அருளிச் செயல்களில் -எட்டாம் பாகம் -ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் -மூன்றாம் -இறுதி – பாகம் –ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் –

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –ஸ்ரீ மது ஸூதன வைபவம் –ஸ்ரீ கிருஷ்ண சம்போதனம் –ஸ்ரீ கிருஷ்ண சைஸவம் –துரியோதன க்ருத்யம் –துர்கா வைபவம்
ஸ்ரீ கிருஷ்ண லீலைகள் –கோபியர் உடன் லீலைகள் –வேணு கானம் –பரீக்ஷித் ரக்ஷணம் –ஸ்ரீ கிருஷ்ணன் -பூதனா வதம் –சகட பங்கம்

-நவநீத சாதுர்யம் -உலூகல பந்தனம் -வையம் ஏழும் காட்டியது –மருதமரம் முறித்தல் –
ஸ்ரீ கிருஷ்ண பால்ய லீலைகள் -கோ பாலனம் –குருந்தம் ஒசித்தது–வத்ஸா கபித்த நியாசம் –பகாஸூரா வதம் –தேனுகாஸூர வதம்
நரகாசுர வதம் –காளீய தமனம் –பிரலம்பாஸூர வதம் –கோபிகா வஸ்திர அபஹரணம் -பக்த விலோசனம் -கோவர்த்தன உத்தரணம்
ராச லீலை –ஜலக்ரீடை –குடக்கூத்து –அரிஷ்டாஸூர நிராசம் –கேசி வதம் –கூனி கூன் நிமிர்த்தது –
-குவலயா பீடம் நிராசம் –மல்ல நிராசம் -கம்ச வதம் -தனுர் பங்கம்
ஸ்ரீ கிருஷ்ண உபநயனம் -அத்யயனம் -சாந்தீபன புத்ராநயனம் –வைதிக புத்ராநயனம் –கால நேமி வதம் –
நாரதர் கண்ட காட்சி –அர்ஜுனன் கண்ட காட்சி -சீமாலிகன் வதம் -திரௌபதி குழல் முடித்தல் -பாண்டவர்கள் ராஜ்ய லாபம் –

ஸ்ரீ ருக்மிணி விவாஹம் –ருக்மி பங்கம் –சிசுபால பங்கம் -தந்த வக்த்ர நிராசம் –காண்டாவன தஹநம் -நப்பின்னை திருமணம்
-பாரிஜாத அபஹரணம் -தேவர்கள் ஸூரிகள் இந்த்ரிய வஸ்யர் -பாண விஜயம்
ஸ்கந்த பங்கம் -பவுண்டரக பங்கம் -காசி ராஜ மாலி ஸூ மாலி பங்கம் –ஆழியால் ஆழி மறைத்தல் -ஜெயத்ர வதம்
ஸ்ரீ கிருஷ்ணன் தூது -மது கைடப நிரஸம் – ஸ்ரீ பார்த்த சாரதி -பாரதப் போர் –குதிரை விடாய் தீர்த்தல் –
அசுரர் வதம் -தேவாசுர யுத்தம் -பலராமர் அவதாரம் -கல்கி அவதாரம் –
————————————–
ஸ்ரீ ருக்மிணீ தேவி பரிணயம் / ருக்மீ– சிசுபாலன் பங்கம் –
கண்ணாலம் கோடித்துக் கன்னி தன்னைக் கைப் பிடிப்பான் திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசழிந்து அண்ணாந்து இருக்கவே
ஆங்கு அவளைக் கைப்பிடித்த பெண்ணாளன் பேணுமூர் –பேரும் அரங்கமே –நாச்சியார் –11–9-
பேசி ஏசினார் உய்ந்து போனார் பேசினேன் ஏச மாட்டேன் –திருக் குறும் தாண் —17-
அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நான்கை அணி நெடும் தோள் புணர்ந்தான் –திருவாய் –7–10–6-
அன்று இன்னாதான செய் சிசுபாலன் –நாச்சியார் –4–7-
வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும்–திருச்சந்த -11-
பல பல நாழம் சொல்லிப் பழித்த சிசுபாலன் தன்னை அலவலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை –பெரியாழ்வார் –4–3–5-
வாரேறு கொங்கை யுருப்பிணியை வலியப் பிடித்துக் கொண்டு தேர் ஏற்றிச் சேனை நடுவு போர் செய்யச் சிக்கென கண்டார் —4–1–5-
உருப்பிணி நங்கையைத் தேர் ஏற்றுக் கொண்டு விருப்புற்று அங்கே ஏக விரைந்து எதிர் வந்து செருக்குற்றான்
வீரம் சிதையத் தலையைச் சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற–3- 9–3-
உருப்பிணி நங்கை தன்னை மீட்பான் தொடர்ந்து ஓடிச் சென்ற உருப்பனை ஒட்டிக் கொண்டு உறைத்திட்ட யுறைப்பன் மலை –4–3–1-
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும் சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை யறிவாரை யறிந்துமே –திருவாய் –7-5–3-
————————–
தந்தவக்ரன் -முரன் -வதம்
பொங்கரவ வக்கரனைக் கொன்றான் –பேயார் –21-
ஆழி வலவன் முரனாள் வலம் கழிந்த –78-
கால நேமி வக்கரன் கரன் முரன் சிரமவை காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே –திருச்சந்த –59-
கடும் வக்கரன் கரன் முரன் சிரமவை இடந்து கூறு செய்த பல் படைத் தடக்கை மாயனே —104-
காய் சினத்த காசி மன்னன் வக்கரன் –107-
வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று —கலியன் –5–9–5-
—————————-
காண்டவ வனம் எரித்தல்
காண்டவ வானம் என்பதோர் காடு அமரர்க்கு அரையனது கண்டவன் நிற்க
-மூனே மூண்டார் அழல் உண்ண முனிந்ததுவும் –கலியன் –2–4–2-
காண்டவத்தைக் கனல் எரி வாய்ப் பெய்வித்தானை —2–5–2-
கட்டேறு நீள் சோலைக் காண்டவத்தை தீ மூட்டி வீட்டானை —6–8–7-
—————————————————-
ஏழ் விடை செற்றது–நப்பின்னை திருமணம்
மனமருவ மால் விடை ஏழ் செற்று –பொய்கையார் –62-
ஆயர் நிரை விடை ஏழ் செற்றவாறு என்னே -83-
ஏறின பெருத்த எருத்தம் கோடு ஓசிய பெண் நசையின் பின் போய் எருத்து இறுத்த நல்லாயர் ஏறு –பூதத்தார் –62-
ஏறு ஏழும் வென்று அடர்த்த வெந்தை -63-
மால் விடை ஏழ் செற்றானை –பேயார் –25-
முற்றல் முரி ஏற்றின் முன் நின்று மொய்ம்பு ஒழித்தாய் —49-
பின்னைக்காய் ஏற்று உயிரை அட்டான் எழில் —85-
வித்தும் இட வேண்டும் கொலோ விடை யடர்த்த பத்தி யுழவன் —நான்முகன் –23-
வடிப் பவள வாயப் பின்னை தோளிக்கா வல் ஏற்று இறுத்துக் கோபின்னும் ஆனான் குறிப்பு -33-
இடைப்பின்னை கேள்வன் என்பர் –திருச்சந்த –13-
நன்னிறத்தோர் இன்சொல் ஏழை பின்னை கேள்வ மன்னு சீர் –32-
மையரிக் கண் மாதரார் திறத்து முன் ஆனை அன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே –40-
ஆயனாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய் –41-
ஏறு சென்று அடர்த்த யீச பேசு கூசமின்றியே–42-
பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்தது அன்றியும் -55-
விடைக் குலங்கள் ஏழு அடர்த்து வென்றி வேல் கண் மாதரார் -92-
பின்னை கேள்வ —பூட்டி வைத்த வென்னை நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே -99-
ஏறு அடர்த்ததும் –பெருமாள் –2–3-
பொய் சிலைக் குரல் ஏற்று எருத்தம் இறுத்த —2–5-
ஆன் ஏறு ஏழு வென்றான் –4–1-
வேழமும் ஏழு விடையும் விரவிய வேலை தனுள் வென்று வருமவனே —பெரியாழ்வார் –1–5–3-
நப்பின்னை தன் திறமா நல் விடை ஏழவிய நல்ல திறலுடைய நாதனும் அவனே —1–5–7-
எருதுகளோடு பொருது ஏதுமுலோபாய் காண் நம்பி –2- -7-6-
பேடை மயில் சாயல் பின்னை மணாளா —3–3–3-
ஆயர் மடமகள் பின்னைக்காகி அடல் விடை ஏழினையும் வீயப் பொருது வியர்த்து நின்றானை –4–1–4-
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய் –திருப்பாவை –18-
கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா -19-
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்—20-
எருதும் வீழ –நாச்சியார் –4–7-
அடலாயர் தம் கொம்பினுக்கு இமில் ஏற்று வன்
அமைப்பொலிந்த மென் தோளி காரணமா வெங்கோட்டு ஏறு ஏழுடனே கொன்றானையே மனத்துக்கு கொண்டு –பெரிய திருவந்தாதி -48-
அறு பத முரலும் கூந்தல் காரணம் ஏழ் விடை யடங்கச் செற்றனை –திரு ஏழு கூற்று இருக்கை-
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லான் ஆயர் தலைவனாய் இளவேறு ஏழும் தழுவிவ வெந்தாய்–திருவாய் –1- 5–1-
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே—1–7–8-
கொண்டான் ஏழ் விடை —1–8–7-
காம்பணைத் தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழு செற்றதுவும் –2–5–7-
ஏறு ஏழும் வென்று —-2–9–10-
வம்பவிழ் கோதை பொருட்டா மால் விடை ஏழும் அடர்த்த செம் பவளத் திரள் வாயன் சிரீதரன் தொல் புகழ் பாடி -3–5-2-
வேயின் மலி புரை தோளி பின்னைக்கு மணாளனை ஆய பெரும் புகழ் எல்லையிலாதன பாடிப் போய் காயம் கழித்து
அவன் தாளிணைக் கீழ்ப் புகும் காதலன் மாய மனிசரை என் சொல்ல வல்லேன் என் வாய் கொண்டே –3-9–8-
தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழு தழிஇக் கோளியார்–4–2–5-
கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்—-4- 3–1-
நெடும் பணைத் தோள் மடப்பின்னை –அணைவான் பொரு விடை ஏழு அடர்த்து உகந்த —-4-8-4-
இன வேறுகள் செற்றேனும் யானே என்னும் –5–6–6-
குல வாயர் கொழுந்துக்கும் கேள்வன் –5–6–11-
எருது ஏழு அடர்த்த –என் கள்ள மாயவனே கரு மாணிக்கச் சுடரே —5–7–9-
வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் —5–10–2-
கெண்டை ஒண் கண் வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் —6–4–2-
இமில் ஏறுகள் செற்றதுவும் —6–4–6-
அன்றுரு வேழும் தழுவி நீ கொண்ட ஆய் மகள் அன்பனே —7–2–9-
பின்னை தோள் மணந்த பேராயா—8–1–7-
வடிவேல் தடங்கண் மடப்பின்னை மணாளன் —9–8–2-
வாளேய் தடங்கண் மடப்பின்னை மணாளா -9–8–4-
மானேய் நோக்கி மடப்பின்னை தன் கேள்வனை —9–10–4-
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன் —10–4–3-
பின்னை மணாளன் —பெரிய திருமடல்
அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை –திரு நெடும் தாண் -29-
துடி கொள் நுண்ணிடைச் சுரி குழல் துளங்கு எயிற்று இளம் கொடி திறத்து ஆயர்
இடி கொள் வெங்குரல் இனவிடை அடர்த்தவன் –கலியன் –1- 2–3-
தேரணங்கு அல்குல் செழும் கயல் கண்ணி திறத்து ஒரு மறத் தொழில் புரிந்து
பாரணங்கு இமில் ஏறு ஏழும் முன்னடர்த்த
மானேய் மட நோக்கி திறத்து எதிர் வந்த ஆனேழ் விடை செற்ற அணி வரைத் தோளா–1–10–7-
பந்தணைந்த மேல் விரலாள் பாவை தன் காரணத்தால் வெந்திறல் ஏழும் வென்ற வேந்தன் –2–2–4-
தன் துணை யாயர் பாவை நப்பின்னை தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம் வன் துணை —2–3–5-
பிறையுடை வாணுதல் பின்னை திறத்து முன்னொரு கால் செரு வில்லுருமின்–மறையுடைமால் விடை ஏழு அடர்த்தாற்கு இடம் –2–9–9-
மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து –3–2–7-
உருவக் கரும் குழல் ஆய்ச்சி இனமால் விடை செற்று —3-3–5-
பஞ்சிய மெல்லடிப் பின்னை திறத்து முன்னாள் பாய் விடைகள் ஏழு அடர்த்து —3–4–4-
பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம் பேணிளளால்—3–7–7-
விடையோட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா –3–8–9-
சென்று சின விடை ஏழும் பட அடர்த்துப் பின்னை
வாராரும் முலை மடவாள் பின்னைக்காகி வளை மருப்பில் கடும் சினத்து வன் தாளார்ந்த
காரார் திண் விடை யடர்த்து வதுவை யாண்ட –கண்ணன் —4- 4-4-
வன் தாள் சேத்தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித் தோள் புணர்ந்த வெந்தை —-4–5–3-
எருது அடர்த்த வெந்தை –4–5–4-
மின்னின் அன்ன நுண் மருங்குல் வேயேய் தடம் தோள் மெல்லியற்கா –மன்னு சினத்த மழ விடைகள் ஏழு அன்று அடர்த்த மால் –5–1–6-
செறும் திண் திமில் ஏறுடைய பின்னை பெறும் தண் கோலம் பெற்றாரூர் –5–2–2-
ஆய்ப்பாடி தன்னுள் கொம்பனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான் –5–9–8-
விடை ஏழ் வென்று மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பனாய் -6–5–5-
முருக்கிலங்கு கணித்துவர் வாய்ப் பின்னை கேள்வன் –6–6–8-
பின்னைக்கு மணாளன் —6–6–9-
மருவாத விடை தான் ஏழும் வென்றான் —-6–10–5-
இறித்திட்டு ஆன விடை ஏழும் முன் வென்றாய் –7–7-7-
மழ விடை யடர்த்து —-7–8–8-
பைங்கண் மால் விடை அடர்த்து —-8–3–3-
பின்னை மணாளனாகி —8–6–6-
மாலார் விடையும் —-மடிவித்து –8-6–8 –
கொடியேரிடையாள் பொருட்டாக வன் தாள் விடை ஏழு அன்று அடர்த்த —8–6–9-
வியமுடை விடையினம் உடைதர மட மகள் குயமிடை தடவரை அகலமதுடையவர் –கயமிடை கணபுரம் அடிகள் தம் இடமே —-8–7–1-
எருதிற இகல் செய்து துணை மலி முலையவள் மானமிகு கலவியுள்—-8–7–2-
விடை ஏழு அன்று அடர்த்து வெகுண்டு —-8–9–3-
ஆனை வாட்டி யருளும் —10–1–6-
மால் விடை ஏழும் அடர்த்து —10–9–2-
பூங்குருந்து ஓசித்து ஆனை காய்ந்து —11–2–2-
பொன்னங்கலை யல்குல் யன்ன மென்னடைப் பூங்குழல் பின்னை மணாளர் —-11–2–5-
வென்றி விடை யுடன் ஏழு அடர்த்த வடிகாலை கலிகன்றி சொல் —-11–2–10-
தட மலர்க் கண்ணிக்காய் ஆன் விடை ஏழு அன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லாதார் மானிடவர் அல்லர் —11–7–9-
———————————-
பாரிஜாத அபஹரணம் –தேவர்கள் இந்திரிய வஸ்யர்கள்
கற்பகக் காவு கருதிய காதலிக்கு இப்பொழுது ஈவன் என்று
இந்திரன் காவினில் நிற்பன செய்து நிலாத்திகழ் உய்த்தவன் –பெரியாழ்வார் –1- -9–9-
என்னதான் தேவிக்கு அன்று இன்பப்பூ வீயாதாள் தன்னாதன் காணவே தண் பூ மரத்தினை
வன்னாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட என்னதான் வன்மையைப் பாடிப்பற—3- -9–1-
விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை –திருவாய் –7–1–6-
பட்டரவேரகலல்குல் பவளச் செவ்வாய் பணை நெடும் தோள் பிணை நெடுங்கண் பாலாம் இன்சொல் மட்டவிழும் குழலிக்கா
வானோர் காவில் மரம் கொணர்ந்தான் அடி அணைவீர் –கலியன் –3–4–8-
ஏவிளம் கன்னிக்காகி இமையவர் கோனைச் செற்று காவளம் கடிது இறுத்துக் கற்பம் கொண்டு போந்தாய் –4–6–8-
மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண் துவரை நட்டானை நாடி –6–8–7-
——————————-
பாணாசுர பங்கம்
நின்று எதிராய–வாணன் தோள் ஒன்றிய யீரைஞ்சூருடன் துணிய —பேயார் –80-
மகனாம் அவன் மகன் தன் காதல் மகனைச் சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே நிறை செய்து என்னெஞ்சே நினை —92-
மோடியோடு இலச்சையாய சாபம் எய்தி முக்கணான் கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து ஓடி
வாணன் ஆயிரம் கரம் கழித்த வாதிமால் –திருச்சந்த –53-
குந்தமோடு வந்த –வாணன் ஈரைஞ்சூறு தோள்களைத் துணித்த நாள் —70-
வண்டுலாவு கோதை மாதர் இந்த வாணன் ஈரைஞ்சூறு தோள்களைத் துணித்த நாள் —71-
மாயப் பொரு படை வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி பாயச் சுழற்றிய ஆழி வல்லான் –திருப்பல்லாண்டு -7-
மா வலி தன்னுடைய மகன் வாணன் மகள் இருந்த காவலைக் கட்டழித்த தனிக் காளை கருதும் மலை —பெரியாழ்வார் —4–2–4-
சென்று அங்கு வாணனை யாயிரம் தோளும் திருச்சக்கரம் அதனால் தென்றித் திசை திசை வீழச் செற்றாய் –5–3–9-
வாணன் திண் தோள் துணித்த வலியும் பெருமையும் யான் சொல்லும் நீர்த்தல்ல —திருச்சந்த –78-
விறல் வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் –திருவாய் –2–4–2-
வாணனை உள் வன்மை தீர ஓராயிரம் தோள் துணித்த புள் வல்லாய் —3–8–9-
மேகலையால் குறைவில்லா மெலிவுற்ற வகலல்குல் போகமகள் புகழ்த் தந்தை விறல் வாணன் புயம் துணித்து –4–8–9-
நிறை பெரும் போர்கள் செய்து வாணன் ஆயிரம் தோள் துணித்ததும் —6–4–8-
அப்பன் நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட வன்றே –7–4–8-
வாணபுரம் புக்கு முக்கட் பிரானைத் தொலைய வெம்போர்கள் செய்து வாணனை ஆயிரம் தோள் துணித்தான்—7–10–7-
போராளன் ஆயிரம் தோள் வாணன் மாளப் பொரு கடலை அரண் கடந்து புக்கு மிக்க பாராளன் –திரு நெடும் தாண் –20-
நெய்யணைந்த திகிரியினால் வாணன் திண் தோள் நேர்ந்தவன் –கலியன் –3–4–3-
வாணனை ஆயிரம் தோள்களும் துணித்தவன் —4–2–5-
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை—4- -3–8-
சடையானோடே வடல் வாணன் தடம் தோள் துணித்த தலைவனிடம் —5–1–7-
வள்ளி கொழுநன் முதலாய மக்களோடு முக்கணான் வெள்கி யோடே விறல் வாணன் வியன் தோள் வனத்தைத் துணித்து உகந்தான் —6–7–6-
விடையானோடே வன்று விறல் ஆழி விசைத்தானை —7–6–3-
பெரும் தோள் வாணர்க்கு அருள் புரிந்து —8–6–6-
—————————————-
ஸ்கந்த பங்கம்
வெற்புடைய நெடும் கடலுள் தனி வேல் உய்த்த வேள் முதலா வென்றானூர் –திரு நெடும் தாண் -7-
————————–
பவ்வ்ண்டரக வாஸூதேவ -காசி ராஜ –மாலி -சுமாலி -பங்கம்
காய் சினத்த காசி மன்னன் வக்கரன் பவுண்டிரன் மா சினத்த மாலி மா சுமாலி கேசி தேனுகன் நாசமுற்று வீழ –திருச்சந்த –107-
புகாராருருவாகி முனிந்தவனைப் புகழ் வீட முனிந்து உயிருண்டு அசுரர் நகராயின பாழ் பட நாமம் எறிந்து –கலியன் –2–4–7-
———————————–
ஆழி கொண்டு இரவி மறைத்தது
வானத்து இயங்கும் எரி கதிரோன் தன்னை முயங்க மருள் தேராழியால் மறைத்தது என் நீ திருமாலே –பொய்கையார் –8-
பல மன்னர் போர் மாள வெங்கதிரோன் மாயப் பொழில் மறையத் தேராழியால் மறைத்தாரால் –நான்முகன் –16-
நாழிகை கூறிட்டுக் காத்து நின்ற அசுரர்கள் தம் முகப்பே நாழிகை போகப் படை பொருதவன் தேவகி தன் சிறுவன் ஆழி கொண்டு
அன்று இரவி மறைப்பச் சயத்திரன் தலையைப் பாழில் உருளப் படை பொருதவன் பக்கமே கண்டார் –பெரியாழ்வார் —4–1–8-
திண் சக்கர நிழறு தொல் படையாய் –திருவாய் —6–2–5-
சுடர் ஆழியினைப் பகலோன் மறையப் பணி கொண்டு —கலியன் –2–4–3-
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப் பகலவன் ஒளி கெடப் பகலே ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் —கலியன் —5- -7–8-
விசயற்காய் விறல் வியூகம் வில்லச் சிந்துக் கோன் வீழ ஊர்ந்த விமலனூர் —6–5–8-
பகல் கரந்த சுடர் ஆழிப் படையான் —6–9–5-
விலங்கல் உறப் படையால் ஆழி தட்ட —8–9–3-
——————-
ஸ்ரீ கிருஷ்ணன் தூது
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து –பெரியாழ்வார் –1–8–3-
பொய்ச் சூதில் தோற்ற பொறை யுடை மன்னவர்க்காய் –புத்தூர் பெறாத வன்று பாரதம் கை செய்த அத்தூதன் —2–1–1-
துரியோதனன் பக்கல் சென்று அங்கு பாரதம் கை எறிந்தான் –2–6–4-
சீரொன்று தூதாய்த் துரியோதனன் பக்கல் —2–8–5-
பஞ்சவர் தூதனாய் பாரதம் கை செய்து –3–9–5-
தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் –5–3–4-
மன்னர் பெரும் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய் சென்றதுவும் –பெரிய திருமடல்
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு –திருவாய் –6–6–4-
அவனே பின்னோர் தூது ஆதி மன்னார்க்காகிப் பெரு நிலத்தோர் இன்னார் தூதன் என நின்றான் –கலியன் —2–2–3-
பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்று இயங்கும் என் துணை –2–3–5-
தூதில் சென்று அப் பொய்யறை வாய்ப் புகப் பெய்த மல்லர் மங்கக் காய்ந்தானை –கலியன் –2- 5—5-
பாரேறு பெரும் பாரம் தீரப் பண்டு பாரதத்துத் தூதி யங்கி—2–10–8-
மன்னர் தூது வனாயவனூர் சொல்வீர் —3–7–4-
மூத்தவர்க்கு அரசு வேண்டி முன்பு தூது எழுந்து அருளி –4–6–7-
தூது வேந்தர்க்காய —5–2–1-
மன்னார்க்காய் முன்னம் சென்ற தூதாளன் —5–5–6-
கோதில் செங்கோல் குடை மன்னரிடை நடந்த தூதா —6–2–9-
சென்றான் தூது பஞ்சவர்க்காய —8–6–9-
அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதேயிட அதற்குப் பெரிய மா மேனி அண்டமூடுருவப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன் –9–1–8-
துன்னு மா மணி முடிப் பஞ்சவர்க்காகி முன் தூது சென்ற —9–7–2-
அன்று பாரதத்து ஐவர் தூதனாய்ச் சென்ற மாயனைச் செங்கண் மாலினை—-11–1–10-
கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான் தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் —-11–5–7-
——————————————————————
மதுகைடப நிரசனம்
நேரா நிசாசரர் மேல் பேராழி கொண்ட பிரான் –பொய்கையார் –83-
வாய்ந்த மதுகைடபரும் வயிறு உருகி மாண்டார் —பேயார் –66-
இகழ்ந்தாய் இருவரையும் வீய –நான்முகன் –24-
உளைந்திட்டு எழுந்த மதுகைடவர்கள் உலப்பில் வலியாலவர் பால் -வயிரம் விளைந்திட்டது என்று எண்ணி
விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் –கலியன் –10–6–3-
————————————
பார்த்த சாரதி
திரிந்தது வெஞ்சமத்துத் தேர் தடவி –பூதத்தார் –15-
புகழ்ந்தாய் சினப் போர் சுவேதனைச் சேனாபதியாய் மனப்போர் முடிக்கும் வகை —நான்முகன் –24-
மெய் தெளிந்தார் என் செய்யார் வேறானாய் நீறாக கை தெளிந்து காட்டிக் களப்படுத்து—94-
பொய்யினோடு மெய்யுமாய் —திருச்சந்த –26-
பார் மிகுத்து பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன் தேர் மிகுத்து மாயமாக்கி நின்று கொன்று வென்றி சேர் மாரதற்கு
வான் கொடுத்து வையம் ஐவர் பாலதாம் சீர் மிகுத்த நின்னலால் அலோர் தெய்வம் நான் மதிப்பனே —89-
மெய்யர்க்கே மெய்யானாகும் –பொய்யர்க்கே பொய்யனாகும் –திருமாலை –15-
தாரித்து நூற்றுவர் தந்தை சொல் கொள்ளாது பாரித்த மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று தேர் உய்த்த கைகளால் சப்பாணி –பெரியாழ்வார் —-1-6–6-
பேரொக்கப் பண்ணி இப் பூமிப் பொறை தீர்ப்பான் தேரொக்க ஆர்ந்தாய் செழு தார் விசயற்காய் —1–8–6-
கொத்துத் தலைவன் குடி கெடத் தோன்றிய அத்தன் —1–9–3-
வேந்தர்கள் உட்க விசயன் மணித் திண் தேர் ஊர்ந்தவன்-1–9–4-
பார்த்ததற்குத் தேர் ஒன்றை யூர்ந்தார்க்கு—2–6–5-
வெள்ளைப் புரவிக் குரக்கு வெல் கொடித் தேர் மிசை முன்பு நின்று கள்ளப் படைத் துணையாகிப் பாரதம் கை செய்யக் கண்டார்–4–1–7-
மன்னர் மறுக மைத்துனன் மார்க்கு ஒரு தேரின் மேல் முன் அங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை —4–2–7-
அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே —-திருவாய் —3–6–10-
மாயப் போர்த் தேர்ப் பாகனார்க்கு —-4–6–1-
தேசம் அறிய வோர் சாரதியாய்ச் சென்று —-7–5–9-
சித்திரத் தேர் வலவா —7–8–3-
புக்க நல் தேர் தனிப் பாகா —8–5–8-
பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர் –கலியன் —1–8–4-
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை —2–3–1-
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை —2–3–6-
பார்த்தன் செல்வத் தேர் ஏறு சாரதியாய் —2–10–8-
வேல் கொள் கைத்தலத்து அரசர் வெம்போரினில் விசயனுக்காய் மணித் தேர் கோல கொள் கைத்தலத்து எந்தை பெம்மான் —3–1–9-
ஒரு கால் தேரினை யூர்நது தேரினைத் துரந்த செங்கண்மால்-4- -10–5-
கறையார் நெடு வேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி–5–1–8-
ஐவர்க்காய் அமரில் உய்த்த தேராளன் —5–5–7-
வெள்ளைப் புரவித் தேர் விசயற்காய் விறல் வியூகம் விள்ள ஊர்ந்த விமலன் —-6–5–8-
பார்த்தன் தன் தேரை யூரும் –6–5–9-
மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவி —6–7–7-
மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர் மண்ணின் மேல் வந்த படை எல்லாம் பாரதத்து
விண்ணின் மீது ஏற விசயன் தேரூர்ந்தானை —6–8–8-
பாரதத்தொரு தேரை ஐவர்க்காய்ச் சென்று இரங்கி யூர்நது —7–3–4-
பாரித்து எழுந்த படை மன்னர் தம்மை மாளப் பாரதத்துத் தேரில் பாகனாய் யூர்நத தேவதேவன் —7–5–2-
பஞ்சவர் பாகன் –9–1–4-
பன்னிய பாரம் பார் மகட்க்கு ஒழிய பாரத மா பெரும் போரில் மன்னர்கள் மடிய
மணி நெடும் திண் தேர் மைத்தனர்க்கு உய்த்த மா மாயன் —9–1–9-
கவ்வைக் களிற்று மன்னர் மாளக் கலி மான் தேர் ஐவர்க்காய் அன்று அமரில் உய்த்தான் —9–6–5-
பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்து ஒரு தேர் முன் நின்று காத்தவன் தன்னை —9–9–8-
மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து –11–3–1-
————————-
பாரதப் போர்
வெண் சங்கம் ஊதிய வாய் –பொய்கையார் –38-
ஐவர்க்காய் அன்று மிடைந்தது பாரத வெம்போர் –பேயார் -28-
வெற்றிப் பணிலம் வாய் வைத்து உகந்தான் பண்டு —60-
நின்று கொன்று வென்றி சேர் மா ரதர்க்கு வான் கொடுத்து வையம் ஐவர் பால் தாம் சீர் மிகுத்த ஓர் தெய்வம் –திருச்சந்த -89-
மலை புரை தோள் மன்னவரும் மா ரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய–பெரியாழ்வார் –2- 1–2-
பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போர் ஏறே சிற்றாயர் சிங்கமே —3–3–5-
வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர் திருச் சக்கரம் ஏந்து கையன் உள்ள விடம் வினவில் உமக்கிறை வம்மின் சுவடுரைக்கேன்
வெள்ளைப் புரவிக் குரக்கு வெல் கொடுத் தேர் மிசை முன்பு நின்று கள்ளப் படை துணையாகிப் பாரதம் கை செய்யக் கண்டார் உளர் —4–1–7-
குறுகாத மன்னரைக் கூடு கலக்கி வெங்கானிடைச் சிறுகால் நெறியே போக்குவிக்கும் செல்வன் —-4- -2–8-
பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் ஆண்டங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை —4–3–6-
திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய் –அரசினை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு –4- 7–8-
அங்கோர் பொய்ச் சுற்றம் பேசிக் சென்று பேதம் செய்து எங்கும் பிணம் படுத்தாய் –5–3–4-
மைத்துனன்மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய் –5–3–8-
தொல்லைக் கண் மாத்தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறாகக் காத்தானைக் காண்டும் நீ காண் –பெரிய திருவந்தாதி -19-
கொல்லா மாக் கோல் கொலை செய்து பாரதப் போர் எல்லா சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய் —திருவாய் —3–2–3-
நீர்மையில் நூற்றுவர் வீய ஐவருக்கு அருள் செய்து நின்று பார் மல்கு சேனை யவித்த பரஞ்சுடரை நினைந்தாடி —3–5–7-
பண்டு நூற்றுவர் அடவரும் படை மங்க ஐவர்கட்காகி வெஞ்சமத்து அன்று தேர் கடவிய பெருமான் —3–6–10-
அடியோங்கு நூற்றுவர் வீய அன்று ஐவருக்கு அருள் செய்த நெடியோனை —3–7–11-
போர்ப் பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த—4–6–1-
வரி வளையால் குறைவில்லா பெரு முழக்கால் அடங்காரை எரி அழலம் புக ஊதி இரு நில முன் துயர் தவிர்த்த —4- 8–8-
திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேன் என்னும் –5–8–5-
மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று மாயப் போர் பண்ணி நீறு செய்த எந்தாய் —5–7–4-
பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத் திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும் —-5–10–1-
மண் மிசைப் பெரும் பாரம் நீங்க ஓர் பாரதமா பெரும் போர் பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ் பட நூற்றிட்டு -6-4–10-
குரு நாடுடை ஐவர்கட்காய் யாடிய மா நெடும் தேர்ப் படை நீர் எழச் செற்ற பிரான் –6–8–3-
நூற்றுவரை யன்று மங்க நூற்ற நிகரில் முகில் வண்ணன் நேமியான் –7–3–10-
மன்னர் ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி —–7–4–5-
தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த் தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை —-7–5–9-
ஐவர்க்காய் கொடும் சேனை தடிந்து—7- -6–10-
அமரது பண்ணி அகலிடம் புடை சூழ் அடுபடை யவித்த யம்மானே —-8–1–4-
தக்க ஐவர் தமக்காய் அன்று ஈரைம்பதின்மர் தாள் சாயப் புக்க நல் தேர்த் தனிப் பாகா —-8–5–8-
பாரதம் பொருத மாயா உன்னை எங்கே காண்கேனே —8–5–10-
மன்னஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான் –10-6–4-
ஒரு தேரால் மன்னிலங்கு பாரதத்தை மாள யூர்ந்த வரை யுருவின் மா களிற்றை –திரு நெடும் தாண் –28-
முன்னுலகம் பொறை தீர்த்து ஆண்டான் –கலியன் –2–4–2-
புல மன்னு வடம் புனை கொங்கையினாள் பொறை தீர முன்னாள் அடு வாள் அமரில் பல மன்னர் பட நில மன்னனுமாய் யுலகாண்டவன் —2–4–3-
பாங்காக முனைவரோடு அன்பளவிப் பதிற்றைந்து திரட்டிப் படை வேந்தர் பட நீங்காச் செருவில் நிறை காத்தவன் 2—4–4-
சேனை செருக்களத்துத் திறல் அழியச் செற்றான் தன்னை -2–10–8-
மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசம் மற்றவர் தம் காதலிமார் குலையும் –உடன் கழல –4–4–1-
பல்லரசு அவிந்து வீழப் பாரதப் போர் முடித்தாய் -4–6-6-
பாரதம் கை எறிந்து —4–10–5-
மன்னர் தம் உயிர் செக ஐவர்கட்க்கு அரசு அளித்த—5–3–4-
பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக் கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்தான் —6–7–8-
உரங்களால் இயன்ற மன்னர்கள் மாள –இன்னருள் செய்யும் எம்பிரானை –7–3–4-
கயம் கொள் புண் தலைக் களிறு உந்து வெந்திறல் கழல் மன்னர் பெரும் போரில் மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தன் —8–5–4-
செரு வழியாத மன்னர்கள் மாளத் தேர் வலம் கொண்டவர் செல்லும் அரு வழிவான மதர் படக் கண்ட ஆண்மை கொலோ வறியேன் நான் — 10–9–5-
—————–
குதிரை விடாய் தீர்த்தது
மோழை எழுவித்தவன் மலை –பெரியாழ்வார் –4–2–7-
மன்னஞ்சப் பாரதத்து –படை தொட்டான் –திருவாய் -10–6–4-
————————-
அசுரர்கள் வதம்
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும் –5–6–5-
கொடு வல்லசுரர் குளம் எல்லாம் கூறாய் நீறாய் நிலனாகிச் சீறா வெறியும் திரு நேமி வலவா தெய்வத் கோமானே —6–10–2-
அடலாழி ஏந்தி அசுரர் வன் குலம் வேர் மருங்க அறுத்தாய் -7–1–5-
உட் குடை யசுரர் உயிர் எல்லாம் யுண்ட –7–2–3-
அசுரர் வன் கையர் கூற்றமே—-8- -1–8-
அசுரர் வன் கையர் வெங்கூற்றை –8–4–8-
மருள் கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு—9–1–3-
அதிர் கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரை பிறந்தார்க்கு –9–1–5-
இகலிடத்து அசுரர்கள் கூற்றம் —9–9–2-
குதற்று வல்லசுரர்கள் கூற்றம் —-10–1–3-
அசுரரை என்றும் துணிக்க வல்லரட்டன்—10–1–9-
தேவாசுரம் பொருவாய் செற்று –பேயார் –48-
—————————————
ஸ்ரீ பலராமாவதாரம்
முன்னலோர் வெள்ளிப் பெரு மலைக் குட்டன் மொடு மொடு விரைந்தோடப் பின்னை
செம் பொற் கழலடிச் செல்வா பல தேவா –திருப்பாவை –17-
பிலம்பன் தன்னைப் பண்ணழிய பல தேவன் வென்ற –நாச்சியார் –12–7-
ஒன்றைக் குழையும் நாஞ்சிலும் ஒரு பால் தோன்றத் தோன்றி வெற்றித் தொழிலார் வேல் வேந்தர்
விண் பால் செல்ல வெஞ்சமத்து செற்ற கொற்றத் தொழிலானை –கலியன் –8–8–8-
மைந்நம்பு வேல் கண் நல்லாள் முன்னம் பெற்ற வளை வண்ண
—————————
ஸ்ரீ கல்கி அவதாரம்
கடும் பரி மேல் கற்கியை நான் கண்டு கொண்டேன் –கலியன் —2–5–3-
வாமனன் கற்கி மதுசூதன் மாதவன் தார் மன்னு தாசாரதியாய தட மார்வன் —8–4–7-
கற்கியும் ஆனான் தன்னை —8–9–10-
—————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: