ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –
ஸ்ரீ மானானவரும் ஸ்ரீ வேங்கட நாதன் என்ற திரு நாமம் உடையவரும் -கவிகளுக்கும் தார்க்கிரர்களுக்கும் ஸிம்ஹம் போன்றவரும்
வேதாந்த ஆச்சார்யர்களில் ச்ரேஷ்டரான ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் அடியேன் மனசில் நிரந்தரமாக இருந்து அருளட்டும் –
கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –
சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –
———————————————————————
த்வயத்தின் அர்த்தம் ஸங்க்ரஹிக்கப் படுகிறது பத்து ஸ்லோகங்களால்-முதல் மூன்று -பூர்வ கண்டார்த்தமும்
-மேல் ஒன்றால் உத்தர கண்டார்த்தமும் -மேல் ஐந்தால் உத்தர க்ருத்யார்த்தின் பிரகாரமும்
இறுதியில் சாத்விக தியாகமும் அருளிச் செய்யப் படுகின்றன –
——————————————–
அஹம் மத் ரக்ஷண பரோ மத் ரக்ஷண பலம் ததா
ந மம ஸ்ரீ பதே ரேவேத் யாத்மா நம் நிஷி பேத் புத –1-
விஷயம் அறிந்தவன் -தனது ஆத்மா-ஆத்மாவைக் காக்கும் பொறுப்பு –
அவ்வாறே ஆத்மாவைக் காப்பதால் ஏற்படும் பிரயோஜனம் -எல்லாம் தன்னுடையது அல்ல –
திருமகள் கேள்வனுக்கே உரியது என்று ஆத்மாவை எம்பருமான் இடம் சமர்ப்பிப்பான்
அஹம்-அடியேனும் -ஆத்மஸ்வரூபம்
மத் ரக்ஷண பரோ -அடியேனை ரஷிக்கும் பொறுப்பும் -சுமையும் –
மத் ரக்ஷண பலம் ததா-அப்படியே அடியேனை ரக்ஷிப்பதால் உண்டான பலமும்
ந மம -அடியேனுடையவை அன்று -நான் எனக்கு உரியேன் அல்லேன்
ஸ்ரீ பதே ரேவேத் -ஸ்ரீ மன் நாராயணன் உடையவையே -சர்வ சேஷியான ஸ்ரீ மன் நாராயணனுக்கே சேஷம் -அவனே இவைகட்டிக்கு எல்லாம் கடவன்
யாத்மா நம் நிஷி பேத் புத –என்று பண்டிதன் தன்னை சமர்ப்பிக்க கடவன் –
இத்தால் ஸ்வரூப சமர்ப்பணமும் -யானும் நீயே என்னுடைமையும் நீயே –
ஆச்ரயண வேளையில் -மலர் மக்கள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
-போக வேளையிலும் -கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -மிதுனம் உத்தேச்யம் –
புத -ஆச்சார்யர் மூலம் உபதேசிக்கப் பெட்ரா ரகசிய த்ரய ஞானத்தால் -தத்வ ஹித புருஷார்த்த யாதாம்யா ஞானம் பெற்றவன்
சர்வ ரக்ஷகன் -சர்வ சேஷி சர்வேஸ்வரன் —அநந்யார்ஹ அநந்ய அதீன சேஷ பூதர் நாம் –
ஸ்வயம் ம்ருத்பிண்ட பூதஸ்ய பரதந்த்ரஸ்ய தேஹிந-ஸ்வ ரக்ஷணேப்ய சக்தஸ்ய கோஹேது பார ரஷணே-
ஆத்மாராஜ்யம் தநஞ்சைவ களத்திரம் வாஹா நாநிச-ஏதத் பகவதே சர்வ மிதி தத் ப்ரேஷிதம் சதா —
நஹி பாலான சாமர்த்திய ம்ருதே ஸர்வேச்வரம் ஹரிம்
ந மம -மஹா விச்வாஸ பூர்வக கோப்ருத்வ வர்ண கர்ப்பமான சரணம்
-கர்த்ருத்வ தியாக -மமதா தியாக -பல தியாக -பல உபயத்வ தியாக பூர்வகம் -ஆனு கூல்ய சங்கல்பாதி அனுசந்தானங்கள் –
ப்ரவ்ருத்திர் ஆனு கூலேஷூ நிவ்ருத்திச் சான்யதா-பலம் ப்ராப்த ஸூ க்ருதாச் சஸ்யாத் சங்கல்பேச ப்ரபத்தித –
இருக்கும் நாளில் நிரபராதி கைங்கர்யத்தையும் -பிராரப்த சரீர அநந்தரம் மோக்ஷத்தையும் சேர கோலி பிரபத்தி –
அறவே பரம் என்று அடைக்கலம் வைத்தனர் அன்று நம்மைப் பெறவே கருதி பெருந்தக உற்ற பிரான் அடிக் கீழ் உறவே
இவன் உயிர் காக்கின்ற வோர் உயிர் உண்மையை நீ மறவேல் என நம் மறை முடி சூடிய மன்னவரே–ஸாங்க பிரபதன அதிகாரம் -ரகஸ்ய த்ரய சாரம்
எனக்கு உரியன எனது பரம் என் பேறு என்னாதிவை அனைத்தும் இறை இல்லா இறைக்கு அடைத்தோம் -அம்ருத ரஞ்சனி -8-
—————————————————-
ந்யாஸ்யாம்ய கிஞ்சன ஸ்ரீ மன் அநு கூலோ அந்வய வர்ஜித
விஸ்வாஸ ப்ரார்த்தநா பூர்வம் ஆத்மரஷா பரம் த்வயி–2-
திருமகள் நாதனே -என்னிடம் கொல் முதல் ஒன்றும் இல்லாத அகிஞ்சனான நான் –
உனக்கு அனுகூலமாய் -பிரதிகூலங்களை விலக்கி-
உன்னிடம் விச்வாஸம் பூர்வகமாக பிரார்த்தனை மூலம் ஆத்மாவை ரஷிக்கும் பொறுப்பை உன்னுடன் ஒப்படைக்கிறேன்
ந்யாஸ்யாம்ய கிஞ்சன ஸ்ரீ மன் -அகிஞ்சனான அடியேன் திருமால் இடம் சமர்ப்பிக்கின்றேன்
அநு கூலோ அந்வய வர்ஜித-அநு கூல்ய சங்கல்பம் கொண்டும் -அந்நிய -ப்ரதி கூல்ய -வர்ஜனமும் -விட்டு விட்டவனாகவும்
விஸ்வாஸ ப்ரார்த்தநா பூர்வம் -நீ ரஷித்து அருளுவாய் என்ற துணிவும் -ரசிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையும் முன்னிட்டு
ஆத்மரஷா பரம் த்வயி-அடியேனை ரஷித்து அருளும் பொறுப்பை தேவரீர் இடம் சமர்ப்பிக்கின்றேன் –
ஆனு கூல்ய சங்கல்பம் ./ பிராதி கூல்ய வர்ஜனம் / மஹா விசுவாசம் /கோப்த்ருத்வ வர்ணம் / கார்ப்பண்யம் -அங்கங்கள் –
அநாதி காலம் தேவரீருக்கு அநிஷ்டா சரணம் பண்ணுகையாலே சம்சாரித்துப் போந்தேன்-இன்று முதல் அநு கூலனாக
வர்த்திக்கக் கட வேன்-ப்ரதி கூல அசரணம் பண்ணைக் கட வேன் அல்லேன் –
தேவரீரை பெறுகைக்கு அடியேன் இடம் ஒரு கை முதலும் இல்லை -தேவரீரையே உபாயமாக அறுதி இட்டேன் –
தேவரீரே உபாயமாக வேண்டும் –
அநிஷ்ட நிவ்ருத்தி யாதல் இஷ்ட பிராப்தி யாதல் இனி பரம் உண்டோ -ஸ்ரீ நடாதூர் அம்மாள் அருளிச் செய்யும் சுருக்கு-
நின்னருளாம் கதி அன்றி மற்று ஓன்று இல்லை – நெடும் காலம் பிழை செய்த நிலை கழிந்தேன்
உன் அருளுக்கு இனிதான நிலை யுகந்தேன் உன் சரணே சரண் என்னும் துணிவு பூண்டேன்
மன்னிருளாய் நின்ற நிலை எனக்குத் தீர்த்து வானவர் தம் வாழ்ச்சி தர விரித்தேன் உன்னை
இன்னருளால் இனி எனக்கோர் பரம் ஏற்றாமல் என் திருமால் அடைக்கலம் கொள் என்னை நீயே -அம்ருத சுவாதினி -31-
உகக்குமவை உகந்து உகவா வனைத்தும் ஒழிந்து உறவு குண மிகத் துணிவு பெற உணர்ந்து வியன் காவல் என வரித்துச்
சகத்தில் ஒரு புகல் இல்லாத் தவம் அறியேன் மதிள் கச்சி நகர் கருணை நாதனை நாள் அடைக்கலமாய் அடைந்தேன் –அடைக்களப் பத்து -5-
பரிகர விபாக அதிகாரம் -ஸ்ரீ மத் ரகஸ்ய த்ரய சாரம் -இந்த ந்யாஸ அங்கங்கள் ஐந்தையும் அங்கியையும் விவரித்து அருளுகிறார் –
அருள் தரும் அடியார் பால் மெய்யை வைத்துத்
தெருள் தர நின்ற தெய்வ நாயக நின்
அருள் எனும் சீர் ஓர் அரிவை யானது என
இருள் செக வெமக்கோர் இன்னொளி விளக்காய்
மணி வரை யன்ன நின் திரு வுருவில்
அணி அமர் ஆகத்து அலங்கலாய் இலங்கி
நின் படிக்கு எல்லாம் தன் படி ஏற்க
வன்புடன் நின்னோடு வதரித்து அருளி
வேண்டுரை கேட்டு மிண்டவை கேட்பித்து
ஈண்டிய வினைகள் மாண்டிட முயன்று
தன்னடி சேர்ந்த தமர் உனை அணுக
நின்னுடன் சேர்ந்து நிற்கும் நின் திருவே -மும்மணிக் கோவை –1-
அமலன் அவியாத சுடர் அளவில்லா ஆரமுதம்
அமலவுருக் குணங்கள் அணி யாயுதங்கள் அடியவர்கள்
அமல வழியாத நகர் அழிந்து எழும் கா வுடனே எல்லாம்
கமலை யுடன் அரசாளும் கரிகிரி மேல் காவலனே —அர்த்த பஞ்சகம் -1–
சத்யத்வம் -ஞானத்தவம் -அந்நதத்வம்-ஆனந்தத்வம் -அமலத்வம் -த்வயி -என்பதால் அனைத்து –
குண வர்க்கம் -காருண்ய -ஸுலப்ய ஸுசீல்ய வாத்சல்ய க்ருதஞ்ஞாதிகளும் -சர்வஞ்ஞத்வ சர்வசக்தித்வ
சத்ய சங்கல்பத்வ பரி பூர்ணத்வ பரம உதாரத்வாதிகள்
காருண்யம் -எம்மா பாவியேற்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் / மாதவன் என்றதே கொண்டு / திருமால் இரும் சோலை மலை என்றேன்
-எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -சாரம் அசாரம் -த்வய அதிகாரம் –
———————————————————————
ஸ்வாமீன் -ஸ்வ சேஷம் -ஸ்வ வசம் –ஸ்வ பரத்வேன-நிர் பரம்
ஸ்வ தத்த – ஸ்வதியா – ஸ்வார்த்தம் -ஸ்வஸ் மின் -நியஸ்யதி-மாம் ஸ்வயம் — 3-
ஸ்வாமீ-உமது சேஷ பூதனும் -உமக்கு வசப்பட்டவனும் —
உம்மிடமே பொறுப்பு இருப்பதால் என்னிடம் எந்த பொறுப்பும் இல்லாதவனும் –
உம்மால் கொடுக்கப்பட்ட உமது அறிவாலேயே –
உமக்காகவே நீராகவே அடியேனை உம்மிடமே வைத்துக் கொள்வீராக –
ஸ்வாமீன் -சர்வ சேஷியான ஸ்வாமியே -ஸ்ரீ மன் நாராயணனே –
ஸ்வ சேஷம் -தேவரீருடைய சொத்தாகவும் -தேவரீருக்கு சேஷ பூதனாயும்
ஸ்வ வசம் –தேவரீருக்கு அதீனமாய்-அடியேன் பர தந்த்ரன் அன்றோ -தேவரீருக்கே -உட்பட்டவனானவனுமான
மாம் -அடியேனை –
ஸ்வ தத்த – ஸ்வதியா -தேவரீரால் அருள பட்ட தேவரீரைட் குறித்தான புத்தியினால் -சரீர பிரதானம் முதல்
சதாச்சார்ய ஸமாச்ரயணம் பண்ணி அருளி த்வய உச்சாரண பர்யந்தம் அருளிய உபகார பரம்பரைகளால் –
இத்தால் அஹங்கார நிவ்ருத்தி சொல்லிற்று ஆயிற்று -மமதா தியாகம் சொல்லிற்று ஆயிற்று
ஸ்வார்த்தம் -தேவரீருக்காகவே -தேவரீருடைய லாபத்துக்காகவே
நிர் பரம்-அடியேனுக்கு சுமை இல்லாத படி -பொறுப்பு ஒன்றுமே இல்லாத படி
ஸ்வ பரத்வேன–செய்ய வேண்டியவை தேவரீருடைய பரமாகவே -பொறுப்பாகவே
ஸ்வஸ் மின் -தேவரீர் இடத்தில்
நியஸ்யதி- ஸ்வயம் -தேவரீரே வைத்துக் கொண்டு அருளுகிறீர் -கர்த்ருத்வ தியாகம் சொல்லிற்று ஆயிற்று –
எனக்கே ஆட் செய் எக்காலத்தும் என்று என் மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கே யாக என்னைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே –
தமக்கேயாய் எமைக் கொள்வார் வந்தார் தாமே -திருச்சின்ன மாலை -4-ஈற்றடி –
——————————————————-
ஸ்ரீ மன் நபீஷ்ட வரத த்வா மஸ்மி சரணம் கத
ஏதத் தேஹா வசாநே மாம் த்வத் பாதம் ப்ராப்ய ஸ்வயம் –4-
ஸ்ரீ யபதியே -வேண்டிய வரங்களை அளிப்பவனே-உன்னை சரன் அடைந்தவனாய் இருக்கிறேன்
என் உயிர் இந்த உடலைப் பிரிந்தவுடன் நீயாகவே என்னை உன் திருவடிகளில் அடைவிப்பாயாக
ஸ்ரீ மன் நபீஷ்ட வரத-அகலகில்லேன் இறையும்- என்று நித்ய வாசம் செய்யும் பெரிய பிராட்டியார் உடன்
ஆஸ்ரிதர்களுக்கு இஷ்டமான பலங்களை அருளும் ஸ்ரீ வரத
த்வா மஸ்மி சரணம் கத -தேவரீரை அடியேன் சரண் அடைந்தேன்
ஏதத் தேஹா வசாநே மாம் த்வத் பாதம் ப்ராப்ய ஸ்வயம் –சரீரத்தின் இறுதி காலத்தில் தேவரீர்
திருவடிகளை தேவரீரே நிர்ஹேதுகமாக தந்து அருள வேண்டும் –
ஏதத் தேஹ அவசானே-/ திருப்த பிரபத்தி -ஆர்த்த பிரபத்தி /
புகல் உலகில் இல்லாது பொன்னருள் கண்டு உற்றவருக்கு
மகலகிலா வன்பர்க்கும் அன்றே தன்னருள் கொடுத்துப்
பகலதனால் பழம் கங்குல் விடிவிக்கும் பங்கயத்தாள்
அகலகிலேன் என்று உறையும் அத்திகிரி அருள் முகிலே –8-
சரணமாகும் தனதாள் அடைந்தார்கட்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
பிரபத்தி சர்வாதிகாரம் -சமோஹம் சர்வ பூதேஷூ –
தன் நினைவில் விலக்கின்றித் தன்னை நண்ணார் நினைவு அனைத்தும் தான் விளைத்தும் -விலக்கு நாதன்
என் நினைவை இப்பவத்தில் நின்றும் மாற்றி இணை அடிக் கீழ் அடைக்கலம் என்று எம்மை வைத்து முன்
நினைவால் யாம் முயன்ற வினையால் வந்த முனிவயர்ந்து முத்தி தர முன்னே தோன்றி நன்
நினைவானாம் இசையும் காலம் இன்றோ நாளையோ ஓ வென்று நகை செய்கின்றான் -அதிகார சுருக்கு -௪௯-47-
ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால்
அன்றே யடைக்கலம் கொண்டனம் அத்திகிரித் திருமால்
இன்றே இசையின் இணை யடி சேர்ப்பர் இனிப் பிறவோம்
நன்றே வருது எல்லாம் நமக்கு பரம் ஒன்றிலதே —அம்ருத ரஞ்சனி -18–
நமஸ்காரம் அளவில் பரம புருஷார்த்தத்தை-அப்போதே கொடு உலகு காட்டாதே கொழுஞ்சோதி உயரத்து
கூட்டரிய திருவடி கூட்டி அருள்வார் -என்றபடி –
————————————————–
த்வத் சேஷத்வே ஸ்திரதியம் த்வத் ப்ராப்த்யேக பிரயோஜனம்
நிஷித்த காம்ய ரஹிதம் குரு மாம் நித்ய கிங்கரம் –5-
உமக்கே சேஷ பூதன் என்பதிலும் -உம்மை அடைந்து கைங்கர்யம் செய்வதே ஒரே புருஷார்த்தம் என்பதிலும் உறுதியான விசுவாசமும்
நிஷித்த அனுஷ்டானங்கள் செய்யாமலும் உமக்கு யாவதாத்ம பாவி சேஷ பூதனாக இருக்கும் படி அடியேனை கொண்டு அருள வேண்டும்
த்வத் சேஷத்வே ஸ்திரதியம் -அடைக்கலமான அடியேனை -தேவரீருக்கு சேஷ பூதனாய் இருப்பதில் உறுதியான புத்தி யுடையேனாக இருக்கிறேன்
த்வத் ப்ராப்த்யேக பிரயோஜனம் -தேவரீர் திருவடிகளை அடைவதே முக்கிய பலம் என்றும்
நிஷித்த காம்ய ரஹிதம் -சாஸ்திரங்களில் விலக்கப் பட்ட -அல்ப அஸ்திர காம்ய கர்மங்களில் ஆசை அற்றவனாகவும் -சம்பந்தம் அற்றவனாகவும்
குரு மாம் நித்ய கிங்கரம் -எப்போதும் தாச விருத்தி செய்பவனாகவும் -இப்படி நிலை நின்ற சேஷ பூதனாக ஆக்கி அடிமை கொள்ள வேண்டும் –
சேஷத்வ அனுசந்தான பூர்வகமாக நித்ய கிங்கரனாக – இஷ்ட பிராப்தியையும் அநிஷ்ட நிவ்ருத்தியையும் -பிரார்த்திக்கிறார்-
———————————————–
தேவீ பூஷண ஹேத்யாதி ஜூஷ் டஸ்ய பகவம்ஸ்தவ
நித்யம் நிரபரா தேஷூ கைங்கர்யேஷூ நியுங்ஷவ மாம் –6-
பகவானே -திவ்ய பிராட்டிமார்கள் -திவ்ய ஆபரணங்கள் -திவ்ய ஆயுதங்கள் -இவற்றுடன் கூடிய உன்னுடைய
குற்றம் அற்ற -வழு இலா -கைங்கர்யங்களிலே -எப்போதும் என்னை நியமித்து அருள வேண்டும்
தேவீ பூஷண ஹேத்யாதி -திவ்ய மஹிஷிகள் -திவ்ய பாஷாணங்கள் -திவ்ய ஆயுதங்கள் -இவை அனைத்தையும்
ஜூஷ் டஸ்ய பகவம்ஸ்தவ –அடைய பெற்று -ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் நிறைந்த சர்வேஸ்வரன்
சர்வ காரண பூதன்-ரக்ஷணம் சம்ஹாரம் ஸ்ருஷ்ட்டி அனைத்தையும் செய்து அருளி -அனைத்தும் சரீரமாக கொண்டு உள்ளும் புறமும் வியாபித்து –
பிணக்கற அறுவகைச் சமயமும் நெறி யுள்ளி யுரைத்த கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதி யம் பகவன் –
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் -/ உணர் முழு நலம் /சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பம் /
பரத்வ உபயுக்தங்களாக இந்த ஆறு குணங்களும் உண்டே
ஞானம் ஆவது -எப்போதும் ஸ்வத ஏக காலத்தில் பஞ்ச இந்த்ரியங்களால் அறியக் கூடியவற்றை எல்லாம் சாஷாத்கரிக்கை
அஜடம் ஸ்வாத்ம சம்போதி நித்யம் சர்வா வகாஹநம்
சக்தி யாவது சங்கல்ப மாத்திரத்திலே அனைத்து உலகுகடக்கும் உபாதானம் ஆவது
ஜகத் ப்ரக்ருதி பாவோ யஸ் சக்தி ப்ரகீர்த்தித
பலம் -அனைத்தையும் இளைப்பின்று தாங்கும் தன்மை -தாரண சாமர்த்தியம்
ஐஸ்வர்யம் தடை இல்லாமல் ஸ்வ தந்திரமாக எங்கும் செல்லும் சங்கல்பம் உடைமை
கர்த்ருத்வம் நாமயித்தஸ்ய ஸ்வாதந்தர்ய பரிப் ரும்ஹிதம் ஐஸ்வர்யம் நாம தத் ப்ரோக்தம் குண தத்வார்த்த சிந்தகை
வீர்யம் -ஸ்ருஷ்டித்து உள்ளும் புறமும் வியாபித்து விகாரம் இன்றிக்கே இருக்கை
தஸ்ய உபாதான பாவேபி விகார விரஹோ ஹிய வீர்யம் நாம குணஸ் சோயம் அச்யுதத்வாபரா ஹ்வய -அவிகாராய -என்றவாறு
தேஜஸ் -ஆஸ்ரிதர் தாபங்களை தீர்த்தும் ஆஸ்ரித விரோதிகளை நிரசிக்கும் தேஜஸ் -சகாயத்தை அபேக்ஷியாது இருக்கை –
செழும் குணங்கள் இரு மூன்று உடையார் -திருச்சின்ன மாலை -5-
நித்யம் நிரபரா தேஷூ கைங்கர்யேஷூ நியுங்ஷவ மாம் -ஒழி வில் காலம் எல்லாம் வழு விலா அடிமை அடியேனுக்கு கொடுத்து அருள வேணும்
———————————————–
மாம் மதீயம் ச நிகிலம் சேதன அசேதனாத்மகம்
ஸ்வ கைங்கர்ய உபகரணம் வரத ஸ்வீகுரு ஸ்வயம் –7-
ஸ்ரீ வரதனே -அடியேனையும் -அடியேனுடைய சேதன அசேதன உடைமைகள் அனைத்தையும்
தேவரீருடைய கைங்கர்ய உபகரணமாக தேவரீராகவே ஏற்றுக் கொண்டு அருள வேண்டும் –
—————————————————-
த்வதேக ரஷ்யஸ்ய மம த்வமேவ கருணாகர
ந ப்ரவர்த்தய பாபாநி ப்ரவ்ருத்தாநி நிவர்த்தய –8–
ஸ்ரீ கருணாகரனே-தேவரீர் ஒருவராலேயே ரஷ்ய வர்க்கங்களின் ஒன்றான அடியேன் இடம்
நீயாகவே பிரதிபந்தகங்களை வராமல் தடுத்து அருளி
பிராமாதிகமாக வந்த பிரதிபந்தகங்களையும் விலக்கி அருளுவாயாக
————————————————–
அக்ருத்யா நாம் ச கரணம் க்ருத்யா நாம் வர்ஜனம் ச மே
க்ஷமஸ்வ நிகிலம் தேவ ப்ரணதார்த்தி ஹர ப்ரபோ –9-
பிரபுவே ஆஸ்ரித விரோதி நிரசன சீலனே அடியேன் செய்த-அக்ருத்ய கரணங்களையும் –
அக்ருத்ய செயல்களையும்-க்ருத்ய அகரணங்களையும் – செய்யாத க்ருத்ய செயல்களையும் –
அனைத்தையும் பொறுத்து அருளுவாய்
அக்ருத்யா நாம் ச கரணம் -செய்யத் தகாதவற்றை செய்தும் –
க்ருத்யா நாம் வர்ஜனம் ச மே -செய்ய வேண்டியவைகளை செய்யாமல் விட்டும்
க்ஷமஸ்வ நிகிலம் தேவ ப்ரணதார்த்தி ஹர ப்ரபோ -லீலையாக ஜகாத் ஸ்ருஷ்டியாதி செய்பவனே அடியேனுடைய
இவை அனைத்தையும் பொறுத்து அருள வேணும்
லோகவத்து லீலா கைவல்யம் -அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே-
துன்பமும் இன்பமுமாகிய செய்வினையாய் உலகங்களுமாய் மன் பல் உயிர்களுமாகி பல பல மாய மயக்குகளால் இன்புறு
இவ் விளையாட்டுடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலேனே -திருவாய் -3-10-7-
உலகம் யாவையும் தாமுள வாக்காலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே -கம்பர்
மநோ வாக் காயைர் அநாதி கால ப்ரவ்ருத்த அநந்த அக்ருத்ய கரண க்ருத்ய அகரண பகவத் அபசார பாகவத அபசார அஸஹ்யா அபசார ரூப
நானாவித அநந்த அபசாரான் ஆராப்த கார்யான் அநாரப்த கார்யான் க்ருதான் கரிஷ்யமாணாஞ்ச சர்வ அநசேஷத க்ஷமஸ்வ —
———————————————
ஸ்ரீ மான் நியத பஞ்சாங்கம் மத் ரக்ஷண பரார்ப்பணம்
அசீ கரத் ஸ்வயம் ஸ்வஸ் மின் அதோ அஹமிஹ நிர்பர –10-
ஸ்ரீ யபதியே -அவசியம் தேவையான -ஐந்து அங்கங்களை யுடைய என்னைக் காப்பாற்றும் பொறுப்பை
ஒப்படைத்தலை -உம்முடன் நீராகவே செய்து அருளிக் கொண்டீர் –
ஆகையால் அடியேன் இவ்விஷயத்தில் பொறுப்பு ஏதும் இல்லாமல் இருக்கிறேன் –
ஸ்ரீ மான் நியத பஞ்சாங்கம்-திருமாலே -நீங்காத ஐந்து அங்கங்களை யுடையதான
மத் ரக்ஷண பரார்ப்பணம் -அடியேனுடைய ரக்ஷண பர சமர்ப்பணத்தை
அசீ கரத் ஸ்வயம் ஸ்வஸ் மின் -உம்மிடத்தில் நீரே செய்து அருளினீர்
அதோ அஹமிஹ நிர்பர –ஆகையால் அடியேனுடைய ரக்ஷண விஷயத்தில் பொறுப்பு இல்லாதவனாக இருக்கிறேன்
நிஷே பா பர பர்யாயோ ந்யாஸ பஞ்சாங்க சம்யுத ஸந்த்யாசஸ்த்யாக இது யுக்தச் சரணாகத திரித்யபி -ஸ்ரீ லஷ்மி தந்திரம் -17-74-
பயம் கேட்டு மார்பிலே கை வைத்து உறங்க பிராப்தி என்றபடி
—————————————–
இதி ஸ்ரீ ந்யாஸ சதகம் சம்பூர்ணம் –
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –
கவிகளுக்கும் தார்க்கிகர்களுக்கும் ஸிம்ஹம் போன்றவரும் -மங்களமான கல்யாண குணங்கள் நிறைந்தவரும்
ஸ்ரீ மான் ஆனவரும் ஸ்ரீ வேங்கடேசருமான ஆச்சார்யரை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிப்போம்
—————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply