அருளிச் செயல்களில் பரத்வாதி பஞ்சகம் -நான்காம் பாகம் -அத்புத சொல் தொடர்கள் –ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் –

1-பல்லாண்டு பல்லாண்டு மணி வண்ணா உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு -பகவத் மங்களாசாசனம் –திருப்பல்லாண்டு -1-
2-ஆழியும் பல்லாண்டு அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டு –பாகவத மங்களாசாசனம் –2-
3-ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் –3-
4-பண்டைக் குலத்தை தவிர்ந்து —5-
5-அந்தியம் போதில் அரி யுருவாகி அரியை அழித்தவன்–6-
6-சக்கரத்தின் கோயில் பொறியாலே ஒத்துண்டு –7-
7-விடுத்த திசைக் கருமம் திருத்தி —9-
8-அபிமான துங்கன் செல்வன் –11-
9-திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன்–11-
10-பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டே-12-
11-திருவோணத்தான் உலகாளும் –பெரியாழ்வார் -1–3-
12—வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே—1- -6-
13–ஆயர் புத்ரன் அல்லன் அரும் தெய்வம் –1–7-
14–மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய் –1–9-
15–பேதைக் குழவி பிடித்து சுவைத்து உண்ணும் பாதக் கமலம் –1–2–1-
16–அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன் –1–2–6-
17–குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்பு –1–2–10-
18–நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே தாளை நிமிர்த்துச் சகடத்தை சாடி –1–2–11-
19—நெய்த் தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலம் –1–2–12-
20–திண் கொள் அசுரரைத் தேய வளர்க்கின்றான் –1–2–16-
21–மக்கள் பெறாத மலடன் அல்லையேல்–1- 4–4-
22–பாலகன் என்று பரிபவம் செய்யேல் –1–4–7-
23—சிறியன் என்று என் இளம் சிங்கத்தை இகழேல் –1–4–8-
24–சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்று கேள் -1–4–9-
25–உய்ய உலகு படைத்துண்ட மணி வயிறா –1–5–1-
26—கண்டவர் கண் குளிர கற்றவர் தெற்றி வரப் பெற்ற எனக்கு அருளி –1–5–8-
27—ஏலு மறைப் பொருளே –1–5–9-
28—ஆழிகளும் கிண் கிணியும் அரையில் தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின் பூவோடு பொன் மணியும்
மோதிரமும் கிறியும் மங்கல ஐம்படையும் தோள் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக–1–5–10-
29–உளம் தொட்டு இரணியன் ஒண் மார்பகலம் பிளந்திட்ட கை –1–6–9-
30—ஆட் கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோ –1–6–11-
31—தொடர் சங்கிலிகை சலார் பிலார் என்ன –1–7–1-
32–அக்கு வடமுடுத்து ஆமைத்தாலி பூண்ட அனந்த சயனம் –1–7–2-
33–தன்னில் பொலிந்த இருடீகேசன் –1–7–3-
34—கன்னல் குடம் திறந்தால் ஒத்து –1–7–4-
35—தன்னம்பியோடப் பின் கூடச் செல்வான் —1–7–5-
36—ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்து அமைத்த இருக்காலும் கொண்டு அங்கங்கு எழுதினால் போலே இலச்சினை பட நடந்து –1–7–9-
37—கங்கையிலும் பெரியதோர் தீர்த்த பலம் தரு நீர் சிறுச் சண்ணம் –1–7–10-
38—மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களை பெறுவர்களே–1–7–11-
39–சுழலைப் பெரு துடைச் துச்சோதனனை அழல விழித்தான்-1- -8–5-
40—சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக் கையன் –1–8–7-
41—மன்னு நமுசியை வானில் சுழற்றிய மின்னு முடியின் –1–8–8-
42—இண்டைச் சடை முடி ஈசன் இரக் கொள்ள மண்டை நிறைத்தான் –1- -8–6-
43—பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறித் தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும் மெத்தத் திரு வயிறு ஆர விழுங்கிய அத்தன் –1–9–7-
44—பொறையுடை மன்னர்க்காய்ப் பத்தூர் பெறாது அன்று பாரதம் கை செய்த அத்தூதன் —2–1–1-
45—தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ -2–1–7-
46—அரவணையாய் ஆயர் ஏறே –2–2–1-
47—மின்னனைய நுண்ணிடையார் விரி குழல் மேல் நுழைந்த வந்து இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் –2–2–6-
48—என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள் –2–2–8-
49—-என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண்–2–3–8-
50—உண்ணக் கனிகள் தருவன் —2–3–11-
51—-நாவல் பழம் கொண்டு வைத்தேன் –2–3–12-
52—-நீ பிறந்த திருவோணம் இன்று நீ நீராட வேண்டும் —2–4–2-
53—கறந்த நல் பாலும் தயிரும் கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய் பிறந்ததுவே முதலாக பெற்று அறியேன் –2–4–7-
54–நப்பின்னை காணில் சிரிக்கும் –2–4–9-
55—கொங்கும் குடைந்தையும் கோட்டியூரும் பேரும் எங்கும் திரிந்து விளையாடும் என் மகன் –2–6–2-
56—ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான் –2–6–4-
57—ஆமாறு அறியும் பிரானே அணி யரங்கத்தே கிடந்தாய் –2–7–8-
58–பண்பகர் வில்லிபுத்தூர் -2–7–10-
59—செம்பொன் மதிள் வெள்ளறையாய் செல்வத்தினால் வளர் பிள்ளாய் –2–8–8-
60—திருக் காப்பு நானுன்னைச் சாத்த தேசுடை வெள்ளறை நின்றாய் –2–8–9-
61—-வேதப் பயன் கொள்ள வல்ல விட்டுசித்தன் –2–8–10-
62—வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பு இடையிட்டு அதன் ஓசை கேட்க்கும் கண்ணபிரான் –2–9–1-
63—புண்ணில் புளிப்பெய்தால் ஒக்கும் தீமை –2–9–1-
64—-அண்ணற்கு அண்ணான் ஓர் மகன் —2–9–1-
65—வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே –2–9–1-
66—-கொண்டல் வண்ணா இங்கே போதராய் கோயில் பிள்ளாய் இங்கே போதராய் –2–9–4-
67—–மேலை யகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன் –2–9–5-
68—-வேதப் பொருளே என் வேங்கடவா –2–9–6-
69—பன்னிரண்டு திருவோணம் அட்டேன் –2–9–7-
70—-தூசணம் சொல்லும் தொழுத்தைமார் —2–9–8-
71–சொல்லில் அரசிப் படுத்தி நங்காய் –2-9-10-
72—பத்து மஞ்சள் பூசி பாவைமாரோடு பாடியில் –3–2–2-
73—மிடறு மெழு மெழுத்தோடே வெண்ணெய் விழுங்கி –3–2–6-
74—பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அப்பங்கினால்–3–2-8-
75—குடையும் செருப்பும் கொடாதே —3–2–9-
76—ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மாற்றாரும் இல்லை –3–3–1-
77—என்னில் மனம் வலியாள் ஒரு பெண்ணில்லை —3–3–2-
78—ஆடி அமுது செய் அப்பனும் உண்டிலன் –3–3–3-
79—-குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே –3–3–4-
80—என்றும் என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே -3–3–7-
81—கேட்டு அறியாதன கேட்க்கிறேன் –3–3–8-
82—-கோலம் செய்து இங்கே இரு –3—3–9-
83—தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கம் மத்தளி தாழ்பீலி
குழல்களும் கீதமுமாகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் –3–4–1-
84—சுரிகையும் தெரி வில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன் மார் கொண்டோட
ஒரு கையால் ஒருவன் தன் தோளை யூன்றி –3–4–3-
85—மற்று ஒருவர்க்கு என்னைப் பேசல் ஓட்டேன்–3–4–5-
86—சிந்துரப் பொடி கொண்டு சென்னி அப்பித் திரு நாமம் இட்டு —3–4–8-
87—அனுமன் புகழ் பாடி தன் குட்டங்களை குடங்கை கொண்டு மந்திகள் கண் வளர்த்தும் கோவர்த்தனம் –3–5–7 –
88—தவ மா முனிவர் இருந்தார் நடுவே சென்று அணார் சொரிய கொலை வாய்ச் சின்ன வேங்கைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் –3–5–8-
89—முசுக் கணங்கள் முதுகில் பெய்து தம்முடைக் குட்டங்களை கொம்பேற்றி இருந்து குதி பயிற்றும் கோவர்த்தனம் –3–5–10-
90—நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கைமீர்காள் இதோர் அற்புதம் கேளீர் —3–6–1-
91—வான் இளவரசு வைகுந்தக் குட்டன் –3–6–3-
92—கரும் சிறுக்கன் குழலூதின போது மேனகையோடு திலோத்தமை அரம்பை உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி
வானகம்படியில் வாய் திறப்பின்றி ஆடல் பாடல் அவை மாறினர் தாமே –3–6–4-
93—தும்புருவோடு நாரதனும் தம் தம் வீணை மறந்து –3–6–5-
94—மருண்டு மான் கணங்கள் –எழுது சித்ரங்கள் போல் நின்றனவே –3–6–9-
95—மரங்கள் –திருமால் நின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே –3–9–10-
96—சாது கோட்டியுள் கொள்ளப் படுவாரே–3- 6–11 —
97—வாயில் பல்லும் எழுந்திலே மயிரும் முடி கூடிற்றில—3–7–2-
98—கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில–3–7–3-
99—தோழிமார் பலர் கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சி –3–7–4-
100—மூழை உப்பறியாதது என்னும் மூதுரை –3–7–4-
101—கேடு வேண்டுகிறார் பலர் உளர் –3–7–5-
102—பேசவும் தரியாத பெண்மை –3–7–7-
103—கோல் கழிந்தான் மூழையாய் –3–7–7-
104—காறை பூணும் கண்ணாடி காணும் தன் கையில் வளை குலுக்கும் கூரை உடுக்கும் அயர்க்கும் தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும் –3–7–8-
105—இவளை வைத்து வைத்துக் கொண்டு என்ன வாணிபம் நம்மை வடுப்பத்தும் -3–7–9-
106—செய்த்தலை எழு நாற்றுப் போலே அவன் செய்வன செய்து கொள்ள –3–7–9-
107—மருத்துவப் பதம் நீங்கினாள் என்னும் வார்த்தை –3—7–10-
108—இல்லம் வெறியோடிற்றாலோ —3–8–1-
109—ஒன்றும் அறிவொன்றில்லாத உருவரைக் கோபாலர் –3–8–2-
110—அரசாணியை வழி பட்டு —3–8–3-
111—ஒரு மகள் தன்னை யுடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல் வளர்த்தேன் செங்கண் மால் தான் கொண்டு போனான் –3–8–4-
112—மருமகளைக் கண்டு உகந்து மணாட்டுப் புறம் செய்யுங்கொலோ—3–8–4-
113—என் மகள் எங்கக் கடை கயிறே பற்றி வாங்கிக் கை தழும்பு ஏறிடும் கொலோ —3–8–8-
114—படியில் குணத்துப் பரத நம்பி –3–9–9-
115—மல்லிகை மா மாலை கொண்டு பார்த்ததும் ஓர் அடையாளம் –3–10–2-
116—-தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ –3–10–4-
117–வில்லிறுத்தான் மோதிரம் கண்டு –உச்சி மேல் வைத்து உகந்தனளால் -3–10–9-
118—வேந்தர் தலைவன் சனகராசன் –4–1–2-
119—நீரேறு செஞ்சடை நீல கண்டனும் நான்முகனும் முறையால் சீரேறு வாசகம் செய்ய நின்ற திருமால் –4–1–5-
120—பல்லாயிரம் பெரும் தேவிமாரொடு பவ்வம் ஏறி துவரை எல்லாம் சூழச் சிங்கா தானத்தே இருந்தான் –4- 1-6-
121—வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர்த் திருச் சக்கரம் ஏந்து கையான் –4–1–7-
122—ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப –4–1–8-
123—திருவில் பொலிந்த மறை வாணன் பட்டர் பிரான் –4–1–10-
124—வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும் தங்கை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் —4–2–2-
125—ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில் கஞ்சன் தன் ஒரு வாரணம் உயிர் உண்டவன் –4–2–5-
126—கரு வாரணம் தன் பிடி துரந்தோடக் கடல் வண்ணன் திருவாணை கூறத் திரியும் –4–2–5-
127—மல்லரை சாவத் தகர்த்த சாந்தணி தோள் சதுரன் —4–2–6-
128—மன்னர் மறுக மைத்துனர் மார்க்கு ஒரு தேரின் மேல் முன் அங்கு நின்று மோழை எழுவித்தவன் –4–2–7-
129—பல பல நாழம் சொல்லிப் பழித்த சிசு பாலன் —4–3–5-
130—எம்பெருமானுக்கு அடியுறை —4—3–9-
131—-நாவ காரியம் –4–4–1-
132—குற்றம் இன்றிக் குணம் பெருக்கி குருக்களுக்கு அநு கூலர் –4–4–2-
133—பெற்ற தாயர் வயிற்றினைப் பெரு நோய் செய்வான் பிறந்தார்களே–4–4–2-
134—திருமாலவன் திரு நாமங்கள் எண்ணக் கண்ட விரல்கள் —4—4–3-
135—-நரக நாசனை நாவில் கொண்டு அழையாத மானிட சாதியார் பருகு நீரும் உடுக்கும் கூறையும் பாவம் செய்தன –4–4–4-
136—பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே —4–4–5-
137—-நரசிங்கனை நவின்று ஏத்துவார்கள் உழக்கிய பாத தூளி படுவதால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே –4–4–6-
138—பக்தர்கள் இருந்த ஊரில் இருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார் கொலோ —4–4–7-
139—-கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினுள் விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்களே–4–4–8-
140—-காசின் வாய்க்கரம் விற்கிலும் கரவாது மாற்றிலி சோறிட்டு தேச வார்த்தை படைக்கும் வண் கையினார் –4–4–10-
141—குறளா வென்று பேசுவார் அடியார்கள் எந்தம்மை விற்கவும் பெறுவார்கள் –4–4–10-
142—இத்திசைக்கு என்றும் பிணைக் கொடுக்கிலும் போக ஒட்டாரே –4–5–2-
143—மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்பதோர் தெய்வத்தை நாட்டி ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலுமாமே –4–5-3-
144—மூலமாகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை யுள் எழ வாங்கி –4–5–4-
145—பாடிப் பாடி ஓர் பாடையில் இட்டு நரிப் படைக்கு ஒரு பாகுடம் போலே கோடி மூடி எடுப்பது –4–5–8-
146—செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்றமாய் ஒரு பக்கம் நிற்க வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலுமாமே —4–5–9-
147—-கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இருமினோ—-4- 6–1-
148—நாயகன் தம் அன்னை நரகம் புகாள்—4-6–1-
149—பிச்சை புக்காகிலும் எம்பிரான் திரு நாமமே நச்சுமின் —4–6–3-
150—தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த என் தாசரதி —4–7–1-
151—கங்கை கங்கை என்ற வாசகத்தாலே கடுவினை கணைந்து இடகிற்கும் —4–7–1-
152—-நலம் திகழ்ச் சடையான் முடிக் கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும் கலந்து இழி புனலால் புகார் படு கங்கை –4–7–2-
153—சதுமுகன் கையில் சதுப் புயன் தாளில் சங்கரன் சடையினால் தங்கி—-4–7—3-
154—-இமவந்தம் தொடங்கி இரும் கடல் அளவும் –4–7–4-
155—-உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண் சுடர் ஆழியும் சங்கும் மழுவோடு வாளும் படைக்கலம் உடைய மால் –4–5–7-
156—-வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி இடமுடை வதிரி இடவகை யுடைய எம் புருடோத்தமன் –4–7–9-
157—-மூன்று எழுத்தது அதனை மூன்று எழுத்து அதனால் மூன்று எழுத்து அதாக்கி மூன்று எழுத்தை ஏன்று கொண்டு இருப்பார் –4–7–10-
158—கங்கையில் திருமால் கழல் இணைக் கீழே குளித்து இருந்த கணக்காமே —4–7–11-
159—–வல் எயிற்றுக் கேழலுமாய் வாள் எயிற்றுச் சீயமுமாய் –4–8–8-
160—-குன்றாடு கொழு முகில் போல் குவளைகள் போல் குரை கடல் போல் நின்றாடு கண மயில் போல் நிறமுடைய நெடுமால் —4—8–9-
161—-திருவாளன் திருப்பதி மேல் திருவரங்கத் தமிழ் மாலை –4–8–10-
162—-மரவடியைத் தம்பிக்கு வான் பணையம் வைத்துப் போய் –4–9–1-
163-தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்
மன்னனுடைய வீபீடணற்காய் மதிள் இலங்கை திசை நோக்கி மலர்க கண் வைத்த என்னுடைய திருவரங்கற்கு அன்றியும் மாற்று ஒருவர்க்கு ஆளாவாரே–4–9–2-
164—ஆமையாய் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய் அரு வரைகளாய் நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய்த்
தக்கணையாய்த் தானுமானான் சேமமுடைய நாரதனார் சென்று சென்று துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில் -4–9–5-
165—பத்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் பரந்த நாடும் சித்தர்களும்
தொழுது இறைஞ்சத் திசை விளக்காய் நிற்கின்ற திருவரங்கமே –4–9–6-
166—உரம் பெற்ற மலர்க்கமலம் உலகளந்த சேவடி போலே உயர்ந்து காட்ட –வரம்புற்ற கதிர்ச் செந்நெல் தாள் சாய்த்துத் தலை வணங்கும் தண் அரங்கமே –4–9–8-
167—திருவாளன் இனிதாகத் திருக் கண்கள் வளர்கின்ற திருவரங்கமே –4–9–10-
168—-தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரங்கம் –4–9–11-
169—-துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்து துணையாவார் என்றே –4—10–1-
170—-அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைபி பள்ளியானே –4–10–1-
171—சொல்லலாம் போதே உன் நாமம் எல்லாம் சொல்லினேன் —4–10–3-
172—-ஒற்றை விடையனும் நான்முகனும் உன்னை அறியாப் பெருமையோனே –4–10–4-
173—மூன்று எழுத்தாய முதல்வனேயோ –4–10—-4-
174—வைய மனிசரைப் பொய் என்று எண்ணிக் காலனையும் உடன் படைத்தாய் –4–10–5-
175—-எண்ணலாம் போதே உன் நாமம் எல்லாம் எண்ணினேன் –4–10–6-
176—செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற தேவர்கள் நாயகனே –4–10–7-
177—-நானேதும் உன் மாயம் ஒன்றும் அறியேன் —4–10–8-
178—அன்று முதல் இன்று அறுதியா ஆதியஞ்சோதி மறந்து அறியேன் —4–10–9-
179—-காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரணா கருளக் கொடியானே –5–1–1-
180—-சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன் –5–1–2-
181—பிழைப்பர் ஆகிலும் தம்மடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் அன்றே —5–1–2-
182—-உழைக்கோர் புள்ளி மிகையன்று கண்டாய் –5–1–2-
183—வன்மையாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாயே –5-1–3-
184—-கூறை சோறிவை வேண்டுவது இல்லை அடிமை என்றும் அக்கோயின்மையாலே –5- -1–4-
185—தோட்டம் இல்லவள் ஆத்தொழு ஓடை துடவையும் கிணறும் இவை எல்லாம் வாட்டமின்றி
உன் பொன்னடிக் கீழே வளைப்பகம் வகுத்துக் கொண்டு இருந்தேன் -5- 1–5-
186—உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை ஓவாதே நமோ நாரணா என்று எண்ணா நாளும் இருக்கு எசுச் சாமவேத
நாண் மலர் கொண்டு உனபாதம் நண்ணா நாள் அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே -5- 1–6-
187—உள்ளம் சோர உகந்து எதிர் விம்மி உரோம கூபங்களாய்க் கண்ண நீர்கள் துள்ளம் சோரத்
துயிலணை கொள்ளேன் சொல்லாய் யானுன்னைத் தத்துறுமாறே-5-1-7-
188—எண்ணுவார் இடரைக் களைவானே —5–1–8-
189—-சேம நன்கமரும் புதுவையர் கோன் விட்டு சித்தன் —5–1–10-
190—நெய்க்குடத்தைப் படி ஏறும் எறும்புகள் —5–2–1-
191—-சித்ர குத்தன் எழுத்தால் தென் புலக்கோன் பொறி ஒற்றி —5–2–2-
192—-எயிற்றிடை மண் கொண்ட வெந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப் பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் –5–2–3-
193—உமக்கு ஓன்று சொல்லுகேன் கேண்மின் –5–2–6-
194—-என்னுள்ளே பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து போதில் கமல வன்னெஞ்சம் புகுந்தும்
என் சென்னித் திடரில் பாத இலச்சினை வைத்தார் –5–2–8-
195—உறகல் உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே சங்கே அற வெறி நாந்தக வாளே
அழகிய சார்ங்கமே தந்த பறவை அரையா உறகல் —5- 2–9-
196—அரவத் தமளியினோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
பரவைத் திரை பழ மோதிப் பள்ளி கொள்கின்ற பிரானைப் பரவுகின்றான் விட்டு சித்தன் –5- 2–10-
197—வளைத்து வைத்தேன் இனிப் போகல் ஓட்டேன்—5–3–1-
198—நின் திரு வாணை கண்டாய் நீ ஒருவருக்கும் மெய்யன் அல்லை—5–3–2-
199—-உனக்குப் பணி செய்து இருக்கும் தவமுடையேன் இனிப் போய் ஒருவன் தனக்குப் பணிந்து
கடைத் தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய் –5–3–3-
200—-புனத்தினை கிள்ளிப் புது வவி காட்டி உன் பொன்னடி வாழ்க வென்று இனக்குறவர் புதியது உண்ணும் –5–3–3-
201—அங்கோர் நிழலில்லை நீருமில்லை உன்பாத நிழலால் மற்றோர் உயிர்ப்பிடம் நான் எங்கும் காண்கிறிலேன்–5–3–4-
202—காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கிக் குரல் மேலும் எழா
மயிர்க்கூச்சும் அறா என் தோள்களும் வீழ் ஒழியா மாலுகளா நிற்கும் —5–3–5-
203—எருத்துக் கொடியானும் பிரமனும் இந்திரனும் மற்றும் ஒருத்தரும் இப்பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை –5- 3–6-
204—மருத்துவனாய் நின்ற மணி வண்ணா -5–3–6-
205–அக்கரை என்னும் அனர்த்தக் கடலுள் அழுந்தி உன் பேர் அருளால் இக்கரை ஏறி இளைத்து இருந்தேனை அஞ்சேல் என்று கை கவியாய் –5–3–7-
206—-என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு –5- 4–1-
207—பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால் –5–4–2-
208—நாட்டில் உள்ள பாவம் எல்லாம் சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே —5–4–3-
209—பொன்னைக் கொண்டு உரைகல் மீதே நிறம் எழ உரைத்தால் போலே –5–4–5-
210—-உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன் —5–4–5-
211—உன்னுடைய விக்ரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம் என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன் –5–4–6-
212—-பருப்பு பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குலபதி போல் திருப் பொலிந்த சேவடி என் சென்னியில் மேல் பொறித்தாய் –5–4–7-
213—அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என் மனம் தன்னுள்ளே வந்து வைகி –5–4–8-
214—நினைந்து இருந்தே சிரமம் தீர்ந்தேன் –5–4–8-
215—பனிக்கடலில் பள்ளி கோளைப் பழகவிட்டு ஓடி வந்து என் மனக்கடலில் வாழ வல்ல மாய மணாள நம்பீ –5–4–9-
216—-தனிக்கடலே தனிச்சுடரே தனி உலகே என்று என்று உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்தாக்கினையே –5–4–9-
217—வட தளமும் வைகுந்தமும் மதிள் துவாராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இட வகை கொண்டனையே –5–4–10-
218—-விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலன் —5–4–11-
219—-சாயைப் போலேப் பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -5–4–11-

——————————–

திருப்பாவை
220–நாராயணனே நமக்கே பறை தருவான் -1-
221—ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி -2-
222—ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி –நீராடினால் நீங்காத செல்வம் நிறைந்து -3-
223—ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து–4-
224—-தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க –5-
225—-போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -5-
226—மா மாயன் மாதவன் வைகுந்தன் -9-
227—சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான்–12-
228—வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று -13-
229—சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணன் –14-
230—நானே தான் ஆயிடுக -15-
231—அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் -17-
232—பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாட -18-
233—செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய் –18-
234—ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே -21-
235—-திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல் அங்கண் இரண்டும் –22-
236—உன் கோயில் நின்று இங்கனே போந்தருளி -23-
237—அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி –24-
238—ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர -25-
239—ஆலினையாய் அருளாய் -26-
240—கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா -27-
241—உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -28-
242—எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் –29-
243—-பட்டர் பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை -30-
244—செங்கண் திரு முகத்துச் செவத்த திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் -30-

————————————————-

நாச்சியார் திருமொழி
245—மானிடவர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே —1–5-
246—-பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காமதேவா –1–6-
247—-மாசுடை யுடம்பொடு தலை யுலறி வாய்ப்புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு –1–8-
248—பெண்மையைத் தலையுடைத்தாக்கும் வண்ணம் கேசவ நம்பியைக் கால் பிடிப்பான் என்றும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய் -1-8-
249—-நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே -2–1-
250—உன்னை மாமி தன் மகனாகப் பெற்றால் எமக்கு வாதை தவிருமே–2–1-
251—-கடைக் கண்களால் இட்டு வாதியேல் –2–3-
252—-உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ –2–4-
253—-உரோடம் ஒன்றும் இலோம் கண்டாய் –2–5-
254—-இலங்கையைப் பூசலாக்கிய சேவகா–2–6-
255—தொட்டுதைத்து நலியேல் கண்டாய் –2–8-
256—-முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன் முறுவல் செய்து சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்க கடவையோ –2–9-
257—எம்மைப் பற்றி மெய் பிணக்கிட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் –2–9-
258—-வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லி புத்தூர் –2–10-
259—இனி என்றும் பொய்கைக்கு வாரோம் –3-1-
260—–தோழியும் நானும் தொழுதோம் –3–1-
261—-இப்பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் –3–2-
262—குரக்கரசு ஆவது அறிந்தோம் -3–4-
263—-காலைக் கதுவிடுகின்ற கயலொடு வாளை விரவி -3–5-
264—கோலங்கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய் -3–5-
265—விடத்தேள் எறிந்தாலே போலே வேதனை யாற்றவும் பட்டோம் -3–6-
266—நீரிலே நின்று அயர்க்கின்றோம் நீதி யல்லாதன செய்தாய் –3–7-
267—-மாமிமார் மக்களே யல்லோம் மற்றும் இங்கு எல்லோரும் போந்தார் -3–8-
268—நெஞ்சு துக்கம் செய்து போந்தாய்–3–9-
269—அஞ்ச உரப்பாள் யசோதை மானாட விட்டிட்டு இருக்கும் -3–9-
270—-மாலிருஞ்சோலை மணாளனார் பள்ளி கொள்ளுமிடத்து அடி கொட்டிட -4–1-
271—காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர் –4–2-
272—நம் தெருவின் நடுவே வந்திட்டு –4–5-
273—பழகு நான் மறையின் பொருள் –4–10-
274—நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர் -4–11-
275—-மென்னடை யன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் -5–5-
276—இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த என் கோலக் கிளி -5–5-
277—தத்துவனை வரக் கூற்றியாகில் தலை யல்லால் கைம்மாறிலேனே–5–6-
278—-தேங்கனி மாம் பொழில் செந்தளிர் கோதும் சிறு குயிலே -5–8-
279—-இரண்டத்து ஒன்றேல் திண்ணம் வேண்டும் -5–9-
280—நாரணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பேன்-5–10-
281—கோதை சொன்ன நண்ணுறு வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே–5–11-
282—வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் –6-1-
283—கோளரி மாதவன் கோவிந்தன் என்பாரோர் காளை –6–2-
284—மந்திரக்கோடி யுடுத்து மணமாலை அந்தரி சூட்ட –6–3-
285—பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாண்டு எடுத்தேத்த–6–4-
286—-பூப்புனைக் கண்ணிப் புனிதன் –6–4-
287—-என்னைக் கைத்தலம் பற்ற –6–6-
288—என் கை பற்றித் தீ வலம் செய்ய –6–7-
289—செம்மையுடைய திருக் கையால் தாள் பற்றி அம்மி மிதிக்கக் கானாக் கண்டேன் –6–8-
290—அரி முகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து பொரி முகம் தட்டக் கானாக் கண்டேன் -6–9-
291—அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல் மஞ்சனமாட்டக் கானாக் கண்டேன் –6–10-
292—வாயு நன்மக்களைப் பெற்று மகிழ்வரே-6–11-
293—கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ –7–1-
294—கடலில் பிறந்து கருதாது பஞ்சசனன் உடலில் வளர்ந்து போய் ஊழியான் கைத் தலத்திடரில் குடியேறி –7- -2-
295—-வலம் புரியே இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே–7–4-
296—-இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண்–7–5-
297—-சர்க்கரையா உன் செல்வம் சாலை அழகியதே –7–7-
298—–உண்பது சொல்லில் உலகலந்தான் வாயமுதம் கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத் தலத்தே –7–8-
299—பொதுவாக உண்பதனை புக்கு நீ யுண்டக்கால் –சிதையாரோ -7–9-
300—-பெண்ணீர்மை ஈடழிக்கும் இது தமக்கோர் பெருமையே -8- 1-
301-கோவிந்தன் குணம் பாடி –ஆவி காத்து இருப்பேனே –8–3-
302—உளங்குண்ட விளங்கனி போலே உள் மெலிய -8–6-
303—செங்கண் மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம் -8–7-
304—நீர் காலத்து எருக்கிலம் பழ விலைப் போல் வீழ்வேனை –8–8-
305—-மத யானை போல் எழுந்த மா முகில்காள் -8–9-
306—-வேங்கடத்தை பதியாக வாழ்வீர்காள் -8–9-
307—பாம்பணையான் வார்த்தை என்றே –8–9-
308—ஓர் பெண் கொடியை வதை செய்தான் என்றும் சொல் –8–9-
309—மந்தரம் நாட்டி என்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான்—9–1-
310—ஆர்க்கிடுகோ தோழீ அவர் தாம் செய்த பூசலையே –9–2-
311—-கரு விளை ஒண் மலர்காள் காயா மலர்காள் திருமால் உருவொளி காட்டுகின்றீர் –9-3-
312—-குயில்காள் மயில்காள் ஒண் கரு விளைகாள் வம்பக் களங்கனிகாள் வண்ணப் பூவை நறு மலர்காள் ஐம் பெரும் பாதகர் காள் –9–4-
313—நாறு நாறும் பொழில் மாலிரும் சோலை நம்பிக்கு நான் நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன் —9–6-
314—ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளும் கொலோ -9–6-
315—–ஓன்று நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் -9–7-
316—கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ —9-8-
317—மாலிரும் சோலையில் கொன்றைகள் போல் தூங்குகின்றேன்–9–4-
318—பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கு ஒலியும் சார்ங்க வில் நாண் ஒலியும் தலை பெய்வது எஞ்ஞான்று கொலோ –9–9-
319—உம்மைப் போர்க் கோலம் செய்து போர விடுத்தவன் எங்குற்றான் –10–1-
320—-ஆர்க்கோ இனி நாம் பூசல் இடுவது -10–1-
321—எம்மை மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக் கொள்கிற்றிரே–10–2-
322—-பாம்பணை யார்க்கும் தம் பாம்பு போல் நாவும் இரண்டு உளவாயிற்று -10–3-
323—கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் –10–4-
324—-நானும் பிறந்தமை பொய்யன்றே–10–4-
325—வாழ்வு தந்தால் வந்து பாடுமின் –10–5-
326—-உம்மை நடமாட்டம் காணப் பாவியேன் நானோர் முதலிலேன்–10–7-
327—-நாகணை மீசை நம்பரர் செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என் –10–9-
328—விட்டு சித்தர் தங்கள் தேவர் –10–10-
329—-குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் -11–2-
330—என்னுடைய கழல் வளையைத் தாமும் கழல் வளையே யாக்கினரே –11–2-
331—செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் –11–3-
332—நல்லோர்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான் –11–5-
333—நான்மறையின் சொல் பொருளாய் நின்றார் என் மெய்ப்பொருளும் கொண்டாரே –11–6-
334—பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேது–11–7-
335—மானமிலாப் பன்றியாம் தேசுடைய தேவர் -11–8-
336—ஆங்கவளைக் கைப் பிடித்த பெண்ணாளன் 11–9-
337—திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை-11- 10-
338—தம்மை உகப்பாரை தாம் உகப்பார் என்னும் சொல் தம்மிடையே பொய்யானால் சாதிப்பாரார் இனியே -11–10-
339—ஊமையரோடு செவிடர் வார்த்தை -12–1-
340—-என்னை மருந்து செய்து பண்டு பண்டாக்க உறுதி ராகில் -12–2-
341—தனி வழி போயினால் என்னும் சொல்லு வந்த பின்னை பழி காப்பரிது–12- 3-
342—சிறு மானிடவரைக் காணில் நாணும் கொங்கை -12–4-
343—கை கண்ட யோகம் தடவத் தீரும் -12–5-
344—வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று–12–6-
345—கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் காடு வாழ் சாதியும் ஆகப் பெற்றான் –12–8-
346—கற்றன பேசி வசவுணாதே–12–8-
347—பாவிகள் உங்களுக்கு ஏச்சுக் கொலோ –12–8-
348—புண்ணில் புளிப் பெய்தால் போல் –13–1-
349—பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் –13-1-
350—அழிலும் தொழிலும் உருக்காட்டான் –13–5-
351—தழுவி முழுசிப் புகுந்து –13–5-
352—நந்தகோபன் மகன் என்னும் கொடிய கடிய திருமால் -13–6-
353—வெற்ற வெறிதே பெற்ற தாய் வேம்பேயாக வளர்த்தாள்–13–7-
354—கொள்ளை கொள்ளிக் குறும்பன் கோவர்த்தனன் -13–8-
354—கொள்ளும் பயன் ஒன்றில்லாத கொங்கை தன்னை கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில் எரிந்து என் அழலைத் தீர்வேனே –13–8-
356—இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய் செய்யும் தவம் தான் என் –13–9-
357—விடை தான் தருமேல் மிக நன்றே –13–9-
358—அல்லல் விளைத்த பெருமான் ஆயர் பாடிக்கு அணி விளக்கு –13–10-
359—பழ தேவர்க்கோர் கீழ்க் கன்று –14–1-
360—இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி விட்டுக் கொண்டு விளையாட –14–1-
361—வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழ் வருவான் –14–3-
362—கமலக் கண் என்னும் நெடும் கயிறு படுத்தி –14–4-
363—வலையில் பிழைத்த பன்றி போல் –14–5-
364—வீதியார வருவான் –14-5-
365—-தருமம் அறியாக் குறும்பன் —14–6-
366—தன கைச் சார்ங்கம் அதுவே போல் புருவம் வட்ட மழகிய–14-6-
367—-உருவு கரிதாய் முகம் செய்தாய் –14–6-
368—புறம் போல் உள்ளும் கரியான் –14–7-
369—-விருத்தம் பெரிதாய் வருவான் –14–7-
370—வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் –14–9-
371—வேட்டையாடி வருவான் –14–9-
372—பிரான் அடிக் கீழ் பிரியாது என்றும் இருப்பாரே –14–10-

——————————-

பெருமாள் திருமொழி
373—தெண்ணீர் பொன்னி திரைக் கையால் அடி வருடப் பள்ளி கொள்ளும் கருமணி –1–1-
374—மாயோனை மனத்தூணே பற்றி நின்று –1–2-
375—அயன் நான்கு நாவினாலும் –ஈரிரண்டு முகமும் –எழில் கண்கள் எட்டினோடும் –தொழுது ஏத்தி –1–3-
376—-அந்தமிழ் இன்பப் பாவினை –அவ்வட மொழியை –1–4-
377—தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த –1–5-
378—இரு முப்பொழுது ஏத்தி எல்லையில்லாத் தொன்னெறிக் கண் நிலை நின்ற தொண்டர் –1- -7-
379—கோலார்ந்த நெடும் சார்ங்கம் கூனல் சங்கம் கொலையாழி கொடும் தண்டு கொற்ற ஒள் வாள்
காலார்ந்த கதிக் கருடன் என்னும் கடும் பறவை இவை யனைத்தும் புறம் சூழ் காப்ப — 1–8-
380—தொண்டர் –திருபி புகழ்கள் பலவும் பாடி –1–9-
381—ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர நினைந்து உருகி ஏத்தி –1–9-
382—வன் பெரு வானகம் உய்ய அமரருய்ய மண்ணுய்ய மண்ணுலகில் மனிசருய்ய துன்பமிகு துயரகல அயர்வொன்றில்லாச் சுகம் வளர
அகமகிழும் தொண்டர் வாழ அன்போடு தென்திசை நோக்கிப் பள்ளி கொள்ளும் அணி யரங்கன் -1–10-
383—-அணியரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள் இன்பமிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்து உடனே என்று கொலோ இருக்கும் நாளே –1–10-
384—-மெய்யடியார்கள் தம் ஈட்டம் கண்டிடக் கூடுமேல் அது காணும் கண் பயனாவதே –2–1-
385—தொண்டர் அடிப் பொடி ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைதாடும் வேடிக்கை என்றாவதே –2–2-
386—தொண்டர் சேவடிச் செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே –2–3-
387—-அவனுக்கே பித்தராமவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே —2–9-
388—-கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக் கோன் குலசேகரன் –2–10-
389—-இவ்வையம் தன்னோடும் கூடுவது இல்லையான் –3–1–
390—உண்டியே உடையே யுகந்தோடும் இம்மண்டலம் –3–4-
391—-எத்திறத்திலும் யாரொடும் கூடும் அச்சித்தம் தன்னை தவிர்த்தனர் செங்கண் மால் —3–7-
392—-பேயரே எனக்கு யாவரும் யானும் ஓர் பேயனே எவர்க்கும் இது பேசி என் –3–8-
393—-ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன் –4–1-
394—-பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும் துன்னிட்டுப் புகலரிய வைகுந்த நீள் வாசல் –4–3-
395—-கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடம் —
396—மின் வட்டச் சுடர் ஆழி வேங்கடக் கோன் —4–4-
397—-செடியாய வல் வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே -4–9-
398—படியாய்க் கிடந்து நின் பவளவாய் காண்பேனே –4–9-
399—-எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே –4–10-
400—தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை –5- 1-
401—-அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி –5–1-
402—கொண்டானை அல்லால் அறியாக் குல மகள் –5– -2-
403—–வாளால் அறுத்துச் சுடினும் மருத்தவன் பால் மாளாத காதல் நோயாளன் —5–4-
404—செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோற்கு அல்லால் அலராவால்—5–6-
405—-நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம் –5–9-
406—-வண்டமர் பூங்குழல் தாழ்ந்து உலாவ வாண் முகம் வியர்ப்ப செவ்வாய் துடிப்ப தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம் –6–2-
407—-கரு மலர்க் கூந்தல் ஒருத்தி தன்னைக் கடைக்கணித்து அங்கே ஒருத்தி தன்பால் மருவி மனம் வைத்து மற்று ஒருத்திக்கு உரைத்து
ஒரு பேதைக்குப் பொய் குறித்து புரி குழல் மங்கை ஒருத்தி தன்னைப் புணர்த்தி அவளுக்கும் மெய்யன் அல்லை–
மருது இறுத்தாய் உன் வளர்த்தியூடே வளர்கின்றதால் உந்தன் மாயை தானே –6–3-
408—–யான் விட வந்த என் தூதியோடே நீ மிகு போகத்தை நன்குகந்தாய் -6–4-
409—-எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய் எம்பெருமான் நீ எழுந்து அருளே –6–6-
410—-பொய்யொரு நாள் பட்டதே யமையும் புள்ளுவம் பேசாதே போகு நம்பீ –6–7-
411—-இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே –6–8-
412—-எங்களுக்கே ஒரு நாள் வந்தூத உன் குழலின்னிசை போதராதே –6–9-
413—-தாலொலித்திடும் திருவினை இல்லாத் தாய் —7-1-
414—நந்தன் பெற்றனன் நல் வினையில்லா நாங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே –7–3-
415—அளவில பிள்ளை இன்பத்தை இழந்த பாவியேன் —7–4-
416—-திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நான்கை யசோதை பெற்றாளே–7–5-
417—-என்னை என் செய்யப் பெற்றது எம்மோயே–7–6-
418—-ஒரு கையால் ஒரு முலை முகம் நெருட –7–7-
419—-வாயிலே முலை இருக்க என் முகத்தே –நோக்கம் –7–7-
முத்தனைய முறுவல் செய்து மூக்குறிஞ்சி முலையுணாயே –பெரியாழ்வார் –2–2–2-
ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்துணாயே–பெரியாழ்வார் –2-2–8-
420—யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே –7–8-
421—ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன் காணுமாறு இனி உண்டு எனில் அருளே –7–9-
422—-தக்கதே நல்ல தாயைப் பெற்றாயே–7–10-
423—தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல் –7–11-
424—கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரத்து என் கரு மணி –8- -2-
425—கங்கையிலும் தீர்த்தமலி கணபுரம்–8–3-
426—-தாமரை மேல் அயனவனைப் படைத்தவனே –8–4-
427—பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி –8–5-
428—-சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே —8–6-
429—-இளையவர்கட்க்கு அருளுடையாய் –8–9-
430—படைத்தவனே –யாவரும் வந்து அடி வணங்க –8–10-
431—-நேரிழையும் இளங்கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனை எம்மிராமாவோ –9–2-
432—-கல்லணை மேல் கண் துயிலக் கற்றனையோ –9–3-
433—வல்வினையேன் மனமுருக்கும் மகனே –9–4-
434—இன்று நீ போக என்நெஞ்சம் இருபிளவாய்ப் போகாதே நிற்குமாறே–9–4-
435—-பொருந்தார் கை வேல் நுதி போல் பரல் பாய –9–5-
436—அரும் பாவி பாவி சொல் கேட்ட அருவினையேன் —9–5-
437—சுமந்திரனே வசிட்டனே சொல்லீர் –9–7-
438—நின்னையே மகனாகப் பெறப் பெறுவேன் ஏழ் பிறப்பும் –9–9-
439—–தயரதன் தான் புலம்பிய அப்புலம்பல் –9–10-
440—வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு –10–1-
441—-திருச் சித்ர கூடம் தன்னுள் அந்தணர்கள் ஓர் மூவாயிரவர் ஏத்த –10–2-
442—-பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து –10–4-
443—அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசாக எண்ணேண் மாற்று அரசு தாளே–10- -7-
444—அகத்தியன் வாய் தான் முன் கொன்றான் தன் பெரும் சொல் கதை கேட்டு –10–8-
445—-மிதிலைச் செல்வி உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள் செம்பவளத் திரள் வாய் தன் சரிதை கேட்டான் –10—8–
446—-அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி –10–10-
447—-திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் –10–11-
448—-தயரதன் தன் மகனாய்த் தோன்றிற்று முதலா தன் உலகம் புக்கது ஈறா—10–11-

———————————————-

திருச்சந்த விருத்தம்
449—அன்று நான்முகன் பயந்த ஆதிதேவன் இல்லையே –5-
450—-ஓன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே —7-
451—–ஆதியான கால நின்னை யாவர் காண வல்லரே –8-
452—-தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடங்கடல் தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்றுளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –10-
453—-சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார் –11-
454—-உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி –12-
455—-சாமவேத கீதனாய சக்ரபாணி யல்லையே—14-
456—பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவ –20-
457—-அங்கை யாழி சங்கு தண்டும் வில்லும் வாளும் ஏந்தினாய் — 24-
458—-மற்றவன் உரத்தினில் கரத்தை வைத்து உகிர்த் தலத்தை ஊன்றினாய் –25-
459—–இரத்தி நீ இது என்ன பொய் இரந்த மண் வயிற்றுளே கரத்தி–25-
460—-இரக்க மண் கொடுத்தவருக்கு இரக்கம் ஒன்றும் இன்றியே –32-
461—-பண்டோர் ஏனமாய வாமனா –37-
462—–மாயம் என்ன மாயமே —40-
463—-அனந்தன் மேல் கிடந்த எம் புண்ணியா –45-
464—-வீடு பெற்று இறப்போடும் பிறப்பறுக்குமா சொலே–46-
465—–நண்டை யுண்டு நாரை பேர வாளை பாய நீலமே அண்டை கொண்டு கெண்டை மேயும் அந்தணீர் அரங்கமே —49-
466—–அரங்கம் என்பர் நான்முகத்தயன் பணிந்த கோயிலே –51-
467—-அற்ற பற்றர் சுற்றி வாழும் அந்தணீர் அரங்கமே —49-
468—-உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய் -55–
469—-சங்கு தங்கு முன்கை நங்கை —57-
470—-குடந்தையில் கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே
471—-நன்றிருந்து யோக நீதி நண்ணுவர் –63-
472—-நின்றதும் இருந்ததும் கிடந்தது என் நெஞ்சுளே –64-
473—-இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து ஒன்றி நின்று வாழ்தல் இன்மை கண்டு –66-
474—காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார் போனிலும் வரம் தர மிடிக்கிலாத தேவர் –69-
475—வேத நூல் ஓதுகின்றது உண்மை —72-
476—புண் பல வழி யடைத்து அரக்கிலச்சினை செய்து -76-
477–அன்பிலன்றி ஆழியானை யாவர் காண வல்லரே -76-
478—எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லார் வான ஆளவே –77-
479—எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக் கட்டி –83-
480—பின் பிறக்க வைத்தனன் கொல்–84-
481—நாத பாத போதினிலே வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீயினம் மெய்த்தன் வல்லை—85-
482—என் வள்ளலாரை அன்றி மற்றோர் தெய்வம் நான் மதிப்பனே–88-
483—-புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன் –90-
484—-அடைக்கலம் புகுந்த என்னை அஞ்சல் என்ன வேண்டுமே —92-
485—-ஆனின் மேய ஐந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ —94-
486—–நின்னலால் ஓர் கண்ணிலேன் எம் அண்ணலே —-95-
487—-வெய்ய வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் எனது சீர்க்கைய—97-
488—-நின்னடைந்து உய்வதோர் உபாயம் நீ எனக்கு நல்க வேண்டுமே –97-
489—பத்தியான பாசனம் பெறற்க்கு அரிய மாயனே எனக்கு நல்க வேண்டுமே –100-
490—-நின்ன பாத பங்கயம் நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே —101-
491—பண்ணை வென்ற இன் சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக் கண்ண–105-
492—–ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய் –106-
493—-வீடதான போகம் எய்தி வீற்றிருந்த போதிலும் கூடுமா
494—–இருக்குவாய் முனிக் கணங்கள் ஏத்த யானும் ஏத்தினேன் –109-
495—-வைதுரின்னை வல்லவா பழித்தவர்க்கும்–நின்னை எய்தலாகும் –111-
496—-நாயினேன் செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே –111-
497—-வாள்களாக நாள்கள் செல்ல —112-
498—-அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய் –முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார் எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே —115-
499—-வீரனார் வேறு செய்து தம்முள் என்னை வைத்திடாமையால் நமன் கூறு செய்து கொண்டு இறந்த குற்றம் எண்ண வல்லனே –116-
500—என்னாவிதான் இயக்கெலாம் அறுத்து அறாத இன்ப வீடு பெற்றதே —120-

————————————–

திருமாலை
501—-மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற ஆவலிப்புடைமை கண்டாய் -1-
502—அச்சுதா ஆயர் தம் கொழுந்தே –என்னும் இச்சுவை -2-
503—இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் –2-
504—வேத நூல் பிராயம் நூறு -3-
505—பாதியும் உறங்கிப் போகும் –3-
506—பேதை பாலகன் அதாகும் பிணி பசி மூப்புத் துன்பம் –3-
507—-ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மாநகருளானே –3-
508—-மூன்று எழுத்துடைய பேரால் கத்திர பந்தும் அன்றே பரங்கத்தி கண்டு கொண்டான் –4-
509—-இத்தனை அடியரானார்க்கும் இரங்கும் நம் அரங்கனாய பித்தன் –4-
510—-அறம் சுவர் ஆகி நின்ற அரங்கன் -6-
511—புறம் சுவர் கோலம் செய்து புள் கவ்வக் கிடக்கின்றீரே –6-
512—-புத்தொடு சமணம் எல்லாம் கலை யறக் கற்ற மாந்தர் காண்பாரோ கேட்பரோ தாம் –7-
513—-தலையறுப்புண்டும் சாகேன் சத்தியம் காண்மின் –7-
514—-சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான் —7-
515—-நின்பால் பொறுப்பரியனகள் பேசில் —தலையை ஆங்கே இருப்பதே கருமம் கண்டாய் –8-
516—-மற்றுமோர் தெய்வம் உண்டே மதியிலா மானிடங்காள் –9-
517—கற்றினோம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே -9-
518—நாட்டினான் தெய்வம் எங்கும் அருள் தன்னாலே –10-
519—-நல்லதோர் அருள் தன்னாலே காட்டினான் திருவரங்கம் –10-
520—கருட வாகனமும் நிற்க சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே –10-
521—-கருவிலே திருவிலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே –11-
522—-நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க நரகமே ஸ்வர்க்கமாகும் நாமங்களுடைய நம்பி –12-
523—நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியுமன்றே —13-
524—வண்டினம் முரலும் சோலை மயிலனம் ஆலும் சோலை கொண்டல் மீது அணவும் சோலை
குயிலினம் கூவும் சோலை அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் –14-
525—-அணி திருவரங்கம் என்னா மீண்டார் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமினீரே –14-
526—தன் பால் ஆதாரம் பெறுக வைத்த அழகனூர் —16-
527—அரங்க மா கோயில் கொண்ட கரும்பு –17-
528—-கண்ணனைக் கண்ட கண்கள் பனியரும்பு உதிருமாலோ என் செய்கேன் பாவியேனே—18-
529—–குடதிசை முடியை வைத்துக் குண திசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டித் தென் திசை இலங்கை நோக்கிக் கடல் நிறக் கடவுள்
எந்தை அரவணைத் துயிலுமா கண்டு உடல் எனக்கு உருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே –19-
530—-அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட மாயனார் திரு நன் மார்பும் மரகத உருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவர் இதழ்ப் பவள வாயும் ஆயசீர் முடியும் தேசம் அடியார்க்கு அகலலாமே —20-
531—-பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஓன்று உணரலாகாது —22-
532—-கங்கையில் புனிதமாய் காவேரி –23-
533—-எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும் எங்கனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் –23-
534—உள்ளமே வலியை போலும் —24-
535—-குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தணமை தன்னை ஒளித்திட்டேன்—25-
536—-குரங்குகள் மலையை நூக்க –27-
537—தரங்க நீர் அடைக்கலுற்ற சலமிலா அணில் -27-
538—மரங்கள் போல் வலிய நெஞ்ச வஞ்சனேன் –27-
539—-உம்பரால் அறியலாகா ஒளி –28-
540—-ஊரிலேன் காணி இல்லை உறவு மாற்று ஒருவர் இல்லை –29-
541—துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசனானேன் –31-
542—–அவத்தமே பிறவி தந்தாய் அரங்க மா நகர் உள்ளானே–31-
543—கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு —34-
544—-உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி –34-
545—-என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே –34-
546—-மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுரவாறே –36-
547—தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திருவரங்கம் –37-
548—-திருவரங்கத்துள் ஓங்கும் ஒளி யுளார் தாமே யன்றே தந்தையும் தாயும் ஆவார் –37-
549—-அளியல் நம் பையல் என்னா அம்மா ஓ கொடியவாறே –37-
550—மேம்பொருள் போகவிட்டு மெய்ம்மையை மிக யுணர்ந்து ஆம் பரிசறிந்து கொண்டு ஐம்புலன் அகத்து அடக்கிக்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பரை யுகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே –38-
551—போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே –41-
552—-இழி குலத்தவர்கள் ஏலும் எம்மடியார்கள் ஆகில் தொழுமினீர் கொடுமின் கொண்மின் என்று நின்னொடும் ஓக்க வழி பட வருளினாய் போலும் -42-
553—-சாதி அந்தணர்கள் ஏலும் நுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பதோர் அளவில் ஆங்கே அவர்கள் தாம் புலையர் –43-
554—-தொண்டர் அடிப் பொடி சொல் இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே –45-

—————————————–

திருப் பள்ளி எழுச்சி
555—-இலங்கையர் கோன் வழி பாடு செய்யும் கோயில் –5-
556—–ஏதமில் தண்ணுமை எக்கம் மத்தாழி யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி கீதங்கள் பாடினர் கின்னரர் கருடர் –9-
557—-அவர்க்கு நாள் ஓலக்கம் அருள அரங்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாயே –9-
558—-தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடிப் பொடி என்னும் அடியன் —10-

——————————————-
அமலனாதிபிரான்
559—-திருக் கமலபாதம் வந்து –1-
560—-வேங்கட மா மழை நின்றான் -அரங்கத்து அரவின் அணையான் —3-
561—-அயனைப் படைத்ததோர் எழில் உந்தி -3-
562—-எம் ஐயனார் அணி அரங்கனார் –7-
563—அரவின் அணை மீசை மேய மாயனார் –7-
564—-கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப் பெரியவாய கண்கள் –8-
565—-நீல மேனி ஐயோ நிறை கொண்டது –9-
566—-அணி அரங்கன் என் அமுதினைக் கண்டா கண்கள் மாற்று ஒன்றினைக் காணாவே –10-

———————————

கண்ணி நுண் சிறுத் தாம்பு
567—-கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என்னப்பன் -1-
568—-தென் குருகூர் நம்பி என்னக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே -1-
569—-மெய்ம்மையே தேவு மற்று அறியேன் –2-
570—-தேவபிரானுடைக் கரிய கோலத் திரு உருக் காண்பன் நான் –3-
571—-அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான்–4-
572—நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் –4-
573—-நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் –5-
574—-என்றும் என்னை இகழ்விலன் காண்மினே –6-
575—-எண்டிசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ் சடகோபன் அருளையே –7-
576—-ஆயிரம் இன்தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –8-
577—-மிக்க வேதியர் வேதத்தின் உட்ப்பொருள் –9-
578—–செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் -10-
579—-அன்பன் தன்னை அடைந்தவர்கட்க்கு எல்லாம் அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு அன்பன் –11-
580—-மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -11-

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: