ஸ்ரீ அஷ்ட புஜகாஷ்டகம் –ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

——————————————————

ஸ்ரீ பேயாழ்வார் -தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான் -அட்ட புயகரத்தான் அந்நான்று
குட்டத்துக் கோள் முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான் தாள் முதலே நங்க ட்க்கு சார்வு -என்று
ஸ்ரீ கஜேந்திர ரக்ஷகனாக அருளிச் செய்த படி -இவரும்-ஸ்ரீ கஜேந்திர ரஷாத் வரிதம்-என்று உபக்ரமித்து அருளுகிறார்
அஷ்ட புயகரம் -அஷ்ட புயவகரம் -க்ருஹம் -கரம் -அஷ்ட புஜ பெருமாள் எழுந்து அருளி இருக்கும் திவ்ய தேசம் -என்றுமாம் –
அஷ்ட புஜாஸ் பதேச -அஷ்ட புஜாஸ்பதம் -திவ்ய தேச திருநாமம் என்றும் அதற்கு ஈசன் என்றும் இரண்டாம் ஸ்லோகத்தில் அருளிச் செய்கிறார் –

————————–

கஜேந்திர ரஷாத் வரிதம் பவந்தம்
க்ராஹை ரிவாஹம் விஷயைர் விக்ருஷ்ட
அபார விஞ்ஞாத தயா நுபாவம்
ஆப்தம் சதாம் அஷ்ட புஜம் ப்ரபத்யே –1-

எம்பெருமானே முதலைகள் போன்றுள்ள விஷ்யங்களினாலே இழுக்கப் பட்ட நான் -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானைக் காத்து அருளுவதில் பதற்றம் யுடையவனாய்
அளவற்ற ஞானத்தையும் தயையும் சக்தியும் யுடையவனாய் -நல்லவர்களுக்கு விஸ்வாச நீயானாய் -அஷ்ட புஜனான உன்னை தஞ்சமாகப் போற்றுகிறேன் –
சம்புத்தியை வருவித்திக் கொண்டு -பவந்தம் -என்ற சொல் -ஐந்து முதலைகளால் அடர்ப்புண்டு உள்ளேனே-
அடியேனுடைய ஆர்த்தியை அறிவீரே–அறிந்து வைத்தும் இரங்கி அருள நைர்க்ருண்யமும் உண்டே-ஞானமும் தயையும் இருந்து மேலே அகற்ற வல்ல சக்தியும் உண்டே –
சர்வஞ்ஞ அபி ஹி விஸ்வேசஸ் சதா காருணிகோபி
சன் சம்சார தந்த்ர வாஹித்வாத் ரஷ்ய அபேக்ஷம் பிரதீஷதே
ஆகையால் அடியேனுடைய அபேக்ஷை இல்லை என்று ஒரு கண் அழிவு சொல்ல ஒண்ணாத படி ஆர்த்தனாய் இதோ சரணம் புகுகிறேன் என்கிறார் –

—————————————-

த்வதேக சேஷோஹ மநாத்ம தந்த்ர
த்வத் பாத லிப்சாம் திசதா த்வயைவ
அசத் ஸமோப்யஷ்ட புஜாஸ் பதேச
சத்தா மிதாநீம் பிரதிலம்பி தோஸ்மி –2-

அஷ்ட புயகரத்து அம்மானே -தேவரீருக்கே சேஷ பூதனாய் -ஸ்வ தந்த்ரன் அற்றவனாய் இருக்கிற அடியேன் இது வரையில்
அசத் கல்பனாய் இருந்தேனே யாகிலும் தேவரீருடைய திருவடிகளில் ருசியைத் தந்து அருளா நின்ற தேவரீராலே
இப்போது சத்தை பெறுவிக்கப் பட்டவனாய் இருக்கிறேன் –
மருவித் தொழும் மனமே தந்தாய் -என்றும் -இசைவித்து என்னை யுன் தாளிணைக் கீழ்
இருத்தும் அம்மானே -என்றும் -என் உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே -என்றும்
தெரிந்து உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் வாளா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் -கண்டவா திரிந்து அசத் கல்பனாக திரிந்தேன்
உன் உடைமையை வீட்டுக் கொடுக்க்காமல் ஸ்வாமியான நீயே மடி மாங்காய் இட்டு பிடிக்குமா போலே
தேவரீர் திருவடிகளில் ருசியைப் பிறப்பித்து இப்போது சத்தை பெறுவித்து அருளினை படியால் உய்ந்து போனேன் என்றவாறு –
அஷ்ட புஜ ஆஸ்பதத்துக்கு ஈசனே -என்று விளிக்கிறார்-அஷ்ட புஜ என்று விளிக்காமல்
திருமங்கை ஆழ்வார் – திரிபுரம் மூன்று எரித்தானும் –பெரிய திருமொழி -2–8-முன்பு திரு விட வெந்தை பதிகத்தில்
திருத் தாயார் திரு வாக்கால் அருளிச் செய்து துடிக்க விட்டதை திரு உள்ளம் கொண்டு
பிற்பட்டோமே என்று திரு உள்ளம் நொந்து -அடியார்களுக்கு உதவின குணங்களையும் வடிவு அழகையும் பிரகாசிக்கப் படுத்தி
செம் பொன் இலங்கு வலங்கை வாளி திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள் உம்பர் இரு சுடர் கேடக ஓண் மலர் பற்றி
அஷ்ட புஜனாய் பரம போக்யனாய் சேவை சாதித்து அருளினான்
பரகால நாயகி நிலையிலே ஆழ்வாரும் சேவித்து அனுபவிக்கிறார் -ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை இன்னார் என்று அறியேன்
ஸ்வ புத்தியால் அறிய முடியாது -சோதி வெள்ளத்தில் ஆழ்ந்ந்து அன்றோ இருந்தார் -பர்த்தாவாக இருக்கக் கூடும் என்ற
நினைவால் வெட்க்கியும் இருக்க -நீர் யார் என்று கேட்கவும் மாட்டாமல் –
வேறு ஒருவரை கேட்க்கும் பாவனையாக இவர் யார் கொல் –நான் தான் அட்ட புயகரத்தேன் -என்கிறார் -அஷ்ட புஜன் என்று சொல்லாமல் –
அஷ்ட புஜ ஷேத்ரத்துக்கு அதிபதி –சாதாரண பிரஜை என்றுமாம் -இதனாலே அஷ்ட புயகரத்தான் -என்கிறார் –

——————————————-

ஸ்வரூப ரூபாஸ்த்ர விபூஷணாத் யை
பரத்வ சிந்தாம் த்வயி துர் நிவாராம்
போகே ம்ருதூபக்ரம தாம பீப் சன்
சீலாதி பிர் வாரய சீவ பும்ஸாம் –3–

அஷ்ட புஜ பெருமானே -ஸ்வரூபம் -திவ்ய மங்கள விக்ரஹம் -திவ்ய ஆயுதங்கள் -திவ்ய பூஷணங்கள் -இவை முதலான வற்றால்
தேவரீர் இடத்தில் மானிடர்களுக்கு அவசியம் உண்டாக்க கூடிய பரத்வ சிந்தையை சாத்மிக்க சாத்மிக்க
அனுபவிப்பிக்க வேண்டும் விருப்பம் யுடையீர் போலே
ஸுசீல்ய வாத்சல்யாதி குணங்களை காட்டித் தந்து -தடுத்து -அருளினீர் –
பரத்வ ஸுபலங்கள் இரண்டும் பொலிய அஷ்ட புஜன் நின்று சேவை சாதித்து அருளினாலும் பரத்வத்தில் காட்டில் ஸுலபயமே விஞ்சி
இருப்பதற்கு ஒரு ஹேது விசேஷத்தை உல்லேகிக்கிறார்-
திவ்ய மங்கள விக்ரஹமோ -ரூபமே வாஸ்ய ஏதன் மஹிமானம் வியாஸஷ்டே -என்ற கணக்கில் பரத்வத்தை கோள் சொல்லி தருகின்றது –
செம் பொன் இலங்கு வலங்கை வாளி திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள் உம்பர் இரு சுடர் ஆழியோடு கேடக ஓண் மலர்
-என்னப் பட்ட அஷ்ட திவ்ய ஆயுதங்களும்
கிரீட மகுட சூடாவதாம்ச மகர குண்டல க்ரைவேயக ஹார கேயூர கடக ஸ்ரீ வத்ச கௌஸ்துப முக்தா தாமா உதர பந்தன பீதாம்பர காஞ்சீ குண
நூபுராத்யாதி அபரிமித திவ்ய பூஷணங்களும் –
வக்ஷஸ் ஸ்தல்யாம் துளசி கமலா கௌஸ்துபைர் வைஜயந்தீ சர்வே சத்வம் கதயதிதராம் ரங்க தாம்ந -பட்டர்
இதனால் இவை எல்லாம் பரத்வ பிசுனங்களாய் இரா நின்றன -இவன் பராத்பரன் அல்லனோ
-இவனையே நாம் அணுகுவது என்று கூச வேண்டி இருக்குமே
கூசினவர்கள் -வள வேழ் உலகு தலை எடுத்து பிற் காலிப்பர் -அங்கனே ஆகாயமைக்கு அவன் தனது ஸுசீல்ய வாத்சல்யயாதி குணங்களைக் காட்டி
ஈடு படுத்திக்க கொள்வான் -அவற்றையே முற்றிலும் ஏக காலத்திலேயே காட்டி விட்டால் பரத்வத்தை பூர்ணமாக அனுபவிக்க முடியாதே
-பரத்வத்தை மட்டும் காட்டிப் போந்தால் அதை அனுபவிக்க அதிகாரிகள் இல்லை
-சீலாதி எளிமை குணங்கள் காட்டில் எரிந்த நிலா போலே அனுபவிக்காமேலே ஒழியும்
இவன் பரம சதுரன் ஆகையால் சாத்மிக்க சாத்மிக்க அனுபவிப்பிக்க வேண்டி-எளிமை குணங்களை க்ரமேண காட்டி அருளும் படியை அருளிச் செய்கிறார்
போகே ம்ருதூபக்ரமதாம் அபீப்சன் -பரத்வத்தை பிரகாசிக்க ஒட்டாமல் சீலாதிகளாலே மறைப்பதற்கு காரணம் சொல்லுகிறது
முந்துற முன்னம் பரத்வத்தை அனுபவிக்கப் புக்கால் பெரு வெள்ளத்தில் அமிழ்ந்து போம்படியாம் அத்தனை –

—————————————————

சக்திம் சரண் யாந்தர சப்த பாஜாம்
சாரஞ்ச சந்தோல்ய பலாந்தராணாம்
த்வத் தாஸ்ய ஹேதோஸ் த்வயி நிர்விசங்கம்
நியஸ்தாத் மநாம் நாத பிபர்ஷி பாரம் –4–

எம்பெருமானே ரக்ஷகர்கள் என்று பெயர் சுமந்து இருக்கும் தேவதாந்தரங்களின் சக்தியையும்
இதர ஷூத்ர பலன்களின் சாரத்தையும் நிறுத்துப் பார்த்து
சார தமமான தேவரீருடைய கைங்கர்யத்தை பெறுவதற்காக தேவரீர் இடத்திலே நிஸ்ஸங்கமாக
சரணாகதி செய்தவர்களின் பாரத்தை தேவரீர் ஏற்றுக் கொள்ளுகிறது
ந ஸம்பதாம் சமா ஹாரே விபதாம் விநிவர்த்தனே சமர்த்தோ த்ருச்யதே கச்சித் தம் விநா புருஷோத்தமம் -என்றும்
நஹி பாலன சாமர்த்தியம் ருதே ஸர்வேச்வரம் ஹரீம்
தேவரீர் திருவடிகளில் அத்தாணி சேவகமே ஸ்வரூப அனுரூபம் என்று தெளிந்து தேவரீர் திருவடிகளையே தஞ்சமாகப் பற்றினவர்களுக்கு
தேவரீர் சகல வித ரக்ஷண துரந்தரராக ஆகின்றது என்றார் ஆயிற்று –

————————————————-

அபீதி ஹேதோர நு வர்த்த நீயம்
நாத த்வத் அந்நியம் ந விபாவயாமி
பயம் குதஸ் ஸ்யாத் த்வயி சாநுகம்பே
ரஷா குதஸ் ஸ்யாத் த்வயி ஜாத ரோஷே–5-

அஷ்ட புஜ பெருமாளே -தேவரீரைக் காட்டிலும் வேறு ஒரு வியக்தியை-அபய சித்தியின் பொருட்டு ஆஸ்ரயிக்க தக்கதாக நான் அறிகின்றிலேன் –
தேவரீர் தயாளுவாக இருக்கும் போது-ஆஸ்ரிதர்களுக்கு -எங்கு இருந்து பயம் உண்டாகும்
-தேவரீர் நிக்ரஹிக்கத் தொடங்கினால்-எங்கிருந்து ரக்ஷை பெற முடியும் –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -என்றும்
அபீதி ஸ்தவத்திலும் -தொடக்கத்தில் –அபீதிரிஹ யஜ்ஜூஷாம் யதவதீரிதா நாம் பயம் பயபாய விதாயிநோ ஜகதி யந்நிதேச ஸ்திநா -என்றும்
அருளிச் செய்தது போலே -சம்சார பயம் முதலானவற்றை போக்க வேணும் என்றால் தேவரீர் போக்கலாம் ஒழிய அல்லாதார் போக்க அவகாசம் ஏது –
அவர்கள் தங்களுக்கு ஏற்படும் பயத்தையே போக்கிக் கொள்ள மாட்டாமல் தேவரீரையே தஞ்சமாக பற்ற -எங்கள் பயத்தை போக்க என்ற பிரசக்தியும் உண்டோ
நின் அருளே புரிந்து இருந்தேன் -என்று இருக்கும் எங்களுக்கு பயம் தானும் உண்டாக மாட்டாது
தேவரீர் யார் பக்கல் சீறி அருளுகிறதோ அவர்கள் வேறு யார் இடத்திலும் ரக்ஷை பெற முடியாதே
-ப்ரஹ்மா ஸ்வயம்பூச் சதுரா நநோ வா —த்ராதும் ந ஸக்தா யுத்தி ராம வத்யம் –

————————————————————

த்வத் ஏக தந்திரம் கமலா ஸஹாய
ஸ்வே நைவ மாம் ரஷிதுமர்ஹஸி த்வம்
த்வயி ப்ரவ்ருத்தே மம கிம் பிரயாசை
த்வய அப்ரவ்ருத்தே மம கிம் பிரயாசை -6–

ஸ்ரீ லஷ்மீ பதியான அஷ்ட புஜ பெருமாளே தேவரீருக்கே அடைக்கலமான அடியேனை -தேவரீர் ஸ்வயமாகவே ரஷிக்கக் கடவீர் –
அடியேனைக் காத்து அருள தேவரீர் பிரவர்த்திக்கும் அளவில் என்னுடைய பிரயாசங்கள் அகிஞ்சித் கரங்கள்
-தேவரீர் பிரவர்த்தியாத அளவிலும் அப்படியே –
கீழ் ஸ்லோகத்தில் அநந்ய உபேயத்வம் அனுசந்தித்து இதில் அநந்ய உபாயத்வம் அனுசந்திக்கப் படுகிறது –
ஸ்வ ப்ராப்தவ் ஸ்வயமேவ சாதனதயா ஜோ குஹ்யமாண ஸ்ருத்வ -என்றும்
நிதானம் தத்ராபி ஸ்வயம் அகில நிர்மாண நிபுண -என்றும் சொல்லும் சாஸ்திரார்த்தை நிஷ்கர்ஷித்து அருளி
தம் பக்கலில் கைம்முதல் இல்லாமையையும் -எவ்விதமான கைம்முதலையும் ப்ரதீஷியாமல் ரஷித்து
அருளுகைக்கு ஈடாக அத்தலையில் பூர்த்தியையும் அருளிச் செய்கிறார் யாயிற்று
இந்த அர்த்தத்தை ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்தில் -கிம் வா கரீச -க்ருபணே மயி ரக்ஷணீயே தர்மாதி பாஹ்ய சஹகாரி கவேஷணேந
-நந்வஸ்தி விஸ்வ பரிபாலன ஜாகரூகஸ் சங்கல்ப ஏவ பவதோ நிபுணஸ் ஸஹாய -என்கிற ஸ்லோகத்தில் அருளிச் செய்தார் –
கமலா ஸஹாய -தேவரீர் ரஷிக்க ஸஹாய அபேக்ஷை பிரசக்தியே இல்லை -ஒரு கால் உண்டாகில்
பிராட்டியையே ஸஹாயமாகக் கொள்ள அடுக்கும் என்று ஸூசிப்பிக்கிறார்
நீரிலே நெருப்பு கிளருமா போலே குளிர்ந்த திரு உள்ளத்திலே அபராதத்தாலே சீற்றம் பிறந்தால் பொறுப்பிக்குமவள் பிராட்டி ஆகையால்
-அந்த புருஷகார பலத்தால் ரக்ஷணம் தப்பாது என்று இருக்கிறார் –
ஸ்வே நைவ -என்றது என்னுடைய பிரவ்ருத்தி லேசத்தையும் ப்ரதீஷியாதே ஸ்வயமாகவே என்றபடி –
அகதிம் சரணாகதம் ஹரே -க்ருபயா கேவல மாத்மஸாத்குரு-என்று ஸ்ரீ ஆளவந்தார் அனுசந்தித்து அருளியது படி
நாம் கிருபாவாளாகிலும் பேறு உம்மத்தான பின்பு உம்முடைய ப்ரவ்ருத்தியும் வேண்டி இருந்தது காணும் என்ற அவன் திரு உள்ளமாக
தம்முடைய பிரவ்ருத்தி ஸர்வதாத்மந அகிஞ்சித்க்கரம் என்று உத்தரார்த்தத்தில் அருளிச் செய்கிறார் –
வனத்திடை ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லால் மாறி யார் பெய்கிற்பார் மற்று–ஸ்ரீ பூதத்தாழ்வார்
எம்பெருமான் கை கொடுத்து அருள ப்ரவர்த்திக்கும் அளவில் அவனுடைய பிரயாசங்களுக்கு பலன் ஒன்றும் இல்லை
எம்பெருமான் பிரவர்த்தியாத அளவில் இவன் எத்தனை பிரயாசங்கள் பட்டாலும் பலன் ஒன்றும் இல்லையாம்
த்வயி ரக்ஷதி ரஷகை கிம் அந்யை -என்று காமாஸிகா ஸ்துதி யிலும் அருளிச் செய்தார்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் –

———————————————

சமாதி பங்கேஷ் வபிஸம்பதத் ஸூ
சரண்ய பூதே த்வயி புத்தகஷ்யே
அபத்ரபே ஸோடு மகிஞ்ச நோஹம்
தூராதி ரோஹம் பத நஞ்ச நாத –7-

அஷ்ட புஜ பெருமாளே சர்வ சரண்யரான தேவரீர் -காக்கும் இயல்பினராய் இருக்கையாலே -உபாய அனுஷ்டான விரோதிகளான
பாபங்கள் மிடை தரும் அளவில் -நமக்குத் தகாத பக்தி யோகாதிகளில் ஏறுவதும் சறுக்கி விழுவதும் ஆகிற கஷ்டங்களை சகிக்க வெட்கப் படுகிறேன்
ஸ்வ ப்ரவ்ருத்திகள் சர்வாத்மநா ச அபாயங்கள் ஆகையால் அவற்றுக்கு இடையூறுகளில் விளைந்தே தீரும்
பத நாந்தாஸ் சமுச்ச்ரயா -என்ற கணக்கிலே ஆரூடபதிதனாக ப்ராப்தமாகக் கூடும்
சித்த உபாய பூதரான தேவரை வரித்து -நிர்ப்பரோ நிர்ப்பயோஸ்மி-என்று இருக்கக் கடவனான அடியேன்
ஒரு கால் பக்தி யோகத்தில் ஆரோஹண நிலையையும் அடுத்தபடி பாப பிராஸுர்யத்தாலே கீழ் விழும் நிலைமையையும் ஸஹிக்க கில்லேன்
உன் கை பார்த்து இருக்குமதுக்கு மேற்பட்ட க்ஷேமம் இல்லை என்று கொண்டேன் என்றார் யாயிற்று –

———————————————————–

ப்ராப்தா பிலாஷம் த்வத் அனுக்ரஹாந் மாம்
பத்மா நி ஷேவ்யே தவ பாத பத்மே
ஆ தேஹ பாதாதபராத தூரம்
ஆத்மாந்த கைங்கர்ய ரசம் விதேயா–8-

வாரீர் அஷ்ட புஜ பெருமாளே -பெரிய பிராட்டியார் விரும்பத் தக்க தேவரீருடைய பாதார விந்தத்தில்
தேவரீருடைய அனுக்ரஹம் அடியாகவே ருசி கொண்ட அடியேனை இவ்வுடல் விழும் அளவும்
பகவத் அபசார பாகவத அபசாராதி வைதேசிகனாயும் -யாவதாத்மபாவி கைங்கர்ய சக்தனாயும் செய்து அருளாக கடவீர் –
ஸ்வேவ தேவ வஷட் க்ருதம் த்வாம் ஸ்ரியோர் ஹகாமயே -என்று ஸ்ரீ பட்டர் ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்த்வத்தில்
நைச்சியம் அனுசந்தித்த கணக்கில் பூர்வார்த்தத்தில் அனுசந்திக்கிறார் –
பத்மா நி ஷேவ்யே தவ பாத பத்மே-தேவர்களுக்கு சேஷமான புரோடாசத்தை நாய் விரும்புமா போலே அன்றோ
பெரிய பிராட்டியார் விரும்பக் கடைவதான தேவரீருடைய பாதார விந்தத்தை அடியேன் விரும்புவது
ஆனால் நானாக விரும்பிற்றிலேன் -தேவரீராக விரும்பச் செய்த்தது அத்தனை –
இம்மஹா உபகாரம் செய்து அருளினது போலவே யாவச் சரிர பாதம் அபசார பிரசக்திகள் ஏற்படாத படியும்
நித்ய கைங்கர்ய குதூகலம் குன்றாத படிக்கும் அனுக்ரஹித்து அருள வேண்டும் என்கிறார் யாயிற்று –

—————————————————

ப்ரபந்ந ஜன பாதேயம் ப்ரபித் ஸூநாம் ரசாய நம்
ஸ்ரேயஸே ஜகதா மேதத் ஸ்ரீ மத் அஷ்டபுஜாஷ்டகம் –9-

இந்த ஸ்ரீ அஷ்ட புஜாஷ்டகமான பிரபந்தம் பிரபன்னர்களுக்கு வழித் துணையாகவும்
பிரபன்னர்களாக விரும்புவர்களுக்கு ரசாயனமாகவும் -ஜகத்துக்கு ஸ்ரேயஸ் கரமாகவும் இருக்கும் –
கச்சதாம் தூரமத்வாநம் த்ருஷ்ணா மூர்ச்சித சேதஸாம் பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தன அம்ருதம் –
ப்ரபித் ஸூநாம்–பிரபத்தி பண்ண விரும்புவர்களுக்கு என்றபடி -பிரபத்தும் இச்சவ-ப்ரபித் சவ-தேஷாம் -ப்ரபித் ஸூநாம் –
ஆஸ்ரய ஸமாச்ரயணம் பண்ணினவர்களுக்கும் -அது பண்ண ருசி யுடையாருக்கும் மற்றும் உள்ளார்க்கும்
இதமான அர்த்த விசேஷங்கள் இந்த ஸ்துதியில் நிரம்பி உள்ளன -என்றவாறு –

————————————————

சரணாகத சம்த்ராண த்வ ராத்விகுண பாஹு நா
ஹரிணா வேங்கடே சீயா ஸ்துதி ஸ்வீக்ரியதாம் இயம்–10

சரணாகதர்களைக் காத்து அருளுவதில் பதற்றத்தினால் இரட்டித்த திருக் கைகைளை யுடைய திரு அஷ்ட புயகரத்தனால்
ஸ்ரீ மத் வேங்கட நாதருடையதான இந்த ஸ் துதி ஸ்வீகரிக்கப் படட்டும்
இந்த ஸ்தோத்ர ஸ் துதி கிரந்தத்தை ஸ்ரீ மத் அஷ்ட புஜ நாதனுடைய திருவடிகளில் சமர்ப்பிக்கிறார் –
சதுர்ணாம் புருஷார்த்தா நாம் தாத்தா தேவச் சதுர் புஜ -சதுர் புஜனாக பிரசித்தம் –
அஷ்ட புஜங்கள் உடன் சேவை சாதிக்கும் ஹேது உத்பரேஷை பண்ணுகிறார் பூர்வார்த்தத்தில்
த்வரா த்வி குண –த்வர ஏவ த்வி குண -என்று கொள்ளக் கடவது –

———————————————————

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: