ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த ஸ்ரீ சரணாகதி தீபிகா -ஸ்ரீ தீப பிரகாச ஸ்தோத்ரம் -ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் வியாக்யானம் –

திருத் தண்கா -தீப பிரகாசர் —
என்னை யாளுடை ஈசனை எம்பிரான் தன்னை யாம் சென்று காண்டும் தண் காவிலே –பெரிய திருமொழி
விளக்கொளியை மரகதத்தை –திருத் தண் காவில் –திரு நெடும் தாண்டகம் —

பத்மாபதே ஸ்துதி பதேன விபச்ய மாநம் பச்யந்த் விஹ பிரபதன ப்ரவணா மஹாந்த
மத்வாக்ய சம்வலிதமபி அஜஹத் ஸ்வ பாவம் மாந்யம் யதீஸ்வர மஹா நஸ சம்ப்ரதாயம் –1-

பத்மாபதே ஸ்துதி பதேன விபச்ய மாநம் –மத்வாக்ய சம்வலிதமபி அஜஹத் ஸ்வ பாவம் மாந்யம்
யதீஸ்வர மஹா நஸ சம்ப்ரதாயம்–விஹ பிரபதன- ப்ரவணா மஹாந்த பச்யந்த் –

ஸ்ரீ யபதியின் ஸ்தோத்ர ரூபேண பரிணமிப்பதாயும்-அடியேனுடைய வாக்கோடு சேர்ந்து இருந்தும் தன்மை குன்றாதாயுமாய் இருக்கும்
எதி வரனார் மடைப்பள்ளி சம்ப்ரதாயத்தை இங்கு பிரபத்தி ரசிகர்களான மகான்கள் அனுபவிக்கட்டும் –
எதிவரனார் மடைப்பள்ளி வந்த மணம் எங்கள் வார்த்தையுள் மன்னியதே -என்றும்
இதி யதிராஜ மஹாநச பரிமள பரிவாஹ வாஸிதாம் பிபத -என்றும் அருளிச் செய்வார்
எம்பெருமானார் இடம் பழுக்கக் கேட்ட கிடாம்பி ஆசான் மூலம் -கிடாம்பி அப்புள்ளார் அளவும் வந்து தேங்கிய சத் சம்ப்ரார்த்ய விசேஷங்கள்
சரணாகதி விசேஷார்த்தமே கொண்டு வடிவு எடுத்த ஸ்தோத்ரம் -நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -அருளினாலும்
கெடுதல் இல்லாமல் பிரமாணிகத்வமும் பிரபன்ன ஜன பரிக்ராஹ்யம் -அஜஹத் ஸ்வ பாவம் -குன்றாமல் உள்ளது என்றவாறு –

———————————————————————–

நித்யம் ச்ரியா வ ஸூ தயா ச நிஷேவ்ய மாணம் நிர்வ்யாஜ நிர்ப்பர தயா பரீதம் விபாதி
வேதாந்த வேத்யமிஹ வேகவதீ சமீபே தீபப்ரகாச இதி தைவத மத்விதீயம் –2-

ச்ரியா வ ஸூ தயா ச நித்யம் நிஷேவ்ய –மாணம் நிர்வ்யாஜ நிர்ப்பர தயா பரீதம்
வேதாந்த வேத்யம் தீபப்ரகாச இதி– அத்விதீயம் தைவதம் -இஹ வேகவதீ சமீபே-விபாதி

திருமகளும் மண்மகளும் எப்போதும் கூடி இருக்கப் பெற்றதும்
நிருபாதிக நிரவதிக தயா பரிபூரணமும் மறை முடிகளால் அறியத் தக்கதும்
விளக்கொளி என்ற திரு நாமம் கொண்டு இணையற்றதுமான பரதெய்வம் வேகவதீ சமீபத்தில் விளங்கா நின்றது —
வஸ்து நிர்தேசமான மங்கள ஸ்தோத்ரம்
அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பெறேன் என்று இருப்பார்க்கு அடி தயா சாகரம் என்றபடி
வேதாந்த வேத்யம் -சாஸ்திர யோநித்வாத் -வேதங்களைக் கொண்டே ஆரியப் படுபவன் –
அத்விதீயம் -ஏகச் சோள ந்ருபஸ் சமராட்அத்விதீ யோஸ்தி பூதலே -போலே அத்விதீயம் தைவதம் இங்கே அருளிச் செய்கிறார்
விரஜா நதிக்கரையை விட்டு வந்த பெருமானுக்கு வேகவதீ நதிக்கரை யில் இருப்பு மிகவும் ருசித்தபடி –

—————————————-
தீபஸ் த்வமேவ ஜகதாம் தயிதா ருசிஸ் தே தீர்க்கம் தம பிரதி நிவர்த்த்யமிதம் யுவாப்யாம்
ஸ்தவ்யம் ஸ்தவ ப்ரியதமம் சரணோக்தி வஸ்யம் ஸ்தோதும் பவந்த மிஹ வாஞ்சதி ஜந்துரேஷ –3-

ஹே பகவன் — ஜகதாம் தீபஸ் த்வமேவ ருசிஸ் தே தயிதா இதம் தீர்க்கம் தம யுவாப்யாம் பிரதி நிவர்த்த்யமிதம்
சரணோக்தி வஸ்யம் ஸ்தவ்யம் ஸ்தவ ப்ரியதமம் பவந்தம் ஏஷ ஜந்து இஹ ஸ்தோதும் வாஞ்சதி –
வாரீர் விளக்கொளி பெருமாளே -உலகுக்கு எல்லாம் விளக்கு தேவரீரே –விளக்கில் ஒலியோ என்றால் தேவரீருடைய தேவியார் ‘
அனந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண பிரபா யதா -அனந்யா ஹி மயா சீதா பாஸ்கரேண பிரபா யதா –
ஜெயாத் யாஸ்ரித சம்த்ராச த்வாந்த வித்வம்ச நோதய பிரபாவான் சீதயா தேவ்யா பரமவ்யோம பாஸ்கர -ரகுவீர கத்யம்
ஸ்வ யா தீப்த்யா ரத்னம் பவதபி மஹார்க்கம் ந விகுணம் ந குண்ட ஸ்வா தந்த்ர்யம் பவதி ச ந சாந்யாஹித குணம் -பட்டர்
இவ்விருள் தரும் மா ஞாலம் ஆகிற நெடிய இருள் நீங்கள் இருவரும் சேர்ந்து போக்கத் தக்கது –
சரணம் என்கிற வாக்குக்கு வசப்படுபவரும் ஸ்தோத்ரார்ஹரும் ஸ்துதி பிரியருமான தேவரீரை அடியேன் இங்கே ஸ்துதிக்க விரும்புகிறேன் –
இத்தால் தம்முடைய தமோ நிரசனத்தையும் சித்தவத்கரித்துக் கொண்டு அபஹத தமஸ்கரான தாம் ஸ்திதி கிருதிக்கு அர்ஹர் என்னும் இடத்தை பேசுகிறார்
ஸ்தவ்யம் ஸ்தவ ப்ரியம் –ஸ்துதி நீங்கள் யாவை யாவை சில ஏற்றங்களை இட்டுக் கவி பாடினி கோள்-அவற்றை சுவீகரிக்கும் இடத்தில் ஒரு குறை உடையவன் அல்லன் –
இது ஸ்தவ்யத்வம்-இனி ஸ்தவ பிரியா -குழந்தை மழலைச் சொல்லும் கேட்டு உகக்கும் தாய் -தத் புருஷ பஹூ வ்ரீகள்-இரண்டும் கொள்ளலாம் –
சரண உக்தி வஸ்யம் -சரணாகதி மானசம் வாசிகம் காயிகம் –
ஜ்ஞானான் மோஷம் ஆகையாலே மானசமாகக் கடவது -சாஸ்திரம் இருக்கச் செய்தேயும்
மனஸ் சஹகார்யம் இன்றிக்கே உக்தி -மாத்ரமே -பேரைச் சொன்னாய் இத்யாதி மடி மாங்காய் இட்டு சர்வச்வமும் பெற்றானாய் என்றேன் என்னத்
திருமால் வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தான் -போலே –
அஹம் வாஞ்சாமி -என்னாமல்-ஏஷ ஜந்தர் வாஞ்சதி —ஏஷ ஜனோ வாஞ்சதி போலே பிரதம புருஷனை இட்டுச் சொல்லுகை கவி சம்ப்ரதாயம் –

—————————————————————
பத்மாகராது பகதா பரிஷஸ்வஜே த்வாம் வேகா சரித் விஹரிணா கலசாப்தி கன்யா
ஆஸூஸ் ததாப்ராப்ருதி தீபஸமாவ பாஸம் ஆஜாநதோ மரகத பிரதிமம் வபுஸ்தே–4-

ஹே பகவன்
பத்மாகராதுபகதா வேகா சரித் விஹரிணா கலசாப்திகன்யா
யதா த்வாம் பரிஷஸ்வஜே -ததாப்ராப்ருதி ஆஜாநதோ மரகத பிரதிமம் தே வபுஸ்- தீபஸமாவ பாஸம் ஆஸூஸ்

வாரீர் விளக்கொளி பெருமாளே -தாமரைத் தடாகத்தில் நின்றும் வந்து வேகவதீ விகாசம் செய்பவளான பிராட்டி
எப்பொழுது தேவரீரை தழுவிக் கொண்டாளோ–அப்போது முதலாக இயற்கையிலே மரகதம் போன்ற தான தேவரீர் உடைய திருமேனியை
தீபத்தொடு ஒத்த தேசுடையதாக பெரியோர்கள் சொல்லுகிறார்கள் –
திருத் தண் காவில் விளக்கொளியை -மரகதத்தை –விளக்கொளி -ஹிரண்யமயம் -மரகதம் -பச்சை -பசுமை நீலம் கருமை பர்யாய சப்தங்கள்
பத்ம நிறமும் விளக்கொளி நிறமும் ஒன்றே -கமல மலர் மேல் செய்யாளான பிராட்டி தேவரீர் திருமேனியிலே தோய்ந்த பின்பே
தேவரீருக்கு விளக்கொளி வாய்த்தது
கலசாப்தி கன்யா -திருப் பாற் கடல் கடைந்த காலத்தில் பிராட்டி சஹாசா ஓடி வந்து தழுவிக் கொண்டால் போலே
வேகவதிக் கரையில் நின்றும் வந்து பிராட்டி தழுவிக் கொண்டாள்-

——————————————————

ஸ்வா மின் கபீர ஸூ பகம் ச்ரம ஹாரி பும்ஸாம் மாதுர்யாம்யம் அநகம் மணி பங்க த்ருச்யம்
வேகாந்த்ரே வித நுதே பிரதி பிம்ப சோபாம் லஷ்மீ சர சரசி ஜாஸ்ரய மங்ககம் தே –5-

ஹே ஸ்வாமின் கபீர ஸூ பகம் பும்ஸாம் ச்ரம ஹாரி மாதுர்யாம்யம் அநகம் மணி பங்க த்ருச்யம்
சரசி ஜாஸ்ரயம் லஷ்மீ சர அங்கஞ்ச ச வேகாந்த்ரே பிரதி பிம்ப சோபாம் வித நுதே-

தீபப்ப்ரகாச பகவானே -மிக்க ஆழம் உடையதும் -ஸ்வச்சமானதும் -ஜனங்களின் ஸ்ரமத்தைப் போக்குவதும் -இனிப்புள்ளதும் -அழுக்கற்றதும் –
ரத்ன கலசம் போலே தோன்றுவதும் தாமரைகளுக்கு இருப்பிடமுமான பிராட்டி யாகிற தடாகமும் -கீழ்ச் சொன்ன விசேஷங்கள் பொருந்திய
தேவரீருடைய திவ்ய அவயவமும் வேகவதியிடையில் சோபையைக் காட்டுகின்றன –
பிரதிபிம்மம் பார்த்தால் பிராட்டி திருமேனியும் பெருமாள் திருமேனியும் விகல்ப்பிக்கும் படி இருக்குமே
பிராட்டியும் தடாகமாக -இவனும் -தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே -தயரதன் பெற்ற மரகத மணித்தடம் –
தடாகம் -பிராட்டி -பெருமாள் -பொருத்தம் அழகாகக் காட்டி அருளுகிறார் –

கபீர ஸூ பகம் -ஆழமும் அழகும்
பும்ஸாம் ச்ரம ஹாரி -தன்னிலே அவஹாகித்தவர்களின் ஸ்ரமத்தை எல்லாம் போக்கும்
மாதுர்யாம்யம்-இனிப்பான தீர்த்தம் உடையதாய் இருக்கும்
அநகம் -அழுக்கு முதலிய கல்மஷம் அற்று இருக்கும்
மணி பங்க த்ருச்யம் -பங்கம் அலை -மணி கொழிக்கும் அலைகள் மோதப் பெற்று இருக்கும்
சரசி ஜாஸ்ரயம் -சரசிஜ ஆஸ்ரயம் -தாமரைகளுக்கு ஆஸ்ரயமாக இருக்கும்

கபீர ஸூ பகம் -கம்பீரத் தன்மையும் சௌபாக்யமும் பொருந்தியவள்
பும்ஸாம் ஸ்ரமஹாரி -அடி பணிந்தவர்களின் ச்ரமங்களை புருஷகார க்ருத்யத்தால் போக்கி அருபவள்
மாதுர்ய ரம்யம்-எம்பெருமானை வசீகரிக்க வல்ல வாக் மாதுர்யம் உடையவள்
அனகம் -சிலரை அனுக்ரஹித்து சிலரை நிக்ரஹிக்கும் குற்றம் இல்லாதவள்
மணி பங்க த்ருச்யம் -அநேக திவ்ய பூஷண பூஷிதை
சரசிஜ ஆஸ்ரயம்-பத்ம பரியே பத்மினி பத்ம ஹஸ்தே பத்மாலயே பத்ம தளயாதாஷி –

எம்பெருமானும் –
கபீர ஸூ பகம் –காம்பீர்ய சௌ ந்தர்யங்களில் குறை அற்றவன்
பும்ஸாம் ஸ்ரமஹாரி -நினைந்து இருந்தே சரமம் தீர்ந்தேன் –
மாதுர்ய ரம்யம்-மருதூர் தயாளூர் மதுரஸ் ஸ்திரஸ் மை தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்து அக்காரக் கனியாய் இருப்பவன்
அ நகம் -அகில ஹேய ப்ரத்ய நீகன்
மணி பங்க த்ருச்யம்-மணி விடம்பினி தஸ்ய மநோ ஹர வபுஷி
சரசிஜ ஆஸ்ரயம்-சரசிஜாயா -கமலாயா-ஆஸ்ரய பூதனாய் இருப்பவன் –விலஷண பாவனை பொலிய-அத்புத வாக் சமத்காரம் –

—————————————————–
ஆவிச்ய தாரயசி விச்வம் அமுஷ்ய யந்தா சேஷீ ஸ்ரியபதி அசேஷ தநுர் நிதாநம்
இத்யாதி லஷண கணை புருஷோத்தமம் த்வாம் ஜாநாதி யோ ஜகதி சர்வவித் ஏஷ கீத –6-

விச்வம் ஆவிச்ய தாரயசி அமுஷ்ய யந்தா சேஷீ ஸ்ரியபதி அசேஷ தநுர் நிதாநம் இத்யாதி லஷண கணை த்வாம் புருஷோத்தமம் ஜாநாதி யோ ஜகதி ஏஷ சர்வவித் கீத –

விளக்கொளி எம்பெருமானே -எல்லாப் பொருள்களையும் அனுபிரவேசித்து தாங்குகிறாய் –
இந்த பிரபந்தத்துக்கு எல்லாம் நியாமகனாயும்-சேஷியாகவும் -ஸ்ரீ யபதியாகவும் -சர்வ சராசர சரீரகனாயும்-ஆதி காரண பூதனாயும் இருக்கை யாகிற
இவை முதலிய லஷணங்களால் உன்னை புருஷோத்தமனாக எவன் அறிகிறானோ அவனே சர்வஜ்ஞஞாக ஸ்ரீ கீதையில் கூறப்பட்டான் –
சரணாகதிக்கு அதிகாரி நியமமோ பழ நியமமோ பிரகார தேச கால நியமங்களோ இன்றிக்கே விஷய நியமம் ஒன்றே உள்ளது -சாஸ்திர கொள்கை
விஷய நியமம் சகல சத்குண பூர்த்தி உள்ள இடமே சரணா கதிக்கு விஷயம் ஆகும் -அந்த பரத்வத்தை மூன்று ஸ்லோஹங்களால் அருளிச் செய்கிறார்
ஸ்ரீ கீதை 15-16/17/18 ஸ்லோஹங்களால் புருஷோத்தம வித்யையை அருளிச் செய்தது போலே
யோ லோகத்ரைய மாவிச்ய பிபர்த்தி அவிய ஈஸ்வர -15-17-போலே ஆவிச்ய தாரயசி விச்வம்
அதோஸ்மி லோகே வேதே ச பிரதித -புருஷோத்தம -15-18-
யோமா மேவமசம் மூடோ ஜா நாதி புருஷோத்தமம் ச சர்வவித் பஜதி மாம் சர்வ பாவோ பாரதி -15-19-
என்னை உள்ளபடி உணருபவன் யாவனோ அவனே சர்வவித் -என்பதை கொண்டே இந்த ஸ்லோஹார்த்தம்
சர்வம் கல்வவிதம் ப்ரஹ்ம –ஐ ததாத்ம்ய மிதம் சர்வம் –இத்யாதிகள் அந்தர்யாமி ப்ரஹ்மம் கொண்டே நிர்வஹிக்க வேண்டும்
யந்தா -நியாமாக –
சேஷீ -கைங்கர்ய பிரதி சம்பந்தீ
அவனே ஸ்ரீ யபதி -அசேஷ தநு -சகல ஜகத் சரீரகன்
நிதாநம் -ஜன்மாத் யதிகரண சித்தாந்தின் படி முழு முதல் கடவுள்
மற்றும் மோஷ பரதத்வம் இருப்பதால் -இத்யாதி லஷண கணை -என்று அருளிச் செய்கிறார்
ஆக இவற்றைக் கொண்டு தேவரீரை புருஷோத்தமனாக அறியப் படுபவன் கீதாச்சார்யனாலே சர்வவித் என்று கொண்டாடப் படுகிறான் என்று அருளிச் செய்கிறார் –

———————————–
விச்வம் சுபாஸ்ரய வதீச வபுஸ் த்வதீயம் சர்வா கிரஸ் த்வயி பதந்தி ததோசி சர்வ
சர்வே ச வேத விதயஸ் த்வத் அநு ஹார்த்தா சர்வாதிகஸ் த்வமதி தத்வ விதஸ் ததா ஹூ –9-

ஹே ஈச -விச்வம் சுபாஸ்ரயவத் த்வதீயம் வபுஸ் சர்வா கிரஸ் த்வயி பதந்தி தத் சர்வ அஸி
சர்வே ச வேத விதயஸ் த்வத் அநு ஹார்த்தா தத் த்வாம் சர்வாதிகஸ் த்வமதி தத்வ விதஸ் தஹூ –
வாராய் சர்வேஸ்வரனே -சகல பிரபஞ்சமும் திவ்ய மங்கள விக்ரஹம் போலே தேவரீருக்கு உறுப்பாகின்றது
சகல வாக்குகளும் -அபர்யவசாகையாலே சர்வரும் தேவரீரே யாகக் குறை இல்லை
இதர தேவதைகளை உத்தேசித்தவை போலே காணப்படும் வேத விதிகள் எல்லாம் தேவரீருடைய அனுக்ரஹத்தையே பலனாக கொண்டவை
ஆகையாலே தேவரீர் தான் சர்வோத்துங்கர் என்று ஞானிகள் கூறுகின்றனர் –
விக்ரஹம் தான் ஸ்வரூப ரூப குணங்களில் காட்டிலும் அத்யந்த அபிமதமாய் ஸ்வ அனுரூபமாய் நித்தியமாய் ஏக் ரூபமாய் சுத்த சத்வாகமாய்
சேதன தேஹம் போலே ஜ்ஞான மயமான ஸ்வரூபத்தை மறைக்கை யன்றிக்கே மாணிக்கச் செப்பிலே பொன்னை இட்டு வைத்தால் போலே இருக்க
பொன்னுருவமான திவ்ய ஆத்மா ஸ்வரூபத்துக்கு பிரகாசகமாய் நிரவதிக தேஜோ ரூபமாய் சௌகுமார்யாதிகல்யாண குணகண நிதியாய்
யோகித்யேயமாய் சகல ஜன மோகனமாய் சமஸ்த போக வைராக்ய ஜனகமாய் -நித்ய முக்த அனுபாவ்யமாய் –
வாசத் தடம் போல் சகல தாப ஹரமாய் அனந்த அவதார கந்தமாய் சர்வ ரஷகமாய் சர்வாஸ்ரயமாய் அஸ்த்ர பூஷண பூஷிதமாய் இருக்கும்
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய பிருத்வி சரீரம் —-வசசாம் வாச்யம் உத்தமம் —அஹம் ஹி சர்வ யஜ்ஞ்ஞானாம் போக்தா ச ப்ரபுரேவச –
தேபி மாமேவ கௌந்தேய யஜந்த்ய விதி பூர்வகம் —தேவரீருக்கே பரத்வம் பொருந்தும் –

———————————————————–

ஜ்ஞானம் பலம் நியமன ஷமதா வீர்யம் சக்திச் ச தேஜ இதி தே குண ஷட்க மாத்யம்
சர்வாதிசாயிநி ஹிமோ பவ நேச யஸ்மின் அந்தர்கதோ ஜகதிவ த்வயி சத் குனௌக –8-

ஹே ஹிமோ பவ நேசஜ்ஞானம் பலம் நியமன ஷமதா வீர்யம் சக்திச் ச தேஜ இதி தே குண ஷட்கம் தே ஆத்யம்
சர்வாதிசாயிநி யஸ்மின் சத் குனௌக த்வயி ஜகதிவ அந்தர்கதோ-

திருத் தண்காவிற்கு தலைவரான விளக்கொளி பெருமாளே ஞானம் பலம் ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் -ஜகத் எல்லாம்
தேவரீருக்கு உள்ளே அடங்கி இருப்பது போலே சகல கல்யாண குண சமூஹமும் சர்வ உத்ருஷ்டமான இந்த ஷட் குணங்களிலே அடங்கும் -‘
ஞானம் -சர்வ காலமும் உண்டான சர்வ பதார்த்த சாஷாத் காரம் –
சக்தி -உபய விபூதியும் அநாயாசேன வக்கக வல்ல மிடுக்கு
ஐஸ்வர்யம் -ஜகத்தை எல்லாம் குடைக்கு கீழே அமுக்கி ஆள வல்லவனாகை
வீர்யம் சாரீரமான கிலேசம் இன்றிக்கே இருக்கை
சக்தி -ஏறிட்டுக் கொண்ட கார்யம் தலைக்கட்ட வல்ல சாமர்த்தியம்
தேஜஸ் -சஹகாரி நிரபேஷமாக அல்ப பிரயத்னத்தாலே தலைக் கட்ட வல்ல மிடுக்கு –
——————————————————-

தீபாவ பாச தயயா விதிபூர்வ மேதத் விச்வம் விதாய நிகமாநபி தத்த வந்தம்
சிஷ்யாயிதா சரண யந்தி முமுஷவஸ் த்வாமத்யம் குரும் குருபரம் பரயாஅதிகம்யம் -9-

விளக்கொளி பெருமாளே பிரமன் முதலான இந்த பிரபஞ்சகத்தை கருணையினாலே படைத்து வேதங்களையும் தந்து அருளினவரும்
குரு பரம்பரையில் முதன்மை பெற்ற ஆசார்யருமான தேவரீரை சிஷ்யர்கள் போன்ற முமுஷூக்கள் அடைக்கலம் புகுகிறார்கள் –
யோ ப்ரஹ்மாணம் வித்யாதி பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை முமுஷைர் வை சரணமஹம் பிரபத்யே —
ஆசார்யாணாம் ஆசாவசா விதி ஆசவத்த —நமப்யாந்தம் குரும் வந்தே கமலாக்ருஹ மேதி நம் -லஷ்மி நாத சமாரப்யாம் -இத்யாதி –

—————————————————————

சத்தாஸ்திதி பிரயத்தன ப்ரமுகை ருபாதத்தம் ஸ்வார்த்தம் சதைவ பவதா ஸ்வயமேவ விஸ்வம்
தீப பிரகாச ததிஹ த்வத வாப்தயே த்வாமவ்யாஜ சித்த மனபாய முபாய மாஹு –10-

தேவரீராலே உலகில் உள்ள சேதன வர்க்கங்கள் எல்லாம் ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி முதலியவற்றால் ஸ்வயமேவ எப்பொழுதும்
ஸ்வ பிரயோஜனத்தின் பொருட்டே ஸ்வீகரிக்கப் பட்டனவாதலால் -இவ்வுலகில் தேவரீரை அடையும் பொருட்டே தேவரீரையே
வ்யாஜ நிரபேஷ நிர்பய உபாயமாக மஹாச்சார்யர்கள் அருளிச் செய்கிறார்கள் –

சரணாகதி பிரசுத்துதாம் கீழே -அதுவும் உபாயம் அன்றே -நிஜ கர்மாதி பக்த்யந்தம் குர்யாத் ப்ரீத்யைவ காரித
-உபாயதாம் பரித்யஜ்ய ந்யஸ்யேத் தேவே து தாம் -ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ ஸூ கத்தி கீதார்த்த சங்க்ரஹம்
உபாபத்தே சத்தா ஸ்திதி நியமனாத்யைச்–ஸ்வ முத்திசிய ஸ்ரீ மா நிதி வசதி வாக் ஒளபநிஷதீ –ஸ்ரீ பராசர பட்டர் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் உத்தர சதகம் –
சரணாகதியும் தன் பாக்கள் உபாயத்தை ஸஹிக்க மாட்டாது என்றபடி –

———————————————————-

போக்யம் முகுந்த குண பேதம சேதநேஷூ போக்த்ருத்வ மாத்மநி ஸூ நிவேஸ்ய நிஜேச்சயைவ
பாஞ்சாலிகா சுக விபூஷண போகதாயீ சம்ராடிவாத்ம சமவா ஸஹ மோதசே த்வம் –11-

தேவரீரே அசேதன வஸ்துக்களிலே போக்யத்வ ரூப குண விசேஷத்தையும் சேதனர்கள் இடத்திலே போக்த்ருத்வத்தையும் தேவரீரே
ஸ்வ இச்சையால் வைத்து மரப்பாச்சியையையும் –
பாஞ்சாலிகா –பதுமை / சுகம் -கிளி -/ மரப்பாச்சிக்கு சேலையை உடுத்தி களிப்பது என்றுமாம் –
கிளியையும் கொண்டு விளையாடும் அரசன் போலே தேவரீரும்
உமக்கு ஏற்கும் திரு தேவிமாரோடு கூடி விளையாடிக் களிக்கின்றீர்
ஸ்வா தந்தர்ய கந்த விரஹிதமான பாரதந்தர்ய வேஷம் -நிலா தென்றல் சந்தனம் குஸூமம் போலே –
செய்த்தலை எழு நாற்றுப் போலே அவன் செய்வன செய்து கொள்ள -வர்த்திக்க வேண்டுமே
ந்யாஸ சதக ஸ்தோத்ரம் – –ஸ்வாமீ ஸ்வ சேஷம் ஸ்வ வசம் ஸ்வ ஹரத்வேந நிர்ப்பரம் ஸ்வ உத்தேஸ்யயா ஸ்வார்த்தம் ஸ்வஸ்மின் ந்யஸ்யதி மாம் ஸ்வயம் –
ஸ்வ சப்தம் ஒன்பதின்கால் இட்டு அருளி வடி கட்டின சாஸ்த்ரார்த்தம்
போக்த்ருத்வம் எம்பெருமானுக்கே அல்லது நமக்கு அன்றே –

——————————————————————————-

த்வாம் மாதரம் ச பிதரம் ஸஹஜம் நிவாஸம் சந்தஸ் சமேத்ய சரணம் ஸூ ஹ்ருதம் கதிம் ச
நிஸ் ஸீம நித்ய நிரவத்ய ஸூக பிரகாசம் தீப பிரகாச ச விபூதி குணம் விசந்தி –12-

சத்துக்களானவர்கள் – மாதா பிதா பிராதா நிவாஸ ஸ்தான பூதர் ஸூ ஹ்ருத் உபாயம் உபேய பூதரான தேவரீரை -சரணம் புகுந்து
எல்லையற்ற குற்றம் அற்ற ஆனந்த பிரசுர விபூதிகள் உடனும் கல்யாண குணங்கள் உடன் கூடிய தேவரீரை அனுபவித்து களிக்கிறார்கள்

உபநிஷத் வாக்யத்தையே கொண்டு சாதிக்கிறார் -நிவாஸ வ்ருஷ சாதூனாம் -தாரை -புகல் அற்றாருக்கு புகல் இடம் –
கதி-கரணே–கர்மணி -வ்யுத்பத்திகளால் உபாயம் உபேயம் என்றபடி –

——————————————————

ஐந்தோ அமுஷ்ய ஜனனே விதி சம்பு த்ருஷ்டவ் ராகாதி நேவ ரஜசா தமஸா ச யோக
த்வைபாய ந ப்ரப்ருதயஸ் த்வத வேஷிதாநாம் சத்வம் விமுக்தி நியதம் பாவதீயு சந்தி –13-

அநாதி காலம் சம்சாரித்து வரும் இந்த பிராணி வர்க்கத்தினுடைய ஜனன காலத்திலேயே பிராமனோ சிவனோ பார்க்க நேர்ந்தால்
ரஜோ குணமும் தமோ குணமும் ரங்குகள் ஒட்டிக் கொள்வது போலே ஒட்டிக் கொள்ளும் -என்றும் -தேவரீர் கடாக்ஷிக்க நேர்ந்தால்
மோக்ஷ ப்ராபகமான சத்வகுணம் பொருந்தும் என்றும் வியாஸாதி முனிவர்கள் மொழிகின்றார்கள் –

ஜாயமானம் ஹி புருஷம் யம் பஸ்யேன் மதுஸூதந சாத்விகஸ் ச து விஜ்ஜேயஸ் ச வை மோஷார்த்த சிந்தக —
ராகாதிநேவ –வஸ்த்ரத்தில் நிறம் கழற்ற ஒண்ணாதாப் போலே அன்றோ ரஜஸ் தமஸ் லேபமும்-

———————————————

கர்ம ஸ்வநாதி விஷ மேஷூ சமோ தயாளு ஸ்வே நைவ கல்ப தமப தேசம வேஷ மாண
ஸ்வ ப்ராப்தயே தநுப்ருதாம் த்வ ரசே முகுந்த ஸ்வாபாவிகம் தவ ஸூ ஹ்ருத்த் வமிதம் ச்ருணந்தி –14-

வீடளிக்கும் பெருமானே -சாம்யா குணமும் தயா குணமும் பொருந்திய தேவரீர் நெடுநாளாகப் போருகிற விஷம கருமங்களின் இடையிலே
தேவரீராகவே கல்பித்து வைத்த தொரு வியாஜ்யத்தை பெற்றவாறே ஸ்வ ப்ராப்திக்கு விரைகின்றீர் –
இது தான் தேவரீருடைய இயற்கையான ஸூஹார்த்த குணம் என்கிறார்கள் –

கீழே -12-ஸ்லோகத்தில் -த்வாம் மாதரம் ச பிதரம் ஸஹஜம் நிவாஸம் சந்தஸ் சமேத்ய சரணம் ஸூ ஹ்ருதம் கதிம் ச -என்ற
ஸூஹார்த்த விவரணம் இதுவும் அடுத்த ஸ்லோகமும்
ஸூஹார்த்த குணத்தினால் சரணாகதனுக்கு ஆபி முக்கியத்தை விளைவித்து அருளுகிறார் -என்கிறது இஸ் ஸ்லோகத்தால் –
சோபனம் ஹ்ருத்யஸ்ய சஸூ ஹ்ருத் -வ்யுத்பத்தி –விமுகர்களையும் வாரிப் பிடியாக பிடிக்க வேண்டி –
என்னூரைச் சொன்னாய் என் பேரைச் சொன்னாய் என் அடியார்களை நோக்கினாய் -அவர்கள் விடையை தீர்த்தாய் -அவர்கள் ஒதுங்க நிழல் கொடுத்தாய் –
சேதன லாபமே ஈஸ்வரனுக்கு புருஷார்த்தம் –இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே –
-சமோஹம் சர்வ பூதேஷூ ந மே த்வேஷ் யோஸ்தி ந ப்ரிய -ஸ்ரீ கீதா ஸ்லோகம் –சம -ஆசிரயணீயத்வே சம என்றவாறு –

————————————

நித்ராயிதான் நிகம வர்த்மநி சாரு தர்சீ பிரஸ்தாநா சக்தி ரஹிதான் பிரதிபோத்ய ஐந்தூன்
ஜீரணஸ்த நந்தய ஜடாந்தமுகாநி வாஸ்மான் நேதும் முகுந்த யதசே தயயா ஸஹ த்வம் —15-

எம்பெருமானே கருணையுடன் தீமைகளில் கண் செலுத்தாமல் நன்மைகளையே கடாக்ஷித்து அருளா நின்றேர் தேவரீர் –
நித்ராயிதான் நிகம வர்த்மநி – வேத மார்க்கத்தில் கண் செலுத்தாதவர்களும்-
பிரஸ்தாநா சக்தி ரஹிதான்-ஸ்வல்ப ஞானம் உண்டானாலும் ஆச்ரயிக்க சக்தி அற்றவர்கள் என்றபடி –
இப்படி பயணம் செய்ய சக்தி அற்றவர்களுமான அஸ்மாதாதிகளைத் தட்டி எழுப்பி
கிழவர் சிறுவர் மூடர் குருடர் முதலான பிராணிகளை போலே-சர்வாத்மனா பராதீன ப்ரவ்ருத்தர்கள் – நல் வழிப் படுத்த முயலா நின்றீர்
கிமேதத்–நிர்த்தோஷ க இஹ ஜகதி –இத்யாதி பிராட்டி செய்து அருளும் உபதேசங்கள் –மணல் சோற்றில் கல் ஆராயத் தகாதே
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயம்மி பரமாம் கதம் -என்னும் ஸ்ரீ வராஹ ஸ்லோகத்தில் நிக்காகாக -நேதும் முகுந்த யதசே -என்கிறார் –

——————————————–

பக்தி ப்ரபத்திரதவா பகவன் ததுக்திஸ் தன்னிஷ்ட ஸம்ஸரய இதீவ விகல்ப்யமாநம்
யத் கிஞ்சி தேகமுப பாதயதா த்வ யைவ த்ராதாஸ் தாந்த்ய அவஸரே பவிநோ பவாப்திம் –16-

பக்தியோ சரணாகதியோ -சரணம் என்கிற உக்தியோ இவை யுடையாரை அடி பணிதலோ இப்படியாக விகல்பிக்கப்படும் அவற்றுள்
ஏதேனும் ஒன்றை உள்ளதாகக் கொள்ளுகிற தேவரீராலேயே ரக்ஷிக்கப் படுகின்ற சம்சாரிகள் மைய விசேஷத்திலே பிறவிக் கடலைக் கடக்கின்றார்கள் –

பக்தோஸ்மி சரணாகதோஸ்மி -யுக்தி மாத்திரம் என்றும் இவையுடைய உத்தம அதிகாரியை ஆஸ்ரயித்தல் -இவற்றில் ஏதேனும் ஒன்றை
தானே கல்பித்துக் கொண்டு சம்சாரிகளை காத்து அருளுகிறான் —
அவஸரே-என்றது தேக அவசான ஸமயே அல்லது கர்ம அவசான ஸமயே -என்றபடி –

—————————————————

நாநா விதைரக படை ரஜஹத் ஸ்வபாவை அப்ராக்ருதைர் நிஜ விஹார வசேந சித்தை
ஆத்மீயா க்ஷணவிபஷவிநாச நார்த்தை ஸம்ஸ்தா பயஸ்யநக ஜன்மபிராத்ய தர்மம் –17-

யநக-அகில ஹேய ப்ரத்ய நீகரான பெருமாளே -தேவ மனுஷ்யாதி சஜாதீயத்வேந பலவகைப் பட்டவர்களும் கர்ம மூலகம் அல்லாதவர்களும்
ஸ்வ ஸ்வபாவத்தை விடாதவைகளும் அப்ராக்ருதங்களும் சிஷ்ட பரிபாலன துஷ்ட சிக்ஷணார்த்தங்களுமான
திருவவதாரங்களினால் சனாதன தர்மத்தை ஸ்தாபித்து அருளா நின்றீர்

அவதாரங்களை ஆறு விசேஷணங்கள் இட்டு அருளிச் செய்கிறார் -அகபடை-சாதியை -என்றபடி
-இந்திர ஜாலாதிவத் மித்த்யா என்னும்வர்களை நிரசிக்கிறது -அஜஹத் ஸ்வ பாவை -ப்ரக்ருதிம் ஸ்வா மதிஷ்டாய –
-ஆதி யஞ்சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த –அங்கு உள்ளபடியே அமைத்துக் கொண்டு என்றபடி –
பல மாய மயக்குகளால் இன்புறும் இவ்விளையாட்டு யுடையவன் –
பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம சமஸ்தான நார்த்தாயா சம்பவாமி யுகே யுகே –என்பதுவே உத்தரார்த்தம் –

——————————-

நிம் நோந் நதாநி நிகிலாநி பதாநி காடம் மஜ் ஜந்தி தே மஹிம சாகர சீகரேஷூ
நீரந்தர மாச்ரயசி நீசஜநாந் ததாபி ஸீலேந ஹந்த சிசிரோ பவநேஸ்வர த்வம் –18-

தேவரீருடைய பெருமைக்கு கடலின் திவலைகளிலே அளவு கடந்த நீச ஸ்வ பாவத்தை யுடைய சகல ஸ்தானங்களும் மூழ்கிப் போகின்றன
என்னும் படியாக அவ்வளவு பெருமை பெற்றவராய் இருக்கச் செய்தேயும் தேவரீர் சீல குணத்தினால் தாழ்ந்தவர்களோடும் புரையறக் கலந்து பரிமாறுகின்றீர் –

மஹதோ மந்தைஸ் ஸஹ நீரந்த்ரேண சம்ச்லேஷ –சீலம் -ப்ரஹ்ம ருத்ராதிகள் பெருமைகள் எல்லாம் உனது பெருமைக் கடலில் திவலைக்குள் அடங்கும்
தத்வேந யஸ்ய மஹிமார்ணவ சீகர அணுச் சக்யோ ந மாதுமபி சர்வ பிதா மஹாதியை –ஸ்தோத்ர ரத்னம்
ப்ரஹ்ம ருத்ர வருண யமாதிகளில் பரஸ்பர ஏற்றது தாழ்வுகளைக் கருதி -நிம் நோந் நதாநி-என்கிறார்
அப்படிப்பட்ட தேவரீர் -நிஷாசர நாம் காபி குலபதி காபி சபரி குசேல குப்ஜா சா வ்ரஜ யுவதயோ மால்யக் ருஷிதி –என்று
ஒரு கோவையாக எடுத்து ஒத்தப் பட்டவர்களோடு புரையறக் கலந்து பரிமாறுவது சீலத்தினால் அன்றோ –

—————————————–

காசீ வ்ருக அந்தக சராசன பாண கங்கா சம்பூதி நாம க்ருதி சம்வதநாத்ய உதன்சத்
ஸ்வோக்தி அம்பரீஷபய சாப முகைச் ச சம்பும் த்வன் நிக்னமீஷீ தாவதாமிஹ ந சரண்ய—19-

காசீ வ்ருத்தாந்தம் –வருகாசூரன் கதை -அந்தகாசுரன் கதை -தனுசின் கதை –பாணாசுரனுடைய சரிதை -கங்கையின் வரலாறு -சிவனுடைய பிறப்பு
-தன்மைக்கு ஏற்ற நாமம் இடுதல் -பலரோடு சம்வாதம் -ஆகிய இவை முதலான வ்ருத்தாந்தங்களினாலும் -சிவன் தானே சொல்லி இருந்தது
-அம்பரீஷனிடத்தில் உண்டான பயம் சாபம் முதலானவைகளாலும் சிவனைத் தேவரீருக்கு அதீனனாக நன்கு
உணர்ந்தவர்களுக்கு இவ்வுலகில் தேவரீரைக் காட்டிலும் வேறு யார் உளர் –

காய் சினத்த காசி மன்னன் வக்கரன் பவுண்டிரன்–என்றும்
-முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி யங்கி யோடிடக் கண்டு நாணி வாணனுக்கு இரங்கின எம் மாயோனே -என்றும்
குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து –காரை கொண்ட கண்டத்தால் சென்னி மேல் என்றக் கழுவினான் அண்டத்தான் சேவடியை யாங்கு –என்றும்
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான் முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் -என்றும்-
ஸ்வோக்தி -ஸ்ரீ ராம ராமேதி ரமே ராமே மநோ ரமே சஹஸ்ர நாம தத் துல்யம் ராம நாம வரானனே –
பிண்டியார் மண்டை ஏந்தி பிறர் மனை திரிந்து உண்ணும் முண்டியான் சாபம் –
ஆதி -சப்தத்தால் பிரளயத்தில் எம்பெருமான் திரு வயிற்றினுள் புகுந்து ரக்ஷை பெற்றது போன்றவை –
கண்ணால் அல்லால் இல்லை கண்டீர் சரண் என்று அறுதி இடுவதில் தட்டுண்டோ –

——————————————-

க்வாசவ் விபு க்வ வயமித்யுப சத்தி பீதான் ஐந்தூன் க்ஷணாத் த்வத் அநு வ்ருத்தி ஷூ யோக்ய யந்தீ
ஸம்ப்ராப்த சத்குருதநோ ஸமயே தயாளோர் ஆத்மாவதிர் பவதி ஸம்ஸ்க்ருதி ரீ க்ஷணம் தே –20-

மஹா ப்ரபுவான சர்வேஸ்வரன் எங்கே நாம் எங்கே -என்கிற நைச்ய பாவத்தால் அணுகுவதற்கு அஞ்சும் பிராணிகளை உன்னை அநுவர்த்திப்பதில்
ஒரு நொடிப் பொழுதில் யோக்கியர்கள் ஆக்குகின்றதாய் -சமயத்தில் ஆச்சார்ய வேஷத்தை பரிக்ரஹிக்கின்ற தயாளுவான உன்னுடைய
கடாக்ஷம் ஆகிற ஸம்ஸ்காரமானது ஆத்மா உள்ளதனையும் பேராததாய் இருக்கின்றது –

பீதகவாடைப் பிரானார் பிரம குருவாக வந்து –அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் யான் யார் -என்று அஞ்சுவாருக்கு
நிக்ரஹ அனுக்ரஹ சாதாரணமான ஆகாரத்தை விட்டு அனுக்ரஹ ஏக தீஷையுடன் கடாக்ஷித்து அருளுவது
யாவதாத்மா பாவி நன்மையைப் பயக்குமதாய் தலைக் காட்டும் என்றபடி –

———————————————————

யோக்யம் யமைச் ச நியமைச் ச விதாய சித்தம் சந்தோ ஜிதஆநைதயா ஸ்வ வஸ அஸூவர்க்கா
ப்ரத்யாஹ்ருத இந்திரிய கணா ஸ்திர தாரணாஸ் த்வாம் த்யாத்வா சமாதியுக லேந விலோகயந்தி —21-

சில ப்ரஹ்ம வித்துக்கள் யம நியமனாதி களால் அந்த கரணத்தை சமாதி யோக்யமாகச் செய்து கொண்டு ஸ்வஸ்திகம் முதலான ஆசன பேதங்களை
வசப்படுத்தி இருக்கும் தன்மையினால் பிராணாதி வாயு வர்க்கங்களை ஸ்வ அதீனமாகக் கொண்டவர்களாய் -இந்திரியங்களை அடக்கி ஆள்பவர்களாய்
-ஸ்திரமான தாரணையை யுடையவர்களாயும் இருந்து கொண்டு உன்னைத் சிந்தை செய்து
லா லம்பனம் நிராலம்பனம் என்று இருவகைப் பட்ட சமாதியினாலும் உன்னைக் காண்கிறார்கள் –

இது முதல் மூன்று ஸ்லோகன்களால் யோக அனுஷ்டான சாஷாத்காரம் -இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன்னிமையைக் கூட்டி
அளப்பில் ஐம் புலனை அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு
ஆங்கே விளக்கினை விதியில் காண்பார் மெய்ம்மையே காண்கிற்பாரே-
யமம் -அஹிம்சை அஸ்தேயம் சத்யம் போல்வன / நியமம் -தபஸ்ஸூ ஸந்தோஷம் ஆஸ்திக்யம் போல்வன -/
ஆசனம்-ஸ்வஸ்திகம் -கோமுகம் -பத்மம் வீரம் ஸிம்ஹாஸனம் -போல்வன
திவ்ய மங்கள விக்ரஹத்தை குறிக் கொள்வது சாலம்பனம் -தத் வியதிரிக்தம் நிராலம்பனம் -சா லம்பன ஸமாதியே ஸ்வரூப அநு ரூபம்
சா லம்பநேந பரிச்சிந்திய ந யாந்தி திருப்தம் –என்று இத்தை மேலே -22-ஸ்லோகத்தில் அருளிச் செய்வார் –

—————————————–

பத்மாபிராம வதந ஈஷண பாணி பாதாம் திவ்யாயுத ஆபரண மால்ய விலேபநம் த்வாம்
யோகேன நாத சுபம் ஆஸ்ரயம் ஆத்மவந்த சாலம்ப நேந பரிச்சிந்திய ந யாந்தி த்ருபதம்—-22-

தூய மனத்தரான பரமை காந்திகள் -தாமரை போல் அழகிய திரு முகம் திருக் கண்கள் திருக் கை திருவடி ஆகிய இவற்றை யுடையவனும்
திவ்யாயுதங்கள் திவ்ய பாஷாணங்கள் வைஜயந்தி கஸ்தூரிப் பூச்சு ஆகிய இவற்றை யுடையவனுமான உன்னை
சா லம்பன யோகத்தால் திவ்ய மங்கள விக்ரஹ த்யானம் செய்து திருப்தி அடைவார் இல்லை –

சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும் செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே —
மின்னு நூல் குண்டலமும் மார்வில் திரு மறுவும் மன்னு பூணும் நான்கு தோளும் வந்து எங்கும் நின்றுடுமே
வென்றி வில்லும் தாண்டும் வாளும் சக்கரமும் நின்று தோன்றி கண்ணுள் நீங்காது என் நெஞ்சுள்ளும் நீங்காவே –இத்யாதிகளை அனுசந்திப்பது –

——————————————————

மாநாதி லங்கி ஸூக போத மஹாம் புராஸவ் மக்நாஸ் த்ரிஸீ மரஹிதே பவதஸ் ஸ்வரூப
தாபத்ர யேண விஹதிம் ந பஜந்தி பூய சந்த சம்சார கர்மஜ நிதேந சமாதி மந்த –23-

கால தேச வஸ்து -த்ரிவித பரிச்சேதங்கள் -அற்றதான உன்னுடைய ஸ்வரூபம் ஆகிற அப்ரமேய ஆனந்த சாகரத்தில் மூழ்கி நின்ற யோகிகள்
மீண்டும் சம்சார வெக்காயத்தினால் உண்டாகும் தாப த்ரயத்தினால் துயரை அடைய மாட்டார்கள் –

கேவல ஸ்வரூப -நிராலம்பனம் -த்யானம் -சமாதி நிஷ்டர்களுக்கு சம்சார கிலேசங்கள் போனாலும்
பேரின்ப வெள்ளத்தில் ஆழம் கால் படுக்கை சொல்லப் போகாதே –

———————————————-

தீ ஸம்ஸ்க்ருதான் விதததாமிஹ கர்ம பேதான் சுத்தம் ஜிதே மனசி சிந்தயதாம் ஸ்வமேகம்
த்வத் கர்ம சக்த மனசாமபி சாபரேஷாம் ஸூதே பலான்யஹி அபிமதாநி தவான் பிரசன்ன –24–

ஞான யோக சஹ்ருதங்களான கர்ம யோக வகைகளை இங்குச் செய்பவர்களுக்கும் வெற்றி யுற்ற மனத்தில் பரம பவித்ரனான தன்னையே சிந்திப்பவர்களுக்கும்
அநுஞ்ஞா கைங்கர்ய நிஷ்டர்களுக்கும் ஆஞ்ஞா கைங்கர்ய நிஷ்டர்களுக்கும் நீ ப்ரஸன்னனாகி அபிமத பலன்களை அளிக்கின்றாய் —

கர்ம ஞான பக்தி யோக நிஷ்டர்களை சொல்லி – சுத்தம் ஜிதே மனசி சிந்தயதாம் ஸ்வமேகம் -என்று கைவல்ய நிஷ்டர்களை சொல்லி –
த்வத் கர்ம சக்த மனசாமபி-த்வத் கைங்கர்ய ஏக சக்தானாம் -என்றபடி -இளைய பெருமாளை போலே அத்தாணிச் சேவகத்தையே
நித்ய நைமித்திகாதி சகல அனுஷ்டானமாக செய்து கொண்டு இருக்கும் அநுஞ்ஞா கைங்கர்ய நிஷ்டர்களை சொல்லி –
இவர்களையே ஞானி –தன்னுடைய ஆத்மா -என்று உத்தம அதிகாரியாக தான் கொண்ட மே மதம் என்று அருளிச் செய்தான் –
பகவான் முக உல்லாசாமே பிரயோஜனமாக இருப்பவர்கள்
இதற்கு மேல் அபரேஷம்-என்று ஆஞ்ஞா கைங்கர்ய நிஷ்டர்களை சொல்லி -நித்ய நைமித்திக கர்ம நிஷ்டர்கள் –
இப்படி நான்கு வகைப்பட்ட அதிகாரிகளை சொல்லி அவ்வோ அதிகாரிகளுக்கு அபிமதமான
பலன்களை எம்பெருமான் தானே கொடுத்து அருளும் படியை அருளிச் செய்கிறார் –

——————————————————————————————-

உத்பாஹு பாவம் அபஹாய யதைவ கர்வ பிராம்சும் ஹலம் சமபியாசதி யோகி சிந்தியே
ஏவம் ஸூ துஷ்கரம் உபாய கணம் விஹாய ஸ்தாநே நிவேசயதி தஸ்ய விசாஷனஸ் த்வாம் –25-

யோகிகளால் சிந்திக்காத தக்க பெருமானே –குள்ளனானவன் உயரத்தில் உள்ள பலத்தை பெறுவதற்கு தனது கையைத் தூக்காமல்
உன்னத புருஷனை நோக்கி வேண்டுவது போலே சமர்த்தனான பிரபன்ன அதிகாரி யானவன் மிகவும் செயற்கு அரிதான
உபாயங்களை விட்டு அந்த உபாயாந்தர ஸ்தானத்தில் உன்னை வைக்கின்றான் -நீயே பேற்றை தந்து அருளுவாய் -என்பதே மர்மம் –
எம்பெருமான் எந்த ஸ்தானத்திலும் நிற்பதற்குப் புஷ்கல சக்தி உக்தன் -என்றவாறு –

———————————————————————

நித்யாலச அர்ஹம் அபயம் நிரபேஷம் அந்யை விசுவாதிகாரம் அகில அபிமத ப்ராஸூதிம்
சிஷா விசேஷ ஸூலபம் வ்யவசாய சித்தா சத்குர்வதே த்வயி முகுந்த ஷடங்க யோகம் –26-

முகுந்தனே சர்வ பிரகாரத்தாலும் அசக்தர்களுக்கே உரியதாய் -நிரபாயமாய் இதர நிரபேஷமாய் சர்வாதிகாரமாய் சர்வ அபீஷ்ட பல பிரதமாய்
ஆச்சார்ய உபதேச ஸூலபமான ஷடங்க யோகத்தைத் திடமான அத்யவசமாய் உள்ளவர்கள் உன் பக்கலிலே ஸத்கார ரூபமாக பிரயோகிக்கின்றார்கள் –

சோம்பல் உள்ளவன் -அலச -வாழும் சோம்பர் -காம்பற தலை சிரைத்து உன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பரை உகத்தி போலும் –
கர்ம யோகாதிகளை நாஸ்திகத்தாலே விடுபவர் கெடும் சோம்பர் -ஸ்வரூப யாதாம்யா ஞானத்தால் அவன் கையையே எதிர்பார்த்து இருக்கும்
அவர்கள் வாழும் சோம்பர் -அவர்களையே நித்யாலச சப்த விவஷித்தர்கள்
வ்யவசாய சித்தா-உயிர்நிலையான ஸ்ரீ ஸூ க்திகள் -வ்யவசாயம் இல்லாதவனுக்கு இதில் அன்வயம் ஆமத்தில் போஜனம் போலே –
சேதன சகாயம் வேண்டாம் என்பதாலே நிரபாயம் -நிரபேஷம் அந்யை -உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் –
சத்யம் சொல்லலும் அதிகாரம் போலே இதுவும் சர்வ அதிகாரம் -விஸ்வ அதிகாரம் –
சிஷா விசேஷ ஸூலபம்-சதாச்சார்ய சேவையில் பழுத்தவர்களுக்கு ஒழிய மற்றையோர்க்கு அரிது –
அடுத்த ஸ்லோகம் அஷ்டாங்க யோக விளக்கம் –

————————————————————

த்வத் பிராதி கூல்ய விமுகா ஸ்புரத் ஆனு கூல்யா க்ருத்வா புன க்ருபணதாம் விகத அதி சங்கா
ஸ்வாமின் தவ ஸ்வயம் உபாய இதீர யந்த திவ்ய அர்ப்பயந்தி நிஜ பாரம் அபார சக்தவ் –27-

எம்பெருமானே பிராதி கூல்ய வர்ஜனமும் ஆனு கூல்ய சங்கல்பமும் உடையவர்களாய் ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டு அதி சங்கை தவிர்ந்து
விசுவாச யுக்தர்களாய் -நீயே உபாயம் ஆக வேணும் -என்று சொல்லா நிற்பவர்களாய் -அளவுகடந்த சக்தியை யுடைய உன்னிடத்திலேயே
பரமை காந்திகள் தங்கள் பாரத்தை அர்ப்பணம் செய்கிறார்கள் –

கீழே சொன்ன ஷடங்க யோகம் -ஆனு கூலஸ்ய சங்கல்பம் பிராதி கூலஸ்ய வர்ஜனம் ரஷிஷ்ய தீதி விச்வாசோ கோப்த்ருத்வ வரணம் ததா
-ஆத்ம நிஷேப்ய கார்ப்பண்யே-ஷடவிதா சரணாகதி – க்ருபணதாம் க்ருத்வா –ஆகிஞ்சன்ய அனுசந்தானம் பண்ணி என்றபடி –
அபார சக்தவ் –சரணாகதி தான் சர்வாதிகாரம் ஆகையால் ஸ்வ ரக்ஷண பரத்தை உலகம் எல்லாம் தன்னிடம்
ஸமர்ப்பித்தாலும் ஏற்றுக் கொண்டு செய்து முடிக்க வல்லமை -சர்வ சக்தித்வம் சொல்லிற்று –

——————————————————————–

அர்த்தாந்தரேஷூ விமுகான் அதிகார ஹாநே ஸ்ரத்தா அதிகான் த்வத் அநு பூதி விலம்ப பீதான்
தீப பிரகாச லபஸே ஸூ ஸிராத் க்ருதீவ ந்யஸ்தாத்மநஸ் தவ பதே நிப்ருதான் ப்ரபந்நான் —28-

கர்ம ஞான பகுதிகள் ஆகிற உபாயாந்தரங்கள் ஸ்வ அதிகார விருத்தங்கள் என்பதால் இவற்றில் அன்வயம் இல்லாதவர்களும்
மஹா விசுவாச யுக்தர்களும் உன்னை அனுபவிப்பதில் கால தாமதம் பொறாதவர்களும் -பேற்றிலே கண் வைத்தவர்களும்
உன் திருவடிகளில் ஆத்ம சமர்ப்பணம் செய்தவர்களுமான ப்ரபன்னர்களை க்ருதக்ருத்யன் போலே நீ நெடு நாள் இழந்து இருந்து பெறுகின்றாய்-
வாஸூ தேவஸ் ஸர்வமிதி ச மஹாத்மா ஸூதுர்லப-என்று இழவு தோற்ற பேசினான் அன்றோ
க்ருதக்ருத்யஸ் ததா ராமோ விஜ்வர ப்ரமுமோதஹ -என்றான் இ றே ரிஷியும்
மஹா விசுவாசத்தை ஸ்ரத்தை என்கிறதுபேற்றிலே சம்சயம் இன்றி மார்விலே கை வைத்து உறங்குமவர்கள் –
த்வத் அநு பூதி விலம்ப பீதான் –தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -என்றும்
எனை நாள் வந்து கூடுவன் யான் -என்றும் பதறுமவர்கள் அன்றோ –
கீழே -14-ஸ்லோகத்தில் பதறுபவனும் அவனே என்றதே -இத்தலை த்வரிப்பது கார்யகரம் ஆகாது -சைதன்ய அதிகாரி லக்ஷணம் என்றபடி –
லபஸே ஸூ ஸிராத் க்ருதீவ –நெடும் காலம் தவம் கிடந்து பெறாதே இழவோடே கிடந்து இப்போதாகப் பெறுகிறாய் என்றபடி –

————————————————-

மந்தரைர் அநு ச்ரவ முகேஷூ அதிகம்ய மாநை ஸ்வ அதிக்ரியா சமுசிதைர் யதிவா அன்யவாஸ்யை
நாத த்வதீய சரணவ் சரணம் சதானாம் நைவ அவாப்யா அயதாயுத கலாபி அபரை ரைவ வாப்யா–29-

வேதம் முதலியவற்றால் ஓதப்படுகிற மந்த்ரங்களினானாலோ ஸ்வ அதிகார அநு ரூபமான ஆழ்வார் ஆச்சார்யர்களின் ஸ்ரீ ஸூ க்திகளாலே
தேவரீருடைய திருவடிகளை சரணம் புகுந்தவர்களுக்கு உள்ள பெருமையில் லக்ஷத்தில் ஏகதேசமும் இதரர்கள் -உபாசககர்களால் அடைய முடியாததே –

வேத யுக்தமான மந்த்ர ரத்னம் த்வயம் -கொண்டோ -பிதரம் மாதரம் தாரான் புத்ரான்–லோக விக்ராந்த சரணவ் சரணம் தேவ்ரஜம் விபோ
-புராண வசனங்களைக் கொண்டோ –புகல் ஓன்று இல்லா அடியேன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே
-அகிஞ்சனோ அநந்ய கதிச் சரண்ய த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே –இத்யாதி ஸ்ரீ ஸூ க்திகளைக் கொண்டோ
சரணம் புகுந்த சிரேஷ்ட அதிகாரிகள் பெருமையில் ஏக தேசமும் உபாசகர்களால் பெற முடியாதே –

————————————————

தத்தா ப்ரஜா ஜனகவத் தேவ தேசிகேந்தரை பத்யா அபி நந்த்ய பவதா பரிணீயமாநா
மத்யே சதாம் மஹிதபோக விசேஷ ஸித்த்யை மங்கள்ய ஸூத்ரமிவ பிப்ரதி கிங்கரத்வம் –30-

தகப்பனார் கன்யகாதானம் பண்ணுமா போலே ஆச்சார்யர்களால் உனக்கு கொடுக்கப் பட்டு விஸ்வபதியான உன்னாலே உகந்து
ஏற்றுக் கொள்ளப் படுபவர்களான ப்ரபந்ந சந்தானங்கள் அந்தமில் பேரின்பம் ஆகிற நலமந்தம் இல்லாதோர் நாட்டில் அனுபவம் சித்திப்பதற்காக
இடையில் உள்ள காலத்திலே பாகவத பரிசர்யையை மங்கள ஸூ த்ரம் போல் வகிக்கின்றார்கள்

ஆத்மவிவாஹமே எம்பெருமான் பேறு-ஸ்த்ரீ பிராயம் இதரம் ஜகத் – தஞ்சமாகிய தந்தை ஆச்சார்யன் -கன்னிகா தானம் செய்ய –
நீ இந்த மண்ணகத்தே திருத்தி திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின்பு -பதிம் விஸ்வஸ்ய-பண வாள் அரவணைப் பல் பல காலமும் பள்ளி கொள் மணவாளர் —
கௌசல்யா லோக பார்த்தாராம் ஸூஷூவே உம மனஸ்விநீ-பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின் -உகந்து பரிணயம் செய்து கொண்ட பின்
பிராப்தி அளவும் நடு உள்ள நாளில் பாகவத கைங்கர்ய விசேஷங்களில் போது போக்குவதுதான் ஸுமங்கல்ய லக்ஷணம் -என்றதாயிற்று –

———————————————————————————

திவ்யே பதே நியத கிங்கரதா ஆதி ராஜ்யம் ப்ராப்தும் த்வதீய தயயா விஹித அபிஷேகா
ஆதேஹ பாதமநகா பரிசர்யயா தே யுஜ்ஜான சிந்த்ய யுவராஜ பதம் பஜந்தி –31-

யோகிகளால் சிந்திக்கத் தக்க பெருமானே -நித்ய விபூதியில் ஸ்வாமி கைங்கர்ய பட்டாபிஷேகத்தை பெறுவதற்காக
உனது திருவருளால் அபிஷேகம் செய்யப் பெற்ற பரமை காந்திகள் தேஹ அவசானத்து அளவும்
உனக்குத் தொண்டு பூண்டு யுவராஜ பதவியை வஹிக்கிறார்கள் -புருஷார்த்தம் அங்கும் இங்கும் துல்யம் -என்றதாயிற்று –

——————————————————–

த்வாம் பாஞ்ச ராத்ரிகந யேந ப்ருதக் விதேந வைகாநஸேந ச பதா நியதாதிகாரா
சம்ஜ்ஞா விசேஷ நியமேன சமர்ச்ச யந்த ப்ரீத்யா நயந்தி பலவந்தி திநாநி தன்யா –32-

வெவ்வேறு வகைப் பட்ட பாஞ்ச ராத்ர மார்க்கத்தாலும் வைகானச மார்க்கத்தாலும் அதிகார நியதி யுள்ளவர்கள்
வாஸூ தேவாதி சம்ஜ்ஞா விசேஷ நியமத்தோடு உன்னை பக்தியோடு திருவாராதனம் செய்து ஸூ க்ருதிகளாய்க் காலத்தை சபலமாகக் கழிக்கிறார்கள்–

விளக்கொளி சந்நிதியில் வைகானச க்ரமம் / ப்ருதக் விதேந-பாத்மம் -பாரமேஸ்வரம் -பரமம் -கபிஞ்சலம் -போன்ற சம்ஹிதா பேதங்கள் /
மந்த்ர சித்தாந்தம் -ஆகம சித்தாந்தம் -தந்த்ர சித்தாந்தம் -போன்ற பேதங்கள் -/ அத்திரி படலம் -மரீசி படலம் -பிருகு படலம் -போன்ற பேதங்கள் என்றவாறு
நியத அதிகார –ஆகம நியதி கொண்ட படி /பாஞ்ச ராத்ரத்தில் வாசுதேவ சங்கர்ஷணாதி சம்ஜ்ஞாதி பேதம் போலே –
வைகாநஸத்திலும் விஷ்ணு புருஷ ஸத்ய அச்சித்தாதி சம்ஜ் ஞாதி பேதங்கள் உள்ளனவாகச் சொல்லுகிறார்கள் –
இங்கனம் திருவாராதனம் செய்ய வல்ல பாக்கியசாலிகள் காலத்தை பழுதாகாமல் சபலமாக்கி வருகிறார்கள் என்றவாறு –

————————————————

வர்ணாஸ்ரமாதி நியமஸ்திர ஸூத்ர பத்தா பக்த்யா யதார்ஹ விநிவேசித பத்ர புஷ்பா
மாலேவ கால விஹிதா ஹ்ருத யங்கமா த்வாம் ஆமோத யத்ய நுபராக தியாம் சபர்யா –33-

ஸ்ரீ பகவத் ஆஞ்ஞயா பகவத் கைங்கர்ய ரூபம் -மாலையாக வைத்து -வர்ணாஸ்ரமாதி நியமங்கள் ஆகிற கெட்டியான நூலிலே கட்டப் பட்டதும்
ஸூத்ரங்களுக்கு கட்டுப் பட்டதும் பக்தியோடு கூட தகுந்தபடி சேர்க்கப் பட்ட பத்ர புஷ்ப்பங்களை யுடையதும்
பத்ரம் புஷ்ப்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா பிரயச்சத்தி -பத்ரம் -திருத் துழாய் தளம்
காலத்தில் செய்யப்பட்டதும்–வசந்தாதி காலம் மாலைக்கு பஞ்ச கால பராயணர்கள் காலம் தவறாமல் செய்வார்கள் -என்றபடி
ஹ்ருதயங்கா -திருமாலை திரு மார்பின் சம்பந்தம் -பிரமை காந்திகள் ஹிருதய பூர்ணமாக உகந்து பணி செய்வார்கள் –
அழகியதுமான மாலை போன்று உள்ளதுமான விரக்தர்களின் திருவாராதனம் உன்னை உகப்பிக்கின்றது –
ஆமோதயதி-பரிமளத்துக்கும் சந்தோஷத்துக்கும் -மாலைக்கும் சபர்யைக்கும் இணங்கிய கிரியா பதம் –

————————————————

ப்ரஹ்மா கிரீச இதரேப்யமரா ய ஏதே நிர்த்தூய தான் நிரய துல்ய பல ப்ரஸூதீன்
ப்ராப்தும் தவைவ பத பத்ம யுகம் ப்ரதீதா பாதி வ்ரதீம் த்வயி பஜந்தி பராவாஜ்ஞா –34-

பாக்யதார்களான பரமை காந்திகள் பிரமனும் சிவனும் மற்றும் இந்த்ராதிகளுமாக எந்த தேவர்கள் வேதங்களில் ஓதப் பட்டு இருக்கின்றார்களோ
அவர்கள் எல்லாம் கால பர்யாயமான பலன்களை கொடுப்பவர்கள் என்று அவர்களை விட்டு ஒழிந்து
எம்பெருமானே உன்னுடைய திருவடி இணையையே அடைவதற்கு உன்னிடத்தில் கற்பு நிலையை எய்துகின்றனர்
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருபத்தொரு மங்கள ஸூ த்ரம் போலே திருமந்திரம் –
கண்டார்கள் இகழ்கனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல்
ஏதே வை நிரயாஸ் தாத ஸ்தாநஸ்ய பரமாத்மனே -ஸ்ருதி
பராவாஜ்ஞா-இன்னது பரம் இன்னது அவரம் என்று பகுத்து அறிய வல்லவர்கள் -தஸ்மிந் த்ருஷ்டே பராவரே —
பர் அவரே யஸ்மாத் ச பராபர -வ்யுத்பத்தி -பர் -மேம்பட்டவர்கள் என்று சொல்லப் பட்டவர்களும் -யஸ்மாத் அவரே -எம்பெருமானை பார்க்கில் தண்ணியர்களே-என்றவாறு –

————————————————————————–

நாத த்வதிஷ்ட விநியோக விசேஷ சித்தம் சேஷத்வ சார மநபேஷ்ய நிஜம் குணஜ்ஞா
பக்தேஷூ தே வர குணார்ணவ பாரதந்தர்யாத் தாஸ்யம் பஜந்தி விபணி வ்யவஹார யோக்யம் –35-

எம்பெருமானே சிறந்த குணக் கடலே ஸ்வரூபஞ்ஞர்களான பரமைகாந்திகள் உன்னுடைய யதேஷ்ட விநியோக அர்ஹமான தங்களுடைய சேஷத்வ சிறப்பை விரும்பாமல்
பாரதந்தர்யத்தினாலே உன்னுடைய பக்தர்கள் இடத்திலே கிரய விக்ரய அர்ஹமான சேஷத்வ காஷ்டயை அடைகிறார்கள் –
மம பக்த பக்தேஷூ ப்ரீதி ரப்யதிகா பவேத் -என்று எம்பெருமான் தானே அருளிச் செய்கிறான்
த்வத் ப்ருத்ய ப்ருத்ய பரிசாரக ப்ருத்ய ப்ருத்ய ப்ருத்யஸ்ய ப்ருத்ய இதி மாம் ஸ்மர லோக நாத -என்றும்
அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியோங்களே -என்றும் சொல்லக் கடவது இ றே
விபணி யாவது கடை வீதி -த்வத் பக்தி நிக்ன மனஸாம் கிரய விக்ரய அர்ஹ -என்றும் -பேசுவார் அடியார்கள் எம் தம்மை விற்கவும் பெறுவார்களே-பெரியாழ்வார் –
ஹரி பக்த தாஸ்ய ரசிகா பரஸ்பரம் கிரய விக்ரய அர்ஹ தசையா சமிந்ததே –யதிராஜ சப்ததி –

——————————————————–

சத்பிஸ் த்வத்தேக சரணைர் நியதம் ச நாத சர்ப்பாதிவத் த்வத் அபராதிஷூ தூர யாதா
தீராஸ் த்ருணீக்ருத விரிஞ்ச புரந்த ராத்யா காலம் ஷிபந்தி பகவன் கரணைர் அவந்த்யை–36-

சத்பிஸ் த்வத்தேக சரணைர் நியதம் ச நாத—பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -என்றும்
செல்வத் தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே —
எம்பெருமானே உன்னையே தஞ்சம் என்று பற்றின சத்துக்களோடே நித்ய ஸஹவாசம் செய்பவர்களும் -உன் திறத்தில் அபசாரம் படுவர்களைக் கண்டால்
சர்பாதிகளைக் கண்டால் போல் -சர்ப்பாதிவத் த்வத் அபராதிஷூ தூர யாதா –நெடும் தூரம் ஓடுமவர்களுமான பரமை காந்திகள்
-பிரமன் இந்திரன் முதலானவர்களை த்ருணமாக நினைத்தவர்களாகக் கொண்டு–த்ருணீக்ருத விரிஞ்ச புரந்த ராத்யா-என்றது
த்ருணீக்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூதயா ராமானுஜ பதாம் போஜ ஸமாச்ரயண சாலின-என்றும்
ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன் -என்று இருக்குமவர்கள் –
கரண க்ரமங்களை சபலமாக்கா நின்று கொண்டு-காலம் ஷிபந்தி பகவன் கரணைர் அவந்த்யை- போது போக்குகின்றனர் –
அவன் தந்த கரணங்களை அவனுக்கே உறுப்பாக்கிக் கால செபம் பண்ணா நிற்பார்கள் –
ஞானம் விரக்தி சாந்தி உடையவர்கள் பரம சாத்விகனோடு ஸஹவாசம் பண்ணப் பெற்றால் அவர்களுடைய போது போக்கு இருக்கும் படி சொல்ல வேணுமோ –

———————————————–

வாகாதிகம் மனசி தத் பவநே ச ஜீவே பூதேஷ் வயம் புநரசவ் த்வயி தை சமேதி
சாதாரண உதக்ரமண கர்ம ஸமாச்ரிதானாம் யந்த்ரா முகுந்த பவதைவ யதா யமாதே –37-

நிர்யாண காலத்திலே வாகாதி பத்து இந்திரியங்களும் மனசிலே சேர்ந்து -அவை பிராண வாயுவில் சேர்ந்து -அவை ஜீவாத்மாவில் சேர்ந்து
-அவை பூதங்களில் சேர்ந்து -எம்பெருமானே உன்னோடே மீண்டும் சேர -இங்கனம் சர்வ பிராணி சாதாரணமாக சொல்லப்பட்ட ஜீவ உதக்ரமணம்
பிரபன்னர்களுக்கும் சர்வ நியாமகனான உன்னாலேயே யமாதி அதிகார புருஷர்களுக்கு எப்படியோ அப்படியே ஆகிறது
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் -4–2-வாகாதிகரணம்/ மநோதி கரணம்/ அத்யஷாதி கரணம் /பூதாதி கரணம் /ஆஸ்ருத்தியதிகரணம் /பர சம்பத்தயதிகரணம்
-ஸ்ரீ ஸூக்திகளை திரு உள்ளத்தில் கொண்டு அருளிச் செய்கிறார் -பிரபன்னர்களுக்கு விசேஷம் மேல் ஸ்லோகத்தில்
-இதில் அதிகாரி புருஷர்களுக்கு விசேஷ அதிகாரம் இல்லை என்றதாயிற்று இதில் –

—————————————————-

சவ்யான்யயோ அயனயோர் நிசி வாஸரே வா சங்கல்பிதா யுவாதீன் சபதி ப்ரபந்நான்
ஹார்த ஸ்வயம் நிஜபதே விநிவேச யிஷ்யன் நாடீம் ப்ரவேசயசி நாத சதாதிகரம் த்வம் –38-

தஷிணாயன உத்தராயண காலங்களிலோ இரவிலோ பகலிலோ வாழ்க்கை முடியும் அளவினரான பிரபன்னர்களை
நீ ஹார்த்த புருஷனாய்க் கொண்டு தானே தன்னுடைய திரு நாட்டிலே கொண்டு போய் வைக்கக் கருதி சதாதிக நாடீ என்கிற
ஸூஷூம்நா நாடியை பிரவேசிக்கச் செய்து அருளுகிறாய் -ப்ரஹ்ம ஸூத்ரம் –4–2-நிஸாதிகரணமும் / தஷிணாய நாதிகரணமும் -படியே
ப்ரஹ்ம வித்துக்களை ப்ரஹ்ம பிராப்தியை அருளிச் செய்கிறார் –

——————————————

அர்ச்சிர் தினம் விசதபக்ஷ உதக் பிரயாணம் சம்வத்சரோ மருத் அஸீதகர சசாங்க
சவ்தாமநீ ஜலபதிர் வலஜித் ப்ரஜேச இத்யாதிவாஹி கசகோ நயசி ஸ்வ கீயான்–39-

எம்பெருமானே -அக்னி பகல் சுக்ல பக்ஷம் உத்தராயணம் சம்வத்சரம் வாயு ஸூர்யன் சந்திரன் வித்யுத் வருணன் இந்திரன் பிரஜாபதி என்னும்
இந்த ஆதி வாஹிகர்களைத் துணை கொண்டு தன் அடியார்களை ஸ்வ ஸ்தானத்துக்கு கொண்டு போகிறாய் –
விராஜா நதி நீராட்டமும் உப லக்ஷணம் –

————————————–

த்வச் சேஷ வ்ருத்த்ய அநு குணைர் மஹிதைர் குணவ்க ஆவிர்ப்பவத் யயுதசித்த நிஜ ஸ்வரூபே
த்வல் லக்ஷனேஷூ நியதேஷ்வபி போக மாத்ரே சாம்யம் பஜந்தி பரமம் பவதா விமுக்தா–40-

எம்பெருமானே -முக்தாத்மாக்கள் உன் பக்கலிலே அடிமைத் தொழிலுக்குத் தகுதியான சிறந்த குணங்களோடு கூட அப்ருதக் சித்த ஸ்வரூபம்
ஆவிர்பவித்த அளவிலே உன்னுடைய லக்ஷணங்கள் உனக்கு அசாதாரணங்களாய் இருக்கச் செய்தேயும்
ப்ரஹ்ம அனுபவத்தில் மட்டும் உன்னோடே கூட சாம்யத்தை அடைகிறார்கள் –
ஜகத் வியாபார வர்ஜாதி கரணம் –போக மாத்ர சாம்யா லிங்காச்ச -ஜகாத் காரணத்வ நியாமகத்வாதிகள் முக்தனுக்கு சம்பவிக்க மாட்டாவே
சோஸ்னுதே சர்வான் காமான் -ப்ரஹ்மத்தின் குணங்கள் விபூதிகள் அனைத்தையும் முற்றவும் அனுபவிக்கை –
த்வச் சேஷ வ்ருத்த்ய அநு குணைர் மஹிதைர் குணவ்க–ஆத்மாவுக்கு அழியாததான சேஷத்வத்துக்கு அநு குணமான பேறு தானே பிராப்தம் ஆகும் –

———————————————–

இத்தம் த்வதேக சரணைர் அநகை அவாப்யே த்வத் கிங்கரத்வ விபவே ஸ்ப்ருஹயா அபராத்யன்
ஆத்மா மமேதி பகவன் பலதைவ கீதான் ப்ராஸ நிரீஷ்ய பரணீய இஹ த்வயா அஹம் -41–

எம்பெருமானே இப்படி உன்னையே தஞ்சம் என்று பற்றின பரமை காந்திகளால் பெறுதற்கு அரியதான உன்னுடைய கைங்கர்ய ஸ்ரீ யில்
ஆசைப்படுவதனால் மஹா அபராதியான நான்-ஞானீ து ஆத்மைவ மே மதம் -என்று உன்னாலே கொண்டாடப் பட்ட
பூர்வ புருஷர்களை நோக்கி உன்னால் ரஷிக்கத் தக்கவன் ஆகிறேன்
மா சூணா வான் கோலத்து அமரர் கோன் வழி பட்டால் மா சூணா உன மலர்ச் சோதி மழுங்காதே -வழி பாடு அவ்தயாஹம்
கைங்கர்ய அபிநிவேசம் ஸ்வரூபத்துக்கு அநு ரூபமாய் இருந்தாலும் நைச்ய அனுசந்தானத்தால் –
நெடு நாள் அந்நிய பரையாய் போந்த பார்யை லஜ்ஜா பயங்கள் இன்றிக்கே பர்த்ரு சகாசத்தில் வந்து என்னை அங்கீ கரிக்க வேணும்
என்று அபேக்ஷிக்குமா போலே இருப்பது ஓன்று இ றே இவன் பண்ணும் பிரபத்தி –
ஞானீத் வாத்மைவ மே மதம் –அபிமானத்துக்கு பாத்திர பூதர்கள் தொடர்பை இட்டு அடியேனை அபிமானித்து அருள வேணும் -என்கிறார் –
பிதாமஹம் நாத முனிம் விலோக்ய -போலே –

————————————————

பத்மா மஹீ ப்ரப்ருதிபி பரி புக்தபூம்ந கா ஹாநிர் அத்ர மயி போக்தரி தே பவித்ரீ
துஷ்யேத் கிமன்க்ரிதடி நீ தவ தேவ சேவ்யா துர்வார தர்ஷ சபலேந ஸூநா அவலீடா -42-

எம்பெருமானே ஸ்ரீ தேவி பூ தேவி முதலானவர்களால் அனுபவிக்கப் பட்ட பெருமையையுடைய யுன்னை நானும் அனுபவித்தால்
இதனால் உனக்கு என்ன ஹானி விளையும் -தேவர்கள் குடைந்த்தாடத் தக்க கங்கை -தாஹம் உள்ள நாயால் நக்கத் பட்ட அளவில் கெடுதல் அடையுமோ –
சதுமுகன் கையில் சதுப் புயன் தாளில் சங்கரன் சடையில் தங்கிப் பெருகினதாய் -கங்கை கங்கை என்ற வாசகத்தாலே கடுவினை களைந்திடகிற்குமதாய்-
தேவ கங்கையில் பெரு விடாய் உள்ள நாயானது தண்ணீர் பருகினால் ஹானி விளையாதே –

————————————————————–

சத்வானி நாத விவி தான்ய பிசஜ் ஜிக்ரு ஷோ சம்சார நாட்ய ரஸி கஸ்ய தவாஸ்து த்ருப்தயை
ப்ரத்யக் பராங்கமுகமதே அசமீஷ்ய கர்த்து ப்ராசீன சஜ்ஜன விடம்பன பூமிகா மே –43-

எம்பெருமானே ஆத்மஞான சம்பாதனத்திலே த்ருஷ்ட்டி அற்றவனும் மேல் விளைவது நோக்காமல் மனம் போன படி செய்பவனுமான என்னுடைய இந்த
பூர்வாச்சார்ய ப்ரக்ரியையை அநு கரிக்கும் வேஷமானது பல் வகைப் பட்ட பிராணிகளையும் -வலை வைத்துப் பிடிக்குமா போலே
-பிடிக்க நினைத்து இருப்பவனும் சம்சார நாடக ரசிகனுமான யுனக்கு திருப்தியை விளைக்குமதாகுக–
நைச்ய அனுசந்தானமும் -நாடகமே -சீலம் இல்லா சிறியேன் -ஏலும் செய்வினையோ பெரிதால் -என்றும்
கிடகில்லேன் என்று அட்டகிலேன் ஐம் புலன் வெல்ல கில்லேன் கடவனாகி காலம் தோறும் போப் பறித்து ஏத்த கில்லேன் -என்றும்
அமர்யாத ஷூத்ர சல மதிர் அஸூயா ப்ரஸவபூ-என்றும் அருளிச் செய்வதை அநு காரம் -பிரானே இதுவே உனக்கு திரு உள்ளம் உகக்கப் போறுமாயிற்றே
நீயும் சம்சாரிகளைப் போலே நாட்டிலே பிறந்து படாதன பட்டு அநு கரித்து வாரிப் பிடியாக சம்சாரிகளை கூட்டிச் செல்லாத தானே
நம்முடைய கூத்துக்கு தகுதியாக இவனும் கூத்தடிக்கிறான் -நாடகத்தை ரசிக்கின்றாய் -என்றவாறு –

——————————————————

கர்த்தவ்யமிதி அநு கலம் கலயாமி க்ருத்யம் ஸ்வாமின் ந க்ருத்யமிதி க்ருத்யமபி த்யஜாமி
அந்யத் வ்யதி க்ரமண ஜாதம் அநந்தம் அர்த்தஸ்தாநே தயா பவது தே மயி ஸார்வ பவ்மீ -44–

எம்பெருமானே -செய்யத் தகாத துஷ் தர்மத்தை செய்யத் தக்கதாக நினைத்து அடிக்கடி செய்து போருகிறேன்-செய்ய வேண்டியவற்றையோ
அக்ருத்யமாக நினைத்து விட்டு விடுகிறேன் -மற்றும் உள்ள அபசாராதிகளோ எல்லை யற்றவை -ஆதலால்
-உன்னுடைய திரு அருளே பேறு பெறுத்தும் விஷயத்தில் என்பால் சம்ருத்தமாக விளங்க வேணும் –
ந்யாஸ சதகத்தில் -அக்ருத்யா நாஞ்ச கரணம் க்ருத்யா நாம் வர்ஜ நஞ்ச மே க்ஷமஸ்வ நிகிலம் தேவ ப்ரணதார்த்தி ஹர ப்ரபோ –
தேவரீர் அகிஞ்சனர் விஷயத்தில் உபாயாந்தர ஸ்தானத்தில் நின்று அருளுவது போலே அவ்யாஜ கருணையை செய்து அருள வேணும்
ஸார்வ பவ்மீ பவது -என்றது செங்கோல் செலுத்த வேண்டும் என்றபடியாய் புஷ்கலமாக விளங்க வேணும் என்கை –

—————————————————

யம் பூர்வ மாஸ்ரித ஜநேஷூ பவான் யதாவத் தாமம் பரம் ப்ரணி ஜனவ் ஸ்வயா மான்ரு சம்சயம்
சம்ஸ்மாரிதஸ் த்வமஸி தஸ்ய சரண்ய பாவாத் நாத த்வத் ஆத்தசமயா நநு மாத்ரு சார்த்தம் –45-

எம்பெருமானே தேவரீர் முன்பு ஸ்ரீ ராமாவதாரத்தில் -ஆஸ்ரிதர்கள் விஷயத்தில் இரக்கத்தையே பரம தர்மமாக சொன்ன படியால் அத்தை நினைப்பூட்டுகிறேன்
சரண்யதவ உபாய யுக்தமாக தேவரீர் கொள்ளும் உறுதிகள் எல்லாம் என் போல்வார்க்காக வன்றோ –
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம –த்வத்த ஏவ மயா ஸ்ருத –சுந்தர -38–41-
கடல் கரை வார்த்தை -தேர் தட்டு வார்த்தை -அடியேன் போல்வார்க்காக அன்றோ –

———————————————–

த்ராணம் பவேதி சக்ருதுக்தி ஸமூத்யதாநாம் தைஸ் தைர ஸஹ்ய வ்ருஜி நைரு தரம் பரிஸ் தே
சத்யாபிதா சதமகாத்மஜ சங்கராதவ் நாத ஷமா ந கலு ஜந்துஷு மத்விவர்ஜம் –46-

தேவரீரே சரணமாக வேணும் என்று ஒருகால் சொல்ல முயல்பவர்களினுடைய பல பல அஸஹ்ய அபசாரங்களினால் வயிறு வளர்ப்பதும் –
சதமகாத்மஜ–காகம் –சங்கராத -சிவன் பாணாசுர விருத்தாந்தம் -மண்டை ஏந்தியதும் உண்டே
-ஆதி -காளியன் சிசுபாலன் போல்வார் – முதலானோர் இடத்திலே மெய்ம்மையை பெற்றதுமான தேவரீருடைய க்ஷமை யானது
பிராணிகள் இடத்தில் பிரசுரிக்கும் போது என்னைத் தவிர்த்தது அன்றே –
ஒரு முறை சொல்ல முயன்றால் போதும் -சர்வ சாதாரணமான ஷமைக்கு அடியேன் ஒருவன் விலக்கோ
க்ஷமை ஜீவிப்பது என் போல்வார் அபராதங்களாலே என்றபடி –

————————————————————————-

கர்மா திஷூ த்ரி ஷூ கதாம் கதமப்ய ஜானன் காமாதி மேதுரதயா கலுஷு ப்ரவ்ருத்தி
சாகேத சம்பவ சராசர ஐந்து நீத்யா வீஷ்ய ப்ரபோ விஷய வாசி தயாபி அப்யஹம் தே —47-

கர்ம ஞான பக்திகள் மூன்றிலும் ப்ரஸக்தி லேசமும் அற்றவனாய் -காம க்ரோதாதிகள் நிரம்பி இருப்பதனால் துஷ்ட ப்ரவ்ருத்தியை யுடையேனாய்
இருக்கிற அடியேன் நல் பால் அயோத்தியில் வாழும் சராசரக் கணக்கிலே தேச வாஸிஸ்த்வத்தை இட்டே கடாக்ஷிக்கத் தகுந்தவன் ஆகிறேன் –
அபி வ்ருஷா பரிம்லாநாஸ் ச புஷபாங்குர -தேச வாசம் ஒன்றாலே வ்ருக்ஷங்களும் வாழ்ந்தே போனவே-

————————————————

ப்ரஹ்மாண்ட லக்ஷஸத கோடி கணா அனந்தான் ஏக ஷண விபரி வர்த்தய விலஜ்ஜமா நாம்
மத் பாப ராசி மன்னே மது கைடர்ப ஹந்த்ரீம் சக்திம் வினியுங்கஷவ சரணாகத வத்ஸல த்வம் –48-

பக்த வத்சலனான பெருமானே அளவற்ற ப்ரஹ்மாண்ட அண்டங்களை ஒரு நொடிப் பொழுதில் நசிப்பித்தும் என் செய்தோம் என்று வெள்கி நிற்குமதும்
மது கைடபர் விநாசகமுமான தேவரீருடைய சக்தியை என்னுடைய பாபங்களை போக்குவதில் விநியோகித்து அருள வேணும்
சராசரங்கள் தீமைகள் ஒன்றும் செய்ய வில்லையே -அடியேன் உடைய பண நிவர்த்தகம் உன்னுடைய சக்தித்வத்துக்கு அஸக்யமோ –

—————————————————

ஆஸ்தாம் ப்ரபத்திர்ஹ தேசிக சாஷிகம் மே சித்தா ததுக்திரதவா த்வத வேஷி தார்த்தா
நியஸ் தஸ்ய பூர்வ ப்ருஷைஸ் த்வயி நன்விதா நீம் பூர்ணே முகுந்த புநருக்தா உபாய ஏஷ–49-

த்வயத்தை உபதேசித்த ஆச்சார்யன் சாக்ஷியாக எனக்கு சித்தித்த உபாயம் கிடக்கட்டும்
-உன் திரு உள்ளத்தால் தெரிந்து கொள்ளப் பட்ட பொருளை யுடைத்தான யுக்தியும் கிடக்கட்டும் -புஷ்கலனான உன்னிடத்தில் முன்னோர்களால்
ஏற்கனவே சமர்ப்பிக்க பட்டவனான எனக்கு இப்போதைய உபாய அனுஷ்டானமும் மிகை யன்றோ
சதாசார்ய கடாக்ஷ விஷயீ கார்த்தாலே வந்த த்வய உச்சாரண அனுச்சாரணத்தாலே பிரபத்தி அனுஷ்டானம் பிறந்த பின்பு சரண்ய
ப்ரசாதங்களில் இதுக்கு மேல் ஓன்று இல்லாமையால் -ரஹஸ்ய த்ரய சாரம் –
இது கிடக்கட்டும் -ந தர்ம நிஷுடோஸ்மி–அபராத சஹஸ்ர பாஜனம் -அகலகில்லேன் இறையும்-போன்ற
ஸ்ரீ ஸூக்திகளை சொல்லுவதால் சித்திக்கிற பிரபத்தியும் கிடக்கட்டும்
உக்திகளின் பொருளை அடியேன் அறியாவிட்டாலும் சர்வஞ்ஞனான நீ அறிவாய் -இது கார்ய கரம் ஆகுமே -அதுவும் கிடக்கட்டும்
லஷ்மண முநேர் பவதா விதீர்ணம் ச்ருத்வா வரம் -நீர் பூர்ணன் -எதையும் எதிர்பார்க்காமல் நிர்ஹேதுகமாக அருளுபவர் அன்றோ
இந்த ஸ்தோத்ர முகேன அநுஸந்திக்கும் ந்யாஸ ரூபமான உபாயமும் மிகையாகச் செய்யப் பட்டது இத்தனை -அத்யந்த அகிஞ்சித்கரம்-என்றபடி –

——————————————————

யத்வா மதர்த்த பரிசிந்த நயா தவ அலம் சம்ஜ்ஞாம் ப்ரபந்ந இதி சஹாசி கஸ் பிபர்மி
ஏவம் ஸ்திதே த்வத் அபவா நிவ்ருத்தயே மாம் பாத்ரம் குருஷ்வ பகவன் பவத க்ருபாயா –50-

எம்பெருமானே -பல சொல்லி என் -என் பக்கலில் என்ன என்ன கைம்முதல் உள்ளது என்கிற ஆராய்ச்சி தேவரீருக்கு வேண்டா –
பிரபன்னன் என்கிற பெயரை நான் துணிந்து சுமக்கிறேன் -இப்படி இருந்தும் பிரபன்ன பரித்யாமி என்கிற அபவாதம்
தேவரீருக்கு விளையாமைக்காக அடியேனை அருளுக்கு இலக்காக்கிக் கொள்ள வேணும்
யத்வா -என்று தொடங்கி -இத்தை விசேஷித்து கொண்டு அருள வேணும் பிரபன்ன குலத்தில் உள்ளதே அதிகாரம்
-தேவரீர் அடியேனை அருளுக்கு இலக்காக்கியே தீர வேணும் என்கிறார் ஆயிற்று –

—————————————————————

த்யாஸே ஸூணேச சரணாகத சம்ஜ்ஞிநோ மே ஸ்த்யாநே ஆசசோபி ஸஹசைவ பரிக்ரஹே வா
கிம் நாம குத்ர பவதீதி க்ருபாதி பிஸ் தே கூடம் விசாரய குண இதர தாரதாம்யம் –51-

குண நிதியான பெருமானே -பிரபன்னன் என்னும் பெயரை சுமக்கும் அடியேனை விடுவதோ -மஹா அபராதியாய் இருக்கச் செய்தேயும்
அடியேனை கடுகப் பரிக்ரஹிப்பதோ -ஆகிய இவை இரண்டில் எது செய்தால் எது நேரும் ஏங்கிய குணாகுண தாரதம்யத்தை
தேவரீருடைய கிருபை முதலான குணங்களோடு கூடி ஏகாந்தமாக விசாரித்து அருள வேணும் –
சாதுர்யமாக விண்ணப்பம் செய்கிறார் -அடியேன் பால் பரித்யாஜ்யத்தைக்கும் பரிக்ரஹிப்பதற்கும் விஷயம் உண்டு
-தேவரீர் ஸ்வ தந்த்ரர் -வாத்சல்யத்தி குணங்கள் ஜீவிக்க வேணும் என்று திரு உள்ளம் பற்ற வேணும்
பரித்யஜித்தால் குண ஹானி விளையும் -பரிக்ரஹித்தால் குண ஸம்ருத்தி விளையும் -என்று விசாரணையில் தேறும்-

——————————————

ஸ்வாமீ தயா ஜல நிதிர் மதுர ஷமாவான் சீலாயிக ஸ்ரிதவச சுசி அத்யுதார
ஏதாநி ஹாது மநஹோ ந கிலார்ஹசி த்வம் விக்க்யாதி மந்தி பிருதானி மாயா சஹைவ –52-

அகில ஹேய ப்ரத்ய நீகரான தேவரீர் -ஸ்வாமி என்றும் -கருணைக் கடல் என்றும் -இனிமையே வடிவெடுத்தவர் என்றும் –
பொறுமை உள்ளவர் என்றும் -ஸுசீல்ய நிதி என்றும் -ஆஸ்ரித வத்சலன் என்றும் -பரிசுத்தர் என்றும் -பெரு வள்ளல் என்றும்
பிரசித்தி பெற்ற விருதுகளையும் அடியேனையும் விடக் கடவீர் அல்லீர்
கீழே கிருபாதி ஸஹ கூடம் விசாரய -என்ற ஆதி சப்தத்தை விவரித்து அருளிச் செய்கிறார்
ஸ்வாமீ -உடையவன் உடைமையை விடலாமா –
தயா ஜல நிதிர் -கருணைக் கடலாய் இருப்பவன் நிர்க் குணர் செய்வதை செய்யலாமா
மதுர-தேனே பாலே கன்னலே அமுதே என்னும் படி இருப்பவன் அந்த மாதுர்யத்தை காட்டில் எறிந்த நிலாவாக ஆக்கலாமோ
ஷமாவான்-ஷமைக்கு இரை தேடிக் கொடுக்க வேண்டியது அன்றோ உன் பணி
சீலாயிக-ஸுசீல்யம் என்னை விட்டால் ஜீவிக்குமோ
ஸ்ரிதவச -ஆஸ்ரித வசன் -பராதீனன் -பக்த பராதீனன் என்னும் பெயர் சுமப்பது வெறுமனேயோ
சுசி -கைம்மாறு கருதாமல் அபகரித்தல் ஆகிற குணத்துக்கு கொத்தை வரலாமோ
அத்யுதார-எனக்கே தன்னை தந்த கற்பகம் -என்று தன் உடைமையையும் கொடுத்து தன்னையும் கொடுக்கும் வள்ளல் தனத்துக்கு பொருந்துமோ
என்று இங்கனம் பல கேள்விகளை கேட்ட படி –

——————————————————

வேலா தனஞ்சய ரத ஆதி ஷூ வாசிகை ஸ்வை ஆகோஷிதாம் அகில ஐந்து சரண்யதாம் தே
ஜானன் தசா நநசதாத் அதிக ஆகாச அபி பஸ்யாமி தத்தம் அபயம் ஸ்வ க்ருதே த்வயா மே –53-

எம்பெருமானே கடற்கரை அர்ஜுனன் தேர்த்தட்டு முதலான இடங்களில் தனது திரு வாக்குகளால் கோஷிக்கப் பட்ட –
அடியார்களுக்கு சேம வாய்ப்பு அன்று தேவரீருடைய சரம ஸ்லோகங்கள் -இவை அனைவருக்கும் விசுவசிக்க உடலாய் இருக்குமே
உன்னுடைய சர்வ லோக சரண்யத்வத்தை
அறிந்த அடியேன் நூறு ராவணர்களில் காட்டிலும் மிக்க அபராதியாய் இருக்கும் எனக்கும் ஸ்வார்த்தமாக நீ அபயம் அளித்ததாக காண்கிறேன்
குற்றவாளர்களையே தேடித் திரியும் தேவரீருடைய கருணைக்கு கொண்டாட்டம் அன்றோ இது –

—————————————————

ரஷ்யன் த்வயா தவ ஹர அஸ்ம்யஹமி த்வ பூர்வான் வர்ணான் இமான் அஹ்ருதயான் அபி வாசயித்வா
மத்தோஷ நிர்ஜித குணோ மஹிஷீ சமஷம் மாபூஸ் த்வத் அந்நிய இவ மோஹ பரிச்ரமஸ் த்வம் –54-

எம்பெருமானே அடியேன் தேவரீரால் ரஷிக்கத் தகுந்தவன் என்றும் -அடியேன் தேவரீருக்கே போஷ்யன் என்றும்
இங்கனம் சில வார்த்தைகள் அஹ்ருதயம் ஆனாலும் இதை என் வாக்கினால் சொல்லுவித்து என்னுடைய குற்றங்களுக்குத்
தோற்ற குணம் யுடையீரான தேவரீர் பிராட்டி திரு முன்பே வேறு ஒரு அசக்தனைப் போலே பழுதுபட்ட
பரிச்ரமத்தை யுடையவராக ஆகக் கூடாது -சமத்காரமாக அருளிச் செய்கிறார் -பரிச்ரமப்பட்டு அடியேனை சொல்லுவித்தீரே –
ஸ்த்ரீயம் புருஷ விக்ரஹம் -ஏச்சுப் பேசினவள் அன்றோ பிராட்டி -சர்வஞ்ஞர் சர்வ சக்தர் அடியேனை ரஷித்து அருள வேணும் –

————————————————————–

முக்கயஞ்ச யத் பிரபதனம் ஸ்வயமேவ ஸாத்யம் தாதவ்ய மீச க்ருபயா ததபி த்வயைவ
தன்மே பவச் சரண சங்கவதீம் அவஸ்தாம் பஸ்யன் உபாய பலயோ உசிதம் விதேயா–55-

எம்பெருமானே தானே சாதித்துக் கொள்ளத் தக்கதாக யாதொரு முக்கியமான பிரபத்தி யுண்டோ அதுவும் தேவரீராலேயே கருணையினால் கொடுத்து அருளத் தக்கது
ஆகவே தேவரீருடைய திருவடிகளை பொருந்தியே யாக வேணும் என்று இருக்கிற எனது நிலைமையை நோக்கி உபாயம் பலன் என்னும்
இரண்டினுள் எது உசிதமோஅது தன்னைத் தந்து அருள வேணும் –
அதுவும் அவனது இன்னருளே–எனது ஆவியார் யானார் தந்த நீ கொண்டாக்கினையே -என்பதையே-தாதவ்ய மீச -க்ருபயா ததபி த்வயைவ -என்கிறார்
என் நான் செய்கேன் -என்று இருக்கும் அடியேனால் சாதிக்கப்படுவது ஒன்றும் இல்லையே
உபாய பலயோ உசிதம் விதேயா-அடியேனை க்ருதக்ருத்யனாக திரு உள்ளம் பற்றும் அளவில் பலனைப் பெறுவித்து அருளுவது /
க்ருதக்ருத்யன் அல்லேன் என்று திரு உள்ளம் பற்றுமாகில் உபாய நிஷ்பத்தியை தேவரீர் தாமே செய்து கொடுக்க –
இவ்விரண்டிலும் அடியேனுக்கு அநிஷ்டம் அன்று -பலனே உத்தேச்யம் -அத்தை அத்வாரமாகவோ சத்வாரமாகவோ
தேவரீர் திரு உள்ளபடி ஆகுக -நிர்பந்தம் பண்ணுவேன் அல்லேன் –

—————————————————–

அல்ப அஸ்திர அஸூகரை அஸூகாவசநை துக்கான்விதைர் அநு சிதை அபிமான மூலை
ப்ரத்யக் பர அநுபவை பரி கூர்ணிதம் மாம் த்வய் யேவ நாத சரி தார்த்தய நிர்விவிஷூம் —56-

எம்பெருமானே -அற்பங்களும் நிலையில்லாதனவும் விரும்பிச் செய்ய முடியாதனவும் துக்கத்திலே முடிந்து நிற்பனவும் துக்கங்களோடு கூடியனவும்
-ஸ்வரூப விருத்தங்களும் தேஹாத்ம பிரமம் முதலிய அபிமானங்களால் விளைவனவுமான கைவல்ய போக ஸ்வர்க்க போகங்களாலே
வியாகுல சித்தனாய் உன் பக்கலிலே பேரின்பம் அனுபவிக்க விரும்பியவனுமான என்னை க்ருதார்த்தன் ஆக்கி அருள வேணும் –
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐம்கருவி கண்ட இன்பம் தெரிவரிய வளவில்லாகி சிற்றின்பம் ஒண் டொடியாள் திரு மகளும்
நீயுமே நிலா நிற்பக் கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே –
-கீழ் ஸ்லோகத்து அளவும் உபாயத்தில் களை அறுத்து இதில் உபேயத்தில் களை இருக்கிறார்
ப்ரத்யக் பர அநுபவை–ஆத்மானுபவம் -கைவல்ய அனுபவம் /பர அநுபவை-ஐஹிக போகங்களும் ஸ்வர்க்காதி போகங்களும் /
பரி கூர்ணிதம்-இத்தை அனுபவிப்போமோ அத்தை அனுபவிப்போமோ என்று மனம் சுழலுகிற படி –

———————————————————————–

தத்வ அவபோத சமித பிரதிகூல வ்ருத்திம் கைங்கர்ய லப்த கரண த்ரய சாமரஸ்யம்
க்ருத்வா த்வத் அந்நிய விமுகம் க்ருபயா ஸ்வயம் மாம் ஸ்பாதிம் த்ருஸோ ஸாதி லபஸ்வ ஜெகஜ் ஜனன்யா –57-

எம்பெருமானே அடியேனை தத்வ ஞானத்தால் பிரதிகூல விருத்திகள் தொலையப் பெற்றவனாகவும் கைங்கர்ய விசேஷங்களினாலே
மநோ வாக் காயங்களின் சாமரஸ்யம் பெற்றவனாயும் -உன்னை ஒழிந்த விஷயங்களில் விமுகனாயும் இயற்க்கை இன்னருளாலே
செய்து அருளி பெரிய பிராட்டியாருடைய திருக் கண் மலர்ச்சியைப் பெறுவாயாக –
அடியேனை அங்கீ கரித்து நீயும் உனக்கு அபிமதம் பெறப் பெறுவாய் -எனக்காக செய்தது அன்றிக்கே பிராட்டியின் திரு உள்ள உகப்புக்காக செய்ததாக வேணும் –
ஸாதி லபஸ்வ-மலர்ச்சி -பரம லாபம் தேவர்க்கும் கிட்டும் என்றபடியே –

——————————————-

இத்தம் ஸ்துதி ப்ரப்ருதயோ யதி சம்மதாஸ் ஸ்யு யத்வா அபராத பதவீஷூ அபி சம்விசந்தி
ஸ்தோகா நுகூல்ய கணிகாவச வர்த்திநஸ் தே ப்ரீதி ஷமாப் ரஸ ரயோ அஹம் அஸ்மி லஷ்யம் –58-

எம்பெருமானே -அடியேன் இங்கனே ஸ்துதி நமஸ்காராதிகளைச் செய்வது தேவரீருக்கு அபிமதமாகில் ஸ்வல்ப அநு கூல்யத்து அளவில் வசப்படுகின்ற
தேவரீருக்கு ப்ரீதி லஷ்யம் ஆகிறேன் -இவை தேவரீருக்கு அநபிமதம் ஆகில் ஷமைக்கு லஷ்யம் ஆகிறேன் -ஒரு வழியிலும் ஒரு குறையும் இல்லையே
எம்பெருமான் திரு உள்ளத்தால் இவை உபசார கோடியிலேயோ அபசார கோடியிலேயோ என்று அறுதி இட ஒண்ணாத படி -இரண்டுமே உத்தேச்யம் ஆகுமே –
ஸ்தோகா நுகூல்ய கணிகாவச வர்த்திநஸ் தே-என்றது ப்ரீத்திக்கும் க்ஷமைக்கும் பொதுவாகுமே -ப்ரீதி ஹேது வாவதும் ஷமா ஹேது வாவதும் நிர்விசேஷமே –

—————————————————————-

ஸ்நே ஹா உப பன்ன விஷயாம் ஸ்வ தசா விசேஷான் பூயஸ் தமிஸ் ரஸ மநீம் புவி வேங்கடேச
திவ்யாம் ஸ்துதிம் நிரமிமீத சதாம் நியோ காத் தீப பிரகாச சரணாகதி தீபிகாக்க்யாம் –59-

தன்னுடைய உயர்ந்த ஆசையினால் பக்தி நிறைந்த விஷயங்களை யுடையதும் இந்நிலத்தில் கனமான இருளைப் போக்குவதும்
சரணாகதி தீபிகை என்னும் பெயரை யுடையதுமான சிறந்த ஸ்தோத்ர மாலை -நூலை -ஸ்ரீ மத் வேதாந்தாச்சார்யார் பணித்தார்
விளக்கொளி பெருமாள் -என்பதால் தீபிகா -அஞ்ஞான அந்தகாரம் போக்கும்
ஸ்நே ஹா உப பன்ன விஷயாம் ஸ்வ தசா விசேஷான்–தசா -என்றது ஸ் துதிக்கும் திரிக்கும் / ஸ்நேஹம -அன்புக்கும் எண்ணெய் க்கும் /
திவ்யாம்-ஜென்ம கர்ம ச மே திவ்யம் -போலே தாமே தம்முடைய ஸ்ருதியை திவ்யாம் என்கிறார் –
சப்த சன்னிவேசங்களையும் அர்த்த புஷ்கல்யத்தையும் கண்டு அருளிச் செய்த படி
பலன் தனியாக அருளிச் செய்யாமல் -இந்த ஸ்துதியை கற்கையே ஸ்வதம் பிரயோஜனம் -என்றவாறு –

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: