ஸ்ரீ பகவத் த்யான சோபனம் –ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

———————————————————————

ஸ்ரீ ரெங்கநாதன் திவ்ய மங்கள விக்ரஹத்தை அமலனாதி பிரான் போலே
திருவடி தொடங்கி திருமுடி வரை அனுபவம் -12-ஸ்லோகங்கள் கொண்ட பிரபந்தம் –

அந்தர் ஜ்யோதி கிமபி யமிநா மஞ்சனம் யோக த்ருஷ்டே
சிந்தா ரத்னம் ஸூலபமிஹ ந சித்தி மோக்ஷ அனுரூபம்
தீநாநாத வியஸன சமனம் தைவதம் தைவதா நாம்
திவ்யம் சஷூ ஸ்ருதி பரிஷிதாம் த்ருஸ்யதே ரங்க மத்யே –1-

யோகிகளின் ஹிருதயத்தில் பிரகாசிப்பவனும் -ஞானக் கண்ணுக்கு அஞ்சனம் போன்றவனும் –
இவ்வுலகில் நமக்கு எளிதான இம்மை போகங்கள் -மோக்ஷம் -இவை அனைத்தையும் தர வல்ல சிந்தா மணி போன்றவனும் –
பலம் மற்றவர்களுக்கும் அனாதைகளுக்கும் கஷ்டத்தை ஒழிப்பவனும்-வேத சாஸ்த்ரங்களுக்கு கண் போன்றவனும் –
எல்லாத் தெய்வங்களுக்கும் மேலான உயர்ந்த தெய்வமுமான ஒரு பர வஸ்து திருவரங்கத்தின் நடுவில் காணப்படுகிறதே

அந்தர் ஜ்யோதி கிமபி யமிநாம் -ஹ்ருதயத்தில் பிரகாசிக்கின்றானே -யோக அப்பியாச அனுபவம் -யாமினாம் -யோகிகள் –
அஞ்சனம் யோக த்ருஷ்டே -வண்டினம் –அண்டர் கோன்-அமரும் சோலை -சகல மனுஷ நயன சேவைக்காக
–பெரும் சோதி அனந்தன் என்னும் –கரு மணி -கோமளம் –
வெள்ளை அணையை மேவி -அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும் -வாயாரா என்று கொலோ வாழ்த்தும் நாளே –
-மனத்தூணை பற்றி நின்று –அரவணை துயிலுமா கண்டு உடல் எனக்கு உருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே —
அத்வேஷா சர்வ பூதானாம் முதல் படிக்கட்டு -சர்வ பூத ஸுஹார்த்தம் உடன் தியானம் -அஷ்டாங்க யோகத்தால்
-மநோ காய வாக் தண்டம் முக்கோல் -அத்த பத்தர் வாழும் அம் தண் அரங்கம் -மூன்று தண்டர் ஒன்றினர் –
ஓளி உளார் தாமே –தந்தையும் தாயும் ஆவார் -நாமம் கற்ற ஆவலிப்பு -மூ உலகுண்ட முதல்வா -ரங்க பிரபு –
மண் தின்ற முகம் போலேயோ என் முகம் –
கிமபி -இவ்வளவு என்று சொல்ல முடியாத ஜோதிஸ்–அக்னி ஸூர்ய சந்திரர் போலே இல்லையே -திவ்யமான ஜோதிஸ் –
-ஆத்ம ஜோதிஸ் விட விலக்ஷணம் -அப்ராக்ருதமான ஜோதிஸ்
கிடந்தவாறும் –முழுவதுமாக அனுபவிக்கிறார் அரங்கனை -அடியரோர்க்கு அகலலாமே —
வாழும் சோம்பரை உகத்தி போலும் -என்று கொலோ புரளும் நாளே –
அஞ்சனம் -உபாயமும் உபேயமும் அரங்கன் –சித்தாஞ்சனம்
கரியான் -கறுப்பை சேவிக்கவே –திருவடி -திரு நாமம் -கறுப்பை நினைத்து கொள்
-மதிக் கண்டாய் –அவன் பேர் தன்னை மதிக் கண்டாய் நீராழி வண்ணன் -நிறம் -இரண்டாம் -51—
கரிய கோல திரு உருக் காண்பான் நான் –
சிந்தா ரத்னம் ஸூலபமிஹ ந சித்தி மோக்ஷ அனுரூபம்
சிந்தா மணி அன்றோ இவன் -காம தேனு கற்பக வ்ருஷம் -அபீஷ்ட வரதன் அன்றோ -கருமணியே கோமளத்தை கண்டு கொண்டு –
ஸூ லபன் இஹ ந -இங்கேயே சேவை சாதிக்கிறான் -/ சித்தியும் மோக்ஷம் -அணிமா மஹிமா இத்யாதிகள் சித்தி ஐஹிக-
-அசேஷ ஜன -சம்சாரம் கிழங்கு எடுத்தால் நல்லதே பேரேன்-
தீநாநாத வியஸன சமனம் தைவதம் தைவதா நாம்
தீனர்கள் -அநாதர்கள் -வியசனங்களை போக்கும் -பின்னானார் வணங்கும் சோதி அன்றோ
-தேவாதி தேவன் -இமையோர் அதிபதி -அமரர்கள் கூட்டங்கள் இவையோ -அமரர்கள் அதிபதி –
-இந்திரன் யானையும் தானும் –அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ –
திவ்யம் சஷூ ஸ்ருதி பரிஷிதாம் த்ருஸ்யதே ரங்க மத்யே
-வேதம் -ஸ்த்ரீ லிங்கம் -ஸ்ருதி -வேதம் புல்லிங்கம்–ரங்கம் மத்யே -புருஷோத்தமனை பார்க்க ஸ்த்ரீகள் கூட்டம்
-பிராணவாராகாரம் மத்யே -கூடி -வேதக் கூட்டம் -கதா நாயகன் எங்கள் கண் என்று பெண்கள் சொல்வது போலே
-திவ்யம் சஷூஸ் –வேதார்த்தங்கள் அறிய வேண்டிய திவ்ய சஷூஸ் இவனே என்றுமாம்
பகவத் பக்தியால் வேதம் அறியலாம் என்றவாறு -பரஸ்பரம் -வேதைக சமைதி கவ்யம்

———————————————————————–

வேலா தீத ஸ்ருதி பரிமளம் வேதஸாம் மௌலி சேவ்யம்
ப்ராதுர்பூதம் கநக சரித சைகத ஹம்ஸ ஜூஷ்டே
லஷ்மீ பூம்யோ கர ஸரஸி ஜைர் லாலிதம் ரங்க பர்த்து
பாதாம் போஜாம் பிரதிபலத மே பாவநா தீர்க்கிகாயாம் -2-

எல்லையைக் கடந்த வேதங்களின் மணம் வீசுவதும் -ப்ரஹ்மாதிகள் முடிகளால் வணங்கப் படுவதும்
அன்னப் பறவைகள் விரும்பி உறையும் காவேரி ஆற்றின் மணல் திட்டில் தோன்றியதும்
பெரிய பிராட்டியார் -பூமா தேவி இவர்கள் திருக்கை தாமரைகளால் வருடப் படுவதுமான
திருவரங்கப் பெருமானுடைய திருவடித் தாமரை அடியேனுடைய நினைவு என்னும் பொய்கையில் பிரதிபலிக்கிறது

வேலா தீத ஸ்ருதி பரிமளம் வேதஸாம் மௌலி சேவ்யம் -ப்ராதுர்பூதம்-
நான்முகன் போல்வார் சேவிக்கும் திருவடிகள் -வேத கடல்களில் பரிமளிக்கும் –
ஆதி புருஷர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அரங்கன் ஸத்ய லோகத்தில் இருந்து அயோத்தியை வந்து
இங்கு எழுந்து அருளி -ஸஹ பதன்யா விசாலாட்சி –
நாராயணா -ஓ மணி வண்ணா -துவாரகா நிலயா-அழைக்க கூப்பிடத் தானே வருவான் -யார் அழைக்க இங்கே-
-ஆசை உடன் அன்றோ இங்கே வந்து கிடக்கிறாய் -கருணையால் –
கநக சரித சைகத ஹம்ஸ ஜூஷ்டே -பரம ஹம்சர் -அத்த பத்தர் சுற்றி வாழும் அம் தண் ஊர் அரங்கம்
-ஹம்சம் இருக்கும் இடத்தில் வந்த திருவடித்தாமரை அன்றோ இது –
ஆச்சார்யர்கள் அனைவரும் மண்டி நித்ய வாசம் செய்த திவ்ய தேசம் அன்றோ –
அத்ரைவ ஸ்ரீ ரெங்கமே ஸூகமாக வாசம் செய்து இரும் என்று அருளினான் அன்றோ –
லஷ்மீ பூம்யோ கர ஸரஸி ஜைர் லாலிதம் ரங்க பர்த்து-திரு மகளும் மண் மகளும் கூசிப் பிடிக்கும் மெல்லடிகள்
-அடியேனும் பிடிக்க கூவுதல் வருதல் செய்யாயே-கருணை பொறுமை இரண்டாலுமான இரு பிராட்டிகள் —
பாதாம் போஜாம் பிரதிபலத மே பாவநா தீர்க்கிகாயாம்-திரு உள்ளத்தில் பிரதி பலிக்கின்றதே -திருவடிகள் –
தாமரையோனும் தாமரையாளும் ஹம்ஸாதிகளும் வேதமும் கொண்டாடும் தாமரை அன்றோ –
பன்னிரு ஆழ்வார்களால் பாடல் பெற்று துயர் அறுபட்ட -சுடர் அடி திருவடிகள் அன்றோ –
திருநாகை அழகர் -மாலிரும் சோலை மணாளர் -கோழியும் கூடலும் –தேவ பெருமாளும்
அரங்கனும் இவரே -அத்வைதம் போலே அனைவரும் ஒருவரே -என்பர் –
பிம்பமாக -மனசில் சாஷாத் கரிக்கிறார் -பிரதிபலனும் -அத்வைதி பிரதிபலிக்கிறதால் மாயை -அஹம் ப்ரஹ்மாஸ்மி -அது போல் அன்றே –
கண்ணாடியில் பிரதிபலிப்பது நிஜமா பொய்யா -எடுத்து அணைக்க முடியாது -ஆனால் காண்கிறோம் -புரியாததே வேதாந்தம் –
மநோ பாவனை சிந்தனையில் பிரதிபலிக்கிறது -அசேதனத்தில் இல்லை -சேதனத்தில் பரம சேதனன்
-ஹிருதயத்தில் நிஜமாகவே அன்றோ பிரதிஷடையாக உள்ளான் –திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளே ஒக்கின்றதே –
வாஸ்தவமான அனுபவம் -சேவை சாதிக்கிறான் -வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே
-வந்தாய் என் மனம் புகுந்தாய் புகுந்தத்தின் பின் என் சிந்தனைக்கு இனியாய் -அரவிந்த பாவையும் தானும் –அகம் படி வந்து புகுந்து –

————————————————————————–

சித்ரா காராம் கடக ருசி ஸ் ஸாருவ்ருத்த வ்ருத்த அநுபூர்வாம்
காலே தூத்ய த்ருததர கதிம் காந்தி லீலா கலா சீம்
ஜாநுச்சாயா த்வி குண ஸூபகாம் ரங்க பர்த்துர் மதாத்மா
ஜங்காம் த்ருஷ்ட்வா ஜநந பதவீ ஜாங்கி கத்வம் ஜஹாதி –3-

ரத்னங்களால் இழைக்கப் பட்ட தண்டைகளின் ஒளியால் பல்வகை நிறம் கொண்ட அழகிய வட்டமான முன்னுக்கு ஏற்ற அமைப்புடன்
உரிய காலத்தில் தூது செல்வதற்காக மிக விரைவான நடையை யுடையவனாய்
அழகு சிறப்பை ஏந்தும் பாத்திரனாய் திரு முழங்காலின் அழகால் இரட்டிப்பு அழகை யுடையவனாய்
திரு அரங்கனுடைய கணைக் காலைப் பார்த்து என்னுடைய உயிர் சம்சார மார்க்கத்தில் அலையும் தன்மையை விடுகின்றது –

சித்ரா காராம் கடக ருசி ஸ் ஸாருவ்ருத்த அநுபூர்வாம்
அழகாக உள்ள -நவ ரத்தினங்கள் ஜ்வலிக்க -திருவடியில் கழல் -கடகம் -சாத்திக் கொண்டு -திருமேனிக்கு பொருத்தமாக -சந்நிவேசம்–
திருமேனி சுபாஸ்ரயம் -எந்த அவயவம் எந்த திவ்ய ஆயுதம் சேவித்தாலும் பாபங்கள் தீருமே -பாவானத்வம்
சுபம் -பாவ நிவர்த்தகம் -ஆஸ்ரயம் தியானத்துக்கு –
திவ்யாத்மா ஸ்வரூபம் நினைத்தே பார்க்க முடியாதே -திவ்ய மேனி தான் ஸூபமாயும் ஆஸ்ரயத்வமும் இருக்கும் –
லோகாநாம் பின்ன ருசி -நாநா வித திவ்ய பூஷணங்கள் –
காலே தூத்ய த்ருததர கதிம் காந்தி லீலா கலா சீம்
காலம் வர -ஓடுவார் -தூது சென்றான் குரு பாண்டவருக்காய் -த்ருத கதி இல்லை த்ருத தர கதி -வேகமாக -பாகவதர் கார்யம் செய்ய
-அங்கு ஓர் பொய் சுற்றம் பேசி –பேதம் செய்து –வேறு ஒருவர் போனால் தான் நினைத்த கார்யம் தலைக் கட்ட முடியாதே
-திரௌபதி குழல் முடிக்க -உதங்க பிரஸ்னம் –யானை காத்து யானை கொன்று -ஆஸ்ரித பக்ஷபாதன் –
காலயவனான் ஜராசந்தன் -இவர்களுக்காகவும் ஓடினான் -முசுகுந்தன் சேவை சாதிக்க ஓடினான் —
ஸ்ரீ -த்வாராகா நிர்மாணம் காரியமாக ஓடினான் –
கலா சீம்-பாத்திரம் –லீலா -கணைக் கால் முழம் கால் போலே உருவம் –
உள்ள பாத்திரம் -திருமேனி ஸுந்தர்யம் வழிந்து –காந்தி கலா சீம்
-மொத்த ஸுந்தர்யம் பிடித்து வைத்துக் கொள்ளும் -முழம் கால் -கணைக் கால் –
ஜாநுச்சாயா த்வி குண ஸூபகாம் ரங்க பர்த்துர் மதாத்மா
அதுக்கு மேலே -முட்டிக் கால் அழகு -சோபையும் சேர்ந்து -ஆகர்ஷிக்கிறது –
நாயகி பாவத்தில் அனுபவம் ரங்க பர்த்துர்-மத் ஆத்மா
ஜங்காம் த்ருஷ்ட்வா ஜநந பதவீ ஜாங்கி கத்வம் ஜஹாதி
ஓடி ஓடி பல பிறப்பும் பிறந்து -ஓடு காலி –திருவடி -அனுபவம் -பீதகவாடை பற்றி இழுக்க -ஜிகாதி-விட்டு போயிற்றே
ஜாங்கி கத்வம் கணைக் கால் முழம் கால் -இவரை பற்றி இழுக்க -ஜங்கையை கண்டேன் –
ஓடும் கருவி கண்டு ஓட்டம் விட்டேன் -சமத்காரமாக அருளிச் செய்கிறார் –
நாட்டில் உள்ள பாபம் எல்லாமே சும்மெனாதே-சத்தம் போடாமல் – கை விட்டு போனதே –

————————————————————————-

காமா ராம ஸ்திர கதலிகா ஸ்தம்ப ஸம்பாவ நீயம்
ஷவ்மாஸ் லிஷ்டம் கிமபி கமலா பூமி நீளோபதாநம்
ந்யஞ்சத் காஞ்சீ கிரணம் ருசிரம் நிர் விசத் யூரூ யுக்மம்
லாவண் யவ்க த்வயமிவ மதிர் மாமிகா ரங்க யூந –4-

மன்மதனது தோட்டத்தில் உறுதியாய் இருக்கும் வாழைத்தண்டு போல் நினைக்கக் கூடியதும் பீதாம்பரத்தை அணிந்து இருப்பதும்
பெரிய பிராட்டியார் பூமா நீளா தேவிமார் மூவருக்கும் தலையணை போன்றதும்
கீழ்ப்பக்கம் செல்லும் மேகலையின் ஒளிகளால் அழகு பெற்றதாயும்
இரண்டு அழகு வெள்ளம் போன்றதும் அத்புதமாயும் உள்ள திருவரங்கன் என்னும் நித்ய யுவா குமாரனுடைய
திருத் தொடைகள் இரண்டையும் எனது புத்தி அனுபவிக்கிறது –

காமா ராம ஸ்திர கதலிகா ஸ்தம்ப ஸம்பாவ நீயம்
திருத் தொடை அழகு –அனுபவிக்கிறார் -பத்ரி நாராயணன் -தபஸ் -இந்திரன் -தேவ அப்சரஸ் அனுப்பி –
ஆடி சோர்ந்து போக –வெட்கம் -ஊர்வசி கோயில் அங்கு உண்டு -ஸ்ரீ ரத்ன காரணம் -திருத் தொடை -என்பர் -ப்ராஹ்மணர் முகம் ஆஸீத்
–விராட் புருஷன் –தொடை வைசியன் –திருவடி சம்பந்தம் வேண்டும் என்றே நம்மாழ்வார் நான்காம் வர்ணம்
மன்மதன் தோட்டம் -வாழை தண்டு போலே திருத் தொடைகள் -நாயகி பாவம் முற்றி அனுபவிக்கிறார் -உருண்டு திரண்டு யவ்வனம் தோற்ற –
ஷவ்மாஸ் லிஷ்டம் கிமபி கமலா பூமி நீளோபதாநம்
மேலே சாத்தினதிருப் பட்டு பீதாம்பரம் -பிராட்டிமார் தலை அணையாக வைத்துக் கொள்ளும் திருத் தொடைகள் –
பித்தனைப் பெற்றும் அந்தோ பிறவியுள்–தாயார் பெருமாள் ஒவ் ஒருவர் மேல் பித்து
-ஹிரண்ய வர்ணாம் -வரத விஷ்ணு இடம் கேட்டு அவள் கிருபை -அந்யோன்யம் இருவரும்
-பரம நாரீணாம் -அனுபவித்த திருத் தோள்கள் வால்மீகி -கடல் கரையில் சயனம் செய்த பெருமாள் —
புடவை உடுத்தி தப்பினான் -மூஞ்சியே பார்க்க மாட்டாரே பெருமாள் -பரம பாத நாதன் போலே -வால்மீகி
-ஸ்ரீ பூமி நீளா தேவி -பிடிக்கும் மெல்லடி -தன்னை மறந்து வால்மீகி அருளி -அவயவம் சேவிக்கும் பொழுது
தாயார் சம்பந்தம் உடனே தோன்றுமே -அதே போலே
ந்யஞ்சத் காஞ்சீ கிரணம் ருசிரம் நிர் விசத் யூரூ யுக்மம்
கீழ் நோக்கி பாய -மேகலை -போலே காஞ்சீ -பூமிக்கு அழகு கொடுக்கும் -மண் மகளாருக்கு அலங்காரம் -என்பர் –
லாவண் யவ்க த்வயமிவ மதிர் மாமிகா ரங்க யூந
யூனா -இளமை -படுத்தும் பாடு -கரியான் ஒரு காளை -லாவண்யம் வெள்ளம் இட்டு -இதுவே வடிவாக –
என் புத்தி –மாமிகா -மனஸ் நபுன்சிகா லிங்கம் யஜஸ் -பாணினி -என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் –
ரெங்க யுவா வினுடைய
மாதிர் -ஸ்த்ரீ லிங்கம் -தானும் பிராட்டி போலே அங்கே அணைந்ததே -ஷாட் குண சாம்யத்தாலே நாம் பிராட்டி போலே தானே

————————————————————

சம்ப் ரீணாதி ப்ரதி கலமசவ் மாநசம் மே ஸூ ஜாதா
கம்பி ரத்வாத் க்வசன ஸமயே கூட நிஷிப்த விச்வா
நாலீ கேன ஸ்புரித ரஜசா வேதஸோ நிர்மி மாணா
ரம்யா வர்த்த த்யுதி ஸஹ ஸரீ ரங்க நாதஸ்ய நாபி –5-

அழகிய தோற்றம் உடையதும் ஆழமாய் இருப்பதால் ஒரு பிரளய சமயத்தில் உலகத்தை தனக்குள்
மறைத்து வைத்துக் கொண்டதும் தூள்களால் மிளிரும் தாமரைப் பூவால் பல ப்ரம்மாக்களைப் படைத்ததும்
அழகிய சுழல்களின் அழகுடன் கூடி இருப்பதுமான ஸ்ரீ ரெங்க நாதனுடைய
இந்த திரு உந்தி பிரதி க்ஷணமும் என்னுடைய உள்ளத்தை நன்கு மகிழ்விக்கிறது –

சம்ப் ரீணாதி ப்ரதி கலமசவ் மாநசம் மே ஸூ ஜாதா
அழகிய -நல்ல வம்சம் –ஸூ ஜாதா
கம்பி ரத்வாத் க்வசன ஸமயே கூட நிஷிப்த விச்வா
கம்பீரமாக –விச்வா எல்லாமே உள்ளே வைத்து -வெளியில் சொல்லாமல் -எப்பொழுதும் –
நாலீ கேன ஸ்புரித ரஜசா வேதஸோ நிர்மி மாணா
தாமரை உண்டாக்கி -பரதத்வம் அரிய -இங்கே சேவித்தால் போருமே -வேதம் மூலம் தான் அரிய அரியவன் –
நாராயணீ நமஸ்துதே -பார்வதிக்கும் சொல்வார்களே –நாராயணனும் நான் முகனைப் படைத்தான் -காட்டிக் கொடுக்குமே
யமம் நியமம் ஆசனம் பிராணாயாமம் – பிரத்தியாகாரம் -யோகிகள் –அடக்கி -அஹிம்சா சத்யம் —
திருவடியில் -நியமம் போலே கணைக் கால் / ஆசனம் -போலே திருத் தொடைகள் -/
பிராணாயாமம் -உள்ளே சுத்தி பண்ண கப வாத பித்தம் -அதே போலே திரு நாபி –
ரம்யா வர்த்த த்யுதி ஸஹ ஸரீ ரங்க நாதஸ்ய நாபி
திரு நாபி அனுபவம் -தோள் கண்டார் தோளே கண்டார் –

———————————————-

ஸ்ரீ வத்சேன பிரதித விபவம் ஸ்ரீ பத ந்யாஸ தன்யம்
மத்யம் பாஹ்வோர் மணி வர ருசா ரஞ்சிதம் ரங்க தாம்ந
சாந்த்ரச்சாயம் தருண துலஸீ சித்ரயா வைஜயந்த்யா
ஸந்தாபம் மே சமயதி தியஸ் சந்த்ரிகோதார ஹாரம் –6-

ஸ்ரீ வத்ஸம் என்னும் திரு மறுவினால் பெருமை அடைந்ததும் -பெரிய பிராட்டியார் தன் திருவடியை வைப்பதால்
பாக்யம் பெற்றதும் -ஸ்ரீ கௌஸ்துபம் தேஜஸ்ஸால் செந்நிறம் ஆக்கப் பட்டதும்
பசுமையான திருத் துழாயினால்-பல நிறமுடைய வைஜயந்தீ என்னும் வனமாலை இவற்றாலும்
குளிர்ந்த ஒளி மிகுந்த நிலவு போன்ற அழகிய முத்து மாலையை யுமுடைய திருவரங்கன்
இரண்டு திருத் தோள்களின் நடுவே உள்ள திரு மார்பு என்னுடைய உள்ளத்தின் தாபத்தை ஒழிக்கின்றது

ஸ்ரீ வத்சேன பிரதித விபவம் ஸ்ரீ பத ந்யாஸ தன்யம்
ஸ்ரீ வத்ஸம் பிரசித்தம் ஊர் அறிந்த -வைபவம் -ஸர்வேச்வரத்வ லக்ஷணம் -மறு – மயிர் சுழி -தாயார் நித்ய வாஸம்
–பிருகு மகரிஷி -வ்ருத்தாந்தம் -வேதாந்த சிந்தனம்-
தாயார் திருவடி பெற்ற பாக்யம் -தன்யம் -அவன் நினைவாலே –அமுதினில் வந்த பெண்ணமுது அன்றோ –
முழு கண் கடாக்ஷம் -பர ப்ரஹ்மம் -என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ -தரிக்க பராங்குச நாயகி சம்பந்தம் பெற்றவற்றை அணைத்துக் கொண்டானே –
மத்யம் பாஹ்வோர் மணி வர ருசா ரஞ்சிதம் ரங்க தாம்ந
மத்யம் இருப்பதே பாக்யம் -பெருமாள் திருத் தோள்களை அணைத்து யானை ஸிம்ஹம் கண்டு அஞ்சாத சீதை பிராட்டி போலே –
இரண்டையும் பிடித்து -சரம் விடாமல் யானைகளும் சிங்கங்களும் அஞ்சாமல் இருக்குமே
ஸ்ரீ வர மணி வர ஸ்ரீ கௌஸ்துபம் -ஜீவ தத்வம் அபிமானம் -நமக்கும் பூவின் மீசை நங்கைக்கும் இன்பன்-கோல மலர் பாவைக்கு அன்பன்
-நமக்கு அன்பாகியே -ஸ்ரேஷ்டமான வரம் -ரஞ்சிதம் சிவந்து அழகிய -செய்ய -உடையும் -செய்ய முடியும் –திகழ என் சிந்தை உளானே –
சாந்த்ரச்சாயம் தருண துலஸீ சித்ரயா வைஜயந்த்யா
மேலே -புஷ்ப்பம் துளஸீ விசித்திர வன மாலை -வைஜயந்தி -சர்வேஸ்வரன் அசாதாரண லக்ஷணம் – புருடன் மணி வரமாக —
ஸந்தாபம் மே சமயதி தியஸ் சந்த்ரிகோதார ஹாரம்
முலைக்குவட்டில் பூட்டிக் கொண்டு இருப்பன் நானே -மார்பை அணைத்துக் கொண்டே –
தாபங்கள் எல்லாமே போகுமே -ஸந்தாபம் -பிரகிருதி ஜீவன் பிராட்டி சர்வருக்கு சர்வேஸ்வரன் -புருஷோத்தமன்
சந்திரிகை போலே ஹாரம் சேர்ந்து –
ஸ்ரீ வத்ஸம் / பெரிய பிராட்டியார் திருவடி / ஸ்ரீ கௌஸ்துபம் / வனமாலை / ஹாரம் -முத்தா -முக்தர் -நித்யர் பத்தர் அனைவரும் உண்டே திரு மார்பில் –

———————————————-

ஏகம் லீலோ பஹித மிதரம் பாஹுமாஜாநு லம்பம்
ப்ராப்தா ரங்கே ஸயிது ரகில பிரார்த்தனா பாரிஜாதம்
திருப்தா சேயம் திருட நியமிதா ரஸ்மி பிர் பூஷணா நாம்
சிந்தா ஹஸ்தின்யநுபவதி மே சித்ர மாலான யந்த்ரம் –7-

திருவரங்கத்தில் பள்ளி கொண்ட -சகல சேதனர்களின் சகல அபேக்ஷிதங்களையும் அளித்து அருளும்
கற்பக வ்ருஷம் போன்ற திருவரங்கன் உடைய லீலார்த்தமாக -விளையாட்டாக தலையணை ஆக்கப் பட்ட வலது திருக் கரத்தையும்
முழந்தாள் வரை நீண்ட மற்றோர் இடது திருக் கரத்தையும் பற்றிக் கொண்டு
இதனால் செருக்குக் கொண்ட என் நினைவு என்னும் பெண் யானை திரு ஆபரண தேஜஸ்ஸூ என்னும் கயிற்றால்
இறுக்கமாகப் பிணிக்கப் பட்டு விசித்திரமான கட்டுத் தறியில் கட்டுப் படுவதை அனுபவிக்கிறது –

ஏகம் லீலோ பஹித மிதரம் பாஹுமாஜாநு லம்பம்
திருக்கரங்கள் அனுபவம் -யானை கட்டும் -முளை போலே -சிந்தா -திமிர் போலே ஓடே -சேற்றில் அழுந்தும் –
தலைக்கு அணை போலே திருக் கரங்கள் -லீலைக்காக –
கிடந்த அழகு -கிடைத்ததோர் கிடக்கை -பையத் துயின்ற பரமன் -உறங்குவான் போலே யோக நித்திரை
-லீலோ உபஹிதம் — -அடுத்த திருக் கரம் முட்டி வரை –
ஒன்றால் திரு முகம் -காட்டி -ஒன்றால் திருவடி காட்டி -தன் பால் ஆதாரம் பெறுக வைத்த அழகன் –
ப்ராப்தா ரங்கே ஸயிது ரகில பிரார்த்தனா பாரிஜாதம்
சர்வ அபீஷ்டம் அருளும் பாரி ஜாதம் -ஸூ க்ரீவன் முதலில் கை கொடுத்து -அப்புறம் திருவடியில் விழுந்தான் -அலம் புரிந்த நெடும் தடக்கை
திருப்தா சேயம் திருட நியமிதா ரஸ்மி பிர் பூஷணா நாம்
கொழுத்து போனதே -அனுபவத்தால் -திருவடி தொடங்கி இது வரை -இத்தை நியமிக்க வேண்டும் -போக்த்ருத்வ புத்தி மாற்றி –
ரஸ்மி -பூஷணம் மூலம் வரும் காந்தி கொண்டே காட்டி
சிந்தா ஹஸ்தின்யநுபவதி மே சித்ர மாலான யந்த்ரம்
ஹஸ்தி -பெண் யானை -அனுபவத்தில் கை கட்ட திருக் கரங்கள் -பரம ஆனந்தம் இந்த கட்டு -அனுபவ –
தாரணம் -பிரத்தியாகாரம் அப்புறம் -அந்த நிலைக்கு சேர்த்ததே –

—————————————————–

சாபிப்ராய ஸ்மித விகசிதம் சாரு பிம்பாத ரோஷ்டம்
து காபாய ப்ரணயநி ஜநே தூர தத்தாபி முக்யம்
காந்தம் வக்த்ரம் கநக திலகா லங்க்ருதம் ரங்க பர்த்து
ஸ்வாந்தே காடம் மம விலகதி ஸ்வாக தோதார நேத்ரம் –8–

பொருள் பொதிந்த புன்னகையால் மலர்ந்த அழகிய கோவைக்கனி போன்ற மேல் திரு உதடும் கீழ் திரு உதடும்
உடையவனாய் துன்பம் நீங்குவதை விரும்புகின்ற மக்களிடம் தூரத்தில் இருந்தே அவர்களுக்கு கொடுக்கப்பட்ட
பார்வையை யுடையவனும் -அழகியவனும் -பொன்னாலான திலகத்தால் அலங்கரிக்கப் பட்டவனும்
நல் வரவு கூறும் பெரும் தன்மையை யுடைய திருக் கண்களை யுடைய ஸ்ரீ ரெங்க நாதன் திரு முகம்
என் உள்ளத்தில் ஆழ்ந்து பதிகின்றது

————————————————

மால்யை ரந்த ஸ்திர பரிமளைர் வல்லபா ஸ்பர்ஸ மான்யை
குப்யைச் சோளீ வசன குடிலை குந்தலை ஸ்லிஷ்ட மூலே
ரத்னாபீட த்யுதி சபளிதே ரங்க பர்த்து கிரீடே
ராஜன்வத்ய ஸ்திதி மதிகதா வ்ருத்தயஸ் சேடிஸோ மே –9-

உள்ளே மலர் மாலைகளால் நிலையான மனம் உடையதும் பிராட்டிமார்களின் திருக் கரங்கள் வாரி முடித்து
அலங்கரிக்கும் போது பட்டதால் மதிப்புப் பெற்றதும்
கோபம் கொண்ட சோழ நாட்டுப் பெண்டிர் பேச்சுப் போலே சுருண்டதுமான திருக் குழல்களோடு அடிப்பகுதியான
சம்பந்தம் பெற்றதும் ரத்னங்களாலான முடி மாலைகளின் ஒளியால் பல நிறம் பெற்ற திருவரங்கனுடைய திரு அபிஷேகத்தில் –
இது காரும் அடங்காது திரிந்து கொண்டு இருந்த என்னுடைய உள்ளத்தின் போக்குகள் நல்ல அரசனைப் பெற்றதாய்
நிலையான இருப்பைப் பெற்றுள்ளன -அவனுக்கு அடங்கிக் கிடக்கின்றன –

மால்யை ரந்த ஸ்திர பரிமளைர் வல்லபா ஸ்பர்ஸ மான்யை
கிரீடம் -ரத்ன புஷ்ப்ப மாலை சாத்திய திருக் குழல் -நெற்றி காட்டி சாத்தி -தேவ பெருமாள் –பரிபாக அழகு -பரிமளம் ஸ்திரமாக
-அந்த ஸ்திரம் -புனத்தில் உள்ளது போலே -திருமேனியால் தளிர்த்து -தன்னிலத்தில் போலே –
திருவடியில் வேத பரிமளம் பார்த்தோம் -தாயார் சம்பந்த வாசனை திரு முடியில் -மாலை -சூடிக் கொடுத்த மாலை சாத்திக் கொண்ட பரிமளம்
-இதனாலே ஸுபாக்யம் பெற்றார் -தன்யோஸ்மி சிரஸால் தாங்கிக் கொள்வான் –
-தாமரைப் பூ வாசனை பெரிய பிராட்டியார் ஸ்பரிசத்தால் -செங்கழுநீர் பூமிப் பிராட்டி -நீலோத் புஷ்ப்பம் நீளா தேவி
எல்லாமே சேர்ந்தே இருக்கும் இதில் -அப்ராக்ருதம் வாசனையும் -உள்ளே இருந்து வீசும் -சர்வ கந்த
-நைவளம் -பண்ணில் -பாடி -தமிழ் பண்கள் -நாட்டை -நம்மை நோக்கா நாணினார் போல் –இறையும் நோக்கா —
வாயாலும் கண்ணாலும் கரைக்க பார்ப்பான் –
வெட்க்கி -நயங்கள் பின்னும் செய்து –காலில் விழுந்து -தாயார் திருவடி வாசனையும் இருக்குமே -வல்லபா ஸ்பர்ச மான்யை –
-ஏக ஆசனத்தில் இருந்த போது -கலந்து திரு முடி -வாச நாறும் குழல் -அன்றோ -இதுவும் கலந்து –
மான்யை -கொண்டாடப்படுகிறது -பிராட்டி சம்பந்தத்தால் வந்த ஏற்றம் -திரு வில்லா தேவரை -கஸ் ஸ்ரீ –ஸ்ரீய–
குப்யைச் சோளீ வசன குடிலை குந்தலை ஸ்லிஷ்ட மூலே
மயில் தோகை-குடிலை -குந்தலை –
-மை வண்ண நறும் குஞ்சி –கோள் இருளை சுகர்ந்திட்டு -கொள்ளும் –நீல நன்னூல் அன்று மாயன் குழல்
-சுருண்டு நீண்டு நைத்து–குப்யைச் சோளீ வசன குடிலை–கோபம் கொண்ட -சோழ தேச ஸ்த்ரீகள் பேச்சு போலே —
ரத்னாபீட த்யுதி சபளிதே ரங்க பர்த்து கிரீடே-
நாயகி பாவத்தில் அனுபவிக்கிறார் –
ராஜன்வத்ய ஸ்திதி மதிகதா வ்ருத்தயஸ் சேடிஸோ மே
அராஜகம் தேசம் எப்படி ஆகும் ஸ்ரீ ராமாயணம் சொல்லுமே -வருணாஸ்ரம தர்மம் -அனுஷ்ட்டிக்காமல்
-ரெங்க ராஜனை அடைந்து கைங்கர்யம் பண்ணும் சேடி போலே என் மனஸ் ஆனதே –

————————————————-

பாதாம் போஜம் ஸ்ப்ருசதி பஜதே ரங்க நாதஸ்ய ஜங்காம்
ஊருத் வந்த்வே விலகதி சநை ரூர் த்வமப்யேதி நாபிம்
வக்ஷஸ் யாஸ்தே வலதி புஜயோர்மாமி கேயம் மநீஷா
வக்த்ரா பிக்யாம் பிபதி வஹதே வாசநாம் மௌலி பந்தே –10-

என்னுடைய இந்த புத்தி என்னும் பெண் காதலால் -ஸ்ரீ ரெங்கநாதனுடைய திருவடித் தாமரைகளைத் தொடுகிறது
திருக் கணுக்காலைச் சேவிக்கிறது -இரு திருத் தொடைகளிலும் நன்கு படிக்கிறது
மேலே திரு உத்தியை நெருங்குகிறது -திரு மார்பில் தங்குகிறது -திருக்கைகளில் சுழல்கிறது
திரு முகத்தின் காந்தியை அள்ளிப் பருகுகிறது -திரு கிரீடத்தில் நினைவு கொள்கிறது –
இப்படி என் மனம் அவன் திருமேனியைப் பற்றிக் கொண்டு கிடக்கிறது –
ஒரே ஸ்லோகத்தில் தொகுத்து அனைத்து திவ்ய அவயவங்களில் ஈடுபட்டத்தை அருளிச் செய்கிறார்

பாதாம் போஜம் ஸ்ப்ருசதி பஜதே ரங்க நாதஸ்ய ஜங்காம்
பார்த்து அனுபவிக்கும் ஆசை மிக்கு தொட்டு அனுபவிக்க
பரி பூர்ண அனுபவம் -நாயகி -நாயகன் –
பரம புருஷன் -ஞானானந்த ஸ்வரூபன் -புருஷோத்தமன் -உயர்வற உயர்நலம் உடையவன் –
ஆறு வேகமாக ஓடி கடலிலே புகுமா போலே -ஸ்வரூபம் காணாமல் -வஞ்சி கொடிகள் வளைந்து பிழைத்துப் போகும் -மரங்கள் ஒடிந்து போகுமே –
கைங்கர்யம் செய்தே வாழலாம் -திருவடி தொழுதார் மறந்தும் புறம் தொழா மாந்தர் ஆவார் –
தொட்டாலும் கன்னி போகும் மெல்லடிகள் -உலகம் அளந்த பொன்னடிகள் -சகடம் உதைத்த -திருவடிகள்
பத்துடை அடியவர்க்கு எளியவன் -பிறருக்கு அரிய வித்தகன் -தொட்டு பார்க்க -மேலும் ஆசை மிக்க -கணைக் கால் வரை
-முன் அனுபவித்தவற்றை -விலங்கு இட்டு பிடித்தால் போலே –
ஆனந்த வஸ்து -தொட்டாலே போக்யம்-அத்வேஷம் மாத்திரம் இருந்தாரை மேலே மேலே இழுத்து போவான் –
ஊருத் வந்த்வே விலகதி சநை ரூர் த்வமப்யேதி நாபிம்
திருத் தொடைகள் –அனுபவம் -திரு நாபி அனுபவம் -சுழலில் அகப்பட்டு –
வக்ஷஸ் யாஸ்தே வலதி புஜயோர்மாமி கேயம் மநீஷா
மனீஷா -புத்தி என்னும் பெண் -பஜதே -விலகதி -ஆஸ்தே -வேவேறே எட்டு கிரியா பாதங்கள் –
தனக்கு ஆனந்தம் இல்லை -அவனுக்கு –
திருமார்பில் அணைந்து கொண்டு -திருக் கரங்களில் -கட்டிப் பிடித்து வலதி
மங்களா சாசனம் பண்ணும் மநோ பாவம் -உண்டாகும் –
வக்த்ரா பிக்யாம் பிபதி வஹதே வாசநாம் மௌலி பந்தே
குடிக்க -பிபதி –திரு முகம் -திரு அபிஷேகம் -பூர்ணமாக அனுபவிக்கிறார் –

————————————————-

காந்தோ தாரை ரயமிஹ புஜை கங்கண ஜ்யா கிணாங்கை
லஷ்மீ தாம்ந ப்ருதுள பரிகைர் லஷிதா பீதி ஹிதி
அக்ரே கிஞ்சித் புஜக சயன ஸ்வாத்மநைவாத்மன சன்
மத்யே ரங்கம் மம ச ஹ்ருதயே வர்த்ததே சாவரோத–11-

அழகியதும் கொடையில் சிறந்ததும் -திருக் கை வளை திரு நாண் இவற்றின் –விபவ அவதாரத்தில் உண்டான தழும்புகள்-
உள்ளதும் பெரிய பிராட்டியாரின் உறைவிடமான திரு மார்புக்கு பெரிய தாழ்ப்பாளாயும் உள்ள திருக் கைகளால்
அபயம் அளிக்கும் திவ்ய ஆயுதங்களைக் கட்டி அருளுபவனும் ஆதி சேஷன் மேலே திருக் கண் வளர்ந்து அருளுபவனுமான
இந்த திருவரங்கன் இந்த ஸ்ரீ ரெங்க விமானத்தில் மூலத் திரு மேனி கொண்ட தனக்கு சிறிது முன்பு தானாகவே
உத்சவத் திரு மேனியாய் இருந்து கொண்டு பிராட்டிமார்களோடும் திரு அரங்கத்தின் நடுவிலும்
எனது உள்ளத்திலும் நித்யமாய் நிறைந்து உறைகின்றான்

காந்தோ தாரை ரயமிஹ புஜை கங்கண ஜ்யா கிணாங்கை
நம்பெருமாளை சேர்ந்தே பெரிய பெருமாளை அனுபவிக்கிறார் -காந்தம் போலவே ஈர்க்கும் அழகு அன்றோ
நான்கு திருக் கரங்களாலும் அணைத்து அருள்வான் –
அழகு ஐஸ்வர்யம் அலங்காரம் கொண்டு கௌரவம் காட்ட முடியாதே -வளை துயிலைக் கைக் கொண்டு -காந்தம் போலே இழுப்பான் –
உதாரன்-நான்கு திருக் கரங்கள் -வாங்கிக் கொள்வாரையும் உதாரா என்னும் படி அன்றோ -நான்கு திருக் கரங்கள்
-அடியார் என்று அறிவித்த அத்தா –எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே –
பல் பிறப்பும் ஒழித்து நம்மை ஆள் கொள்வான் -முத்தனார் முகுந்தனார் -அன்னையாய் அத்தனாய் –
கங்கணம் சாத்தி -தழும்பு -ஆஸ்ரித பக்ஷபாதன் -நாண் தழும்பு திருத் தோள்களில் -சார்ங்கம் உதைத்த சர மழை-
சகடம் உதைத்த தழும்பு –தாமோதர தழும்பு திரு வயிற்றில் -திரு உகிரில் தழும்பு -சேஷிக்கு லக்ஷணம்
-நமக்கு சங்கு சக்ர லாஞ்சனம் போலே -ஸ்ரீ வைஷ்ணவ பராதீனன் அவன் –
லஷ்மீ தாம்ந ப்ருதுள பரிகைர் லஷிதா பீதி ஹிதி
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறையும் திரு மார்பு -கோட்டைக்கு அரண் போலே நான்கு திருக் கரங்கள் –
மேலே திவ்ய ஆயுதங்கள் வேண்டாம் -ஆஸ்ரிதர்களுக்கு சேவை சாதிக்கவே –
மல்லாண்ட திண் தோள்-மணி வண்ணா -சேவடி செவ்வி திருக் காப்பு -அபய ஹஸ்தம் –
அக்ரே கிஞ்சித் புஜக சயன ஸ்வாத்மநைவாத்மன சன்
பெரிய பெருமாள் கிடந்த சேவை -நம் பெருமாள் நின்ற சேவை -பூர்ணஸ்ய –பூர்ணம் குறையாதே –
தானே முன்னே வந்து சேவை சாதிக்கிறான் -என்றவாறு
ஸ்ரீ ரெங்கம் மங்கள நிதிம் கருணா நிவாஸம் -உபய பிரதானம் –காள மேகம் -திருவேங்கடத்தில் மூலவர் –பாரிஜாதம் —
–ஹஸ்திகிரி –யாதவா கிரி -ஸ்ரீ சம் தீபம் -உபய பிரதானம் இங்கும் -ஸ்ரீ பாஷ்யகாரர் சம்பந்தம் இருவருக்கும் உண்டே -சிரஸா –
மத்யே ரங்கம் மம ச ஹ்ருதயே வர்த்ததே சாவரோத–
மனத்துள்ளான் -ஸ்ரீ ரெங்கத்தில் -சாதனம் சாத்தியம் -சமுச்சய சகாரம் -சம பிரதானம் –
கல்லும் கனை கடலும் -வைகுந்த வானாடும் -புல் என்று ஒழிந்தன கொல் -ஏ பாவம் –அம்பாஸ்ய பாரம் உபநிஷத் பொய்யாகலாமோ –
நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான் -அடியேன் உள்ளத்தகம்–அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன் –
இளம் கோயில் கை விடேல் என்று பிரார்த்திக்கும் படி -வர்த்ததே -அழ வேண்டாத படி -முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தேன் –
புள்ளைக் காடாகின்ற -புறப்பாடு அழகை பாட வைத்து போனானே -என் சொல்லிச் சொல்லுவேன் –
புனர் அரங்கம் ஊர் என்று போயினார் -பொரு கயல் கண் நீர் அரும்ப புலவி-பிரிவு – தந்து போயினார் -அப்படி அழ விட வில்லையே –
என் நெஞ்சு இடம் கொண்டான் மற்று ஓர் நெஞ்சு அறியான் –வர்த்ததே -சாவரோத –
உள்ளே வந்து ஸ்தாவர பிரதிஷ்டையாக இருக்கின்றான் –
அவரோகம் -அந்தப்புரத்தில் இருப்பது போலே -உத்சவர் -உபய நாச்சியார் உடன் சேர்ந்து அனுபவிக்கிறார் —
அந்தர்ங்கர்களுக்கு மிதுனமாகவே தான் வந்து சேவை சாதித்து அருளுவான் -அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து –

———————————————

ரங்க ஸ்தாநே ரசிக மஹிதே ரஞ்ஜிதா சேஷ சித்தே
வித்வத் சேவா விமல மநஸா வேங்கட சேன க்லுப்தம்
அக்லேசேன ப்ரணிஹித தியாமா ருருஷோர வஸ்தாம்
பக்திம் காடாம் திசது பகவத் த்யான சோபனா மேதத் –12-

பகவத் விஷயத்தில் சுவை உடையவர்களால் போற்றப்படுபவரும் -எல்லாருடைய மனத்தையும் மகிழ்விப்பவரும்
திருவரங்கம் திவ்ய ஷேத்ரத்தில் ப்ரஹ்ம விந்துக்களின் -ஸ்ரீ அப்புள்ளார் போல்வாருக்கு செய்த -பணிவிடையால்
தூய உள்ளம் பெற்றவருமான ஸ்ரீ வேங்கடேசன் என்னும் கவியால் இந்த பகவத் த்யான ஸ்தோத்ரம் என்னும்
திவ்ய பிரபந்தம் உறுதியான பக்தியை உண்டாக்கி -யோகத்தில் ஆழ்ந்த யோகிகளின் நிலையை
கஷ்டம் இல்லாமல் ஏற விரும்புவனுக்கு உறுதியான பக்தியை அளிக்கட்டும் –

ரங்க ஸ்தாநே ரசிக மஹிதே ரஞ்ஜிதா சேஷ சித்தே
ஸ்ரீ ரெங்கத்தில் -ஆஸ்தானம் -நிறைய பேர் வந்து சேவிக்க -அரங்கம் அன்றோ -பெரிய மண்டபம் –
நிறைய கூத்து -நவ ரசம் -மூலம் அனைத்துக்கும் -ரசிக மன்றம் நிறையே –மஹீதே –
பெரிய ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் சேரும் இடம்
-பிரசித்தம் அன்றோ -வேர் பற்று -சாஷாத் வைகுந்தம் ரங்க மந்த்ரம் -பதின்மர் பாடும் பெருமாள் அன்றோ –
பொய்கையார் முதலில் -முதல் திவ்ய தேசம் -ஸ்ரீ ரங்கம் -கரு வரங்கத்துள் நின்று கை தொழுதேன் திரு வரங்கம் –
ஆண்டாள் கை பிடித்த பெருமை அரங்கனுக்கே –ரசிக மஹீதே
நாத முனி -ஸ்ரீ ரெங்க நாத முனி என்றே பெயர் -சரணாகதி கத்யம் இங்கே அருளிச் செய்து –
வான் திகழும் சோலை –ஆயிரமும் அரங்கனுக்கே –
வித்வத் சேவா விமல மநஸா வேங்கட சேன க்லுப்தம்
விமல மனசால் –வித்வத் சேவா –வேங்கடேசன்-காஞ்சியில் அவதாரம் -திரு வேங்கடேசன் -கண்டாவதாரம்
-சுத்த மனசால் -அமலன் -விமலன் -நிமலன் நின்மலன் -கைங்கர்யம் பண்ணி பெற்ற அப்புள்ளார் திருவடி பலம் –
பாகவத கைங்கர்யத்தால் பெற்ற மனஸ் அன்றோ
அக்லேசேன ப்ரணிஹித தியாமா ருருஷோர வஸ்தாம்
பக்திம் காடாம் திசது பகவத் த்யான சோபனா மேதத்
படிப் படி த்யானம் பண்ண -பக்தி கொடுக்கும் -வைராக்யம் -ஞானம் மட்டும் போதாதே -ஞான விசேஷம் பக்தி ரூபா பன்ன ஞானம்

————————————-

இதி பகவத் த்யான சோபா நாம் சம்பூர்ணம் –

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s