ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் தொகுத்து அருளிய -ஆழ்வார்கள் புகழ்ந்த ஸ்ரீ கண்ணன் –

திருப்பல்லாண்டு –
1–மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -1-
2–மாயப் பொரு படை வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி பாயச் சுழற்றிய ஆழி வல்லான் -7-
3–திரு மதுரையுள் சிலை குனித்து ஐந்தலைய பைந் நாகத் தலை பாய்ந்தவன் -10-

———————————————

பெரியாழ்வார் திருமொழி –
4–வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர்க் கண்ணன் -1-1-1-
5–சீருடைப் பிள்ளை திருவோணத்தான் -1–1–3-
6–ஆயர் புத்திரன் அல்ல யரும் தெய்வம் பாய சீருடைப் பண்புடைப் பாலகன் மாயன் -1–1–7-
7–மத்த மா மலை தாங்கிய மைந்தன் –1–1–8-
8–கோதைக் குழலாள் யசோதைக்கு போத்தந்த பேதைக்கு குழவி-1–2–1 —
9—பணைத் தோள் இள வாய்ச்சி பால் பாய்ந்த கொங்கை அணைத்தார உண்டு கிடந்த பிள்ளை -1–2–3-
10—உழந்தாள் நறு நெய் ஒரோ தடா வுண்ண இழந்தாள் எரிவினால ஈர்த்து எழில் மதத்தின் பழந்தாம்பா லோச்சப் பயத்தால் தவழ்ந்தான் -1–2–4-
11—பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு உறங்குவான் போலே கிடந்த பிள்ளை -1- 2-5-
12–மத்தக் களிற்று வசுதேவர் தம்முடைச் சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில் அத்தத்தின் பாத்தா நாள் தோன்றிய வச்சுதன்–1–2–6-
13—இரும் கை மத களிறு ஈர்க்கின்றவனை பருங்கி பறித்துக் கொண்டு ஓடும் பரமன் -1–2–7-
14—வந்த மதலைக் குழாத்தை வலி செய்து தந்தக் களிறு போலே தானே விளையாடும் நந்தன் மதலை-1–2–8-
15—பெருமா வுரலில் பிணிப்புண்டு இருந்து அங்கு இரு மா மருதம் இருத்த பிள்ளை -1–2–10-
16–நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே தாளை நிமிர்த்துச் சகடத்தை சாடிப் போய் வாள் கொள் வளை எயிற்று ஆர் உயிர் வவ்வினான் -1-2-11-
17—மைத் தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற செய்த்தலை நீல நிறத்துச் சிறு பிள்ளை -1-2-12-
18–வண்டமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக் கொண்டு வளர்கின்ற கோவலக் குட்டன் -1–2–13-
19–நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால் நாக்கு வழித்து நீராட்டும் நம்பி -1–2–15-
20–வசுதேவர் தம் மகனாய் வந்து திண் கொள் அசுரரைத் தேய வளர்ந்தவன் -1–2–16-
21–திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற உருவு கரிய ஓளி மணி வண்ணன் -1–2–17-
22–மண்ணும் மலையும் கடலும் உலகு எழும் உண்ணும் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளை -1–2–18-
23—முற்றிலும் தூதையும் முன் கை மேல் பூவையும் சிற்றில் இழைத்துத் திரி தருவோர்களைப் பற்றிப் பறித்துக் கொண்டு ஓடும் பரமன் -1–2–19-
24–அழகிய பைம் பொன்னின் மேல் அங்கைக் கொண்டு கழல்கள் சதங்கை கலந்து எங்கும் ஆர்ப்ப மழ கன்றினங்கள் மறித்துத் திரிவான் -1–2–20-
25–வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலையுண்ட அஞ்சன வண்ணன் -1–3–10-
26–தன் முகத்துச் சுட்டி தூங்கத் தூங்க தவழ்ந்து போய்ப் பொன் முகக் கிண்கிணி யார்ப்பப் புழுதி அளைந்தவன்-1-4-1-
27–தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய பேழை வயிற்று எம்பிரான்–1–4–9-
28–மைத்தடம் கண்ணி யசோதை தன் மகன் -1–4–10-
29—மேலை யமரர் பதி மிக்கு வெகுண்டு வரக் காள நன் மேகமவை கல்லோடு கார் பொழியக் கருதி வரைக் குடையாக் காலிகள் காப்பவன் -1–5–2-
30–வானவர் தாம் மகிழ வன் சகடம் உருள வஞ்ச முலைப் பேயின் நஞ்சமது உண்டவன் -1–5–4-
31–கானக வல் விளவின் காயுதிரக் கருதிக் கன்றது கொண்டு எறியும் கரு நிறக் கன்று -1–5–4-
32–தேனுகனும் முரனும் திண் திறல் வெந்நரகன் என்பவர் தாம் மடியச் செருவதிரச் செல்லுமானை -1–5–4-
33–மத்தளவும் தயிரும் வார் குழல் நன் மடவார் வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி ஒருங்கு ஒத்த
விணை மருத முன்னிய வந்தவரை ஊரு கரத்தினோடு முந்திய வெந்திறலோன்-1–5–5-
34–கானக மா மடுவில் காளி
35–துங்க மதக் கரியின் கொம்பு பறித்தவன் —
36—ஆய மறிந்து பொருவான் எதிர் வந்த மல்லை அந்தரமின்றி யழித்து ஆடிய தாளிணையான் -1–5–7-
37—நப்பின்னை தன் திறமா நல் விடை ஏழு அவிய நல்ல திறலுடைய நாதன் -1–5–7-
38–தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதி புகத் தனி ஒரு தேர் கடவித் தாயொடு கூட்டிய யப்பன்
39–சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண் பற்றிக் கன்று -1–6–5-
40—-மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று தேர் உய்த்தவன் -1-6-6-
41–புகழ்ப் பல தேவன் என்னும் தன்னம்பியோடப் பின் கூடச் செல்வான் -1–7–5-
42—மக்கள் உலகினில் பெய்து அறியா மணிக் குழவி யுருவின் தக்க மா மணி வண்ணன் வாசு தேவன் -1–7–8-
43–பஞ்சமர் தூதனாய்ப் பாரதம் கை செய்தவன் —
44—நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த அஞ்சன வண்ணன் -1–8–3-
45–நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்னத் தேறி யவளும் திரு உடம்பில் பூச ஊறிய கூனினை யுள்ளே ஒடுங்க ஏற உருவினான் -1–8–4-
46–கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி எழல் உற்று மீண்டே இருந்துன்னை நோக்கும் சுழலை பெரிதுடைச் துச்சோதனனை அழல விழித்தான் -1–8–5-
47–பூமிப் பொறை தீர்ப்பான் தேர் ஓக்க ஊர்ந்தான் கார் ஒக்கும் மேனிக் கரும் பெரும் கண்ணன் -1–8–6-
48–தரணியில் வேந்தர்கள் உட்க விசயன் மணித் திண் தேர் ஊர்ந்தவன் -1–9–4-
49—பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறித் தித்தித்த பாலும் தடாவில் வெண்ணெயும் மெத்தத் திரு வயிறு ஆர விழுங்கிய வத்தன் -1–9–7-
50–மூத்தவை காண முது மணல் குன்று ஏறிக் கூத்து உவந்து ஆடிக் குழல் இசை பாடி வாய்த்த மறையோர் வணங்க இமையவர் ஏத்த நின்ற வெம்பிரான்-1-9-8-
51–கற்பகக் காவு கருதிய காதலிக்கு இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில் நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள் உய்த்தவன் -1–9–9-
52—மெச்சூது சங்கம் இடத்தான் நல்வேய் ஊதி பொய்ச் சூதில் தோற்ற பொறை யுடை மன்னார்க்காய்ப் பத்தூர் பெறாத அன்று பாரதம் கை செய்த வத்தூதன்–2–1–2-
53—மலை புரை தோள் மன்னவரும் மா ரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டு அழியப் பார்த்தன் சிலை வளையத் திண் தேர் மேல் முன் நின்றான் -2–1–2-
54–காயு நீர் புக்குக் கடம்பு ஏறிக் காளியன் தீய பணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற வாயன் -2–1–3-
55–இருட்டில் பிறந்து போய் ஏழை வல்லாயர் மருட்டைத் தவிர்ப்பித்து வன் கஞ்சன் மாளப் புரட்டியவன் –
56–அந்நாள் ஆய்ச்சியர் பூம் பட்டுக் கொண்ட வரட்டன்-2-1-4-
57–நந்தன் மனைவி கடை தாம்பால் சோப்பூண்டு துள்ளித் துடிக்கத் துடிக்க வாப்புண்டான் -2–1–5-
58–துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய வப்பன்-2–1–5-
59—யசோதை இளம் சிங்கம் கொத்தார் கரும் குழல் கோபால கோளரி யத்தன் -2–1–7-
60–கஞ்சனை வஞ்சனையால் வலைப் படுத்தினான் -2-2-3-
61—இரு மலை போல் எதிர்ந்த மல்லர் இருவர் அங்கம் எரி செய்தான் -2-2-8-
62–பேய்ப்பால் முலை யுண்ட பித்தன் -2–2–1-
63–மலையை எடுத்து மகிழ்ந்து கன் மாரி காத்துப் பசு நிறை மேய்த்தான் -2–3–7-
64—ஏர் விடை செற்று இளம் கன்று எறிந்திட்ட இருடீகேசன் -2–3–10-
65—சகடம் உதைத்திட்ட பற்ப நாபன் -2–3–11-
66–முன் வஞ்ச மகளைச் சாவப் பாலுண்டு சகடு இறப் பாய்ந்திட்ட தாமோதரன் -2- 3–12-
67—கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து வஞ்சகப் பேய் மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரான் -2-4-4-
68–எண்ணெய்க் குடத்தை உருட்டி இளம் பிள்ளை கிள்ளி எழுப்பிக் கண்ணைப் புரட்டி விழித்துக் கழை கண்டு செய்யும் பிரான் -2–4–5-
69—கன்றினை வாலோலை கட்டிக் கனிகள் உதிர எறிந்து பின் தொடர்ந்து ஓடி ஓர் பாம்பைப் பிடித்து கொண்டாடினான் -2–4–7-
70—-பேயின் முலை யுண்ட பிள்ளை மாயச் சகடும் மருதும் இறுத்தவன்-2–5–2-
71—திண்ணக் கலத்துத் திரை யுறி மேல் வைத்த வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும் அண்ணல் அமரர் பெருமான் -2–5-3-
72—பள்ளத்தில் மேயும் பறவை உருக் கொண்டு கள்ள வசுரன் வருவானைத் தான் கண்டு பொதுக்கோ வாய் கீண்டிட்ட பிள்ளை -2–5–4-
73—கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினைப் பற்றி எறிந்த பரமன் -2–5–5-
74—கிழக்கில் குடி மன்னர் கேடிலாதாரை அழிப்பான் நினைந்திட்டு அவ்வாழி யதனால் விழிக்கும் அளவில் வேறு அறுத்தான் -2–5–6-
75—வேலிக் கோல் வெட்டி விளையாடு வில் ஏந்தித் தாவிக் கொழுந்தைத் தடம் கழுத்தில் பூண்டு
பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டுக் காலிப் பின் போவான் -2- -6–1-
76—-கறுத்திட்டு எதிர் நின்ற கஞ்சனைக் கொன்றான் பொறுத்திட்டு எதிர் வந்த புள்ளின் வாய் கீண்டான்
நெறித்த குழல்களை நீங்க முன்னோடிச் சிறுக் கன்று மேய்ப்பான் -2-6-3-
77—ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான் பாரதம் கை எறிந்தான் -2–6–4-
78—பாரதம் கை செய்து பார்த்தற்குத் தேர் ஒன்றை ஊர்ந்தான்
79—பாலப் பிராயத்தே பார்த்தற்கு அருள் செய்த கோலப் பிரான் -2–6–6-
80—-தேனில் இனிய பிரான் –2–7–1-
81—மச்சோடு மாளிகை ஏறி மாதர்கள் தம் மிடம் புக்குக் கச்சோடு பட்டைக் கிழித்துக் காம்பு துகிலவை கீறி நிச்சலும் தீமைகள் செய்வான் -2–7–3-
82—புள்ளினை வாய் பிளந்திட்டான் பொரு கரியின் கொம்பு ஓசித்தான்–2–7–5-
83—கருதிய தீமைகள் செய்து கஞ்சனைக் கால் கொடு பாய்ந்தான் தெருவின் கண் தீமைகள் செய்து
சிக்கென மல்லர்களோடு பொருது வருகின்ற பொன் -2–7–6-
84—குடங்கள் எடுத்தேற விட்டுக் கூத்தாட வல்ல வெங்கோ மடங்கொள் மதி முகத்தாரை மால் செய்ய வல்ல வென் மைந்தன் -2–7–7-
85—சீமாலி கணவனோடு தோழமை கொள்ளவும் வல்லான் சாமாறவனை எண்ணிச் சக்கரத்தால் தலை கொண்டான் -2–7–8-
87–கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய உதை செய்த பிள்ளையரசு -2–8–7-
88—கஞ்சன் கறுக் கொண்டு வஞ்சிப்பதற்கு விடுத்த கரு நிறச் செம்மயிர்ப் பேயைப் பிடித்து முலை யுண்ட பரமன் -2-8-6-/-2–8–7-
89–வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடை இட்டு அதனோசை கேட்க்கும் கண்ண பிரான் -2–9–1-
90—வளை துகில் கைக் கொண்டு காற்றில் கடியனாய் ஓடி யகம் புக்கு மாற்றமும் தாரான் -2–10–1-
91—வண்டமர் பூம் குழலார் துகில் கைக் கொண்டு விண்டோய் மரத்தான் –2–10–2-
92—-தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி விடம்படு நாகத்தை வால் பற்றி ஈர்த்துப் படம் படு பைந்தலை மேல் எழப் பாய்ந்திட்டு உடம்பை அசைத்தான் -2–10–3-
93—தேனுகனாவி செகுத்துப் பனங்கனி தான் எறிந்திட்டு தடம் பெரும் தோளினால் வானவர் கோன் விட வந்த மழை தடுத்து ஆநிரை காத்தான் –2–10–4-
94—-ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பாலுண்டு பேர்த்தவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு வேய்த் தடம் தோளினார்
வெண்ணெய் கொள் மாட்டாது அங்கு ஆப்புண்டு இருந்தான் –2–10–5-
95—தள்ளித் தளர் நடையிட்டு இளம் பிள்ளையாய் உள்ளத்தின் உள்ளே அவளை யுற நோக்கிக்
கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை யுயிர் துள்ளச் சுவைத்தான் -2-10–6-
96—-தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு வருவான் பொன்னேய் நெய்யோடு பாலமுது உண்டு ஒரு புள்ளுவன்
பொய்யே தவழும் மின்னேர் நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரான் -3–1–1-
97—வன் பாரச் சகடம் இறச் சாடி வடக்கிலகம் புக்கு இருந்து மின் போல் நுண்ணிடையாள் ஒரு கன்னியை வேற்று உருவம் செய்து வைத்த அன்பன் -3-1–2-
98—-கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக் குடத் தயிர் சாய்த்துப் பருகி பொய் மாய மருதான அசுரரைப் பொன்றுவித்தான் –3- 1-3-
99—மையார் கண் மடவாய்ச்சியர் மக்களை மையின்மை செய்து அவர் பின் போய்க் கொய்யார்
பூம் துகில் பற்றித் தனி நின்று குற்றம் பல பல செய்தான் -3–1–4-
100—முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெயினோடு தயிரும் விழுங்கிக் கப்பாலாயர்கள் காவில் கொணர்ந்த கலத்தோடு
சாய்த்துப் பருகி மெய்ப்பாலுண்டு அழு பிள்ளைகள் போல் விம்மி விம்மி அழுகின்ற வப்பன்-3–1–5-
101—கரும்பார் நீள் வயல் காய்க் கதிர்ச் செந்நெலைக் கற்றாநிரை மண்டித்தின்ன விரும்பா கன்று ஓன்று கொண்டு விளங்கனி வீழ எறிந்த பிரான் -3-1-6-
102 —-சுரும்பார் மென் குழல் கன்னி ஒருத்திக்குச் சூழ் வலை வைத்து திரியுமரம்பன் –3–1–6-
103—சுருட்டார் மென் குழல் கன்னியர் வந்து சுற்றும் தோழா நின்ற சோதி -3–1–7-
104—பிறர் மக்களை மையம்மை செய்து தோளால் இட்டவரோடு திழைத்துச் சொல்லப் படாதன செய்தான் -3-1–8-
105—காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து கண்டார் கழறத் திரியும் மாயன் -3–1–9-
106—தொத்தார் பூங்குழல் கன்னி ஒருத்தியைச் சோலைத் தடம் கொண்டு புக்கு முத்தார் கொங்கை புணர்ந்து
இரா நாழிகை மூ வேழு சென்ற பின் வந்தான் -3–1–10-
107—அஞ்சன வண்ணன் ஆயர் கோலக் கொழுந்து -3–2–1-
108—பற்று மஞ்சள் பூசிப் பாவை மாரொடு பாடியில் சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரிவான் -3–2–2-
109–நன் மணி மேகலை நான்கை மாரொடு நாள் தொறும் பொன் மணி மேனி புழுதியாடித் திரிவான் -3–2–3-
110—வண்ணக் கருங்குழல் மாதர் வந்தலர் தூற்றிடப் பண்ணிப் பல செய்து ஆய்ப்பாடி எங்கும் திரிவான் -3–2–4-
111–அவ்வவ்விடம் புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய் கொவ்வைக் கனி வாய் கொடுத்து கூழமை செய்வான் -3–2–5-
112—மிடறு மேலு மெழுத்தோட வெண்ணெய் விழுங்கிப் படிறு பல செய்து ஆய்ப்பாடி எங்கும் திரிவான் -3–2–6-
113—வள்ளி நுடங்கிடை மாதர் வந்து அலர் தூற்றிடத் துள்ளி விளையாடித் தோழரோடு திரிவான் -3–2–7-
114—பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட வப்பாங்கினால் யசோதை அமுதூட்டி எடுத்த இளம் சிங்கம் -3–2–8-
115—குடையும் செருப்பும் கொடாதே கடிய வெங்கானிடைக் காலடி நோவக் கன்றின் பின் போக்கிய பிள்ளை –3–2–9-
116—-பேடை மயில் சாயல் பின்னை மணாளன் –3–3–3-
117—பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போர் ஏறு –3–3–5-
118—பொய்கை புக்கு நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கினான் -3–3–6-
119—கன்றின் உருவாகி மேய் புலத்தே வந்த கள்ள வசுரன் தன்னைச் சென்று பிடித்துச் சிறுக் கைகளாலே விளங்காய் எறிந்தான் -3–3–7-
120—கோவலர் இந்த்ரற்குக் காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டான் -3–3–8-
121—அட்டுக் கவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய்யளறும் அடங்கப் பொட்டத் துற்றி மாரிப் புகை புணர்த்த பொருமா கடல் வண்ணன் -3–5–1-
122—செப்பாடுடைய திருமாலவன் –3–5–6-
123—தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத் தடவரை தங்கு தாமோதரன் -3–5–7-
124—-வன் பேய் முலை யுண்டதோர் வாயுடையன் -3-5 -9-
125—-வான் இள வைரசு வைகுந்தக் குட்டன் வாசுதேவன் மதுரை மன்னன் நந்தர் கோன் இள வரசு கோவலர் குட்டன் கோவிந்தன் -3-6-3-
126—தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் தீப்பப் பூடுகள் அடங்க வுழக்கிக் கானகம் படி யுலாவி யுலாவிக் குழலூதின கரும் சிறுக்கன் -3–6-4-
127—செம் பெரும் தடம் கண்ணன் திரல் தோளன் தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம் -3–6–6-
128—அருங்கல வுருவினாயர் பெருமான் –3–6–10-
129—மல்லரை யட்டவன்–3–8–1-
130—சாடு இறப் பாய்ந்த பெருமான் –3–8–6-
132—என்னாதன் தேவிக்கு அன்று இன்பப் பூ வீயாதாள் தன்னாதன் காணவே தண் பூ மரத்தினை
வன்னாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட என்னாதன் –3-9 -1-
133—உருப்பிணி நங்கையைத் தேர் ஏற்றிக் கொண்டு விருப்புற்று அங்கு ஏக விரைந்து எதிர் வந்து
செருக்குற்றான் வீரம் சிதையத் தலையை சிரைத்திட்டான் -3-9-3-
134—-பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த அஞ்சன வண்ணன் -3- 9–5-
135—காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன் நீண் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன் -3–9–7-
136—மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து ஆயர்களோடு போய் ஆ நிரை காத்து அணி வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயர்கள் ஏறு -3- 9-9-
137—கொலை யானைக் கொம்பு பறித்தான் –4-1-3-
138—-ஆயர் மட மகள் பின்னைக்காகி அடல் விடை ஏழினையும் வீயப் பொருது வியர்த்து நின்றான் -4-1-4-
139—வாரேறு கொங்கை யுருப்பிணியை வலியப் பிடித்துக் கொண்டு தேர் ஏற்றிச் சேனை நடுவு போர் செய்தான் -4-1-5-
140 —-பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்சப் புணர் முலை வாய் மடுக்க வல்லான் பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு
பவ்வம் ஏறி துவரை எல்லாரும் சூழச் சிங்கா சனத்தே இருந்தான் -4-1-6-
141—-வெள்ளைப் புரவிக் குரக்கு வெல் கொடித் தேர் மிசை முன்பு நின்று கள்ளப் படைத் துணையாகிப் பாரதம் கை செய்தான் -4-1-7-
142—நாழிகை கூறிட்டுக் காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே நாழிகை போகப் படை பொருதவன் தேவகி தன் சிறுவன்
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்பச் சயத்திரதன் தலையைப் பாழில் உருளப் படை பொருதவன் -4–1–8-
143—ஆனாயர் கூடி யமைத்த விழவை அமரர் தம் கோனார்க்கு ஒழியக் கோவர்த்தனத்துச் செய்தான் –4- 2-4-
144—-கஞ்சன் தன் ஒரு வாரணம் உயிர் உண்டவன் -4–2–5-
145—-ஏவிற்றுச் செய்வான் ஏன்று எதிர்ந்து வந்த மல்லரைச் சாவத் தகர்த்த சாந்தணி தோள் சதுரன் –4–2–6-
146—-மன்னர் மறுக மைத்துனன் மார்க்கு ஒரு தேரின் மேல் முன் அங்கு நின்று மோழை எழுவித்தவன்–4–2–7-
147—–எட்டுத் திசையும் எண்ணிறந்த பெரும் தேவிமார் விட்டு விளங்க வீற்று இருந்த விமலன் -4–2–10-
148—-உருப்பிணி நங்கை தன்னை மீட்ப்பான் தொடர்ந்து ஓடிச் சென்ற உருப்பனை ஒட்டிக் கொண்டிட்டு உறைத்திட்ட வுறைப்பன்–4–3–1-
149—கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையில் மடிய வளர்ந்த மணி வண்ணன் –4–3–2-
150—–மன்னு நரகன் தன்னைச் சூழ் போகி வளைத்து எறிந்து கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்த கடல் வண்ணன் –4–3–3-
151—-மா வலி தன்னுடைய மகன் வாணன் மகள் இருந்த காவலைக் கட்டு அழித்த தனிக் காளை—4—3–4-
152—பல பல நாழம் சொல்லிப் பழித்த சிசுபாலன் தன்னை அலவலைமை தவிர்த்த அழகன் –4- 3 –5-
153—-பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் —4–3–6-
154—-குருந்தம் ஓன்று ஓசித்தான் –4–4–7-
155—-சாடு இறப் பாய்ந்த தலைவன் –தாமோதரன் –4–6–6-
156—-கண்ணனுக்கு இனிய கரு முகில் வண்ணன் –4—6–7-
157—-செம் பெரும் தாமரைக் கண்ணன் –4–6–8-
158—-தலைப்பு பெய்து குமுறிச் சலம் பொதி மேகம் சல சல பொழிந்திடக் கண்டு மலைப் பெரும் குடையால் மறைத்தவன் மதுரை மால் –4- 7–6-
159—-வில் பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி மேல் இருந்தவன் தலை சாடி மல் பொருது எழப் பாய்ந்த யரையனை யுதைத்த மால் –4—7–7-
160 —-திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய் அரசினை யவிய அரசினை அருளும் அரி –4–7–8-
161—மாத்வத் தோன் புத்திரன் போய் மறி கடல் மாண்டானை ஓதுவித்த தக்கணையா வுருவுருவே கொடுத்தான் –4–8–1-
162—பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும் இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படுத்த யுறைப்பன்—4–8–2-
163—–மருமகன் தன் சந்ததியை யுயிர் மீட்டு மைத்துனன்மார் உருமகத்தே வீழாமே குரு முகமாய்க் காத்தான் –4—8–3-
164—-கருளுடைய பொழில் மருதும் கதக் களிறும் பிலம்பனையும் கடிய மாவும் உருளுடைய சகடரையும் மல்லரையும் யுடைய விட்டோசை கேட்டான் –4- 9–3-
165—பதினாறாமாயிரவர் தேவிமார் பணி செய்யத் துவரை என்னுமதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் –4–9–5-
166—-மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி உத்தரை தன் சிறுவனையும் உய்யக் கொண்ட வுயிராளன் –4–9–6-
167—-குன்று எடுத்து ஆ நிரை காத்த வாயன் கோ நிரை மேய்த்தவன் –4–10–9-
168—-கொடுமைக் கஞ்சனைக் கொன்று தன் தாதை கோத்த வன் தளை கோள் விடுத்தான் -5–1–4-
169—-குஞ்சரம் வீழக் கொம்பு ஓசித்தான் –5–1–4-
170—–வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவன் களிறு அட்ட பிரான் –5–1–9-
171—-மக்கள் அறுவரைக் கல்லிடை மோத விழந்தவள் தன் வயிற்றில் சிக்கென வந்து பிறந்து நின்றான் -5- 2-1-
172—தூது சென்றான் குரு பாண்டவர்க்காய் அங்கோர் பொய்ச் சுற்றம் பேசிச் சென்று பேதம் செய்து எங்கும் பிணம் படுத்தான் -5–3–5-
173—-மைத்துனன்மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தான் -5–3–9-
174—-சென்று அங்கு வாணனை யாயிரம் தோளும் திருச் சக்கரமதனால் தென்றித் திசை திசை வீழச் செற்றான் -5- 3-10-
175—மருப்பு ஓசித்தான் மல் அடர்த்தான் –5-4–7-
176—வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலன் கொளும் குளிர் முகில் வண்ணன் ஆயர் ஏறு -5–4–11-

————————————

திருப்பாவை
177—கூர் வெல் கொடும் தொழிலான நந்தகோபன் குமரன் -ஏரார்ந்த கண்ணி -யசோதை இளம் சிங்கம் -கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் -1-
178—மாயன் -மன்னு வடமதுரை மைந்தன் -தூய பெரு நீர் யேமுனைத் துறைவன் -ஆயர் குலத்தினில் தோன்றும்
அணி விளக்கு –தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன் -5-
179—-பேய் முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்து -6-
180—-மாவாய் பிளந்தான் மல்லரை மாட்டிய தேவாதி தேவன் -8-
181—புள்ளின் வாய் கீண்டான் -13-
182—-சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக் கையன் -பங்கயக் கண்ணான் -14-
183—-வல்லானை கொன்றான் மாற்றாரை மாற்று அழிக்க வல்லான் மாயன் -15-
184—குத்து விளக்கு ஏறிய கோட்டுக் கால் காட்டில் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தில் மேல் ஏறிக் கொத்தலர்
பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பன் -19-
185—வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகன் -21-
186—பொன்றச் சகடம் உதைத்தான் -கன்று குணிலா எறிந்தான் -குன்று குடையா எடுத்தான் -24-
187—ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் தரிக்கிலானாகித் தான்
தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில் நெருப்பு என்ன நின்ற நெடுமால் -25-
188—கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன் -27-
189—குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன் -28-
190—பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்தவன் -29-

—————————–

நாச்சியார் திருமொழி –
191—-ஓர் கரி அலர மருப்பினை ஓசித்துப் புள் வாய் பிளந்த மணி வண்ணன் –1– 10-
192—-குதி கொண்டு அரவில் நடித்தான் -3–2–
193—குடத்தை எடுத்து ஏற விட்டுக் கூத்தாட வல்ல கோ -3–6-
194—கோமள ஆயர் கொழுந்து –3-8-
195—-கஞ்சன் வலை வைத்த வன்று கார் இருள் எல்லில் பிழைத்து நெஞ்சு துக்கம் செய்யப் போந்தான் வஞ்சகப் பேய்ச்சி பாலுண்ட மசுமையிலி -3—9-
196—-அணி வாள் நுதல் தேவகி மா மகன் மிகு சீர் வாசுதேவன் தம் கோ மகன் –4–3-
197—-ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிடப் பூத்த நீள் கடம்பு ஏறிப் புகப் பாய்ந்து வாய்த்த காளியன் மேல் நடமாடிய கூத்தன் -4–4-
198—-ஓடை மா மத யானை யுதைத்தவன் –4–5-
199—மருதம் முறிய நடை கற்றவன் கஞ்சனை வஞ்சனையில் செற்றவன் திகழும் மதுரைப் பதிக் கொற்றவன் –4–6-
200—-அன்று இன்னாதான செய் சிசுபாலனும் நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும் வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன் கொன்றவன் –4–7-
201—-ஆவல் அன்புடையார் தம் மனத்தன்றி மேவலன் விரை சூழ் துவராபதிக் காவலன் கன்று மேய்த்து விளையாடும் கோவலன் –4–8-
202—-அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார் -4–10–
203—-மதுரையார் மன்னன் –6–5-
204 —-மருப்பு ஒசித்த மாதவன் -7–1-
205—வட மதுரையார் மன்னன் வாசுதேவன் –7–3-
206—-செங்கண் கருமேனி வாசுதேவன் –7–7-
207—கண்ணாலம் கோடித்துக் கன்னி தன்னைக் கைப் பிடிப்பான் திண்ணார்ந்து இருந்த சிசுபாலன்
தேசு அழிந்து அண்ணாந்து இருக்கவே அங்கு அவளைக் கைப் பிடித்த பெண்ணாளன் –11–9-
208—கொந்தளம் ஆக்கிப் பரக்கு அழித்து குறும்பு செய்வானோர் மகன் -12- 3 –
209—நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக் காளியன் உச்சியில் நாட்டம் பாய்ந்து போர்க் களமாக நிருத்தம் செய்தான் –12-3-
210—-பத்த விலோசனத்து வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டு அடிசில் உண்ணும் போது ஈது என்று பார்த்து இருந்து நெடு நோக்கு கொள்வான் –12-6-
211—கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் காடு வாழ் சாதியும் ஆகப் பெற்றான் பற்றி யுரலிடை ஆப்பும் உண்டான்
காலிகள் உய்ய மழை தடுத்துக் கோவர்த்தனம் கொற்றக் குடையாக ஏந்தி நின்றான் –12-8-
212—-கண்ணன் என்னும் கரும் தெய்வம் –13–1-
213—கோலால் நிரை மேய்த்த ஆயன் –13–2-
214—–கஞ்சைக் காய்ந்த கரு வில்லி —13—3-
215—–ஆயர் பாடி கவர்ந்து உண்ணும் கார் ஏறு –13–4–
216—-தழையின் பொழில் வாய் நிரைப் பின்னே குழலூதி வருகின்ற நெடுமால் –13-5-
217—-நந்த கோபன் மகன் என்னும் கொடிய கடிய திருமால் -13–6-
218—கொள்ளை கொள்ளிக் குறும்பன் கோவர்த்தனன் –13–8-
219—–அல்லல் விளைத்த பெருமான் ஆயர் பாடிக்கு அணி விளக்கு –13–10-
220—-பட்டி மேய்ந்தோர் கார் ஏறு -பல தேவர்க்கோர் கீழ்க்கன்று இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி விட்டுக் கொண்டு விளையாடுவான் — 14–1-
221—ஆயர் பாடி கவர்ந்து உண்ணும் குணுங்கு நாறும் குட்டேறு கோவர்த்தனன் –14–2-
222—–மாலாய்ப் பிறந்த நம்பி மாலே செய்யும் மணாளன் ஏலாப் பொய்கள் உரைப்பான் —14-3-
223—-போர்த்த முத்தின் குப்பாயப் புகார் மால் யானைக் கன்றே போல் வேர்த்து நின்று விளையாடுவான் –14–4-
224—-பீதாக வாடை யுடை தாழப் பெரும் கார் மேகக் கன்றே போல் வீதியார வருவான் –14–5-
225—-தருமம் அறியாக் குறும்பன் தன் கைச் சார்ங்கம் அதுவே போல் புருவ வட்டம் அழகிய பொருத்தமிலி-
உருவு கரிதாய் முகம் செய்தாய் உதய பருப் பதத்தின் மேல் விரியும் கதிரே போல்வான் –14–6-
226—-பொருத்தமுடைய நம்பி புறம் போல் உள்ளும் கரியான் அருத்தித்து தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம் போல் விருத்தம் பெரிதாய் வருவான் –14–7-
227—–காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டை யாடி வருவான் –14–8-

————————————————————–

பெருமாள் திருமொழி
228—மாவினை வாய் பிளந்து உகந்த மால் -வேலை வண்ணன் என் கண்ணன் –வன் குன்றம் ஏந்தி ஆவினை அன்று உய்யக் கொண்ட ஆயர் ஏறு –1–4-
229—-ஏறு அடர்த்தான் –2—3-
230—தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பால் உடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு ஆர்த்த தோளுடை எம்பிரான் –2–4-
231—–வன் பேய்ச்சி முலையுண்ட வாயன் —3- -4-
232—-தாய் முலைப் பாலில் அமுது இருக்க தவழ்ந்து தளர் நடை இட்டுச் சென்று பேய் முலை வாய் வைத்து நஞ்சை யுண்டு பித்தன் என்றே பிறர் ஏச நின்றான் –6–4-
233—-குன்றினால் குடை கவித்துக் கோலக் குரவை கோத்துக் குடமாடிக் கன்றினால் விள வெறிந்து காலால் காளியன் தலை மிதித்த வென்றி சேர் பிள்ளை —
234—-வஞ்சமேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி வாண்டு நார் நரம்பு எழக் கரிந்துக்க நஞ்சமார் தரு சுழி முலை சுவைத்து அருள் செய்து வளர்ந்தான் –7–9-
235—-கஞ்சனை நாள் கவர் கரு முகில் எந்தை —7–10-
236—–மல்லை மா நகருக்கு இறையவன் தன்னை வான் செலுத்திய மாய்த்து எல்லையில் பிள்ளை –7- -11-

—————————————————–

திருச் சந்த விருத்தம்
237——இட்டிடைப் பின்னை கேள்வன் -13-
238—-புள்ளின் வாய் பிளந்தான் —19-
239—–பூணி பேணு மாயன் –26-
240—நன்னிறத் தொரின் சொலேழை பின்னை கேள்வன் –33-
241—-கொம்பராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளை –35-
242—-ஆடகத்த பூண் முலை யசோதை யாய்ச்சி பிள்ளை சாடு உதைத்து ஓர் புள்ளதாவி கள்ளதாய பேய் மகள்
வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பாலமுது செய்து ஆடகக்கை மாதர் வாய் அமுதுண்டான் –36-
243—-காய்த்த நீள் விளங்கனி யுதிர்த்து எதிர்ந்த பூங்குருந்தம் சாய்த்து மா பிளந்த கைத்தலத்த கண்ணன்
ஆய்ச்சி பாலை யுண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் யுண்டு பின் பேய்ச்சி பாலை யுண்டான் –37-
244–கடங்கலந்த வன்கரி மருப்பு ஓசித்து ஓர் பொய்கைவாய் விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற
நாதன் குடம் கலந்த கூத்தனாய கொண்டல் வண்ணன் -38–
245—-வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் –39-
246—மையரிக் கண் மாதரார் திறத்து முன் ஆனை யன்று சென்று அடர்த்த மாயன் –40-
247—ஆயனாகி யாயர் மங்கை வேய தோள் விரும்பினான் –41-
248—-ஏறு சென்று அடர்த்த வீசன் –42-
249—-வெஞ்சினத்த வேழ வெண் மருப்பு ஓசித்து உருத்தமா கஞ்சனைக் கடிந்த காலன் வஞ்சனத்து வந்த பேய்ச்சி யாவி பாலுள் வாங்கினான் -43–
250—-பொற்றை யுற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததை பற்றி யுற்று மற்றதன் மருப்பு ஒசித்த பாகன் –52-
251—மோடியோடி லச்சையாய சாபம் எய்தி முக்கணான் கூடு சேனை மக்களோடு கொண்டு
மண்டி வெஞ்சமத்து ஓட வாணன் ஆயிரம் கரம் கழித்த ஆதி மால் -53-
252—மரம் கெட நடந்தர்ந்து மத்த யானை மத்தகத்து உரம் கெட புடைத்தோர் கொம்பு ஓசித்து உகந்த உத்தமன் -துரங்கம் வாய் பிளந்தான் –58-
253—-கால நேமி வக்கரன் கரன் முரன் சிரமவை காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரன் –59-
254—குந்தமோடு சூலம் வேல்கள் தோ மரங்கள் தண்டு வாள் பந்தமான தேவர்கள் பறந்து
வானகமுற வந்த வாணன் யீரைஞ்சூறு தோள்களைத் துணித்தான் –70-
255—வண்டுலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு இண்ட வாணன் யீரைஞ்சூறு தோள்களைத் துணித்தான் —
முண்ட நீறன் மக்கள் வெப்பு மோடி யங்கி ஓடிடக் கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான்-71-
256—வாசியாகி நேசமின்றி வந்து எதிர்ந்த தேநுகன் நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனங்கனிக்கு வீசி மேல் நிமிர்ந்த தோள் இல்லை யாக்கினான் –80-
257—-சாடு சாடு பாதன் சலம் கலந்த பொய்கைவாய் ஆடரவின் வன்பிடர் நடம் பயின்ற நாதன் -86-
258—-பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன் தேர் மிகுத்து மாயமாக்கி நின்று கொன்று வென்றி சேர்
மாரத்தற்கு வான் கொடுத்து வையம் ஐவர் பாலதாம் சீர் மிகுத்ததோர் தெய்வம் –89-
259 —-விடைக் குலங்கள் ஏழு அடர்த்து வென்றி வேல் கண் மாதரார் கடிக் கலந்த தோள் புணர்ந்த காலி யாயன்–92-
260—தொறுக் கலந்த ஊனம் அஃது ஒழிக்க வன்று குன்ற முன் பொறுத்தான் –106-
261—-காய் சினத்த காசி மன்னன் வக்கரன் பவுண்டிரன் கேசி தேனுகன் நாசமுற்று வீழ நாள் கவர்ந்தான் –107–
———————————————-
திருமாலை –
262—கற்றினம் மேய்த்த வெந்தை –9-
263—-மழைக் கன்று வரை முன் ஏந்தும் மைந்தன் –36-
264—வள வெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள் கவள மால் யானை கொன்ற கண்ணன் –45-
————————————–
அமலனாதி பிரான் –
265-கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் –10-
——————————-
கண்ணி நுண் சிறுத் தாம்பு –
266-கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் -1-
———————————
பெரிய திருமொழி –
267—-இடி கோள் வெங்குரலின விடை யடர்த்தவன்—1- 2–3-
268—பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலையூடு உயிரை வற்ற வாங்கி யுண்ட வாயான் -1—3–1-
269—-காளை யாகிக் கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான் –1–3–4-
270—-பேயிடைக்கிருந்து வந்த மற்றவள் தன் பெரு முலை சுவைத்திடப் பெற்ற தாயிடைக் கிருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த என் தலைவன் –1–4–5-
271—-தேர் அணங்கு அல்குல் செழும் கயல் கண்ணி திறத்தொரு மறத் தொழில் புரிந்து
பார் அணங்கு இமில் ஏறு ஏழு முன் அடர்த்த பனி முகில் வண்ணன் எம்பெருமான் –1–4–6-
273—-தாயாய் வந்த பேய் உயிரும் தயிரும் விழுதும் உடன் உண்ட வாயான் —1–5–6-
274—–விளங்கனி முனிந்தான் –1–6–7-
275—கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான் பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் -1–8–1-
276—வன் பேய் முலை பிள்ளையாய் உயிர் உண்ட வெந்தை பிரான் –1–8–2-
277—–நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் கன்றி மாரி பொழிந்திடக் கடிது ஆ நிரைக்கு இடர் நீக்குவான் சென்று குன்றம் எடுத்தவன் –1–8–3-
278—பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர் கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் குரவை பிணைந்த எம் கோவலன் –1–8–4-
279—-உறி மேல் நறு நெய் அமுதாக உண்டான் —-1–10–4-
280—-மானேய் மட நோக்கி திறத்து எதிர்வந்த ஆனேழ் விடை செற்ற அணி வரைத் தோளன் –1–10–7-
281—–வேயின் அன்ன தோள் மடவார் வெண்ணெய் யுண்டான் இவன் என்று ஏச நின்ற எம்பெருமான் –2–2–1-
282—-பின்னோர் தூது ஆதி மன்னார்க்காகி பெரு நிலத்தார் இன்னார் தூதன் என நின்றான் –2—2–3-
283—-பந்து அணைந்த மல் விரலாள்பாவை தன் காரணத்தால் வெந்திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன்
விரி புகழ் சேர் நந்தன் மைந்தனாக வாகும் நம்பி நம் பெருமான் —2–2–4-
284—-வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழச் செற்றவன் பற்றலர்
வீயக்கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றான் –2–3–1-
285—நந்தனார் களிறு –2–3–2-
286—-வஞ்சனை செய்யத் தாயுருவாகி வந்த பேய் அலறி மண் சேர நஞ்சமர் முலை யூடுயிர் செக யுண்ட நாதன் –2–3–3-
287—அந்தமில் வரையால் மழை தடுத்தான் –2–3–4-
288—ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றி யங்கும் என் துணை –2–3–5-
289—–இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றான் –2–3–6-
290—–காண்டாவனம் என்பதோர் காடு அமரர்க்கு அரையனது கண்டவன் நிற்க மூண்டார் அழல் உண்ண முனிந்தவன் முன்னுலகம் பொறை தீர்த்து ஆண்டான் -2–4-3-
291—-புல மன்னு வடம் புனை கொங்கையினாள் பொறை தீர முன்னாள் அடு வாள் அமரில் பல மன்னர் படச் சுடர்
ஆழியினைப் பகலோன் மறையப் பணி கொண்டு அணி சேர் நில மன்னனுமாய் யுலகாண்டான் —2- 4–3-
292—–வென்றி கொள் வாள் அமரில் பாங்காக முனைவரோடு அன்பளவிப் பதிற்றைந்து திரட்டிப் படை வேந்தர் பட நீங்காச் செருவில் நிறை காத்தவன் — 2–4–4-
293—-புகாராருவாகி முனிந்தவனைப் புகழ் வீட முனிந்து உயிர் உண்டு அசுரன் நகராயின பாழ் பட நாமம் எறிந்தான் –2–4–7-
294—–புரிவாய் கீண்ட சீரான் போரானைக் கொம்பு ஒசித்த போர் ஏறு புணர் மருதம் இற நடந்த பொற் குன்று –2–5–1-
295—-தொத்தார் சோலைக் காண்டவத்தைக் கனல் எரி வாய்ப் பெய்வித்தான் –2- -5- 2-
296—-அன்று பேய்ச்சி விடம் பருகு வித்தகன் கன்று மேய்த்து விளையாட வல்லான் -வரை மீ கானில் தடம் பருகு கரு முகில் –2–5–3-
297—–பேய்த் தாயை முலை யுண்ட பிள்ளை பிணை மருப்பில் கரும் களிறு -பிணை மான் நோக்கின் ஆய்த் தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோ –
குடமாடு கூத்தன் கோகுலங்கள் தளராமல் குன்றம் என்திக் காத்தான் –2–5—4-
298——திரி சகடம் பாறி வீழப் பாய்ந்தான் -தூதில் சென்று அப் பொய்யறை வாய்ப் புகப் பெய்த மல்லர் மங்கக் காய்ந்தான் –2–5–5-
299—படு மதத்த களிற்றின் கொம்பு பறித்தான் –2—5–6-
300—-ஊணாகப் பேய் முலை நஞ்சுண்டான் —2–5–7-
301—-மருதிடை போனான் –2–5—10-
302—-பஞ்சிச் சிறு கூழை யுருவாகி மருவாத வஞ்சப் பெண் நஞ்சுண்ட வண்ணல் முன் நண்ணாத கஞ்சைக் கடந்தவன் –2–6–7-
303—-வெம்பு சினத்திடல் வேழம் வீழ வெண் மருப்பு ஓன்று பறித்தவர் –2—8—3-
304—-மஞ்சுயர் மா மணிக் குன்றம் ஏந்தி மா மழை காத்து ஒரு மாயவானை யஞ்ச அதன் மருப்பு அன்று வாங்கும் ஆயர் -2–8–4-
305—-அரவம் வெருவ முன நாள் பூம்புனல் பொய்கை புக்கான் –2—9–5-
306—–பிறையுடை வாணுதல் பின்னை திறத்து முன்னே ஒருகால் செருவில் உருமின் மறையுடை மால் விடை ஏழு அடர்த்தான் -2–9–9-
307—-உறியார்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு உண்டான் ஆய்ச்சியர் உரலோடு ஆர்க்கத்
தறியார்ந்த கரும் களிறே போலே நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையான்—2–10–6-
308—–இருங்கைம் மா கரி முனிந்து பரியைக் கீறி இன விடைகள் ஏழு அடர்த்து மருதம் சாய்த்து வரும் சகடம் இற
யுதைத்து மல்லை யட்டு வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சானான் –2—10–7-
309—-பார் ஏறு பெரும் பாரம் தீரப் பண்டு பாரதத்துத் தூதி யங்கிப் பார்த்தன் செல்வத் தேர் ஏறு சாரதியாய்ஏ
திர்ந்தார் சேனை செருக்களத்துத் திறல் அழியச் செற்றான் —2–10–8-
310—-ஆயர் பூங்கொடிக்கு வினாவிடை பொருதவன் —3–1–5-
311—-அடல் மழைக்கு நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் –3–1—8-
312—-வேல் கொள் கைத்தலத்து அரசர் வெம்போரினில் விசயனுக்காய் மணித் தேர் கோல் கொள் கைத்தலத்து எந்தை பெம்மான் –3–1–9-
313—–மௌவல் குழல் யாய்ச்சி மென் தோள் நயந்தான்–3—2—7-
314—–மாவாயின் அங்கம் மதியாது கீறி மழை மா முது குன்று எடுத்து ஆயர் தங்கள் கோவாய் நிரை மேய்த்தான் –3—2–8 —
315—–வாடா மருதிடை போகி மல்லரைக் கொன்று ஓக்கலித்திட்டு ஆடல் நன் மா வுடைத்தாயர் ஆ நிரைக் கன்று இடர் தீர்ப்பான் கூடிய மா மழை காத்த கூத்தன் –3- 3-1—
316—-பேய் மகள் கொங்கை நஞ்சுண்ட பிள்ளை –3–3–2-
317—-பண்டிவன் வெண்ணெய் யுண்டான் என்று ஆய்ச்சியர் கூடி இழிப்ப எண்டிசை யோரும் வணங்க விணை மருதூடு நடந்திட்டான் –3–3—3-
318—–வளைக்கை நெடும் கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்பத் தழைத்தவிழ் தாமரைப் பொய்கைத் தண் தடம் புக்கு
அண்டர் காண முளைத்த எயிற்று அழல் நாகத்து உச்சியில் நின்றது வாடத் திளைத்தமர் செய்து வருவான் –3- 3–4-
319—-உருவக் கரும் குழல் யாய்ச்சி திறத்தின மால் விடை செற்றுத் தெருவில் திளைத்து வருவான் —3–3–5-
320—–மலங்க வரு மழை காப்பான் உய்யப் பருவரை தாங்கி யா நிரை காத்தான் –3–3–6-
321–அஞ்சன மா மலை போலே மேவு சீனத்து அடல் வேழம் வீழ முனிந்து அழகாய காவி மலர் நெடும் கண்ணார் கை தொழ வீதி வருவான் –3–3–7–
322—பஞ்சிய மெல்லடிப் பின்னை திறத்து முன்னாள் பாய் விடைகள் ஏழு அடர்த்த —நின்மலன் –3–4–4-
333—வெவ்வாய மா கீண்டு வேழம் அட்ட விண்ணவர் கோன் தாள் அணைவீர் –3–4–5-
334—-மட்டவிழும் குழலிக்கா வானோர் காவில் மரம் கொணர்ந்தான் அடி அணைவீர் -3–4–8-
335—ஓ மண்ணளந்த தாளாளா தண் குடந்தை நகராளா வரையெடுத்த தோளாளா எந்தக்கோர் துணையாளன் ஆகாயே—3–6–5-
336—-போரானைக் கொம்பு ஒசித்த புட் பாகன் என்னம்மான் –3–6–6-
337—ஏதவன் தொல் பிறப்பு இளையவன் வளை யூதி மன்னர் தூதுவனாய் –3–7–4-
338—-பின்னை தன் காதலன் -3–7–7-
339—-இழையாடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு இளங்கன்று கொண்டு விளங்காய் எறிந்து
தழை வாடவன் தாள் குருந்தம் ஓசித்துத் தடந்தாமரைப் பொய்கையை புக்கானிடம் —மணி மாடக் கோயில் –3–8–5-
340—-பண்ணோர் மொழி யாய்ச்சியார் அஞ்ச வஞ்சப் புகுவாய்க் கழுதுக்கு இரங்காது அவள் தன்
உண்ணா முலை மற்று அவளாவியோடும் உடனே சுவைத்தானிடம் —மணி மாடக் கோயில் –3–8–6-
341—பொய்கைத் தடம் புக்கு அடங்கா விடங்கால் அரவம் இளைக்கத் திளைத்திட்டு அதன் உச்சி மேல் அடி வைத்த வம்மானிடம் –3–8–7-
342—துளையார் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா
விளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம் விளைவித்த வம்மானிடம் –3–8–8-
343—-விடையோட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா –3—8–9-
344—-பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப் பெரிய பெயின் உருவு கொடு மாள யுயிர் யுண்டு
345-திண்மை மிகு மருதோடு நற் சகடம் இறுத்து அருளும் தேவன் –3–9–6-
346-விளங்கனியை இளங்கன்று கொண்டு உதிர எறிந்து வேல் நெடுங்கண் ஆய்ச்சியர்கள் வைத்த
தயிர் வெண்ணெய் உளங்குளிர வமுது செய்து இவ்வுலகுண்ட காளை–3-9-7-
347-தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும் தேனுகனும் பூதனை தான் உயிரும் செகுத்தான்
காமனைத் தான் பயந்த கருமேனி யுடை யம்மான்–3–10–7-
348-கன்றதனால் விளவு எறிந்து கனி யுதிர்த்த காளை காமரு சீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான்
குன்றதனால் மழை தடுத்துக் குடமாடு கூத்தன் –3–10–8-
349-வஞ்சனையால் வந்தால் தன்னுயிர் உண்டு வாய்த்த தயிர் உண்டு வெண்ணெய் அமுதுண்ட
வலி மிக்க கஞ்சன் உயிரது உண்டு இவ்வுலகுண்ட காளை –3–10–9-
350-வென்று சின விடை ஏழும் படா வடர்த்துப் பின்னை செவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால் -3–10–10-
351-கும்ப மிகு மத யானை பாகனொடும் குலைந்து வீழ கொம்பாதனைப் பறித்து எறிந்த கூத்தன் –4–1–9-
352-காரார்ந்த திருமேனிக் கண்ணன் –4-1–10-
353-பல்லவம் திகழ் பூம் கடம்பேறி அக்காளியன் பண வரங்கில் ஒல்லை வந்துறப் பாய்ந்து அரு நடம் செய்த உம்பர் கோன்—4–2–2-
354-அண்டரானவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறது வெல்லாம் உண்டு கோ நிரை மேய்த்தவை காத்தவன் –4—2–3-
355-பருங்கை யானையின் கொம்பினைப் பறித்து அதன் பாகனைச் சாகிப் புக்கு ஒருங்க மல்லரைக் கொன்று பின் கஞ்சனை யுதைத்தவன் –4–2–4-
356-சாடு போய் விழத் தாள் நிமிர்த்து ஈசன் தன் படையொடும் கிளையொடும் ஓட வாணனை ஆயிரம் தோள்களும் துணித்தவன் -4–2–5-
357-அங்கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன் –4–2–6-
358-வெஞ்சினக் களிறும் வில்லோடு மல்லும் வெகுண்டு இறுத்து அடர்த்தவன் தன்னை கஞ்சனைக் காய்ந்த காளை யம்மானை—4–3–7-
359-அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை மின் திகழ் குடுமி வேங்கடமலை மேல் மேவிய வேத நல் விளக்கை –4–3–8-
360-களங்கனி வண்ணா கண்ணனே ஏன் தன் கார் முகிலே என நினைந்திட்டு உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்தூளூறிய தேனை –4–3–9-
361-மாற்று அரசர் மணி முடியும் திறலும் தேசம் மற்றவர் தம் காதலிமார் குழையும் தந்தை கால் தளையும்
உடன் கழல வந்து தோன்றிக் கத நாகம் காத்து அளித்த கண்ணன் —4–4–1-
362-பொற்றொடித் தோள் மடமைகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி
பெற்றெடுத்த தாய் போலே மடுப்ப ஆரும் பேணா நஞ்சுண்டு உகந்த பிள்ளை –4–4–2-
363-படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும்
அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி அலந்தலமை செய்து உழலும் ஐயன் —4–4–3-
364-வாராரும் முலை மடவாள் பின்னைக்காகி வளை மருப்பில் கடும் சினத்து வன் தாளார்ந்த
காரார் திண் விடை யடர்த்து வதுவை யாண்ட கரு முகில் போல் திரு நிறத்து என் கண்ணர் –4–4–4-
365-மாற்று அரசர் மணி முடியும் திறலும் தேசம் மற்றவர் தம் காதலிமார் குழையும் தந்தை கால் தளையும்
உடன் கழல வந்து தோன்றிக் கத நாகம் காத்து அளித்த கண்ணன் —4–4–1-
366-பொற்றொடித் தோள் மடமைகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி
பெற்றெடுத்த தாய் போலே மடுப்ப ஆரும் பேணா நஞ்சுண்டு உகந்த பிள்ளை –4–4–2-
367-படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும்
அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி அலந்தலமை செய்து உழலும் ஐயன் —4–4–3-
368-வாராரும் முலை மடவாள் பின்னைக்காகி வளை மருப்பில் கடும் சினத்து வன் தாளார்ந்த
காரார் திண் விடை யடர்த்து வதுவை யாண்ட கரு முகில் போல் திரு நிறத்து என் கண்ணர் –4–4–4-
369-மாற்று அரசர் மணி முடியும் திறலும் தேசம் மற்றவர் தம் காதலிமார் குழையும் தந்தை கால் தளையும்
தூம்புடைப் பனைக் கை வேழம் துயர் கெடுத்து அருளி மன்னு காம்புடைக் குன்றம் ஏந்திக் கடு மழை காத்த வெந்தை –4–5—1-
370-கவ்வை வாள் எயிற்று வன் பேய்க் கதிர் முலை சுவைத்த —வெந்தை –4–5–2-
371-மாத் தொழில் மடங்கச் சேற்று மருதிற நடந்து வன்தாள் சேத் தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித் தோள் புணர்ந்த வெந்தை –4- 5–3-
372-தாங்கரும் சினத்து வன் தாள் தடக்கைம்மா மறுப்பு வாங்கி பூங்குருந்து ஓசித்துப் புள் வாய் பிளந்து எருது அடர்த்த வெந்தை —4–5–4-
373-படவரவுச்சி தன் மேல் பாய்ந்து பன்னடங்கள் செய்து மடவரல் மங்கை தன்னை மார்வாகத்து இருத்தினான் –4–6–5-
374-மல்லரை யட்டு மாளக் கஞ்சனை மலைத்து கொன்று பல்லரசு அவிந்து வீழப் பாரதப் போர் முடித்தாய் –4–6–6-
375-ஏவிளம் கன்னிக்காகி இமையவர் கோனைச் செற்று காவளம் கடித்து இறுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்–4–6–8-
376-குன்றால் குளிர்மாரி தடுத்து உகந்தான் -4–7–3-
377-கானார் கரி கொம்பது ஒசித்த களிறே –4- 7–4-
378-கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே –4–7–7-

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: