ஸ்ரீ ராமானுஜர் / ஆழ்வார்கள் -அனுபவம் –

பொய்கைப் பிரான் மறையின் குருத்தை பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஓன்றத் திரித்து அன்று
எரித்த திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே இருத்தும் பரமன் /
ஞானம் என்னும் நிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்துறையை வைத்து ஆளும் இராமானுசன் /
கோவலுள் மா மலராள் தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன் /

ஆழ்வார்களில் காட்டில் பகவத் விஷயத்தில் உண்டான அவகாஹ நத்தாலே முதல் ஆழ்வார்கள் மூவரையும்
நித்ய ஸூரிகளோ பாதியாக நினைத்து இருப்பார்கள் –
அறிவு நடையாடாதவர்கள் இருக்கும் இடத்தில் வசிக்குமதில் காட்டிலே வர்த்திக்க அமையும் என்று காடுகளில் வர்த்திப்பார்கள்-
-இங்கனே செல்லுகிற காலத்திலே ஒரு மழையையும் காற்றையும் கண்டு திருக் கோவலூரிலே ஒரு இடை கழியிலே ஒருத்தர் புக்கு கிடக்க
-இருவராவார் சென்று -ஒருவர் கிடக்கும் இடம் இருவர் இருக்கப் போரும் -என்று இருக்க
-மூவராவார் சென்று -இருவர் இருக்கும் இடம் மூவருக்கு நிற்கப் போரும் என்று மூவரும் நிற்க –
இருவர் வந்து நெருக்க –நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்துக் பாயும் பனி மறைத்த பண்பாளா –
வாசல் கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல் இடை கழியே பற்றி இனி – முதல் திரு -86- நீயும் திருமகளும் –
குன்று எடுத்துக் பாயும் பனி மறைத்த பண்பாளா -மலை எடுத்து உடம்பிலே விழுகிற மழையைக் காத்த நீர்மையை யுடையவனே-
-உடம்பிலே விழுந்த மழையை மலை எடுத்துக் பரிஹரித்த போது பிறந்த ஹர்ஷம் போலே யாயிற்று
இவர்கள் நெருக்குப் பெற்ற போது இவனுக்கு இருந்த படி –
வாசல் கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல் இடை கழியே பற்றி –காமுகரானவர்கள் உகந்த விஷயங்களில்
போகச் சொன்னாலும் தூணைக் கட்டிக் கொண்டு நிற்குமா போலே -இவ்வாசலுக்கு புறம்பு போக மாட்டிற்றிலன் -உள்ளுப் புக மாட்டிற்றிலன் –
இனி-இப்போது இப்படி இருவருமாக தங்களை நெருக்கப் புக்கவாறே-தம்மை ஒழிய வேறே சிலர் நெருக்குகிறார் உண்டு என்று
-ஈஸ்வரன் தானும் பிராட்டியுமாக வந்து தனித்தனியே இவர்களை பின் பற்றி
திரிந்த நெஞ்சாறல் தீர இவர்கள் மூவருக்கும் நடுவே புக்கு நெருக்க -நம் மூவரையும் ஒழிய வேறு புக்கு நெருக்குகிறவர்கள் யார் என்று
விளக்கு ஏற்றி பார்க்க வேணும் என்ன -அவர்களில் ஒருவரான பொய்கையார் -லீலா விபூதியில்
கார்ய காரண ரூபேண ஸமஸ்த வஸ்துக்களும் பகவத் அதீனமாய் இருக்கிறபடியை -பயபக்தி ரூபா ஞானத்தால் தரிசித்து
-அத்தை ஒரு விளக்காக ரூபித்துக் கொண்டு அனுபவ பரிவாஹ ரூபமான –வையம் தகளி -அருளிச் செய்தார் –
அநந்தரம் ஸ்ரீ பூதத்தார் வையம் தகளி -கேட்க்கையாலே அந்தப் பரபக்தி ரூபா பன்ன ஞானம் முற்றி பகவத் தத்துவத்தை விசதமாக
தர்சிக்கைக்கு உபகரணமான பரஞானம் ஆகிற உஜ்ஜ்வல தீபத்தை ஏற்றுகிற வழி யாலே-அன்பே தகளி -அருளிச் செய்தார்
அநந்தரம் மூன்றாம் ஆழ்வார் அவனை அனுபவிக்கப் பெறில் தரித்து -பெறா விடில் மூச்சடங்கும் படியான
பரம பக்தியை யுடையராய்க் கொண்டு -அவன் படிகளைக் கட்டடங்கக் கண்டு மண்டி அனுபவிக்கிற வழியாலே-திருக் கண்டேன் அருளிச் செய்தார்

வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக -செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடர் ஆழி நீங்குகவே யென்று -1-

சென்றால் குடையாம் யிருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் மணி விளக்காம் பூம் பட்டாம் புல்கு
மணையாம்  திருமாற் கரவு  ——53- நம் ராமானுஜனின் பிரதம ரூபமான திரு அனந்தாழ்வான் கைங்கர்யம்

கீழில் திருவந்தாதியில் ஆழ்வார் உபய விபூதி உக்தனுடைய சேஷித்வத்தை பிரகாசித்தாராய் நின்றார்
அது போய் -இவருடைய சேஷத்வ ஜ்ஞானத்துக்கு உறுப்பாய் -அந்த ஜ்ஞானம் தான் போய் -பக்தி ரூபா பன்னமாய்த்து –
அது ஜ்ஞான விஷயம் -இது பக்தி விஷயம் –
கீழில் திருவந்தாதியில் ஜகத்துக்கு ஈஸ்வரன் சேஷியாய்-ஜகத்து அவனுக்கு சேஷமாய் இருக்கும் என்று பரதவ ஜ்ஞானத்தைச் சொல்லிற்று –
அதில்–விசித்திர ஜ்ஞான சக்தி யுக்தன் -ஜகத் காரண பூதன் -அவனாகிறான் -சங்க சக்ர கதாதரன் -என்றது இ றே –
இதுவும் பக்தி யாகிறது –திரு வநந்த ஆழ்வானுக்கு மிடறு ஒன்றாய் தலை பலவானாப் போலே –

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்–1-

பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை-75-

ராமானுஜ முனி வேழம் –அனந்தாழ்வான் போன்ற பிடிகளுக்கு த்வயார்த்தம்–சிறு கண் இள மூங்கில் – அருளிச் செய்யும் பொழுது -அருகு இருந்த
திருமந்த்ரார்த்தம் சரம ஸ்லோகார்த்தம் -ஆகிய தேனை கலந்து அன்றோ அருளிச் செய்தார் –

உபய விபூதி உக்தன் என்று அனுசந்தித்தார் முதல் ஆழ்வார்
-அதுக்கு வாசக சப்தம் நாராயண சப்தம் என்றார் நடுவில் ஆழ்வார் –
-அதுக்கு ஸ்ரீ சப்தம் கூட்டிக் கொள்ள வேணும் என்கிறார் இவ்வாழ்வார் –
ஞானத்தைச் சொல்லுகிறது வையம் தகளி-
ஞான விபாகையான பக்தியைச் சொல்லுகிறது அன்பே தகளி -‘பக்தியால் சாஷாத் கரித்த படியைச் சொல்கிறது இதில் –
( உயர்வற -என்று முதல் பத்திலும் -வண் புகழ் நாரணன் -என்று அடுத்த பத்திலும்
-திருவுடை அடிகள் -என்று மூன்றாம் பத்திலும் அருளிச் செய்தார் இ றே நம்மாழ்வார் )
பகவத் பிரசாத லப்தமான பயபக்தி ரூபா பன்ன ஞான விசேஷத்தாலே உபய விபூதி நாதனான எம்பெருமானுடைய
ஸ்வரூப ரூப குண விபூதிகளைப் பரி பூர்ணமாக அனுபவித்துப் பேசினார் பொய்கையார் -ஸ்ரீ பூதத்தார் எம்பெருமான் அருளாலே விளைந்த பரபக்தி வையம் தகளி கேட்க்கையாலே பர ஞான அவஸ்தமாம் படி பரி பக்குவமாய்
அந்த பர ஞானத்தால் அவன் படியை ஓன்று ஒழியாமல் அனுபவித்து ஹ்ருஷ்டராய் பேசினார் –
அவர்கள் இருவருடையவும் பிரசாதத்தாலே பகவத் பிரசாதம் அடியாக தமக்குப் பிறந்த பர பக்தி பரம பக்தி பர்யந்தமாக முற்றி
அத்தாலே கடலைக் கண்டவன் அதுக்குள் உண்டான முத்து மாணிக்காதிகளைத் தனித்தனி கண்டு உகக்குமா போலே
லஷ்மீ சங்க கௌஸ்துபாதிகளுக்கு இருப்பிடமாய் அவயவ ஸுந்தரியாதிகள் அலை எரிகிற பெரும் புறக் கடலான
எம்பெருமானை சாஷாத் கரித்து அனுபவிக்கிறார் பேயார்
உபய விபூதி உக்தன் என்றார் பொய்கையார் -அவனுக்கு வாசக சப்தம் நாராயண சப்தம் என்றார் ஸ்ரீ பூதத்தார்
-இவர் அத்தோடு ஸ்ரீ மச் சப்தத்தையும் கூட்டிக் கொள்ள வேணும் என்கிறார்
-(-மன்னிய பேர் இருள் மாண்டபின் கோவிலுள் மா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன் அன்றோ இவர் )

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ———-1-

————————–

மழிசைக் கிறைவன் இணை யடிப் போது அடங்கும் இதயத்து இராமானுசன் /

முதல் ஆழ்வார்கள் அனுபாவ்ய வஸ்துவை நிஷ்கரிஷிக்க-அதுக்கு களை பிடுங்குகிறார் -ஷேத்ரஞ்ஞர் பக்கலிலே ஈஸ்வரத்வ புத்தியைப் பண்ணி -அனர்த்தப் படுகிற சம்சாரிகளுக்கு ஈஸ்வரனுடைய பரத்வத்தை
உபபாதித்து அவர்களை அநீச்வரர் என்கிறார் –
சர்வேஸ்வரன் -லோகத்ருஷ்டியாலும் -வேதத்ருஷ்டியாலும் -பக்தி த்ருஷ்டியாலும்தானே காட்டவும் -மூன்று ஆழ்வார்களும் கண்டு அனுபவித்தார்கள் –
திரு மழிசைப் பிரான் திரு உள்ளமும் அப்படியே அனுபவித்து-க்ருபா விஷ்டராய் அசேஷ வேத ரஹச்யத்தை உபதேசித்து அருளுகிறார் –
சதுர முகாதி சப்த வாச்யருடைய ஷேத்ரஜ்ஞத்வ ஸ்ருஜ்யத் வங்களாலும்-அசேஷ சித் அசித் வஸ்து சரீரகனான எம்பெருமானுடைய
பரமாத்மத்வ ஸ்ரஷ்ட்ருத் வங்களாலும்-ஈஸ்வரன் என்று அப்ரதிஹதமாக வேதார்த்தைச் சொன்னேன்
இத்தைத் தப்ப விடாதே கொள்ளுங்கோள்-என்று பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் –

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–1-

————————

கொல்லி காவலன் சொல் பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே துதிக்கும் பரமன் /

ஸ்ரீ யபதியாய் -ஜ்ஞானானந்தைக ஸ்வரூபனாய்-சமஸ்த கல்யாண குணாத்மகனாய்-உபய விபூதி உக்தனாய் –சர்வ ஸ்மாத் பரனான சர்வேஸ்வரன் அடியாக
பெருமாள் பெற்றது -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் ஆகையாலே க்ரமத்தாலே காண்கிறோம் என்று ஆறி இருக்கலாவது தம் தலையால் வந்ததாகில் இ றே-
அவன் தானே காட்டக் காண்கிறவர் ஆகையாலே அப்போதே காண வேண்டும் -படி விடாய் பிறந்தது –
பரமபதத்திலும் அனுபவிப்பது குண அனுபவம் ஆகையாலே -அந்த சீலாதி குணங்கள் பூரணமான கோயிலிலே அனுபவிக்கப் பிரார்த்திக்கிறார்
இங்கே அனுபவிக்கக் குறை என்-பிரார்த்தனை என் என்னில் –
ஸ்வா தந்த்ர்யம் பிறப்பே உடையராகையாலே -மனுஷ்யர் நிரோதிப்பார் பலர் உண்டாகையாலே -இங்கு வந்து அனுபவிக்க மாட்டாதே
அடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -என்றும்
அந்தமில் பேரின்பத்து அடியரொடு இருந்தமை -என்றும் நம்மாழ்வார் பிரார்த்தித்துப் பெற்ற பேற்றை இங்கேயே அனுபவிக்க ஆசைப் படுகிறார் –

/முதல் ஆழ்வார்கள் -பரத்வத்தில் நோக்கு
/திரு மழிசை பிரான்-அந்தர்யாமியில் நோக்கு/ எல்லாம் கடந்தவன் உள்ளே இருக்கிறான்-கடவுள்
/நம் ஆழ்வார் பெரிய  ஆழ்வார் ஆண்டாள்-கண்ணன் இடத்திலே காதல்
/திரு பாண் ஆழ்வார் தொண்டர் அடி பொடி ஆழ்வார் வேர் பற்றான ஸ்ரீரங்கத்திலே  மண்டி/
திரு மங்கை ஆழ்வார் அர்ச்சையிலே நோக்கு /
குலேசேகரர் ராமன் அல்லால் தெய்வம் இல்லை/பாவோ நான்யத்ர கச்சதி – திருவடி-வீரத்தில் தோற்று
-குலேசேகரர் ஷத்ரிய ராஜ-ராமனால் ஈர்க்க பட்டார்/நித்யம் ராமாயண கதை கேட்டது
படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன்
கொல்லி காவலன் குலேசேகரர் /கர தூஷணர் கதை கேட்டும் சீதை பிராட்டி சிறை வைத்ததும் கேட்டு உணர்ச்சி வசப் பட்டார்/
பெருமாள்-ராமனின் சுக துக்கம் தனது என்று கொண்டவர் என்பதால்
-குலேசேகர பெருமாள் /நம் பெருமாள்-ராமன்-பெரிய பெருமாள்-கண்ணன்-/
நித்யம் ஸ்ரீ ரெங்க யாத்ரை பாரித்து -ரெங்க யாத்ரை தின தினே-ஊரும் நாடும் இதை பிதற்றும் படி ஆக்கி வைத்து இருந்தார் –
திக்கு நோக்கி நித்யம்  ஸ்ரீ ரெங்கம் கால் எடுத்து நடக்க வேண்டும்/ஹரி நாம சங்கீர்த்தனம்–இந்த ஹரி /இரண்டு எழுத்துகள் தான்  திரு மண தூண்கள் //
ஸ்ரீ வைஷ்ணவர்கள்கூட்டி  ஸ்ரீ ரெங்க யாத்ரை நிறுத்தி -அரண்மனை முழுவதும் ஸ்ரீ வைஷ்ணவர் கூட்டம்  ஆக
– மந்த்ரிகள்-குற்றம் -ஆரம் கெட–குட பாம்பில் கை இட்டவர்/பரன் அன்பர் கொள்ளார் என்று அவர்களுக்கே -பஷ பாதி
மந்த்ரிகள் மன்னிப்பு கேட்க்க/திட விரதன் பிள்ளையை ராஜ்யத்தில் வைத்து /

இன்னமுத மூட்டுகேன் இங்கே வா பைங்கிளியே
தென்னரங்கம் பாட வல்ல சீர்ப் பெருமாள் –பொன்னஞ்
சிலை சேர் நுதலியர் வேள் சேரலர் கோன் எங்கள்
குலசேகரன் என்றே கூறு -ஸ்ரீ உடையவர் அருளிச் செய்த தனியன் –

செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே!
நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேன –4-9-

முகுந்தமாலை அனுபவம்-

————————————-

மாறன் அடி பணிந்து உய்ந்தவன் –சடகோபனை சிந்தையுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை யுயிர்கள் எல்லாம் உய்தற்கு உதவும் இராமானுசன் –

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இந்நீநிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆராவமுதே

தென் குருகைப் பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த இராமானுசன்
பண் தரும் மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்

கண்ணன் கழலிணை /ஓழி வில் காலம் எல்லாம் / கழியும் கெடும் கண்டு கொண்மின் / பொலிக பொலிக பொலிக /இத்யாதி

———————————-

பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள் பேராத உள்ளத்து இராமானுசன் /

இன்னமும் மற்றைய ஆழ்வார்களைக் காட்டில் இவருக்கு நெடு வாசி உண்டு
அவர்கள் தம் தாமுடைய ஸ்மர்த்திகளை எம்பெருமானாலே பெற நினைத்து இருப்பார்கள்
இவர் தம்மை அழிய மாறி வரும் பகவத் ஸ்மர்த்தியையே தமக்கு புருஷார்த்தமாக
நினைத்து இருப்பர் -அவர்கள் ஈஸ்வரனை கடகாக பற்றி தம் தாமுடைய பய நிவ்ர்த்தியை பண்ணா நிற்பர்கள்
இவர் தாம் கடகராய் நின்று -அவனுக்கு என் வருகிறதோ -என்று பயப்பட்டு அந்த
பய நிவ்ர்த்தியில் யத்னம் பண்ணா நிற்பர்-
இப்படி மற்றை ஆழ்வார்களைக் காட்டில் இவருக்கு உண்டான நெடு வாசி போலே
மற்றப் பிரபந்தங்களில் காட்டில் திருப் பல்லாண்டுக்கு நெடு வாசி உண்டு –

திருப்பல்லாண்டு / திருமகள் போல் வளர்த்தேன் –இத்யாதி

———————————

அரங்கர் மௌலி சொல்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல் /

தேகாத்ம அபிமானிகளுக்கும் ஆத்ம ஸ்வரூபம் கை வந்து இருக்கும் ரிஷிகளுக்கும்
பர்வத பரமாணு வோட்டை வாசி போரும் –
ஆழ்வார்களுக்கும் பெரியாழ்வாருக்கும் அத்தனை வாசி போரும் –
பெரியாழ்வாருக்கும் ஆண்டாளுக்கும் அத்தனை வாசி போரும்
அவர்களில் இவளுக்கு வாசி என் என்னில் அநாதி மாயயா- சம்சாரத்தில் உறங்கு கிறவர்களை எழுப்பி
எம்பெருமான் தானே தன்னைக் காட்ட கண்டார்கள் ஆழ்வார்கள் –
இவள் தானே சென்று எம்பெருமானை எழுப்பி தன் குறையை அறிவித்தாள்-
ஆகையால் அவர்களிலும் இவள் விலக்ஷணை-பால்யாத் என்றால் போலே -தொடக்கமே பிடித்து பகவத் குணங்களில் அவஹாகித்துப் போகும்
புருஷன் புருஷனைக் கண்டு ஸ்நேஹிப்பதில் காட்டில்-ஸ்திரீ புருஷனைக் கண்டு ஸ்நேஹிக்கை பள்ளமடை –
ஆழ்வார்களைக் காட்டிலும் எம்பெருமான் பக்கல் பரம பக்தி உடையாளான ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவைக்கு கருத்து –
மார்கழி நீராட -நோன்பு வியாஜ்யமாக கொண்டு -நோன்பு என்ற ஒரு வியாஜ்யத்தாலே எம்பெருமான் பக்கலிலே சென்று
உனக்கு சேஷமாய் இருக்கிற ஆத்மா அனர்த்தப் படாதபடி பண்ணி
இதுக்கு ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யங்களையும் கொடுத்து
அது தானும் யவதாத்மபாவியாம் படி பண்ணி அருள வேணும் -என்று அபேஷிக்கிறது–

தனியன் -சில திருப்பாவை பாசுரங்கள் /திருப்பாவை ஜீயர் -இதனால் / நாச்சியார் திருமொழி மூலம் கோயில் அண்ணன் -இரண்டாலும் த்வயார்த்தம்
நாறு நாறும் பொழில் -பாசுரம் -ஐ திக்யம் –

————————-

சீர் அரங்கத்து ஐயன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா மெய்யன் /
பச்சை மா மலை போல் மேனி -இத்யாதி

——————————

பாண் பெருமாள் சரணாம் பதுமத் தாரியல் சென்னி இராமானுசன் /
ஆலமா மரத்தின் / கொண்டல் வண்ணனை -இத்யாதி –

———————————-

/ குறையல் பிரன் அடிக் கீழ் விள்ளாத அன்பன் /தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில் இனியானை /
ஆழ்வார் திருமங்கை ஆழ்வார் ஆகிறார் –
சர்வேஸ்வரன் இவருக்கு இப்படி உண்டான விஷயாந்தர பிரசித்தியைக் கண்டு
இவரை இதில் நின்றும் மீட்கும் விரகு தேடித் பார்த்து –
விஷயாந்தர பிரவணராய் போந்த இவரை
சாஸ்த்ரத்தைக்காட்டி மீட்க ஒண்ணாது
நம் அழகைக் காட்டி மீட்க வேணும் என்று பார்த்து –
இவருக்கு விஷயங்களில் உண்டான ரசிகத்வத்தையே பற்றாசாகக் கொண்டு
தன் அழகைக் காட்டிக் கொடுக்க கண்டு –
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது –
அடியேன் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் -என்று
தமக்கு ஈஸ்வர விஷயத்தில் உண்டான போக்யதை
தத் விஷய வை லஷ்ண்ய பிரயுக்தமோ-என்னும்படி இவ் விஷயத்தில் அவஹாஹித்தார் -ஆழ்வார் தம் பக்கலில் ஆழம் கால் படக் கண்ட ஈஸ்வரன் –
இவருக்கு நம் பக்கல் உண்டான ப்ரேமம் விஷய சாமான்யத்தில் போல் அன்றியே
சம்பந்த ஜ்ஞான பூர்வகமாக வேணும் -என்று
கிழிச் சீரையோடே தனத்தைக் கொடுப்பாரைப் போலே –
சர்வார்த்த பிரகாசமான திரு மந்தரத்தையும் –
சௌசீல்யாதி குணாதிக்யத்தையும்
திருமந்த்ரார்த்ததுக்கு எல்லை நிலமான திருப்பதிகளையும் காட்டிக் கொடுக்கக் கண்டு –
வாடினேன் வாடி -தொடங்கி
ஒரு நல் சுற்றம் -அளவும்
உகந்து அருளின இடமே
ஆஸ்ரய ணீயமும் -சாதனமும் -போக்யமும் –
என்று அனுபவித்தார் –
சுகாதிகளும் முதல் ஆழ்வார்களும் பரத்வத்தில் ஊன்றி இருப்பார்கள் –
சனகாதிகளும் திரு மழிசைப் பிரானும் அந்தர்யாமித்வத்தில் ஊன்றி இருப்பார்கள் –
வால்மிகீகாதிகளும் குலசேகரப் பெருமாளும் ராமாவதாரத்தில் ஊன்றி இருப்பார்கள் –
பராசர பாராசாராதிகளும் -நம் ஆழ்வாரும் பெரியாழ்வாரும் ஆண்டாளும் கிருஷ்ணாவதாரத்தில் ஊன்றி இருப்பார்கள் –
நாரதாதிகளும் ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் திருப் பாண் ஆழ்வாரும் கோயிலிலே ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ சௌநக பகவானும் இவரும் அர்ச்சாவதாரத்திலே ஊன்றி இருப்பார்கள் –

அல்லாத ஆழ்வார்களைப் போலேயும் ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளைப் போலேயும் அன்றிக்கே
சம்ச்லேஷா சஹமான சௌகுமார்யத்தை உடையராய் இருப்பார் –
அதாவது –
விச்லேஷித்த போது -உம் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை -என்று
மலையாளர் ஊட்டுப் போலே அனுபவிக்கவும் வல்லராய் –
பிரிந்தாலும் சில நாள் தரிக்கவும் வல்லர்களான ஆழ்வார்களோடும்
பத்து மாசம் பிரிந்து இருந்த ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளோடும்
ஷண காலம் விஸ்லேஷ அசஹனான என்னை கூட நினைக்கலாமோ -என்னும்படி இருக்கையும் –
சம்ச்லேஷ தசையிலே
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -என்று
சம்ச்லேஷ ரச அனுபவத்தால் கண்ணாம் சுழலை இட்டு முன்னடி தோற்றாதே
அசாதாராண லஷணத்தை காணச் செய்தேயும் அறுதி இட மாட்டாது இருக்கையும் –

ஆக
எம்பெருமான் இவருக்கு நிர்ஹேதுகமாக சித அசித் ஈஸ்வர தத்வ த்ரயத்தையும் காட்டிக் கொடுக்க கண்டு –
அனுபவத்து -அதனில் பெரிய என் அவா -என்று
தம்முடைய அபிநிவேசத்துக்கு இறை போராமையாலே
அலமந்து கூப்பிட்டு பின்பு தாம்-அவா அற்று வீடு பெற்று த்ருப்தரான தசையைப் பேசித் தலைக் கட்டுகிறார் –

குலம் தரும் செல்வம் தரும் இத்யாதி

———————

சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால் வாரிப் பருகும் இராமானுசன்
எதிகட்கு இறைவன் யமுனைத்துறைவன் இணையடியாம் கதி பெற்றுடைய இராமானுசன்
வாணன் பிழை பொறுத்த தீர்த்தனை ஏத்தும் இராமானுசன்
வைப்பாய வான் பொருள் என்று நல்லன்பர் மனத்தகத்தே எப்போதும் வைக்கும் இராமானுசன்
காரேய் கருணை இராமானுசா

அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் கை யாழி என்னும் படையோடு நாந்தகமும் படர் தண்டும் ஒண் சாரங்க வில்லும்
புடையார் புரி சங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு என்று இடையே இராமானுச முனியாயின இந்நிலத்தே –33-

பொன்னரங்கம் என்னில் மயலே பெருகும் இராமானுசன்

படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் –

காண் தகு தோள் அண்ணல் தென் அத்தியூரர் கழல் இணைக் கீழ்ப் பூண்ட அன்பாளன் இராமானுசன்
செறு கலியால் வருந்திய ஞாலத்தை வன்மையினால் வந்து எடுத்து அளித்த யரும் தவன் எங்கள் இராமானுசன்-

திருச்சின்ன மாலை –வந்தார் –தாமே பாசுரங்கள் அனுசந்தேயம்  

——————–

சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லையில்லா அற நெறி யாவும் தெரிந்தவன் எண்ணரும் சீர் நல்லார் பரவும் இராமானுசன்
இருவினை தீர்த்து அரங்கன் செய்ய தாளிணையோடு ஆர்த்தான் –எம்மிராமாநுசன் -என்னை ஆள வந்த கற்பகம்
குணம் திகழ் கொண்டல் இராமானுசன் எம் குலக் கொழுந்தே

கீதையின் செம்மைப் பொருள் தெரியப் பாரினில் சொன்ன இராமானுசன்
கலி மிக்க செந்நெல் கழனிக் குறையால் கலைப் பெருமாள் ஒலி மிக்க பாடலை யுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலி மிக்க சீயம் இராமானுசன்
விண்ணின் தலை நின்று வீடு அளிப்பான் எம்மிராமாநுசன் மண்ணின் தலத்துதித்து உமரை நாளும் வளர்த்தனனே
நீணிலத்தே பொற் கற்பகம் எம்மிராமாநுசன் –

————————-

திருவடி விடாத திரு வருளிச் செயல்கள் -திருவடி நிலைதானே நம்  நம்மாழ்வார் திருவடி நிலை தானே நம் ராமானுஜர் –
பொய்கையார் –செய்ய சுடராழி யான் அடிக்கே -என்று தொடங்கி-ஓரடியும் சாடுதைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈரடியும் காணலாம் என்னெஞ்சே ஓரடியில் தாயவனைக் கேசவனை -என்று திருவடி மயமாகவே பேசித் தலைக்கு காட்டினார்-பூதத்தார் –அறை கழல சேவடியான் செங்கண் நெடியோன் -என்று நிகமிக்கிறார்
பேயார் -இன்றே கழல் கண்டேன் என்று தொடங்கி –சக்கரத்தான் தாள் முதலே நங்கட்க்குச் சார்வு -என்று தலைக்கட்டுகிறார்
திருமழிசைப்பிரான் -உன்னபாதம் அன்ன நின்ற ஒண் சுடர்க் கொழு மலர் –என்று திருச்சந்த விருத்தத்தில் நிகமிக்கிறார்-திருவிருத்தம் –தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய –என்று தொடங்கி –அடிக் கண்ணி சூடிய மாறன் -என்று நிகமனம் -திருவாசிரியம் தொடக்கம் -மூ வுலகு அளந்த  சேவடியேயோ  / பெரிய திருவந்தாதி நிகமனத்தில் மொய் கழலே ஏத்த முயல்/ திருவாய்மொழி தொடக்கம் -துயரறு சுடர் அடி தொழுது எழு என் மனனே –
பெருமாள் திருமொழி –திரைக்கையால் அடி வருடப் பள்ளி கொள்ளும் -என்று தொடங்கி –நலம் திகழ் நாரணன் அடிக் கீழ் நண்ணுவாரே-என்று நிகமனம்
பெரியாழ்வாரும் –உன் சேவடி செவ்வி திருக் காப்பு -தொடங்கி -திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் –என்று நிகமனம் -திருநாமத்தில் திருவடி அடி பட்டு அன்றோ கிடக்கிறது தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் இடம்
திருப் பாண் ஆழ்வார் -திருக்கமல பாதம் வந்து என் கண்ணின்னுள்ளன ஒக்கின்றவே —
திருமங்கை ஆழ்வார் வயலாலி மணவாளன் திருவடியில் வாயை வைத்தே பிரபந்தம் தொடங்கி நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே -என்று நிகமிக்கிறார்  -மதுரகவியாரும் -முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே / ஆண்டாளும் -உன் பொற்றாமரை அடியே பிரியாது என்றும் இருப்பரே-அமுதனாரும் -மாறன் அடி பணிந்து உயந்த இராமானுசன் அடிப்  பூ மன்னவே-என்பாரே -உலகம் உண்ட பெறுவாயா -6-10–திருவாய் மொழி பாசுரம் தோறும் திருவடியும் -அடியேன் -பத பிரயோகமும் உண்டே —அரு வினையேன் என்று -6–10–4-பாசுரம் மட்டும் –

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: