அருளிச் செயல்களில் -ஆறாம் பாகம் -ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் -முதல் பாகம் –ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் –

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –ஸ்ரீ மது ஸூதன வைபவம் –ஸ்ரீ கிருஷ்ண சம்போதனம் –ஸ்ரீ கிருஷ்ண சைஸவம் –துரியோதன க்ருத்யம் –துர்கா வைபவம்
ஸ்ரீ கிருஷ்ண லீலைகள் –கோபியர் உடன் லீலைகள் –வேணு கானம் –பரீக்ஷித் ரக்ஷணம் –ஸ்ரீ கிருஷ்ணன் -பூதனா வதம் –சகட பங்கம்

-நவநீத சாதுர்யம் -உலூகல பந்தனம் -வையம் ஏழும் காட்டியது –மருதமரம் முறித்தல் –
ஸ்ரீ கிருஷ்ண பால்ய லீலைகள் -கோ பாலனம் –குருந்தம் ஒசித்தது–வத்ஸா கபித்த நியாசம் –பகாஸூரா வதம் –தேனுகாஸூர வதம்
நரகாசுர வதம் –காளீய தமனம் –பிரலம்பாஸூர வதம் –கோபிகா வஸ்திர அபஹரணம் -பக்த விலோசனம் -கோவர்த்தன உத்தரணம்
ராச லீலை –ஜலக்ரீடை –குடக்கூத்து –அரிஷ்டாஸூர நிராசம் –கேசி வதம் –கூனி கூன் நிமிர்த்தது –
-குவலயா பீடம் நிராசம் –மல்ல நிராசம் -கம்ச வதம் -தனுர் பங்கம்
ஸ்ரீ கிருஷ்ண உபநயனம் -அத்யயனம் -சாந்தீபன புத்ராநயனம் –வைதிக புத்ராநயனம் –கால நேமி வதம் –
நாரதர் கண்ட காட்சி –அர்ஜுனன் கண்ட காட்சி -சீமாலிகன் வதம் -திரௌபதி குழல் முடித்தல் -பாண்டவர்கள் ராஜ்ய லாபம் –

ஸ்ரீ ருக்மிணி விவாஹம் –ருக்மி பங்கம் –சிசுபால பங்கம் -தந்த வக்த்ர நிராசம் –காண்டாவன தஹநம் -நப்பின்னை திருமணம்
-பாரிஜாத அபஹரணம் -தேவர்கள் ஸூ ரிகள் இந்த்ரிய வஸ்யர் -பாண விஜயம்
ஸ்கந்த பங்கம் -பவுண்டராக பங்கம் -காசி ராஜ மாலி ஸூ மாலி பங்கம் –ஆழியால் ஆழி மறைத்தல் -ஜெயத்ர வதம்
ஸ்ரீ கிருஷ்ணன் தூது -மது கைடப நிரஸம் – ஸ்ரீ பார்த்த சாரதி -பாரதப் போர் –குதிரை விடாய் தீர்த்தல் –
அசுரர் வதம் -தேவாசுர யுத்தம் -பலராமர் அவதாரம் -கல்கி அவதாரம் –
——————————–
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்
அசைவில் சேர்க்க கண்ணன் நெடுமால் –பொய்கையார் -7-
பெற்றார் தளை கழல —20-
அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள்வாய் குரவை குட முலை மல் குன்றம் கரவின்றி
விட்டு இறுத்து மேய்த்து ஓசித்துக் கீண்டு கூத்து ஆடி உண்டு அட்டு எடுத்த செங்கண் அவன் –54-
நமன் தமரால் ஆராயப் பட்டு அறியார் கண்டீர் –பேராயர்க்கு ஆட்பட்டார் பேர் -55-
கேசவனை –100-
இழைப்பரிய ஆயவனே யாதவனே என்று அவனை யார் முகப்பும் மாயவனே என்று மதித்து –பூதத்தார் -50-
மாலே நெடியோனே கண்ணனே –100-
அவரவர் என்று இல்லை அநங்க வேள் தாதைக்கு எவரும் எதிர் இல்லை கண்டீர் –நான்முகன் -56-
ஆறுமாறு –ஊறோடு ஓசையாய ஐந்தும் ஆயவாய மாயனே –திருச்சந்த -2-
ஓன்று இரண்டு தீயுமாகி ஆயனாய மாயனே –7-
உன் கருத்தை யாவர் காண வல்லர் கண்ணனே –25-
ஆதியாகி யாயனாய மாயம் என்ன மாயமே -34-
கொம்பராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய் எம்பிரானுமாய வண்ணம் –35-
ஆடகத்த பூண் முலை யசோதை யாய்ச்சி பிள்ளையாய் –36-
ஆனை காத்து –அது அன்றி ஆயர் பிள்ளையாய் –40-
ஆயனாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய் -41-
ஆயர் தம் கொழுந்தே என்னும் –திருமாலை -2-
கற்றினம் மேய்த்த எந்தை -9-
தனிக் கிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான் —16-
கார் ஓளி வண்ணனே கண்ணனே -29-
வேலை வண்ணனை என் கண்ணனை –பெருமாள் —1–4-
ஆதி ஆயன் அரங்கன் அந்தாமரை பேதை மா மணாளன் தன் பித்தனே —3–5-
ஆயனே அரங்கா என்று அழைக்கின்றேன் –3–8-
வாசு தேவா -6–1 –பெருமாள் திருமொழி-6- முழுவதுமே கண்ணன் விஷயமே
தாமோதரா -6–2-
மருது இறுத்தாய் –6–3-
மனக்கேதம் சாரா மது ஸூதன் தன்னை –நான்முகன் –61-
——————-
மது சூதன் –அநிருத்தன் மது சூதநன் -அவதார கந்த பூதன் -என்பர் பெரியோர்
மது சூதனை மார்பில் தங்கவிட்டு வைத்து –பெரியாழ்வார் –4–5–6-
மன்னவன் மது சூதன் என்பார் –4–5–7-
ஓங்கு முந்நீர் வளப் பெரு நாடன் மது சூதனன் –திருச்சந்த –59-
மது சூதா நீ யருளாய் –திருவாய் –7–8–1-
மது சூதனை –7–10–3-
மது சூத வம்மானுறை பூத்த பொழில் தன் திருக் கடித் தானத்தை —8–6–6-
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா –திருப்பல்லாண்டு -1-
வண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் எண்ணை சுண்ணம் எதிர் எதிர் தூவிட –பெரியாழ்வார் —1- 1–1-
நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பர் –1–1–2-
திரு வோணத்தான் உலகாளும் என்பார்களே -1–1–3-
வாயுள் வையகம் கண்ட மட நல்லார் ஆயர் புத்ரன் அல்லன் யரும் தெய்வம் பாய
சீருடைப் பண்புடைப் பாலகன் மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே –1-1–7-
பேதைக்கு குழவி பிடித்துச் சுவைத்து யுண்ணும் –1–2–1-
அணைத்தார யுண்டு கிடந்த விப்பிள்ளை -1–2–3-
உழந்தாள் நறு நெய் ஒரோ தடா யுண்ண இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின் பழம் தாம்பால் ஓச்சப் பயத்தால் தவழ்ந்தான் –1–2–4-
அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய வச்சுதன்–1–2–6-
வந்த மதலைக் குழாத்தை வலி செய்து தந்தக் களிறு போலே தானே விளையாடும் நந்தன் மதலை –1–2–8-
செய்த்தலை நீல நிறைத்துச் சிறுப் பிள்ளை –1–2–12-
ஆய்ச்சி மகனாகக் கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு–1–2–13-
நாக்கு வழித்து நீராட்டும் இந்நம்பிக்கு வாக்கும் நயனும் வாயும் முறுவலும் மூக்கும் இருந்தவாறு –1–2–16-
வசுதேவர் தம் மகனாய் வந்து –1–2–15-
தேவகி பெற்ற உருவு கரிய ஓளி மணி வண்ணன் –1–2–17-
சிற்றில் இழைத்து திரிதருவோர்களை பற்றிப் பறித்துக் கொண்டோடும் பரமன் –1–2–19-
மழ கன்றினங்கள் மறித்துத் திரிவான் –1–2–20-
——————————-
கண்ணனை விளிக்கும் விளி
மாணிக் குறளனே —1- -3–1-
உடையாய் அழேல்–1–3–2-
தாமரைக் கண்ணனே -1–3–3-
செங்கண் கரு முகிலே –தேவகி சிங்கமே –1–3–4-
தூ மணி வண்ணனே —1–3–5-
சுந்தரத் தோளனே –1–3–6-
————————-
கண்ணன் சைஸவம்
என் மகன் கோவிந்தன் –1–4–1-
என் சிறுக் குட்டன் –1–4–2 –
வேங்கட வாணன் –1–4–3-
சக்கரக் கையன் –1–4–4-
தண்டோடு சக்கரம் சார்ங்கம் ஏந்தும் தடக்கையன் –1–4–6-
சிறியன் என் இளம் சிங்கத்தை –1–4–8-
யசோதை தன் மகன் –1–4–10-
பின்னைத் தொடர்ந்தோர் கரு மலைக் குட்டன் —1–7–5-
காமர் தாதை தளர் நடை நடவானோ –1–7–6-
தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ –1–7–8-
ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன் தன்னை –1–7–11-
ஆயர் பெருமானே –1–8–3-
ஆழி யங்கையனை –1–8–5-
கார் ஒக்கும் மேனிக் கரும் பெரும் கண்ணே ஆயர்கள் போர் ஏறே—1–8–6-
சக்கரக் கையனே சங்கம் இடத்தானே –1–8–7-
மார்வில் மறுவனே —1–8–9-
வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க மொட்டு நுனியில் முளைக்கின்ற முத்தே போல் சொட்டுச் சொட்டு என்னத்
துளிக்கத் துளிக்க என் குட்டன் வந்து என்னைப் புறம் புல்குவான் —1–9–1-
பார்த்தன் சிலை வளையத் திண் தேர் மேல் முன்னின்ற செங்கண் அலைவலை–2–1–2-
இருட்டில் பிறந்து போய் ஏழை வல்லாயர் மருட்டைத் தவிர்ப்பித்து —2–1–4-
———————————–
துரியோதனன் பஹு மானம் செய்தது
கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி எழலுற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும் சுழலைப் பெரிதுடைத்
துச்சோதனனை அழலை விழித்தானே யச்சோ யச்சோ –ஆழி யங்கையனே -1–8–5-
—————————-
ஸ்ரீ கிருஷ்ணன்
யசோதை இளம் சிங்கம் கொத்தார் கரும் குழல் கோபால கோளரி —2–1–7-
திரு வாயர் பாடிப் பிரானே –2–3–7-
வன் புற்று அரவின் பகைக் கொடி வாமன நம்பி –2–3–8-
—————————
பற்பல லீலைகள்
எண்ணெய் குடத்தை யுருட்டி இளம் பிள்ளை கிள்ளி எழுப்பி கண்ணைப் புரட்டி விழித்து —2–4–6-
உந்தி எழுந்த உருவ மலர் தன்னில் சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன் –2–5–8-
காலிப் பின் போவாற்கு ஒரு கோல் கொண்டு வா –2–6–1-
பாலப் பிராயத்தே பார்த்தற்கு அருள் செய்த —2–6–6-
மச்சோடு மாளிகை ஏறி மாதர்கள் தம்மிடம் புக்கு கச்சோடு பட்டைக் கிழித்து காம்பு துகிலவை கீறி —2–7–3-
மென் முலையார்கள் சிறு சோறும் இல்லும் சிதைத்திட்டு -2–8–3-
கண்ணில் மணல் கொடு தூவிக் காலினால் பாய்ந்தனை என்று என்று –2–8–4-
—————————-
கிருஷ்ணனை காக்கும் துர்க்கை
கற்புடைய மடக்கன்னி காவல் –திரு நெடும் தாண்-7-
————————–
துஷ்ட சேஷ்டிதங்கள்
வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடையிட்டு அதனோசை கேட்க்கும் –பெரியாழ்வார் –2–9–1-
வருக வருக வருக இங்கே வாமன நம்பி காகுத்த நம்பி –2–9–2-
உருக வைத்த குடத்தோடு வெண்ணெய் உறிஞ்சி யுடைத்திட்டுப் போந்து நின்றான் –2–9–2-
பாலைக் கறந்து அடுப்பேற வைத்துப் பல் வளையாள் என் மகள் இருப்ப மேலை யகத்தே நெருப்பு வேண்டிச் சென்று
இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன் சாளக்கிராமம் உடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான் –2–9–5-
செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்காரம் நறு நெய் பாலால் பன்னிரண்டு திருவோணம் அட்டேன் பண்டும்
இப்பிள்ளை பரிசு அறிவேன் இன்னம் உகப்ப நான் என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டு –2–9–7-
கன்னலி லட்டுவத்தோடு சீடை கார் எள்ளின் உண்டை கலத்தில் இட்டு என்னகம் என்று நான் வைத்துப் போந்தேன்-இவன் புக்கு
அவற்றைப் பெறுத்திப் போந்தான் –பின்னும் அகம் புக்கு உறியை நோக்கிப் பிறங்கு ஓளி வெண்ணெயும் சோதிக்கிறான் –2–9–9-
இல்லம் புகுந்து என் மகளைக் கூவி கையில் வளையைக் கழற்றிக் கொண்டு கொல்லையினின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு
அவ்வளை கொடுத்து நல்லன நாவல் பழங்கள் கொண்டு நான் அல்லேன் என்று சிரிக்கின்றான் –2–9–10-
ஆற்றிலிருந்து விளையாடுவோங்களைச் சேற்றால் எறிந்து வளை துகில் கையில் கொண்டு காற்றில் கடியனாய் ஓடி
அகம் புக்கு மாற்றமும் தாரானால் இன்று முற்றும் வளைத திறம் பேசானால் இன்று முற்றும் –2–10–1-
குண்டலம் தாழ–துகில் கைக் கொண்டு விண் தோய் மரத்தானால் இன்று முற்றும் வேண்டவும் தாரான் –2–10–2-
வடக்கில் அகம் புக்குவேற்று உருவம் செய்து வைத்த –3–1–2-
மையார் கண் மட வாய்ச்சியார் மக்களை மையன்மை செய்தவர் பின் போய்
கொய்யார் பூந்துகில் பற்றித் தனி நின்று குற்றம் பல பல செய்தாய் -3–1–4-
சுரும்பார் மென் குழல் கன்னி ஒருத்திக்குச் சூழ் வலை வைத்துத் திரியும் –3- -1–6-
மருட்டார் மென் குழல் கொண்டு பொழில் புக்கு வாய் வைத்து அவ்வாயர் தம் பாடி
சுருட்டார் மென் குழல் கன்னியர் வந்து உன்னைச் சுற்றும் தொழ நின்ற சோதி –3-1-7-
வாளா வாகிலும் காண கில்லா
தாய்மார் மோர் விற்கப் போவர் தகப்பன்மார் கற்றா நிரைப் பின் போவர் நீ ஆய்ப்பாடி இளம் கன்னிமார்களை
நேர் படவே கொண்டு போதி காய்வார்க்கு என்று முகப்பனவே செய்து கண்டார் கழறத் திரியும் ஆயா –3–1–9-
தொத்தார் பூம் குழல் கன்னி ஒருத்தியைச் சோலைத் தடம் கொண்டு புக்கு முத்தார் கொங்கை புணர்ந்திரா நாழிகை மூ வேழு சென்ற பின் வந்தாய் -3–1–10-
அஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை மஞ்சனமாட்டி மனைகள் தோறும் திரியாமே
கஞ்சனைக் காய்ந்த கழல் அடி நோவக் கன்றின் பின் என் செய்யப் பிள்ளையைப் போக்கினேன் –3- 2-1-
இடைப்பெண்களுடன் விளையாட்டு
பற்று மஞ்சள் பூசிப் பாவை மாரோடு பாடியில் சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே –3- 2–2-
நன் மணி மேகலை நங்கை மாரோடு நாள் தோறும் பொன் மணி மேனி புழுதியாடித் திரியாமே –3–2–3-
வண்ணக் கரும் குழல் மாதர் வந்தலர் தூற்றிடப் பண்ணிப் பணி செய்து இப்படி எங்கும் திரியாமே –3–2–4-
அவ்வவ்விடம் புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய் கொவ்வைக் கனிவாய்க் கொடுத்துக் கூழமை செய்யலாமே
எவ்வும் சிலையுடை வேடர் கானிடைக் கன்றின் பின் தெய்வத் தலைவனைப் போக்கினேன் –3–2–5-
வள்ளி நுடங்கிடை மாதர் வந்தலர் தூற்றிட துள்ளி விளையாடித் தோழரோடு திரியாமே
கள்ளி யுணங்கு வெங்கான தரிடைக் கன்றின் பின் புல்லின் தலைவனைப் போக்கினேன் –3-2–7-
பன்னிரு திங்கள் வயிற்றிஅமுதமூட்டி எடுத்து யான்
பொன்னடி நோவப் புலாரியே கானில் கன்றின் பின் என்னிளம் சிங்கத்தைப் போக்கினேன் –3–2–8-
குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான் உடையும் கடியன ஊன்று வெம் பரல்களுடை
கடிய வெம் கானிடைக் காலடி நோவக் கன்றின் பின் கொடியேன் என் பிள்ளையைப் போக்கினேன் –3–2–9-
என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனை கன்றின் பின் போக்கினேன் என்று யசோதை கழறிய-3–2–10-
———————
ஸ்ரீ கிருஷ்ணன்
கண்ணா நீ நாளைத் தொட்டுக் கன்றின் பின் போகேல் கோலம் செய்து இங்கே இரு –3–3–9–
செப்பாடுடைய திருமாலவன் தன் -3–5–6-
பாம்பரையன் படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல் தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத் தாமோதரன் –3–5–7-
——————–
கண்ணன் வேணு காணச் சிறப்பு
கோவலர் சிறுமியர் இளம் கொங்கை குதுகலிப்ப உடலுள விழுந்து எங்கும் காவலும் கடந்து கயிறு மாலையாகி வந்து கவிழ்ந்து நின்றனரே–3- 6–1-
வானிளவரசு வைகுந்தக் குட்டன் –3–6–3-
மேனகையோடு திலோத்தமை யரம்பை உருப்பசியரவர் வெள்கி மயங்கி வானகம் படியில் வாய் திறப்பின்றி ஆடல் பாடலவை மாறினர் தாமே –3–6–4-
நன்நரம்புடைய தும்புருவோடு நாரதனும் தந்தம் வீணை மறந்து கின்னர மிதுனங்களும் தந்தம் கின்னரம் தொடுகிலோம் என்றனரே–3–6–5-
தேவகி சிறுவன் —தேவர்கள் சிங்கம் –3–6–6-
அருங்கல உருவின் ஆயர் பெருமான் –3- 6–10-
நன்றும் கிறி செய்து போந்தான் நாராயணன் செய்த தீமை என்றும் எமர்கள் குடிக்கு ஓர் ஏச்சுச் சொலாயிடும் கொலோ –3–8–2-
நந்தகோபன் மகன் கண்ணன் –3–8–8-
அணி வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற -3-9-9-
எட்டுத் திசையும் எண்ணிறந்த பெரும் தேவிமார் விட்டு விளங்க வீற்று இருந்த விமலன் —4–2–10-
கண்ணுக்கு இனிய கரு முகில் வண்ணன் –4–6–7-
செம் பெரும் தாமரைக் கண்ணன் —4–6–8-
வானேய் வானவர் தங்கள் ஈசா–மதுரைப் பிறந்த மா மாயனே –4–10–8-
மாயவனை மது சூதனனை மாதவனை மறையோர் ஏத்தும் ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானை -4- 10–10-
காமர் தாதை கருதலர் சிங்கம் காணவினிய கரும் குழல் குட்டன் வாமனன் என் மரகத வண்ணன் மாதவன் மது சூதனன் தன்னை –5–1–10-
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் –5–2–6-
————————–
பரீக்ஷித் ரக்ஷணம்
மருமகன் தன் சந்ததியை உயிர் மீட்டு மைத்துனன்மார் உருமகத்தே வீழாமே குருமுகமாய்க் காத்தானூர் —4–8–2-
உத்தரை தன் சிறுவனையும் உயக் கொண்ட யுயிராளன் யுறையுமூர் –4–9–6-
————————————–
ஸ்ரீ கிருஷ்ணன்
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில் சிக்கென வந்து பிறந்து நின்றாய் –5–3–1-
வேயர் தங்கள் குலத்துதித்த விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றை யமரர் கோவை அந்தணர் தம் அமுத்தத்தினைச் சாயை போலப் பாட வல்லார் தாமும் அணுக்கர்களே –5- 4–11-
கொடும் தொழிலன் நந்த கோபன் குமரன் -யசோதை இளம் சிங்கம் –திருப்பாவை –1-
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத் தூய பெரு நீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும்
அணி விளக்கைத் தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை -5-
கேசவனைப் பாடவும் –7-
ஆற்றப் படைத்தான் மகனே –21-
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர –25-
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா –27-
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னைப் பிறவி பெரும் தனை புண்ணியம் யாமுடையோம் –28-
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ —29-
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்றும் இப்பேறு–நாச்சியார் –1–8-
அணி வாணுதல் தேவகி மா மகன் –மிகு சீர் வசுதேவன் தம் கோ மகன் –4–3-
திகழும் மதுரைப் பதி கொற்றவன் வரில் –4–8-
ஆவலன்புடையார் தம் மனத்தன்றி மேலவன் –4–8-
எம் அழகனார் அணியாய்ச்சியார் சிந்தையுள் குழகனார் வரில் –4–10-
பொன் புரை மேனிக் கருளக் கொடியுடை புண்ணியனை வரக் கூவாய் –5- 4-
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஒரு காளை–6–2-
மதுரையார் மன்னன் –6–5-
மைத்துனன் நம்பி மதுசூதனன் –6–6-
அரிமுகன் அச்சுதன் –6–9-
வடமதுரையார் மன்னன் வாசுதேவன் –7–3-
செங்கண் கருமேனி வாசுதேவனுடைய –7-7–
பதினாறாமாயிரவர் தேவிமார் பார்த்து இருப்ப மது வாயில் கொண்டால் போல் மாதவன் தன் வாயமுதம்பொ
துவாக யுண்பதனை புக்கு நீ யுண்டக்கால் சிதையாரோ யுனனோடு செல்வப் பெரும் சங்கே -7–9-
பெற்றிருந்தாளை ஒழியவே போய்பி பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி –12- 1-
கொந்தளமாக்கிப் பரக்கழித்து குறும்பு செய்வானோர் மகனைப் பெட்ரா நந்த கோபாலன் கடைத் தலைக்கே –12–3-
கூட்டிலிருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் –12-9-
கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை –13–1-
ஆயர்பாடி கவர்ந்துண்ணும் —13–4-
தழையின் பொழில் வாய் நிரைப் பின்னே நெடுமால் ஊதி வருகின்ற —13–5-
நந்தகோபன் மகன் என்னும் —13–6-
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த்தனனை —13–8-
அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை –13–10-
கோவர்த்தனனை –14–2-
மாலாய் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை ஏலாப் பொய்கள் யுரைப்பானை இங்கே போதக் கண்டீரே –14–3-
போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் கன்றே போல் வேர்த்து நின்று விளையாட –14-4-
பீதாக வாடை யுடை தாழப் பெரும் கார் மேகக் கன்றே போல் வீதியார வருவானை —-14–5-
தருமம் அறியாக் குறும்பனைத் தன் கைச் சார்ங்கம் அதுவே போல் புருவ மட்ட மழகிய பொருத்தமிலியை –14–6-
பொருத்தமுடைய நம்பியைப் புறம் போல் உள்ளும் கரியானைக் கருத்தைப் பிழைத்து நின்ற அக்கருமா முகிலை –14- 7-
வெளிய சங்கு ஒன்றுடையானைப் பீதக வாடை யுடையானை அளி நன்குடைய திருமாலை ஆழியானை —14- -8-
நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த நளிர் மா மலருந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னை —14–9-
கண்ணன் வைகுந்தனோடு என்நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி யவரிடை நீர் இன்னம் செல்லீரோ –திருவிருத்தம் -30-
அருவினையென் நெடும் காலமும் கண்ணன் நீண் மலர்ப் பாதம் பரவப் பெற்ற –37-
கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றது சங்கம் –47-
ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம் இறையே –61-
தாமிவையோ கண்ணன் திருமால் திரு முகம் தன்னோடும் காதல் செய்தெற்கு எண்ணம் புகுந்து —63-
அசுரரைச் செற்ற மாவியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் —67-
அசுரர் குழாம் தொலைப் பெய்த நேமி எந்தாய் -90-
என்ன கரும் சோதிக் கண்ணன் கடல் புரையும் செல்லப் பெரும் சோதிக்கு என்னெஞ்சு ஆட் பெற்று –பெரிய திரு -4-
நெறி காட்டி நீக்குதியோ -நின்பால் கருமா முறி மேனி காட்டுதியோ மேனாள்
அறியாமை என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈதுரையாய் என் செய்தால் என்படோம் யாம் –6-
தாம்பால் ஆப்புண்டாலும் –சோம்பாது இப்பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தா –18-
சீரார் மனத்தலைவன் துன்பத்தை மாற்றினேன் வானோர் இனத்தலைவன் கண்ணனால் யான் –25-
தமக்கு அடிமை வேண்டுவோர் தாமோதரனார் தமக்கு அடிமை செய் என்றால் செய்யாது எமக்கு என்று
தாம் செய்யும் தீ வினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார் யான் செய்வது இவ்விடத்து இங்கு யாது –32-
அவனால் இவனாம் உவனாம்-மாற்று உம்பரவனாம் அவன் என்று இராதே அவனாம் அவனே எனத்
தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால் அவனே எவனேலுமாம்–36-
அமைக்கும் பொழுதுண்டே ஆறாயில் நெஞ்சே –இடைச்சி குமைத் திறங்கள் ஏசியேயாயினும் ஈன் துழாய் மாயனையே பேசியே போக்காய் பிழை –38-
கண்ணனார் பேருரு வென்று வெம்மைப் பிரிந்து நெஞ்சோடும் –49-
உருமாறும் ஆயவர் தாம் சேயவர் தாம் மாயவர் தாம் –56-
கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல் தொன் மாலைக் கேசவனை
நாரணனை மாதவனை சொன் மாலை எப்பொழுதும் சூட்டு -65-
மண்ணாட்டில் ஆராகி எவ்விழி விற்றானாலும் ஆழி யங்கை பேராயர்க்கு ஆளாம் பிறப்பு உண்ணாட்டு தேசன்றே
ஊழ் வினையை யஞ்சுமே விண்ணாட்டை ஒன்றாக மெச்சுமே-79-
கை கலந்த ஆழியான் –86-
கூனே சிதைய வுண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா –திருவாய் —1–5–5-
மனை சேராயர் குல முதலே மா மாயனே மாதவா –1–5–6-
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை –1–5–7-
எப்பால் யாவர்க்கும் நலத்தால் உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1–7–2-
ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை –1–7–3-
தொடுவே செய்து இவ்வாய்ச்சியார் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான் –1–7–5-
அமரர்க்கு அமுதீந்த்த ஆயர் கொழுந்தை –1–7–9-
ஆனானான் ஆயன் –1–8–8-
இவையும் அவையும் உவையும்–அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம் –1- 9–1-
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஓக்கலையானே –1-9–4-
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார் -1–9–10-
வாழிய வானமே நீயும் மது சூதன் பாழிமையில் பட்டு அவன் கண் பாசத்தால் நைவாயே —2–1–5-
கோபால கோளரி ஏறு —2–2–2-
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான் –2–2–9-
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா –2–3–7-
கடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான் —2–3–9-
என் வள்ளலே கண்ணனே என்னும் –2–4–7-
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு –2–5–5-
வைகுந்தா மணி வண்ணனே —2–6–1-
வள்ளலே மது சூதனா –2–6–4-
கோவிந்தன் குடக் கூத்தன் கோவலன் —2–7–4-
முடியம்மான் மது சூதனன் –2–7–5-
காமனைப் பயந்தாய் –2–7–8-
வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகளை கண்ணனை நெடுமாலை–2–7–13-
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம் தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2–8–5-
காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு –2–8–8-
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே —2–8–10-
என் கையார் சக்கரக் கண்ண பிரானே –2–9–3-
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே –2–9–4-
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில் –2–10–8-
மெய் ஞான சோதிக் கண்ணனை மேவுதுமே –3–2–7-
பாவு தொல் சீர்க் கண்ணா என் பரஞ்சுடரே–3–2–8-
கலைபல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு –3–2–10-
வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து ஆயன் –3–3–9-
கண்ணனை மாயனையே –3–4–8-
கண்ணனை மாயன் தன்னை –3–4–8-
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் –கண்ணன் –3–6–5-
கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனதாருயிர் –3–6–10-
ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை –3–7–2-
அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை -3–7–6-
ஒளி மணி வண்ணன் கண்ணன் –3–10–2-
ஆயனை பொற் சக்கரத்து அரியினை அச்சுதனை –3–10–4-
துயரமில் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யானோர் துன்பமிலேனே–3–10–6-
எல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யானோர் துக்கமிலனே–3–10–8-
கிளரொளி மாயனைக் கண்ணனை தாள் பற்றி யான் என்றும் கேடிலனே —3–10–10-
ஆதலில் நொக்கென கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ –4–1–3-
கோவலனார்–குடக் கூத்தனார் –4–2–5-
மின் செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய் –4–2–10-
மெலிவு நோய் தீர்க்கும் நம் கண்ணன் —4–2–11-
ஆய மாயனே –வாமனன் –மாதவா —4–3–4-
கண்ணன் எம்பிரான் எம்மான் –4–3–5-
வாய்த்த குழலோசை கேட்க்கில் மாயவன் என்று மையாக்கும் –4–4–6-
வல் வினை தீர்க்கும் கண்ணனை –4–4–11-
மணியின் அணி நிற மாயன் தமரடி நீறு கொண்டு –4–6–6-
ஊழ்மையில் கண்ண பிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே –4–6–9-
தூ மணி வண்ணனுக்கு ஆட் செய்து நோய் தீர்ந்த –4–6–11-
கறையினார் துவருடுக்கை கடையாவின் கழி கோல கைக் கறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே–4–8–4-
நெறி எல்லாம் எடுத்துரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி –4–8–6-
ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப் போனாலே –5–1–1-
கண்ணபிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை யமுதை –5–1–5-
கமலத் தடம் கண்ணன் தன்னை –5–1–11-
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை –5–2–7-
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப்பிரான் கண்ணன் தன்னை —5–2–11-
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ கடியனே –5–3–4-
வண் துவாராபதி மன்னன் –வாசுதேவன் வலையுளே—5–3–6-
இரைக்கும் கரும் கடல் வண்ணன் கண்ணபிரான் தன்னை -5–3–11-
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால் –5–4–2-
காரன்ன மேனி நம் கண்ணனும் வாரானால் -5–4–5-
கைவந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால் –5–4–8-
இனவாயர் தலைவனும் யானே என்னும் –5–6–6-
கைதவங்கள் செய்யும் கருமேனி யம்மானே –5–7–5-
நிலம் கீண்ட என் அப்பனே கண்ணனே —5–7–6-
என் கள்ள மாயவனே கருமாணிக்கச் சுடரே –5–7–9-
நின்றவாறும் இருந்தவரும் கிடந்தவாறும் நினைப்பரியன–5–10–6-
ஆகள் போக விட்டுக் குழலூது போயிருந்தே –6–2–2-
இன்று இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர் –6–2–10-
கேயத் தீங்குழல் ஊதிற்றும்–மாயக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து-6–4–2-
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள் வாய்ப் பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க்குலம் புக்கதும் –6–4–5-
கற்கும் கல்வி எல்லாம் கரும் கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே –6–5–4-
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்க –6–7–1-
வைத்த மா நிதியாம் மது சூதனனையே அலற்றி –6–7–11-
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு –6–8–9-
காகுத்தா –கண்ணனே –7–2–3-
வானப்பிரான் மணி வண்ணன் கண்ணன் –7–3–2-
முழங்கு சங்கக் கையன் –7-3–4-
ஆழி யங்கையானை ஏத்த வல்லார் அவர் அடிமைத் திறத்து ஆழியாரே–7–3–11-
கொங்கலர் தண்ணம் துழாய் முடி என்னுடைக் கோவலனே–7–6–4-
என்னுடைக் கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே –7–6–5-
ஆயர் குலத்து ஈற்றிலும் பிள்ளை
ஆழி யம் கண்ண பிரான் திருக் கண்கள் கொலோ அறியேன் –7- -7–1-
மதனன் தன் உயிர்த் தாதை பெருமான் புருவம் அவையே –7–7–4-
கண்ணன் கோள் இழை வான் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே –7–7–8-
கட்கரிய பிரமன் சிவன் இந்திரன் என்று இவருக்கும் கட்கரிய கண்ணனை –7–7–11-
சித்திரத் தேர் வலவா திருச் சக்கரத்தாய் அருளாய் — 7–8–3-
கள் அவிழ் தாமரைக் கண் கண்ணனே –7–8–4-
துயரங்கள் செய்யும் கண்ணா –7–8–7-
என்னை யாளும் கண்ணா –7-8–8-
அல்லித் துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே–7–8–10-
கோவிந்தனை –மதுசூதனை —7–10–3-
வடமதுரைப் பிறந்த –மணி நிறக் கண்ணபிரான் தன் மலர் அடிப் போதுகளே —7–10–4-
நெடுமால் கண்ணன் விண்ணவர் கோன்–7–10–7-
காணுமாறு அருளாய் கண்ணா தொண்டனேன் கற்பகக் கனியே –8–1–2-
எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே யசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்களிறே –8–1–3-
நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட –8–2–3-
கோதில் புகழ்க் கண்ணன் –8–2–11-
மாயக் கூத்தா –கண்ணா –8–5–1-
கொண்டல் வண்ணா குடக் கூத்தா வினையேன் கண்ணா கண்ணா –8–5–6-
இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான் மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே —8–5–9-
ஆயர்க்கு அதிபதி அற்புதன் தானே –8–6–9-
ஆயன் அமரர்க்கு அரி ஏறு எனது அம்மான் —8–7–4-
செழு நீர் நிறக் கண்ணபிரான் —8–9–6-
மல்லலஞ்செல்வக் கண்ணன் –8–9–7-
பனி நீர் நிறக் கண்ணபிரான் –8–9–9-
குமரன் கோல ஐங்கணை வேள் தாதை கோதில் அடியார் தம் -8–10–9-
அல்லிக் கமலக் கண்ணன்—8–10–1-
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே –9–1–4-
மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன் –9–1–6-
குற்றம் அன்று எங்கள் பெற்றத்தாயன் வடமதுரைப் பிறந்தவன் —-9–1–7-
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் —9–1–8-
மா துகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த தாது சேர் தோள் கண்ணன் அல்லால் –9–1–9-
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் –9–1–10-
தாது சேர் தோள் கண்ணனை –9–1–11-
கரும் தேவன் எம்மான் –கண்ணன் —9–2–4-
தேவர்கட்க்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே –9–4–9-
குயில் பேடைகாள் என்னுயிர்க் கண்ண பிரானை நீர் வரக் கூவுகிலீர்–9–5–1-
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவருக்கும் –9–5–2-
கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான் –9–5–4-
நீர் குயில் பைதல்காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்–9- 5–8-
கண் பெரும் கண்ணன் நம்மாவி யுண்டு எழ நண்ணினான் —9–5–9-
கருவளர் மேனி என் கண்ணன் கள்வங்களே —9–6–5-
காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும் வேட்க்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்—9–6–7-
திரு நாவாய் கொண்டே யுறைகின்ற எம் கோவலர் கோவே —9–8–6-
அல்லியம் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறே அரி ஏறே எம்மாயன் –9- 9–1-
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன் –9-9–1-
கண்ணன் கள்வன் தனி இளம் சிங்கம் எம்மாயன் –9–9–3-
யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ —-9–9–5-
காரொக்கும் மேனி நம் கண்ணன் –9–9–8-
நம் கண்ணன் கள்வம் கண்ணனின் கொடியது –9–9–7-
மாலையும் வந்தது மாயன் வாரான் —9–9–9-
காமனைப் பயந்த காளை–10-2–8-
தகவிலை தகவிலையே நீ கண்ணா —10–3-1-
துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந்தா –10–3–4-
பகல் நிரை மேய்க்க போய கண்ணா —10–3–5-
ஆழி யம் கண்ணா —10–3–6-
மா மணி வண்ணா —10–3–7-
செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவு—-10–3–11-
கை சக்கரத்தண்ணல் கள்வம் பெரிதுடையன் –மெய் போலும் பொய் வல்லன் –10–4–5-
கற்றார்க்கோர் பற்றாகும் கண்ணன் கழலிணையே —10–4–11-
கண்ணன் கழலிணை –10–5–1-
துன்று குழல் கரு நிறைத்து என் துணையே –திரு நெடும் தாண் –16-
காமனார் தாதை –கலியன் –1-1-3-
ஆயனடி யல்லது மற்று அறியேனே –1–10–8-
கோவி நாயகன் —-2–1–4-
ஆயர் நாயகருக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே —2–1–8-
நந்தன் மைந்தனாக வாகும் நம்பி —-2–2–4-
நந்தன் களிற்றைக் குவலயத்தோர் தொழுது ஏத்தும் —-2–3–2-
அன்று ஆயர் குலக் கொடியோடு அணி மா மலர் மங்கையோடு அன்பளவி –அவுணர்க்கு என்தானும் இரக்கம் இல்லாதவனுக்கு
யுறையும் இடமாவது மா மலையாவது –நீர் மலையே —2–4–1-
பிணை மருப்பில் கரும் களிற்றைப் பிணை மான் நோக்கின் ஆய்த் தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை –2–5–4-
அலங்கெழு தடக்கை யாயன் வாய் ஆம்பற்கு அழியுமால் என்னுள்ளம் என்னும் —2–7–8-
ஆனாயருக்கு என்னுறு நோய் அறியச் சென்று உரையாயே –3–6–4-
காராயன் –3–6–6-
பண்டு இவன் ஆயன் நங்காய் படி றன் புகுந்து —3- -7–2-
மன்னர் தூதுவனாய் அவனூர் சொல்லுவீர்கள் —3–7–3-
குழல் ஆய்ச்சியர் தம் –சிற்றில் சிதைத்தும் முற்றா இளையோர் விளையாட்டோடு காதல் வெள்ளம் விளைத்த அம்மான் —-3–8–8-
காமனைத் தான் பயந்த கருமேனியுடை அம்மான் –3–10–7-
காரார்ந்த திருமேனிக் கண்ணன் —4–1–10-
காமனைப் பயந்தான் தன்னை —-4–3–5-
களங்கனி வண்ணா கண்ணனே எந்தன் கார் முகிலே —4–3–9-
தந்தை கால் தளையுமுடன் கழல வந்து தோன்றி — -4–4–1-
ஆயர் தம் மங்கை புல்கு செண்டன் என்றும் நான்மறைகள் தேடி ஓடும் செல்வன் என்றும் —4–8–3-
கண்ணன் என்றும் வானவர்கள் காதலித்து மலர்கள் தூவும் –4–8–9-
கார் நிறை மேகம் கலந்த தோருருவக் கண்ணனார் –4–10–2-
காள மேய்த்த திருவுருவன்–4–10–4-
காவிப் பெரு நீர் வண்ணன் –கண்ணன் —5–2–10-
நாண் மலராள் நாயகனாய் நாமறிய வாய்ப்பாடி வளர்ந்த நம்பி —5–5–5-
பூ மேல் மாதாளன் –குடமாடி —-5–5–6-
தந்தை மனமுந்து துயர் நந்த விருள் வந்த விறல் நந்தன் மதலை எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ நின்ற நகர் தான் —5–10–7-
மல்லா –குடமாடீ –மதுசூதனே–6–3–9-
தான் ஆயனாயினான் —-6–6–6-
முது துவரைக்குல பதியாய்—-6- -6–7-
யசோதை தன் சிங்கத்தை —6–8–6-
மன்னு மதுரை வாசுதேவர் வாழ் முதலை —6–8-10-
வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் —6–9–3-
கார் தழைத்த திருவுருவன் கண்ணபிரான் —-6–9–7-
ஆயா –7–1–9-
தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே —7–3–4-
தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ நள்ளிருள் கண் வந்த வெந்தை பெருமானார் —-7- 5–1-
மாதவன் மது சூதா —7–7–4-
ஆயா —7–7–6-
மதுசூதன் மாதவன் காமன் தன் தாதை —-8–4–7-
நந்தன் மதலை —8–4–9-
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் —8–5–1-
மாரி மாக்கடல் வளை வண்ணர்க்கு இளையவன் —8–5–2-
ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும் அஞ்சேல் என்பார் இல்லையே —8- 5–3-
ஆயன் விலங்கல் வேயினது ஓசையுமாய் இனி விளைவது ஓன்று அறியேனே —8–5–7-
முன் காமன் பயந்தான் —8–6–5-
வலி மிக்க காலார மருதும் காய் சினத்த கழுதும் கதமாக் கழுதையும் மாலார் விடையும் மதகரியும் மல்லருயிரும் மடிவித்து காலால் சகடம் பாய்ந்தானூர் —8–6–8-
ஆனாவுருவின் ஆனாயன் –8–8–1-
துவரிக் கனிவாய் நிலமங்கை துயர் தீர்ந்துய்யப் பாரதத்துள் இவரித்து அரசர் தடுமாற இருள் நாள் பிறந்த அம்மானை —-8–8–9-
கோவலரே ஒப்பர் —-9–2–5-
ஆயன் தீம் குழல் ஓசையும் தென்றலோடு ஆயன் கை யாம்பல் வந்து என்னாவி யளவும் அணைந்தது நிற்கும் —9–5–8-
ஆயனாய மைந்தனார் வல்ல வாழ் —9–7–1-
கோவலர் கோவிந்தனை —9–9–1-
வட மா மதுரைப் பிறந்தான் தேசம் எல்லாம் வணங்கும் –கேசவ நம்பி தன்னை —-9–9–6-
கூந்தலார் மகிழ் கோவலனாய் —10–1–7-
பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனை —10–1–10-
நந்தன் பெறப் பெற்ற நம்பீ —10–4–1-
ஆயர் தம் பிள்ளைகளோடு தெருவில் திளைக்கின்ற நம்பீ —10–4–3-
பெற்றத்தலைவன் எம் கோமான் பேர் அருளாளன் மதலாய் சுற்றக் குழாத்தின் அம் கோவே —-10–4–9-
பெற்றார் தளை கழலப் பேர்ந்து–கற்றாயனே —10–5–4-
நந்தன் தன் போரேறே கோவலனே —-10–5–6-
பொய்ந்நம்பி புள்ளுவன் கள்ளம் பொதியறை போகின்ற வா தவழ்ந்திட்டு இன்நம்பி நம்பியா ஆய்ச்சியற்கு உய்வில்லை என் செய்கேன் — –10–7–4-
நந்தன் பெற்ற மதலை —-10–7–6-
அங்கோர் ஆய்க்குலத்துள் வளர்ந்து –11–1–4-
இமையோர் தொழுது இறைஞ்சி கைத்தாமரை குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே —-11–3–6-
தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி நந்தன் குலமதலையாய் வளர்ந்தான் —11- 5–2-
மணியே மணி மாணிக்கமே மது சூதா —11–8–8-
——————————
பூதனை வதம்
சூருருவின் பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன் நீ யளவு கண்ட நெறி –பொய்கையார் –3-
நான்ற முலைத்தலை நஞ்சுண்டு –18-
நின்னிருகிப் பேய்த்தாய் முலை தந்தாள் பேர்ந்து இலளால்–34-
முலை உண்டு –54-
உகந்தன்னை வாங்கி –உகந்து முலை யுண்பாய் போலே முனிந்துண்டாய் நீயும் அலை பண்பாலானையால் யன்று–பூதத்தார் –8-
அன்றது கண்டு அஞ்சாத –நின்று முலைதந்த இந் நீர்மைக்கு —9-
மகனாகக் கொண்டு எடுத்தாள் மாண்பாய கொங்கை அகனார யுண்பன் என்று யுண்டு —29-
மலை எழும் —முலை சூழ்ந்த நஞ்சுரத்துப் பெண்ணை நவின்றுண்ட நாவன் என்று அஞ்சாதே என் நெஞ்சே அழை –49-
கொங்கை நஞ்சுண்டானை யேத்துமினோ யுற்று –93-
வாள் எயிற்றுப் பேய்ச்சி முலை யுண்ட பிரான் –பேயார் –28-
பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே –29-
பேய் முலை யுண்டு –60-
நலமே வலிது கொல் நஞ்சூட்டு வன் பேய் –தன் கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து மண்ணுண்டும் –பேய்ச்சி முலை யுண்டும் –91-
பேய் முலை நஞ்சுண்டு –நான்முகன் –33-
முலைக்கால் விடமுண்ட வேந்தனையே வேறா வேத்தாதார் கடமுண்டார் கல்லாதவர் –52-
கள்ளதாய பேய் மகன் வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பால் அமுது செய்து ஆடகக்கை மாதர்வாய் அமுதம் யுண்டது என் கொலோ –திருச்சந்த —36-
பின் பேய்ச்சி பாலை யுண்டு –37-
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கினாய் –43-
அண்ட வாணன் அரங்கன் வன் பேய் முலை யுண்ட வாயன் –பெருமாள் -3–4-
தாய் பாலில் அமுது இருக்க தவழ்ந்து தளர் நடை இட்டுச் சென்று பேய் முலை வாய் வைத்து நஞ்சை யுண்டு பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய் —8–4-
வஞ்சமேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி வரண்டு நார் நரம்பு எழ களிந்துக்க நஞ்சமார் தரு சுழி முலை யந்தோ சுவைத்து நீ யருள் செய்து வளர்ந்தாய் –7–10-
பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து யுண்டிட்டு–பெரியாழ்வார் –1–2–5-
வாள் கொள் வளை எயிற்று ஆருயிர் வவ்வினான் –1–2–11-
நச்சு முலை யுண்டாய் தாலேலோ –1–3–8-
வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலையுண்ட –1–3–10-
வஞ்ச முலை பேயின் நஞ்சமது யுண்டவனே –1–5–4-
பேய் முலை யுண்டானே சப்பாணி —1–6–9-
பேய்ப்பால் முலையுண்ட பித்தனே கேசவ நம்பீ –2-3–1-
முன் வஞ்ச மகளைச் சாவப் பாலுண்டு –2–3–12-
பேய்ச்சி முலை யுண்ணக் கண்டு பின்னையும் நில்லாது என்நெஞ்சம் —2–4–3-
வஞ்சகப் பேய் மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே –2- -4–4-
பேயின் முலையுண்ட பிள்ளையிவன் —2–5–2-
கஞ்சன் கறுக் கொண்டு நின் மேல் கரு நிறச் செம்மயிர் பேயை —2–8–6-
நீ பேயைப் பிடித்து முலையுண்ட பின்னை –2–8–7-
கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை யுயிர் துள்ளச் சுவைத்தான் –2–10–6-
மின்னேர் நுண்ணிடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரானே –3–1–1-
வன் பேய் முலையுண்டதோர் வாயுடையன் —3–5–9-
பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்சப் புணர் முலை வாய் மடுக்க வல்லானை மா மணி வண்ணனை —4–1–6-
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு –திருப்பாவை –6-
வஞ்சகப் பேய்ச்சி பாலுண்ட மசிமையிலீ கூறை தாராய் –நாச்சியார் —3–9-
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் –திருவிருத்தம் –4-
எற்றேயோ மாய மா மாயவனை மாய முலை வாய் வைத்த நீ யம்மா காட்டும் நெறி –பெரிய திருவந்தாதி -5-
சாயால் கரியானை உள்ளறி யாராய் நெஞ்சே –பேயார் முலை கொடுத்தார் –பேயராய்—14-
தீப்பால பேய்த்தா யுயிர் கலாய்ப் பாலுண்டு அவளுயிரை மாய்த்தானை வாழ்த்தே வலி –40-
மாயவள் நஞ்சு ஊண் பாவித்து யுண்டானதோர் யுருவம் காண்பான் –52-
பேயலறப் முலையுண்ட பிள்ளையை –பெரிய திரு மடல்
மாயோன் தீய வல வலை பெரு மா வஞ்சப் பேய் வீயத் தூய குழவியாய் விடப் பாலமுதா அமுது செய்திட்ட மாயன் –திருவாய் –1- -5–9-
ஒக்கலை வைத்து முலைப் பால் உண் என்று தந்திட வாங்கிச் செக்கஞ்செக வென்றவள் பால் உயிர் செக யுண்ட பெருமான் –1–9–5-
அழக் கொடியட்டான் அமர் பெரும் கோயில் —2–10–9-
மாயத்தால் எண்ணி வாய் வாய் முலை தந்த மாயப் பேய் உயிர் மாய்த்த —4–3–4-
பேய்ச்சி முலை சுவைத்தார்க்கு என் பெண் கொடி ஏறிய பித்தே —4–4–6-
மட நெஞ்சால் குறைவில்லா மகள் தாய் செய்தொரு பேய்ச்சி விட நஞ்சு முலை சுவைத்த மிகு ஞானச் சிறு குழவி —4–8–3-
பேய் முலை சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான் –5–3–3-
பேய் முலை யுண்டு —5–3–8-
உழலை என்பின் பேய்ச்சி முலையூடு அவளை யுயிர் யுண்டான் –5–8–11-
பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் —5–10–3-
வஞ்சப் பெண்ணைச் சாவப் பாலுண்டதும் —6–4–4-
பேயைப் பிணம் படப் பாலுண் பிரானுக்கு —6–6–8-
மாயப் பேய் முலை யுண்டு —7–3–5-
பேயார் முலையுண்ட வாயன் மாதவனே—-10–5–8-
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலையூடு உயிரை வற்ற வாங்கி யுண்ட வாயான் –கலியன் —-1–3–1-
பேயிடைக்கிருந்து வந்த மற்றவள் தன் பெரு முலை சுவைத்திடப் பெற்ற தாயிடைக்கு இருத்த லஞ்சுவன் என்று தளர்ந்திட —1–4–5-
தாயாய் வந்த பேய் உயிரும் தயிரும் விழுதும் உடன் உண்ட வாயான் —1–5–6-
இரங்க வன் பேய் முலை பிள்ளையாய் யுயிர் யுண்ட வெந்தை —-1–8–2-
வஞ்சனை செய்யத் தாயுருவாகி வந்த பேய் அலறி மண் சேர நஞ்சமர் முலை யூடு உயிர் செக யுண்ட —-2–3–2-
அன்று பேய்ச்சி விடம் பருகு வித்தகனை —2–5–3-
வஞ்சப் பெண் நஞ்சுண்ட வண்ணல் —2–6–7-
பேய் மகள் கொங்கை நஞ்சுண்ட பிள்ளை —3–3–2-
இழையாடு கொங்கைத் தளை நஞ்சம் யுண்டிட்டு —3–8–5-
அவள் முலை —மற்றவள் ஆவியோடும் உடனே சுவைத்தான் —3–8–6-
பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப் பெரிய பேயினது உருவு கொடு மாலை யுயிர் யுண்டு –3–9–6-
கஞ்சன் வஞ்சனையில் திரியும் பூதனை தன் ஆருயிரும் செகுத்தான்—-3- -10–7-
வஞ்சனையால் வந்தவள் தன் உயிர் யுண்டு –3–10–9-
பொற்றொடித் தோள் மடமகள் தன் வடிவு கொண்ட பொல்லா வன் பேய்ச்சி கொங்கை வாங்கிப் பெற்றெடுத்த
தாய் போல் மடுப்ப ஆரும் பேணா நஞ்சுண்டு உகந்த பிள்ளை —4–4–2-
கவ்வை வாள் எயிற்று வன் பேய்க் கதிர் முலை சுவைத்து –4–5–2-
வஞ்சமேவி வந்த பேயின் உயிரை யுண்ட மாயன் என்றும் –4–8–2-
பேய்ச்சியை முலை யுண்டு —4–10–2-
கலையுடுத்த வகலல்குல் வன் பேய் மகள் தாய் என முலை கொடுத்தாள் ஆருயிர் யுண்டவன் —5–4–6-
பேய் மாய முலை யுண்டு —5–5–4-
பேயினார் முலை யூண் பிள்ளையாய் -5–7–9-
பகுவாய் வன் பேய் கொங்கை சுவைத்து ஆருயிர் யுண்டு –6–5–6-
முலைத் தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி –6–9–7-
மண் சோர முலை யுண்ட மா மதலாய் –7–4–1-
வஞ்சனப் பேய் முலை யூடு உயிர் வாய் மடுத்துண்டானை –7–6–5-
மன மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள யுயிர் வவ்விய எம்மாயோன் —7–8–5-
பேய் முலைத் தலை நஞ்சுண்ட பிள்ளையை —7–10–4-
பேய் மகள் துஞ்ச நஞ்சு சுவைத்துண்ட தோன்றலை —7- 10–8-
பேயினார் ஆருயிர் யுண்டிடும் பிள்ளை நம் பெண் உயிர்க்கு இரங்குமோ—-8- -5–3-
காய் சினத்த கழுதும்–மடிவித்து —8–6–8-
பெண்ணானாள் பேரிளம் கொங்கை யினார் அழல் போல் உண்ணா நஞ்சுண்டு உகந்தாயை —8–10–4-
நஞ்சு தோய் கொங்கை மேல் அங்கை வாய் வைத்து அவள் நாளை யுண்ட மைந்தனார் –9–7–5-
சூர்மையிலாய பேய் முலை சுவைத்து —-9–8–4-
தன் மகனாக வன் பேய்ச்சி தான் முலை யுண்ணக் கொடுக்க வன் மகனாயவள் யாவி வாங்கி முலை யுண்ட நம்பீ –10–4–7-
உலகினில் மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட கற்றாயனே –10–5–4-
பேய்ச்சி முலை யுண்ட பிள்ளாய் —10–5–5-
மாய வலவைப் பெண் வந்து முலை தரப் பேய் என்றவளைப் பிடித்து உயிரை யுண்ட வாயவனே –10–5–8-
தாயாய் வருவாளை–ஆருயிர் யுண்ட வள்ளலே —10–5–9-
பேய்ச்சி முலை யுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே —10–7–3-
புள் யுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள –10–9–1-
அங்கோர் தாயுருவாகி வந்தவள் கொங்கை நஞ்சுண்ட கோயின்மை கொலோ –11–1–4-
பேய் முலை வாங்கி யுண்ட அவ்வாயன் நிற்க –11–2–2-
தொலைய உண முலை முன் கொடுத்த உரவுவோள தாவி உக யுண்டு —11–4–9-
மேவாள் உயிர் யுண்டு அமுதுண்ட வாயானை –11–7–3-
——————————-
சகடாசுர வதம்
தழும்பிருந்த தாள் சகடம் சாடி —பொய்கையார் –23-
ஓரடியும் சாடுதைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈரடியும் காணலாம் என்னெஞ்சே மாயவனையே மனத்து வை –100-
பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் —பூதத்தார் –10-
வழக்கன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்
மாச் சகடம் —உதைத்து —-60-
சாடு உதைத்தார் —திருச்சந்த —36-
சாடு சாடு பாதனே –86-
நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப் போய் –பெரியாழ்வார் –1–2–11-
வானவர் தாம் மகிழ வன் சகடம் உருள –1- 5-4-
சேப்புண்ட சாடு சிதறி –2–1–5-
கஞ்சன் தன்னால் புணர்க்கப் பட்ட கள்ளச் சாக்காடு கலக்கழிய –2–2–4-
பண்ணைக் கிழியச் சகடம் உதைத்திட்ட பற்பநாபா —2–3–11-
சாகடிறப் பாய்ந்திட்ட —2–3–12-
கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து —2–4–4-
மாயச் சகடும் இறுத்தவன்—2–5–2-
கள்ளச் சாக்காடு கலக்கழிய யுதை செய்த பிள்ளை யரசே —2–8–7-
வன் பாரச் சகடமிறச் சாடி —3–1–2-
சாடிறப் பாய்ந்த பெருமான் தக்கவா கைப் பற்றும் கொலோ –3–8–6-
மாயச் சகடம் உதைத்து —3–9–9-
சாடிறப் பாய்ந்த தலைவா தாமோதரா வென்று –4–6–6-
மருளுடைய –உருளுடைய சகடரையும் —4–9–3-
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி –திருப்பாவை –6-
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி -24-
உருளும் சகடம் உதைத்த பெருமானார் அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே –திருவாய் –2-1-8-
ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தான்—5–3–3-
சகடம் பாய்ந்து –5–3–8-
பேர்ந்த தோர் சாடிறச் செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறுச் சேவகமும் —5–10–3-
ஊர் சகடம் இறச் சாடியதும் —6–4–4–8-
தளர்ந்தும் முறிந்தும் சகட வசுர யுடல் வேறாப் பிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே –6–9–4-
முனிந்து சகடம் உதைத்து —-7–3–5-
பாய்ந்தானைத் திரி சகடம் பாறி வீழ –2–5–5-
வரும் சகடம் இற யுதைத்து —2–10–7-
நற் சகடம் இருந்து அருளும் தேவன் அவன் —3–9–6-
சாடு போய் வீழத் தாள் நிமிர்த்து –4–2–5-
கஞ்சன் நெஞ்சும் சகடமும் காலினால் துஞ்ச வென்ற —5–4–7-
வலி யுருவில் திரி சகடம் தளர்ந்து அதிர யுதைத்தவனை –5–6–4-
ஊடேறு கஞ்சனோடு –உருள் சகடம் யுடையச் செற்ற –7–8–9-
காலால் சகடம் பாய்ந்தான் –8–6–8-
திரி கால் சகடம் சினம் அழித்து—8–6–9-
கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்கம் –9–9–7-
கள்ளக் குழவியாய்க் காலால் சகடத்தைத் தள்ளி யுதைத்திட்டு —10–5–9-
ஈடும் வலியுமுடை இந்த நம்பி பிறந்த எழு திங்களில் ஈடலர் கண்ணி யினானை வளர்த்தி யமுனை நீராடக் போனேன்
சேடன் திரு மறு மார்பன் கிடந்து திருவடியால் மலை போல் ஓடும் சகடத்தைச் சாடிய —10–7–9-
உருளச் சகடமது உறக்கில நிமிர்த்தீர் –10–8–3-
——————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: