அருளிச் செயல்களில் பரத்வாதி பஞ்சகம் -மூன்றாம் பாகம் -விபவம் –ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் –

ஸ்ரீ விபவம் / ஹம்ஸாவதாரம் / ஹயக்ரீவதாரம் / தசாவதாரங்கள் /மத்ஸ்ய / கூர்ம /அம்ருத மதனம் /வராஹ / நரசிம்ம /வாமன – திரிவிக்ரம / பரசுராம /

————————————-

ஸ்ரீ ஹம்ஸாவதாரம்
அங்கமாறும் சங்க வண்ண மன்ன மேனி சார்ங்க பாணி –திருச்சந்த –15-
புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் –15-
துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகை மூட மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட பின் இவ்வுலகினில்
பேரிருள் நீங்க அன்று அன்னமது ஆனானே அரு மறை தந்தானே –பெரியாழ்வார் –1–8–10-
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை –திரு நெடும் தாண்–30-
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை –கலியன் –2–1–10-
துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றாது இருளாய் மூடிய நாள் அன்னமாகி அருமறைகள் அருளிச் செய்த அமலன் –கலியன் –5–1–9-
முன் இவ்வேழ் உலகு உணர்வு இன்றி இருள் மிக உம்பர்கள் தொழுது ஏத்த அன்னமாகி அன்று அருமறை பயந்தவனே–5–3–8-
ஒருநாள் அன்னமாய் அன்று அருமறை பயந்தான் –5–7–3-
புள்ளாய் ஏனமுமாய்ப் புகுந்து என்னை யுள்ளம் கொண்ட -7–2–1-
அன்னமாய் நூல் பயந்தாற்கு—9–4–2-
முன் இவ்வுலகங்கள் ஏழும் இருள் மண்டி யுண்ண முதலோடு வீடும் அறியாது என்னிது வந்தது என்ன விமையோர் திசைப்ப
எழில் வேதம் இன்றி மறைய பின்னையும் வானவர்க்கும் முனிவருக்கும் நல்கி இருள் தீர்ந்து இவ்வையம் மகிழ
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்தவைத்து நம்மை யாளும் அரசே —11–4–8-
புள்ளாய் –11–7–6-

——————————————-

ஸ்ரீ ஹயக்ரீவன்

வசையில் நான்மறை கெடுத்த வம்மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய் இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே –5–3–2-
முன் இவ்வுலகு ஏழும் இருள் மண்டி யுண்ண –வந்து பன்னு காலை நாலு வேதப் பொருளை எல்லாம் பரிமுகமாய் அருளிய என் பரமன் –7–8–2-

—————————–

ஸ்ரீ தசாவதாரங்கள்
அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும் ஆமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே –பெரியாழ்வார் –1–5–11-
தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய் மூ உருவில் இராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில் –4–9–9-
மீனாய் யாமையுமாய் நரசிங்கமுமாய் குறளாய்க் கானோர் ஏனமுமாய் கற்கியாம் இன்னம் கார் வண்ணனே —5–1–10-
அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம் மாயனே –கலியன் –2–7–10-
கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும் —4–5–6-
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த் தானுமாய தரணித் தலைவனிடம் —5–4–8-
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்த் தானாய்ப் பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும் ஆனான் தன்னை
கண்ணபுரத்தடியன் கலியன் ஒலி செய்த தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே –8–8–10-
அன்னமும் கேழலும் மீனுமாய –நாகை யழகியாரை –9–2–10-

———————————

ஸ்ரீ மத்ஸ்யாவதாரம்
மீனாய் உயிர் அளிக்கும் வித்து –நான்முகன் –22-
அம்புலாவு மீனுமாகி –திருச்சந்த —35-
தன்னை பிறர் அறியா மீனை –பெரிய திருமடல்
மீனோடு ஏனமும் தானான் என்னில்–திருவாய் –1- -8–8-
கொழும் கயலாய் நெடு வெள்ளம் கொண்ட காலம் குல வரையின் மீதோடி யண்டத்து அப்பால் எழுந்து
இனிது விளையாடும் ஈசன் எந்தை இணை அடிக் கீழ் இனிது இருப்பீர் –கலியன் -6–6–2-
மூழ்த்த நாள் அந்நீரை மீனாய் அமைத்த பெருமானை –6–8–2-
நீர் மலிகின்றதோர் மீனாய் –8–4–4-
வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி யுருவில் மீனாய் வந்து வியந்து உய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன் –8–8–1-
வாதை வந்து அடர வானமும் நிலனும் மலைகளும் அலை கடல் குளிப்ப மீது கொண்டுகளும் மீனுருவாகி விரி புனல் வரிய கட்டொளித்தோன் –9–1–3-
அலை கடல் நீர் குழம்ப வகடாடவோடி அகல் வானுரிஞ்ச முதுகில் மலைகளை மீது கொண்டு வரு மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே —10–4–1-

———————————-

ஸ்ரீ கூர்மாவதாரம் –கடல் கடைந்து –
என்று கடல் கடைந்து –பொய்கையார் –2-
அசைவில் சீர்க் கண்ணன் நெடுமால் கடல் கடைந்த –7-
வாளமர் வேண்டி வரை நட்டு நீளரவைச் சுற்றிக் கடைந்தான் பெயர் அன்றே –81-
நீ யன்று காரோதம் முன் கடைந்து –பூதத்தார் –30-
மதிக்கண்டாய் பேராழி நின்று பெயர்ந்து கடல் கடைந்த –51-
வலி மிக்க வாள் வரை மத்தாக வலி மிக்க வாணாகம் சுற்றி மறுகக் கடல் கடைந்தான் —-68-
அன்று அமுது கொண்டு உகந்தான் என்றும் –85-
அன்று –கடல் கடைந்த காலத்து -திருக் கண்டு கொண்ட –பேயார் –2-
நேரே கடைந்தானை —27-
மாலவனே மந்தரத்தால் மா நீர்க் கடல் கடைந்து வானமுதம் அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ யன்று —33-
மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றி தானொரு கை பற்றி அலை முகட்டு அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான் -பேயார் –46-
இசைந்த வரமமும் கடைந்த வருத்தமோ கச்சி வெஃகாவில் கிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு –64-
மலையாமை மேல் வைத்து வாசுகியைச் சுற்றி தலையாமை தானொரு கை பற்றி அலையாமல்
பீறக் கடைந்த பெருமான் திரு நாமம் கூறுவதே யாவர்க்கும் கூற்று –நான்முகன் –49-
ஆமையாகி யாழ் கடல் துயின்ற ஆதி தேவ –திருச்சந்த –14-
பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா –20-
தரங்க நீர் கலங்க அன்று குன்று சூழ் மரங்கள் தேய மா நிலம் குலுங்க மாசுணம் சுலாய் நெருங்க நீ கடைந்த போது நின்ற சூரர் என் செய்தார் –21-
படைத்த பார் இடந்து அளந்து அது உண்டு உமிழ்ந்து முன் கடைந்த பெற்றியோய்—28-
அம்புலாவு மீனுமாகி ஆமையாகி யாழியார் –திருச்சந்த –35-
வெற்பெடுத்து வேலை நீர் கலக்கினாயதன்றியும் —39-
கடைந்து பாற் கடல் கிடந்து —81–
அள்ளலாக் கடைந்த வென்று அருவரைக்கு ஓர் ஆமையாய் –உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்க்கு அளித்த –88-
வேலை நீர் படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த –82-
அலை கடலைக் கடைந்து அமரர்க்கு அமுது அருளி –பெருமாள் திரு –8–8-
ஆழ் கடல் தன்னை மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி வடம் சுற்றி வாசுகி வன் கயிறாகக் கடைந்திட்ட கைகளால் சப்பாணி -பெரியாழ்வார் –1- 6–10-
அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே –2–2-9-
காரணா கடலைக் கடைந்தானே—5–1–9-
கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தாப் போலே உடலுருகி வாய் திறந்து மடுத்துன்னை நிறைத்துக் கொண்டேன் –5—4–4-
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை –திருப்பாவை -30-
சங்க மா கடல் கடைந்தான் தண் முகில்காள் –நாச்சியார் –8–7-
மந்தரம் நாட்டி யன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட –நாச்சியார் –9–1-
மலை கொண்டு மாத்தா வரவால் சுழற்றிய மாயப்பிரான் –திருவிருத்தம் –51-
நளிர் கடல் பட வரவரசு உடல் தடவரை சுழற்றிய தனிமாத் தெய்வ தடியவர்க்கு இனி நாம் ஆளாகவே இசையும் கொல்–திருவாசிரியம் –3-
பூ மேய செம்மாதை நின் மார்வில் சேர்வித்து –பெரிய திரு வந்தாதி -7-
ஆழி நீர் ஆரால் கடைந்திடப் பட்டது –சிறிய திருமடல்
காரார் வரை நட்டு நாகம் கயிறாகப் பேராமல் தாங்கிக் கடைந்தான் –சிறிய திருமடல்
மன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால் –மலை திரித்து ஆங்கு இன்னமுதம் வானவரை யூட்டி –பெரிய திருமடல்
அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன் தன்னை –திருவாய் -1–3–11-
அமரர்க்கு அமுதீந்த–ஆயர் கொழுந்தை –1–7–9-
கடல் கடைந்து அமுதம் கொண்ட அண்ணலை அச்சுதனை –3-7-9-
முடியானே –ஆழ் கடலைக் கடைந்தாய் –3–8–1-
அப்பனே –அடலாழியானே-ஆழ் கடலைக் கடைந்த துப்பனை-4–7–5-
கண்ணாளா கடல் கடைந்தாய் -4–9–1-
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும் –5–6–5-
கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்–5–10–10-
மாயிரும் கடலைக் கடைந்த பெருமான் –6–2–3-
அன்று தேவர் அசுரர் வாங்க அலை கடல் அரவம் அளாவி ஓர் குன்றம் வைத்த எந்தாய் –7–1–7-
முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தியோ—7–1–10-
அலை கடல் கடைந்த வாரமுதே —7–2–5-
அப்பன் சாறு பட அமுதம் கொண்ட நான்றே –7–4–2-
அலை கடல் கடைந்த அப்பனே —8—1–1-
பெரிய நீர் படைத்து –கடைந்து மா கடல் தன்னைக் கடைந்தானை உலக்க நாம் புகழ்கிற்பது என் செய்வது உரையீரே —8–3–10-
குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என் அம்மான் –8–4–4-
குரை கடல் கடைந்தவன் தன்னை –9–2–11-
கடைவதும் கடலுள் அமுதம் –9–3–6-
நீலக் கடல் கடைந்தாய் –10–10–7-
பாயிரும் பரவை தன்னுள் பருவரை திரித்து வானோர்க்காய் இருந்த அமுதம் கொண்ட அப்பனை –திரு குரும் தாண் –3-
மா பரவை பொங்கத் தடவரை திரித்து வானோர்க்கு யீயுமால் எம்பிரானார் –16-
பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் வளை யுருவாய்த் திகழ்ந்தான் –திரு நெடும் தாண் -3-
அலை கடலைக் கடைந்த அம்மான் தன்னை –29-
எந்தை ஆதி மூர்த்தி ஆழ் கடலைக் கடைந்த மைத்த சோதி எம்பெருமான் –1–3–6-
வேலை வெண்டிரை யலமரக் கடைந்த அம்மானே —1–6–3-
மா இரும் குன்று ஓன்று மத்தாக மாசுணம தொடு அளவி–பாயிரும் பவ்வம் பகடு விண்டலறப் படு திரை விசும்பிடைப் படர
சேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாமுடன் திசைப்ப ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் –5–7–4-
அண்ணல் செய்து அலைகடல் கடைந்து –பெண்ணமுது உண்ட எம்பெருமான் —6–1–2-
முன்னீரை முன்னாள் கடைந்தானை –6–8–2-
அமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன் –6–10–3-
நீர் மலிகின்றதோர் மீனாய் ஓர் ஆமையுமாய் —8–4–4-
பாரார் உலகம் பரவப் பெரும் கடலுள் காராமையான கண்ணபுரத்து எம்பெருமான் -8–4–5-
கலங்க மாக் கடல் கடைந்து –8–5–7-
மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக அங்கோர் வரை நட்டு இலங்கு சோதி ஆரமுதம் எய்தும் அளவும்
ஓர் ஆமையாய் விலங்கல் திரியத் தடம் கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை –8–8–2-
குன்று ஓன்று மத்தா வரவம் வளவிக் குரை மா கடலைக் கடைந்திட்டு —10—6–2-
செருகு மிகு வாள் எயிற்ற அரவொன்று சுற்றித் திசை மண்ணும் விண்ணும் உடனே வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப இமையோர் நின்று கடைய
பருவரை ஓன்று நின்று முதுகில் பரந்து சுழலக் கிடந்து துயிலும் அருவரை யன்ன தன்மை அடலாமையான திருமால் நமக்கோர் அரணே—11–4–2-
நீணாகம் சுற்று நெடுவரை நட்டு ஆழ் கடலைப் பேணான் கடைந்த அமுதம் கொண்டுகந்த பெம்மானை –11–7–1-

—————————————-

தேவர்களுக்கு அமுது அளித்தல்
அமரர்கட்க்கு அருமை ஒழிய அன்று ஆரமுதூட்டிய யப்பனை—திருவாய் —3–7–5-
வானவர் சாரணர் சித்தர் வியந்து துதி செய்யப் பெண்ணுருவாகி அஞ்சுவையமுதம் அன்று அளித்தானை –2–3–3-
நண்ணாத வாள் அவுணர் இடைப்புக்கு வானவரைப் பெண்ணாகி அமுதூட்டும் பெருமானார் –2–6–1-
தடம் கடலைக் கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை —3–9–1-
விண்ணவர்கட்க்கு அன்று குன்று கொடு குரை கடலைக் கடைந்து அமுது அளிக்கும் குரு மணி என்னாரமுதம் –3–10–2-
பொங்கு நீண் முடி அமரர்கள் தொழுது எழ அமுதினைக் கொடுத்து அளிப்பான் அங்கோர் ஆமையாதாகிய வாதி நின்னடிமையை அருள் எனக்கு —5–3–6-
விண்ணோர் அமுதுண்ண வமுதில் வரும் பெண்ணமுதுண்ட வெம்பெருமானே –6–1–2-
கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர் துனங்கல் தீர நங்கு—6–5–1-
மா நீர் அமுது தந்த –9–7–9-
வானை யாரமுதம் தந்த வள்ளலை –10- 1-6-

—————————————-

ஸ்ரீ வராஹாவதாரம்
பொரு கோட்டு ஓர் ஏனமாய் புக்கு இடந்தாய்க்கு அன்று ஒரு கோட்டின் மேல் கிடந்ததன்றே –பொய்கையார் -9-
கேழலாய் பூமி இடந்தானை —25-
கிடந்தது பூமி -39-
வராஹத்து எயிற்று அளவு போதாவாறு என் கொலோ –84-
ஏனத்துருவாய் உலகிடந்த ஆழியான் பாதம் –91-
நீ யன்று உலகிடந்தாய் என்பரால் –பூதத்தார் –30-
வராகத்து அணியுருவன் பாதம் பணியுமவர் கண்டீர் -31-
ஞாலம் அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த –47-
மேலொரு நாள் மண் கோட்டுக் கொண்டான் மலை –பேயார் –45-
கேழலாய் மீளாது மண்ணகலம் கீண்டு –54-
தான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும் யான் ஒருவன் –இன்றே அறிகின்றேன் அல்லேன் –நான்முகன் –70-
படைத்த பார் இடந்து அளந்து –திருச்சந்த –28-
காய்த்த நீள்–பண்டோர் ஏனமாய் வாமனா –37-
குன்றினின்று –அது ஒன்றி இடந்து பன்றியாய் –48-
நடந்த கால் –நடுங்க ஞாலம் ஏனமாய் இடந்த மெய் குலுங்கவோ -61-
மாய பன்றியாய வென்றி வீர –102-
ஏனமாய் இடந்த மூர்த்தி எந்தை பாதம் எண்ணியே –114-
ஏனமாய் நிலம் கீண்டதும் -குலசேகரர் -2–3-
வானத்து எழுந்த மழை முகில் போல் ஏனத்துருவாய் இடந்த இம்மண்ணினைத் தானத்தே வைத்தான் –தரணி கிடந்தான் –பெரியாழ்வார் —2–10–9-
ஏனத்துருவாகிய வீசன் எந்தை யிடவன் எழ வாங்கி எடுத்த மலை–3–5–5-
எண்ணற்க்கு அரியதோர் ஏனமாகி இருநிலம் புக்கிடந்து வண்ணக் கருங்குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் -4–1–9-
கோட்டு மண் கொண்டு இடந்து –4–3–9-
வல் எயிற்றுக் கேழலுமாய் எல்லையில்லாத் தரணியையும் கிடந்தான் –4- 8–8-
கோட்டு மண் கொண்ட கொள்கையினானே –5–1–5-
எயிற்று இடை மண் கொண்ட வெந்தை —-5–2–3-
பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்க்கு பண்டொரு நாள் மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம் -நாச்சியார் -11–8-
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் –திருச்சந்த–45-
ஏனம் ஒன்றாய் மண் துகளாடி வைகுந்த மன்னாள் குழல் -55-
எறிதிரை வையமுற்றும் ஏனத்துருவாய் இடந்த பிரான் ஞானப் பிரானை யல்லால் இல்லை –நான் கண்ட நல்லதுவே —99-
இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து –திருவாசிரியம் –6-
பாரிடந்த அம்மா நின் பாதத்தருகு –பெரிய திருவந்தாதி –7-
மார்பாரப் புல்கி நீ –16-
பாரிடந்தான் –42-
ஏழு உலகு எயிற்றினில் கொண்டானை –திரு எழு கூற்று இருக்கை
மீனோடு ஏனமும் தானான் என்னில் –1–8–8-
கேழலாய் ஒன்றாகி இடந்த –1–9–2-
நுனியார் கோட்டில் வைத்தாய் உபபாதம் சேர்ந்தேனே–2–3–5-
கேழலாய்க் கீழ்ப் புக்கு இடந்து –2–8–7-
நிலமும் கிடந்தான் நீடுறை கோயில் —2–10–7-
மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய் ஆதியம் காலத்து அகலிடம் கீண்டவர் —4–2–6-
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடத்தும் —4–5–10-
படைத்து அன்று உடனே விழுங்கி கரந்து உமிழ்ந்து கடந்து கிடந்தது —4–10–3-
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும் –5–6–1-
நிலம் கீண்ட அம்மானே –5–7–4-
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா —5–7–6-
இடந்து மணந்த மாயங்கள்–5–10–5-
மண்புரை வையம் இடந்த வராகற்கு–6–6–5-
இடந்திட்ட –7–1–3-
நின் திரு வெயிற்றால் இடந்து நீ கொண்ட நில மக்கள் கேள்வனே என்னும் —7–2–9-
அப்பன் ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே –7–4–3-
தாழப் படாமல் தன் பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட கேழல் திரு உருவாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே–7–5–5-
நிலம் கீண்ட –7–6–7-
பெரு நிலம் எடுத்த பேராளா–8–1–2-
படைத்து இடந்து —8–1–5-
இரு நிலம் எடுத்த எம்பெருமான் –8–4–2-
அகல் ஞாலம் படைத்து இடந்தான் –9–3–3-
படைத்து இடந்து –9–9–2-
தானே –இடந்து -10–5–3-
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் -10–10–3-
கேழலாய் யுலகம் கொண்ட பூக் கெழு வண்ணனாரை –திரு குரும் தாண் -4-
பார் இடந்து –திரு நெடும் தாண் -20-
பன்றியாய் அன்று பாரதம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே –கலியன் –1–1–4-
ஏனமுனாகி இருநிலம் இடந்து அன்று இணையடி இமையவர் வணங்க -1–4–1-
பாரிடத்தை எயிறு கீற இடந்தானை வளை மருப்பின் ஏனமாகி-2–5–6-
ஏனத்தின் உருவாக்கி நில மங்கை எழில் கொண்டான் -2–6–3-
இரும் தண் மா நிலம் ஏனமதாய் வளை மருப்பின் அகலத்து ஒடுக்கி –3–1–1-
வெஞ்சினத்து புனக் கேழல் ஒன்றாய் விரி நீர் முது வெள்ளம் உள் புக்கு அழுந்த வம் புண் பொழில் சூழல்
அகன்று எடுத்தான் அடிப் போது அணைவான் விருப்போடு இருப்பீர் –3–2–5-
வையணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்றாய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து –3–4–5-
நில மடந்தை தன்னை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய எம் கோமான் கண்டீர் –4–4-8-
மண் இடந்து ஏனமாகி –4–6–2-
வராகமதாகி இம்மண்ணை கிடந்தாய் –4–7–8-
பண்டு முன் ஏனமாகி அன்று ஒரு கால் பார் இடந்து எயிற்றினில் கொண்டு –4–10–10-
மானவேல் ஒண் கண் மடவரல் மன் மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில் ஏனமாகி அன்று இரு நிலம் இடந்தவனே –5–3–5-
ஏனாகி உலகிடந்து —5–6–3-
கேழலாய் யுலகை கிடந்த நம்பி –6–10–1-
இடந்தான் வையம் கேழலாகி —6–10–2-
புள்ளாய் ஏனமுமாய்ப் புகுந்து என்னை யுள்ளம் கொண்ட –7–2–1-
பண்டு ஏனமாய் யுலகை அன்று இடந்த பண்பாளா –7–4–6-
ஆதி வராகம் முன்னானாய் —7—7–4-
சிலம்பு முதல் கலன் அணிந்தோர் செங்கண் குன்றம் திகழ்ந்தது எனத் திரு யுருவம் பன்றியாகி இலங்கி
புவி மடந்தை தனை இடந்து புல்கி எயிற்று இடை வைத்து அருளிய எம்மீசன் –7–8–4—
பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி –8–4–6-
பாராரளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில் ஏரார் யுருவத்து ஏனமாய் எடுத்த ஆற்றல் அம்மானை –8–8–3-
பன்றியாய் என்று பார் மகள் பயலை தீர்த்தவன் –9–1–4-
கேழல் செங்கண் மா முகில் வண்ணர்—–9—6–3-
தீதறு தங்கள் பொங்கு சுடரும்பர் உம்பருலகு ஏழினோடும் உடனே மாதிர மண் சுமந்து வட குன்று நின்ற மலை யாறும் ஏழு கடலும் பாதமர் சூழ்
குளம்பினக மண்டலத்தின் ஒருபால் ஒடுங்க வளஞ்சேர் ஆதி முன் ஏனமாகி யரணாய மூர்த்தி யாது நம்மை யாளும் அரசே —11–4–3-
புள்ளாய் ஓர் ஏனமாய் புக்கிடந்தான் பொன்னடிக்கு என்று –11–7–6-

——————————————

ஸ்ரீ நரஸிம்ஹாவதாரம்
வடி யுகிரால் ஈர்ந்தான் இரணியானதாகம் –பொய்கையார் –17-
தழும்பு இருந்த பூங்கோதையாள் வெருவப் பொன் பெயரொன் மார்பிடந்த —23-
கீண்டானை –25-
பூரி ஒரு கை பற்றி ஓர் பொன்னாழி ஏந்தி அரியுருவும் ஆளுருவுமாகி –எரியுருவ வண்ணத்தான் மார்பிடந்த மாலடியை–31-
முன்னம் தரணி தனதாகத் தானே இரணியனைப் புண்ணிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால் –36-
மேல் அசுரர் கோன் வீழக் கண்டுகந்தான் குன்று –40-
களியில் பொருந்தாதவனைப் பொரலுற்று அரியாய் இருந்தான் திரு நாமம் எண்–51-
வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம் சிரித்தால் வணங்கானாம் என்றே உரத்தினால்
ஈரரியாய் நேர் வலியோனாய விரணியனை ஓரரியாய் நீ இடந்த தூன்—90-
வயிறு அழல வாள் உருவி வந்தானை பொறி யுகிரால் நின் சேவடி மேல் ஈடழியச் செற்று—93-
கோளரியாய் ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்து –பூதத்தார் —18-
மாலை அரி உருவன் பாத மலர் அணிந்து காலை தொழுது எழுமின் கைகோலி–47-
வரம் கருதி தன்னை வணங்காத வன்மை உரம் கருதி மூர்க்கத்தவனை நரம் கலந்த சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே –பூதத்தார் -84-
பற்றிப் பொருந்தாதான் மார்விடந்து –94-
தானவனை வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன் -95-
இரணியானதாகம் அவை செய்தரி யுருவமானான் –பேயார்-31-
மேவி யரியுருவமாகி இரணியனதாகம் தெரி யுகிரால் கீண்டாம் சினம் —42-
செற்றதுவும் சேரா இரணியனை –49-
அங்கற்கு இடர் இன்றி யந்திப் பொழுதத்து மணக்க இரணியனதாகத்தை பொங்கி அரியுருவமாய் பிளந்த எம்மானாவானே —65-
புகுந்து இலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய் இகழ்ந்த விரணியனதாகம் –பிளந்த திருமால் திருவடியே வந்தித்தது என்நெஞ்சமே –95-
தொகுத்த வரத்தனனாய் தோலாதான் மார்வம் வ
மாறாய தானவனை வள்ளு
தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை அவம் செய்த ஆழியாய் யன்றே –19-
இவையா அரி பொங்கிக் காட்டும் அழகு –21-
அழகியான தானே யரி யுருவம் தானே —22-
வானிறத்தோர் சீயமாய் வளைந்த வாள் எயிற்றவன் ஊநிறத்துகிர் தலம் அழுத்தினாய் –திருச்சந்த –23-
சிங்கமாய தேவ தேவ —24-
வரத்தினால் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன் உரத்தினில் கரத்தை வைத்து உகிர்த் தளத்தை ஊன்றினாய்–25-
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும் இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே -62-
பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட –அமலனாதி –8-
அந்தியம் போதில் அரியுருவாகி அறியாய் அழித்தவனை–திருப்பல்லாண்டு -6-
மறம் கொள் இரணியன் மார்வை முன் கீண்டான் –பெரியாழ்வார் –1–2–5-
கோளரியின்னுருவம் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழக் கூர் உகிரால் குடைவாய் -1–5–2-
அளந்திட்ட தூணை அவன் தட்ட அங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க யுருவாய்
உளம் தொட்டு இரணியன் ஒண் மார்பகலம் பிளந்திட்ட கைகளால் சப்பாணி –1-6–9-
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவாக முன் கீண்டாய் –2–7–7-
முன் நரசிங்கமதாகிய அவுணன் முக்கியத்தை முடிப்பான் —3–6–5-
அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய் உத்திரம் அளைந்த கையோடு இருந்தானை அல்லவா கண்டார் உளர் —4- -1–1-
நாதனை நரசிங்கனை நவின்று ஏத்துவார் உழக்கிய பாத தூளி படுத்தலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே –4–4–6-
நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால் எம்பிரான் தன் சின்னங்கள் இவரிவர் என்று ஆசைகள் தீர்வேனே –4–4–9-
வாள் எயிற்றுச் சீயமுமாய் –அவுணனை இடந்தானே –4–8–8-
உரம் பற்றி இரணியனை உகிர் நுதியால் ஒள்ளிய மார்புறைக்க யூன்றிச் சிரம் பற்றி முடியிடியக் கண் பிதுங்க வாய் அலறத் தெழித்தான் கோயில் — 4–9–8-
நாதனே நரசிங்கமதானாய் –5–1–9-
சிங்கப் பிரானவன் எம்மான் சேரும் திருக் கோயில் கண்டீர் -5–2–4-
ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்–நாச்சியார் -8–5-
அப்பொன் பெயரோன் தடம் நெஞ்சம் கீண்ட பிரானார் –திருவிருத்தம் –46-
அன்று அங்கை வன் புடையால் பொன் பெயரோன் வாய் தகர்த்து மார்விடந்தான்–பெரிய திருவந்தாதி -35-
வழித் தங்கு வால் வினையை மாற்றானோ நெஞ்சே தழிஇக் கொண்டு போர் அவுணன் தன்னைச் சுழித்து எங்கும்
தாழ்விடங்கள் பற்றிப் புலால் வெள்ளம் தானுகள வாழ்வடங்க மார்விடந்த மால் –57-
போரார் நெடு வேலோன் பொன் பெயரொன் ஆகத்தைக் கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு ஆரா எழுந்தான் அரியுருவாய்–சிறிய திரு மடல் –
ஆயிரம் கண் மன்னவன் வானமும் வானவர் தம் பொன்னுலகும் –தோள் வலியால் கைக் கொண்ட தானவனை பின்னோர் அரியுருவாகி
-எரி விழித்து –தான் மேல் கிடத்தி அவனுடைய பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த வீரனை –பெரிய திருமடல்
எங்கும் நாடி நாடி நரசிங்கா என்று வாடி வாடும் இவ் வாணுதலே –திருவாய் –2—4–1-
உன்னைத் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட எண் முன்னைக் கோளரியே—2–6–6-
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே —2—8–9-
அவன் ஒரு மூர்த்தியாய் –சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக் கீழ் புக நின்ற செங்கண் மால் –3–6–6-
கிளர் ஒளியால் குறைவில்லா அரியுருவாய்க் கிளர்ந்து எழுந்து கிளர் ஒளிய இரணியனது அகல் மார்பம் கிழித்து உகந்த –4–8–7-
அந்திப் போது அவுணன் உடல் இடந்தானே –7–2–5-
அப்பன் ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறு—7–4–6-
அல்லல் அமரரைச் செய்யும் இரணியன் ஆகத்தை மல்லல் அரியுருவாய்ச் செய்த மாயம் அறிந்துமே—–7–5–8-
புக்க வரியுருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த சக்கரச் செல்வன் தன்னை —-7–6–11-
கோளரியை –7–10–3-
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கையுகிராண்ட வெங்கடலே–8-1-3-
ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர் ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் –9–3–7-
வானவர் தானவர்க்கு என்றும் அறிவது அரிய அரியாய அம்மானே –9–4–4-
மிகுந்தானவன் மார்வகலாம் இரு கூறா நகந்தாய் நரசிங்கமதாய யுருவே —9–4–7-
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன் —9–10–6-
வன் நெஞ்சத்து இரணியனை மார்விடந்த வாட்டாற்றான் –10–6–4-
அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று —10–6–10-
அவுணன் ஆர் உயிரை யுண்ட கூற்றினை –திருக் குறும் தாண் –2-
மறம் கொள் ஆளரி உருவென வெருவர ஒருவனது அகல் மார்வம் திறந்து வானவர் மணி முடி பனி தர —-1–2–4-
மன்னவன் பொன்னிறத் துரவோன் ஊன் முனிந்தவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து —-1- -4–8-
ஏனோர் அஞ்ச வெஞ்சமத்துள் அரியாய்ப் பரிய இரணியனை ஊனார் அகலம் பிளவெடுத்த ஒருவன் —1–5–7-
அங்கண் மா ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆளரியாய் அவுணன் பொங்கவாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் இடம்
பைம்கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக் கீழ் செங்கணாளி யிட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றமே –1–7–1-
அலைத்த பேழ்வாய் வாள் எயிற்றோர் கோளரியாய் அவுணன் கொலைக் கையாளன் நெஞ்சிடந்த –1–7–2-
அவுணன் வாய்ந்த வாகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம் —1—7–3-
எவ்வும் வெவ்வேல் பொன் பெயரோன் ஏதலன் இன்னுயிரை வவ்வி ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த –1–7–4-
மென்ற பேழ்வாய் வாள் எயிற்றோர் கோளரியாய் அவுணன் பொன்ற வாகம் வள்ளுகிரால் போழ்ந்த –1–7–5-
எயிற்றொடி தெவ்வுரு வென்று இரிந்து வானோர் கலங்கியோட இருந்த வம்மான் —-1–7–6-
மூ உலகும் பிறவும் அனைத்தும் அஞ்ச வாள் அரியாய் இருந்த —1–7–7-
நாத் தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த அங்கோர் ஆளரியாய் —1–7–8-
தூணாய் அதனூடு அரியாய் வந்து தோன்றி பேணா வவுணன் உடலம் பிளந்திட்டாய் –கலியன் –1–10–5-
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் –பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப -தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திரு வல்லிக்கேணிக் கண்டேனே —2–3–8-
அவுணன் அவன் மார்பகலம் உகிரால் வகிராக முனிந்து அரியாய் கீண்டான் –2–4–2-
தங்காததோர் ஆளரியாய் அவுணன் தனை வீட முனிந்து —2–4–4-
அடிப் பணியாதவனைப் பணியால் அமரில்–நெஞ்சிடந்தான்–2- 4–7-
பூணாகம் பிளவெடுத்த போர் வல்லோனை —2–5–7-
பிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை –2–5–8-
அன்று அவுணர் கோனைப் பட வெகுண்டு —2–5–10-
எரியன கேசரி வாள் எயிற்றொடு இரணியனாக மிரண்டு கூறா அரியுருவாம் இவர் –2–8–1-
திண் படைக் கோளரியின் உருவாய்த் திறலோன் அகலம் செருவில் முன நாள் புண் படப் போழ்ந்த பிரான் –2–9–6-
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல்லவுணன் தன் மார்வகம் இரு பிளவாக் கூறு கொண்டவன் குல மகற்கு இன்னருள் கொடுத்தவன் –3–1–4-
பொங்கி யமரில் ஒருகால் பொன் பெயரோனை வெருவ –சிங்க உருவில் வருவான் –3–3–8-
பொன்னன் பைம் பூண் நெஞ்சிடந்து குருதியுக உகிர் வேலாண்ட நின்மலன் தாள் அணைகிற்பீர் –3–4–4-
சலம் கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு —3–9–1-
திண்ணியதோர் அரியுருவாய்த் திசையனைத்தும் நடுங்கத் தேவரோடு தானவர்கள் திசைப்ப
இரணியனை நண்ணியவன் மார்வகலத்து உகிர் மடுத்த நாதன் —-3–9–2-
ஓடாத வாளரியின் உருவமது கொண்டு அன்று உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனைப் பற்ற
வாடாத வள்ளுகிரால் பிளந்தவன் தன் மகனுக்கு அருள் செய்தான் வாழுமிடம் –3–10–4-
ஓடாத வாளரியின் யுருவாகி இரணியனை வாடாத வள்ளுகிரால் பிளந்து அளைந்த மால் –4–1–7-
உளைய ஒண் திறல் பொன் பெயரோன் தனது உரம் பிளந்துதிரத்தை அளையும்—4–2–7-
முடியுடை அமரர்க்கு இடர் செய்யும் –அசுரர் தம் பெருமானை அன்று அரியாய் மடியிடை வைத்து மார்வை முன் கீண்ட மாயனார்—4—10–8-
வெய்யனாய் யுலகு ஏழுடன் நலிந்தவன் உடலகம் இரு பிளவா –கையில் நீளுகிர் படையது வாய்த்தவனே —5–3–3-
தரியாது யன்று இரணியனைப் பிளந்தவனை —5–6–4-
வெங்கண் வாள் எயிற்றோர் வெள்ளி மா விலங்கல் விண்ணுறக் கனல் விழித்து எழுந்தது –அங்கனே ஓக்க அரியுருவானான்–5–7–5-
வானோர் புக்கு அரண் தந்து அருளாய் என்னப் பொன்னாகத்தானை–நக்கரி யுருவமாகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த சக்கரச் செல்வன் –5–9–5-
முனையார் சீயமாகி அவுணன் முரண் மார்வம் புனை வாள் உகிரால் போழ் பட வீழ்ந்த புனிதனூர்—6–5–2-
பைம் கண் ஆளரி யுருவாய் வெருவ நோக்கிப் பருவரைத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி
அங்கை வாள் உகிர் நுதியால் அவனதாகம் அங்குருதி பொங்குவித்தான் -6-6-4-
வேரோர் அரி யுருவாய் இரணியனதாகம் கீண்டு வென்றவனை விண்ணுலகில் செல உய்த்தார்க்கு –6–6–5-
ஓடா வரியாய் இரணியனை ஊனிடந்த—6–8—4-
ஓடா வாள் அரியின் உருவாய் மருவி என் தன் மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா —7–2–2-
பொன் பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனை –7–3–9-
முந்திச் சென்று அரி யுருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால் —7–4–5-
சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த சங்கமிடத்தானைத் தழல் ஆழி வலத்தானை—7–6–1-
விண்டான் விண் புக வெஞ்சமத்து அரியாய்ப் பரி யோன் மார்வகம் பற்றி பிளந்து —7–7–5-
சினமேவும் அடல் அரியின் உருவமாகித் திறல் மேவும் இரணியதாகம் கீண்டு –7–8–5-
அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய வணி யுகிரால் உடல் எடுத்த பெருமானுக்கு —8–3–6-
சீர் மலிகின்றதோர் சிங்க யுருவாய் –8–4–4-
உளைந்த வரியும் மானிடமும் உடனாயத் தோன்றி ஒன்றுவித்து விளைந்த சீற்றம் விண் வெதும்ப வேற்றோன்
வாள் அவுணன் பூணாகம் கீண்டதுவும் –8–10–10-
பரிய இரணியானதாகம் அணி யுகிரால் அரி யுருவாய்க் கீண்டான் –9–4–4-
சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த –9–9–4-
துளக்கமில் சுடரை அவுணன் உடல் பிளக்கும் மைந்தனை —10–1–4-
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போல் அவுணன் உடல் வள்ளுகிரால் அளைந்திட்டவன் காண்மின் –10–6–3-
தளர்ந்திட்டு இமையோர் சரண் தா எனத் தான் சரணாய் முரணாயவனை உகிரால் பிளந்திட்டு அமரர்க்கு அருள் செய்து உகந்த பெருமான் –10–6–4-
பொருந்தலனாகம் புள்ளு வந்தேற வள்ளுகிரால் பிளந்த வன்று —10–9–8-
அங்கு ஓர் ஆளரியாய் அவுணனைப் பங்கமா இரு கூறு செய்தவன் –11–1–5-
அளவெழ வெம்மை மிக்க அரியாகி அன்று பரியோன் சினங்களவிழ வளை யுகிர் ஆளி மொய்ம்பில் மறவோனதாகம் மதியாது
சென்று ஓர் உகிரால் பிள எழவிட்ட குட்டமது வையமூடு பெரு நீரின் மும்மை பெரிதே —11–4–4-
கூடா இரணியனைகே கூர் உகிரால் மார்விடந்த ஓடா அடல் அரியை உம்பரார் கோமானை —11–7–4-

————————————————

ஸ்ரீ வாமன திரிவிக்ரமாவதாரம் –
இவ்வுலகம் நீர் ஏற்றது –பொய்கையார் -2-
வாயவனை அல்லது வாழ்த்தாது கை யுலகம் தாயவனை அல்லது தாம் தொழா—11-
பொன்னாழிக் கையால் நீ மண்ணிரந்து கொண்ட வகை –36-
பெரியனாய் மாற்றாது வீற்று இருந்த மா வலியால் வண் கை நீர் ஏற்றானைக் காண்பது எளிது –50-
கொண்டானை யல்லால் கொடுத்தாரே யார் பழிப்பர் மண்டா வென இரந்து மா வலியை ஒண் தாரை நீர் அங்கை தோய நிமிர்ந்திலையே –79-
மண்ணிரந்து காத்தனைப் பல்லுயிரும் -காவலனே கொண்டது உலகம் குறள் உருவாய் –பூதத்தார் –10-
வான் கடந்தான் செய்த வழக்கு –18-
வாமன் திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே அரு நரகம் சேர்வது அரிது –21-
இரந்து அளந்தாய் –34-
பிறர் அறியாமை மண் கொண்டு —36-
மறம் புரிந்த வாள் அரக்கன் போல்வானை வானவர் கோன் தானத்து நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி –52-
பதவியாய்ப் பாணியால் நீர் ஏற்றுப் பண்டு ஒரு கால்
வாய் மொழிந்து வாமனனாய் மா வலியால் மூவடி மண் நீ அளந்து கொண்ட நெடுமாலே -பேயார்–18-
நின்ற பெருமானே நீர் ஏற்று –47-
நீ யன்றே நீர் ஏற்று உலகமடி யளந்தாய் –48-
சென்று ஏற்றுப் பெற்றதுவும் மா நிலம் –49-
குறளுருவாய் முன்னிலும் கைக் கொண்டான் முயன்று -52-
மேலொரு நாள் மண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு -58-
நீர் ஏற்றான் தாழ்வு –62-
கள்ளத்தால் மண் கொண்டு வின் கடந்த பைம் கழலான்-83-
வகையால் மதியாது மண் கொண்டாய் மற்றும் வகையால் வருவது ஓன்று உண்டே வகையால் வயிரம் குழைத்து உண்ணும்
மா வலி தா என்னும் வயிர வழக்கு ஒழித்தாய் மாற்று –நான்முகன் –25-
இரத்தி நீ ஈதென்ன பொய் –திருச்சந்த –25-
காணி பேணு மாணியாய்க் கரந்து சென்ற கள்வனே –26-
இரந்து சென்ற மாணியாய் மண் கடந்த வண்ண நின்னை —27-
இரக்க மண் கொடுத்தவருக்கு இருக்க ஒன்றும் இன்றியே —32-
காய்த்த நீள் பண்டு ஓர் ஏனமாய வாமனா —37-
அறிந்து அறிந்து வாமனன் அடியிணை வணங்கினால் -74-
மண்ணை யுண்டு பின்னிரந்து கொண்டு —105-
சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் –109-
சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்று கேள் –பெரியாழ்வார் –1–4–8-
பண்டு காணி கொண்ட கைகளால் சப்பாணி –1–6–1-
பண்டு மண் பல கொண்டான் புறம் புல்குவான் வாமனன் என்னைப் புறம் புல்குவான் –1–9–5-
மண்பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்துரை செய்த இம்மாலை –2–7–10-
மாவலி வேள்வியில் மாணுருவாய்ச் சென்று மூவடி தா வென்று இரந்த –2–10–7-
குறள் ப்ரம்மச்சாரியாய் மாவலியைக் குறும்பதாக்கி யரசு வாங்கி இறைப் பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்துகந்த வெம்மான் –4–9–7-
மாணிக் குறளுருவாய மாயனை என் மனத்துள்ளே —5–2–5-
வாட்டமின்றி மகிழ்த்துறை வாமனன் ஓட்டரா வந்து என் கைப்பற்றி தன்னோடும் கூட்டுமாகில் –நாச்சியார் –4–2-
மாவலியை நிலம் கொண்டான் வேங்கடத்தே —8–6-
மதிள் அரங்கர் வாமனனாய் பச்சைப் பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற பிச்சைக் குறையாகி
என்னுடைய பெய் வளை மேல் இச்சை யுடையரேல் இத்தெருவே போதாரே —11–4-
பொல்லாக் குறளுருவாய்ப் பொற் கையில் நீர் ஏற்று எல்லா உலகும் அளந்து கொண்ட எம்பெருமான் –11–5-
மாணியாய் யுருவாய் யுலகளந்த மாயனை –12–2-
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகலந்தான் என்று உயர்ரக் கூவும் –12–9-
மாவலி மாட்டு இரும் குறளாகி இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற பெரும் கிறியானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே–திருச்சந்த –91-
சீரால் பிறந்து சிறப்பால் வளராது பேர் வாமனாகாக்கால் பேராளா மார்பாரப் புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பது அரிதே –பெரிய திருவந்தாதி –16-
மாண் பாவித்து அஞ்ஞான்று மண்ணிரந்தான் –52-
மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினின் இரு புறப்பு ஒரு மாணாகி–திரு எழு கூற்று-
மூவடி மண் தாராய் எனக்கு என்று வேண்டி –சிறிய திருமடல்
தன்னுருவம் ஆரும் அறியாமல் தான் அங்கோர் மன்னும் குறள் உருவில் மாணியாய் –மாவலி தன் பொன்னியலும் வேள்விக் கண்
புக்கிருந்து –என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண் மன்னா தருக்க வென்று வாய் திறப்பை –பெரிய திருமடல்
மதியினால் குறள் மாணாய் உலகிரந்த கள்வர்க்கு–திருவாய் –1–4–3-
புலன் கொள் மாணாய் நிலம் கொண்டானே –1–8–6-
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்கரு மாணிக்கம் என் கண்ணுளதாகுமே–1–10–1-
ஓர் மூவடி கொண்டானை –1–10–5-
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே –2–3–3-
வாட்டமில் புகழ் வாமனனை இசை கூட்டி வண் சடகோபன் சொல் —2–4–11-
என் பொல்லாத் திருக் குறளா–2–6–1-
ஞாலம் கொள்வான் குறளாகிய வஞ்சனை –3–8–2-
மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல் -3–8–5-
கொள்வன் நான் மாவலி மூவடி தா வென்ற கள்வனே –3–8–9-
மண்ணை இருந்து துழாவி வாமனன் மண்ணிது என்னும் –4–4–1-
குறிய மாண் உருவாகிக் கொடுங்கோளால் நிலம் கொண்ட -4–8–6-
குறிய மாண் உருவாகிய –ஆட செய்வதே –4–10–10-
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும் –5–6–1-
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே –5–9–6-
மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்டவன் கள்வன் –6–1–11-
மாணியாய் நிலம் கொண்ட மாயன் –6–4–8-
மண்பமை கோலத்து எம் மாயக் குறளர்க்கு–6–7–9-
மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வளம் காட்டி மண்ணும் விண்ணும் கொண்ட மாய வம்மானே —6–9–2-
வட்டமிலா வண் கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு ஈட்டம் கொள் தேவர்கள் சென்று இரந்தார்க்கு
இடர் நீக்கிய கொட்டங்காய் வாமனனாய்ச் செய்த கூத்துக்கள் கண்டுமே –7–5–6-
மாயா வாமனனே –7–8–1-
மயக்கா வாமனனே –7–8–6-
மாயக் கூத்தா வாமனா –8–5–1-
அற்புதன் நாராயணன் அரி வாமனன் –8-6–10-
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து –8–7–1-
செந்தாமரைக் கண் திருக் குறளன்–8–10–3-
இந்திர ஞாலங்கள் காட்டி இவ்வேழ் உலகும் கொண்ட –9–4–5-
கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய் –9–8–7-
உலகம் கொண்ட கோவினை –திருக் குறும் தாண் -6-
தேவராய் யுலகம் கொண்ட ஒள்ளியீர்–9–
தூய வரி யுருவில் குறளாய்ச் சென்று மாவலியை ஏயான் இரப்ப மூவடி மண் இன்றே தா வென்று உலகு ஏழும் தாயோன்–கலியன் –1–5–6-
வண் கையான் அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய் மண் கையால் இரந்தான்–1–8–5-
மாண் குறளான அந்தணர்க்கு –2–1–1-
வந்து குறளுருவாய் நிமிர்ந்து மாவலி வேள்வியில் மண்ணளந்த அந்தணர் போன்று இவரார்–2–8–2-
இலகிய நீண் முடி மா வலி தன் பெரு வேள்வியில் மாணுருவாய் முன நாள் –சலமொடு மா நிலம் கொண்டவன் –2–9–7-
அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த பெருமான் —3–2–4-
ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி –3–4–1-
கண்டவர் தம் மனம் மகிழ மாவலி தன் வேள்விக் களவின் மிகு சிறு குறளாய் மூவடி என்று இரந்திட்டு –3–10-5 –
அங்கையால் அடி மூன்று நீர் ஏற்று —4- 2–6-
பொங்கிலங்கு புரி நூலும் தோலும் தாழப் பொல்லாத குறளுருவாய் பொருந்தா வாணன் மங்கலம் சேர்
மறை வேள்வி யதனுள் புக்கு மண்ணகலம் குறை இரந்த மைந்தன் –4–4–7-
மாவலி வலி தொலைப்பான் விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறை இரந்தாய்–4–6–2-
ஒள்ளிய கருமம் செய்வான் என்று உணர்ந்த மாவலி வேள்வியில் புக்கு
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில் –4–10–7-
குறிய மாணி உருவாய கூத்தன் –அமருமிடம் —5–1–1-
கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து –5–1–2-
கூற்று ஏருருவின் குறளாய் நிலம் நீர் ஏற்றான் எந்தை பெருமானூர் –5–2–4-
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று –5–3–9-
பண்டு இவ்வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர் கொண்ட ஆழித் தடக்கைக் குறளன் இடம் என்பரால் –5–4–3-
இரந்தான் மா வலி மண் –6–7-3-
மான் கொண்ட தோல் மார்வின மாணியாய் மாவலி மண் தான் கொண்டு தாளால் அளந்த பெருமானை -6–8–1-
வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி மாணுருவாய் மூவடி மாவலியை வேண்டி —7–8–6-
உருவக் குறள் அடிகள் அடி உணர்மின் உணர்வீரே –7–9–2-
திருக் கண்ணபுரத்துறையும் வாமனனை –8–3–10-
வாமனன் —8–4–7 —
தொழு நீர் வடிவில் குறள் உருவாய் வந்து தோன்றி மாவலி பால் முழு நீர் வையம் முன் கொண்ட மூவா வுருவின் அம்மானை –8–8–5-
மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரொடும் கொண்டு -9–1–5-
நீணிலா வெண் குடை வணனார் வேள்வியில் மண்ணிரந்த–மாணியார் –9–7–3-
விறல் மா வலியை மண் கொள்ள வஞ்சித்தொரு மாண் குறளாய் அளந்திட்டவன் காண்மின் –10–6–4-
மாவலியைப் பொன்னிலங்கு திண் விலங்கில் வைத்து –11–3–1-
வெந்திறல் வாணன் வேள்வியிட மெய்து அங்கோர் குறளாகி மெய்ம்மையை யுணர செந்தொழில்
வேத நாவின் முனியாகி வையமடி மூன்றிரந்து பெறினும் –11–4–5-
கண்டார் இரங்கக் கழியக் குறளுருவாய் வண் தாரான் வேள்வியில் மண்ணிரந்தான் —11–5–9-
கள்ளத்தால் மா வலியை மூவடி மண் கொண்டு அளந்தான் –11–5–10-
நீள் வான் குறளுருவாய் நின்று இரந்து மாவலி மண் தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை –11- -7–2-

—————————

பாரளவும் ஓரடி வைத்து ஓரடியும் பாருடுத்த நீரளவும் செல்ல நிமிர்ந்ததே –பொய்கையார் —3-
விரி தோட்ட சேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க-9-
கையுலகம் தாயவனை யல்லது தாம் தொழா–11-
உலகளந்த மூர்த்தி யுருவே முதல் –14-
உலகளந்த நான்று -14-
மண்ணளந்த மால் -18-
பேர்ந்தோர் குறள் யுருவாய் செற்றார் படி கடந்த செங்கண் மால் –20-
நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால் சென்று திசை யளந்த செங்கண்மாற்கு –21-
கணம் வெருவ ஏழுலகும் தாயினவும் எண்டிசையும் போயினவும் சூழ் அரவப் பொங்கணையான் தோள்–62-
மண்ணளந்த சீரான் திருவேங்கடம் –76-
உராயுலகளந்த நான்று —84-
ஓரடியும் தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர் மாயவனையே மனத்து வை —100-
அடி மூன்று இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும் அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் –பூதத்தார் –5-
அன்று வரன் முறையால் நீ யளந்த மா கடல் சூழ் ஞாலம் –9-
எண்டிசையும் பேர்த்த கரம் நான்குடையான் பேர் ஓதிப் பேதைகாள் –14-
வேற்று உருவாய் ஞாலம் அளந்து அடிக் கீழ்க் கொண்ட வவன் –23-
நீ யன்று யுலகு அளந்தாய் நீண்ட திருமாலே –30-
இரந்து அளந்தாய் –பாதம் ஏத்தி -34-
ஞாலம் அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த –47-
அன்று கரு மாணியாய் இரந்த கள்வனே நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள் சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் –61-
இடங்கை வலம் புரி நின்றார்ப்ப எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்தாழி திசை யளப்பான் பூவாரடி நிமிந்த போது –71-
தவம் செய்து நான்முகனே பெற்றான் தரணி நிவந்து அளப்ப நீட்டிய பொற் பாதம் சிவந்த தன் கையனைத்தும் ஆரக் கழுவினான் —78-
அவன் அளந்த நீணிலம் தான் அத்தனைக்கும் நேர் –79-
இரு நிலத்தைச் சென்று ஆங்கு அளந்த திருவடியை –87-
கார் கடல் சூழ் ஞாலத்தை –எல்லாம் அளந்த வானவன் சேவடி —91-
நீர் ஏற்று மூவடியால் அன்று யுலகம் தாயோன் அடி –பேயார் –4-
அடி வண்ணம் தாமரை அன்றுலகம் தாயோன் –5-
அழகன்றே யண்டம் கடத்தல் –6-
கார்க் கடல் நீர் வேலைப் பொழில் அளந்த புள்ளூர்த்திச் செல்வன் –7-
மண்ணளந்த பாதமும் மற்றவையே -9-
படிவட்டத் தாமரை பண்டுலகம் நீர் ஏற்று அடி வட்டத்தால் அளப்ப –13-
அவ்வுலகம் ஈரடியால் பின் அளந்து கோடல் பெரிதொன்றே —20-
விரும்பி விண் மண்ணளந்த –23-
அன்று இவ்வுலகம் அளந்த அசைவே கொல்–34-
பனி நீருலகம் அடியளந்த மாயவர்க்கு –36-
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் –40-
எண்டிசையும் துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே மின்னை யுடையாகக் கொண்டு அன்று உலகளந்தான்—41-
நின்ற பெருமானே நீர் ஏற்று –உலகம் எல்லாம் சென்ற பெருமானே செங்கண்ணா –47-
நீ யன்றே நீர் ஏற்று உலகம் அடி அளந்தாய் –48-
சிலம்பும் செறி கழலும் —எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ வண்டுழாய் மால் அளந்த மண்—90-
நினைத்து உலகிலார் தெளிவார் நீண்ட திருமால் –93-
பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம் –மலர் ஏற –நான்முகன் –15-
ஞாலம் அளந்தானை யாழிக் கிடந்தானை —17-
மன்னஞ்ச முன்னொரு நாள் மண்ணளந்தான் –58-
இரு நிலத்தைச் சென்று ஆங்கு அடிப் படுத்த சேய்–70-
மண் கடந்த வண்ண நின்னை யார் மதிக்க வல்லரே –திருச்சந்த -27-
பசித்த பார் இடந்து அளந்து -28-
பரக்க வைத்து அளந்து கொண்ட பற்ப பாதன் அல்லையே-32-
மண்ணளந்து கொண்ட காலனே–43-
மண் ஓன்று சென்று -48-
மண்ணளந்த பாத -58-
நடந்த கால்கள் நொந்தவோ -61-
அன்று பாரளந்த பாத போதை யுன்னி வானின் மேல் சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே –66-
பின்னிரந்து கொண்டு அளந்து –105-
சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் சுருங்கியும் பெருக்குவாரை இன்றியே பெருக்கம் எய்து பெற்றியோய்–109-
தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய்–திருமாலை -35-
உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற நிவந்த நீண் முடியின் –அமலன் –2-
மண் அலைந்தும் –பெருமாள் திரு –2–3-
வையம் அளந்தானே தாலேலோ –பெரியாழ்வார் –1–3–1-
உலகம் அளந்தானே தாலேலோ –1–3–2-
தரணி தல முழுதும் தாரகையின்னுலகம் தடவி -அதன் புறமும் விம்ம வளர்ந்தவனே–1–3–2-
திரிவிக்ரமன் சிறு புகர் பட வியர்த்து –1–7–9-
சத்திரம் ஏந்தித் தனி ஒரு மாணியாய் –கத்திரியர் காணக் காணி முற்றும் கொண்ட –1–9–6-
முன்னிவுலகினை முற்றும் அளந்தவன் –2–5–9-
இம் மண்ணினை ஓரடியிட்டு இரண்டாமடி தன்னிலே தாவடி இட்டானால் இன்று தரணி யளந்தான் —2–10–7-
ஒண் நிறத்தை தாமரைச் செங்கண் உலகளந்தான் என் மகளைப் பண்ணறையாய்ப் பணி கொண்டு பரிசற வாண்டிடும் கொலோ –3–8–9-
குடங்கையில் மண் கொண்டு அளந்து —4–3–9-
நெடுமையால் உலகு ஏழும் அளந்தாய் -5–1–4-
உம்பர் கோன் உலகு ஏழும் அளந்தாய் –5–1–9-
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி –திருப்பாவை -3-
அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே —17-
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி –24-
தேசம் முன் அளந்தவன் திரி விக்ரமன் திருக் கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம் –நாச்சியார் –1–7-
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் –2–9-
குறளுருவாய்ச் சென்று பண்டு மாவலி தன் பெரு வேள்வியில் அண்டமும் நிலமும் அடி ஒன்றினால் கொண்டவன் வரில் –4–9-
இன்னடிசிலோடு பாலமுதூட்டி எடுத்த என் கோலக் கிளியை உன்னோடு தோழமை கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய் –5–5-
அன்று யுலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய –இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன் -5–10-
விண்ணுற நீண்டு அடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி -5–11-
உலகளந்தான் வாயமுதம் –7–8-
எல்லா உலகும் அளந்து கொண்ட எம்பெருமான் –11–5-
மாணி யுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும் –12–2-
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும் -12–9-
குடமாடி இம்மண்ணும் விண்ணும் குலுங்க உலகு அளந்து நடமாடிய பெருமான் —திருச்சந்த –38-
மண்ணும் விண்ணும் என் கால்கள் அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த –42-
கழல் தலம் ஒன்றே நில முழுதாயிற்று ஓர் கழல்
ஞாலம் முற்றும் வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால் தாயவன் –நம் இறையே –61-
உலகு அளந்த திருத் தாளிணை நிலத்தேவர் வணங்குவர் -64-
பொரு கடல் சூழ் நிலம் தாவிய வெம்பெருமான் –68-
புவனி எல்லாம் நீர் ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே –69-
இடம் போய் விரிந்து இவ்வுலகம் அளந்தான் —-76-
ஞாலம் தத்தும் பாதனை தொழுவார் –79-
பாரளந்த பேரரசே எம் விசும்பரசே –எம்மை நீத்து வஞ்சித்த ஓர் அரசே –80-
உலகு அளந்த மாணிக்கமே என் மரகதமே மாற்று ஒப்பாரையில்லா ஆணிப் பொன்னே –85-
அன்று உலகு ஈரடியால் தாவின வேற்றை யெம்மானை–89-
மூ வுலகளந்த சேவடியேயோ –திருவாசிரியம் -1-
மா முதல் அடிப் போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி மண் முழுதும் அகப்படுத்து –ஒண் சுடர் அடிப் போது
ஓன்று விண் செலீஇ நான்முகப் புத்தேள் நாடு வியந்து உவப்ப வானவர் முறை முறை வழிபட நெறீஇ –5-
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து —6-
பாரளந்தீர்–பெரிய திருவந்தாதி –8-
மாணி யுருவாகிக் கொண்டு உலகம் நீர் ஏற்ற சீரான் திருவாகம் தீண்டிற்றுச் சென்று –20-
அன்று அங்குப் பார் உருவும் பார் வளைத்த நீர் யுருவும் கண் புதையக் கார் யுருவன் தான் நிமிர்த்த கால் –21-
அடியால் படி கடந்த முத்தோ அதன்றேல் முடியால் விசும்பு அளந்த முத்தோ நெடியாய் செறி கழல்கள் தாள் நிமிர்த்துச் சென்று
உலகம் எல்லாம் அறிகிலமால் நீ யளந்த வன்று –27-
பாராளந்தான் –42-
அன்று உலகம் தாயவர் தாம் –59-
இறை முடியான் சேவடி மேல் மண்ணளந்த அந்நாள் மறை முறையால் வானாடர் கூடி முறை
முறையின் தாதிலகு பூத்தெளித்தால் ஒவ்வாதே –61-
மண்ணளந்தான் நாங்கள் பிணிக்காம் பெரு மருந்து பின் –62-
உலகளந்த மூர்த்தி யுரை –உள்ள உலகு அளவும் யானும் உளனாவான் என் கொல் –76-
பிறப்பு இறப்பு மூப்புப் பிணி துறந்து பின்னும் இறக்கவுமின் புடைத்தா மேலும் மறப்பு எல்லாம் ஏதமே
என்று அல்லால் எண்ணுவனே மண்ணளந்தான் பாதமே ஏத்தாப் பகல் –80-
மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலொடு மானுரியிலங்கு மார்வினின் இரு பிறப்பு ஒரு மாணாகி
ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை –திரு எழு கூற்று இருக்கை
ஆரால் இவ்வையம் அடி அளப்புண்டது தான் –சிறிய திருமடல்
பேர் வாமனாகிய காலத்து மூவடி மண் தாராய் எனக்கு என்று வேண்டிச் சலத்தினால் நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் –சிறியதிருமடல்
பெரு நிலம் கடந்த நல்லடிப் போது –திருவாய் –1–3–10-
திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் —1–5–3-
நாதன் ஞாலம் கொள் பாதன் என் அம்மான் –1–8–10-
மருதிடை போய் மண்ணளந்த மூவா முதல்வா –2–1–10-
மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட மால் தனில் மிக்குமோர் தேவும் உளதே-2- 2–3-
ஏத்த ஏழுலகும் கொண்ட கோலக் கூத்தனை –2–2–11-
நின்று அளந்து –2–8–7-
வன் மா வையம் அளந்த எம் வாமனா –3–2–2-
உலகம் எல்லாம் தாவிய அம்மானை -3–2–9-
அன்று ஞாலம் அளந்த பிரான் –3–3–8-
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை –3–3–11-
புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை –3–8–11-
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற சேவடி —4–2–3-
குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா –4–3–7-
உண்டு உமிழ்ந்தும் கடந்தும் –4–5–10-
வையம் கொண்ட வாமனாவோ –4–7–2-
தாவி வையம் கொண்ட வெந்தாய் தாமோதரா –4–7–3-
கரந்து உமிழ்ந்து கடந்து கிடந்தது –4–10–3-
உலகம் கொண்ட அடியன் –5–3–5-
இம்மண்ணளந்த எம் கார் ஏறு வாரானால் –5–4–4-
அன்று ஒரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று —5–4–10-
தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்ரமன் அடியிணை மிசை –5–7–11-
நிலம் தாவிய நீள் கழலே –5- -9–8-
கடந்து –5–10–5-
அடியை மூன்றை இரந்தவாறும்-அங்கே நின்று ஆழ் கடலும் மண்ணும் விண்ணும் முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும் –5–10–9-
மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட —6–1–11-
அகல் கொள் வையம் அளந்த மாயன் –6–4–6-
திசை ஞாலம் தாவி அளந்ததுவும் –6–5–3-
வையம் அளந்த மணாளற்கு —6–6–1-
மாடுடை வையம் அளந்த மணாளற்கு —6–6–4-
பாயோர் அடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலம் எல்லாம் தாய் ஓர் அடியால் எல்லா உலகும் தடவந்த மாயோன் –6–9–6-
தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –6–9–9-
என்னாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று –6–10–6-
கடந்து –7–1–3-
அளந்தாய் -7–2–2-
அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே –7–4–1-
பாமரு மூவுலகு அளந்த பற்ப பாதாவோ —7–6–1-
அகலிடம் முற்றவும் ஈரடியே ஆகும் பரிசு நிமிர்ந்த திருக் குறள் அப்பன் —7–10–2-
மாண் குறள் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த —8–2–9-
அன்றேல் இப்படி தான் நீண்டு தாவிய அசைவோ பணியாயே–8–3–5-
குன்று ஏழ் பார் ஏழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும் நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே -8–3–8-
பெரிய மூவுலகும் நிறைய பேருருவமாய் நிமிர்ந்த குறிய மாண் எம்மான் –8–4–4-
உன் வையம் தாய மலர் அடிக் கீழ் முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவிப் பணி கொள்ளாய் –8–5–7-
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை –8–6–7-
நீ ஒரு நாள் படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே
அவனே அஃது அளந்தான் –9–3–2-
குன்றாமல் உலகு அளந்த அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே –9–4–10-
உமிழ்ந்து அளந்து —9–9–2-
அண்ட மூ வுலகு அளந்தவன் அணி திரு மோகூர் –10–1–5–3-
வையம் தாய் –திருக் குறும் தாண் -16-
ஒண் மிதியில் புனலுருவி ஒரு கால் நிற்ப ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து
அண்ட மீது போகி–திருவடியே வணங்கினேன் –திரு நெடும் தாண் —5-
பாராளந்து –20-
உலகம் மூன்றினையும் திரிந்து –28-
உலகு ஏழும் தாயோன் –கலியன் –1–5–6-
கொண்டாய் குறளாய் நிலம் ஈரடியாலே –1–10–4-
குறளாகி நிமிர்ந்தவனுக்கு இடம் நீர் மலையே —2–4–2-
இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம் கடந்தானை –2–5–6-
படி கடந்த தாளாளர்க்கு ஆளாய் உய்தல் விண்டானை –2–5–9-
வளம்படு முந்நீர் வையம் முன்னளந்த மால் என்னும் –2–7–2-
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் அளந்து –3–1–5-
மூ வுலகு அளந்தானை –3–1–10-
அரு மா நிலம் அன்று அளப்பான் குறளாய் –3–2–4-
உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும் தருக வெனா மா வலியைச் சிறையில் வைத்த –3–4–1-
ஓ மண்ணளந்த தாளாளா –3–6–5-
பாரளந்த பண்பாளா –3–6–7-
அண்டமும் இவ்வலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் –3–10–5-
அயனலர் கொடு தொழுது ஏத்தக் கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன் –4–2–6-
வசை யறு குறளாய் மாவலி வேள்வி மண்ணள விட்டவன் தன்னை —4- -3–4-
வையம் ஈரடியால் அளந்த கண்ணி முடியீர் —4–9–3-
பெரு நிலம் அளந்தவன் கோயில் –4–10–1-
மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில் –4-10-7-
தொண்டர் பரவச் சுடர் சென்று அணவ அண்டத்து அமரும் அடிகளூர் –5–2–5-
அகலிடம் முழுதினையும் பாங்கினால் கொண்ட பரம நின் பணிந்து எழுவேன் –5- 3-9-
பெரு நிலம் ஈரடி நீட்டிப் பண்டொரு நாள் அளந்தவனை —5–6–4-
வரி வண்டார் கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த அந்தணனை –5- 6-7-
உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் -5–8–9-
அங்கு அண்டமொடு அகலிடம் அளந்தவனே -6–1–1-
அன்று உலகம் மூன்றினையும் அளந்து –6–6–5-
மான் கொண்ட தோல் மார்வின் மாணியாய் மாவலி மண் தான் கொண்டு தாளால் அளந்த பெருமானை –6–8–1-
உலகை ஈரடியாய் நடந்த நம்பி –6–10–1-
உலகை ஈரடியால் நடந்தான் –6–10–2-
தான் அமர ஏழுலகும் அளந்த -7–8–6-
அண்டமொடு அகலிடம் அளந்தவர் அமர் செய்து–8-7-5-
படி புல்கும் அடியிணை பலர் தொழ—8- -7–8-
மாணாகி வையம் அளந்ததுவும் –8–10–8-
பின்னும் ஏழுலகும் ஈரடியாகப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன் —9–1–5-
இவ்வையம் எல்லாம் தாயின நாயகராவார் தோழீ –9–2–3-
முன்னம் குறளுருவாய் மூவடி மண் கொண்டு அளந்த –9–4–2-
அணி வளர் குறளாய் அகலிடம் முழுதும் அளந்த வெம்மடிகள் –9–8–3-
தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து வானகமும் மண்ணகமும் அளந்த திரிவிக்ரமன் –9–9–5-
படி கடந்தான் –9–10–5-
உலகு அளந்தாய் –10–4–5-
அளந்திட்டவன் காண்மின் —10–6–4-
நீண்டான் குறளாய் நெடுவான் அளவும் அடியார் படும் ஆழ் துயராய எல்லாம் தீண்டாமை நிமைத்து இமையோரளவும் சேலை வைத்த பிரான் –10–6–5-
கொட்டாய் பல்லிக் குட்டி குடமாடி யுலகு அளந்த –10–10–4-
மந்தர மீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர்சேர் அந்தரம் ஏழினூடு செல உய்த்த பாதமது நம்மை யாளும் யரசே –11–4–5-

——————————–

சுக்கிர பங்கம்
மிக்க பெரும் புகழ் –மாவலி வேள்வியில் –சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக் கையன் –பெரியாழ்வார் –1–8–7-

—————

நமுசி பங்கம்
கழல் ஓன்று எடுத்து ஒரு காய் சுற்றி –பொய்கையார் -48-
கழல் எடுத்து –மாற்றார் அழல் எடுத்த –பூதத்தார் -7-
மன்னு நமுசியை வானில் சுழற்றிய –பெரியாழ்வார் –1–8–8-
அங்கு எதிர்முக அசுரர் தலைகளை இடறும் –4–7–3-
அத்துணைக் கண் மின்னார் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த பொன்னார் கனை கழல் கால் ஏழுலகும் போய்க் கடந்து அங்கு ஒன்னா
(நமுசி) வசுரர் துளங்கச் செல நீட்டி மன்னு இவ்வகல் இடத்தை மா வலியை வஞ்சித்துத் தன்னுலகம் ஆக்குவித்த தாளானை –பெரிய திருமடல்

———————–

பரசுராமாவதாரம்
மன்னடங்க முழு வலங்கைக் கொண்ட இராம நம்பி என்னிடை வந்து எம்பெருமான் இனி எங்குப் போகின்றதே –பெரியாழ்வார் -5–4–6-
நின்று இலங்கு முடியினாய் இருப்பத்தோர் கால் அரசுகளை கட்ட வென்றி நீண் மழுவா –திருவாய் —6–2–1-
வற்புடை வரை நெடும் தோள் மன்னர் மாள வடிவாய் மழு வேந்தி–திரு நெடும் தாண் –7-
அலை நீர் உலகுக்கு அரசாகிய அப்பேரானை முனிந்த முனிக்கரையனை –கலியன் –2–4–6-
கோ மங்க வங்கக் கடல் வையம் உய்யக் குல மன்னர் அரங்கம் மழுவில் துணியத் தாம்
அங்கு அமருள் படை தோட்ட வென்றித் தவ மா முனியைத் தமக்காக்க கிற்பீர் –3–2–5-
தெவ்வாய மற மன்னர் குருதி கொண்டு திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்தி செய்து –3–4–5-
வென்றி மா மழு வேந்தி முன் மண் மிசை மன்னரை மூ வெழு கால் கொன்ற தேவ –5-3–1-
ஆயிரம் குன்றம் சென்று தொக்களைய அடல் புரை எழில் திகழ் திறல் தோள்
ஆயிரம் துணிய வடல் மழுப் பற்றி மற்றவனகல் விசும்பு அணைய–5–7–6-
மன்னெல்லாம் முன் அவியச் சென்று வென்றிச் செருக்களத்துத் திறல் அழியச் செற்ற வேந்தன்
சிரம் துணிந்தான் திருவடி நும் சென்னி வைப்பீர் –6-6-8-
முனியாய் வந்து மூவெழுகால் முடிசேர் மன்னருடல் துணியத் தனிவாய் மழுவின் படையாண்ட தாரார் தோளான் –6- -7–2-
மன்னஞ்ச வாயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா -7–2–7-
கோவானார் மடியக் கொலையார் மழுக் கொண்டு அருளும் மூவா வானவனை –7–6–2-
முழுது இவ்வையகம் முறை கெட மறைதலும் முனிவனும் முனிவெய்தி மழுவினால் மன்னராருயிர் வவ்விய மைந்தன் —8–5–8-
மழுவியல் படையுடை அவனிடம் —8–7–6-
வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூ வெழு கால் –படியாய் அரசு களைகட்ட பாழியானை யம்மானை –8–8-6-
மழுவினால் அவனி யரசை மூ வெழு கால் மணி முடி பொடி உதிரக் குழுவுவார் புனலுள் குளித்து வெங்கோபம் தவிர்த்தவன் —9–1–6-
தெழிந்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத் தோளவை யாயிரம் மழுவால் அழித்திட்டவன்-10–6–6-
ஆழி யம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச அலை கடல் உலகம் முன்னாண்ட பாழியம்
தோள் ஆயிரம் வீழப் படை மழுப் பற்றிய வலியோ –10–9–7-
இரு நில மன்னர் தம்மை இரு நாலும் எட்டும் ஒரு நாலும் ஒன்றும் உடனே செரு நுதலோடு
போகி யவராவி மங்க மழு வாளில் வென்ற திறலோன் —11–4–6-

—————————-

பரசுராம பங்கம்
ஈசனை வென்ற சிலை கொண்ட செங்கண் மால் சேரா –நான்முகன் –8-
முன்னொரு நாள் மழு வாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றாய் –பெருமாள் திரு –9–9-
மழு வாள் ஏந்தி வெவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு –10–3-
என் வில் வலி கண்டு போ என்று எதிர் வந்தான் தன் வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி –பெரியாழ்வார் –3–9–2-
அரசு களை கட்ட யாரும் தவத்தோனிடை விலங்கச் செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்ததும் ஓர் அடையாளம் –3–10–1-

——————————————————
விபவம் அநந்தமாய்—கௌண முக்கிய பேதத்தாலே பேதித்து இருக்கும் -கௌணதத்வம் இச்சையால் வந்தது -ஸ்வரூபேண அன்று
கௌணம் ஆவது -ஆவேச அவதாரம் / முக்யமாவது சாஷாத் அவதாரம் –
ஆவேசம் தான் ஸ்வரூப ஆவேசம் என்றும் சத்யாவேசம் என்று த்வி விதமாய் இருக்கும்
ஸ்வரூப ஆவேசம் ஸ்வம்மானை ரூபத்தாலே ஆவேசிக்கை -அதாவது பரசுராமாதிகளான சேதனருடைய சரீரங்களிலே
தன்னுடைய அசாதாரண விக்ரஹத்தோடே ஆவேசித்து நிற்கை -ஆவேச ரூபமான கௌணதவமும் இச்சையால் வந்தது
அப்ராக்ருதமாய் இருந்துள்ள ஸ்வ சாதாரண விக்ரஹத்தோடே வந்தது அன்று –
விதி சிவ பாவக வ்யாஸ ஜாமாதக்கன்ய அர்ஜூனாதிகள் ஆகிற கௌண ப்ராதுர் பாவங்கள் எல்லாம்
அஹங்கார யுக்த ஜீவர்களை அதிஷ்டித்து நிற்கையாலே முமுஷுக்களுக்கு அநுபாஸ்யங்கள்
அனர்ச்யா சர்வ ஏவைத விருதத்வாத் மஹா மதே அஹான்க்ருதி யுதா சேமே ஜீவாமிஸ்ர ஹ்யதிஷ்டித்தா-என்கிறபடியே
துஷ்ட ஷத்ரிய நிரசனம் பண்ணின ஜமதக்கினி புத்திரனான பரசுராமனும் முமுஷுக்களுக்கு அநுபாஸ்யன் என்றபடி
சக்த்யாவேச அவதார பூத கார்த்த வீர்யார்ஜுன பஞ்சகம் ஸ்ரீ பரசுராமாவாதாரம்
-ஸ்வரூப ஆவேச அவதார பூத பரசுராம கர்வபஞ்சகம் ஸ்ரீ தசரத ராமாவதாரமான முக்கிய அவதாரம் –

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: