அருளிச் செயல்களில் பரத்வாதி பஞ்சகம் -இரண்டாம் பாகம் – வ்யூஹம் / ஷீராப்தி சயனம் / வடபத்ர சயனம் / பகவத் ஸ்வரூபம் /அந்தர்யாமித்வம் –ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் –

கடல் வண்ணன் -/ ஷீராப்தி சயனம் –
முதலாவார் மூவரே அம்மூவருள்ளும் முதலாவான் –மூரி நீர் வண்ணன் –பொய்கையார் –15-
வரை மேல் மரகதம் போலத் திரை மேல் கிடந்தானை –பொய்கையார் -25-
கிடந்ததுவும் நீரோத மா கடலே நின்றதுவும் வேங்கடமே –பொய்கையார் -39-
வேலைக் கண் ஓர் ஆழியான் அடியே ஓதுவதும் ஓர்ப்பனவும் போராளி கொண்டான் பெயர் –பொய்கையார் -66-
உரவுடைய நீராழியுள் கிடந்து –பொய்கையார் -89-
வெள்ளத்தின் உள்ளானும் -93-
பரிசு நறு மலரால் பாற் கடலான் பாதம் புரிவார் –பூதத்தார் -3-
மா கடல் நீருள்ளான் –பேயார் -3-
சங்கோதப் பாற் கடலான் பாம்பணையின் மேலான் -11-
அனந்தன் அணைக் கிடைக்கும் அம்மான் –15-
நீர் அணை மேல் பள்ளி அடைந்தானை –27-
பாற் கடலுளான் –31-
பாற் கடலும் இடமாகக் கொண்டான் -32-
பாலில் கிடந்ததுவும் –நான்முகன் –3-
ஆழிக் கிடந்தானை –17-
பழுதாகாதது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம் வழுவா வகை நினைத்து வைகல் -89-
பால் நிறக் கடல் கிடந்த –திருச்சந்த -23-
படைத்து அடைத்து அதில் கிடந்து –28-
பவ்வ நீர் அணைக் கிடந்து –29-
நீரிடத்து அராவணைக் கிடத்தி என்பர் -47-
நீள் கடல் கிடந்து -48-
நல் பெரும் திரைக் கடலுள் நானிலாத முன்னெலாம் –65 –
மறித்து எழுந்த தெண் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால்–74-
நீர் அரவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல் —78-
கடைந்து பாற் கடல் கிடந்து -81-
முத்திறத்து மூரி நீர் அராவணைத் துயின்ற –82-
படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்து -92-
கடல் கிடந்த கண்ணனே -93-
கடல் கிடந்த நின்னலாலோர் கண்ணிலேன் எம் அண்ணலே -95-
தெழிக்கு நீர்ப் பள்ளிமாய –102-
வேலை நீர்ப் பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை வண்ணனே –110–
மாலையுற்ற கிடந்தவன் –பெருமாள் -2–8-
நீலக் கடலுள் நெடுங்காலம் கண் வளர்ந்தான் –பெரியாழ்வார் -2–6–6-
பை யரவின் அணைப் பாற் கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி -4–10–5-
பனிக் கடலில் பள்ளி கோளைப் பழகவிட்டு ஓடி வந்து என் மனக் கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ -பெரியாழ்வார் -5–4–9-
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி –திருப்பாவை -2-
வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்தினை -6-
தெண் திரைக் கடல் பள்ளியாய் –நாச்சியார் -2–3-
பொங்கிய பாற் கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் —5–7-
தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப் பாயல் திரு நெடுங்கண் வளர்ந்தும் –திருச்சந்த –74-
குனி சங்கு இடறிப் புலாகின்ற வேலைப் புணரி யம் பள்ளி யம்மான்–75-
பாற் கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனையே தொழுவார் –79-
நச்சுவினைக் கவர் தலை அரவின் அமளி எறி -திருவாசிரியம் -1-
எறி கடல் நடுவுள் அறி துயில் அமர்ந்து -ஆர்த்தோதம் தம்மேனித் தாள் தடவத் தாம் கிடந்து தம்முடைய செம்மேனிக் கண் வளர்வார் சீர் –பெரிய திரு -15-
அன்று அத் தடம் கடலை மேயார் தமக்கு -31-
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் —34-
மருங்கோதம் மோதும் மணி நாகணையார் –55-
பேரோதம் சிந்து திரைக்கண் வளரும் பேராளன் -59-
இரைக்கும் கடல் கிடந்த வெந்தாய்-77-
செழும் பரவை மேயார் -81-
பொங்கோதத் தண்ணம் பால் வேலை வாய்க் கண் வளரும் என்னுடைய கண்ணன் பால் –85-
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் –திருவாய் –1-4–10-
தானோர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண் வளரும் -1–5–4-
நிமிர் திரை நீள் கடலானே -1–6–6-
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் -1–9–2-
அவர் எம்மாழி அம் பள்ளியாரே -2–2–6-
பின்னும் வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் -2–4–7-
பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி யமர்ந்ததுவும் -2–5–7-
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை –2–6–5-
தடம் கடல் சேர்ந்த பிரானை –3–5–6-
தடம் கடல் கிடந்தான் தன்னை –3–6–2-
அரவம் ஏறி அலை கடல் அமரும் துயில் கொண்ட அண்ணலை -3–6–3-
நம் பாற் கடல் சேர்ந்த பரமனை –3–7–1-
குறைவில் தடம் கடல் கோள் அரவு ஏறித் தன் கோலச் செந்தாமரைக் கண் உறைபவன் போலவோர் யோகு புணர்ந்த -3–10–2-
ஆழ்ந்தார் கடல் பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ -4–1–6-
நாகமேறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே -4–3–3-
பிரான் கிடக்கும் கடல் என்னும் -4-4–2-
வெள்ளத்து அணைக் கிடந்தாய் -5–1–3-
அலை கடல் பள்ளி அம்மானை -5–3–7-
திரை கொள் பவ்வத்துச் சேர்ந்ததும் தண் புனல் பள்ளி எம் தேவ பிரானுக்கு கடல் இடம் கொண்ட கடல் வண்ணா -கண்ணனே -7–2–7-
வெள்ளத்தடம் கடலுள் விட நாகணை மேல் மருவி உள்ளப் பல் யோகு செய்து –திருவாய் -7–8–4-
பெரிய நீர் படைத்து அங்கு உறைந்தது –8–1–5-
தடம் கடல் பள்ளி யம்மானை -8–4–6-
தூ நீர்க் கடலுள் துயில்வானே -8–5–4-
தண் பாற் கடலுலாள் பைத் தேய் சுடர்ப் பாம்பணை நம் பரனையே -8–7–10-
ஆள்வான் ஆழி நீர் கோள் வாய் அரவணையான் -10–5–4-
தொடு கடல் கிடந்த எம் கேசவன் கிளர் ஓளி மணி முடி –10–9–7-
பாற் கடலாய் –திரு நெடும் தாண் –9-
கடல் கிடந்த கனியே என்றும் -15-
கரை செய் மாக் கடல் கிடந்தவன் –கலியன் -1–2–5-
பரமனே பாற் கடல் கிடந்தாய் -1–6–6-
திரை கொள் மா நெடும் கடல் கிடந்தாய் -1–6–9-
சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினன் -1–8–1-
கிடந்தானைத் தடம் கடலுள் பணங்கள் மேவி -2–5–6-
பொரு கடலுள் துயில் அமர்ந்த புள்ளூர்தியை -2–5–7-
கரும் தண் மா கடல் கண் துயின்றவன் –3–1–1-
கரு மா கடலுள் கிடந்தான் உவந்து கவை நர வரவின் அணைப் பள்ளியின் மேல் –3–2–4-
நீலத் தடவரை மா மணி திகழக் கிடந்தது போல் அரவணை வேலைத் தலைக் கிடந்தாய் —3–5–3-
உலவு திரை கடல் பள்ளி கொண்டு வந்து உன்னடியேன் மனம் புகுந்த –3–5–7-
சங்கு தங்கு தடம் கடல் கடல்மல்லை யுள் கிடந்தாய் –3–5–8-
கொண்டரவத் திரை வுலகு குரை கடல் மேல் குலவரை போல் பண்டு அரவின் அணைக் கிடந்தது -3–6–7-
அசைவறும் அமரர் அடியிணை வணங்க அலைகடல் துயின்ற அம்மானை –4–3–4-
பாற் கடல் துயின்ற பரமனார் -4–10–4-
தெண்டிரை வருடப் பாற் கடலுள் துயின்ற திரு வெள்ளியங்குடியானை –4–10–10-
கடல் கிடந்த கரு மணியை -5–6–1-
வளர்ந்தவனைத் தடம் கடலுள் —5–6–4-
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறி துயில் அலை கடல் நடுவே ஆயிரம் சுவர் வாய் அரவணைத் துயின்றான் –5–7–6-
தெள்ளார் கடல் வாய் விட வாய சின வாள் அரவில் துயில் அமர்ந்து -6- 7-3-
பரவைத் துயில் ஏற்றை -7–3–6-
பை விரியும் வரி அரவில் படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா -7–4–7-
கடியார் கலி நம்பீ –7–7–8-
வங்க மலி தடம் கடலுள் வரி யரவின் அணைத் துயின்ற செங்கமல நாபனுக்கு —8–3–8-
கடல் கிடந்த பெருமானை -8–9–2-
வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவணை மேல் துள்ளு நீர் மெள்ளத் துயின்ற பெருமானே -8–10–7-
வங்க மா முந்நீர் வரி நிறப் பெரிய வாள் அரவின் அணை மேவி -9-1-1-
தொடு கடலுள் பொங்கார் அரவில் துயிலும் புனிதர் -9-6-2-
புத மிகு விசும்பில் புணரி சென்று அணவப் பொரு கடல் அரவணைத் துயின்று -9–8–8-
மூவரில் முன் முதல்வன் முழங்கு கார் கடலுள் கிடந்து–9–9–1–

————————————

ஆலிலைத்துயில் –

வையகம் உண்டான் ஆலிலைத் துயின்ற ஆழியான் –பொய்கையார் -19-
ஆலிலையில் முன்னொருவனாய முகில் வண்ணா –34-
பாலன் தனதுருவாய் ஏழு உலகு உண்டு ஆலிலையில் மேல் அன்று நீ வளர்ந்த மெய்யென்பர் -69-
ஆலிலை மேல் தெருளாத பிள்ளையாய் சேர்ந்தான் –பேயார் 19-
பாலகனாய் ஆலிலை மேல் பைய உலகெல்லாம் –பேயார் -33-
மூரி நீர் வேலை இயன்ற மரத்து ஆலிலையின் மேலால் -53-
அனைத்து உலகும் உள்ளொடுக்கி –ஆல் மேல் மெள்ளத் துயின்றானை -93-
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் –நான்முகன் -3-
ஆல் மேல் வளர்ந்தானைத் தான் வணங்குமாறு –17-
ஞாலம் ஏழும் உண்டு மண்டி யாலிலைத் துயின்ற –திருச்சந்த -22-
வானகமும் போனகம் செய்து ஆலிலைத் துயின்ற –திருச்சந்த -30-
ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஓர் பாலனாய பண்பனே –திருச்சந்த -31-
ஆல மா மரத்தினிலை மேல் ஒரு பாலகனாய் –அமலன் –9-
ஆலினைப் பாலகனாய் அன்று உலகம் உண்டவனே –பெருமாள் –8–7-
ஆலினிலை வளர்ந்த சிறுக்கன்அவன் இவன் –பெரியாழ்வார் –1–4–7-
ஊழி தொரு ஊழி பல வாலின் இலை யதன் மேல் பைய வுயோகு துயில் கொண்ட
உண்டிட்டு உலகினை ஏழும் ஓர் ஆலிலை துயில் கொண்டாய் –2–7–9-
தோயம் பரந்த நடுவு சூழலின் தொல்லை வடிவு கொண்ட மாயக் குழவியதனை நாடுறில் வம்மின் சுவடுரைக்கேன்—4–1–4-
ஆலினிலையாய் யருள்–திருப்பாவை –26-
அன்று பாலகனாகி ஆலிலை மேல் துயின்ற –நாச்சியார் –2–2-
ஆலினிலைப் பெருமான் –9–8-
பால் ஆலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டு இருந்தேனே –13–2-
நளிர் மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா மலர் சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க ஒரு பொருள் புறப்பாடு இன்றி
முழுவதும் அகப்படக் கரந்து ஓர் ஆலிலைச் சேர்ந்த எம் பெரு மா மாயனை அல்லது ஒரு மா தெய்வம் மாற்றுடையமோ யாமே –திருவாசிரியம் -7-
உடன் அமர் காதல் மகளிர் திரு மகள் மண் மகள் ஆயர் மட மகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவையர் ஓக்க விழுங்கி ஆலிலைச் சேர்ந்தவன் அம்மான் –திருவாய் -1–9–4-
பள்ளி யாலிலை ஏழுலகும் கொள்ளும் –2–2–7-
அடியார்ந்த வையமுண்டு ஆலிலை யன்ன வசம் செய்யும் –3–7–10-
ஆலிலை யன்ன வசம் செய்யும் அண்ணலார் –4–2–1—
ஆலின் நீள் இலை ஏழுலகும் உண்டு அன்று நீ கிடந்தாய் –6–2–4-
யாதும் யாவரும் இன்றி நின்னகம் பால் ஒடுக்கி ஓர் ஆலின் நீள் இலை மீது சேர் குழவி—7–10–4-
ஞாலம் போனகம் பற்றி ஒரு முற்றா வுருவாகி ஆலம் பேரிலை அன்னவசம் செய்யும் அம்மானே -8–3–1-
ஆலின் மேலால் அமர்ந்தான் –9–10–4-
ஆலின் இலை மேல் துயின்றான் –10–4–4-
எண் திசைகளும் ஏழுலகும் வாங்கி பொன் வயிற்றில் பெய்து பண்டு ஓர் ஆலிலைப் பள்ளி கொண்டவன் –கலியன் -1–8-6-
நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு ஏரால் இளந்தளிர் மேல் துயில் எந்தாய் -1–10–3-
பாலனாகி ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஆலிலை மேல் சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரைக் கண்ணன் –2–2–5-
பாலகனாய் ஆலிலையில் பள்ளி யின்பமேய்ந்தானை –2–5–5-
வயிற்று அடக்கி ஆலின் மேலோர் இளந்தளிரில் கண் வளர்ந்த ஈசன் –2–10–1-
வையம் ஏழும் உண்டு ஆலிலை வைகிய மாயவன் –3–1–3-
ஞாலம் எல்லாம் அமுது செய்து நான் மறையும் தொடராத பாலகனாய் ஆலிலையில் பள்ளி கொள்ளும் பரமன் –4–1–6-
ஒரு கால் ஆலிலை வளர்ந்த வெம்பெருமான் –4–10–1-
வையம் உண்டு ஆலிலை மேவும் மாயன் –5–4–2-
ஆலிலை வளர்ந்து மணி முடி வானவர் தமக்குச் சேயனாய்–5–7–9-
கலை தரு குழவியின் உருவினையாய் அலை கடல் ஆலிலை வளர்ந்தவனே–6–1–4-
கொம்பமரும் வடமரத்தின் ஆலிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடுகிற்பீர் –6–6–1-
சிறியாய் ஓர் பிள்ளையுமாய் உலகுண்டு ஓர் ஆலிலை மேல் உறைவாய் –7–2–4-
வெள்ளத்து உள்ள ஓர் ஆலிலை மேல் மேவி அடியேன் மனம் புகுந்து –7–5–4-
ஆலிலைப் பள்ளி கொள் மாயனை –7–10–2-
மண்டி ஓர் ஆலிலைப் பள்ளி கொள் மேயர் கொல்—-9–2–9-
ஒரு பாலகனாய் ஆலிலை மேல் கண் துயில் கொண்டு உகந்த –9–9–3-
வேலை ஆலிலைப் பள்ளி விரும்பிய -10–1–3-

———————————

பகவத் ஸ்வரூபம்
பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும் பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும் அண்டமும் தானாய் நின்ற வெம் பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே—5- 7—1-
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்ணில் பல் குணங்களே இயற்ற தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்று அகலாப் பந்தமும்
பந்தம் அறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம் அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5–7–2-

——————————–

அந்தர்யாமித்வம்
அந்தர்யாமித்வம் இரண்டு படியாய் இருக்கும் –
அடியேன் உள்ளான் –8–8–2-என்றும் -எனதாவி –2–3–4-என்றும் -என்னுயிர் -9–5–1-என்றும் –ஆத்மாக்குள்ளும்
போதில் கமல வன்னெஞ்சம் புகுந்து –பெரியாழ்வார் -5–2–8-என்றும் -அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து –5–2–10-என்றும்
புந்தியில் புகுந்து தன்பால் ஆதரம் பெறுக வைத்த அழகன் -திருமாலை –16-என்றும் உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி–34-என்றும்
சொல்லுகிறபடி ஸ்ரீ லஷ்மீ சஹானாய் விலக்ஷண விக்ரஹ உக்தனாய் ஹிருதய கமலத்துக்கு உள்ளே சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளையும்
சதா அவலோகநாம் பண்ணிக் கொண்டும் எழுந்து அருளி இருக்கும் இருப்பு –
அந்தர்யாமித்வம் ஆவது -அந்த பிரவிசய நியாந்தாவாய் இருக்கை-ஸ்வர்க்க நரக பிரவேசாதி சர்வ அவஸ்தைகளிலும் சகல சேதனர்க்கும் துணையாய் –
அவர்களை விடாதே நிற்கிற நிலைக்கு மேலே -சுபாஸ்ரயமான திரு மேனியோடு கூடிக் கொண்டு அவர்களுக்கு த்யேயானாகைக்கும்-
அவர்களை ரஷிக்கைக்காகவும் பந்து பூதனாய்க் கொண்டு ஹ்ருதய கமலத்தில் எழுந்து அருளி இருக்கும் இருப்பு –
ய ஆத்மா ந மந்த்ரோ யமயதி–அந்த ப்ரவிஷ்ட சாஸ்தா ஜனா நாம் –சாஸ்தா விஷ்ணுர சேஷஸ்ய ஜகதோ யோ ஹ்ருதி ஸ்த்தித-இத்யாதிகளில்
சொல்லுகிறபடியே சேதனருடைய உள்ள பிரவேசித்து சகல ப்ரவ்ருத்திகளும் நியாந்தாவாய் இருக்கை -அந்தர்யாமித்வம்
இதுதான் ஆத்மாவின் உள்ளே தன் ஸ்வரூபத்தாலே வியாபித்து நின்று நியமிக்குமதும்-அங்குஷ்ட மாத்ர புருஷ மத்ய ஆத்மநி திஷ்டதி -என்றும்
நீல தோயத மத்யஸ்த்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா –என்றும் சொல்லுகிறபடியே ச விக்ரஹனாயக் கொண்டு
பத்ம கோச ப்ரதீகாசம் ஹ்ருதயம் சாப்யதோமுகம்-என்கிற ஹ்ருதயத்தில் எழுந்து அருளி இருக்கும் இருப்பு –
சர்வருடையவும் ஹ்ருதயங்களிலே ஸூஷ்மமாய் இருபத்தொரு ரூப விசேஷத்தை கொண்டு நிற்கிற நிலை அந்தர்யாம்யவதாரம்
இது சர்வ அந்தர்யாமியான திவ்யாத்ம ஸ்வரூபத்தை அனுசந்திக்க இழிவார்க்கு துறையாக
அஷ்டாங்க யோக சித்தா நாம் ஹ்ருதயாக நிரதாத்ம நாம் -யோகி நாமதிகார–ஸ்யாத் ஏகஸ்மின் ஹ்ருதயே சயே-இத்யாதிகளில்
-சொல்லுகையாலே அந்தர்யாமி ரூபம் –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் –பொய்கையார் –99-
மனத்துள்ளான் —பூதத்தார் –28-
தமருள்ளும் தஞ்சை தலை யரங்கம் தண்கால் தமருள்ளும் தண் பொருப்பு வேலை
தமருள்ளும் மா மல்லை கோவில் மதிள் குடந்தை என்பரே ஏ வல்ல வெந்தைக்கிடம் –70-
அறிவு என்னும் தாள் கொளுவி காண்பாரே படி –பேயார் –12-
நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பு —30-
நுண்ணூல தாமரை மேல் பால் பட்டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான் –32-
வேங்கடவா என்னுள் புகுந்தாய் –நான்முகன் –41-
இன்று சென்று ஒன்றி நின்ற திரு –61-
கலந்தான் என்னுள்ளத்துக் காம வேள் தாதை —82-
ஏன்று என் ஆவியுள் புகுந்தது என் கொலோ எம்மீசனே –திருச்சந்த –4-
புன்புல வழி யடைத்து அரக்கு இலச்சினை செய்து –அன்பில் அன்றி ஆழியானை யாவர் காண வல்லரே –திருச்சந்த -76-
அடக்கரும் புலன்கள் ஐந்து அடக்கி –கடல் கிடந்த நின்னலால் அலோர் கண்ணிலேன் எம் அண்ணலே –95-
மறம் துறந்து வஞ்ச மாற்றி ஐம்புலன்கள் ஆசையும் துறந்து –மாய நல்க வேண்டும் –98-
இரந்துரைப்பது உண்டு வாழி–பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம் நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே –101-
வேலை நீர்ப் பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை வண்ணனே –110-
மாசற்றார் மனத்துள்ளானை –திருமாலை –22-
என்னைத்தன் வாரமாக்கி வைத்தான் வைத்தது அன்றி என்னுள் புகுந்தான் –அமலனாதி –5-
மாலார் குடி புகுந்தார் என் மனத்தே –பெரிய திருவந்தாதி -22-
வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்தது நீங்கான் அடியேன் உள்ளத்தகம்–68-
கல்லும் கனை கடலும் வைகுண்ட வானாடும் புல்லென்று ஒழிந்தன கொல் -ஏ பாவம்
ஆர்ந்த ஞானச் சுடராகி அகலம் கீழ் மேல் அளவிறந்து நேர்ந்த வுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –திருவாய் –1- 5–10-
சிவனாய் அயனாய் —6–9–1-
மூவுலகாளியே என்னும் கடி கமழ் கொன்றைச் சடையனே என்னும் நான்முகக் கடவுளே என்னும் வடிவுடை வானோர் தலைவனே -7–2–10-
புனை கொன்றை யஞ்செஞ்சடையாய் வாய்த்த என் நான்முகனே ஏத்தரும் கீர்த்தியினாய் –7–6–3-
என் திரு மார்பன் தன்னை என் மலை மகள் கூறன் தன்னை என்றும் என் நா மகளை யாகம் பால் கொண்ட நான்முகனை நின்ற சசீ பதியை –7–6–7-
படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம் பரண் சிவப் பிரான் அவனே இடிப்புக்கு ஓர் உருவும் ஒழிவில்லை யவனே யாவையும் தானே –8–4–9-
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான் முகனை அமர்ந்தேனே—8—4 -10-
மாயப்பிரான் நேசத்தினால் நெஞ்ச நாடு குடி கொண்டான் –8–6–4-
கோயில் கொண்டான் அதனோடு என் நெஞ்சகம் -8–6–5-
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத்தகத்தான் புறம் உள்ளான் –8–8–2-
அயனாம் சிவனாம்–8–8–11-
என் மனத்துள் இருந்தானை—10–4–4-
உலகும் உயிரும் தானேயாய் –10–7–4-
மானாங்கார மனம் கெட ஐவர் வன் கையர் மங்க தானங்காரமாய்ப் புக்குத் தானே தானே யானானை –10–7–11-
முனியே நான் முகனே முக்கண்ணப்பா –10–10–1-
பாழேயோ அதனுள் மிசை நீயேயோ –10–10–4-
அரியை அயனை அரனை அலற்றி –10–10–11-
உலவு திரையும் குல வரையும் ஊழி முதலா எண் திக்கும் நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விறல் ஆழி வலவன்–கலியன் -1- 5–3-
சொல்லு வன் சொல் பொருள் தானவையாய் சுவை ஊரு ஒலி நாற்றமும் தோற்றமுமாய்
நல்லரன் நாரணன் நான்முகனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி –2–9-1-
தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இரு நிலனுமாய் எம்பெருமானாகி நின்றால் –4–9–5-
தீதறு நிலத்தொடு எரி காலினொடு நீர் கெழு விசும்புமவையாய் –5–10–1-
திரு வாழ் மார்பன் தன்னைத் திசை மண் நீர் எரி முதலா உருவாய் நின்றவனை ஒளி சேரும் மாருதத்தை அருவாய் நின்றவனை
தென்னழுந்தையில் மன்னி நின்ற கருவார் கற்பகத்தை கண்டு கொண்டு களித்தேனே–7–6–7-

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: