ஸ்ரீ காஞ்சியில் ஸ்ரீ தேவப்பெருமாள்- ப்ரஹ்ம உத்ஸவமும் அருளிச் செயலும் -/ ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் நாச்சியார் வார்ஷிக திருவாடிப்பூர திருநக்ஷத்ர ப்ரஹ்மோத்ஸவ வைபவம்/திருவரங்கத்தில் அத்யயன உத்சவம் அருளிச் செயல்கள் -அரையர் சேவை விவரணம் /

ஸ்ரீ காஞ்சியில் ஸ்ரீ தேவப்பெருமாள் ப்ரஹ்ம உத்சவம் –
தினப்படி நாலாயிரம் சேவை கேட்டு அருளும் தேவைப் பெருமாள் ப்ரஹ்ம உத்சவமும் வாஹந முறைமையும் அருளிச் செயல்கள் அனுபவத்தின் படியே
முதல் நாள் -காலை –திருப் பல்லாண்டு திருச் செவி சாத்த -வாஹந ஆரோகணம் தவிர்ந்து
மாலையில்சிம்ம வாஹனம் –என் தொண்டை வாய் சிங்கம் வா -பெரியாழ்வார் அழைத்த படி –
இரண்டாம் திருநாள் காலை -ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் -மறை யாங்கு என யுரைத்த மாலை –
முதல் நாள்-இரவில் பெரியாழ்வார் திருமொழி சேவை முடிவு பாகத்தில் -பின் இவ் உலகினில் பேர் இருள் நீங்க அன்று
அன்னமது ஆனானே-என்றதற்கு ஏற்ப அன்னமாய் நூல் பயந்த அருளாளனும் ஹம்ஸ வாகனம்
அன்று மாலை பெரியாழ்வார் இரண்டாம் பத்து சேவையில் -அரவணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ணத் துயில் எழாயே-
-இன்னம் உச்சி கொண்டதாலோ -ஸூர்ய உதய பிரஸ்தாபம் –என்பதால் ஸூர்ய பிரபை வாகனம் –
பொலிந்த கருடன் மேல் கொண்ட கரியான் கழலே -மூன்றாம் திருவந்தாதி சேவை -/ பெரியாழ்வார் மூன்றாம் பத்து சேவையில் –
அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த அனுமன் புகழ் பாடி -என்றும் -சீராரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம் -என்பதால்
காலையில் கருட வாஹந சேவையும் -மாலையில் சிறிய திருவடி வாஹந சேவையும் –
நான்காம் திருநாள்காலை -நான்முகன் திருவந்தாதி சேவையில் -ஆங்கார வாரமது கேட்டு அழல் உமிழும் பூங்கார அரவணையான் -என்றும்
விரித்து உரைத்த வென் நாகத்து உன்னை –ஆதி சேஷன் பிரஸ்தாபம்வைகுந்த செல்வனார் சேவடி மேல் பாட்டு -என்று ஸ்ரீ வைகுண்ட நாதன் திருவடிகளில்
பாசுரம் அருளிச் செய்ததாக ஆழ்வார் அருளிச் செய்வதால் –சேஷ வாஹனம் -பரமபத நாதன் திருக் கோல சேவை –
அன்று இரவு பெரியாழ்வார் திருமொழி நான்காம் பத்து சேவையில் -நளிர் மா மதியைச் செஞ்சுடர் நாவளைக்கும்-சந்த்ர பிரஸ்தாபம் -என்பதால்
சந்த்ர பிரபை வாஹனம் சேவை ஆயிற்று –
ஐந்தாம் திருநாள் -காலை திரு விருத்தம் சேவை -ஆழ்வார் பராங்குச நாயகி தசையில் அருளிச் செய்த படியால் –நாச்சியார் திருக் கோலம் –
அன்று இரவு யாளி வாஹந சேவை –நன் மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும் -என்றும் செங்கண் ஆளி இட்டு இறைஞ்சும்-இத்யாதி பாசுரங்கள்
பெரிய மலைகளை வர்ணிக்கும் இடங்கள்
ஐந்தாம் திருநாள் இரவு திவ்ய பிரபந்த சேவையில் -கண்டம் என்னும் கடி நகர் -துக்க சுழலையைச் சூழ்ந்து கிடந்த -திருமால் இரும் சோலை மலைப் பாசுரங்கள்
சென்னியோங்கு –திருமலை பாசுரங்கள் இருப்பதால் யாளி வாஹனம்
ஆறாம் திருநாள் -திருச் சந்த விருத்தம் சேவை -ஆயனாய மாயனே -ஆயனாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய் -என்றும்
ஆனை காத்து ஓர் ஆனை கொன்று அது அன்றி ஆயர் பிள்ளையாய் ஆனை மேய்த்து ஆ நெய் யுண்டு -என்றும்
-ஆதியாகி ஆயனாய மாயம் என்ன மாயமே -என்பதால் கோபால கிருஷ்ணன் திருக் கோலம்
அன்று இரவு யானை வாஹந சேவை –மங்கல வீதி வலம் செய்து –அங்கு ஆனை மேல் -நாச்சியார் திருமொழி -சேவை என்பதால்
குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து–சூர்ண அபிஷேகம் -அருளிச் செய்து உள்ளதால் அதுவும் அன்று காலை வைதிக சடங்கு உண்டே
ஏழாம் நாள் திருத் தேர்திரு ஏழு கூற்று இருக்கை -ரதபந்தம் -ரதோத்ஸவம் -திருத் தேர் நிலை சேர்ந்த பின்பு பெருமாள் சந்நிதிக்கு எழுந்து அருளும் போது
திரு மடல் சேவையும் சேஷமான நாச்சியார் திருமொழி பாசுரங்களும் சேவை
செங்கண் மால் தன்னுடைய வாய்த்த தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் -என்ற பாசுரம் கற்பூரம் நாறுமோ -பதிகம் -என்பதால்
அன்று பகலில் திருப் பாய்ந்தாடித் திரு மஞ்சனம்
அன்று இரவு பெரிய திருமொழி தொடக்கம் -ஆடல் மா வளவன் கலி கன்றிக்காக ஆடல் மா குதிரை வாஹனம்
ஒன்பதாம் நாள் காலையில் மட்டை அடி-அபிநய நாடகம் -பெருமாள் தனியே எழுந்து அருளி பட்டி மேய்ந்து வருவதும்
நாய்ச்சிமார்கள் புக ஒட்டாமல் தடுப்பதும் உண்டே
மறுநாள் திருவாயமொழி ஆயிரமும் கேட்டு அருள பன்னிரண்டு திருவாராதனங்கள் கண்டு அருளி
இரவு இராமானுச நூற்று அந்தாதிக்காக சிசிரோபசாரம் புறப்பாடு கண்டு அருளுகிறார் –

மூன்று திருக் கல்யாண உத்சவம் கண்டு அருளுகிறார் ஆண்டு தோறும்-போகி பண்டிகை /
பங்குனி உத்தரம் -மலையாள நாச்சியார் திருக் கல்யாணம் / திரு ஆடிப் பூரம் ஆண்டாள் திருக் கல்யாணம் –

திருக்கச்சி  நம்பி பரமபதம் -திருக்கார்த்திகை முந்திய பரணி அன்றோ -இதற்காகவே –தோளன்-போலே பாவித்து சம்வாதம் செய்த ஸ்ரீ  தேவ பெருமாள்  மாலை திருமஞ்சனம் கண்டு அருளுவார் –

—————————————-

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் நாச்சியார் வார்ஷிக திருவாடிப்பூர திருநக்ஷத்ர ப்ரஹ்மோற்ஸவ வைபவம்….
குன்றாத வாழ்வான வைகுந்தம் வான் போகந்தன்னை இகழ்ந்து ஆழ்வார் திருமகளாராய் ” வந்தவதாரம் செய்த
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் வார்ஷிக திருவாடிப்பூர திருநக்ஷத்ர ப்ரஹ்மோற்ஸவம் அதிவிமரிசையாக கோவில் பரிசனங்கள் அனைத்துக்கொத்தும் விடை கொண்டிருக்க,
அத்தனை கைங்கர்யபரர்களும் அளவிலா ஆனந்தத்தோடு,-ஆத்மார்த்த கைங்கர்யபரஸ்வாமிகள் வழுவிலா அடிமை செய்ய,
ஸ்ரீஆண்டாள் நாச்சியார் அவதாரஸ்தல திருவாடிப்பூர நந்தவனத்தில்–ஸ்வாமி ஸ்ரீ பெரியாழ்வார் முன்னிலையாக,
ம்ருத்ஸங்க்ரஹண மஹோத்ஸவ கொண்டாட்டம்—புண்யாக வாசனம், தஸதானாதித்யாதிளோடு –
த்வஜாரோஹண அர்ச்சக ஸ்வாமிகள் திருமிடற்றோசையாலே ம்ருத்ஸங்க்ரஹண ஸ்வஸ்தி, அதிகம்பீரமாக ஸாதிக்க ……
ப்ரஸாத வநியோகங்களோடு திருமுளைப்பாலிகைக்கு –திருமண் இடல் வைபவம் மங்களகரமாக நிறைவுற்றது……
மாலை சேனை முதலியார் திரு வீதி புறப்பாடு –

முதல் நாள் கொண்டாட்டம் – காலை த்வஜாரோஹணம்….
முதல் மண்டபம் -சிங்கம்மாள் குறடு /இரண்டாம் மண்டபம் -வான மா மலை மண்டபம் –திருவாய் மொழி முதல் பத்து –
இரவில் ஸ்ரீ ரெங்க மன்னார் சேர்த்தியில் பதினாறு வண்டிச் சப்பரம் புறப்பாடு

இரண்டாம் திரு நாள் கொண்டாட்டம் …வாழை குளத்தெருவில் முதல் மண்டபம்……..ஸ்ரீ கோதா முகோல்லாஸநி ஸபா….கல்யாண மண்டபத்திருமஞ்சனம்
திருவாராதனம் மந்த்ர புஷ்பம் முடிந்து தளிகை அமுது செய்தவுடன் மண்டப மரியாதைகள் முடிந்து புறப்பாடு…….
இரண்டாம் திரு நாள் தொடங்கி எட்டாம் திரு நாள் வரை மூன்று விடாய் ஆற்று மண்டபங்கள் –
1–குப்பன் ஐயங்கார் மண்டபம்
2–பாஷ்யகாரர் ராமானுஜ கூடம் கமிட்டி கந்தாடை தெரு
3–சிங்கம்மாள் குறடு
இரண்டாம் நாள் வாகனப் புறப்பாடு –ஸ்ரீ ஆண்டாள் சந்த்ர பிரபை /ஸ்ரீ ரெங்க மன்னார் ஸிம்ஹ வாகனம் –

மூன்றாம் திரு நாள் மஹோத்ஸவம்-காலை -ஸ்ரீ ஆண்டாள் தங்கப் பல்லக்கு / ஸ்ரீ ரெங்க மன்னார் -தந்தப் பல்லக்கு /
இரவில் திருத்தாயார் ஸ்வர்ண பரங்கி நாற்காலியிலும் -ஸ்வாமி ஸ்ரீ ரங்கமன்னனார் ஹநுமந்த வாகனத்திலும் திருவீதிகள் கண்டருளிய ஸேவை….

நான்காம் திரு நாள் காலை -ஸ்ரீ ஆண்டாள் தங்கப் பல்லக்கு / ஸ்ரீ ரெங்க மன்னார் -தந்தப் பல்லக்கு /
இரவில் ஸ்ரீ ஆண்டாள் -சேஷ வாகனம் / ஸ்ரீ ரெங்கமன்னார் -கோவர்த்தன கிரி –

ஐந்தாம் திரு நாள் காலை -10-மணிக்கு ஸ்ரீ பெரியாழ்வார் மங்களா சாசனம் / திரு ஆடிப் பூரா பந்தலுக்கு ஸ்ரீ பெரியாழ்வார் எழுந்து அருளி
-ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்ரீ திருத் தங்கால் அப்பன் -ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் திவ்ய தம்பதிகளுக்கு மங்களா சாசனம் செய்யும் வைபவம்
இரவு -10-மணி ஐந்து கருட சேவை -ஸ்ரீ ஆண்டாள் பெரிய அன்ன வாஹனம் / ஸ்ரீ ரெங்க மன்னார் -ஸ்ரீ பெரிய பெருமாள் -ஸ்ரீ சுந்தர ராஜப் பெருமாள்
-ஸ்ரீ திருத் தங்கால் அப்பன் ஆகிய எம்பருமான்கள் கருட வாஹனங்கள்/ ஸ்ரீ பெரியாழ்வார் சிறிய அன்ன வாஹனம் –

ஆறாம் திரு நாள் காலை -ஸ்ரீ ஆண்டாள் தங்கப் பல்லக்கு -ஸ்ரீ ரெங்க மன்னார் தந்தப் பல்லக்கு /
இரவில் -ஸ்ரீ ஆண்டாள் – கனக தண்டியல்/ ஸ்ரீ ரெங்க மன்னார் யானை வாஹனம்
ஏழாம் திரு நாள் காலை -ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் சேர்த்தியில் இரட்டைத் தோளுக்கு இனியான்
இரவில் -7- மணி முதல் -11-மணி வரை ஸ்ரீ கிருஷ்ணன் திருகி கோயிலில் திருச் சயன சேவை -ஸ்ரீ ஆண்டாள் திரு மடியில் ஸ்ரீ ரெங்க மன்னார் திருச் சயனத் திருக் கோலம் —
இரவில் -ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் சேர்த்தியில் கண்ணாடிச் சப்பரம் –

எட்டாம் திரு நாள் காலை -ஸ்ரீ ஆண்டாள் -தங்கப் பல்லக்கு / ஸ்ரீ ரெங்க மன்னார் தந்தப் பல்லக்கு
இரவில் -ஸ்ரீ ஆண்டாள் புஷ்பப் பல்லக்கு / ஸ்ரீ ரெங்க மன்னார் -திருக் குதிரை வாகனம் –வையாளி சேவை –இரவு -1–30- மணி –
திருத் தேர் கடாக்ஷித்தல் –இரவு -11-30-மணிக்கு மேல் -12–30-மணிக்குள்
மதுரை திருக் கள்ளழகர் ஸ்ரீ ரெங்கம் ஸ்ரீ ரெங்கநாதன் பரிவட்டங்கள் பிரசாதம் ஸ்ரீ ஆண்டாளுக்கு சாற்றப் படும் –

ஒன்பதாம் திரு நாள் -காலை -2-மணிக்கு ஏகாந்த திரு மஞ்சனம் / காலை -3-45-மணிக்கு மேல் -4–45-மணிக்குள் திருத் தேர் எழுந்து அருளுதல்
காலை -8-05-மணிக்கு திரு வாடிப் பூரத் தேரோட்டம் வடம் பிடித்து இழுத்தல்
மூலவருக்கு சிறப்பு புஷபங்கி சேவை

பத்தாம் திரு நாள் -மாலை -5- மணிக்கு இரட்டைத் தோளுக்கு இனியானில் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு /முத்துக் குறி -சிங்கம்மாள் குறடு
இரவு சப்தாவரணம் -ஸ்ரீ வேத பிரான் பட்டர் புராணம் வாசித்தல் / சேர்த்தியில் புறப்பாடு -இரட்டைத் தோளுக்கு இனியான்
-ஸ்ரீ மத் பரம ஹம்சா திருக் குறுங்குடி ஜீயர் ஸ்வாமிகள் திரு மண்டபம் –

பதினொன்றாம் திரு நாள் காலை -இரட்டை தோளுக்கு இனியான் -வாழைக் குளத் தெரு -தீர்த்தவாரி மண்டபம் /மாலை -6-மணிக்கு மூல ஸ்தானம் சேர்த்தால்

பன்னிரண்டாம் திரு நாள் -விடாயத்து திரு மண்டபம் -காலை உத்சவ சாந்தி / மாலை -6-மணி அளவில் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் திவ்ய தம்பதிகளுக்கு புஷ்பயாகம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தந ஹேதவே !!!!!
நந்த நந்தந ஸுந்தர்யை கோதாயை நித்ய மங்களம் !!!!!

———————————————–

திருவரங்கத்தில் அத்யயன உத்சவம் அருளிச் செயல்கள் -அரையர் சேவை விவரணம் –

பகல் பத்து -முதல் நாள் -திருப் பல்லாண்டு -பெரியாழ்வார் திருமொழி -1-9 –அபிநயம் வியாக்யானம் முதல் இரண்டு திருப்பல்லாண்டு பாடல்கள்
இரண்டாம் நாள் –பெரியாழ்வார் திருமொழி -2-10-முதல் -5-3 -வரை -ஆற்றிலிருந்து —தன்னேராயிரம் இரண்டு பாடல்களுக்கும்
அபிநயம் வியாக்யானம்
மூன்றாம் நாள் பெரியாழ்வார் திருமொழி -5-4/திருப்பாவை நாச்சியார் திருமொழி 12 வரை –சென்னியோங்கு மார்கழி திங்கள் -இரண்டு பாட்டுக்கும்
அபிநயம் வியாக்யானம் -திருப் பொலிந்த சேவடி என் -சென்னியின் மேல் பொறித்தாய் –அரையர் தம் திருக் கையால்-திருச் சடாரி –
ஆழ்வார்கள் ஆசார்யர்கள் கோஷ்டியாருக்கும் சாதிப்பார்
நான்காம் நாள் -நாச்சியார் திரு மொழி 13/14-பெருமாள் திருமொழி /திருச் சந்த விருத்தம் -சேவை –கண்ணன் என்னும் கரும் தெய்வம்
/இருளிரிய -இரண்டு பாட்டுக்கும் அபிநயம் வியாக்யானம் –
கஞ்சைக் காய்ந்த கருவில்லி -அழகிய மணவாளப் பெருமாள் கம்ச வதம் செய்து அருளின படி எவ்வண்ணமே என்ன -மூன்று தடவை கேள்வி கேட்டு
-பின்பு பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் -சேவை ஆனபின்பு இரண்டாம் பகல் பத்து சேவையில் தம்பிரான் படி
கம்ச வத விஷயமான வியாக்யானம் சேவித்து அழகிய மணவாளன் கம்ச வதம் செய்து அருளினது இங்கனே என்று சொல்லி
கிருஷ்ணாவதாரம் முதல் கம்ச வதம் வரை நடித்துக் காட்டி கடைக் கண் என்னும் சிறைக் கோலால் தொடங்கி -சேஷ பாசுரங்கள் சேவை யாகும்
ஐந்தாம் நாள் -திருமாலை அமலனாதிபிரான் -திருமாலை முதல் பாட்டுக்கு அபிநயம் -வியாக்யானம் —ஆறாம் பாட்டு மூன்றாம் அடி –
அரங்கனார்க்கு ஆட்செய்யாதே –என்ற இடத்தில் -திரு அத்யயன உத்சவ சேவை புறப்பாடு திருவாராதனம் வேத விண்ணப்பம் அருளிப்பாடு
அபிநயத்துக் காட்டி பின்பு சேஷ பாசுரங்கள் அமலனாதிபிரான்
ஆறாம் நாள் -கண்ணி/பெரிய திருமொழி -3-5- வரை கண்ணி நுண் சிறுத் தாம்பு வாடினேன் வாடி இரண்டுக்கும் அபிநயம் வியாக்யானம்
ஏழாம் நாள் -பெரிய திருமொழி -3-6-முதல் 5-6- தூவிரிய மலருழக்கி-அபிநயமமும் வியாக்யானமும் ஒ மண் அளந்த தாளாளா–
மூன்று முறை சேவித்து அழகிய மணவாளப் பெருமாள் திரு உலகு அளந்து அருளின படி எங்கனே என்ன –அத திரு மொழியில் மேல்
பாசுரங்களை சேவியாமல் மேலே சொல்லி பிற்பகலில் இரண்டாம் சேவையில் வாமன அவதார விஷயமாக தம்பிரான் படி வியாக்யானம்
சேவித்து அவ்வவதார வ்ருத்தாந்தங்களை நடித்துக் காட்டி தண் குடந்தை நகராளா வரை எடுத்த தோளாளா ஆரம்பித்து அத்திரு மொழியை முடிப்பார்கள்
எட்டாம் நாள்பெரிய திருமொழி -5-7- முதல் 8-10–பண்டை நான்மறையும் பாசுர அபிநயம் வியாக்யானம் -அரங்க மா நகர் அமர்ந்தானே –
அவதார வைபவங்கள் -அரங்கம் என்று சேர்ந்து வரும் சந்தைகள் 70 மேல் சேவிக்கப்படும் -மாயிரும் குன்றம் ஓன்று மத்தாக ஆயிரம் தோளால்
அலைகடல் கடைந்தான்-அழகிய மணவாளப் பெருமாள் அம்ருத மதனம் செய்து அருளினபடி எவ்வண்ணமே என்ன -மூவிசை சொல்லி
அத்திரு மொழியில் மேல் பாசுரங்களை சேவியாமல் மேலே சொல்லி பின்பு இரண்டாம் சேவையில் அம்ருத மதன விஷயமாக
தம்பிரான் படி வியாக்யானம் சேவித்து சேஷமான பாடல்களை சொல்லி அத திருமொழியை முடிப்பார்கள்
ஒன்பதாம் திருநாளில் -பெரிய திருமொழி -8-2-முதல் 10-1- தெள்ளியீர் பாசுர அபிநயம் சேவை –
திரு நெடும் தாண்டகம் முதல் பாசுர அபிநயம் வியாக்யானம் -இரண்டாம் சேவையில் முத்துக் குறி
-திரு நெடும் தாண்டகம் -11 பாட்டு கட்டுவிச்சி சொல்லும் கூடல் குறியை முத்துக் குறியாக அபிநயித்துக் காட்டுவார்கள்
முத்துக் குறிக்காக அரையர் பெருமாள் இடம் தீர்த்தம் சடாரி -ஆழ்வார் ஆசார்யர்களுக்கும் கோஷ்டிக்கும் சாதிப்பார்
திருப் பொலிந்த -சடாரி மட்டும் –இன்றும் நாளையும் தீர்த்தமும் சடாரியும் உண்டு
பத்தாம் திருநாள்பெரிய திருமொழி -10-2 தொடங்கி திரு நெடும் தாண்டகம் முடிய சேவை -இரக்கமின்றி அபிநய வியாக்யானங்கள்
பிற்பகல் ராவண வதத்துக்கு அருளப்பாடு -கொண்டாட்டம் -இன்றும் அரையர் தீர்த்தம் ஸ்ரீ சடாரி சாதிப்பார் -இன்று நாச்சியார் திருக் கோலம்

வைகுண்ட ஏகாதசி -ரத்னாங்கி சேவை -உயர்வற உயர்நலம் தொடங்கி ஆழ்வாரை திரு முன்பே அழைத்து அந்த ஹர்ஷத்துக்கு போக்குவீடாக
பக்தி உலா படி ஏத்தம் திருவந்திக்காப்பு -திவ்ய ஆஸ்தான மண்டபத்தில் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் திரளை இருந்தான் கண்டு கொண்டே
மூன்றாம் ஸ்ரீ யபதி முதல் பாட்டுக்கும் ஈடு வாசிப்பார் -முதல் பத்து முடிய சேவை பெரிய பெருமாள் முத்தங்கி சேவை
ஏழாம் திருநாள் ஆழ்வாருக்கு நாச்சியார் திருக் கோலம் ஆழ்வாரைக் கண்டு மோஹித்து கொட்டகை உத்சவம்
-ஆஸ்தானம் எழுந்து அருளும் முன்பு கைத்தல சேவை இவள் திறத்து என் செய்கின்றாயே கேட்பது நெஞ்சை உருக்கப் பண்ணும்
கோயில் திரு வாசலிலே முறை கேட்ட கேள்வியாக்கி –ஆசார்ய ஹிருதயம் இரவில் கங்குலும் பகலும் அபிநயம் வியாக்யானம்
அந்திப் போதில் அவுணன் உடல் இடந்தானே -ஹிரண்யவதம் வியாக்யானம் அபிநயம் பின்பு அரையர் தீர்த்தம் ஸ்ரீ சடகோபன் சாதிப்பார்
பின்பே ஏழாம் பத்தை சேவித்து முடிப்பது
எட்டாம் நாள் -குதிரை நம்பிரான் மேல் வீற்று இருக்கும் -மண்  வெளியில் நிலை வேடுபறி –வாடினேன் வாடி தொடங்கி
திரு மங்கை ஆழ்வார் உடன் திரு மா மணி மண்டபம் சேர்த்தல் இரவில் நெடுமாற்கு அடிமை அபிநய வியாக்யானம்
பத்தாம் நாள் -சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி ஆழ்வாருக்கு -திருவடி தொழ சித்தமாக தாள தாமரை வியாக்யானம்
திருவடி தொழ எழுந்து அருளும் போது சூழ் விசும்பும் திருவடி தொழும் போது முனியே நான்முகனும் அரையர் சேவை
முனியே நான்முகன் ஒவ் ஒருபாட்டையும் இரு முறை சேவிப்பது -அது முடியும் வரை வேர் அற்ற மரம் போலே
ஆழ்வார் திருவடி வாரத்தில் திருத் துழாயால் மூடப் பெற்று இருப்பார்
அடுத்த நாள் இயற்பா ஆஸ்தானத்திலே-அன்று தொடங்கி ஸ்ரீ ரெங்க நாச்சியார் சன்னதியிலே ஐந்து நாள் பகல் பத்தும்
ஐந்து நாள் இராப் பத்தும் -அதில் தொடக்கம் அரையர் சேவிப்பது அத்யாபகர்கள்-

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரும் தேவி பிராட்டியார் சமேத பேர் அருளாளன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: