அருளிச் செயல்களில் -ஏழாம் பாகம் -ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் -இரண்டாம் பாகம் –ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் –

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –ஸ்ரீ மது ஸூதன வைபவம் –ஸ்ரீ கிருஷ்ண சம்போதனம் –ஸ்ரீ கிருஷ்ண சைஸவம் –துரியோதன க்ருத்யம் –துர்கா வைபவம்
ஸ்ரீ கிருஷ்ண லீலைகள் –கோபியர் உடன் லீலைகள் –வேணு கானம் –பரீக்ஷித் ரக்ஷணம் –ஸ்ரீ கிருஷ்ணன் -பூதனா வதம் –சகட பங்கம்

-நவநீத சாதுர்யம் -உலூகல பந்தனம் -வையம் ஏழும் காட்டியது –மருதமரம் முறித்தல் –
ஸ்ரீ கிருஷ்ண பால்ய லீலைகள் -கோ பாலனம் –குருந்தம் ஒசித்தது–வத்ஸா கபித்த நியாசம் –பகாஸூரா வதம் –தேனுகாஸூர வதம்
நரகாசுர வதம் –காளீய தமனம் –பிரலம்பாஸூர வதம் –கோபிகா வஸ்திர அபஹரணம் -பக்த விலோசனம் -கோவர்த்தன உத்தரணம்
ராச லீலை –ஜலக்ரீடை –குடக்கூத்து –அரிஷ்டாஸூர நிராசம் –கேசி வதம் –கூனி கூன் நிமிர்த்தது –
-குவலயா பீடம் நிராசம் –மல்ல நிராசம் -கம்ச வதம் -தனுர் பங்கம்
ஸ்ரீ கிருஷ்ண உபநயனம் -அத்யயனம் -சாந்தீபன புத்ராநயனம் –வைதிக புத்ராநயனம் –கால நேமி வதம் –
நாரதர் கண்ட காட்சி –அர்ஜுனன் கண்ட காட்சி -சீமாலிகன் வதம் -திரௌபதி குழல் முடித்தல் -பாண்டவர்கள் ராஜ்ய லாபம் –

ஸ்ரீ ருக்மிணி விவாஹம் –ருக்மி பங்கம் –சிசுபால பங்கம் -தந்த வக்த்ர நிராசம் –காண்டாவன தஹநம் -நப்பின்னை திருமணம்
-பாரிஜாத அபஹரணம் -தேவர்கள் ஸூ ரிகள் இந்த்ரிய வஸ்யர் -பாண விஜயம்
ஸ்கந்த பங்கம் -பவுண்டராக பங்கம் -காசி ராஜ மாலி ஸூ மாலி பங்கம் –ஆழியால் ஆழி மறைத்தல் -ஜெயத்ர வதம்
ஸ்ரீ கிருஷ்ணன் தூது -மது கைடப நிரஸம் – ஸ்ரீ பார்த்த சாரதி -பாரதப் போர் –குதிரை விடாய் தீர்த்தல் –
அசுரர் வதம் -தேவாசுர யுத்தம் -பலராமர் அவதாரம் -கல்கி அவதாரம் –
—————————————
வெண்ணெய் யுண்டு கட்டுண்டது
உறி வெண்ணெய் தோன்ற யுண்டான் —பொய்கையார் –18-
வெறி கமழும் காம்பேய் மென் தோளி கடை வெண்ணெய் யுண்டாயை தாம்பே கொண்டார்த்த தழும்பு —22-
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு –24-
ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே –92-
மொய் குழல் யாய்ச்சி விழுதுண்ட வாயானை —பேயார் –25-
உடைந்ததுவும் ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே –28-
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி கண்ணிக் கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான் –91-
ஆய்ச்சி பாலை யுண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் யுண்டு –திருச்சந்த –37-
ஆனை மேய்த்து ஆ நெய் யுண்டு –40-
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் யுண்ட வாயன் –அமலனாதி –10-
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் —கண்ணி நுண் -1-
தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பால் உடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு ஆர்த்த தோளுடை எம்பிரான் –பெருமாள் —2–4-
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும் முகிழ் இளம் சிறுத் தாமரைக் கையும் எழில் கொள்
தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும் — -7–8-
பழம் தாம்பால் ஆர்த்த –பெரியாழ்வார் –1–2–9-
பெருமா யுரலில் பிணிப்புண்டு இருந்து –1–2–10-
தாழியில் வெண்ணெய் தடம் கை யார விழுங்கிய –1–4–9-
மத்தளவும் தயிரும் வார் குழல் நன் மடவார் வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி –1–5–5-
சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண் பட்டிக் கன்றே –1–6–5-
பொத்த யுரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறித் தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும் மெத்தத் திரு வயிறு ஆர விழுங்கிய அத்தன் –1–9–7-
திருடி நெய்க்கு ஆப்பூண்டு நந்தன் மனைவி கடைத் தாம்பால் சோப்பூண்டு துள்ளித் துடிக்கத் துடிக்க அன்று ஆப்பூண்டான் —2–1–5-
வைத்த துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய அப்பன் –2–1–6-
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும் இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை —-2–2–2-
தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று கையைப் பிடித்துக் கரையுரலோடு என்னைக் காணவே கட்டிற்று இல்லையே –2–3–9-
வெண்ணெய் அளைந்த குணுங்கும் —2–4–1-
கன்றுகளோடு –கட்டெறும்பு பிடித்திட்டால் தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன் —2–4–2-
கறந்த நற்பாலும் தயிரும் கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய் பிறந்ததுவே முதலாகப் பெற்று அறியேன் எம்பிரானே —2–4–7-
திண்ணக் கலத்தில் திறை யுறி மேல் வைத்த வெண்ணெய் விழுங்கி விரைய யுறங்கிடும் —-2–5–3-
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன் —2–7–5-
————-
வெண்ணெய் திருடியது
ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பாலுண்டு பேர்த்தவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு வேய்ந்தடம் தோளினார்
வெண்ணெய் கோள் மாட்டாது அங்கு ஆப்புண்டு இருந்தான் –2–10–5-
பொன்னேய் நெய்யோடு பாலமுதுண்டு ஒரு புள்ளுவன் பொய்யே தவழும் —3–1–1-
கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக் குடத் தயிர் சாய்த்துப் பருகி —-3–1–1-
முப்போதும் கடைந்து ஈட்டிய வெண்ணெயினோடு தயிரும் விழுங்கி கப்பாலாயர்கள் காவில் கொணர்ந்த கலத்தொடு சாய்த்துப் பருகி —3–1–5-
மிடறு மெழு மெழுத்தோடே –வெண்ணெய் விழுங்கிப் போய் படிறு பல செய்து இப்பாடி எங்கும் திரியாமே —-3–2–6-
பற்றி யுரலிடை யாப்பும் யுண்டான் –நாச்சியார் —12–8-
ஈட்டிய வெண்ணெய் தொடு யுண்ணப் போந்து –திரு விருத்தம் –21-
நெய் தொடு யுண்டு யேசும்படி என்ன செய்யுமீசர் விண்ணோர் பிரானார் மாசில் மலரடிக் கீழ் –54-
ஆழி சங்கம் படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக்க அலந்தானை எம்மானை —86-
சுருங்குறி வெண்ணெய் தொடு யுண்ட கள்வனை –91-
வெண்ணெய் யூண் என்னும் ஈனச் சொல்லே இமையோர் தமக்கும் நெஞ்சால் நினைப்பரிது–98-
தாம்பால் ஆப்புண்டாலும் அத்தழும்பு தான் இகளச் சோம்பாது —பெரிய திருவந்தாதி –18-
வாரார் வன முலையாள் மத்தாரப் பற்றிக் கொண்டு சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை நாரார் உறி ஏற்றி நன்கமைய வைத்ததனை
ஓராதவன் போல் உறங்கி அறிவுற்று தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி ஆராத வெண்ணெய் விழுங்கி அருகிருந்த மோரார் குடமுருட்டி
முன் கிடந்த தானத்தே ஓராதவன் போல கிடந்தானைக் கண்டவளும் ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே தீரா வெகுளியளாய்ச்
சிக்கென ஆர்த்தடிப்ப ஆரா வயிற்றினொடு ஆற்றாதான் –சிறிய திரு மடல்
தயிர் வெண்ணெய் தன் வயிறார விழுங்கிப் பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும் –பெரிய திருமடல்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே–திருவாய் –1–3–1-
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா –1–5–1-
உண்டாய் வெண்ணெய் சிறு மனுசர் உவலை யாக்கை நிலை எய்தி –மண் கரைய நெய்யூண் மருந்தோ —1–5–8-
வைகலும் வெண்ணெய் கை கலந்துண்டான் —1–8–5-
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் —2–3–8-
தாமோதரனைத் தனி முதல்வனை —-2–7–12-
உறி யமர் வெண்ணெய் யுண்டவன் கோயில் —2–10–6-
வேயகம் பால் வெண்ணெய் தொடு யுண்ட ஆனாயர் தாயவனே —3–8–3-
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில் அவனுண்ட வெண்ணெய் ஈது என்னும் —4–4–6-
தயிர் வெண்ணெய் யுண்டானை —4–8–11-
நெய்யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ யூன் தாமரைக் கண்கள் நீர் மல்க —-5–10–3-
ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றம் உண்டு அழு கூத்த அப்பன் தன்னை —6–2–11-
நோவ வாய்ச்சி யுரலோடு ஆர்க்க இரங்கிற்றும்—6–4–4-
ஈட்டிய வெண்ணெய் யுண்டான் திரு மூக்கு எனதாவி யுள்ளே -7–7–2-
தாமோதரன் தாள்கள் —10–4–1-
தாயாய் வந்த பேய் உயிரும் இழுதும் உடன் உண்ட வாயான் —-கலியன் –1–5–6-
உண்டாய் உறி மேல் நறு நெய்யமுதாக —1–10–4-
வேயின் அன்ன தோள் மடவார் வெண்ணெயுண்டான் இவன் என்று ஏச நின்ற —2–2–1-
ஆய்த்தாயர் தயிர் வெண்ணெய் யமர்ந்த கோவை —-2–5–4-
உறி யார்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி யுரலோடு ஆர்க்க
தறி யார்ந்த கரும் களிறே போல் நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை —2–10–6-
பண்டிவன் வெண்ணெய் யுண்டான் என்று ஆய்ச்சியர் கூடி யிழிப்ப—3–3–8-
வேல் நெடும் கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய் உளம் குளிர வமுது செய்து –3–9–7-
தயிருண்டு வெண்ணெய் அமுதுண்டு —3–10–9-
படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும் அடலர்த்த
வேல் கண்ணார் தோக்கை பற்றி அலந்தலைமை செய்து உழலும் ஐயன் —4- -4–3-
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் யுண்டு —4–10–1-
மையார் தடம் கண் கரும் கூந்தல் ஆய்ச்சி மறைய வைத்த தயிர் நெய்யார் பாலோடு அமுது செய்த நேமி யங்கை மாயன் —5–1–5-
பிள்ளை யுருவாய் தயிருண்டு அடியேன் உள்ளம் புகுந்த –5–2–3-
கானாயன் கடி மனையில் தயிருண்டு நெய் பருக நந்தன் பெற்ற ஆனாயன் —5–5–3-
வெண்ணெய் தான் அமுது செய்ய வெகுண்டு மத்து யாய்ச்சி ஓச்சி கண்ணியார் குறும் கயிற்றால் கட்ட வெட்டென்று இருந்தான் –5–9–7-
தாய் செற உழைத்து தயிருண்டு —5–10–1-
உறியார் வெண்ணெய் யுண்டு யுரலோடும் கட்டுண்டு –6–5–4-
ஒளியா வெண்ணெய் யுண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால் விளியா ஆர்க்க வாப்புண்டு விம்மி அழுதான் –6–7–4-
மூ உலகோடு அளை வெண்ணெய் யுண்டான் —6–9–3-
வெண்ணெய் யுண்டு யுரலினிடை யாப்புண்ட தீம் கரும்பினை –6–10–3-
அன்று ஆவின் நறு நெய் அமர்ந்துண்ண —7–6–4-
தோயாவின் தயிர் நெய் அமுதுண்ணச் சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற தாயால் ஆப்புண்டு இருந்து அழுது ஏங்கும் தாடாளா —7–7–6-
வம்பவிழும் மயிர்க் குழல் யாய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் யுண்டு யுகந்த மாயோன் —7–8–8-
வெண்ணெய் யுண்டு ஆப்புண்ட வண்ணம் விளம்பினாள்—8–2- 5-
மண மருவு தோளாய்ச்சி ஆர்க்கப் போய் யுரலோடும் —-8–3–4-
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஓடித் தயிருண்ட வாய் துடைத்த மைந்தன் –8–3–5-
ஏதலர் நகை செய இளையவர் அளை வெண்ணெய் போது செய்தமரிய புனிதர் —8–7–4-
வெண்ணெய் மாந்து —10–1–7-
விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா —10–4–5-
பூங்கோதை யாய்ச்சி கடை வெண்ணெய் புக்குண்ண ஆங்கு அவள் ஆர்த்துப் புடைக்கப் புடையுண்ட
ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும் ஓங்கோத வண்ணனே —10–5–1-
தாயார் மனங்கள் தடிப்ப–தயிர் நெய்யுண்டே எம்பிராக்கள்—10–5–2-
தாமோர் ருருட்டித் தயிர் நெய் விழுங்கிட்டு தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால் தாமோ-3-
தூங்குறி வெண்ணெயை அள்ளிய கையால் அடியேன் முலை நெருடும் பிள்ளைப் பிரான் —10–5–7-
இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே—–10- -6–பதிகம்
நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறிப் பால் நெய் அன்று ஆய்ச்சியர்
வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டு இருந்த பெருமான் அடி மேல் –கலியன் ஒலி செய்த தமிழ் மாலை —10–6–10-
காலை எழுந்து கடைந்த இம்மோர் விற்கப் போகின்றேன் கண்டே போனேன் மாலை நறும் குஞ்சி நந்தன் மகன் அல்லால்
மற்று வந்தாரும் இல்லை –வெண்ணெய் யேயன்றிருந்த பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் –10–7–2-
தெள்ளிய வாய்ச் சிறியான் நங்கைகாள் உறி மேலைத் தடா நிறைந்த வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கியிட்டு
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள் கையெல்லாம் நெய் வயிறு பிள்ளை பரமன்றி இவ்வேழ் உலகும் கொள்ளும்
பேதையேன் என் செய்கேனோ —-10-7-3-
தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலுமோர் ஓர் குடம் துற்றிடும் என்று ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்கு எள்கி இவனை
நங்காய் சோத்தம்பிரான் இவை செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன் –10–7–8-
அஞ்சுவன் சொல்லி அழைத்திட நங்கைகாள் ஆயிர நாழி நெய்யை பஞ்சியல் மெல்லடிப் பிள்ளைகள் உண்கின்று பாகம் தான் வையார்களே
கஞ்சன் கடியன் கறவெட்டு நாளில் என் கை வலத்தாதும் இல்லை நெஞ்சத்து இருப்பன செய்து வைத்தாய் நம்பீ –10–7–10-
சிறியானோர் பிள்ளையாய மெள்ள நடந்திட்டு அறியார் நறு வெண்ணெய் யுண்டு —11–3–4-
வெண்ணெய் மருவிப் பணை முலை யாயர் மாதர் யுரலோடு கட்ட –11–4–9-
ஆழ் கடல் சூழ் வையத்தார் ஏசப் போய் –ஆய்ப்பாடித் தாழ் குழலார் வைத்த தயிர் யுண்டான் —11–5–3-
அறியாதார்க்கு ஆனாயானாகிப் போய் –ஆய்ப்பாடி அறியார் நறு வெண்ணெய் யுண்டு யுகந்தான் —-11–5–4-
வண்ணக் கரும் குழல் ஆய்ச்சியரால் மொத்துண்டு கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் —11–5–5-
வெறியார் கரும் கூந்தல் ஆய்ச்சியர் வைத்த –அறியார் நறு வெண்ணெய் தான் உகந்து யுண்ட சிறியானை—11–7–8-
————————————-
வாயினில் வையம் எழும் கண்டது
ஐய நா வழித்தாளுக்கு அங்காந்த்திட வையம் எழும் கண்டாள் பிள்ளை வாயுளே–பெரியாழ்வார் —1–1–6-
உண் வாயில் விரும்பியதனை நான் நோக்கி மண்ணெல்லாம் கண்டேன் மனத்துள்ளே யஞ்சி —2–3–6-
—————————-
மருத மரம் முறிந்தது
மருதிடை போய் –பொய்கையார் –18-
புணர் மருதினூடு போய் –62-
மா மருதினூடு போய் –பேயார் –48-
அவனே அணி மருதம் சாய்த்தான் –51-
நீளா மருதிடை போய் —54-
பெற்றம் –பிணை மருதம் –ஊடு போய் –60-
மரம் கெட நடந்து –திருச்சந்த —58-
மருது இறுத்தாய் –பெருமாள் –6–3-
அங்கு இரு மா மருதம் இறுத்த இப்பிள்ளை –பெரியாழ்வார் —1–2–10-
ஒருங்கொத்த விணை மருதம் உன்னிய வந்தவரை ஊரு கரத்தினொடும் உந்திய வெந்திறலோய் —1–5–5-
மருதும் இறுத்தவன் —2–5–2-
சகடும் மருதும் கலக்கழிய யுதை செய்த —2–8–7-
பொய்ம்மாய மருதானை அசுரரை பொன்று வித்து இன்று நீ வந்தாய் –3–1–3-
மருது இருந்து –3–9–9-
கஞ்சனும் மருதும் மடிய –4–3–2-
கருளுடைய பொழில் மருதும் உடைய விட்டு —4–9–3-
அற்றவன் மருதம் முறிய நடை கற்றவன் –நாச்சியார் —4–6-
நின்ற நீள் மருதும் வீழ –4–7-
நின்ற புணர் மருதம் சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே ஏறி –7–6-
மாவாய் பிளந்து மருதிடை போய் –திருவாய் —2–1–10-
பொருந்திய மா மருதினிடை போய எம் பெரும் தகாய்—3–8–10-
போனாய் மா மருதின் நடுவே என் பொல்லா மணியே –5–1–2-
மருதிடை போய் முதல் சாய்த்து –5–3–8-
மருதிடை போயினாய் –5–7–9-
புணரேய் நின்ற மரமிராண்டின் நடுவே போன முதல்வாவோ -6- 10–8-
மருதிடை போய் –7–3–5-
மருதிற நடந்து –திருக் குறும் தாண் -16-
பேரா மருது இறுத் தான் –சிறிய திரு மடல்
நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் —கலியன் –1–8–3-
புணர் மருதம் இற நடந்த பொற் குன்றினை —2–5–1-
மருதிடை போய் –2–5–10-
மருதம் சாய்த்து —2–10–7-
வாட மருதிடை போகி—3–3–1-
இணை மருதூடு நடந்திட்டு –3- -3–3-
திண்மை மிகு மருதோடு –3–9–6-
மருதிற நடந்து –4–5–3-
இணை மருது இறு த்து —4–10–1-
மருதம் சாய்த்து —5–1–3-
நடையால் நின்ற மருதம் சாய்த்த நாதனூர் —6–5–5-
புணர் மருதம் இற நடந்தார்க்கு —8–3–4-
வலி மிக்க காலார் மருதும் –மடிவித்து -8–6–3-
இணை மலி மருத்தினோடு இற —-8–7–2-
மா மருதூடு நடந்தாய் வித்தகனே —10–4–5-
மாதர் உரலோடு கட்ட அதனொடும் ஓடி அடல் சேர் இணை மருது இற்று வீழ நடை கற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே –11–4–9-
———————————
ஸ்ரீ கிருஷ்ணாவதார பால்ய லீலை
தானுமோர் கன்னியும் கீழை யகத்துத் தயிர் கடைகின்றான் போலும் –கலியன் –10–7–1-
தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலன் -தோழிமார் ஆரும் இல்லை சந்த மலர்க் குழலாள் தனியே விளையாடும் இடம்
குறுகிப் பந்து பறித்துத் துகில் பற்றிக் கீறிப் படிறன் படிறு செய்யும் நந்தன் மதலைக்கு இங்கு என் கடவோம்—10- -7–5-
அண்ணல் இலைக் குழலூதி நஞ்சேரிக்கே அல்லில் தான் வந்த பின்னை கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மிக்
கமலச் செவ்வாய் வெளுப்ப என் மகள் வண்ணம் இருக்கின்ற ஆ நங்காய் —10–7–6-
ஆயிரம் கண்ணுடை இந்திரனார்க்கு என்று ஆயர் விழவு எடுப்ப பாசன நல்லன பண்டிகளால் புகப் பெய்தவதனை எல்லாம் போயிருந்து அங்கோர்
பூத வடிவு கொண்டு உண் மகன் இன்று நங்காய் மாயனதனை எல்லாம் முற்ற வாரி வளைத்துண்டு இருந்தான் போலும் –10–7–7-
——————————
பசு மேய்த்தல்
ஆன் –மேய்த்து –பொய்கையார் –54-
கோவலனாய் ஆ நிரைகள் மேய்த்துக் குழலூதி —பேயார் -42-
நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய் — 48-
அவனே அருவரையால் ஆ நிரைகள் காத்தான் —51-
பெற்றம் –முற்றக் காத்து –60-
பூணி பேணும் ஆயனாகிப் பொய்யினோடு மெய்யுமாய் –திருச்சந்த –26-
கற்றினம் மேய்த்த வெந்தை கழலிணை பணிமினீரே –திருமாலை -9-
நிரை மேய்த்ததும் –பெருமாள் -2-2-
பசு நிரை மேய்த்தாய் –பெரியாழ்வார் –2–3–7-
ஆ நிரை மேய்க்க நீ போதி கானகம் எல்லாம் திரிந்து உண் கரிய திருமேனி வாட தேனில் இனிய பிரானே –2–7–1-
ஆயர்களோடு போய் ஆ நிரை காத்து –3–9–9-
கோ நிரை மேய்த்தவனே எம்மானே -4–10–9-
கன்று மேய்த்து விளையாடும் கோவலன் –நாச்சியார் –4–8-
கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான் –12–8-
கோலால் நிரை மேய்த்து ஆயனாய் –13–2-
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி விட்டுக் கொண்டு விளையாட விருந்தா வனத்தே கண்டோமே –14-1-
புன்மை எள்காது ஆவினை மேய்க்கும் வல்லாயனை–திருச்சந்த —-89-
அவன் காண்மின் ஊரா நிரை மேய்த்து –சிறிய திருமடல்
இனவான் கன்று மேய்த்தேனும்–இனவா நிரை காத்தேனும் யானே என்னும் –திருவாய் —-5–6–6-
காலி மேய்க்க வல்லாய் எம்மை நீ கழறேலே –6–2–4-
நிரை மேய்த்ததும் –6–4–2-
நிரை மேய்த்ததும் –6–4–3-
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி —6–5–3-
ஆ நிரை மேய்த்து —7–6–2-
கூத்தன் கோவலன் –10–1–6-
நிரை மேய்த்தான் —10–4–8-
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும் –திரு நெடும் தாண் —16-
ஆ மருவி நிரை மேய்த்த வமரர் கோமான் —26-
காளையாகிக் கன்று மேய்த்து –கலியன் –1–3–4-
கன்று மேய்த்து விளையாட வல்லானை –2–5–3-
ஆயர் தங்கள் கோவாய் நிரை மேய்த்து –3–5–8-
கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே —4–7–7-
ஆ நிரை மேய்த்து —4–10–2-
கறவை முன் காத்து –4–10–4-
கற்றா மறித்து –5–1–10-
ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே —5–6–3-
ஆ மருவி நிரை மேய்த்த அணி யரங்கத்து அம்மானை –5–6–10-
காலிப் பின்னே இலைத் தடத்த குழலூதி –6–6–7-
——————–
குருந்த மரம் சாய்த்தது
பூம் குருந்தம் சாய்த்தனவும் –பொய்கையார் —27-
குருந்தம் –ஓசித்து —54-
பூம் குருந்தம் –சாய்த்து –62-
குருந்து ஒசித்த கோபாலகன் –பேயார் -32-
பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் –நான்முகன் –57-
எதிர்ந்த பூம் குருந்தம் சாய்த்து –திருச்சந்த –37-
குருந்தம் ஓன்று ஒசித்தானோடும் சென்று கூடியாடி விழாச் செய்து திருந்து நான்மறையோர்
இராப்பகல் ஏத்தி வாழ் திருக் கோட்டியூர்–பெரியாழ்வார் –4–4–7-
உயர் கொள் சோலைக் குருந்து ஒசித்ததும் –திருவாய் –6–4–6-
சாயக் குருந்தம் ஒசித்த தமியேற்கு —6–6–8-
கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான் –கலியன் -1–8–1-
தழை வாட வன் தாள் குருந்தம் ஓசித்து –3–8–5-
பூம் குருந்து ஓசித்து –4–5–4-
பூம் குருந்து ஓசித்து—9–10–8-
பூம் குருந்தம் சாய்த்து –10–5–7-
பூம் குருந்து ஓசித்து—11–2–2-
———————–
கபித்தா ஸூரன் -வத்சாஸூரன் வதம்
கனி சாயக் கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு –பொய்கையார் –87-
குழக்கன்று தீவிளவின் காய்க்கு எறிந்த தீமை –பூதத்தார் -10-
தாழ்ந்த விளங்கனிக்கு கன்று எறிந்து–23-
மேலால் விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே -100-
கற்றுக் குணிலை விளங்கனிக்கு கொண்டு எறிந்தான் –பேயார் -60-
மேல் நாள் விளங்கனிக்குக் கன்று எறிந்தான் –68-
மேல் நாள் குழக்கன்று கொண்டு எறிந்தான் –71-
காய்த்த நீள் விளங்கனி யுதிர்த்து –திருச்சந்த -37-
கானக வல் விளவின் காயுதிரக் கன்றது கொண்டு எறியும் கரு நிற என் கன்றே –பெரியாழ்வார் —1–5–4-
கன்றினை வாலோலை கட்டிக் கனிகள் உதிர எறிந்து -2–4–8-
கனிக்கு ஒரு கன்றினைப் பற்றி எறிந்த பரமன் –2–5–5-
விரும்பாக் கன்று ஓன்று கொண்டு விளங்கனி வீழ எறிந்த பிரானே –3–1–6-
பன்றியும் ஆமையும் மீனமுமாகிய பார்க் கடல் -பாற் கடல் -வண்ணா உன் மேல் கன்றின் யுருவாகி மேய்ப்புலந்தே வந்த
கள்ள வசுரர் தம்மை –சென்று பிடித்துச் சிறு கைகளால் விளங்காய் எறிந்தாய் போலும் —3–3–7-
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி –திருப்பாவை –24-
ஆ வீன்ற கன்று உயரத்தாம் எறிந்து காயுதிர்த்தார் தாள் பணிந்தோம் –பெரிய திருவந்தாதி –54-
கனிந்த விளவுக்கு கன்று எறிந்த கண்ணபிரானுக்கு —திருவாய் –7–3–5–
விளங்கனி முனிந்தாய் –கலியன் –1–6–7-
இளங்கன்று கொண்டு விளங்காய் எறிந்து —3–8–5–
விளங்கனியை இளங்கன்று கொண்டு உதிர எறிந்து –3–9-7-
கன்றதனால் விளவு எறிந்து கனி யுதிர்த்த காளை —3–10–8-
மல்லல் கொம்புருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர் –7–4–2-
விளங்காயா வீழக் கன்று வீசிய வீசனை—7- 10–8-
கன்றால் விளங்காய் எறிந்தான் –8–6–9-
விளங்கனிக்கு இளங்கன்று விசிறி –9–8–6-
கன்று கொண்டு விளங்கனி எறிந்து –9–10–7-
—————————–
பகாசுர வதம்
புள் வாய் கீண்டானும் –பொய்கையார் –18-
புள் வாய் கீண்டு —54-
புள்ளின் வாய் பிளந்து திருச்சந்த —19-
பள்ளத்தில் மேயும் பறவை யுருக் கொண்டு கள்ள வசுரன் வருவானைத் தான் கொண்டு
புள்ளிது வென்று பொதுக்கோ வாய் கீண்ட –பெரியாழ்வார் —2–5–4-
பொருந்திட்டு எதிர் வந்த புள்ளின் வாய் கீண்டான் –2-6-3-
புள்ளினை வாய் பிளந்திட்டாய் –2–7–5-
புள்ளின் வாய் கீண்டானை –திருப்பாவை –13-
புள்ளினை வாய் பிளந்தான் என்பதோர் இலக்கினில் புக –நாச்சியார் –1–2-
புள் வாய் பிளந்த மணி வண்ணற்கு –1–10-
புள்ளும் –வீழ —4–7-
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டையாடி வருவானை விருந்தா வனத்தே கண்டோமே –14–9-
புள்ளின் வாய் கீண்டானையே –பெரிய திருவந்தாதி –64-
புள் வாய் பிளந்து —திருவாய் –5–3–8-
புள்ளின் வாய் பிளந்தானை –5–7–8-
புள்ளின் வாய் பிளந்தாய் —5–7–9-
இகல் கொள் புள்ளைப் பிளந்ததும் —6- 4–6-
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம் –கலியன் –1-8-1-
புள் வாய் பிளந்த புனிதா என்று அழைக்க உள்ளே நின்று என்னுள்ளம் குளிரும் ஒருவா –7–1-7-
புள்ளினை வாய் பிளந்து —-9–9–7-
புள்ளினை வாய் பிளந்து –10–5–7-
—————————-
தேனுகாசுர வதம் –கழுத்தை -தேனுகாசுரன் -பனங்காய்
வாசியாகி நேசமின்றி வந்து எதிர்ந்த தேனுகன் நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனங்கனிக்கு வீசி
மேல் நிமிர்ந்த தோளில் இல்லை யாக்கினாய் கழற்கு ஆசையாம் அவர்க்கு அலால் அமரர் ஆகலாகுமே —திருச்சந்த -80-
காய்சினத்த தேனுகன் –நாசமுற்றி வீழ —107-
தேனுகனும் முரனும் திண் திறல் வெந்நரகன் என்பவர் தாம் மடியச் செரு வதிரச் செல்லும் –பெரியாழ்வார் — 1–5–4-
தேனுகனாவி செகுத்துப் பனங்கனி தான் எறிந்திட்ட தடம் பெரும் தோளினால் –2-10-4-
தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் தீம்பப் பூடுகள் அடங்க வுழக்கி –3–6–4-
காட்டை நாடித் தேனுகனும் களிறும் மடிய –நாச்சியார் –14–9-
தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும் தேனுகனும் பூதனை தன் ஆர் உயிரும் செகுத்தான் –கலியன் -3-10–7-
கழுதையும் –மடிவித்து –8–6–8-
தேனுகனாவி போயுக வங்கோர் செழும் திரள் பனங்கனி யுதிரத் தான் உகந்து எறிந்த தடம் கடல் வண்ணர்—9–8–7-
———————————
நரகாசுரன் வதம்
தேனுகனும் முரனும் திண் திறல் வெந்நரகன் என்பவர் தாம் மடியச் செரு வதிரச் செல்லும் –பெரியாழ்வார் –1- 5-4-
கிழக்கில் குடி மன்னர் கேடிலாதாரை அவ் வாழி யதனால் விழிக்கும் அளவிலே வேர் அறுத்தானே—2- -5–6-
மன்னு நரகன் தன்னைச் சூழ் போகி வளைத்து எறிந்து கன்னி மகளிர் தம்மை கவர்ந்த கடல் வண்ணன் –4–3–3-
நலியும் நரகனை வீட்டிற்றும் –திருச்சந்த –78-
ஆறாத சினத்தின் மிகு நரகன் உரம் அழித்த–கலியன் -3–9–8-
வென்றி மிகு நரகன் உரமது அழியவிசிறும்—3- -10–2-
நரகனைத் தொலைத்த கர தலத்தமைதியின் கருத்தோ –10–9–4-
—————
காளிய நர்த்தனம்
அரவம் விட்டு –பொய்கையார் –54-
அடிச் சகடம் சாடி யரவாட்டி –நான்முகன் –33-
ஓர் பொய்கை வாய் விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே –திருச்சந்த –38-
சலம் கலந்த பொய்கை வாய் ஆடராவின் வன்பிடர் நடம் பயின்ற நாதனே –86-
போர் அரவீர்த்த கோன்–பெருமாள் —2–5-
காலால் காளியன் தலை மிதித்ததும் —-7-9-
ஐந்தலைய பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே –திருப்பல்லாண்டு -10-
கானக மா மடுவில் காளியன் உச்சியிலே தூய நடம் பயிலும் சுந்தர என் சிறுவர் –பெரியாழ்வார் –1–5–6-
நஞ்சுமிழ் நாகம் கிடத்த நற் பொய்கை புக்கு அஞ்சப்ப பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த –1–8–3-
காயு நீர் புக்குக் கடம்பேறி காளியன் தீய பணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி –2–1–3-
பின்தொடர்ந்து ஓடி ஓர் பாம்பைப் பிடித்துக் கொண்டாட்டினாய் போலும் –2–4–8-
தடம் படு தாமரை பொய்கை கலக்கி விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து படும்படு பைந்தலை மேல் எழப் பாய்ந்திட்டு –2- 10-3-
நீ பொய்கை புக்கு நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும் நான் உயிர் வாழ்ந்து இருந்தேன் —-3–3–6-
அரவம் துரந்திட்டு –3–5–11-
தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் தீம்பப் பூண்டுகள் அடங்க உழக்கி–3–6–4-
நஞ்சுமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த அஞ்சன வண்ணனை –3–9–5-
காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன் நீண் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து மீள யவனுக்கு அருள் செய்த வித்தகன் —3–9–7-
கஞ்சனும் காளியனும் –வஞ்சனையில் மடிய —4—3–2-
குதி கொண்டு அரவில் நடித்தாய் –நாச்சியார் –3–2-
பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து வாய்த்த காளியன் மேல் நடமாடிய –4–4-
நீர்க்கரை நின்ற கடம்பை ஏறி காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து போர்க்களமாக நிருத்தம் செய்த —12–5-
பாம்பால் ஆப்புண்டு பாகுற்றாலும் சோம்பாது —பெரிய திருவந்தாதி —18-
நீரார் நெடும் கயத்தைச் சென்று அலைக்க நின்றுரப்பி ஓராயிரம் பண வெங்கோவியல் நாகத்தை சீரார் திருவடியால் பாய்ந்தான் –சிறிய திருமடல்
உரவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும் –திருவாய் –6–4–1-
அரவம் வெருவ முன நாள் பூம் புனல் பொய்கை புக்கானவனுக்கு இடந்தான் —2—9–5-
முளைத்த வெயிற்று அழல நாகத்து உச்சியில் நின்ற அது வாடத் திளைத்து அமர் செய்து –3–3–4-
தளைக்கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கைத் தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம் இளைக்கத் தளைத்திட்டு
அதன் உச்சி தன் மேல் அடி வைத்த அம்மான் –3-8-7-
பல்லவம் திகழ பூம் கடம்பேறி அக்காளியன் பண வரங்கில் -ஒல்லை வந்துறப் பாய்ந்து அரு நடம் செய்த உம்பர் கோன் –4–2–2-
படவரவுச்சி தன் மேல் பாய்ந்து பன்னடங்கள் செய்து –4–6–5-
கடுவிடமுடைய காளியன் தடத்தைக் கலக்கி முன்னலக் கழித்து
அவன் தன் படமிறப் பாய்ந்து பன் மணி சிந்தப் பல் நடம் பயின்றவன் கோயில் —4- 10–3-
காளியன் தன் சென்னி நடுங்க நடம் பயின்ற பொற்றாமரையாள் தன் கேள்வன் —5–1–10-
பாய்ந்தான் காளியன் மேல் –6–7–5-
விடம் தானுடைய வரவம் வெருவர செருவில் முன நாள் முன் தடம் தாமரை நீர்ப் பொய்கை புக்கு மிக்க தாடாளன் -6-10-2-
புக்கு ஆடரவம் பிடித்தாட்டும் புனிதர் –10-8-8-
————————–
பிரலம்பாசுர வதம்
தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் –பெரியாழ்வார் –3–6–4–
கருளுடைய –பிலம்பனையும் —4–9 –3-
பிலம்பன் தன்னைப் பண்ணழிய பலதேவன் வென்ற –நாச்சியார் –12–7-
——————————–
கோபிகா வஸ்திர அபஹரணம்
அந்நாள் எங்கள் பூம் பட்டுக் கொண்ட அரட்டன் –பெரியாழ்வார் –2–1–4-
துகில் கைக் கொண்டு விண் தோய் மரத்தானால் இன்று முற்றும் வேண்டவும் தாரான் –2–10–2-
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்து அருளாயே –நாச்சியார் —3–1-
குருந்திடைக் கூறை பணியாய் —3–2-
நீ வேண்டியது எல்லாம் தருவோம் பல்லாரும் காணாமே போவோம் பட்டைப் பணித்து அருளாயே –3–3-
குருந்திடைக் கூறை பணியாய் —3–4-
கோலம் கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய் –3–5-
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டைப் பணித்து அருளாயே –3–6-
போராவிடாய் எங்கள் பட்டைப் பூம் குருந்து ஏறி இராதே –3–7-
கோமள வாயர் கொழுந்தே குருந்திடைக் கூறை பணியாய் -3–8-
வஞ்சகப் பேய்ச்சி பாலுண்ட மசிமை இலீ கூறை தாராய் –3- 9-
துளையார் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் –கலியன் —3- 8–8-
ஆயர் மாதர் இனவளை கொண்டான் –6–6–7-வளை -வஸ்திர உப லஷகம்
ஆயர் மட மக்களைப் பங்கய நீர் குடைந்தாடுகின்றார்கள் பின்னே சென்று ஒளிந்து இருந்து அங்கவர் பூந்துகில் வாரிக் கொண்டிட்டு
அரவேர் இடையார் இரப்ப மங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று மரம் ஏறி இருந்தாய் போலும் –10- 7–11-
———————
பத்த விலோசனம்
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று பார்த்து இருந்து
நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்துக்கு உய்த்திடுமின் –12–6-
———————————
கோவர்த்தன உத்தரணம்
மலையால் குடை கவித்து –பொய்கையார் -27-
கிடந்தது பூமி எடுத்தது குன்றம் –39-
குன்றம் –எடுத்த —54-
சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு —69-
வரை குடை தோள் காம்பாக ஆ நிரை காத்து –83-
குன்று எடுத்துக் பாயும் பனி மறுத்த பண்பாளா –86-
குன்றம் குடையாக ஆ காத்த கோ –பேயார் –41-
அவனே அருவரையால் ஆ நிரைகள் காத்தான் –51-
இமயப் பெருமலை போல் இந்த்ரனார்க்கு இட்ட சமய விருந்துண்டார் காப்பார்–நான்முகன் –87-
வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே–திருச்சந்த –39-
அன்று குன்றம் ஒன்றினால் ஆனை காத்து —40-
தொறுக்கலந்த ஊனமது ஒழிக்க வன்று குன்ற முன் பொறுத்த நின் புகழுக்கு அல்லலோர் நேசமில்லை நெஞ்சமே –106-
மலைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே –திருமாலை –36-
வன் குன்றம் ஏந்தி ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை –பெருமாள் –1–4-
குன்றினால் குடை கவித்ததும் —-7–9-
மத்த மா மலை தாங்கிய மைந்தன் –பெரியாழ்வார் –1–1–8-
காள நன் மேகமவை கல்லோடு கார் பொழியக் கருதி வரைக் குடையாக் காலிகள் காப்பவனே –1–5–2-
மலையை எடுத்து மகிழ்ந்து கல் மாரி காத்து —2–3–7-
குன்று எடுத்தாய் –2–9–6-
வானவர் கோன் விட வந்த மழை தடுத்து ஆ நிரை காத்தான் —2–10–4-
கோவலர் இந்த்ரற்கு காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் –3–3–8-
குன்று எடுத்து ஆ நிரை காத்த பிரான் கோவலனாய் குழலூதி —3–4–4-
அட்டுக் குவி பதிகம் முழுவதுமே –3–5-
அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய்யளறும் அடங்க பொட்டத் துற்றிப் — பொருமா கடல் வண்ணன் பொறுத்த மலை-3–5–1-
தன் பேரிட்டுக் கொண்டு தரணி தன்னில் தாமோதரன் தாங்கு தடவரை தான் —3–5–9-
ஆனாயர் கூடி அமைத்த விழவை –அமரர் தம் கோனார்க்கு ஒழிய கோவர்த்தனைத்துச் செய்தான் மலை –4–2–4-
தலைப் பெய்து குமுறிச் சதம் பொதி மேகம் சல சல பொழிந்திடக் கண்டு மலைப் பெரும் குடையால் மறுத்தவன் மதுரை மாம் புருடோத்தமன் –4-7-6-
குன்று எடுத்து ஆ நிரை காத்த வாயா –4-10–9-
வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே மது சூதா கண்ணனே –5–1–8-
குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி –திருப்பாவை -24-
காலிகள் உய்ய மழை தடுத்து கொற்றக் குடையாக வேந்தி நின்ற கோவர்த்தனத்தென்னை –நாச்சியார் –12–8-
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை –திரு விருத்தம் —8-
குன்றம் ஒன்றால் புயல் வாய் இன நிரை காத்த –24-
மால் வரை யைக் கிளர்ந்து மறி தரக் கீண்டு எடுத்தான் –74-
குன்று குடையாக ஆ கோத்த கோவலனார் நெஞ்சே புடை தான் பெரிதே புவி –பெரிய திருவந்தாதி -74-
மற்று யாராலே கல் மாரி காத்தது தான் –சிறிய திரு மடல்
துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை முன்னிருந்து முற்றத்தான் துற்றிய தெற்றெனவும் –பெரிய திரு மடல் –
வெற்பை ஓன்று எடுத்து ஒற்கம் இன்றியே நிற்கும் அம்மான் சீர் –திருவாய் –1–8–4-
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில் –2–10–4-
மேவி யன்று ஆ நிரை காத்தவன் –3–2–9-
குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் –3–3–8-
மலையை எடுத்துக் கன் மாரி காத்துப் பசு நிரை தன்னைத் தொலைவு தவிர்த்த பிரானை —3–5–3-
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானை —4–5–7-
திறம்பாமல் மாலை எடுத்தேனே என்னும் —5–6–5-
இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும் –5–6–6-
உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த வடிசில் உண்டதும் வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும் —-5–10–5-
குன்றம் ஓன்று ஏந்தியதும் —6–4–1-
குன்று ஏந்தி கோ நிரை காத்தவனே என்னும் –7–2–8-
அப்பன் தீ மழை காத்து குன்றம் எடுத்தானே –7–4–10-
குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் –7–4–11-
குன்று எடுத்து ஆ நிரை மேய்த்து அவை காத்த –7–6–2-
மலை ஏந்திக் கல் மாரி தன்னைக் காத்த —7–6–3-
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனதாவி ஆடும் —7–7–5-
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆ நிரை காத்தாய் —9–4–3-
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள் —-10–4–8-
கல் எடுத்துக் கல் மாரி காத்தாய் என்றும் –திரு நெடும் தாண் -13-
குன்று எடுத்த தோளினானை –29-
கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான் –கலியன் –1–3–4-
கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையைக் கல் ஓன்று ஏந்தி இன நிரை காத்து அடுத்தான்–1–5–5-
கன்றி மாரி பொழிந்திடக் கடிது ஆ நிரைக்கு இடர் நீக்குவான் சென்று குன்றம் எடுத்தவன் —1- 8–3-
அந்தமில் வரையால் மழை தடுத்தானை —2–3–4-
கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்திக் காத்தானை —2–5–4-
மஞ்சுயர் மா மாணிக் குன்றம் ஏந்தி மா மழை காத்து —2–8–4-
அடல் மழைக்கு நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் —3–1–8-
ஆயர் ஆ நிரைக்கு அன்று இடர் தீர்ப்பான் கூடிய மா மழை காத்த —3–3–1-
மலங்க வரு மழை காப்பான் உய்யப் பருவரை தங்கி ஆ நிரை காத்தான் –3–3–6-
வரை எடுத்த தோளாளா—3–6–5-
காலிகள் முன் காப்பான் குன்றதனால் மழை தடுத்து —3–10–8-
அண்டரானவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சென்றது எல்லாம் உண்டு கோ நிரை மேய்த்து அவை காத்தவன் —4–2–3-
மன்னு காம்புடைக் குன்றம் ஏந்திக் கடு மழை காத்த எந்தை –4–5–1-
குன்றால் குளிர் மாரி தடுத்து உகந்தானே —-4-7-3-
வெற்பால் மாரி பழுதாக்கி —5–1–4-
குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுதா ஆ நிரை காத்து —5–1–7-
பனி காத்த அம்மானை —5–6–1-
ஆயனாய் யன்று குன்றம் ஓன்று எடுத்தான் –5—7–6-
குடையா வரை ஓன்று எடுத்து ஆயர் கோவாய் நின்றான் —6–7–7-
வரை எடுத்து மழை தடுத்த குன்றாரும் திரள் தோளன்—6- -9–4-
குடையா வரையால் நிரை முன் காத்த பெருமான் –6–10–5-
குன்று குடையா எடுத்த அடிகளுடைய திரு நாமம் –6–10–7-
கடுங்கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கு என்று படும் கால நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சா முன் கொடும்
கால் குன்றம் குடை ஓன்று ஏந்தி நிரையைச் சிரமத்தால் நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ நாராயணமே —6–10–8-
குன்றால் மாரி தடுத்தானை —7–6–4-
பண்டு ஆ உய்ய வோர் மால் வரை ஏந்தும் பண்பாளா —-7–7–5-
வரையெடுத்த பெரு மாலுக்குஇழந்தேன் என் வரி வளையே–8- -3–1-
குன்றால் மாரி பழுதாக்கி —8–6–9-
புயலுறு வரை மழை பொழி தர மணி நிரை மயலுற வரை குடை எடு விய நெடியவர் —8–7–3-
ஆ நிரைக்கு அழிவென்று மா மழை நின்று காத்து உகந்தான் —9–10–7-
ஆயர் அன்று நடுங்க வா நிரை காத்த ஆண்மை கொலோ –10–9–2-
கூவாய் பூங்குயிலே குளிர் மாரி தடுத்து உகந்த —10–10–3-
குன்றம் ஓன்று எடுத்து ஏந்தி மா மழை அன்று காத்த அம்மான் —11–1–11-
குன்றம் எடுத்து மழை தடுத்து –11–2–1-
குன்றம் எடுத்து ஆ நிரை காத்தவன் தன்னை —11–8–10-
—————————-
ராசக் க்ரீடை
குரவை கோத்து –பொய்கையார் –54-
கோலக் குரவை காத்ததும் —பெருமாள் –7–9-
சுரி குழலாரோடு நீ போய்க் கோத்துக் குரவை பிணைந்து இங்கே வந்தால் —பெரியாழ்வார் —2–3–5-
குரவை கோத்த குழகனை மணி வண்ணனை –திருவாய் —3–6–3-
வல்லி சேர் நுண்ணிடை ஆய்ச்சியர் தம்மொடும் கொல்லமை செய்து குரவை பிணைந்தவர் —4- -2–2-
மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும்—-5- -10–2-
குரவை யாய்ச்சியாரோடு கோத்ததும்—-6–4-1-
கோத்து அங்கு ஆயர் தம்பாடியில் குரவை பிணைந்த எம் கோவலன் –கலியன் –1–8–4-
குரவை முன்னே காத்தானை —-2–5–4-
குரவை கோத்து —7–8–8-
குரவை முன் கோத்த —9–8–6-
ஆடி யசைந்து ஆய் மடவரோடு நீ போய் கூடிக் குரவை பிணை கோமளப் பிள்ளாய் —-10–8–9-
இளையரொடும் மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான் —11–2–1-
—————————————–
ஜலக்ரீடை
தடம் தாமரைப் பொய்கை புக்கான் –கலியன் –3–8–5-
—————————–
குடமாடு கூத்தன்
குடம் –ஆடி –பொய்கையார் –54-
கொண்டு குடமாடிக் கோவலனாய் மேவி —98-
குடம் நயந்த கூத்தனாய் நின்றான் –பேயார் -13-
குடம் கலந்த கூத்தனாய கொண்டல் வண்ணா –திருச்சந்த –38-
குடமாட்டும் –பெருமாள் —-7–9-
முது மணல் குன்று ஏறிக் கூத்து உவந்து ஆடிக் குழலால் இசை பாடி வாய்த்த மறையோர் வணங்க —பெரியாழ்வார் –1–9–8-
ஆடியாடி அசைந்து அசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தையாடி ஓடி ஓடிப் போய் விடாதே —-2–2–10-
குடங்கள் எடுத்து ஏற விட்டுக் கூத்தாட வல்ல எம் கோவே —2–7–7-
குடமாடு கூத்தா –2–9–6-
குடத்தை எடுத்து ஏற விட்டுக் கூத்தாட வல்ல எம் கோவே –நாச்சியார் —3–6-
குடமாடு கூத்தன் கோவிந்தன் —-10–7-
குடந்தைக் கிடந்த குடமாடி —13–2-
குடமாடி –நடமாடிய பெருமான் –திருச்சந்த -38-
சுழலக் குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டாடி –பெரிய திருவந்தாதி –31-
சீரார் குடம் இரண்டு ஏந்தி செழும் தெருவே ஆறார் எனச் சொல்லி யாடுமது கண்டு –சிறிய திருமடல்
மங்கையர் தம் கண் களிப்ப கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி –பெரிய திருமடல்
கூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்தவம்மானை –திருவாய் –2–5–11–4-
கோவிந்தன் –குடக் கூத்தன் –கோவலன் —2–7–4-
குடக் கூத்தனை —3–6–3-
மணி வண்ணனைக் குடக் கூத்தனை —-3–6–7-
குடக் கூத்தனார் —4–2–5-
கூத்தர் குடம் எடுத்தாடில் கோவிந்தனாம் என ஓடும் —4–4–6-
குடமாடியை –வானவர் கோனை –4–5–9-
நீள் குடக் கூத்தனுக்கு ஆட் செய்வதே —4–10–10-
எம் கூத்தாவோ -7–6–2-
எம் கூத்தாவோ —7–6–3-
கொண்டல் வண்ணா குடக் கூத்தா —8–5–6-
வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த அம்மானே —8–6–5-
எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய் —-9–7–1-
ஏத்துமின் நமர்காள் –என்று தான் குடமாடு கூத்தனை —10–1–11-
மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும் –திரு நெடும் தாண் -16-
ஆடு கூத்தனுக்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே –கலியன் —2-1–9-
குடமாடு கூத்தன் தன்னை —2–5–4-
கூத்தன் என வருகின்றான் —3–3–1-
தண் குடந்தைக் குடமாடீ —3–6–8-
குடமாடு கூத்தன் —3–10–8-
குடமாடி மதுசூதன் –5–5–6-
தயிருண்டு குடமாடு —5–10-1-
மல்லா குடமாடீ -மது சூதனே –6–3–9-
மன்றாரக் குடமாடி —6–9–4-
குடமாடிய கூத்தனை —-7–3–3-
கோவலர் கூத்தன் குறிப்பு அறிந்து —9–5–8-
குடம் கலந்தாடி —-9–8–6-
குடமாடீ கொட்டாய் –10–5–6-
மன்றில் மலிந்து கூத்து வந்தாடி—10- -9–2-
கொட்டாய் பல்லிக் குட்டி குடமாடி —-10–10–4-
பறை கறங்கக் கண்டவர் தம் கண் களிப்ப மன்றில் மரக்கால் கூத்தாடினான் —-11–5–6-
————————–
அரிஷ்டாசூர-எருது -பங்கம்
ஏர் விடை செற்று –பெரியாழ்வார் –2–3–10-
கஞ்சனும் எருதும் வஞ்சனையின் மடிய —4–3–2-
எருது அடர்த்த எந்தை —கலியன் –4–5–4-
அம்பரம் ஏழும் அதிரும் இடி குரல் அம் கனல் செங்கண் யுடை வம்பவிழ் கானத்து மால் விடையொடு பிணங்கி நீ வந்தாய் போலும் —10–7–13-
———————–
கேசி வதம்
மாவாய் பிளந்து –பொய்கையார் —27-
முன்னொரு நாள் மாவாய் பிளந்த மகன் —பூதத்தார் –28-
கூந்தல் வாய் கீண்டானை —93-
மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் —பேயார் –42-
அன்று துரக வாய் கீண்ட துழாய் முடியாய் —47-
நீ யன்றே மா வாய் உரம் பிளந்து —48-
துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு –48-
காய்த்த நீள் –மா பிளந்து —திருச்சந்த —37-
காய் சினத்த –சுமாலி கேசி தேனுகன் —-107-
மாவினை வாய் பிளந்து உகந்த மாலை –பெருமாள் –1–4-
கருளுடைய —கடிய மாவும் –பெரியாழ்வார் –4–9–3-
மாவாய் பிளந்தானை –திருப்பாவை –8-
மாவாய் பிளந்தார் மனம் வலித்தே கொல்–பெரிய திருவந்தாதி –50-
வெம்மா வாய் கீண்ட –செம்மா கண்ணனே –திருவாய் —1–8–2-
மாவாய் பிளந்து —2–1–10-
வெம்மா பிளந்தான் தன்னை —4–5–1-
மாய மாவினை வாய் பிளந்ததும் —5–10–2-
துரங்கம் வாய் பிளந்தானுறை தொலை வில்லி மங்கலம் என்று —6–5–9-
மாவை வல்வாய் பிளந்த மதுசூதற்கு—-6–8–7-
மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா –திரு நெடும் தாண் –13-
பரிவாய் கீண்ட சீரானை —கலியன் —2–5–1-
பரியைக் கீறி —-2–10–7-
மாவாயின் அங்கம் மதியாது கீறி —3–2–8-
ஒக்கலித்திட்டு ஆடல் நன் மா உடைத்து –3–3–1-
வெவ்வாய மா கீண்டு –விண்ணவர் கோன் —-3–4–5-
வெஞ்சினத்தரி பரி கீறிய —4–2–7-
மாத் தொழில் மடங்கச் செற்று —-4–5–3-
மாவாய் பிளந்து –5–1-3-
வேங்கடத்து அரியை பரி கீறியை —7- 3-5-
துரங்கம் படக் கீறிய தோன்றலை —7–10–6-
பரி கீறிய வப்பனை —7–10–7-
துரங்கம் வாய் கீண்டு உகந்தானது —8–2–7-
கதமா –மடிவித்து –8–6–8-
பதமிகு பரியின் மிகு சினம் தவிர்த்த —9–8–8-
அரிமாச் செகுத்து —9–10–8-
சுரிந்திட்ட செங்கேழ் உளைப் போங்கரி மா தொலையப் பிரியாது சென்று எய்தி எய்தாது இரிந்திட்டு
இடம் கொண்டு அடங்காத அதன் வாய் இறு கூறு செய்த பெருமான் —10–6–9-
மா வாய் கீண்ட மணி வண்ணனை வர —-10–10–3-
அரி மாச் செகுத்து —11–2–2-
—————————-
கூனி கூன் நிமிர்த்தது
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் —திருவாய் —1–5–5-
நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்னத் தேறியவளும் திரு உடம்பில் பூச ஊறிய
கூனினை உள்ளே ஒடுங்க —உருவினாய அச்சோ –பெரியாழ்வார் –1–8–4-
சாந்தணி தோள் சதுரன் மலை—–4- -2–6-
ஒரு கால் நின்று உண்டை கொண்டோட்டி வன் கூன் நிமிர நினைந்த பெருமான் —கலியன் —10–6–2-
—————————————————–
குவலயாபீட நிரசனம்
வென்றி சூழ் களிற்றை ஊன்றிப் பொருதுடைவு கண்டான் –பொய்கையார் -18-
கொலையானைப் போர்க்கோடு ஒசித்தனவும்—27-
அடல் வேழம் இறுத்து –54-
கோணாகம் கொம்பு ஒசித்த கோ –பூதத்தார் –68-
அதவிப்போர் யானை ஓசித்து —89-
சினமா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து –பேயார் –43-
சகடம் உதைத்து பகடுந்தி —45-
காய்ந்து கரி யுருவம் கொம்பு ஓசித்தான்—65-
யானை பிடித்து ஓசித்து –நான்முகன் —33-
கடம் கலந்த வன் கரி மருப்பு ஓசித்து –திருச்சந்த —38-
ஆனை காத்தோர் யானை கொன்று —40-
வெஞ்சினத்த வேழ வெண் மருப்பு ஓசித்து —-43-
பொற்றை யுற்ற முற்றல் யானை போர் எதிர்த்து வந்ததை பற்றி யுற்று மற்றதன் மருப்பு ஒசித்த பாகனூர் –அரங்கமே —52-
மத்தயானை மத்தகத்து–உரம் கெடப் புடைத்து ஓர் கொம்பு ஓசித்து உகந்த உத்தமா –58-
கவளமால் யானை கொன்ற –திருமாலை –45-
வெங்கட்டிண் களிறு அடர்த்தாய் —பெருமாள் —5–5-
இருங்கைம் மத களிறு ஈர்க்கின்றவனை –பெரியாழ்வார் —1–2–7-
வேழமும் ஏழ்விடையும் –வென்று வருமவனே —-1–5–3-
துங்க மத கரியின் கொம்பு பறித்தவனே –1–5–6-
பொரு கரியின் கொம்பு யோசித்தாய் –2–7–5-
கும்பக களிறு அட்ட கோவே —2–8–8-
கொலை யானைக் கொம்பு பறித்து —4–1–3-
கஞ்சன் தன் ஒரு வாரணம் உயிர் யுண்டவன் —4–2–5-
களிறும் மருதும் வஞ்சனையின் மடிய —-4–3–2-
வேழத்தை முறுக்கி –மேலிருந்தவன் தலை சாடி –4-7–7-
கருளுடைய –கதக் களிறும் –4–9–3-
குஞ்சரம் வீழக் கொம்பு ஓசித்தானே—-5–1–5-
காரணா களிறு அட்ட பிரானே —-5–1–8-
மருப்பு ஓசித்தாய் என்று என்று உன் வாசகமே —-5–4–7-
வல்லானை கொன்றானை –திருப்பாவை –15-
அங்கோர் கரி அலற மருப்பினை ஓசித்து –மணி வண்ணற்கு –நாச்சியார் -1–10-
ஓடை மா மத யானை யுதைத்தவன் –4–5-
மருப்பு ஒசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் –7-1-
காட்டை நாடி தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டையாடி வருவானை –14–9-
ஓரானை கொம்பு ஓசித்து ஓரானை கோள் விடுத்த சீரானை –சிறிய திரு மடல்
வேழ மருப்பை ஓசித்தான் —திருவாய் –1–9–2-
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் என் மாதவனே —2–7–2-
மத களிறு அட்டவன் பாதம் பணிமினே —4—1–4-
குல நல் யானை மருப்பு ஓசித்தாய் —4–3–1-
கவளக் கடாக் களிறு அட்ட பிரான் —4–6–5-
களிறு அட்ட தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரான் –5–3–8-
நீள் நெடும் கைச் சிகர மா களிறு அட்டதும் —6–4–3-
வார் கடா வருவி யானை மா மலையின் மருப்பிணைக் குவடு இறுத்து உருட்டி ஊர் கொள் திண் பாகன் உயிர் செகுத்து —-8–4–1-
செம் முகத்த களிறு அட்ட பொன்னாழிக் கை என்னம்மான் –8–10–6-
ஆறா மத யானை அடர்த்தவன் தன்னை —9–4–11-
வாரணம் தொலைத்த —-10–5–2-
மத மிக்க கொலையானை மருப்பு ஓசித்தான் —10–6–6-
கரி முனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும் – –திரு நெடும் தாண் –25-
போரானைக் கொம்பு ஒசித்த போர் ஏற்றினை –கலியன் –2–5–1-
படு மதத்த களிற்றின் கொம்பு பறித்தானை—2- -5–6-
வெம்பு சினத் தடல் வேழம் வீழ வெண் மருப்பு ஓன்று பறித்து இருண்ட வம்புதம் பொன்று இவரார் கொல்—2–8–3-
ஆனை அஞ்ச அதன் மருப்பு அன்று வாங்கும் ஆயர் கொல் –2–8–4-
இருங்கைம் மா கரி முனிந்து —2–10–7-
மேவு சினத்தடல் வேழம் வீழ முனிந்து –3–3–7-
வேழம் அட்ட விண்ணவர் கோன் —3–4–5-
போரானைக் கொம்பு ஒசித்த –3–6–6-
அண்டர்கள் முன் கண்டு மகிழ்வு எய்த கும்ப மிகு மத யானை மருப்பு ஓசித்து —3–10–3-
கும்ப மிகு மத யானை பாகனோடும் குலைந்து வீழ கொம்பதனைப் பறித்து எறிந்த கூத்தன் —4–1–9-
பருங்கை யானையின் கொம்பினைப் பறித்து அதன் பாகனைச் சாடிப் புக்கு —4–2–4-
வெஞ்சினக் களிறும் —வெகுண்டு இறுத்து —4–3–7-
தாங்கரும் சினத்து வன் தாள் தடக்கைம் மா மருப்பு வாங்கி —4- -5–4-
மாத்தமர் பாகன் வீழ மத கரி மருப்பு ஓசித்தாய் —-4–6–7-
கானார் கரி கொம்பது ஒசித்த களிறே —4–7–4-
கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் –4–8–1-
புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதானூர்—-6–5–6-
பூணா தனலும் தறு கண் வேழம் மறுக வளை மருப்பைப் பேணான் வாங்கி —6–10–3-
கும்ப மிகு மத வேழம் குலையக் கொம்பு பறித்து —7–8–8-
ஊடேறு –கஞ்சனோடு –ஒண் கரியும் செற்ற —7–8—9-
போரானைக் கொம்பொசித்த புட் பாகன் என் அம்மான் —8–1–4-
மழை மதத்த சிறு தறு கண் கரி வெருவ மருப்பு ஓசித்தாருக்கு –8–3–2-
கருந்தாள் களிறு ஓன்று ஓசித்தான் —8–6–6-
மத கரியும் –மடிவித்து —-8–6–8-
தூம்புடைக் கை வேழம் வெருவ மருப்பு ஒசித்த —9–2–6-
மற்றோர் சின வேழம் கொலையார் கொம்பு கொண்டான் –9–6–10-
பொருமா கரி கொம்பு ஓசித்து —9–9–7-
ஆனை காய்ந்து —9–10–8-
ஆனை வாட்டி யருளும் –10–1–6-
கம்ப மா களிறு அஞ்சிக் கலங்க —10–1–9-
அன்ன நடை மடவாய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அரு வரை போல் மன்னு கரும் களிற்று ஆருயிர் வவ்விய மைந்தனை –10–7–14-
ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு —11–2–2-
கொலை கெழு செம்முகத்த களிறு ஓன்று கொன்று –11- -4–10-
————————-
மல்ல நிரசனம்
மல் அட்டு –பொய்கையார் –54-
மல் பொன்ற நீண்ட தோள் –பேயார் –69-
மல் பொரு தோளுடை வாசுதேவா –பெருமாள் –6–6-
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா –திருப்பல்லாண்டு -1-
எதிர் வந்த மல்லை அந்தரமின்றி அழித்தாடிய தாளிணையாய் –பெரியாழ்வார் –1- 5–6-
இரு மலை போல் எதிர்ந்த மள்ளர் இருவரங்கம் எரி செய்தாய்–2- 2–8-
தெருவின் கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்களோடு பொருது வருகின்ற பொன்னே —-2–7–6-
மல்லரை அட்டவன் பின் போய் மதுரை புறம் புக்காள்—-3–8–1-
ஏவிற்றுச் செய்வான் என்று எதிர்த்து வந்த மல்லரை சாவத் தகர்த்த —4–2–6-
மல் பொருது எழ —4–7–7-
மல்லடர்த்தாய் என்று என்று உன் வாசகமே –5–4–7-
மல்லரை மாட்டிய –திருப்பாவை –8-
மல் பொருந்தா மல் களம் அடைந்த மதுரைப் புறத்து –நாச்சியார் –12–1-
வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர் வலிய முடியிடிய வாங்கி வலிய நின் பொன்னாழிக் கையால் புடைத்திடுதி–பெரிய திருவந்தாதி -41-
செயற்பால் அல்லவே செய்கிறுதி நெஞ்சமே யஞ்சினேன் மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து –83-
நிகரில் மல்லரைச் செற்றதும் –திருவாய் –6–4–3-
மல் பொரு தோளுடை மாய பிரானுக்கு —-6–6–10-
ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி –7–4–5-
அரங்கின் மல்லரைக் கொன்று —-8–4–1-
மல்லடர்த்து மல்லரையன் யன்று யட்டாய் என்றும் –திரு நெடும் தாண் –13-
மல்லை யட்டு –கலியன் —2–10–7-
மல்லரைக் கொன்று –3–3–1-
ஒருங்க மல்லரைக் கொன்று —4–2–4-
வில்லோடு மல்லும் வெகுண்டு இறுத்த —4–2–7-
மல்லரை யட்டு மாள –4–6–6-
மல்லடர்த்து –5–1–3-
கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் காலினால் துஞ்ச வென்ற -5- -4–7-
மல் அமருள் மல்லர் மாள மல்லடர்த்த மல்லா —6–2–6-
வில்லார் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல்லடர்த்து –6–7–5-
ஊடேறு கஞ்சனோடு மல்லும் –செற்ற —7–8–9-
மல்லர் ஆருயிரும் —-மடிவித்து –8–6–8-
மல்லே பொருத திறல் தோள் மணவாளர் –10–8–7-
——————–
கம்சவதம்
கடந்தது கஞ்சனை முன்னஞ்ச –பொய்கையார் –39-
கதவிக் கதஞ்சிறந்த காஞ்சனை முன் காய்ந்து —-பூதத்தார் –89-
அடியால் முன் கஞ்சனைச் செற்று –92-
முன் கஞ்சைக் கடந்தானை நெஞ்சமே காண்–பேயார் -34-
கஞ்சனைக் கடிந்து –திருச்சந்த –43-
மல்லை மா நகர்க்கு இறையவன் தன்னை வான் செலுத்தி –7–11-
திரு மதுரையுள் சிலை குனித்து –திருப்பல்லாண்டு -10-
—————
கம்சவதம்- கம்சன் வில் முறித்தது
வன் கஞ்சன் மாளப் புரட்டி –பெரியாழ்வார் –2–1–4-
கஞ்சனை யுன் வஞ்சனையால் வலைப்படுத்தாய் —2–2–4-
கறுத்திட்டு எதிர் நின்ற கஞ்சனைக் கொன்றான் —2–6–3-
கஞ்சனைக் கால் கொடு பாய்ந்தாய் –2–7–6-
கொடும் கஞ்சன் நெஞ்சினில் கூற்றே –2–8–8-
கஞ்சனைக் காய்ந்த —3–2–1-
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையின் மடிய வளர்ந்த மணி வண்ணன் –4–3–2-
எழப் பாய்ந்த அரையனை யுதைத்த மால் —4–7–7-
கொடுமைக் கஞ்சனைக் கொன்று –5–1–4-
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பன்ன நின்ற நெடுமாலே –திருப்பாவை —25-
கஞ்சன் வலை வைத்த வன்று கார் இருள் எல்லில் பிழைத்து நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய்–நாச்சியார் –3–9-
கஞ்சனை வஞ்சனையில் செற்றவன் —-4–6-
வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ –4–7-
கஞ்சைக் காய்ந்த கரு வில்லி —13–3-
விறல் கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத் தஞ்சம் என்று இவள் பட்டனவே –திருவாய் —2–4–8-
சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு ஆதி யம் சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த —3–5–5-
கஞ்சனை வஞ்சித்து –3–8–9-
கஞ்சனைத் துஞ்ச வஞ்சம் செய்ததும் —6–4–5-
மாட மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த —8–4–1-
கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னை –9–6–11-
கஞ்சன் மாளக் கண்டு முன்னண்டம் ஆளும் –திரு குறும் தாண் –1-
வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழச் செற்றவன் –கலியன் —2–3–1-
முன் நண்ணாத கஞ்சைக் கடந்தவனூர் –2–6–7-
வஞ்சகம் செய் கஞ்சனுக்கு நஞ்சானானை –2–10–7-
கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில் –3–10–3-
வலி மிக்க கஞ்சன் உயிரது உண்டு —3–10–9-
கஞ்சனை யுதைத்தவன் யுறை கோயில் —4–2–4-
கஞ்சனைக் காய்ந்த காளை யம்மானை—-4–3–7-
கஞ்சனை மலைந்து கொன்று —4–6–8-
கஞ்சனைக் காய்ந்த –4–10–4-
கஞ்சன் நெஞ்சும் காலினால் துஞ்ச வென்ற —5–4–7-
தரியாது கஞ்சனைக் கொன்று —5–6–6-
கல்லார் திரள் தோள் கஞ்சனைக் காய்ந்தான் —6–7–5-
கஞ்சனைக் காய்ந்தான் —7–6–5-
கறுத்துக் கஞ்சனை யஞ்ச முனிந்தாய் —7–7–7-
உஊடேறு கஞ்சனோடு மல்லும் வில்லும் ஒண் கரியும் உருள் சகடமும் உடையச் செற்ற —-7–8–9-
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனை —7–10–8-
கஞ்சனை யஞ்ச முன்கால் விசைத்த காளையராவர் —9–2–6-
கஞ்சனை முன்னம் கடந்த நின் கடும் திறல் தானோ –10–9–3-
மல்லோடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணி வண்ணன் —-11–2–3-
————————–
கண்ணன் அத்யயனம்
காதலால் மறை நான்கும் முன்னோதிய பட்டனை —-கலியன் –7–3–6-
—————————-
சாந்தீபினி புத்ரனை மீட்டுக் கொடுத்தது
மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை ஓதுவித்த தக்கணையா வுருவுருவே கொடுத்தான் –பெரியாழ்வார் –4–8–1-
ஒது வாய்மையும் யுவனியப்பிறப்பும் உனக்கு முன் தந்த வந்தணன் ஒருவன் காதலல் என் மகன் புகலிடம் காணேன் கண்டு நீ தருவாய்எ
னக்கு என்று –குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய் –கலியன் —5–8–7-
முந்து நூலும் முப்புரி நூலும் முன்னீந்த அந்தணாளன் பிள்ளையை அந்நான்று அளித்தானூர் —6–5–7-
———————————————–
வைதிகன் பிள்ளைகளை மீட்டுக் கொடுத்தது
தப்பின பிள்ளைகளை தன மிகு சோதி புகத் தனியொரு தேர் கடவித் தாயோடு கூட்டிய –பெரியாழ்வார் –1–5–7-
பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும் இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படுத்த யுறைப்பன்—-4–8–2-
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறத் திண் தேர் கடவிச் சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
வைதிகன் பிள்ளைகளை உடலோடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயரிலனே –திருவாய் -3—10–5-
கலக்க வேழ் கடலும் கடல் ஏழ் மலை உலகு ஏழும் கழியக் கடாய் உலக்கத் தேர் கொடு சென்ற மாயமும் —-6–4–9-
வேத வாய் மொழி யந்தணன் ஒருவன் எந்தை நின் சரண் என்னுடைய மனைவி காதல் மக்களைப் பயத்தலும் காணாள்
கடியதோர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய் –கலியன் —5–8–8-
—————————–
கால நேமி வதம்
கால நேமி காலனே–திருச்சந்த —31-
கடங்கலந்த –கால நேமி காலனே –38-
சாலி வேலி–கால நேமி வக்கரன் கரன் முரன்–காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே –59-
கடைந்து பாற் கடல் –கால நேமியைக் கடிந்து —81-
கறுத்து எதிர்ந்த கால நேமி காலனோடு கூட வன்று அறுத்த வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய் -106-
——————————-
நாரதர் கண்ட ஸ்ரீ கிருஷ்ண வைபவம்
ஆமையாய்க் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய் யரு வரைகளாய் நான்முகனாய் நான் மறையாய் வேள்வியாய்த் தக்கணையாய்த் தானுமானான்
சேமமுடை நாரதனார் சென்று சென்று துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில் –பெரியாழ்வார் –4–9–5-
——————————
அர்ஜுனன் கண்ட ஸ்ரீ கிருஷ்ண வைபவம்
தீர்த்தன் உலகு அளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு பார்த்தன்
தெளிந்து ஒழிந்த பைந்துழாயான் பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –திருவாய் –2–8–6-
————————–
சீமாலிகன் வதம்
சீமாலிகானவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் சாமாறவனை நீ எண்ணிச் சக்கரத்தால் தலை கொண்டாய் –பெரியாழ்வார் –2–7–8-
—————————
ஸ்ரீ த்வாராபதி மன்னன்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவ்வம் ஏறி துவரை எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தான் —4–1–9-
பதினாறாமாயிரவர் தேவிமார் பனி செய்ய துவரை என்னும் அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் —4–9–4-
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்து –நாச்சியார் —1–4-
விரை சூழ் துவாராபதிக் காவலன் –4–8-
பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்து இருப்ப மதுவாயில் கொண்டால் போல் மாதவன் தன் வாய் அமுதம்
பொதுவாக யுண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால் -7–9-
துவாராபதி எம்பெருமான் –9–8-
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவாராபதிக்கு என்னை உய்த்திடுமின் –12–8-
மன்னப்படு மறை வாணனை வண் துவராபதி மன்னனை –திருவாய் —4- -6–10-
வண் துவராபதி மன்னன் மணி வண்ணன் —5–3–6-
—————————
திரௌபதி கூந்தலை முடிப்பித்துப் பாண்டவர்களுக்கு ராஜ்ஜியம் கொடுத்தது
மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி –பெரியாழ்வார் —4–9–6-
————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: