ஸ்ரீ நிவாஸனும் ருக் வேதமும் / ஸ்ரீ வைஷ்ணவம் -பரிபாடல் / ஸ்ரீ ரெங்கம் அரையர் பாடல்கள் /பூர்வாச்சார்யர்கள் / ஸ்ரீ கூரத் தாழ்வான் வைபவம்-பத்து கொத்து பெயர்கள் —

ஸ்ரீ நிவாஸனும் ருக் வேதமும் –
அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே ஸ்ரீம் பிடஸ்ய சத்த்வபி தேபிஷ்ட்வா ஸாதயாமசி -ருக்கு -8-அஷ்டகம் -8-அத்யாயம் -13-வர்க்கம் –முதல் ருக்கு மந்த்ரம்
த்வயி அராயி சதி –குழந்தாய் நீ இஹ லோக பரலோக ஐஸ்வர்யம் இல்லாமல் இருந்தாயானால்
த்வயி காணே சதி -நீ வெளிக்கண்ணும் உள் கண்ணும் இல்லாதவனாய் இருந்தால்
த்வயி விக்டே சதி -நீ ஆத்யாத்மீகம் -ஆதி பவ்திக்கம் -ஆதி தைவிகம் -தாப த்ரயங்களால் பீடிக்கப் பட்டு இருந்தாயாகில் —கடம் -தாஹம்
த்வயி ஸதான்வே சதி -புருஷார்த்தங்களை பெற முடியாமல் பிரதிபந்தகங்கள் இருந்தால்
ஸ்ரீம் பீடஸ்ய -திருமகளுக்கு திரு மார்பினால் பீடமாகிய ஸ்ரீ நிவாசனுடைய
கிரிம் -திருமலையைக் குறித்து
ஸ்ரீம் பிடஸ்ய சத்த்வபி கச்ச -ஸ்ரீ நிவாசனுடைய பக்தர்களோடு சென்று சேர்
தேபி -அவர்கள் மூலமாகவே
த்வா ஸ்ரீம் பீடஸ்ய ஸாதயாமசி -நீ ஸ்ரீ நிவாஸனை வேண்டிக் கொள்ள தகுதி பெற்று இருக்கிறாய்-
சமர்பிக்கத் தகுதி பெற்று இருப்பாய் என்றுமாம் –

————————

ஸ்ரீ வைஷ்ணவம் -பரிபாடல் —

ஐந்தலை உயரிய அணங்குடை யரும் திறல் மைந்துடை ஒருவனும் மடங்கலும் நீ –பூவனும் நாற்றமும் நீ –பரிபாடல் -1-

நின் ஒக்கும் புகழ் நிழலவை —எண்ணிறந்த புகழவை–பரிபாடல் –1-

அன்ன மரபின் அனையோய் நின்னை இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது –பரிபாடல் -1-

இன்னோர் அனையை இனையையால் என அன்னோர் யாம் இவண் காணாமையின் பொன் அணி  நேமி வலம் கொண்டு ஏந்திய மன்னிய முதல்வனை ஆதலின் நின்னோர் அனையை நின் புகழோடும் பொலிந்தே –பரிபாடல் -1-

கேடுஇல் கேள்வியில் நடு ஆக்குதலும் –பரிபாடல் –2-

அமரர்க்கு முதல்வன் நீ –பரிபாடல் -3-

இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை —அனைத்தும் நீ அனைத்தின் உட்ப்பொருளும் நீ ஆதலின் –பரிபாடல் –3-

தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும் ஞாயிறும் திங்களும் அறனும் ஐவரும் திதியின் சிறாரும் விதியின் மக்களும் மாசி இல் எண்மரும் பதினொரு கபிலரும் தா மா இருவரும் தருமனும் மடங்கலும் மூ ஏழ் உலகும் உலகினுள் மன்பதும் மாயோய் நின் வயின் பரந்தவை உரைத்தேம் மாயா வாய் மொழி உரை தர வலந்து வாய் மொழி ஓடை மலர்ந்த தாமரைப் பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீ என மொழியுமால் அந்தணர் அருமறை –பரிபாடல் -3-
பதினாயிரம் கை முது மொழி முதல்வ –இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை –முன்னை மரபின் முது மொழி முதல்வ –அமரர்க்கு முதல்வன் நீ அவுணர்க்கும் முதல்வன் நீ –கால முதல்வனை ஏ ஏ இன கிளத்தலின் இனிமை நன்கு அறிந்தனம்–முதல் முறை இடை முறை கடை முறை தொழிலின் பிறவாப் பிறப்பிலை பிறப்பித்தோர் இலையே–இரு நிழல் படாமை மூ ஏழ் உலகும் ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ –
பாழ் என கால் என பகு என ஓன்று என இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து என ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என நால் வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை

மாயோயே மாயோயே மறு பிறப்பு அறுக்கும் மாசில் சேவடி மணி திகழ் உருபின் மாயோயே
விதியின் மக்களும் மாசில் எண்மரும் பதினோரு கபிலரும் தாமா இருவரும் தருமனும் மூ ஏழ் உலகும்
உலகினுள் மன்பதும் மாயோய் நின்வயின் பரந்தவை உரைத்தேம்
மாயா வாய் மொழி உரை தர வலந்து வாய் மொழி ஓடை மலர்ந்த தாமரைப் பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீ என மொழியுமால் அந்தணர் அருமறை
மா நிலம் இயலா முதல் முறை அமையத்து நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய வாய் மொழி மகனொடு மலர்ந்த தாமரைப் பொகுட்டு நின் –பரிபாடல் –3-

நூறு ஆயிரம் கை ஆறு அறி கடவுள் நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்த்தியோ முன்னை மரபின் முது மொழி முதல்வ —பரிபாடல் –3-

அளப்பரியவை –பரிபாடல் –4-

நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்த்தியோ முன்னை மரபின் முது மொழி முதல்வ –பரிபாடல் -4-

அன்னை என நினை இ நின் அடி தொழுதனம் –பரிபாடல் -13-

எவ்வயின் உலகத்தும் தோன்றி அவ்வயின் மன்பது மறுக்கத் துன்பம் களைவோன் அன்பதுமே ஏய் இரும் குன்றத்தான் –பரிபாடல் -15-

தீயினுள் தேறல் நீ பூவினுள் நாற்றம் நீ கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ
அறத்தினுள் அன்பு நீ மரத்துனுள் மைந்தும் நீ வேதத்து மறை நீ பூதத்து முதலும் நீ
வெஞ்சுடர் ஒளியும் நீ திங்களுள் அளியும் நீ அனைத்தும் நீ அனைத்தின் உட்ப்பொருளும் நீ
ஆதலின் உறைவும் உறைவதும் இலையே உண்மையும் மறவியல் சிறப்பின் மாய மாரணையை
முதல் முறை இடை முறை கடை முறை தொழிலின் பிறவாப் பிறப்பிலை பிறப்பித்தோர் இலையே
அருள் கொடையாக –அறம் கோலமாக இரு நிழல் படாமை மூ வேழ் உலகும் ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ –பரிபாடல் –63-76-

மாயோன் மேய காடுறை உலகம் –தொல்காப்பியம்
ஆதி பகவன்– அடி அளந்தான் –தாமரைக் கண்ணன் -முப்பாலிலும் திருக்குறள் திருமாளையே வைத்து போற்றும்

———————-

ஸ்வயம் வியக்த ஷேத்ரங்கள் –
ஸ்ரீ ரெங்கம் /ஸ்ரீ முஷ்ணம் / திருமலை / வானமா மலை/சாளக்கிராமம்/நைமிசாரண்யம் /பத்ரிகாஸ்ரமம்

காவேரி விராஜா சேயம் வைகுண்டம் ரெங்க மந்த்ரம் ஸ்வர வாஸூ தேவோ ரங்கேச ப்ரத்யக்ஷம் பரமம் பதம்

பகல் பத்து அரையர் எடுத்துக் கொள்ளும் பாசுரங்கள்
1-அடியோமோடும் –திருப்பல்லாண்டு —
2-தன்னேராயிரம் –பெரியாழ்வார் -3–1-
3-சென்னியோங்கு –பெரியாழ்வார் —5–4–1-
4-மார்கழி திங்கள் –திருப்பாவை
5-ஆற்றிலிருந்து –நாச்சியார் -10-1-
6-கண்ணன் என்னும் கரும் தெய்வம் -13-1-
7-இருள் இரிய–பெருமாள் திருமொழி -1–1-
8-ஊனேறு செல்வம் –பெருமாள் திருமொழி -4-1-
9-காவலில் புலனை வைத்து –திருமாலை -1-
10-கண்ணி நுண் சிறுத் தாம்பு -1-
11-வாடினேன் வாடி –பெரிய திருமொழி -1–1–1-
12-பண்டை நான் மறை –பெரிய திருமொழி -5–7–1-
13-தெள்ளியீர்–பெரிய திருமொழி -8–2–1-
14-அக்கும் புலியின் –பெரிய திருமொழி -9–6–1-
15-முந்துற உரைக்கேன் -பெரிய திருமொழி -9–8–1-
16-இரக்கம் இன்றி –பெரிய திருமொழி –10–2–1-
17-மின்னுருவாய் –பட்டுடுக்கும் –திரு நெடும் தாண்டகம் -1-முதல் -10-வரை

பகல் பத்து -4–7–8–10-நாள்களில் முறையே கம்ச வதை / வாமனன் கதை /அம்ருத மதனம் / இராவணன் வதம் -நாடகங்கள் அரையர் நடித்து காட்டி அருளுவார்
பகல் பத்து –9-நாள் முத்துக் குறி -கட்டுவிச்சி யாக கொண்டு தலைவிக்கு நோய் இன்னது பரிகாரம் இன்னது என்று காட்டி அருளுவார்
இது ஆழ்வார் திரு நகரியில் -இறுதி -நாள் நடக்கும் / ஸ்ரீ வில்லி புத்தூரில் -ஆடிப் பூரம் உத்சவம் பத்தாம் நாள்
-எண்ணெய் காப்பு உத்சவம் ஒன்பதாம் நாள் /பங்குனி திருக்  கல்யாண உத்சவம் பத்தாம் நாள் நடைபெறும்
பகல் பத்தின் இறுதி நாள் திரு நெடும் தாண்டகம் சேவிக்கப் பட்டு அம்ருத மதனம் அபிநயனம் நடை பெரும்
முத்துக் குறி சேவைக்கு உரிய பாசுரங்கள் பட்டுடுக்கும் –11-பாசுரம் –தாய்- தலைவி -கட்டுவிச்சி மூவராகவும் அபிநயம்
அரையருக்கு திருக் கோயில் பட்டு அளிப்பர்
திருவடியில் கரு நெடுமால் பெறு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் -அம்ருத மதனம்-

இராப்பத்து திருவாய் மொழி -பாசுரங்கள் –
1–உயர்வற உயர்நலம் –1–1–1-
2–கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் –2–10–1-
3—ஒழிவில் காலம் எல்லாம் -3–3–1-
4—ஒன்றும் தேவும் -4–10–1-
5—எங்கனேயோ –5–5–1-
6—கங்குலும் பகலும் -7–2–1-
7–நெடுமாற்கு அடிமை -8–10–1-
8—மாலை நண்ணி –9–10–1-
9—தாள தாமரை –10–1–1-
10—முனியே நான் முகனே -10–10–1-

வேடு பறி உத்சவம் –வாடி வாடி
பிரளய கலகம் –மின்னொத்த நுண் இடை -பெருமாள் திருமொழி -6–3-/
காதில் கடுப்பு -துவரை உடுத்து -பெரிய திருமொழி –10–8–1-/-2-/ மின்னிடை மடவார் –திருவாய் –6-2-1-

——————————

Sri Ramanuja’s Period – 1017 to 1137 AD
Rajendra I 1012 to 1043 AD, Rajadhi Rajan I – 1018 to 1054 AD
, Rajendra II-1052 to 1063 AD, Rajamahendran-1058 to 1063 AD , Veera Rajendran- 1063 to 1070 AD , Athi Rajendran
1068 to 1071 AD , Kulothunga I -1070 to 1122 AD , Vikrama
Cholan- 1118 to 1135 AD , Kulothunga II – 1133 to 1150 AD ,
Rajaraja II – 1146 to 1163 AD
The Hoysala dynasty flourished during the period 1022 to
1342 AD. Nripakama 1022 – 1047 AD , Vinayaditya 1047 –
1098 AD, Ereyanga 1063 – 1110 AD , Vishnuvardhana 1110 – 1152
AD , Narasimha I 1152 – 1173 AD
Later Pandya Kings who were Rulers of the Pandya Kingdom
Kulasekara Pandian (1055-1110 AD), Satayavarman
Srivallaban (1101-1124 AD) , Manabaranan Satayavarman (1104-
1131 AD), Satayavarman Sri Vallaban (1131 – 1143 AD)

நாத முனிகள் அருளிச் செய்ததாக -நியாய தத்வம் -யோக ரகஸ்யம் -புருஷ நிர்ணயம் -கிடைக்க வில்லை இப்பொழுது
ஆளவந்தார் –சித்தி த்ரயம் -கீதார்த்த சங்க்ரஹம் -ஆகம ப்ரமாண்யம் -ஸ்தோத்ர ரத்னம் -சதுஸ் ஸ்லோகி -ஏழும் கிடைக்கின்றன -மற்ற ஒன்றான
மஹா புருஷ நிர்ணயம் கிடைக்க வில்லை
ஸ்ரீ மன் நாத முனிகள் –கீழை அகத்தாழ்வான் – ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்யார் /மேலை அகத்தாழ்வான் -ஸ்ரீ வரதாச்சார்யர்
-மருமகன்களை கொண்டு -காளம் வலம் புரி போல் இருவரையும் கொண்டு -திவ்ய கானம் அமைத்து அருளினார்
ஸ்ரீ வரதாச்சார்யர் ஸ்ரீ தர யோகாபதி என்ற யோக சாஸ்த்ர நூலும்-
-ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்யார் ஸ்ரீ தர யோக கல்ப தரு என்னும் யோக சாஸ்த்ர நூலும் அருளிச் செய்துள்ளார்
ஸ்ரீ வரதாச்சார்யர் திருக் குமாரர் ஸ்ரீ நிர்மல தாசர் ஸ்ரீ மன் நாத முனிகள் அருளிச் செய்த யோக சாரப்பரத்துக்கு வ்ருத்தி -விளக்கம் -அருளிச் செய்தார்
இவர் திருக் குமாரர் ஸ்ரீ ஞான வரஹாச்சார்யார்-ஸ்ரீ மன் நாத முனிகள் அருளிச் செய்த யோக சாஸ்திரத்துக்கு ஸ்ரீ பதாஞ்சலி அருளிச் செய்த
யோக சாஸ்திரத்துக்கு ஐக கண்ட்யம் அருளிச் செய்தார்
இவர் திருக் குமாரர் ஸ்ரீ குருகை காவல் அப்பன் -தை விசாகம் -திருக் குருகூரில் அவதரித்தவர்
822 —நாத முனிகள்-ஆனி மாதம் -சொட்டைக் குலம்/
உய்யக் கொண்டார் -886–சித்திரை -கார்த்திகை -பிணம் கிடைக்க மணம் புணருவார் உண்டோ -என்றவர்
929—மணக்கால் நம்பி –மாசி -மகம் –
976—ஆளவந்தார்-ஆடி -உத்ராடம் –ஸ்ரீ -ஈஸ்வர முனி க்கும் -ஸ்ரீ ரெங்க நாயகி தாயார் -க்கும் –
திருவரங்க பெருமாள் அரையர் -தெய்வத்துக்கு அரசு நம்பி -பிள்ளை அரசு நம்பி -சொட்டை நம்பி -நால்வரும் இவர் திருக் குமாரர்கள்
997 /–998–பெரிய நம்பி –மார்கழி கேட்டை -இவர் திரு மகளார் அத்துழாய் -இவர் சிஷ்யர் அணி அரங்கத்து அமுதனார் -நம் அமுதனார் திருத் தந்தை
987—திருக் கோஷ்டி யூர் நம்பி –செல்வ நம்பி குலம் –இயல் பெயர் -திருக் குருகைப் பிரான் -இவர் திருக் குமாரத்தி ஸ்ரீ தேவகி பிராட்டி
-இவர் திருக் குமாரர் தெற்கு ஆழ்வான்- ராமானுஜர் சீடர்
988—-திருமாலை ஆண்டான் -திருமால் இரும் சோலையில் திரு அவதாரம் -ஞான பூர்ணர்- இயல் பெயர் –
-பிரமேய ரத்னம் தத்வ பூஷணம் இரண்டு நூல்கள் அருளியவர்
நாலூர் ஆண்டான்- வங்கி புரத்து நம்பி இவர் சிஷ்யர்கள்
இவர் திருக் குமாரர் பெரியாண்டான் -சுந்தர தோளுடையான்
திருமலை நம்பி –வைகாசி ஸ்வாதி –
திருவரங்க பெருமாள் அரையர் -வைகாசி கேட்டை -1017-எம்பெருமானார் திருஅவதரித்த வருஷம் -ஆளவந்தார் ஸ்ரீ ரெங்க நாயகி -திருக் குமாரர்
திருக் கச்சி நம்பி —வீரராகவர் -தந்தை -கமலை -தாய் / கஜேந்திர தாசர் இயல் பெயர்
மாறனேர் நம்பி -ஆடி ஆயில்யம் -புராந்தகம் கிராமம்
தெய்வ வாரி ஆண்டான் -ஆளவந்தார் விஸ்லேஷத்தில் உடம்பு மெலிந்து
அம்மங்கி அம்மாள் -ஆளவந்தார் சிஷ்யர் -உடையவருக்கு -அக்னி ஜ்வாலையில் அகப்படாதே -அரு நஞ்சு தின்னாதே
-அ ஸூ சி மிதியாதே -அபலைகளோடு செறியாதே கிடீர்
பாஹ்ய குத்ருஷ்டிகள் சம்சாரிகளை சொன்னவாறு
வைத்த கையிலும் வாங்கிக் கொடுத்த கை தஞ்சம் -அபய ஹஸ்தம் விட உடையவர் திருக் கையே தஞ்சம் என்றவாறு
யாதவ பிரகாசர் -ஆளவந்தார் திரு கடாக்ஷத்தால் சுத்தி அடைந்து எம்பெருமானார் திருவடி பற்றி
-கோவிந்த ஜீயர் -திருநாமம் கொண்டு -யதி தர்ம சமுச்சயம் -கிரந்தம் அருளி உள்ளார் –
வடுக நம்பி -மாசி புனர்பூசம் -சர்வஜித் வருஷம் -சாளக்ராம ஐயன் திருத் தகப்பனார்
முதலியாண்டான் -சித்திரை புனர்பூசம் -ஆனந்த தீட்சிதர் திருத்  தகப்பனார் -தாயார் நாச்சியார் அம்மான்-ரகஸ்ய த்ரய கிரந்தம் அருளு உள்ளார் என்பர்
கந்தாடை ஆண்டான் -திருக் குமாரர்
நடாதூர் ஆழ்வான் -வரத விஷ்ணு இயல் பெயர் –திரு பேரனார் வாத்சல்ய வரதாச்சார்யார் –நடாதூர் அம்மாள்
எங்கள் ஆழ்வான் -சித்திரை ரோஹிணி -திரு வெள்ளறை -ஸ்வீகார புத்திரர் நடாதூர் அம்மாள்
எம்பார் –1026-குரோதன வருஷம் –விஞ்ஞான ஸ்துதி கிரந்தம் சாத்தி அருளி உள்ளார் என்பர்
1167—பெரியவாச்சான் பிள்ளை –சங்க நல்லூர் -ஆவணி -ரோஹிணி -தகப்பனார் யமுனா தேசிகர் -தாயார் நாச்சியார் அம்மான் -அபயப்பிரதராஜர்
சகல பிராமண தாத்பர்யம் -/ உபகார ரத்னம் /கத்யத்ரய வியாக்யானம் / தனி ஸ்லோக வியாக்யானம்
/ஸ்தோத்ர ரத்னம் சதுஸ்லோகி ஜிதேந்த்தா ஸ்தோத்ர வியாக்கியானங்கள் /சரம ரகஸ்யம் /
அனுசந்தான ரகஸ்யம் / நியமனப்படி /மாணிக்க மாலை / நவ ரத்ன மாலை /–போன்றவை அருளிச் செய்துள்ளார் –
கூர குலோத்தம தாசர் -ஐப்பசி திருவாதிரை
திருவாய் மொழிப பிள்ளை –வைகாசி விசாகம்
மா முனிகள் -ஐப்பசி மூலம் -திரு நா வீறுடைய பிரான் தாதர் அண்ணர்-திருத் தகப்பனார் /ஸ்ரீ ரெங்க நாச்சியார் திருத் தாயார்
ராமானுஜர் பொன்னடி / பெரிய ஜீயர் / யதீந்த்ர ப்ரவணர் / வர யோகி / வர வர முனி /
1268–ஸ்ரீ தேசிகன் –புரட்டாசி திருவோணம் -திருத் தகப்பனார் அனந்த ஸூ ரி / திருத் தாயார் தோதாரம்மா/

நாம்யார் திரு மண்டபம் யார் நம்பெருமான் தாமாகவே என்னைத் தனித்து அழைத்து -நீ மாறன்
செந்தமிழ் வேதத்தின் செழும் பொருளை நாளும் இங்கே வந்து உரை என்று ஏவுவதே வாய்ந்து –

பரிதாப வருஷ -ஆவணி திருப் பவித்ர திருநாள் –
நல்லதோர் பரிதாபி வருடம் தன்னில் நலமான ஆவணியில் முப்பத்தொன்றில் சொல்லரிய சோதியுடன் விளங்கும்
வெள்ளிக் கிழமை வளர் பக்கம் நாலாம் நாளில் செல்வமிகு பெரிய திரு மண்டபத்தில்
செழும் திருவாய் மொழிப் பொருளைச் செப்பும் என்று மணவாள மா முனிக்கு வழங்கினாரே-ஏத்தி இருப்பாரை வெல்லுமே அவர் தம்மை சாத்தி இருப்பார் தவம் –

க்ரோதந வருஷம் ஐப்பசி திருவோணம் -பிள்ளை லோகாச்சார்யார்
தம்பியுடன் தாசாரதி யானானும் சங்க வண்ண நம்பியுடன் பின்னடைந்து வந்தானும் -பொங்கு புனல்
-ஓங்கு முடும்பை யுலகாரியனும் அறம் தாங்கு மணவாளனுமே தான் –
இவர் சிஷ்யர்கள் -திருப் புட் குழி ஜீயர் –திருக் கண்ணங்குடிப் பிள்ளை -ஈயுண்ணி பத்ம நாதர் -நாயனாராச்சார்யர்
-கூர குலோத்தம தாசர் -திருமலை யாழ்வார்-விளாஞ்சோலைப் பிள்ளை -மணல் பாக்கத்து நம்பி -திகழக் கிடந்தான்
திரு நா வீறுடைய பிரான் தாதர் அண்ணன் (மா முனிகள் திருத் தகப்பனார் -ஸ்ரீ ரெங்க நாய்ச்சியார் -திருத் தாயார் )-
கொல்லி காவல தாசரான அழகிய மணவாள பெருமாள் பிள்ளை (மா முனிகள்-மாதா மகர் )-கோட்டூரில் அண்ணர்-நாலூர்ப் பிள்ளை –
ஈடு -நம்பிள்ளை –ஈயுண்ணி மாதவப் பெருமாள் -குமாரர் ஈயுண்ணி பத்ம நாதர் -இவர் சிஷ்யர் கோல வராஹா நாயனார்
-இவர் குமாரர் நாலூராச்சான் பிள்ளை -திருவாய் மொழிப் பிள்ளை -மணவாள மா முனிகள் –
நாதமுனி -823–917-
நம்பிள்ளை -1147–1252-
முதலாம் மாற வர்மன் குலசேகர பாண்டியன் வீர பாண்டியன் -1297-முடி சூடினான் -இந்த வீர பாண்டியன் கலியுக ராமன் என்ற
பெயர் உடன் இருந்தான் இவன் சகோதரன் –
சுந்தர பாண்டியன் -சுந்தர பாண்டியன் -பிள்ளை பராக்கிரம பாண்டியன் -10-வயசு முடி சூடிக் கொள்ளும் வரை
எட்டு ஆண்டுகள் -1326–1334-குந்தீ கொந்தகை நகர த்தில் அவதரித்த திருமலை ஆழ்வார் செங்கோல் –
கலகமிகு பஞ்சமுடன் கள்ளர் பற்றில் அகத்திருவர் காரியப்பேர் ஒருவர் வந்து
-பலம் அறிந்து பதம் பணிந்து பச்சை கட்டப் பாங்குடனே-வாங்கினால் போலே வாங்கி நீங்கி
நலம் மிகுந்த தனம் இதனை நம்பினோமேல் நம் பெருமாள் உம்பருடன் நயந்து வாழும்
இலகு மிகு பெரும் செல்வம் இல்லை என்று-ஏர் முடும்பை யுலகாரியனும் உரை செய்தானே -பிள்ளை லோகம் ஜீயர்
லோக குரும் குரு பிஸ் ஸஹ பூர்வை-கூர குலோத்தம தாஸம் உதாரம் -ஸ்ரீ நகபதி அபிராம வரே சவ்
தீப் ரசயான குருஞ்ச பஜேஹம் –மா முனிகள் -அருளிச் செய்த தனியன்
பிள்ளை லோகாச்சார்யார் -கூர குலோத்தம தாசர் -திருவாய் மொழிப பிள்ளை -அழகிய மணவாள பெருமாள் பிள்ளை
-திகழக் கிடந்தான் -அனைவரையும் வணங்கி அளித்த தனியன் –

——————————————————–

ஸ்ரீ கூரத் தாழ்வான் வைபவம்-

சீராரும் திருப்பதிகள் சிறக்க வந்தோன் வாழியே
தென்னரங்கர் சீர் அருளைச் சேருமவன் வாழியே
பாராரும் எதிராசன் பதம் பணிந்தோன் வாழியே
பாடியத்தின் உட் பொருளைப் பகருமவன் வாழியே
நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே
நாலூரான் தனக்கு முக்தி நல்கினான் வாழியே
ஏராரும் தையில் அத்தத்து இங்கு உதித்தான் வாழியே
எழில் கூரத் தாழ்வான் இணை யடிகள் வாழியே

பொருள் விரிக்கும் எதிராசர் பொன்னடியோன் வாழியே
பொன் வட்டில் தனை எறிந்த புகழுடையோன் வாழியே
மருள் விரிக்கும் முக்குறும்பை மாற்ற வந்தோன் வாழியே
மயர்வறவே மெய்ஞ்ஞானம் விளங்கிடுவோன் வாழியே
இருள் விரிக்கும் சிவம் இரட்டு எழுத்து இட்டோன் வாழியே
ஏதம் அற எவ்வுயிர்க்கும் இதம் அளித்தோன் வாழியே
அருள் விரிக்கும் அரங்கத்தான் அடி இணையோன் வாழியே
அழகாரும் கூரத் தாழ்வான் தன் அடி இணைகள் வாழியே

மட்டவிழும் பொழில் சூழ் குருகேசர் மறைத்தமிழ் வாழ்ந்திடு நாள்
மண்ணுலகில் ஸ்ரீ பாஷ்யம் விளங்கிட வந்து பிறந்தவர் நாள்
எட்டும் இரண்டும் இசைந்த சுலோகம் இசைத்திட வந்தவர் நாள்
இல்லை எனச் சிவம் என்று எதிரிட்டு எழுத்திட வந்தவர் நாள்
துட்ட குதிரிட்டிகள் மாயிகள் வாழ்வைத் துணித்திட வந்தவர் நாள்
சூரிய பூமியர் ஆரியர் என்று துதித்திட வந்தவர் நாள்
அட்ட திசைக்கும் நிறைந்த பெரும் புகழ் அந்தணர் வாழ் கூரத் தாழ்வான்
வந்து அருளிய நாள் தையில் விளங்கிடும் அத்தமது நன்னாளே –

சவ்ம்ய வர்ஷம் -தை மாசம் ஹஸ்தம் -ஸ்ரீ வத்சாங்க மிஸ்ரர் -திரு மறு மார்பன் /
ஹஸ்தகிரிநாதர் அண்ணா -மா முனி -போலே ராமானுஜர் கூர த் தாழ்வான் -/
பாவ ஜ்ஜேன க்ருதஜ்ஜேன தர்மஜ்ஜேன ச லஷ்மண த்வயா புத்ரேண தர்மாத்மா ந சம்வ்ருத்த பிதா மம -போலே
ஆளவந்தார் திரு நாட்டுக்கு எழுந்து அருளினாராக நினைக்க வில்லை என்று போரப் பொலிய கொண்டாடி அருளினார் எம்பெருமானார் –
சோளஸ்யா ஸ்ருதிகடு சேஷ்டிதம் யதீந்த்ர -ஸ்ருத்வாத ஸ்ரித விமலாம் பரஸ் ச ரங்காத்-ஸ்ரீ ரங்கின்
அவ தவ தாம தர்ச நஞ்ச இத்யுக்த்வா ப்ராஸ்தித விநிவேஸ்ய கூர நாதம் –திவ்ய ஸூ ரி சரிதம் –74-ஸ்ரீ கருட வாகன பண்டிதர்
ஆநைஷீத் ந்ருபஸவிதம் மஹார்ஹ பூர்ணம் -ஸ்ரீ ரெங்காத் ஸஹ யதி வேஷ கூர பர்த்ரா -77-
காஷாயத்ருத் கூர பதிஸ் த்ரி தண்டீ ப்ராயான் மஹா பூர்ண யுதஸ்து தத்ர -வாத்ஸ் யேச முக்யைஸ் சஹிதோ
யதீச சுக்லாம் பர ப்ராப திசம் ப்ரதீஸீம் -95-யதிராஜா வைபவம் வடுக நம்பி
சிவாத் பரதரம் நாஸ்தி –த்ரோணம் அஸ்தி தத பரம்
அவிஜ் ஞாதா –சர்வஞ்ஞதாம் ஏவ முபால பாமஹே த்வம் ஹ்யஜ்ஞ ஏவ ஆஸ்ரித தோஷ ஜோஷண -என்று
தம் தமப்பனார் அருளிச் செய்த ஸ்லோகம் என்று பட்டர் அருளிச் செய்துள்ளார் –
சரம ஸ்லோக வியாக்யானம் -நித்யம் -யமகரத்நாகரம் -ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் வியாக்யானம் பண்ணி அருளியதாகவும் சொல்வர்
அர்வாஞ்சோயத் பத சரஸிஜ த்வந்த்வம் ஆஸ்ரிதய பூர்வே மூர்த்நா யஸ்ய அந்வய முபகதா தேசிகா முக்திமாபு –
சோயம்ந் ராமானுஜ முநிரபி ஸ்வீய முக்திம் கரஸ்தாம் -பத சம்பந்தாத் அமநுத கதம் வர்ண்யதே கூர நாத —

————————————–

முதல் கொத்து –திருப்பதியார் -முன்பு கோயில் சம்பந்தம் அற்று தம் திருவடிகளை ஆஸ்ரயித்த திருக் குருகை பிரான் -திருப் பாற் கடல் தாசர் போல்வார் –
இரண்டாம் கொத்து –திருப் பணி  கொள்வார் -திரு நாமம் சாத்தி –திருத் தாழ்வாரை தாசர் வம்சத்தார் -ஐந்து திரு நாமம் சாதித்து
திருக் குருகூர் தாசர் -நாலு கவி பெருமாள் தாசர் -சடகோப தாசர் -திருக் கலிகன்றி தாசர் -ராமானுஜ தாசர் –
மூன்றாம் கொத்து –பாகவத நம்பிமார்
நான்காம் கொத்து –உள்ளூரார்
ஐந்தாம் கொத்து –விண்ணப்பம் செய்வார் -அரையர்
ஆறாவது கொத்து –திருக் கரகக் கையார் -திருவரங்க வள்ளலார் தூய மணி வேழம்-சிஷ்யர்களுக்கு திரு மஞ்சன கைங்கர்யம்
ஏழாவது – ஸ்தானத்தார்
எட்டாவது பட்டான் கொத்து –கருட வாகன பண்டிதர் -பெரிய நம்பி -ஆழ்வான்-கோவிந்த பெருமாள் -அமுதனார் -பிள்ளான் போன்றவர்கள்
ஒன்பதாவது – ஆரிய பட்டாள்
பத்தாவது – தாசன் கொத்து புண்டரீக தாசர் கைங்கர்யம்

—————————————————————-

ஸ்ரீ  கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: