ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி–பாசுரங்கள் -22-76-அவதாரிகை -/ஸ்ரீ மா முனிகள் /ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் / ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் -அருளிச் செய்தவை –

22-முன்பு தன்னோடு எதிரிட்ட தேவ ஜாதி -பின்பு தன் வைபவத்தை அறிந்து ஸ்தோத்ரம் பண்ண –அவர்களுக்காக வாணன் அபராதத்தை
பொறுத்த சர்வேஸ்வரனை ஏத்தும் எம்பெருமானார்-எனக்கு ஆபத்து தனம் –என்கிறார் –

ருத்ரன் முதலான தேவ ஜாதிக்காக –பாணனுடைய ஆர்த்த அபராதத்தைப் பொறுத்த க்ர்ஷ்ணனை ஸ்துதிக்கும் எம்பெருமானார்
எனக்கு மகா நிஷேப பூதர் -என்கிறார்

தன்னை எதிர்த்து போரிட்ட அமரர் மக்கள் இவர்களோடு கூடிய முக் கண்ணன் என்னும் இவர்கள்-தோல்வி அடைந்து தன் வைபவத்தை அறிந்து துதிக்க
அவர்களுக்காக வாணன் அபராதத்தை பொறுத்த சர்வேஸ்வரனை ஏத்தும் எம்பெருமானார்-எனக்கு சமயத்துக்கு உதவ சேமித்து வைத்த செல்வம்-என்கிறார் .
—————————–
23-நிர்தோஷரான பிரேம யுக்தர் பரம தனமாக தங்கள் நெஞ்சிலே வைத்து கொண்டு இருக்கும்-விஷயத்தை பாபிஷ்டனான நான்
ஹேயமான மனசிலே வைத்து ஏத்தா நின்றேன் -இது-அவ்விஷயத்தின் உடைய குணத்துக்கு என்னாகும் என்கிறார் –

பூர்வாசார்யர்கள் எல்லாரும் -வைத்த நிதி -என்னுமா போலே -தங்களுக்கு-ஆபத்து ரஷகமாக வைக்கப் பட்ட -அஷய பரம தனம் -என்று கொண்டு -தங்களுடைய
திரு உள்ளத்திலே சர்வ காலமும் வைக்கும் விஷயமான எம்பெருமானாரை -அதி பாபிஷ்டனான-என்னுடைய மனசிலே வைத்துக் கொண்டு அவருடைய
கல்யாண குணங்களை ஸ்துதிக்கத் தொடங்கினேன்-மகா பிரபாவம் உடைய அவருடைய கல்யாண குணங்களுக்கு இது என்னாய் விளையுமோ-என்று பரிதபிக்கிறார் .

நல்ல அன்பர்கள் சிறந்த செல்வமாக தங்கள் நெஞ்சிலே வைத்து கொண்டு இருக்கும் எம்பெருமானாரை-மிக்க பாவியான நான் குற்றம் உள்ள
நெஞ்சிலே வைத்து எப்போதும் ஏத்தா நின்றேன் -இது அவரது சீரிய-கீர்த்திக்கு என்னவாய் முடியுமோ –என்கிறார் –
———————————-
24-ஒப்பார் இலாத உறு வினையேன் -என்றீர் -இப்படி இருக்கிற உமக்கு இவ்விஷயத்தை-முப்போதும் வாழ்த்துகை கூடின படி என் -என்ன –
தாம் முன்பு நின்ற நிலையையும் –இன்று தமக்கு இவ் உத்கர்ஷம் வந்த வழியையும் சொல்லுகிறார் –

சாஸ்திர விஹிதமான தபச்சுகளை பண்ணும் -நீச சமய நிஷ்டர் எல்லாம் – பக்நராம்படி ஸ்ரீ பாஷ்யாதிகளைப் பண்ணும்-யதார்த்த ஜ்ஞானத்தை உடையரான
எம்பெருமானார் என்னுடைய காள மேகமானார் – அவரைக் கண்டு உத்கர்ஷ்டன் ஆனேன் –ஆகையால் ஸ்தோத்ரம் பண்ணுகிறேன் -என்கிறார் .

இப்பாரில் ஒப்பார் இல்லாத மா பாவியாய் முன்னர் கீழ்ப் பாட்டு இருப்பினும்-இன்று உயர்ந்தவராய் எம்பெருமானாரை முப்போதும் வாழ்த்துதல் எங்கனம் உமக்கு
வாய்ந்தது என்ன –தமது முன்னைய நிலையையும் -இவ் உயர்வு வந்த வழியையும் –அருளி செய்கிறார் –
———————————-
25-எம்பெருமானார் தம் பக்கல் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து அத்தாலே அவர் திருமுகத்தை-பார்த்து –தேவரீர் உடைய க்ருபா ஸ்வபாவம்
இந்த லோகத்தில் யார் தான் அறிவார் என்கிறார் –

மேகம் போலே சர்வ விஷயமாக உபகரிக்கும் க்ர்பையை உடைய எம்பெருமானாரே –சதுஸ் சமுத்திர பரிவேஷ்டிதமான இந்த பூ பிரதேசத்திலே –
தேவரீர் உடைய கிருபா ஸ்வபாவத்தை தெளிந்தவர் யார் -சகல துக்கங்களுக்கும் சாஷாதாகரமான என்னை தேவரீரே எழுந்து அருளி
அங்கீ கரித்த பின்பு -தேவரீர் உடைய கல்யாண குணங்கள் -என்னுடைய பிராணனுக்கு பிராணனாய் –
அடியேனுக்கு ரசியா நின்றது என்று –எம்பெருமானார் திரு முகத்தைப் பார்த்து -நேர் கொடு நேரே-விண்ணப்பம் செய்கிறார்

தனக்கு பண்ணின உபகாரத்தை நினைந்து நேரே எம்பெருமானாரை நோக்கி-தேவரீர் உடைய அருளின் திறத்தை இவ் உலகில் யார் தான் அறிவார் என்கிறார் –

—————————————-
26-எம்பெருமானார் விஷயீ கரித்து அருளின பின்பு –அவருடைய குணங்களே தமக்கு தாரக போஷாக போக்யங்கள்-ஆயிற்று என்றார் கீழ் –
அவ்வளவு அன்றிக்கே –அவர் திருவடிகளுக்குப் அனந்யார்ஹராய் இருக்கும் மகா ப்ரபாவரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய
பூர்வ அவஸ்தைகளில் ஓர் ஒன்றே என்னை எழுதிக் கொள்ளா-நின்றது -என்கிறார்

மேகம் போலே உதாரரான எம்பெருமானார் தம்மை விஷயீ கரித்த பின்பு அவருடைய-கல்யாண குணங்கள் -தமக்கு தாரகமாய் இருந்த படியை கீழ்ப் பாட்டில் சொல்லி
இப்பாட்டிலே –அவர்க்கு அனந்யார்ஹராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய ஜன்ம வ்ருத்தாதிகளிலே ஓர் ஒன்றே அடியேனை எழுதி கொள்ளா நின்றது என்கிறார் .

எம்பெருமானார் என்னை ஏற்ற பிறகு அவர் குணங்களே எனக்கு தாரகமும் போஷகமும் போக்யமும் ஆயின என்றார் கீழ்-
அவ்வளவோடு அமையாது அவரையே தஞ்சமாக பற்றி -விடாது நிற்கும் பெருமை வாய்ந்தவர்கள்-பற்றுவதற்கு முன்-அவர் பால் இருந்த அறிவுக்குறை இழிபிறப்பு
-இழி தொழில் -இவற்றில் ஒவ் ஒன்றுக்குமே நான்-அடிமைப் பட்டு விடுகிறேன் –என்கிறார் –
———————————–
27-இப்படி இவர் தமக்கு அநந்யார்ஹர் அளவிலே ஊன்றினவாறே -எம்பெருமானார் -இவர் நெஞ்சுக்கு தம்மை –சர்வ காலமும் -விஷயம் ஆக்கிக் கொடுக்க
பாபிஷ்ட்டனான என் நெஞ்சிலே புகுந்து அருளின இது –தேவரீர் பிரபாவத்துக்கு அவத்யம் அன்றோ என் நெஞ்சு தளரா நின்றது என்கிறார் –

இப்படி இவர் தமக்கு அனந்யார்ஹர் பக்கலிலே பிரதி பத்தி பண்ணின வாறே -எம்பெருமானார்-இவருடைய நெஞ்சு -குற்றமே சர்வ காலமும் விஷயமாக்கிக் கொடுக்க
பாபிஷ்டனான என் நெஞ்சிலே-புகுந்து அருளின இது -தேவரீருடைய பிரபாவத்துக்கு அவத்யம் அன்றோ என்று என் நெஞ்சு தளரா நின்றது-என்கிறார் –

தன்னை மேவும் நல்லோர் திறத்து மிகவும் அமுதனார் ஈடுபாடு கொண்டு இருப்பது கண்டு எம்பெருமானார் இவர் நெஞ்சுக்கு தன்னை எக்காலத்திலும்
விஷயம் ஆக்கிக் கொடுக்க –கொடிய பாவியான என்னுடைய நெஞ்சிலே புகுந்தது-தேவரீர் மகிமைக்கு மாசு விளைவிக்குமே என்று
தனிப்பட்ட என் மனம் தளர்ச்சி அடைகின்றது –என்கிறார் –
————————————————
28-மன பூர்வோ வாகுத்தர -என்னும் மனஸ்ஸூக்கு அநந்தரமான வாக்குக்கு அவர் விஷயத்தில் உண்டான-ப்ராவண்யத்தை கண்டு ப்ரீதர் ஆகிறார் –

கீழ்ப் பாட்டிலே மனச்சினுடைய சம்ர்த்தியைச் சொல்லி –இதிலே -வாக்கு உள்ள சம்ர்த்தியை-சொல்ல ஒருப்பட்டு -துர் புத்தியான கம்சனை சம்ஹரித்து
அதி கோமளமான ஸ்ரீ பாதங்களை உடைய-நப்பின்னை பிராட்டிக்கு ச்நேகியான ஸ்ரீ கிருஷ்ணனுடைய ஸ்ரீ பாதங்களை ஆஸ்ரயியாத ஆத்மா அபஹாரிகளுக்கு
அகோசரரான எம்பெருமானாருடைய கல்யாண குணங்களை ஒழிய வேறொரு விஷயத்தை என் வாக்கானது-ஸ்துத்திக்க மாட்டாது
ஆகையாலே இப்போது எனக்கு ஒரு அலாப்யலாபம் சேர்ந்தது என்று வித்தார் ஆகிறார் –

என் மேன்மைக்கு ஒரு குறையும் ஏற்படாது -நீர் உம் வாயாலே -கண்டு உயர்ந்தேன் -என்றீரே –காண்டலுமே -வினையாயின எல்லாம் விண்டே ஒழிந்தன -ஏன் –
உமது நெஞ்சம் தனியாய்-தளர வேண்டும் -என்று எம்பெருமானார் தேற்ற -தேறின அமுதனார் –
மனத்தை பின் பற்றி –வாக்கு அவர் திறத்து ஈடுபடுவதை கண்டு உவந்து அருளி செய்கிறார் –
—————————–
29-எம்பெருமானார் திவ்ய குணங்களை உள்ளபடி அறிந்து இருக்கும் அவர்கள் திரள்களை
என் கண்கள் களிக்கும்படி கூட்டக் கடவ -ஸூக்ருதம் இன்று கூடுமோ-என்கிறார் –

கீழ்ப் பாட்டிலே -தம்முடைய வாக்கானது –எம்பெருமானாருடைய கல்யாண குணங்களுக்கு-அனந்யார்ஹமாய் விட்டது என்று அந்த ச்மர்த்தியை சொல்லி –
அவ்வளவிலே சுவறிப் போகாதே -மேல் மேல்-பெருகி வருகிற அபிநிவேச அதிசயத்தாலே -இப்பாட்டில் -தர்சநீயமான -திரு குருகைக்கு நிர்வாஹராய் –
திரு வாய் மொழி முகத்தாலே -தத்வ ஹித புருஷார்த்தங்களை -சர்வருக்கும் உபகரித்து அருளின நம் ஆழ்வார்-உடைய திவ்ய சூக்தி மயமான வேதமாகிற
செந்தமிழ் தன்னை -தம்முடைய பக்தி யாகிற கோயிலிலே-பிரதிஷ்டிப்பித்து கொண்டு இருக்கிற எம்பெருமானாருடைய கல்யாண குணங்களை
உள்ளபடி-தெளிந்து இருக்கும் ஞாநாதிகர்கள் உடைய திரள்களை என் கண்கள் கொண்டு ஆனந்தித்து களிக்கும்படி-
சேரக் கடவதான பாக்யம் எப்போது லபிக்கும் என்று -ததீய பரந்தாமன ப்ரீதியை பிரார்த்தித்து அருளுகிறார் –

என் வாய் கொஞ்சிப் பரவும் எம்பெருமானார் குணங்களை உள்ளபடி உணர்ந்து உள்ளவர்களின்-திரளை
என் கண்கள் கண்டு களிக்கும்படி செய்ய வல்ல பாக்கியம் என்று வாய்க்குமோ –என்கிறார் –
——————————-
30-இப்படி இவர் பிரார்த்தித்த இத்தைக் கேட்டவர்கள்-இவ்வளவேயோ -அபேஷை உமக்கு -இனி பரம பத ப்ராப்தி-முதலானவையும் அபேஷிதங்கள் அன்றோ -என்ன –
எம்பெருமானார் என்னை அடிமை கொண்டு அருளப் பெற்ற பின்பு-சுகவாஹமான மோஷம் வந்து சித்திக்கில் என் –துக்க அவஹமான நரகங்கள் வந்து சூழில் என் –என்கிறார் –

கீழ்ப் பாட்டிலே எம்பெருமானாருடைய கல்யாண குண வைபவத்தை உள்ளபடி அறியும் பெரியோர்கள் உடைய-திரள்களைக் கொண்டு –
ஆனந்தத்தை பெறுவிக்குமதான -பாக்யம் உண்டாவது எப்போதோ -என்று இவர் அபிநிவேசிக்க –
இத்தைக் கண்டவர்கள் உம்முடைய அபேஷை இவ்வளவேயோ பின்னையும் உண்டோ என்ன -அநாதியான சம்சார சாகரத்திலே-பிரமித்து திரிகிற –
ஜந்துக்களுக்கு எல்லாம் ஸ்வாமி யாய் -ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையனான சர்வேஸ்வரன் என்று
ஸ்ரீ பாஷ்ய முகேன அருளிச் செய்து -பிரயோஜனாந்தர கந்த ரஹீதமான -ப்ரீதியோடு உபகரித்து அருளும் எம்பெருமானார்
அடியேனை அடிமை கொண்டு அருளினார் -இனி ஆனந்த அவஹமான பதம் வந்து ப்ராபித்தால் என்ன – அசங்க்யாதங்களான-துக்கங்கள் வந்து பிராபித்தால் என்ன –
இவற்றை ஒன்றாக நினைக்கிறேனோ என்று தம்முடைய அத்யாவசாய தார்ட்யத்தைஅருளிச் செய்கிறார் –

இங்கனம் ஈட்டங்கள் கண்டு நாட்டங்கள் இன்பம் எய்திடல் வேண்டும் என்று இவர் ப்ரார்த்தித்ததைக்-கேட்டவர்கள்-உமக்கு இவ்வளவு தானா தேட்டம் –
வீட்டை அடைதல்-முதலிய பேறுகளில் நாட்டம் இல்லையா -என்று வினவ –எம்பெருமானார் என்னை ஆட் கொண்டு அருளப் பெற்ற பிறகு இன்பம் அளிக்கும்
வீடு வந்தால் என் -துன்பத்தினை விளைக்கும் நரகம் பல சூழில் என் -இவற்றில்-ஒன்றினையும் மதிக்க வில்லை -நான் என்கிறார்
————————————
31-அநாதி காலம் அசங்க்யாதமான யோநிகள் தோறும் தட்டித் திரிந்த நாம் இன்று-நிர்ஹேதுகமாக எம்பெருமானரை சேரப் பெற்றோமே என்று –
ப்ரீதி பிரகர்ஷத்தாலே –திரு உள்ளத்தை குறித்து அருளி செய்கிறார் –

லோகத்தில் ஒருவனுக்கு ஒரு நிதி லபித்தால் தன்னுடைய அந்தரனுக்கு சொல்லுமா போலே –இவரும் தம்முடைய பந்த மோஷங்களுக்கு எல்லாம் பொதுவான
மனசை சம்போதித்து கலா முகூர்த்தாதி-ரூபமாய்க் கொண்டு வர்த்திக்கும் காலம் எல்லாம் தேவாதி தேகங்கள் தோறும் சஞ்சரித்து இவ்வளவும் போந்தோம் –
இப்போது ஒரு சாதனம் இன்றிக்கே –சுந்தர பாஹுவாய் -தமக்கு உபாகரகரான பேர் அருளாளன் திருவடிகளின் கீழே-அங்குத்தைக்கு -ஒரு ஆபரணம் போலே
இருந்துள்ள பிரேமத்தை உடையரான எம்பெருமானாரை சேர்ந்து கொண்டு-நிற்கப் பெற்றோம் கண்டாயே -என்று சொல்லி ஹ்ருஷ்டர் ஆகிறார் –

நெடும் காலம் பல பல பிறப்புகளில் புக்கு பெரும்பாடு பட்ட நாம்-இன்று நினைப்பின்றியே எம்பெருமானாரை சேரப் பெற்றோம் என்று
பெறும் களிப்புடன் தம் திரு உள்ளத்தை குறித்து அருளி செய்கிறார் .
——————————————
32-இராமா னுசனனைப் பொருந்தினம் -என்று இவர் ஹ்ருஷ்டராகிற வித்தைக் கண்டவர்கள் -நாங்களும் –இவ்விஷயத்தை லபிக்கப் பார்க்கும் அளவில்
எங்களுக்கு உம்மைப் போலே ஆத்ம குணங்கள்-ஒன்றும் இல்லையே என்ன –எம்பெருமானாரை சேரும் அவர்களுக்கு ஆத்ம குணாதிகள் எல்லாம்
தன்னடையே வந்து சேரும் -என்கிறார் –

இராமானுசரைப் பொருந்தினமே என்று இவர் ஹ்ருஷ்டரான -இத்தை கண்டவர்கள் -நாங்களும்-இவ் விஷயத்தை லபிக்கப் பார்க்கும் அளவில்
எங்களுக்கு உம்மைப் போலே ஆத்ம குணங்கள் ஒன்றுமே இல்லையே என்ன –
எம்பெருமானாரை சேருமவர்களுக்கு ஆத்ம குணங்கள் முதலியனவை எல்லாம் தன்னடையே-வந்து சேரும் என்கிறார்-

இராமானுசனைப் பொருந்தினமைக்கு இவர் களிப்பதைக் கண்டவர்கள் -நாங்களும் இங்கனம் களிக்க-கருதுகிறோம் -ஆயின் -எங்களிடம் ஆத்ம குணங்கள்
சிறிதும் இல்லையே -அவை உம்மிடத்தில்-போலே இருந்தால் அன்றோ -நாங்கள் இராமானுசனைப் பொருந்த இயலும் என்று கூற
எம்பெருமானாரைச் சேரும் அவர்களுக்கு ஆத்ம குணங்கள் எல்லாம் தாமே வந்து அமையும் -என்கிறார்-
———————————–
33-அஸ்த்ர பூஷண அத்யாயத்தில் சொல்லுகிறபடியே -மனஸ் தத்வாதிகளுக்கு அபிமாநிகளாய்-இருக்கிற திரு வாழி முதலான திவ்ய ஆயுதங்களினுடைய
ப்ரசாதத்தாலே-இந்திரிய ஜயாதிகள்-உண்டாக வேண்டி இருக்க – எம்பெருமானாரை ஆஸ்ரயிக்கவே இவை எல்லாம் உண்டாம் என்கிறது –
என் கொண்டு -என்ன – அந்த ஸ்ரீ பஞ்ச ஆயுதங்களும் லோக ரஷண அர்த்தமாக எம்பெருமானார் பக்கலிலே யாயின-என்கிறார் –
அதவா –அவை எல்லாம் லோக ரஷண அர்த்தமாக எம்பெருமானாராய் வந்து திருவவதரித்தன -என்னவுமாம் –

-இலைகளாலே நெருங்கி இருக்கிற -தாமரைப் பூவிலே அவதரித்த பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான-சர்வேஸ்வரனுடைய திருக்கையிலே
ஸ்தாவர பிரதிஷ்டை யாய் இருக்கிற திரு ஆழி ஆழ்வானும் – அவனோடு ஒரு கோர்வையாய் இருக்கிற ஸ்ரீ நந்தகம் என்னும் -பேரை உடைத்தான கட்கமும்
ஆஸ்ரித ரஷணத்தில் பொறுப்பை-உடைத்தான ஸ்ரீ கதையும் – அதி ச்லாக்யமான ஸ்ரீ சார்ங்கமும் -புடையாலே தர்சநீயமாய் வலம்புரி என்னும்
பேரை-உடைத்தான ஸ்ரீ பாஞ்ச சந்யமும் -கலி தோஷாபிபூதமாய் காணப்படுகிற இந்த லோகத்தை ரஷிப்பதாக எம்பெருமானார்
அதிகரித்த கார்யத்துக்கு சஹா காரியர்களாக கொண்டு -அவர் பக்கலிலே ஆய்த்து என்கிறார் –
அன்றிக்கே பஞ்ச-ஆயுதங்களும் எம்பெருமானாராய் வந்து திரு அவதரித்து அருளின –என்கிறார் ஆகவும்-

புலன் அடக்கம் முதலானவை மனம் முதலிய தத்துவங்களுக்கு அபிமானியான
திரு வாழி யாழ்வான் முதலிய திவ்ய ஆயுதங்களினுடைய ப்ரசாதத்தாலே உண்டாக வேண்டி இருக்க –எம்பெருமானாரை சேரவே இவை எல்லாம்
உண்டாகும் எனபது எங்கனம்பொருந்தும் என்ன –அந்த திவ்ய ஆயுதங்களும் எம்பெருமானார் இடத்திலேயே உள்ளன –என்கிறார் –
——————————
34-கலி தோஷ அபிபூதமான ஜகத்தை ரஷித்தமையை சொல்லி -இவரை -ஆஸ்ரயிப்பார்க்கு-ஆத்ம குணாதிகள் தானே வந்து சேரும் என்னும் அத்தையும்
இவருடைய ஆத்ம குணோத்-பாதகத்வ ஹேதுவான சகாய பலத்தையும் அருளிச் செய்தார் கீழ் இரண்டு பாட்டாலே –
இப்பாட்டிலே -இப்படி கலி தோஷத்தைப் போக்கி -லோகத்தை ரஷித்த அளவிலும் –எம்பெருமானார் குணங்கள் பிரகாசித்தது இல்லை
என் கர்மத்தைக் கழித்த பின்பு வைலஷண்யத்தை தரித்தது -என்கிறார் –

கீழ் இரண்டு பாட்டாலே -கலியினுடைய க்ரௌர்யத்தாலே க்லேசப்பட்ட லோகத்தை ரஷித்த –எம்பெருமானாரை ஆஸ்ரயித்தவர்களுக்கு ஸ்வரூப அனுரூபமான
சம்பத்துக்கள் தன்னடையே வந்து சேரும்-என்றும் -அவர்தாம் அந்த ரஷணத் துக்கு உறுப்பான வைபவத்தை உடையவர் என்றும் பிரதி பாதித்து
இப்பாட்டிலே -அப்படிப்பட்ட ரஷணத்திலே எம்பெருமானார் உடைய பிரபாவம் பிரகாசித்தது இல்லை –என்னுடைய ஆசூர க்ருத்யங்களை யம லோகத்தில்
எழுதி வைத்த புஸ்தக பாரத்தை எல்லாம்-தஹித்த பின்பு காணும் அவருடைய கல்யாண குண வைபவத்துக்கு ஒரு பிரகாசம் லபித்தது -என்கிறார் –

செறு கலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்தமையும் –ஆஸ்ரயிப்பார்க்கு ஆத்ம குணாதிகள் தாமே வந்து சேருதலும்
-ஆத்ம குணங்களை உண்டாக்குவதற்கு-இவருக்கு ஏற்ப்பட்டு உள்ள சகாய பலமும் -கீழ் இரண்டு பாட்டுக்களாலும் கூறப் பட்டன
இந்தப் பாட்டில் இப்படிக் கலியை செறுத்து உலகை ரஷித்த படியால் எம்பெருமானார் குணங்கள்-பிரகாசிக்க வில்லை
என் வினை யனைத்தையும் விலக்கிய பின்னரே அவை பிரகாசித்தன -என்கிறார் –
——————–
35-எம்பெருமானார் உம்மளவில் செய்த விஷயீகாரத்தை பார்த்து -கர்மம் எல்லாம் கழிந்தது –என்றீரே யாகிலும் -பிரக்ருதியோடே இருக்கையாலே
இன்னமும் அவை வந்து ஆக்ரமிக்கிலோ-என்ன –இனி -அவற்றுக்கு வந்து என்னை அடருகைக்கு வழி இல்லை என்கிறார் –

எம்பெருமானார் உம்மை நிர்ஹேதுகமாக அங்கீகரித்து அருளின ராஜகுல மகாத்ம்யத்தால்-களித்து -அநாதியான கர்மங்கள் என்னை -பாதிக்க மாட்டாது என்றீர்
நீர் ப்ரக்ருதி சம்பந்தததோடு இருக்கிற-காலம் எல்லாம் -நா புக்தம் ஷீயதே கர்ம -என்கிறபடியே கர்மபல அனுபவமாய் அன்றோ இருப்பது -என்ன –
தேவதாந்திர பஜனம் அசேவ்ய சேவை தொடக்கமான விருத்த கர்மங்களை அனுஷ்டித்தால் அன்றோ-அநாதி கர்மம் மேல் யேருகைக்கு அவகாசம் உள்ளது
அவற்றை சவாசனமாக விட்டேன் –எம்பெருமானார்-திருவடிகளை சர்வ காலமும் விச்மரியாதே வர்த்தித்தேன்
இப்படியான பின்பு க்ரூர கர்மங்கள்-என்னை வந்து பாதிக்கைக்கு வழி இல்லை –என்கிறார் –

பிரகிருதி சம்பந்தத்தாலே இன்னமும் வினைகள் உம்மை அடர்க்காவோ என்னில் –அவை என்னை அடர்க்க வழி இல்லை என்கிறார் –
—————————-
36-இராமானுசன் மன்னு மலர்த் தாள் அயரேன்-என்றீர் –
நாங்களும் இவரை ஆஸ்ரயிக்கும்படி இவர் தம்முடைய ஸ்வபாவம் இருக்கும்படி சொல்லீர் என்ன –அதை அருளிச் செய்கிறார் –

இராமானுசன் மன்னு மலர்த்தாள் அயரேன் -என்றீர் -நாங்களும் அவரை ஆஸ்ரயிக்கப் பார்க்கிறோம் –அவருடைய ஸ்வபாவம் இருந்தபடி சொல்லிக் காணீர் என்று கேட்க
பிரதி பஷத்துக்கு பயங்கரனான திரு வாழி யாழ்வானை-ஆயுதமாக வுடையனாய் -சகல ஆத்மாக்களுக்கும் சேஷி யானவன் -உபய சேனா மத்யத்திலே பந்து ச்நேகத்தாலே
அர்ஜுனன் யுத்தா நிவர்த்தனான அன்று -கடலிலே அழுந்தி தரைப் பட்டு கிடக்கிற ரத்னங்களை கொண்டு வந்து-உபகரிப்பாரைப் போலே -வேதாந்த சமுத்ரத்திலே -குப்த்தங்களாய்-ச்லாக்யங்களான அர்த்தங்களை-ஸ்ரீ கீதா சாஸ்திர முகேன – உபகரித்து அருளின பின்பும் -இந்த கலி காலத்திலே லௌகிக ஜனங்கள்
அவசாதத்தாலே கிடக்க -அந்த கீதா ரூபமான அத்யந்த சாஸ்த்ரத்தை வியாக்யானம் பண்ணி உபதேசிகைக்கு-அந்த லௌகிக ஜனங்களை ஸ்ரீ பத்ரிகாச்ரமம் அளவும்
பின் தொடர்ந்த மகா குணம் உடைய பேர் இல்லை கிடீர்-என்று கொண்டு இப்படி இருந்துள்ள எம்பெருமானார் உடைய ஸ்வபாவம் இது என்று அருளிச் செய்கிறார் .

இராமானுசன் மன்னு மா மலர்த்தாள் அயரேன் -என்றீர்-நாங்களும் இவரை ஆசரிக்கும் படி இவர்தம்முடைய ஸ்வபாவம் இருக்கும் படி சொல்லீர்
என்பாரை நோக்கி எம்பெருமானார் ஸ்வபாவத்தை அருளிச் செய்கிறார் –
—————————
37-இப்படி இருக்கிற இவர் தம்மை நீர் தாம் அறிந்து பற்றின படி என் -என்ன-நான் அறிந்து பற்றினேன் அல்லேன் –
அவர் திருவடிகளில் சம்பந்தம் உடையவர்களே -உத்தேச்யர் என்றும் இருக்குமவர்கள் –என்னையும் அங்குத்தைக்கு சேஷம் ஆக்கினார்கள்-என்கிறார் –

இப்படி ஆச்ரயண சௌகர்யாபாதகங்களான கிருபாதி குணங்களை நீர் அறிந்த பின்பு இறே ஆஸ்ரயித்தது-இப்படி உமக்கு தெளிவு பிறந்தது என்
என்று கேட்டவர்களைக் குறித்து -முதலிலே நான் அறிந்து ஆஸ்ரயித்தேன் அல்லேன் –எம்பெருமானார் உடைய கல்யாண குணங்களை அனுபவிக்கும்
பிரிய தமருடைய திருவடிகளிலே அவஹாகித்து-அனுபவிக்கும் ரசஜ்ஜர் தங்களுடைய பரசமர்த்தை ஏக பிரயோஜனதையாலே
என்னைப் பார்த்து அங்குத்தைக்கு ஆளாக்கி அனந்யார்ஹராம்படி பண்ணினார்கள் -அத்தாலே நான் அறிந்தேன் என்கிறார் –

எம்பெருமானாருடைய ஸ்வபாவத்தை எப்படி அறிந்து பற்றினீர்-என்பாரை நோக்கி-அவர் அன்பர் திருவடிகளில் சம்பந்தம் உடைய
ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்னையும் சேர்க்க சேர்ந்தேன்-நானாக அறிந்து பற்றினேன் அல்லேன் –என்கிறார் –
—————————————
38-இப்படி ஸ்ரீ வைஷ்ணவர்கள் சேர்க்கும் போதும் -அத்வேஷாதிகள் வேண்டுகையாலே -தத் ப்ரவர்தகனான-ஈஸ்வரன் இறே
இப் பேற்றுக்கு அடி என்று நினைத்து -சாஷாத் நாராயணோ தேவ -இத்யாதிப் படியே –
எம்பெருமானார் தம்மை ஈஸ்வரனாக பிரதி பத்தி பண்ணி –இன்று என்னைப் பொருளாக்கி –திரு வாய் மொழி -10 8-9 –என்கிற பாட்டில்
ஆழ்வார் அருளிச் செய்தால் போலே -இவரும் அருளிச் செய்கிறார் –
அன்றிக்கே –இவர்களை முன்னிட்டு தம்மை அங்கீகரித்து அருளின எம்பெருமானார் -ஆகையாலே –
இவர் திரு முகத்தைப் பார்த்து -இத்தனை நாள் இவ்வூரிலே நான் வர்திக்கச் செய்தே
என்னை அங்கீகரியாது இருக்கைக்கும் இப்போது அங்கீகரிக்கைக்கும்-ஹேது என் என்று-கேட்கிறார் ஆகவுமாம் –

இப்படி ஆழ்வானை இட்டு அடியேனை திருத்தி சேர்த்து -சேஷத்வத்துக்கு இசைவிப்பித்து –தத் யாதாத்ம்ய ஸீமா பூமியான சரம பர்வதத்திலே
அத்ய அபிநிவிஷ்டனாம் படி பண்ணி யருளின-தேவரீர் -இதற்க்கு முற்காலம் எல்லாம் அந்த ரசத்தை அடியேனுக்கு அனுபவிப்பியாதே வ்யர்த்தமே
விஷயாந்தரங்களிலே வைத்ததுக்கு மூலம் ஏது-பாக்யவான்கள் உடைய வாக்கிலே இடை விடாது சர்வ காலமும் ஸ்துதிகப்படும் எம்பெருமானாரே –
தேவரீர் உடைய க்ருபா பாத்ரம் உள்ளபடி அறியப் பார்த்தால் எத்தனை-தரம் உடையார்க்கும் அரிதாய் இருக்கும் –
தேவரீரே இந்த சூஷ்ம அர்த்தத்தை அருளிச் செய்ய வேணும்-என்றே நேரே கேட்கிறார் –

நல்லோர் ஆள் அவர்க்கு ஆக்கும் போதும் அத்வேஷாதிகள்-த்வேஷம் இன்மை முதலியவை -வேண்டும் அன்றோ –அவைகட்கு ஈஸ்வரன் அன்றோ காரணம்
ஆக இப் பேற்றுக்கு அடி ஈச்வரனே யாதல் வேண்டும் -அந்த ஈஸ்வரன் தானும் –சாஷாத் நாராயணோ தேவ -க்ருத்வா மர்த்யமயீம் தநூம்
மக்நான் உத்தரதே லோகன் காருண்யாச் சாஸ்திர பாணி நா -என்று நாராயணன் நேரே ஆசார்யன்-வடிவம் கொண்டு -கீழ்ப்பட்டவர்களை
சாஸ்திரக் கையினால்-கை தூக்கி விடுகிறான்-என்றபடி –நமக்கு ஆசார்யனான எம்பெருமானாரே என்று நினைந்து அவரை நோக்கி
இன்று என்னைப்-பொருள் ஆக்குவதற்கும் முன்பு என்னைப் புறத்து இட்டதற்கும் என்ன ஹேது என்று வினவுகிறார் –
அல்லது –தன்னடியார்களைக் கொண்டு எம்பெருமானார் தன்னை அங்கீகரித்தவர் ஆகையால் அவரை நோக்கி
இத்தனை நாள் நான் இவ்வூரிலேயே இருந்தும் என்னை அங்கீ கரியாதற்கும் இன்று என்னை-அங்கீ கரித்தத்தற்கும் காரணம் என்ன -என்று கேட்கிறார் ஆகவுமாம்-
————————————
39-இப்படி கேட்ட இடத்திலும் ஒரு மாற்றமும் அருளி செய்யக் காணாமையாலே அத்தை விட்டு-செய்த உபகாரங்களை அனுசந்தித்து –
ப்ரீதியாலே தம் திரு உள்ளத்தைப் பார்த்து –நமக்கு-எம்பெருமானார் செய்யும் ரஷைகள் வேறு சிலர் செய்யும் அளவோ –என்கிறார்-

உரையாய் இந்த நுண் பொருளே -என்று இவர் நேர் கொடு நேர் நிற்று கேட்ட அளவிலும் –எம்பெருமானார் ஒரு மாற்றமும் அருளிச் செய்யக் காணாமையாலே
அத்தை விட்டு -அவர் செய்த உபகாரங்களை-அனுசந்தித்து அவற்றை தம் அருகே இருக்கும் பாகவதோரோடே சொல்ல ஒருப்பட்டவாறே -இவ்வளவும்
இவர் தாம் அவர்களைக் குறித்து எம்பெருமானார் உடைய கல்யாண குண வைபவத்தை பிரசங்கித்தார்
ஆகையாலே அவர்களும் அந்த குணங்களில் ஆழம் கால் பட்டு வித்தராய் –இவர் சொல்லும் அத்தை-கேட்கவும் மாட்டாதே பரவசராய் இருக்க
தம்முடைய திரு உள்ளத்தை சம்போதித்து -புத்திர தார் க்ரஹா-ஷேத்திர அப்ராப்த விஷயங்களிலே மண்டி நிஹீனராய் போந்த நமக்கு
அஞ்ஞா னத்துக்கு உடலான துக்கத்தைப் போக்கி-நித்தியமாய் நிரவதிகமாய் இருக்கிற தம்முடைய கல்யாண குண ஜாதம் எல்லாம்
தெளியும் படியான-அறிவைக் கொடுத்து அருளின -எம்பெருமானார் செய்த ரஷணங்கள் பின்னை ஒருவராலே செய்யப் போமோ -என்கிறார் –

உரையாய் இந்த நுண் பொருளே -என்று அமுதனார் கேட்டும் –மறு மாற்றம் காணாமையாலே-அத்தை விட்டு –அவர் செய்த உபகாரங்களை -அனுசந்தித்து
ப்ரீதியாலே -தம் திரு உள்ளத்தைப் பார்த்து –எம்பெருமானார் செய்யும் ரஷைகள் வேறு சிலர் செய்யும் அளவோ –என்கிறார்-
—————————-
40-எம்பெருமானார் தமக்கு செய்த உபகாரத்தை அருளிச் செய்தார் கீழ்ப் பாட்டில் –இப்பாட்டில் லோகத்துக்கு செய்த உபகாரத்தை அனுசந்தித்து வித்தராகிறார் –

கீழ்ப் பாட்டிலே எம்பெருமானார் தம்மை ரஷித்த படியை சொல்லி ஹ்ர்ஷ்டராய்க் கொண்டு போந்து –
இதிலே -அர்த்தித்வ நிரபேஷமாக ஸ்ரீ வாமன அவதாரத்திலே -தாள் பரப்பி மண் தாவிய ஈசனை -என்கிறபடியே-சர்வருடைய சிரச்சுகளிலே -ஸ்ரீ பாதத்தை வைத்து
உபகரித்தால் போலே -இவரும் அதிகார நதிகார விபாவம் அற-எல்லார்க்கும் ஸ்வரூப அநு ரூபமான அர்த்தத்தை உபகரித்தார் என்று வித்தர்- ஆகிறார்-

எம்பெருமானார் தமக்கு செய்த உபகாரங்களை அருளிச் செய்தார் கீழ் –இப்பாட்டில் உலகிற்க்குச் செய்த உபகாரத்தை அனுசந்தித்து ஈடுபடுகிறார் –
———————————-
41-இப்பாட்டில் எம்பெருமானார் உபதேசத்தாலே லோகம் திருந்தின படியைக் கண்டு-சர்வேஸ்வரன் அநேக அவதாரங்கள் பண்ணித் தன்னைக் கண்ணுக்கு இலக்கு ஆக்கின
அளவிலும் காண மாட்டாத லவ்கிகர் எல்லாம் எம்பெருமானார் காலத்திலே-யதாஜ்ஞானம் பிறந்து பகவதீயர் ஆனார்கள் என்கிறார் –

கீழ் பாட்டிலே எம்பெருமானார் பண்ணின உபதேச வைபவத்தை சொல்லி -இப்பாட்டிலே பூ லோகத்திலே-பிரகிருதி வச்யராய் இருக்கிற சேதனரை ரஷிக்கைக்காக
சர்வேஸ்வரன் மனுஷ்ய திர்யகாத்யநேக தேக பரிக்ரகம்-பண்ணி எல்லாருக்கும் சுலபனாய் கண்ணுக்கு இலக்காய் நின்றாலும் –
இவன் சாது பரித்ராண அர்த்தமாக அவதரித்தான்-என்று அறிய மாட்டாத லவ்கிகர்களே–நமக்கு பிதாவான எம்பெருமானார் அவதரித்த பின்பு அவர் ப்ரசாதத்தாலே-
சம்யக் ஜ்ஞான நிஷ்டராய் -நாராயணனே நமக்கு சர்வ பிரகாரத்தாலும் வகுத்த சேஷி என்று தெளிந்து -அவனுக்கு தங்களை சேஷமாக்கி வைத்தார்கள் என்று அருளிச் செய்கிறார் –

எம்பெருமானார் செய்த உபதேசத்தாலே உலகம் திருந்தின படியைக் கண்டு-திருமகள் கேள்வன்-பல அவதாரங்கள் புரிந்து கண்ணிற்கு இலக்காகி நிற்பினும்
கண் எடுத்துப் பார்க்க மாட்டாத உலகத்தவர் அனைவரும் -எம்பெருமானார் காலத்தில்-மெய்யறிவு பிறந்து அவ்விறைவனை சார்ந்தவர்கள் ஆனார்கள் என்கிறார் –
——————
42-பகவத் அவதாரங்களில் திருந்தாதவர்கள் எல்லாரும் எம்பெருமானார் உடைய அவதாரத்தாலே-திருந்தினார்கள் என்றார் கீழ் -விஷய ப்ரவணனாய் நசித்துப் போகிற
வென்னைத் தம்முடைய பரம கிருபையால்-வந்து எடுத்து அருளினார் என்று தம்மை விஷயீகரித்த படியை அனுசந்தித்து தலை-சீய்க்கிறார் இதில்

கீழில் பாட்டிலே ஈஸ்வரன் அவதரித்து உபதேசித்த இடத்திலும் -திருந்தாத–லவ்கிகர் –எம்பெருமானார் அவதரித்த பின்பு திருந்தி -விலஷணராய்-பகவதீயர் ஆனார்கள் -என்கிறார் –
இப்பாட்டிலே –ஆபாத ரமணீய வேஷைகளான தருணீ ஜனங்களுடைய ஸ்தனங்களிலே பத்தமான ப்ரீதியாலே-ஆழம்கால் பட்டு நசித்துப் போகிற என் ஆத்மாவை –
ஸ்ரீயபதியான -திருவரங்க செல்வனாரே-சகல ஆத்மாக்களுக்கும் வகுத்த சேஷி என்று உபதேசிக்கும்படியான ஞான வைசையத்தை உடையராய்
நிர்துஷ்டரான எம்பெருமானார் -இப்போது அந்த லவ்கிகர் எல்லார் இடத்திலும் பண்ணின தம்முடைய-ஸ்வாபாவிக கிருபையை -அடியேன் ஒருவன் இடத்திலும்
கட்டடங்க பிரவஹித்து -விஷயாந்திர-பிராவணயத்தில் கர்த்தத்தில் நின்றும் உத்தரித்தார் கண்டாயே -என்று தலை சீய்க்கிறார்

மாதவன் அவதாரங்களிலும் திருந்தாவதர்கள் எல்லாரும் எம்பெருமானார் அவதாரத்தாலே-திருந்தினார்கள் என்றார் கீழ்ப் பாட்டிலே -விஷய ப்ரவணனாய்
நசித்துப் போகிற என்னைத் தமது பரம கிருபையால் எம்பெருமானார் வந்து எடுத்து அருளினார் என்று தமது பண்டைய இழி நிலையையும்
இன்று எய்திய பேற்றின் சீர்மையையும் பார்த்துப்பெருமைப்பட்டுப் பேசுகிறார் –இந்தப் பாட்டிலே –
——————————-
43-இப்படி தம்மை விஷயீ கரிக்கையால் வந்த ப்ரீதியாலே -லவ்கிகரைப் பார்த்து –எல்லாரும் எம்பெருமானார் திரு நாமத்தை சொல்லும் கோள்-
உங்களுக்கு எல்லா நன்மையையும் உண்டாகும் –என்கிறார்-

இப் பாட்டிலே -எம்பெருமானார் -தம்முடைய தோஷங்களைப் பாராதே -தம்மை-விஷயீ கரித்த வாத்சல்ய குணத்திலே ஈடுபட்டு -அந்த ப்ரீதி தலை மண்டை இட்டு
லோகத்தார் எல்லாரையும் –உஜ்ஜீவிப்பிக்க வேணும் பர சமர்த்தி பரராய் -அவர்களை சம்போதித்து -சம்சார மக்னரான உங்களுக்கு-கரை கண்ட நான் -உபதேசிக்கிறேன்
தர்ம பிரத்வேஷியான கலியை வைதேசிகமாக போக்கக்-கடவதான சதுரஷரி மந்த்ரத்தை அதிகரியும் கோள் ..உங்களுக்கு சகல சுபங்களும் தன்னடையே-வந்து சேரும் என்கிறார் –

இப்படி தம்மைக் கை தூக்கி விட்ட ப்ரீதியாலே உலகினரை நோக்கி-எம்பெருமானார் திரு நாமத்தை சொல்லும் கோள்
உங்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும் -என்கிறார்..
———————————–
44-இப்படி உபதேசித்த விதத்திலும் ஒருவரும் இதில் மூளாமையாலே-அவர்கள் உடைய படியை அனுசந்தித்து இன்னாதாகிறார்

கீழ் பாட்டில் லோகத்தார் எல்லாருக்கும் அவருடைய அதிகார நதிகார விபாகம் பாராதே அத்யந்த விலஷணமான-உபாயத்தை உபதேசித்ததாலும்
அத்தை அத்யவசிக்க மாட்டாதே புருஷார்த்தம் எது என்று சந்தேகியா நின்று கொண்டு –சிஷிதமான சப்த ராசியால் நிறையப் பட்டதாய் –
அத்விதீயமாய் இயலும் இசையும் சந்தர்ப்பமும் கூடிய விலஷணமான இப் பிரபந்தமும் -ரிகாதி வேத சதுஷ்டயமும் -அபரிமாய் தத் உப பிரஹமணமான
தர்ம சாச்த்ரமாகிற இவற்றை அடைவே ஆராய்ந்து இருக்குமவராய் -சத்துக்களாலே அடைவு கெட ஸ்துதிக்கும்படியாய் இருக்கிற எம்பெருமானாருடைய
திருநாமத்தை அப்யசியாதே போனார்களே என்று இன்னாதாகிறார்-

இப்படி இவர் உபதேசித்தும் படியில் உள்ளோரில் ஒருவரும் இவர் வார்த்தையின்படி –இராமானுச நாமத்தை சொல்ல முற்படாமையாலே –
அவர்கள் தன்மையை நினைந்து வருந்திப் பேசுகிறார் –
——————————
45-இப்படி விமுகராய் இருந்த சேதனரிலே-அந்ய தமராய் இருந்த தம்மை நிர்ஹேதுகமாக விஷயீகரித்துத் தம் திருவடிகளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று
விஸ்வசித்து இருக்கும்படி-பண்ணின உபகாரத்தை யனுசந்தித்து -தேவரீர் செய்து அருளின உபகாரம்வாசகம் இட்டுச்-சொல்ல ஒண்ணாது -என்கிறார் –

கீழில் பாட்டிலே அஞ்ஞராய் போருகிற மனுஷ்யர் படியை சொல்லி – விஷண்ணராய் -இதிலே-அப்படிப்பட்ட அஞ்ஞரில் அந்ய தமராய் போந்த தம்மை
நிர்ஹேதுகமாக விஷயீ கரித்து –தம்முடைய திருவடிகளே-ப்ராப்யமும் பிராபகமும் என்று விச்வசித்து இருக்கும்படி பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து
அப்படிப்பட்ட பிரபாவத்தை கொண்டாடுகிறேன் என்று -சொல்ல ஒருப்பட்டால் -அதுவே -நமக்கு வாசா மகோசரமாய் இருந்தது என்கிறார் –

கல்லார் அகலிடத்தோர் என்று கூறப் பட்டோரில் ஒருவராய் இருந்த தம்மை –ஹேது எதுவும் இன்றி -ஏற்று அருளித் தம் திருவடிகளையே உபாயமும் உபேயமுமாக
நம்பும்படி செய்த எம்பெருமானார் உடைய உபகாரத்தை அனுசந்தித்து அவரை நோக்கித் தேவரீர் செய்து அருளின உபகாரம் பேசும் திறத்தது அன்று -என்கிறார் .
—————————
46-எம்பெருமானார் செய்து அருளின உபகாரத்தை யனுசந்தித்து அதுக்குத் தோற்றுத் திருவடிகளிலே வணங்குகிறார்-

கீழ்ப் பாட்டில் சொல்லுகிறபடியே சமஸ்த கல்யாண குணாத் மகரானவர் -தம்மை-இவர்க்கு முற்றூட்டாக கொடுக்கையாலே -அந்த உபகாரத்தை அனுசந்தித்து
விஸ்ரப்பத்தராய் கொண்டு -துச்தர்க்கங்களாய் -கேவலம் உக்தி மாத்திர சாரங்களாய் இருக்கிற -பாஹ்ய சமயங்கள் ஆறும் -குத்ருஷ்டி சமயங்கள் ஆறும் –
அடியோடு நசிக்கும்படி பூ லோகத்தில் நம் ஆழ்வார் அருளிச் செய்த த்ரமிட வேதத்தை சார்த்தமாக அறிந்தவராய் -சகல திக் வ்யாபையான பிரதையை உடையவராய்
அறிவு கேடனான நான் விச்வசிக்கும்படி -என்னுடைய-மனசிலே ஸ்தாவர பிரதிஷ்டையாக புகுந்து அருளின -எம்பெருமானாரை -ஆஸ்ரயிக்கிறோம் –என்கிறார் –

எம்பெருமானார் செய்து அருளிய உபகாரத்திற்கு தோற்று-அவர் திருவடிகளில் வணங்குகிறார்-
—————————
47-மதியிலியேன் தேறும்படி என் மனம் புகுந்தான் -என்றார் கீழ் .-லோகத்தில் உள்ளவர்களுக்கு தத்தவ ஸ்திதியை யருளிச் செய்து –பகவத் சமாச்ரயண ருசியை
ஜநிப்பிக்குமவர் தம்மளவில் பண்ணின விசேஷ விஷயீகாரத்தை-யனுசந்தித்து -இப்படி விஷயீகரிக்க பெற்ற எனக்கு சத்ருசர் இல்லை என்கிறார் இதில் –

கீழ்ப் பாட்டிலே எம்பெருமானார் தம்முடைய திரு உள்ளத்திலே பிரகாசித்து உஜ்ஜ்வலமாக-அவரை வணங்கினோம் என்று சொல்லி –இதிலே
லோகத்தார் எல்லாரையும் குறித்து -சர்வ சமாஸ்ரயநீயனான சர்வேஸ்வரன் கோயிலிலே சந்நிகிதனாய் இருந்தான் -அவனை ஆஸ்ரியும் கோள் என்று
பரம தர்மத்தை-உபதேசித்த உபகாரகன் -எம்பெருமானார் –என்னுடைய ஆர்த்த அபராதங்களை நசிப்பித்தி திவாராத்ரி விபாகம் அற
என்னுடைய ஹ்ர்த்யத்திலே சுப்ரதிஷ்டராய் -இவ் இருப்புக்கு சதர்சம் ஒன்றும் இல்லை என்னும்படி எழுந்தருளி இருந்தார் –
இப்படி ஆனபின்புதமக்கு சர்தர்சர் ஒருவரும் இல்லை என்கிறார்-
———————————
48-எனக்காரும் நிகரில்லை -என்று இவர் சொன்னவாறே எம்பெருமானார் இவரைப் பார்த்து -நீர் நம்மை விட்டு வேறு ஒரு விஷயத்தை அவலம்பித்தல்
-நாம் உம்மை விட்டு வேறு ஒரு விஷயத்தை-விரும்புதல்-செய்யில் இந்த ஹர்ஷம் -உமக்கு நிலை நிற்க மாட்டாதே என்ன –என்னுடைய நைச்யத்துக்கு-
தேவரீர் கிருபையும் -அந்த கிருபைக்கு என்னுடைய நைச்யமும் ஒழிய புகல் இல்லையாய் இருக்க -வ்யர்த்தமே நாம் இனி அகலுகைக்கு காரணம் என் –என்கிறார் –

இராமானுசன் இரவும் பகலும் விடாது என் தன் சிந்தை உள்ளே நிறைந்து-ஒப்பற விருந்தான் -எனக்காரும் நிகர் இல்லை -என்று இவர் சொன்னவாறே
எம்பெருமானார் இவரைப் பார்த்து -நீர் -நம்மை விட்டு காலாந்தரத்தில் வேறு ஒரு விஷயத்தை விரும்புதல் -நாம் உம்மை விட்டு வேறு ஒரு
விஷயத்தை ஆதரித்தல் செய்யில் இந்த ஹர்ஷம் நிலை நிற்க மாட்டாதேஎன்ன –என்னுடைய நைசயத்துக்கு-தேவரீருடைய கிருபையும்
அந்த கிருபைக்கு என்னுடைய நைச்யமே ஒழிய -புகல் இல்லையாய் இருக்க -வ்யர்த்தமே நாம் அந்ய பரர் ஆகைக்கு காரணம் என்கிறார் –

எனக்காரும் நிகரில்லை என்று களித்து கூறும் அமுதனாரை -நமிருவரில் எவரேனும் ஒருவர் மற்று ஒருவரை விட்டு விளகிடின் உமது இக்களிப்பு
நிலை நிற்க மாட்டாதே -என்று எம்பெருமானார் வினவ –என்பால் உள்ள நீசனாம் தன்மைக்குத் தேவரீர் அருள் அன்றி வேறு புகல் இல்லை –
அவ்வருளுக்கும் இந்நீசத் தண்மை யன்றி வேறு புகல் இல்லை-ஆக இனி நாம் வீணாக என் அகலப் போகிறோம் –என்கிறார் –
———————————–
49-எம்பெருமானார் விரோதிகளை நிரசித்துக் கொண்டு தம் திரு உள்ளத்தின் உள்ளே நிரந்தர வாசம்-பண்ணி அருளுகிற மகா உபகார அனுசந்தானத்தால்
வந்த ப்ரீதியையும் -அந்த ப்ரீதியினுடைய அஸ்த்தையர் ஹேது வில்லாமையையும் -அருளிச் செய்தார் கீழ் இரண்டு பாட்டாலே –
இதில் –அவர் திருவவதரித்து அருளின பின்பு-லோகத்துக்கு உண்டான சம்ருத்தியை அனுசந்தித்து-இனியராகிறார்

எம்பெருமானார் தம்முடைய பிராப்தி பிரதிபந்தங்களை எல்லாம் -போக்கி தம் திரு உள்ளத்திலே-நிரந்தர வாசம் பண்ணுகிற மகோ உபகாரத்தால்
வந்த ப்ரீதி பிரகர்ஷத்தையும் -அந்த ப்ரீதி எப்போது உண்டாகக் கூடுமோ -என்று அதி சங்கை பண்ணினவரைக் குறித்து -அதினுடைய சாஞ்சல்ய ஹேது இல்லாமையும்
கீழ் இரண்டு பாட்டுக்களாலே அருளிச் செய்து -இதிலே –எம்பெருமானார் திருவவதரித்து அருளின பின்பு -வேதத்துக்கு உண்டான-சம்ர்தியையும்
துர்மதங்களுக்கும் கலி தோஷத்துக்கும் உண்டான விநாசத்தையும் அனுசந்தித்து -இனியராகிறார்

இரு வினையின் திறம் செற்று இரவும் பகலும் விடாது என் சிந்தை உள்ளே நிறைந்து ஒப்பற-இருந்தான் -எனக்காரும் நிகரில்லையே -என்று
எம்பருமானார் செய்த மகா உபகாரத்தை-அனுசந்தித்தனால் வந்த ப்ரீதியையும் –இனி நாம் பழுதே யகலும் பொருள் என் -பயன் இருவோமுக்கும் ஆனபின்னே –என்று
அந்த ப்ரீதி குலைதலுக்கு காரணம் இல்லாமையின் நிலை நின்றமையையும்-கீழ் இரண்டு பாட்டுக்களாலே கூறினார் –
இதில்-எம்பெருமானார் அவதரித்து அருளின பின்பு உலகிற்கு உண்டான நன்மைகளை-கூறி இனியராகிறார் –
—————————-
50-தென்னரங்கன் கழல் சென்னி வைத்து தானதில் மன்னும் -என்று-எம்பெருமானாற்கு பெரிய பெருமாள் திருவடிகளில் உண்டான ப்ராவண்ய அதிசயத்தை-அனுசந்தித்தார் கீழ் –
அந்த பிரசங்கத்திலே தமக்கு உத்தேச்யமான எம்பெருமானார் திருவடிகளை-அனுசந்தித்து -தத் ஸ்வபாவ அனுசந்தானத்திலே வித்தராகிறார் -இதில் –

தென்னரங்கன் கழல் சென்னி வைத்து தான் அதில் மன்னும் -என்று எம்பெருமானாருக்கு-பெரிய பெருமாள் திருவடிகளில் உண்டான ப்ராவண்யத்தை அனுசந்தித்தார் கீழ்
இதில் அந்த பிரசங்கத்தில் தமக்கு உத்தேச்யரான எம்பெருமானார் திருவடிகளை அனுசந்தித்து –
அவற்றினுடைய ஸ்வரூப ஸ்வபாவன்களை அடைவே அருளிச் செய்து கொண்டு -வித்தார் ஆகிறார் –

எம்பெருமானாருக்கு பெரிய பெருமாள் திருவடிகளில் உண்டான ஈடுபாடு முன் பாசுரத்தில்-கூறப்பட்டது .
இங்கு தமக்கு உத்தேச்யமான எம்பெருமானார் திருவடிகளின் ஸ்வபாவத்தை-அனுசந்தித்து ஈடுபாடுகிறார் .-
————————–
51-எம்பெருமானார் இந்த லோகத்தில் அவதரித்து அருளிற்று என்னை யடிமை கொள்ளுகைக்காக -வேறு ஒரு ஹேதுவும் இல்லை -என்கிறார்.-

பால்யமே பிடித்து -மாதுலேயன் என்று நினையாதே ரஷகன் என்றே அத்யவசித்து இருக்கிற-பஞ்ச பாண்டவர்களுக்கு பிரதி பஷம் அழியும்படி சாரத்தியம்
பண்ணின கிருஷ்ணனுடைய ஆனைத்-தொழில்கள் எல்லாம் தெளிந்த ஸ்வரூப ஞானம் உடைய ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆராவமுதாய்-இருக்கும் எம்பெருமானார் –
இந்த பாப பிரசுரமான பூ லோகத்திலே -அவதரித்தது -ஆராய்ந்து பார்த்தால்
என்னை ஆளுகைக்காகவே என்று நிச்சிதமாய்த்து இத்தனை ஒழிய வேறு ஒரு ஹேது இல்லை என்கிறார் –

என்னை அடிமை கொள்வதற்காகவே எம்பெருமானார்-அவதாரம் செய்து அருளினார் -என்கிறார்-
——————————
52-என்னை ஆள வந்து இப்படியில் பிறந்தது -என்று ஒருவராலும் என்னை ஆள வரியனான-என்னை ஆளுகைக்காக வந்து அவதரித்தார் என்றீர் .
இவர் தாம் இப்படி அகடிதகடநா சமர்த்தரோ என்ன –அவர் செய்த அகடிதகடனங்களை-அருளிச் செய்கிறார் .

என்னை ஆள வந்து இப்படியில் பிறந்தது -என்று ஒருவராலும் ஆள அரிய என்னை-ஆள வந்து அவதரித்தார் என்று அவரைக் கொண்டாடா நின்றீர்
-இந்த அவதாரத்திலே உம்மை ஒருவரையே-ஆளா நின்றாரோ என்ன -முதல் முன்னம் உத்தேசித்து அவதரித்தது என்னை ஆளுக்கைக்காகவே -ஆகிலும்
இவர் அவதரித்துஅருளி -அவைதிக சமயங்களாலே நசித்துப் போன லோகங்களை எல்லாம் சகிக்க மாட்டாதே -அந்த அவைதிக மதங்களை நசிப்பித்து –
தம்முடைய கீர்த்தியாலே லோகங்கள் எல்லாவற்றிலும் வியாபித்து -க்ரூர பாவியான என் பக்கலிலே பிரவேசித்து -என்னுடைய பாபங்கள் எல்லாம் நசித்துப் போகும்படி பண்ணி –
பின்பு பெரிய பெருமாள் உடைய அழகிய திருவடிகளோடு சம்பந்திப்பித்தார் -இப்படி ஒரு கார்யத்தை உத்தேசித்து-அநேக கார்யங்களை செய்தார் –
இப்படி இந்த எம்பெருமானார் செய்து அருளும் ஆச்சர்யங்களைக் கண்டீரே-என்று வித்தார் ஆகிறார்-

ஒருவராலும் ஆள முடியாத என்னை ஆண்டதுபோலே –இன்னும் பல பொருந்தாவற்றையும் பொருந்த விடும் திறமை -எம்பெருமானார் இடம் உண்டு என்கிறார் .
———————-
53-பார்த்தன் அறு சமயங்கள் பதைப்ப -என்று பாஹ்ய சமயங்களை குலைய பண்ணி -இவ்விபூதியில்-இவர் ஸ்தாபித்த வர்த்தம் ஏது என்ன –
சகல சேதன அசேதனங்களும் சர்வேஸ்வரனுக்கே சேஷம் என்கிற விலஷணமான-அர்த்தத்தை ஸ்தாபித்து அருளினார் -என்கிறார் .

பார்த்தான் அறுசமயங்கள் பதைப்ப -என்று பாஹ்ய சமயங்களை குலைய பண்ணினார் என்றும் -அரங்கன் செய்ய தாளிணை யோடு ஆர்த்தான் -என்று
பரம புருஷார்த்த சாம்ராஜ்யத்தை கொடுத்தார் என்றும் -சொன்னீர் -அம் மாத்ரமேயோ -அவர் செய்தது என்னில் -அவ்வளவு அன்று –
சகல அபேஷிதங்களையும் -1–அபேஷா நிரபேஷமாக கல்பகம் போலே கொடுக்குமவராய் –2-சௌசீல்யம் உடையவராய் –3-அத்ய ஆச்சரிய பூதராய்
-4–ஆர்ஜவ குண யுக்தரான எம்பெருமானார் -சகல லோகங்களிலும் இருந்து உள்ள சகல ஆத்மாக்களும் சர்வ
ஸ்மாத் பரனுக்கே சேஷ பூதர் என்று இந்த லோகத்திலே பிரதிஷ்டிப்பித்து அருளினார் –

அறு சமயங்கள் பதைப்ப பார்த்து இவர் இவ்வுலகத்தில் நிலை நாட்டின பொருள் ஏது என்ன –எல்லாப் பொருள்களும் சர்வேஸ்வரனுக்கே சேஷம் -என்ற
இந்த நற் பொருளை நிலை நாட்டி யருளினார்-என்கிறார்
—————————-
54-இப்படி எம்பெருமானார் யதார்த்த ச்த்தாபனம் பண்ணி யருளின ஸ்வபாவத்தைக் கண்டு-பாஹ்ய சமயங்களுக்கும் வேதத்துக்கும்
திரு வாய் மொழிக்கும் உண்டான ஆகாரங்களை அருளிச் செய்கிறார்

கீழ் எல்லாம் எம்பெருமானார் துர்மத நிரசனம் பண்ணினார் என்றும் -வேதொத்தரணம்-பண்ணினார் என்றும் -ஆழ்வார்களுடைய திவ்ய சூக்திகளிலே
தானே அவஹாகித்தார் என்றும் -சொன்னீர் -ஆன பின்பு -அத்தால் துர் மதங்களுக்கும் -வேதங்களுக்கும் -ஆழ்வாருடைய அருளிச் செயல்களுக்கும்
உண்டான-ஆகாரத்தை சொல்ல வேண்டாவோ என்ன -துர் மதங்கள் அடங்கலும் வேரோடு கூட நசித்துப் போனதன –வேதமானது பூ லோகத்தில் எனக்கு
யாரும் நிகர் இல்லை -என்று கர்வித்து இருந்தது -அருளிச் செயல்கள் எல்லாம்-அனைவரும் உஜ்ஜீவிக்கும்படி நித்யாபிவ்ர்த்தங்களாய் கொண்டு இருந்தன –என்கிறார் –

நற்பொருள் நாட்டிய தன்மை கண்டு -புற மதங்களும் -வேதங்களும் -திருவாய்மொழியும்-அடைந்த நிலைகளை -இதில் அருளிச் செய்கிறார் .
————————–
55-எம்பெருமானார் ஸ்வபாவத்தைக் கண்டு வேதம் கர்வோத்தரமாய் ஆயிற்று என்றார் கீழ் -இப்படி ஒருவர் அபேஷியாது இருக்கத் தாமே –சகல வேதங்களும்
பூமியிலே நிஷ்கண்டமாக நடக்கும் படி பண்ணின ஔதார்யத்திலெ ஈடுபட்டு அவரை ஆஸ்ரயித்து இருக்கும் குடி எங்களை யாள உரிய குடி –என்கிறார் இதில் –

கீழ்ப் பாட்டிலே வேதமானது எம்பெருமானாருடைய வைபவத்தை கண்டு கர்வித்து தனக்கு ஒருவரும் லஷ்யம் ஆக மாட்டார்கள் என்று பூ லோகத்தில் சஞ்சரியா நின்றது என்றார்-
இதிலே அப்படி அந்த வேதங்களை ஒருவர் அபேஷியாது இருக்க தாமே நிஷ்கண்டனமாக ப்ரவர்ப்பித்த-ஔதார்யத்தை உடையராய் -சகல ஜன மநோ ஹரமாய் –
பரிமளத்தை உடைய திவ்ய உத்யானங்களாலே-சூழப்பட்டு -தர்சநீயமான கோயிலுக்கு ஸ்வாமியான பெரிய பெருமாளுடைய அடியவரான ஆழ்வார்களை-
கொண்டாடுகிற எம்பெருமானார் –இந்த ஸ்வபாவன்களிலே ஈடுபட்டு ஆஸ்ரயித்து இருக்குமவர்களுடைய குலத்தார் -எங்களை ஆளக்கடவ ஸ்வாமித்வத்தை உடைய குலத்தார் என்கிறார் –

நாரணனைக் காட்டிய வேதம் களிப்புரும்படியாகச் செய்த எம்பெருமானார் உடைய வள்ளன்மையில்-ஈடுபட்டு
அவரை ஆஸ்ரயித்து இருக்கும் குடி எங்களை ஆள்வதற்கு உரிய குடி –என்கிறார் –
———————————-
56-கொண்டலை மேவித் தொழும் குடியாம் எங்கள் கோக்குடி -என்று இவர் சொன்னவாறே -முன்பும் ஒரோ விஷயங்களில் நின்றால் இப்படி யன்றோ நீர் சொல்லுவது .
இதுவும் அப்படி அன்றோ -என்ன-எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு என் வாக்கு மனச்சுக்கள் இனி வேறு ஒரு விஷயம் அறியாது -என்கிறார் .

கொண்டலை மேவித் தொழும் குடியாம் எங்கள் கோக்குடியே -என்று சொன்னவாறே -நீர் இப்போது-எம்பெருமானாருடைய கல்யாண குணங்களை அனுபவித்து
வித்தராய் சொன்னீர் -நீர் விஷயாந்தரங்களை-விரும்பின போது முற்காலத்தில் அப்படியே அன்று சொல்லுவது -ஆகையாலே உமக்கு இது ஸ்வபாவமாய் விட்ட பின்பு
இவரையே பற்றி இருக்கிறேன் என்ற இது நிலை நிற்க கடவதோ என்று சிலர் ஆட்சேபிக்க -அவர்களை குறித்து-
நான் துர்வாசனையாலே விஷயாந்தரங்களை விரும்புவதாக யத்நித்தேன் ஆகிலும் என்னுடைய வாக்கும்-மனசும் அவற்றை விரும்ப இசையாதே இருந்தது -என்கிறார் –

கொண்டலை மேவித் தொழும் குடி எங்கள் கோக்குடி எனபது நீர் பற்றின ஒவ் ஒரு விஷயத்திலும்-தனித் தனியே உணர்ச்சி வசப்பட்டு பேசினது போனது அன்றோ –
அது போலே இதுவும் உணர்ச்சி வசப்பட்ட பேச்சாய் நிலை நிற்காதே -என்ன –எம்பெருமானாரை பற்றின பின்பு -மற்று ஒரு விஷயத்தை –
என் மனம் பற்றி நினையாது -என் வாக்கு உரையாது -என்கிறார் –
——————————
57-இனி என் வாக்கு உரையாது -என் மனம் நினையாது -என்பான் என் -விபூதி இதுவாகையாலே அஞ்ஞானம் வரிலோ -என்ன
எம்பெருமானாரை இந்த லோகத்திலே லபித்த பின்பு -விவேகம் இன்றியே -கண்டது ஒன்றை-விரும்பக் கடவ பேதைத் தனம் ஒன்றும் அறியேன் -என்கிறார் –

-இனி என் வாக்கு உரையாது -என் மனம் நினையாது மற்று ஒன்றையே -என்றீர் -இருள் தரும் மா ஞாலத்திலே -இந் நாளிலே இந்த நியமம் நிலை நிற்குமோ -என்ன –
சஞ்சலம் ஹி மன-என்று மனச்சு ஒரு விஷயத்தில் தானே சர்வ காலமும் நிற்க மாட்டாது இறே -ஆகையாலே மற்றொரு காலத்திலே மனச்சு வ்யபிசரித்து
அஞ்ஞாநத்தை விளைத்தாலோ என்று ஆஷேபித்தவர்களைக் குறித்து -நீங்கள் சொன்னதே சத்யம் -ஆகிலும் நான் கீழே இழந்து போன நாள் போல் அன்று இந் நாள் –
இப்போது தம்தாமுடைய பரமை ஏகாந்த்யத்தாலே ஸ்ரீ ரங்கநாதன் உடைய பரம போக்யமான திருவடிகளுக்கு அடிமைப் படுக்கையே பரம புருஷார்த்தம் என்று அத்யவசித்து
இருக்குமவர்களையே தமக்கு பந்து பூதராக அங்கீ கரித்து கொண்டு பிரபன்ன குல உத்தேச்யராய் -சர்வ தபச்சுக்களிலும் வைத்துக் கொண்டு –
விலஷணமான தபசான சரணாகதி தர்மத்திலே நிஷ்டர் ஆனவர்கள் -தம்முடைய வைபவத்தை சொல்லி புகழும்படியான எம்பெருமானாரை இந்த லோகத்திலே லபித்தேன் –
ஆன பின்பு ப்ராப்த அப்ராப்த விவேகம் இன்றிக்கே கண்டதொன்றை விரும்பக் கடவதான அஞ்ஞாநமானது என் இடத்தில் சேரக் கண்டிலேன் -என்கிறார் –

என் வாக்கும் மனமும் மற்று ஒன்றை இனி உரையாது நினையாது என்னும் உறுதி எங்கனம் கூடும் -இருள் தரும் மா ஞாலம் அன்றோ –
மீண்டும் அறியாமை வாராதோ -என்பாரை நோக்கி –இன் நானிலத்தில் எம்பெருமானாரை நான் பெற்ற பின்பு நன்மை தீமைகளைப் பகுத்து அறியாது
கண்டதொன்றை விரும்பும் பேதைமை ஒன்றும் அறியேன் –என்கிறார் –
————————-
58-கீழே பல இடங்களிலும் எம்பெருமானார் பாஹ்ய மத நிரசனம் பண்ணின ஸ்வபாவத்தை-அனுசந்தித்து வித்தரானார் –
குத்ருஷ்டி நிரசனம் பண்ணின படியை அனுசந்தித்து வித்தார் ஆகிறார் இதில் –

பல இடங்களிலும் -வேத பாஹ்ய சமயங்கள் பூ லோகத்தில் நடையாடாதபடி எம்பெருமானார்-சாஸ்திர முகத்தாலே அவர்களோடு பிரசங்கித்து –
அவர்களை சவாசனமாக நிரசித்த வைபவத்தை கொண்டாடினார்-
இதிலே -கட்டப் பொருளை மறைப் பொருள் என்று சொல்கிற குதர்ஷ்டிகளை வேதாந்த வாக்யங்களாலே பிரசங்கம்பண்ணி ஜெயித்தவருடைய வைபவத்தை கொண்டாடுகிறார் –

கீழே தம் பேதைமை தீர்ந்தமை கூறினார் -இங்கே வேதப் பொருள் கூறுவதில் வரும் பேதைமை தீர்ந்தமையைக் கூறுகிறார் .
புறச் சமயங்களை களைந்த ஸ்வபாவம் கீழ்ப் பல கால் ஈடுபாட்டுடன் கூறப்பட்டது –குத்ருஷ்டி மதம் களைந்தபடி இங்கே ஈடுபாட்டுடன் அனுசந்திக்கப் படுகிறது
———————————
59-இவர் இப்படி வித்தராகிற இத்தைக் கண்டவர்கள் -இவர் இது செய்திலர் ஆகிலும் -சேதனர் பிரமாணங்களைக் கொண்டு நிரூபித்து
-ஈஸ்வரன் சேஷி-என்று அறியார்களோ -என்ன –கலியுக பிரயுக்தமான அஞ்ஞான அந்தகாரத்தை எம்பெருமானார் போக்கிற்றிலர் ஆகில்
ஆத்மாவுக்கு சேஷி ஈச்வரனே என்று நிரூபித்து ஒருவரும் அறிவார் இல்லை-என்கிறார் –

எம்பெருமானார் வேத உத்தாரணம் பண்ணி அருளினார் என்றும் -தத் அர்த்த-உத்தாரம் பண்ணி அருளினார் என்றும் கீழ் எல்லாம் படியாலும் சொன்னீர் —
அவர் இப்படி செய்தார் ஆகிலும் -பிரமாதக்களான சேதனரும் நித்தியராய் -பிரமாணங்களான வேதமும் நித்தியமாய் இருக்கையாலே -அவர்கள்
அந்த வேதத்தை அடைவே ஓதி -தத் ப்ரதிபாத்யனான நாராயணனே ஆத்மாக்களுக்கு சேஷி என்று தெளிந்து -உஜ்ஜீவிக்கலாகாதோ என்று சொன்னவர்களைக் குறித்து
கலி இருளானது லோகம் எல்லாம் வியாபித்து-தத்வ யாதாம்ய ஜ்ஞானத்துக்கு பிரதிபந்தகமாயிருக்கையாலே –எம்பெருமானார் திருவவதரித்து -சகல
சாஸ்திரங்களையும் அதிகரித்து -அவற்றினுடைய நிரவதிக தேஜச்சாலே அந்த கலி பிரயுக்தமான அஞ்ஞான-அந்தகாரத்தை ஒட்டிற்றிலர் ஆகில் –
நாராயணன் சர்வ சேஷி என்று இந்த ஜகத்தில் உள்ளோர் ஒருவரும்-அறியக் கடவார் இல்லை என்கிறார் –

அத்வைதிகளை இங்கனம் வாதில் வென்றிலர் ஆயினும் -அறிவாளர்கள் பிரமாணங்களைக் கொண்டு -நாராயணனே ஈஸ்வரன் ஆதலின் உலகமாம் உடலை
நியமிக்கும் ஆத்மா வான சேஷி என்று அறிந்து கொள்ள-மாட்டார்களோ -என்று தமது ஈடுபாட்டை கண்டு கேட்பாரை நோக்கி -கலிகால வேதாந்தங்கள் ஆகிய
அத்வைதங்களாம் அக இருள் உலகு எங்கும் பரவி உள்ள இக் கலி காலத்தில்-எம்பெருமானார் அவ் விருளைப் போக்காவிடில் —
ஆத்மாவுக்கு ஆத்மாவான சேஷி ஈச்வரனே -என்று எவரும்-நிரூபித்து அறிந்து இருக்க மாட்டார்கள்-என்கிறார் –
————————–
60-இப்படி எம்பெருமானார் உடைய ஞான வைபவத்தை இவர் அருளிச் செய்ய கேட்டவர்கள்-அவர் தம்முடைய பக்தி வைபவம் இருக்கும்படி என் -என்ன –
பகவத் பாகவத விஷயங்களிலும்-தத் உபய வைபவ பிரதிபாதிகமான திருவாய் மொழியிலும்-அவர்க்கு உண்டான ப்ரேமம் இருக்கிற படியை-அருளிச் செய்கிறார் –

கீழ் எல்லாம் எம்பெருமானாருடைய வேத மார்க்க பிரதிஷ்டாப நத்தையும் -பாஹ்ய மத-நிரசன சாமர்த்த்யத்தையும் -வேதாந்தார்த்த பரி ஜ்ஞானத்தையும் –
அந்த ஜ்ஞானத்தை உலகாருக்கு எல்லாம்-உபதேசித்த படியையும் அருளிச் செய்து -இதிலே அந்த ஜ்ஞான பரிபாக ரூபமாய்க் கொண்டு பகவத் விஷயத்திலும் –
அவனுக்கு நிழலும் அடிதாருமாய் உள்ள பாகவதர் விஷயத்திலும் -தத் உபய வைபவ பிரதிபாதகமான-திருவாய் மொழியிலும் -இவருக்கு உண்டாய் இருக்கிற
நிரவதிகப் பிரேமத்தையும்-இம் மூன்றின் உடைய வைபவத்தையும் சர்வ விஷயமாக உபகரிக்கைக்கு உடலான இவருடைய ஔதார்யத்தையும் அருளிச் செய்கிறார் –

எம்பெருமானார் உடைய ஞான வைபவத்தை கேட்டு அறிந்தவர்கள் -பக்தி வைபவத்தையும்-கேட்டு அறிய விரும்புகிறோம் என்ன -பகவான் இடத்திலும்
பாகவதர்கள் இடத்திலும் -அவ் இருவர் பெருமையும் பேச வந்த திருவாய் மொழி இடத்திலும் -அவருக்கு உண்டான-ப்ரேமம் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் .
இனி புக்கு நிற்கும் என்பதனை -வினை முற்றாக்கி -பிறருக்கு உபதேசிப்பதாக கொள்ளாது -நிற்கும் குணம் என்று பெயர் எச்சமாக கொண்டு –
ஞான வைபவம் பேசினதும் தாமே பக்தி வைபவம் பேசி ஈடுபடுகிறார் என்னலுமாம் –
————————–
61-குணம் திகழ் கொண்டல்-என்று இவருடைய குணத்தை ச்லாகித்தீர் -இவர் தம்முடைய குண வைபவம் இருக்குபடி என் -என்ன -அது இருக்கும்படியை அருளிச் செய்கிறார் –

குணம் திகழ் கொண்டல் -என்று இவர் தம்முடைய குணங்களைக் கொண்டாடினீர் -அவற்றினுடைய வைபவம் இருக்கும்படி எங்கனே என்று கேட்டவர்களைக் குறித்து –
அத்யந்த க்ரூர பாவியாய் -சம்சார கர்த்தத்திலே அழுந்து கிடக்கிற என்னை அர்த்தித்வ நிரபேஷமாக-தம்முடைய பரம கிருபையாலே தாமே நான் இருந்த இடம் தேடி வந்து
என்னை தமக்கு சேஷமாம்படி திருத்தி ரஷித்து அருளின பின்பும் -பராங்குச பரகாலநாத யாமுநாதிகள் எல்லாம் தம் பக்கலிலே விசேஷ பிரதிபத்தி-பண்ணும்படி இருப்பாராய்
பெரிய பெருமாள் திருவடிகளிலே சகல சேதன உஜ்ஜீவன விஷயமாக செய்யப்பட-சரணாகதி யாகிற மகா தபஸை உடையவரான –எம்பெருமானார் உடைய
கல்யாண குணங்கள் சமஸ்த திக்கிலும்-வ்யாப்தங்களாய்-அத்யந்த ஔஜ்வல்ய சாலிகளாய் கொண்டு -பூமியிலே எங்கும் ஒக்க காணப்படுகின்றன -என்கிறார் –

குணம் திகழ் கொண்டல் என்று தம் குணத்தை எல்லார் திறத்தும் வழங்கும் வள்ளல் என்று வருணித்தீர் -அங்கனம் வழங்கப்படும் குணங்கள் இன்னார் திறத்து
பயன் பெற்றன என்று கூறலாகாதோ என்பாரை நோக்கி –வல்வினையேனான என் திறத்திலே அவை பயன் பெற்று மிகவும் விளங்கின -என்கிறார் –
—————————–
62-தம்முடைய கர்ம சம்பந்தம் அறப் பெறுகையால் வந்த-கார்த்தார்த்த்யத்தை-(-க்ருதார்த்தம் -க்ருத க்ருத்யம் இரண்டையும் சேர்த்து இந்த சப்த பிரயோகம் )யருளிச் செய்கிறார் –

கீழ்ப் பாட்டிலே-சமஸ்த கல்யாண குணாத் மகரான எம்பெருமானார் -தம்மைப்பெற வேண்டும் என்று தேடித் திரிந்த படியையும் – அவர் நிர்ஹேதுகமாக தம்மை
அடிமை கொண்ட பின்பு -அவர் தம்முடைய கல்யாண குணங்கள் நிறம் பெற்ற படியையும் -அருளிச் செய்து -இதிலே –
எம்பெருமானார் பர்யந்தமும் அல்ல -அவருடைய தாஸ்யத்தை பண்ணிக் கொண்டு போரும் அவர்களுடைய-பர்யந்தமும் அல்ல -தம்முடைய தாஸ்யம் -என்று
துர்மாநிகளாகக் கொண்டு வன் நெஞ்சரான-ஆத்மா அபஹாரிகளுக்கு வ்யதிரேக முகேன தாஸ்யத்தை பண்ணுமவர்களுடைய சம்பந்தத்தால்
அவர்க்கு உண்டான கார்த்தார்த்த்யத்தை –(க்ருதார்த்தம் -க்ருத க்ருத்யம் இரண்டையும் சேர்த்து இந்த சப்த பிரயோகம் யருளிச் செய்கிறார் -)

இருவினையும் இன்றிப் போக பெறுகையால் தனக்கு வந்த கிருதார்த்தத்தை -பயன் அடைந்தமையை -அருளிச் செய்கிறார் .
———————–
63-அநிஷ்டமான கர்ம சம்பந்தம் கழிந்தபடி சொன்னார் கீழ் –இஷ்டமான கைங்கர்யத்துக்கு அபேஷிதமான தேவரீர் திருவடிகளில்
ப்ராவண்ய அதிசயத்தை தேவரீர் தாமே தந்து அருள வேணும் -என்கிறார் –

கீழில் பாட்டிலே -இராமானுசன் மன்னு மாலர்த்தாள் பொருந்தாத மனிசரைக் குறித்து -ஹித லேசமும்-செய்யாத பெரியோரை அனுவர்த்திக்கும் மகாத்மாக்களுடைய
திருவடிகளை ஆஸ்ரயித்து – பிராப்தி பிரதி பந்தங்களான-புண்ய பாப ரூப கர்மங்களை கழற்றிக் கொண்டு -சம்சார வெக்காயம் தட்டாதபடி இருந்தேன் என்று
எம்பெருமானார் திருவடிகள் உடைய சம்பந்தி சம்பந்தி பர்யந்தமாக செல்லுகிற ப்ரபாவத்தைக் கொண்டாடினார் -இதிலே -அப்படிப்பட்ட திருவடிகளில்
தமக்கு உண்டான ப்ராவண்யா அதிசயம் பிறக்க வேணும் இறே என்று கொண்டு -அவைதிக சமயத்தோர் அடங்கலும்-பக்னராய் வெருவி வோடும்படி அவதரித்து
பூ லோகத்தில் எங்கும் பாஹ்யரைத் தேடி -அவர்கள் மேல் படை எடுத்து -அவர்களைத் தேடித் திரியும்படியான -ஜ்ஞான பௌ ஷ்கல்யத்தை உடையரான எம்பெருமானாரே
தேவரீர் திருவடிகளில் அதி மாத்ர ப்ராவன்யத்தை அடியேனுக்கு தந்தருள வேணும் என்று நேர் கொடு நேரே விண்ணப்பம் செய்கிறார் –

வினைகள் கழன்ற மையின் கேடு நீங்கினமைகூறப் பட்டது முந்தைய பாசுரத்திலே -தொடர்ந்து விட்டுப் பிரியாது இணைந்து நிற்கும்
அன்புடையாம் நன்மை வேண்டப் படுகிறது-இந்தப் பாசுரத்திலே-
———————————
64-அறுசமயச் செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்து -என்று-பாஹ்ய மத நிரசன அர்த்தமாக -எம்பெருமானார் எழுந்து அருளின
பிரகாரத்தை யனுசந்தித்தார் கீழில் பாட்டில் .அந்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிற வாதிகளைப்-பார்த்து -இராமானுச முனி யாகிற
யானை உங்களை நாடிக் கொண்டு பூமியிலே வந்து எதிர்ந்தது -உங்கள் வாழ்வு இனிப் போயிற்று -என்கிறார் -இதில் –

அறுசமய செடியை தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்து -என்று பாஹ்ய மத-நிரசன அர்த்தமாக எம்பெருமானார் எழுந்து அருளின பிரகாரத்தை
அனுசந்தித்தார் கீழ் –அந்த ப்ரீத்தி பிரகர்ஷத்தாலே பாஹ்ய குத்ர்ஷ்டிகள் ஆகிற வாதிகளைப் பார்த்து -ராமானுச முனியாகிற யானை –
வேதாந்தம் ஆகிற கொழும் தண்டத்தை கையிலே எடுத்துக் கொண்டு -உங்களை நிக்ரஹிக்கைக்காக-
இந்த பூமியிலே நாடிக் கொண்டு வந்தது-இனி உங்களுடைய வாழ்வு வேரோடு அற்றுப் போயிற்று என்கிறார் –

அறுசமயச் செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்து -என்று புறச் சமயத்தோர்களை-தொலைப்பதற்காக எம்பெருமானார் எழுந்து அருளின
பிரகாரத்தை அனுசந்தித்தார் கீழ்ப் பாசுரத்தில் –அக்களிப்பு மீதூர்ந்து புற மதத்தவரும் குத்ருஷ்டிகளும் ஆகிய வாதியரைப் பார்த்து
இராமானுச முனி யாகிய யானை உங்களை நாடிக் கொண்டு பூமியிலே வந்து எதிர்ந்தது -உங்கள் வாழ்வு இனிப் போயிற்று என்கிறார் இந்தப் பாசுரத்திலே .
——————–
65-இப்படி எழுந்து அருளின எம்பெருமானார் பாஹ்ய குத்ருஷ்டி நிரசன அர்த்தமாக-உபகரித்து அருளின ஜ்ஞானத்தால் பலிதங்களை அனுசந்தித்து ப்ரீதராகிறார்

கீழ்ப் பாட்டிலே -எம்பெருமானார் திவ்ய தேச யாத்ரை எழுந்து அருளினவாறே பிரதிவாதிகளுடைய-வாழ்வு வேருடனே நசித்துப் போன படியை சொல்லி -இதிலே
அவருடைய சமீசீன ஞானத்தாலே பாஹ்ய குத்ருஷ்டிகளுக்கு உண்டான விநாசத்தையும் -லோகத்தர்க்கு எல்லாம் உண்டான சம்ர்த்தியையும்
பலபடியாக அருளிச் செய்து கொண்டு பிரீதராகிறார் –

வாதியர் வாழ்வு அற-எம்பெருமானார் உதவிய ஞானத்தாலே விளைந்த நன்மைகளை கண்டு-களிப்புடன் அவற்றைக் கூறுகிறார் –
————————–
66-நம்மிராமானுசன் தந்த ஞானத்திலே -என்று எம்பெருமானார் உபகரித்து அருளின-ஜ்ஞான வைபவத்தை யருளி செய்தார் கீழ்
இதில் அவருடைய மோஷ பிரதான-வைபவத்தை யருளிச் செய்கிறார் –

நம் இராமானுசன் தந்த ஞானத்திலே -என்று எம்பெருமானார் உபகரித்து அருளின ஞான வைபவத்தை-கீழ்ப் பாட்டிலே அருளிச் செய்து -இதிலே
ஈஸ்வரன் மோஷத்தை கொடுக்கும்போது -சேதனர் பக்கலிலே-சிலவற்றை அபேஷித்தே அத்தைக் கொடுப்பன் -இவர் அப்படி அன்றிக்கே தம்முடைய
கிருபா பாரதந்த்ராய்-கொண்டு காணும் சேதனருக்கு மோஷத்தைக் கொடுப்பது – என்று இவர் தம்முடைய மோஷ பிரதான வைபவத்தை-அருளிச் செய்கிறார் –

எம்பெருமானார் தந்த ஞானத்தின் வைபவம் கூறப்பட்டது கீழ்ப் பாசுரத்திலே –
மோஷத்தை அவர் கொடுத்து அருளும் வைபவத்தை அருளிச் செய்கிறார் இப்பாசுரத்திலே .
———————————–
67-எம்பெருமானார் உடைய ஜ்ஞான ப்ரதத்வ-மோஷ பிரதத்வங்களை-அருளிச் செய்து நின்றார் கீழ் .பகவத் சமாஸ்ரயணத்துக்கு உறுப்பான
கரணங்களை கொண்டு-வ்யபிசரியாதபடி எம்பெருமானார் ஸ்வ உபதேசத்தாலே நியமித்து ரஷித்து இலராகில்-
இவ்வாத்மாவுக்கு வேறு ரஷகர் ஆர் என்று ஸ்வ கதமாக வனுசந்தித்து-வித்தராகிறார் இதில் –

கீழ் இரண்டு பாட்டிலும் எம்பெருமானாருடைய ஞான பிரதான வைபவத்தையும் -மோஷ பிரதான-வைபவத்தையும் அருளிச் செய்து -இதிலே
இந்திரிய கிங்கரராய்ப் போருகிற சம்சாரிகளைப் பார்த்து -அசித விசேஷிதராய் -போக மோஷ சூன்யராய் இருந்த வுங்களுக்கு -புருஷார்த்த யோக்யராய் –
ஸ்வ சரண கமல சமாஸ்ரயணம் பன்னுக்கைக்கு உடலாக-அடியிலே கொடுத்த கர சரணாதிகளைக் கொண்டு -வ்யபசரியாதே சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து
உஜ்ஜீவியும் கோள் என்று எம்பெருமானார் உபதேசித்து இலர் ஆகில் -இந்த சேதனருக்கு வேறு ரஷகர் யார் என்று -சொல்லா நின்று கொண்டு
அவ் வழியாலே எம்பெருமானார் தம்முடைய மகா உபகார்த்வத்தை கொண்டாடி வித்தர் ஆகிறார் –

எம்பெருமானார் ஞானம் கொடுப்பதன் சீர்மையும் -மோஷம் கொடுப்பதன் சீர்மையும்-கீழ்ப் பாசுரங்களில் கூறப் பட்டன .-இறைவன் தன்னைப் பற்றுகைக்கு
உறுப்பாக கொடுத்த கருவிகளை அவன் திறத்து அன்றி பிறர் திறத்து பயன் படுத்தாத படி –எம்பெருமானார் -தமது உபதேசத்தாலே கட்டுப் படுத்தி-
இவ் ஆத்மவர்க்கத்தை ரஷித்து இலர் ஆகில் வேறு எவர் காப்பாற்றுவார் என்று தாமே-நினைந்து ஈடு பட்டுப் பேசுகிறார் –
————————–
68-இப்படி பகவத் சமாஸ்ரயணத்துக்கு மடைத்தேற்றலாயும் (அடைத்து ஏற்றலாவது -கொண்டம் கட்டி நீர் பாய்ச்சுதல் -என்றவாறு )
ஆஸ்ரயித்தார்கள் ஆகில் அவ்வளவில் சுவறிப் போரக் கடவதான (சரம பர்வ நிஷ்டை இல்லாமல் )-வித்தேசத்தில் -என்னாத்மாவும் மனசும் எம்பெருமானாரை
ஆஸ்ரயித்து இருக்கும் அவர்கள் குணங்களிலே சென்று பிரவணம் ஆயிற்று -ஆன பின்பு எனக்கு சத்ருசர் இல்லை –என்கிறார் –

கீழ் பாட்டிலே எம்பெருமானாருடைய ஜ்ஞான பிரதான வைபவத்தையும் -மோஷ பிரதான-வைபவத்தையும் -இந்திரிய பரவசரான சேதனரைக் குறித்து
அவருடைய யதாவசிதித்த பிரகாரத்தை தெளிவித்து -மகாபாரதசமரத்திலே -திருத் தேர் தட்டிலே உபதேசித்த பகவத்கீதைக்கு எதாவச்த்திதார்த்தத்தை
அருளிச் செய்த எம்பெருமானாரை ஆஸ்ரயித்த-சத்துக்களுடைய கல்யாண குணங்களிலே -என்னுடைய பிராணனும் மனசும்-த்வரித்துப் போய் -அங்கே கால் தாழ்ந்தது
ஆனபின்பு இப்போது வ்யபிதிஷ்டரை கணிசித்து சொல்லத் தொடங்கி எனக்கு சத்ர்சர் லோகத்தில் யார் உளர் -என்று தமக்கு உண்டான அதிசயத்தை சொல்லுகிறார் –

இப்படி தம் கரணங்களை கண்ணன் தனக்கே உரியவை ஆக்குவாரும் அரியராய் -அங்கனம் ஆக்கினார் உளராயினும் அவர்கள் அளவோடு ஆளாதல் சுவறிப்போமதமான
இந்நிலத்திலே என்னுடைய ஆத்மாவும் மனமும் எம்பெருமானாரைப் பற்றினவர்களுடைய-குணங்களிலே நோக்குடன் சென்று ஈடுபட்டு விட்டது ..
ஆகவே எனக்குச் சமமானவர் எவருமே-இல்லை என்று களிப்புடன் கூறுகிறார் .
——————————-
69-எம்பெருமானார் திருவடிகளில் சம்பந்தம் உடையவர்கள் விஷயத்தில் தமக்கு உண்டான-அதி ப்ராவண்யத்தை அனுசந்தித்து திருப்தராகா நிற்கச் செய்தே –
ஈச்வரனிலும் காட்டிலும் இவர் ஸ்வ விஷயத்தில் பண்ணின உபகாரம்-ஸ்ம்ருதி விஷயமாக -அத்தை அனுசந்த்திது -வித்தராகிறார் –

கீழ்ப் பாட்டிலே எம்பெருமானார் திருவடிகளை ஆஸ்ரயித்த மகாத்மாக்களுடைய-கல்யாண குணங்களிலே தமக்கு உண்டான ப்ரீதி பிரகர்ஷத்தை -சொல்லி -ஹ்ர்ஷ்டராய்
இதிலே சர்வ சேதனர்களும் சம்ஹார தசையிலே மனசோடு கூட சர்வ விஷயங்களையும் இழந்து -அசித் கல்பராய்-இருக்கிற தசையைக் கண்டு -அப்படிப் பட்ட எனக்கு
அபேஷா நிரபேஷமாக-தம்முடைய நிர்ஹே துக பரம கிருபையாலே-கரண களேபர பிரதானம் பண்ணின பெரிய பெருமாளும் -ஸ்ர்ஷ்டித்த மாத்ரம் ஒழிய
அவ்வோபாதி சம்சார சம்பந்தத்தை-விடுத்து தம்முடைய திருவடிகளைத் தந்திலர் -இப்படி அதி துர்லபமான வற்றை நமக்கு பிதாவான எம்பெருமானார்
தம்முடைய திருவடிகளை உபாய உபேயமாக எனக்கு தந்து இப்போது என்னை சம்சாரத்தில் நின்றும் உத்தரித்தார் என்கிறார் –

எம்பெருமானார் திருவடி சம்பந்தம் வாய்ந்தவர்களிடம் தமக்கு ஏற்ப்பட்ட மிக்க ஈடுபாட்டை-கண்டு களியா நிற்கும் அமுதனார் – இந்நிலை தமக்கு ஏற்படும் படி
தம்மைக் கை தூக்கி விட்ட எம்பெருமானார் உடைய பேருதவி நினைவிற்கு வர -இறைவன் செய்த உதவியினும் சீரியதாய் –
அது தோன்றலின் -அவ்வுதவியில் ஈடுபட்டுப் பேசுகிறார் .
————————-
70-எம்பெருமானார் செய்து அருளின உபகாரத்தை அனுசந்தித்து வித்தரானார் கீழ் .அநந்தரம்-செய்த அம்சத்தில் காட்டிலும் செய்ய வேண்டும் அம்சம்
அதிசயித்து இருக்கிற படியை அனுசந்தித்து -அவருடைய திரு முகத்தைப் பார்த்து ஸ்வ அபேஷிதத்தை விண்ணப்பம் செய்கிறார் .

-கீழ் பாட்டிலே எம்பெருமானார் தமக்கு பண்ணி யருளின உபகாரத்தை அனுசந்தித்து ஹ்ர்ஷ்டராய் -இதிலே -என்னையும் என்னுடைய துர்வ்ரத்தத்தையும்-
தேவரீருடைய அப்ரதிமப்ரபாவத்தையும் -ஆராய்ந்து பார்த்தால் -என்னை விஷயீ கரித்து கைக் கொள்ளுகையே நல்லது – இது ஒழிய நான் தீரக் கழியச் செய்த
அபராதங்களைப் பத்தும் பத்துமாக கணக்கிட்டு மீளவும் ஆராயும் அளவில் என்னிடத்தில் நன்மை என்று பேரிடலாவது ஒரு தீமையும் கூடக் கிடையாமையாலே-
என்னைக் கைவிட வேண்டி வருகையாலே –சர்வோத்தரான தேவரீருடைய நிர்ஹேதுக கிர்பையை -தேவரீர் திருவடிகளை
ஆஸ்ரயித்தவர்கள் என் சொல்வார்களோ என்று நேர் கொடு நேர் விண்ணப்பம் செய்கிறார் –

எம்பெருமானார் செய்து அருளின உதவியினும் இனிச் செய்து அருள வேண்டிய-உதவி மிகுதியாய் இருத்தலை நினைந்து-
மேலும் விடாது -அருளல்வேண்டும் என்று-தம் கோரிக்கையை திரு முகத்தைப் பார்த்து-விண்ணப்பிக்கிறார் –
—————————
71-இப்படி விண்ணப்பம் செய்தவாறே எம்பெருமானாரும் ஒக்கும் இறே என்று என்று இசைந்து -தம்முடைய விசேஷ கடாஷத்தாலே –இவருடைய ஜ்ஞானத்தை
ஸ்வ விஷயத்திலே ஊன்றும்படி விசதமாக்கி அருள தாம் லபித்த அம்சங்களை அனுசந்தித்து க்ருதார்த்தார் ஆகிறார் –

இப்படி இவர் நேர்கோடு நேர் விண்ணப்பம் செய்தவாறே எம்பெருமானாரும் -ஒக்கும் ஒக்கும் -என்று-இசைந்து தம்முடைய விசேஷ கடாஷத்தாலே இவருடைய
கரணங்கள் எல்லாம் ஸ்வ விஷயத்திலே தானே ஊன்றி-இருக்கும்படி பண்ணி அருள –அவருடைய திரு முக மண்டலத்தை பார்த்து -பரம குஹ்யமான அர்த்தத்தை
பூரி தானம் பண்ணும்படியான ஔதார்யத்தை உடைய எம்பெருமானாரே -என்று சம்போதித்து – தம்முடைய மனச்சு அவருடைய-திருவடிகளிலே சேர்ந்து
அமைந்து இருக்கிற படியையும் –அத் திருவடிகளின் போக்யதையில் ஈடுபட்டு பிரேமமானது-தமக்கு மிக்க படியையும் -தாம் அவருடைய குணங்களிலே
அத்யபி நிஷ்டராய் கொண்டு தத் தாஸ்யத்தில் வுற்று இருந்தபடியையும் -தம்முடைய பூர்வ க்ரத கர்மம் எல்லாம் அவருடைய விஷயீ காரத்தாலே
தம்மை விட்டு -சும்மனாதே-ஓடிப்போன படியையும் ஹ்ர்ஷ்டராய் கொண்டு விண்ணப்பம் செய்கிறார் –

இவர் விண்ணப்பத்தை எம்பெருமானார் இசைந்து ஏற்று அருளி -விசேஷ கடாஷத்தாலே –இவருடைய ஞானத்தை தம் திறத்தில் ஊன்றி
நிற்குமாறு தெளிவுறுத்தி விட தமக்கு கிடைத்தவைகளைக் கூறி க்ருதார்த்தர் ஆகிறார்-
—————————–
72-எம்பெருமானாருடைய ஔதார்யத்தாலே தாம் லபித்தவற்றை யனுசந்தித்து-க்ருத்தார்த்தர் ஆனார் கீழ் ..
இன்னமும் அந்த ஔதார்யத்தாலே தமக்கு அவர் செய்ததொரு மகோ உபகாரத்தை யனுசந்தித்து வித்தராகிறார் .-

எம்பெருமானார் தம்முடைய ஔதார்ய அதிசயத்தாலே அதி ஹேயங்களான வேத பாஹ்யர் உடைய-சமயங்களைப் பற்றி நின்று கலஹிக்குமவர்களை நிரசித்தார் என்றும்
அத்யந்த பரிசுத்தமான வேதமார்க்கத்தை பூமியிலே எங்கும் ஒக்க நடத்தி அருளினார் என்றும் -அனுசந்திதுக் கொண்டு ப்ரீதி-பிரகர்ஷத்தாலே
ஸ்தோத்ரம் பண்ணா நின்று உள்ள பெரியோர்களுடன் கலந்து -பரிமாறும்படி-அடியேனை வைத்து அருளினார் என்று அனுசந்தித்து வித்தர் ஆகிறார் –

எம்பெருமானாருடைய வள்ளன்மையால் தாம் பெற்ற பேறுகளை கூறினார் கீழே .
அவ்வள்ளன்மை மிக்கு மேலும் அவர் தமக்கு செய்து அருளிய பேருதவியை நினைவு கூர்ந்து-அதனிலே ஈடுபடுகிறார் .
———————————
73-தம்முடைய ஔதார்யாதிகளாலே இந்த லோகத்தில் உள்ளார்க்கு தாமே-ரஷகராய் யதா ஜ்ஞான உபதேசத்தை பண்ணின எம்பெருமானாரை அனுசந்தித்து
இருக்கும் பலம் ஒழிய- எனக்கு வேறு ஒரு தரிப்பு இல்லை என்கிறார் .

இந்த பூ லோகத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் கட்டடங்க தமோ ரஷகராய் கொண்டு -யதா வஸ்த்திதமாய் -விலஷணமான ஞானத்தை உபதேசித்து அருளின
எம்பெருமானாரே ரஷகர் என்று அனுசந்தித்து கொண்டு-இருக்கையே நான் ஈடேறுகைக்கு உடலாய் விடும் இத்தனை ஒழிய -என்னுடைய ஞான பிரேமங்கள்
அதுக்கு உடல் அன்று -என்கிறார் –

தம்முடைய வள்ளன்மை முதலியவற்றால் இவ் உலகத்தவர் கட்குத் தாமே ரஷகராய் –உண்மையான ஞானத்தை உபதேசித்து அருளும் எம்பெருமானாரை
ரஷகராக அனுசந்திக்கும் பலம் ஒழிய எனக்கு வேறு ஒரு தரித்து இருக்கும் நிலை இல்லை என்கிறார் .
———————————
74-யதாஜ்ஞானத்துக்கு விரோதிகளான பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரசித்து அருளுகிற அளவில் -சர்வேச்வரனிலும் காட்டில்
அனாயாசேன செய்து அருளின பிரகாரத்தை அனுசந்தித்து-வித்தராகிறார்-

பாஹ்ய குத்ர்ஷ்டிகளை தாதாத்விகையான ஒரு கஷியாலே நிரசித்தார் என்று-கஷி -யுக்தி என்றவாறு-
அவர் தம்முடைய வைபவத்தை கொண்டாடுகிறார் –

உண்மை நல் ஞானத்திற்குப் பகைவரான புறச் சமயத்தவரையும் -அகச் சமயத்தவரான குத்ருஷ்டிகளையும் -களைந்து எறியும் விஷயத்தில் சர்வேஸ்வரனைப்
பார்க்கிலும் அவ் எம்பெருமானார் எளிதினில் காட்டி யருளும் திறமையை பாராட்டி–அதனில் ஈடுபடுகிறார் .
—————————————
75–எம்பெருமான் தன் அழகோடு பிரத்யஷித்து -உன்னை விடேன் -என்று இருந்தாலும்-தேவரீர் உடைய குணங்களே வந்து என்னை மொய்த்து நின்று அலையா நிற்கும் –

சர்வேஸ்வரன் சங்கு சக்ராதி திவ்ய ஆயுத-அலங்க்ர்தனாய் கொண்டு அடியேன் இருந்த இடம் தேடி வந்து தன் வைலஷ்ண்யத்தை அடியேனுக்கு முற்றூட்டாக
காட்டி உன்னை நான் விடுவது இல்லை என்று என் முன்னே நிற்கிலும் -அவன் வைலஷண்யத்தில் ஈடுபடாதே
தேவரீர் பக்கலில் தானே ஈடுபடும்படி –தேவரீர் உடைய கல்யாண குணங்கள் கட்டடங்க வந்து அடியேனை சூழ்ந்து கொண்டு ஆகர்ஷியா நிற்கும் –

பகவான் தான் அழகு அனைத்தையும் புலப்படுத்திக் கொண்டு கண் எதிரே வந்து -உன்னை விடேன் என்று இருந்தாலும் –
தேவரீர் குணங்களே வந்து போட்டி இட்டு நாலா புறங்களிலும் சூழ்ந்து மொய்த்துக் கொண்டு என்னை நிலை குலைந்து ஈடுபடும்படி செய்யும் –
——————————-
76–தம்முடைய ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து அபேஷிக்கிறார் –

தேவரீருடைய பரம போக்யமான திருவடிகளும் அடியேனுக்கு அவ்வளவு ஆனந்தத்தை உண்டாக்கும் –
ஆகையாலே அவற்றைத் தந்தருள வேணும் என்று அபேஷித்து அருளுகிறார் –

தமக்கு வேண்டும் பேற்றினை இன்னது என்று முடிவு கட்டிக் கோருகிறார்
———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: