கெடும் இடராய எல்லாம் கேசவா -ப்ரஹ்மம் தன்னையே கொடுத்து -அநிஷ்ட நிவ்ருத்தி அருளுகிறார் -விருந்தே மருந்து -ப்ராப்யம் -பிராப்பகம் -ஐக்யம்
ஆரண்யம் –ப்ரஹ்ம விசாரம் தனியாக காட்டில் -கருத்து ஒருமித்து -ஸூஷ்மம் -அறிய —
பிரதான உபநிஷத் -பத்து -1-ஈஸா-/2- கேனோ -முதல் சொல்லை கொண்டே இவை இரண்டும் /3- கட -காடக பிரஸ்னம் கடர் ரிஷி /4-ப்ரஸ்ன ஆறு கேள்விகள் /
5-முண்டக –6-மாண்டூக -சாகைகள் அதர்வணத்தில் இவற்றின் பெயரால் -இவை இரண்டும் -/
7-தைத்ரியம் -பிரசித்தம் சிஷா வல்லி-இத்யாதி திருமஞ்சனத்துக்கு -இதில் இருந்தே /-தத்ரி பறவை கொத்தி சாப்பிட போனதால் இந்த பெயர்
வைசம்பாயனர் -ஆச்சார்யர் –சிஷ்யர்களை கொண்டு வேத பாராயணம் செய்து -பிராயச்சித்தம் –
யாஜ்ஜ வர்க்யர் -செருக்குடன் பேச -வெளியே போக சொல்லி -கற்ற வேதத்தை உமிழ்ந்து போக சொல்ல
-தித்ர பஷி ரூபத்தால் மற்ற சிஷ்யர்கள்-வேதம்- காத்து
8-ஐதரேயம் -ஐதரா பெண் -மஹீ தாசன் -பூமி பிரார்த்தித்து ஐதரிய மஹீ தாசன் பிள்ளை -அறிந்து ஓதப்பட்டது
9-சாந்தோக்யம் -சந்தோ சாமம் உத்கீதம் –சாமத்தை ஓதுபவர்களால் ஓதப்பட்டது
10-ப்ருஹதாரண்யகம் -ஆரண்யம் -காட்டில் உருவானதால் பெரியதாக இருப்பதால் இந்த பெயர்
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத் ரத்தத்தில் மேற்கோள் முண்டக உபநிஷத்தில் இருந்து காட்டி அருளுகிறார்
மூன்று முண்டகம் –இரண்டு கண்டங்கள் ஒவ் ஒன்றிலும் -/-64-மந்த்ரங்கள் மொத்தம் /
பார அபார வித்யைகள் -முதல் முண்டகம் விஷயம்-அடிப்படை இது தானே / இத்தை அறிந்த பின்பு ப்ரஹ்ம ஸ்வரூபம் அடுத்து /
அறிந்த ஜீவாத்மா -பரமாத்மா -சம்பந்தம்-நெருக்கம் -ஆனால் -விரோதிகள் இருக்க -அவற்றைப் போக்கி அவனை -அடையும் வழி-மூன்றாவது கண்டத்தில்
குரு பரம்பரை பூர்வகமாக அறிய வேண்டுமே -அத்துடன் தொடங்கும்
நான்முகன் -அதர்வருக்கு அதர்வண வேதம் இதனாலே பெயர் – -அதர்வ சிகை -அங்கிர் -மூலம் இத்தை -கீழே -பிப்ரலாதர் மூலம் ப்ரஸ்ன உபநிஷத் -பார்த்தோம்
அதர்வர் அங்கிருக்கு -அவர் சத்யவாகருக்கு -அவர் அங்கிரஸுக்கு-அவர் ஸூ நகருக்கு
——————————-
ப்ரஹ்மா தேவாநாஂ ப்ரதமஃ ஸஂபபூவ விஷ்வஸ்ய கர்தா புவநஸ்ய கோப்தா.
ஸ ப்ரஹ்மவித்யாஂ ஸர்வவித்யாப்ரதிஷ்டாமதர்வாய ஜ்யேஷ்டபுத்ராய ப்ராஹ৷৷1.1.1৷৷–
ப்3ரஹ்மா தே3வானாம் ப்ரத2ம: ஸம்ப3பூ4வ
விஶ்வஸ்ய கர்தா பு4வனஸ்ய கோ3ப்தா |
ஸப்3ரஹ்மவித்3யாம் ஸர்வவித்3யாப்ரதிஷ்டா2ம்
அத2ர்வாத ஹ்தேஷ்ட2புத்ராய ப்ராஹ || 1 ||
காக்கும் கடவுள் -பர ப்ரஹ்மம் -ஸ்ருஷ்டித்து அருளி -மூத்த புத்ரன் ஸ்ரீ அதர்வ என்பவருக்கு அருளிச் செய்த ப்ரஹ்ம வித்யை –
முதல்வராக நான்முகன்தானே -ப்ரஹ்ம வித்யை உபதேசிக்க -முழு முதல் கடவுள் -பர ப்ரஹ்மம் தானே –
ப்ரஹ்மம் ஒருவரே -நான்முகன் ஒவ் ஒரு அண்டங்களுக்கும் ஒருவர் உண்டே கோடி கோடி உண்டே /
தன்னை உந்தித் தாமரையில் படைத்த பெற ப்ரஹ்மம் பற்றி -ஞாதவ்ய அகிலம் -ப்ரஹ்ம ஞானத்தில் கலக்குமே/
நதிகள் சமுத்திரத்தில் சேருவது போலே ப்ரஹ்மத்தில் சதாப்தி ஆகும் எல்லா ஞானங்களும் -சர்வ வித்யா ப்ரதிஷ்டாயா –
ப்ருஹத்வாத் -தான் மிக பெரிய விபு தானே -ப்ராஹ்மணத்வாத் தன்னை அண்டினவர்களை ப்ரஹ்மம் ஆக்கும் சாம்யா பத்தி
————
அதர்வணே யாஂ ப்ரவதேத ப்ரஹ்மாதர்வா தாஂ புரோவாசாங்கிரே ப்ரஹ்மவித்யாம்.
ஸ பாரத்வாஜாய ஸத்யவஹாய ப்ராஹ பாரத்வாஜோங்கிரஸே பராவராம்৷৷1.1.2৷৷
அத3வணே யாம் ப்ரவதே3த ப்3ரஹ்மா
அத2ர்வா தாம் புரோவாசாங்கி3ரே ப்ரஹ்மவித்3யாம் |
ஸ பா4ரத்3வாஜாய ஸத்யவஹாய ப்ராஹ
பா4ரத்3வாஜோSங்கி3ரஸெ பராவராம் || 2 ||
இந்த ப்ரஹ்ம வித்யை -ஸ்ரீ -அதர்வா மூலம் -ஸ்ரீ அங்கிர் என்பவர் பெற்று -அவர் மூலம் ஸ்ரீ பரத்வாஜர் குலத்தில் வந்த
ஸ்ரீ சத்யவாகர் பெற்று அவர் மூலம் ஸ்ரீ அங்கிரஸ் பெற்றார் –
பராவரா- பராபர வித்யை
————
ஷௌநகோ ஹ வை மஹாஷாலோங்கிரஸஂ விதிவதுபஸந்நஃ பப்ரச்ச.
கஸ்மிந்நு பகவோ விஜ்ஞாதே ஸர்வமிதஂ விஜ்ஞாதஂ பவதீதி৷৷1.1.3৷৷
ஶௌனகோ ஹ வை மஹாஶால: அங்கி3ரஸம் விதி4வது3பஸன்ன: பப்ரச்ச2 |
கஸ்மின்னு ப4க3வோ விக்ஞாதே ஸர்வ்மித3ம் விக்ஞாதம் ப4வதீதி || 3 ||
ஸ்ரீ ஸுநகர் –ஸ்ரீ -அங்கிரஸ் இடம் சென்று -எந்த ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகுமோ
அத்தை அடியேனுக்கு அறிவிக்க வேணும் என்றார் –
மஹாஷாலா – பஹு குடும்பி -க்ருஹஸ்தருக்கும் ப்ரஹ்ம வித்யை உண்டே -விதிப்படி கை கூப்பி விநயத்துடன் -ப்ரஸ்ன காலம் பார்த்து கேட்க வேண்டும்
பகவான் என்று ரிஷியைப் பார்த்து -பரா அபரா வித்யை தெரிந்தவர் ஆதலால் -அங்கிரஸை இப்படி கூப்பிடுகிறார் –
வியாச வால்மீகி ஸூ க பகவான் போலே /கல்யாண குணங்களால் பூர்ணன் -என்றவாறு –
வருமானம் தவிர்க்கும் -திருக் கண்ணபுரம் பாசுரம் -அனுக்ரஹிக்க சொத்தை பிடுங்கி -குந்தி கேட்டாள் துக்கமே தர -உன்னையே நினைக்க –
மஹாஷாலா-இங்கு பெரிய யாகசாலையை உடையவர் என்பது இல்லறத்தில் இருந்து கொண்டு வேத நெறிப்படி வாழ்ந்து,
கர்மயோகப்படி செயல்களை செய்துகொண்டு அதன் மூலம் வேதாந்த உபதேசத்தை பெறும் தகுதியை அடைந்தவர் என்று அறியப்படுகிறது.
———–
தஸ்மை ஸ ஹோவாச. த்வே வித்யே வேதிதவ்யே இதி ஹ ஸ்ம யத்ப்ரஹ்மவிதோ வதந்தி பரா சைவாபரா ச৷৷1.1.4৷৷
தஸ்மை ஸ ஹோவச த்3வே வித்3யே வேதி3தவ்யே இதி ஹ ஸ்ம |
யத்3 ப்3ரஹ்மவிதோ3 வத3ந்தி பரா சைவாபரா ச || 4 ||
தஸ்மை – அவரிடம் (சௌனகரிடம்)
வேதி3தவ்யே – அறியத்தக்கது
த்3வே வித்3யே – இரண்டு விதமான அறிவானது
ப்ரஹ்மவித்3 வதந்தி – வேதத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்
பரா ச ஏவ அபரா ச – அவைகள் பரா வித்யாவும், அபரா வித்யாவும் ஆகும்.
இரண்டு வித ஞானங்கள் உலகில் உண்டே -ப்ரஹ்மா ஞானமும் கர்மம் பற்றிய ஞானங்களும் -என்பர் வேதாந்தம் அறிந்தவர் –
கேள்வி கேட்ட இவரைக் குறித்து சொல்லி -உபநிஷத் புருஷன் வாக்கில் வந்தவை இல்லை -அநாதி -கேட்டதுக்கு பதில் இல்லை -வேத புருஷன் -முன்பே சொன்னான் –
இந்த ரிஷிகள் பேசப் போகிறார்கள் என்று முன்பே -லவ குசர் ஸ்ரீ ராமாயணம் -பெருமாள் தன்னுடை சோதி எழுந்து அருளியத்தையும் சேர்த்தே அருளிச் செய்தது போலே
பரா அபரா வித்யை இரண்டும் கற்க வேண்டும் –
ஒன்றை அறிந்தால் எல்லாம் -அறிந்தது பற்றி கேள்வி -இரண்டில் ஓன்று தள்ளத் தக்கதோ பூர்வ பக்ஷம் ஆரம்பத்திலே –
கண்கள் இரண்டு என்று சொல்வது போலே -அன்றோ இது –
இரண்டையும் கொண்டு ஒரு ப்ரஹ்மத்தை அறிய என்றபடி -பொது கல்வி விசேஷ கல்வி போலே -அதனால் அதற்க்கு பின்பு -அதாதோ ப்ரஹ்ம வித்யை –
அங்கங்கள் உடன் வேத அத்யயனம் பொது கல்வி -அபரா வித்யை -ப்ரஹ்ம சாஷாத்காரம் -பக்தி ரூபா பன்ன ஞானம் பரா வித்யை –
அடைதல் ப்ரஹ்ம பிராப்தி -முன்பு -காண்கை -சாஷாத்காரம் -அதுக்கு முன்பு ப்ரஹ்ம ஞானம் -மூன்றும் உண்டே
அவன் சங்கல்பத்தால் -அனுக்ரஹத்தால் இப்படி க்ரமேண நடாத்தி அருளுவான் -ஜீவாத்மா ஸ்ரீ கௌஸ்துப ஸ்தானம் தானே –
ஆசையுடன் திரு ஆரமதன்றோ -என்று அருகிலே கொள்ளுவான் -நம் ஒவ் ஒருவரையும் –
ப்ரஹ்ம பிராப்தி லஷ்யம் -புருஷார்த்தம் -இதுக்கு முன் நிலைகள் சாஷாத்காரமும் -ஞானமும் -பரா வித்யையும் அபரா வித்யையும் என்றவாறு –
பக்திக்கு மூன்று நிலைகள் -பர பக்தி-பர ஞானம் -பரம பக்தி -ஞானம் த்ரஷ்டும் பிரவேஷ்டும் -ஞானம் தர்சனம் பிராப்தி -என்பர் –
அறிந்து-ஞானம் வந்து அடைய ஆசைப்பட்டு -தர்சன சமானாகார சாஷாத்காரம் -கண் முன்னாலே எப்பொழுதும் -யோகத்தாலே-
பத்தர் பித்தர் பேதையர் பேசின -கம்பர் -பித்து வளர வளர -உதகடாவஸ்தை-அடைதல் -த்யானம் மூலமே -ஒற்றை நினைவுடன் -வியவசாய புத்தி –
சாப்த ஞானம்-வேதம் மூலம் அபரா வித்யை -சாஷாத்கார ஞானம் பரா வித்யை-
மீமாம்சம் -பூஜ்ய விஷய விசாரம் -கர்ம ப்ரஹ்ம விசாரம் –
—————–
தத்ராபரா றக்வேதோ யஜுர்வேதஃ ஸமாவேதோதர்வவேதஃ ஷிக்ஷா கல்போ வ்யாகரணஂ
நிரூக்தஂ சந்தோ ஜ்யோதிஷமிதி. அத பரா யயா ததக்ஷரமதிகம்யதே৷৷1.1.5৷৷
தத்ராபரா ரிக்3வேதோ3 யஜுர்வேத3: ஸாமவேதோ3Sத2ர்வவேத:
ஶிக்ஷா கல்போ வ்யாகரணம் நிருக்தம் ச2ந்தோ3 ஜ்யோதிஷமிதி |
அத2 பரா யயா தத3க்ஷரமிதி4க3ம்யதே || 5 ||
ரிக் யஜுர் சாம அதர்வண -நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் -சிஷா கல்பம் வியாகரண நிருக்தம் சந்தஸ் ஜ்யோதிஷம் –
கர்ம பாகம் ப்ரஹ்மா பாகம் இரண்டும் உண்டே –
மந்த்ர பிரயோகம் கான மூன்றும்-நான்கு வேதங்கள் -அங்கங்கள் இதிஹாச புராணம் தர்ம சாஸ்திரம் –இத்யாதி -உப அங்கங்கள் –
அக்ஷரம்- ப்ரஹ்மம் அறிய -ப்ரஹ்ம ஸ்வரூபம் கொஞ்சம் இந்த கண்டத்தில் உண்டே அது மேலே
——————
யத்ததத்ரேஷ்யமக்ராஹ்யமகோத்ரமவர்ணமசக்ஷுஃஷ்ரோத்ரஂ ததபாணிபாதம். நித்யஂ விபுஂ
ஸர்வகதஂ ஸுஸூக்ஷ்மஂ ததவ்யயஂ யத்பூதயோநிஂ பரிபஷ்யந்தி தீராஃ৷৷1.1.6৷৷
ப்ரஹ்ம ஞானம் – -யாதும் ஓர் நிலைமையின் என அறிவரிய எம்பெருமான் -ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன் –
ஞான இந்திரியங்கள் சஷூஸ் ஸ்ரோத்ர பாணி பாதம் மூலம் இல்லாமல் சங்கல்ப மாத்திரத்தாலே அனைத்தையும் பண்ணி அருளி
சர்வஞ்ஞன் சர்வசக்தன் சர்வ வியாப்தன் சர்வ அந்தர்யாமி நித்யம் சாஸ்வதம் -த்ரிவித காரணன் –
த்ரிவித பரிச்சேதமும் இல்லை தேச கால வஸ்து -அளவுபடாமல் -வசப்படாதவன் உள் படாதவன் –
அக்ஷரம் -அவ்யயம் -ஸ்வரூபம் ஸ்வ பாவம் மாறாமல் –
ஞான கர்ம இந்த்ரியங்களால் அறிய முடியாதே -பரிமித சக்தி இவற்றுக்கு –
மனன் உணர்வு அவை இலன் பொறி உணர்வு அவை இலன் –
வேதம் ஒன்றே வழி -கல்மஷம் இல்லாத மனசுக்கு சேவை சாதிப்பான் –
அவனுக்கும் கண் காது கிடையாது-அடுத்து மேலே – தெளிவாக சங்கல்பத்தால் அனைத்தும் அறிவான் –
தீரர்கள் தான் அறிகிறார்கள் -பூத யோனி -காரணம் -காரணம் அறிந்தால் கார்ய வஸ்துக்களை அறியலாம் -கேள்விக்கு பதில் -அவனையே அறிய முடியாது —
காரணம் கார்யம் பாவம் மூலம் அனைத்தையும் அறிய முடியும் என்று ஆரம்பத்திலே அருளிச் செய்கிறார் –
அப்பா அம்மா போலே இல்லை -ஒரு பிறவியில் -வேறு விதத்தில் -அவர்களுக்கும் காரணம் உண்டே
இப்பிறவியில்- எனக்கு மட்டும்- தாத்தாவும் உண்டே மூன்றும் உண்டே -இவர்களுக்கு –
சகலருக்கும் சகலவித காரணமும்-அத்புத காரணம்-நிஷ் காரணம் அவன் ஒருவனே
-ஸூஷ்மம் -எதிர்மறை ஸ்தூலம்-புலன்களுக்கு எட்டாமலும் எட்டியும் -இவை இரண்டும் –
ஆத்மாவும் பரமாத்மாவும் ஸூஷ்மம் -/ சரீரம் ஸ்தூலம் -விபு இல்லை-
அணு -விபு எதிர்மறை இவை இரண்டும் வேறே -நுண்ணியது ரொம்ப சின்னது -பிடிக்க முடியும் சக்தி வாய்ந்த microscope /
விபு அப்படி இல்லையே -எங்கும் நீக்கமற நிறைந்து -விபு வாக இருந்தே ஸூஷ்மமாக இருப்பார் பர ப்ரஹ்மம் –
துண்டு நனைத்து புழிந்து ஈரம் கண்ணில் படாமல் துண்டு முழுதும் நீர் நிறைந்து இருப்பது போலே சின்ன உதாரணம்
ஒளி பதார்த்தம் எங்கும் நிறையலாம் த்ரவ்யமாக இருந்து முட்டிக்காதே-எவ்வளவு சேர்ந்தாலும் – அதே போலே ஞானமும் —
அகதி கடநா சாமர்த்தியம் -அந்தர் பஹிஸ்த்ய -அணுவுக்குள்ளும் அணு -நர ஸிம்ஹன் -ஆலிலை கண்ணன் -வையம் ஏழும் உண்டானே –
-பார்க்கப்படுபவர் பார்ப்பவரும் பார்வையும் – கேட்க்கப்படுபவரும் கேட்பவரும் கேள்வியும் ப்ரஹ்மம் தானே -த்ரிவித காரணமும் அவனே –
பஹு பவனா ஸ்ருஷ்ட்டி -பஹுஸ்யாம் ப்ராஜாயேத் –ஏக தேச சரீரத்தை -சங்கல்பத்தால் -ஸ்ருஷ்ட்டி-
ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் -மேலோட்ட த்ரிவித -காரணங்கள் -உபாதான நிமித்த சஹகாரி காரணம் ஆழ்ந்த காரணங்கள்
ஞானம் சக்தி கொண்டே சங்கல்பத்தால் ஸ்ருஷ்டிக்கிறான் –
நிர்விகாரம் -எப்படி மாறலாம் -அஸ்தி ஜெயமதே –பரிணமதே-இத்யாதி -ஷட்ப்பாவ விகாரங்கள் எவ்வாறு -சதைக ரூப ரூபாய அன்றோ –
பிறப்பிலி -பல் பிறவியாய் பிறப்பான் அன்றோ -அதே போலே இங்கும் -விரோதி பரிகாரங்கள் –
படைப்பதுக்கு மேலே மூன்று த்ருஷ்டாந்தங்கள்-
சிக்ஷா – ஒரு சொல்லை உச்சரிக்கும் விதத்தை சொல்லும் சாஸ்திரம்
கல்பஹ – எந்த மந்திரத்தை எங்கு பயன்படுத்த வேண்டும் என்று சொல்லும் சாஸ்திரம்.
எந்த யாகத்தை எந்த சூழ்நிலையில் பயன்படுத்த வேண்டும் என்பதையும் சொல்கின்ற சாஸ்திரம்
வியாகரணம் – இலக்கணம் – அர்த்த நிஶ்சயார்த்தம்
நிருக்தம் – ஒரு சொல் எப்படி உருவெடுக்கிறது என்பதை சொல்வது
சந்தஹ – செய்யுள் அமைப்பு
ஜ்யோதிட3ம் – யாகங்கள் செய்வதற்கான உரிய காலத்தை நிர்ணயம் செய்ய உதவும் சாஸ்திரம்
அக்ஷரம் – அழியாதது, மாற்றமடையாதது, நிலையானது இது பரபிரம்மத்தை குறிக்கிறது.
யயா அதி4க3ம்யதே – எதனால் அறியப்படுகிறதோ அதுவே பராவித்யா
அதி4க3ம்யதே – அறிதல், அடைதல்
யத்3 தத்3 அத்3ரேஶ்யம் – எது நம்முடைய கண்களால் கிரகிக்க முடியாததோ,
எவைகளெல்லாம் அரூபமாக இருக்கிறதோ அவைகளெல்லாம் அதிருஶ்யம் என்று கூறப்படும்.
ஐந்து ஞானேந்திரியங்களால் அறியவும், கிரகிக்கவும் முடியாதவைகளே அதிருஶ்யம் என்றும் புரிந்து கொள்ளலாம்
அக்3ராஹ்யம் – கைகளால் அதைப் பிடிக்கமுடியாது. அனைத்து கர்மேந்திரியங்களின் உதவியாலும் கிரகிக்க முடியாதது
அகோ3த்ரம் – எந்த பரம்பரையும் கிடையாது. இதற்கு காரணம் கிடையாது, பிறப்பற்றது, எதிலிருந்தும் தோன்றாதது.
அவர்ணம் – குணங்களற்றது, நிர்குணமானது, தர்ம-அதர்மங்களற்றது. எந்தவிதமான பிரமாணங்களாலும் அறிய முடியாதது
என்று உணர்த்தப்படுகிறது அனுபவிக்கவும் முடியாது
அசக்ஷு: அஶ்ரோத்ரம் – கண்களுமில்லை, காதுகளுமில்லை. ஞானேந்திரியங்கள் எதுவும் கிடையாது
தத்3 பாணி பாத3ம் – கை, கால்களும் கிடையாது. கர்மேந்திரியங்கள் கிடையாது
நித்யம் – எல்லா காலத்திலும் இருப்பது. தேச,காலங்களாலும் வரையறுக்கப்படாதது.
விபு4ம் – விதவிதமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
ஸர்வக3தம் – எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பது
ஸுஸூக்ஷமம் – மிகவும் நுட்பமானதாக இருக்கிறது. நிர்குணமாக இருப்பதால் மிகவும் சூட்சுமமாக இருக்கிறது.
தத்3 அவ்யயம் – மாற்றமடையாமல் இருப்பது, ஆறுவிதமான விகாரங்களற்றது
யத்3 பூதயோனிம் – இந்த பிரபஞ்சத்திற்கு உபாதான காரணமாக இருக்கிறது
தீ4ரா பரிபஶ்யந்தி – தீரர்கள், ஆத்ம தத்துவமறிந்தவர்கள் இந்த அக்ஷரத்தை எல்லா இடங்களிலும், எல்லாவற்றிலும் பார்க்கிறார்கள்.
தீரர்கள் என்பதற்கு தகுதியை உடையவர்கள் என்றும், ஞானத்தை அடைந்த ஞானியையும் குறிக்கின்றது
—————
யதோர்ணநாபிஃ ஸரிஜதே கரிஹ்ணதே ச யதா பரிதிவ்யாமோஷதயஃ ஸஂபவந்தி.
யதா ஸதஃ புரூஷாத்கேஷலோமாநி ததாக்ஷராத்ஸஂபவதீஹ விஷ்வம்৷৷1.1.7৷৷
யதோ2ர்ணநாபி4: ஸ்ருஜதெ க்3ருஹ்ணதே
ச யதா2 ப்ருதி2வ்யாமோஶத4ய: ஸம்ப4வந்தி |
யதா2 ஸத: புருஷாத்கேஶலோமானி
ததா2க்ஷராத்ஸம்ப4வதீஹ விஶ்வம் || 7 ||
யதா2 ஊர்ணநாபி4: ஸ்ருஜதே – எவ்வாறு சிலந்தி தனது வலையை பின்னுகிறது
க்3ருஹ்ணதே ச – அதையையே விழுங்கியும் விடுகிறது.
யதா2 ப்ர்தி3வ்யாம் – எவ்வாறு பூமியிலிருந்து
ஔஷத4ய: ஸம்ப3வந்தி – தாவரங்கள் வளர்கின்றதோ
யதா2 ஸத: புருஷாத் – எவ்வாறு அறிவுடைய மனிதனிடத்திலிருந்து
கேஶலோமானி – முடிகள் வளர்கின்றனவோ
ததா2 அக்ஷராத் ஸம்ப4வத் இஹ விஶ்வம் – அதுபோல அந்த அக்ஷரத்திலிருந்து நமது அனுபவத்திலிருக்கும் இந்த உலகமானது தோன்றியது
சிலந்தி பூச்சி கூடு கட்டி பின்பு தானே அழிப்பது போலேயும் -பூமியில் மரம் செடி கொடிகள் உண்டாகி அழிந்து போவது போலேயும்
மனிதன் உடம்பிலும் தலையிலும் ரோமங்கள் வளர்ந்து அழிவது போலேயும்
ஸ்ருஷ்டித்து சம்ஹாரம் பண்ணி -அலகிலா விளையாட்டு உடையவன் ப்ரஹ்மம் –
—————–
தபஸா சீயதே ப்ரஹ்ம ததோந்நமபிஜாயதே. அந்நாத்ப்ராணோ மநஃ ஸத்யஂ லோகாஃ கர்மஸு சாமரிதம்৷৷1.1.8৷৷
தபஸா ஜீயதே ப்3ரஹ்ம ததோSன்னமபி4ஜாயதே |
அன்னாத்ப்ராணோ மன: ஸத்யம் லோகா: கர்மஸு சாம்ருதம் || 8 ||
தபஸா ஜீயதே ப்ரஹ்ம – அவ்யக்த மாயையுடன் கூடிய பிரம்மன் ஸ்ருஷ்டி செய்ய தயாராகின்றது. சங்கல்பம் செய்கிறது
ததஹ – அதைத் தொடர்ந்து
அன்னம் அபிஜாயதே – மாயை தயாரான நிலைக்கு வருகின்றது
அன்னாத் பிராணஹ – மாயையின் இந்த நிலையிலிருந்து பிராணன் (ஹிரண்யகர்ப்பன்,
ஸமஷ்டி சூட்சும பிரபஞ்சம்) முதலில் தோன்றுகிறது,
மனஹ – பிறகு ஸமஷ்டி சூட்சும சரீரங்கள் தோன்றுகிறது
ஸத்யம் – பிறகு ஸ்தூல பூதங்கள், உலகங்கள் தோன்றுகிறது
லோகோ: இந்த ஸ்தூல உலகங்கள், சரீரங்கள் தோன்றிய பிறகு
கர்மஸு ச அம்ருதம் – கர்மங்களும், அதனுடைய பலன்களும் தோன்றின
படிப்படியாக-அன்னம் –பிராணன் –ஹிரண்யகர்பன் -மனஸ் —
பிரகிருதி -மஹான் -அஹங்காரம் -பஞ்ச பூதங்கள் -பந்த தன்மாத்ரங்கள்- ஸ்பர்சம் இத்யாதி பஞ்ச குணங்கள் -மனஸ் –
அண்டம் -ஈரேழ் லோகங்கள் -அண்டங்கள் –
வர்ணாஸ்ரம கர்மங்கள் -பொய் நின்ற ஞானம் -அது அடியாக – பொல்லா ஒழுக்கம் -அது அடியாக — அழுக்கு உடம்பும்
மாறி மாறி பல் பிறப்பும் பிறந்து -சம்சார ஆர்ணவம் -விழா ப்ரஹ்மா ஞானம் வேண்டுமே –
—————-
தபயஃ ஸர்வஜ்ஞஃ ஸர்வவித்யஸ்யஜ்ஞாநமயஂ தபஃ. தஸ்மாதேதத்ப்ரஹ்ம நாம ரூபமந்நஂ ச ஜாயதே৷৷1.1.9৷৷
ய: ஸர்வக்ஞ: ஸர்வ்வித்3யஸ்ய ஞானமயம் தப: |
தஸ்மாதே3தத்3ப்3ரஹ்ம நாம ரூபமன்னம் ச ஜாயதே || 9 ||
யஹ ஸர்வக்ஞஹ – அந்த அக்ஷரமானது எல்லாவற்றையும் அறியக்கூடியது
ஸர்வவித்3 – எல்லா காரியங்களையும் அறிந்தது.
யஸ்ய ஞானமய தபஹ – இந்த ஸ்ருஷ்டியை இப்படி செய்யலாம் என்று எண்ணியது
நம்முடைய கனவுகளானது நம்முடைய எண்ணங்களாலே ஸ்ருஷ்டி செய்யப்பட்டது. இவைகள் யாவும் பொய்யானது.
அதேபோல ஈஸ்வரனுடைய சங்கல்பத்தாலே இந்த ஸ்ருஷ்டி தோன்றியுள்ளதால் இவைகள்யாவும் மித்யா.
தஸ்மாத் – அந்த பிரம்மத்திலிருந்து
ஏதத்3 பிரஹ்ம – இந்த சூட்சுமஸ்ருஷ்டி அபிமானி ஹிரண்யகர்ப்பன்
நாம ரூபம் – விதவிதமான பெயர்கள், உருவங்கள் தோன்றின
அன்னம் – உணவு, போக்ய வஸ்துக்கள்
ச ஜாயதே – இவைகளும் தோற்றுவிக்கப்பட்டன.
அந்த பர ப்ரஹ்மம் -சர்வ வியாபியாய் சர்வஞ்ஞனாய் இருந்து பரம காருண்யத்தால்
சர்வ அந்தர்யாமியாய் இருந்து- சத்தை -நாமம் ரூபம் -நிறம் -அன்னம் கொடுத்து அருளுகிறார் –
——————–
ததேதத்ஸத்யஂ மந்த்ரேஷு கர்மாணி கவயோ யாந்யபஷ்யஂஸ்தாநி த்ரேதாயாஂ பஹுதா ஸஂததாநி.
தாந்யாசரத நியதஂ ஸத்யகாமா ஏஷ வஃ பந்தாஃ ஸுகரிதஸ்ய லோகே৷৷1.2.1৷৷
ததே3தத்ஸத்யம் மந்த்ரேஷு கர்மாணி கவயோ
யான்யபஶ்யம்ஸ்தானி த்ரேதாயாம் ப3ஹுதா4 ஸந்ததி |
தான்யாசரத2 நியதம் ஸத்யகாமா ஏஷ வ: பந்தா2:
ஸுக்ருதஸ்ய லோகே || 1 ||
ததே3தத்ஸத்யம் – இனி சொல்லப்படுகின்ற யாகங்கள், கர்மங்கள் கண்டிப்பாக பலனைத் தரும்
கவயஹ – ரிஷிகள்
யானி கர்மாணி மந்த்3ரேஷு – எந்தவிதமான கர்மங்களை மந்திரத்திற்குள்
பஷ்யன் – பார்த்தார்களோ
தானி – அந்த கர்மங்களை
த்ரேதாயாம் – மூன்று வேதங்களில்
பஹுதா ஸந்ததானி – பலவிதமாக பலன்களை கொடுக்கிறது என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
ஸத்யகாமாஹா – கர்மபலன்களில் ஆசையுள்ளவர்களே
தானி ஆசரத: – அந்தக் கர்மங்களை செய்யுங்கள்
நியதம் – முறையாக தொடர்ந்து செய்யுங்கள்
ஸுக்ருதஸ்ய லோகே – தன்னால் செய்யப்பட்ட கர்மங்களுக்குப் பலனாக
ஏஷஹ பந்தா2ஹா – உங்களுக்கு இவ்விதம் கர்ம மார்க்கம் காட்டபட்டது
கர்ம பாகம் -பஹு விதம் -அக்னிஹோத்ரம் போன்றவை –பல பலன்களுக்காக –கர்மங்களை செய்து
அதன் பலனை அனுபவித்து சம்சாரத்தில் உழல்கிறோம் –
—————–
யதா லேலாயதே ஹ்யர்சிஃ ஸமித்தே ஹவ்யவாஹநே. ததாஜ்யபாகாவந்தரேணாஹுதீஃ ப்ரதிபாதயேத்৷৷1.2.2৷৷
யதா3 லேலாயதே ஹ்யர்சி: ஸாமித்3தே4 ஹவ்யவாஹனே |
ததா3ஜ்யபா4கா3வந்தரேணாஹுதீ: ப்ரதிபாத3யேத் || 2 ||
யதா2 – எப்பொழுது
அர்சிஹி – தீ ஜுவாலை (அக்னியின் தலைப்பகுதி)
ஹவ்யவாஹன – அக்னிஹோத்ர யாகத்தில் இருக்கின்ற அக்னியின் பெயர்
ஸமித்தே – நன்கு தூண்டிவிடப்படும் நெருப்பில்
லேலாயதே – மேல்நோக்கி எரிந்து கொண்டிருக்கும்போது
ததா3 – அப்பொழுது
ஆஜ்யபாகோ அந்தரண – வடதெற்கு பகுதியின் மத்தியில்
ஆஹுதிஹி – அர்ப்பணம் செய்ய விரும்பும் பொருட்களை
ப்ரதிபாத3யேத் – அர்ப்பணிக்க வேண்டும்.
அக்னிஹோத்ரம் காலையிலும் மாலையும் நித்தியமாக செய்து ஆஹுதி கொடுத்து
அக்னி சோம பகவானுக்கு அந்தர்யாமியாய் உள்ள ப்ரஹ்மத்துக்கு சமர்ப்பிக்கிறோம் –
—————-
யஸ்யாக்நிஹோத்ரமதர்ஷமபௌர்ணமாஸமசாதுர்மாஸ்யமநாக்ரயணமதிதிவர்ஜிதஂ ச.
அஹுதமவைஷ்வதேவமவிதிநா ஹுதமாஸப்தமாஂஸ்தஸ்ய லோகாந்ஹிநஸ்தி৷৷1.2.3৷৷
யஸ்யாக்3னிஹோத்ரமத3ர்ஶமபௌர்ணமாஸம்
அசாதுர்மாஸ்யமனாக்3ரயணமதிதி2வர்ஜிதம் ச |
அஹுதமவைத்4வதெ3வமவிதி4னா ஹுதமாஸப்த
ஸாம்ஸ்தஸ்ய லோகான்ஹினஸ்தி || 3 ||
யஸ்ய அக்னியோத்ர – யாருடைய அக்னிஹோத்ர யாகமானது
அதர்ஶம் – தர்ஶம் என்கின்ற யாகம் செய்யாதிருத்தல்
அபௌர்ணமாஸம் – பௌர்ணமி மாதம் என்கின்ற யாகம் செய்யாதிருத்தல்
அசாதுர்மாஸ்யம் – சாதுர்மாஸ்யம் என்கின்ற யாகம் செய்யாதிருத்தல்
அனாக்ரயணம் – ஆக்ரயணம் என்கின்ற யாகம் செய்யாதிருத்தல்
அதிதி2 வர்ஜிதம் – விருந்தினர்களை நன்றாக கவனிக்காதிருத்தல்
அஹூதம் – சரியான காலத்தில் செய்யாதிருத்தல்
அவைத்4வ தேவம் – அவைத்4வ தேவம் செய்யாதிருத்தல்
அவதி4னாஹுதம் – அவிதி4னாஹுதம் செய்யாதிருத்தல்
இவ்வாறு அக்னிஹோத்ரத்தை மட்டும் செய்துவிட்டு மற்ற யாகங்களை செய்யாதிருத்தல்,
ஏழு உயர்ந்த உலகத்தை அடைய உதவும் புண்ணியங்கள் அழிந்து விடும்.
அக்னிஹோத்ரி -மூன்று தலை முறைக்கு பிண்டம் / பிள்ளை பேரன் கொள்ளு பேரன் அன்னம் தந்து தான் உண்டு
மூன்று -அதர்ஷமாசம் -அபவ்ர்ணமாஸ்யாம் அசதுர்மாஸ்யம் –போன்ற தப்பாக செய்யும் கர்மங்களுக்கு பிராய்ச சித்தம் என்றதாயிற்று
———————-
காலீ கராலீ ச மநோஜவா ச ஸுலோஹிதா யா ச ஸுதூம்ரவர்ணா.
ஸ்புலிங்கிநீ விஷ்வரூசீ ச தேவீ லேலாயமாநா இதி ஸப்த ஜிஹ்வாஃ৷৷1.2.4৷৷
காலீ கராலீ ச மனோஜவா ச ஸுலோஹிதா யா ச ஸுதூ4ம்ரவர்ணா |
ஸ்பு2லிங்கி3னீ விஶ்வருசீ ச தேவீ லேலாயமானா இதி ஸப்த ஜிஹ்வா: || 4 ||
இதில் அக்னி ஜுவாலைக்கு ஏழு பெயர்களை கூறுகிறது.
காலி கராலீ – கறுப்பு நிறமாக இருக்கிறது, மிகவும் உஷ்ணமானது
மனோஜவா – மனதின் வேகம்
ஸுலோஹிதா – அடர்த்தியான சிவப்பு
ஸுதூ4ம்ரவர்ணா – பலநிறங்களுடன் கூடிய புகை
ஸ்பு2லிஙினி – தீப்பொறி
தேவீ விஶ்வருசீ – ஒளிமயமான, விதவிதமான வர்ணத்தில் ஒளிக்கற்றைகள்
லேலாயமானஹா ஸப்த ஜிஹ்வா – அக்னியின் ஜுவாலைக்கு ஏழுவிதமான நாக்குகள் இருக்கிறது
அக்னியின் ஏழு நாக்குகள் -காலீ -கருப்பு -/கராலீ -பயங்கரம் /மநோ ஜன -மனக் குதிரை போலே வேகம் /ஸூலோஹிதா -சிகப்பு /
ஸூ தூம்ர வர்ணா -புகை போன்ற நிறம் /ஸ் புலிங்கி நீ -நெருப்பு துகள் /இவற்றால் நெய்யை ஆஹுதி ஸ்வாஹா-செய்யும் என்றதாயிற்று –
——————-
ஏதேஷு யஷ்சரதே ப்ராஜமாநேஷு யதாகாலஂ சாஹுதயோ ஹ்யாததாயந்.
தஂ நயந்த்யேதாஃ ஸூர்யஸ்ய ரஷ்மயோ யத்ர தேவாநாஂ பதிரேகோதிவாஸஃ৷৷1.2.5৷৷
ஏதேஷு யஶ்சரதே ப்4ராஜமானேஷு
யதா2காலம் சாஹுதயோ ஹ்யாத3தா3யன் |
தம் ந்யந்த்யேதா: ஸூர்யஸ்ய ரஶ்மயோ
யத்ர தேவானாம் பதிரேகோSதி4வாஸ: || 5 ||
ஏதேஷு – இதற்கு முன் ஏழு ஜுவாலைகள்
ப்4ராஜமானேஷு – நன்கு ஒளிவிட்டு இருக்கும்போது
யஶ்சரதே – யார் யாகத்தை செய்கிறார்களோ
யதா2 காலம் – குறிப்பிட்ட கால நியமப்படி
தம் ந்யந்தி – அவர்களை அழைத்து செல்கிறது
ஏதே ஆஹுதயஹ – ஆஹுதிகள்
ஆத3தா3யன் – நம்மை அழைத்து செல்கின்றது
சூர்யஸ்ய ரஷ்யே – இந்த ஆஹுதிகள் சூரியனின் கிரணங்களாக மாறி
யத்ர – எந்த இடத்தில்
தேவானாம் பதி – தேவர்களுடைய தலைவன்
ஏகஹ – ஒருவன்
அதி4வாஸ: – வசிக்கின்ற இடத்திற்கு கொண்டு செல்லும்
அக்னி இந்த ஏழு முகம் மூலமாக அக்னிஹோத்ரி அருளும் ஹவிஸை தேவர்களுக்கு ஸூர்ய கிரணங்கள் வழியாக எடுத்து செல்வான் –
—————-
ஏஹ்யேஹீதி தமாஹுதயஃ ஸுவர்சஸஃ ஸூர்யஸ்ய ரஷ்மிபிர்யஜமாநஂ வஹந்தி.
ப்ரியாஂ வாசமபிவதந்த்யோர்சயந்த்ய ஏஷ வஃ புண்யஃ ஸுகரிதோ ப்ரஹ்மலோகஃ৷৷1.2.6৷৷
ஏஹ்யேஹீதி தமாஹுதய: ஸுவர்சஸ:
ஸூர்யஸ்ய ரஶ்மிபி4ர்யஜமானம் வஹந்தி |
ப்ரியாம் வாசமபி4வத3ந்த்யோSர்சயந்த்ய ஏ
வ: புண்ய: ஸுக்ருதோ ப்3ரஹ்மலோக: || 6 ||
இவ்வாறு செய்த புண்ணியத்தின் பலனாக ஸ்வர்க்க ப்ரஹ்மா லோகங்களை ஸூர்ய கிரணங்கள் மூலம் அங்குள்ளார் சத்கரிக்க அடைகிறார்கள்
ஏஹி ஏஹி இதி – வாருங்கள், வாருங்கள்
தம் யஜமானம் – யாகத்தை நன்றாக செய்து முடித்தவன்
ஸுவர்சஸ: ஆஹுதயஹ – ஓளி பொருந்திய ஆஹுதிகள் என்று
ஸூர்யஸ்ய ரஶ்மிபி4 – சூரியகதிராகவும் இருந்துக் கொண்டு
வஹந்தி – அழைத்து செல்கிறது
ப்ரியாம் வாசம் – இனியமான, பிரியமான வார்த்தைகளால் சொல்லிக் கொண்டு
அபி4வத3ந்த்யஹ – அழைத்து செல்கிறார்கள்
அர்சயந்த்ய – அவரை பூஜித்துக் கொண்டு
ஏஹ லோகஹ வஹ – இந்த உலகம் உங்களுடையது
புண்ய: லோகஹ ஸுக்ருதோ – புண்ணியங்களின் பலனாக இந்த மேலான உலகத்திற்கு வந்திருக்கிறீர்கள்
ப்3ரஹ்ம லோகஹ – இதுதான் ஸ்வர்க்க லோகம்.
————————
ப்லவா ஹ்யேதே அதரிடா யஜ்ஞரூபா அஷ்டாதஷோக்தமவரஂ யேஷு கர்ம.
ஏதச்ச்ரேயோ யேபிநந்தந்தி மூடா ஜராமரித்யுஂ தே புநரேவாபியந்தி৷৷1.2.7৷৷
ப்லவா ஹ்யேதே அத்3ருடா4 யக்ஞரூபா அஷ்டாத3ஶோக்தமவரம் யேஷு கர்ம |
ஏதச்ச்3ரேயோ யேSபி4னந்த3ந்தி மூடா4 ஜராம்ருத்யும் தே புனரேவாபி யந்தி || 7 ||
கர்மத்தை பற்றிய நான்கு கருத்துக்கள்.
1. கர்மத்திற்கு வரையறுக்கப்பட்ட பலன் உண்டு.
2. கர்மம் அவித்யா காம காரியம் – அறியாமையினால் உருவானது.
3. கர்ம அசாரம் – இது ஆதாரமற்றது, நிலையற்றது.
4. துக்க மூலம் – நம் அனுபவிக்கும் துயரத்தின் விதையாக இருக்கிறது
1.கர்மத்தை உண்டு செய்யும் காரகங்கள் ஸ்திரமற்றது, அநித்தியமானது.
செயல் செய்ய உதவும் காரகம் ( கர்த்தா, கரணம், போன்றவைகள்) காரகம் அநித்யம்
2.கர்மமும் அநித்யமானது. இது பலமற்ற படகைப் போன்றது
3.இந்தக் கர்மத்தை மோக்ஷ சாதனமாக கொள்கிறார்களோ அவர்கள் மீண்டும் சம்சாரத்தில் வீழ்கிறார்கள்
ஏதோ – இந்த
யக்ஞரூபா – யாகம் என்ற கர்மத்தை பூர்த்தி செய்வதற்கு உதவும் காரணமாக இருக்கின்றது
அஷ்டாதஶ – பதினெட்டு காரகங்கள்
ப்லவாஹா – சிறு படகு போல
ஏஷு கர்ம அவரம் – இந்த யாகம் என்கின்ற கர்மம் கீழானது
ப்ரோக்தம் – என்று சொல்லப்பட்டது
ஏதத் ஶ்ரேயஹ – இந்த கர்மம் மோட்ச சாதனமாக
ஏயே மூடாஹா அபினந்தந்தி – எந்த மூடர்கள் எண்ணுகிறார்களோ
தே – அவர்கள்
ஜராம்ருத்யும் யந்தி – சம்சாரத்திலேயே இருப்பார்கள். பிறப்பு – இறப்பு என்கின்ற சக்கரத்திலேயே சுழன்று கொண்டிருப்பார்கள்
புனஹ ஏவ அபி – மீண்டும், மீண்டும் இந்த நிலையை அடைகிறார்கள்
அஸ்திரமான பலன்களுக்கு அவரமான கர்மாக்கள் -கர்மத்தில் உள்ள ஞான பாகம் அறியாமல் -பால் தயிர் போன்றவை நேரம் செல்ல செல்ல
கெட்டுப் போமா போலே -அளவில்லா சிற்றின்பம் அனுபவித்து சம்சாரத்தில் ஆழ்ந்து சிக்கி அனுபவிக்கிறார்கள்
————–
அவித்யாயாமந்தரே வர்தமாநாஃ ஸ்வயஂ தீராஃ பண்டிதஂ மந்யமாநாஃ.
ஜங்கந்யமாநாஃ பரியந்தி மூடா அந்தேநைவ நீயமாநா யதாந்தாஃ৷৷1.2.8৷৷
அவித்3யாயாமந்தரே வர்தமானா: ஸ்வயம் தீ4ரா: பண்டிதம் மன்யமானா: |
ஜங்க4ன்யமானா: பரியந்தி மூடா4 அந்தே4னைவ நீயமான யதா2ந்தா4: || 8 ||
நாம் அனுபவிக்கின்ற துயரங்களுக்கு காரணம் என்னுடைய அறியாமைதான் என்று அறிந்து கொள்ள வேண்டும்.
பிறகு அதை நீக்குவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.
தான் அறியாமையிலிருக்கிறேன் என்று உணராமல் இருக்கிறார்கள் மனிதர்கள் என்று உபநிஷத் பரிதாபப்படுகிறது
தெரியாது என்பதை உணராதவர்கள், தெரியாது என்பதை அறிந்தவர்களே மாணவர்கள்,
தெரியும் ஆனால் தெரியம் என்பதை அறியாதவர்கள், தெரியும் என்பதை அறிந்துள்ளவர்கள்,
தெரியாது ஆனால் தெரியும் என்று தவறாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் என்று பலவிதமாக இருக்கிறார்கள் மனிதர்கள்
அவித்யா அந்தரே – அறியாமைக்கு உள்ளே, அவித்யாவுக்கு காரணமான மனம், உடல் இவைகளுக்குள்ளே
வர்த்தமானஹ – அவர்கள் இருக்கிறார்கள்
சரீரம், மனம்,புத்திக்குள் இருந்து கொண்டு, இவைகளை நான் என்ற அறியாமையில் இருக்கின்றனர் மனிதர்கள்
ஸ்வயம் – தன்னை
தீரன், பண்டிதன் மன்யமானாஹ – தீரன், அறிவாளி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
ஜங்கன்யமானாஹ மூடாஹா – மீண்டும், மீண்டும் துயரத்தால் தாக்கப்பட்ட மூடர்களாக இருக்கிறார்கள்
பரியந்தி – அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்
அந்தாஹா அந்தேவ ஏவ – எப்படி குருடர்களுக்கு குருடர்களாலே
நீயமானா யதா2 – வழிக்காட்டபடுவது போல இருக்கிறார்கள்
அவித்தியாதிகள் ஆழ்ந்து குருடர்களை குருடர்கள் கூட்டிச் செல்லுமா போலே மூடர்கள் –
அனைத்தையும் அறிந்த சர்வஞ்ஞர் போலே தம்மை எண்ணிக் கொண்டு கூட்டிச் செல்லுகிறார்கள் –
——————–
அவித்யாயாஂ பஹுதா வர்தமாநா வயஂ கரிதார்தா இத்யபிமந்யந்தி பாலாஃ. யத்கர்மிணோ
ந ப்ரவேதயந்தி ராகாத்தேநாதுராஃ க்ஷீணலோகாஷ்சயவந்தே ৷৷1.2.9৷৷
அவித்3யாயாம் ப3ஹூதா4 வர்தமான வயம்
க்ருதார்தா2 இத்யபி4மன்யந்தி பா3லா: |
யத்கர்மினோ ந ப்ரவேத3யந்தி ராகாத்தேனாதுரா:
க்ஷீணலோகாஶ்சயவந்தே || 9 ||
அவித்யாம் பஹூதா – அறியாமை பலவிதமாக இருக்கிறது
வர்த்தமானாஹ – அந்த நிலையிலே இருக்கிறார்கள்
வயம் – நாங்கள்
க்ருதார்தா2ஹா – வாழ்க்கையில் அடைய வேண்டிய பலனை அடைந்துவிட்டதாக நினைக்கிறார்கள்
இதி அபி3மன்யந்தி – என்று இவ்விதம் எண்ணுகிறார்கள்
பா3லா – சிறு குழந்தைகள் போல
யத் கர்மிண்ணஹ – எந்த காரணத்தினால் கர்மம் செய்பவர்கள்
ந ப்ரவேத3யந்தி – அறியவில்லை
ராகாத் – ஆசையினால்
தேன – இவர்கள்
ஆதுராஹா- துயரப்பட்டவர்களாக
க்ஷீணலோகாஹா – கர்மபலன்கள் தீர்ந்து விட்டவர்களாக
ஸ்வயந்தி – இன்பத்திலிருந்து விழுந்துவிடுகிறார்கள்
பல வித அவித்யைகளிலே ஆழ்ந்து உண்மை அறிவில்லாமல் புருஷார்த்தம் பெற்றதாக நினைத்துக் கொண்டு
கர்ம சூழலிலே சிக்கி தவிக்கின்றார்கள்
————
இஷ்டாபூர்தஂ மந்யமாநா வரிஷ்டஂ நாந்யச்ச்ரேயோ வேதயந்தே ப்ரமூடாஃ.
நாகஸ்ய பரிஷ்டே தே ஸுகரிதேநுபூத்வேமஂ லோகஂ ஹீநதரஂ வா விஷந்தி৷৷1.2.10৷৷
இஷ்டாபூர்தம் மன்யமானா வரிஷ்ட2ம்
நான்யச்ச்2ரேயோ வேத3யந்தி ப்ரமூடா4: |
நாகஸ்ய ப்ருஷ்டே2 தே ஸுக்ருதேSனுபூ4த்வேமம்
லோகம் ஹீந்தரம் வா விஶந்தி || 10 ||
மோட்சம்தான் லட்சியம் என்று அறியாதவர்கள் அதை அடையும் வழியை அறிய மாட்டார்கள்.
வேறெதாவது செய்து கர்ம பலனை அனுபவிப்பார்கள்
இஷ்டா பூர்தம் – வேதத்தில் சொல்லப்பட்ட கர்மங்களை, யாகங்களை, ஸ்ம்ருதிகளில் சொல்லப்பட்ட கர்மங்களான சமுதாய சேவை போன்றவைகளை
வரிஷ்டம் மன்யமானாஹ – இவைகளையே மேலான சாதனங்கள் என்று நினைத்துக் கொண்டு அதையே செய்கிறார்கள்
ந அன்யத் ஶ்ரேயஹ – இவைகளுக்கு வேறான ஆத்மஞானம் என்ற
ந வேதயந்தஹ – தத்துவத்தை அறிவதில்லை
ப்ரமூடாஹா – இவர்கள் அதிமூடர்கள்
நாகஸ்ய ப்ருஷ்டே – சொர்க்கத்தில் மேலான நிலையில்
தே ஸுக்ருதே – அவர்கள் கர்மபலனாக கிடைத்த
அனுபூத்வா – சுகங்களை அனுபவித்து விட்டு
இமம் லோகம் – சொர்க்கலோகத்திலிருந்து இந்த லோகத்திற்கு
ஹீனதரம் வா விஶந்தி – கீழான பிறவியிலே பிறப்பெடுப்பார்கள்
கர்ம பாகங்களில் இழிந்து -விஷயாந்தர ஸூகங்களிலே-ஆழ்ந்து -மோக்ஷ புருஷார்த்தம் இழந்து
மீண்டும் மீண்டும் பிறவி சூழலிலே சிக்கி கர்ம வஸ்யராகவே இருக்கிறார்கள் –
——————–
தபஃஷ்ரத்தே யே ஹ்யுபவஸந்த்யரண்யே ஷாந்தா வித்வாஂஸோ பைக்ஷசர்யாஂ சரந்தஃ.
ஸூர்யத்வாரேண தே விரஜாஃ ப்ரயாந்தி யத்ராமரிதாஃ ஸ புரூஷோ ஹ்யவ்யயாத்மா৷৷1.2.11৷৷
தப:ஶ்ரத்3த4 யே ஹ்யுபவஸந்த்யரண்யே
ஶாந்தா வித்3வாம்ஸோ பை4க்ஷசர்யாம் சரந்த: |
ஸூர்யத்3வாரேண தே விரஜா: ப்ரயாந்தி
யத்ராம்ருத: ஸ புருஷோ ஹ்யவ்யயாத்மா || 11 ||
தப ஶ்ரத்தே யே – வானபிரஸ்தாசிர கர்மங்களான மௌனம், தவம், ஈஸ்வர தியானம்
அரண்ய – காட்டில்
யே உபவஸந்தே – சாதனங்களை செய்கிறார்கள்
ஶாந்தாஹா – எல்லா இந்திரியங்களும் கட்டுக்குள் வைத்துக் கொண்டு அமைதியுடன் இருக்கிறார்கள்
பை4க்ஷசர்யாம் சரந்தஹ – பிக்ஷை எடுத்து வாழ்பவர்களாக இருப்பார்கள்
வித்வாம்ஸஹ – இல்லறத்திலே இருந்து கொண்டு அதிக காலம் தியானம், தவம் ஆகியவற்றில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள்
இவ்வாறு விதவிதமான வைதீக சாதனங்களை பின்பற்றி உபாஸனைகளை செய்து கொண்டிருப்பார்கள்
தே விரஜா – பாவங்களைப் போக்கிக் கொண்ட இவர்கள்
சூர்யத்வாரேண – பிரம்ம லோகத்திற்கு சுக்லகதியின் வழியாக
ப்ரயாந்தி – செல்கிறார்கள்
யத்ர – அவர்கள் செல்லுமிடம்
அம்ருதஹ ஸஹ புருஷ – அந்த என்றும் இருக்கின்ற ஹிரண்யகர்ப்பன்
ஹவ்யயாத்மா – முதன் முதலில் தோன்றிய பிரம்ம இருக்குமிடத்திற்கு செல்கிறார்கள்
உபாசனம் – தபஸ் மூலம் ச்ரேஷ்டரான முனிவர்களும் மூன்றாவதான வான பிரஸ்த ஆஸ்ரமவாதிகளும் –
தங்கள் புலன்களைக் கட்டுப் படுத்தி வைத்து -அர்ச்சிராதி மார்க்கம் மூலம் சென்று -விரஜை -ரஜஸ் இல்லாத -நீராடி
பர ப்ரஹ்மம் அடைந்து நித்ய ஸூ ரிகள் உடன் ஒரு கோவையாக அனுபவிக்கிறார்கள் –
————-
பரீக்ஷ்ய லோகாந்கர்மசிதாந்ப்ராஹ்மணோ நிர்வேதமாயாந்நாஸ்த்யகரிதஃ கரிதேந.
தத்விஜ்ஞாநார்தஂ ஸ குரூமேவாபிகச்சேத்ஸமித்பாணிஃ ஷ்ரோத்ரியஂ ப்ரஹ்மநிஷ்டம்৷৷1.2.12৷৷
பரீக்ஷ்ய லோகான்கர்மசிதான்ப்3ராஹ்மணோ
நிர்வேதமாயான்னாஸ்த்யக்ருத: க்ருதேன |
தத்3விக்3ஞானார்த2ம் கு3ருமேவாபி4க3ச்சே2த்
ஸமித்பாணி: ஶ்ரோத்ரியம் ப்3ரஹ்மநிஷ்ட2ம 12 ||
இதில் ஆறு கருத்துக்கள் பேசப்படுகின்றது. அவைகள்
1.பரா வித்யைக்கு தகுதியுடையவர்கள் யார்?
2.எப்படி அந்த தகுதியை ஒருவன் அடைகிறான்?
3.அடையவேண்டிய தகுதிகள் யாவை?
4.தகுதியடைந்தவுடன் பிறகு என்ன செய்ய வேண்டும்
5.எப்படிபட்ட குருவை நாட வேண்டும்? குருவின் லட்சணங்கள் என்ன?
6.எப்படிபட்ட மனநிலையுடன் குருவை நாட வேண்டும்
ப்ராமணஹ – சத்துவகுண பிரதானமான மனதை உடையவன்.
எந்த சூழ்நிலையிலும் விருப்பு-வெறுப்பற்ற நிலையில் இருக்க வைத்து அறிவை கொடுப்பது சத்துவ குணம்.
கர்மயோகத்தினால் விவேகம், வைராக்கியம் போன்றவற்றை வளர்த்துக் கொண்டவன். எதிலேயும் போதும் என்ற மனதை உடையவன்.
இந்த தகுதிகளை உடையவன்தான் பிராமணன் என்று கூறப்படுகிறது.
பரீக்ஷய லோகான் கர்மசிதான் – நம்முடைய செயலினால் அடையப்பட்ட உலகங்களை ஆராய்ந்து பார்த்து,
விசாரம் செய்து தகுதியை அடைய முடியும்.
லோகான் என்பது எது நம்மால் அனுபவிக்கப்படுகின்றதோ அவைகளை லோகம் என்று குறிப்பிடப்படுகிறது.
பொருட்கள், சூழ்நிலைகள், மனிதர்கள் இவைகளை அனுபவிப்பது போன்றவைகள்
கர்மசிதான் – செய்த கர்மத்தால் அடைந்தது. செய்த கர்மத்தின் பலனாகத்தான் அனுபவிக்கும் பொருட்களும்,
சூழ்நிலைகளும், பழகவேண்டிய மனிதர்களும் ஒருவனுக்கு வாய்க்கிறார்கள்.
பரீக்ஷய – ஆராய்ந்து பார்த்தல், ஒருபொருளினுடைய உண்மையான ஸ்வரூபத்தை, தன்மையை நிர்ணயம் செய்வது,
உறுதி செய்வது. நம்முடைய அனுபவத்திலிருக்கும் உலகத்தை மட்டும் விசாரம் செய்தல்.
விசாரம் செய்வதற்கு மூன்று வழிகள் கூறப்பட்டிருக்கிறது. அவைகள்
1.நம் அனுபவத்தையே பாடமாக கொண்டு அறிவை அடைதல். உலகத்திலுள்ள எதுவும் என்னை திருப்திபடுத்த முடியாது
என்ற அறிவை அடைய வேண்டும். நம்மால் அடையப்படும் பொருட்களனைத்தும் நிலையற்றது என்று உறுதியான அறிவை அடைய வேண்டும்.
2.அனுமானம் மூலமாகவும் விசாரம் செய்யலாம். எவையெல்லாம் உருவாக்கப்படுகின்றதோ அவையெல்லாம் அழியக்கூடியவை.
அதேபோல இந்த உலகமும் உருவாக்கப்பட்டுள்ளதால் அழியக்கூடியதே என்ற அறிவை அடைதல்
3.சாஸ்திர அறிவைக் கொண்டும் விசாரம் செய்யலாம். கர்மபலன்கள் தீர்ந்து விட்டால் சொர்க்கத்திலிருந்து இந்த லோகத்திற்கு மீண்டும் வந்துவிடுவோம்.
நிர்வேதம் ஆயாத் – இந்த உலகத்தின் மீது வைராக்கியத்தை அடைகின்றான்.
நிர்வேதம் என்பது வைராக்கியத்தை குறிக்கிறது. இது விவேகத்துடன் கூடிய ஆழ்ந்த விசாரத்தினால்தான் அடைய முடியும்.
விவேகம் காய் என்றால், வைராக்கியம் பழம் என்று புரிந்து கொள்ளவேண்டும்.
காயிலிருந்துதான் பழம் வரும் அதேபோல விவேகத்தில் இருந்துதான் வைராக்கியம் கிடைக்கும்.
வைராக்கியமற்ற விவேகம் பயன் தராது. விவேகம் வைராக்கியமாக மாறவேண்டுமென்றால்
அதையே மீண்டும் மீண்டும் சிந்தித்து பார்த்துக் கொண்டிருக்கவேண்டும்.
வைராக்கியம் எதில் வரவேண்டும் என்று கேட்டால், இந்த உலகத்தின் மீது வரவேண்டும் என்பதுதான் பதில்.
இதை பகவத்கீதையில் (2,52) பகவான் கிருஷ்ணர் விளக்கியுள்ளார்.
எப்பொழுது உன்னுடைய புத்தியானது மோகத்திலிருந்து விடுதலையடைகிறதோ அப்போதுதான் வைராக்கியத்தை
அர்ஜுனா நீ அடைவாய் என்று பகவான் கூறியுள்ளார்.
உன்னால் இதுவரை கேட்டதிலும், இனி கேட்கபோவதிலும் வைராக்கியத்தை அடைய வேண்டும்.
ந அஸ்தி அக்ருதஹ க்ருதஹ – இந்த மோட்சத்தை(அக்ருதஹ) கர்மத்தினால் (க்ருதஹ) அடையமுடியாது ( ந அஸ்தி).
வைராக்கியம் வந்தவுடன் மேலும் சில விஷயங்களை தெரிந்து கொள்ளவேண்டும். கர்மத்தினால் அடைவது சாத்தியம்.
எனவே சாத்தியம் என்பது அடையப்படுவது. எவையெல்லாம் சாத்தியங்களோ அவைகளெல்லாம் நிலையற்றவைகள்.
ஒரு பொருள் ஏற்கனவே இருக்கிறது, அது எதனாலும் உருவாக்கப்பட்டதல்ல, நம்மிடத்திலேயே இருக்கின்றது.
அதை அறியாமையினால் இழந்திருக்கின்றோம். எனவே அதை அடைய வேண்டுமென்றால் அறியாமை நீங்கி அறிவு பெற வேண்டும்.
அந்த ஸித்த வஸ்துவை அடைவதற்கு ஞானத்தை அடைய வேண்டும்.
இந்த ஞானத்தை அடைய அதற்குரிய கருவியை (பிரமாணத்தை) பயன்படுத்த வேண்டும்.
அந்தக் கருவி உபநிஷத் என்று புரிந்து கொள்ள வேண்டும்., இந்த உபநிஷத்தை தகுதியுள்ள குருமுகமாகத்தான் அறிந்து கொள்ள வேண்டும்.
அப்போதுதான் சரியாக புரிந்து கொண்டு அறிவை அடைய முடியும்.
நாமே புத்தகத்தின் மூலம் படித்து சரியான அறிவை அடைய முடியாது. எனவே குருவை அணுகி உபநிஷத் உபதேசத்தை பெறவேண்டும்.
ஸஹ – அந்த முமுக்ஷுவானவன்
தத்3 – அந்த பிரம்மத்தை
விக்ஞானார்தம் – அறிந்து கொள்வதற்காக
குரு ஏவ அபிகச்சேத் – குருவை மட்டும் நாடி செல்ல வேண்டும்
ஸ்ரோத்ரியம், பிரஹ்ம நிஷ்டம் – இவையிரண்டு குருவின் லட்சணங்களாக கூறப்படுகின்றன.
த்ருணாதி – யார் உபதேசம் செய்கிறார்களோ அவர்தான் குரு, அவர் செய்யும் உபதேசம் ஆத்ம தத்துவம்.
எப்படி வாழவேண்டும் என்பதையும் உபதேசிக்கிறார். அவருக்கு இருக்க வேண்டிய தகுதிகளாவது:
ஸ்ரோத்ரியம் – முறைப்படி சாஸ்திரம் படித்தவராக இருக்க வேண்டும். குருபரம்பரையில் வந்த குருவிடம் தொடர்ந்து,
முறையாக சாஸ்திரம் படித்திருக்க வேண்டும்.
சிரவணம், மனனம், நிதித்யாஸனம் என்கின்ற ஞான சாதனங்களை பின்பற்றி ஆத்மவித்யாவை படித்திருக்க வேண்டும்.
பிரம்ம நிஷ்டன் – பிரம்ம ஞானத்தை அடைந்ததுமில்லாமல், அதில் நிலைப்பெற்று இருக்க வேண்டும்.
ஸ்ரோத்ரிய குருவினால்தான் முறையாக சீடனுக்கு புரியும் விதத்தில் சாஸ்திரத்தை உபதேசிக்க முடியும்.
அவருடைய உபதேசம் சீடனால் நன்றாக புரியும் விதத்தில் இருக்கும்.
குருவானவர் ஏன் பிரம்ம நிஷ்டனாக இருக்க வேண்டுமென்றால், நான் சம்சாரி என்ற அறிவுடன் வந்திருக்கும் சீடனிடம்
நீ அசம்சாரி என்று உபதேசம் செய்யும்போது அது எப்படி உண்மையாக இருக்க முடியும் என்று அவன் சந்தேகித்து கொண்டிருப்பான்.
இந்த சந்தேகத்தை பிரம்மநிஷ்டனாக இருக்கின்ற குருவின் வாழும் விதத்தைப் பார்த்துத்தான் நீக்கி கொள்வான்.
யாரையும் துவேஷிக்காமல், காம-க்ரோதங்கள் எதுவும் இல்லாமல் இருக்கின்ற குருவை பார்க்கின்றான்.
இன்ப-துன்பங்களை சமமாக பாவிக்கும் நிலையை பார்க்கும் போது கற்றதில் பெற்ற அறிவில் இருக்கும்
சந்தேகங்கள் எல்லாம் நீங்கப்பெற்று அவனும் குருவைப் போன்ற நிலையை அடைகிறான்.
குருவிடம் இருக்க வேண்டிய இந்த லட்சணங்களை எப்படி கண்டுபிடிப்பது?
1.குருவிடம் சென்று அவரது குருவின் பெயரை அறிந்துக் கொள்ள வேண்டும். அதிலிருந்து அவர் ஸ்ரோத்திரன் என்பதை கண்டு கொள்ளலாம்
2.பிரம்மநிஷ்டன் என்பதை தெரிந்து கொள்வது மிக கடினம். அவரிடம் நற்பண்புகள் சுபாவமாக இருப்பதால்
அவர் பிரம்மநிஷ்டனாகத்தான் இருக்க வேண்டும் என்று யூகித்து அறிந்து கொள்ளலாம்
குருவின் லட்சணங்கள்
· சாஸ்திரத்தை முறைப்படி கற்றவர். அதன்படியே வாழ்பவர் இத்தகையவர் உத்தம குருவாக இருக்க முடியும்
·வெறும் ஸ்ரோத்திரியனாக மட்டும் இருப்பவர் மத்திமமான குரு. இவரிடம் இருந்து சாஸ்திர அறிவை பெறலாம,
ஆனால் இவர் வாழ்க்கை முறையில் இருந்து எதையும் கற்றுக் கொள்ள முடியாது
· கேவல பிரம்ம நிஷ்டனாக இருப்பவர் முறைப்படி சாஸ்திரத்தை படித்து இருக்க மாட்டார்.
பூர்வஜென்ம புண்ணியத்தால் பிரம்ம ஞானத்தையும் அடைந்து அதில் நிஷ்டையும் அடைந்திருப்பார்.
அதனால் இவரால் ஆத்ம உபதேசத்தை புரியும் வகையில் இருக்காது.
எப்படிபட்ட மனநிலையுடன் சிஷ்யன் குருவை நாட வேண்டும்?
சமித்பாணி ஸஹ – அவன் கையில் சமித்பாணியை எடுத்துக் கொண்டு குருவிடம் செல்லவேண்டும்.. இது சிரத்தையை குறிக்கிறது.
அவருக்கு பணிவிடை செய்கின்ற மனநிலையுடன் செல்கின்றான். இது அவனிடத்தில் இருக்கின்ற பக்தியையும்,
சேவை செய்கின்ற மனப்பான்மையையும், பணிவையும் குறிக்கின்றது
குருவினுடைய உபதேசம் ஞானமாக வேண்டுமானால் அவர் மீது சிரத்தை வைத்திருக்க வேண்டும்.
யாரிடம் பக்தியிருக்கிறதோ அவரிடம் நாம் ஒளிவு மறைவின்றி இருப்போம் அவரது உபதேசத்தை ஆர்வத்துடன் கேட்போம்.
நாம் ஏற்கனவே படித்துவைத்திருந்தால் அதை குருவின் உபதேசத்தோடு ஒப்பிட்டு பார்த்து கொண்டிருப்போம்,
புதியதாக அறிவை அடைய வேண்டும். எனவே மனதை தெளிவாக வைத்திருக்க வேண்டும்.
சேவை செய்வதனால் நம்முடைய அகங்காரம், கர்வம் குறைந்துவிடும் பிறகு இல்லாமல் போய்விடும்.
அறிவில் பணிவு இருக்க வேண்டும். பணிவான பாவனையுடன் அணுகவேண்டும். குருவிடம் பணிவான கேள்விகளைக் கேட்க வேண்டும்.
எனவே உலகத்தை விசாரம் செய்து, வைராக்கியம் அடைந்தவுடன் குருவை அணுக வேண்டும்.
இப்படிபட்ட குருவிடம் செல்ல வேண்டும். குருவிடம் மட்டும்தான் செல்ல வேண்டும் வேறு மார்க்கம் எதுவும் இல்லை
ப்ராஹ்மணர்- கர்ம வசம் படாமல் இருப்பதற்காக சாத்விக தியாகத்துடன்-விஷயாந்தர்களில் பற்று இன்றி -நிர்வேதத்துடன்
ப்ரஹ்ம நிஷ்டர்களான -ஸமித் பாணி யாக ஞானம் அனுஷ்டானம் இவை நன்குடைய ஆச்சார்யர்களை பற்றி
அவர்கள் அபிமானத்தாலே பர ப்ரஹ்மத்தை அடைந்து அனுபவிக்கிறார்கள் –
————–
தஸ்மை ஸ வித்வாநுபஸந்நாய ஸம்யக் ப்ரஷாந்தசித்தாய ஷமாந்விதாய.
யேநாக்ஷரஂ புரூஷஂ வேத ஸத்யஂ ப்ரோவாச தாஂ தத்த்வதோ ப்ரஹ்மவித்யாம்৷৷1.2.13৷৷
தஸ்மை ஸ வித்3வானுபஸன்னாய ஸ்ம்யக்
ப்ரஶாந்தசித்தாய ஶமான்விதாய |
யேனாக்ஷரம் புருஷம் வேத3 ஸத்யம் ப்ரோவாச
தாம் தத் த்வதோ ப்ரஹ்மவித்3யாம் || 13 ||
தஸ்மை – இப்படி அணுகிய சீடனுக்கு
ஸஹ வித்3வான் – அந்த குரு
ஸம்யக் உபஸன்னாய – முறைப்படி தகுதியுடைய அணுகிய சீடனுக்கு
ப்ரஶாந்த சித்தாய – அமைதியடைந்த மனதையுடையவன் (ராக-துவேஷங்கள் நீங்கிய அமைதியான மனதையுடைய சீடனுக்கு,
சமஹ என்ற தகுதியை அடைந்தவனுக்கு)
ஶமான்விதாய – ஞானேந்திரியங்களை தன் வசத்தில் கொண்டுள்ள சீடனுக்கு, தமம் என்கின்ற தகுதியை அடைந்த சீடனுக்கு
ப்ரோவாச – உபதேசம் செய்ய வேண்டும்
தாம் ப்ரஹ்மவித்3யாம் – அந்த பிரஹ்ம வித்யாவை
தத்வதஹ – எப்படி அறிந்தாரோ அதேமாதிரி
யேன அக்ஷரம் ஸத்யம் புருஷம் சேத – எந்த ஞானத்தால் இப்படிபட்ட தத்துவத்தை, அறிவாரோ
அழியாததுமான மூன்று காலத்திலும் மாறாதிருக்கின்ற பிரம்மத்தை, எல்லாவிடத்திலும் வியாபித்துள்ளவர்,
உடலில் சாட்சியாக இருந்து கொண்டிருக்கின்ற புருஷனை
———————————
ததேதத்ஸத்யஂ யதா ஸுதீப்தாத்பாவகாத்விஸ்புலிங்காஃ ஸஹஸ்ரஷஃ ப்ரபவந்தே ஸரூபாஃ.
ததாக்ஷராத்விவிதாஃ ஸோம்ய பாவாஃ ப்ரஜாயந்தே தத்ர சைவாபியந்தி৷৷2.1.1৷৷
ததே3தத்ஸத்யம் யதா2 ஸுதீப்தாத்பாவகாத்3
விஸ்புலிங்கா: ஸஹஸ்ரஶ: ப்ரபவந்தே ஸரூபா: |
ததா3க்ஷராத்3விவிதா4: ஸோம்ய பா4வா:
ப்ரஜாயந்தே தத்ர சைவாபி யந்தி || 1 ||
ஸோம்ய – நல்ல மனதையுடைய சீடனே
தத் ஏதத் ஸத்யம் – முன்பு சொன்ன பிரம்மனும் சத்யம், எந்த அக்ஷரத்தைப்பற்றி சொல்லப் போகிறேனோ அதுவும் சத்யம் ( என்றும் இருப்பது)
யதா2 – எப்படி
ஸுதீ3ப்தாத்பாவகாத் – கொழுந்துவிட்டு நன்கு எரிகின்ற நெருப்பிலிருந்து
ப்ரப4வந்தே – தோன்றுகின்ற
சஹஸ்ரஶஹ – ஆயிரக்கணக்கான,
விஸ்புலிந்க்காஹா – தீப்பொறிகள்
ஸரூபா: – அக்னியின் தன்மையை உடையதாக இருக்கிறதோ
ததா4 – அவ்விதமே
அக்ஷராத் – அக்ஷரத்திலிருந்து
விவிதா4: பா4வாஹா – விதவிதமான ஜீவராசிகள்
ப்ரஜாயந்தே – தோன்றுகிறது
தத்ர ச ஏவ அபி யந்தி – இவைகள் அக்ஷரத்திலேயேதான் ஒடுங்குகிறது.
அக்ஷரமே இவைகளுக்கு உபாதான காரணமாக சொல்லப்பட்டிருக்கிறது.
சத்தாக இருந்த அந்த ஒன்றான பெற ப்ரஹ்மத்தின் இடம் இருந்து -நெருப்பு துகள் ஒவ் ஒன்றும் நெருப்பு ஆவது போலேயும்
குடாகாசம் போல ஆகாசம் பல ஆயிரக் கணக்கான ஆகாசம் ஆவது போலேயும் – பலவும் பல்வேறு நாம ரூபங்களுடன்
ப்ரஜாயந்தே – உருவாகி -விவித் பவ -மீண்டும் அதிலே லயிக்கும்-அப்யந்தி-
நேதி நேதி -என்று தான் சொல்ல முடியும் அந்த பர ப்ரஹ்மத்தை –
——————
திவ்யோ ஹ்யமூர்தஃ புரூஷஃ ஸபாஹ்யாப்யந்தரோ ஹ்யஜஃ. அப்ரணோ ஹ்யமநாஃ ஷுப்ரோ ஹ்யக்ஷராத்பரதஃ பரஃ৷৷2.1.2৷৷
தி3வ்யோ ஹ்யமூர்த: புருஷ: ஸபா3ஹ்யாப்4யந்தரோ ஹ்யஜ: |
அப்ரணோ ஹ்யமனா: ஶுப்4ரோ ஹ்யக்ஷராத்பரத: பர: || 2 ||
திவ்யஹ – சைதன்ய ஸ்வரூபமானது, சித் ஸ்வரூபமானது
அமூர்த: – உருவமற்றது, அவயவங்களற்றது
புருஷஹ – எல்லாவிடத்திலும் நிறைந்திருப்பது, பூரணமானது, உடலில் சாட்சியாக இருப்பதாலும் இவ்வாறு கூறப்படுகிறது
ஸ பா3ஹ்யம் – வெளியேயும் உள்ளது
ஸ அப்4யந்தரோ – உள்ளேயும் உள்ளது. எதனாலும் வரையறுக்கப்படாதது
ஹி அஜஹ – உண்மையில் பிறப்பற்றது, எந்தவித மாற்றமும் இல்லாதது
அப்பிராணஹ – பிராணனும் இல்லாதது
அமனாஹ – மனது கிடையாது. அதாவது சூட்சும சரீரமுமற்றது
ஶுப்4ரஹ – தூய்மையானது, காரண சரீரமற்றது. அறியாமையற்றது
மாயை ஸ்தூல சூட்சுமமான ஜகத்தை காட்டிலும் மேலானது. அக்ஷரம் இந்த மாயையை காட்டிலும் மேலானது
அக்ஷராத் ப்ரதஹ பர – ஜகத்தைக் காட்டிலும் மேலான மாயைவிட மேலானது இந்த பிரம்மன்
திவ்ய -அஜன் -பிறப்பிலி பல் பிறவி பெருமான் -கர்ம வஸ்யர் போலே பிறப்பில்லாதவன் -ரூபமும் ரூபங்கள் பலவும் கொண்டவன் –
நித்யன் ஸத்ய ஸங்கல்பன் -பராத் பரன் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -சர்வ அந்தர்யாமி -ஸ்வரூப ஸ்வபாவ விகாரங்கள் அற்றவன் –
—————–
ஏதஸ்மாஜ்ஜாயதே ப்ராணோ மநஃ ஸர்வேந்த்ரியாணி ச. கஂ வாயுர்ஜ்யோதிராபஃ பரிதிவீ விஷ்வஸ்ய தாரிணீ৷৷2.1.3৷৷
ஏதஸ்மாஜ்ஜாயதே ப்ராணோ மன: ஸர்வேந்த்3ரியாணி ச |
க்2ம் வாயுர்ஜோதிராப: ப்ருதி2வீ விஶ்வஸ்ய தா4ரிணீ || 3 ||
இந்த பிரபஞ்சம் நான்கு படிகளாக தோன்றியது. பிரம்மன் மாயையோடு கூடியது முதல் நிலை.
சூட்சுமமான ஐந்து பூதங்கள் தோன்றியது. சூட்சுமமான பிரபஞ்ச, சரீரங்கள் தோன்றியது.
சூட்சும பூதங்களின் கலப்பினால் ஸ்தூல பஞ்சபூதங்கள் தோன்றியது. ஸ்தூல பிரபஞ்சம், ஸ்தூல சரீரங்கள் தோன்றியது,
கம் – ஆகாசம் – மாயையுடன் கூடிய சப்தம்
வாயு – காற்று – ஸ்பர்ஶம், தொடுதல்
ஜோதி – அக்னி – ரூபம்
ஆபஹ – நீர் – சுவை
ப்ருதவி – நிலம் – வாசனை
இவைகளெல்லாம் சூட்சுமமான பூதங்கள்
ஏதஸ்மாத் – இதனிடமிருந்து, மாயையுடன் கூடிய அக்ஷரத்துடன்
பிராணஹ, மனஹ – பிராணன்களும், மனதும்
சர்வ இந்திரியானி ச – எல்லா இந்திரியங்களும்
ஜாயதே – தோன்றியது
அவனே த்ரிவித காரணன் -மனஸ் கர்ம ஞான இந்திரியங்கள் பஞ்ச பூதங்கள் தன்மாத்திரைகள்
ஸ்பர்சாதி குணங்கள் -எல்லாம் அவன் இடம் இருந்தே உருவாகின்றன –
———
அக்நிர்மூர்தா சக்ஷுஷீ சந்த்ரஸூர்யௌ திஷஃ ஷ்ரோத்ரே வாக்விவரிதாஷ்ச வேதாஃ.
வாயுஃ ப்ராணோ ஹரிதயஂ விஷ்வமஸ்ய பத்ப்யாஂ பரிதிவீ ஹ்யேஷ ஸர்வபூதாந்தராத்மா৷৷2.1.4৷৷
அக்னிர்மூர்த4ம் சக்ஷுஷீ சந்த்3ரஸூர்யை
திஶ: ஶ்ரோத்ரே வாக்விவ்ருதாஶ்ச வேதா3: |
வாயு: ப்ராணோ ஹ்ருத3யம் விஶ்வமஸ்ய
பத்த்4யாம் ப்ருதி2வீ ஹ்யேஷ ஸர்வபூ4தாந்தராத்மா ||| 4 ||
இந்த பிரபஞ்சமே ஈஸ்வரனின் ஸ்தூல சரீரம்.
அந்தர்யாமி – மாயையுடன் கூடிய ஈஸ்வரன்
ஹிரண்யகர்ப்பன் – சூட்சுமமான பிரபஞ்சமாக, சரீரங்களாக இருக்கும் உருவம்
விராட் – ஸ்தூலமான பிரபஞ்சமாகவும், ஸ்தூல சரீரங்களாகவும் இருக்கும் உருவம்
அக்னிர்மூர்தா4 – விராட்டின் தலை சொர்க்கம்
சக்ஷுஷீ சந்த்3ரஸூர்யை – சந்திரனும், சூரியனும் இரண்டு கண்கள்
தி3ஶ: ஶ்ரோத்ரே – திசைகளே காதுகளாக இருக்கிறது
வாக்3 வேதா3ஹா – வேதங்களே அவருடைய பேச்சு
விவ்ருதாஹ வேதாஹா – பிரசித்தமான வேதங்கள்
வாயுஹு பிராணஹ – காற்றே அவரது பிராணன்
விஶ்வம் ஹ்ருதயம் – பிரபஞ்சமே இதயமாக
யஸ்ய – அந்த விராட்
பத்3த்4யாம் ப்2ருதிவி – பாதங்கள் இந்த பூமி
ஏஷஹ – இவர்
ஸர்வபூ4த் அந்தராத்மா – எல்லா ஜீவராசிகளின் இதயத்திலும் இருக்கிறார்.
பர ப்ரஹ்மம் -திரு முகத்தில் இருந்து -அக்னி -திருக் கண்கள் சந்த்ர ஸூ ர்யர்கள் -திக்குகள் திருக் காதுகள் –
அவன் ஸ்ரீ ஸூ க்திகளே வேதங்கள்
பிராணனே வாயு -அவன் இருதயமே அனைத்து உலகங்களும் -திருவடிகளில் இருந்து அனைத்து உலகங்களும் -உண்டாகி
அனைத்துக்கும் சர்வ அந்தராத்மாவாக உள்ளான் -அவனே விஷ்ணு -த்ரிவித -தேச கால வஸ்து -பரிச்சேத ரஹிதன் அனந்தன் –
—————–
தஸ்மாதக்நிஃ ஸமிதோ யஸ்ய ஸூர்யஃ ஸோமாத்பர்ஜந்ய ஓஷதயஃ பரிதிவ்யாம்.
புமாந் ரேதஃ ஸிஞ்சதி யோஷிதாயாஂ பஹ்வீ ப்ரஜாஃ புரூஷாத்ஸஂப்ரஸூதாஃ৷৷2.1.5৷৷
தஸ்மாத3க்னி: ஸமிதோ4 யஸ்ய ஸூர்ய:
ஸோமாத்பர்ஜன்ய ஔஷத4ய: ப்ருதி2வ்யாம் |
புமான் ரேத: ஸிஞ்சதி யோஷிதாயாம்
ப3ஹ்வீ ப்ரஜா: புருஷாத்ஸம்ப்ரஸூதா: || 5 ||
தஸ்மாத் – மாயையுடன் கூடிய அந்த பிரம்மத்திடமிருந்து
அக்னி – சொர்க்கலோகம் தோன்றியது
ஸமித4ஹ யஸ்ய ஸூர்ய: – சூரியனால் அது பிரகாசிக்கிறது.
ஸோமஹ – சந்திரன் தோன்றியது
பர்ஜன்ய – அதிலிருந்து மேகங்கள் உருவாகியது, மழையாக பொழிகின்றது
ஔஷதஹ ப்ருதி2வ்யாம் – தாவரங்கள் பூமியில் வளர்கின்றது
புமான் – மனிதன்
ரேதஹ – அவனுடைய விந்து சக்தியை
யோஷிதாயாம் ஸிஞ்சதி – பெண்ணுக்குள் செலுத்துகிறான்
பஹுவிஹி – பலவிதமான
ப்ரஜாஹா – ஜீவராசிகள்
புருஷாதி ஸம்ப்ரஸுதாஹா – பிரம்மத்திடமிருந்து தோன்றியது
இவ்வாறு ஜீவனின் ஸ்தூல சரீரம்தான் உருவாகிறது. அது மனிதனாக இருக்கலாம் அல்லது வேறு ஜீவராசியாகவும் இருக்காலாம்.
அவனது சூட்சும சரீரம் அப்படியேதான் இருக்கும்
அந்த பர ப்ரஹ்மத்தின் இடம் இருந்து -முதலில் -அக்னி -ஸூர்யனுக்கு ஸமித் போலவும் –இரண்டாவதாக –சந்திரனுக்கு பர்ஜன்யனும்
மூன்றும் நான்காவதாக ஒளஷதமும் விதைகளும் பூமிக்கு மேகம் மூலமும்
ஐந்தாவதாக புருஷர்களுக்கு ரேதஸும் -இப்படி பஞ்சாக்னி வித்யை என்பவர் –
—————-
தஸ்மாதரிசஃ ஸாம யஜூ் ఁஷி தீக்ஷா யஜ்ஞாஷ்ச ஸர்வ க்ரதவோ தக்ஷிணாஷ்ச.
ஸஂவத்ஸரஷ்ச யஜமாநஷ்ச லோகாஃ ஸோமோ யத்ர பவதே யத்ர ஸூர்யஃ৷৷2.1.6৷৷
தஸ்மாத்3ருச: ஸாம யஜூம்ஷி தீக்ஷா
யக்3ஞாஶ்ச ஸர்வே க்ரதவோ தக்ஷிணாஶ்ச |
ஸம்வத்ஸரஶ்ச யஜமானஶ்ச லோகா:
ஸோமோ யத்ர பவதே யத்ர ஸூர்ய: || 6 ||
தஸ்மாத்3 – அந்த பிரம்மத்திடமிருந்து
யஹூம்ஷி – வேத மந்திரங்கள்
ரிச: ஸாம, யஜூ – சாம, யஜூர் வேதங்கள்
தீ3க்ஷா – யாகம் செய்வதற்காக எடுத்துக் கொள்ளும் விரதங்கள்
யக்ஞா – யாகங்கள் தோன்றியது
ஸர்வே க்ரதஹ – பல விலங்குகளை பலி கொடுக்கின்ற
த3க்ஷிணாஶ்ச – யாகத்தில் கொடுக்கப்படும் தானங்கள்
ஸம்வத்ஸரஶ்ச – காலங்கள் தோன்றியது
யஜமானஶ்ச – யாகத்தை செய்யும் எஜமானன்
லோகாஹ – விதவிதமான லோகங்கள்
யத்ர ஸோமஹ –சந்திரதேவன் வழிக்காட்டுகின்ற உலகங்கள்
யத்ர சூர்யஹ – சூரியன் வழிகாட்டும் லோகங்கள்
இவைகள் யாவும் பிரம்மத்திடமிருந்து தோன்றியது. ஜீவன் இறந்த பிறகு அடையும் கதிகள்
1.முறையாக கர்மங்களை செய்த மனிதனின் முதல் கதி – கிருஷ்ண கதி – சொர்க்கம்
2.அதிக உபாஸனைகளின் மூலம் சுக்லகதி வழியாக பிரம்ம லோகத்திற்கு செல்கின்றான்
3.அவரவர்கள் விருப்பு-வெறுப்பு வாழ்பவர்களுக்கு அதோ கதி – எந்தக்கதியும் இல்லாதவர்கள் நரகத்தையோ, விலங்குகளாகவோ பிறப்பார்கள்
4.அகதி – எந்தக் கதியும் கிடையாது. மோட்சம் அடைந்தவர்களின் அடையும் கதியானது மீண்டும் பிறவியெடுக்க மாட்டார்கள்
சொர்க்கலோகம், பிரம்ம லோகம் இருக்கிறது என்று நம்புபவர்களுக்கு ஶ்ருதி ஆதாரமாக இருக்கிறது.
இல்லையென்போர்களுக்கு அவர்களது நம்பிக்கைதான் ஆதாரம்.
அந்த பர ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே ருக் யஜுர் சாமம் -வேத மந்திரங்களும் –சந்தஸ் போன்ற அங்கங்களும் –
சாமம் -ஹிம்கார-பிரஸ்தவ -உத்கீதம் -பிரதிகாரம் -நிதானம் -என்று ஐந்தாகவும் -உபத்ரவ அடி -என்ற இரண்டையும் சேர்த்து ஏழாகவும் பிரிப்பர் –
அந்த ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே சந்த்ர ஸூரியர் -தஷிணாயணம் உத்தராயணம் -யாகம் யஜ்ஜம் -வர்ணாஸ்ரம கர்மாக்கள் -அனைத்தும் வந்தன –
——————-
தஸ்மாச்ச தேவா பஹுதா ஸஂப்ரஸூதாஃ ஸாத்யா மநுஷ்யாஃ பஷவோ வயாஂஸி.
ப்ராணாபாநௌ வ்ரீஹியவௌ தபஷ்ச க்ஷத்தா ஸத்யஂ ப்ரஹ்மசர்யஂ விதிஷ்ச৷৷2.1.7৷৷
தஸ்மாச்ச தே3வா ப3ஹுதா4 ஸம்ப்ரஸூதா:
ஸாத்4யா மனுஷ்யா பஶவோ வயாம்ஸி |
ப்ராணாபானௌ வ்ரீஹியவௌ தபஶ்ச
ஶ்ரத்3தா4 ஸத்யம் ப்ரஹ்மசர்யம் விதி4ஶ்ச || 7 ||
தஸ்மாத்3 – அந்த பிரம்மத்திடமிருந்து
தேவாஹா – தேவர்கள்
பஹுதா4 ஸ்ம்ப்ரஸூதாஹா – பலவிதமான தேவதைகள்
ஸாத்4யா மனுஷ்யா – விசேஷமான தேவதைகள் மனிதர்கள்
பஶவஹ, வயாம்ஸி – மிருகங்கள், பறவைகள்
ப்ராணா அபானௌ – பிராணனங்கள் தோன்றின
வ்ரீஹி, யவௌ – நெல், பார்லி போன்ற தானியங்கள்
தபஹ, ஸ்ரத்3தா4 – தவங்களும், சிரத்தையும்
ஸத்யம் – உண்மை உரைத்தல்
ப்ரஹ்மசர்யம் – பிரம்மச்சர்ய வாழ்க்கை முறை
விதி4ஶ்ச – நம்முடைய கர்மங்கள், வாழ்க்கை நெறிமுறைகள் தோன்றின
அந்த பர ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே தேவ-முப்பத்து முக்கோடி -11-ருத்ரர்கள் /-12-ஆதித்யர்கள் /அஷ்ட வசுக்கள் /அஸ்வினி /
மனுஷ்ய திர்யக் ஜங்கமம்-நெல் பார்லி போன்ற தானியங்களும் -சத்யம் -வர்ணாஸ்ரம கர்மங்கள் -சாஸ்த்ர விஹிதங்கள்-அனைத்தும் உண்டாயின –
———————
ஸப்த ப்ராணாஃ ப்ரபவந்தி தஸ்மாத்ஸப்தார்சிஷஃ ஸமிதஃ ஸப்த ஹோமாஃ.
ஸப்த இமே லோகா யேஷு சரந்தி ப்ராணா குஹாஷயா நிஹிதாஃ ஸப்த ஸப்த৷৷৷–৷2.1.8৷৷
ஸப்த ப்ராணா: ப்ரப4வந்தி தஸ்மாத்
ஸப்தார்சிஷ: ஸமித4: ஸப்த ஹோமா: |
ஸப்தே இமே லோகா யேஷு சரந்தி ப்ராணா
கு3ஹாஶயா நிஹிதா: ஸப்த ஸப்த || 8 ||
யாகத்தில் உள்ள அங்கங்கள் ஹோமகுண்டம், அக்னி, அக்னிஜுவாலை, அக்னியில் சமர்ப்பிக்கும் பொருட்கள் (சமீத்),
அக்னியும், சமித்தும் ஒன்றாகின்றது (பஸ்பம்)
ஹோமகுண்டம் – இந்திரியங்கள் இருக்குமிடம்
அக்னி – இந்திரியங்கள்
அக்னி ஜுவாலை – இந்திரியங்களின் வெளிப்பாடு
சமித் – இந்திரியங்களின் விஷயங்கள்; உலகத்திலுள்ள விஷயங்கள்; அனுபவிக்கும் விஷயங்கள்
அக்னி-சமித் சம்பந்தம் – ஞானம்
தஸ்மாத் – அந்த பிரம்மத்திடமிருந்து
ஸப்த ப்ராணா: – ஏழு பிராணன்கள், இந்திரியங்கள் தோன்றியது
ஸப்த அர்சிஹ – இந்திரிய சக்திகளும்
ஸப்த இமே லோகா – இந்த ஐந்து இந்திரியங்கள்
ஸமித4ஹ, ஹோமா – பல விஷயங்களும், அறிவை அடைவதும் சமித்துக்கு ஒப்பிடப்படுகிறது
நாம் அடையும் உலக விஷயங்களினால் அறிவு இவ்வாறு சொல்லப்படுவது
ஏஷு ப்ராணன் சரந்தி – இந்த கோளகத்தில் இந்திரியங்கள், பிராணன்கள் செயல்படுகின்றது.
கு3ஹாஶயா – இந்திரியங்கள் மனதில் ஓய்வெடுக்கின்றது. மனம் இருதயத்தில் ஓய்வெடுக்கின்றது.
நிஹிதா: ஸப்த ஸப்த – இந்த ஏழு ஏழு இந்திரியங்கள் எல்லா ஜீவராசிகளுக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது
அந்த பர ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே ஏழு -முக்கிய முகத்தில் உள்ள ஞான இந்திரியங்கள்
இரண்டு காதுகள் -இரண்டு கண்கள் -இரண்டு மூக்கு த்வாரங்கள் ஒரு வாய் –
சப்த அக்னிகள் சப்த சமித்துக்கள் -சப்த ஹோமங்கள் –சப்த லோகங்கள் -பிராண அபாண–போன்றவையும் –
——————-
அதஃ ஸமுத்ரா கிரயஷ்ச ஸர்வேஸ்மாத்ஸ்யந்தந்தே ஸிந்தவஃ ஸர்வரூபாஃ.
அதஷ்ச ஸர்வா ஓஷதயோ ரஸஷ்ச யேநைஷ பூதைஸ்திஷ்டதே ஹ்யந்தராத்மா৷৷2.1.9৷৷
அத: ஸமுத்3ரா கி3ரயஶ்ச ஸர்வேSஸ்மாத்ஸ்யந்த3ந்தே
ஸிந்த4வ: ஸர்வரூபா: |
அதஶ்ச ஸர்வா ஓஷத4யோ ரஸ்ஶ்ச யேனைஷ
பூ4தைஸ்திஷ்ட2தே ஹ்யந்தராத்மா || 9 ||
அதஹ – பிரம்மத்திடமிருந்து
ஸர்வே ஸமுத்3ரா, கி3ரய – எல்லா கடல்கள், மலைகள் தோன்றின
அஸ்மாத் – அந்த பிரம்மத்திடமிருந்து
ஸர்வரூபா: ஸிந்த4வ: – நதிகள் பலவிதமாக தோன்றின
ஸர்வா ஓஷத4யஹ – விதவிதமான மரம், செடி, கொடிகள்
ரஸ்ஶ்ச – தாவரங்களில் இருக்கும் சக்திகள்
யேன – இந்த சக்திகள்
ஏஷ அந்தராத்மா – சூட்சும சரீரத்திலிருக்கும் அந்தராத்மா
பூதை திஷ்டதே – ஸ்தூல சரீரத்தில் இருக்க உதவுகிறது.
அந்த பர ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே சமுத்ரங்களும் மலைகளும் நதிகளும் -ஒளஷதங்கள் தானியங்கள்
சர்வ ரசங்களும்-ஆறு சுவைகளும் -பஞ்ச பூதங்களும் -வந்தன –
அனைத்துக்கும் சர்வ அந்தர்யாமியாகவும் இருந்து நாம ரூப விபாகம் அருளினான் –
————–
புரூஷ ஏவேதஂ விஷ்வஂ கர்ம தபோ ப்ரஹ்ம பராமரிதம். ஏதத்யோ வேத நிஹிதஂ குஹாயாஂ ஸோவித்யாக்ரந்திஂ விகிரதீஹ ஸோம்ய৷৷2.1.10৷৷
புருஷ: ஏவேத3ம் விஶ்வம் கர்ம தபோ ப்ரஹ்ம பராம்ருதம் |
ஏதத்3யோ வேத3 நிஹிதம் கு3ஹாயாம்
ஸோSவித்3யாக்3ரந்தி2ம் விகிரதீஹ ஸோம்ய || 10 ||
இதில் மூன்று கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது. அவைகள் 1. பிரஹ்ம ஸ்வரூபம், 2. ஜீவ-பிரஹ்ம ஐக்கியம், 3. ஞானபலன்
ஸோம்ய – மிகவும் விருப்பத்திற்குரியவனே!
புருஷஹ ஏவ இத3ம் விஶ்வம் – நம்முடைய அனுபவத்திலிருக்கின்ற உலகத்தில் உள்ள அனைத்தும் பிரஹ்ம ஸ்வரூபமாகவே இருக்கிறது
கர்ம தபஹ – கர்ம பலனாலும், உபாஸனை பலனாலும் கிடைத்த உலகத்தை நாம் அனுபவிக்கிறோம்
ப்ரஹ்ம பராம்ருதம் – புருஷனான பிரம்மன் மேலானது, அழிவற்றது.
யஹ ஏதத் – எவனொருவன் இவ்வாறு வெளியே ஸத் ரூபமாக உள்ள பிரம்மத்தை
குஹாயாம் – மனதில் உள்ள சித் (ஆத்மாவாக) ஸ்வரூபமாக
வேத நிஹிதே – இருப்பதாக அறிகின்றானோ
இது ஜீவ-பிரஹ்ம ஐக்கியத்தை எடுத்துக் காட்டுகிறது. நான் இருக்கின்றேன் என்பதற்கு எந்த இந்திரியங்களின் துணையும் தேவையில்லை
யஹ ஏத ஸஹ – இவ்வாறு யார் அறிகிறார்களோ
அவித்யா க்ரந்தி விக்ரதி – அவர்கள் அறியாமை என்ற முடிச்சிலிருந்து விடுபடுகிறார்கள்.
இஹ – உயிரோடு இருக்கும்போது இங்கேயே இப்போதே நம்முடைய மனதால் உலகத்தோடு கட்டிப்போடப்பட்டிருக்கின்றோம்.
இதுவே அறியாமை என்ற முடிச்சு இது மிக உறுதியாக நம்மை நாம ரூபத்தோடு கட்டி வைத்திருக்கிறது.
இந்த உலகத்திலுள்ள பொருட்கள், விஷயங்கள் எல்லாம் நம் மனதில் வாசனைகளாக இருந்து கொண்டிருக்கிறது.
இதிலிருந்து நம் மனம் விடுபடுகிறது. அதாவது சம்சார பந்தத்திலிருந்து விடுபடுகிறோம்.
விசாரம்:
பாம்பும் கயிறும் ஒரே நேரத்தில் இருவருக்கு வெவ்வேறாக தெரிகிறது.
கயிற்றைப் பார்ப்பவர், பாம்பை பார்ப்பவரிடம், நீ பார்ப்பது பாம்பல்ல,கயிறு என்று சொல்வது போல
இந்த உலகத்தை பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு, அது உலகமல்ல பிரஹ்மம் என்று உபநிஷத் உபதேசிக்கிறது.
எனவே நாம் உலகத்தை சத்யமாக நினைத்துக் கொண்டிருக்கும் நிலையை விலக்கி அதில் பிரம்மத்தைத்தான் பார்க்க வேண்டும்.
இந்த பிரபஞ்சத்திற்கு பிரம்மன் உபாதான காரணமாக உபதேசிக்கப்பட்டது. தோற்றம், இருத்தல், அழிதல் காரணமாக இருப்பது உபாதான காரணம்.
இந்த உலகத்தில் எந்த விதத்தில் பிரம்மன் உபாதான காரணமாக இருக்கிறது என்பதை ஆராய்வோம். மூன்று லட்சணங்கள் உபாதான காரணத்திற்கு உண்டு.
1.காரிய முழுவதும் வியாபித்திருக்கும். பானை முழுவதும் களிமண் இருப்பது
2.காரியத்தில் ஏற்படும் மாற்றம் காரணத்தை பாதிக்காது
3.அவினாசி – அழிவற்றது
இந்த லட்சணங்களை வைத்துக் கொண்டு பிரம்மத்தை கண்டுபிடிக்க வேண்டும்.
பிரம்மன் ஸத் ஸ்வரூபமாக இருந்தால் கீழ்கண்ட மூன்றும் பொருந்தி வரும்.
1.ஸத் என்பது எல்லாவிடத்திலும் வியாபித்திருக்கிறது. எதை கேட்டாலும், அது இருக்கின்றது, இது இருக்கின்றது
என்று சொல்வதிலிருந்து இதை புரிந்து கொள்ளலாம்
2.மாற்றமடையாதது – புத்தகம் இருக்கின்றது என்பதில் உள்ள இருத்தல், அது தூள்தூளாக கிழிந்தாலும்,
காகிதங்கள் இருக்கின்றது என்பதிலும் மாற்றமடையாமல் இருக்கின்றது. அது போலவே பிரம்மனும் எங்கும் வியாபித்து இருந்தாலும்,
மாற்றமடையாமல் இருந்து கொண்டிருக்கிறது
3.அழிவற்றது – புத்தகத்திற்கு அழிவிருக்கிறது, ஆனால் இருத்தல் என்பது எல்லா நிலைகளிலும்
அழிவேயில்லாமல் தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கிறது
இதிலிருந்து பிரம்மனானது இருத்தல் என்ற ஸ்வரூபமாகவே இருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது
இந்த இருத்தலை எப்படி தெரிந்து கொள்ள முடியும் என்றால் கண்ணால் புத்தகம் இருக்கிறது என்று தெரிந்து கொள்கிறோம்.
இதில் புத்தகத்தில் பெயர்-உருவம் இருக்கின்றது என்று அறிகிறோம்.
இந்த ஐம்புலன்களால் நாம் எது இருக்கின்றது என்பதை புரிந்து கொள்கிறோம்.
அதோடு நாம் உருவத்தையும் சேர்த்துதான் புரிந்து கொண்டுள்ளோம். நாம் இதில் அந்த இருத்தலை மட்டும்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
பெயர், உருவத்தில் கவனத்தை செலுத்தாமல், இருத்தலை மட்டும் பார்க்கவே முடியாது.
இந்திரியங்களால் இரண்டும் சேர்ந்தால்தான் தெரிந்து கொள்ள முடியும்.
புலன்களின் துணையில்லாமல் எந்தப்பொருளையாவது நம்மால் அறிந்து கொள்ள முடியுமா என்று யோசித்தால்
அறிவு ஸ்வரூபமான ஆத்மாவை அவ்வாறு அறிந்து கொள்ள முடியும் என்று தெரிய வரும். இது ஒன்றுதான் நாம-ரூபம் இல்லாமல் இருப்பது.
————————–
ஆவிஃ ஸஂநிஹிதஂ குஹாசரஂ நாம மஹத்பதமத்ரைதத்ஸமர்பிதம். ஏஜத்ப்ராணந்நிமிஷச்ச
யதேதஜ்ஜாநத ஸதஸத்வரேண்யஂ பரஂ விஜ்ஞாநாத்யத்வரிஷ்டஂ ப்ரஜாநாம்৷৷2.2.1৷৷
ஆவி: ஸன்னிஹிதம் கு3ஹாசரன்னாம
மஹதபத3மத்ரைதத்ஸமர்பிதம் |
ஏஜத்ப்ராணன்னிமிஷச்ச யதே3தஜ்ஜானத2
ஸத3ஸத்3வரேண்யம் பரம் விக்ஞானத்3யத்3வரிஷ்ட2ம் || 1 ||
ஆவிஹி – சைதன்ய ஸ்வரூபம், பிரகாச ஸ்வரூபம் பிரம்மன், பிரகாசம் ஞானத்திற்கு காரணமாவதால், இது பிரம்மனை குறிக்கிறது.
ஸன்னிஹிதம் – ஜீவ ஸ்வரூபமாக இருதயத்தில் இருக்கிறது. மிக மிக அருகில் இருக்கிறது.
விழிப்புணர்வில் பார்ப்பவனாகவும், கேட்பவனாகவும் இருக்கிறது
கு3ஹாசரன் – புத்தியில் நகர்வது போல் இருக்கின்றது. நாம் பார்க்கும் பொருள் இந்திரியங்கள் வழியாக
அதை வியாபித்து அதன் உருவமாகவே எண்ணங்களாக மாறுகிறது.
அதில் ஆத்மா சித் ஸ்வரூபமாக இருந்து அதுவும் மாறுவது போல் தோன்றுகிறது.
இது புத்தியின் செயலுக்கேற்ப செயல்படுவது போல் இருக்கின்றது.
நாம – பெயரளவில்தான் அப்படி உணர்கிறோம்.
மஹத்பதம் – மேலான லட்சியம், மேலான குறிக்கோள், எல்லாவற்றையும் தாங்குவது, ஆதாரமாக இருக்கிறது
அத்ர ஏதத் ஸமர்ப்பிதம் – இந்த உலகம் இதை சார்ந்திருக்கின்றது
ஏஜத் – நகர்கின்ற ஜீவராசிகள்
பிராணன் – சுவாசிக்கின்ற ஜீவராசிகள் (மனிதர்கள் போன்றவைகள்)
நிமிஷத ச – கண்ணை சிமிட்டுகின்ற ஜீவராசிகள் மேலும் மற்ற ஜீவராசிகளும் அந்த பிரம்மத்தை சார்ந்திருக்கின்றது
யத்3 ஸதஸத்3 – எந்த பிரம்மன் வெளிதோற்றத்திற்கு வந்ததாகவும் (ஸத்தாகவும்),
வெளித்தோற்றத்திற்கு வராமலும் (அஸத்தாகவும்) இருக்கின்றதோ அதாவது மூர்த்த – அமூர்த்தமாக ஸ்வரூபமாகவும் இருக்கிறதோ
யத் வரிஷ்டம் வரேண்யம் – எது மிகமிக மேலானதாகவும், தேர்ந்தெடுக்கப்பட வேண்டியதாகவும் இருக்கிறதோ
யத் ப்ரஜானாம் விக்ஞானாத் பரம் – ஜீவராசிகளுடைய அறிவுக்கு அப்பாற்பட்டதாக இருக்கின்றதோ,
இந்திரியங்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறதோ.
ஏதத்3 ஜானத4 – சிஷ்யர்களே, நீங்கள் அதை அறிய வேண்டும், அறிய இருக்கிறீர்கள்
அந்தர்யாமியாய் இருந்து நியமித்து புலன்களை இயக்கி -பராத்பரன் —
அவிகாராயா -ஸ்வரூப ஸ்வ பாவ விகாரம் இல்லாமல்
ஸ்வ கத தோஷங்கள் தட்டாமல் –சத்துக்களும் அசத்துக்களும்-ப்ரஹ்மாத்மாவாகவே இருக்கின்றன –
அப்ருதக் சித்த விசேஷங்கள் அனைத்துமே
———–
யதர்சிமத்யதணுப்யோணு ச யஸ்ிம ఁல்லோகா நிஹிதா லோகிநஷ்ச ததேததக்ஷரஂ ப்ரஹ்ம
ஸ ப்ராணஸ்ததுவாங்மநஃ. ததேதத்ஸத்யஂ ததமரிதஂ தத்வேத்தவ்யஂ ஸோம்ய வித்தி৷৷2.2.2৷৷
யத3ர்சிமத்3யத3ணுப்3யோSணு ச யஸ்மில்லோகா நிஹிதா லோகினஶ்ச |
ததே3தத3க்ஷரம் ப்3ரஹ்ம ஸ ப்ராணஸ்தது3 வாங்மன:
ததேதத்ஸத்யம் தத3ம்ருதம் தத்3வேத்3த4வ்யம் ஸோம்ய வித்3தி4 || 2 ||
யத்3 அர்சிமத் – எந்த சூரியகதிர் சைதன்ய ஸ்வரூபமாக இருக்கின்றதோ
யத்3 அணுப்3யஹ அணு – எது மிகமிக சிறியதைக் காட்டிலும் சிறியதாக இருக்கின்றதோ, பெரியதைக் காட்டிலும் பெரியது.
இப்படி சொல்வது காரணம். அது உருவமற்றது, முழுமையானது, நிறைவானது, பூரணமானது,
பெரியது, சிறியது என்பது நாம-ரூபத்தைக் குறிக்கிறது.
யஸ்மின் லோகாஹா – எந்த பிரம்மத்தை இந்த உலகம்
நிஹிதா – சார்ந்திருக்கின்றதோ
லோகினஹ ச – உலகத்தில் வசிக்கின்ற ஜீவராசிகளும் அதையே சார்ந்து இருக்கிறது
தத் ஏதத் அக்ஷரம் பிரம்ம – அதுவேதான் அக்ஷரம் என்றழைக்கப்படுகின்ற பிரம்மன்
ஸஹ பிராணஹ – அதுவே பிராணனாக இருக்கின்றது
தத் வாங் மனஹ – வாக்காகவும், மனதாகவும் இருக்கின்றது
தத்3 ஏதத் ஸத்யம் – அது என்றும் சத்யமாகவும் இருக்கின்றது
தத்3 அம்ருதம் – அதுவே நிலையானதாகவும், மரணமற்றதாகவும் இருக்கிறது
தத்3 வேத்4யம் – அந்த பிரம்மத்தை மனதால் துளைக்க வேண்டும். மனதால் பிரம்மத்தையே ஆழ்ந்து சிந்தித்து கொண்டிருக்க வேண்டும்.
ஸோம்ய – பிரியமானவனே
வித்3தி4: – பிரம்மத்தை அடைய வேண்டும் என்று மனதில் குறி வைக்க வேண்டும்.
பரஞ்சோதி -அனோர் அணீயான்-மஹதோ மஹான் -சத்யம் -அம்ருதம் –அவனே உபாஸ்யத்துக்கு உரியவன்
சோம்ய அவனையே அடைவதையே புருஷார்த்தமாக கொண்டு முயல்வாய் –
————–
தநுர்கரிஹீத்வௌபநிஷதஂ மஹாஸ்த்ரஂ ஷரஂ ஹ்யுபாஸாநிஷிதஂ ஸஂதயீத.
ஆயம்ய தத்பாவகதேந சேதஸா லக்ஷ்யஂ ததேவாக்ஷரஂ ஸோம்ய வித்தி৷৷2.2.3৷৷
தனுர்க்3ருஹீத்வௌபனிஷத3ம் மஹாஸ்த்ரம்
ஶரம் ஹ்யுபாஸானிஶிதம் ஸந்த4யீத |
ஆயம்ய தத3பா4வக3தேன சேதஸா லக்ஷயம்
ததே3வாக்ஷரம் ஸோம்ய வித்3தி4 || 3 ||
தனுர் மஹா அஸ்திரம் – வில் என்ற மிக மேலான ஆயுதம்
ஔபநிஷதம் – உபநிஷத்தில் உள்ள ஓங்கார விசாரம்
ஷரம் நிஷிதம் – கூர்மையாக்கப்பட்ட அம்பு
உபாஸானிஶிதம் – உபாஸனையால் ஒருமுகப்படுத்தப்பட்ட, கூர்மையாக்கப்பட்ட மனதினால்
ஸந்த4யீத – அம்பை வில்லில் பொருத்த வேண்டும்
அயம்ய – பிறகு உள்ளே இழுத்துல், எல்லா இந்திரியங்களையும் உள்ளே இழுத்து
சேதஸா – அறிவினால்
தத3பா4வக4தேன – பிரம்மத்தையே இலக்காக கொண்ட மனதினால்
லக்ஷயம் – இலக்கான
தத்3 ஏவ அக்ஷரம் – ஏற்கனவே விளக்கப்பட்ட இலக்கான பிரம்மத்தை
வித்3தி4 – நோக்கி அடிக்க வேண்டும்.
வில் என்ற வேதாந்த சாஸ்திரத்தில் ஜீவாத்மா என்கின்ற அம்பை பொருத்தி பிரம்மா என்கின்ற இலக்கை நோக்கி செலுத்த வேண்டும்.
இதனால் பரமாத்மாவை அடையலாம். வில்லில் அம்பை தொடுத்து காட்டும் இலக்கில் சரியாக அடிக்க வேண்டும் என்றால்,
அம்பு நேராக இருக்க வேண்டும், வளைந்து நெளிந்து இருக்க கூடாது, அம்பு முனை கூராக இருக்க வேண்டும்,
அம்பை வில்லில் சரியாக பொருத்த வேண்டும், இலக்கை நோக்கி அம்பானது இருக்க வேண்டும்,
வில்லின் நாணை இலக்கின் தூரத்திற்கேற்ப இழுத்து அம்பை விட வேண்டும்.
அம்பு – ஜீவாத்மாவை குறிப்பதால், ஜீவாத்மா மனத்தூய்மை அடைந்தவராக இருக்க வேண்டும். தர்மப்படி வாழ்ந்து கொண்டு இருத்தல்
அம்பின் கூர்மை – மன ஒருமுகப்பாட்டை குறிக்கப்படுகிறது. உபாஸனையினால் மனதை நன்கு தீட்டி கூர்மையாக இருக்க வேண்டும்,
ஒருமுகப்பட்டிருக்க வேண்டும்.
ஜீவர்களாகிய நாம் உபநிஷத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு உபநிஷத்தின் மீது சிரத்தை இருக்க வேண்டும்.
இது ஞானத்தை கொடுக்கும் கருவி என்று உறுதியாக நம்ப வேண்டும். குருமுகமாக இதை படிக்க வேண்டும்.
முமுக்ஷுத்வம் – நம்முடைய இலக்கு பிரம்மத்தை மட்டும் அறிவதுதான். பிரம்மத்தை அடைவதாக இருக்க வேண்டும்.
வெளிவிஷயங்களிலிருந்து நம்முடைய புலன்களை உள்ளுக்குள் இழுத்துக் கொள்ள வேண்டும்.
இது வைராக்கியம் என்ற சாதனத்தின் மூலம் அடையப்படுகிறது.
இதிலிருந்து எப்படி வில்லானது இலக்கை அழித்து, துளைத்து அதனோடு ஐக்கியமாவது போல, ஜீவாத்மாவுடன் பரமாத்வோடு இணைந்து விடும்.
உபநிஷத்துக்கள் பிரசித்தமாக தியானத்தை மஹா அஸ்திரமாகவும் -ப்ரஹ்மா ஏக சிந்தையராய் புலன்களை
மால் பால் செலுத்தி -மங்கையர் தோள் கை விட்டு -என்கிறபடியே -அவன் இடமே செலுத்தி -சோம்ய அவனை அடைவாய் –
——————–
ப்ரணவோ தநுஃ ஷரோ ஹ்யாத்மா ப்ரஹ்ம தல்லக்ஷ்யமுச்யதே. அப்ரமத்தேந வேத்தவ்யஂ ஷரவத்தந்மயோ பவேத்৷৷2.2.4৷৷
ப்ரணவோ த3னு: ஶரோ ஸ்யாத்மா ப்ரஹ்ம தல்லக்ஷயமுச்யதே |
அப்ரமத்தேன வேத3த4வ்யம் ஶரவத்தன்மயோ ப4வேத் || 4 ||
ப்ரணவஹ தனு: – ஓங்காரமென்கின்ற வில்
ஶரஹ ஹி ஆத்மா – ஜீவாத்மா
ப்ரஹ்ம தத்3 லக்ஷ்யம் உச்யதே – பிரம்மனே அடைய வேண்டிய லட்சியம் என்று சொல்லப்படுகிறது
அப்ரமத்தேன – முழு கவனத்துடன்
வேத்3த4யம் – இலக்கை நோக்கி செலுத்த வேண்டும்
ஷரவத் – அம்பு இலக்கோடு ஒன்றிப் போவதுபோல
தன்மயோ ப4வேத் – லட்சியத்தோடு ஒன்றுபட வேண்டும். பிரம்ம ஸ்வரூபமாக இணைந்து விட வேண்டும்
அம்பை வில்லில் ஏற்றி இலக்கை நோக்கி சரியாக அடிப்பவன் ஒருவன் இருக்க வேண்டும்.
அந்த ஒருவன் குருவாகத்தான் இருக்க முடியும்
பிரணவமே வில் -ஜீவாத்மாவே அம்பு -பர ப்ரஹ்மமே புருஷார்த்தம் -அவனை உபாசித்து அவனுடன் ஒன்றி
அம்பு போலே -அடைந்து பகவத் ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம் –
—————
யஸ்மிந்த்யௌஃ பரிதிவீ சாந்தரிக்ஷமோதஂ மநஃ ஸஹ ப்ராணைஷ்ச ஸர்வைஃ.
தமேவைகஂ ஜாநத ஆத்மாநமந்யா வாசோ விமுஞ்சதாமரிதஸ்யைஷ ஸேதுஃ৷৷2.2.5৷৷
யஸ்மின்த்யௌ: ப்ருதி2வீ சாந்தரிக்ஷமோதம்
மன: ஸஹ ப்ராணைஶ்ச ஸர்வை: |
தமேவைகம் ஜாரத2 ஆத்மானமன்யா
வாசோ விமுஞ்சதா2ம்ருதஸ்யைஷ ஸேது: || 5 ||
யஸ்மின் – எந்தப் பிரம்மத்திடமிருந்து
த்3யௌ: ப்2ருதிவி – சொர்க்கலோகம், பூலோகம்
அந்தரிக்ஷம் – இரண்டுக்குமிடையே உள்ள லோகங்கள்
ஓதம் – இந்த லோகங்கள் எதனிடத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது, எதனைச் சார்ந்திருக்கிறது
ஸர்வை: ஹி ப்ராணை ச – எல்லா பிராணன்களும் இந்திரியங்களும்
மனஹ – மனதும் சார்ந்திருக்கிறது
தம் – அதை (அந்த பிரம்மத்தை) மட்டும்
ஏவ ஏகம் ஜாரத2 ஆத்மானம் – ஆத்மாவாக ஒன்றானதாக தெரிந்து கொள்ளுங்கள், நானே ஆத்மா என்று தெரிந்து கொள்ளுங்கள்
அன்யஹ – அபர வித்யா ஸ்வரூபமான அனாத்மாவை, ஆத்மாவை விட்டு வேறாக இருக்கின்ற
வாசஹ – பேச்சுக்களை
விமுஞ்சத – விட்டு விடுங்கள்
அம்ருதஸ்ய ஏஷ: ஸேது: – இந்த மாதிரி இருந்து ஆத்மாவை அறிவதானல் மோட்சத்திற்கு பாலமாக அமையும்.
இதற்கு மௌனம் என்று பொருட்கொள்ளலாம். ஞானத்திலிருந்து அதில் நிஷ்டை அடைய வேண்டுமென்றால்
நிதித்யாஸனத்தின் போது அனாத்மா விஷயங்களை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும்
சாஸ்திரம் பலன் கொடுக்க வேண்டும் என்றால் பிரம்மத்தைத் தவிர வேறெதையும் பேசுவதில்லை என்று உறுதியாக இருக்க வேண்டும்.:
1.அனாத்மா விஷயங்களை பேசப்பேச அதுவே திடமாகி விடுகிறது
2.இப்படி பேசுவதால் விருப்பு-வெறுப்பு, காம-க்ரோதம்-துவேஷம் உள்ளத்தில் உருவாக்கும்
3.அஸங்கத்தைப் பற்றி சாஸ்திரம் பேசுகிறது. நாம் வைக்கும் சம்சார சம்பந்தமே துன்பத்தைக் கொடுக்கும்
இவைகளை கருத்தில் கொண்டு அனாத்மா விஷயங்களை பேசுவதில் விட்டுவிட்டு மௌனமாக இருக்க வேண்டும்.
பேசினால் ஆத்மா சம்பந்தமானவற்றை பேச வேண்டும்.
அவன் ஒருவனே -ஒப்பார் மிக்கார் இல்லாதவன் -த்ரிவித காரணன் -அனைத்துக்கும் -பிரேரிதன்–
சம்சார ஆர்ணவம் கடந்து தன்னை அடைய தானே – சேது- பாலமாக இருப்பவன் –
——————–
அரா இவ ரதநாபௌ ஸஂஹதா யத்ர நாட்யஃ ஸ ஏஷோந்தஷ்சரதே பஹுதா ஜாயமாநஃ.
ஓமித்யேவஂ த்யாயத ஆத்மாநஂ ஸ்வஸ்தி வஃ பாராய தமஸஃ பரஸ்தாத்৷৷2.2.6৷৷
இந்த மந்திரம் நிதித்யாஸனத்தைப் பற்றி பேசுகிறது
ஸஹ ஏஷஹ அந்தரஹ சரதே – அந்த பிரம்மமும், இந்த ஆத்மாவாக மனதிற்குள் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது
ப3ஹுதா4 ஜாயமானஹ இவ – விதவிதமாக தோன்றுவது போல
ஜடமான மனதினால் விதவிதமான அறிவை அடைகின்றோம். பல எண்ணங்கள், உணர்ச்சிகள் உண்டாகின்றன.
இதற்கு காரணம் ஆத்மாவின் பிரதிபிம்பத்தால் உண்டாகின்றது. இந்த ஆத்மாவே மனதில் பிரதிபலித்து விதவிதமாக
தோன்றுவது போல காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது எண்ணங்களில் வருகின்ற மாற்றங்கள்,
அதனால் வருகின்ற உணர்ச்சிகள் இவைகளெல்லாம் வெறும் எண்ணங்கள்.
ஆனால் நான் இவைகளுக்கு அப்பாற்பட்டவன் என்று புரிந்து கொள்ள வேண்டும். மனதுக்கு கோளகம் இதயம்,
அதில் விதவிதமான எண்ணங்கள் தோன்றுகிறது. அறியாமையில் இருக்கும் போது அவைகள் நான் என்று எண்ணுகிறோம்.
அறியாமை நீங்கிய உடன் அவைகள் நானல்ல என்று உணர்வோம்.
யத்ரஹ – எந்த இதயத்திலிருந்து
நாட்3ய: – நாடிகள்
ஸம்ஹதா – சேர்க்கப்பட்டுள்ளது
ஒரு சக்கரத்தில் இருக்கும் ஆரக்கால்கள் அதன் மையப்பகுதியில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும்.
அதேபோல ஸ்தூல சரீரத்தில் உள்ள நாடிகள் அனைத்தும் இதயமான மையப்பகுதியோடு இணைக்கப்பட்டிருக்கிறது.
மனதில் எழுகின்ற எண்ணங்கள் நானல்ல என்று நன்கு புரிந்து கொள்ள வேண்டும்
ஓம் இதம் ஏவம் – ஓங்காரத்தின் துணைக் கோண்டு
ஆத்மானாம் த்யாயத் – ஆத்மாவே நான் தான் என்று தியானம் செய்ய வேண்டும்.
வஹ ஸ்வஸ்தி – உங்களுக்கு மங்களம் இருக்கட்டும். ஆசிர்வாதம் செய்கின்றேன்.
தமஸஹ ப்ரஸ்தாத் ப்ராய – அறியாமைக்கு அப்பாலுள்ள கரையை கடக்க எங்களுடைய ஆசிகள் இருக்கட்டும்.
எல்லா தடைகளை எல்லாம் நம்மிடமிரு~ண்து வருவதால் அவைகளை தாண்டி வெற்றிபெற வேண்டும்.
வண்டி சக்கர கம்பிகள் போலே நரம்புகள் -ஹார்த்தா வர்த்தி அவன் -மனஸ் இந்திரியங்கள் குண வஸ்யமாய் கொண்டு பட்டி மேய –
அவற்றை ஒரு நிலை படுத்தி பிரணவத்தில் ஆச்சார்ய முகேன செலுத்தி சம்சார ஆர்ணவம் கடந்து
ஸ்வஸ்தமாக அவனை அடைந்து நித்யர்கள் உடன் கோவை ஆகலாம் –
——————
யஃ ஸர்வஜ்ஞஃ ஸர்வவித்யஸ்யைஷ மஹிமா புவி. திவ்யே ப்ரஹ்மபுரே ஹ்யேஷ வ்யோம்ந்யாத்மா ப்ரதிஷ்டிதஃ. ৷৷2.2.8৷৷
ய: ஸர்வக்ஞ: ஸர்வ்வித்3யஸ்யைஷ மஹிமா பு4வி |
தி3வ்யே ப்ரஹ்மபுரே ஹ்யேஷ வ்யோம்ன்யாத்மா ப்ரதிஷ்டித: ||
யஹ – எந்த பரமாத்மா
ஸர்வக்ஞ – பொதுவாக எல்லாம் அறிந்தவர்
ஸர்வவித்3 – விசேஷமாக எல்லாம் அறிந்தவர்
இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தம் கொடுத்தாலும் அவற்றுக்குள் விசேஷமான வேறுபாடும் உண்டு.
பானைகள் பொறுத்தமட்டில் காரணத்தை அறிவது பொது அறிவு. முதல் வகை ஸர்வக்ஞன், இரண்டாவது ஸர்வ விதி குறிக்கிறது.
ஸர்வக்ஞன் என்பது காரண ஞானம், ஸர்வ வித் என்பது காரியத்திலுள்ள அறிவு.
இங்கே ப்ரா வித்யா, அபராவித்யா. அபராவித்யாவின் அடிப்படையில் ஸர்வ வித்தாக இருக்கிறார்.
ஈஸ்வரனே எல்லா ஜீவர்களின் மனதாகவும் இருப்பதால் அவர் ஸர்வ வித்
ஸர்வக்ஞர் நிமித்தக்காரணம், ஸர்வ வித் என்பது உபாதான காரணம்.
யஸ்ய பு4வி – யாருக்கு இந்த உலகத்தில்
ஏஷ மஹிமா – இந்த பெருமையை உடையவராக இருப்பது ஈஸ்வரனே
இப்படி புரிந்து கொள்வதால் நாம் நம்மிடம் இருக்கும் பெருமையை குறித்து அகங்காரம் கொள்ளமாட்டோம்.
ஏனென்றால் இவைகள் எல்லாம் ஈஸ்வரனுடையதே.
திவ்யே ப்ரஹ்மபுரே – நம்முடைய ஹ்ருதயத்தில் உள்ள
வ்யோம்ன்ய – மனதிற்குள்
தீ ஏஹ ஆத்மா ப்ரதிஷ்டதஹ – இந்த ஆத்மா அமர்ந்திருக்கிறார், வெளிப்படுகிறார்
இதிலிருந்து நாம் அறிவது கொள்வது மனதிற்குள் ஈஸ்வரனை, ஆத்மாவை நானாக புரிந்து கொள்ள வேண்டும்.
———–
மநோமயஃ ப்ராணஷரீரநேதா ப்ரதிஷ்டிதோந்நே ஹரிதயஂ ஸஂநிதாய. தத்விஜ்ஞாநேந பரிபஷ்யந்தி தீரா ஆநந்தரூபமமரிதஂ யத்விபாதி৷৷2.2.8৷৷
மனோமய: ப்ராணஶரீரனேதா ப்ரதிஷ்டிதோSத்ரே ஹ்ருத3யம் ஸன்னிதா4ய |
தத்3விக்ஞானேன பரிபஶ்யந்தி தீ4ரா ஆனந்தரூபம ம்ருதம் யத்3விபா4த || 8 ||
மனோமய: – மனதிலுள்ள எண்ணங்களினால் அறியப்படுகின்ற வஸ்து பிரம்மத்திற்கு இந்த பெயர்
ப்ராண ஶரீர நேதா – சூட்சும சரீரத்தை ஸ்தூல சரீரத்தை அழைத்துச் செல்வது இந்த ஆத்மா
பிராண சரீரம் – சூட்சும சரீரம், இது ஜடமானது. ஆனால் அதை செயல்படுத்துவது ஆத்மா
அன்னே ஹ்ருதயம் ஸன்னிதா4ய – இந்த ஸ்தூல சரீரத்திலுள்ள சூட்சும சரீரத்தில்
ப்ரதிஷ்டிதஹ – வெளிப்படுகிறார்
தீரர் பரிபஶ்யந்தி – அதிகாரித்துவத்தை உடையவர்கள், இந்த தத்துவத்தை முழுமையாக தெளிவாக அறிகிறார்கள்
தத் அக்ஞானேன – ஆத்ம தத்துவத்தை பூரணமாக அறிந்ததினால், அறிவினால், குருமுகமாக சாஸ்திரத்தை உபதேசத்தினால்
அடைந்த அறிவினால், சம, தம ஆகியவைகளை முதலிய சாதனங்களுடன் கூடிய மனதினால்
ஆனந்த ரூபம் – பூரண ஸ்வரூபம்
அம்ருதம் – மரணமற்றது என்று
விபா4தி – ஸ்வயம் பிரகாசமாக இருக்கிறது. நாம, ரூபங்களுடன் விதவிதமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது
பர ப்ரஹ்மமே சர்வஞ்ஞான் -சர்வசக்தன் -பராத்பரன் -சர்வ நியாமகன் -கால சக்கரத்தன்-ஹ்ருதய புண்டரீகாக்ஷத்தில் இருப்பவன்
சர்வ வியாபகன்-அவனை அறிந்து அவனாலாயே அவனை அடைந்து ஸ்வபாவிக ஆனந்த மாய -ஞான மயனாக ஆவோம் –
—————
பித்யதே ஹரிதயக்ரந்திஷ்சித்யந்தே ஸர்வஸஂஷயாஃ. க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மிந்தரிஷ்டே பராவரே৷৷2.2.9৷৷
பி4த்3யதே ஹ்ருதயக்3ரந்தி2ஶ்சி2த்3யந்தே ஸர்வஸம்ஶயா: |
க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மின் த்3ருஷ்டே பராவரே || 9 ||
இதில் மூன்று விதத்தில் பலன்கள் கூறப்பட்டுள்ளது.
அவைகள் 1. ஒரு முடிச்சானது வெட்டப்படுகிறது, 2. சந்தேகங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும், 3. கர்ம பலன்கள் அழிந்து விடுகிறது.
1.பி4த்3யதே ஹ்ருதயக்3ரந்தி – ஹிருதயத்திலுள்ள முடிச்சுக்கள் (அறியாமை, ஆசைகள்) வெட்டப்படுகின்றன.
ஆத்மாவையும், அனாத்மாவையும் ஒன்றாக காட்சியளிக்க வைப்பது அறியாமை. மனதில் ஓடும் ஆசைகளெல்லாம் நீங்கிவிடும்.
ஆசையிருக்கும் வரை மனநிறைவு வராது. வரும் ஆசையை நீக்க வேண்டும்தான் என்று எல்லோரும் முயற்சிக்கிறோம்.
எனவே அதை அடைந்து ஆசையை தற்காலிமாக நீக்குகிறோம். எனவே ஆசைகளை அனுபவிக்காமலே நம்மிடமிருந்து சென்று விடும்.
பொருளையும் மனதையும் கட்டுவதுதான் ஆசை.
2.புத்தியிலே நிறைவின்மை சந்தேகங்கள் இருந்து கொண்டுதான் இதை நீக்குவதுதான், புத்தியில் அமைதி விடுவது,
நிறைவுடன் இருக்கும் நிலை. இந்த ஞானத்தினால் இந்த சந்தேகங்கள் எல்லாம் நீங்கி புத்தி அமைதியடையும், நிறைவை அடையும்
3.நாம் ஏற்கனவே சேர்த்து வைத்திருக்கின்ற சஞ்சித கர்மங்கள், இந்தப் பிறவியில் சேர்ந்துதான் ஆகாம கர்மபலன்கள்.
ஞானம் அடைந்து அதில் நிலைபெற்ற ஜீவன் முக்தன், இறந்த பிறகு கர்மபலன்கள் அழிந்து வேறு பிறவி இருப்பதில்லை, அதுவே விதேஹ முக்தி
தஸ்மின் பராவரே – அந்த பிரம்மத்தை
த்ருஷ்டே – அறிவதன் மூலமாக
பராவரே – பர – நிர்குண பிரம்மன், அவரா – சகுண பிரம்மன்
சகுண – மாயையுடன் இருக்கும் பிரம்மன்
நிர்குணம் – மாயையற்ற பிரம்மன்
பி4த்யதே ஹ்ருதய க்ரந்திஹி – இருதயத்திலுள்ள முடிச்சுகள் அவிழ்ந்து விடுகிறது
சித்3யந்தே ஸர்வஸம்ஹயஹ – புத்தியிலுள்ள சந்தேகங்களும் அழிக்கப்படுகிறது, நீக்கப்படுகிறது
க்ஷீயந்தே ச அஸ்ய கர்மாணி – அவன் சேர்த்து வைத்த கர்ம பலன்கள் அனைத்தும் அழிந்து விடும்.
அந்த பர ப்ரஹ்மத்தை அறியவே கர்ம முடிச்சுக்கள் அவிழ்க்கப் பட்டு -கங்கை பெரு வெள்ளம் போன்ற அஞ்ஞான அந்தகாரம் போகப் பெற்று –
அந்த பராத் பரன் மஹத் பேர் அருளாலே அவர-சம்சார துக்கங்கள் நீங்கப் பெறுவோம் –
——————
ஹிரண்மயே பரே கோஷே விரஜஂ ப்ரஹ்ம நிஷ்கலம். தச்சுப்ரஂ ஜ்யோதிஷாஂ ஜ்யோதிஸ்தத்யதாத்மவிதோ விதுஃ৷৷2.2.10৷৷
ஹிரண்மயே பரே கோஶே விரஜம் ப்3ரஹ்ம நிஷ்கலம் |
தச்சு2ப்4ரம் ஜ்யோதிஷாம் ஜ்யோதிஸ்தத்3யதா3த்மவிதோ3 விது3: ||
ஹிரண்மயே – தங்கத்தைப்போல பிரகாசிக்கின்ற விக்ஞானமயமான புத்தியை
பரே கோஶே – மேலான மறைப்பானது
விரஜம் – எதனாலும் கறைப்படுத்த முடியாதது, பாதிக்கப்படாதது, மனதில், புத்தியில் உள்ள அழுக்குகளாலும் பாதிக்கப்படாதது
நிஷ்கலம் – அவயவங்களற்றது
தத்3 சு2ப்4ரம் – அது தூய்மையானது
ஜ்யோதிஷாம் ஜ்யோதி – ஒளிகளுக்கெல்லாம் ஒளியாகவும், பிரமாணங்கள் உடையவர்களுக்கு பிரமாணமாக இருக்கிறது
யத் – எது எப்படியிருக்கிறதோ
தத்3 ஆத்மவித3ஹ – அதை ஆத்மாவாக அறிந்தவர்கள்
விது3:: – அறிகிறார்கள்
பர ஹிரண்மய கோசம்/ விரஜம் ரஜஸ் தட்டாமல் / நிஷ்கலம் / பரஞ்சோதிஸ் /-ஜோதிஸ் பொருள்களுக்கு ஜோதிஸ் அருளுபவர் –
——————
ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ரதாரகஂ நேமா வித்யுதோ பாந்தி குதோயமக்நிஃ.
தமேவ பாந்தமநுபாதி ஸர்வஂ தஸ்ய பாஸா ஸர்வமிதஂ விபாதி৷৷2.2.11৷৷
ந தத்ர ஸூர்யோ பா4தி ந சந்த்3ரதாரகம்
நேமா வித்3யுதோ பாந்தி குதோஶ்Sயமக்3னி: |
தமேவ பா4ந்தமனுபா4தி தஸ்ய
பா4ஸா ஸர்வமித3ம் விபா4தி || 11 ||
தத்ர – ஆத்ம ஸ்வரூபமான பிரம்மத்தை
சூர்யஹ ந பா4தி – சூரியனாலும் அதை பிரகாசிக்க முடியாது, விளக்க முடியாது. இங்கே சூரியன் என்பதை
ஞானத்தைக் கொடுக்கின்ற இந்திரியங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ந சந்த்ர தாரகம் – சந்திரனும், நட்சத்திரங்களும்
இமாஹ வித்யுதஹ – மின்னல்களும், வெளிச்சத்தை தருகின்ற விளக்குகளாலும்
குதஹ அயம் அக்னி பாந்தி – எப்படி இந்த அக்னியை விளக்க முடியாது
இப்படிபட்ட பிரமாணங்களால் ஆத்மாவை விளக்க முடியாது.
தஸ்ய பாஸா – இத்தகைய ஜோதி
ஸர்வம் பா4தி – எல்லாவற்றையும் விளக்குகிறது
தம் பாந்தம் அனு பாதி – ஆத்ம ஸ்வரூபம், சுயபிரகாசமாக இருப்பது தொடர்ந்து அனைத்தும் விளக்கப்படுகிறது
இதம் ஸர்வம் விபாதி – இவ்வாறு எல்லாமும் விளக்கப்படுகிறது
எந்தவொன்று பிரமாணங்களை விளக்குகிறதோ அதை எந்த பிரமாணத்தாலும் விளக்க முடியாது
பர ப்ரஹ்ம ஜோதிஸ் தானே ஸூ ர்யன் ஒளிக்கும் சந்திரன் ஒளிக்கும் அக்னி ஒளிக்கும் நக்ஷத்திரங்கள் ஒளிக்கும் மின்னல் ஒளிக்கும் மூலம்
—————-
ப்ரஹ்மைவேதமமரிதஂ புரஸ்தாத்ப்ரஹ்ம பஷ்சாத்ப்ரஹ்ம தக்ஷிணதஷ்சோத்தரேண.
அதஷ்சோர்த்வஂ ச ப்ரஸரிதஂ ப்ரஹ்மைவேதஂ விஷ்வமிதஂ வரிஷ்டம்৷৷2.2.12৷৷
ப்ரஹ்மைவேத3மம்ருதம் புரஸ்தாத்3ப்ரஹ்ம
ப்ஶ்சாத்ப்ரஹ்ம தக்ஷிணதஶ்சோத்தரேண |
அத4ஶ்சோர்த்4வம் ச ப்ரஸ்ருதம் ப்ரஹ்மைவேத3ம்
விஶ்வமித3ம் வரிஷ்டம் || 11 ||
ப்3ரஹ்மை ஏவ அம்ருதம் – எப்பொழுதும் இருக்கின்ற பிரம்மனே
இதம் புரஸ்தாதி – நமக்கு முன்னாலோ தோன்றுவது அதுவேதான்
பஶ்சாத் – பின்னாடி இருப்பதும் அதுவே
தக்ஷிண, உதஶ்சேத்தரண – வடக்கு, தெற்கு என்ற எல்லா இடங்களிலும் பிரம்மன்தான் இருக்கிறது. வேறெதும் காட்சியளிக்கவில்லை
அதஹ ஊர்த்4வம் ச ப்ரஸ்ருதம் – மேலும், கீழும் அதுவேதான் இருக்கிறது
வரிஷ்டம் பிரஹ்ம ஏவ இதம் விஶ்வம் – சத்ய ஸ்வரூபமான பிரம்மன்தான் இந்த உலகமாக காட்சியளிக்கின்றது
முன்புள்ள அனைத்தும் பின்புள்ள அனைத்தும் இடது வலது பக்கம் உள்ள அனைத்தும் மேல் கீழ் உள்ள
அனைத்தும்–உலகம் அனைத்தும் -ப்ரஹ்மாத்மகமே –
——————————–
த்வா ஸுபர்ணா ஸயுஜா ஸகாயா ஸமாநஂ வரிக்ஷஂ பரிஷஸ்வஜாதே.
தயோரந்யஃ பிப்பலஂ ஸ்வாத்வத்த்யநஷ்நந்நந்யோ அபிசாகஷீதி৷৷3.1.1৷৷
த்3வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா2யா
ஸமானம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே தயோரன்ய: |
பிப்பலம் ஸ்வாத்3வத்த்யனஶ்னன்னன்யோ அபி4சாகஶீதி || 1 ||
ஏற்கனவே ஜீவ-பிரம்ம ஐக்கியம் விளக்கப்பட்டது. அதில் நிலை பெற நிதித்யாஸனம் தேவை என்றும் கூறப்பட்டது. அந்த நிதித்யாஸனத்தை நன்றாக செய்வதற்கு தேவையான சாதனங்கள் என்னென்ன என்பதை இங்கு கூறப்படுகிறது. இவ்வாறு சங்கராச்சாரியர் கூறியிருக்கிறார்
த்3வா ஸுபர்ணா – இரண்டு அழகான இறக்கையை பறவைகள்
ஸயுஜா – என்றும் சேர்ந்திருக்கின்றது
ஜீவாத்மா, பரமாத்வாவின் பிரதிபிம்பம் சிதாபாஸமாக இருக்கிறது. இவையிரண்டும் சேர்ந்தேயிருக்கும்.
ஜீவாத்மா பரமாத்வை சார்ந்திருப்பதால் அதை பரமாத்மாவிடம் இருந்து பிரிக்க முடியாது.
ஸகா2யா – நண்பர்களை போல
ஒரே சரீரத்தில் ஜீவாத்மாவும், பரமாத்மாவும் இருப்பதைப் போல ஒரே மரத்தில் இரண்டு பறவைகள் இருக்கின்றது.
பிம்பம், பிரதிபிம்பம் போன்று சேர்ந்திருக்கின்றது.
ஸமானம் வ்ருக்ஷம் – ஒரே மரத்தில்
பரிஷஸ்வஜாதே – அமர்ந்துள்ளது
தயோ: அன்யஹ – அந்த இரண்டு பறவைகளில் ஒன்று
பிப்பலம் அத்தி – மரத்திலுள்ள பழங்களை
ஸ்வாது – மெய்மறந்து, அந்த சுவையில் மூழ்கி சாப்பிட்டு கொண்டிருக்கிறது
இது ஜீவாத்மா கர்ம பலன்களை சுக-துக்கங்களாக அனுபவித்துக் கொண்டு இருக்கின்றான் என்பதை சுட்டிக் காட்டுகிறது
அன்யஹ அனன்யஹ – வேறொரு பறவை எதையும் சாப்பிடாமல்
அபிசாகஶீதி – பார்த்துக் கொண்டிருக்கிறது, சாட்சியாக மட்டும் இருக்கிறது. இது பரமாத்மாவை சுட்டிக் காட்டுகிறது
சம்சாரத்திற்கு காரணம் கர்த்தாகவும், போக்தாவாகவும் இருப்பதுதான்
இரண்டு பறவைகள் -சயுஜா -இப்படி விட்டு பிரியாமல் உள்ள பர ப்ரஹ்மமும் ஜீவனும் – சகாய -இரண்டும் ஆத்மா என்பதால் –
சமானம் வ்ருக்ஷம் -ஒரு மரத்தை பற்றி -சரீரத்தை பற்றி இருக்க -ஓன்று ஜீவாத்மா -பழங்களை உண்டு -கர்ம பலன்களை அனுபவித்து சம்சாரத்தில் உழல
மற்ற ஓன்று பரமாத்மா -கர்ம வசப்படாமல் -அபிசாகஷீதி-பார்த்து கொண்டு அரசனை போலே –உதாசீனமாக இருக்குமே –
———-
ஸமாநே வரிக்ஷே புரூஷோ நிமக்நோநீஷயா ஷோசதி முஹ்யமாநஃ.
ஜுஷ்டஂ யதா பஷ்யத்யந்யமீஷமஸ்ய மஹிமாநமிதி வீதஷோகஃ৷৷3.1.2৷৷
ஸமானே வ்ருக்ஷே புருஷோ நிமக்3னோSனீஶயா ஶோசதி முஹ்யமான: |
ஜுஷ்டம் யதா3 பஶ்யத்யன்யமீஶமஸ்ய மஹிமானமிதி வீதஶோக: || 2 ||
ஸமானே வ்ருக்ஷே – இந்த சரீரத்தில்
புருஷ: – சம்சாரியான ஜீவாத்மா
நிமிக்3னஹ – சரீரம் நான் என்று எண்ணத்தில் மூழ்கி விட்டான். உடலை மரத்திற்கு ஒப்பிடுவதற்கு காரணம்
இரண்டுமே மாற்றங்களையுடையது. பறவைகள் சாப்பிட ஏதாவது ஒரு மரத்தில் அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.
அதேபோல ஜீவன் சம்சாரம் அனுபவிக்க சரீரம் ஆதாரமாக இருக்கிறது
அனீஶயா ஶோசதி – துயரப்படுகிறான்; துயரத்திற்குள்ளாகின்றான்
நாம் அனுபவிக்கும் துயரங்களெல்லாம் வேறு வழியில்லாமல் தவிர்க்க முடியாமல் அனுபவிப்பதுதான். நாம் இதை தேர்ந்தெடுத்து அனுபவிப்பதில்லை
முஹ்யமான: – அவன் மோகத்துக்கு ஆட்பட்டுள்ளான்
மோகம் – எதைக் கொடுத்தாலும் அனுபவிக்க தயாராக இருப்பது.
ஒரு பொருளுக்கு தகுந்த விலைக்கு மேலாக விலைக்கு வாங்க தயாராக இருப்பது,
தூரத்துக்கு பச்சை கண்ணுக்கு அழகு. எனவே இந்த உலகத்தை வேடிக்கை பார்க்க வேண்டும்.
தவிர அதை அனுபவிக்க வேண்டுமென்று விரும்புவது சோகத்தை அனுபவிக்க வேண்டுமென்று விரும்புவது போலாகும்..
யதா – எப்பொழுது
பஶ்யதி – பார்க்கின்றானோ, புரிந்து கொள்கின்றானோ
அன்யம் ஜுஷ்டம் ஈஷம் – வேறொரு பறவையை வணங்குவதற்குரிய மேலான ஈஸ்வரனாக, ஜீவாத்மா எப்பொழுது ஈஸ்வரனை புரிந்து கொள்கின்றானோ
அஸ்ய மஹிமானம் – என்னுடைய தன்மைதான் அந்த ஈஸ்வரன் மற்றொரு பறவையை தான்தான் என்று புரிந்து கொள்கின்றதோ
மஹிமானம் – சம்சாரத்தில் ஒட்டாது இருத்தல்
வீதஶோக இதி – சோகத்திலிருந்து விடுபட்டு விடுவான்
ஜீவாத்மா இதனாலே சம்சார ஆர்ணவதிலே அழுந்தி மாறி மாறி பல ஆக்கைகளிலே புக்கு கர்ம வசப்பட்டு -இருக்க
ஸூ ஹ்ருத விசேஷத்தால் -பச்யதி -பர ப்ரஹ்மத்தை பார்த்து அந்த ராஜாவுக்கு புத்ரனாய் இருந்து வைத்து உழல்வதே என்று வருந்தி
பர ப்ரஹ்மத்தின் மகிமையையும் பெருமையையும் தேஜஸையும் உணர்ந்து
வீதஷோக-சோகத்தில் இருந்தும் மீண்டு பர ப்ரஹ்மத்தின் அருளாலே அவனை அடைந்து ஸ்வரூப ஆவிர்பாவம் அடைகிறான் –
—————
யதா பஷ்யஃ பஷ்யதே ருக்மவர்ணஂ கர்தாரமீஷஂ புரூஷஂ ப்ரஹ்மயோநிம்.
ததா வித்வாந்புண்யபாபே விதூய விரஞ்ஜநஃ பரமஂ ஸாம்யமுபைதி৷৷3.1.3৷৷
யதா3 பஶ்ய: பஶ்யதே ருக்மவர்ணம் கர்தாரமீஶம் புருஷம் ப்ரஹ்மயோனிம் |
ததா3 வித்3வான்புண்யபாபே விதூ4ய நிரஞ்ஜன: பரமம் ஸாம்யமுபைதி || 3 ||
யதா3 பஶ்யஹ – எப்பொழுது பார்ப்பவன் (நித்ய-அநித்ய வஸ்துவை பார்ப்பவன்)
ருக்மவர்ணம் – ஞான ஸ்வரூபம் – தங்கத்தில் வர்ணம் போன்றது, சுய பிரகாசமாக இருக்கும் தன்மை
பஶ்யதே – பார்க்கின்றானோ? அறிகின்றானோ
ஜகத் கர்தாரம் ஈஶம் – ஜகத்தை உருவாக்கியவராக ஈஸ்வரனாக இருக்கின்றார்
ப்ரஹ்ம யோனிம் – அவரே நிர்குணமாகவும், மாயையோடு சேர்ந்து ஜகத்துக்கு காரணமாகவும் இருக்கின்றார்,
நான்முக பிரம்மாவின் தோற்றத்திற்கு காரணம்
ததா3 – அப்பொழுது
வித்வான் – பிரம்ம தத்துவத்தை அறிந்தவனாகின்றான்
புண்யபாபே விதூ4ய – பாவ-புண்ணியத்தை நீக்கிவிட்டு
நிரஞ்ஜனஹ – தூய்மையடைந்தவராக
ஸாம்யம் – சமமான தன்மை, ஒன்றாக இருக்கின்ற தன்மை
உபைதி – அடைகின்றான்
பரமம் – மீண்டும் திரும்ப வராத ஞானநிலை
இப்படி ஜீவாத்மா பர ப்ரஹ்மத்தை உணர்ந்து பஷ்யதே ருக்மவர்ணஂ -ஸ்வாபாவிகமான தேஜஸ் உடன் –
கர்தாரமீஷஂ -அனைத்து உலகையும் ஸ்ருஷ்டித்தவன் –
புரூஷஂ ப்ரஹ்மயோநிம்.-அனைத்து ஆத்மாக்களை கர்ம அனுகுணமாக ஆக்கைக்குள் புகச் செய்பவன்
ததா வித்வான் -இப்படி அறிந்த ஜீவாத்மா /புண்யபாபே விதூய -கர்மங்களை ருசி வாசனைகள் உடன் மாய்த்து
விரஞ்ஜநஃ பரமஂ ஸாம்யமுபைதி-தோஷம் அற்று -அகில ஹேய ப்ரத்ய நீகனாய் -பரம சாம்யம் பெற்று ப்ரீதி காரித கைங்கர்யம் பெறுகிறான் –
————-
ப்ராணோ ஹ்யேஷ யஃ ஸர்வபூதைர்விபாதி விஜாநந்வித்வாந்பவதே நாதிவாதீ.
ஆத்மக்ரீட ஆத்மரதிஃ க்ரியாவாநேஷ ப்ரஹ்மவிதாஂ வரிஷ்டஃ৷৷3.1.4৷৷
ப்ராணோ ஹ்யேஷு ய: ஸர்வபூ4தைர்விபா4தி
விஜான்ன்வித்3வான்ப3வதே நாதிவாதீ3 |
ஆத்மக்ரீட ஆத்மரதி: க்ரியாவனேஷ ப்3ரஹ்மவிதா3ம் வரிஷ்ட: || 4 ||
ப்ராணஹ – பிராணனாக உள்ள பரபிரம்மன்
எஷஹ யஹ – நமக்கு அருகிலிருக்கின்ற இந்த பிரம்மன்
ஸர்வ பூதைஹி விபா4தி – எல்லா ஜீவராசிகளாக காட்சியளிக்கின்றது
விஜானஹ – என்பதை அறிந்து கொண்டவனாக
வித்3வான் – இருக்கின்ற ஞானியானவன்
நாதிவாதீ3 ப4வதி – பேசாதவனாக ஆகின்றான்
பேசுவதற்கு விஷயம் எதுவும் இல்லாததனால் அவன் இவ்வாறு பேசாதவனாக இருக்கின்றான். மௌனமாக இருப்பான், விவாதம் செய்ய மாட்டான்
ஆத்ம க்ரீடஹ – தன்னிடத்திலேயே மகிழ்ச்சியுடன் இருக்கின்றான்
ஆத்மரதி – தன்னிடத்திலேயே நிறைவுடன் இருக்கின்றான்
அவன் சுகத்திற்காக வெளிவிஷயங்களை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. வெளிவிஷயங்களை மனதிலும் நினைத்துக் கொண்டிருப்பதுமில்லை
க்ரியவான் – செயலை செய்பவன், தியானம், வைராக்கியமாக இருத்தல் போன்ற செயல்களை செய்பவன்,
ஆத்மரதி என்ற செயலை செய்பவன், உலக நன்மைக்காகவும் செயல்களை செய்து கொண்டிருப்பன்
ஏஷஹ – இந்த ஞானியானவன்
பிரஹ்மவிதா3ம் – பிரம்மத்தை அறிந்தவர்களுக்குள்
வரிஷ்டஹ – மிகமிக மேலானவன், ஞான நிஷ்டையை அடைந்தவன்
ஞானிகளுக்குள்ளே அடைந்த ஞானத்திலே ஏற்றத்தாழ்வு கிடையாது. ஞானம் அடைந்தவுடன் அது பலனைக் கொடுப்பதற்கு
தடையாக இருப்பவைகளெல்லாம் நீங்கப்பெற்று அதில் நிஷ்டை அடைகின்றான்
அந்த பர ப்ரஹ்மமே ப்ராணோ -பிராணன் –ஹ்யேஷ யஃ ஸர்வபூதைர்விபாதி-அனைத்துள்ளும்-ப்ரம்மா முதல் பிபிலி ஈறாக – அந்தர்பவித்து உள்ளான்
விஜாநன் -இத்தை நன்றாக அறிந்து /வித்வாந்பவதே நாதிவாதீ.-பர ப்ரஹ்மத்தை பற்றி உள்ளபடியே அறிவித்து
ஆத்மக்ரீத் -பந்துக்கள் விஷயாந்தரங்கள் பற்றுக்களை விட்டு
ஆத்மரதிஃ-அவனையே எல்லாமாகப் பற்றி -உண்ணும் சோறு -இத்யாதி -நிரதிசய ஆனந்தம் -ரதி -பெற்று / க்ரியாவான் -செய்த வேள்வியர் ஆகி
ஏஷ ப்ரஹ்மவிதாஂ வரிஷ்ட –பர ப்ரஹ்மத்தை அடைந்து ப்ரீதி காரித கைங்கர்யம் பெறுகிறான் –
——————
ஸத்யேந லப்யஸ்தபஸா ஹ்யேஷ ஆத்மா ஸம்யக்ஜ்ஞாநேந ப்ரஹ்மசர்யேண நித்யம்.
அந்தஃஷரீரே ஜ்யோதிர்மயோ ஹி ஷுப்ரோ யஂ பஷ்யந்தி யதயஃ க்ஷீணதோஷாஃ৷৷3.1.5৷৷
ஸத்யேன லப்4யஸ்தபஸா ஹ்யேஷ
ஆத்மா ஸம்யத்4க்3ஞானேன ப்3ரஹ்மசர்யேண நித்யம் |
அந்த:ஶரீரே ஜ்யோதிர்மயோ ஹி ஶுப்4ரோ
யம் பஶ்யந்தி யதய: க்ஷீணதோஷா: || 5 ||
சில செயல்களிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டிய சாதனங்களை கூறுகிறது. 1.சத்யம், 2.தவம், 3.ஸம்யக் ஞானம், 4. பிரம்மச்சர்யம்
என்கின்ற நான்கு சாதனங்களால் பிரம்மத்தை அறிந்து கொள்ள முடியும்.
பொய் பேசுவதை விட்டால்தான் ஞானத்தை அடையும் தகுதியுடையவனாக இருக்கின்றான். மனதையும், இந்திரியங்களையும்
ஒருமுகப்படுத்துவதுதான் மிகமேலான தவங்கள், சந்தேகமின்றி ஞானம் அடையும்வரை மனதை தூய்மையுடனும்,
சிரத்தையுடனும், கேட்டது போதும் என்று மனம் திருப்தி அடையும் வரை சிரவணம். பிரம்மச்சர்யம்
ஏஷஹ ஆத்மா – இந்த ஆத்ம ஞானமானது
சத்யேன – சத்யம என்ற சாதனத்தால்
லப்யதே – அடையக்கூடியது
தபஹ – தவத்தினாலும் அடையப்படுதல்
ஸம்யக் ஞானேன – சாஸ்திரத்தை கேட்டல் (சிரவணம்), சிரத்தையுடனும், மனம் ஒருமுகத்தோடு கேட்டல்
பிரம்மச்சர்யம் – ஒழுக்கமான வாழ்தல்
நித்யம் – இவைகள் எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டும். இதன் மூலம் ஆத்ம ஞானத்தை அடைதல்
அந்த: ஶரீரே – சரீரத்தினுள் ( உடலுக்குள்ள மனதிலேயேதான் சிதாபாஸனாக ஆத்மா இருக்கிறது )
ஜ்யோதிர்மயஹ – ஞான ஸ்வரூபமாக இருக்கிறது
ஷூப்3ரஹ – எப்பொழுதும் தூய்மையானது
யதயஹ – இந்த ஞானத்தை அடைய முயற்சி செய்பவர்கள் இங்கு கூறப்பட்ட சாதனங்களை கடைபிடிக்கின்றவர்கள்
யம் பஷ்யந்தி – இந்த ஆத்மஸ்வரூபத்தை அறிகிறார்கள்
க்ஷீண தோ3ஷா – அந்தகரணத்திலுள்ள அசுத்தங்கள் நீங்கப்பெற்றவர்கள், அந்தகரண தூய்மையடைந்தவர்கள்
ஸத்யேந லப்யஸ்தபஸா -சத்யத்தாலும் உபாசனத்தாலும் தபஸ் -அடைய பெற்று
ஹ்யேஷ ஆத்மா ஸம்யக்ஜ்ஞாநேந-தத்வ யாதாம்ய பரி பூர்ண ஞானத்தால்
ப்ரஹ்மசர்யேண நித்யம்.-நித்தியமான சத்யம் -நித்தியமான தபஸ் -வர்ணாஸ்ரம தர்மம் -மூலம் -மத்திய தீப நியாயம் படி நித்யம் எங்கும் கொண்டு
அந்தஃஷரீரே ஜ்யோதிர்மயோ ஹி -ஹ்ருதய புண்டரீகாக்ஷத்தில் உள்ள பரஞ்சோதியை
ஷுப்ரோ யஂ பஷ்யந்தி யதயஃ க்ஷீணதோஷா-அந்த சுபமான பர ப்ரஹ்மத்தைக் கண்டு கர்மங்களை வாசனையோடு
போக்கப் பெற்று ப்ரீதி காரித கைங்கர்யம் பெறுகிறான் –
——————
ஸத்யமேவ ஜயதே நாநரிதஂ ஸத்யேந பந்தா விததோ தேவயாநஃ.
யேநாக்ரமந்த்யரிஷயோ ஹ்யாப்தகாமா யத்ர தத்ஸத்யஸ்ய பரமஂ நிதாநம்৷৷3.1.6৷৷
ஸத்யமேவ ஜயதே நாந்ருதம் ஸத்யேன பந்தா2 விததோ தேவயான: |
யேனாக்ரமந்த்ய்ருஷயோ ஹ்யாப்தகாமா யத்ர தத்ஸத்யஸ்ய பரமம் நிதா4னம் ||6||
ஸத்யம் ஏவ ஜயதே – சத்யம் மட்டும் வெல்கிறது
மூன்று காலத்திலும் மாறாது இருப்பது அதுவே சத்யம். இங்கு குறிப்பிடுவது விவகார ஸத்யம்.
இது ஒருபடியாக குறிப்பிடப்படுகிறது. சத்தியத்தை பின்பற்றுபவன் வெற்றி அடைவான்
ந அந்ருதம் – பொய் என்றும் தோற்றுவிடும், வெற்றி பெறாது
சத்யேன விததஹ – ஸத்யம் என்ற சாதனமானது பிரம்மலோகத்திற்கே அழைத்துக் செல்கின்ற
தேவயானஹ பந்தா4ஹா – சுக்லகதி – பிரம்மலோகத்திற்கு அழைத்து செல்லும் பாதை
ரிஷியஹ – உபாஸனை செய்கின்ற ரிஷிகள்
யேன அக்ரமந்த்ய – செல்லும் பாதையிலேதான்
ஆப்தகாமா – ஓரளவு ஆசையை நீக்கியவர்கள்
யத்ர – எந்த லோகத்தில்
ஸத்யஸ்ய – சத்தியம் என்ற சாதனையால்
பரமம் நிதானம் அஸ்ய – மேலான பிரம்மன் இருக்கின்றான்
லௌகீக வாழ்க்கையிலும், ஆன்மீக வாழ்க்கைக்கும், ஆரோக்கியமான மனதுதான் முக்கியம்
ஸத்யமேவ ஜயதே நாநரிதஂ -சாத்தியமே வெல்லும் -அசத்தியம் அப்படி இல்லையே
ஸத்யேந பந்தா விததோ தேவயாந-உண்மை யான நடத்தையால் -பந்தா -அனுஷ்டானம் -தேவர்களை போலே -.
யேநாக்ரமந்த்யரிஷயோ ஹ்யாப்தகாமா -இப்படி க்யாதி லாப பூஜைக்கு என்று இல்லாமல் –
விஷயாந்தர இன்பங்களில் கண் வைக்காமல் ஆச்சார்யர்கள்
யத்ர தத்ஸத்யஸ்ய பரமஂ நிதாநம்–பர ப்ரஹ்மம் கைங்கர்யம் பெற்று நித்யர்கள் உடன் ஒரு கோவையாகிறார்கள் –
——————
பரிஹச்ச தத்திவ்யமசிந்த்யரூபஂ ஸூக்ஷ்மாச்ச தத்ஸூக்ஷ்மதரஂ விபாதி. தூராத்ஸுதூரே
ததிஹாந்திகே ச பஷ்யத்ஸ்விஹைவ நிஹிதஂ குஹாயாம்৷৷3.1.7৷৷
ப்3ருஹச்ச தத்3த்3வ்யமசிந்த்யரூபம் ஸூக்ஷ்மாச்ச தத்ஸூக்ஷ்மதரம் விபா4தி |
தூராத்ஸுதூ3ரே ததி3ஹாந்திகே ச பஶ்யத்ஸ்விஹைவ நிஹிதம் குஹாயாம் ||7||
ப்3ருஹச்ச – எல்லாவிடத்திலும் வியாபித்திருக்கின்ற ஸ்வரூபம்,பூரண ஸ்வரூபம்
த்வயம் – ஸ்வயம் பிரகாசம், ஸ்வயம் ஜ்யோதி, புலன்களால் அறியப்படாதது.
அசிந்த்யரூபம் – மனதினால் அறியமுடியாது, தர்க்கத்தினாலோ, அனுமானத்தினாலோ அறியமுடியாது, யுக்தியினாலும் அறிய முடியாது
ஸூக்ஷ்மாச்ச தத் ஸூக்ஷ்மதரம் – நுண்ணியத்தைக் காட்டிலும் நுண்ணியமானது
விபாதி – விதவிதமான பிரமாணங்களுடன் காரியமாக இருக்கிறது. சூரிய, சந்திரன் இவைகளை பிரகாசிக்கின்றது.
தூராத்ஸுதூரே – அக்ஞானிகளுக்கு வெகு தொலைவில் இருக்கிறது
தத் இஹ அந்திகே – ஆனால் அதுவே ஞானிகளுக்கு மிக அருகிலும் இருக்கிறது
ஆத்மா தூரத்திலும் இல்லை, அருகிலும் இல்லை. இது நானாக இருப்பதால் இவ்வாறு உபநிஷத் கூறுகிறது.
பஶ்யந்தி – ஜீவர்களிடத்தில்
இவ ஏஹ – இங்கேயே
கு3ஹா – புத்தியிலே ( மனதில் )
நிஹிதம் – வெளிப்படுகிறது. அறியப்படுகிறது.
பரிஹச்ச -அந்த பர ப்ரஹ்மம் பராத்பரன் -பிருஹத் -தானும் பராத் பரனாய் இருந்து தன்னை அடைந்தார்களையும் பெரியவர்களாக ஆக்கும் தன்மையன்
தத்திவ்யமசிந்த்யரூபஂ –திவ்யம் -அப்ராக்ருதம் -அசிந்த்ய ரூபம் –
ஸூக்ஷ்மாச்ச தத்ஸூக்ஷ்மதரஂ -ஸூ ஷ்மங்களிலும் ஸூ சமம் -அனோர் அணீயான் –
விபாதி. -பரஞ்சோதி -ஜோதிஸ் பதார்த்தங்களை ஜோதிஸ் கொடுத்து அருளி -பல விதமாக இருந்து அருளி
தூராத்ஸுதூரே -ஸ்ரீ வைகுண்ட நிலையனாய் அதி தூரஸ்தானாயும் அந்தர்யாமியாய் அருகிலும் இருப்பவன்
ததிஹாந்திகே ச பஷ்யத்ஸ்விஹைவ நிஹிதஂ குஹாயாம்–ஞானிகள் ஹ்ருதய கமலத்தில்-குஹாயம் – இருப்பதை அறிவார்கள் –
—————–
ந சக்ஷுஷா கரிஹ்யதே நாபி வாசா நாந்யைர்தேவைஸ்தபஸா கர்மணா வா.
ஜ்ஞாநப்ரஸாதேந விஷுத்தஸத்த்வஸ்ததஸ்து தஂ பஷ்யதே நிஷ்கலஂ த்யாயமாநஃ৷৷3.1.8৷৷
ந சக்ஷுஷா க்3ருஹ்யதே நாபி வாசா
நான்யைர்தே3வைஸ்தபஸா கர்மணா வா |
ஞானப்ரஸாதே3ன விஶுத்3த4ஸத்த்வஸ்ததஸ்து
தம் பஶ்யதே நிஷ்கலம் த்4யாமான: || 8 ||
ந சக்ஷுஷா க்ருஹ்யதே – கண் என்ற இந்திரியத்தால் ஆத்ம தத்துவத்தை அறிந்து கொள்ள முடியாது
நாபி வாசா – வாக்கினாலும், இந்த பரம்பொருளை அறிந்து கொள்ள முடியாது. கர்மேந்திரியங்களாலும் இதை அறிந்து கொள்ள முடியாது
ந அன்யைஹி தே3வைஹி – மற்ற இந்திரியங்களாலும் அறிய முடியாது. மனதினாலும் அடையமுடியாது
பிரத்யக்ஷ பிரமாணத்தால் அறிய முடியாது. நேரிடையாக இதை விளக்க முடியாது. லட்சணையாகத்தான் விளக்க முடியும்.
அனுமானத்தாலும், சொல்லாலும் விளக்க முடியாது, அடைய முடியாது
ந தபஹ – தவத்தாலும் அடைய முடியாது
கர்மணா வா – கர்மங்களினாலும் அடைய முடியாது, அறிய முடியாது
நான ப்ரஸாதேன – இங்கு ஞானம் என்பதற்கு புத்தி என்று அர்த்தம் கொள்ள வேண்டும், புத்தியுடைய பிரகாசத்தினால்
அமைதியடைவதாலும், கருணையினால் புத்திக்கு ஆத்மாவை தெரிந்து கொள்ளும் சக்தி இயற்கையாக இருந்தாலும்,
வெளி விஷயங்களிலுள்ள ராக-துவேஷ என்ற தோஷத்தினல் பாதிக்கப்பட்டு ஆத்மாவை அறியும் சக்தி இழந்து விடுகிறது.
(கலுமிஷம் – அழுக்கடைந்து விட்டது). புத்தி அசைவற்றதும், தூய்மையானதாகவும் இருந்தால்தான் ஆத்மாவை அறிய முடியும்.
புத்தியினுடைய காரியம் – நிச்சயம் செய்வது
மனதினுடைய செயல்கள் – சந்தேகத்துடன் இருத்தல், அலைபாய்தல், உணர்ச்சிகளை உடையது
புத்தியுடைய தூய்மை புருஷார்த்த நிச்சயம், அப்படி நிச்சயம் செய்த புத்தியானது தூய்மையானதாகிறது.
நிச்சயித்த அந்தப்பாதையில் கவனம் சிதறாமல் லட்சியத்தை நோக்கி இருத்தல், அசைவற்ற இருத்தல்
விசுத்த ஸத்வம் – தூய்மையான மனதை அடைந்து விட்டவனாக சூட்சுமமான புத்தியால்தான் பிரம்மத்தை அறிய முடியும்.
ஏனென்றால் ஆத்ம தத்துவமும் சூட்சுமமாக இருப்பதால்
ததஹ – இந்த தகுதியை அடைந்ததற்கு பிறகு
தம் – அந்த ஆத்மாவை
பஶ்யதே – அறிகின்றான்
நிஷகலம் – பூரணமான, முழுமையான பிரம்ம தத்துவத்தை
த்4யாயமானஹ – விசாரம் செய்தவனாக இருப்பவன் அறிகின்றான்
ந சக்ஷுஷா கரிஹ்யதே -கண்ணாலே காண முடியாது /நாபி வாசா-வாக்காலும் சொல்லி முடிக்க முடியாதே -யாதோ வாசோ நிவர்த்தந்தே-
நாந்யைர்தேவைஸ்தபஸா கர்மணா வா. -வேறு எந்த வழிகளாலும் தபஸ் போன்றவற்றாலும் வேறே வேத கர்மங்களாலும் அடைய முடியாதவன் –
ஜ்ஞாநப்ரஸாதேந விஷுத்தஸத்த்வஸ்ததஸ்து தஂ பஷ்யதே நிஷ்கலஂ த்யாயமாந–அவனாலே அருளப் பெற்ற
ஞான பிரசாதத்தாலே -சுத்த சத்வமயமான நிஷ்கலமான அவனை பார்த்து உணர்ந்து அனுபவிக்க முடியும் –
—————
ஏஷோணுராத்மா சேதஸா வேதிதவ்யோ யஸ்மிந்ப்ராணஃ பஞ்சதா ஸஂவிவேஷ. ப்ராணைஷ்சித்தஂ
ஸர்வமோதஂ ப்ரஜாநாஂ யஸ்மிந்விஷுத்தே விபவத்யேஷ ஆத்மா৷৷3.1.9৷৷
அறிகின்றான்
ஏஷோSணுராத்மா சேதஸா வேதி3தன்யோ
யஸ்மின்ப்ரண: ப்ரஞ்சதா4 ஸம்விவேஶ |
ப்ராணைஶ்சித்தம் ஸர்வமோதம் ப்ரஜானாம்
யஸ்மின்விஶுத்3தே4 விப4வத்யேஷ ஆத்மா || 9 ||
ஏஷஹ – இந்த ஆத்ம ஸ்வரூபம்
அணுஹு ஆத்மா – மிக மிக சூட்சுமமானது, இப்படிபட்ட இந்த ஆத்மா
சேதஹ – புத்தியினால் , மனதினால்
வேதி3தன்யஹ – அறியப்படும் அருகதையை உடையது
யஸ்மின் – இந்த ஸ்தூல சரீரத்தில்
ப்ராணஹ – நம் பிராணனானது
பஞ்சதா – ஐந்துவிதமாக
ஸம்விவேஶ – பிரவேசித்தள்ளதோ
அப்படிபட்ட உடலில் இந்த மனமானது இருக்கின்றது. இந்த சைதன்யத்தினால்தான் அனைத்தும் வியாபிக்கப்பட்டுள்ளது.
பிராணைஹ ஸர்வ ஸித்தம் ப்ரஜானாம் – எல்லா ஜீவராசிகளினுடைய மனங்களும் பிராணனுடன்
ஓதம் – ஆத்மாவால் இணக்கப்பட்டிருக்கிறது
யஸ்மின் விஶுத்தே4 – எந்த தூய்மையான மனதில்
ஏஷ ஆத்மா – இந்த ஆத்மா
விப4வதே – நன்கு தெளிவாக தெரிய வருகிறது
ஏஷோணுராத்மா சேதஸா வேதிதவ்யோ யஸ்மிந்ப்ராண-அப்படி அவனால் அருள பெற்ற ஞானவான்கள் -தங்கள் பிராணன்
பஞ்சதா ஸஂவிவேஷ.–பிராண அபான போன்ற பஞ்ச -பிராணங்களிலும் இருப்பதை உணர்வர்
ப்ராணைஷ்சித்தஂ ஸர்வமோதஂ ப்ரஜாநாஂ -சர்வ சித்தத்திலும் -கர்ம ஞான இந்த்ரியங்களிலும் கரந்து எங்கும் பறந்து -கறந்த பாலில் நெய்யே போல் -இருப்பதை
யஸ்மிந்விஷுத்தே விபவத்யேஷ ஆத்மா–தானே காட்டிக் கொடுக்க சுத்தமான -கர்மங்கள் ருசி வாசனையுடன்
போக்கப் பற்ற -மனசால் உணர்கிறார்கள் -சாஷாத் கரிக்கிறார்கள் –
————-
யஂ யஂ லோகஂ மநஸா ஸஂவிபாதி விஷுத்தஸத்த்வஃ காமயதே யாஂஷ்ச காமாந்.
தஂ தஂ லோகஂ ஜயதே தாஂஷ்ச காமாஂஸ்தஸ்மாதாத்மஜ்ஞஂ ஹ்யர்சயேத்பூதிகாமஃ৷৷3.1.10৷৷
யம் யம் லோகம் மனஸா ஸம்விபா4தி
விஶுத்3த4ஸத்வ: காமயதே யாம்ஶ்ச காமான் |
தம் தம் லோகம் ஜயதே தாஶ்ச
காமாம்ஸ்தஸ்மாதா3த்மக்ஞம் ஹ்யர்சய்த்3 பூ4திகாம: || 10 ||
யம் யம் லோகம் மனஸ ஸம்விபா4தி – எந்தெந்த லோகத்தை மனதினால் அடைய விரும்புகிறோமோ
யாஶ்ச காமயதே – எந்த பொம்மையை விரும்புகின்றோமோ
விசுத்த ஸத்வ – ஞானியானவன்
தம் தம் லோகம் ஜயதே – அந்தந்த லோகங்களை அடைகின்றான்
தஸ்மாத்3 – இந்த பெருமைகள் இருப்பதால்
ஆத்மக்3ஞம் – ஞானியை
பூ4த்காம அர்சயேத்3 – அனாத்மாவை விரும்புவர்கள் வணங்க வேண்டும்
இங்கு ஞானியை ஈஸ்வரனாகவே வர்ணிக்கப்படுகிறது
இப்படி அவனால் அருள பெற்ற சுத்த சத்வ மனசாலே சர்வ லோகங்களையும் வென்று -சர்வ அபேக்ஷிதங்களையும் பெற்று
வா ஸூ தேவ சர்வம் -என்றும் –உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் என்றே இருப்பார்கள் –
———————————
ஸ வேதைதத்பரமஂ ப்ரஹ்ம தாம யத்ர விஷ்வஂ நிஹிதஂ பாதி ஷுப்ரம். உபாஸதே
புரூஷஂ யே ஹ்யாகாமாஸ்தே ஷுக்ரமேதததிவர்தந்தி தீராஃ৷৷3.2.1৷৷
ஸ வேதைதத்பரமஂ ப்ரஹ்ம -ச வேத இதத் ப்ரஹ்ம -இப்படி அறியப் பெற்ற பர ப்ரஹ்மம் –
தாம யத்ர விஷ்வஂ நிஹிதஂ பாதி . உபாஸதே -பரம தாமம் -பரம பதம் –
யத்ர விஸ்வம் நிஹிதம் -பாதி-அனைத்து உலகும் அவன் தேஜஸ் ஏக தேசத்திலே இருக்குமே
ஷுப்ரம்-புரூஷஂ யே ஹ்யாகாமாஸ்தே –ஷூப்ரம்-புனிதம் -திவ்யம் -அகாமஸ்தே-புறம்பு உண்டான பற்றுக்களில் ஆசை இல்லாமல் –
ஷுக்ரமேதததிவர்தந்தி தீரா–ஏதத் ஷூக்ரம் அதிவர்த்தந்தி-சம்சாரத்தில் மீண்டும் சிக்காமல் பர ப்ரஹ்மத்தை அடைந்து இன்புறுகிறான் –
————–
காமாந்யஃ காமயதே மந்யமாநஃ ஸ காமபிர்ஜாயதே தத்ர தத்ர.
பர்யாப்தகாமஸ்ய கரிதாத்மநஸ்து இஹைவ ஸர்வே ப்ரவிலீயந்தி காமாஃ৷৷3.2.2৷
காமான்ய: காமயதே மன்யமான:
ஸ காமபி4ர்ஜாயதே தத்ர தத்ர |
பர்யாப்தகாமஸ்ய க்ருதாத்மனஸ்து
இஹைவ ஸர்வே ப்ரவிலீயந்தி காமா: || 2 ||
முமுக்ஷூக்கள் ஆசைகளைத் துறக்க வேண்டும். தியாகம் செய்ய வேண்டும்.
யஹ – எவனொருவன்
காமான் மன்யமானஹ காமயதே – பார்த்த விஷயங்களையும், கேட்ட விஷயங்களையும் சிந்தித்துக் கொண்டு
ஆசைப்படுகின்றானோ. விஷயங்களின் கிடைக்கப்போடும் சுகத்தை சிந்தித்துக் கொண்டிருக்கின்றவன்
ஸஹ – அவன்
காமபிஹி – ஆசைகளுடன், அதனோடு சம்பந்தப்பட்ட விஷயங்களோடு
ஜாயதே – பிறக்கின்றான்
தத்ர தத்ர – அந்தந்த இடத்தில்
தர்ம-அதர்ம பிரவிருத்தி ஹேது – தர்மத்தையும், அதர்மத்தையும் செய்வதற்கு காரணமான ஆசையுடனும், விஷயத்துடனும் ஒருவன் பிறக்கின்றான்
பர்யாப்த காமஹ – எல்லா ஆசைகளையும் துறந்தவன், ஆசைகளனைத்தும் நீக்கப்பட்டு விட்ட நிலையிலிருப்பவன்
க்ருதாத்மனஹ – தனக்கு செய்ய வேண்டியதை எல்லாம் செய்து முடித்தவன். தன்னைப்பற்றி அறிய வேண்டியதை அறிந்து கொண்டவன்.
அதை அறிய செய்ய வேண்டியதெல்லாம் செய்தவன்
ஸர்வே காமாஹா – எல்லா ஆசைகளும்
இஹைவ – உயிருடன் இருக்கும்போது, இங்கேயே
ப்ரவிலீயதே – அழிந்து விடுகிறது
ஆசைகளைத் தியாகம் செய்வது சாதனம். ஞானம் அடைந்தவுடன் ஆசைகள் அழிந்து விடுகிறது பலனாகும்.
ஆசைகளை துறந்தாலும் அதன் வேர் இன்னும் இருந்துக் கொண்டு இருக்கும்.
ஆசையை துறந்தாலும் அதை தியாகம் செய்து இருக்கிறோம் என்ற நினைவு இருந்து கொண்டிருக்கும்.
காமாந்யஃ காமயதே மந்யமாநஃ ஸ காமபிர்ஜாயதே -விஷயாந்தரங்களில் பற்று மிக்கு அவற்றிலே ஆழ்ந்து இருப்போர்
மீண்டும் மீண்டும் மாறி மாறி பல பிறவி எடுத்து
தத்ர தத்ர. பர்யாப்தகாமஸ்ய கரிதாத்மநஸ்து இஹைவ ஸர்வே ப்ரவிலீயந்தி காமாஃ–
அந்த அந்த சூழலிலே ஆசை கொண்டு அழிய -புறம்புள்ள விஷயாந்தரங்கள் பற்று அற்றவர்கள் இங்கேயே
சரீரத்துடன் இருக்கச் செய்தே பர ப்ரஹ்மத்தை அறிகிறார்கள் –
————————
நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ ந மேதயா ந பஹுநா ஷ்ருதேந. யமேவைஷ
வரிணுதே தேந லப்யஸ்தஸ்யைஷ ஆத்மா விவரிணுதே தநூஂ ஸ்வாம்৷৷3.2.3৷৷
நாயமாத்மா ப்ரவசனேன லப்4யோ
மேத4யா ந பஹூனா ஶ்ருதேன |
யமேவைஷ வ்ருஷுதே தேன லப்4யஸ்தஸ்யைஷ
ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம் || 3 ||
ஆத்மாவை அறிந்து கொள்வதை லட்சியமாக கொள்வது ஆத்ம வரணம் என்று குறிப்பிட்டிருக்கிறது.
ஈஸ்வரனின் அனுகிரகத்தைப் பெற முயற்சிக்க வேண்டும்.
ஆத்மவரணம் – ஆத்மாவை தேர்ந்தெடுத்தல்
அயம் ஆத்மா – இந்த ஆத்ம ஞானத்தை
ந லப்யதே – அடைய முடியாது
ப்ரவசனம் – வேதத்தை ஓதுவதனால், பிரவசனத்தினால், வேத சாஸ்திரத்தை ஸ்வரத்துடன் அத்யயனம் செய்தல்
ந மேத4யா – மனதில் ஞாபகம் வைத்துக் கொள்கின்ற சக்தி, கிரந்தத்தின் அர்த்தத்தை மனதில் வைத்துக் கொள்கின்ற சக்தி,
உபநிஷத் மனப்பாடம் செய்தாலும் அடைய முடியாது
ந பஹுனா ஶ்ருதேன – மீண்டும், மீண்டும் கேட்பதனாலும் அறிய முடியாது
முமூக்ஷுத்வம் இல்லாமல் மேற்கூறியவைகள் பயனற்றது. ஆத்ம ஞானத்திற்கு அடைவதற்கு பயன்படாது.
யம் ஏவ ஏஷஹ வ்ருணுதே – யார் இந்த ஆத்மாவை மட்டும் லட்சியமாக கொள்கின்றானோ, தேர்ந்தெடுக்கின்றானோ,
தேன லப்யஹ – அவரால் அடையப்படும்
ஏஷஹ – இந்த ஆத்மா – (இதுதான் புருஷார்த்தமாக தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்)
யம் ஏவ வ்ருணுதே – யாரை தேர்ந்தெடுக்கின்றதோ
தேன லப்யஹ – அவனால் அடையப்படுகிறது
யார் ஆத்மாவை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களைத்தான் ஆத்மாவும் தேர்ந்தெடுக்கிறதோ.
ஆத்மா தேர்ந்தெடுத்ததில் ஈஸ்வரனின் அனுகிரகத்தை பெற்ற
தஸ்ய – அந்த அதிகாரிக்கு, அவனுக்கு
ஏஷஹ ஆத்மா – இந்த ஆத்மாவானது
ஸ்வாம் தனும் – தன்னுடைய ஸ்வரூபத்தை
விவ்ருணுதே – வெளிப்படுத்துகிறது, அறிய வைக்கிறது
நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ -இப்படி பற்று அற்ற பரிசுத்த மனசு வேதாந்தங்களை படித்து மட்டும் பெற முடியாதே –
ந மேதயா–நல்ல ஞானங்களால் அவற்றை அறிந்தும் பெற முடியாதே
ந பஹுநா ஷ்ருதேந. -மீண்டும் மீண்டும் கேட்டு பெற்ற ஞானத்தாலும் பெற முடியாது –
அப்படியானால் எவ்வாறு அடைவது என்றால்
யமேவைஷ வரிணுதே தேந லப்யஸ்தஸ்யைஷ ஆத்மா விவரிணுதே தநூஂ ஸ்வாம்–அவனே யாரைத் தேர்ந்து எடுத்து
தன்னைக் காட்டி அருளுகிறானோ அவனே அவனை அறிவான் ஆகிறான் –
———————-
நாயமாத்மா பலஹீநேந லப்யோ ந ச ப்ரமாதாத்தபஸோ வாப்யலிங்காத்.
ஏதைருபாயைர்யததே யஸ்து வித்வாஂஸ்தஸ்யைஷ ஆத்மா விஷதே ப்ரஹ்மதாம৷৷3.2.4৷
நாயமாத்மா ப3லஹீனேன லப்4யோ ந ச
ப்ரமாதாத்தபஸோ வாப்யலிங்கா3த் |
ஏதைருபாயைர்யததே யஸ்து வித்3வாம்ஸ்
தஸ்யைஷ ஆத்மா விஶதே ப்ரஹ்மதா4ம || 4 ||
இதில் மூன்று சாதனங்கள் சொல்லப்படுகிறது. இவைகள் ஆத்ம வரணத்துடன் செய்ய வேண்டும்.
1. மனோபலம், 2. அப்பிரமாத (கவனமாக இருத்தல்), 3.வைராக்கியத்துடன் கூடிய ஞானம்
மனோபலம்: இதை இரண்டு விதத்தில் அடையலாம். உடல் சக்தி, நல்ல ஆகாரம் தேவையற்றவைகளை சாப்பிடாமல் இருத்தல்,
அதேபோல மனதிற்கு நல்ல விஷயங்களை கொடுக்க வேண்டும். சத்யம், சம, தம இவைகளை கடைப்பிடித்தால்
மனதில் பலமிருந்து நற்பண்புகளை பின்பற்றுவதாலும் அடையப்படும். காம-க்ரோதம், பேராசை போன்ற
தீய பண்புகளை வைத்துக் கொண்டிருத்தல். அப்படிபட்ட மனிதர்களிடம் கோபப்படாமல் பரிதாபப்பட வேண்டும்.
ஆத்மஞான நிஷ்டை அடைந்ததும், வருகின்ற மனோபலம். இந்த ஜகத் மித்யா என்று துறந்து விடமுடியும்.
அயம் ஆத்மா – இந்த ஆத்மாவானது
பலஹீன – மன பலமற்றவானல்,
ந லப்யஹ – அடைய முடியாது
கவனமாக இருத்தல் விஷய ஸங்க நிமித்தி பிரமாதயா – நம்மை சுற்றியுள்ள பொருட்களில், விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
இல்லையென்றால் அதனால் ஈர்க்கப்பட்டு திசைமாறி போய்விடுவோம். புகழ், பொருட்கள் இவைகளை சேர்ப்பதினால் நம் லட்சியத்திலிருந்து விலகிவிடுவோம்.
பிரமாதாத் – கவனக்குறைவு இல்லாமல் இருக்க வேண்டும்
அலிங்காத் தபஸ – சந்நியாஸம் (வைராக்கியம்) இல்லாத ஞானத்தினல் ஆத்மாவை அடைய முடியாது
யஹ வித்வான் – எந்த முமூக்ஷுவானவன்
ஏதைஹி உபாயைஹி – மேலே சொன்ன மூன்று உபாயத்துடன்
யததே – முயற்சி செய்ய வேண்டும்
தஸ்ய ஏஷ ஆத்மா – இந்த அவனுடைய ஆத்மா
ப்ரஹ்ம தாமம் விஷதே – மேலான இருப்பிடமான பிரம்மன் இடத்திற்கு சென்று அடைகிறது
நாயமாத்மா பலஹீநேந லப்யோ-பல ஹீனனால் அடைய முடியாதே –
ந ச ப்ரமாதாத் -விஷயாந்தர பற்றுக்கள் – புத்ர பசு -பற்றுக்கள் – கொண்டவனால் முடியாதே
தபஸோ வாப்யலிங்காத்.–தபஸாலும் அலிங்காத் வெளி அடையாளங்கள் -மட்டும் சன்யாசத்துக்கு போதாது –
ஏதைருபாயைர்யததே யஸ்து வித்வாஂஸ்தஸ்யைஷ ஆத்மா விஷதே ப்ரஹ்மதாம–மால் பால் மனசை வைத்து
அதனாலே மங்கையர் தோள் கை விட்டு -விஷயாந்தர பற்றுக்களை அறுத்து அவனை அனுபவிப்போம் –
———————
ஸஂப்ராப்யைநமரிஷயோ ஜ்ஞாநதரிப்தாஃ கரிதாத்மாநோ வீதராகாஃ ப்ரஷாந்தாஃ.
தே ஸர்வகஂ ஸர்வதஃ ப்ராப்ய தீரா யுக்தாத்மாநஃ ஸர்வமேவாவிஷந்தி৷৷3.2.5৷৷
ஸம்ப்ராப்யைனம்ருஷயோ ஞானத்ருப்தா; க்ருதாத்மானோ வீதராகா3: ப்ரஶாந்தா: |
தே ஸர்வக3ம் ஸர்த: ப்ராப்ய தீ4ரா யுக்தாத்மான: ஸர்வமேவாவிஶந்தி || 5 ||
ஸம்ப்ராப்ய ஏனம் – இந்த ஆத்ம தத்துவத்தை முழுமையாக அடைந்து
ரிஷயஹ – ரிஷிகள், ஞானிகள்
ஞானத்ருப்தாஹா- ஞானத்தினால் மனதிருப்தியை, மன நிறைவை அடைந்தவர்கள். மற்ற விஷயங்களை அறிவதால் ஆசைகள் ஏற்படும்,
ஆசை நிறைவேறாவிட்டால் கோபமும், வெறுப்பும் வரும், ஆத்ம ஞானம் மட்டும் இருக்கின்ற ஆசைகள் ஒழிந்துவிடும். மனதில் திருப்தி வந்துவிடும்.
க்ருதார்மானஹ – ஆத்மாவை பூரணமாக அறிய வேண்டியவற்றை செய்து பரமாத்மாவாக, பிரஹ்ம ஸ்வரூபமாக மாறிவிட்டான்.
வித ராகாஹா – சென்றுவிட்ட ஆசை முதலியவைகள், தீய குணங்கள் அனைத்தும் அவனை விட்டு சென்றுவிட்டன.
ப்ரஶாந்தாஹா – இந்திரியங்களெல்லாம் அமைதியை அடைந்து விட்ட நிலையில் உள்ளவன்
தே – அவர்கள்
ஸர்வகம் – எல்லா இடத்திலும் வியாபித்துள்ள ஆத்மாவை
ஸர்வதஹ ப்ராப்ய – முழுமையாக அடைந்து இருப்பவர்கள்
தீரா – தீரர்கள்
யுக்தாத்மான: – நன்கு பொருந்திய மனதுடையவர்களாக, மனவமைதியுடையவர்களாக
ஸர்வம் ஏவ ஆவிஷந்தி – அனைத்தையும் வியாபிக்கிறார்கள்
மரணத்திற்கு பிறகு பிரம்ம ஸ்வரூபமாக மாறிவிடுகிறார்கள். உயிரோடிருக்கும் போது உலகத்திலுள்ள
அனைத்தும் நானென்று அபிமானத்துடன் இருப்பார்கள்
ஸஂப்ராப்யைநமரிஷயோ-இப்படி பிராப்யம் அருள்ப் பெற்ற ஆச்சார்யர்கள் –
ஜ்ஞாநதரிப்தாஃ -ப்ரஹ்ம ஞானம் ஒன்றாலே தரித்து -கால ஷேபம் செய்து
கரிதாத்மாநோ-அவனது ஸ்வரூப ரூப குண விபூதிகளை நன்றாக அனுபவித்து –
வீதராகாஃ -புற-புலன்கள் அனைத்தும் அவனிடமே அர்ப்பணித்து
தே ஸர்வகஂ ஸர்வதஃ ப்ராப்ய -தேச கால வாஸ்து பரிச்சேத ரஹிதனான பர ப்ரஹ்மத்தை அனுபவித்து
தீரா யுக்தாத்மாநஃ -இப்படி விலக்ஷணமான நித்ய த்யான அனுபவஸ்தர்கள்
ஸர்வமேவாவிஷந்தி–அவனை அடைந்து நித்ய ஆனந்த உக்தர்கள் ஆகிறார்கள் –
——————–
வேதாந்தவிஜ்ஞாநஸுநிஷ்சிதார்தாஃ ஸஂந்யாஸயோகாத்யதயஃ ஷுத்தஸத்த்வாஃ.
தே ப்ரஹ்மலோகேஷு பராந்தகாலே பராமரிதாஃ பரிமுச்யந்தி ஸர்வே৷৷3.2.6৷৷
வேதாந்தவிஞானஸுநிஷ்சிதார்தா2: ஸந்யாஸயோகா3த்3யதய: ஶுத்3த4ஸத்த்வா: |
தே ப்3ரஹ்மலோகேஷு பராந்தகாலே ப்ராம்ருதா: பரிமுச்யந்தி ஸர்வே || 6 ||
யத் யஹ – இவ்வாறு முயற்சி செய்பவர்கள்
ஸந்யாஸ யோக – சந்நியாஸம் என்கின்ற சாதனம், ஞானயோகம் என்ற சாதனத்தை பயன்படுத்துகிறார்கள்.
ஶுத்3த4 ஸத்த்வாஹா – தூய்மையான மனம் அடைகிறார்கள். ராக-துவேஷம் நீங்கிய தூய்மை, எல்லா அசுத்தங்களையும்
நீக்குகின்ற அறியாமை நீங்குதல், அதனால் அடையப்பட்ட ஞானத்தை, பரம்பொருளை
அனிஶ்சித – நிச்சயம் செய்யப்பட்டது
தே பராம்ருதஹ – அவர்கள் முக்தர்களாக மாறினார்கள். உயிரோடிருக்கும் போதே மரணமற்ற நிலையை அடைகிறார்கள்.
மேலான அம்ருதத்தை அடைந்தார்கள்.
பராந்தகாலே – கடைசிகாலத்தில், மரணமடைந்த நேரத்தில்
பிரம்மலோகேஷு – பிரம்மத்திலே
ஸர்வே பரிமுச்யந்தி – எல்லோரும் ஒன்றாகி விடுகிறார்கள், கலந்து விடுகிறார்கள்
வேதாந்தவிஜ்ஞாநஸுநிஷ்சிதார்தாஃ -யாதாம்ய வேதாந்த ஞானம் உடையவர்கள்
ஸஂந்யாஸயோகாத்யதயஃ ஷுத்தஸத்த்வாஃ-சுத்த சத்வ குணமுடையவர்களாய் -சந்யாச யோகம் கைவந்தவர்களாய் -பரமை ஏகாந்திகளாய்
தே ப்ரஹ்மலோகேஷு பராந்தகாலே பராமரிதாஃ பரிமுச்யந்தி ஸர்வே–சரீர அவசானத்திலே-சம்சாரம் தொலையப் பெற்று
பரமபதம் அடைந்து ப்ரீதி கார்ய கைங்கர்யம் பெற்று நிரதிசய ஆனந்த உக்தர்களாக ஆகிறார்கள் –
—————-
கதாஃ கலாஃ பஞ்சதஷ ப்ரதிஷ்டா தேவாஷ்ச ஸர்வே ப்ரதிதேவதாஸு.
கர்மாணி விஜ்ஞாநமயஷ்ச ஆத்மா பரேவ்யயே ஸர்வஂ ஏகீபவந்தி৷৷3.2.7৷৷
க3தா: கலா: பஞ்சதஶ ப்ரதிஷ்டா தே3வாஶ்ச ஸர்வே ப்ரதிதே3வதாஸு |
கர்மாணி விஞானமயஶ்ச ஆத்மா பரேSவ்யயே ஸர்வம் ஏகீப3வந்தி || 7 ||
சஞ்சித கர்மத்திலிருந்து வெளிவந்து செயல்பட்டு கொண்டிருப்பது பிராரப்த கர்மம், புதிதாக சேர்க்கப்பட்ட ஆகாமி கர்மபலனில் சேர்க்கப்படுகிறது..
ஞானி விஷயத்தில் சஞ்சித கர்மமும், ஆகாமி கர்மங்களும் அழிந்துவிடுகின்றன. மரணமடையும்போது ஸ்தூல சரீரம்தான் அழிகிறது.
அக்ஞானியின் சூட்சும சரீரம் வெளிப்படுகின்ற பிராரப்த கர்மத்திற்கேற்றவாறு வேறுடலை எடுக்கின்றது.
ஞானியின் சூட்சும சரீரம் அந்தந்த சூட்சும பூதங்களில் கலந்து விடுகின்றது. அகங்காரம் அழிந்தவுடன் சஞ்சித, ஆகாமி கர்மங்கள் அழிந்து விடுகின்றது.
க3தா பஞ்சத3ஶா கலாம – கலந்து விடுகிறது பதினைந்து அம்சங்கள்
பிரதிஷ்டாஹா – அந்தந்த தேவதைகளை அடைந்து
ஞானியினுடைய அனாத்மாக்கள் மறைந்து விட்டாலும், அவரது பெயர் இருந்துக் கொண்டேயிருக்கும்.
ஸர்வே தேவா: – எல்லா இந்திரியங்களும்
ப்ரதிதேவதா3ஸு – அந்தந்த இந்திரிய தேவதைகளிடம் சென்று விடுகின்றது
கர்மாணி – சஞ்சித, ஆகாமி கர்மங்களும்
விக்ஞானமய ஆத்மா – சிதாபாஸன், பிரதிபிம்ப ஆத்மா
பர அவ்யயே – அழியாத பரம்பொருளிடத்தில்
ஸர்வே ஏகி ப4வந்தி – எல்லாமும் ஒன்றாக கலந்து விடுகின்றது
பஞ்ச தச -இந்திரியங்கள் இத்யாதி -கர்மாக்கள் அந்த அந்த அதிஷ்டான தேவதைகள் உடனும்
சஞ்சித கர்மாக்கள் உடனும் ஆத்மா உடன் பர ப்ரஹ்மத்தில் லயிக்கின்றன –
——————-
யதா நத்யஃ ஸ்யந்தமாநாஃ ஸமுத்ரேஸ்தஂ கச்சந்தி நாமரூபே விஹாய.
ததா வித்வாந்நமரூபாத்விமுக்தஃ பராத்பரஂ புரூஷமுபைதி திவ்யம்৷৷3.2.8৷৷
யதா2 நத்4ய: ஸ்யந்தமானா: ஸமுத்3ரேSஸ்தம் க3ச்ச2ந்தி நாமரூபே விஹாய |
ததா2 வித்3வான் நாமரூபாத்3விமுக்த: ப்ராத்பரம் புருஷமுபைதி தி3வ்யம் || 8 ||
விதவிதமான நதிகள் கடலில் கலந்து விட்டால் தங்களது பெயர்களை இழந்து கடலோடு ஒன்றாகி விடுகிறது
யதா2 நதியா – எப்படி நதிகளானது
ஸ்யந்தமானா: – ஓடிக்கொண்டிருக்கும்
ஸமுத்3ரே அஸ்தம் க3ச்ச2ந்தி – சமுத்திரத்தில் ஒன்றாகி விடுகிறது
நாமரூபே விஹாயே – நாம ரூபத்தை இழந்து விடுகிறது
ததா2 வித்வான் – அவ்விதமே ஞானியானவன்
நாம ரூபாத் விமுக்த: – நாம ரூபத்திலிருந்து விடுதலையடைகிறான். இது ஜீவன் முக்தியை குறிக்கிறது.
உடல் மீதுள்ள அபிமானத்தை தியாகம் செய்தல்
பராத்பரம் – மாயைக் காட்டிலும் மேலான
த்வயம் புருஷம் உபைதி – சுய பிரகாசமான பிரம்மத்தை அடைகின்றான்
பானைகளை நாம ரூபங்களாக பார்க்கும்போது அதில் வேற்றுமைகளை பார்க்கிறோம்.
களிமண்ணை பார்க்கும் போது ஒன்றைத்தான் பார்க்கிறோம். ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தைத்தான் கவனிப்போம்.
அதனால் நாமரூபத்தை பார்க்கும்போது அதிஷ்டமான களிமண்ணை மறந்து விடுகிறோம்.
பிறகு களிமண் என்ற பார்வையில் நமக்கு எல்லாமே ஒன்றுதான் என்று விளங்குகிறது.
நாம ரூபத்திலிருந்து விடுதலையடையும் போது ப்ராந்த காலத்தில் இதற்கு அதிஷ்டானமான பிரம்மத்தில் கலந்து விடுகின்றான்.
நதிகள் கடலை அடைந்து தங்கள் நாம ரூபங்களை இழப்பது போலே
ஆத்மாக்களும் பர ப்ரஹ்மம் இடம் லயித்து நாம ரூபங்களை இழந்து ஒன்றாகின்றன –
—————-
ஸ யோ ஹ வை தத்பரமஂ ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி நாஸ்யாப்ரஹ்மவித்குலே பவதி.
தரதி ஷோகஂ தரதி பாப்மாநஂ குஹாக்ரந்திப்யோ விமுக்தோமரிதோ பவதி৷৷3.2.9৷৷
ஸ யோ ஹ வை தத்பரமம் வேத3 ப்ரஹ்மைவ
ப4வதி நாஸ்யாப்ரஹ்மவித்குலே ப4வதி |
தரதி ஶோகம் தரதி பாப்மானம் கு3ஹாக்3ரந்தி4ப்4யோ
விமுக்தோSம்ருதோ ப4வதி || 9 ||
ஸஹ யஹ – எவனொருவன்
தத் பரமம் ப்ரஹ்ம வேத3 – அந்த மேலான பிரம்மத்தை அறிகின்றானோ
ப்ரஹ்ம ஏவ ப4வதி – பிரம்மனாகவே ஆகின்றான்
அறியாமைதான் நமக்கு பிரம்மத்திற்கு உள்ள இடைவெளி எனவே அறியாமை நீங்கினால் நாம் பிரம்மத்தோடு ஐக்கியமாகி விடுவோம்.
நாம் ஏற்கனவே பிரஹ்ம ஸ்வரூபமாக இருப்பதால்தான் இது சாத்தியமாகிறது.
ந அஸ்ய அப்ரஹ்ம வித்குலே ப4வதி – பிரம்மத்தை அறியாதவர்கள் இவன் பரம்பரையில் யாரும் இருக்கமாட்டார்கள்
தரதி ஶோகம் – சோகத்தை கடக்கின்றான், மானஸ சந்நியாஸம், மனவேதனைகள்
தரதி பாப்மானம் – பாவ-புண்ணியங்களை கடந்து செல்கின்றான்
கு3ஹ க்ரந்தி – மனதிலிருக்கின்ற முடிச்சுக்களை
விமுக்தஹ – அறுக்கப்பட்டு விடுதலை அடைகின்றான்
அம்ருதஹ – மரணமற்ற நிலையை அடைகின்றான்
ஸ யோ ஹ வை தத்பரமஂ ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி –ப்ரஹ்மத்தை அறிந்து அவனை அடைந்து அனுபவிக்கிறான் –
அஸ்யகுல நபவதி -அப்ரஹ்மவித்–ப்ரஹ்மத்தை அறியாதவர்கள் போலே மீண்டும் பிறப்பது இல்லை –
தரதி ஷோகஂ தரதி பாப்மாநஂ குஹாக்ரந்திப்யோ விமுக்தோமரிதோ பவதி–சோகம் பெறுவது இல்லை
கர்மங்கள் வாசனை உடன் கழியப் பெற்றவன் ஆகிறான் -அஞ்ஞான அந்தகார முடிச்சுக்கள் அவிழ்க்கப் பெற்று
பகவத் அமிருதம் அனுபவிக்கப் பெறுகிறான்
——————
ததேததரிசாப்யுக்தஂ , க்ரியாவந்தஃ ஷ்ரோத்ரியா ப்ரஹ்மநிஷ்டாஃ ஸ்வயஂ ஜுஹ்வத ஏகர்ஷி ஷ்ரத்தயந்தஃ.
தேஷாமேவைதாஂ ப்ரஹ்மவித்யாஂ வதேத ஷிரோவ்ரதஂ விதிவத்யைஸ்து சீர்ணம்৷৷3.2.10৷৷
க்ரியாவந்த: ஶ்ரோத்ரியா ப்ரஹ்மநிஷ்டா;
ஸ்வயம் ஜுஹ்வத ஏகர்ஷிம் ஶ்ரத்3த4யந்த: |
தேஷாமேவைதாம் ப்ரஹ்மவித்3யம் வதே3த
ஶிரோவ்ரதம் விதி4வத்3யைஸ்து சீர்ணம் || 10 ||
ததேதத் – கீழ்கண்ட மந்திரம்
அப்3ரூதம் – யாருக்கு சொல்ல வேண்டும்
க்ரியாவந்தஹ – கர்மயோகத்தில் இருப்பவர்கள், தர்மப்படி வாழ்பவர்கள்.
கர்மயோகத்தினால் மனம் தூய்மையடையும், இதனால் மனதிலுள்ள விருப்பு, வெறுப்புக்கள் நீங்கிவிடுகின்றது.
இதன் தொடர்ச்சியாக விவேக, வைராக்கியத்தை அடையச் செய்யும்
ஶ்ரோத்ரியஹ – வேத சாஸ்திரத்தை படித்தவர்கள், சாஸ்திரத்தில் சிரத்தை உடையவர்கள்
பிரஹ்மநிஷ்டா – சகுண பிரம்மத்தில் மனதை நிலைபெற்றிருப்பவர்கள்
ஈஸ்வரனிடம் பக்தியுடையவர்கள், உபாஸனை செய்தவர்கள். இதன் பலனாக சம, தமத்தை அடைந்திருப்பார்கள்
ஏகர்ஷின் ஸ்வயம் ஜுஹ்வத – ஏகர்ஷின் என்ற யாகத்தை செய்தவர்கள்
ஶ்ரத்3த4யந்தஹ – உபநிஷத்தில் உள்ள உபதேசத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும்
இது நேரிடையாக ஞானத்தை கொடுக்கும் கருத்து என்று முழுமையாக நம்பிக்கை வைத்தல்
விதி4வத் சீர்ணம் – சரியாக செய்துள்ளவர்களுக்கு
ஷிரோவிரதம் – இது ஒருவிதமான விரதம்
தேஷாம் ப்ர்ஹ்ம வித்யாம் – அவர்களுக்கு இந்த பிரம்ம வித்யாவை
வதே3த – உபதேசம் செய்ய வேண்டும்.
ததேததரிசாப்யுக்தஂ , க்ரியாவந்தஃ ஷ்ரோத்ரியா ப்ரஹ்மநிஷ்டாஃ–ப்ரஹ்ம நிஷ்டர்கள் தாங்களும் வேத விஹித சத் கர்மாக்களை அனுஷ்ட்டித்து கற்பித்து
ஸ்வயஂ ஜுஹ்வத ஏகர்ஷி ஷ்ரத்தயந்தஃ. -த்ரிவித தியாகங்கள் உடன்-திட விசுவாசத்துடன் -இருப்பவர்களுக்கு மட்டுமே
தேஷாமேவைதாஂ ப்ரஹ்மவித்யாஂ வதேத ஷிரோவ்ரதஂ விதிவத்யைஸ்து சீர்ணம்–ப்ரஹ்ம வித்யையைக் கற்பித்து
வேத விகிதங்களை தலை மேல் தாங்கி இருக்கச் செய்வார்கள் –
——————-
ததேதத்ஸத்யமரிஷிரங்கிராஃ புரோவாச நைததசீர்ணவ்ரதோதீதே. நமஃ பரமறஷிப்யோ நமஃ பரமறஷிப்யஃ৷৷3.2.11৷৷
ததே3தத்ஸத்யம்ஷிருஷிரங்கிரா: புரோவாச நைதத3சீர்ணவ்ரதேSதீ4தே |
நம: பரமக்ரிஷிப்4யோ நம: பரமக்ருஷிப்4ய: || 11 ||
ததே3தத்ஸத்யம் – இதுவரை சொல்லப்பட்ட உபதேசங்கள் யாவும் உண்மை
அங்கிரஸஹ புரா உவாச – அங்கிரஸ் என்ற ரிஷியால் சொல்லப்பட்டது
ந அதீதஹ – தகுதியில்லாதவர்கள் இதைப்படிக்க வேண்டாம்
நமஹ பரம ரிஷிப்4யஹ – இந்த ஞான பரம்பரையில் வந்தவர்களுக்கு நமஸ்காரம் செய்யப்படுகிறது
அங்கிரஸ் இவ்வாறு முன்பு இந்த வித்யையை அருளிச் செய்தார் -விசுவாசத்துடன் இத்தை அப்யஸிக்க வேண்டும்
பூர்வாச்சார்யர்களுக்கு -பூர்வ பரம ரிஷிகளுக்கு பல்லாண்டு –
——————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –