Archive for January, 2017

திருப்பாவை –வங்கக் கடல் கடைந்த –ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் வியாக்யானம் – ஆறாயிரப்படி —

January 17, 2017

காலத்தையும் -அதிகரிக்கிற மனிசரையும் விஷய பூதனாய் நின்று கார்யம் தலைக் கட்டுகிற -கிருஷ்ணனையும் கொண்டாடிக் கொண்டு
சங்கல்ப பூர்வகமாக நோன்பிலே உத்தியோகித்து –
நோன்புக்கு அங்கமாகச் செய்ய வேண்டுவனவும் தவிர வேண்டுவனவும் இன்னவென்று கர்த்தவ்ய அகர்தவ்ய விவேகம் பண்ணி
நாம் நமக்கு இனிதாக நோற்க இதுக்கு அனுமதி பண்ணி ப்ரீதராய் இருக்கிற நாட்டாருக்கு ஆனு ஷங்கிகமாக அபிமத சித்தி யுண்டாம் என்று சொல்லி
த்ருஷ்ட பலன்களுக்கு ஹேது வ்ருஷடியாகையாலே வர்ஷார்த்தமாக தேவதையை அழைத்து நியமித்து -அத்தால் தாங்கள் கொள்ளும் பிரயோஜனமும் சொல்லி –
தாங்கள் உபக்ரமிக்கிற நோன்புக்கு பிரதிபந்தகமான துஷ்கர்மம் இதிலே உபக்ரமிக்கவே வசிக்கும் என்று பூர்ண மநோ ரதைகளாய்ப் புறப்பட்டு
பிராதி கூல்ய நிவ்ருத்தி தொடங்கி பாகவத சகவாசம் ஒழியச் செல்லாத தன்மை யுடையவரான அளவும் செல்ல
நடுவு பட்டார் அடையக் கூட்டிக் கொள்ள வேண்டுகையாலே -அனுபவ ரசத்தில் அபிநவையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்பி
ரசத்தை அறிந்து வைத்தே இவர்கள் பேச்சில் இனிமையாலே வித்யையாய் பார வசியத்தாலே காற்க் கடைக் கொண்டு கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்பி
எல்லாரும் திரண்டு தன் வாசலிலே வர வேண்டும் படி கிருஷ்ணனால் யுண்டான கொண்டாடத்தாலே சால வேண்டப்பட்டு உடையாளாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்பி
குண வித்யையாய் கிடக்கச் செய்தேயும் ரசாந்தரங்கள் செல்லலாம் படியான முறையை யுடையாள் ஒருத்தியை எழுப்பி
கிருஷ்ண அனுபவத்தில் எப்போதும் இச்சை நடக்கும் படி எல்லாரிலும் அவன் நோக்கு உடையாள் ஒருத்தியை எழுப்பி
ஊர் ஒரு தட்டும் தான் ஒரு தட்டுமாம் படியான ஆபி ஜாத்யம் யுடையாள் ஒருத்தியை எழுப்பி
கிருஷ்ணனைப் பிரியாமையால் யுண்டான சம்பத்தை யுடையான் ஒருவனோடு சம்பந்தம் யுடையாள் ஒருத்தியை எழுப்பி
தன் அவயவ சோபையை அனுசந்தித்துக் கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்பி
தான் எல்லாரையும் எழுப்புவதாக சொல்லி வைத்து ப்ரதிஞ்ஜையைப் பண்ணி மறந்து கலங்கிக் கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்பி
பின்பு எல்லாருடையவும் திரள் காண வேண்டி இருப்பாள் ஒருத்தியை எழுப்பி
எல்லாரும் திரண்டு திருவாசல் காக்கும் முதலிய எழுப்பி
ஸ்ரீ நந்த கோபர் யசோதை பிராட்டி நம்பி மூத்தபிரான் இவர்களை சொல்லும் க்ரமங்கள் குறையாமல் சொல்லி எழுப்பி
நப்பின்னைப் பிராட்டி யுடைய செருக்கையும் லீலா ரசங்களையும் -போக வைபவத்தையும் -ஸுகுமார்யத்தையும் ரூபா ஸுந்தர்யத்தையும்
பர்த்ரு வால்லப்பயத்தையும் புருஷகார வைபவத்தையும் சொல்லி எழுப்பி
கிருஷ்ணனுடைய ஆபி ஜாத்யாதி குணங்களைச் சொல்லிக் கொண்டு தாங்கள் குண ஜிதைகளாய் வந்த படியையும்
பஃன அபிமானிகளாய் கடாக்ஷ ஏக தாரகைகளாய் வந்த பொடியையும் அறிவித்து
எங்களுக்காகப் புறப்பட்டு ஓர் இருப்பு இருக்க வேணும் என்று புறப்பட்டு இருந்த அனந்தரம்
அவ்விருப்புக்கு மங்களா சாசனம் பண்ணி போந்து என் என்று அவன் கேட்க
உன் பக்கலிலே அர்த்திகளாய் வந்தோம் என்ன -அபேக்ஷிதம் ஏது என்ன
நோன்புக்கு உபகரணங்களை வேண்டிக் கொண்டு -நோற்றாள் பெறும் சம்மானங்களையும் அபேக்ஷித்து
தங்கள் நினைவில் உள்ளவையும் பலிக்கும் படி தங்கள் சிறுமையையும் அவன் பெருமையையும் அவனோடு உள்ள உறவையும் சொல்லிக் கொண்டு
தப்புகளுக்கு பொறை கொண்டு தங்கள் நினைவையும் இன்னது என்று க்ரமப்பட வெளியிட்டு அபேக்ஷிக்க
அவனும் அப்படியே செய்கிறோம் என்று தலை குலுக்கப் பெற்று க்ருதார்த்தைகளாய்விட்ட க்ரமத்தை
பிற்பட்ட காலத்திலே அந்த பாவ விருத்தியோடே வடபெரும் கோயிலுடையானை அபேக்ஷித்து சமகால ரசமாக நடத்தின ஆண்டாள் –
நம்முடைய பாவ விருத்தி இல்லையேயாகிலும்-இப்பிரபந்தத்தினுடைய பாட தாரணத்தாலே நாம் பெற்ற பேறு பெறுவார்கள் என்று நிகமிக்கிறாள்-
சம காலத்தில் அனுஷ்ட்டித்தாரோபாதியும் அனந்தர காலத்தில் அநு கரித்தாளோபாதியும்-பிற்பட்ட காலத்தில் கற்றார்க்கும் பலிக்கும் என்கை –
கன்று இழந்த தலை நாகு-தோல் கன்றை மடுக்க-அதுக்கு இயங்குமா போலே -ஸ்நேஹிகள் சொன்ன இப்பாசுரம் கொண்டு புகவே
அது இல்லாத நமக்கும் பலிக்கும் என்று பட்டர்
ஸ்ரீ கோபிமாருடைய ஆசிரயணீய விஷயம் கிருஷ்ணனாய் -அந்த ஆச்ரயணம் பல பர்யந்தமாவது பிராட்டி சம்பந்தத்தாலேயாய்
அவள் தன்னைப் பெறுகைக்கு அவன் வியாபாரித்த வியாபாரம் அம்ருத மதனம் ஆகையால் அத்தைச் சொல்லுகிறார்கள் –

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட வாற்றை யணி புதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்-

வங்கக் கடல் கடைந்த
தேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு பெரிய பிராட்டியார் ஆகிற பெண்ணமுதை பெற்று அப்போது உகைப்போடே இருந்தால் போலே
ஊரார் காரியத்தை வியாஜ்யமாக்கி-பெண்களை பெற்ற ஹர்ஷத்தோடே கிருஷ்ணன் இருக்கிற இருப்பைக் கண்டவாறே
அன்யார்த்தமான செயலில் அபிமதம் இவனுக்கு இன்றாக வருகிறதோ என்கிறார்கள் –
வங்கக் கடல் கடைந்த
பாற் கடலைக் கடைந்து பிராட்டியைப் பெற்றால் போலே இங்குத் தயிர் கடைய என்று ஒரு வியாஜ்யமாய் கன்னிகைகளை பெறக் கடவனாய் இ றே இருப்பது
ஒல்லை நானும் கடைவன் என்று திரு மஞ்சனம் செய்து திவ்ய மால்யாம்பரதரையாய் பூஷண பூஷிதையாய்
சகல தேவதைகளும் பார்த்துக் கொண்டு நிற்க மார்பிலே சென்று அணைந்த போதைச் செவ்வி மார்கழி நீராடி
ஆடை யுடுத்து சம்மா நிதைகளாய் -பல் கலனும் அணிந்து -பெண்கள் கூடி இருந்த போது பிரகாசிக்கும் படி இருக்கையாலே அத்தைச் சொல்லுகிறார்கள்
வங்கக் கடல் கடைந்த
விண்ணவர் அமுதுண்ண என்று ப்ரயோஜனாந்தர பரருக்கும் அகப்பட உடம்பு நோவக் கடல் கடைந்து அபேக்ஷித சம்விதானம்
பண்ணும் படி சீலவானனான கிருஷ்ணன் அநந்ய பிரயோஜனம் கார்யம் செய்யச் சொல்ல வேணுமோ
அமரர்க்கு அமுதீந்த்த ஆயர் கொழுந்தை -என்கிற படியே கிருஷ்ணன் இ றே தேவர்களுக்கு அமுதம் இட்டவன் –
ஷீராப்தி நாதன் கடையில் கடல் தான் அம்ருதம் சுரவாதே -கண்ணன் கையால் மலக்குண்கையாலே இ றே சுரந்தது
வங்கக் கடல் கடைந்த
கீழில் அமிருதம் எல்லாம் மேலே கிளறும்படி படு திரை விசும்பிடைப் படரும் படி கடையா நிற்க -மரக்கலம் அசலாத படி கடைந்த நேர்ப்பம் சொல்லுகிறது
வங்கக் கடல்
கடைந்த போது சுழல மலை திரிக்கையாலே கடல் அடங்க லும் மரக்கலமாய் நின்ற படி
வங்கம் விட்டுலவும் கடல் இ றே ஷீராப்தி -வைகுந்தன் என்பதோர் தோணி சேர்ந்த இடம் என்று ஆழ் கடலைப் பேணாதே கடைந்தான்
பாற் கடலில் பையத் துயின்ற -என்று ஷீரார்ணவ சயனத்தைத் தொடங்கி அதனுடைய மதனத்தைச் சொல்லி நிகமிக்கிறார்கள் -அதில் கிடந்து முன் கடைந்த –
கடல் கடைந்த மாதவனை
சாதன அனுஷ்டானம் பண்ணினால் சாத்திய சித்தி யுண்டாம் இ றே -அமுதம் கொண்ட பெருமான் திரு மார்பன் என்று –
அம்ருத லாபம் என்று வியாஜ்யமாய் -அமுதில் வரும் பெண்ணமுதை இ றே கிருஷ்ணன் பெற்றது –
மாதவனை
ஆசிரயணீய வஸ்து லஷ்மீ ஸஹிதனுமாய் ஆச்ரயணம் தானும் லஷ்மீ சனாதனமுமாய் இ றே இருப்பது –
ஆஸ்ரிதர் குற்றம் பொறுப்பித்து அபேக்ஷிதங்களை செய்விப்பார் அருகே யுண்டாக வேணும் இ றே
மாதாவின் முன்பு பிரஜைகள் செய்த குற்றம் பிதாவுக்கு தோற்றதால் போலே பிராட்டி சந்நிதி யுண்டானால் சேதனருடைய அபராதங்கள் அவனுக்குத் தோற்றாது என்கை
பிராட்டி புருஷகாரமாகப் பற்றினவர்களுக்கு அரியன செய்து அபேக்ஷிதங்களை தலைக் கட்டிக் கொடுக்கும் என்பதற்காக -கடல் கடைந்த மாதவனை -என்கிறது –
கேசவனை
வாசம் செய் பூம் குழலாளான பெரிய பிராட்டியார் தான் ஆசைப் படும் படியான ப்ரஸஸ்தமான மயிர் முடி கட்டி நெகிழ்ந்து அலையா நின்றாய்த்து கடல் கடைந்தது-
கடையய் புக்கார்க்கு எல்லாம் குழல் அலையும் இ றே -வாச நாறும் குழல் ஆய்ச்சியர் –வண்டமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ -என்று
அவனோடு பிறரோடு வாசி இல்லையே குழல் அலைய -ஆமையான கேசவா -என்று சுமந்து நிற்கிற ஆமைக்கு உட்பட
குழல் அலையா நின்றால் கடைகிறவனுக்கு சொல்ல வேண்டா வி றே –
கேசவனை
பிராட்டியோட்டை கலவிக்கு விரோதிகளை -பெண்களொட்டை கலவிக்கு விரோதியான கேசியைக் கொன்றால் போலே போக்க வல்லவன் என்னவுமாம்
மா மாயன் மாதவன் என்றும் -கேசவனைப் பாடவும் -என்றும் -மா வாய் பிளந்தானை என்றும் சொன்னவற்றோடே தலைக் கட்ட வேணும் இ றே
கேசவனை
அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ண என்கிறபடியே ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குக் கோது கொடுத்து தன் வைபவம் தோற்ற நின்ற
நிலையைச் சொல்லிற்று ஆகவுமாம் -த்வயத்தில் பூர்வ கண்டத்தில் படியே ஆசிரயணீய வஸ்துவைச் சொல்கிறது –
மாதவனை
என்று ஸ்ரீ மத் சப்தார்த்தமும்-கடல் கடைந்த என்கிறதாலே ப்ரயோஜனாந்த பரருடைய தோஷம் பாராமல் வியாபரித்த வாத்சல்யமும் –
அண்ணல் செய்து -என்று ஸ்திரமாம் படி பண்ணப் பட்ட ஸ்வாமித்வமும் அசுரர்களும் தானுமாய்-என்னும் படி நின்ற ஸுசீல்யமும் –
பெண்ணாகி அமுதூட்டின ஸுலப்யமும்-ஆழ் கடலைக் கடைந்த துப்பன்-என்னும் படி வேண்டும் உப கரணங்களைத் தேடி வியாபாரித்த
ஞான சக்திகளும் தோற்றுகையாலே நாராயண சப்தார்த்தம் ஸூ சிதம்
கேசவனை என்று பிரசஸ்த கேசவத்தாலே விக்ரஹ யோகத்தை நினைத்து -சரண சப்தத்தின் அர்த்தம் சொல்லிற்று ஆகிறது
சரண க்ரஹணத்தோடு கேச க்ரஹணத்தோடு வாசி இல்லையே பிரணயிநி யாகையாலே –
கேசவனைக் கால் பிடிப்பாள் -என்று இ றே நிரூபகம்-பரமனைப் பாடி என்று தொடங்கி கேசவனை என்று தலைக் கட்டுகையாலே
பாதாதி கேசாந்தமாக கிருஷ்ணனை அனுபவித்தாள் யாய்த்து
யசோதை முன் சொன்ன திருப் பாத கேசத்தை என்று இடைச்சிகள் அனுபவம் பெரியாழ்வாருக்கு உண்டாகையாலே அது இவளுக்கு தாய பிராப்தம் இ றே –

இனி மேல் ஆஸ்ரயித்த அதிகாரிகள் வை லக்ஷண்யம் சொல்லுகிறது –
திங்கள் திருமுகத்து –
கிருஷ்ண சம்ச்லேஷத்தாலே குளிர்ந்து மலர்ந்து செவ்வி பெற்ற முகத்தை யுடையரானார்கள்
கதிர் மதியம் போல் முகம் -என்று பிரதாபமும் தண்ணளியும் கலந்த படியால் அநபிபவ நீயத்வம் யுண்டு அவன் முகத்துக்கு –
இவர்கள் முகத்திலே குளிர்த்தியையே அமைகையாலே அனுகூலமேயேயாய் இருக்கும்
வங்கக் கடல் கடைந்த என்ற கடைந்த அமுதில் பிறந்தவள் முகத்தோடு சாதர்ம்யம் பெற்றாய்த்து இவர்கள் முகம் இருப்பது –
அவள் -துவளும் வெண் மதி போல் திரு முகத்து அரிவை-இவர்கள் மதி முக மடந்தையர் -திங்கள் திரு முகம்
சகல கலா பூர்த்தி இவர்கள் முகத்தில் விழித்த போதே தோற்றுமாய்த்து-
ப்ரஹ்ம விதைவ ஸும்ய தே முகம் பாதி -குழையும் வாண் மிகவும் சொல்லக் கடவது இ றே -முகத்தில் ஆனந்த பூர்த்தி கண்டவர்கள்
இவர்கள் எங்குத்தை மனிச்சர் என்று சந்தேகிக்கும் படி
உபய விபூதி வ்யாவ்ருத்தி தோற்ற இருப்பார்கள் இ றே –
வெஞ்சிலை வண் முகத்தீர்
திங்கள் திரு முகத்து
இவர்கள் முகத்தில் விழித்தவாறே அஹம் மநோ த்பவமான -அழல் ஆறும்படி இருக்கை
திரு முகம்
உபமானமான சந்த்ர மண்டலம் உபமேயமான முகத்துக்கு நேர் நிற்க மாட்டாமையாலே
திரு முகம்
என்கிறது -முகக் கமலச் சோதி தன்னால் -திங்கள் முகம் பனி படைக்கும் இ றே
சேயிழையார்
ஸ்வா பாவிகமான அழகுக்கு மேலே ஆபரணங்களால் வந்த அழகைச் சொல்லுகிறது –
சேயிழையார்
சூடகமே –பாடகமே –என்று தாங்கள் பிரார்த்தித்த படியே கிருஷ்ணனும் நப்பின்னை பிராட்டியும் கூட இருந்து பூட்டின ஆபரணத்தை யுடையவர்கள் –
சேயிழையார்
ஸ்வரூப குணங்களாலும் ப்ரஹ்ம அலங்காரத்தாலும் குறைவற்றவர்கள் –
போதுவீர் போதுமினோ என்ற போதே நேரிழையீர் ஆனார்கள் -நீராடின அனந்தரம் -திருவருள் மூழ்கின படியால்
புனை இழைகள் அணிந்து -சேயிழையார் ஆனார்கள் –
சென்று
ஆச்ரயண விஷயத்தில் ருசி கார்யமான த்வரையைச் சொல்கிறது –
சென்று
இவ் ஓப்பனையோடு நாமே போவோம் என்று அவன் வரவைப் பார்த்து இருக்கும் அளவுள்ள வாய்த்து த்வரை
கிருஷ்ண விஷயீ கார யோக்யதையாலும் விஷயீ காரத்தாலும் பிறந்த புகர் நிறம் பெறும் படி சென்று
இறைஞ்சி
தூ மலர்கள் தூய்த் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து -அடி போற்றி என்கிறபடியே போற்றிப் புகழ்ந்து –
சென்று சேவித்து கும்பிடுகை தொடக்கமான செய்வது எல்லாம் செய்து –

அங்கு
ஆசிரயணீய ஸ்தலம் இருக்கிறபடி
அங்கு
திருவாய்ப்பாடியிலே ஸ்ரீ நந்தகோபருடைய கோயிலிலே நப்பின்னை பிராட்டி கட்டிலிலே திவ்ய ஆஸ்தானத்திலே திவ்ய சிம்ஹாசனத்திலே இருந்த இருப்பில்
அப்பறை
நாட்டுக்குச் சொன்ன பறையைக் கழித்து -எற்றைக்கும் என்ற பறையை -அப்பரிமாற்றத்திலே நின்று அவனை ச்ரவஸ்வமும் கொண்ட படியை
கொண்ட
நீ தாராய் என்கிறபடியே அவன் தரப் பெற்ற படி
ஆற்றை –
கொண்ட பிரகாரத்தை -தங்கள் வெறுமையையும் அவன் பூர்த்தியையும் பந்தத்தையும் முன்னிட்டுத் தப்புக்கு பொறை கொண்டு
ருசியையும் த்வரையையும் காட்டி வளைப்பிட்டு அடிமையை அபேக்ஷித்துக் கொண்ட பிரகாரத்தை -ஆசிரயணீய பலமும் பல சித்தி க்ரமும் சொன்ன படி –
யணி புதுவை-
கிருஷ்ணனுக்கு ஸ்ரீ நந்த கோபர் சம்பந்தம் ஏற்றமாய் அவர் வர்த்திக்கிற வூர் என்று திருவாயர் பாடியை சீர் மல்கும் ஆய்ப்பாடி என்று ஸ்லாகிக்குமா போலே
தனக்கு பெரியாழ்வார் சம்பந்தம் உத்தேசியமாய் அவர் அபிமானித்த தேசம் என்று ஸ்ரீ வில்லி புத்தூரைக் கொண்டாடுகிறார்கள் –
யணி புதுவை
நந்தகோபனுடைய கோயிலிலே கிருஷ்ணன் மாத்திரமே இ றே -இவ்வூரில் வட பெரும் கோயில் யுடையானும் –
அணி புதுவை
சம்சாரத்துக்கு ஆபரணமான ஸ்ரீ வில்லி புத்தூர் -பிராட்டிக்கு ஸ்ரீ மிதிலையும் திரு அயோத்யையும் போலவும்
நப்பின்னைப் பிராட்டிக்கு கும்ப குலமும் திருவாய்ப்பாடியும் போலே அன்றிக்கே ஆண்டாளுக்கு பிறவியும் புக்க இடமும்
ஓரூரிலே யான ஏற்றம் இவ்வூருக்கே இ றே உள்ளது -பொன்னும் முத்தும் மாணிக்கமும் இட்டு செய்த ஆபரணம் போலே
நாய்ச்சிமாரும் பெரிய ஆழ்வாரும் வட பெரும் கோயில் யுடையானும் ஆகிற அலங்காரம் உள்ள தேசம் இ றே
பைங்கமலத் தண் தெரியல்
ப்ராஹ்மணர்க்கு தாமரையை தாராக இ றே சொல்வது -திருவில் பொலி மறை வாணன் என்னும் படி
ப்ராஹ்மண அக்ரேஸரான பெரியாழ்வாருக்கு தாமரை தாராகக் கடவது இ றே
பைங்கமலத் தண் தெரியல்
பசுத்த கமலத்தினுடைய குளிர்ந்த மாலை -தண்ணம் துழாய் அழல் போல் -என்று வட பெரும் கோயில் யுடையானுடைய மாலை போலே
கொதித்துக் கிடவாதே பெரியாழ்வார் கழுத்தில் மாலை -பிரித்தவன் மாலை போல் அன்றே சேர்ப்பார் மாலை –

பட்டர் பிரான்
ப்ராஹ்மணர்க்கு உபகாரகர் ஆனவர் -வேதப் பயன் கொள்ள வல்லவர் ஆகையால் தாத்பர் யார்த்தத்தை சர்வர்க்கும் உபகரிக்குமவர்
பட்டர்களுக்கு வித்யா பிரதானம் பண்ணின உபகாரகர் -மறை நான்கு முன்பு ஓதின பட்டனுக்கு கன்யகா தானம் பண்ணின உபகாரகர்
பட்டர் பிரான் கோதை
பாராசர்யனான வியாசன் என்று ஆப்திக்குச் சொன்னால் போலே பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு இவளுக்கு உத்கர்ஷ ஹேது
ஆற்றப் படைத்தான் மகனே -என்று இ றே ப்ரதிபாத்யனுக்கு ஏற்றம் -ஆழ்வார் சம்பந்தம் இவளுக்கு ஏற்றம்
விட்டு சித்தர் தங்கள் தேவரை -என்று இவருக்கு தேவராய் வட பெரும் கோயில் யுடையான் நிறம் பெற்றான் –
இவர் மகளாய் ஆண்டாள் நிறம் பெற்றாள்-ஒரு மகள் தன்னை யுடையேன் என்று இவள் சம்பந்தம் இ றே தமக்கு உதகர்ஷமாகச் சொல்லுவது –
சொன்ன
ஆண்டாள் அநுகாரத்தாலே அனுபவித்தது புற வெள்ளம் விட்டபடி
கோதை சொன்ன
ஸ்ரீ கோபிமார் தசையைப் பிராபித்து-அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன -என்று பும்ஸத்வம் மேலிடும்படியான குற்றம் அற்று இருக்கை
சொன்ன
சுருதி சத சிரஸ் சுத்தமான அர்த்தம் சர்வ உஜ்ஜீவியமாம் படி சொன்ன
மேகம் பெருகின சமுத்ராம்பு போலே இவர் வாயன திரிந்தன -என்கிறபடியே இவளுடைய வாக்கின் ஸ்பர்சத்தாலே காணும் அதிலும் அவா பெற்றது
சொன்ன
தான் தோன்றியான வேதம் போல் அல்ல -பிறப்பால் யுண்டான ஏற்றமும் உண்டு -ஷீராப்தி நாதனைப் பற்ற
ஒருத்தி மகனாய் பிறந்தவனுக்கு இ றே வரும் ஏற்றம் உள்ளது –
சங்கத் தமிழ் மாலை
சங்கம் இருப்பார் போல் வந்து -என்று பஞ்ச லக்ஷம் குடியிலே பெண்கள் திரளாக அனுபவித்த அனுபவத்துக்கு ஆண்டாளும்
தன் திறத்தில் பெண்களுக்குத் திரள இருந்து சொன்ன பாசுரம் ஆகையால் -குழாங்களாய் -என்னும் படி திரள் திரளாக
அனுபவிக்க வேண்டும் பிரபந்தம் -சங்க முகத் தமிழ் மாலை -என்னக் கடவது இ றே –
தமிழ் மாலை –
யாவர்க்கும் சிந்தைக்கும்-கோசாரம் அல்லாத வஸ்து -பெற்றம் மேய்த்து உண்ணும் -இடைச் சேரியில் வந்து பிறந்து எளியனால் போலேயும்
உத்தம வர்ணத்தில் பிறப்புடைய ஆண்டாள் ஆயர் சிறுமியர் திரளில் ஒருத்தியாய் அந்வயித்தால் போலேயும்
அருமறையின் பொருளான உபநிஷத் தமிழாய் வந்து சர்வ ஸூலபமான படி –
பிரபந்தம் செய்தவளோடு ப்ரதிபாத்யனோடு ப்ரபந்தத்தோடு வாசி அறத் தாழ நின்று நிறம் பெற்ற படி –
மாலை
பாவனமான அளவு அன்றிக்கே போக போக்யமாய் தலையால் சுமக்க வேண்டும் படியாய் ஸீரோ பூஷணமுமாய் இருக்கை –
கோதை சொன்ன மாலை –
மாலைக் கட்டின மாலை -அடுத்த பத்தியோடு இரண்டு தலையும் தாள் பூவும் நடுவே நாயகமுமாய் தொடுப்புண்ட மாலை
கோதை சொன்ன மாலை
செவிப் பூவே என்று இவள் செவிக்கு ஒரு பூ இ றே அவன் கொடுத்தது -சிலாக்யமான மாலை கொடுத்தால் அவள்
ஸ்ரஜி நிகளிதம்-என்னும் படி குழலில் மல்லிகை மாலையாலே விலங்கிட்டு அவனை ஓதுவித்த மாலை இருக்கிற படி

முப்பதும்
திரு மந்த்ரமும் திருப் பல்லாண்டும் போலே சுருங்கி இருத்தல் -வேதமும் திருவாய் மொழியும் போலே விரிந்து இருத்தல் செய்யாமையாலே
வேண்டுமவை எல்லாம் மிகுதிக் குறை யுண்டாய் இருக்கை யன்றிக்கே ஒழிகை
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று சங்க்ரஹேண சொன்ன ஸ்வரூப உபாய பலன்களை ஓன்று பத்தாக சொன்ன அத்தனை இ றே
முப்பதும் தப்பாமே
இதிலே ஒரு பாட்டும் நழுவாமே -விலை இல்லாத ரத்னங்களாலே செய்த ஏகாவலியிலே ஒரு ரத்னம் குறைந்தாலும் நெடும் பாடாய் இருக்கும் இ றே
அப்படியே ஒரு பாட்டு குறையிலும் பேர் இழவாய் இருக்கும் –
பகவத் ஆபி முக்கியம் பிறக்கிற கால வைலக்ஷண்யம் அறியாது இருத்தல் –
தியாஜ்ய உபாதேயங்களில் நழுவ நிற்றல்
பர சம்ருத்ய ஏக பிரயோஜனம் இன்றியிலே ஒழி தல்
தேவதைகளையும் நியமிக்கும் படியான ஞானிகள் வைபவம் அறியாது ஒழிதல்
ஆச்ரயண காலத்திலே ஷீண பாபராம் ஏற்றம் அறிதல் செய்யாது ஒழிய ஒண்ணாது
பகவத் விஷயத்தில் முதலடி இட்டாரோடு
அவகாஹித்தே சிறிது குலைய நிற்பாரோடு
ஸ்லாகாப்ரதானராய் இருப்பாரோடு
த்யாஜ்யத்தில் அல்ப ஸ்பர்சம் நடையாடுவாரோடு
அனுபவமே நிரந்தரமாக நடப்பாரோடு
பாகவத குலத்திலே அந்வயித்தாரோடு
கைங்கர்ய நிஷ்டரோடே சம்பந்தம் உடையாரோடு
ஸ்வரூப ஞானம் யுடையரோடு
வை லக்ஷண்ய அனுசந்தானம் பண்ணி நிர்வ்யாபாரராய் இருப்பாரோடு
பக்தியால் கலங்கி நடப்பாரோடு
பாகவத பாரதந்தர்ய ஏக நிஷ்டரோடு
வாசி அற உத்தேச்யதா புத்தி குலையாமல் இருக்க வேணும் என்று அறிய வேணும் –
பகவத் சந்நிதியில் செல்லும் க்ரமங்கள் அறிய வேணும்
புருஷகாரத்தினுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களும் காரியமும் அறிய வேணும்
பகவத் குண வித்தராக வேணும்
கடாக்ஷ ஏக தாரகராம் படி பஃன அபிமானராக வேணும்
ஆபி முக்கிய பிரார்த்தனம் பண்ண வேணும்
மங்களா சாசன பரராக வேணும்
அர்த்தித்தவம் தோற்றப் பல் காட்ட வேணும்
முமுஷூ தசையில் அபேக்ஷிதம் -முக்த தசையில் போகம் இவற்றில் வாஞ்சை நடக்க வேணும்
அதுக்குத் தாங்கள் உபாயாந்தர ஸூன்யத்தையை முன்னிட்டு வேணும்
நித்ய கைங்கர்யத்தில் நித்ய அபேக்ஷை நடக்க வேணும்
இத்தசை விளைந்தார் பாசுரமே போகமாக வேணும் –
ஆகையால் இம்முப்பத்து பாட்டிலும் நழுவ விடலாவது ஒரு பாட்டு இல்லை –

இங்கு
பிற்பட்ட காலத்திலே இப்பரிமாற்றத்துக்கு மெட்டு மடையான இந்நிலத்திலே
இப்பரிசு
இப்பிரகாரம் தப்பாமல்
இப்பரிசு உரைப்பார்
இப்பாவ விருத்தியோடே இப்பாசுரங்களை சொல்லுமவர்கள் –
திருவாய்ப்பாடியிலே பெண்களுக்கு சமகாலம் ஆகையால் சாஷாத்காரம் யுண்டாய்த்து
-ஆண்டாள் அநுகார பிரகாரத்தாலே பெற்றாள் -இவர்களுக்கு யுக்தி மாத்திரமே அமையும் –
இவர்கள் அளவு பாராதே பண்டு பாடினவர்களையும் இச் சொல் வழியாலே நினைத்து கார்யம் செய்யும் விஷயத்தைச் சொல்லுகிறது மேல் –
ஈரிரண்டு மால் வரைத் தோள்-
பெண்களை அணைக்கப் புக்க பின்பு கிருஷ்ணனுக்கு திருத் தோள்கள் பணைத்த படி –
வேய் இரும் தடம் தோளினாரோடு-அணைந்த தோள்கள் இ றே
ஈரிரண்டு
உகவாதாற்கு இ றே தோள் இரண்டாய்த் தோற்றுவது-ஆசைப்பட்ட பெண்களுக்கு நாலாயத் தோற்றும் இ றே
-வங்கக் கடல் கடைந்த தோள்கள் நான்கையும் கண்டிடப் பெற்றார்கள் –
மால் வரைத் தோள்
மதுரக் கொழும் சாறு கொண்ட சுந்தரத் தோளாய் இராதே காத்தூட்ட வல்ல திண்மையைச் சொல்கிறது
மால் வரை
நீண்ட மலைகளும் -என்னும் படி இ றே இருப்பது பெரிய பிராட்டியாருக்கும் கோபிமார்க்கும் க்ரீடாஸைலமான தோள்கள்
செங்கண் திரு முகத்து
பெண்களைக் கண்ட பின்பு அலப்யலாபத்தாலே திருக் கண்களும் செவ்வி பெற்று திரு முகமும் குளிர்ந்த படி
இவர்களை பிரிந்த போது இ றே ஜல ஷயத்தில் பத்மம் போலே முகமும் விழியும் உறாவுவது
செங்கண் திரு முகம்
கண்ணன் கோள் இழை வாண் முகம் -அதிலே நீரார் கமலம் போல் செங்கண்
தோழிமார் பாரி கோள் என்று ஒருவருக்கு ஒருவர் காட்டி அனுபவித்த கடாக்ஷமும் முகமும்
செங்கண்
கதிர் மதியம் போல் முகத்தான் -பங்கயக் கண்ணானை -செங்கண் சிறுச் சிறிதே -அங்கண் இரண்டும் கொண்டு என்று
முடிய இம்முகமும் கடாக்ஷமும் இ றே இவர்கள் நெஞ்சிலே கிடந்தது –
திங்கள் திருமுகம்
என்று ஸ்ரீ கோபிமார் முகத்தையும் அவர்கட்க்கு அனுபாவ்யனானவன் முகத்தையும் ஒரு முகப்பட அனுபவிக்கிறார்கள்
இச் செங்கண் திருமுகம் யுடையவன் தான் ஆர் என்னில்
செல்வத் திருமாலால்
என்கிறார்கள் -கண்ணன் திருமால் திரு முகம் இ றே இது
செல்வத் திருமாலால்
உபய விபூதி ஐஸ்வர்யத்தை யுடைய ஸ்ரீ யபதியாலே-
செல்வத் திருமாலால்
திருத் தக்க செல்வமும் -என்றபடி செல்வத்துக்கு தகுதியானவள்
திருமால் –செல்வம்
திருவுக்கும் திருவாகிய –செல்வு -செல்வச் சிறுமியரைப் பெற்ற பின்பு சிறந்தது
இங்கு உத்தர வாக்கியத்தில் ஸ்ரீ மத் சப்தார்த்தம் சொல்லுகிறது
ரகஸ்ய த்வயத்திலும் மறைந்து கிடந்த லஷ்மீ சம்பந்தம் வாக்ய த்வயத்தாலே வெளியாகிறது –
இப்பாட்டில் உபக்ரமத்திலும் முடிவிலும் பிராட்டி சம்பந்தத்தைச் சொல்லுகையாலே த்வயத்தில் சொல்லுகிற படியை இங்குச் சொல்லிற்று யாய்த்து –
எங்கும்
த்ருஷ்ட அத்ருஷ்டங்களிலும் -இங்கு இருக்கும் நாளும் பரம பதத்தில் போனாலும்
திருமாலால் எங்கும்
இங்கும் அங்கும் திருமால் என்று இருக்கை இ றே அடுப்பது
திருவருள் பெற்று
இப்பிரபந்தம் கற்றவர்கள் இருந்த இடத்திலே தானும் பிராட்டியுமாய் நித்ய சந்நிஹிதமாம் படி ப்ரஸாதத்தைப் பெற்று
திருவருள் பெற்று
திருமாலால் அருளப் பட்ட –திரு மா மகளால் அருள் மாரி-என்று இவளுடைய அருள் பெருக்கை இ றே உத்தேச்யம் –
நின் திருவருளும் பங்கயத்தாள் திரு வருளும் கொண்டு
திருமால் -திருவருள் பெற்று
நிஸ் சம்சயம் சம்பத்ச்யதே -என்று இவர்களை வாழ்த்தி கடாக்ஷித்தது பலித்த படி பாராய் -என்று பெரிய பிராட்டியார் திருக் கையில் காட்டிக் கொடுக்க
பூ வளரும் திரு மகளால் அருள் பெற்று -என்கிறபடியே அவன் அடியாக இவள் தன்னுடைய அருளை பெற்று
உபாய நிஷ்டையும் இவளாலே -ப்ராப்ய விருத்தியும் இவளால் -விரோதி நிவ்ருத்தியும் பல பிராப்தியும் அவனாலே
இன்புறுவர்
ஆனந்த நிர்ப்பரராவார்
எங்கும் இன்புறுவர்
இங்கு இருக்கும் நாள் சம்சாரிகளில் வியாவருத்தராய்-பிரபந்தத்தினுடையவும் -ப்ரதிபாத்யனுடையவும் -ஆண்டாளுடையவும்
சீர்மையையும் சீலத்தையும் பாவ விருத்தியையும் அனுசந்தித்து இனியராவார்கள்
அங்குப் போனால் நிரந்தர சம்ச்லேஷத்தாலே -மிக வெல்லை நிகழ்ந்தனம் -என்னும் படி பரம ஆனந்தத்தில் அந்வயிப்பார்கள்
திருமாலால் -இன்புறுவர்
இன்பம் பயக்க வி றே அவர்கள் தான் இருப்பது -அந்யோன்ய அனுபவ ஆனந்தம் போல் அன்றே மிதுன அனுபவ ஆனந்தம்
அடியேனுக்கு இன்பாவாய் பொன் பாவை கேள்வா -எப்படி இன்புறுவர்கள் என்னில்
எம்பாவாய்-இன்புறுவர்
எங்கள் சந்தஸாலே இன்புறுவர் -நாங்கள் யாதொருபடி இன்புற்றோம் அப்படி இன்புறுவர்கள் –
மாதவனை –சேயிழையார் –சென்று இறைஞ்சி -பறை கொண்டவாற்றை –கோதை சொன்ன -தமிழ் மாலை -உரைப்பார் -எம்பாவாய் –இன்புறுவர்
பெரிய பிராட்டியார் இன்புற்றால் போலே இன்புற்றார் ஆவார்கள்
ஸ்ரீ கோபிமார் பாவாய் இன்புற்றோம் நாங்கள் –
எங்கள் சொல்லை யுரைப்பார் எங்கள் பாவாய் -இன்புறுவார்கள்
சமகாலத்தில் உள்ளாரை -எம்பாவாய் -நீராடப் போதுவீர் போதுமினோ -என்று கூட்டிக் கொண்டார்கள் –
பிற்பாடார்க்கும் எம்பாவாய் பிரபந்த முகத்தால் எம்பாவாய் இன்புறுவர் என்று தலைக் கட்டுகிறார்கள் –

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பாவை –சிற்றம் சிறுகாலே வந்து –ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் வியாக்யானம் – ஆறாயிரப்படி —

January 17, 2017

நமக்கே பறை தருவான் என்று சங்க்ரஹேண முதல் சொன்ன ப்ராப்ய பிராப்பகங்கள் இரண்டையும் இந்த இரண்டு பட்டாலும் விவரிக்கிறார்களாய் –
பலம் தருகிற பிராபகத்தை நிர்ணயித்து சுவீகரித்தார்கள் கீழில் பட்டாலே -அதில் பறை என்று சொன்ன ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து பிரார்த்திக்கிறார்கள் -இப்பாட்டில்
பறை என்று ப்ராப்யத்தை முற்படச் சொல்லி தருவான் என்று கொண்டு சாதன ரூபத்தை அனந்தரம் சொல்லிற்று ப்ராப்ய ருசி அடியாக
ப்ராபக அன்வேஷணம் பண்ண வேண்டுகையாலே –
அவ்விடத்தில் ப்ராப்ய சித்தியில் ப்ராபக சுவீகார சாபேஷத்தை யுண்டாகையாலே உபய சுவீகாரம் பண்ணி பல பிரார்த்தனம் பண்ணுகிறது –
இங்கே நமக்கே என்கிற அதிகார ஸ்வரூபம் இரண்டு பட்டாலும் விசதமாகிறதுஅநந்ய போக்யத்வமும் -அநந்ய உபாயத்வமும் -அநந்யார்ஹத்வமும் -இ றே ஸ்வரூபம்
செல்வச் சிறுமீர்காள் -வையத்து வாழ்வீர்காள் நாமும் -நாங்கள் நம் பாவைக்கு -நாங்களும் மார்கழி நீராட -எம்மை நீராட்டு -யாம் வந்தோம் -யாம் பெறு ஸம்மானம்
புண்ணியம் நாமுடையோம் -நாங்கள் என்பது எங்களுடையது என்பதாய் பாட்டுத் தோறும் தங்களை உறைத்து காட்டிற்று
ஸ்வரூபத்திலும் உபாயத்திலும் பலத்திலும் தாங்கள் இருக்கும் இருப்பை வெளியிடா நின்று கொண்டு நமக்கே என்ற பதத்தை விவரித்த படி இ றே –
தூயோமாய் வந்து நாம் என்றும் தூயோமாய் வந்தோம் என்றும் இரண்டு சுத்தி உண்டு இ றே கீழ்ச் சொல்லிற்று -அதில் சித்த உபாய பரிக்ரஹம் பண்ணினவர்களுக்கு
சாத்திய உபாயத்தில் ருசி வாசனை யாதல் -சுவீகாரத்தில் உபாய புத்தியாதல் -ஸ்பர்சிக்கில் சவ ஸ்ப்ருஷ்டம் போலேயும் நீச ஸ்பர்சம் போலேயும் இருப்பது ஓன்று இ றே -அவை இரண்டு அசுத்தியும் இல்லை என்னும் இடம் கீழ்ப் பாட்டாலே வெளியிட்டார்கள் –
சாத்யத்திலும் வந்தால் ப்ரயோஜனாந்தர சங்கம் நடப்புதல்-அகவாயிலே போக்த்ருத்வ புத்தி நடப்புதல் செய்தால்-விஜ போஜனம் போலேயும் உச்சிஷ்டாசனம் போலேயும் வருவதொரு அசத்தி உண்டு இ றே –
அந்த எச்சில் அறுத்து போக சுத்தி பண்ணுகிறார்கள் இப்பாட்டில் –

ஆசற்றார் மாசற்றார் என்கிறது இரண்டு தோஷமும் அற்றவர்களை இ றே -சர்வ தர்மான் -சர்வ காமான்ச்ச-தொழுமின் தூய மனத்தராய் –
-1- உபாய பரிக்ரஹத்தினுடைய அநந்தரத்திலே ருசி காரியமாய் வருவதொரு பேற்றிலே த்வரையும்-
–2–சாத்தியத்திலே சாதனா புத்தி நடக்கும் படியான கலக்கமும் -3-ஆர்த்தியை ஆவிஷ்கரித்து வளைக்கையும்–4-ப்ராப்யாந்தர ஸ்ரத்தை குலைகையும்
-5-புருஷார்த்தத்தில் அவிச்சின்னமான பாரிப்பும் -6-ப்ராப்யம் சபலமாம் படியான அபேக்ஷையும் -இவை ஆறும் பரிக்ரஹித்த உபாய பலமாய் விளையும் இ றே
காலமே கண்ணுறங்காதே வந்து துவளும் படியான த்வரையும் -போற்றுதற்குப் பொருள் தேடும்படியான கவக்கமும் –
தங்கள் வடிவைக் காட்டி வளைக்கும் படியான ஆர்த்தியும் -நோன்பை வியாஜ்ஜியமாக்கி வேண்டினவற்றில் அபேக்ஷை அற்ற படியையும்-
பரிபூர்ணமாக கைங்கர்யத்தை அபேக்ஷிக்கிற படியையும் -அதில் களை யறுத்துத் தர வேணும் என்று சொல்லும்படி பிரார்த்திக்கிற படியையும்
காட்டி நாமுடையோம் என்கிற புண்ணியத்தினுடைய பலன்களை வெளியிடுகிறார்கள்
கீழ்ச் சொன்ன உபாயத்துக்கு வேறு ஒன்றை பலமாக்குகை யாவது
மாணிக்கத்தை இட்டு தவிடு கொள்ளுவரைப் போலே இ றே -அந்த உபாயத்துக்கு உபாயாந்தர நிவ்ருத்தி போலே சகல பல சாதாரணம் என்று விரோதியான பலத்தை
அபேக்ஷிக்கலாகாது இ றே -ஸ்வரூப அனுரூபமான பலத்தில் தங்களுடைய அபிநிவேசத்தை அறிவிக்க வேணும் என்று சுருதி சத சிரஸ் ஸித்தமாய் –
கருத்தறியும் மூதுவர் கைப் பட்டு கிடக்குமதாய்-கரும் தறையில் வாசனையால் அவர்கள் பிறந்த இடத்தில் அபேக்ஷிக்குமதாய்
அவர்களோடு ஒத்த பிராப்தியை யுணர்ந்தவர்கள் பாரிக்குமதாய்-பகவத் அநந்யார்ஹ சேஷமான வேஷத்துக்கு அத்யந்தம் அனுரூபமாய்
ஈஸ்வரனுடைய முக விகாசத்துக்கு ஹேது வாய் இருந்துள்ள பரம ப்ராப்யத்தை பிரபந்த நிகமனம் பண்ணுகையாலே
எல்லாருக்கும் தெரியும்படி வெளியிட வேண்டுகையாலே நாட்டார் இசைகைக்கு நோன்பு என்ற ஒன்றை வியாஜி கரித்துப் புகுந்தோம் அத்தனை –
எங்களுக்கு உத்தேச்யம் உன் திருவடிகளில் நித்ய கைங்கர்யம் என்று ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிறார்கள் –

எம்மா வீட்டில் அர்த்தத்தோடு தலைக் கட்டுகிறது -எம்மா வீட்டில் ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து -ஒழிசில காலத்திலே பிரார்த்தித்து
அது தன்னுடைய எல்லை நிலமான பாகவத அனுபவத்தை நாளும் வாய்க்க நங்கட்கே-என்று நெடுமாற்கு அடிமையிலே பிரார்த்தித்தார் -ஆழ்வார்
அவரைக் காட்டில் இவர்களுக்கு உள்ள வாசி -நீராடப் போதுவீர் -எல்லாரும் -போந்தாரோ என்று புருஷார்த்தத்தில் சரம அவதியில்
முதலடியிலே நின்று அது நிலை நிற்கைக்காக ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணி அர்த்திக்கிறார்கள்
ஆவா வென்று ஆராய்ந்து அருள் -எம்மேல் விழியாவோ -என்று பெண்கள் அக்ரூரன் மநோ ரதித்தால் போலே
மநோ ரதித்துக் கொண்டு வந்த படியே நாமும் பெரிய ஆதரத்தோடு புறப்பட்டு இருந்து வந்த கார்யங்களை சொல்லுங்கோள் என்று கேட்டு
வேண்டுவனவும் கொடுக்க இசைந்து பறை கொண்ட காலத்துக்கு பெறும் ஸம்மானம் பண்ணுவதாக இசைந்து
வந்த கார்யம் தலைக் கட்டி விட்டோம் -திரிய பறை தாராய் -என்று நின்றார்கள் -பாடிப் பறை கொண்டு என்றதும் மேலேயும் ஒரு பறை யுண்டாய் இருந்தது –
நாமது அறிந்திலோம் -நமக்கு இதுவே தெரிந்தது இல்லை -மேல் விளையும் படி காண்கிறோம் என்று பேசாதே இருந்தான் –
எங்கள் த்வரையையும்-தலை தடுமாறான பரிமாற்றத்தையும் கண்டு வைத்து இதுக்கு ஹிருதயம் கேட்டில்லையீ -எங்கள் நினைவைக் கேளாய் -என்று
தொடை தட்டுகிறார்கள் -கீழ்ப் பண்ணின ப்ராபக சுவீகாரம் அசத் சமமாம் படியான ப்ராப்ய ருசியையும் -உன்னாலே பேறு -என்று அறுதி இட்டால்
நீ வரக் கண்டு இருக்க ஒண்ணாத படி இருக்கிற த்வரையையும் எங்கள் ஆற்றாமையின் ஸ்வ பாவத்தையும் கேளாய் என்கிறார்கள் –

சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்-

சிற்றம் சிறுகாலே வந்து
சிறு பெண்கள் ஆகையால் குளிர்காலத்தில் புறப்பட மாட்டாத நாங்கள் அறப் போதோடே புறப்பட்டு வரும் படி அன்றோ எங்கள் த்வரை இருந்த படி –
இவர்களுக்கு ஆபிமுக்யம் பிறந்த காலம் ஆத்ம ஹித சிந்தனத்துக்கு சத்வோத்தர காலமாக இருக்கும் ப்ரஹ்ம முஹூர்த்தமாக வந்து விழுந்தது
மாசம் மார்கழி மாசமாய் -பக்ஷம் பூர்வ பஷமாய்-அதிலே பவுர்ணமியாய்-அப்படியே ஒரு நன்னாள் வந்து பலித்தால் போலே
அத்திவசத்தில் முஹூர்த்தமும் ப்ரஹ்ம முஹூர்த்தமாய் வந்து விழுந்தது
காலை –
சிறு காலை –
சிற்றம் சிறு காலை-
செங்கல் பொடிக் கூறை என்று தாமஸரும் உணரும் படி யான அளவு காலை யாவது
ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப்படுத்த -என்று இடைச்சிகள் உணர்ந்து ஸ்வ க்ருத்யத்திலே அதிகரிக்கும் படியான அளவு சிறு காலை யாவது
ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப்படுத்த -என்றது தான் விடிவுக்கு அடையாளமாகச் சொல்லும் படி -அதற்கு முன்னே உணர்ந்தார்கள் இ றே தாங்கள் –
இவர்களுக்கு ராத்திரி கழிந்து பகல் வருவதற்கு முன்புத்தை நடுவில் போதை இ றே நினைக்கிறது
அஞ்ஞான தசை குலைந்து பிராப்தி தசை புகுவதற்கு முன்புத்தை ஞான தசையைச் சொன்னபடி
முனிவர்களும் யோகிகளும் உணரும் காலம் சிற்றம் சிறு காலை யாவது –
சம்சாரியான நிலை குலைந்து முக்தனாவதுக்கு முன்பு முமுஷூத்வம் அங்குரித்த தசை இ றே -இருள் அகன்ற அளவாய்
வெளிச் செறிப்பு உள்ள அளவு எல்லாம் பிரகாசியாத அளவாய்த்து -இதர விஷய ப்ராவண்யத்தால் வரும் அறிவு கேடு இன்றிக்கே
பகவத் விஷயத்தில் ஞானம் கொண்டு நேரான பரிமாற்றமும் இன்றிக்கே இருக்கிற அளவைப் பிடித்த படி –
காலை நல் ஞானத்துறை படிந்தாடி -என்று ஞான தீர்த்த அவகாஹனத்துக்கு யோக்கியமான காலம் பெற்ற படி –
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்று ஸ்ரீ யபதியை விஷயீ கரிக்குமது இ றே நல் ஞானமாவது –
துறை படுகையாவது-சதாசார்ய உபதேச மூலமாக பிராட்டி புருஷகாரமாக -பாகவதர்கள் உஸாத் துணையாக எம்பெருமானைப் பற்றுமது-
உன் மணாளனை எம்மை நீராட்டு என்று துறை தப்பாமல் இழிந்தவர்கள் இ றே இவர்கள்
ஓயும் பொழுதின்றி -விடிவு காணாத படி நீண்ட சம்சார காள ராத்திரி கழிந்து -பகல் கண்டேன் -என்று ஒரு பகல் முகம் செய்கிற சமயம் இ றே
அந்தந்தம இவா ஞானம் இத்யாதி -காலை மாலை என்று ஒரு நியதி இல்லை இ றே -அவன் தோற்றும் காலம் விடிவாம் அத்தனை இ றே –
திருவாய்ப்பாடிக்கு நாட்டார் விடிவு அஸ்தமயமாய் -சர்வ பூதங்களினுடைய விடிவாய் இ றே நடப்பது -ஆவிர்ப்பூதம் மஹாத்மனா -என்று
அபர ராத்ரம் விடிவாய் வந்து விழுந்தது இ றே -விரியும் கதிரே போல்வான் இ றே
சிற்றம் சிறு காலே
சிறு காலே வரில் உன்னைக் காண ஒண்ணாது என்று சிற்றம் சிறு காலே வந்தோம் –
சிறுகாலே யூட்டி ஒருப்படுத்தேன் -என்று மாத்ரு பரதந்த்ரனாய் இளம் கன்று மேய்க்க வேணும் -விடிந்த வாறே –
காலிப் பின்னே போம் -எல்லியம் போதாக வரும் -நீராட்ட அமைத்து வைக்கையாலே-ஆடி அமுது செய்யும் –
அல்லலுற்றான் வந்த பின்னை என்கிறபடியே இருளிலே ஆள் பார்த்து ஊரிலே திரியும் – அபிமதைகளை வேண்டின இடங்களிலே புணர்ந்து
இரா நாழிகை மூ வேழு சென்றவாறு இங்கே கிடை காட்ட வரும்
அக்காலம் அறிந்து வந்து கைக் கொண்டார்கள் -நாள் தோறும் ஒரு விடிவு யுண்டாய் நடக்கிறது இ றே -ஸூ ப்ரபாதமாய்த்து இத்திவசம் ஒன்றுமாய்த்து –

அதுக்கடி என் என்றால்
வந்து
வந்த வருத்தத்தை -வந்து தலைப் பெய்தோம் -என்று கீழே சொன்னார்கள் இ றே
வந்து
சம்சார பதவியில் ஓடினவர்கள் மீண்டு வருவதிலும் வருத்தமுண்டு எங்கள் வரத்துக்கு -தேஹாத்ம அபிமானம் பண்ணினாரை –
எதிர் சூழல் புக்குத் திரிகிறவனுடைய யத்தனத்தாலே வருவிக்கலாம் -நிவ்ருத்தி சாத்தியம் என்று ஸ்வ ஸ்வரூபத்தை யுணர்ந்து வாராதாரை வருவிக்க அரிது இ றே
உபாய சுவீகாரத்தில் உபாய பிரதிபத்தி பண்ணாத படியான நிலையிலே நிற்கிறவர்களை க்ரியாரூபமானத்தை ஏறிட்டுக் கொண்டு வரும் படி பண்ணுகை அரிது இ றே
உவாசச என்று பெருமாள் திரு உள்ளத்தைப் புண் படுத்தினால் போலே சொல்லுகிறார்கள் –வரவுக்கு நோவு படுகிறவனை
வார்த்தையால் புண் படுத்தினான் -தான் சரண்யராகப் பற்றி வந்தாரை யுண்டாக்கிக் கார்யம் கொள்ள மாட்டிற்று இலன் என்றது இ றே விபீஷணனை
அப்படியே நாலடி இட்ட நாங்களே வந்தோம் என்கிறார்கள் -பத்ப்யாம் அபிகமாத்-என்று தாம் வந்த தூரம் பாராதே வாசல் அளவும் புறப்பட்டது பொறுத்திலரே
வந்து
இவ்வீதி போதுமாகில் என்று வந்தால் கார்யம் கொள்ள இருக்கும் நாங்கள் வரும்படி யன்றோ த்வரை இருந்தபடி
வந்து
பிறந்த இடத்தில் நின்றும் ஆயர்குலத்திலே வந்து மழை கொலோ வருகிறது என்னும் படி வீதியோடே வந்து -நம் தெருவின் நடுவே வந்து -கதவின் புறமே வந்து –
முற்றம் புகுந்து -நம் இல்லம் புகுந்து -நீ மலர் அணை மேல் வைகி -மாலை புகுர ப்ராப்தமாய் இருக்க -படுக்கையை விட்டுப் படி கடந்து
காவலும் கடந்து -உன் தோரண வாசலிலே வந்து -உட் கட்டிலிலே புகுந்து -பள்ளிக் கட்டில் கீழே -சிற்றம் சிறு காலே வந்த வருத்தம் அறிய வேண்டாவோ –
கறவைகள் பின் சென்று என்று அந்த போக்கு நிகர்ஷமாக சொன்னால் போலே -இவ்வார்த்தையும் தப்பு என்று இருக்கிறார்கள் –
ஸ்வரூபத்தை யுணராத போது அது ப்ராப்தமாய் இருக்கும் -ஸ்வரூபத்தை உணர்ந்தால் இது ப்ராப்தமாய் இருக்கும்
உபாயாந்தரத்துக்கு நிவ்ருத்தி தோஷம் -இவ்வதிகாரிக்கு பிரவ்ருத்தி குற்றம் -ப்ராப்ய ப்ராவண்யம்
ஸ்வரூபத்தை மறப்பித்தது -பூமருவு கோல நம் பெண்மை சிந்தித்திராது போய் -என்னப் பண்ணும் இ றே

நீங்கள் வந்து செய்த தப்பு என் என்ன
உன்னைச் சேவித்து
இது இ றே நாங்கள் செய்த தப்பு என்கிறார்கள் -எங்கள் ஸ்வரூபத்தை அறியா விட்டால் உன் ஸ்வரூபத்தை தான் உணர்ந்தோமோ –
இத்தலையில் மித்ர பாவநையாய் இருக்கை -இவனை விடில் தான் உளனாகாத படி இருக்குமவன் இ றே -வரவு தானே மிகையாய்
இருக்கும் படி இருக்கிற யுன்னை -அதுக்கு மேலே துராராதர் பக்கல் செய்வது எல்லாம் செய்தோம்
பஞ்சாக்கினி வித்யையில் சொல்லுகிற பரிவ்ருத்தியை கரை ஏறி -துஸ்ஸாதமாய் கை புகுந்தாலும் நிஸ்ஸாரமான விஷயங்களில் துவண்டு
அது தனக்கு உறுப்பாக இதர சேவையில் இழிந்து அவர்கள் முகத்தில் விழித்து -அவர்கள் முகத்தில் வெம்மை பொறுத்து
-நீச பாஷணங்களைப் பண்ணித் திரிகை யாகிற ஸ்வ விருத்தியை அநாதி காலம் பண்ணிற்று
அத்தை தவிர்ந்து –விஷயம் வகுத்ததாய் ஸூ சீலனாய் ஸ்வாராதனாய்-புலன் கொள் வடிவு படைத்தவனாய்
தானே தன்னைத் தருவானாய் தந்தால் பின்னை ஒரு காலமும் கை விடாதவனாய் இருந்தவனை உசித தாஸ்யம் பண்ணுகை ப்ராப்தமாகச் சொல்லா நிற்க –
எதிரே இட்ட நாலடிக்கும் பொறாதே உபசாரம் சொல்லுமவன் கருத்து அறிக்கையால் பின்னே தொடர்ந்து சேவித்ததை குற்றமாகச் சொல்லுகிறார்கள்
உன்னைச் சேவித்து
சோப்ய கச்சத்-என்று அபிகந்தாவான யுன்னை அபிகமனம் பண்ணி குசல பிரஸ்னத்திலே திருப்தனாம் உன்னை நாங்கள் சேவிக்கை மிகை அன்றோ
-சென்று நாம் சேவித்தால் என்கிற இரண்டும் மிகையுமாய் செய்தோம் இ றே
பின்னே சென்று -சூழவே சென்று -என்று எங்களை தொடர்ந்து சேவிக்கிற யுன்னை பேஜூர் முகுந்த பதவீம் -என்கிறபடியே சுவடு பார்த்து திரிந்து
நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழி தருகின்றாள் -என்னக் கடவது இ றே –
சேவித்த அளவியோ -அதுக்கு மேலேயும் சில செய்திலோமோ-

உன்-பொற்றாமரை அடியே போற்றும்
சூட்டக் கண்ட பூவை விலை மதித்து விற்பாரைப் போலே கண்டு அனுபவிக்கையே பிரயோஜனமாக இருக்கிற திருவடிகளைப் பெற்று வைத்து
வேறொரு பிரயோஜனம் தோற்றும் படியான செயல் செய்த செல்லாமை பாராய்
சேவித்து –போற்றவும்
தொடர்ந்து ஏத்தவும் என்கிற படியே
உன் அடி போற்றும்
ஸ்வரூப குணாதிகள் போற்றுகிறோம் அல்லோம்
அடியே –போற்றும்
அங்குத்தைக்கு மங்களா சாசனம் பண்ணி -தனக்கும் ரக்ஷை தேடிக் கொள்ளுகை அன்றிக்கே தன்னை அழிய மாறியும் அத்தலைக்கு நன்மைகளை ஆஸாஸிக்கை
புத்ர சிஷ்ய தாசாதிகள் தாங்களும் உண்டு உடுத்து பித்ராதிகளுக்கும் சேஷமாய் இருக்குமா போல் அன்றிக்கே
அத்தலைக்கே சேஷமாய் இருக்கும் இருப்பு தனக்கு உஜ்ஜீவனமாய் இருக்கை
உன்னடியே போற்றும்
அடியானுக்கு அடியிலே இ றே பிராப்தி -அடிச்சியோம் என்கிறவர்கள் கூறாளும் துறப்புக் கூட்டில் போகார்கள் இ றே
உன் –பொன்–அடி
உலகம் அளந்த பொன்னடி போற்றுவர்களோ -காடுறைந்த பொன்னடி போற்றுவர்களோ நாங்கள்
அவை -உலகம் எலாம் தலை விளாக் கொள்ளுதல் –வானவர் தம் சென்னி மலர் ஆவுதலாய் இ றே அந்தப் பொன்னடிகள் இருப்பது –
இது மாக மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் என்று இ றே இப்பொன்னடி இருப்பது –
உன் –பொன்னடி –
எல்லாருக்கும் பொதுவாய் இருக்கையும் -ஸ்ப்ருஹணீயமாய் இருக்கையும் -கண்டால் விட ஒண்ணாது இருக்கையும் -விட்டால் பிழைக்க ஒண்ணாது இருக்கையும் –
வெறும் பொன்னடியாய் இருக்கிறதோ -பொற்றாமரை அடி அன்றோ -சாதனத்வமும் சாத்யத்வமும் பூர்ணமாய் இருக்கை –
தாமரை அன்ன பொன்னார் அடி இ றே -தனம் மதீயம் தவ பாத பங்கஜம் –
உன் பொற்றாமரை அடியே
எங்களுக்குப் பொன்னும் பூவும் புறம்பே தேட வேணுமோ –
உன் பொற்றாமரை அடி
பெண்களுக்கு புறம்பு அந்நிய பரதைகள் யுண்டானால் கிருஷ்ணன் அவற்றை குலைப்பதும் திருவடிகளாலே
அழித்தாய் உன் திருவடியால் –
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை என்று ஆசிரயணீயமும் இதுவே -அவன் தாளிணைக் கீழ் புகும் காதல் -என்று ஆசைப்படுவதும் இதுவே
ஆசானுகுணமாக தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே என்று இவர்கள் சென்னிக்கு கோலமாகச் சூடுவதும் இதுவே –

போற்றும்
பரமன் அடி பாடி -அடி போற்றி -கழல் போற்றி -என்று முடியச் சொல்லிக் கொண்டு போந்தார் இ றே
கண்ணன் தாள் வாழ்த்துமது ஸ்வரூப பிரயுத்தமாய் இருக்கும் இ றே -இதுக்கு மேல் ஓன்று நினைக்கும் படி இ றே ருசி காரியமாய் வந்த ஆற்றாமை இருந்த படி –
போற்றும் பொருள்
போற்றுகிற பிரயோஜனம் -இவர்கள் போற்றும் பொருள் என்று பாரித்துக் கொண்டு சொல்லாத தொடங்கினவாறே –
சிற்றம் சிறு காலை யுணர்ந்து வந்த அநந்தலாலே சிவந்த போதரிக் கண்களையும் -இவர்கள் கோவை கனிவாயில் பழுப்பிலும்
பேச்சில் இனிமையிலும் -வடிவு அழகிலும் பாடகமும் சிலம்பும் த்வனிக்கிற இவர்கள் பொற்றாமரை அடியிலும் கண்ணை வைத்து
நாம் சொல்லுகிற இது இவன் பிரதிபத்தி பண்ணுகிறீலன் என்று தோற்றும் படி அந்நிய பரனாய் இருந்தான் -முன்பு இருக்கிறவனை
கேளாய்
என்கிறார்கள் -இவர்கள் தாம் தங்களை அறிந்தால் பின்னே நின்று வார்த்தை சொல்ல வேண்டாவோ -வார்த்தை சொல்லா நிற்கச் செய்தே
கேளாய் –
என்னும் போது நடுவே அந்நிய பரனாக வேணும் இ றே
கேளாய்
எங்கள் ப்ராப்யத்தை அழித்தோ நீ உன் ப்ராப்யம் பெறப் பார்ப்பது -என்று அடியை விட்டுத் தொடையைத் தட்டுகிறார்கள் –
கேளாய்
அத்யா பயந்தி என்று ஓதுவிக்க இழிந்தவள் ஆகையால் ஸ்ரூயதாம் என்று கேட்ப்பிக்க வேணும் இ றே
இவன் தனக்கு சிஷ்யன் வாய்த்தால் போலே ஆக ஒண்ணாதே இவர்களுக்கு
கேளீரோ -என்று பெண்களுக்கு முதலில் க்ருத்யாம்சம் சொன்னார்கள் -இவனுக்கு க்ருத்யாமாம்சம் சொல்லுகிறார்கள் கேளாய் என்று
அழகிது -எனக்குத் தான் ஏதானால் நல்லது -உங்கள் பேச்சே அமையாதா-இது ஒரு பொருள் கேள்வியாய் இருந்தது
விடிவோறே வந்து கைக் கொண்டி கோள்-நமக்கு உசித தர்மங்களையும் விட்டு -புறம்பு உள்ள அந்நிய பரதைகளையும் தவிர்த்து
இற்றைக்கு இதுவே கேள்வியாக இருக்கிறோம் -சொல்லலாகாதோ என்றான் –
நீ கேளாய்
சீரிய சிங்கா சனத்திலே அன்றோ நீ இருக்கிறது -தர்ம சாசனத்தில் இருப்பார்க்கு கேட்க வேண்டாவோ
நீ போற்றும் பொருள் கேளாய்
உனக்கு க்ரமத்திலே இவர்கள் கார்யம் செய்கிறோம் என்று ஆறி இருக்க ஒண்ணாது -த்வரிக்க வேணும் காண் என்கிறார்கள் –
பேறு உங்களதாய் நீங்கள் த்வரியா நின்றி கோளே என்றான் –

பிறந்த நீ
இவ்வளவாய் த்வரித்தோம் நாங்கள் ஆகில் அன்றோ நாமக்கல் மேலும் த்வரிப்பது-எதிர் சூழல் புக்கு -இவ்வளவாய் கிருஷி பண்ணின நீ
பல வேளையில் ஆறி இருக்கலாகாது காண் -எங்கள் ருசி கார்யமான த்வரைக்கு முற்பாடனான நீயே பேற்றுக்கு முற்பாடானாக வேணும்
எத்தனை காரியத்தை இட்டு பிறப்போம் என்று தெரியாது -இது என் -என்பிது இது என்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
இங்கு வந்து பிறந்தது ஏதுக்காக-ஆர்க்காகா -என்று விசாரிக்கலாகாதோ
பெற்றம் மேய்த்து உண்ணும்
நீ பிறப்பிலியாய் பிறவாதார் நடுவே இருந்து பிறவி அற்றார்க்கு முகம் கொடுக்கிற நிலத்திலே வந்தோமோ –
பிறவிக்கு போரப் பயப்பட்டு உன்னையே கால் காட்டுவார் உள்ள இடத்திலே வந்தோமோ -பிறவா நிற்கச் செய்தே ஆஸார ப்ரதானர் புகுந்து நியமிக்கும் ராஜ குலத்தில் பிறவியிலே வந்தோமோ –
வாலால் உழக்குக்கு பசு மேய்க்க வந்து வயிறு வளர்க்கும் எங்கள் குலத்திலே நீ என் செய்யப் பிறந்தாய் என்று விசாரிக்கலாகாதோ –
பெற்றம் மேய்த்து
தாழ்ந்தவர்களை ரக்ஷணம் பண்ணும் இக்குலத்திலே பிறக்கச் சொன்னார் யார் -பர ரக்ஷணமும் பண்ணாமல் ஸ்வ ரக்ஷணமும்
பண்ணாதார் குலத்தில் உன்னை பிறக்கச் சொன்னார் ஆர் –
பிறந்த நீ
நீ ஆசைப்பட்டு பிறந்த பிறவி யன்றோ இது –
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த
எங்கள் பெற்றத்து ஆயன் வடமதுரைப் பிறந்தான் -என்று அல்ல இவர்கள் நினைத்து இருப்பது –
குலத்தில் பிறந்த
குலத்துக்கு தலைவரானவர் வயிற்றிலே பிறந்த படியால் எல்லார்க்கும் சாதாரணம் இ றே இப்பிறவி
நாம் உங்களில் வந்து பிறந்தோம் ஆகில் நம்மைச் செய்யச் சொல்லுகிறது என் என்ன அந்தரங்க வ்ருத்தி கொள்ளச் சொல்லுகிறோம் என்கிறார்கள் –
ஆரைத் தான் என்றான் –

எங்களை –
குலத்தில் பிறந்த நீ -குலங்கெழு கோவியரான -எங்களைக் கொள்ள வேண்டாவோ
-நீளா குலே நஸத்ருசீ -எங்களில் ஒருத்தியை ஆசைப்பட்டு அன்றோ நீ இங்குப் பிறந்தது –எங்களை
திரு மா மகள் மண் மகள்-என்கிற பிரதான மஹிஷிகள் உன்னைத் தேடி நிற்க நீ ஆசைப்பட்டு மேல் விழும்படி உகைக்கைப்பாடி யான எங்களை
ஓசி செய் நுண்ணிடை இள யாய்ச்சியார் நீ உகக்கும் நல்லவர் என்று நாங்கள் ஆதார விஷயம் என்று பிரசித்தம் அன்றோ –
பிறந்த நீ எங்களை
பிறவாதாரைப் பிறவாதார் ஏவிக் கொள்ளவும் பிறந்தாரை பிறந்தார் ஏவிக் கொள்ளுகையும் பிராப்தம் அன்றோ
இவ்வாய்க்குலத்து ஆய்ச்சியோமாய்ப் பிறந்த எங்களை விரும்பி அன்றோ -நீ ஆயனாய் பிறந்தது -ஆயனாகி ஆயர் மங்கை வெய்ய தோள் விரும்பினாய்-
எங்களை
பசுக்களுக்கு வேறு ரக்ஷகர் உண்டாகிலும் உன்னை ஒழிய வேறு ரஷிப்பார் இல்லாத எங்களை – பசுக்கள் தானும் பறித்துத் தின்னும் -பிறரும் ஐயோ என்னும் படி இருக்கும் -இரண்டு ஆகாரமும் இல்லாத எங்களை
குற்றேவல்
அந்தரங்கமாக ஏவிக் கொள்ளுமது -முகப்பே கூவிப் பணி கொள்ள வேணும் இ றே -விடுத்த திசைக்கு கருமமும் இல்லை
-கருதும் இடத்தில் வியாபாரமும் இல்லை -அணுகின விருத்தியும் -ஏவின விருத்தியாக வேணும்
திருத் திரைக்குள்ளில் விருத்தி -உடை வாளும் அடுக்குருவும் எடுத்தல் -கலசப்பானை பிடித்தல் -படிக்கம் வைத்தல்
உமிழும் பொன் வட்டில் எடுத்தல் -திருவடிகளை விலக்குதல்-ஒலியன் பணி மாறுதல் -சாமரம் இரட்டுதல் – அடைக்காய் திருத்துதல் -அடி வருடுதல்
-முலைகள் இடர் தீர அணைத்தல் இவை தொடக்கமானவை கோவிந்தர்க்குப் பண்ணும் குற்றேவல் ஆகிறது -இவை எல்லாம் க்ரமத்திலே கொள்ளுகிறேன் என்றான்
எங்களைக்
தாஸ்யத்தில் சுவடி அறிந்து -அதில் ருசியும் த்வரையும் விளைந்து க்ரம பிராப்தி பொறுக்க மாட்டாத படி வந்து மேல் விழுகிற எங்களை
அனந்தர க்ஷணத்துக்கு நாங்கள் இருப்புத்தோம் என்று தோற்றி இருந்ததோ என்று தங்கள் ஆற்றாமையை அனைத்துக் காட்டுகிறார்கள்
சிறிது விட்டுப் பிடிக்க அறியாத எங்களை ஒரு படுக்கையிலே ஓக்க இருக்க பிரிவதற்கு இரங்கும் எங்களை
குற்றேவல் கொள்ளாமல் போகாதே
உனக்கு விஹிதம்
பிறந்த நீ கொள்ளாமல் போகாது –
முன் தீம்பு செய்தார்க்கு வீண் போமோ -புறம்புள்ள ஜீவனத்தை மாற்றினால் நீயும் இடது ஒழியவோ-அன்ன பானாதிகள் தாரகமான நிலையைத் தவிர்ந்து
உன் வடிவு அழகைக் காட்டி -எல்லாம் கண்ணன் -என்று தாரகாதிகள் நீயேயாம் படி பண்ணினால் ஸ்வரூப அனுரூபமான அடிமை கொள்ளாதே போகப் போமோ –
ஒருவனுக்கு இடுகின்ற சோற்றை விலக்கி பின்னை தானும் பொகட்டுப் போகவோ
நாங்கள் இசையாத அன்று தப்பினத்தைச் செய்யலாவது இல்லையே -ஸ்வரூப ஞானம் யுண்டாய் இசைவும் யுண்டான இன்று நழுவ விடுவுதோமோ
உண்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய்-ஆசையை விளைத்த யுனக்கு அதின் கார்யம் செய்ய வேண்டாவோ
கொள்ளாமல் போகாது
நாங்கள் விட நினைத்தால் நீ தான் விட வில்லையோ -திரு வாணை நின்னாணை கண்டாய் -என்று ஆணை இட மாட்டார்கள் இ றே
அபிப்ராயம் தோற்றச் சொல்லும் அத்தனை இ றே -வளைத்து வைத்தேன் இனி போகல் ஓட்டேன்-தடுக்கையும் வளைக்கையும் ஆணை இடுகையும் பரிசு இ றே –
கொள்ளாமல் போகாது என்று கடுகு வளம் தடையான பின்பு கேட்க என்று விடுகை இ றே
கொள்ளாமல் போகாது -என்று மீள ஒண்ணாத படி நிர்பந்தித்தவாறே -நாம் அந்தரங்கமாக வேண்டுமவை ஏவிக் கொள்ளுகிறோம் –
உங்களுக்கு நம் பக்கலிலும் சில கொள்ளாமல் போகாதே -நீங்கள் நோன்புக்கு அங்கமாகச் சொன்னவற்றை
இப்போது கொண்டு போம் அத்தனை இ றே -நீங்கள் அனைவரும் அறிய வேண்டி வந்தத்தைக் கொண்டு போக வேணும் –
இப்போது -பறை தருவான் -என்றும் -பாடிப் பறை கொண்டு -என்றும் -போற்றப் பறை தரும் என்றும் -அறை பறை என்றும் – இற்றைப் பறை கொள்வான் என்றும்
பறை தருதியாகில் -என்றும் -சாலப் பெறும் பறை -என்றும் -உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு -என்றும் -நீ தாராய் பறை -என்றும் –
ஒருக்கால் சொன்னால் போலே ஒன்பதில் கால் சொன்ன பறையை இற்றைக்கு கொள்ளுங்கோள் என்று
பெண்களுக்கு கொடுக்கும் படி -பறையை எடுத்துக் கொண்டு வாருங்கோள் என்றான்

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
இன்று ஒரு பிரயோஜனம் கொண்டு போமவர்களோ நாங்கள் -உன்னை அங்கனே விடுவுதுமோ-கெடுவாய்
யதா ஸ்ருத க்ராஹியாய் இருந்தாய் -தாத்பர்ய ஞானம் பிள்ளையாய் இருந்ததீ -அபிதான விருத்தி ஒழிய தாத்பர்யம் போகாதே இருந்ததீ
லோக சம்வாதத்துக்கு ஓன்று சொன்னோம் அத்தனை என்று இருக்க வேண்டாவோ -அபிமத விஷயம் இருந்த இடத்தே சென்று
தண்ணீர் என்றால் தண்ணீரை வார்ப்பார்களோ -சொல்லுகிற வார்த்தையையும் எங்களையும் அறிந்து அன்றோ பரிமாறுவது –
நாங்கள் பறை என்றால் வேறு ஒன்றை த்வனிக்கிறது என்று அறிய வேண்டாவோ –
கொள்வான் அன்று காண்
எங்களை நீ கொள்ளுவான் அத்தனை ஒழிய நாங்கள் உன் பக்கலிலே உன்னையும் ஒழியவும் கொள்வது ஓன்று உண்டு என்று இருந்தாயோ –
கோவிந்தா –
பசுக்களின் பின்னே திரிவார்க்கு பெண்களின் வார்த்தையின் கருத்து தெரியாது இ றே -பசுக்களின் பின்னே திரிவார்க்கு
அவற்றுக்கு உள்ள ஞானம் இ றே உள்ளது -நாலு நாள் எங்களை விட்டுக் கெட்ட கேடு என் தான் -நீ பசுக்களையே விரும்பி எம்மைத் துறந்தால் இதுவோ பலம்
கோவிந்தா
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -என்று ஞான பூர்வகமான உபாய சுவீகாரம் பண்ணுகிற இடமாகையாலே குண பூர்த்தி சொல்லக் குறை இல்லை
அவ்விடத்திலே ப்ராப்ய ருசியாலே கண்ணாஞ்சுழலை இடுகையாலும் பலாந்தரத்தைக் காட்டி நழுவத் தேடுகையாலும் யுண்டான
தோஷத்தாலும் இவ்வளவும் சொல்ல வேணும் இ றே இங்கு
கோவிந்தா
எங்களையும் எங்கள் ப்ராப்யத்தையும் மறந்தால் போலே உன்னையும் உன் பிறவியையும் மறந்தாயீ
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த கோவிந்தா
பூமியை எடுத்து நோக்கின மஹா வராஹமாக நினைக்கிறாயோ -பூமியை நேர் ஏற்ற வாமனாக நினைக்கிறாயோ –
சப்த ராசியைப் பிரித்து எடுத்த ஹம்ஸ ரூபியாக நினைக்கிறாயோ -அத்தைப் பிரகாசிப்பித்த ஹயக்ரீவ விஷமாக நினைக்கிறாயோ –
ஆதித்ய அந்தரவர்த்தியாக நினைக்கிறாயோ -அறிவில்லாத பசுக்களுக்கு நிர்வாஹகானாய் வந்து பிறந்து ஆயர் சிறுமியருக்கு உதவிற்று இல்லை என்றால்
பர வ்யூஹாதிகளையும் யாதவ வம்சத்தையும் விட்டு இடைச் சேரியில் ஸூ லபனான யுன்னுடைய கிருஷியும் விபலமாகாதோ –
நீங்கள் சொன்ன வார்த்தைக்கு பலரும் அறியக் கருத்தாய் இருக்குமத்தை நாமும் அறிந்து சொன்னோம் ஆகில்
நமக்குத் தாத்பர்ய ஞானம் இல்லை என்கிறது என் -நீங்கள் குற்றேவல் என்கிறதிலே இரண்டு வகை அறிந்து சொல்லுங்கோள்
இற்றைப் பொழுதை உங்களோடு போக்குகிறோம் அங்கனேயாகில் என்றான்

எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும்
இற்றை அளவிலே போகாது கண் -இப்பிறவி அளவிலே போகாது காண்
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும்
அகால கால்யமான-நலமந்த மில்லதோர் நாட்டிலே இருக்கவுமாம் -ஆஸ்ரித சஜாதீயனாய்க் கொண்டு நிலை வரம்பில் பல பிறப்பாய்
-சம்சார மண்டலத்தில் அநேக அவதாரம் பண்ணவுமாம்-அதில் ஒரு நிர்பந்தம் இல்லை –
உன் தன்னோடு-
நீ பிறவாது இருக்கும் இடத்திலும் பிறந்து திரியும் இடத்திலும் கூடத் திரியும் அத்தனை
எற்றைக்கும்
தேவத்வே தேவே தேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ
என்கிறபடியே நாங்களும் ஒக்கப் பிறந்து விடாதே திரிய வேணும் –
இளைய பெருமாள் படை வீட்டிலும் காட்டிலும் ஓக்கத் திரிந்தால் போலே
உன் தன்னோடு
நீ சங்கு சக்ர கதா தரனாய் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்கும் இடத்திலும் எங்களோடு கண் கலந்த உன்னோடும் ஓக்கத் திரிய வேணும்
உன் தன்னோடு
அங்கே உருவார் சக்கரம் சங்கு சுமந்து உன்னோடு திரிகையும் -செறி வில்லும் செண்டு கோலும் கைக் கொண்டு
இங்கே திரியவும் பெறுவோமாக வேணும் -இத்தை நினைத்து இ றே கச்சொடு பொற் சுரிகை அடியிலே இவர்கள் தான் அவனுக்கு வர விட்டது
கோவிந்தா எற்றைக்கும் –
கோயில் கோள் தெய்வம் எல்லாம் தொழ வைகுந்தம் கோயில் கொண்டு -நீ இருக்கும் இடத்திலும் பின்னும் எம்மாண்பும் ஆனான் -என்னும் படி நீ பிறந்து
திரியும் இடத்திலும் உன்னோடே திரிய வேணும் -தேவும் தன்னையும் என்கிற இரண்டு அவஸ்தையும் கோவிந்தனுக்கு இ றே
உற்றோமே யாவோம்
சர்வ வித பாந்தவமும் உன்னோடே யாக வேணும் -ஒரு உறவைக் குறித்து -அது உண்டாக வேணும் என்னாது ஒழிந்தது
ஒன்றை விசேஷிக்கில் அல்லாதவை இல்லையாம் என்று எல்லா உறவும் நீயேயாக வேணும்
உற்றோமே யாவோம்
நீ காட்டுக்குப் போக மூச்சடங்கும் உறவு உண்டாக வேணும்
அசலூரில் வளரப் போகப் பூண்டும் புலம்பும் உறவு உண்டாக வேணும்
நீ அபிமத விஷயங்களை விஞ்சி விநியோகம் கொண்டால் பொறாது ஒழியில் செய்வது என் என்று வயிறு பிடித்துக் கொள்ளும் உறவு உண்டாக வேணும்
நீ நில்லுங்கோள் என்றால் நீர் பிரிந்த ஜந்துக்களை போலே துடிக்கும் உறவு உண்டாக வேணும்
நீ பாம்பின் வாயில் விழுந்தாய் என்றால் பிணம் படும் படியான பாந்த்வம் வேணும்
கழிந்த பிழைகளுக்குக் காப்பிடும் உறவும் வேணும்
எங்கள் வீட்டில் இட்ட ஆசனத்தை ஊன்றிப் பார்க்கும் உறவும் வேணும்
விட்டு அணைக்கத் தேடில் வெளுக்கும் உறவும் உண்டாக வேணும் –

கோவிந்தா உன்தன்னோடு
மாதா பிதா பிராதா நிவாசஸ் சரணம் ஸூ ஹ்ருத் கதிர் நாராயண என்கிறபடி அவரே இனி யாவார் என்று இருக்க ஒண்ணாது
பிராதா பர்த்தா ச பந்துச்சு பிதா ச மம ராகவா -என்கிறபடியே அவர் உயிர் செகுத்த எம்மண்ணல் -என்று இருக்க ஒண்ணாது
அவை எல்லாம் உன்னோடே யாக வேணும் -பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ மற்றை யாராவாரும் நீ என்று இருக்க வேணும் –
உற்றோமே
சம்பந்தம் உண்டாய் இருக்கச் செய்தே பத்து மாசம் பிரிந்து இருத்தல் -பதினாலாண்டு பிரிந்து இருத்தல் -பதினாறு ஆண்டு பிரிந்து இருத்தல் செய்ய ஒண்ணாது
அத்தனையோ வேண்டுவது என்றான்
ஆட் செய்வோம்
அரசுக்குப் பட்டம் கட்டி அருகு இருக்க ஒண்ணாது -ஆகிறது மாற்று என் என்றான்
உனக்கு ஆட் செய்வோம்
ஆட் செய்யும் இடத்தில் எங்களுக்கு உறவை அறிவித்து அடிமை கொண்டு சாபேஷனாய் நிற்கிற யுனக்குச் செய்ய வேணும்
உனக்கு -ஆட் செய் வோம்
ஆட் கொள்ளத் தோன்றிய யுனக்குச் செய்ய வேண்டாவோ -அத்தனையோ என்றான்
உனக்கே
உனக்கும் எங்களுக்குமாய் இருக்கிற இருப்பைத் தவிர்ந்து -தனக்கே யாக -என்னுமா போலே கொள்ள வேணும் –
எங்கள் அபிநிவேசத்தாலே உன் அபிமதம் செய்ய ஒண்ணாது -நீ உகந்ததாக வேணும் –
தேச கால அவஸ்தா பிரகார நியம சூன்யமாக அபிநிவேசத்தாலே பாரியா நிற்கச் செய்தேயும் ருசிகரமான தேசத்தில் நியோகித்துக் கொள்ள வேணும்
என்று அவன் உகந்து ஏவினதைச் செய்யக் கடவராய் இ றே இருப்பது
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் -என்னக் கடவது இ றே
நாம்
உனக்கு அபிமதம் ஆனத்தை எங்கள் நிர்பந்தம் ஒழிய நீ ஏவ செய்த போது அன்றோ எங்களுக்கு ஸ்வரூப சித்தி உண்டாயிற்று ஆவது
ஆட் செய்வோம்
உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் -என்கிறபடியே ஊத்துங்க விஷயம் ஆகையால் –
ஆயர் சிறுமியரான தாங்கள் தாழ்ந்த மனிச்சராகையாலும்-செய்வோம் என்று பிரார்த்திக்கிறார்கள்
கோவிந்தா உனக்கே நாம் ஆட் செய்வோம்
நீள் குடக் கூத்தனுக்கு ஆட் செய்வதே என்றபடி உனக்கு ஆட் செய்யுமது அன்றோ ப்ராப்தமாய் இருக்கிறது –
அப்படி யாகிறது -இனி என் என்றான்

காமம் மாற்று
வேறு ஒரு காமம் உண்டாய்ச் சொல்லுகிறது அல்ல வி றே -தேறேல் என்னை -என்று இருக்குமவர்கள் ஆகையால்
அடிமை செய்வாரையும் செறுமவை-ப்ரக்ருதி வாசனையாலும்-மனஸ் ஸூ அஸ்திரமாய் இருப்பது ஒன்றாகையாலும் சம்பாவிதமாக சங்கித்து
சூடகமே என்று தொடங்கி நாட்டாருக்குச் சொன்னவை தொடருகிறதோ என்று அது நடையாடாத படி வேணும் என்கிறது –
அத்தனையோ என்றான் -அவ்வளவு போராது
மற்றை -காமம் -மாற்று
நீ ஸ்ரீ வைகுண்டத்தில் ஸூ ரிகளுக்கு முகம் கொடுத்து இருக்கும் இருப்பில் க்ரமத்திலே பெறும் படி இருக்க ஒண்ணாது
நீயும் -பெண்காள் -என்று அழைக்க -நாங்களும் கிருஷ்ணன் -என்று சொன்ன பரிமாற்றமே நடக்க வேணும்
நகாம கலுஷம் சித்தம் -அவனுடைய ப்ராப்யத்தையும் ப்ராபகத்வத்தையும் சரண்யத்தையும் இந்நிலத்தின் தண்மையையும்
அந்நிலம் உத்தேச்யம் என்னும் இடத்தையும் -மநோ ரதம் தான் அமையும் என்னும் இடத்தையும் சொன்ன வாறே ஒரு அபேக்ஷை இன்றிக்கே
பலவற்றில் நெஞ்சு தாழா நின்றதே என்ன -தேபாத் யோஸ்திதம் –மம சித்தம் –நகாம கலுஷம்
-ப்ராப்யத்வம் ப்ராபகத்வம் சரண்யத்வம் -இவை எல்லாம் சொல்லிற்று நீ யாகையாலே -இவ்விடம் த்யாஜ்யம் என்றது -உன்னுடைய அனுபவத்துக்கு விரோதி யாகையாலே –
அவ்விடத்தில் உத்தேச்யதா புத்தி நடந்தது –அனுபவத்துக்கு ஏகாந்த ஸ்தலம் என்று -அல்லாதவை உத்தேச்யம் என்று உன் திருவடிகளில்
நிலை நின்றவர்கள் நெஞ்சு ஸ்ரீ வைகுண்டாதிகளாலே கலங்காது காண் என்றது இ றே -அப்படியே இவர்களும்
மற்றை –காமம் –
என்கிறார்கள் -மாற்று -என்றது -மற்று ஒன்றிஎன்கிற இடங்களில் சொல்லுகிறத்தை
கோவிந்தா -மற்றை -காமம் -மாற்று –
கண்ணன் வைகுந்தனோடான நிலையைக் குலைக்க வேணும் -இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய் செய்யும் தவம் தான் என் -என்னுமவர்கள் இ றே
நாங்கள் சிந்தையந்தி பட்டது படாமல் கிடாய் -அத்தனையோ வேண்டுவது என்றான்
நங்காமம் –மாற்று
ஆட் கொள்ளும் இடத்திலே எங்களுக்கு ஒரு இந்திரிய சாபல்யம் நடக்கும் -அந்த ஸுந்தர்ய ரூபமான
அந்தராயத்தையும் பரிஹரிக்க வேணும் -அத்தனையோ என்றான்
காமங்கள்
என்கிறார்கள் -இருவர் கூடப் பரிமாறா நின்றால் அத்தால் பிறக்கும் இனிமை இரண்டு தலைக்கும் ஒத்து இருக்கும் இ றே
விஷய வைலக்ஷண்யத்தாலும் ஆச்ரயத்தின் இனிமையாலும் மிகவும் ப்ரீதி ரூபமாய் இ றே பரிமாற்றம் இருப்பது –
அதில் ஸ்வரூபத்துக்கு விரோதியான அஹங்கார கர்ப்பமான அடிமையும் அபுருஷார்த்தம் இ றே
நாங்கள் செய்கிற அடிமை கண்டு நீ உகந்தால்-அவ்வுகப்பு கண்டு உகக்கமது ஒழிய போக்த்ருத்வ பிரதிபத்தியும் மதீயத்வ பிரதிபத்தியும் போஜனத்துக்கு
க்ரீமி கேசங்கள் போலே பொகட வேண்டும்படி விரோதமாய் இ றே இருப்பது -அந்த விரோதிகளையும் தவிர்த்து தந்து அருள வேணும் என்கிறார்கள் –

ஸ்வரூப விரோதியும் -சாதன விரோதியும் -பிராப்தி விரோதியும் -ப்ராப்ய விரோதியும் என்று நாலு வகையாய் இ றே விரோதிகள் இருப்பது
அதில் சாதன விரோதியும் பிராப்தி விரோதியும் கீழில் பாட்டிலே கழிந்தமை சொல்லிற்று -மற்றை இரண்டையும் இப்பாட்டில் கழிகிறது
கறைவைகள் பின் சென்று -உபாயாந்தரத்தில் அந்வயம் சொல்லுகையாலும் -பிராப்தி பிரதிபந்தகத்துக்கு ஷாபணம் பண்ணுகையாலும் இரண்டும் குலைந்தது இ றே
ப்ராப்ய ருசியும் த்வரையும் ஆர்த்தியும் விளைந்து பாஹ்யங்களிலே சங்கம் குலைந்த படி சொல்லுகையாலே ஸ்வரூப விரோதி குலைந்த படி
சொல்லிற்று -இப்பாட்டில் முற்கூற்றாலே -மற்றை நம் காமங்கள் மாற்று -என்கிறதாலே பல விரோதியைக் கழிக்கிறது –
கோவிந்தா உனக்கு என்று -அகாரார்த்தம் சொல்லிற்று / உனக்கே -என்று உக்காரார்த்தம் சொல்லிற்று / நாம் என்று மகாரார்த்தம் சொல்லிற்று
உன்னோடே உற்றோமே யாவாம் -என்கிற இடத்தில் நாராயண பதத்தில் அர்த்தம் சொல்லிற்று /
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் என்கையாலே சதுர்த்யர்த்தம் சொல்லிற்று -/ மற்றை நம் காமங்கள் மாற்று -என்று நமஸ்ஸில் அர்த்தம் சொல்லிற்று /
நடுவே நமஸ் ஸூ கிடக்கிறது ஸ்வரூப உபாயங்கள் இரண்டிலும் கிடக்கிற விரோதி போக்குகைக்கு இ றே
ப்ராப்ய ருசி கார்யமான த்வரையும் அதின் பலமான கலக்கமும் -விளைந்த ஆர்த்தியும் -இது எல்லாவற்றுக்கும் அடியான
ப்ராப்யாந்த்ர சங்க நிவ்ருத்தியும் -பேற்றில் அளவிறந்த பாரிப்பும் அதில் ஸ்வ பிரயோஜனத்வ நிவ்ருத்தியும் சொல்லா நின்று கொண்டு
பிரபந்த தாத்பர்யத்தையும் நிகமிக்கிறார்கள் -சத்வ உத்தர காலத்தில் உணருகையும் -பகவத் சந்நிதி ஏற வருகையும் சேவிக்கையும்
விக்ரஹ அனுபவம் பண்ணுகையும் -தத் சம்ருதியை ஆசாசிக்கையும் -தன் பக்கலிலே ஆபி முக்யம் பண்ணுவித்துக் கொள்ளுகையும்
அவதார பிரயோஜனங்களை விண்ணப்பம் செய்கையும் -ஆர்த்தியை பிரகாசிப்பிக்கையும் திரு உள்ளம் அறிய பலாந்த்ர சங்க நிவ்ருத்தியைக் காட்டுகையும்
-ஸூ ரிகள் பரிமாற்றத்தை அபேக்ஷிக்கையும் ஸ்வரூப விரோதிகளை அறுத்துத் தர வேணும் என்று வேண்டிக் கொள்ளுகையும் கைங்கர்ய ருசி யுடையாருக்கு ஸ்வரூபம் இ றே -இவை எல்லாம் நிழல் எழும்படி கிருஷ்ணன் திரு முகத்தைப் பார்த்து விண்ணப்பம் செய்கிறார்கள் –

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பாவை –கறவைகள் பின் சென்று–ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் வியாக்யானம் – ஆறாயிரப்படி —

January 15, 2017

மார்கழி நீராடுவான் என்று நோன்பை பிரசங்கித்து -அதுக்கு உபகரணங்களாக இருப்பன சங்கங்கள் முதலானவற்றையும்
-சூடகமே தோள் வளையே என்று விரதம் தலைக் கட்டினால் அலங்கரிக்கைக்கும் -உடுக்கைக்கும் உண்கைக்கும் வேண்டுவனவாய்
இருப்பன சில உபகரணங்களையும் -அவனுக்கும் தங்களுக்கும் அகவாயிலே சில நிழல் எல்லா நிற்க
நாட்டுக்கு மேல் எழுந்தன சில அபேக்ஷித்தார்களாய் நின்றார்கள் -கீழ் இரண்டு பாட்டிலும் –
அணி யாய்ச்சியார் சிந்தையுள் குழகனார் என்று இவர்கள் நெஞ்சிலே கலக்குமவன் ஆகையால் அவன் உங்கள் அபிசாந்தி இவ்வளவு என்று
தோற்றி இருந்தது இல்லை -நீங்கள் சொன்னதையும் இன்னம் மேலும் சொல்லுமவையும் யுண்டாகிலும் நாம் தரும் இடத்தில்
நீங்கள் நின்ற நிலை தன்னை அறிந்து கொள்ள வேணும் –பேறு உங்களதான பின்பு நீங்களும் சிறிது யத்னித்து வைக்க வேணும்
அதுக்கு உடலாக நீங்கள் அனுஷ்டித்த உபாயம் ஏதேனும் உண்டோ என்ன -எங்கள் அளவு கண்டாய்க்கு சில சாதனங்கள் உண்டோ என்று
சொல்லும் படி இருந்ததோ -என்று தங்கள் ஸ்வரூபம் இருந்த படியை அறிவித்து -கேவலம் தயா விஷயம் என்னும் இடத்தை திரு உள்ளம் பற்றி
நீ எங்கள் கார்யம் செய்ய வேணும் என்று தங்கள் உபாய ஸூந்யதையை விண்ணப்பம் செய்கிறார்கள் -இப்பாட்டில் –
போற்றி யாம் வந்தோம் -எம் மேல் விழியாவோ -உன்னை அருத்தித்து வந்தோம் -என்று தொடங்கி ப்ராப்ய ருசியை ஆவிஷ்கரித்தார்கள் கீழ்
அந்த ப்ராப்யத்தை பெறுகைக்கு உடலாக தங்களுடைய ஆகிஞ்சன்யத்தையும் அவனுடைய உபாய பாவத்தையும் சொல்லுகிறார்கள் இதில் –
யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள் என்றவாறே வந்த வருத்தங்களை ஆராயாதே அகவாயில் ஏதேனும் சில சாதனா அம்சங்கள் உண்டோ என்று ஆராய இழிந்தான்
நின் அருளே புரிந்து இருக்கிற எங்களுக்கு எடுத்துக் கழிக்கலாம் படியும் சில உண்டு என்று இருந்தாயோ -இரங்கு என்றும் அருள் என்றும்
நாங்கள் அபேக்ஷித்த அருளுக்கு பிரதிபந்தமாய்க் கிடப்பன ஒன்றும் இல்லையே என்று சர்வஞ்ஞன் அறிய ஒன்றும் இல்லாமையை யாதார்த்தேன அறிவிக்கிறார்கள் –

1-சித்த உபாய சுவீகாரம் பண்ணும் அதிகாரிகளுக்கு பேற்றுக்குக் கைம்முதலாய் இருபத்தொரு சத்கர்மம் இல்லை என்கையும்
மேலும்2- யோக்யதை இல்லை என்கைக்கா தங்களுடைய நிஷ்கர்ஷ அனுசந்தானமும் -3-மூல ஸூக்ருதமான ஈஸ்வரனுடைய குண பூர்த்தியை அனுசந்திக்கையும்
4–சம்பந்த ஞானமும் -5-பூர்வ அபராதங்களுக்கு ஷாமணம் பண்ணுகையும்
6-உபாய பூதனான ஈஸ்வரன் பக்கலிலே ப்ராப்யத்தை அபேக்ஷிக்கையும் இவை ஆறும் அதிகாரங்கள் ஆகையால்

நோற்ற நோன்பு இலேன் -குறி கோள் அந்தண்மை தன்னை ஒளித்திட்டேன்-குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் –
நலம் தான் ஒன்றும் இலேன் நல்லதோர் அறம் செய்திலேன் -தர்ம நிஷ்டை இல்லை என்று சத் கர்ம ராஹித்யத்தை சொல்லுவார் –
ராவனோ நாம -ஜகத்திலே பேர் படைக்கும் படி பர ஹிம்ஸையிலே அதிர நடத்துவதொரு பேர் மாத்ரமாய்ப் போகாதே -சர்வ விஷயமாக வழி கெட நடந்து
பரஹிம்சையே யாத்ரையாய் இருபத்தொரு ஜென்மமாய் -மேலும் திருத்த ஒண்ணாத படி நியாம்யன் அன்றிக்கே இருப்பான்
ஒரு தண்ணியனுக்கு சேஷ பூதனாய் -அவனாலே தூஷிதமான யுதிரத்திலே சிரகாலம் வாசனை பண்ணிப் பிறந்து முறுகல் தனத்தில்
அவன் என்னைக் கொண்டு நடத்த அநீதிகளில் நடந்து -அதில் அவனிலும் காட்டில் பிரகாசம் யுடையானாய் இருப்பான் ஒருவன் என்று நிகர்ஷம் சொல்லுவார் –
பொறுத்தேன் புன் சொல் நெஞ்சில் -என்றும் -எப்பாவம் பலவும் இவையே செய்து என்றும் -மனத்திலோர் தூய்மை இல்லை -என்றும்
நிந்தித கர்ம பூயஸ்த்தை சொல்லி மேலும் யோக்யதை இல்லை என்பர் –
அரவின் அணை அம்மானே -நம்பி கடல் வண்ணா -மாயனே எங்கள் மாதவன் –என்றும் -சரண்யா -என்பராய்க் கொண்டும் ஈஸ்வர குண பூர்த்தியை அனுசந்திப்பார்
உன் அடியனேனும் வந்து என்றும் -புகல் ஒன்றும் இல்லா அடியேன் என்றும் –சம்பந்த அனுசந்தானம் பண்ணுவார்
நாயினேன் செய்த குற்றம் நற்றமாகக் கோள் என்றும் -மத் வ்ருத்தம் அசிந்தையித்வா –ப்ரஸீதா –என்றும்
சர்வான் அசேஷத க்ஷமஸ்வ என்றும் பூர்வ அபராதத்துக்கு ஷாமணம் பண்ணுவார்
சன்மம் களையாய் –உன்னடி சேர் வண்ணம் அருளாய் என்று ப்ராப்யத்தை உபாய பூதனான நீயே தர வேணும் என்று அபேக்ஷிப்பாராய் இ றே அதிகாரிகள் இருப்பது –

ஆகையால் இவர்களும் தங்களுடைய ஆகிஞ்சன்யத்தையும் அயோக்யதையையும் ஆவிஷ்கரித்து உபாய பூர்த்தியையும் தங்கள் ப்ராப்தியையும்
முன்னிட்டு -கீழ் சொன்னவற்று எல்லாம் அனுதபித்து க்ஷமை கொண்டு எங்கள் ப்ராப்ய சித்திக்கு நீயே உபாயமாக வேணும் என்று
அபேக்ஷிக்கிறார்கள் -கார்ய நிர்ணய வேளை யாகையாலும் சர்வஞ்ஞன் சந்நிதி யாகையாலும் உள்ள படி தீர விட்டுக் கொள்ளாத போது புரை அறாது இ றே
நிதா நஞ்ஞனான பிஷக்கின் முன்பு வியாதி கிரஸ்தன் தான் பண்ணின அபத்யங்களை சொல்லி அந்த வியாதியைத் தீர்த்துக் கொள்ளுமா போலே
ஸ்வ தோஷத்தை ஆவிஷ்கரித்து ஷாமணம் பண்ண வேண்டி இ றே பிரபன்னர்க்கு இருப்பது –

புறம்பு அந்த வியாதிக்கு நிமித்தமும் பரிஹாரமும் பரிஹாரம் பண்ணும் பிஷக்கும் -பேஷஜமும் பத்யமும் வியாதி சமித்தால்
புஜிக்கும் போகமும் பேதித்து இருக்கும் -இங்கு வந்தால் அப்படி அன்று –
வேவாரா வேட்க்கை நோய் -என்று பிரேம வியாதிக்கு நிமித்தமும் தானாய்
மாலே மணி வண்ணா என்று கிருஷ்ணன் தானே பரிஹாரம் பண்ணும் மருத்துவமும் தானாய்
ஆயர் கொழுந்து மருந்தாம் -என்று பேஷஜமும் தானாய்
கொழுந்தில் கிழங்கு பத்யமுமாய் –
நோய் விட்டால் புஜிக்குமதுவும் எங்கள் அமுது என்கிறபடியே கிருஷ்ணன் தானாய் இ றே இருப்பது –
மருந்தும் –அமுதமும் தானே என்று அம்ருதம் ஒளஷதமாம் படி இருக்கிறது இ றே
வியாதி க்ரஸ்தர் -மருந்து -என்று இருப்பார்கள் -வியாதி ரஹிதர் அமுதம் என்று இருப்பார்கள் –
இங்குள்ளார் நோய்கள் அறுக்கும் மருந்து என்று இருப்பார்கள் -அங்குள்ளார் போக மகிழ்ச்சிக்கு மருந்து என்று இருப்பார்கள்
நோய் இல்லாதான் ஒருவனும் தன்னை மருந்து என்று அறியான் -தேனில் இனிய பிரானே அரு மருந்து ஆவது அறியாய் -என்னக் கடவது இ றே

இப்படி பிரபலமாய் இருபத்தொரு ஒளஷதம் பெற்றால் கடுக்க பரிஹரித்துக் கொள்ள வேண்டும் என்கையால்
சுத்த பாவராய் உன்னால் அல்லது செல்லாதாரைப் போலே எங்களை நிரூபியாதே
திரு முன்பே நின்று சொன்ன வார்த்தையைப் பொறுத்து அருள வேணும் என்று ஷாமணம் கொள்ளுகிறார்கள்
உபசார புத்தயா பண்ணும் அபசாரங்களையும் ஷமிப்பான் ஒருவன் ஆகையால் இறே அபத்ய ஒளஷதம் என்றது -நச்சுமா மருந்தும் இ றே
இப்போதே எம்மை நீராட்டு என்று ஆசு கார்யமான ஒளஷதம் ஆகையால் அப்போதே குளித்து உண்ணப் பண்ணும் இ றே –

ஆகையால் கண் அழிவற்ற ப்ராபக சுவீகாரம் பண்ணுகிறார்கள் -ப்ராபக சுவீகாரம் தான் -தத் இதர சர்வ உபாய தியாக பூர்வகமாய்த்து இருப்பது –
அவை நின்ற நின்ற அளவுக்கும் ஈடாய் இருக்கும் -அவற்றில் அதிகரிக்கைக்கு அசக்தனானவன் மாட்டேன் என்றும்
-அதிகரித்தே அப்பிராப்தியை யுணர்ந்தவன் விட்டேன் என்றும் -அறிந்து அதிகரியாதவன் அவை எனக்கு இல்லை என்றும்
-அவை அறியாதவன் ருசி வாசனைகளும் இல்லாதவன் ஆகையால் தான் பூர்ண அதிகாரி என்னும் இடத்தை காட்டினான் ஆகிறான்
நஸஸாமர்த்யவான் -என்பாரும் உண்டு -ஸந்த்யஜ்ய என்பாரும் உண்டு –நோற்ற நோன்பு இலேன் என்பாரும் உண்டு -மற்றேல் ஓன்று அறியேன் -என்பாரும் உண்டு –
ஆகையால் இ றே உபாயம் சர்வாதிகாரம் ஆகிறது -உபாயாந்தரம் யுடையவனுக்கு அவற்றை விட வேண்டுவான் என் என்னில்-
பகவத் வியதிரிக்தமாய் இருபத்தொரு ஓன்று உபாயம் ஆக மாட்டாமையாலே-அவை உண்டானாலும் இவன் கை பார்த்து இருக்க வேணும் இ றே
-அவை அஸக்ய கிரியை என்று மீளுதல் ஸ்வரூபத்தை உணர்ந்து மீளுதல் அத்தனை –
அவை உடையவர்கள் விடுவது இல்லாதவர்கள் இல்லை என்று அறிவிக்கையுமாய் இ றே இருப்பது –
அதில் இவர்கள் தான் எங்களுக்கு த்யாஜ்யாந்தரம் இல்லை என்கிறார்கள்
மஞ்சனக் கொட்டும் மேல் சங்கும் போற்றவும் புகழவும் பகல் விளக்கு பிடிக்கையும் கொடி எதுகையும் மேல் கட்டி கட்டுகையும்
-ஆபரணங்கள் பூண்கையும் உடுக்கை உடுக்கையும் அடுகுவளம் எதுகையும் இவை எல்லாம் அதிசயித புண்யருடைய வரிசை இ றே
-ஷூத்ர மான ராஜ போகமன்றே நீங்கள் நினைக்கிறது –
வான் இள வரசு -நம்மோடு கூடி இருந்து குளிர்ந்து உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் புஜிக்கும் போது ஜன்மாந்தர சஹஸ்ரங்களிலே
தபோ ஞான சமாதிகளாலே விளைந்த புண்ய பலமாக வர வேணும் -அப்படிக்கு நீங்கள் ஏதேனும் செய்தது உண்டோ -என்ன சொல்லுகிறார்கள் –

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்-

கறவைகள் பின் சென்று
சாங்க அத்யயனம் பண்ணி -அர்த்த ஞானம் பிறந்து -விஹித கர்மங்களை அனுஷ்ட்டித்து -விரோதி பாப ஷயம் பிறந்து -சுத்த பாவனாய்
-ஜிதேந்திரனாய் விஷயங்களின் நின்றும் ப்ரத்யாஹ்ருதமான மனசை ஆத்ம ப்ரவணம் ஆக்கி ஆத்ம யோகம் கை வந்து
-அந்தர்யாமி அளவும் சென்று அவனுடைய ஸ்வரூபாதிகளை ஸ்ரவண மனனங்கள் பண்ணி அர்ச்சனா ப்ரணாமாதி பூர்வகமான
நிரந்தரமான தியானத்தை பண்ணி -இப்படி திரண்ட ஸூஹ்ருதத்தாலே உன்னைப் பெறும் அந்த யோகத்தில் அந்வயிப்பதாக இறே வேதாந்தங்களில் சொல்கிறது
இந்த தரிசன சாமாநாகாரமான நிரந்தர ஸ்ம்ருதிக்கு விஷயமான பகவத் ஸ்வரூப ஞானத்துக்கு காரணமான ஆத்ம அவலோகந ஹேதுவான
ஜிதேந்த்ரியத்துவத்துக்கு மூலமான பாப க்ஷய ஹேதுவான விஹித கர்ம அனுஷ்டானத்துக்கு நிமித்தமான -அர்த்த ஞானத்துக்கு சாதனமான
சாங்க அத்யயனம் குருகுல வாச சாபேஷமாய் இ றே இருப்பது –
அதுக்கு அடியாக நாங்கள் குருகுல வாசம் பண்ணின படியைக் கேட்டருளல் ஆகாதோ என்கிறார்கள்
கறவைகள் பின் சென்று
இவர்கள் சேவித்த ஆச்சார்யர்கள் இருக்கிறபடி-அபிஜான வித்யா விருத்தங்கள் மூன்றும் அவதாதமாய் இருப்பாரை இ றே ஸேவ்யராகச் சொல்லுகிறது –
திர்யக் ஜென்மம் ஆனபடியால் பிறவியும் விபரீதமாய் ஞான ஹீனரை பசு பிராயர் என்னும் படி ஞானமும் இன்றிக்கே துராசாராரை ந்ரு பசுக்கள்
என்னும் படியாகவும் பசு சமர் என்னும் படியாகவும் விருத்த ஹீனங்களும் ஆனவற்றை இ றே நாங்கள் ஆச்சார்யர்களாக பிரபத்தி பண்ணுவது
பஹு சுருதராகையாலே ஞான விருத்தருமாய் ஞான விருத்தர் பலர் நெடும் காலம் சேவிக்கைக்கும் வீதராகர் ஆகைக்கும் வயோ விருத்த ரூபமாய்
ஞான அனுரூபமான சீலத்தாலும் பழுத்து ப்ரஹ்ம வாதிகளாம் படி தத்வ தர்சிகளுமாய் விபரீதம் சொல்லும் பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிற
பிறரை பிரமாண சதங்களாலே வென்று பகவான் மனன பரராய்
கர்த்தவ்யங்கள் சோராமல் அனுஷ்ட்டித்து ஒரு ப்ரஹ்ம நிஷ்டராய் இருப்பாரை ஆச்சார்ய அனுவர்த்தனத்தைச் சொல்லுகிற சாஸ்திரங்களில்
சொன்ன பிராணிபாத அபிவாதன பரப்ரஸ்ன சேவைகளில் ஒன்றும் குறையாத படி இன்றே அனுஷ்டித்துக் கொண்டு இ றே அறிவுடையார் போருவது –
நாங்கள் கறவைகளை அனுவர்த்தித்தோம் -அதுக்கு உறுப்பாக உண்ணும் நாளும் இன்றிக்கே உறக்கமும் இன்றிக்கே பயாநாமபஹாரியை
அண்டை கொண்டு அபயங்கதராய் இளையவர் கலவியின் திறத்தை நாணினவர்களை இ றே அனுவர்த்தநீயராக சாஸ்திரம் சொல்வது –
ஆஹார நித்ரா பய மைதுனங்களில் அநியதங்களாய் இருக்கும் பதார்த்தங்களை ஆச்சார்யர்களாக வரித்தோம் –இது எங்களுடைய வ்ருத்த சேவை இருந்த படி
கறவைகள் பின் சென்று
அறிவு கேட்டுக்குத் தலையான கன்று காலிகள் முன்னே போக அவற்றின் பின்னே சென்றாய்த்து இத்தனை காலமும் திரிந்தது
எங்களை பார்த்தால் பசுக்களும் வசிஷ்ட பராசராதிகள் கோடியிலே யாய் எங்கள் இளிம்பு கண்டு சிரித்து எங்கள் ஆர்ஜவத்தை
அநுகரித்து அவை வழி காட்ட அவற்றின் பின்னே திரிந்தோம் சிலர்
காலிகள் பின் சென்று என்னாதே -கறவைகள் பின் சென்று -என்றது தர்ம புத்தயா ரஷித்தது அன்று -பிரயோஜன புத்தயா செய்தது என்கைக்காக –
எருதுகள் வதடுகள் ஈற்று மறுத்தவை ரஷித்து அறியோம் –
பின் சென்று
ப்ராப்ய ருசி யுடையார் அது கை புகுரும் அளவும் பெரு விடாயர் நீர் நசை யுள்ள இடம் எங்கும் தட்டித் திரியுமோ பாதி
ருசிக்கு வர்த்தகராய் இருப்பார் பின்னே கலசம் பூர்ணமாதாய பிருஷ்ட கோநுஜகாமஹ –
என்கிறபடியே பூர்ண கலாசாதிகளையும் கொண்டு ஸமித் பாணிகளாய்த் திரிதல் -பிராப்யம் கை புகுந்தால்
பிருஷ்ட தஸ் துத நுஷ் பாணி -என்னும் படி தாய் நாடும் கன்றே போல் பிரிவில் நாக்கு ஓட்டும் படி வாளும் வில்லும் கொண்டு
பின் தொடர்ந்து அனுவர்த்தித்து திரியக் கடவதாய் இ றே இருப்பது –
அதுக்கு உடலாக நாங்கள் உறியும் மழுவும் தடியும் கொண்டு ஞான பிரதராகவும் ப்ராப்ய வஸ்துவாகவும் நினைத்துப் பின் சென்றது பசுக்களை –
கறவைகள் பின் சென்று
பசுக்களை மேய்த்து பின்னே திரிந்தாலும் போய்த் தங்குவது சத்துக்கள் இருக்கும் புண்ய ஷேத்ராதிகள் ஆகில் அழகியது இ றே
கோவலூர் சாளக்ராமாதிகள் அயோத்தியை மதுரை கோயில் தொடக்கமான யூர்கள் கிராமங்கள் ஆஸ்ரமங்கள் தொடக்கமான இவற்றில்
இராத் தங்கினாலும் அழகியது இ றே என்ன

கானம் சேர்ந்து
என்கிறார்கள் -வஸ்து பூதர் வர்த்தித்தல் நீ அபிமானித்தல் செய்யும் பிரதேசங்களிலும் மழைக்கு ஒதுங்கி ஓர் இராத் தங்கியும் அறியோம்
ஒரு கோபாலர் அபிமானத்தில் மழைக்கு ஒதுங்கில் வாரிப் பிடியாக அகப்படும் இ றே
கானம் சேர்ந்து
பசுக்களுக்குப் புல்லும் நீரும் உள்ள இடம் தேடி அவ்விடத்தே நெருங்கிப் போந்தோம் இத்தனை
கானம்
காடுகளில் -தாண்ட காரண்யம்-நைமி சாரண்யம் -பத்ரிகாஸ்ரமம் -தொடக்கமான வற்றிலே நம்முடைய
அபிமானம் யுண்டாய் -சத்துக்களும் ஒதுங்கிப் போருவர்களே என்ன -ஒரு விசேஷணம் இடாதே வெறும்
கானம்
என்கிறார்களே -இவர்கள் வர்த்திக்கும் காடு -எவ்வுஞ்சிலை வேடர் காடு இ றே -அடி இடுவார்
காலிலே அருவும் -பிருந்தாவனம் ஆகையால் சத்துக்கள் சேரும் இடம் அன்றே
சென்று சேர்ந்து
பரவிச் சென்மின்களே –சென்று வணங்குமினோ -என்னும் இடங்களில் சென்று அறியோம் –
சேர்மினீரே-மணி மாடம் சேர்மின்களே -என்கிற இடங்களில் சேர்ந்தும் அறியோம்
பரன் சென்று சேர் -என்று உனக்கும் கந்தவ்யமாய் ப்ராப்யமுமாய் யன்றோ அவை இருப்பது
அவற்றில் சென்றும் அறியோம் -சேர்ந்தும் அறியோம் -சென்று -சேர்ந்து -என்கையாலே -அவற்றிலே பொருந்தி இருக்கை –
சத்துக்கள் அனுவர்த்தனமும்-புண்ய க்ஷேத்ர வாசமும் பெற்றிலோம் என்கிற இழவும் இல்லை -நீங்கள் வைசியர் ஆகையால்
கோ ரக்ஷணத்தை வர்ண தர்மத்தில் சில எழுதலாம் -காட்டில் தங்குகையை வான பிரஸ்தான ஆஸ்ரமத்திலே முதலிட்டு ஆஸ்ரம தர்மம் ஆக்கலாம் –
ஆச்ரய அர்த்தமாக பசுக்களை மேய்த்து காடுகளில் தங்குகையும் தர்மமாகச் சொல்ல நிற்கும் -தபஸ் பரரான ரிஷிகளும் அரண்ய வாசம் பண்ணி அன்றோ
தர்மார்ஜனம் பண்ணுவது -ஆகையால் கர்ம யோகத்தில் அடைக்கலாய் இருபத்தொரு புடை யுண்டே அவற்றுக்கு என்ன –

உண்போம் –
என்கிறார்கள் -வர்ண ஆஸ்ரமங்கள் நடத்துகைக்காகவும்-ஆஸ்ரய அர்த்தமாகவும் வீத ராகரைப் போலே அத்ருஷ்டார்த்தமாகவும் செய்தது அல்ல –
காய கிலேசத்தை பிறப்பித்து அத்தாலே ஒரு புண்யம் உண்டாகைக்காக தர்ம புத்யாயா செய்தோம் அல்லோம் -உதர போஷண பரராய்ச் செய்தோம் அத்தனை
உண்போம்
வயிறு வளர்க்கையே புருஷார்த்தம்
கானம் சேர்ந்து உண்போம்
காட்டில் போனால் புழுதியும் வேர்ப்பும் போகக் குளித்து உண்டு அறியோம் -குளித்து உண்ணில்-ஸ்நாத்வா புஞ்சீத -என்கிற விதியை
அனுவர்த்தித்தார்கள் என்று அவன் தர்மம் ஏறிடுமே
உண்போம்
அருகிருந்தார் கையில் ஒரு பிடி இட்டு அறியோம் –அப்போது ஆதித்யம் -அதிதி பூஜை –பண்ணினார்கள் என்று தர்மம் எழுதும்
கானம் சேர்ந்து உண்போம் –
ஒருவர் வாச பூமியிலே புக்கு உண்ணில் -அங்கே தேவதைகள் இருக்கையாலே யஞ்ஞ சிஷ்டாசானம் பண்ணினி கோளே என்று பிடிக்கும்
பின் சென்று உண்போம்
பிராங்முகத்வாதி நியமம் இல்லை
சென்று உண்போம்
இருந்து உண்ண வேணும் என்கிற நிர்பந்தம் இல்லை
உண்போம்
பசுக்கள் அசையிடாது இருக்குகிலும் நாங்கள் புஜியாது இருப்பதில்லை
உண்போம்
உச்சிஷ்டம் -அபோஜ்யம் -பர்யுஜிதம் தொடக்கமான வற்றில் ஒரு வரம்பு இல்லை
-இது எங்களுடைய கர்ம யோகத்தின் நிலை இருந்த படி என்கிறார்கள் –
நாம் காலிப் பின்னே போகிறிலோமோ-நாம் காடு வாழ் சாதி ஆகிறிலோமோ-வேண்டி அடிசில் உண்ணும் போது ஈது என்று பசித்து இருந்து
சோறு பெற்றால் நின்றார் உகப்பும் சிறிதும் நினையாதே ஆடி அமுது செய் என்றாலும் குளியாதே-மந்த்ர விதியில் பூசனைகளையும் விலக்கித் திரியா நின்றோம் –
நமக்கு ஏதேனும் தோஷம் உண்டாகா நின்றதோ என்ன -உங்களுக்கு ஏச்சுக் கொலோ -என்று நாங்கள் செவி புதைக்கும் படி நிந்திதமான வார்த்தையைச் சொன்னாயீ என்ன
ஆகில் தேஜோ விசேஷேண ப்ரத்யவாயோ நவித்யதே -யன்றோ -ஞானாதிகரான உங்களுக்கு இவை தோஷாவஹமாய் புகுகிறதோ என்ன
கேவலம் உதர போஷண பரராய் இருக்கிற எங்களை ஞானம் யுடையவர்கள் அன்றோ என்னலாமோ என்கிறார்கள்
இப்போது இவை இல்லை யாகிலும் ஜன்மாந்தரங்களிலே சத்கர்மங்கள் யுண்டாய் -அத்தாலே பாப ஷயம் பிறந்து
மநோ நைர்மல்யம் யுண்டாய் இப்போது ஞானம் பிறக்கவுமாகுமே –
உங்களைப் போலே கோ ரக்ஷணம் பண்ணுகையும் அன்றிக்கே கோ வதம் பண்ணுகையை பிரயோஜனமாய் -அது க்ரயித்து
ஜீவியா நிற்கச் செய்தே தர்ம ஸந்தேஹ நிவர்த்தகனாய் இருந்தான் தர்ம வ்யாதன் அன்றோ –
உங்களை போலே அரண்ய வாசம் பண்ணாதே நகர வாசம் பண்ணா நிற்கச் செய்தே விதுரன் ஞானாதிகன் என்று பிரசித்தனாய் இருந்தான் –
யதேஷ்ட அன்ன பரனாய் திரியா நிற்கச் செய்தே –
இவர்கள் எல்லாம் கிடக்க உங்களோட்டை பெண்டாட்டி தான் சிரமணி யன்றோ தர்ம நிபுணையாய் இரா நின்றாள்
தர்ம யோகம் இல்லையாகில் ஒழிகிறது -மோக்ஷ ஹேது வான ஞான பக்தி யுண்டாகில் குறையில்லையே -அவை வளர வளர க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா என்கிறபடியே
அவை தன்னடையே குலைந்து விடும் -பஹு மந்தவ்யைகளான உங்களை நாம் எளிதாக நினைத்து இராமே என்ன

அறிவொன்றும் இல்லாத –
என்கிறார்கள் -எங்களை அப்படியோ நினைத்து இருக்கிறது -நீ நினைத்து இருக்கிற ஞானத்தில் பிரசங்கத்தில் பிரதி ஷேதமும் இல்லை காண்
அறிவில்லை
அறிவு ஓன்று இல்லை
அறிவு ஒன்றும் இல்லை
கர்ம யோகத்தில் உண்டான -ஆத்ம யாதாம்யா ஞானம் இல்லை -பக்தி யாகிறது ஞான விசேஷம் ஆகையால் அந்த ஆத்மஞானம் அடியாக
யுன் பக்கல் ஞானம் பிறந்து நீ உத்தேச்யன் என்று புத்தி பண்ணி உன் பக்கலிலே யுண்டான அனவரத பாவன ரூபமாய் வரும்
பக்தி ரூபா பன்ன ஞானம் இல்லை –
இவை இரண்டுக்கும் அடியானை பிரகிருத ஆத்ம விவேகாதிகள் சம தமாதி சாதன சமபக்தி தொடக்கமானவை யுண்டாய்
முமுஷுவாகைக்கு யோக்யமாய் இருக்கும் அவற்றிலும் ஓர் அன்வயம் இல்லை –
கர்ம யோகம் தானும் ஜீவா பர யாதாம்யா ஞானக பூர்வகமாக இருப்பது அன்றோ என்னில் தேஹாதிரிக்த ஆத்ம ஞானமும் ஈஸ்வர ஞானமும்
கர்ம அங்கமாய் இருக்கும் -இவ்வளவே அங்கு உள்ளது -இப்போது தனித்து உபாயமாய் நிற்கும் ஞான யோகத்தையும் பக்தி யோகத்தையும் இல்லை என்று சொல்கிறது
அறிவு இல்லை என்கிறதும் ஓர் அறிவின் கார்யம் இ றே -பேற்றுக்கு உடலாக தங்கள் தலையால் வரும் அறிவை இவர்கள் இல்லை என்கிறது
அறிவு ஒன்றும் இல்லாத
ஞான தவ்யங்களாய் இருக்குமவை ஒன்றிலும் அறிவில்லை என்று தந்த்ரேண உபாதானம் பண்ணுகிறார்கள்
உண்போம் அறிவொன்றும் இல்லாத
ஆஹார சுத்தி உண்டானால் அன்றோ ஞானம் பிறப்பது -ஊணர்க்கும் உண்டோ அறிவு –
ஞானம் உண்டாய்க் கழிந்ததாகவும் கூடுமே -மேல் உண்டாகைக்கும் யோக்யதை யுண்டே என்ன

ஆய்க்குலம்
அறிவில்லாமை ஜென்ம சித்தம் -எங்கள் பிறப்புக் கண்டாய்க்கு கர்ம ஞான பக்திகள் யுண்டோ என்று கேட்க வேண்டி இருந்ததோ
கீழே இல்லை என்றவை உபேக்ஷையாய் வந்தது அன்று -யோக்யதை இல்லாமையால் குலைந்தது என்கிறார்கள் –
ஆய்க்குலம்
ராவணன் துர் வ்ருத்தன் என்கைக்கு அடி என் என்ன -ராக்ஷஸன் என்றால் போலே -ஏழை ஏதலன் என்கைக்கு அடி என் என்ன -கீழ் மகன் என்றால் போலே
அறிவில்லாமைக்கு
ஆய்க்குலம்
என்கிறார்கள் -ஒன்றும் அறிவு ஒன்றும் இல்லாத ஒருவரைக் கோபாலர் -என்னக் கடவது இ றே –
வ்ருத்த ஹானியை யுணர்ந்து திரிய விடுவிக்க ஒண்ணாத படியாய்த்து இருப்பது ஜென்மம்
யஞ்ஞ தான தபஸ் ஸூ க்களுடைய பரிகரங்களுக்கு விபரீதங்களிலே நடந்த படியால் கர்ம யோகம் இல்லை என்றி கோள்
ஆக இரு படியால் பேற்றுக்கு அடியாய் இருபத்தொரு புண்ணிய லேசமும் இல்லை என்றி கோள் -உங்களுக்கு உள்ளது என் என்ன –
ஆய்க்குலத்துப் பிறவி பெறும் தனை புண்ணியம் யாமுடையோம்
எங்களை என் சொன்னாயே -சாஷாத் புண்ணியத்துக்கு பாலும் சோறும் இட்டு அன்றோ வளர்க்கிறோம் –
ஆர்ஜித ஸூ ஹ்ருதம் இல்லை என்றோம் அத்தனை போக்கி அயத்ன சித்த ஸூஹ்ருதம் இல்லை என்றோமோ
-சாத்திய ஸூ ஹ்ருதம் இல்லை என்னும் காட்டில் சித்த ஸூ ஹ்ருதம் இல்லை என்று இருந்தாயோ
உன்னால் ஸ்தாபிக்கப் படுகிற கர்மங்கள் இல்லை என்றோம் அத்தனை ஒழிய தர்ம ஸ்தாபகனாய் சாஷாத் தர்மமான யுன்னை இல்லை என்னலாமோ
ஆய்க்குலத்து உன் தன்னை
நீ எங்கள் குடியில் விரும்பி வந்து பிறக்கும் படி அன்றோ எங்கள் ஐஸ்வர்யம்
ஆய்க்குலத்து
நாங்கள் எத்தனையேனும் கை கழியச் செய் தேயும் நீ அவ்வளவு எல்லாம் வந்து கிட்டின பின்பு எங்களுக்கு அதிகாரத்தில் குறை யுண்டோ –
எங்கள் இடைக் குலத்தில் நீ வந்து பிறைக்கைக்கு அடியான புண்ணியத்தை நாங்கள் யுடையோம் –
எங்கள் பேற்றுக்கு உபாயமும் நீயே -அதுக்கு அடியா ஸூஹ்ருதமும் நீயே யாகப் பெற்றோம்

ஆய்க்குலத்து உன்தன்னை
இதிலே நீக்கி முகக்கவோ நீ பிறந்தது -இவ்வாய்க்குலத்தை வீடுய்யத் தோன்றிற்று உய்ய
இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே -என்னக் கடவது இ றே
நீ ஸூ ஹ்ருதமாய் நின்று இக்குலத்தை எடுக்கைக்கு ஆண் பெண் சட்டிப் பானை ஓன்று யுண்டோ –
உன் தன்னை
ஸூ ரிகள் அனுசஞ்சரங்களாய் தொடர்ந்து குற்றேவல் செய்கிற யுன்னை கறைவைகள் பின் செல்லுகிற குலத்திலே பெற்றோம்
தடம் கடல் சேர்ந்த யுன்னை கானம் சேர்ந்த குலத்திலே பெற்றோம் –
ஆய்க்குலத்து உன் தன்னை
அன்ஸனன்-என்னும் படி ஓட்டறுத்து உண்ணாதே நிற்கும் உன்னை உண்போம் என்கிற எங்கள் குலத்திலே பெற்றோம் –
திவ்ய ஞான உபபன்னருக்கு முகம் கொடுக்கிற உன்னை அறிவு ஒன்றும் இல்லாத குலத்திலே பெற்றோம்
ஆய்க்குலத்து உன் தன்னை
இமையோர் தம் குலமுதலான உன்னை ஆயர் தம் குலமுதலாகப் பெற்றோம்
ஆய்க்குலத்து உன் தன்னை
வெங்கதிரோன் குலத்தில் காட்டில் இக்குலத்துக்கு உண்டான வாசி பாராய் -நீ பகல் விளக்கான குலமும் நீ அணி விளக்கான குலமும் ஒக்குமோ
பிறவி
சென்னாள் தோற்றி என்னும் படி நீ ஆவிர்ப்பவித்த யாதவ குலமோ இது -நந்தன் பெற்ற வானாயன்-என்னும் இடம் அன்றோ இது

பெறும் தனை புண்ணியம்
பெறுகைக்கு தக்க பாக்யம் -புண்ணியத்தை உன்னாலே தேடலாம் -புண்யாம் நாம் அபி புண்யோசவ்-என்கிற உன்னைப் பெறுகைக்கு தக்க புண்ணியம் வேணும் இ றே
புறம்பு உண்டான புண்ணியங்களை உன்னாலே பெறலாம் -உன்னைத் தர வல்லது உண்ணில் விஞ்சினது இல்லையே
கிருஷ்ணம் தர்மம் சனாதனம் என்கிற சனாதன தர்மம் நீயே இ றே -இத்தை புண்ணியம் என்றால் ஈது அன்று என்பார் யார்
வேத வித்துக்கள் சொல்லவோ -அத்யாத்ம வித்துக்கள் சொல்லவோ -கர்மபாக நிஷ்டரும் அன்று என்னார்கள்-ஞான பாக நிஷ்டரும் அன்று என்னார்கள்
பெறும் தனை புண்ணியம்
பறை தரும் புண்ணியனே இ றே தன்னையும் தருவது -பிறக்கைக்கு ஹேது வே இ றே தருகைக்கும் ஹேது
வேண்டி வந்து பிறந்ததும் –
நம்மைப் பெறும்படியான புண்ணியம் -என்ன நோன்பு நோற்றாள் கொலோ -என்கிற யசோதையுடைய ஒருத்தியது அன்றோ என்ன
யாமுடையோம்
அவள் பெற்று உடையளானாள் -நாங்கள் பிறந்து உடையோம் ஆனோம் -அஹோ பாக்யம் அஹோ பாக்யம் நந்த கோப விரஜவ்கசாம் -என்று
ஊருக்காக பலித்தது இ றே –
இருந்த ஊரில் இருக்கும் மானிடர் என்கிறபடியே உங்கள் தபஸ் பலமாக பெற்றி கோள் ஆகிறி கோள் -நாம் பிறந்த ஊரில் இருக்கைக்கு
புண்ணியம் பண்ணினி கோள் ஆகிறி கோள் என்றான்
உடையோம்
நாங்கள் ஓன்று செய்து ஆர்ஜித்தோம் அல்லோம் -இந்த ஸூ ஹ்ருதம் சத்தா நிபந்தனம்
உடையோம்
நாங்கள் செய்ததும் அல்ல -ஸ் வீகரித்ததும் அல்ல -இப்புண்ணியத்துக்கு செய்யுமவையும் ஸ் வீகரிக்குமவையும் பிரதிபந்தகங்கள் இ றே
-புறப் பகையும் கழிக்க வேண்டா- உட்ப் பகையும் கழிக்க வேண்டா –
யாமுடையோம்
எங்கள் ஸூ ஹ்ருதத்தில் பாதக ஸ்பர்சம் இல்லை -மஹா பாதக ஸ்பரிசமும் இல்லை
புண்ணியம் நாமுடையோம்
நாட்டில் புண்ணியங்கள் அநேகங்களுமாய் பிரதி நியதங்களுமாய் இருக்கும் -எங்கள் புண்ணியம் ஒன்றாய் அது எல்லார்க்கும் பொதுவாய் இருக்கும்
-யாவர்க்கும் புண்ணியம் என்னக் கடவது இ றே
அறிவு ஒன்றும் இல்லை என்பது -புண்ணியம் நாமுடையோம் என்பதாய்க் கொண்டு வியாஹத பாஷாணம் பண்ணினி கோள் என்ன
ஓர் ஆச்ரயத்தில் யுண்மையும் இல்லாமையும் சொல்லில் அன்றோ வியாஹதி உள்ளது -அப்ரயோஜனங்களை அன்றோ நாங்கள் இல்லை என்கிறது –
எங்களுடைய அபிமத சித்தி யாதொன்றால் அத்தை இல்லை என்றோமோ –

குறை ஒன்றும் இல்லாத
எங்களுக்கு அறிவு ஒன்றும் இல்லை என்றோம் அத்தனை போக்கி எங்கள் புண்ணியத்துக்கு ஏதேனும் குறை சொல்லிற்று உண்டோ –
உண்டானாலும் கழுத்துக்கு கட்டியாம்-அவற்றினுடைய இல்லாமை சொல்லுகை உன்னுடைய அனுக்ரஹத்துக்கு ஹேதுவாம் அத்தனை அன்றோ
எங்கள் தலையால் வருமத்தை இல்லை என்றோம் அத்தனை போக்கி உன் தலையால் வருமத்தை இல்லை என்றோமோ –
குறைவு இல்லை
குறை ஓன்று இல்லை
குறை ஒன்றும் இல்லை
எங்கள் புண்ணியம் சாபேஷமும் அன்று -ஸாவதியும் அன்று -பிரபல பாப நிவ்ருத்தமும் ஆகாது
உத்பத்தியில் சேதனனை அபேக்ஷிக்கும் என்ன வேண்டா சாத்தியம் அல்லாமையாலே
பலம் கொடுத்தால் குறையும் என்ன ஒண்ணாது பரம சேதனன் ஆகையால்
பிரபல கர்மத்தால் தகைப் படும் என்ன ஒண்ணாது சர்வ சக்தி யாகையாலே
நிரபேஷனைப் பற்றாய் -பூர்ணணைப் பற்றாய் -பிரபல பாபங்களை நான் போக்குகிறேன் என்றது வெறுமனேயோ –
குறை ஒன்றும் இல்லாத
ராஜாக்கள் வழி போம் போது மேடு பள்ளம் ஓக்க விட்டு அன்றோ போவது -பெருமாள் கடலைத் தூர்த்து வானர சேனையை நடத்தினால் போலே
உன் குறைவில்லாமையை எங்கள் குறைவிலே இட்டு நிரவி ஓக்க விட்டுக் கொள்ளும் அத்தனை
எங்கள் அறிவு ஒன்றும் இல்லாமை யாகிற பாழ்ந்தாறு நிரப்புகைக்கு வேண்டும் புஷ்கல்யம் போராதோ யுனக்கு
உன் குறைவில்லாமை எங்கள் அறிவு இல்லாமையை அபேக்ஷித்து அன்றோ இருப்பது -குறைவாளரை ஒழிய நீ நிறைவாளனாம் படி எங்கனே
ஒரு மேட்டுக்கு ஒரு பள்ளம் நேர் அன்றோ -ஆகில் ஒன்றும் இல்லை என்று சொன்ன இடம் உங்களுக்கு ஸ்வரூப ஞானம் இல்லாமை இ றே என்ன

கோவிந்தா
நீயோ தான் சால அறிவுடையாய் இருக்கிறாய் -உனக்கு ஸ்வரூப ஞானம் யுண்டாகில் ஸூ ரிகள் நடுவே இராயோ-
அவனுடைய அறியாமை இ றே நமக்கு பற்றாசு -நீ அயர்வறும் அமரர்கள் அதிபதி என்று உன்னை அறிந்தாய் யாகில் பசுக்களின் பின்னே போகப் பெறுவிதியோ –
அவன் தன்னை அறிந்தாலும் பெற விரகு இல்லை -நம்மை அறிந்தாலும் விரகு இல்லை
-அவன் ஸ்வா தந்தர்யத்தையும் மறந்து நம்முடைய அபராதத்தையும் மறைக்கை இ றே நமக்குத் பெறலாவது –
குறை ஒன்றும் இல்லா கோவிந்தா
இக்குறை ஒன்றும் இல்லாமை பரத்வத்தில் அன்று -தாழ நின்ற நிலத்திலே சாம்யா பன்னர்க்கும்-அவர்களில் சிறியவர்களுக்கும்
-அவர்களோடு ஒத்தவர்களுக்கும் முகம் கொடுக்கும் என்கிற குறை அங்கு –
குறை யுண்டு என்னவும் அறியாதாரோடே பொருந்தித் திரிந்தவன் அன்றோ -உனக்கு இற்றைக்கு விசேஷம் என் –
எங்கள் குறையால் எங்களுக்கு இழக்க வேண்டுவது உன்னுடைய பூர்த்தியில் ஏதேனும் குறை யுண்டாகில் அன்றோ –
கன்றுகள் மேய்த்து கோவிந்த அபிஷேகம் பண்ணி கோப குலத்திலே கலந்து பரிமாறி காலிப் பின்னே வருகின்ற வேடத்தை எல்லார்க்கும் காட்டி –
ஏற்கவே அறிந்து கோவர்த்தனத்தை எடுத்து ரஷித்து போருகையாலே வாத்சல்யாதிகளாலும் ஞான சக்த்யாதிகளாலும் பூர்ணன் ஆனவன் அன்றோ
எங்களுக்கு ஞான வ்ருத்தங்கள் கை புகுந்தது இல்லை -உனக்கு ஞான சக்திகள் குறைந்தது இல்லை –
கோவிந்தா
மாமேகம் என்றவன் பாசுரம் அன்றோ -கடை யாவும் கழி கோலும் கையிலே பிடித்த கண்ணிக் கயிறும் -கற்றுத் தூளியாலே தூசரிதமான திருக் குழலும்
மறித்துத் திரிகிற போது திருவடிகளில் கிடந்து ஆரவாரிக்கிற கழல்கள் சதங்கை களும் குளிர் முகத்தின்
கோடாலமுமாய் நிற்கிற உபாய வேஷத்தை கோவிந்தா என்கிறார்கள் –
பெண்காள் உங்கள் பேற்றுக்கு உடலாக நம் நைரபேஷ்யம் சொல்லா நின்றி கோள் -குறைவாளர்க்கு நிறைவாளர் கொடுக்கக் கடவர்கள்
என்று உண்டோ -நிரபேஷராய் இருப்பார் ஸ்வதந்த்ரர் அன்றோ -நீங்கள் சொன்னது தானே இழவுக்கு உடலாய் இருந்ததே
-நாம் அல்லோம் என்ற போது கை விடுகைக்கு உடலாய் அன்றோ இருப்பது என்ன

உன் தன்னோடு உறவு
உன் பூர்த்தி குலையிலும் பந்தம் குலைய ஒட்டுதியோ-நீ எங்களுக்கு உறவு அன்றோ -நீ எங்கள் கார்யம் செய்ய வேண்டாவோ
குடல் துவக்கு உண்டான இடத்தில் ஸ்வா தந்தர்யம் ஜீவிக்குமோ -அது கொண்டோ -ஆனால் அது ஒரு குட நீரோடு போகிறது என்றான்
உறவேல் ஒழிக்க ஒழியாது –
பிரகாரியை ஒழிய பிரகாரத்துக்கு ஸ்திதி உண்டோ -ப்ருதக் ஸ்தித்யாதிகள் இல்லாத வஸ்துவை சக்திமான் என்னா உன்னால் பிரிக்கலாமோ
ஒழிக்க ஒழி யாது
நான் உன்னை அன்றி இலேன் -நீ என்னை யன்றி இல்லை -என்கிற பிரமாணம் கேட்டு அறியாயோ –
நீ எங்கள் கையில் தந்த மூல பிரமானத்தில் முதல் வரியில் முதல் எழுத்தை வெட்டுதல் -எங்கள் கார்யம் தலைக் கட்டல் செய்ய வேண்டாவோ
இவை எல்லாம் அறிவு ஒன்றும் இல்லாத உங்களுக்கும் வார்த்தைகள் அல்ல –உறவு சுற்றம் என்று ஓன்று இலா நமக்குத் தெரியாது என்றான் –
நமக்கு ஒழி க்க ஒழி யாது
உன்னுடைய ஞானவான்களுடைய பந்தம் அல்ல காண் நாங்கள் சொல்லுகிறது –இடையிலே வந்த உறவு காண் எங்களது –
அறிவில்லாதார்க்கு மறக்கலாம் அந்த உறவு -அறிவில்லாதவர் இட்டீடு கொள்ளும் உறவு காண் இவ் உறவு
நீ மைத்துனன் நம்பி -நாங்கள் மாமியார் மக்கள் -எங்கனே ஒழி க்கும் படி -இது என்ன அன்புது-நமக்கு சிசுபாலன் மைத்துனன் அன்றோ என்றான்
உன்னுடைய கோவிந்தத்துவத்துக்கு பழிப்பு சொன்னவன் ஆகையால் அவனை விடாய் -கோவிந்த அபிஷேகம் பண்ணின வன்று
உன் காலிலே குனிந்த மைத்துனன் கார்யம் எல்லாம் உன் தலையிலே ஈரத்தை கொண்டு முன் நடந்து செய்திலையோ-அந்த யுறவு காண்
தாழ்ந்த தனஞ்சயர்க்காகி-பாலைப் பிராயத்தே பார்த்ததற்கு அருள் செய்த -என்னக் கடவது இ றே –
யுத்தார்த்தமாக ஒரு நிமித்தம் கூட்டிக் கொண்டு அந்த கார்யம் செய்த அநந்தரத்திலே விட்டிலோமோ அதுவும் என்றான்
இங்கு ஒழிக்க ஒழியாது
அங்கு ஒழிக்கலாம் இங்கே ஒழிக்க ஒண்ணாது காண்-ஸ்வ தந்த்ரன் தாழ்ந்த இடத்திலே பண்ணின உறவு போலேயோ
பரதந்த்ரரை தாழ நின்று கையைக் காலைப் பிடித்துப் பண்ணின உறவு –
கோவிந்தா உன் தன்னோடு உறவேல் -இங்கு ஒழி க்க ஒழி யாது
உன்னுடைய நாராயணத்தில் உறவு பழம் கிணற்றில் கண் வார வேணுமோ -எங்களுக்கு இவ்வுறவு போராதோ -அளிக்கின்ற ஆனாயன் ஆகையால் ரஷ்ய ரஷக
பந்தமும் உன்னோடே -குன்று குடையா எடுத்த அடிகள் என்று கோவிந்த அபிஷேகம் பண்ணுகையாலே சேஷ சேஷி பாவமும் உன்னோடே
ஏசும் படி அன்ன செய்யும் எம்மீசர் ஆகையால் நியன்தரு நியாமிய பாவமும் உன்னோடே -தம்மனை யானவனே -ஆனாயர் தாயவனே -என்று
கார்ய காரண பந்தமும் உன்னோடே -என்னுயிர்க் கண்ணபிரான் என்று நீ உயிராய் நீ விட்டி அகன்ற பின் என்னுயிர் ஆற்ற மாட்டாது
நாங்கள் துடிக்கும் படி இருக்கையாலே தாரக தார்ய பந்தமும் உன்னோடே -எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் என்று
வியாப்பிய வியாபக சம்பந்தமும் உன்னோடே -இப்படி உன்னோடே யுண்டான சம்பந்தத்துக்கு எல்லை யுண்டோ –
கோவிந்தா ஒழி க்க ஒழி யாது
நீ கோவர்த்தனம் எடுத்த வாறே வேறு ஒருவனோ என்று சங்கிக்க -நான் பந்துவாய்ப் பிறந்தேன் உங்களுக்கு வேறு ஓன்று நினையாதே
கொள்ளுங்கோள் என்ற வார்த்தை அமோகம் அன்றோ
ஒழி க்க ஒழி யாது
உன்னால் விட ஒண்ணாது -எங்களால் விட ஒண்ணாது -உன்னுடைய பந்துக்களால் விடுவிக்க ஒண்ணாது -எங்களுடைய
பந்துக்களால் விடுவிடுவிக்க ஒண்ணாது -ஊராக சங்கித்தாலும் விடுவிக்க ஒண்ணாது -நீ துறந்து எம்மை விட்டு அகன்ற இடத்திலும்
போய்த்த்தில்லை-நாங்கள் புள்ளுவம் பேசாதே கழகம் ஏறேல் என்ற இடத்திலும் குலைந்தது இல்லை -ஊனமுடையன செய்யப் பெறாய்
என்ற இடத்திலும் போய்த்த்தில்லை -இவ்வூர் ஓன்று புணர்க்கின்றதே என்று திரள அவத்யம் சொன்ன இடத்திலும் ஒழிந்த தில்லை
அறிவு ஒன்றும் இல்லாத எங்களுக்கு குறைவு ஒன்றும் இல்லாத உறவு -உன் தயா பூர்த்திக்கு
தயநீயதா பூர்த்தி யுண்டான உறவுக்கு அந்யதா சித்தி சொல்ல ஒண்ணாதே –

இப்படி நம்மோடு உறவு சொல்லா நின்றி கோள் -உங்களை கோபிகைகள் ஆகவும் நம்மை கோவிந்தனாகவும் சொல்லிற்று இப்போது அன்றோ
நம்மை அடியிலே மர்மத்திலே தொட்டு வைத்து -மேலும் அதிலே நடந்து வைத்து -கார்ய காலம் ஆனவாறே
வாலைக் குழைத்து கோவிந்தா என்னா நின்றி கோளே -என்னாக்கி விடற்கு என்றான் -நாங்கள் செய்த தப்பை
பொறுக்கும் அத்தனை அன்றோ என்ன -சொல்லுகைக்கு ஹேது சொல்லுங்கோள் பொறுக்கிறோம் என்றான் –
அறியாத பிள்ளைகளோம் –
என்கிறார்கள் -இவை எல்லாம் பொறுக்கைக்கு ஹேதுக்கள் இருக்கிற படி -முதலில் அஞ்ஞர் செய்தது பொறுக்க வேணும் –
பாலர் செய்தது பொறுக்க வேணும் -ஸ்நேஹிகள் செய்தது பொறுக்க வேணும் -அநவதானத்தாலே சொல்லுவது அறிந்திலோம் –
பால்யத்தாலே சொல்லுவது அறிந்திலோம் -ப்ரேமத்தால் வந்த விருட்சியாலே சொல்லுவது அறிந்திலோம் -எங்களால் அறிவு கெட்டோம்-
பிறவியாலே அறிவு கெட்டோம் -உன்னாலே அறிவு கெட்டோம் -யாதும் ஒன்றும் அறியாத பிள்ளைகள் இ றே நாங்கள் –
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்திலே பிறக்கையாலே அறிவு கெட்டோம் -அழகு கண்டு என் மக்கள் அயர்க்கின்றது –
என்கிறபடியே உன்னைக் கண்டு மதி கெட்டோம் -அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடியர் என்கிறபடியே இடையூறை மதி கெடப் பண்ணுமது
பெண்களை மது கெடுக்கச் சொல்ல வேணுமோ -பித்தர் சொல்லிற்றும் பேதையர் சொல்லிற்றும்
பத்தர் சொல்லிற்றும் பன்னப் பெறுவரோ-என்று பிரசித்தம் அன்றோ –
அன்பினால்
ப்ரேமாந்தரை குற்றம் கொள்ளுகையாவது -ஒரே படுக்கையிலே இருந்து கை தாக்கிற்று கால் தாக்கிற்று என்கை இ றே
உன் தன்னை
கோவிந்த அபிஷேகம் பண்ணி இருக்கிற யுன்னை -அநவதா நாதிகளும் அன்பு விளைக்கைக்கு நிமித்தமாய் இருக்கிற உன்னை
இளையோர் விளையாட்டோடு காதல் வெள்ளம் விளைத்த -என்று தானே இ றே அவற்றுக்கு அடி –உன் தன்னைப் பிறவி பெறும் தனை
என்றதை போல் அன்று இந்த உன் தன்னை -அவ்விடத்தில் பெருமை யுடையவன் தாழ நின்று நீர்மை
சம்பாதிக்க வந்த இடத்தில் மேன்மை சொல்லுகை குற்றம் இ றே

சிறு பேர்
கோவிந்த அபிஷேகம் பண்ணின பின்பு முதல் திரு நாமம் சொல்லுகை குற்றம் இ றே -முடி சூடினவனை தட்டியில் பேர் சொல்லுகைக்கு
மேற்பட்ட உண்டோ குற்றம் -இப்போது சிறு பேர் என்று நினைக்கிறது -நாராயணன் -என்றத்தை -தங்களுக்கு அசாதாரணனாய் இருக்கிறவனை
சாதாரணன் என்று சொல்லுகைக்குற்றம் இ றே -ஊடினால் சொல்லுமத்தை படுக்கைத் தலத்தில் சொல்லலாமோ –
அந்தப்புர வாசலில் படுகாடு கிடப்பாரை நாட்டுக்கு கடவன் என்கிறது பிரணயி அல்லன் என்கை இ றே –
இவன் உபய விபூதிக்கும் முடி கவித்து ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்குமவன் என்று சிறிது ஞானம் உண்டாய் இருக்கச் செய்தே இ றே
இந்திரன் வந்து பசுக்களை மேய்த்தான் என்று முடி சூட்டிற்று-உபய விபூதிக்கும் முடி சூடினத்துக்கு அவ்வருகே ஒரு ஐஸ்வர்யம் இ றே இது
நாராயணன் என்கிற பேர் நாராயண பரங்களான ப்ரமாணங்களாகச் சொல்லலாம் -கோவிந்தா சக்தமான நெஞ்சுடையார்க்குச் சொல்லுகை குற்றம் –
சிறு பேர்
சஹஸ்ர அக்ஷரங்கள் துவாதச அக்ஷரங்கள் தொடக்கமான பேர்கள் எல்லாம் அவன் பெயர் எட்டு எழுத்தையும் கண்டவாறே சிறுகிற்று
அது தான் மூன்று எழுத்துடைய பேரைக் கண்ட வாறே சிறுகிற்று -முழுகி மூக்கைப் புதைப்பார்க்கு யோக்கியமான பேர்
தீட்டத்தோடே கத்திக் கையராய்த் திரிவார்க்கும் யோக்கியமான பேரைக் கண்ட வாறே கழிப்பானாய்த்து-
வாச்யன் சிறுக நின்று நிறம் பெற்றால் வாசகமும் அப்படியே இ றே
சிறு பேர் –
அஷ்டாக்ஷர மஹா மந்த்ரம் என்பார் கலங்கினவர்கள் -தெளிவுடையார்களுக்கு சிறுத்துத் தோற்றும் இ றே இது
மூல நாமமுமாய் அதி குஹ்யமுமாய் செவியில் சொல்ல வேண்டும்படி இ றே இருப்பது –
பிறந்து பன்னிரண்டும் கழிந்த வாறே பேரிட்டுத் தாலாட்டினவாறே -மன்னு நாரணன் நம்பி பிறந்தமை -என்றும் நாராயணா அழேல் தாலேலோ என்றும்
அப்போது செய்தலை நீல நிறைத்து சிறு பிள்ளையாகையாலே சொல்லலாம் -இப்போது பெறும் கண்ணன் இ றே
அழைத்தன
அது தன்னை ஒருக்கால் சொல்லி விடாதே -நாராயணனே என்றும் -நாற்றத்த துழாய் முடி நாராயணன்
என்றும் -நாராயணன் மூர்த்தி -என்றும் பலகால் சொன்னார்கள் இ றே
அழைத்தனவும்
எண்களில் நாங்கள் முதல் நாமத்தை சொல்லி விட்ட அளவு அன்றிக்கே மூலக் கிழங்கிலே
தட்டச் சொன்னவற்றையும் -பாழி யம் தோளுடை பற்ப நாபன் -என்றார்கள் இ றே
உன் தன்னை –அழைத்தனவும்
எங்களை நாங்கள் பிரணயித்வத்தாலே -பேய்ப் பெண்ணே –ஊமையோ செவிடோ –நாணாதாய் -பண்டே உன் வாய் அறிதும் –
என்று தொடங்கிச் செய்தவற்றை யும் பொறை கொள்ள நினைத்தார்கள் -சர்வான் அசேஷத -என்ன வேணும் இ றே
த்ரிவித கரணங்களால் யுண்டான த்ரிவித அபசாரத்துக்கும் உப லக்ஷணம் -புகு தருவான் நின்றவற்றில் புத்தி பூர்வகத்துக்கு
க்ஷமை கொள்ளுகிறார்கள் -பகவத் பாகவத விஷயங்களில் உபசார புத்தயா பண்ணும் அபசாரங்களுக்கு க்ஷமை கொண்டு விட வேணும்
ஸூலபனை பரன் என்கிறது தான் அபசாரம் ஆகிற தசை இ றே -குளிர்ந்த தண்ணீரை விநியோகம் கொள்ளுமவனுக்கு காய்ச்சின தண்ணீர் பகை இ றே
கிருஷ்ணனுடைய ஆற்றலுக்கு ஈஸ்வரத்தால் வந்த அழல் பகை இ றே –

பேற்றுக்கு பிரயோஜனம் ஆனது புறம்பே கிடக்க அப்ரயோஜனங்களை கிடந்து ஆராய்கிறது என் என்று
சீறி அருளாதே
என்கிறார்கள் -செய்வுதை எல்லாம் செய்து சீறி அருளாதே -என்ன அமையும் ஆகாதே தான் -இத்தலையை ஆராயில் சீற வேண்டும்படியாய் இ றே இருப்பது –
பூர்வ வருத்தம் நஷமாமிக்கு இலக்கு அல்லவே -நப்பின்னை பிராட்டியை முன்னிட்டவர்கள் ஆகையால் –
ஸ்ரீ விஸ்வரூபம் கண்ட அர்ஜுனன் நீ என்னோடே மேல் விழுந்து கலசின படியால்
உன் வைபவம் ஒன்றும் அறிந்திலேன் -அநவதாநத்தாலும் பிரணயித்வத்தாலும் விஹார சய்யா ஆசன போஜனங்களிலே பண்ணின
அஸத்காரங்களைப் பொறுத்து அருள வேணும் என்று பொறை கண்டான் அவன் -ஸுலப்யத்தாலே பரிமாறின
தப்புக்களை பரத்வம் கண்டவாறே பொறை கொண்டான் அவன்
ஸுலப்யத்தைக் கண்டு பரத்வ புத்திக்கு க்ஷமை கொள்ளுகிறார்கள் இவர்கள் -பக்தியில் தலையாக நிற்கவுமாம்
-அவன் தன்னைப் பற்றவுமாம் -கிட்டினால் சொல்லுவது இது வாய்த்து
நம்மாலே பேறாம் படியான சம்பந்தம் நம்மோடே உண்டானாலும் -குற்றத்தைப் பொறுக்க வேணும் என்றாலும்
பல போக்தாக்கள் நீங்களான பின்பு உங்கள் தலையிலேயும் ஓன்று உண்டாக வேண்டாவோ –
இவர்கள் இன்னது செய்தார்கள் அவன் இன்னது செய்தான் என்று நாட்டாருக்குச் சொல்லலாவது ஒரு ஆலம்பனம் வேண்டாவோ என்ன
இறைவா
நீ தருவோம் என்ற வன்று விலக்குகைக்கு உரியார் உண்டோ –
இறைவா
உன் ஸ்வரூபத்தை உணராய் -எங்கள் தலையிலே கிடந்து நாங்கள் பிரதிபத்தி பண்ணாமையாலே அழித்துக் கொண்ட சேஷத்வம் போல் அன்றே
-உன் தலையிலே கிடக்கையாலே அழிக்க ஒண்ணாத சேஷித்வம் -அத்தை ஆராய்ந்து எங்களுடைய கார்யத்தைச் செய்யாய்
-அத்தலையிலே குறை இன்றியிலே ஒழிய அமையும் இ றே -பேற்றுக்கு அத்வேஷம் இ றே இத்தலைக்கு வேண்டுவது
பேற்றின் கனத்துக்கு கீழ் விளைந்தது எல்லாம் அத்வேஷம் மாத்ரமாய் இருக்கும் இ றே
இறைவா
வானோர் இறையை நினைத்தன்று -ஆய்க்குலமாய் வந்து தோன்றின நம் இறை
கோவிந்தா –இறைவா –ஒழிக்க ஒழியாது –பறை தாராய்
உன்னைப் பார்த்தாலும் கை விட விரகு இல்லை -எங்களைப் பார்த்தாலும் கை விட விரகு இல்லை
நீ
நான் ரஷிக்கைக்கு நீங்கள் பண்ணின சாதன அனுஷ்டானம் என் என்று கேட்டால் தேவர் எல்லையில் வர்த்திக்கிறதுக்கு குறை
சொல்லப் போமோ என்கிறார்கள் -அறிவுடையார் -அறிவு ஒன்றும் இல்லாத எங்களுக்கு விஷய வாச மாத்திரமே அன்றிக்கே
குடல் துடக்கு உண்டானால் ரசிக்க சொல்ல வேணுமோ
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -இறைவா -பறை தாராய்
குண துங்கதயாத வரங்க பதேப் ருசநிம் நமி மஞ்சன முன்னமய-யத பேஷ்யம் அபேஷ்ய துரஸ்ய ஹிதத் பரிபூர்ண மீசி துரீச் வரதா -என்னக் கடவது இ றே
நோ பே க்ஷணம் மம்தாவோஸி தமீஸ்வரஸ்ய -உன்னுடைய சேஷித்வம் நிலை நிற்க வேணுமாகில் செய்கிறாய் -சீறாமைக்கு ஹேது இது –
ப்ரேஷ் யஸ்ய ஷமித்வயம்மே -என்னக் கடவது இ றே-செய்த குற்றம் நற்றமாகவே கோள் ஞால நாதனே
பறை தாராய்
சாது பரித்ராணாம் பண்ணுகைக்கு அன்றோ இங்கு வந்து பண்ணி அருளிற்று –
பறை தாராய் என்றவாறே கோபீ ஜனத்தினுடைய மிகுதி குறை ஆராய்வாய் நீ அன்றோ –
இவர்கள் சொல்லுகிறவற்றை ஆராய்ந்து கொடு என்றான் அருகில் இருக்கிறவளை
நீ தாராய்
அவள் தருவது தந்தாள் -நீ தரும் அத்தைத் தாராய் -உபாய நிஷ்டை அன்றோ அவள் தருவது -மேல் உள்ளது உன் பணி அன்றோ
அஸ்துதே என்று அவள் அது செய்தால் -அஹம் மோக்ஷயிஷ்யாமி -என்னக் கடவ நீ பேசாது இருக்கவோ
ஸூ லபனான நீ தாராய் -ஸ்வாமி யான நீ தாராய் -சர்வ உபாய சாதாரணமான ருசியை உபாயத்தில் செலவு எழுதாதே
சைதன்ய கார்யமான சுவீகாரத்தையும் உபாயத்தில் செலவிடாதே எங்களால் சாத்தியம் இன்றிக்கே
சித்த ஸ்வரூபனான உன்னையே பார்த்து கார்யம் செய்து அருள வேணும் –

கறைவைகள் இத்யாதி
எங்களை பார்க்கிலும் நீ கார்யம் செய்ய வேணும் -எங்களையும் உன்னையும் பார்க்கிலும் கார்யம் செய்ய வேணும்
உன்னைப் பாராதே எங்களை பார்த்தாய் யாகில் இழக்கிறோம் -எங்களை பாராதே உன்னைப் பார்த்தாயாகில் பெறுகிறோம்
ஆனபின்பு எங்களுடைய ரக்ஷணம் உன்னாலே விடலாமா -எங்களுக்கு வ்ருத்த ஞான ஜென்மங்களால் நன்மை இல்லை என்றோம் –
நீ நன்மைக்கு அடி என்றோம் -பூர்ணன் என்றோம் ஸூலபன் என்றோம் –
உன்னோடு எங்களுக்கு குலையாத சம்பந்தம் உண்டு என்றோம் -எங்கள் தப்புக்கு அனுதபித்தோம் -பொறை கொண்டோம்
எங்களுக்கு இனி செய்ய வேணும் அம்சம் இல்லை -இனி உன்னை இழவாமல் கார்யம் செய்யப் பாராய் -ததஹம் த்வத்ருத-இத்யாதி –
எங்களுக்கு பரித்யஜ்யத்வேன விஹிதங்களில் அன்வயம் இல்லை யாய்த்து -சுவீகாரத்வேன ஹித உபாயமான நீ
சுவீகார நிரபேஷமாகக் கைப் புகா நின்றாய் -உனக்கு ஞான சக்தியிலும் குறைவற்று இருந்தது -ப்ராப்தியிலும் குறைவற்று இருந்தது
எங்களுக்கு அஞ்ஞாதிகள் பூர்ணமாக இருந்தது -குற்றங்களை பார்த்து சீற ஒண்ணாத படி ஸமஸ்த விரோதிகளையும்
போக்குகிறேன் என்றவனாய் இருந்தாய் நீ -ஆனபின்பு ப்ராப்ய லாப நிமித்தமாக சோகியாதே கொள் என்ற நீ எங்கள் அபேக்ஷிதத்தை
செய்யல் ஆகாதோ என்று தங்கள் ஆகிஞ்சன்யத்தையும் யோக்கியதையும் ஆவிஷ்கரித்து உபாய பூர்த்தியையும் தங்கள் ப்ராப்தியையும் முன்னிட்டு
பிராமாதிகமாக புகுந்த தப்புக்களுக்கு பொறை கொண்டு எங்கள் பிராப்ய சித்திக்கு
நீயே உபாயமாக வேணும் என்று கிருஷ்ணனை உபேக்ஷிக்கிறார்கள் –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பாவை -கூடாரை வெல்லும் சீர்–ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் வியாக்யானம் – ஆறாயிரப்படி —

January 13, 2017

பெண்காள் நம்மோடு ஓத்தான் ஒருவன் ஈஸ்வரன் உண்டாகில் இ றே நம் பாஞ்ச சன்னியத்தோடு ஒத்த சங்கு உண்டாவது –
இனி தான் சங்கங்கள் பல வேணும் என்றி கோள்-ஒன்றைத் தேடினோம் ஆகிலும் அத்தோடு ஒத்த பல சங்குகள் கிடையாதே –
நம் பாஞ்ச சன்னியத்தையும்புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளி சங்கையையும்
ஆநிரை இனம் மீளப் பசு மேய்க்கும் போது குறிக்கும் சங்கையும் கொள்ளுங்கோள் –
பறை என்றீர்கள் ஆகில் நாம் உலகு அளந்த போது ஜாம்பவான் நம் ஜெயம் சாற்றிற்று ஒரு பறை யுண்டு -அத்தை தரலாய்த்து –
பெரும் பறை என்றி கோளாகில் நாம் லங்கையை அழித்த போது நம் ஜெயம் சாற்றிற்று ஒரு பறை யுண்டு –அத்தை தரலாய்த்து –
சாலப் பெரும் பறை -என்றி கோளாகில் -அற விஞ்சின பறையாவது –பாரோர்கள் எல்லாம் மகிழ
பறை கறங்கக் குடமாடுகிற போது -நம் அரையில் கட்டி ஆடிற்று ஒரு பறை உண்டு அத்தைக் கொள்ளுங்கோள் –
பல்லாண்டு பாடுகைக்கு உங்களுக்கு பெரியாழ்வார் உண்டு -அவரைப் போலே உங்களுக்கும் நமக்கும் சேரக் காப்பிடுகை அன்றிக்கே
உங்களுக்கே காப்பிடும் நம்மாழ்வாரையும் கொண்டு போங்கோள்
கோல விளக்குக்கு உபய பிரகாசகையான நப்பின்னை நின்றாள் இ றே
கொடிக்கு கருளக்   கொடி ஒன்றுடையீர் என்று நீங்கள் சொல்லும் பெரிய திருவடியை கொண்டு போரி கோளே
விதானத்துக்கு அன்றோ நாம் மதுரையில் நின்றும் இவ்வூருக்கு வருகிற போது நம் மேல் மழைத் துளி படாத படி தொடுத்து
மேல் விதானமாய் வந்த நம் அநந்தனைக் கொண்டு போங்கோள் -உங்களுக்கு செய்ய வேண்டியது இத்தனையே என்றான்
மார்கழி நீராடக் போம் போதைக்கு வேண்டுமவை இவை -நோற்ற அனந்தரம் நாங்கள் உன் பக்கல் பெறக் கடவ இன்னம் சில
சத்கார விசேஷங்கள் உண்டு –இவற்றிலும் அவை அந்தரங்கமாக இருப்பன சில
-அவையும் நாங்கள் பெறுவோமாக ஆக வேணும் என்று வேண்டிக் கொள்கிறார்கள் –

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா வுன்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெரும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடையுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்-

பெண்காள் -நம்மை எளிவரும் இயல்வினன் என்று அழகிதாக வறிந்து கொண்டி கோள் எங்கனே -அபேக்ஷித்தது தருகிறோம் என்கிற அளவைக் கொண்டு
நம்மையும் நம்முடைய சர்வஸ் வத்தையும் உங்களதாக்கிக் கொண்டு உங்களை வெல்ல இருந்த நம்மைத் தோற்பித்துக் கொண்டி கோள்
எங்கனே
ஜெய அபஜெயங்கள் நாம் நினைத்த படி இன்றிக்கே இருந்ததீ -என்ன
கூடாரை வெல்லும் சீர்
கூடும் என்பாரை வெல்லும் அத்தனை போக்கி கூடுவோம் என்பாரை வெல்லலாமோ உன்னால்
கூடாரை வெல்லும்
பரசுராமன் இருபத்தொரு படி கால் ஷத்ரியரை வென்ற உனக்கு ஒரு ஷத்ரிய புத்ரன் எதிரோ -என்று பெருமாளை வெல்ல நினைத்து வந்து
தன் கையில் வில்லை அவர் கையிலே கொடுத்து நான் ப்ராஹ்மணன் என்று நமஸ்கரித்துப் போந்தான் –
வில்லோடு நமஸ்கரித்தான் ஆகில் இவராய்த்து தோற்பது –
ராவணன் இந்த்ராதிகளை வென்ற எனக்கு ஒரு மனுஷ்யன் எதிரோ என்று இருக்க -திருவடியை இட்டும் அங்கதனை இட்டும் பின்பு
வில் பொகட்ட அளவில் -இன்று போய் நாளை வா -என்னும் இத்தனையும் சொன்ன இடத்தில் -வணங்கலில் அரக்கனான பின்பு
ஆந்தனையும் பார்த்தோம் -என் செய்வோம் என்றாய்த்துக் கொன்றது
பின்பு வில்லை எடுத்திலன் ஆகில் பெருமாளை வென்றானாய் விடும் -லோகம் பண்ணின பாக்யத்தாலே பின்பு வில் எடுத்தான்
-பெருமாள் அவனுக்குத் தோற்க்கைக்கு பாக்யம் பண்ணிற்று இலர் –
கூடாரை வெல்லும் சீர்
சேராக் குலை கொண்ட ஈரந்தலையான்-என்று ஒரு படியாலும் கூடேன் என்று அவனை இ றே வென்றது –
கூடுவேன் என்ற விபீஷணனுக்கு வில்வெட்டி இ றே செய்தது -ஸூ க்ரீவ வசனம் ஹனுமான் வசனம் -என்று கூடினாருடைய
குற்றேவல் கொண்டு அபிஷேக பிரதானமும் பிராண ஹரணமும் பண்ணும் படி இ றே தோற்ற படி –
அர்ஜுனனோடு உறவு பண்ணுவோம் -கிருஷ்ணன் காலிலே வணங்கோம் என்ற துரியோதனனை வெல்ல வல்லனானான் –
நீ சொல்லிற்றுச் செய்வேன் என்ற பாண்டவர்களுக்கு -எல்லிப் பகல் என்னாது எப்போதும் -சர்வ காலமும் தூத்ய சாரத்யாதிகளைப் பண்ணித் திரிந்தான்
வெல்லும் சீர்
எல்லாரையும் வெல்வது குணத்தால் -கூடுவாரை சீலத்தாலே வெல்லும் -கூடாதாரை ஸுர்யத்தாலே வெல்லும்
சீர்
ஸுர்யம் அம்புக்கு இலக்காகும் –சீலம் அழகுக்கு இலக்காகும் -அம்புக்கு இலக்கானார்க்கு மருந்து இட்டு ஆற்றலாம் சீலமும் அழகும் நின்று ஈரா நிற்கும்
ஈர்கின்ற கண்கள் -தாமரைக்கு கண்கள் கொண்டு ஈர்த்தியாலோ -அம்பு தோல் புரையே போம் -அழகு உயிர்க் கொலை யாக்கும்
வெல்லும் சீர்
ஸ்வரூப அனுசந்தானம் பண்ணி வாரோம் -என்று இருப்பார் ப்ரதிஞ்ஜையை அழித்து வர பண்ணிக் கொள்ளவற்றாய் –
ஸ்த்ரீத்வத்வ அபிமானத்தாலே வாசல் விட்டுப் புறப்படோம் என்று இருப்பாருடைய அபிமானத்தை முறித்து தன் வாசலிலே
வரப் பண்ணின குணம் -தேஹாத்ம அபிமானிகளை தலை சாய்ப்பிக்கச் சொல்ல வேணுமோ
நலமுடையவன் என்னா-தொழுது எழு -என்றார் இ றே குணங்களுடைய எடுப்புக் கண்டு
வெல்லும் சீர்
அஞ்ஞரை சர்வஞ்ஞராக்கும் -சர்வஞ்ஞரை எத்திறம் என்னப் பண்ணும்
கோவிந்தா
கூடுவோம் அல்லோம் என்கிற அபிசந்தி இல்லாத மாத்திரத்தில் கூடுவோம் என்ன அறியாதாரையும் ரக்ஷிக்குமவன் அன்றோ
கோவிந்தா
பொருந்தோம் என்னும் துர் அபிமானமும் இன்றிக்கே-ரஷித்தாலும் உபகார ஸ்ம்ருதி இன்றிக்கே இருக்கும் பசுக்களோடு பொருந்துமவனே-இட்டமான பசுக்களை –
நாலிரண்டு நாள் தீம்பிலே வளர்ந்து நடந்து பெண்களோடு கலந்து வந்தால் மாதா பிதாக்கள் தாழ்த்து வந்தது என் என்றால்
பசு மேய்க்கப் போனேன் என்று கண்ணழிவு சொல்லலாம் படி ஒதுங்க நிழலாய் இருக்கை -காமுகராய் இருப்பார் உகந்த விஷயங்களில் காட்டிலும் கடகரை இ றே உகப்பது-
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -கன்று மேய்த்து இனிது உகந்த -காலி மேய்க்க வல்லாய் -கன்று மேய்த்து விளையாட வல்லானை –
சாமான்ய ரக்ஷணமும் -விசேஷ ரக்ஷணமும் -தன் வாயாலே பறித்து மேய்வாருடைய ரக்ஷணமும் -தான் பறித்துக் கொடுப்பாருடைய ரக்ஷணமும்
கோவிந்தா
சேரோம் என்னும் அத்யாவசியம் இல்லாத திர்யக்குகளோடும் பொருந்தும் படியான நீர்மையை யுடையவன் –
உன் தன்னைப் பாடி
ஹிரண்ய புரம் போலே இவன் பேர் சொல்ல ஓட்டுவார் இல்லை போலே காணும் பண்டு -அநந்தரத்திலே இவர்கள்
கோபிப்பார்கள் என்று தவிர்ந்த இழவு எல்லாம் சந்நிதியில் பாடப் பெறுகையாலே தீரப் பெற்றது –
உன் தன்னைப் பாடி
வகுத்த உன்னுடைய பேரை ஸ்வயம் பிரயோஜனமாகப் பாடப் பெறுகையாலே -வாயினால் பாடி -என்று உபக்ரமித்தபடி
நா படைத்த பிரயோஜனம் கொள்ளப் பெற்றோம்
உன்னைப் பாடி என்னாதே உன் தன்னைப் பாடி என்கிறது அத்தலை இத்தலை யாவதே -உன் பணியை நாங்கள் ஏறிட்டுக் கொள்வதே
கோவிந்தா உன் தன்னைப் பாடி
கோவிந்தன் குழல் கொடூதின போது -என்று நீ பாடும் போது -கேயத் தீங்குழல் ஊதிற்றும்-என்னும் படி பெண்கள் புணர்ப்பை
குழலிலே இட்டுப் பாடி -எங்களை தோற்ப்பிக்கை அன்றிக்கே எங்கள் வாசல்களில் பாடி ஆவி காத்து இராதே
உன் வாசலிலே வந்து கோவிந்தா என்று பாடும் படி ஆவதே
பறை கொண்டு
பாடிப் பறை கொண்டு என்று அடியில் சொன்ன படியே ஊரார் இசைந்த பறையைக் கொண்டு -ப்ராப்யத்தில் ப்ராபக
வியவஹாரம் பண்ணுகிறார்கள் ஆற்றாமையால் -ஊருக்கு இ றே தங்களுக்கு ப்ராப்யம் இ றே
யாம்
தேவகீ புத்ர ரத்னமான உன் வாசி அறிந்து பற்றி உன்னை ஆச்ரயித்தார்க்கு பேறு தப்பாது என்கிற வ்யவசாயம் யுடைய நாங்கள்
பெறும் ஸம்மானம்
வெறும் ஊரார் காரியமே யாக ஒண்ணாது -எங்களுடைய அபிமதமும் பெற வேணும்
யாம் பெறும் ஸம்மானம்
பெருமாள் பிராட்டிக்கு பண்ணின ஸம்மானம் போலே -ஆதவாரம் தொடர்ந்து ஏத்தின பிராட்டிக்கு தன் தோளில் மாலையை வாங்கி இட்டு
-காலைப் பிடித்து நில் என்று போன ஸத்காரம் இ றே இவர்களுக்குப் பண்ணப் புகுகிறது
அவள் இவர் திருவடிகளைப் பிடிப்பது கைப் பிடித்த முறையால் -இவர் அவள் காலைப் பிடிப்பது பிரணயித்தவத்தாலே
அவனுக்குச் சொல்லும் ஏற்றம் எல்லாம் ஸ்வரூப நிபந்தனம்-இவளுக்கு சொல்லும் ஏற்றம் எல்லாம் பிரணயித்தவ நிபந்தனம்
அவனுடைய வியாபாரம் வைதம் – இது ராக பிராப்தம் -ஸ்வயம் ப்ரவ்ருத்தனாம் இடத்தில் விதி விஷயம் ஆக மாட்டாதே
-அவ்விடத்தில் விதி நுழையுமாகில் போக மாட்டாதே
வெளித் திரு முற்றத்திலே -பிரசாதம் அவ்வளவில் வர யாம் பெறும் ஸம்மானம் வந்தது என்பர் பட்டர்
நாடு புகழும் பரிசினால்
அநாதி காலம் எல்லாராலும் பட்ட அவமானம் மறக்கும் படியாக ஒருவன் கொடுத்த படியே -சிலர் பெறும் படியே என்று
நாட்டார் கொண்டாடும்படியாக வேணும் –பாரோர் புகழ என்னும் படியே தலைக் கட்ட வேணும் —
கிருஷ்ணனும் சத்யபாமை பிராட்டியும் அர்ஜுனனும் திரௌபதியுமாக கால் மேல் கால் ஏறிட்டு கொண்டு இருக்க
-சஞ்சயன் திருவாசலிலே வந்தான் என்று அறிவிக்க -கிருஷ்ணன் அருளிச் செய்கிறான் -நம்முடைய இருப்புக் கண்டால் உகப்பானும் உகவாதார் மண் உண்ணும் படி இவ்விருப்பைச் சொல்ல வல்லானும் ஒருவன் புகுர விடுங்கோள் என்ன
-அவனும் புகுந்து -கண்டு -அப்படியே போய் -துரியோதனனுக்கு கெடுவாய் -அவர்கள் இருப்பு கண்டேனுக்கு உன் கார்யம் கெட்டது கிடாய் என்றான் இ றே –
சுக சாரணர்கள் சென்று ராவணனுக்கு அவருடைய ஓலக்கத்தில் மதிப்பும் அவருடைய வீரப்பாடும் கண்டோமுக்கு உனக்கு ஒரு குடி இருப்பு
தேடிக் கொள்ள வேண்டி இருந்தது -ஊற்று மாறாதே நித்தியமாய் நடக்கிற ஐஸ்வர்யத்தை யுடையராய் உனக்கு வரம் தந்து
உன் கையாலே தகர்ப்புண்ணும் அவர்களை போல் அன்றிக்கே உனக்கு முடி தந்தார்க்கும் முடி கொடுத்த ராஜா உன் தம்பிக்கு
லங்கையைக் கொடுத்தான் -வானரங்களும் ஆர்த்துக் கொண்டது –என்று சொன்னார்கள் இ றே –
இப்படி தன்னை ஆச்ரயித்தாரை நாடு புகழும் படி இ றே வாழ்விப்பது -வாழ்வர் வாழ்வு எய்து ஞாலம் புகழ -என்கிறபடியே –
-நாடு புகழ என்று யசஸ் பரராய்ச் சொல்லுகிறார்கள் அன்று –புகழ்ந்து நாட்டார் உஜ்ஜீவிக்கை ஸ்வ லாபமாக நினைக்கையாலே
-ஸூத்ரனை ஒளித்து வேண்டிப் பெறுமது இ றே லோகம் இகழ்வது -சர்வ ஸமாச்ரயணீயன் தானே
மேல் விழுந்து சத்கார பூர்வகமாகக் கொடுக்கிறது ஆகையால் புகழும் இ றே
நன்றாக
இவனை ஒழிந்தாரைப் பாட வேண்டிப் பெறுமது பரிமித பலமாகையாலே -படி வைக்க யுண்பார் பாடே பிச்சை புக்கு உண்ணும் மாத்ரம் –
காலன் கொண்ட பொன்னிட்டு ஆபரணம் பண்ணிப் பூண்பார் மாத்ரம் -நாடும் புகழும் அளவன்றிக்கே அவன் தானும் சத்தை பெற்று நாமும் சத்தை பெற வேணும் –
இவர்களை ஒப்புவிக்கை அவனுக்கு ஸ்வரூபம் -அவன் ஒப்பிக்க இசைகை இவர்களுக்கு ஸ்வரூபம் –
நன்றாக
இந்திரன் வரக் காட்டின ஹாரத்தைப் பெருமாள் பிராட்டிக்குக் கொடுத்து அருள -திருக் கையிலே பிடித்துக் கொண்டு இருந்து
-பெருமாளை ஒரு கண்ணாலும் திருவடியை ஒரு கண்ணாலும் பார்க்க -பெருமாள் பிராட்டி திரு உள்ளத்தில் ஓடுகிறதை அறிந்து
அடியார் தரம் அறிந்து கொண்டாடும் வீறுடைமைக்கு பர்யவசான பூமியான நீ கொடு என்ன திருவடியை ஒப்புவித்தால் போலே
கிருஷ்ணன் நப்பின்னை பிராட்டியை விடுவித்து ஒப்பிக்கை யாய்த்து நன்றாக ஒப்பிக்கை யாவது –
இவர்கள் நோக்குதியேல் என்னப் பண்ணிற்று ஒரு பூர்ண கடாக்ஷம் உண்டு இ றே -அப்பார்வை பட்ட இடம் இருக்கும் படியை மேலே சொல்லுகிறார்கள் –
சூடகமே
அணி மிகு தாமரைக்கையை -என்று தன் கையை இவர்கள் ஆசைப்படுமா போலே -இவர்கள் ஆபரணம் பூண்ட கையை
அவன் மார்பிலும் தோளிலும் தலையிலும் வைத்துக் கொள்ள இ றே அவனும் ஆசைப்படுவது -அக்கைக்கு இடக் கடவ
ஆபரணம் சூடகம் -வெள்ளி வளைக் கை பற்ற என்கிறபடியே -அநன்யார்ஹை களாய் பிடித்த கைகளை இ றே முதல் ஆபரணம் பூட்டுவது –
தோள் வளையே
கையைப் பிடித்த அனந்தரம் -அணைக்கும் தோள்களில் கிடந்து அவன் கழுத்தில் உறுத்தும் ஆபரணம் -அவன் நாண் தழும்பின்
சரசரப்பு முலைகளுக்கு உத்தேசியமானவோபாதி-இவர்களுடைய வளைத் தழும்பும் அவன் தோலுக்கு ஆசையாய் இருக்கும் இ றே
வேய் இரும் தடம் தோளினார் -என்று சுந்தரத் தோளுடையான்-தோற்கும் படி தோள் படைத்த தோளுக்கு இடம் ஆபரணம்
-வேய் மரு தோளிணை-மெலியும் காலத்தில் இ றே வளை பொறாது ஒழிவது -இப்போது அணைக்கிற காலம் இ றே
தோடே
தங்கள் கைக்கும் தங்கள் தோலுக்கும் ஆபரணம் போல் அன்றே -அவன் தோளுக்குப் பூணும் ஆபரணமும் பூண வேணும் –
இவர்களுடைய காதுப் பணியும் செவிப் பூவும் பட்ட விமர்த்தத்தாலே வந்த சோபையைக் கோட் சொல்லும் இ றே அவன் தோள்கள் –
கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்-என்று அவனுடைய கரண பூஷணம் அவன் தோள்களுக்கு ஆபரணம் ஆனால் போலே
இவர்களுக்கு காதுப் பணியும் செவிப்பூவும் தோள்களுக்கும் அலங்காரமாய் இ றே இருப்பது –
தோடே
பொற்றோடு பெய்து -என்று பண்டே தோடிட்டாலும் இவன் இட்டால் போலே இராதே
செவிப்பூவே
அணைத்த அனந்தரம் ஆக்ரணத்துக்கு விஷயமான இடம்
பாடகம்
அணைத்துத் தோற்றவர்கள் விழுந்து பிடிக்கும் காலுக்கு ஆபரணம்
சூடகமே இத்யாதி
பிடித்த கைக்கும் -அணைத்த தோள்களுக்கும் அணைத்த இடத்தே உறுத்துமதுக்கும் ஸ்பர்சத்துக்கும் தோற்று விழும் துறைக்கும்
சூடகமே பாடகமே
கைத்தலம் பற்ற –திருக்கையால் தாள் பற்ற -கையைக் காலைப் பிடித்து இ றே நடுவுள்ளது எல்லாம் நடத்துவது –
என்றனைய பல்கலனும்
இவ்வளவிலே இருந்தது எண்ணுமது அன்றே -பருப் பெருத்தன சிலவற்றைச் சொன்னோம் -நீ அறியுமவை
எல்லாம் என்கிறார்கள்- பல பலவே ஆபரணம் -என்னக் கடவது இ றே அவன் தனக்கு உட்பட –
யாம் அணிவோம் –
ஆபரணங்களுக்கு அழகு கொடுக்க வல்ல அவயவங்களிலே கிடந்து தானும் நிறம் பெற்று -பூட்டின தானும் நிறம் பெற்று போம்படி வடிவு படைத்த நாங்கள் –
இவ்வெல்லை வரும் வளவு இ றே மலரிட்டு நாம் முடியோம் என்றது -நாம் முடியோம் என்றால் பூட்ட மாட்டான்
-அணிவோம் என்றால் பூட்டாது இருக்க மாட்டான் –அவன் அலங்கரிக்கைக்கு இவர்கள் அனுமதியே அமையும்
யாம் அணிவோம்
ஒருவரை ஒருவர் மாறி மாறி ஒப்பிக்கக் கணிசிக்கிறார்கள் –
நாடு புகழும் பரிசினால் –யாம் அணிவோம்
நிறை புகழ் ஆய்ச்சியர் –அணி இழை யாய்ச்சியார் -என்கிற இரண்டும் பெற வேணும் –
ஆடை யுடுப்போம்
புனை இழைகள் அணிவும் என்றால் ஆடையுடையும் என்று அடைவு -காறை பூணும் கண்ணாடி காணும் தன் கையில்
வளை குலுங்கும் -என்றால் பின்னை கூறை யுடுக்கை இ றே அடைவு –
நாடு புகழும் பரிசினால் –ஆடை யுடுப்போம்
கூறை யுடுக்கும் –அயர்க்கும்-என்று வசை சொல்லாத படி அரையிலே தொங்கும் படி உடுக்கை
கோவிந்தா உன் தன்னைப் பாடி –ஆடை யுடுப்போம் –
இவன் தூர வாசியான போது கோவிந்தன் -என்று புடவை பெறுகிறவள் இவன் சந்நிதியில் சொன்னால் புடவை பெறக் கேட்க வேணுமோ
ஆடை யுடுப்போம்
முன்பு உடாதே இருந்து இப்போது உடுப்போம் என்கிறார்கள் அன்று -அவன் உடுத்த உடுத்தும் இ றே -உடையாவது –
இவர்கள் யுடுக்க உபக்ரமிக்க உடுத்தபடி பொல்லாது என்று அவன் அழிக்கை இ றே நன்றாக யுடுக்கை யாவது
நன்றாக –ஆடை யுடுப்போம்
அரையில் பீதக வண்ண வாடை கொண்டு -என்கிறபடியே அவனைப் போலே வெளுப்போடே வாங்கி அடுத்தது அன்றிக்கே
உடுத்து முசித்து வெறுப்பு மணத்தோடு கூடின கூறை மாறாடப் பட்ட உடையாய் இருக்கை
அணிவோம் –உடுப்போம்
பிரிந்து இருக்கில் இ றே வரி வளையால் குறைவிலமே–மேகலையால் குறைவிலமே -என்ன வேண்டுவது
பல் கலனும் யாம் அணிவோம் ஆடை யுடுப்போம்
எண்ணில் பல் கலன்களும் ஏலும் ஆடையும் -என்னக் கடவது இ றே
அதன் பின்னே
பீதக வாடை யுடுத்தால் -கலத்தது உண்ணும் அத்தனை இ றே
அதன் பின்னே
புறம்பே ஒன்றைப் பற்றினால் அவையும் இல்லை -அவனையும் கிடையாது -அவனைப் பற்றினார்க்கு சர்வ லாபமும் உண்டு –
பாற் சோறு மூட நெய் பெய்து
நெய் உண்ணோம் பால் உண்ணோம் என்கிற விரதங்கள் சமாபித்து -இவர்கள் வ்ரதத்துக்காகத் தவிர்ந்து இவர்கள் தவிருகையாலே
அவன் தவிர்ந்து ஊரில் நெய்க்கும் பாலுக்கும் போக்கில்லையே –
நெய் பெருமையாலும் பால் பெருமையாலும் நீரிலே யாக்காதே பாலில் யாக்கி நெய்யாய் நிரம்ப விட்டு நெய்யிடையிலே
சோறு உண்டோ என்று தடவி எடுக்க வேண்டும் படி இருக்கை
முழங்கை வழி வார
கிருஷ்ணன் சந்நிதியில் திருப்பதைகளாய் இருக்கிறவர்களுக்கு உள்ளுத் தொங்குகிறது அன்றே -கை வழியே வழிய
கூடி இருந்து
படி கெட யுண்கிறார்கள் அன்றே -எல்லாரும் கூட தொட்டுக் கொண்டே இருக்கை இ றே உத்தேச்யம் –
கூடி –
பிரிந்த பட்ட வியாசனம் எல்லாம் தீரக் கூடி – எனை நாள் வந்து கூடுவன்-என்ற இழவும் தீர்ந்த படி
இருந்து
வாசல்கள் தோறும் அலமந்து எழுப்பிக் கொண்டு திரிந்த கிலேசம் எல்லாம் தீர இருந்து –
குளிர்ந்து
பிரிந்து கமர் பிளந்த நெஞ்சுகள் வவ்வல் இடும்படி குளிர்ந்து -கோவிந்தா உன் தன்னைப் பாடி கூடி இருந்து குளிர்ந்து
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து -காமத் தீயுள் புகுந்து கதுவா நிற்க விராதே -குளிர்ந்து உறைகின்ற கோவிந்தனோடு சாம்யாபன்னைகளாய் இருக்கை –
ஆக இரண்டு பட்டாலும் சாம்யா பத்தியும் குண அனுபவமும் ஆகிற இரண்டு அர்த்தமும் சொல்லப் பட்டது –
விராஜா ஸ்நானத்தில் உத்யுக்தனாய் போருமவனுக்கு காளங்கள்-வலம் புரிகள் தூர்ய கோஷம் –ஆண்மின்கள் வானகம்-என்கிற
மங்களா சாசனம் -நிறை குட விளக்கம் -கொடி அணி நெடு மதிள்-என்னும் படி கட்டின கொடியும் மேல் கட்டியுமாய்
ஆதி வாஹிகர் தொடக்கமான வர்கள் சத்கரிக்கப் போய் விராஜா ஸ்நாநம் பண்ணின அனந்தரம்
ஸ்ரீ வைகுண்ட நாதனை ஒப்பிக்கக் கடவராய் இருக்கும் திவ்ய அப்சரஸ் ஸூ க்கள் பல ஹஸ்தைகளுமாய் வாசோ ஹஸ்தைகளுமாய் வந்து
ப்ரஹ்ம அலங்காரம் பண்ணி ஸ்ரீ வைகுண்ட நாதனோடு கூட ஸூ ரிகளோடே சேர்ந்து இருந்து சம்சார தாப ஸ்பர்சம் இன்றிக்கே
நிரதிசய போக்யமாய் –உண்ணும் சோறு -என்று சொல்லப் பட்ட போக்கிய விஷயத்தை -பாலே போல் சீர் என்கிற குணங்களோடு
கை கழியப் போருகிற ஸ்நேஹத்தோடே புஜித்துக் களிக்கக் கடவ பரிமாற்றத்தை ஒரு முகத்தால் ஸூ சிப்பிக்கிறார்கள் –
முக்தரானவர்களுக்கு இஸ் ஸத்காரமும் இவ் வனுபவமும் சித்திக்கிறது -கோவிந்தன் தன் தனக்கு குடி குடியார் என்று இ றே –
கோவிந்தா உன் தன்னைப் பாடி
தேஹாந்த்ரே தேசாந்தரே பெறக் கடவ பேற்றை எங்களுக்கு நீ சம்மானமாகப் பண்ணித் தர வேணும் என்று சாம்யா புத்தியையும்
குண அனுபவத்தையும் அபேக்ஷித்தார்களாய் இருக்கிறது
திருவடி -திருவனந்த ஆழ்வான் -திவ்ய ஆயுத ஆழ்வார்கள் தொடக்கமான ஸூ ரி வர்க்கம் திவ்ய மஹிஷிகள் முமுஷுக்கள்
அசாதாரணமான நாடு ஈஸ்வரன் தானே எல்லாரும் சம்மானம் பண்ணும் படியான விஷயம்
-முமுஷுவாய் முக்தனாம் என்கிற சுருதி யர்த்தம் ஸூ சிதமாகிறது-
கூடி இருந்து குளிர்ந்து –பல் கலனும் யாம் அணிவோம்
பிரிந்த போது பர்யட்டங்களையும் ஆபரணங்களையும் கட்டி எங்கேனும் பொகட்டு ராக்ஷஸிகள் நடுவு இருக்கிற எனக்கு என் செய்ய என்று
இருந்த பிராட்டியை போலே இருந்தார்கள் இவர்கள் -ஸ்நாநமும் வஸ்த்ரங்களும் ஆபரணங்களும் பரதனை ஒழிய நமக்கு என் என்று இருந்த
பெருமாளை போலே இருந்தான் கிருஷ்ணன் -நீராட்டம் அமைத்து குளிக்க அழைத்தாலும் வராதே நப்பின்னை காணில் சிரிக்கும் என்றாலும் இசையாதே
-குளியாது இருந்தமை அவர்களும் அறிக்கையால் இ றே -உன் தன் மணாளனை எம்மை நீராட்டு என்றது இவர்கள்
-இவர்களோடு கூடின பின்பு விசோதித ஜடராய் ஸ்நாநம் பண்ணி சித்ரமால்யா நு லேபநராய் மஹார்ஹ வசனமும் யுடுத்து விளங்கி நின்றால் போலே
இவனும் இவர்களோடு கூடிக் குளித்து ஒப்பித்து விளங்க வேண்டுகையாலே கூடி இருந்து இப்படிச் செய்யக் கடவோம் என்கிறார்கள்
கூட்டரவாக வேணும் நன்னாள் இ றே வருகிற கூட்டரவு ஆகையால் நன்றாக கூட வேணும் இ றே
உன் தன்னைப் பாடி -கூடி –குளிர்ந்து
வாய் பாட
உடம்பு கூட
நெஞ்சு குளிர
கூடி –குளிர்ந்து
குள்ளக் குளிர நீரிலே தோயாதே நீர் வண்ணன் மார்வத்திலே தோய வேணும் –

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பாவை -மாலே மணி வண்ணா–ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் வியாக்யானம் – ஆறாயிரப்படி —

January 13, 2017

பெண்காள்-உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் -என்று சொன்னி கோள்-நம்முடைய சம்ச்லேஷ ரஸ உத்ஸாகம் உடையவர்கள்
வேறு ஒன்றை அபேக்ஷிக்கக் கூடாமையாலே அது என் சொன்னி கோள் என்று அதிலே ஒரு சம்சயம் வர்த்தியா நின்றது –
அதாகிறது ஏது-அதுக்கு மூலம் ஏது -அதுக்கு வேண்டுவன எவை -அவற்றுக்கு ஸங்க்யை எத்தனை -அவற்றைச் சொல்லுங்கோள் என்ன –
உன் முகத்தை வெளியிலே கண்டு உன் திரு நாமங்களை வாயாலே சொல்லுகைக்கு ஹேதுவாய் இருபத்தொரு நோன்பை
இடையர் பிரஸ்தாபிக்கையாலே உன்னோட்டைக் கலவிக்கு அது அவிருத்தமாய் இருக்கிற படியைக் கண்டு இடையர் பக்கல் உபகார
அதுக்கு முன்பு உள்ளார் செய்து போருவது ஓன்று உண்டு -அது தனக்கு வேண்டும் உபகரணங்களான அங்கங்களும் இவை
-அவற்றையும் தந்து அருள வேணும் என்று வேண்டிக் கொண்டு  அவனை ஆசைப் பட்டவர்களாகச் சொல்லிக் கொண்டார்கள் –
இப்போது அவனைக் கண்டவாறே தங்களுடைய வ்யாமோஹம் குளப்படியாய்-அத்வேஷ கோடியிலேயாய் என்னலாய் இருந்தது –
அவனுடைய பிச்சு வடிவு கொண்டால் போலே இருந்தது -இது கொண்டு இத்தனை நாளும்
நாங்கள் வரும் தனையும் பாடு ஆற்றின படி தான் எங்கனே என்று மாலே என்கிறார்கள் 

மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய் அருளேலோ ரெம்பாவாய்-

மாலே –
நாங்கள் தெளிந்து நோன்பு நோற்க வாகிலும் வல்லோம் ஆனோம் -நோற்கவும் ஷமன் அன்றிக்கே நாங்கள் வந்து எழுப்பும் அளவும்
எழுந்து இருக்கவும் மாட்டாதே வ்யாமோஹம் இருந்த படி என் –
மாலே
நாராயணன் –பையத் துயின்ற பரமன் -தேவாதி தேவன் -என்று முன்பு அபரிச்சேதயமான மேன்மை யுனக்கு உள்ளது என்று இருந்தோம் –
இப்போது மேன்மை இது சிவப்பு -வாத்சல்யமே உனக்கு பிரகிருதி என்று நிலையிட்டோம் கான் -உன்னைக் கண்ட வாறே –
பெருமாளுக்கு பிரதானமான குணத்தை -சரணாகதர் வத்சலர் -என்று ஸ்ரீ ராமாயணத்துக்கு உள்ளீடாக நிலையிட்டாள் பிராட்டி –
அப்படியே கிருஷ்ணனுக்கு பிரதான குணமாய் மஹா பாரதத்துக்கு உள்ளீடான ஆச்ரித வியாமோஹத்தை
மாலே என்கிற சம்புத்தியாலே வெளியிடுகிறார்கள் இடைப் பெண்கள்
ராவணன் பின்னே பிறந்த நம்மை ரகு குலத்தில் பிறந்தார் கைக் கொள்ளுவார்களோ -என்று இருந்தான் விபீஷணன் –
ராவணன் பின்னே பிறந்தவனை ராவணனை ஆசைப்படுகிற நமக்கு சித்திக்கப் புகுகிறதோ என்று இருந்தார் பெருமாள் –
இது இ றே இரண்டு தலைக்கும் வாசி
இத்தலை ஒரு மாசம் ஜீவியேன் எண்ணில் ஒரு க்ஷணம் ஜீவியேன் என்று இ றே அத்தலை
-வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் -என்கிற அளவு இ றே இவர்களது -என்னில் முன்னம் பாரித்து பருகினான் இ றே அவனது –
எனைத்தோர் பல நாள்,அழைத்தேன் இ றே -இவர்களது -என் தன் கருத்தை யுற வீற்று இருந்தான் இ றே -அவனது –
அதனில் பெரிய என்னவா இ றே -இவர்களது -அவா அறச் சூழ்ந்தாயே இ றே அவனது –
நாராயணனை நமக்கு கிடைக்குமா -என்பது பெண்கள் நினைவு யது குலத்தில் பிறந்தார்க்குக் கிடைக்கப் புகுகிறதோ என்று அவன் நினைவு
ஒருத்தி மகனானத்தை விட்டு ஒருத்தி மகனாய்த்து இவர்களுக்கு இ றே –
ஒளித்து வளர்ந்தது கம்சனுக்கு அன்றே -பெண்களை பிரியாமைக்கு இ றே
நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய்–நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த –
மாலே
இவர்கள் பக்கல் பிச்சு இ றே ஒரு பிறவியிலே இரு பிறவி யாய்த்து –
மாலாய் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை -பிச்சாய்ப் பிறந்து பெண்களையும் பிச்சேற்றித் தன்னோடு ஒரு கோவையாக்கும் –
மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான் -தெளிவுடையார் பெண்களை சந்தியில் வைப்பார்களா-
நம்முடைய வியாமோஹம் நீங்கள் அறிந்த படி என் என்ன -அகவாயில் வியாமோஹம் வடிவிலே நிழல் இட்டுக் காட்டுகையாலே தெரிந்தது என்கிறார்கள்
மணி வண்ணா
பெண்கள் பிச்சுக்கு நிதானம் இருக்கிறபடி
மணி வண்ணா
தாமரையில் இருக்கிறவள் அத்தை விட்டு வருவது இவ்வடிவைக் கண்டு இ றே -பனி மலராள் வந்திருக்கும் மார்வன் நீல மேனி மணி வண்ணன்
மணி வண்ணா
வியாமோஹன் அன்றிக்கே காதுகண் ஆனாலும் விட ஒண்ணாத வடிவு அழகு
மாலே மணி வண்ணா
இப்படி வடிவு படைத்தாரும் பிறரத்தை ஆசைப் படுவார்களோ பிச்சர் கையில் மாணிக்கமாய் -உன்னுடம்பு உன்னதாமோ
அன்றிக்கே -மால் -என்று பெரியோன் -என்றபடியாய் சூட்டு நன் மாலைகள் எடுத்து ஸூ ரிகள் சேவிக்க இருக்கும் ஈச்வரத்வம் சொல்கிறது
மணி வண்ணா -என்று வெண்ணெய் தொடு உண்ணப் போந்து -அபரிச் சேதியனாய் இருக்கச் செய்தே-முந்தானையில் முடிந்து
பெண்களுக்கு அடக்கி ஆளலாம் படி இருக்கிற ஸுலப்யத்தை சொல்லுகிறது ஆகவுமாம்-
மணி வண்ணா -என்று மணியினுடைய ஸ்வபாவத்தைச் சொல்லுகிறது -அதாவது -உண்டு – -உண்டு -என்ன உயிர் நிற்கையும்
-உடையவன் காலில் சர்வரும் விழும்படியாய் இருக்கையும் -இழந்தார் பிழையாது ஒழிகையும் கைப் பட்டார்க்கு பூணலாய் இருக்கையும்-
பூணாதார்க்கு அழித்து உண்ணலாய் இருக்கையும் -கிழிச் சீரையிலே அடக்கலாய் இருக்கையும் -பிறர்க்கே யாய் இருக்கையும்
-அளவுபடாமல் உபகரிக்கையும் -கொடுத்தோம் என்று நினைத்திராது ஒழிகையும்
-வேறு ஒன்றில் கண் வைக்க ஒட்டாது ஒழிகையும் தொடக்கமான ஸ்வபாவங்கள் –
என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனை என்று நம்மை ஆச்சி பல காலம் சொல்லும் -தாய்க்கு மணி வண்ணன் அத்தனை அன்றோ
மணிமாமை குறைவில்லாதே -அழகியார் இவ்வுலகம் மூன்றுக்கும் -என்கிற உங்களுக்கு ஏற யுடம்பு படைக்கப் போமோ
இத்தனை மிகை நம்மை சொல்லுகிறது என் -போந்த காரியத்தை சொல்லுங்கோள் என்ன
மார்கழி நீராடுவான்
மகிழ்ந்து -மார்கழி நீராட -என்று ஊராக சங்கல்பித்த கார்யம் தலைக் கட்டுகைக்காக –
சாத்தியம் கைப் பட்டு இருக்கச் செய்தே ஆன்ரு சம்சயத்தாலும் ஆஸ்திக்ய அதிசயத்தாலும் க்ருத்யாம்சம் விடார்கள் இ றே
-மார்கழி நீராடுகைக்கு உபகரணங்கள் வேண்டி வந்தோம்
இவர்கள் சொல்லுமது கேட்க்கைக்காக இத்தை ஷேபித்து இது எங்கே உள்ளது என்று தான் என்றான்
இது இங்கனே அப்ரஸித்தமாய் இருந்ததோ -என்றார்கள் –
காமநாதிகாரிகளுடைய ஜ்யோஷ்டோமாதி விதி போலே ப்ரசித்தமோ என்ன –
அனன்யா பிரயோஜனைகளான எங்கள் முன்னே பிரயோஜனாந்தர பரருடைய விரோதியைக் காட்டினாயே என்று இவர்கள் சொல்ல
முமுஷுக்களுடைய த்யான விரோதி போலே பிரசித்தமாய் இருந்ததோ என்று அவன் சொல்ல
நாஸ்திகரைப் போலே நீ சொல்லுகிறது என் -ஆள் அறிந்து வார்த்தை சொல்லாய்
நாராயணனே நமக்கே பறை தருவான் என்பவருடைய
அனுஷ்டானம் சுருதி ஸ்ம்ருதிகளிலே சொல்லுகிறவை போலே அல்ல காண் -பிரபல பிராமண சித்தம் காண் என்கிறார்கள் –
மேலையார் செய்வனகள்
விதி ப்ரவ்ருத்தமானால் பல வ்யாப்தமாந்தனையும் சம்சயத்துக்கு விஷயம் உண்டு -அனுஷ்ட்டித்து பல சித்தி உண்டானதுக்கு சம்சயம் இல்லையே –
விச்வாமித்ரன் சொன்னான் கண்டு சொன்னான் என்றால் போலேயோ கபோதம் அனுஷ்டித்தது –
மேலையார் செய்வனகள்
நிர்தோஷ பிராமண சாஸ்திராந்தனும் வியாசன் சொன்னான் மனு சொன்னான் ப்ரஹ்மாவாதிகள் சொல்லுவார்கள்
-யாதொரு படி அவர்கள் அவ்விடத்திலே வர்த்தித்தார்கள் அப்படி வர்த்தி என்று -ஞானவான்களுடைய வசனத்தையும் அனுஷ்டானத்தையும்
அன்றோ பிரமானமாகச் சொல்கிறது -வேதங்களுக்கு முன்னே அன்றோ தர்மஞ்ஞருடைய ப்ராமாண்யம் சொல்லப் படுகிறது
வேண்டுவன கேட்டியேல்
யாதொன்றை யாதொன்றை ஸ்ரேஷ்டர்கள் ஆசரித்தார்கள் -யாதொரு அளவு செய்தார்கள் -அவ்வளவு லோகம் அனுவர்த்திக்கும் என்று
சிஷ்டாசாரமே ஸ்திர பிரமாணம் என்று தேர்த்தட்டிலே நின்று சொன்ன நீ எங்களைக் கண்டவாறே மறந்தாயோ –
சாஸ்திரம் விதித்ததே யாகிலும் சிரேஷ்டர் அனுஷ்டானம் இல்லாத இடத்தில் தவிரக் கண்டு அறியாயோ –
அஷ்டகையில் -பசு விசசநம் கர்த்தவ்யம் என்னும் இடம் பசு மேய்ப்பார்க்குத் தெரியாதே -உன்னை பர தேவதை என்றும்
உனக்கு வாசக சப்தம் நாராயணன் என்றும் நாங்கள் ஆதரிக்கிறது வேத சாஸ்த்ர சித்தம் என்று அன்று இ றே
-விட்டு சித்தர் தங்கள் தேவரை -என்றும் விட்டு சித்தன் விரும்பிய சொல் -என்றும் அன்றோ -வைதிக விதிகள் எல்லாம்
உன்னுடையாருடையான கம்பீரமான மனசை அனுவர்த்தித்து இ றே பிரமாணம் ஆகிறது
ஒத்த ஓதா நிற்கச் செய்தே ஒரு மந்த்ரத்தை ஸ்வீகரித்து இதர மந்த்ரங்களைக் கை விட்டது சிஷ்ட அசிஷ்ட பரிக்ரஹங்கள் ஆகையால் இ றே –
அப்படி பரிக்ரஹித்த மந்த்ரம் தன்னில் மந்த்ர ரத்னத்துக்கு உத்கர்ஷம் ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம் என்று இ றே –
திருமால் திரு நாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின்-என்னக் கடவது இ றே
வேண்டுவன
லோக ஸங்க்ரஹத்தயா அனபேஷிதங்களும் செய்யா நிற்பர்கள் -அவர்கள் செய்யுமா போலே அவை எல்லாம் செய்யப் போகாதே என்ன
வேண்டுவன
அவர்கள் செய்து போருமவற்றில் இப்போது அதிகரித்த காரியத்துக்கு அபேக்ஷிதமுமாய் ஸ்வரூப விரோதமும் பிறவாதே இருக்குமவை-
இவர்கள் மணி வண்ணா என்று அவன் வடிவிலே கண் வைத்துக் கொண்டு இருக்கிற மாத்ரம்-
அஞ்சு லக்ஷம் குடியில் பெண்களும் முன்னே நிற்கையாலே அவர்கள்
கண்ணிலும் முலையிலும் இடையிலும் துவக்குண்டு அந்நிய பரனாய் இருந்தான் -தட்டி யுணர்த்தி
கேட்டி
என்கிறார்கள் -இவர்களாலும் புறம்புள்ள அந்நிய பரதை இ றே தவிர்க்கலாவது-தங்கள் பக்கல் அந்நிய பரதை தவிர்க்கப் போகாது இ றே
ஊரார் இசையாத போது இ றே -ஓடி அகம் புக வேண்டுவது -இப்போது வைத்த கண் வாங்காதே அனுபவிக்கலாமே-
ஆகையால் பார்த்துக் கொண்டு இருந்தான் -சிலர் பட்டினி கிடக்க சிலர் உண்டு ஸூகிக்குமா போலே கெடுவாய் நீ என் செய்கிறாய் கேட்க்கிறாயீ -என்கிறார்கள் –
உங்களுடைய ஞான பக்தி வைராக்யங்களினுடைய நிழலீடு ஆகையால் கண்ணும் முலையும் இடையும் போக்யமாகையாலே
உங்கள் வடிவைப் பார்த்துக் கொண்டு இருந்தோம் -உங்களுடைய மழறு தேன் மொழிகள்
-செவிக்கு போக்யமாம் படி கேட்க்கிறோம்-திரு உள்ளமாகல் ஆகாதோ –வேண்டுவது எல்லாம் -என்றான்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன–பாலன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியமே-போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
என்கிறார்கள் -ஜகத்து எல்லாம் அதிரும் படியான த்வனியை யுடைத்துமாய் -இடைமுடைத்தாய் -பாலைத் திரட்டினால் போலே அழகிய நிறத்தை யுடைத்தாய் –
பல சொல்லுகிறது என் உன் கையில் ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போலே இருக்கும் அநேக சங்கங்கள் வேணும்
ஞாலத்தை எல்லாம் நடுங்க
பாரத சமரத்தில் முழக்கம் துர்யோத நாதிகளை நடுங்கப் பண்ணின அளவிலே
இச் சேர்த்திக்கு பிரதிகூலராய் இருப்பர் யாவர் சிலர் -அவர்கள் எல்லாம் நடுங்க வேணும் -பற்றார் நடுங்க -பூங்கொள் திரு முகத்து
-சிலரை வாழ்விக்கும் -சிலரைக் கெடுக்கும் -வர்ஷார்த்தமாக பெண்கள் புறப்படும் போதை சங்க த்வனி கேட்டு
வலம் புரி போல் நின்று அதிர்ந்து -என்னும் படி மேகங்களும் உட்பட முழங்கும் படி சப்திக்க வேணும்
பாலன்ன வண்ணம்
மணி வண்ணா என்று இவன் நிறம் உத்தேசியமானால் இவனோடு ஸ்பர்சம் யுடையார் நிறமும்
உத்தேச்யமாகச் சொல்ல வேணுமோ -தாமோதரன் கையில் என்கிறபடியே
போய்ப்பாடுடையன
பேரிடமாய் இருக்கை-இடமுண்டாகில் இ றே த்வனி முழங்கி இருப்பது -போய்ப்பாடு -என்று புகழுடைமை யாகவுமாம் -அதாவது
ருக்மிணி பிராட்டி போல்வாருக்கு உதவினது அன்றிக்கே-சங்கரய்யா யுன் செல்வம் -என்றும் -பொதுவாக உண்பதனை -என்றும் –
நாய்ச்சிமாரும் கூட ஊடும் படியான வேண்டற்பாட்டை யுடையவன் ஆகையால் வந்த புகழ் –
அல்லாதவை வேண்டுவதுக்கு முன்னே பிரதானம் மங்கள சப்தம் ஆகையால் வேண்டுகிறார்கள்
உன் பாஞ்ச சன்னியம்
என்கிறார்கள் -இயல் அறிபவன் ஒருவன் ஆகையால் தானே அறியும் என்று -தன்னுடைய பாஞ்ச சன்னியம் போலே இருக்கும் சங்கு இல்லையே
உன்னோடு உடனே அது கூடாமைக்கு தானே கூட வருவான் என்று நினைத்து -ஓன்று கண்டோம் -பின்னையோ என்றான்
சாலப் பெரும்பறையே
எழுச்சிக்கு சங்கு ஊதினால் புறப்பாடுக்கு கொட்ட வேண்டாவோ -பாஞ்ச ஜன்ய த்வனி ஓடின திக்கு எல்லாம்
முழங்க வல்ல மிகவும் பெருத்த தொரு பறை வேணும் -பின்னையோ என்றான் –
பல்லாண்டிசைப்பாரே
கொட்டிக் கொண்டு புறப்படும் போதே எதிரே நின்று காப்பிடுவார் வேணு
பாடுவார் எங்கள் முகத்திலே விழித்து நாங்கள் அவர்கள் முகத்தில் விழித்துக் கொண்டு போம்படி தர்ச நீயமாய் இருபத்தொரு மங்கள தீபம் வேணும் –
கொடியே
கிட்டினார்க்கு விளக்கு பிரகாசிப்பது -எங்களைக் கண்டு தூரத்திலே வாழும் படி முன்னே பிடித்துக் கொண்டு போம் படி ஒரு கொடி வேணும்-
விதானமே
புறப்படும் போதே பனி தலையில் விழாத படி ஒரு மேற்கட்டி வேணும் –
குளிக்கப் போம் போதைக்கு வேண்டும் அளவு இது என்கிறார்கள் -பெண்காள் இப்படி இருப்பன தேடப் போமோ
-துர்க்கடன்களை சொன்னி கோளே என்ன -உனக்கு அரியது உண்டோ என்றார்கள் -எனக்கு எளிதாய் இருந்ததோ என்றான்
ஆலினிலையாய்
உன்னுடைய சிறிய வயிற்றில் பெரிய லோகங்கள் எல்லாவற்றையும் வைத்து ஒரு பவனான ஆலிலையில் கிடந்து அக்கடிதன்களை
செய்ய வல்ல உனக்கு அரியது யுண்டோ -லோகத்தில் இல்லாதது எல்லாம் எங்களுக்காக யுண்டாக்க வல்லவன் அன்றோ –
ஆலினிலையாய்
பாலன் தனதுருவாய்-வட தள சாயியுடைய விருத்தாந்தம் கிருஷ்ணன் பக்கலிலே இ றே காண்பது -பண்டு ஒரு நாள் ஆலினிலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன் –
வையம் ஏழும் கண்டாள்-அன்புற்று நோக்கி படித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற்று இல்லையே –
மாலே மணி வண்ணா -என்கிற இடத்தில் ஸுலப்யம் சொல்லுகிறது –ஆலினிலையாய் -என்ற இடத்தில் சர்வ சக்தி யோகத்தவம் சொல்லுகிறது –
அது மாமின் அர்த்தம் -இது அஹம் -என்கிறத்தின் அர்த்தம் -மாலாய் ஆலிலையில் வளர்ந்து -என்னக் கடவது இ றே –
அருளேலோ ரெம்பாவாய்
சக்தி இராமை இல்லை -வேண்டி இராது ஒழியில் செய்யலாவது இல்லை -தரில் அரியது இல்லை -தராது ஒழியில் வளைப்பிட ஒண்ணாது –
ஆலினிலையாய் அருள்
என்றும் உன் தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது-என்னக் கடவது இ றே -இப்போது அகடிதம் இ றே என்று கண் அழியாதே கிருபை பண்ண வேணும் –
ஆலினிலையாய் அருள்
அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் என்று வட தள சாயி யருள் இ றே பிரசித்தமாய் இருப்பது –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பாவை –ஒருத்தி மகனாய் பிறந்து –ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் வியாக்யானம் – ஆறாயிரப்படி —

January 12, 2017

பெண்காள் உங்கள் பிறப்பால் நம் விஜயத்துக்கு மங்களா சாசனம் பண்ணுகை ஸ்வரூபம் இ றே -இக் குளிரில் உங்களை பேணாதே க்லேசித்து வந்தி கோளே
உங்கள் நெஞ்சிலே ஓடுகிறது வெறும் பறையோ-வேறு ஏதேனும் உண்டோ என்ன -உன்னுடைய குண கீர்த்தனம் பண்ணிக் கொண்டு வருகையால்
ஒரு கிலேசங்களும் படாதே ஸூ கமே வந்தோம் -பறை என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு நாங்கள் உன்னை இ றே அர்த்தித்து வந்தது என்கிறார்கள் –
பறை கொள்ள வந்தோம் இரங்கு என்று நம்மை வடிம்பிடா நின்றி கோளே -நீங்கள் சொன்ன போதாகச் செய்யப் போமோ
பிரதிபந்தகங்கள் உண்டாய் இருக்குமே என்ன –பிரதிபந்தகங்களைப் போக்கி அரியது செய்த உனக்கு எளியது செய்யத் தட்டுண்டோ
எங்களோடு சஜாதீயரிலே சிலர் நோன்பு நோற்றுப் பெற்றது எங்கள் நோன்பு பலித்த படி அன்றோ -என்கிறார்கள் –

ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பன்ன நின்ற நெடுமாலே யுன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-

ஒருத்தி மகனாய்–
ஒருவன் சாதன அனுஷ்டானம் பண்ணி மாணிக்கம் போலே நாலு பிள்ளைகளை பெற்றால் போலே
-நால்வரும் கூடி தபஸ் ஸூ பண்ணி -பேறு ஒருத்தியது யாகையாலே -ஒருத்தி -என்கிறார்கள் -ஊழி முதல்வன் ஒருவனே
என்கிற வஸ்துவை வயிற்றிலே அடக்கப் பெற்றால் ஒருத்தி இ றே
ஒருத்தி மகனாய்
சர்வ லோகங்களுக்கும் சர்வ பூதங்களுக்கும் முந்தைத் தாய் தந்தையாய் இருப்பான் ஒருவனைத் தனக்குப் பிள்ளையாக பெறுகைக்கு நோன்பு நோற்க
ஜகத்துக்கு சேஷியுமாய் சர்வ வியாபகனுமாய் நித்யனுமாய் இருக்கிற மகன் ஒருவனுக்கு அல்லாத மா மேனி மாயன்
சிலர் அபேக்ஷித்தத்துக்காக மகனானான் என்னும் அளவன்றிக்கே -தேவகீ புத்ரன் என்றே தன்னை நினைக்கும் படி
அவ்வருகு தனக்கு ஒரு ஏற்றம் உண்டு என்று அறியாதபடி பிள்ளையானான் –
பிறந்து
சிலர் மகனாக வேணும் என்று ஆசைப்பட்டால் தூணிலே தோன்றினாலே போலே ஆதல் -ஆனைக்கு உதவினால் போலே யாதல் –
வந்து உதவ அமைந்து இருக்க ஈஸ்வரனே வந்து பிறக்க வேணும் என்று நோற்ற படியால் பூர்வ வ்ருத்தாந்த அனுசந்தானம் இன்றியே
கர்ப்ப வாசம் பண்ணிப் பிறந்து உம்முடைய வயிற்றின் நின்றும் நாம் பிறந்தோமே என்று சோபனம் சொல்லிக் கொண்டு வந்து பிறந்தான்
பிறந்து
கர்ம வஸ்யர் படுவது எல்லாம் கிருபா பரதந்த்ரனாய் படுவதே -என்று தீமதாம் அக்ரேஸர் -பிறந்தவாறும் -என்று ஆழங்கால் படும்படி யாய்த்து பிறந்தது
ஆவிர்பவித்தான் என்கிறது கர்ப்பத்தில் தோஷ ஸ்பர்சம் இல்லை எங்கைக்காஇருக்கிறவன் சம்சாரத்தில் பிறந்த இக்குணம்
இழக்க ஒண்ணாது என்று ரிஷிகளை போலே ஆவிர்பவித்தான் என்று அவத்யம் சொல்லாதே நிறம் பெறும்படி பிறந்தான் என்பார்கள் ஆழ்வார்கள் –
மகனாய் பிறந்து –
மகனாகை யாவது மாதா பித்ரு பரதந்த்ரனாகை இ றே -பெருமாள் பக்வரான பின்பு மாதா பித்ரு வசன பரிபாலனம் பண்ணினார்
இவன் பிறந்த போதே ஆழ்வார்களையும் திருத்த தோள்களையும் மறைக்க வேணும் என்ன உபசம்ஹரித்தான் –
ஓர் இரவில்
பிறந்த இடத்தில் ஓர் இரவும் வசிக்கப் பெற்றது இல்லை இ றே சம்சாரிகள் கீழ் -நாய்க்குடலுக்கு நறு நெய் தொங்காதாப் போலே
சம்சாரிகள் தண்மை கர்ப்ப க்ருஹத்தில் ஓர் இராத் தங்க ஒட்டிற்று இல்லை -சம்சாரிகள் பிறந்தால் பெறுவதுவும் பெறப் பெற்றது இல்லை –
நால்வர் இருவர் அறிந்து சோபனம் சொல்லி தூரியம் கொட்டி கண் கண்டு நெய்யாடல் பொத்தப் பெற்றது இல்லை –
சர்வேஸ்வரன் இங்கே வந்தால் நம்முடைய கர்மம் நம்மோடே அவனுக்கு சாம்யத்தைக் கொடுக்கும் -நாம் அங்கே சென்றால்அ
வனுடைய கிருபை அவனோடே பரம சாம்யத்தைத் தரும் -இணைவனாம் எப்பொருட்க்கும் –தம்மையே ஓக்க அருள் செய்வர்
-நம் பிறவி அவனை அகற்றும் -அவன் பிறவி அணுகைக்கு உடலாம் -அவன் பிறவி நமக்கு என்று கோல
நம் பிறவி அவனைப் பெற்றவர்கள் காலில் விலங்கு பட்டது படும் –
ஓர் இரவில்
காலக்ருத பரிமாணம் இல்லாத தேசத்திலே வஸ்து காலாதீனமான தேசத்திலே பிறந்து ஓர் இரவில் பட்ட பாடு தான் என் –
வீங்கிருள் வாய் பூண்டு
இவ்விரவோடு ஒத்த இரவு முன்பும் இல்லை பின்பும் இல்லை
ஒருத்தி மகனாய்
அங்கே பிறந்து இங்கே வளர்ந்தானாய் இருக்கை அன்றிக்கே இங்கே பிறந்தானாய் இருக்கிறபடி
ஓர் இரவில் ஒருத்தி மகனாய்
அவ்விரவிலே யசோதை பிராட்டிக்கு பிள்ளையாக வேண்டுகையாலே ஒருத்திக்கு அவதார ரசத்தைக் கொடுத்து ஒருத்திக்கு லீலா ரசத்தை அனுபவிப்பித்தான்
ஒருத்தி மகனாய்
அவ்விடத்தில் முலைச் சுவடு அறியாமல் போந்த படியால் அழுது முலைப் பால் குடித்த இடம் இ றே பிறந்த இடமாவது –
திருப் பிரதிஷடை பண்ணினவர்களில் காட்டிலும் ஜீரண உதாரணம் பண்ணினவர்களே முக்கியர்
யாதவத்தையும் கோபவத்தையும் ஏக காலத்திலேயே யாக்கினான் -யதுகுல உத்பவன் என்ற ரிஷி தானே கோபாலன் யாதவ குலத்தை எடுக்கக் கடவன் என்றான் இ றே
அவளுக்கு முலை சுரவா நின்றதாகில் இவன் அழுது முலை உண்ணா நின்றான் ஆகில் உமக்குச் சேதம் என் என்று பட்டர் –
யசோதை பிராட்டியாக பூதனை பாவித்து இவன் உண்ணாத போது முலை விரியும்படியான தசையை யுடையாளாய்
பிள்ளையாக கொண்டு எடுத்து முலை கொடுக்க அது பெறா விடில் வயிறு ஆராத படியாய் இவனும் முலை உண்ண-இவனை பிள்ளை என்று
அவள் விசுவசிக்க ஒண்ணாதே துணுக் துணுக் என்னும் படி இவளாக பாவித்து அவள் பக்கல் பரிமாறுபவன்
இவள் பக்கல் பிள்ளைத் தனத்தில் தப்ப நில்லானே -மகனாகக் கொண்டு எடுத்தால் இத்யாதி
ஒருத்தி மகனாய்
இவள் இங்கே ஏற நியமித்து போக விட்ட மாத்ரம் -இவள் -காடு ஏறப் போ என்னலாம் படி இருக்கை –
கன்றின் பின் எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன் -அசேஷ ஜகத்துக்கும் சாஸ்தா வான  வஸ்து
இவள் கட்டவும் அடிக்கவும் படி நியமிக்கலாம் படியாய்த்து இருப்பது –
மகனாய்
அங்கு பிள்ளையாய் பெற்றவளுக்கு யாய்த்து இழவு உள்ளது –
நந்தன் -பெற்றனன்-யசோதை பிராட்டியைக் கைப் பிடித்த பாக்யாதிகர் பெற்றார் -என்னைக் கைப் பிடித்த முஹூர்த்தத்தாலே ஸ்ரீ வ ஸூ தேவர் இழந்தார்
மருவு நின் திரு நெற்றி -திருப் பவளத்தில் முலையைக் கொடுக்கப் புக்கவாறே திரு நெற்றியில் சாத்தின சுட்டியில் அசைவையும் முறுவலையும் கண்டு
தமப்பனாரைக் கொண்டான் என்று அகவாய் பணைக்கும்-அந்த ப்ரீதியாலே தனக்கும் வாசி தெரிக்க ஒண்ணாத விரலை வாயிலே
இட்டுக் கொண்டு ஒரு வார்த்தை சொல்லும் போது பெரிய தேற்றத்தோடே தொடங்கின மழலைச் சொல்லும் பாஹ்ய ஹீனையான
நான் இழந்தேன் -பாக்யவதியான அவள் பெற்றுப் பூர்ணை யானாள்
ஒருத்தி மகனாய்
கம்சன் முடிந்து பழை நாள் பட்டு இருக்கச் செய்தேயும் இந்நாள் என்னாதே மறைத்து போருகிறார்கள் பொல்லாங்கு
விளையும் என்னும் அச்சத்தால் -பாத்தா நாள் -என்னுமா போலே
ஒருத்தி
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள் -ஞாலத்தில் புத்ரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மாற்று ஆரும் இல்லை –
ஒளித்து வளரத்
பிறந்த இடத்தில் தோன்றப்பெறா விட்டால் போ-
விஷ த்ருஷ்டிகளான பூதநாதிகள் கண் பட ஒண்ணாது என்று நாட்டார் செய்வன செய்யப் பெறாதே நில வறைகளிலே இ றே வளர்ந்தது –
வானிடைத் தெய்வங்கள் காண -என்று அனுகூலர் கண் உட்பட பட ஒட்டாதவள் பிரதிகூலர் கண் பட ஓட்டுவாளோ –
கன்றின் பின் போக்கில் என்று புறப்பட ஓட்டாள்
ஒளித்து வளர
உகப்பார் சதா தர்சனம் பண்ணி அனுபவிக்க கடவ வஸ்து கண்ணுக்கு தோற்றாத படி மறைக்க வேண்டும் படி
கள்ளர் பட்டது படுவதே -அவதரிக்கச் செய்தே அந்தர்யாமி பட்டது பட்டான்
ஒளித்து வளர
உள்ளே இருக்கச் செய் தேயும் இவன் இல்லை என்று எழுதி எழுத்து இடுமவன் முகம் காட்ட சமவதிக்குமோ-
பிச்சேறின பிரஜை முன்னே தாய் நிற்கிலும் கொல்லும்-இவள் பேர நிற்கில் தன்னை முடித்துக் கொல்லும்
அப்படியே அவதரிக்கில் எதிர் இடுவார்கள் -பரம பதத்தில் இருக்கில் அசத் கல்பர் ஆவார்கள்
அந்தர்யாமியாய் முகம் தோற்றாதே நின்று இரண்டு தலையையும் நோக்கி தெளிவு பிறந்து அம்மே என்றால் ஏன் என்கைக்கு பதிக்கிடைக் கிடக்கிறபடி –
ஒளித்து வளரத் தரிக்கிலானாகித்-தான்
நாரதாதிகள் சென்று உன்னுடைய சத்ரு திருவாய்ப் பாடியிலே வலரா நின்றான் -என்று சொல்லக் கேட்ட மாத்திரத்தில்
நம் கண் வட்டத்தில் இல்லையாகில் அவன் என் செய்யில் என் என்று இராதே சதுரங்க பல உபேதனாய் ஐஸ்வர்யத்துக்கு
ஹானி இன்றிக்கே இருந்தோம் ஆகில் வந்த அன்று பொருகிறோம் என்று ஆறி இராதே தரிக்க மாட்டிற்று இலன்
அஸஹ்ய அபசாரமாவது பகவத் பாகவத விஷயமாக அவர்கள் சத்தையும் பொறாது ஒழிகை இ றே
கம்ச வதத்து அளவும் அனுசந்திக்கிறவர்கள் ஆகையால் மேலே படப் புகுகிற பாட்டை அனுசந்தித்து ஸூத்ரனான பையில்
தானே சிம்ஹத்தோடே நரி எதிர் இடுமா போலே எதிர் இட்டவன் சிறுமையைச் சொல்கிறார்கள்
தீங்கு
பரிய வேண்டும் விஷயத்தில் பொல்லாங்கை நினைப்பதே -என்ன துஷ் ப்ரக்ருதி தான்
-இன்னது என்று தன் வாயால் சொல்ல மாட்ட்டாமையாலே தீங்கு என்கிறார்கள்
அதாவது பூதனை உள்ளிட்டாரை வரக் காட்டியும் -வில் விழவுக்கு என்று அழைத்ததும் நலியாத் தேடின எல்லா வற்றை யும் நினைத்து –
நினைந்த
இதுக்கு மனஸ் சஹகாரம் உண்டாவதே -சிந்தையினால் இகழ்ந்த -என்கிறபடி யுக்தி மாத்ரமான அளவில் நலியாதே நெஞ்சில் பொல்லாங்கு சோதித்தால் யாய்த்து கை விடுவது -கைக் கொள்ளும் இடத்தில் கழுத்துக்கு மேலும் அமையும் -கை விடும் இடத்தில் அகவாயில் உண்டு என்று அறிந்தால் அல்லது விடான்
தீங்கு நினைந்த
தீய புந்திக் கஞ்சன் இ றே-
கருத்தைப்
அம்மானாய் -கண்ண நீர் விழ விட்டு இருக்க -நினைத்த அபிப்ராயத்தை –
பிழைப்பித்துக்
அவன் நினைவை அவன் தன்னோடே போம் படி பண்ணி
கஞ்சன் வயிற்றில் நெருப்பன்ன நின்ற
கிருஷ்ணன் என்றால் வயிறு எரிதலோடே இருக்கக் கடவ பெண்களுடைய பயத்தை எல்லாம் அவன் வயிற்றிலே யாக்கின படி
கஞ்சன் வயிற்றில்
கம்சனுடைய தப்புக்களை நினைத்து -என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய் –வாழ கில்லேன் வாசுதேவா –
ஊடுற என்னுடைய ஆவி வேமால் -என்கிற ஆஸ்ரிதருடைய பயாதிகளை எல்லாம் கம்சன் வயிற்றிலே கொளுத்தினான்
கஞ்சன் வயிற்றில்
தேவகி வயிற்றில் பிள்ளை -கம்சன் வயிற்றில் நெருப்பு
நெருப்பன்ன
கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய் -தேவகியார் வயிற்றில் நீரைச் சொரிகிறவன் காணும் கம்சன் வயிற்றில் நெருப்பைச் சொரிகிறான்
நெருப்பன்ன நின்ற
கஞ்சனைக் காய்ந்த காள மேகத்திரு உருவன்-
நெருப்பென்ன நின்ற
கம்சன் அநாதி காலம் சஞ்சிதமான பாபம் இத்தனையும் கண்ட காட்சியில் அனுபவித்து யாரும் படி நின்ற நிலை
நெடுமாலே
இது எல்லாம் பட வேண்டிற்று ஆஸ்ரிதர் பாக்கள் வ்யாமோஹத்தாலே
நெடுமாலே
அப்போது ஸ்ரீ வசுதேவர் பக்கலிலும் ஸ்ரீ தேவகியார் பக்கலிலும் திரு உள்ளம் மண்டி -ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் –காணுமாறு இனி யுண்டு எனில் அருளே
என்று அவள் பட்ட இழவுகள் எல்லாம் தீர முலைப் பால் திரு மேனியில் பாய அவளுக்கு நின்று பால சேஷ்டிதங்களைக் காட்டின வ்யாமோஹத்தை
அவள் தான் காண்பதற்கு முன்னே மஞ்சங்களில் பெண்கள் கண்டு வாழும் படி வ்யாமோஹ அதிசயத்தை நெடுமாலே என்கிறது –
கஞ்சனை அஞ்ச முன் கால் விசைத்த காளையர் ஆவர் அச்சோ ஒருவர் அழகிய வா -என்று இ றே பெண்கள் பார்த்துக் கொடு நின்றது –
நாம் அவ்விடத்தில் அப்படி செய்த செய்த தீமை யுண்டு -உங்களுக்கு செய்ய வேண்டுவது என் என்ன
யுன்னை அருத்தித்து
எங்களுக்கு பிறந்து காட்டவும் வேண்டாம் -வளர்ந்து காட்டவும் வேண்டாம் -கொன்று காட்டவும் வேண்டாம் -உன்னைக் காட்ட அமையும் –
உன்னை அருத்தித்து
உன் பக்கலிலே ஓன்று வேண்டி வந்தோம் அல்லோம் -உன்னையே வேண்டி வந்தோம்
உன்னை அருத்தித்து
என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த -என்று அர்த்தித்தவ நிரபேஷமாக அர்த்திகளையும் யுண்டாக்கி உன்னையும் கொடுப்புதி இ றே
உன்னுடைய உதார குணம் எல்லாம் அசத் கல்பமாக்கி ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் இரப்பாளனாக வந்தது -அபேக்ஷித்து
நெடுமாலே உன்னை அருத்தித்து
பாண்டே வ்யாமுக்தனான உன்னை அர்த்திகையாலே பெரும் பிச்சின் மேலே பிச்சேற்ற வந்தோம் –
வந்தோம்
எங்கள் மிகைச் செயல் கண்டாயே -உன் வ்யாமோஹம் எல்லாம் அத்வேஷம் என்னும் படிக்கு ஈடாய் நாங்கள் வந்தது
வந்தோம்
எதிர் சூழல் புக்கு -ஆள் பார்த்து உழி தருகின்றாய் -ஆயர் குலத்தினில் வந்து தோன்றின உன் வியாமோஹம் எல்லாம் நாலடி இட்டு அசத் கல்பம் ஆக்கினோம்
பறை கொள்வான் இன்று யாம் வந்தோம் -என்று சொல்வது -உன்னை அருத்தித்து வந்தோம் -என்பதாய் வியாஹதமாக வார்த்தை சொன்னி கோளே என்ன
பறை தருதியாகில்
எங்களுக்கு உத்தேச்யம் செய்ய நினைவாகில்
தருதியாகில்
அவர்கள் ஆர்த்தித்தவம் அப்ரயோஜம் -அவன் நினைவாலேயே பலம் என்கைக்காக ஆகில் என்கிறது
இவன் எல்லாம் செய்தாலும் அவன் அல்லேன் என்றவாறே ஸ்வ தந்த்ரனை வளைப்பிட ஒண்ணாதே
இவர்கள் அர்த்தித்தவம் அவன் ஸ்வாதந்தர்யத்தை போக்க மாட்டாதே -ஆகையால் தருதியாகில் என்கிறார்கள்
எத்தனையேனும் மேலானவர்களை எத்தனையேனும் தாழ்ந்தவர்கள் திரு உள்ளம் ஆகில் செய்து அருள வேணும் என்று இ றே சொல்வது
ஆகிறது நினைவு சுருக்கம் ஒழிய அறிந்தோம் -வந்தபடி தான் என் -வருகிற போது கிலேசித்தி கோளே என்ன
ஒரு கிலேசம் இன்றியிலே உகைப்போடே வந்தோம் -பிரிந்து இருக்கிற நீங்கள் உகைப்போடே வந்த படி என் என்ன
திருத் தக்க செல்வமும்
ஸ்ரீ யபதித்தவத்தால் வந்த சம்பத்தையும் -பிராட்டியை எனக்கு என்னும் பெருமை யுண்டாம் போது அவள் ஆசைப்பட்டு
மேல் விழும்படி அதுக்கு ஈடான சம்பத் உண்டாக வேணும் இ றே –
திருத் தக்க செல்வமும்
செலவச் சிறுமியரான இவர்களுக்கு செல்வம் தக்காப் போலே போதமர் செல்வக் கொழுந்தான -பெரிய பிராட்டியாருக்கு தகுதியாய்
இருக்கும் செல்வத்தினால் வளர் பிள்ளையுடைய செல்வம்
சேவகமும்
அவ் வைச்யர்வத்தைத் காத்தூட்ட வல்ல ஆண் பிள்ளைத் தனமும் -பிராட்டியுடைய விரோதிகளை பெண்களுடைய விரோதிகளை போக்கி
உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் காத்தூட்ட வல்ல வீர்யம் -என்று என்றும் உன் சேவகமே ஏத்தி என்கிற இடத்தில் இரண்டும் உண்டு இ றே
செல்வமும் சேவகமும்
ஆற்றப் படைத்தான் மகனே என்றதுவும் -கப்பம் தவிர்க்கும் கலியே-என்றதுவும்
யாம் பாடி
உன் பேர் சொல்லப் பெறாத நாங்கள் உன் பேர் சொல்ல ஒட்டாதார் முன்னே உகப்போடே பாடி –
புள்ளின் வாய் கீண்டானை என்று ஊர் எல்லாம் பாடிக் கொண்டு திரிகிறார்கள் இ றே
வருத்தமும் தீர்ந்து
உன்னைப் பிரிந்து நெடு நாள் பட்ட கிலேசம் எல்லாம் தீர்ந்து -கேவலரைப் போலே துக்க நிவ்ருத்த மாத்திரமே அன்றி இவர்களுக்கு பிரயோஜனம்
பாடுகிற போது ப்ரீதிக்கு போக்கு வீடாகை யாலே
அனுபவ காலத்தில் அநந்தம் போலே அனுசந்தான சமயத்தில் ஹர்ஷம் கனக்க யுடையோமாய்
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து
நினைந்து இருந்தே சிரமம் தீர்ந்தேன் –உகந்தே உன்னை உள்ளும் என்னுள்ளம் -என்கிறபடி அனுசந்தான காலத்தில் அனுபவ காலம் போலே இ றே இருப்பது
தூய வமுதை பருகி பருகி -கிருஷ்ண அனுசந்தானம் தித்திக்கும் இ றே -வருத்தம் தீருகைக்கு சேவகம் பாடினார்கள் -மகிழ்ச்சி பிறக்கைக்கு செல்வம் பாடினார்கள் –
ஸுர்ய வீர்யாதிகள் கிலேச நிவ்ருத்திக்கு உடல் -ஐஸ்வர்யம் ஆனந்த ஹேது
பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து
இசை மாலைகளில் ஏத்தி மேவப் பெற்றேன் வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீய –வீவில் இன்பம் மிகவெல்லை நிகழ்ந்தனம்-
விரோதி நிவ்ருத்தியும் யாய்த்து -அபிமத சித்தியும் யுண்டாய்த்து –பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து தருதியாகில் உன்னை அருத்தித்து வந்தோம் –

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பாவை —-அன்று இவ் வுலகம் –ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் வியாக்யானம் – ஆறாயிரப்படி —

January 12, 2017

ஒரு நாள் அர்ஜுனன் உபய சேனைக்கும் நடுவே தேரை நிறுத்து என்று சொல்ல -அப்படியே செய்தவன் -இத்தனை பெண்களும் திரண்டு
இங்கனே போந்து அருள் என்றால் அது செய்யாது இருக்க மாட்டான் இ றே –தாங்கள் அபேக்ஷித்தபடியே திருப் பள்ளி அறையின் நின்றும்
திவ்ய சிம்ஹாசனத்து அளவும் நடந்து போரத் தொடங்கினான் -பிராட்டி கட்டுவாசல் அளவும் தொடர்ந்து மங்களா சாசனம் பண்ணினால் போலே
நப்பின்னைப் பிராட்டியும் தொடர்ந்து ஏத்தும் இ றே –அவனைக் காணும் அளவும் இ றே இங்கனே போர வேணும் எழுந்து அருளி இருக்க வேணும் –
வந்த கார்யம் ஆராய்ந்து அருள வேணும் அது வேணும் இது வேணும் என்று பல தேவைகளை சொல்லி அலைக்கலாவது
தாண்ட காரண்யத்தில் ரிஷிகள் கண்டவாறே ராக்ஷஸ பரிபவங்களை மறந்து மங்களா சாசனத்தில் மண்டினார்கள் இ றே
அப்படியே இவர்களும் பெரியாழ்வார் படியாய் யாய்த்து -இங்கனே போந்து அருளுகிற போது பின்னே நின்று
நடந்த நடை அழகைக் கண்டு மாறி இட்ட அடி தோறும் மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு வந்து திவ்ய சிம்ஹாசனத்திலே இருந்த அனந்தரம்
பறை -என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு இங்குத்தை மங்களங்களை ஆஸாஸித்து மங்களா சாசனம் பரம பிரயோஜனமாக
வந்தவர்கள் அன்றோ நாங்கள் -என்கிறார்கள் -இங்கனே போந்து அருளி என்று தாங்கள் சொல்ல தங்களுக்காக நப்பின்னை பிராட்டியோடே சீரிய சிங்காசனத்தில்
இருந்த அளவிலே ஆலவட்டக் காற்றிலே அத்தவாளந்தலை மேல் பறக்க
பாத பீடத்தில் நீட்டி அருளினை திருவடிகளையும் மடித்து இட்ட திருவடிகளையும் கண்டு திரு முலைத் தடங்களிலும் திருக் கண்களிலும் ஒற்றிக் கொண்டு
தங்கள் கர ஸ்பர்சம் பொறாதே கன்றும்படியான மார்த்தவத்தைக் கண்டு இப்படி ஸூ குமாரமான திருவடிகளைக் கொண்டு இங்கனே நடக்கச் சொல்லுவோமே
திருவடிகளை வாங்கி இடுகிற போது திரு யுலகு அளந்து அருளின படிக்கு ஸ்மாரகமாய் இருந்தது
அன்று அளக்கப் பண்ணினவர்களோடு ஓத்தோம் இ றே இன்று நடக்கப் பண்ணின நாங்களும்
நடந்த கால்கள் நொந்தவோ -என்று பிடித்து நாங்கள் சொல்லும் அளவில் புறப்பட்டு உலாவி அருளின படி
திரு யுலகு அளந்து அருளின ஆயாசத்தோ பாதி போருமே என்று அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி-என்கிறார்கள் –

அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்று என்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்-

அன்று இவ்வுலகம் அளந்தாய் –இன்று யாம் வந்தோம்
அன்றும் இன்றும் காணும் இவர்களுக்கு வயிறு எரிச்சல் -இவர்களுக்கு இரண்டு காலமும் ஒரே காலமாய் தோற்றுகையாலே-அன்று -இன்று -என்கிறார்கள்
அன்று
ஆர் நோன்பு நோற்காத தான் இச்செயல் செய்தது -நோற்றுக் கூடுவாரையும் விலக்குமவர்கள் தலையிலே இ றே திருவடிகளை வைக்கிறது
அன்று
தன்னதான விபூதியை அஸூரனான மஹா பாலி நெருக்கி தன்னைத்தாக்க நோவு பட்ட அன்று
-அவன் அபிமானத்தில் நின்றும் மீட்டு தன் கால் கீழ் இட்டுக் கொண்ட அன்று –
எங்கள் பந்துக்களும் எங்களை உன்னோடே சேர்க்க ஒட்டாதே -நாங்களும் ஆர்த்தைகளாய் அபிமானம் கால் கட்டி வாராது இருக்க
எங்களுடைய ஸ்த்ரீத்வ அபிமானத்தையும் பஃனமாக்கி உன் கால் கீழ் இட்டு கொண்டு
உன் வடிவு அழகையும் சீலத்தையும் எங்களுக்கு தூளிதானம் பண்ணின அன்று
இவ்வுலகம்
திருவடிகளின் மார்த்வத்தையும் காடு மோடையுமான பூமியினுடைய காடின்யத்தையும் இங்கு வர்த்திக்கிறவர்களுடைய
வன்மையையும் அனுசந்தித்து இவ்வுலகம் என்கிறார்கள் -சீல வயோ வ்ருத்தாதிகளால் துல்யர் என்று கவி பாட்டுண்டார்
கடக்க நிற்க வேண்டும் படி வடிவுக்கு இணை இல்லாத பெரிய பிராட்டியாரும் எடுத்துக் கழிக்கைக்கும் ஒப்பு இல்லாத ஸ்ரீ பூமிப பிராட்டியும்
நாம் படுக்கை சாஹசம் என்னும் படியாய் பூத் தொடுமா போலே கூசிப் பிடிக்கும் மெல்லடிகளைக் கொண்டு இவ்வெவ்விய நிலத்திலே வியாபாரிப்பதே
அளந்தாய்
பிரமாணித்தார் பெற்ற பேறு-என்று உபகார சுருதி பண்ணாத அளவு அன்றிக்கே யுகக்கவும் அறியாத பூமியை திருவடிகளின் கீழே இட்டுக் கொள்வதே
அடி போற்றி
அக்காலத்திலே சிலர் இழவோடே போனார்கள் -சிலர் அப்பன் அறிந்திலேன் என்று ஆணை இடத் தொடங்கினார்கள்
சிலர் பிரயோஜனம் கொண்டு போனார்கள் -அப்போது பரிந்து காப்பிட்டார் இல்லை என்கிற இழவு தீருகிறார்கள்
அடி போற்றி
திசை வாழி எழ -என்கிற அப்போதே பல்லாண்டு இசைக்கை -போற்றி என்று போற்றி எழுவாரைப் போலே அநந்ய ப்ரயோஜனர் அன்றோ நாங்கள்
அடி போற்றி
மன்னன் தேவிமார் கூத்து கண்டு மகிழ்ந்து போனார்கள் -கோட்டங்கை வாமனனாய் செய்த கூத்துக்கள் அன்றோ
செவ்வடி செவ்வித் திருக் காப்பு என்னும் குடிப் பிறப்பால் அடி போற்றி என்கிறார்கள்
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி-
திரு வுலகு அளந்து அருளினை இடத்தில் சிவந்த தன் கை அனைத்துமார சென்னி மேல் ஏறக் கழுவினான் என்று ப்ரஹ்ம ருத்ராதிகள்
அனுவர்த்திக்கும் படி ஐஸ்வர்யமான செயல்களை செய்த அவதாரம் ஆகையாலும்
அங்கே நின்று -என்னும் படி நின்று இரண்டாம் அடியிலே தாவடி இட்டு வருத்தம் அற செய்ததாகையாலும் அத்தனை வயிறு
எரிதல் இல்லை இ றே -ராமாவதாரத்தில் தேவத்வம் கலசாத படி ப்ரஹ்ம ருத்ரர்கள் நாராயணன் என்றாலும்
மனிச்சுக்கு இசையும் இடம் ஆகையாலும் -கானமருங்கல்லதர் போய் என்னும் படி துஷ்ட சத்வ பூயிஷ்டமான
வெங்கானத்தூடே சஸ்த்ர அஸ்திரங்கள் பட வியாபரித்த இடமாகையாலும் ராமாவதாரத்தில் செய்த செயலுக்கு வயிறு எரிகிறார்கள்
சென்று
இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற -என்று ஒரு செல்லுகை உண்டு இ றே -அவ்விடம் அழகால் நெஞ்சு உருக்கலாம் இ றே
அழகுக்கு இலக்காகாத தீ மனத்து அரக்கரை அம்புக்கு இலக்காக்கின பராபிபவன சாமர்த்யத்துக்கு பரிகிறார்கள்
சென்று அங்குத்
அங்கே சென்று -நின்ற இடத்திலே நின்று பூ அலர்ந்தால் போலே இரண்டு அடியாக இட மாட்டாது -கொடிய காட்டிலே
பரல் பாய மெல்லடிகள் குருதி சோர நடப்பதே என்று வயிறு பிடிக்கிறார்கள்
எவ்வாறு நடந்தனை எம்மிராமா ஓ என்று சக்கரவர்த்தி உள் பட நின்று கூப்பிட்டான் –
சென்று அங்கு
புலி கிடந்த தூற்றிலே சென்று தட்டி எழுப்பிக் கொல்லுவாரைப் போலே லங்கைக்கு அரணாக வைத்த கர தூஷண கபந்த விரரதாதிகள்
ஜல துர்க்கமாக வைத்த கடல் காடுகள் மலைகள் தொடக்கமானவை எல்லாம் நடவா நிற்கச் செய்தே மணல் கொட்டகம் போலே
கால் கீழே அழித்துக் கொண்டு நடந்த படியை நினைத்து –
அங்கு சென்று –
என்கிறார்கள்
தென்னிலங்கை செற்றாய்
எல்லாவற்றிலும் ஊர் அரண் விஞ்சின படியால் இலங்கை செற்றவனே-என்கிறது –
திறல்
அரண்கள் ஒன்றும் வேண்டாத படி எத்தனையேனும் தரமுடைய தேவ ஜாதி தம்தாமுடைய வருத்தங்களாலே சாதித்த அஸ்திரங்களை எல்லாம்
ஒரு மிடறாக நின்று ஒருக்காலே ஓர் இலக்காக விட்டால் அவர்களுக்கு தப்ப ஒண்ணாது என்று விட நாலடி பிற்காலித்து விடாதே
நெஞ்சு கலங்காதே நிலையும் பேராதே மஹிஷிகளும் தானும் கூட ஜலக்ரீடை பண்ணும் போது அவர்கள் பூவை இட்டு
தன் மேல் எறிந்தால் பிறக்கும் விகாரம் பிறவாதபடி இருக்குமவன் நான் கடவேன் என்று நோக்குமவனூராய்-
அழகிதான அரணை யுடைத்தாய் குளவிக் கூடு கொண்டால் போலே ஹிம்ஸிகர் அடையத் திரண்ட நிலமாய் இருந்த லங்கையை
-அரண் சிதற அடை மதிள் படுத்தி சதுரங்க பலத்தையும் துவள வென்று -சேனைத் தொகையைச் சாடி ப்ராத்ரு புத்ராதிகளை தலை அழித்து
தான் சிலரை ஆஸ்ரயித்து கதிர் பெறுக்கி கூடினவை அல்லாத அம்புகளைக் கொண்டு
இடி ஏறு உண்டிடச் சுற்றும் வேமா போலே பையலைப் பக்க வேர் அறுத்து நெஞ்சு அழிந்து நிலை தள்ளும்படி பண்ணி சத்தை அழிந்து பட்டு விழும் போதும்
வில் பிடித்த பிடி நெகிழாதே விழக் கடவ அவனை எதிரி வீரம் அறியாதே கோழையாய்ப பட்டான் என்று தரக் கேடான் ஆகாதே
வீரன் என்று விருது பிடிக்கும் படி வில்லைப் பொகடுவித்து ஸ்த்ரீ பிராயனாக்கிக் கொன்று வென்றி கொண்ட
பராபி பவன சாமர்த்தியத்தை எல்லாம் நினைத்து –திறல் -என்கிறார்கள் –
திறல் போற்றி
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே -என்று இம் மிடுக்கு தங்கள் துக்க நிவ்ருத்திக்கு உடல் இன்றிக்கே
அரணுக்கு அரண் இடுவாரைப் போலே திறலுக்குப் பரிகிறார்கள் –
இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்கு-என்று பரியுமது ஜென்ம சித்தம் இ றே –
உலகு அளந்த பொன்னடிக்கு காப்பிட்டவோபாதி காடுறைந்த பொன்னடிக்கு காப்பிடத் தேடுகிறவர்களுக்கு அஞ்சாமைக்கு திறலைக் காட்டினான்
அதி திறல் தனக்கு அஞ்சத் தொடங்கினார்கள் -தோளில் அழகுக்கு காப்பிடப் புக மல்லடர்த்த திண்மையைக் காட்ட அது தனக்கு வயிறு எரிந்தால் போலே
திறல் போற்றி
கல்லாதவர் இலங்கை கட்டழித்த–தேவனே தேவன் ஆவான் -என்று மண்டோதரி உள்ளிட்டாரைப் போலே தத்வ நிர்ணயம் பண்ணுதல் –
தன் வில் அங்கை வைத்தான் -என் தன் தனிச் சரண் -கூர் அம்பன் அல்லால் –மற்றிலேன் தஞ்சமாகவே -என்று ரக்ஷகத்வ புத்தி நடத்தல் –
தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கு என்னையும் உளள் என்மின்களே-என்று போக்யதா புத்தி நடையாடி இழவு சொல்லி விடுதல் செய்யாதே
சக்கரவர்த்தி திருமகன் தசரதனிலும் விஞ்சும் படி பால்ய அவஸ்தையில் ஆயுத சிரமம் பண்ணி -விச்வாமித்திராதிகளோடே
சஸ்த்ர அஸ்திர மந்த்ரங்கள் சிஷித்து சமைய வளர்ந்த பின்பு செய்த செயல் இ றே லங்கையை அழியச் செய்த செயல் –
பிறந்த ஏழு திங்களில் என்கிறபடியே பிறந்து மறுபத்துக் கழிந்த அளவிலே எதிரிகள் உண்டு என்று அறிகைக்கு உடலான ஞானமும் இன்றிக்கே
ஆயுதமும் பிடிக்கவும் அறியாத தொட்டில் பருவத்திலே செய்த செயல் இ றே சகட பங்கம் – ராவணன் நேரே சத்ருவாய் தோற்றான் இ றே
அப்படி அன்றிக்கே பிரசன்ன சத்ரு வாகையாலே -கள்ளச் சகடம் என்றத்தை அறிந்து முற்பட்ட படிக்கு வயிறு எரிந்து பரிகிறார்கள்
பொன்றச் சகடம் உதைத்தாய்
சகடம் பொன்ற முடிய -சூர்ப்பணகையும் மாரீசனையும் போலே குற்றுயிரோடே விட்ட பின்பு அனர்த்தம் விளையும் படி இளிம்பு படாதே
தோற்ற அரவிலே சகடாசூரனை முடித்து விட்ட படி
உதைத் தாய்
முலை வரவு தாளித்து தொட்டிலை உதைத்த திருவடிகளுக்கு இலக்காய் முடியும் படி பண்ணின அனாயாசம்
உதைத் தாய்
பெருமாள் கைக்கு வில் பிடித்த தழும்பு போலே கிருஷ்ணன் திரு வடிகளுக்கு சாடுதைத்த தழும்பு -தழும்பு இருந்த -இத்யாதி
புகழ்
பெற்ற தாயும் கூட உதவாத சமயத்தில் பெரும் படையாண்டு செய்த செயல்களை கால் கூறாக்கி விட்ட படி –
திருக்காலாண்ட பெருமானே -என்கிறபடியே
புகழ் போற்றி
நின் சிறுச் சேவகமும் -என்று காரை மூரிருகிக் கன்னிப் போருக்கு காப்பிட வேணும் இ றே -அருளின் பெரு நசையால் -என்று ஆண் பிள்ளை என்று ஆசைப்படுவர்
என்னை நிறை கொண்டான் -என்று அடக்கம் கெட்டு மடல் எடுக்காத தேடுவர் -உறக்கில் நிமிர்த்தீர் -என்று ஊடுதலாய்ப் போனார்கள் பெண்கள்
இவர்கள் செயலுக்கு வயிறு எரிந்து பரிகிறார்கள் –
பசலைத் தனத்தில் செய்த செயல் என்று விடலாம் அது -பருவம் நிரம்பி செய்த செயலோ தான்
கணக்கு வழக்கு பட்டு இருக்கிறது என்று அதுக்கு வயிறு எரிகிறார்கள்
கன்று குணிலா வெறிந்தாய் –
சகடாசூர நிராசனம் பண்ணின வயிறு எரிதல் அல்ல கிடாய் -கன்றாய் நின்ற அசுரனை கொன்ற தீம்பு பூமி எல்லாம்
பிரகாசிக்கும் படி செய்தாய் என்று வயிறு எறியும் செயல் இ றே
வழக்கு அன்று கண்டாய் வலி சகடம் செற்றாய் -குழக் கன்று தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திருமாலே பார் விளங்கச் செய்தாய் பழி
மார்பில் இருக்கிறவர்களோடு மண்ணில் கிடக்கிறவர்களோடு வாசியற பழி கேடன் என்று சொல்லும் படி இ றே
செய்த தீம்பும் -சகடாசூர பங்கம் பண்ணிச் செய்த தீம்பு –
திரி கால் சகடம் சினம் அழித்து கன்றால் விளங்காய் எறிந்தான் -ஓர் அசுரன் விளாவாய் நிற்க ஒரு அசுரன் கன்றாய் நிற்க
சத்ருவை இட்டு சத்ருவை எறிந்தால் சங்கேதித்து இருவரும் ஓக்க
மேல் விழுந்தார்கள் ஆகில் என் படக் கட வோம் என்று வயிறு பிடிக்கிறார்கள்
என்றும் என் பிள்ளைக்கு தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்கள் -என்று தாயார் உட்பட வயிறு பிடிக்குமது இ றே
குணில் -எறி கருவி
குணிலா எறிந்தாய்
எதிரிகளை இட்டு எதிரிகளை முடித்த படி
கழல் போற்றி
விளாவை இலக்காகக் குறித்துக் கன்றை எறி கருவியாகக் கொண்டு எரிவதாக இச்சித்து நடந்த போதைக் குஞ்சித்த
திருவடிகளில் வீரக் கழலுக்கும் அகவாயில் சிகப்பையும் கண்டு காப்பிடுகிறார்கள்
கழல் போற்றி
கன்றினால் வீழ்த்தவனே என்று பக்தி பண்ணுதல் -காயுதிர்த்தாய் தாள் பணிந்தோம் என்று விரோதி நிவர்த்தகமாகப் பற்றுதல்
கனை கழல் காண்பதற்கு என்று யம வஸ்யத்தைக்கு நிவர்த்தகம் என்று இருத்தல் செய்யாதே மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –
அடி போற்றி -கழல் போற்றி
நீட்டின திருவடிகளுக்கும் குஞ்சித்த திருவடிகளுக்கும் சூழ்ந்து இருந்து பரிவாரைப் போலே பரிகிறார்கள் –
விரோதி நிரசனம் பண்ணித் தன்னை நோக்குகைக்கு அடைவு கெட்டு இருந்தால் அனுகூலர் விரோதிகளாக ஆஸ்ரித ரக்ஷணம்
பண்ணுமதோ சால அடைவுண்டாய் இருக்கிறது என்று அதுக்குப் பரிகிறார்கள்
குன்று குடையா வெடுத்தாய்
விரோதிகளுக்கு கன்று எடுத்த மாத்ரம் போலே காணும் கன்று நோக்குகைக்கு குன்று எடுத்தது –
கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆ நிரைக்கு அழிவு என்று மா மழை நின்று காத்து உகந்தான் -என்னக் கடவது இ றே
கீழ் எல்லாம் இந்திரனுக்கு சத்ருவானவர்கள் நலிந்த நலிவு பரிஹரித்த படிக்கு வயிறு எரிந்தார்கள்-
இப்போது அவன் தான் நலிந்த நலிவு பரிஹரித்த படிக்கு வயிறு எரிகிறார்கள் -அசூரர்களோடு தேவர்களோடு வாசி இல்லை இ றே
பகவத் சேஷமான வஸ்துவை தங்களதாக நினைத்து இருக்கைக்கு -சர்வ யஞ்ஞ போக்தாவாக தன்னை அருளிச் செய்தானே
தனக்கு இட்ட சோற்றை அமுது செய்தால் ஸ்வ தந்த்ர புத்தி பண்ணி பண்டு புஜித்த இடம் உள்பட ஆத்ம அபஹாரத்தோடு ஒவ்வா நிற்க
ததீய புத்தி பண்ணாதே ஸ்வ தந்த்ர புத்தி பண்ணி நலியத் தேட மலையைக் குடையாக எடுத்து பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த ஆபத்தை பரிஹரித்த படி
குணம்
அனுகூலனானவனுக்கு பிராமாதிகமாகப் புகுந்தது அன்றோ -அநந்தரத்திலே வந்து கோவிந்த அபிஷேகம் பண்ண வன்றோ புகுகிறான் –
பெரும் பசியால் வந்த கோபத்தால் வர்ஷித்தான் ஆகில் கை நொந்தவாறே விடுகிறான் -பெரும் பசியாலே இவனை நலிந்தால்
நாமே யுண்பது கொண்டார் உயிர் கொண்டு தலையை அறுக்கவோ அவன் கை சலிக்கும் தனையும் கடக்கிட்டுக் காப்போம் என்று
அவனை தலை அழியாதே மலையை எடுத்து ரஷித்தது ஆன்ரு சம்சயத்தாலே -அந்த குணத்துக்குப் போற்றி –
பாயும் பனி மறுத்த பண்பாளா -சீர் கற்பன் வைகல் -என்று அறிவுடையார் நாள் தோறும் கற்பதொரு குணம் இ றே
குணம் போற்றி
கொடி ஏறு செந்தாமரைக் கை விரல்கள் கோலம் அழிந்ததோ வாடிற்றோ என்று பார்த்துப்
பரியத் தேட அவ்வளவு போக ஒட்டிற்று இல்லை மழை எடுத்த குணம் தான்
குணம் போற்றி
என் தனக்கொரு துணையாளான ஆகாயே-என்று நொய்ய தொரு மலையைப் பொகடுவித்து கனவிது
இரண்டு மலையைக் கையிலே கொடாதே மலையை எடுத்த ஷமா குணத்துக்குக் காப்பிடுகிறார்கள் –
வர்ஷம் விட்டவாறே மலையைப் பொகட்டு வேளை பிடிக்கும் அத்தனை இ றே -கிருஷ்ணன் பசுக்களின் பின்னே திரியா நின்றால்
ஸிம்ஹம் வந்தாலும் வேலாலே குத்தி எடுத்துப் போக்கும் அத்தனை இ றே -அதுக்கு எடுத்த வேலுக்கு பரிகிறார்கள்
எல்லா குணங்களையும் ஒரு வியக்தியில் சொன்னால் கண் ஏறாம் என்று வேலிலே அசலிட்டுச் சொல்கிறார்கள் வெற்றியை –
வென்று பகை கெடுக்கும்
சத்ருக்களை வென்று ஓட்டக் கடவதாய் இருக்கும்
நின் கையில் வேல் போற்றி
சக்கரவர்த்தியும் வில் பிடித்து பரிகாரமும் வில் பிடித்து பிள்ளைகளும் வில் பிடித்தால் போலே
ஸ்ரீ நந்த கோபரும் இடையரும் பிள்ளைகளும் வேல் பிடித்தாய்த்து திரிவது –
கூர் வேல் கொடும் தொழிலன் -வேலைப் பிடித்து என்னைமார்கள்
நின் கையில் வேல்
வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்க வேண்டி இருக்க அவ் வழக்குக்கு மேலே வேலைப் பிடித்த அழகு
கையில் வேல்
எதிரிகள் மேல் பட வேண்டா –பிடித்த பிடியில் யுகவாதாரை முடிக்கும்
நின் கையில் வேல்
தன்னை உணராதே அசத்திய ப்ரதிஞ்ஞனாய் சீறின போது காணும் ஜன்மாந்தரம் மேல் இட்டு திரு வாழியை எடுப்பது –
வேல் போற்றி
ஈஸ்வரனைக் காணில் இ றே ஆழியும் பல்லாண்டு என்பது
-பெருமாளைக் காணில் இ றே சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை பல்லாண்டு என்பது
நின் கையில் வேல் போற்றி
வெற்புடைய நெடும் கடலுள் தனி வேல் உய்த்த வேள் முதலாக வென்றவன் கையில் வேல் இ றே -ஆகையால் பரிகிறார்கள்
என்று என்றும்
பிரயோஜனம் பெரும் அளவும் சொல்லி பின்னை அது மாறுகிறது அன்றே -பிரயோஜனத்துக்கு
பிரயோஜனம் வேணுமோ -என்று இது தானே பலமாக இருக்குமவர்கள் இ றே –
என்று என்று
பல்லாண்டு என்றால் பின்னையும் பல்லாண்டு என்னும் அத்தனை இ றே -போற்றி என்று ப்ரேமம் அடியாக வந்த கலக்கத்துக்குத் தெளிவு யுண்டாகில் இ றே
இச் சொல்லு மாறுவது -அங்கு போனாலும் சூழ்ந்து இருந்து இ றே -வெம்மா பிளந்தான் தன்னை போற்றி என்னக் கடவது இ றே –
அடி போற்றி -திறல் போற்றி புகழ் போற்றி கழல் போற்றி -குணம் போற்றி -வேல் போற்றி -என்று இவர்கள் நாக்குக்கு இடும் ஷட்ரசம் இருக்கிறபடி –
உன் சேவகமே
வீர குணத்துக்கு போலே காணும் இவர்கள் தோற்பது -பந்து நிரோதத்தால் தளர்ந்த அபலைகளுக்கு அவனுடைய விஜயம் இ றே பல ஹேது
என்று என்றும் உன் சேவகமே
உன்னுடைய விக்ரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம் -என்னும் படியே
உன் சேவகமே ஏத்திப்
வேறு ஒருவருடைய சேவகம் கலந்து ஓதோம்-திரு விக்ரமனையும் பெருமாளையும் கலந்து அன்றோ ஏத்திற்று
அது அவதாராந்த்ரத்தின் செயல் என்று இருக்கிறார்கள் -இவன் பால்யத்தில் செய்ததோபாதி பூர்வ அவஸ்தையும் என்று இருப்பார்கள்
சிலை ஓன்று இறுத்தாய் திரு விக்ரமா திரு வாயர்பாடிப் பிரானே -என்றும் -வருக வருக வருக இங்கே வாமன நம்பீ
வருக இங்கே -காகுத்த நம்பீ வருக இங்கே -என்று தாயார் உட்பட கிருஷ்ணனை அழைப்பது -இப்படியே இ றே
இவனுக்கு நாள் ஸ்ரீ வாமனன் பிறந்த நாள் ஆக்கினாள் -எட்டு மாசம் வயிற்றிலே இருந்த இவனை பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட -என்றாள்-
என் மகன் பால்யத்தை மஹாபலி பக்கலிலே சென்று கேட்டுக் கொள் என்கிறாள் -சார்ங்க பாணி தளர் நடை நடவானோ -என்றால்
மாணிக் குறளனே தாலேலோ வையம் அளந்தானே என்று தாலாட்டினாள்-இவர்கள் ஓங்கி உலகளந்த என்கிறார்கள் -சார்ங்கம் உதைத்த என்கிறார்கள் –
அனந்தரம் ஆயர் குலத்தினில் தோன்றும் என்றார்கள் -போற்றப் பறை தரும் புண்ணியன் என்றார்கள்
-எழுப்புகிற போது உலகு அளந்த உம்பர் கோமானே -என்றார்கள் –
அவன் தான் பிறந்த போதே மூன்று பிறவி யுண்டே -உங்களுக்கு பிறக்கிறது என் என்றான்
-வில் பிடித்தாரில் சக்கரவர்த்தி பிள்ளை நான் என்றான் -ஆகையால் அவதாராந்தரம் என்று இருப்பார் ஒருவரும் இல்லை
ஏத்திப் பறை கொள்வான்
எங்கள் பலம் முன்னாக –நாட்டார் பலம் பெறுவதாக –பலம் ஏத்துகை-பின்பு அபிமதம் ஊரார் ஸம்ருத்தி -உத்தேச்ய பலமும் ஆனு ஷங்கிக பலமும்
இன்று
இசைவு பிறந்த இன்று -நென்னேற்று வந்தோமோ -நாளைக்கு இங்கே நிற்க ஓட்டுவார்களோ –
யாம்
பெரு மிடுக்கரான வ்ருத்தைகள் எல்லாம் கிடந்து உறங்க குளிர் பொறாத பாலைகளான நாங்கள்
வந்தோம்
நீ வர ப்ராப்தமாய் இருக்க விரஹ துர்பலயத்தாலே ஆற்றாமை இழுக்க வந்தோம்
யாம் வந்தோம்
நாங்களும் எங்களை அறியாமல் செய் தோம் -நீயும் உன்னை அறியாமல் செய்வது உண்டாய்த்து இ றே
இரங்கேலோ ரெம்பாவாய்
எல்லா வியசனங்களையும் பட்டாலும் கீழ் பிரவர்தித்தித்தது எல்லாம் பேற்றுக்கு உடல் அன்று -அவன் இரக்கமே கார்ய கரமாவது
அவனுக்கு என் வருகிறதோ என்று இரங்கி மங்களா சாசனம் பண்ணுகை இவர்களுக்கு ஸ்வரூபம் -இத்தலைக்கு இறங்குகை அவனுக்கு ஸ்வரூபம்
வந்தோம் இரங்கு
இரங்காமைக்கு வேண்டுவது செய்தோமே யாகிலும் இரங்க வேணும் -இத்தலையில் பர பக்தியும் பேற்றுக்கு உடல் அன்று
-அவனுடைய இரக்கமே அவ்யவஹித உபாயம் என்று இருக்கிறார்கள் –
அன்று இவ்வுலகம் அளந்தாய் -இன்று யாம் வந்தோம்
நீ எங்களைத் தேடி எல்லா உலகும் தட வந்தாய் -அன்று -இன்று உன்னைத் தேடி நாங்கள் வந்தோம் –
யாம் வந்தோம்
வையம் தாய மலர் அடிக் கீழ் முந்தி வந்து நீ நிற்க நாங்கள் பெற்றோம் -அளந்தாய் -தென்னிலங்கை செற்றாய் -சகடம் உதைத்தாய்
யாம் வந்தோம்
மண் அளந்த கண் பெரிய செவ்வாய் என் கார் ஏறு வாரானால் -காகுத்தன் வாரானால் -கண்ணனும் வாரானால் -என்று
இருந்த உன்னுடைய பிரதான மஹிஷிகளில் எங்களுக்கு உண்டான வாசி பாராய்
அன்று இவ்வுலகம் அளந்தாய் இரங்கு
உவந்த உள்ளத்தனாய் எங்களோடு அணைந்திலை யாகிலும் சத்தா ப்ரயுக்தமான கிருபையை யாகிலும் பண்ணு
அளந்தாய் -இரங்கு
நீர் ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே என்று அன்றோ நாங்கள் இருப்பது
தென்னிலங்கை செற்றாய் –இரங்கு
சிறிது தாழ்க்கில் இரக்கம் எழீர்-என்று உன்னை வசை பாடுவார்கள் கிடாய் என்று தாய்கள் சொல்லும் அளவேயோ
-இரக்கம் ஒன்றும் இலாதாய் -என்று நாங்கள் தான் சொல்லோமோ
சகடமுதைத்தாய் -இரங்கு
உருளும் சகடம் உதைத்த பெருமானார் அருளின் பெரு நசையால் அன்றோ நாங்கள் வந்தது –
குன்று குடையாய் எடுத்தாய் –இரங்கு
குன்று குடையாக ஆ காத்த கோவலனார் ஒன்றும் இரங்கார் என்னாம் இரங்கு –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பாவை —-மாரி மலை முழஞ்சில் –ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் வியாக்யானம் – ஆறாயிரப்படி —

January 11, 2017

சங்கம் இருப்பார் போல் -என்று கீழே பெண்கள் சொன்ன வார்த்தையைக் கேட்டு -அநந்ய கதிகளாய் வந்தோம் என்று சொல்லுவதே
நப்பின்னை பிராட்டி பரிகரமாய் இருந்து வைத்து என்று திரு உள்ளத்திலே போரப் புண் பட்டு -பின்னை நெடும் பணை தோள் மகிழ் பீடுடை என்று
அவளுடைய சம்பந்தமே நமக்கு ஏற்றமாக நமக்கு நல்லோர்கள் சொல்லா நிற்கச் செய்தே-அவளோடு ஒரு கோவையாய் இருந்து வைத்து
நம் முன்னே இப்படிச் சொல்லுவதே -நாம் ஆரானோம் -என்று தன்னை நொந்து கொண்டு பரம ரிஷிகள் ஆர்த்தராய் வர
தன் காவல் சோர்வை நினைந்து சாபராதர் செய்தவற்றை நிரபேஷரான பூர்ணர் பொறுக்கும் அத்தனை அன்றோ கர்ப்ப பூதர் என்று நினைத்து இருக்க
உங்களால் வந்த தன்றே -உங்கள் வியசனத்தை காண்கையாலும் அதுக்கு அடி நம் குற்றம் ஆகையாலும்
உங்கள் அளவல்ல நமக்கு லஜ்ஜை -முதலிலே ரக்ஷகன் ஆனவனுக்கு சென்று ரஷிக்க வேணும்
அதிலே ஆர்த்தரை ஐயோ என்று வினவ வேணும் -இப்படி இருக்க நோவு படு கோளும்-அது வந்து அறிவிப்பு கோளும் நீங்களாம் படி
பிற்பாடார் ஆனோமே -அத்தை நீங்கள் பொறுக்க வேணும் என்று ஷமிப்பித்துக் கொண்டால் போலேயும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ராவணன் பின்னே பிறந்த என்னை ஆராயாதே அருள் பாடிடுவதே -என்று தறையைப் பார்த்து கவிழ்ந்து நிற்க
அவன் இலங்கையில் பட்ட நெருக்கும் முதலிகளால் வந்த சிலுகும் எல்லாம் நம்மாலே வந்தது அன்றோ -நீர் இருந்த இடத்திலே வந்து கொண்டு போராதது
நம் குறை யன்றோ என்று சாபராதரரைப் போலே சாந்தனவாம் பண்ணினால் போலேயும் –ஆண்கள் விஷயத்தில் அகப்பட
இப்படி இருக்கக் கடவ நாம் பெண்கள் வந்து எழுப்பப் பார்த்து இருப்போமே-என்று பெண்களுக்கு இனிதாகச் சொல்லி உங்கள் கார்யம்
அழகிதாகச் செய்து தரக் கடவோம் -செய்ய வேண்டுவது என் சொல்லுங்கோள் என்ன
இங்கண் குன்னங்குறிச்சியாகக் கேட்டு அருள ஒண்ணாது -பேர் ஓலக்கமாக இருந்து கேட்டருள வேணும் என்று ஆஸ்தானத்திலே புறப்பாடு
இருக்கும் க்ரமத்தை பாசுர பரப்பு அறக் கையோலை செய்து கொடுக்கிறார்கள்
ஆச்சான் -அகதிம் சரணாகதம் -என்று விண்ணப்பம் செய்ய
நம் இராமானுசனை யுடையாய் இருந்து வைத்து நம் முன்னே இப்படி சொல்லப் பெறாய்-என்றார் அழகர் –

மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப் பூ வண்ணா வுன்
கோயில் நின்று இங்கனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-

மாரி
வைரம் கொள்ளும் மார்க்கங்களும்-சலிலே நஸமீக்ருதா-என்னும் படி தேசம் அடைய ஒரு நீர்க் கோப்பாக வர்ஷம் பெய்து
வழிகள் எல்லாம் தூறு எழுந்து சஞ்சார யோக்யதை இன்றியிலே ஒழிகையாலே ராஜாக்களும் தம் தாம் சத்ருக்கள் பக்கல்
த்வேஷங்களையும் மறந்து எடுத்து விடுகையும் தவிர்ந்து கை கழியப் போனவர்களும் வர்ஷாவாகப் புகா நின்றது என்று
தம் தாம் வீடுகளைக் குறித்து வந்து நின்று நாலு மாசமும் உகந்த விஷயங்களோடு கூடி இருக்கும் படியாய் இ றே இருப்பது
மஹாராஜரும் தாரையுடைய ஸ்தநோஷ்மாவைப் பற்றிக் கிடந்து பெருமாளோடே பண்ணின சமயத்தையும்
மறந்த படியால் பெருமாளும் சீறி -ச பாந்தவமாக அறுக்கக் கடவோம் என்று இளைய பெருமாளுக்கு அருளிச் செய்து விட
அவரும் கிஷ்கிந்தை வாசலிலே சிறிய நாண் எறிய-நின்ற திருவடியைப் பார்த்து போக்கடி சொல் என்ன -அவனும் தீரக் கழிய அபராதம் பண்ணின உனக்கு
ஓர் அஞ்சலி நேராமல் போகாது என்ன தான் சாபராதன் ஆகையால் நேர் கொடு நேர் புறப்பட மாட்டாமையாலே தாரையைப் புறப்பட விட
அவளும் உமக்கு கோபம் காரணம் என் -உமக்கு கோபத்துக்கு போரு வாரும் உண்டோ என்று பொறுப்பித்துக் கொள்ளும் படி பண்ணும் காலம் இறே வர்ஷா வாகிறது
பெருமாள் தானும் மால்ய வானிலே எழுந்து இருந்து சலீலாதி பாரத்தை வஹித்துக் கொண்டு ரண உத்யு க்த்ங்களான யானைகள் போலே கிளம்பி
நீர்க் கனத்தாலே மலைக் கொடு முடிகளில் படிந்து சோபன பங்க்திகள் படுத்தால் போலே கிடக்கிற கிடையைக் கண்டு
அர்ச்சிராதி கதியாலே பரம பததத்துக்கு ஏறுவாரைப் போலே இவற்றிலே அடி இட்டு ஆகாசத்தில் ஏறி பறித்துக் கொள்ள வேண்டாத படி
நினைத்த படி அள்ளிப் பரிமாறலாம் படி இருக்கிற இக்காலத்துக்கு அடைத்த பூக்களைக் கொண்டு ஆதித்ய அந்தரவிருத்தியான
பெரிய பெருமாளை சமாராதனம் பண்ணலாய் இருந்தது -எடுத்துக் கை நீட்டுவார் இல்லை யாயிற்றே என்கிற
இழவோடே வர்ஷா காலத்தில் இருக்கும் படிகள் எல்லாம் அருளிச் செய்தார் இ றே
மாரி
பிரிந்தார் கூடும் காலம் -கூடினார் போக ரசம் அனுபவிக்கும் காலம் -புஜிக்கிறவர்கள் கை நெகிழில் உடம்பு வெளுத்து அணையும் காலம்
மாரி
பெண்களோடு மேகம் அறையிடும் காலம் -பிரிந்தார் கொடுமை குழறும் காலம் -கலந்தார் வர எதிர் கொள்ளும் காலம் -பெண் நீர்மை ஈடு அழிக்கும் காலம்
மாரி
சிம்ஹங்களும் எதிரிகளான யானைகளின் வாசலில் நின்று பிளிறவும்-அது செவிப் படாதே தனக்கு
ஒரு விரோதி இல்லை என்று பர்வத குகைகளில் பற்றிக் கிடந்து உறங்கும் காலம்
இனி இவர்களுக்கு ஊராரும் இசைந்து அவர்கள் ஒரோ இடங்களிலே அடங்கவும் பெற்று இவர்களுக்கு பலம் கொடுக்கிற கிருஷ்ணனும்
நப்பின்னை பிராட்டி கட்டிலிலே உறங்கி இவர்கள் சென்று எழுப்ப வேண்டும் படியான காலம் இ றே
மலை முழஞ்சில்
ஸிம்ஹம் தான் மலைக்கு ஆபரணமாய் இ றே இருப்பது -இவனும் நப்பின்னையினுடைய துங்க ஸ்தன கிரிதடியில் ஸ்தன ஆபரணம் போலே தங்குகிறான் இ றே
மன்னிக் கிடந்து
மிடுக்காலே ஒருவர்க்கு அஞ்ச வேண்டாமையாலே மலைக் குவது போலே பொருந்தி வீசு வில் இட்டு எழுப்பினாலும் கிளப்பப் போகாத படி
ஒட்டிக் கொண்டு கிடக்கை -அன்றிக்கே -தன் பெடையோடே ஏக வஸ்து என்னலாம் படி பொருந்திக் கிடக்கும் என்றுமாம் –
வைத்துக் கிடந்த மலர் மார்பா -என்னும் படி இ றே கிடக்கிறது -அடங்க வஞ்சிறை கோலி என்னுமா போலே
கிடந்து உறங்கும்
ஸ்பர்ச ஸூகம் மயக்கின படி ஒழிய தமோ குண அபீபூதமாய் உறங்குகிறது அன்றே இவன் உறக்கம்
தன்னால் அல்லது செல்லாதே வியதிரேகத்தில் ஆற்றாதார் வரும் அளவும் குறு விழி கொள்ளுகை இ றே –
உறங்கும் சீரிய சிங்கம்
உறங்கா நிற்கச் செய்தே கிட்ட மாட்டாதே ஷூத்ர மிருகங்கள் கண்ட காட்சியில் மண் உண்ணும் படி வீர ஸ்ரீ யை யுடைத்தான ஸிம்ஹம்
ஸூக ஸூப்தி பண்ணா நிற்கச் செய்தே எதிரிகள் தப்பிக்கும் படி கிடக்கையாலே உணர்த்தி கொள்ளும் காலத்திலும்
உறக்கமே நன்றாய் இருக்க என்றிய யுணர்த்தினோம் என்னும் படி மடி கொடுத்தார் துடிக்கும் படி இ றே இவன் உறக்கம் இருப்பது
சீரிய சிங்கம்
ம்ருகேந்த்ரன் என்றும் மிருக ராஜன் என்றும் ஒருத்தர் முடி சூட்ட வேண்டாதே பிறப்பே நிரங்குசமான வைபவம் யுண்டாகை
சீரிய சிங்கம்
நர ஸிம்ஹம் போலே கலந்து கட்டியாய் சீர்மை கெட்டு இராதே சிற்றாயர் சிங்கத்துக்கு
அறிவுற்றுத்
மேலிட வல்லது ஓன்று இல்லை -கிட்டி எழுப்புவார் இல்லை -காலம் உணர்த்த உணரும் அத்தனை இ றே
அறிவுற்று
அறிவு இல்லாத தொரு பதார்த்தத்துக்கு அறிவு புகுந்து நடை யாடினால் போலே இருக்கை -ஆஸ்ரித அர்த்தமாக உணர்ந்த போது இ றே
இவன் அறிவுடையவன் ஆவது -பூ அலர்ந்தால் போலே காலம் உணர்த்த உணர்ந்த படி

தீ விழித்து
நம் எல்லைக்குள் புகுந்தார் ஆர் என்னுமா போலே பார்க்கும் பார்வையில் உள்ள வெம்மை -பிரதம கடாக்ஷ சந்நிபாதத்தில்
சர்வ காலமும் அணையும் பேடைக்கும் குட்டிகளுக்கும் அணைய ஒண்ணாது இருக்கை –
பூங்கோதையாள் வெருவ –வானோர் கலங்கி ஓட -என்னும் படி இ றே கோபித்து விழித்தால் எரி வட்டக் கண்களாலே
ஐஸ்வர்யமான தேஜஸ் ஸூ பிரவஹிக்கும் படி -ஐந்தலைப் பாம்போடு விளையாடுகிறவனார் பாண்டவ சாரதி கருத்தனானால் பிழைக்கிறவனார் என்று
சிவக்கப் பார்த்தால் ப்ரஹ்ம ருத்ராதிகளாலும் நோக்க ஒண்ணாத படியாய் இ றே இருப்பது
தீ விழித்து
இவனைக் கொண்டு வேறு ஒரு பிரயோஜனம் கொள்ளுமவர்கள் அன்றிக்கே இவன் இருந்த படியே உத்தேச்யம் என்று இருக்குமவர்கள் ஆகையாலும்
கொண்ட சீற்றம் -என்று ஆஸ்ரித அர்த்தமான சீற்றைத்தை நீ யுண்டு என்று நினைத்து இருக்குமவர்கள் ஆகையாலும்
ஏதேனுமாக இவன் செய்கை இவர்களை நைவிக்கையாலும் –சீரிய சிங்கம் என்றதோடு அறிவுற்று என்றதோடு –தீ விழித்து -என்றதோடு வாசி அற
இவை எல்லாம் போக்யமாய் இருக்கிறபடி –இவையா இவையா என்று தனித் தனியே ஆகர்ஷகம் இ றே
வேரி மயிர் பொங்க
பரிமளத்தை யுடைத்தான உளை மயிர்களானவை சிலும்ப
வேரி மயிர்
சிம்மத்துக்கு ஜாதி உசிதமான கந்தம் -சர்வ கந்த என்கிற விஷயம் ஆகையால் உபமேயத்தில் உள்ளது எல்லாம் உபமானத்திலே இட்டுச் சொல்லக் கடவது இ றே -தண் துழாய் விரை நாறக் கடவது இ றே
வெப்பாடும் பேர்ந்து
அறிவு கலந்து நடையாடச் செய்தேயும் நித்ர பாரவசயத்தாலே வந்த கலக்கத்தாலே ஒரு கார்யப் பாடு அற நாலு பாடும் பேருகிற படி
உதறி
உறங்கும் போது அவயவங்களை சேர இட்டுக் கிடைக்கையாலே வந்த திமிர்ப்பு போம்படி அவயவங்களைத் தனித் தனியே உதறி
மூரி நிமிர்ந்து
உலாவுகைக்கு சரீரம் விதேயமாகைக்காக அவயவியான உடலை ஒன்றாக நிமிர்த்து
முழங்கிப்
இதர துஷ்ட மிருகங்கள் கிடந்த இடத்திலே முழுக்காயாக அவிந்து கிடக்கும் படி
முழங்கி
மேகம் போன்ற கிருஷ்ணனுடைய முழக்கம் எதிரிகளை மண் உண்ணும் படி பண்ணி பெண்கள் வந்து எதிர் கொள்ளக் கடவதாய் இருக்கும் –
புறப்பட்டு-போதருமா போலே
கிரி குஹரத்தில் நின்றும் இப்படிப் பட்டதொரு ஸிம்ஹம் புறப்பட்டு ஸ்வைர சஞ்சாரம் பண்ணுமா போலே இங்கனே போர வேணும் என்கிறார்கள்
பெண்காள் -நம்மை ஸிம்ஹம் புறப்படுமா போலே புறப்படவோ சொல்லுகிறது -ராகவ ஸிம்ஹமாய் புறப்படவோ நர ஸிம்ஹமாய் புறப்படவோ -என்ன –
உன்னுடைய மேன்மை அந்யாயத்தம் அன்று என்கைக்காகவும்-ஸ்வா பாவிகமான ஸுர்யத்துக்கும் காம்பீர்யத்துக்கும்
சிம்மத்தை த்ருஷ்டாந்தமாகச் சொன்னோம் அத்தனை அல்லது
ஸிம்ஹம் போலே என்றோமோ என்ன ஹிரண்ய ராவணாதிகள் முன்னே நிற்குமா போலே நிற்கவோ தேடுகிறது பிரானே
நீ பூவைப் பூ வண்ணா
உன்னை நீ அறிய வேண்டாவோ -எதிரிகளான சிசுபாலாதிகள் முன்னே நிற்கிலும் இவ் வழகு குலையாமே நிற்குமவன் அல்லையோ நீ
சிம்ஹத்தால் உன்னுடைய வடிவு அழகையும் குளிர்த்தியையும் ஸுகுமார்யத்தையும் ஏறிட்டுக் கொள்ளப் போமோ
உன் வடிவுக்குப் பூவை பூவை ஓர் ஆகாரத்துக்கு த்ருஷ்டாந்தம் இடுகிற மாத்ரம் ஸுர்யாதிகளுக்கு ஒரு போலி சொன்னோம் அத்தனை அன்றோ
-பிரிந்தார்க்குப் பிழைக்க ஒண்ணாத படி வடிவு படைத்ததோ அது –
பூவைப் பூ வண்ணா
வண்டு அறாப் பூவை தான் கண்ணனார் வடிவுக்கு ஸ்மாரகமாய் இ றே இருப்பது -வடிவைக் கொண்டாட நின்றி கோள்
உங்களுக்கு அனுபவிக்க ஆசையாகில் உள்ளே புகுருங்கோள் என்றான்
வுன்-கோயில் நின்று இங்கனே
எங்களை உள்ளே அழையாதே நீ தான் உள்ளில் நின்றும் புறப்பட்டாலோ -படுக்கைத் தலையிலே எடுத்துக் கை நீட்டுவித்துக் கொள்ளும் அளவன்று
-எங்களை அழகு ஓலக்கத்தே அடிமை கொண்டு அருள வேணும் –
பூவைப் பூ வண்ணா நின் கோயில் நின்று
இவ் வடிவு அழகை எல்லாம் இட்டளத்தில் வெள்ளம் ஆக்குகிறது என்
உன் கோயில்
நந்தகோபனுடைய கோயில் -என்றார்கள் கீழ் -இங்கே உன் கோயில் என்கிறார்கள் -வாச பூமி ஒன்றாய் -அது இருவருக்கும் பொதுவாய்த்து இருப்பது –
இவன் வர்த்திக்கும் கோயிலுக்கு சேஷ சேஷிகளுடைய ப்ராதான்யம் கொள்ளக் கடவது இ றே -பிரணவம் போலவும் -ஹ்ருதயக்கமலம் போலவும்
திருவரங்கம் நம்மூர் -எம்பெருமான் கோயில் என்றேற்க்கு இது வென்றோ எழில் ஆலி-என்னக் கடவது இ றே –
இங்கனே போந்து அருளி-
பெருமாள் திரு மாளிகையில் நின்றும் ஸூமந்த்ரனைக் கையைப் பிடித்துக் கொண்டு பிராட்டி பின் தொடரப் புறப்பட்டால் போலே -ஞாலத்தூடே நடக்க ஒண்ணாது
இங்கனே –
எங்கள் முன்னே நடக்க வேணும் -எங்களுக்குத் தனியே சில நிர்பந்தம் உண்டு காண் -கண் வளர்ந்து அருளின படி கண்டு வாழ்ந்தோம்
-இனி நடை அழகு கண்டு வாழ வேணும் -நடைச் சக்கரவத்து பிடிக்கலாம் படி இ றே இந்நாலு அடியும் இருப்பது
-கிருஷ்ணனுடைய லளித கதியை அநு கரித்து தரிக்கத் தேடுகிறவர்கள் தாங்கள் உட்பட கண்ணுடையார் அடங்கலும் கண்டு வாழுங்கோள் என்னும் படி இ றே இருப்பது –
கானகம் படி யுலாவி யுலாவி -என்று கிருஷ்ணன் நடக்கும் போது ஆடல் பாடல் மறக்கக் கடவது இ றே அப்சரஸ் ஸூ க்கள் உட்பட ஆடுமது கண்டு
கை தொழ வீதி வருவான் -காலும் நடையும் கண்டு கை எடுப்பார் மடல் எடுப்பார் அவர்கள் இ றே பெண்கள் –
போந்தருளி
சதுர்க்கதி இ றே -ரிஷபத்தினுடைய செருக்கும் -மத்த கஜத்தினுடைய திமிர்ப்பால் வந்த பிசுகுதலும்-புலியினுடைய
சிவிடகுடைமையால் வந்த உறட்டுதலும் -ஸிம்ஹத்தினுடைய மேனானிப்பால் வந்த பராபிபவனமும் –
ஆயர் பாடி கவர்ந்து உண்ணும் கார் ஏறு –வாரணம் பைய நின்று ஊர்வது போலே -சிற்றாயர் சிங்கம் -என்கிற கிருஷ்ணனுக்குச் சொல்ல வேணுமோ
புருஷ ரிஷப -ராம சார்த்தூலம் -மத்த மாதங்க காமி நம் –சிம்ம விக்ராந்தகாமி நம் -என்று சக்கரவர்த்தி பிள்ளை உட்பட
விருது பிடியா நிற்க -இவை எல்லாம் நமக்கு நம் பெருமாள் நடை அழகிலே காணலாம்
போந்து கேட்க்கும் அத்தனை அன்றோ கார்யம் வேண்டுவது என்றான்
கோப்புடைய சீரிய சிங்காசனத்து இருந்து
படுக்கையில் வார்த்தையாக ஒண்ணாது
கோப்புடைய
உபய விபூதியில் உண்டான சராசர பதார்த்தங்களை அடங்கலும் தொழிலாக வகுப்புண்டு இருக்கை
சீரிய சிங்காசனம்
சீரிய சிங்கத்துக்கு சத்ருசமான ஆசனம்
சீரிய
பெண்களுக்கு பொய் குறிக்கும் கிருஷ்ணனே யாகிலும் இவ்வாசனத்திலே இருந்தால் பொய் சொல்ல ஒண்ணாதே -சொன்னது அமோகமாய் இருக்கை –
ஆசனத்துக்கு சீர்மையாவது -கடல் கரை வெளியிலே வானர சஹாசத்திலே வார்த்தை போலேயும் -பூசல் களரியிலே தேர்த் தட்டில் வார்த்தை போலேயும்
பெண்கள் திரளில் திவ்ய சிம்ஹாசனத்தில் இருந்து பொய் நம்பியான கிருஷ்ணன் சொன்னதே யாகிலும் ஆசன விசேஷத்தாலே
பழுது போகாத படி யாய் இருக்கும் -தர்ம ஆசனத்தில் இருந்தால் தோற்றிற்றுச் சொல்ல ஒண்ணாது இ றே -இது தான் தர்மாதி பீடம் இ றே –
ராஜாக்கள் மெய்க்காட்டுக்கு இன்ன மண்டபத்திலே இன்ன ஆசனத்தில் இருந்து நினைப்பிட்டது என்றால் தப்பாதால் போலே
உன் கோயில் நின்று இத்யாதி
நம்பெருமாள் கோயில் ஆழ்வாரில் நின்றும் புறப்பட்டு அருளி பெரிய திரு மண்டபத்திலே சேர பாண்டியனிலே நாய்ச்சிமாரோடு
கூடி இருந்து நினைப்பிட்டது என்றால் தப்பாதால் போலே
சீரிய சிங்காசனம்
ஓர் அணு சென்று அடியிடிலும் கிருஷ்ணனோடு ஸாம்யா பத்தியைக் கொடுக்கும் ஆசனம் -இருந்தால் சிங்காசனமாம் -என்கிற
ஆசனத்தில் ஏறல் இ றே தங்களுக்கு கணிசம்
கண் வளருகிற போதை அழகும் -உலாவுகிற போதை அழகும் -கண்டால் -இருக்கும் போதை அழகும் காண வேணும் இ றே
இருந்தமை காட்டினீர் -என்று இ றே உத்தேச்யம் -தடம் கொள் தாமரைக் கண் விழித்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ உலகும் தொழ இருந்து அருளாய் திருப் புளிங்குடி கிடந்தானே-
கிடந்தமை கண்டாலும் நடந்தமை கண்டாலும் கண்களின் விடாய் கெட்டு குளிராது -கண்ணிணை குளிர புது மலர் ராகத்தைப் பருக இருந்திடாய்
சீரிய சிங்காசனத்து இருந்து
நாங்கள் சுற்றும் ஓலக்கம் இருக்க நீ சிம்ஹாசனத்தில் இருந்தால் அன்றோ -பல்லாயிரம் பெரும் தேவிமாருடனே –எல்லாரும் சூழ
சிங்காசனத்தே இருந்தானைக் கண்டவர்கள் உண்டு என்கிற பிரசித்தி உனக்கு படைத்தாலாவது
இருந்து
காவலும் கட்டுமாய் நில் என்பார் இன்றிக்கே நினைத்தபடி அனுபவிக்கலாம் படி இருந்த இருப்பு இ றே
யாம் வந்த
எங்களை அறிவுதி இ றே -நீ வர இருக்குமவர்கள் அன்றோ நாங்கள்
வந்த
விரஹ துர்பல்யத்தாலே கால் நடை தாராத நாங்கள் அன்றோ வந்தோம்
கார்யம்
கார்யம் இன்னது என்னா விடுகிறது -அவசரத்தில் சொல்ல வேணும் என்று நினைத்து –
ஸ்ரீ பரத ஆழ்வான் தம்மோடு ஒத்த ஆர்த்தரானார் எல்லாரையும் திரட்டிக் கொண்டு சென்று திருவடிகளில் விழ இரங்குவர் என்று வர
அவன் நினைத்து வந்தததுக்கு அவசரம் இல்லாமையால்
அணுக ஒண்ணாத படி இருந்து திருவடி நிலைகளைக் கொடுத்து விடும் ஸ்வ தந்த்ரன் ஆகையால்
இப்போது சொல்லுவோம் அல்லோம் -இன்னம் இரண்டு அடி புகுர நின்ற வாறே –உற்றோமே யாவோம் -என்கிறோம் என்று
கார்யம் இன்னது என்னும் இடத்தை கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-சிற்றம் சிறு காலைக்கு வைக்கிறார்கள்
காரியம்
ஸ்வஸ்வரூபா பத்தி அளவும் இ றே விதிக்கு விஷயம் உள்ளது -அவ்வருகு பரிமாற்றத்தால் வருமவை எல்லாம் பிராமண விஷயமாய்
பேச்சுக்கு நிலமாய் இராதே அது தானும் காரிய வறுதி பிறந்தால் இ றே சொல்லுவது
ஆராய்ந்து அருள்
நாம் போம் இடம் தேடிக் காலம் பார்த்து எதிர் சூழல் புக்கு புருஷகாரமாகப் பற்றி நாம் படுவது எல்லாம் நீங்கள் படுவதே
நீங்கள் என் செய்தி கோள்-என் பட்டி கோள் -என்று ஆராய வேணும் –
பெண்காள் -ஒருவரை ஒருவர் எழுப்பி -எல்லாரும் திரண்டு நம் வாசல் காக்குமவனை எழுப்பி -ஐயரை எழுப்பி
-ஆய்ச்சியை எழுப்பி நம்மை எழுப்பி அண்ணரை எழுப்பி மீளவும் நம்மை எழுப்பி போர வியசனப் பட்டி கோளே-என்று
திரு உள்ளம் பற்றி கிருபை பண்ணி அருள வேணும் –

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பாவை —-அங்கண் மா ஞாலத்து –ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் வியாக்யானம் – ஆறாயிரப்படி —

January 11, 2017

மாற்றார் உனக்கு வலி தொலைந்து -என்று போக்கற்று வந்த படி இ றே சொன்னார்கள் -இன்னமும் இவர்கள்
வாய் அறியக் கடவோம் என்று கிடந்தான் கிருஷ்ணன்
இப்படியே எங்களை நீ நினைத்து இருக்கிற படி –இங்கேயே புகல் இன்றியே ஒழிந்தாலும் வேறு போக்கிடம் இல்லாத படி
அநந்யார்ஹை களுமாய் எங்களுக்கும் பிறருக்கும் ஆகாத படியாய் வந்தோம் –
இனி கடாக்ஷித்து அருள வேணும் என்கிறார்கள் –
பரித்யக்தா -புத்ராம்ச தாராம் ச -என்று அனுகூலராய் இருக்கச் செய் தேயும் இவர்களிலும் அண்ணி யாராக இருந்தபடி இதுவன்றோ என்று
இவர்களும் அப்படியே யாகக் கூடும் என்று -ராவண சம்பந்தம் உள்ள தடங்களும் விட்டு
பகவத் கதம் என்று ஓர் இடத்திலே பாரதந்தர்யம் கிடவாத போது எல்லாம் பெற்றாலும் பலவாய்த் தண்ணிய வற்றை தின்று தேட வேணுமோ என்று
பொகட்டுப் போந்தேன்-தேவர் அங்கீ காரம் பெற்றிலேன் ஆகிலும் விட்டுப் போந்த இடத்துக்கு ஆகாத படி வந்தேன் என்று விபீஷணன்
விண்ணப்பம் செய்தால் போலே பிறந்தகத்துக்கும் ஆகாதபடி வந்தோம் என்று தங்கள் அநந்யார்ஹத்வம் தோற்ற விண்ணப்பம் செய்கிறார்கள் –

அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்-

அங்கண் மா ஞாலத்து அரசர்
இங்கு வந்தார் உன்னில் குறைந்தார் உண்டோ -ஈச்வரஸ் சர்வ பூதா நாம் என்று நீ இருக்குமா போலே -நாங்களும் ஈஸ்வரோஹம் என்று
தனித்தனியே இருக்குமவர்கள் அன்றோ -உன்னில் ஒரு சுற்றுக் குறைய நின்ற இடம் உண்டோ –
எண்டால் ஈரரசு தவிர்ந்து வந்த படி பார்த்திலையோ -ஸ்வத்தவ ஸ்வாமித் வங்கள் இரண்டு தலைக்கும் வியவஸ்திதம் ஆனால்
ஸ்வாமித்வம் உள்ள இடத்தில் ஸ்வாதந்தர்யமும் ஸ்வத்வம் உள்ள இடத்திலே பாரதந்தர்யமும் கிடவாத போது
ஸ்த்ரீக்கு மோவாய் எழுந்தால் போலேயும் புருஷனுக்கு முலை எழுந்தால் போலேயும் இ றே இருப்பது
இப்படி ஸ்வரூப விருத்தமான அபிமானத்தை கழித்து அன்றோ நாங்கள் வந்தது –
அம் கண் ஞாலத்து அரசர்
அம் -என்று அழகு —கண் -என்று இடம் -அழகிய ஸ்தான விசேஷங்களை யுடைத்தாய் இருந்துள்ள
மஹா பிருத்வியை தங்களது என்று அபிமானம் பண்ணி இருக்கிற ராஜாக்கள் –
அங்கண்
என்ற இடத்தால் -போக்கிய போக உபகரண போக ஸ்தானங்களை ப்ரஹ்மாதி பீபீலிக அந்தமாக தம் தாம் அளவிலே அபிமானம் பண்ணி இருப்பது
இனி ப்ரஹ்மா அஹம் என்றால் அவன் அளவில் நிற்குமா போலே சிற்று எறும்பு அஹம் என்றால் அது தன் அளவிலே நிற்கும்
அவன் நான் என்றத்தோடு இது நான் என்றத்தோடு வாசி இல்லை -தத் வியாத்திரீக்கத்க்கள் அடைய
நான் என்றால் ஆக்கனுமாய்-அத்தனையும் துக்க ஹேதுவுமாய் இருக்கும் –
யாவது குருதே ஐந்து சம்பந்தான் மனச ப்ரியான் தாவன் தோஸ்ய நிகந்த்யந்தே ஹ்ருதயே சோக சங்கவ-என்று சொல்லிற்று இ றே
வேதாந்தங்களிலே ப்ரஹ்மாதிகளும் கூட ஏழு ஜென்மம் ஜனித்துஅறிய சாதனா அனுஷ்டானங்களை பண்ணி
பின்பு பகவத் பிராப்தி ரூப புருஷார்த்தம் பெற்றவர்களாக சொல்லா நின்றது இ றே
இவ்வருகே எத்தனை யேனும் கீழாய் இருப்பார் சிலர் சரீர அவசான காலத்திலேயே மோக்ஷம் கிடைக்கும் என்று
பொதி சோறு கட்டிக் கொண்டு இரா நின்றார்கள் -இவை இரண்டும் சேர விழுந்தபடி எங்கனே என்று
பட்டரைக் கேட்க -ஒரு குறை இல்லை என்று அருளிச் செய்தார் –
அவன் தன் விபூதி அளவும் செல்ல பச்சை இட்டுப் பெறக் கடவன் என்று கோலக் கடவன் -யாதோ உபாசனம் பலமாகையாலே
தத் க்ரது ந்யாயத்தாலே அப்படியேயாய் இருக்கும் அவனுக்கு –
இவன் தன் பக்கல் ஒன்றும் இல்லாமையை அனுசந்தித்து பிரதம பரிஸ்பந்தமே பிடித்து நீயே எனக்கு கடவையாக வேணும் என்று காலிலே விழும் –
அவனும் அப்படியே தன் தலையிலே ஏறிட்டுக் கொண்டு இவனைப் பார்த்து இருக்க வேண்டாத படி தலைக் கட்டிக் கொடுக்கும்
அவனுக்குத் தான் கோலின பரப்பு அடங்கலும் விட வேணும் -இவனுக்கு இவ்வளவு இ றே விட வேண்டுவது
அவன் அனுஷ்ட்டிக்க கடவை எல்லாம் அனுஷ்ட்டித்து பின்பு பலம் தரப் பார்த்து இருக்கும் -ஈஸ்வரனை இ றே இவன் முதலிலே பற்றிற்று
மா ஞாலத்து அரசர் அபிமான
மஹா பிருத்வியில் பரப்பு எல்லாம் என்னது என்று அபிமானம் பண்ணுகை –பதிம் விசுவஸ்ய -என்று ஓதப்படுகிற ஈஸ்வரனை அநு கரிக்கிறார்கள் இறே இவர்கள் –
யாவரும் யாவையும் தானாம் அமையுடை நாரணன் -என்கிற பதத்தை அநு கரித்த பவுண்டரீக வா ஸூ தேவனைப் போலே
அபிமான பங்கமாய்
ராஜ்யங்களை இழந்து எளிவரவு பட்டு அபிமான ஸூன்யராய்-ராஜ்யன் நாம மஹா வியாதி -அசிகித்சோ விநாசந-தச வேஸ்யா சமோன் ரூப –
ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர் -என்று ராஜ்யத்தில் அபிமானம் அநர்த்தாவஹம் என்று இ றே ஞானாதிகருடைய பிரதிபத்தி
வந்து –
கானகம் போய் என்று காடு பாய்ந்து திரியாதே உஜ்ஜீவன ஹேதுவான இடத்தில் வந்து
நின் பள்ளிக் கட்டில் கீழே
அந்த ராஜாக்கள் தோற்று தங்கள் சத்ருக்கள் கட்டில் கீழே என்ன வேண்டாவோ –நின் பள்ளிக் கட்டில் கீழ் -என்பான் என் என்னில்
உபமேய வஸ்து இவன் அல்லது இல்லை என்னும் ப்ரஸித்தியாலும் -யத்யத்விபூதி மத் சத்வம் என்று சொல்லப் படுகிற
விபூதி பூதர்க்கு விபூதிமான் வாசல் புகலாகையாலும்-பஃன அபிமானர் புகும் வாசல் ஆகையாலும்
-சர்வ லோக சரண்யன் வாசலே புகல் என்னும் தங்கள் வாசனையால் சொல்லுகிறார்கள்
நின்
எங்கேனும் வழி பறி யுண்டாலும் ராஜாவின் வாசலிலே கூப்பிடுமா போலே -ராஜாதி ராஜஸ் ஸர்வேஷாம் –
என்ற பிரமாணம் சொல்லப் படுகிற உடையவன் இருந்த இடத்திலே வர வேணும் இ றே
கோவாகி மா நிலம் காத்த
இவனோடு சம்பந்தி சம்பந்தம் உடையாரை பற்றினவர்கள் இ றே ராஜாக்கள் ஆகிறார்கள் –
சங்கம் இருப்பார் போல்
அந்த ராஜ்யங்களைக் கொடுத்து போங்கோள் என்றாலும் பழைய எளிவரவை நினைத்து அவை வேண்டா வென்று
உன் சிம்ஹாசனத்தின் கீழே திரள் திரளாக வந்து ஓலக்கமாக இருப்பவர்களை போலே –
பள்ளிக் கட்டில் கீழே
வெளியிலே வேளாளராய்த் திரியில் தலையிலே முடியை வைப்பார்கள் என்று ராஜ்ஜியம் பண்ணுகைக்கு முசித்து அந்தரங்கமான ஓலக்கத்திலே சேவிக்கிற படி –
பஃன அபிமானர் ஆனாலும் அரதிர் ஜன சம்சதி -என்கிறபடியே ஆளற்ற இடத்தில் விவிக்த சேவை பண்ணினால்
ஸ்ரீ பரத ஆழ்வான் தனி இருக்கையிலே ராஜன் என்பார்-வஞ்சித்தாச்சாபி தேவயம்-என்பார் -கச்சின்ன துஷ்டோ வ்ரஜஸி-என்பாராய்க்
கொண்டு கண்டார் அலைக்க அவர்களுக்கு சூழ்த்துக் கொடுத்து தன் பக்கல் அபிமான தோஷம் இல்லாமையை வெளியிட வேண்டிற்று இறே
இளைய பெருமாள் படுக்கைத் தலையில் பிரியாமையாலே அவை ஒன்றும் கேட்க வேண்டிற்று இல்லை இ றே
போல் வந்து தலைப் பெய்தோம்
இந்த ராஜாக்கள் க்ரம ப்ராப்தமான ராஜ்யாதிகளையும்-தங்களுடைய அபிமானங்களையும் விட்டு உன் பள்ளிக் கட்டில் கீழே
படு காடு கிடக்குமா போலே நாங்களும் ஒரு ப்ரஹ்ம அபிமானத்தோ பாதியும் போந்து இருக்கிற ஸ்த்ரீத்வ அபிமானத்தையும்
பந்துக்களுடைய நிரோதத்தாலே கிருகங்களை விட்டுப் புறப்பட ஒண்ணாத அருமையையும் வேறு உண்டான
போகங்களையும் விட்டு அம்புக்கு தோற்றாரோ பாதி உன் அழகுக்குத் தோற்று வந்து புகுந்தோம் –
வந்து தலைப் பெய்தோம்
அந்த ராஜாக்களை போலே நாங்களும் அநாதி காலம் பண்ணிப் போந்த தேகாத்ம அபிமானத்தாலே இந்த சம்பந்தத்தை
இழந்து போந்த நாங்கள் நிர்ஹேதுகமாக கிட்டப் பெற்றோம் என்று யாதிருச்சிக சங்கதியைச் சொல்லிற்று ஆகவுமாம்
நாங்கள் அகன்ற தூரம் வந்த அருமையையும் பாராய் -த்ரவ்யமாய் இருக்கச் செய்தேயும் குண ஜாதிகள் போலே பகவத் பிரகார பூதனாய்
ப்ருதக் ஸ்திதி யாதல் ப்ருதக் உபலம்பமாதம் ஆதல் உடையன் அன்றிக்கே கௌஸ்து பத்தோ பாதி அத்தலைக்கு அதிசயத்தை விளைத்து
ஸ்வரூப லாபமாகக் கடவ சேதனன் அநாதி கர்மம் அடியாக அத்தை இழந்து -அசித் ஸம்ஸ்ருஷ்டனாய் தனக்கு பிரகாரமான சரீரத்தை
தேவோஹம் மனுஷியோஹம்-என்று தானாக புத்தி பண்ணி -சரீர சம்பந்த நிபந்தமான ஸூ க துக்கங்களுக்கு போக்தாவாய்
ஸ்தாவரங்களோடு ஓக்க அசித் சமனாய் -ஷிபாமி -என்று ஈஸ்வரனும் வெறுக்கும் படி -கை கழிய அகன்ற இவன்
யாதிருச்சிகமாக பிறப்பதொரு ஸூ க்ருதம் அடியாக பகவத் கடாக்ஷத்துக்கு யோக்யனாய்
அனந்தரம் தேஹாத்மாக்கள் உடைய ஸ்வரூபத்தை விவேகித்து -தேஹாத்ம அபிமானத்தை விட்டு ஆத்மாவின் பக்கல் ஸ்வாதந்தர்யத்தையும் விட்டு
ஈஸ்வரனுக்கு சேஷம் என்றும் -புருஷார்த்தம் அவன் என்றும் -ருசி விளைந்து –
அது பெறுகைக்கு அடியான உபாயமாகவும் -அவன் தன்னைப் பற்ற விளம்பம் பொறாத படி த்வரை விளைந்து திருவடிகளில் வந்து
கிடக்கும் அளவாய் விட்டது இ றே ப்ராஹ்மண பிரஜை வேடருடைய கிருஹத்திலே பால்யத்திலே அகப்பட்டு புத்தி வ்ருத்திகள்
அவர்கள் படியாய் நடந்து செல்லா நிற்க ஸூ க்ருத விசேஷத்தாலே மாதா பிதாக்கள் முன்னே வந்து நிற்குமா போலே
வந்து தலைப் பெய்தோம்
மாறி மாறி அந்தாதியாக பல பிறப்பும் பிறந்து அதுவே திருவடிகளை அடைகைக்கு ஹேதுவாய்
சிரா யமே கூல மிவாசி லப்த–மன்யே ப்ராப்தாஸ் மதம் தேசம் பரத்வா ஜோயம் அப்ரவீத் -வாநராணாம் நராணாம் ச – தேவ்யே வம்ச மஜாயதே -நணுகினம் நாமே -வித்ருசமான விதுசங்கதமாகப் பெறுவதே
வந்து தலைப் பெய்தோம்
வந்து எங்கும் தலைப் பெய்வன் -என்கிற இழவுகள் தீர்ந்து எல்லாரையும் எழுப்பிப் பட்ட வியசனம் எல்லாம் தீர ஒரு படி வந்து கிட்டப் பெறுவதே
பெண்காள்-எல்லாம் சபலம் ஆயிற்றே -இனி ஒரு குறைகளும் இல்லையே என்ன -பிராப்தி பலம் பெற வேண்டாவோ என்கிறார்கள்
கிங்கிணி வாய்ச் செய்த
அலரவும் மாட்டாதே மொட்டிக்கவும் மாட்டாதே திருக் கண்கள் இருந்த படிக்கு த்ருஷ்டாந்தம் சொல்லுகிறார்கள் –
கிண்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே
ஸ்வாதந்தர்யம் செம்பிளிப்பியா நின்றது –
நப்பின்னை பிராட்டையோட்டை ஸ்பர்சம் அலரப் பண்ணா நின்றது -இத்தலையில் அபராதம் மொட்டிக்கப் பண்ணும்
அவனுடைய அபராத சஹத்வம் அலரப் பண்ணும் -கர்ம பாரதந்தர்யம் மொட்டிக்க பண்ணும்
ஆஸ்ரித பாரதந்தர்யம் அலரப் பண்ணும்-காலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணா நின்றது
-ஆர்த்த த்வனி விகசிக்கப் பண்ணா நின்றது -ஆதித்யனைக் கண்டால் அலரக் கடவ தாமரைப் பூ போலே இவர்கள் ஆற்றாமை கண்டால் அலருமவை யாயிற்று
செங்கண்
உபமானம் நேர் இல்லாமையால் உபமேயம் தன்னை விசேஷிக்கிறது
பட்டுரையாய் புற்கென்றே காட்டுமால் -உபமானத்தோடே சொல்ல நினைக்கை யாவது அழுக்கு ஆக்குகை இ றே
-தாமரைக்கு இவன் கொடுத்த நிறம் சிவப்புக்கு ஒப்பாம் அத்தனை அல்லது வாத்சல்யத்தாலே வந்த குதறுதல் இல்லையே அதுக்கு –
சிறுச் சிறிதே
குளப் படியில் கடலை மடுக்க ஒண்ணாது இ றே -பொறுக்க பொறுக்க கடாக்ஷிக்க வேணும் –
சிறுச் சிறிதே
பிரதம பரிஸ்பந்தமே பிடித்து அலரும் போதை அளவுகள் எல்லாம் காண ஆசைப் படுகிறார்கள் ஆகவுமாம்
எம்மேல் விழியாவோ
கோடையோடின பயிரிலே ஒரு பாட்டம் மழை வர்ஷியாதோ என்னுமா போலே
எம் மேல்
சாதகம் மேக ஜலம் பார்த்து இருக்குமா போலே கடாக்ஷமே தாரகமான எங்கள் மேலே
இள வாய்ச்சியர் கண்ணினுள் என்று விழிப்பது அங்கே அன்றோ -அதுக்கு வந்தது என் என்ன
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போலே
கதிர் மதியம் போல் முகத்தான் என்று ஆசைப்பட்ட படி பேறாக வேணும் என்கிறார்கள்
திங்களும் ஆதித்யனும்
சந்த்ர ஸூர்யர்களுடைய தண்ணளியையும் பிரதாபத்தையும் யுடைய திருக் கண்கள் -பிரதி கூலர்க்கு அணுக ஒண்ணாது இருக்கையும்
அநு கூலர்க்கு அணுகி அனுபவிக்கலாய் இருக்கையும் -பிரசன்ன ஆதித்ய வார்ச்சசம் –
திங்களும் ஆதித்யனும்
விரஹ தாபம் போக்குகைக்கும் கிடையாது ஒழி கிறதோ என்னும் பயத்தாலே வந்த அஞ்ஞான அந்தகாரம் போகைக்கும்
அங்கண்
திருக் கண்களுக்கு அவர்களும் உபமானம் ஆகப் போராது இருந்த படி -சந்த்ரமா மனசோ ஜாத -என்று
சந்த்ர ஸூ ர்யர்களுக்கு பிரசாத உஷ்ணங்கள் இவனுடைய சம்பந்தத்தால் இ றே –
பல காலும் ராஹு கேதுக்களாலே அபிபூதராய் க்ஷய வ்ருத்திகளையும் களங்கத்தையும் யுடையரான
அவ்யய சந்திரனும் கார்கால ஆதித்யனும் அன்றே அதீவ ப்ரிய தர்சனம் என்கிறவனுடைய பார்வைக்கு ஒப்பு –
இரண்டும் கொண்டு
முழு நோக்கு பொறுக்கும் அளவானவாறே -இரண்டும் -என்று சொல்கிறார்கள்
எங்கண் மேல் நோக்குதியேல்
உன் நோக்குப் பெறாதே ஒரு நீர்ச் சாவியாய் உறாவின எங்கள் பக்கலிலே
எங்கள் மேல்
அவை இரண்டு கண்ணுக்கும் தங்கள் பக்கலிலே விஷயம் உண்டு -சேர ஒட்டாதார் பக்கலிலே பிரதாபமும் தங்கள் பக்கலிலே தண்ணளியும்
சீற்றத்தோடு அருள் பெற்றவன்
ஹிரண்யன் பக்கல் சீற்றம் செல்லா நிற்க பிரகலாதனுக்கு அனுகூலமாய் இருந்தது இ றே கண்ணில் வாத்சல்யம் இருந்த படி
ஸிம்ஹம் ஆனையோடே பொரா நின்றாலும் குட்டிக்கு முலை கொடுக்குமா போலே -என்று பட்டர்
குழவி இடை கால் இட்டு எதிர்ந்து பொரும் –விழியாவோ -என்று தங்கள் மநோ ரதம் –
நோக்குதியேல் -என்ற இடம் முன்னிலை
நோக்குதியேல்
தங்கள் தலையால் கிட்டுமது அன்றே நோக்குத் தான்
எங்கள் மேல் சாபம் இழிந்து
யாதநா சரீரம் போலேயும் சாப உபஹதரைப் போலேயும் உன்னைப் பெறாதே வியசனப் படுகிற துக்கம்
எங்கள் மேல் சாபம்
பிறருடைய சாபம் உன் கடாக்ஷத்தாலே தீரும் -எங்களுடைய சாபம் நீ போக்குதல் அனுபவித்து விடுதல் செய்யும் அத்தனை
விஸ்லேஷ வியசனம் அனுபவித்தே விட வேண்டுகையாலே சாபம் என்கிறது –
ப்ரஹ்ம சாபம் மார்பிலே வேர்ப்பாலே போக்கலாம் –துர்வாசாவினுடைய சாபம் மார்பில் இருக்கிறவர்களுடைய கடாக்ஷத்தாலே போக்கலாம்
கௌதம சாபம் காலில் பொடியால் போக்கலாம் –தக்ஷ சாபம் ஒரு தடாகத்தில் முழுக்கிட்டு போக்கலாம் எங்கள் சாபம் போக்குகைக்கு இத்தனையும் வேணும் –
வேர்த்து நின்று விளையாடக் காண வேணும்
எங்கள் மேல் நோக்க வேணும்
பொடி தான் கொணர்ந்து பூச வேணும்
இப்போதே எம்மை நீராட்ட வேணும்
சாபம் இழிந்து நோக்குதியேல் -வந்து தலைப் பெய் தோம் எம் மேல் விழியாவோ –

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பாவை —-ஏற்ற கலங்கள் –ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் வியாக்யானம் – ஆறாயிரப்படி —

January 10, 2017

புருஷகார பூதையான நப்பின்னை பிராட்டியை எழுப்ப -அவள் உணர்ந்து எழுந்திருந்து நான் உங்களில் ஒருத்தி அன்றோ
உங்கள் கார்யங்கள் எல்லாம் மகிழதாகச் செய்து தருகிறோம் -நம்மைப் பற்றினார்க்கு ஒரு குறைகள் உண்டோ
நாம் எல்லாரும் கூடி கிருஷ்ணனை எழுப்பி அர்த்திக்க வாருங்கோள் என்ன -அவன் குணங்களில் தோற்றார் தோற்ற படியே சொல்லி
யுகாவாதார் அம்புக்குத் தோற்று வந்து விழுமா போலே குணைர் தாஸ்யம் உபாகத -என்ற இளைய பெருமாளை போலே
குணங்களுக்குத் தோற்று வந்தோம் என்று சொல்லி கிருஷ்ணனை எழுப்புகிறார்கள்
யுகாவாதார் உன் வீரத்துக்குத் தோற்றால் போலே உகந்த நாங்கள் உன் நீர்மைக்குத் தோற்றபடி-

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசல் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்-

ஏற்ற கலங்கள்
உன்னை ஆராய் நினைத்து உறங்குகிறாய் -உன்னை உணராய் -ஷீராப்தி சாயி யாகவாதல் -சக்கரவர்த்தி பிள்ளையாக வாதல் நினையா நின்றாய்
ஸ்ரீ நந்தகோபர் மகனாய் நினைக்கிறாய் இல்லையே உன்னை -ஸ்ரீ நந்தகோபர் ஆர்ஜித்த ஐஸ்வர்யத்தை சொல்லுகிறார்கள்
ஸ்ரீ நந்த கோபருடைய ஸுர்ய வீர்யங்களும் தார்மிகத்வமும் -புஜ பலமும் இ றே கீழ்ச் சொல்லிற்று –
ஏற்ற கலங்கள்
இட்ட இட்ட கலங்கள் எல்லாம் எதிரே நிரம்பி வழியும் படி அனுசந்ததமாக பால் சொரியக் கடவனாய் இருக்கும் பசுக்கள்
ஏற்ற கலங்கள்
கலமிடுவார் தாழ்வே -இட்ட கலம் நிறையாதது இல்லை -நாலாயிரம் இரண்டு ஆயிரம் என்ற ஒரு ஸங்க்யை இல்லை
ஏற்ற கலங்கள்
கலத்தில் சிறுமை பெருமை இல்லை -கடலை மடுக்கிலும் நிறைக்கும் அத்தனை -ஏலாத கலங்கள் நிறையாது ஒழி கிறது பாலின் குற்றம் அன்று இ றே
கொடுப்பார்க்கு ஒரு கொள்வார் தேட்டமாய் இ றே இருப்பது -இவையும் கிருஷ்ணன் படியாய்த்து இருப்பது –
அர்த்தியார் குற்றமேயாய் அவன் பக்கல் குறை இல்லையாய் இருக்குமா போலே
உதார -என்று அர்த்தித்த பாத்திரங்களை கொண்டாடி இ றே இவன் உபகரிப்பது-அர்த்தித்தவம் தான் உபாயம் ஆகாதோ என்னில்
இவனுடைய தாதர்த்யம் ஸ்வரூபத்தில் புகுமா போலே இதுவும் ஸ்வரூபத்தில் புகும் அத்தனை –உபாயத்தில் புகாது
அங்கனே யாகில் அர்த்தித்தவம் தான் வேணுமோ என்னில் முக்தன் ஆனாலும் இல்லை யாகில் போகம் தான் ப்ராப்யம் ஆக மாட்டாது
சம்சாரத்தில் போகம் சாவதி யாகையாலே அர்த்தித்தவமும் அவ்வளவில் பர்யவசிக்கும் -அங்கு நித்யமாகையாலே அது உருவச் செல்லும்
நித்ய அநபாய யானவளும் இறையும் அகலகில்லேன் என்று இ றே அங்கு இருப்பது
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான் -சதா பஸ்யந்தி இ றே அவ்விடம்
நம இத்யேவவாதின -என்றது இ றே -அவதரித்த இடத்திலும் இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற -என்னக் கடவது இ றே
எதிர் பொங்கி மீதளிப்ப
முலைக் கண்ணின் பெருமையால் ஒருக்கால் தொட்டு விட்டாலும் ஒரு பீறிலே கலத்தை நிறைத்து
வழிந்து போகா நின்றாலும் முலைக் கடுப்பாலே மேலே மேலே சொரியும் –
மாற்றாதே பால் சொரியும்-
இட்ட கலம் நிரம்பிற்று -கலம் இடுவார் இல்லை என்னாக் கண் அடையாது -ஊற்று மாறாதே பால் சொரியும் அத்தனை
பூய ஏவ மஹா பாஹோ ப்ரஹ்ருஷ்டோ வாக்யமப்ரவீத் இதஞ்ச ச ச்ருணு மைத்ரேய -என்று சொல்லக் கடவது இ றே
ஸ்ரீ மைத்ரேய பகவான் கேளாது இருக்கச் செய்தே நல்ல வர்த்தம் இவன் இழக்க ஒண்ணாது என்று
-நித்யைவேஷா ஜெகன் மாதா -என்று ரிஷி தான் சொன்னான் இ றே
வள்ளல் பெரும் பசுக்கள்
சிலருக்கு உபகரித்ததாய் இருக்கை அன்றிக்கே தன் கார்யம் செய்ததாக உபகரிக்கும் படி உதார ஸ்வபாவமாய் இருக்கை –
வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் என் வள்ளல் -என்கிற கிருஷ்ணனைப் போலே -இத்தை நினைத்து இ றே -உதாரா-
சந்தர்ச்யன் -என்று ஆளவந்தார் -சிலர் அத்தியாய இருக்கச் செய்தே வீடுமின் முற்றவும் என்று அருளிச் செய்தது
அத்தை நினைத்து இ றே ஸ்ரீ மதுர கவிகள் -அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -என்றது
வண் சடகோபரான இவரைப் போலவே அருள் மாரியாகையாலே திரு மங்கை ஆழ்வாரும்
-முந்துற யுரைக்கேன் –சொல்லுகேன் வம்மின் -நமரும் உரைமின் -என்று அருளிச் செய்தார்
வள்ளல்
கிருஷ்ணனைப் போலவே பெண்ணுக்கும் பேதைக்கும் அணையலாம் படி தன்னைத் தாழ விட்டுக் கொடுத்துக்கொண்டு நிற்கும் பவ்யதையை சொல்லுகிறது
பெரும் பசுக்கள்
கிருஷ்ண ஸ்பர்சத்தாலே வளருமவை ஆகையால் அவன் தன்னோடு ஓக்கப் பெருத்து இருக்கை -பெரும் கண்ணன் -மஹாத்மன -பேரோதும் பெரியோர்
வள்ளல் பெரும் பசுக்கள்
சிறு மா மனிசர் என்னுமா போலே
ஆற்றப் படைத்தான்
மிகவும் படைத்தான் -குணா நாம ஆகரோ மஹான் -குணா நாம யுதைகமம்சம் -யதா ரத்நா நிஜல தேர சங்கயே யானி புத்ரக-
ஈறில வண் புகழ் -ஸமஸ்த கல்யாண குணாம் அம்ருதோததி-அஜில ஹேய ப்ரத்ய நீக-அபரிமித குண கணவ்க மஹார்ணவ –
வர்ஷா யுதைர்யஸ்ய குணா நசக்யா -என்று கிருஷ்ண குணங்களுக்கு எல்லை காணுதல் –
கண்ண பிரான் கற்ற கல்வி என்று கிருஷ்ணன் தீம்புக்கு எல்லை யுண்டாதல்
அமர்யாத ஷூத்ரா-என்று சம்சாரிகள் அனாத்மா குணங்களுக்கு ஸங்க்யை யுண்டாதல்
திரு நறையூரில் திரு வீதிகளில் முத்துக்களை எண் உண்டாதல் செய்யில் யாய்த்து திருவாய்ப்பாடியில் பசுக்களுக்கு எண் உண்டாவது
கழி ஆருங்கன சங்கம் -கர்ப்பிணிகளை போலே
கலந்து எங்கும் நிறைந்து ஏறி -பெரிய திரு நாளிலே சர்வோதிக்கமாக வந்து ஏறுமா போலே
வழி யார முத்தீன்று -சிலர் தார்மிகர் மனுஷ்யருக்கு சஞ்சரிக்கைக்கு உறுப்பாக குறும் தெருவும் நெடும் தெருவும் கண்டு வைப்பார்கள் ஆனால்
இவை வழி போக ஒண்ணாத படி முத்தாலே நிரப்பி வைக்கும்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஸ்ரீ நந்தகோபர்க்கு சம்பத்து ஸ்வயம் ஆர்ஜிதம் ஆகையால் தான் தோன்றியாய் இருக்கும் -இவர் பிறந்து படைத்தது ஆகையால் அடியுடைய ஐஸ்வர்யம் –
பதிம் விசுவஸ்ய -என்கிற ஐஸ்வர்யத்தில் காட்டிலும் ஸ்ரீ நந்தகோபர் ஐஸ்வர்யத்துக்கு இட்டுப் பிறந்தவனே
பரம பதம் போலேயும் நாராயணத்வம் போலேயும் ஸ்வதஸ் சித்தம் அன்று இ றே கோப குலமும் கோபாலத்வமும்-நந்தன் பெற்ற ஆனாயனுக்கு அல்லது சித்தியாதே
மகனே அறிவுறாய்
உன் ஐஸ்வர்யம் இருந்த படியால் எங்களை நினைக்கைக்கு விரகு இல்லை – ஐஸ்வர்யா செருக்கால் ஆர்த்தவ த்வனி செவிப்பட்டது
இல்லை யாகிலும் உன் பிறவியை புத்தி பண்ணி எங்களுக்காக உணராய்
உனக்கும் எங்களுக்கும் உண்டான சம்பந்தத்தால் பெறில் பெறும் அத்தனை என்று உன் தன்னைப் பிறவி பெறும் தனை -என்று அருளிச் செய்தாள் இ றே
மகனே அறிவுறாய்
பரம பதத்தில் வந்தோமோ -வசிஷ்டாதிகள் நியமிக்கும் வாசலிலே வந்தோமோ
அறிவுறாய்
இவனுக்கு உணர்த்தி யுண்டானாலும் பலத்தில் விளம்பம் இல்லை -வ்யபிசாரமும் இல்லை என்று இருக்கிறார்கள்
அறியாத போது இ றே இத்தலைக்கு இழவும் வியசனமும் -அறிவித்தால் கார்யம் செய்யாத போது இழவும் அவத்யமும் அவனதாம் அத்தனை இ றே
அறிவுடையார் கார்யம் ஒரு பரம சேதனன் கையது இ றே
அறிவுறாய்
சர்வஞ்ஞனையும் உணர்த்த வேண்டும் படி இ றே உள்ளுச் செல்லுகிறபடி -கைப்பட்ட பெண்களை சரக்கிலே வாங்கி
கைப்படாதவர்களைக் கைப் படுத்துகைக்காக உண்டான உபாய அந்நிய பரதையாலே எழுப்புகிறார்கள்
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் –
ஊருக்காக இல்லையோ -நாம் பிறந்து படைத்தோமாகச் சொன்னார்கள் –
இது ஒரு ஏற்றமோ என்று பேசாதே கிடந்தான் -இனி அவ்வருகு இல்லை என்னும் படியான உதகர்ஷன்களை சொல்லி எழுப்புகிறார்கள்
ஊற்றமுடையாய்
பிராமண தார்டயத்தால் வந்த ப்ரேமயத்தினுடைய ஸ்தைரியத்தைச் சொல்லுகிறது –
புருஷ புத்தி ப்ரபாவங்களால் ஆனவற்றால் அன்றிக்கே -அபவ்ருஷேயமாய் நித்ய நிர்தோஷமான வேதத்தால்
ப்ரதிபாதிக்கப் படுக்கையாலே திருட பிராமண சித்தனாய் இருக்கை -அப்ரமாணம் என்னுதல் அனுமான பிரமாணம் என்னுதல் செய்ய ஒண்ணாது –
வசன ஆபாசங்களாலும் உக்த்ஆபாசங்களாலும் அழிக்க ஒண்ணாது இருக்கை -சர்வே வேதா யத் பதமாமநந்தி சர்வே வேதா யத்ரைகம் பவந்தி –
நதாஸ்ம வசசாம் பிரதிஷ்டா -வசசாம் வாஸ்யம் உத்தமம் -நாராயண பரோ வேத – உளன் சுடர் மிகு ஸ்ருதியுள்-வேத முதல்வன்
-நான் மறைகள் தேடி ஓடும் செல்வன் -நம்முடை நாயகனே என்று யசோதை பிராட்டி சீராட்டுகிற கிருஷ்ணன் இ றே
பெரியாய்
அந்த பிரமாணங்கள் எல்லாம் சொன்னாலும் தன்னுடைய அவதி காண ஒண்ணாத படி அவ்வருகு பட்டு இருக்கிறவன்
யாதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ -யஸ்யா மதம் தஸ்ய மதம் -அவ்விஞ்ஞாதம் விஜாநதாம் என்றும்
பிரமாணங்களுக்கு-இவ்வளவு என்ன ஒண்ணாத படி இருக்கை –
உலகினில் தோற்றமாய் நின்ற
மேன்மைக்கு எல்லை காண ஒண்ணாத படி இருக்கும் என்று ஓலைப் புறத்திலே கேட்டுப் போகை அன்றிக்கே
எத்தனையேனும் தண்ணிய சம்சாரிகளுக்கும்
உபேஷா விஷயமான லோகத்தில் அஜஹத் ஸ்வபாவனாய்க் கொண்டு சாது பரித்ராணத்துக்காக-சம்பவாமி -என்று சொன்னபடியே அவதரித்து எல்லாரும் காணலாம் படி சகல மனுஜ நயன விஷ தாங்கதன் ஆனவனே –
தோற்றமாய் –
ஆவிர்ப்பூதம் என்கிறபடியே
சுடரே
அல்லாதார் கர்மா அனுகுணமாக பிறக்கையாலே பிறக்கப் பிறக்க மழுங்குவர்கள் சம்சாரிகள் –
அவனுக்கு அனுக்ரஹ கார்யம் ஆகையால் பிறக்க பிறக்க ஒளி மிகா நிற்கும்
ஜென்ம சம்பந்தத்தால் கறை ஏறுகை அன்றிக்கே சாணையில் இட்ட மாணிக்கம் போலே அத்யுஜ்ஜ்வலமாகை
ச உஸ் ஸ்ரேயான் பவதி ஜாயமான -மானுஷீம் தனும் ஆஸ்ரிதம் -பரம்பாவ மஜா நந்த -என்னும்படியான மனுஷ்யத்வே பரத்வம் சொல்கிறது
பாவு தொல் சீர் க் கண்ணா என் பரஞ்சுடரே-என்னக் கடவது இ றே
அன்றிக்கே –ஊற்றமுடையாய்
மஹா ராஜர் -வத்யதாம்-என்றால் -நத்யஜேயம் கதஞ்சன-என்றும் -தாமரையாள் சித குரைத்தாலும் -என்னடியார் அது செய்யார் என்றும்
ஆஸ்ரித விஷயத்தில் பண்ணின ப்ரதிஞ்ஜையை -அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் -என்கிறபடியே
தன்னையும் தன் விபூதியையும் அழிய மாறியும் விடாதே நின்று தலைக் கட்டுகைக்கு ஈடான ஆதாரத்தோடு நிற்கும் ஊற்றத்தைச் சொல்கிறது
பெரியாய்
ஆஸ்ரித விஷயத்தில் எல்லாம் செய்தாலும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று இருக்கையும்
அது தான் தன் பேறாய் இருக்கையும் -செய்யுமன்று தன் பெருமைக்கு ஈடாக இருக்கையும்
விரோதித்த மஹா ராஜர் தாமும் கூட கிமத்ரசித்ரம் -என்று கொண்டாடும்படியான பெருமை விலக்கும் அளவு அன்றிக்கே
ஒழிந்தால் பின்னை கொண்டாடும் அத்தனை இ றே
உலகினில் தோற்றமாய் நின்ற
கீழ்ச் சொன்ன ஆஸ்ரித பக்ஷபாதம் உலகிலே பிரசித்தமாம் படி நிற்கை -துரியோதனன் சிசுபாலன் உதங்கன் இவர்கள்
உட்பட சொல்லும் படி லோகத்தில் பிரசித்தமாம் படி இருக்கை –
களவு கண்டாய் -கட்டுண்டாய் என்பது வ்ருஷள போஜனம் பண்ணினாய் என்று இகழ்வது
துரியோத நாதிகளை பொடி படித்தினாய் -அர்ஜூனாதிகளை வாழ்வித்தாய் என்னும் படி பிரசித்தம் இ றே
சுடரே
ஆஸ்ரித பாரதந்தர்யத்தால் வந்த ஓவ்ஜ்ஜ்வல்யம் இன்னார் தூதன் என நின்றான்
நின்ற சுடரே
ஐவருக்கு அருள் செய்து நின்று பார் மல்கு சேனை அவித்த பரஞ்சுடர் -என்னக் கடவது இ றே
துயில் எழாய்
நீ இப்போது எழுந்திராமையாலே நீ பிறந்து படைத்த சம்பத்தும் நீ ஆர்ஜித்த குணங்களும் மழுங்கக் கிடாய் புகுகிறது
நீ அவை சம்பாதிக்கப் பட்ட அருமை அறிவுதியே-அவை நிறம் பெறும் படி திருப் பள்ளி யுணர்ந்து அருளாய்
ஆகிறது நாம் எழுந்து இருக்கிறோம் -நீங்கள் வந்தபடி சொல்லுங்கோள் என்ன -தாங்கள் வந்த செயல் அறுதி
இருந்தபடிக்கு த்ருஷ்டாந்த பூர்வகமாகச் சொல்லுகிறார்கள் –
மாற்றார் உனக்கு
உனக்கு சத்ருக்கள் ஆனவர்கள் உன் மிடுக்குத் தோற்று போக்கடி இல்லாமையால் வந்து விழுமா போலே
மாற்றார் உனக்கு
சத்ருக்களை த்ருஷ்டாந்தமாகச் சொல்லுகிறது என் என்னில் -சர்வஞ்ஞனாலும் நோக்க ஒண்ணாத படி அநாதி காலம் கை கழிந்த படி சொல்லுகிறது
நாஸ்திக புரா–யானே என் தனதே என்று இருந்தேன் –
மாற்றார் உனக்கு
நாராயணன் ஆகையால் சம்பந்தம் எல்லோரோடும் ஒத்து இருக்க சேஷமாய் இருக்கிற ஆத்மாக்களில் சில சத்ருக்கள் உண்டோ என்னில்
பிராதி கூல்ய பரம்பரைகள் பண்ணி இடக்கை புரி முருக்கி விரோதித்து போருமவர்களை -தான ஹம்தவிஷத-என்னுமது
என்னுடைய ஆஞ்ஞா பரிபாலனம் பண்ணாதார் எனக்கு த்ரோஹிகள் என்பது -பாகவத த்வேஷம் பண்ணுவாரை த்விஷத்துக்கள் என்பது
அவர்களை நிந்தை பண்ணுவாரை பொறேன்-என்பது ஆகா நின்றான் இ றே
மாற்றார்-வலி தொலைந்து
வலி தொலைகையாவது – ந நமேயம் -என்கிற பிரதிஞ்ஜை தவிர்க்கை
உன் வாசல் கண்
மிடுக்கு அழிந்து எளிமைப் பட்டு -கச்ச என்ற இடத்திலும் அங்குப் புகுராதே தன் கோட்டில் ஏறப் போனான் இ றே ராவணன் -அப்படி அன்றிக்கே
உன் வாசல் கண் ஆற்றாது வந்து –
ப்ரஹ்மாஸ்திரம் விட வேண்டும் படி பிராட்டி பக்கலிலே அபராதத்தைப் பண்ணி த்ரீன் லோகான் சாம் பரிக்ரமய-என்னும் படி அலமந்து
சபித்ரா ச பரித்யக்த -என்னும் படி ஓர் இடத்திலே புகல் அற்று -தமேவம் சரணம் கத -என்று பெருமாள் திருவடிகளில்
விழுந்த காகம் போலே உன் வாசலிலே வந்து உன் காலில் கீழே விழுந்தோம் –
அம்புக்குத் தோற்றாரோ பாதி நாங்களும் குணங்களுக்குத் தோற்று வந்தோம் –
ஆற்றாது வந்து
அம்பு பிடரி தள்ளாத தள்ள வருவாரைப் போலே ஸுந்தர்ய குண பலாக்ருதைகளாய் வந்தோம்
அம்பு நற் கொலையாகக் கொள்ளும் -குணம் உயிர்க் கொலையாகக் கொல்லும்-வால் வினையேனை ஈர்கின்ற குணங்கள்
யாம் வந்தோம்
சத்ருக்கள் துர் அபிமானத்தாலே ந நமேயம் என்று இருக்குமா போலே தத் தஸ்ய சத்ருசம் என்று இருக்கும் நாங்கள்
எங்கள் செல்லாமையாலே வந்தோம் அத்தனை -ஸ்வரூப ஞானம் வர ஒட்டாது -ஆற்றாமை இருந்த இடத்தில் இருக்க ஒட்டாது
போற்றி
தோற்றார் -போற்றி -என்னும் அத்தனை இ றே -போற்றுகை யாவது -செவ்வடி செவ்வி திருக்காப்பு -என்று திருப் பல்லாண்டு பாடுகை-
அல்லாதார் பாடுவது தம் தாம் பிரயோஜனத்துக்காக இ றே -நாங்கள் உன் சம்விருத்தியை ஆசாசிக்கும் படி அன்றோ வந்தது –
புகழ்ந்து
சத்ரோ ப்ரக்யாத வீரஸ்ய-என்று மாற்றாரும் தங்களைத் தோற்பித்த வீர்யத்தை சொல்லி புகழ்வார்கள்
இவர்களும் தாங்கள் நலிந்த நலிவை சொல்லிப் புகழும் அத்தனை இ றே -எங்களைத் தோற்பித்த குணங்களை சொல்லிப் புகழ்ந்து
அழித்தாய் யுன் திருவடியால் -நின் தன்னால் நலிவே படுவோம் -என்று வருகை இ றே யுள்ளது
போற்றி –புகழ்ந்து –வந்தோம்
பெரியாழ்வாரைப் போலேயும் வந்தோம் -அல்லாதாரைப் போலேயும் வந்தோம் -நாங்கள் செய்வது எல்லாம் செய்தோம் நீ பெறிலும் பெறு இழக்கிலும் இழ –

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.