி என்ன குறை -என்கிறார் –

பெரியாழ்வார் திருவடிகளை விட்டு -நீங்காத திரு உள்ளம் படைத்த எம்பெருமானார் குணங்களை-தங்களுக்கு சார்பாக
கொள்ளாதவர்களை சேர மாட்டேன் -இனி எனக்கு என்ன தாழ்வு இருக்கிறது –என்கிறார் –
———————————-
16-இப்படி ஸ்வ லாப அனுசந்தானத்தாலே ஹ்ருஷ்டரானவர் -எல்லாரும் தம்மைப் போலே-தத் விஷய பிரவணர் ஆகைக்கு உறுப்பாக -பகவத் வல்லபையான
ஆண்டாள் உடைய ப்ரஸாத பாத்ரமான எம்பெருமானார் லோகத்துக்கு செய்த உபகாரத்தை அருளி செய்கிறார் –

கீழ்ப் பாட்டிலே பெரியாழ்வார் சம்பந்தத்தை இட்டு எம்பெருமானாரைக் கொண்டாடி –இப்பாட்டிலே -அந்த ஆழ்வாருடைய பெண் பிள்ளையான ஆண்டாளுடைய
ஸ்வபாவிக கிருபையாலே வாழ்ந்து கொண்டு -பரமோதார ஸ்வபாவராய்-அத்தாலே எல்லார்க்கும் பரம பதத்தை கொடுக்கைக்கு- மனனம் பண்ணிக் கொண்டு
போருகிற எம்பெருமானார் -வேத மார்க்கம் எல்லாம் அழிந்து -பூ மண்டலம்-எங்கும் ஒக்க -வியாபித்து கலியானது -சாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்தில் –
விண்ணின் தலை நின்றும் –மண்ணின் தலத்து உதித்து -எல்லாரையும் ரஷித்து அருளின நல்லன்பர் என்று சர்வரும் தம்மைப் போலே
தத் விஷய ப்ரவணர் ஆகைக்கு உடலாக அவர் செய்து அருளின உபகாரத்தை அருளிச் செய்கிறார் –

தாழ்வு வர வழி இல்லாத வாழ்வு தமக்கு கிடைத்தது போலே எல்லோருக்கும் கிடைக்க வேணும் என்ற பெரு நோக்குடன் –அவர்கட்கு எம்பெருமானார் திறத்தும்
அவர் குணங்களை சார்ந்தோர் திறத்தும் -ஈடுபாடு உண்டாவதற்கு உறுப்பாக –அரங்கற்கு இனிய துணைவியான ஆண்டாள் அருளினால் வாழ்வு பெற்றவரான
எம்பெருமானார் மறை நெறியை நிலை நாட்டி -கலி யைக் கெடுத்து -உலகினுக்கு பேருதவி புரிந்ததை அருளி செய்கிறார்-
—————————
17-இப்படி எம்பெருமானார் செய்த உபகாரத்தை கேட்டு தத் சமாஸ்ரயண ருசி பிறந்தவர்கள் இவ் விஷயத்தை-ஆஸ்ரயித்தாலும்-சுக துக்க நிபந்தனமான
கலக்கம் வரில் செய்வது என்ன –திருமங்கை ஆழ்வார் பக்கலிலே சிநேக யுக்தராய் -எங்கள் நாதராய் இருக்கிற
எம்பெருமானாரை ஆஸ்ரயித்தவர்கள் அவை மேலிட்டாலும் கலங்கார் என்கிறார் –

கீழ் எல்லாம் ஆழ்வார்களை இட்டே எம்பெருமானாரை கொண்டாடுகிற பிரகரணம் ஆகையாலே-இப்படி எம்பெருமானார் செய்து அருளின உபகாரங்களைக் கேட்டு
தத்சமாசரயண ருசி பிறந்தவர்கள் இவ் விஷயத்தை-ஆஸ்ரயித்தாலும் சுக துக்க நிபந்தமாக கலக்கம் வரில் -செய்வது என் என்று -திருக் கண்ண மங்கையுள்
நின்று அருளின பக்தராவி விஷயமாக திவ்ய பிரபந்தத்தை அருளிச் செய்த –திருமங்கை ஆழ்வாருக்கு பிரிய தமரான-
எம்பெருமானாரை ஆஸ்ரயித்தவர்களுக்கு -சுக துக்கங்கள் வந்து மேல் விழுந்தாலும் –ஹர்ஷாமர்ஷங்களாலே சலியார்கள்-என்கிறார் –

இங்கனம் கலியினால் நலி உறாது உலகினைக் காத்து எம்பெருமானாரைப் பற்றிடினும்-இன்ப துன்பங்களால் நேரிடும் கலக்கம் விளக்க ஒண்ணாதது அன்றோ
என்பாரை நோக்கி-திரு மங்கை ஆழ்வாருக்கு இனியரும் எங்களுக்கு நாதருமான எம்பெருமானாரைப்-பற்றினவர்கள் இன்ப துன்பங்களால் கலங்க மாட்டார்கள் –என்கிறார் —
——————————
18-நம் ஆழ்வாரைத் திரு உள்ளத்திலே வைக்க அநுரூப வைபவரான ஸ்ரீ மதுர கவி ஆழ்வார்-குணங்களை சகல ஆத்மாக்களும் உஜ்ஜீவிக்கைக்காக
உபகரிக்கும் எம்பெருமானார்-எனக்கு ஆன துணை -என்கிறார் –

கீழில் பாட்டுக்களில் பிரதி பாதிக்கப் பட்ட ஆழ்வார்களில் வைத்துக் கொண்டு –பிரதாநராய் -சர்வாதிகார்ரராம் படி -திருவாய்மொழி என்கிற பிரபந்தத்தை
அருளிச் செய்கைக்காக அவதரித்து அருளின நம் ஆழ்வாருக்கு -அனந்யார்ஹரான ஸ்ரீ மதுரகவி ஆழ்வாருடைய கல்யாண குணங்களை
சகல ஆத்மாக்களும் உஜ்ஜீவிக்கைக்காக உபகரித்து அருளின எம்பெருமானார் -எனக்கு சகாயம் என்கிறார் –

நம் ஆழ்வாரைத் தம் திரு உள்ளத்திலே வைத்து கொள்வதற்கு ஏற்புடைய பெருமை வாய்ந்தவரான-ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் உடைய குணங்களை
எல்லா ஆன்மாக்களும் உஜ்ஜீவிப்பதற்க்காக உபகரித்து அருளும் எம்பெருமானாரே எங்களுக்கு நல்ல துணை என்கிறார் –
——————————-
19-ஐஸ்வர்யாதி பரதேவதா பர்யந்தமான அபேஷித வஸ்துக்கள் எல்லாம் திருவாய்மொழியே –என்று ஜகத் பிரசித்தமாக நின்ற எம்பெருமானார் எனக்கு நிரதிசய போக்யர் -என்கிறார் –

ஐஹிக ஆமுஷ்மிக சமஸ்த சம்பத்தும் -சர்வவித பந்துக்களும் -வகுத்த சேஷியான-ஸ்ரீயபதியும் – நம் ஆழ்வார் -தமக்கு பகவத் நிர்துஹேதுக கிருபையாலே பிரகாசியா நின்று
உள்ள அர்த்த விசேஷங்களை-அடைவே அருளிச் செய்த த்ரமிட உபநிஷத்தே என்று சகல ஜனங்களுக்கும் உபதேசிக்கிற எம்பெருமானார்-எனக்கு நிரதிசய போக்யர் – என்கிறார்-

திருவாய் மொழியே சொத்தும் -தந்தையும் -தாயும்-குருவும் -ஸ்ரீ ய பதியான பர தேவதையுமாக-உலகில் பிரசித்தமாகும் படி நின்ற எம்பெருமானார் எனக்கு மிகவும் இனியர் -என்கிறார்-
——————————
20-நாதமுனிகளை தம் திரு உள்ளத்திலே அபிநிவேசித்து அனுபவிக்கும் எம்பெருமானார்-எனக்கு பரம தனம் -என்கிறார்-

தர்சநீயமான திரு நகரிக்கு நிர்வாஹரான நம் ஆழ்வார் உடைய அமிர்தமய திவ்ய ஸூக்தி-ரூபமாய் இருந்துள்ள -திருவாய் மொழியை சார்த்தமாக அப்யசிக்க வல்லார்
திறத்திலே -அதி ப்ரவணராய் இருக்குமவர்களுடைய -கல்யாண குணங்களிலே சக்தராய் -உஜ்ஜீவிக்கும் ஸ்வபாவத்தை உடையரான
ஸ்ரீமன் நாதமுனிகளை -தம்முடைய மனசாலே அனுபவிக்கும் எம்பெருமானார் அடியேனுக்கு-மகா நிதியாய் இருப்பார் என்கிறார் –

இதுகாறும் ஆழ்வார்கள் இடம் எம்பெருமானாருக்கு உள்ள ஈடுபாடு பேசப்பட்டது –இனி ஆசார்யர்கள் இடம் உள்ள ஈடுபாடு பேசப்படுகிறது -யோக முறையில் நேரே
சாஷாத்காரம் பண்ணின -மாறன் இடம் இருந்து -செம் தமிழ் ஆரணத்தை -அடைந்து -அதன் இசையை உணர்ந்தவர்களுக்கு-இனியவர்களின் குணங்களில்
பலகால் பயின்று உஜ்ஜீவிக்கும் நாத முனியை ஆர்வத்தோடு நெஞ்சால் அனுபவிக்கும் எம்பெருமானார் எனக்கு கிடைத்த புதையல் –என்கிறார் –
—————————-
21-ஆளவந்தார் உடைய திருவடிகள் ஆகிற ப்ராப்யத்தை பெற்றுடைய எம்பெருமானார்-என்னை ரஷித்து அருளினார் -ஆகையால்
ஷூத்ரருடைய வாசல்களிலே நின்று அவர்கள் ஒவ்தார்யாதிகளைச் சொல்லி ஸ்துதியேன்-என்கிறார் –

இவ்வளவும் -ஆழ்வார்கள் உடையவும் -ஸ்ரீ மன் நாத முனிகள் உடையவும் சம்பந்தத்தை இட்டு –எம்பெருமானார் உடைய வைபவத்தை யருளிச் செய்து கொண்டு வந்து
இதிலே சரம பர்வ நிஷ்டர் எல்லாருக்கும்-ஸ்வாமியான ஆளவந்தார் உடைய திருவடிகளை உபாய உபேகமாக பற்றின -எம்பெருமானார் என்னை ரஷித்து-
அருளின பின்பு -இனி நீசரான மனுஷ்யரை ஸ்துதித்து க்லேசப் பேடன் என்கிறார் –

ஆளவந்தார் உடைய திருவடிகளை பெரும்பேறாக உடைய எம்பெருமானார் என்னை ரஷித்து அருளினார் -ஆகையால் அற்பர்கள் உடைய வாசல்களில்
நின்று அவர்கள் உடைய வள்ளன்மை முதலியவற்றைக் கூறிப் புகழ் பாட மாட்டேன் -என்கிறார் –
———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: