ஸ்ரீ ஜெகதாச்சார்யர் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர் வைபவம் —

ஸ்ரீ பவ்ஜங்கம் வபுர பஹாய சேஷ போகி யத் ரூபம் திரிபுவன வந்திதம் ஜகாம-
வேதாந்த சித்தாந்த சமர்த்த நாய பாஹ்யாந்தர ப்ராந்த மதாப நுத்த்யை சேஷாம் சக கேசவ யஜ்வ தேவ்யாம் தேஜோ நிதி ஸீத் கச்சி திஹா விரா ஸீத் —
அனந்த பிரதம ரூபம் லஷ்மணஸ்து தத் பரம் பல பத்ரஸ் த்ருதீயஸ்து கலவ் ( ராமாநுஜஸ் ஸ்ம் ருத )–கச்சித் பவிஷ்யதி -பாட பேதம் ஆர்ஷ வசனம்
காஷாய ஸோபி காம நீய சிகா வேசம்-தண்ட த்ரய உஜ்ஜ்வல கரம் -விமலோப வீதம் –உதயத்தி நேச நிப முல்லச தூர்த்வ புண்ட்ரம்
ரூபம் தவாஸ்தி யதிராஜ த்ருசோர் மமாக்ரே –
உபவீதிந மூர்த்தவ புண்ட்ர வந்தம் த்ரி ஜகத் புண்யபலம் த்ரி தண்ட ஹஸ்தம் சரணாகத தார்த்தவாஹ மீடே சிகயா சேகரிணம் பதிம் யதீ நாம் –

ஸ்ரீ மத்யாம் பூத புர்யாம் அதி தரணி தலம் சேஷ ஆவிர் பபூவ-ஸ்ரீ அனந்தாழ்வான் -ஸ்ரீ வேங்கடேச இதிஹாச மாலா
சேஷாம் சக கேசவ யஜவ தேவ்யாம் -ஸ்ரீ வடுக நம்பி -ஸ்ரீ யதிராஜ வைபவ கிரந்தம்
பவ்தத்வாந்த சஹஸ்ராம்சு -சேஷ ரூப பிரதர்ஸக -ஸ்ரீ வடுக நம்பி -ஸ்ரீ ராமானுஜ அஷ்டோத்தர சதா நாம ஸ்தோத்ரம் -23-
பவ் ஜங்கம் வபுர பஹாய சேஷ போகீ யத் ரூபம் திரிபுவன வந்திதம் ஜகாம-ஸ்ரீ கருட வாஹந பண்டிதர் -ஸ்ரீ திவ்ய ஸூரி சரிதம் –
சைத்ரார்த்ரா சம்பவம் விஷ்ணோ தர்சன ஸ்தாபன உத் ஸூ கம் துண்டீர மண்டலே சேஷ மூர்த்திம் ராமானுஜம் பஜே –ஸ்ரீ ப்ரஹ்ம தந்த்ர ஸ்வாமி பணித்த திவ்ய ஸூரி ஸ்தோத்ரம்
அனந்த பிரமம் ரூபம் லஷ்மணஸ்து தத பரம் பல பத்ரஸ் த்ருதீ யஸ்து கலவ் ராமானுஜ ஸ்ம்ருத–நல்லார் பரவும் இராமானுசன்

ஸ்ரீ சடரிபு ரேக ஏவ கமலாபதி திவ்ய கவி மதுர கவிர் யதா ச சடஜின் முனி முக்ய கவி
யதி குல புங்க வஸ்ய புவி ரங்க ஸூதாக விராட் வரவர யோகிநோ வரதராஜ கவிச் ச ததா-

திருமா மகள் கொழுநனை கவி பாடியவர்களில் எப்படி ஸ்ரீ நம்மாழ்வார் சிறப்புப் பெற்றவரோ
அந்த ஸ்ரீ நம்மாழ்வாரைக் கவி பாடித் துதித்தவர்களுள் ஸ்ரீ மதுரகவிகள் எப்படி சிறப்புப் பெற்றவரோ –
ஸ்ரீ எம்பெருமானாரைக் கவி பாடித் துதித்தவர்களுள் திருவரங்கத்தமுதனார் எப்படி சிறப்புப் பெற்றவரோ
அப்படியே ஸ்ரீ மணவாள மா முனிகளின் திருவடிகளை பணிந்து உய்ந்தவரான ஸ்ரீ எறும்பி அப்பாவின் பெருமையை சொல்ல வந்த ஸ்லோகம் –

ஸ்ரீ ரெங்காம் ருதக விராஹ ரங்கிப்ருத்ய -தத் சிஷ்யோ யதிபதி வைபவ அநு பந்தம்
அந்தாதி த்ரமிட கிரா மஹா பிரபந்தம் காதா நாம் அம்ருத முசாம் யுதம் சதேக-என்று-

ஸ்ரீ கருட வாகன பண்டிதர் பணித்த திவ்ய ஸூ ரி சரிதம் -18-சர்க்கம் –51-
திருவரங்கத் தமுதனார் உடைய அமுத பெருக்கை புகழ்ந்து அருளி உள்ளார் –

பங்குனி திங்கள் -ஹஸ்த நக்ஷத்ரம் -மூங்கில் குடி -அஷ்ட பிரபந்தம் அருளிச் செய்த பிள்ளை பெருமாள் ஐயங்கார்
-ஸ்ரீ பராசர பட்டர் திருவடி சிஷ்யர் – இவர் திருப் பேரனார் -திரு மகனார் -என்றும் சொல்வர் –
அமுதனார் நம்மையே நம்பி இருந்தவர் உம்முடைய திரு உள்ளம் -என்று சொப்பனத்தில் புறப்பாட்டுக்கு காத்து இருக்க
-மாற்றுவதில் அழகிய மணவாளனுக்கு திரு உள்ளம் இல்லை –
பெருமாள் கோயிலுக்கு போக கூரத் தாழ்வானுக்கு ஸ்டொள்ள -திருத்தி பணி கொள்ள அருளிச் செய்து இருப்பான் ஸ்வாமி திரு உள்ளம் விண்ணப்பிக்க
திருத்தும் பணியை நீயன்றே செய்யும் என்று சாதித்தாராம் – பெரிய பிராட்டியாரும் அமுதனார் தம் பரிகரம் என்று சொப்பனத்தில் சாதித்து அருளினார் –
புராண படலம் புரோகிதம் சாவி மூன்றையும் வாங்கி -அரையர் இடம் -இயற்பா பிச்சையாக கேட்டு வாங்கி அமுதனாருக்கு கொடுக்க –
அடைய வளைந்தான் அருகில் தென்னந்தோப்பில் இருந்து அருளிச் செய்த பிரபந்தம் –
சப்த ஆவரணம் -புறப்பாடு -வீதிகள் கூடும் இடம் தான் வாத்ய கோஷம் -அழகாக திருச் செவி சாத்தி இன்றும் நம் பெருமாள் கேட்டு அருளுகிறார் –
பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் மூன்றாவது பரம்பரை ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் –
இயலும் பொருளும் இசையத் தொடுத்து ஈன் கவிகள் அன்பால் மையல் கொண்டு வாழ்த்தும் இராமானுசனை-என்று அருளிச் செய்வதால்
இது போலே பலவும் இருந்தாலும் இது ஒன்றையே ஸ்ரீ ராமானுஜர் அங்கீ கரித்து அருளினார் -என்று தேறும் –

உறு பெரும் செல்வமும் –19-/ கூட்டும் விதி என்று கூடுங்கொலோ–29-/கூறும் சமயங்கள் ஆறும் குலைய -46 -/
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன -54–/ பண்டரு மாறன் பசும் தமிழ் -64-/ கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் -88–விசேஷணமான பாடல்கள் –
கோயில் திருமலை பெருமாள் கோயில் -திவ்ய தேச ஆதராதி அதிசயம் —31–/35—/42—/ 47–/ 49–/76–/81–/91–/106—பாசுரங்கள் பேசும் —–
ஸ்வாமி யுடைய சகலகலா வல்லபத்வம் -சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை இல்லா அற நெறி யாவும் தெரிந்தவன் -44-
ஞானம் கனிந்த நலம் கொண்டு -66-இன் சுவை மிக்க பாசுரம் –ஸ்வாமி நிர் ஹேதுக்க கிருபையினால் மோக்ஷம் அளிப்பதை குறிக்கும் –
ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள் தொறும் நைய வேண்டும் -விலை அபரிமிதம் -பேரம் பேச முடியாது -கடனாக அளிக்க மாட்டான் –
மூன்று வித கஷ்டங்களும் இல்லையே உடையவர் இடம்
-எம்பருமானும் -தத்தே ரங்கீ நிஜ மபி பதம் தேசிகா தேச காங்ஷி-ந்யாஸ திலகம் -ஆச்சார்யர் நியமனத்தை எதிர்பார்த்தே அருளுகிறான் –
தேவு மற்று அறியாத தமது பக்தி பெரும் காதலை –செய்த் தலைச் சங்கம் செழு முத்த மீனும் -75-/ நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் -76- /
திருவடித் தாமரைகளை தந்து அருள பிரார்த்திக்கிறார் -நம்மாழ்வார் பாரித்த ஒழிவில் கால கைங்கர்யம் -ஆழ்வார் உகந்தது என்று
தேவரீர் உகந்து இருக்கலாம் –அடியேன் அத்தை -பிரார்த்திக்க வில்லை
மாக வைகுந்தம் காண என் மனம் ஏகம் எண்ணும் இராப் பகல் இன்றியே -இத்தையும் தேவரீர் ஆழ்வார் உகந்து என்று
உகக்கலாம் -அடியேன் இத்தையும் பிரார்த்திக்க வில்லை
பொங்கிய பாற் கடல் பள்ளி கொள்வானை புணர்வதோர் ஆசை -என்று ஆண்டாள் விரும்பியதை தேவரீர் உகக்கலாம்
-அடியேன் இத்தையும் பிரார்த்திக்க வில்லை
எம்பெருமானார் திருவடிகளே சரணம் -உய்ய ஒரே வழி உடையவர் திருவடி -என்பதால் உம் திருவடிகளையே சேம வைப்பாக தந்து அருள வேணும் -என்கிறார் –

முக்தியோ சிலரது சொத்து என இருக்கையில் இது தமிழ் நாடு தன் யரும் தவப் பயனாய் இராமானுஜனை ஈன்றதன்றோ
–பாரதிதாசனும் சொல்லும் படி அன்றோ நம் ஜெகதாச்சார்யர் ஸ்ரீ ராமானுஜர் வைபவம்

ஸ்ரீ யதிராஜம் -ஸ்ரீ -ராமானுஜம் –ஸ்ரீ -லஷ்மண முனிம் -ஸ்ரீ பாஷ்யகாரம் -சதா ஸ்மராமி-ஸ்ரீ யதிராஜம்-
ஸ்ரீ பாஷ்ய காரம்- ஸ்ரீ லஷ்மண முனிம் -ஸ்ரீ யதிராஜம் -ஸ்ரீ ராமானுஜம்
காஷாய ஸோபி யதிராஜம் -யதிராஜம்
யதிராஜம் கம நீய சிகானி வேஷம் ராமானுஜம் ராமானுஜம்
தண்ட த்ரய உஜ்வலா கரம் லஷ்மண முனிம் லஷ்மண முனிம்
விமலோபவீதம் ஸ்ரீ பாஷ்யகாரம் ஸ்ரீ பாஷ்ய காரம்
உதயத்தி நேச நிப பந்தம் யதி சேகரம்
உல்லச ஊர்த்வ புண்டரம் ராமானுஜம்
ரூபம் தவாம்ஸ்து யதிராஜம் லஷ்மண முனிம்
திருஷோர் மாமாத்ரி யதிராஜம் ராமானுஜம்
உபவீதிநம் ஊர்த்வ புண்டரம் வந்தம்
த்ரிஜக புண்ய பலம் த்ரிதண்ட ஹஸ்தம் சரணாகத சார்த்வமாஹம் ஈடே -சதா ஸ்மராமி-ஸ்ரீ யதிராஜம்-

தஸ்மை ராமாநுஜார்யாய நம பரம யோகிநே–யஸ்மை ஸ்ருதி ஸூ த்ராணாம் அந்தர் ஜுரம் அஸீ சமத் —

————————————–

நித்ய விபூதி மங்களா சாசனம் –

தென் திசை நோக்கி திருவரங்கத்தம்மான் மங்களா சாசனம்

எச்சரிக்கை ஸ்வாமி எச்சரிக்கை –
ஆராமம் சூழ்ந்த அரங்க நகர் வாழ அன்போடு தென்திசை நோக்கி அருள வேணும்
உபய விபூதி நாயகா எச்சரிக்கை –
பராக் ஸ்வாமீ பராக் –

துளங்கு நீண்முடி அரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு
உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு நாழிகை ஏழுடன் இருப்ப
வளம் கொள் மந்திரம் மற்று அவர்க்கு அருளிச் செய்தவாறு அடியேன் அறிந்து உலகம்
அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே –

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல் கோடி நூறாயிரம்
மல்லாந்த திண் தோள் மணி வண்ணா உன் சேவடி செவ்வி திருக் காப்பு
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வள மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
படை போர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டு –

ஜய விஜயீ பவ –

—-

அருளப்பாடு திருவரங்கச் செல்வனார் செங்கோல் செலுத்தும் விபூதி த்வய நித்ய அதிகாரிகள் -நாயந்தே நாயந்தே-
ஸ்ரீ வாஸூ தேவ உபநிஷத்

ஸ்ரீ ஹரி ஓம்
ச வா ஏஷ மஹா நஜ ஆத்மா அந் ணாதோ விந்ததே வ ஸூ
யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம்
யோ வை வேதாம்ச்ச ப்ராஹினோதி தசமி
தகும்ஹ தேவ மாத்ம புத்தி பிரகாசம்
முமுஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே
இத்யதா ஹோ வாச
விஷ்ணு சயனம் ப்ரபத்யே சத் குரூன் ப்ரபத்யே
சாத்விகான் பிரபத்யே ரூசோ வாசம் ப்ரபத்யே
மநோ யஜூ ப்ரபத்யே சாம புராணம் ப்ரபத்யே
சஷூ ஸ்ரோத்ரம் ப்ரபத்யே வாகோஜஸ் ஸஹ ஓஜோ மாம் ப்ரபத்யே
பிராணாயாமம் ப்ரபத்யே பிரணவம் ப்ரபத்யே
சத்யம் ப்ரபத்யே ச்ராத்தம் ப்ரபத்யே
பரமாத்மனே ப்ரபத்யே வா ஸூ தேவம் ப்ரபத்யே
பாகவதாய ப்ரபத்யே பக்தா நாம் ப்ரபத்யே –
ஓம் ப்ரபத்யே ஸ்ரீம் ப்ரபத்யே ஸ் ரியம் ப்ரபத்யே
யத் வேதா திவ்ய காயத்ரீ யாஞ்சேதி
ததேஷாப் யுக்தா ததேவ பூதம் தாதுபாஸி தவ்யம் சத்யந்தத் த்வயம்
ஸ்ரீ மன் நாராயண சரணவ் சரணம் பிரபத்யே
இதம் பூர்ண மத பூர்ணம் பூரணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ண மேவா வசிஷ்யதே
சர்வம் பூர்ணகும் ஸஹோம்
ஸ்ரீ மாதே நாராயணாய நம
கம் ப்ரஹ்மா கம் வாயு கம் புராணம்
கமிதீஹஸ்மாஹா கௌர வவ்யா ணீ புத்ர
வேதோயம் ப்ராஹ்மணா வித்து
வேதே நாநேந வேதி தவ்யம் –
வாழி எதிராசன் வாழி எதிராசன் வாழி எதிராசன் என வாழ்த்துவர் வாழி என
வாழ்த்துவர் வாழி என வாழ்த்துவர் தாளிணையில் தாளிணையில் தாழ்த்துவார் விண்ணோர் தலை

சாருவாக மதம் நீறு செய்து சமணச் செடிக் கனல் கொளுத்தியே -சாக்கியக் கடலை வற்றுவித்து மிகு சாங்கியக் கிரி முறித்திட
மாறு செய்திடு கணாத வாதியர்கள் வாய் தகர்த்தார் மிகுத்து மேல் வந்த பாசுபதார் சிந்தியோடும் வகை வாத்து செய்த வெதிராசனார்
கூறு மா குரு மதத்தோடு ஓங்கிய குமாரிலன் மதமவற்றின் மேல் கொடிய தர்க்க சாரம் விட்ட பின் குறுகி மாயவாதியரை வென்றிட
மீறி வாதில் வரு பாற்கரன் மத விலக்கடிக் கொடி எறிந்து போய் மிக்க யாதவ மாதத்தை மாய்த்த பெரு வீரர் நாளும் மிக வாழியே –

ஜய விஜயீ பவ –

————————–

லீலா விபூதி மங்களா சாசனம்
வட திசை நோக்கி திருவேங்கடமுடையான் மங்களா சாசனம்
வட திசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் வேங்கடங்கள் வாழ வட திசை நோக்கி அருள வேணும்

உபய விபூதி நாயகா எச்சரிக்கை -பராக் ஸ்வாமீ பராக்

அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை யுறை மார்பா
நிகரில் புகழாய் உலகம் மூன்று உடையாய் என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகல் ஓன்று இல்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே –

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல் கோடி நூறாயிரம்
மல்லாந்த திண் தோள் மணி வண்ணா உன் சேவடி செவ்வி திருக் காப்பு
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வள மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
படை போர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டு –

ஜய விஜயீ பவ –

——————————-

அருளப்பாடு பராசர பாரஸர்யாதி ப்ரணீத நிகில சம்ஸ்க்ருத நிகம ரகஸ்யாதிகாரிகள்

நாயந்தே நாயந்தே –

———————-

த்வய உபநிஷத்

ஸஹ நாவவது ஸஹநவ் புநக்து ஸஹ வீர்யம் கரவா வஹை
தேஜஸ் விநாவதீத மஸ்து மாவித் விஸா வஹை ஓம் சாந்தி சாந்தி சாந்தி

அஷ்டா தச பஞ்ச விம்சத்ய ஷராணி
பஞ்சத சா ஷரம் பூர்வம் தசா ஷரம் பரம் நவா ஷரம் பிரதம பதே
த்வதீய த்ருதீய சதுர்த்தே த்ர்ய ஷராணி
பஞ்சா ஷரம் பஞ்சமம் த்வய ஷர ஷஷ்டா
ஏகா ஷரபத பிரதம ஏகாஷரோ த்வதீய சதுர்த்தாஷரஸ் த்ருதீய
சதுர்த்த பஞ்சம ஷஷ்ட சப்தம ஏதே த்ர்யஷராணி
அஷ்டமோக்ஷர சத்திரத்தை த்வயக்ஷரோ நவம
தசமே த்ர்யஷராணி எதன் மந்த்ராஸ் ச பிரபத்தி
பூர்வே நாராயண ப்ரோக்தா நாதி சித்தோ
மந்த்ர ரத்னா சதாசார்ய மூல
ஆச்சார்யோ வேத சம்பன்நோ விஷ்ணு பக்தோ விமத்சர
மந்த்ரஜ்ஜோ மந்த்ர பக்தஸ் ச சதா மந்த்ரார்த்த விஸ்ஸூசி
குரு பக்தி சமா யுக்த புராணஜ்ஜோ விசேஷத
ஏவம் லக்ஷண சம்பன்நோ குரு ரித்யபி தீயதே
யத் ஸக்ருத்ச் சாரணே சம்சார விமோசனம் பவதி
சப்த ஜென்ம க்ருதம் பாபம் தத் க்ஷ
சர்வ வேத பாராயண புண்யம் லபதே
ஸ்ரீ மன் நாராயணஸ்ய ப்ரியோ பவதி
ய ஏவம் வேத இத்யுபநிஷத்

ஸஹ நாவவது ஸஹநவ் புநக்து ஸஹ வீர்யம் கரவா வஹை
தேஜஸ் விநாவதீத மஸ்து மாவித் விஸா வஹை ஓம் சாந்தி சாந்தி சாந்தி –

——————————-

முதல் உத்சவம்
ஸ்ரீ விஷ்ணு புராணே பராசர –

யோ அநந்த பட்யதே சித்தை தேவ தேவர்ஷி பூஜித
யஸ் சஹஸ்ர சிரா வ்யக்த ஸ்வத் சிகாமல பூஷணா

கந்தர்வா பிரசரச சித்தா கிந்ந ரோரக சாரணா
நாந்தம் குணாநாம் கச்சந்தி தேநா நந்தோஸ் யமவ்யய

நாரதீய புராணே ஸ்ரீ யாதவ கிரி மஹாத்ம்யே-

அநந்த பிரதமம் ரூபம் த்ரேதாயும் லஷ்மணஸ் ததா
த்வாபர பல பத்ரஸ்து கலவ் கஸ்சித் பவிஷ்யதி

ஜய விஜயீ பவ –

——————————————————

இரண்டாம் உத்சவம்

ப்ரஹ்ம புராணே

குருகா மஹாத்ம்யே ப்ராஹ்மணம் பிரதி பகவான்

காலாந்தரே து மச் சக்த்யா பூயோ புஜக நாயக
நிர் நித்ர தீந்த்ரிணீ சத்வம் யேஷ்யத் யத்ர மயேரித

ஸ்ரீ வ்ருத்த பாத்மே குருகா மஹாத்ம்யே ஸூ த்ரவதீ பிரதி ஸ்ரீரீ

தத கலி யுகஸ்யாதவ் வைசாக்யாம் விஸ்வ பாவன
விஷ்ணு பக்தி ப்ரதிஷ்டார்த்தம் சேநேசோ அவதரிஷ்யதி
தத காலேந மஹதா விநஷ்டாம் புவி தத்க்ருதிம்
நாத நாமா முனிவரோ யோகஜ்ஜோ தமவாபஸ் யதி
தத காலே பஹுதிதே விநஷ்டாம் விஷ்ணு வர்த்திநீம்
த்ரி தண்ட மண்டிதோ தேவ முனி ப்ரவ்யக்தயிஷ்யதி
ஸ்ரீ மன் மஹா பூத புரே ஸ்ரீ மத் கேசவ யஜ்வன
காந்தி மத்யாம் ப்ரஸூதாய யதி ராஜாய மங்களம்

ஜய விஜயீ பவ –

————————

மூன்றாம் உத்சவம்

ஸ்காந்த புராணே வைஷ்ணவ ஸம்ஹிதாயாம் ஸ்கந்தாகஸ்த்ய சம்வாதே ஹாரீதம் பிரதி பகவான்

ராஜன் கலியுகே ப்ராப்தே தர்மே நஷ்டே ஸ்ருதீரிதே
மத் பக்த சர்வ தர்மஞ்ஞ தவ கோத்ர ஸமுத்பவ
சாரீரக மஹா பாஷ்ய கிரந்த கர்த்தா ஜிதேந்த்ரிய
வேதாந்த வித்தம கஸ்சின் மஸ்கரீ ப்ராஹ்மணோத்தம
அஸ்மின் மஹாபூத புரே பவிஷ்யதி ந சம்சய
தஸ்ய சம்பாவிந சிஷ்யா ஸூராணாமபி துர்கமம்
மாம் ப்ராப்ய ப்ராப்த நிர்வாணா பவிஷ்யந்தி கலவ் யுகே
ஸ்ரீ மன் மஹா பூத புரே ஸ்ரீ மத் கேசவ யஜ்வன
காந்தி மத்யாம் ப்ரஸூதாய யதி ராஜாய மங்களம்

ஜய விஜயீ பவ –

—————————————–

ஸ்ரீ கண்ணபிரானும் ஸ்ரீ ராமானுஜரும்

-1-திருவவதாரம் சிறைக் கூடம் -அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே –திருவாய் -1–3–11-
இருள் நாள் பிறந்த அம்மான் அவன் -வேண்டித் தேவர் இரக்க-வீங்கிருள் வாய் வந்து பிறந்தான் –
-இருள் தரும் மா ஞாலத்தில் இருள் மலிந்த இடத்தே அன்றோ இருவரும் திருவதரித்தார்கள்
-2-அவன் வடமதுரையில் பிறந்து -திருவாய்ப்பாடியிலே வளர்ந்து -ஸ்ரீ துவாரகை நிர்மாணித்து முதுமையில் இருந்தது போலே
ஸ்ரீ பெரும் புதூரில் பிறந்து -ஸ்ரீ காஞ்சிபுரத்தில் வளர்ந்து ஸ்ரீ ரெங்கம் -தென்னரங்கம் கோயிவ் முற்றும் சிறக்க இருந்தார்
திரு மந்திரத்தில் பிறந்து த்வயத்தில் வளர்ந்து -அனுசந்தானமும் அனுஷ்டானமும் செல்வ வாழ்ச்சியாக கொண்டவர்கள் –
-3-மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில் சிக்கன வந்து பிறந்து நின்றாய் –பெரியாழ்வார் -5–3–1-
அதே போல் ஸ்வாமி உடன் பிறந்தவர் பலர் இருந்தாலும் பிறந்ததும் இறந்ததும் தெரியும் -ஒழிய உலகுக்கு வேறு நன்மை இல்லையே
-4-வட மதுரையில் இருந்து திருவாய்ப்பாடிக்கு எழுந்து அருளும் பொழுது -வஸூ தேவோ வஹன் கிருஷ்ணம் ஜானு மாத்ரோ தகோ யயவ்-என்றபடி
பெரு வெள்ளமும் முழம் தாளாக வற்றினது போலே ஸ்வாமி சஞ்சரிக்கத் தொடங்கும் போதே
-பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால் -போலே வற்றத் தொடங்கிற்றே –
-5-பெருமைகளை மறைத்து இடக்கை வலக்கை அறியாத ஆயர்கள் உடன் கலந்து போலே ஸ்வாமியும் மிக ஞான சிறு குழவியாய்
ஞான சக்தி பெருமைகளை எல்லாம் மறைத்துக் கொண்டு அறிவிலா மனிசரோடு கலந்தார்
தன்னை வதைக்க வழி பார்த்து இருந்த அஸூர ப்ரக்ருதிகளோடும் கலந்தால் போலவே ஸ்வாமியும் தம்மை மாய்க்க எண்ணிய யாதவ பிரகாசர்
போல்வார் இடத்திலும் காலம் கழித்தது உண்டே
-6-கம்ச ப்ரயுக்தா கில காபி மாயா -பூதனை -போலே பிரகிருதி விஷம் போலவே இருந்தும் போக்யதா புத்தி உண்டு பண்ணி
ஈடுபடுத்த வைத்தாலும் ஸ்வாமி யுடைய அளவற்ற பெருமையால் தானே முடிந்து போனதே –
-7-கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி -செய்து அருளினால் போலே ஸ்வாமியும் நரகம் சுவர்க்கம் போகும் வெளி செல்லுமதான கள்ளச் சகடம் ஒழித்து
அர்ச்சிராதி மார்க்கம் ஆகிய நல் வழியில் செல்லும் சாதனமே மேம் பட்டு இருந்ததே –
-8-த்வந்தம் -முறித்த -யாமளார்ஜுன மரங்களை முறித்தது போலே த்வந்தம் -இன்பு துன்பு -அஹங்கார மமகாரம் –காம க்ரோதம்
புண்ய பாபம் -ஸ்வாமி திருவடி சம்பந்தத்தால் இற்று ஒழிந்தன
-9-வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே–வாயுள் வையகம் கண்டா மட நல்லார் -போலே ஸ்வாமி யும்
ஸ்ருதிகள் -ஸ்ம்ருதிகள் -இதிகாசங்கள் -புராணங்கள் – பாஞ்ச ராத்ரங்கள் -அருளிச் செயல்கள் -ஆச்சார்யர் ஸ்ரீ ஸூ க்திகள் -ஏழையும்
தம் திரு வாக்கிலே அன்பர்களுக்கு காட்டி அருளுவார் –
-10-காளியன்-குதர்க்க வாதிகள் / யமுனை -வேதம் /தூய பெரு நீர் யமுனைத் துறைவன் போலே பகவத் சம்பந்தம் மாறாத வேதம் –ஸ்வாமி -ஐந்து துர்வாதங்கள்
ஈஸ்வரனே இல்லை / உண்டு என்பாரும் அனுமானத்தால் என்பர் /சாஸ்திரங்களை கொண்டு நிர்வகித்தாலும் குணங்கள் விக்ரஹம் இல்லை என்பர்
/ஒரு ஈஸ்வரன் இல்லை பலர் என்பர் /பிரபஞ்சமே இல்லை சர்வம் ஸூன்யம்-என்பர் -ஆகிய ஐந்து வகை அபார்த்தங்களையும் போக்கி
காளிய நர்த்தனம் போலே நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலை கண் மீதே -என்று கூத்தாடப் பெறுதலும் உண்டே
-11-கேசி ஹந்தா போலே இந்திரியாணி ஹயா நா ஹூ -ஜிதேந்த்ரியராய்-காமாதி தோஷ ஹர மாத்ம பாதாச்ரிதா நாம் -என்றும்
மதன கத நைர் ந க்லிஸ்யந்தே யதீஸ்வர ஸம்ஸரையா -என்றும் சொல்லும் படி வாழ்ந்தவர் ஸ்வாமி –
-12-விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே -கன்று கொண்டு விளங்கனி எறிந்து -போலே முள்ளைக் கொண்டு முள்ளை களைகின்றபடி
புற மதங்களை பரஸ்பர வ்யாஹதங்களாய் இருக்கும் படியை நன்கு நிரூபித்திக் காட்டி அவைகளைக் கொண்டே அவைகளை மறுத்து ஒழிப்பவர் –
-13-குன்று எடுத்து தேவதாந்த்ர பஜனம் தவிர்த்தால் போலே ஸ்வாமியும் -சாஷாத் நாராயணோ தேவ -க்ருத்வா மர்த்ய மயீம் தநும்
மக்நா நுத்தரதே லோகான் காருண்யாத் சாஸ்த்ர பாணிநா -என்றும் பீதாக வாடைப் பிரானார் பரம குருவாகி வந்து -என்றும்
-குற்றம் செய்தவர்கள் பக்கல் பொறையும் கிருபையும் சிரிப்பும் உகப்பும் உபகார ஸ்ம்ருதியும் நடப்பவர் ஆகையால் தீங்கு இழைப்பார்களையும் காத்து –
அவிவேக கநாந்த திங்முகே பஹுதா சந்தத துக்க வர்ஷிணி–பவ துர்த்திநே -ஸ்தோத்ர ரத்னம் -49-சம்சார பெரு மழையின் நின்றும் காத்து அருளினார் ஸ்வாமி
அவன் ஏழு நாள்கள் இவரோ ஏழு ஏழு பிறவிக்கும் –
-14-நப்பின்னை பிராட்டிக்காக ஏழு எருதுகளை வலி அடக்கினான் அவன் -எட்டு இழையாய் மூன்று சரடாய் இருபத்தொரு மங்கள ஸூ த்ரம் போலே இருக்கும்
திருமாங்கல்யத்தை சேதனர்களுக்கு கட்டி விவாஹம் நடத்த
காமம் -க்ரோதம் -லோபம் -மோஹம் -மதம் – மாத்சர்யம் -அசூயை -ஆகிய ஏழு விரோதிகளை தொலைத்து அருளினார் –
-15-இரண்டு மல்லர்கள் நிரசித்தால் போலே ஸ்வாமி -நீர் நுமது என்ற இவை வேர் முதல் மாய்த்து அருளினார்
16-மதக் களிறு ஐந்தினையும் சேரி திரியாமல் செந்நிறீஇ -இந்திரிய துஷ்டத்த தன்மை தொலைத்தார் அவன் குவலயா பீடம் நிரசித்தால் போலே
-17-மாளாக்காரர் திரு மாளிகைக்கு எழுந்து அருளி அவன் சாத்திய புஷ்ப்பம் சுவீகரித்து மகிழ்ந்தால் போலே -ஸ்வாமியும்
அஹிம்சா பிரமம் புஷ்ப்பம் -புஷ்பம் இந்திரிய -ஞானம் புஷ்ப்பம் தப புஷ்ப்பம் த்யானம் புஷ்ப்பம் ததைவ ச சத்யம்
அஷ்டவிதம் புஷ்ப்பம் விஷ்ணோ ப்ரீதி கரம் பவேத் -என்று சிஷ்யர் பக்கல் செழித்து வளரக் காணப் பெற்று களித்தார்-
-18-நூற்றுவரை முடித்து பஞ்ச பாண்டவர்களை வாழ்வித்தது போலே -தற்க சமணரும் சாக்கிய பேய்களும் தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும்
சூன்ய வாதாரும் நான்மறையும் நிற்க குறும்பு செய் நீசரும் மாண்டனர் என்னும் படியாக நாட்டிய நீசச் சமயங்களை மாள்வித்து
அர்த்த பஞ்சக அர்த்தங்களை நிலை நாட்டி அருளினார் -பஞ்சம உபாயமான ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்பதை காட்டி அருளினார் –

சாமிதோதய சங்கராதி கர்வ ஸ்வ பலாத் உத்த்ருதயா தவ பிரகாச
அவரோபி தவான் ஸ்ருதேர பார்த்தான் நநு ராமா வரஜஸ் ச ஏஷ பூய
சாமிதோதய சங்கராதி கர்வ–சங்கராதி கர்வம் நிரசித்த ஒற்றுமை
ஸ்வ பலாத் உத்த்ருதயா தவ பிரகாச –கோபாலோ யாதவம் வம்சம் உத்தரிக்க -யாதவ பிரகாசர் திருந்தி வந்தார்
அவரோபி தவான் ஸ்ருதேர பார்த்தான்-அபார்த்தான் ஸ்ருதே-அ பார்த்தான் /அப அர்த்தான்/ ஸ்ருதி கீர்த்திக்கும் வேதத்துக்கும்

—————————-

ஸ்ரீ ரெங்கராஜ சரணம் புஜ ராஜ ஹம்சம் -ஸ்ரீ மத் பராங்குச பதாம் புஜ ப்ருங்க ராஜம் –
ஹம்சம் -அசாரம் அல்ப சாரஞ்ச சாரம் சாரதரம் த்யஜேத் பஜேத் சார தர்மம் சாஸ்த்ரே-பாஹ்ய குத்ருஷ்ட்டி மதங்களை நிரசித்து
பாஹ்ய அர்த்தங்களை தள்ளி ரகஸ்ய த்ரயார்த்தங்களிலே மூழ்கி இருந்தவர் என்றபடி
துயர் அறு சுடர் ஆதி -வ்யஸ நேஷூ மனுஷ்யானாம் பிருஷம் பவதி துக்கித–க்ருதக்ருத்யஸ் ததா ராம விஜ்வர பிரமுமோதக-
அன்னமாய் நூல் பயந்தவனை போலேயும்-அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்தவனைப் போலேயும்
ஸ்வாமியும் சாஸ்த்ரார்த்தங்களை உபதேசித்து அருளினார்
அழுந்தார் பிறப்பாம் பொல்லா வருவினை மாய வான் சேற்று அள்ளல் பொய் நிலத்தே -கால் பொருந்தாமல் இருக்கப் பண்ணினவர்
அன்ன நடை அணங்கான பிராட்டி போலே எம்பெருமான் இடத்தில் மன்றாடி நம் போல்வாருக்கும் பேறு பெருவித்து அருளினார் –

வண்டு-மது விரதம் -உளம் கனிந்து இருக்கும் அடியவர்கள் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேன்-தேனை நன் பாலை கன்னலை அமுதை
-எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே -பகவத் அனுபவத்தையே விரதமாக கொண்டவர் ஸ்வாமி –
வண்டினங்கள் காமரங்கள் இசை பாடும் –யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் -வரி வண்டு தேன தேன என்று இசை பாடும் -போலே
ஸ்வாமியும் யாழினிசை வேதத்து இயல் -பண்ணார் பாடல் ஆயிரம் -கானத்தையே போதுபோக்காக கொண்டு – வளர்த்த இதத்தாய் இராமானுசன் –
பண்டருமாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்
வண்டுக்கு சஞ்சரிகம் என்றும் பெயர் -ஸ்வாமியும் -பதியே பரவித் தொழும் தொண்டர்களில் தலைவராய்
ஸ்ரீ ரெங்கம் கரி சைலம் அஞ்சன கிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலவ் ஸ்ரீ கூர்மம் புருஷோத்தமஞ்ச ச பத்ரீ நாராயணம் நிமிஷம்
ஸ்ரீ மத் த்வாரவதீ பிரயாக மதுரா அயோத்யா கயா புஷ்கரம் சாளக்ராமகிரிம் நிஷேவ்யா ரமதே ராமானுஜோயம் முனி –
பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும் துன்னிட்டுப் புகல் அரிய-திருவாசல்களிலே -மன்னிய தென்னரங்கா புரி மா மலை மற்றும் உவந்திடும்
உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்து வாழ்ந்தவர் –
வண்டு சோலைகளில் சுழன்று இருப்பது போலே ஸ்வாமியும் ஆராமம் சூழ்ந்த அரங்கம் -சிந்து பூ மகிழும் திரு வேங்கடம்
-விரையார் பொழில் வேங்கடம் -சோலைகள் உள்ள ஸ்தலங்களில் சுழலும் இட்டவர் –

——————————-

ஆழி மழை கண்ணா –திருக் கண்களிலே மழையை உடையவனே -என்றுமாம் –
ஆஹ்லாத சீத நேத்ராம்பு -வண் பொன்னிப் பேராறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோயில் திரு முற்றம் சேறு செய் தொண்டர் -என்கிறபடி
பகவத் குண சேஷ்டிதங்களை நினைந்து கண்ணும் கண்ண நீருமாய் இருப்பவரே -என்றபடி
அன்றிக்கே-மழை தெய்வமே -குணம் திகழ் கொண்டல் இராமானுசன் -விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்கள் -இவரையே தூதாக ஆண்டாள் -என்றுமாம்
ஆழி மழைக்கு அண்ணா நீ ஒன்றும் காய் கரவேல்
ஆளவந்தார் -அவிவேக கநாந்த திங்முகே பஹுதா சந்தத துக்க வர்ஷிணி பகவன் பவ துர்த்திநே -சம்சார வர்ஷம் -பிரதி கூல மழை
திருக் கச்சி நம்பிகள் -தேவராஜா தயா ஸிந்தோ தேவ தேவ ஜகத் பதே த்வதீ ஷண ஸூதா சிந்து வீசி விஷே பசீ கரை
காருண்ய மாருதா நீதை சீதலைரபி ஷிஞ்ச மாம் -பகவத் கடாக்ஷ அம்ருத தாரை -அருளியது போலே
ஸ்ரீ கூரத் ஆழ்வானும் ஹஸ்தீஸ த்ருஷ்ட்யம்ருத வருஷ்டி பிராபஜேதா –
இப்படி அனுகூல பகவத் கடாக்ஷ அம்ருத வ்ருஷடியைப் பெறுவிக்கும் விஷயத்தில் எம் அண்ணரான உடையவரே
ஒன்றும் கை கரவேல் -சம்சாரிகளுக்கும் சர்வேஸ்வரனுக்கும்
ஞானக் கை தா -மக்நான் உத்தரதே லோகான் காருண்யாத் சாஸ்த்ர பாணிநா –
சர்வேஸ்வரனுக்கு -குத்ருஷ்ட்டி குஹ நாமுகே நிபததே பர ப்ரஹ்மண கரக்ரஹ விசேஷனோ ஜயதி லஷ்மனோயம் முனி -என்றபடி
ஆசை உடையார்க்கு எல்லாம் பேசி வரம்பு அறுத்தார் -உதார குணம் நாடும் நகரமும் நன்கு அறியும் படி விளங்கச்
செய்யக் கடவீர் என்று ஆண்டாள் ஆசீர்வாதம் -ஓன்று நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு -நிர்மத்த்ய ஸ்ருதி சாகராத் -என்னப்பட்ட வடமொழி வேதக் கடல் என்ன
-நமாம் யஹம் திராவிட வேத சாகரம் –என்ன பட்ட தமிழ் வேதக் கடல் என்ன
இவற்றுக்குள் புகுந்து அர்த்த விசேஷங்களை கொள்ளை கொண்டு -உள் புக்கு என்றதால் மணி மாணிக்கங்கள் சீரிய பொருள்கள் கொணர்ந்து வர்ஷித்தவர்
பராசர்ய வசஸ் ஸூ தாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்–பவ்ம பிபந்து அன்வஹம்
ஆர்த்து -சிம்மம் போலே கர்ஜித்து
ஏறி -பஜதி யதி பதவ் பத்ர வேதீம் த்ரி வேதீம் -சீரிய சிங்காசனத்தில் மேல் ஏறி -திருக் கோஷ்டியூர்
மேல் தளத்தில் ஏறி எம்பெருமானார் ஆனாரே-அது ஸூ சகம்
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து-அவதார ரகஸ்யம் ஸூ சகம் –
துக்தோ தன்வத் தவளை மதுரம் சுத்த ஸாத்விக ரூபம் யஸ்ய ஸ்புடயதி தராம் யாம் பணீந்திரவதாரம் -பால் அன்ன திருமேனி யாய் இருந்தும்
தேவபிரானுடை கரிய கோலத் திரு உருவை திரு உள்ளத்திலே அடக்கி இருப்பதாலே நிழலீட்டாலே ஸ்வாமி திரு மேனியும்
முடிவு இல்லாதோர் எழில் நீல மேனியாகவே சேவை சாதிக்க வேணும் என்று சொல்கிறது –
முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணன் -ஊழி முதல்வன் -திரு உருவை திரு உள்ளத்தில் அடக்கி -தத் சாதரம்யம் பெற்று இருப்பீர் என்றபடி –
ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து -இதுவும் திரு அவதார ஸூ சகம் -அடையார் கமலத்து அலர் மகள் கேழ்வன்
கை யாழி என்னும் படையோடு –புடையார் புரி சங்கமும் -என்றது போலே பஞ்சாயுத அம்சம் அன்றோ ஸ்வாமி
-பாஹ்ய குத்ருஷ்ட்டி விரோதி நிரசனம் செய்து அருளி -அருளார் திருகி சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருளார் வினை கெடச் செங்கோல் நாடாவுத்தீர் -உடையவர் ஆவீர் –
வலம் புரி போல் நின்று அதிர்ந்து -தற்கச் சமணரும் –மாயும் படி -என்றும் -அமுதம் உண்டு கழிக்கும் சங்கரய்யா போலே
த்வயம் அர்த்த அனுஸந்தாநேந ஸஹ சதா ஏவம் வக்தா யாவச் சரீர பாதம் அதிரைவ ஸ்ரீ ரெங்க ஸூகமாஸ்வ
-இணை பிரியாது இருந்து தூய அமுதை பருகி பருகி மகிழ்ந்தவர் ஸ்வாமி –
தம் த்ருஷ்ட்வா சத்ரு ஹந்தாரம்-மஹரிஷீணாம் ஸூகாவஹம் -தீயோர் ஒழியவும் நல்லார் வாழவும் சார்ங்கம் உத்தரித்த சர மழை போலே –
ஒண் சாரங்க வில்லும் -ஸ்வாமியே -தன் கைச் சார்ங்கம் அதுவே போல் புருவ வட்டம் அழகிய -போலே ஸ்வாமி புருவ நெறிப்பை கொண்டே
ஆழ்வான் ஆண்டான் எம்பார் சர மழை போலே வாதங்கள் செய்வார்கள் என்றுமாம்
கொண்டல் அனைய வண்மை ஏரார் குணத்து எம் இராமானுசன்
நானும் பிறந்தமை பொய் அன்றே -ஆண்டாளும் ஸ்வாமி திரு முடி சம்பந்தம் உண்டே -என்று மகிழ்வதே -நாங்களும் மார்கழி நீராட -மார்க்க சீர்ஷம் –

—————————————————-

1-ஸ்ரீ நம்மாழ்வார் -திருமுடி -மஸ்தகம் -ஸ்ரீ சடாரி -ஸ்ரீ கிருஷ்ண பக்தி கிட்டும்-ஸ்ரீ சடகோபர் பொன்னடி அன்றோ ஸ்ரீ ராமானுஜர்
-2–நாத முனிகள் – ஸ்ரீ மன்-நாத முனிகள் -கீர்த்தனம் -இசை -பக்தி அனுபவிக்க -கும்பிடு நாட்டமிட்டு ஆட -மெய்யடியார்கள் கூட்டம்
3— ஸ்ரீ புண்டரீகாக்ஷர் -உய்யக் கொண்டார் -திருக் கண்கள் -காரேய கருணை –
திவ்ய பிரபந்தம் வேத சாம்யம் ஞானம் வரும் -பிணம் கிடைக்க மனம் புணர்வார் உண்டோ
-4–ஸ்ரீ மணக்கால் நம்பி ராம மிஸர் -கபாலம் -இரண்டு கன்னம் -வெண்ணெய் உண்ட வாயன் போலே –
அனுபவ ப்ரீதி உந்த கைங்கர்யம் செய்து பருத்த கன்னங்கள் – ஆச்சார்ய கைங்கர்யம் கிட்டும் இவரை த்யானம் பண்ண
-5–ஆளவந்தார் -வஷஸ்தல -திரு மார்பு -அகன்ற திரு மார்பு -கனக மயம் கவாடம் போலே -திரு உள்ளம் திறக்க -இருப்பிடம் வைகுந்தம் இத்யாதி –
தியானிக்க ஆச்சார்ய கடாக்ஷம் கிட்டும் -ஆ முதல்வன் என்று வஸ்துவாக்கி அருளினார் -யாமுநேயம்
முக்கண்ணன் எண் கண்ணான் சகஸ்ர கண்கள் -சேர்ந்தாலும் ஆச்சார்ய கடாக்ஷத்துக்கு ஈடு இல்லையே
-6–பெரிய நம்பி – கண்டம் -திருக் கழுத்து -த்வயம் -கழுத்து ஸ்தானம் -தியானிக்க நமக்கு த்வயார்த்தம் காட்டும் ஷேம கரணம்
7-திருக் கோஷ்டியூர் நம்பி -திருக் கைகள் -எம்பெருமானார் திரு நாமம் சாத்தி -பர ஸம்ருத்தியே ஏக பிரயோஜனம்
-திருமந்திரம் சரம ஸ்லோக அர்த்தம் கிட்டும் -ஸர்வார்த்த சாதகம் -இரண்டு திருக் கைகள் இரண்டுக்கும்
-8-திருமலை நம்பி -இரண்டு மார்புகள் சைல பூர்ணர் -பிதா மஹர் –தீர்த்த கைங்கர்யம் -ஆகாச கங்கை -சாலை கிணறு -மாமா பண்ணின கைங்கர்யம் –
தேவகி தேரோட்டி கம்சன் -கண்ணன் பார்த்த சாரதி -கல்யாணம் மாமான் சீர் முக்கியம் -பகவத் கைங்கர்யம் கிட்டும் இவரை தியானிக்க
9-ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர்- -திரு வயிறு –ஆளவந்தார் திருக் குமாரர் -மடித்து உள்ள -வைராக்யம் –
ஆச்சார்யர் பரகத ஸ்வீகாரம் செய்வார் -தேவ பெருமாள் இடம் பாடி பெற்றார் ராமானுஜரை அரங்கன் -கொண்டாடி -ஸ்ரீ நிதிம்
-10–திருமாலை ஆண்டான் -திரு முதுகு மாலா காரர் திருமாலை ஆண்டான் திருவாய்மொழி அர்த்தம் கிட்டும் -வளர்த்த இதத் தாய் –
11–திருக்கச்சி நம்பி-கடிகி இடை -அம்சம் -ஆச்சார்ய உச்சிஷ்டம் கிடைக்கும் -ராமானுஜருக்கே கிடைக்காதது நமக்கு கிட்டும் -இப்படி தியானித்தால் –
12- எம்பார் –13-பட்டர்–14- நஞ்சீயர் –15-நம்பிள்ளை –16–வடக்கு திரு வீதிப் பிள்ளை -17–பிள்ளை லோகாச்சார்யார்
-18 -திருவாய் மொழிப பிள்ளை 19–மணவாள மா முனிகள் –20-ஸ்ரீ சேனை முதலியார் -புண்டரம் ஸ்தானம் -கார்ய சித்தி –
கூரத் ஆழ்வான்–பூணூல் அம்சம் -ப்ரஹ்ம ஸூ தரம் ப்ரமாதரு ரக்ஷணம் -ஸ்ரீ பாஷ்யகாரரையே ரஷித்தாரே-
22-த்ரிதண்டம் -மருமகன் -முதலி ஆண்டான் -திவ்ய தேச கைங்கர்யம் -தென் அரங்கம் செல்வம் முற்றும் திருத்த வந்தான் வாழியே
தத்வ த்ரயம் ரகஸ்ய த்ரயம் மண்டல த்ரயம் ஞானம் கிட்டும்
23-வடுக நம்பி ஆந்திர பூர்ணர் காஷாயம் -உன்னை ஒழிய ஒரு தெய்வம் அறியாத -ஆச்சார்ய அபிமானம் கிட்டும்
-நம் பையல்-அளியல் நம் பையல் அம்மாவோ கொடியவாறே -வடுகா கூப்பிட -வைஷ்ணவ நம்பி -வைஷ்ணவ வாமனன் –
24-திரு குருகைப் பிரான் பிள்ளான் — மணி மாலை -துளசி மாலை -குருகேசர் -நாமும் பிள்ளையாக -அபிமான புத்திரர் ஆவோம்
-வாரிசு சான்று பஞ்ச சம்ஸ்காரம் விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ —
25-பிள்ளை உறங்கா வல்லி தாசர் -சாயை -பரார்த்த கைங்கர்யம் உடை வாள் கொண்டு புறப்பாடு -அவன் ஆனந்துக்காகவே –
அங்கி –ஸ்ரீ ராமானுஜர் -26-பரமாத்மா -எம்பெருமானார் அன்றோ -தேவு மாற்று அறியேன் –
திருவடிகளை பற்ற பகவான் முக விலாசம் -களை அற்ற கைங்கர்யம்–தியானிக்க வழி –26 -அங்கங்கள் உடன் கூடிய அங்கியையே த்யானம்
-சர்வான் காமான் -லீலைக்கு விவ்ஷயம் இல்லை போகத்துக்கு விஷயம் -சதா ஸ்மராமி யதிராஜம்-

உபதேச முத்திரை திருமலையில் -சேவை -அஞ்சலி ஹஸ்தம் மற்ற திவ்ய தேசங்களில் –
திருமேனியில் அனைவரும் உண்டே -என்ற உணர்வுடன் -தியானிக்க-
சம்பிரதாய பலன்கள் எல்லாம் கிட்டும் இப்படி தியானித்தால் -பஞ்சாயுத சக்தி அம்சம் -ரஜஸ் தமஸ் போக்கும்-
மனஸ் சுத்திக்கு த்யானம் / சரீர சுத்திக்கு ஆகார நியமம் -உய்ய ஒரே வழி உடையவர் திருவடி –சதா ஸ்மராமி-ஸ்ரீ யதிராஜம்-

—————————————-

இதுக்கு பிரயோஜனம் கேவல லீலை
லோகவந்து லீலா கைவல்யம் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்–ஜகத் சர்க்கே லீலைவ கேவலா பிரயோஜனம் –பரஸ்ய ப்ரஹ்மணோ லீலைவ பிரயோஜனம்
லீலை -பின் வரும் விளைவை கனிசியாமல் அப்பொழுது பெரும் மநோ வினோதம் -லீலை வியாபாரம் என்றவாறு –
ஸ்ருஷ்டியும் வியாபாரம் -ஸ்ருஷ்ட்டி தான் லீலை என்று அருளிச் செய்யாமல் பிரயோஜனம் லீலை என்பான் என் சங்கைக்கு
மா முனிகள் பரிகாரமாக அருளிச் செய்யும் அமுத மொழி –
லீலையாவது தாதாத்விக ரசம் ஒழிய காலாந்தரத்தில் வரும் பலத்தைக் கணிசியாமல் பண்ணும் வியாபாரமே யாகிலும்
-இதுக்கு பிரயோஜனம் -என்று ஸ்ருஷ்ட்டி ரூப வியாபாரத்துக்கு பிரயோஜனமாக சொல்லுகையாலே தாதாத் விக ரஸ மாத்ரத்தைச் சொல்லிற்றாகக் கடவது
அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே-என்றும் -ஜகாத் உத்பத்தி ஸ்திதி சம்ஹார அந்த பிரவேச நியமனாதி லீலா -என்றும்
சாமா நாதி கரண்யமாக அருளிச் செய்து இருந்தும் ஜகத் ஸ்ருஷ்டவ் லீலைவ பிரயோஜனம் என்று வ்யதிகரணமாக
-மா முனிகள் தத் காலத்தில் தோன்றும் ரசத்துக்கு ஹேதுவான வியாபாரம் என்று அருளிச் செய்யாமல் ரசம் மாத்திரம் என்று காட்டி அருளுகிறார் –

சேஷ ஸ்ரீ மான் நிகம மகுடீ யுக்ம ரஷர ப்ரவ்ருத்த
ஸ்ரீ மத் ராமா வரஜ முனிதாம் சவ்ம்ய ஜாமாத்ரு தாஞ்ச
விந்தன் த்ருப்யத் விமத படலீ பாட நோத்தாம ஸூக்தி
பூயாத் பவ்ய பிரதித மஹிமா ஸ்ரேயஸே பூயேச ந–என்று
உபய வேதாந்த ரக்ஷணத்துக்கு ஸ்ரீ எம்பெருமானாராக திருவவதரித்து வேதாந்தங்களை ஸ்ரீ மா முனிகளாக திருவவதரித்து
திராவிட அருளிச் செயல்களையும் குத்ருஷ்டிகளை நிரசித்து பிரதிஷ்டானம் ஆதி சேஷனே செய்து அருளினான் என்றவாறு –
-அந்த திருவனந்த ஆழ்வானே நமக்கு சகல வித நன்மைகளையும் அருளட்டும் –

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: