ஸ்ரீ ராம அவதாரம் / தாடகா வாதம் / விச்வா மித்ரா யாக ரக்ஷணம் /ஸூபாஹூ வாதம் /
ஸ்ரீ சீதா விவாஹம் / வன கமனம் / குஹ ஸஹ்யம் /பரத கமனம் /ஸ்ரீ பாதுகா பிரதானம்
காகாஸூர பங்கம் / விராத வதம் /சூர்பணகா பங்கம் /காரா தூஷண வதம் / மாரீச வதம் /
சீதா வியோகம் / ஜடாயு மோக்ஷம் / கபந்த வதம் /-சீதா அசோகா வன வாசம் /ஹனுமத் சமாகாமம்
சுக்ரீவ சக்யம் /மராமரம் எய்தல் / வாலி வதம் / அங்குலீய பிரதானம்
அசோக வன பங்கம் /சமுத்திர சரணாகதி / சமுத்திர ராஜனைக் கோபித்தல் /
சேது பந்தம் /விபீஷண உபதேசம் /லங்கா பங்கம் /கும்ப கர்ண வதம் /ராக்ஷஸ வதம் /இந்திரஜித் வதம்
ராவண வதம் /ராக்ஷஸ ஸ்தோத்ரம் /ஸ்ரீ விபீஷண பட்டாபிஷேகம் /ராக்ஷஸ சரணாகதி /ராக்ஷஸ வதம்/பாதாள கத ராக்ஷஸ வதம் /
ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் / குச லவ காநம் /லவண வதம் /லஷ்மண வியோகம் /ஸ்ரீ ராம பரமபத கமனம்
—————————————————
தழும்பிருந்த சார்ங்க நாண் தோய்ந்த –பொய்கையார் -23-
சார்ங்க பாணி யல்லையே–திருச்சந்த –15-
குரங்கை ஆளுகந்த வெந்தை –21-
கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல மதலையாய் தனக்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா தாசரதீ –பெருமாள் திரு –8–3-
தயரதன் தன் மா மதலாய் மைதிலி தன் மணவாளா –8–4-
சிலை வலவா–சேவகனே –சீராமா –8–8-
ஏவரி வெஞ்சிலை வலவா இராகவனே—8–10-
எல்லையில் சீர் தயரதன் தன் மகனாய்த் தோன்றிற்று –10–11-
கதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஓக்க நீண் முடியன் –இராமன் –பெரியாழ்வார் –4–1–1-
நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலிச் சார்ங்கத் திருச் சக்கரம் ஏந்து பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல் —4–1–2-
மன்னுடைய விபீடணற்கா மதில் இலங்கைத் திசை நோக்கி மலர்க்கண் வைத்த என்னுடைய
திருவரங்கற்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே–4–9–2-
கணை நாணில் ஆவாத் தொழில் சார்ங்கம் தொல் சீரை நல் நெஞ்சே ஓவாத ஊணாக உண்–பெரிய திருவந்தாதி -78-
நீள் கடல் சூழ் இலங்கைக் கோன் தோள்கள் தலை துணி செய்தான் தாள்கள் தலையில் வணங்கி —1–6–7-
தொழுமின் அவனைத் தொழுதால் வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி ஆக்கம் தருமே —1–6–8-
தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே –3–6–8-
காயும் கடும் சிலை காகுத்தன் வாரானால் -5–4–3-
நின்றவாறும் இருந்தவாரும் கிடந்தவாறும் நினைப்பரியன —ஸ்ரீ ராம / ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்களிலும் காணலாமே –5–10–6-
காண் பெரும் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு –6–6–9-
உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல் தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா திரு மா மகள் கேள்வா தேவா –6–10–4-
திணரார் சார்ங்கத்து உன பாதம் சேர்வது அடியேன் என்னாளே –6–10–5-
காகுத்தா கண்ணனே –7–2–3-
கற்பார் இராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ –7–5–1-
என்னாருயிர்க் காகுத்தன் —கூட்டுண்டு நீங்கினான் –9–5–6-
மை வண்ண நறும் குஞ்சிக் குழல் பின் தாழ இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் –திரு நெடும் தாண் –21-
சிலையாளா –கலியன் –3–6–9-
ஏதவன் தொல் பிறப்பு இளையவன் வளையூதி—3–7–4-
வன் துணை வானவர்க்காய் வரம் சேற்று –3–7–6-
தாசாரதியாய தட மார்வன் –8–4–7-
வாள் அரக்கர் காலன் –8–4–8-
வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி வெய்ய சீற்றக் கடியிலங்கை குடி கொண்டோட வெஞ்சமத்துச் செய்ய வெம்போர் நம்பரனை –8-8-7-
தெய்வச் சிலையாற்கு என் சிந்தை நோய் செப்புமினே –9–4–3-
இராக்கதர் வாழ் இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே –திருப்பல்லாண்டு -3-
இராவணன் தலை பத்து என எம்பெருமான் பிரம்மாவுக்கு காட்டிக் கொடுத்தது -ஆமே –பொய்கையார் -45-/ஆய்ந்த -பேயார் -77-/ கொண்டு -நான்முகன் -44-
—————————————————-
தாடகை வதம்
திண் திறளாள் தாடகை தன் உரமுருவச் சிலை வளைத்தாய் –பெருமாள் திரு –8–2-
வந்து எதிர்ந்த தாடகை தன்னுரைத்தைக் கீறி –10–2-
முன் வில் வலித்து முது பெண்ணுயிர் உண்டான் தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற –பெரியாழ்வார் –3–9–2-
வாய்த்த மலை போலும் தன்னிகர் ஓன்று இல்லாத தாடகையை மா முனிக்காத் தென்னுலகம் ஏற்றுவித்த திண் திறலும் –பெரிய திரு மடல்
வல்லாள் அரக்கர் குலப்பாவை வாட–கலியன் –8–6–3-
சுடு சரமடு சிலைத் துரந்து நீர்மையிலாத தாடகை மாள நினைத்தவர் –9–8–4-
———————————
விச்வாமித்ரர் வேள்வி காத்தல்
மா முனி வேள்வியைக் காத்து –திருப்பள்ளி எழுச்சி -4-
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து –பெருமாள் திரு -10–2-
முனிவன் வேள்வியை கல்விச் சிலையால் காத்தான் –கலியன் -8–6–2-
————————-
ஸூபாஹூ வதம்
வல்லரக்கர் உயிருண்ட மைந்தன் –பெருமாள் திரு –10–2-
———————-
ஸ்ரீ சீதா விவாஹம்
சிலை ஓன்று இறுத்தாய் –பெரியாழ்வார் –2–3–7-
செறிந்த மணி முடிச் சனகன் சிலை இறுத்து நினைக் கொணர்ந்து —-3–10–1-
காந்தள் முகிழ் விறல் சீதைக்காகிக் கடும் சிலை சென்று இறுக்க வேந்தர் தலைவன் சனகராசன் தன் வேள்வியில் கண்டார் உளர் –4- -1–2-
சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா –பெரியாழ்வார் –3–3–5-
சீதை வாய் அமுதம் உண்டாய் –நாச்சியார் -2–10-
வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா விடையோன் தன் வில்லைச் செற்றாய் –பெருமாள் திருமொழி –9–4-
வெவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகிச் சின விடையோன் சிலை இறுத்து —10–3-
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும் –திரு நெடும் தாண் -13-
விரை கமழ்ந்த மென் கரும் குழல் காரணம் வில்லிறுத்து –கலியன் —3–1–8-
வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான் காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதுமிடம்–4- -1–8-
உடனாய வில்லென்ன வல்லேயதனை இறுத்திட்டு அவள் இன்பம் அன்போடு அணைந்திட்டு —10–6–8-
கூனி கூனை நிமிர்த்தல்
கூனகம் புகத் தெறிந்த சொற்ற வில்லி யல்லையே –திருச்சந்த –30-
கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன் உண்டை கொண்ட ரங்க வோட்டி உள் மகிழ்ந்த நாதனூர்-49-
ஒரு கால் நின்று உண்டை கொண்டோட்டி வன் கூன் நிமிர நினைத்த பெருமான் –கலியன் –10–6–2-
கூனே சிதைய யுண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா –திருவாய் –1–5–5-
———————–
வனம் புகுதல்
பின்னின்று தாய் இரப்பக் கேளான் சொல் நின்ற தோள் நலந்தான் நேரில்லாதத் தோன்றல் –பூதத்தார் -79-
பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே யருளி ஆரா யன்பின் இளையனோடு யரும் கானம் அடைந்தவன் –பெருமாள் திரு –8–5-
சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே—8–6-
சிற்றவை தன் சொல் கொண்ட சீ ராமா –8–6-
வன் தாளிணை வணங்கி வள நகரம் தொழுது ஏத்த மன்னனாவான் நின்றாயை அரியணை மேல் இருந்தாயை நெடும் கானம் படரப் போகு
நேரிழையும் இளம் கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனை எம்மிராமாவோ –9-2-
மெல்லணை மேல் முன் துயின்றாய் இனிப் போய் வியன் கான மரத்தின் நீழல் கல்லணை மேல் கண் துயிலக் கற்றனையோ –9–3-
காகுத்தா கரிய கோவே வா போகு வா இன்னம் வந்தொருகால் கண்டு போ மலராள் கூந்தல்
வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா விடையோன் தன் வில்லைச் செற்றாய் –9–4-
இன்று பெரும் பாவியேன் மகனே போகின்றாய் கேகயர் கோன் மகளாய்ப் பெற்ற யரும் பாவி சொல் கேட்ட வருவினையேன் என் செய்கேன் யந்தோ யானே -9-5-
அம்மா வென்று உகந்து அழைக்கும் ஆர்வச் சொல் கேளாதே யணி சேர் மார்வம் என் மார்வத்திடை யழுந்தத் தழுவாதே முழுசாதே மோவாதுச்சி
கைம்மாவின் நடையன்ன மென்னடையும் கமலம் போலே முகமும் காணாது யெம்மானை என் மகனை இகழ்ந்திட்ட இழிதகையேன் இருக்கின்றேனே –9–6-
பூ மருவி நறுங்குஞ்சி புன்சடையாப் புனைந்து பூந்துகில் சேர் அல்குல் காமர் எழில் விழல் உடுத்துக் கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று செலத் தக்க வனம் தான் சேர்த்தல் தூ மறை ஈரிது தகவோ சுமந்திரனே வசிட்டனே சொல் நீரே –9–7-
பொன் பெற்றார் எழில் வேதப் புதல்வனையும் தம்பியையும் பூவை போலும் மின் பற்றா நுண் மருங்குல் மெல்லியல் என் மருகியையும் வனத்தில் போக்கி
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க என் பெற்றாய் கைகேசீ இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே–9–8-
முன்னொரு நாள் மழுவாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றாய் உன்னையும் உண் அருமையும்
உன் மோயின் வருத்தமும் ஒன்றாகக் கொள்ளாது என்னையும் என் மெய் யுரையும் மெய்யாகக் கொண்டு
வனம் புக்க வெந்தாய் நின்னையே மகனாகப் பெறப் பெறுவேன் ஏழ்பிறப்பும் நெடுந்தோள் வேந்தே –9-9-
தேனகு மா மலர்க்கூந்தல் கௌசலையும் சுமத்திரையும் சிந்தை நோவ கூனுருவின் கொடும் கொழுத்தை சொல் கேட்ட கொடியவள் தன் சொல் கொண்டு
இன்று கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரைத் துறந்து நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன் மனு குலத்தோர் தங்கள் கோவே –9–10-
ஏரார்ந்த கரு நெடுமால் இராமனாய் வனம் புக்க அதனுக்கு ஆற்றாத் தாரார்ந்த தடவரைத்தோள் தயரதன் தாம் புலம்பிய அப்புலம்பல் தன்னை
கூரார்ந்த வேல் வலவன் கோழியர் கோன் குடைக் குலசேகரன் சொல் செய்த சீரார்ந்த தமிழ் மாலை இவை வல்லார் தீ நெறிக் கண் செல்லார் தாமே —9–11-
தொத்தலர் பூஞ்சுரி குழல் கைகேசி சொல்லால் தொன்னகரம் துறந்து துறைக் கங்கை தன்னை வனம் போய்ப் புக்கு –10–4-
கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத் துங்கக் கரியும் புரியும் இராச்சியமும் எங்கும் பரதற்கு அருளி வன் கானடை— பெரியாழ்வார் –2–1—8-
மாற்றுத் தாய் சென்று வானம் போகே என்றிட -ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழக்
கூற்றுத் தாய் சொல்லக் கொடிய வனம் போன சீற்றம் இலாதானைப் பாடிப் பற —3–9–4-
தார்க்கிளம் தம்பிக்கு அரசீந்து தண்டகம் நூற்றவள் சொல் கொண்டு போகி –3–9–8-
கலக்கிய மா மனத்தனளாய்க் கைகேயி வரம் வேண்ட மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாது ஒழிய
குலக்குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப இலக்குமணன் தன்னோடும் அங்கு ஏகியதும் –3–10–3-
கூன் தொழுத்தை சிதை குரைப்பக் கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு ஈன்று எடுத்த தாயரையும்
இராச்சியமும் ஆங்கு ஒழிய கான் தொடுத்த நெறி போகிக் கண்டா அசுரரைக் களைந்தான் –4–8–4-
போர்வேந்தன் தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து பொன்னகரம் பின்னே புலம்ப வலம் கொண்டு மின்னும் வள நாடு கை விட்டு —
கொன்னவிலும் வெம் கானாத்தூடு –மன்னன் இராமன் பின் வைதேவி –அன்ன நடையை வணங்கு நடந்திலளே –பெரிய திருமடல் –
சிற்றவை பணியால் முடி துறந்தானை –கலியன் –2–3-1-
கூனுலாவிய மடந்தை தன் கொடும் சொலின் –திறத்து இளம் கொடியோடும் கானுலாவிய கரு முகில் திரு நிறத்தவன் —3–1–6-
தம்பியோடு தாமொருவர் தன் துணைவி காதல் துணையாக முன நாள் வெம்பி எரி கானகம் உலாவுமவர் தாம் இனிது மேவு நகர் தான் –5–10–6-
வில்லேர் நுதல் வேல் நெடும் கண்ணியும் நீயும் கல்லார் கடும் கானம் திரிந்த களிறே –7–1–5-
மானமரு மென்னொக்கி வைதேவி இன் துணையாக் கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான் —11–5–1-
————————————–
குகன் தோழமை
பக்தியுடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்கு —பெருமாள் –10–4-
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில் சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –பெரியாழ்வார் –3–10–4-
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்றவற்கு இன்னருள் சுரந்து —
உகந்து தோழன் நீ எனக்கு இங்கு இங்கு ஒழி என்ற சொற்கள் —கலியன் —5–8–1-
—————————————–
பரதன் வருதல்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்து தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்ப
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததும் ஓர் அடையாளம் —பெரியாழ்வார் –3–10–5-
——————————
ஸ்ரீ பாதுகை அளித்தல் –
பரதனுக்குப் பாதுகமும் அரசுமீந்து –பெருமாள் –10–4-
முடி ஒன்றி மூ உலகங்களும் ஆண்டு உன் அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த படியில்
குணத்துப் பரதநம்பிக்கு அன்று அடி நிலை ஈந்தானைப் பாடிப் பற –பெரியாழ்வார் –3–9–6-
மரவடியைத் தம்பிக்கு வான் பணையம் வைத்துப் போய் வானோர் வாழ —4–9–1-
———————————
பூ மாலையால் பெருமாளை பிராட்டி கட்டியது
அல்லியம்பூ மலர்க் கோதாய்–மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம் –பெரியாழ்வார் –3–10–2-
———————-
காகாசுர பங்கம்
பொன் திகழ் சித்திரக் கூடப் பொருப்பினில் உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அக் கற்றைக் குழலன் –பெரியாழ்வார் –2–6–7-
சித்திர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட அத்திரமே கொண்டு எறிய அனைத்து உலகும் திரிந்து ஓடி
வித்தகனே இராமா ஓ நின் அபயம் என்று அழைப்ப அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம் -3–10–6-
——————————
விராத வதம்
வலி வணக்கு வரை நெடும் தோள் விராதைக் கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரிவில் வாங்கி –பெருமாள் -10–5-
திண் கை வெங்கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர் கோன் —கலியன் –3–4–6-
———————————
சூர்பணகா பங்கம்
கலை வணக்கு நோக்கு அரக்கி மூக்கை நோக்கி —பெருமாள் –10–5-
கள்ள வரக்கியை மூக்கொடு–பெரியாழ்வார் –2–7–5-
சூர்பணாகாவைச் செவியோடு மூக்கு அவள் ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற —3- -9–8-
தங்கை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் –4–2–2-
தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடித்த எம் தாசாரதி –பெரியாழ்வார் –4–7–1-
கொல்லை யரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே–நாச்சியார் –10–4-
அன்று திருச் செய்ய நேமியான் தீ யரக்கி மூக்கும் பருச் செவியும் ஈர்த்த பரன் –பெரிய திருவந்தாதி –63-
தன் சீதைக்கு நேராவான் என்றோர் நிசாசரி தான் வந்தாளைக் கூரார்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும் ஈரா விடுத்து –சிறிய திருமடல் —
அரக்கர் குலப் பாவை –ராவணன் தன் நல் தங்கை –பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து மன்னிய திண் எனவும் —பெரிய திருமடல் —
அரக்கியை மூக்கு ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் –திருவாய் –2- 3-6-
அடுத்து ஆர்ந்து எழுந்தாள் பிலவாய் விட்டு அலற அவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான் –கலியன் –1–5–5-
அரக்கர் குலப் பாவை தன்னை வெஞ்சின மூக்கரிந்த விறலோன்–3–7–3-
கலையிலங்கும் அகல் அல்குல் அரக்கர் குலக் கொடியைக் காதொடு மூக்குடன் அரியக் கதறி அவளோடி–
தலையில் அங்கை வைத்து மலையிலங்கை புகச் செய்த தடம் தோளன்–3–9–4-
கருமகள் இலங்கையாட்டி பிலம் கொள் வாய் திறந்து தன் மேல் வருமவள்செவியும் மூக்கும் வாளினால் தடித்த வெந்தை —4–5–5-
மீதோடி வாள் எயிறு மின்னிலக முன்விலகும் உருவினாளை–காதொடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத்தலத்தா–7- -4–3-
மலை போல் உருவத்தோர் இராக்கதி மூக்கு அரிந்திட்டவன் காண்மின் —10–6–9-
————————————-
கர தூஷணாதி வதம்
கடுங்க வந்தன் வக்கரன் கரன் முரன் சிரமவை இடந்து கூறு செய்த பல் படைத் தடக்கை மாயனே –திருச்சந்த –104-
கரனோடு தூடணன் தன்னுயிரை வாங்கி –பெருமாள் –10–5-
கூடலர் சேனை பொருது அழிய —பெரியாழ்வார் -4–1–3-
அவளுக்கு மூத்தோனை வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான் —
புகழும் பொரு படை ஏந்திப் போர் புக்க சுரரைப் பொன்றுவித்தான் –திருவாய் –8-9-3-
கறை வளர் வேல் கரன் முதலா -கணை ஒன்றினால் மடிய –கலியன் –2–10–5-
அன்று நேர்ந்த நிசாசரரைக் கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் –அமலனாதி –2-
—————————————
மாரீச வதம்
மேலொரு நாள் மான் மாய எய்தான் வரை –பொய்கையார் -82-
அன்று பிரிந்தது சீதையை மான் பின் போய் –பூதத்தார் -15-
எய்தான் அம்மான் மறியை ஏந்திழைக்காய் –பேயார் -52-
சிலை வணக்கி மான் மரிய வெய்தான் –பெருமாள் -10–5-
பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட நின்னன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் –பெரியாழ்வார் –3–10–7-
கரந்துருவின் அம்மானை அந்நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை அம்மானை ஏத்தாது
அயர்த்து வாளா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் -பெரிய திருவந்தாதி -82-
மாய மான் மாயச் செற்று –திருக் குறும் தாண் -16-
கானிடை யுருவைச் சுடு சரம் துரந்து கண்டு –கலியன் –1–4–2-
மான் முனிந்தொரு கால் வரிசிலை வளைத்த –1–4–8-
கிளர் பொறிய மறி திரிய வதனின் பின் படர்ந்தானை —2–5- -6-
துள்ளா வரு மான் வீழ வாளி துரந்தான் –6–7–3-
கலை மாச்சிலையால் எய்தானூர் —8- -6–7-
இலை மலி பள்ளி எய்தி இது மாயம் என்ன இனமாய மான் பின் எழில் சேர் அலை மலி வேல் கணாளை
அகல்விப்பதற்கு ஓருருவாய மானை யமையா –11- 4-7-
———————————
பிராட்டி பிரிவு
தனமருவு வைதேகி பிரியலுற்று தளர்வு எய்தி –பெருமாள் –10–6-
தாண்ட காரணியம் புகுந்து அன்று தையலைத தகவிலி எம் கோமான் கொண்டு போந்து கேட்டான் –கலியன் –10–2–3-
செம்பொன் நீண் முடி எங்கள் இராவணன் சீதை என்பதோர் தெய்வம் கொணர்ந்து –10–2–5-
——————————–
ஜடாயு மோக்ஷம்
ஜடாயுவை வைகுந்தத்து ஏற்றி
—————–
கபந்தன் வதம்
கடும் கவந்தன் வக்கரன் கரன் முரன் சிரமவை இடந்து கூறு செய்த –திருச்சந்த –104-
கறை வளர் வேல் கரன் முதலா க் கவந்தன் கணை ஒன்றினால் —கலியன் –2–10–5-
படர் வனத்து கவர்ந்தனோடும் –உகவில் குனித்த —3–4–6-
————————–
சீதை சிறை வாசம்
தளிர் நிறத்தால் குறைவில்லாத தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள்—திருவாய் –4–8–5-
வம்புலாம் கடிகாவில் சிறையா வைத்ததே குற்றமாயிற்றுக் காணீர்–கலியன் –10–2–5-
பூனம் கொள் மென் மயிலைச் சிறை வைத்த -10–2–8-
————————–
ஹனுமான் தோழமை
வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை –கோதில் வாய்மையினையோடும் உடனே
உண்பன் நான் என்ற ஒண் பொருள் –கலியன் –5–8-2-
————————
சுக்கிரீவ சக்யம் மராமரம் ஏழு எய்தது
சிலையால் மராமரம் ஏழ் செற்று –பொய்கையார் –27-
எய்தான் மராமரம் ஏழும் இராமனாய் –பேயார் -52-
மரம் பொதச் சரம் துரந்து –திருச்சந்த –73-
கடைந்து மிடைந்த வேழ் மரங்களும் அடங்க எய்து உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்த இராமனாய் –திருச்சந்த –81-
சுடர் வாளியால் நீடு மா மரம் செற்றதும் —பெருமாள் –2-2-
வனமருவு கவியரசன் காதல் கொண்டு —10–6-
நின்ற மராமரம் சாய்த்தாய் –பெரியாழ்வார் –2-4-2-
சிலையால் மராமரம் எய்த தேவனை சிக்கென நாடுதிரேல் –4–1–3-
மரம் ஏழ் அன்று எத்தனை –பெரிய திருவந்தாதி -64-
சினையேய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா –திருவாய் — 1–5–9 –
மராமரம் எய்த மாயவன் –1–7–6-
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும் –2–5–7-
மராமரம் பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வலவா –2–6–9-
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவாவோ -6–10–5-
கணை ஒன்றாலே ஏழ் மரமும் எய்த எம் கார் முகிலை -9–1–2-
மராமரம் எழும் எய்த வலத்தினான் –கலியன்–1–8–5-
மராமரம் எய்த மா முனிவா –3–5–5-
மரம் எய்த திறலாளா–3–6–9-
மராமரம் ஏழு எய்த வென்றிச் சிலையாளன் –5–5–2-
மரம் ஏழு எய்த மைந்தனை –7–3–1-
ஏழு மா மரம் துளை படச் சிலை வளைத்து –8–5–5-
வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து –10–6–9-
பொருந்து மராமரம் ஏழும் எய்த புனிதனார் –11–2–4-
——————————
வாலிவதம்
இது விலங்கு வாலியை வீழ்த்தது –நான்முகன் -28-
கழி சினத்த வில்லாளன்
வாலி வீழ முன்னொரு நாள் –திருச்சந்த -73-
வெந்தவர்க்கும் வந்துனை எய்தலாகும் என்பர் -111-
வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே –பெருமாள் -8–7-
வாலியைக் கொன்று -10–6-
வாலி மா வலத்தொருவன் உடல் கெட வரிசிலை வளைவித்து அன்று ஏல நாறு தண் தடம் பொழில் இடம் பெற இருந்த நல்லிமயத்துள் –1–2–1-
முன் கொடும் தொழில் உரவோன் ஊனுடை அகலத்து அடு கணை குளிப்ப உயிர் கவர்ந்து உகந்த எம்பெருமான் –1–4–2-
கறை வளர் வேல் கரன் வாலி கணை ஒன்றினால் மடிய –2- -10–5-
பைங்கண் விறல் செம்முகத்து வாலி மாள -3–4–6-
உருத்தெழு வாலி மார்பில் ஒரு கணை யுருவ ஓட்டி கருத்துடைத் தம்பிக்கு இன்பாக் கதிர் முடி அரசு அளித்தாய் -4–6–3-
பெரும் தகைக்கு இரங்கி வாலியை முனிந்த பெருமை கொலோ –10–9–8-
———————————————
அங்குளீய பிரதானம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடனிருந்து நினைத்தேட அத்தகு சீர் அயோத்தியார் கோன் அடையாளம் இவை
மொழிந்தான் இத்தகையால் அடையாளம் ஈதவன் கை மோதிரமே –பெரியாழ்வார் -3–10–8-
——————————–
அசோகவன பங்கம்
உயர் கொள் மா கடி காவை இறுத்து –கலியன் –10–2-6-
———————
சமுத்திர சரணாகதி
கிடந்து–திருவாய் -2–8–7-
கிடந்து –4–5–10-
கிடந்தவாறும் –5–10–6-
—————————–
கடல் அரசனிடம் பெருமாள் சீற்றம்
வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர –திருச்சந்த –31-
வெண் திரைக் கருங்கடல் சிவந்து வேவ –50-
பரந்திட்டு நின்ற படுகடல் தன்னை –கரந்திட்டு நின்ற கடலைக் கலங்க சரந்தொட்ட கைகளால் சப்பாணி –பெரியாழ்வார் -1–6–7-
முரியும் வெண் திரை முது கயம் தீப்பட முழங்கழல் எரி அம்பின் வரி கொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் –கலியன் –8–5–6-
மல்லை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவைத்து கொல்லை விலங்கு பணி செய்யக் கொடியோன் இலங்கை புகலுற்று –8-6-4-
—————————————–
சேது பந்தனம்
அன்று அது அடைத்து உடைத்துகே கண் படுத்த வாழி–பொய்கையார் -2-
பின்னடைத்தாய் மா கடலை –பூதத்தார் –30-
இது இலங்கை ஈடழியக் கட்டிய சேது –நான்முகன் –28-
தடம் கடலை கல் கொண்டு தூர்த்த கடல் வண்ணன் –77-
படைத்த பவ்வ நீர் அடைத்து –திருச்சந்த –28-
குரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய் -32-
வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி –39-
படைத்து அடைத்து அதில் கிடந்து –92-
துள்ளு நீர் வரம்பு செய்த –102-
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து –திருமாலை -11-
குரங்குகள் மலையை நூக்கக் குளித்து தாம் புரண்டிட்டு ஓடி தரங்க நீர் அடைக்கலுற்ற சலமிலா அணிலும் போலேன்-27-
மலையதனால் அணை கட்டி –பெருமாள் –8–8-
குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து குலை கட்டி மறு கரையை அதனாலே ஏறி –10–7-
குரக்கினத்தாலே குரை கடல் தன்னை நெருக்கி அணை கட்டி –பெரியாழ்வார் —1–6–8-
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டு அடைப்ப –4–1–3-
சேது பந்தனம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே –நாச்சியார் –2–7-
வண்ணம் போல் அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி –பெரிய திருமடல்
கிடந்து –திருவாய் –2–8–7-
உண்டும் –கிடந்தும் –4–5–10-
பெரிய நீர் படைத்து –அடைத்து —8–1–5-
அலை கடலைக் கடைந்து அடைத்த –திரு நெடும் தாண் –29-
கலங்க மாக் கடல் அரி குலம் பணி செய்ய அருவரை அணை கட்டி -கலியன் -1–2–2-
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி –1–5–1-
மாலும் கடலார மலைக்கு வடிட்டு அணை கட்டி –கோலா மதிளாய இலங்கை கெட –2–4–5-
குடைத் திறல் மன்னவனாய் ஒரு கால் குரங்கைப் படையா மலையால் கடலை யடைத்தவன் எந்தை பிரான் —2–9–8-
நெய்வாய் அழல் அம்பு துரந்து முந்நீர் துணியப் பணி கொண்டு –3–2–6-
கம்பமா கடலை யடைத்து —4–2–1-
மல்லை மா முந்நீர் அதர் பட மலையால் அணை செய்து மகிழ்ந்தவன் –4–2–6-
கல்லால் கடலை அணை கட்டி யுகந்தாய் –4–7–6-
அலை கடலை அடைத்திட்டு –4–10–2-
இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி வரிசிலை வளைய வடு சரம் துரந்து மறி கடல் நெறி பட மலையால்
அரி குலம் பணி கொண்டு அலை கடலை அடைத்தான் –5–7–7-
விலங்கலால் கடலை யடைத்து விளங்கிழை பொருட்டு –5–9–6-
வாள் அரக்கன் நகர் பாழ் படச் சூழ் கடல் சிறை வைத்து –கலியன் –7–3–9-
கலங்கா மா கடல் கடைந்து அடைத்து –8–5–7-
கொல்லை விலங்கு பணி செய்யக் கொடியோன் இலங்கை புகல் உற்று தொல்லை மரங்கள் புகப் பெய்து
துவலை நிமிர்ந்து வான் அணவக் கல்லால் கடலை அடைத்தானூர் –8–6–4-
விலங்கல் உறப் படையால் ஆழி தட்ட -8–9–3-
ஓத மா கடலைக் கடந்தேறி –10–2–6-
தாழமின்றி முந்நீரை அஞ்ஞான்று தகைந்ததே கண்டு -10–2–7-
கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து -10–3–6-
தெளியா வரக்கர் திறல் போயவிய மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா
விலங்கல் புகப் பாய்ச்சி விம்ம –கடலை அடைத்திட்டவன் காண்மின் –10–6–7-
துளங்காத முந்நீர் செறித்திட்டு –10–6–8-
—————–
விபீஷணன் உபதேசம்
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான் —கலியன் -10–2–4-
——————-
இலங்கை பாழ் செய்தது
தென்னிலங்கை நீறாக எய்து அழித்தாய் நீ –பூதத்தார் -29-
இலங்கா புரம் எரித்தான் எய்து –பெயர் -51-
குலை கொண்ட யீரைந்த்தலையான் இலங்கை ஈடழித்த கூரம்பன் –நான்முகன் -8-
கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தன் அல்லால் ஒரு தெய்வம் யானிலேன் –53-
வெற்பெடுத்த விஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ –திருச்சந்த –39-
இலைத் தலைச் சரந்துரந்து இலங்கை கட்டு அவிழ்த்தவன் -54-
இரும்பரங்க வெஞ்சரம் துரந்த வில்லி இராமனே -93-
பண்ணுலாவு –எண்ணிலா வரக்கரை நெருப்பினால் நெருக்கினாய்–91-
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான் –திருமாலை -7-
இலங்கையர் குலத்தை வாட்டிய வரிசிலை வானவர் என்றே –திருப் பள்ளி எழுச்சி –4-
அன்று நேர்ந்த நிசாசரரைக் கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் –அமலனாதி –2-
வளைய வொரு சிலையதனால் மதிள் இலங்கை அழித்தவன் –பெருமாள் –8–9-
இலங்கை நகர் அரக்கர் கோமான் சினம் அடங்க மாருதியால் சுடுவித்தான் –10–6-
இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்கு–திருப்பல்லாண்டு -3-
இலங்கை அரக்கர் அவிய அடு கணையால் நெருக்கிய கைகளால் சப்பாணி –பெரியாழ்வார் –1–6–8-
வல்லாள் இலங்கை மலங்கச் சரந்துரந்த வில்லாளனை -2–1–10-
அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த அனுமன் புகழப்பாடி ததன்குட்டங்களை –3–5–7-
கனங்குழையாள் பொருட்டாக் கணை பாரித்து அரக்கர் தங்கள் இனம் கழுவேற்றுவித்த எழில் தோள் எம்மிராமன் –4–3–7-
தென்னிலங்கை கோமானைச் செற்ற –திருப்பாவை -12-
சென்று அங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி -24-
கடலை யடைத்து அரக்கர் குலங்களை முற்றவும் செற்று இலங்கையை பூசலாக்கிய சேவகர் –நாச்சியார் –2–6-
வில்லால் இலங்கை அழித்தாய்–3–3-
இரக்கமேல் ஒன்றும் இலாதாய் இலங்கை அழித்த பிரானே -3–4-
இலங்கைக் குழாம் நெடுமாடம் இடித்த பிரானார் கொடுமைகள் –திருச்சந்த —36-
தென்பால் இலங்கை வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் –77-
பேணலம் இல்லா வரக்கர் முன்னீர பெரும் பதிவாய் நீணகர் நீள் எரி வைத்து அருளாய் என்று
நின்னை விண்ணோர் தாள் நிலம் தோய்ந்து தொழுவர் –92-
மும் மதிள் இலங்கை இருக்கால் வளைய ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் அட்டனை –திரு எழுக் கூற்று இருக்கை
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது –சிறிய திரு மடல் –
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் –திருவாய் –2–1-3-
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன் அரக்கர் நீள் இலங்கை செற்றீருக்கே –2–4–3-
இலங்கை செற்றவனே என்னும் –கை தொழும் நின்று இவளே –2–4–4-
கிளர் வாழ்வை வேவ இலங்கை செற்றீர் -2–4–10-
இலங்கை செற்றாய் -2–6–9-
இலங்கை அரக்கர் குலம் குருடு தீர்த்த பிரான் –2–7–10-
ஏர் கொள் இலங்கையை நீறே செய்த நெடும் சுடர் சோதி -2–9–10-
தேவ தேவனைத் தென்னிலங்கை எரி எழச் செற்ற வில்லியை -3–6–3-
கொம்பு போல் சீதை பொருட்டு இலங்கை நகர் அம்பு எரி உய்த்தவர் -4–2–8-
தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த –4–8–5-
இலங்கை செற்றேனே என்னும் –5–6–9-
இலங்கை செற்ற அம்மானே –5–7–2-
மாறில் போரரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார்க்கு –6–1–10-
மன்னுடை இலங்கை அரண் காய்ந்த மாயவனே-6–2–1-
சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் வந்து வீற்று இருந்த –7–3–7-
மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் இன நூறு பிணம் மலை போல் புரள கடல் ஆறு மடுத்து
உதிரப் புனலா அப்பன் நீறு பட இலங்கை செற்ற நேரே –7–4–7-
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு நாட்டை அளித்து –7–5–2-
பெயர்கள் ஆயிரமுடைய வல்லரக்கர் புக்கு அழுந்தத் தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே -10–1–8-
அசுரரை என்றும் துணிக்கும் வல்லரட்டன்–10–1–9-
புகல் நின்ற புள்ளூர்தி போரரக்கர் குலம் கெடுத்தான் –10–6–9-
கடி மதிள் இலங்கை செற்ற ஏற்றினை –திருக் குறும் தாண் -2-
முன்பொலா இராவணன் தன் முது மதிள் இலங்கை வேவித்து –15-
தேராளும் வாளராக்கன் செல்வம் மாளத் தென்னிலங்கை முன் மலங்கச் செந்தீ ஒல்கி –திரு நெடும் தாண் –20-
இலங்கை மா நகர் பொடி செய்த வடிகள் தாம் இருந்த நல்லிமயத்து –கலியன் –1–2–2-
இலங்கையும் கடலும் அடல் யரும் துப்பின் இரு நிதிக்கு இறைவனும் அரக்கர் குலங்களும் கெட -1–4–3-
கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மா தேரும் காலாளும் உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை பொடியா வடிவாய்ச் சரம் துரந்தான் —1–5–2-
ஒரு கால் இரு கால் சிலை வளையத் தேரா வரக்கர் தேர் வெள்ளம் செற்றான் –1–5–4-
காசையாடை மூடியோடிக் காதல் செய்தானவனூர் நாசமாக நம்ப வல்ல நம்பி நம் பெருமான் —2–2–1-
அரக்கன் மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து –2—2 –3-
விண்டாரை வென்றாவி விலங்குண்ண மெல்லியலார் கொண்டாடும் அல்லகலம் அழல் ஏற வெஞ்சமத்துக் கண்டாரை –2- -6–4-
தடம் கடல் நுடங்கெயில் இலங்கை வன் குடி மடங்க வாளமர் தொலைத்த வார்த்தை கேட்டின்புறும் மயங்கும் —2–7–6-
இலங்கை தன்னுள் பிறை எயிற்று வாளரக்கர் சேனை எல்லாம் பெரும் தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை –2–10–5-
எய்யச் சிதைந்தது இலங்கை —3–3–6-
இலங்கை பொடி செய்த -3–9–5-
கல்லின் மீதியன்ற கடி மதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டானை—4- 3–6-
இலங்கை வவ்விய இடும்பை கூரக் கடும் கணை துரந்த வெந்தை —4–5–2-
மல்லை முந்நீர் தட்டிலங்கை கட்டழித்த மாயன் –4–8–4-
ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற குரக்கரசன் கோல வில்லி –4–8–5-
அலை கடலை அடைத்திட்டு அரக்கர் தஞ்சிரங்களை யுருட்டி —4–10–2-
கடல் அரக்கர் தம் சேனை கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோல வில்லி ராமன் தன் கோயில் —4–10–6-
மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரந்துரந்து –5–1–3-
விளைத்த வெம்போர் விறல் வாளரக்கன் நகர் பாழ் பட வளைத்த வல்வில் தடக்கையவனுக்கு இடம் –5–4–4-
அன்று அரக்கனூர் அழலாலுண்டானைக் கண்டார் பின் காணாமே –5–6–5-
இலங்கை மலங்க வன்று அடு சரம் துரந்த –5- 7–8-
மல்லலஞ்சீர் மதிள் நீரிலங்கை யழித்த வில்லா –6–2–6-
தொன்னீர் இலங்கை மலங்க விலங்கு எரி ஊட்டினான் –6–4–6-
ஆனைப் புரவி தேரோடு காலாள் அணி கொண்ட சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர் –6–5–3-
எறிஞர் அரண் அழிய கடந்த நம்பி கடியார் இலங்கை -6–10–1-
தென்னிலங்கை அடையா வரக்கர் வீயப் பொருது மேவி வெங்கூற்றம் நடையா யுண்ணக் கண்டான் –6–10–5-
கான வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர் மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் –6–10–6-
சினவில் செங்கண் ஆருயிர் அரக்கர் மாளச் செற்ற வில்லி என்று –7–3–1-
ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று சரங்கள் ஆண்ட –7–3–4-
தேரா ளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழ போராளும் சிலையதனால் பொரு கணைகள் போக்குவித்தாய் -7–4–4-
அடையார் தென்னிலங்கை யழித்தானை–7–6–3-
வாளரக்கர் காலன் –8–4–8-
இலங்கையை மலங்குவித்த ஆழியான் –8–5–5-
துளங்கா வரக்கர் துளங்க முன் திண் தோள் நிமிரச் சிலை வளையச் சிறிதே முனைந்த திரு மார்பன் –8–6–1-
முன் திருந்தா வரக்கர் தென்னிலங்கை செந்தீ யுண்ணச் சிவந்து ஒரு நாள் –8–6–6-
விண்ட
சிலையினால் இலங்கை தீ எழச் செற்ற திருக்கண்ணங்குடியுள் நின்றானை –9–2–10-
வில்லால் இலங்கை மலங்கச் சரந்துரந்த வல்லாளன் —9-4–5-
செற்றவன் தென்னிலங்கை மலங்கத் தேவர் பிரான் –9–5–10-
சிலையால் இலங்கை செற்றான் –9–6–10-
கடி இலங்கை மலங்க எரித்து –10–2–6-
அணி இலங்கை அழித்தவன் தன்னை —10–2–10-
இலங்கை அல்லல் செய்தான் உங்கள் கோமான் —10–3–6-
இலங்கை ஒள்ளெரி மண்டி யுண்ணப் பணித்த ஊக்கமதனை நினைந்தோ —10–9–1-
அரக்கரை வென்ற வில்லியார் வீரமே கொலோ —11–1–1-
சென்று வார்சிலை வளைத்து இலங்கையை வென்ற வில்லியார் வீரமே கொலோ –11–1–6-
பொரு கடல் சூழ் தென்னிலங்கை ஈடழித்த -11–3–1-
கொலை மலி எய்துவித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள்
சிலை மலி ஏசஞ்சரங்கள் செல வுய்த்த நாங்கள் திருமால் நமக்கு ஓர் அரணே–11–4–7-
கொடியோன் இலங்கை பொடியாச் சிலை கெழு செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமாலை —11–4–10-
—————————–
கும்ப கர்ணன் வதம்
மிகப் புருவம் ஒன்றுக்கு ஓன்று ஓசனையான் வீழ ஒரு கணை
பண்டொரு நாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும் –திருப்பாவை –10-
நம்பி அனுமா சுக்ரீவா அங்கதனே நலனே கும்ப கர்ணன் பட்டுப் போனான் –கலியன் -10–3–2-
—————————
ராவண யுத்தத்தில் மற்றப் பேர் வதம்
காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடி இலங்கை மலங்க எரித்து -10–2–6-
——————————
இந்திரஜித் வதம்
எம்பிரானே என்னை ஆள்வாய் என்று என்று அலத்தாதே அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது இந்திரசித்து அழிந்தான் –கலியன் –10–3–2-
———————-
இராவண வதம்
ஆறிய வன்பில் யடியார் தம் ஆர்வத்தால் கூறிய குற்றமாக் கொள்ளல் நீ தேறி நேடியோய் யடியடை
தற்கென்றே ஈரைந்து முடியான் படைத்த முரண் –பொய்கையார் -35-
நுடங்கிடையை முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள் தன் வில் அங்கை வைத்தான்
தோள் இரண்டு எட்டு ஏழு மூன்றும் முடி யனைத்தும் தாள் இரண்டும் வீழச் சரம் துரந்தான் –43-
தென்னிலங்கை கோன் வீழ –பேயார் –52-
இது விலங்கை தான் ஒடுங்க வில் நுடங்கத் தண் தார் இராவணனை ஊன் ஒடுங்க வெய்தான் உகப்பு –நான்முகன் -28-
குரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய் அரக்க ரங்க ரங்க வெஞ்சரம் துரந்த வாதி நீ –திருச்சந்த –32-
மின்னிறத்து எயிற்று அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து –33-
சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன் சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் –51-
இலங்கை மன்னன் ஐந்தொடைந்து பைந்தலை நிலத்துகக் கலங்க வன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே -56-
அங்கம் மங்க வன்று சென்று அடர்த்து எறிந்த வாழியான்-57-
மாறு செய்த வாளரக்கன் நாலுளப்ப அன்று இலங்கை நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் -61-
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் –செருவிலே அரக்கர் கோனைச் செற்ற –திருமாலை -11-
சதுர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து உதிரவோட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் –அமலன் -4-
எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன் இன்னுயிர் கொண்டு –10–7-
மின்னிடை சீதை பொருட்டா இலங்கையர் மன்னன் மணி முடி பத்துமுடன் வீழ –பெரியாழ்வார் –2–6–8-
தென்னிலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து –2–6–9-
கள்ள வரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டாய் -2–7–5-
காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு ஓராதான்
வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும் தங்கை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்தும் மலை –4–2–2-
எரி சிதறும் சரத்தால் இலங்கையினை தன்னுடைய வரிசிலை வாயில் பெய்து
வாய்க் கோட்டம் தவிர்ந்து உகந்த அரையன் அமரும் மலை –4–3–8-
தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடித்த எம் தாசரதி –4–7–1-
பெரு வரங்களவை பற்றிப் பிழக்குடைய விராவணனை உருவரங்கப் பொருது அழித்து இவ்வுலகினைக் கண் பெறுத்தானூர்–4- 8 -5-
பருவரங்களவை பற்றிப் படை யாலித்து எழுந்தானை செருவரங்கப் பொருது அழித்த திருவாளன் –4–8–10-
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற –திருப்பாவை –12-
பொல்லா வரக்கனைக் கிள்ளிக் களைந்தானை –13-
மாதலி தேர் முன்பு கோல் கொள்ள மாய விராவணன் மேல் சரமாரிதாய் தலை யற்று யற்று வீழத் தொடுத்த தலைவன் -நாச்சியார் -5–3-
போர் காலத்து எழுந்து அருளிப் பொருதவனூர் பேர் சொல்லி —8–8-
நாழால் அமர் முயன்ற வல்லரக்கன் இன்னுயிரை வாழா வகை வலிதல் நின் வலியே –பெரிய திருவந்தாதி –11-
சூழ்ந்து எங்கும் வாள் வரைகள் போல் அரக்கன் வன் தலைகள் தாம் இடியத் தாள் வரை வில் ஏந்தினார் தாம் –17-
சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை மாட்டே துயர் இழைத்த மாயவனை
ஈட்ட வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே அறி கண்டாய் சொன்னேன் அது-66-
வைதேவி காரணமா ஏரார் தடம் தோள் இராவணனை ஈரைந்து சீரார் சிரம் அறுத்துச் செற்றுகந்த செங்கண் மால் –சிறிய திருமடல்
மன்னன் இராவணனை மா மண்டு வெஞ்சமத்துப் பொன் முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து –பெரிய திருமடல்
நீள் கடல் சூழ் இலங்கைக் கோன் தோள்கள் தலை துணி செய்தான் –திருவாய் –1–6–7-
குழாங்கொள் பேரரக்கன் குலம் வீய முனிந்தவனை –2–3–11-
இலங்கை யரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான் –2–7–10-
தண்ணிலங்கைக்கு இறையைச் செற்ற நஞ்சனே –3–8–2-
மதிள் இலங்கைக் கோவை வீயச் சிலை குனித்தாய் -4–3–1-
கடிய வினையே முயலும் ஆண்டிறல் மீளி மொய்ம்பின் அரக்கன் குலத்தை தடிந்து மீண்டுமவன் தம்பிக்கே
விரி நீர் இலங்கை யருளி ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே —7–6–9-
தேராளும் வாளரக்கன் செல்வம் மாள –திரு நெடும் தாண் -20-
தென்னிலங்கை யரண் சிதறி யவுணன் மாளச் சென்று -28-
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக் கொடுஞ்சிலை –வாய்ச் சரந்துரந்து குலங்களைந்து வென்றானை -29-
தானவன் ஆகம் தரணியில் புரளத் தடம் சிலை குனித்த என் தலைவன் –1–4–1-
இரு நிதிக்கு இறைவனும் அரக்கர் குலங்களும் கெட முன் கொடும் தொழில் புரிந்த கொற்றவன் –1–4–3-
மதிள் நீர் இலங்கை வாளரக்கர் தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் –1–5–1-
கண்ணார் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன் தன் திண்ணாகம் பிளக்கச் சரம் செல வுய்த்தாய் -1–10–1-
தையலாள் மேல் காதல் செய்தானவன் வாளரக்கன் பொய்யில்லாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும்
அன்று செய்த வெம்போர் தன்னில் அங்கோர் செஞ்சரத்தால் உருள –2–2–2-
பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும் இரவு நன்பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை எம்மானை –2–3–7-
கதிர் நீண் முடி பத்தும் அறுத்து அமரும் நீல முகில் வண்ணன் –2–4–5-
தென்னிலங்கை அரக்கர் வேந்தை விலங்குண்ண வலங்கை வாய்ச் சரங்கள் ஆண்டு –2- -5–9-
மின்னின் நுண்ணிடை மடக்கொடி காரணம் விலங்கலின் மிசை இலங்கை மன்னன் நீண் முடி பொடி செய்த மைந்தன் –3–1–7-
பொருவில் வலம் புரி யரக்கன் முடிகள் பத்தும் புற்றும் அறிந்தன போலப் புவி மேல் சிந்தச் செருவில் வலம் புரி சிலைக்கை மலைத்தோள் வேந்தன் –3–4–7-
மின்னனைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை வேந்தன் முடி ஒருபதும் தோள் இருப்பதும்
போயுதிரத் தான் நெடுங்கண் சிலை வளைத்த தயரதன் சேய்-3–10–6-
கம்பமா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடியவை பத்தும் அம்பினால் அறுத்து –4–2–1-
தான் போலும் என்று எழுந்தான் தரணியாளன் –கோன் போலும் என்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோளுடன் துணித்த ஒருவன் கண்டீர் –4–4–6-
முனை முகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து அங்கனையவர்க்கு இளையவர்க்கே அரசு அளித்து அருளினான் —4–6–4-
விறல் வாளரக்கர் தலைவன் தன் வற்பார் திரள் தோள் ஐ ந் நான்கும் துணித்த வல் விலி இராமன் —5–1–4-
ஆறினோடு ஒரு நான்குடை நெடு முடி யரக்கன் தன் சிரம் எல்லாம் வேறு வேறாக வில்லது வளைத்தவனே –5–3–7-
வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக அம்பு தன்னால் முனிந்த அழகனிடம் —5–4–5 –
சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடு விசை அரக்கன் எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து –5–7–7-
விளங்கிழை பொருட்டு வில்லால் இலங்கை மா நகர்க்கு இறைவன் இருபது புயம் துணித்தான் —-5–9–6-
வற்றா நீள் கடல் இலங்கை இராவணனைச் செற்றாய் –6–3–5-
கல்லார் மதிள் சூழ் கடி இலங்கை கார் அரக்கன் வல்லாகம் கீள வலி வெஞ்சரம் துரந்த வில்லனை -6- 8-5-
பழி யாரும் விறல் அரக்கன் பரு முடிகள் அவை சிதற அழலாறும் சரம் துரந்தான் –6–9–2-
இலங்கைக் கோன் வல்லாள் ஆகம் வில்லால் முனிந்த வெந்தை-6–10–4-
செம்பொன் மதிள் சூழ் தென்னிலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐயிரண்டும் உம்பர் வாளிக்கு இலக்காக உதிர்த்த வுரவோன் –7–5–3-
பந்தணைந்த மெல் விரலாள் சீதைக்காகிப் பகலவன் மீதியங்காத இலங்கை வேந்தன் —
அந்தமில் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த வம்மான் —7–8–7-
தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய நஞ்சினை —7–10–8-
இலங்கையர் கோனது வரையாகம் மலங்க வெஞ்சமத்து அடு சரம் துரந்த எம்மடிகளும் —8–5–7-
வல்லி யிடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுத்த ஆற்றலான்–8–6–3-
நெடும் புணரி சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்து —8–6–5-
வானுளாரவரை வலிமையால் நலியும் மறி கடல் இலங்கையார் கோனைப் பானு நேர் சரத்தால் பனங்கனி போலப் பருமுடி யுதிர வில் வளைத்தோன் -9–1–7-
சிரம் முன் ஐந்தும் ஐந்தும் சிந்தச் சென்று அரக்கன் உரமும் கரமும் துணித்த உரவோன் –9–6–4-
வணங்கலில் அரக்கன் செருக்களத்து அவிய மணி முடி ஒருபதும் புரள அணங்கு எழுந்தவன் தன் கவந்தம் நின்றாட –9–8–5-
காவலன் இலங்கைக்கு இறை கலங்கச் சரம் செல உய்த்து மற்றவன் ஏவலம் தவிர்த்தான் –9–10–6-
இராவணன் பட்டனன் -10–2-1-
இலங்கைக்கு இறை தன்னை எங்களை ஒழியக் கொலை அவனைச் சூழுமா நினை —10–2–7-
புன்மையாளன் நெஞ்சில் புக எய்த –10–2–8-
ஞாலம் ஆளும் உங்கள் கோமான் எங்கள் இராவணற்கு காலனாகி வந்த வா கண்டு அஞ்சி –10–3–3-
——————————–
அரக்கர் லடசுமனைத் துதித்தல்
மணங்கள் நாறும் வார் குழலார் மாதர்கள் ஆதரத்தை புணர்ந்த சிந்தைப் புன்மையாளன் போன்ற வரி சிலையால் கணங்கள்
யுண்ண வாளி யாண்ட காவலனுக்கு இளையோன் குணங்கள் பாடி யாடுகின்றோம் குழ மணி தூரமே -10–3–4-
இலங்கை மலங்க வரக்கன் செழு நீண் முடி தோளோடு தாள் துணிய அறுத்திட்டவன் காண்மின் –10–6–8-
அரக்கியர் ஆகம் புல்லென வில்லால் அணி மதிள் இலங்கையர் கோனைச் செருக்கு அழித்து அமரர் பணிய முன்னின்ற சேவகமோ செய்ததின்று -10–9–6-
———————————————————–
விபீஷணனுக்கு அரசு
அவன் தம்பிக்கு அரசுமீந்து –பெருமாள் –10–7-
மின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு என்னிலங்கு
நேராவான் தம்பிக்கே நீள் அரசு ஈந்த ஆராவமுதனை -3–9–10-
அரசவன் தம்பிக்கு அளித்தவன்–4–2–1-
இளையவர்க்கே அரசளித்து–கலியன் –4–6–4-
செல்வ விபீடணற்கு வேறாக நல்லானை –6–8–5-
விபீடணற்கு நல்லான் –6–10–5-
அலை நீர் இலங்கை தசக்ரீவர்க்கு இளையோருக்கு அரசை அருளி —8–6–7-
———————————————-
இராக்கதர் சுக்ரீவாதிகள் இடம் சரணம் புகுதல்
சாம்பவானுடன் நிற்கத் தொழுதோம் இலங்கு வெங்கதிரோன் தன் சிறுவா குரங்குகட்க்கு அரசே எம்மைக் கொல்லேல்—கலியன் –10–2–9-
ஏத்துகின்றோம் நாத்தழும்ப இராமன் திரு நாமம் சோத்த நம்பீ சுக்க்ரீவா உம்மைத் தொழுகின்றோம் எம்மை
உங்கள் வானரம் கொல்லாமே வார்த்தை பேசீர் -10–3–1-
நீலன் வாழ்க சுடேணன் வாழ்க அங்கதன் வாழ்க –10–3–3-
காவலனுக்கு இளையோன் குணங்கள் பாடி –10–3–4-
எம்பெருமான் தமர்காள் வென்றி தந்தோம் நீர் எம்மைக் கொல்லாதே–10–3–5-
வெங்கதிரோன் சிறுவா –கொல்ல வேண்டா –10–3–6-
சீற்றம் நும்மேல் தீர வேண்டில் சேவகம் பேசாதே ஆற்றல் சான்ற தொல் பிறப்பில் அனுமனை வாழ்க வென்று கூற்றமன்னார் காண ஆடீர் குழ மணி தூரமே –10-3-7-
கவள யானை பாய புரவி தேரோடு அரக்கர் எல்லாம் துவள வென்ற வென்றியாளன் தான தமர் கொல்லாமே தவள மாட நீள்
அயோத்திக் காவலன் தன் சிறுவன் குவளை வண்ணன் காண வாடீர் குழ மணி தூரமே –10–3–8-
எங்கள் இராவணனார் ஓடிப் போனார் நாங்கள் எய்த்தோம் உய்வதோர் காரணத்தால் சூடிப் போந்தோம் உங்கள் கோமான்
ஆணை தொடரேன்மின் கூடிக் கூடி யாடுகின்றோம் குழ மணி தூரமே
———————————
அரக்கர் வதம்
அலம்பா வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரைக் குலம் பாழ் படுத்துக் குல விளக்காய் நின்ற கோன் மலை –பெரியாழ்வார் –4–2–1-
செருக்கெடுத்தன்று திகைத்த வரக்கரை உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே –திருவாய் —8–6–2-
ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று உருவு கரந்து —8–6–3-
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே –திரு நெடும் தாண்-16-
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல் –கலியன் –1–1–6-
பேணாத வலி யரக்கர் மெலிய வன்று பெரு வரைத் தோள் இற நெரித்து அன்று -2–5–7-
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர் தமக்கு தாய் மனத்து இரங்கி
அருளினைக் கொடுக்கும் தயரதன் மதலையை சயமே –4–3–5-
பிறையின் ஓளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என வந்த அசுரர் இறைகள் அவை நெறு நெறு என
வெறிய யவர் வயிறு அழல நின்ற பெருமான் –5–10–4-
முளவெரி சிந்தி முனிவெய்தி அமர் செய்தும் என வந்த அசுரர் தோளும் அவர் தாளும் முடியோடு பொடியாக நொடியாம் அளவு எய்தான் — -5–10–5-
விண்ட நிசாசரைத் தோளும் தலையும் துணிவு எய்தச் சுடு வெஞ்சிலை வாய்ச் சரம் துரந்தான் –6–7–1-
—————————————
பாதாள அரக்கர் வதம்
மிடைத்த மாலி மாலியான் விலங்கு காலனூர் புக –திருச்சந்த –28-
உலகில் வன்மையுடைய வரக்கர் வசுரரை மாளப் படை பொருத நன்மை யுடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவிலனே –திருவாய் -3–10–1-
குலம் குலமா அசுரர்களை நீராகும்படியாக நிருமித்துப் படை தொட்ட மாறாளன்–4–8–1-
உடம்பினால் குறைவில்லா உயிர் பிரிந்த மலைத் துண்டம் கிடந்தன போல் துணி பலவா அசுரர் குழாம் துணித்து உகந்த –4–8–10-
ஆளியைக் காண்பரியாய் அரி காண் நரியாய் அரக்கர் ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம் புக்கு ஒளிப்ப
மீளியம் புள்ளைக் கடாய் விறல் மாலியைக் கொன்று பின்னும் ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தான் –7–6–8-
மாசின மாலி மாலிமான் என்று அங்கவர் பட கனன்று முன்னின்ற –9–2–6-
இலங்கைப் பதிக்கு அன்று இறையாய அரக்கர் குலம் கேட்டவர் மாளக் கொடிப் புள் திரித்தாய் –கலியன் -1–10–2-
தாங்கரும் போர் மாலி படப் பறையூர்ந்து தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை –2–10–4-
சிறையார் அவணப் புள் ஓன்று ஏறி–கரையார் நெடு வேல் அரக்கர் மடிய -3- 8-4-
பொருந்தா வரக்கர் வெஞ்சமத்து பொன்ற வன்று புள்ளூர்ந்து பெரும் தோள் மாலி தலை புரளப் பேர்ந்த வரக்கர் தென்னிலங்கை இருந்தார்
தம்மை யுடன் கொண்டு அங்கு எழிலார் பிலத்து புக்கொப்ப கருத்தால் சிலைக் கைக் கொண்டானூர் -8–6–2-
————————————
பட்டாபிஷேகம்
கொண்ட கோலத்தோடு வீற்று இருந்தும் மணம் கூடியும் கண்டவாற்றால் தனதே யுலகு என்று நின்றான் தன்னை வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே –திருவாய் -4–5–10-
அம்பொனோடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி –பெருமாள் –10–8-
—————————————–
பெருமாள் கேட்ட உபன்யாசம்
அகத்தியன் வாய்த் தான் முன் கொன்றான் தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி உலகு உய்யத் திரு வயிறு
வாய்த்த மக்கள் செம்பவளத் திரள் வாய்த் தன் சரிதை கேட்டான் –பெருமாள் –10–8-
————————————-
லவணாசுர வதம்
இலவணன் தன்னைத் தம்பியால் வான் ஏற்றி –பெருமாள் -10- -9-
———————-
இலக்குமனைப் பிரிதல்
முனிவன் வேண்ட திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான் — -10–9-
—————————-
தன்னுடைச் சோதி எழுந்து அருளுதல்
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி –இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற –தன் தாமம் மேவி –இனிது வீற்றிருந்த அம்மான் –10–10-
—————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply