ஸ்ரீ அபீத ஸ்தவம் –ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

———————————————————————

இந்த ஸ்தோத்ரத்தின் பயனாகவே –கொப்பணாரியன் து ருஷ்கார்களை ஸ்ரீ ரெங்கத்தில் இருந்து விரட்டி விட்டு
ஸ்ரீ ரெங்கத்தை நிர்ப்பயமாக்கி திருப்பதியில் எழுந்து அருளி இருந்த ஸ்ரீ ரெங்கநாதரையும் உபய நாச்சிமார்களையும்
கொஞ்ச நாள் செஞ்சியில் எழுந்து அருள பண்ணி ஆராதித்து மீண்டும் ஸ்ரீ ரெங்கத்தில் பிரதிஷடை செய்வித்தான்
மானிடர்களை பாடாத ஸ்ரீ தேசிகன் இந்த கைங்கர்யத்தை கொண்டாடி-ஸ்ரீ ரெங்கத்தை கிருத யுகம் போலே செய்வித்ததாக கொண்டாடி –
விஷ்வக்சேனர் சந்நிதிக்கு முன்பே பெரிய பெருமாள் சந்நிதியில் கீழ் புறச்சுவரில் கல் வீட்டில் இரண்டு ஸ்லோகங்கள் இன்றும் உண்டு –

கோலத்திரு மா மகள் உடன் கூடிய ஸ்ரீ நாராயணனே சகல ஜகாத் காரண பரத்வம் –
ப்ரஹ்மாதி தேவர்களும் இவன் ஆஜ்ஜைக்கு அஞ்சி கார்யம் செய்வதை முதல் ஸ்லோகத்தாலும் –
சர்வேஸ்வரன் ஒருவரை ரஷிக்க விரும்பினால் எந்த தெய்வமும் எதிராக ஒன்றும் செய்ய முடியாது என்று ஸ்லோகங்கள் -4-முதல் -26-
பிராட்டியை புருஷகாரமாகக் கொண்டு மிதுனமான இந்த பரத்வ தத்வம் இடம் சரணாகதி அனுஷ்ட்டிக்க வேண்டும் என்று -7-ஸ்லோகத்தாலும்
ஒரே தடவை செய்ய வேண்டிய சரணாகதியின் பெருமைகளை -2-ஸ்லோகத்தாலும்
திரு நாம சங்கீர்த்தனத்தின் பெருமைகளை -2-5–15–21-ஸ்லோகங்களிலும்
பிரபத்தி -21-ஸ்லோகத்தில் சரணாகதி அனுஷ்ட்டித்தும்
சத்ரு பயங்களை போக்கி அருள -20–22–24-ஸ்லோகங்களில் சமய பிரசமய என்றும் மீண்டும் பிரார்த்திக்கிறார்
-பிரபத்தி சகல பல சாதனம் அன்றோ –

———————————————–

அபீதி ரிஹ யஜ்ஜூஷாம் யதவதீ ரிதா நாம் பயம்
பயாபய விதாயிநோ ஜகதி யந்நி தேச ஸ்திதா
ததே தததி லங்கித த்ருஹண சம்பு சக்ராதிகம்
ரமசா கமதீ மஹே கிமபி ரங்க துர்யம் மஹ–1-

அபீதி ரிஹ யஜ்ஜூஷாம்ய-எவருடைய ப்ரீத்தி அனுக்ரஹம் உடையோருக்கு இங்கேயே பயம் இல்லாமையும்
தவதீ ரிதா நாம் பயம் -எவரால் உபேக்ஷிக்கப் பட்டவர்களுக்கு பயம் உண்டோ
பயாபய விதாயிநோ-பயத்தையும் அபயத்தையும் கொடுப்பவர்கள்
ஜகதி யந்நி தேச ஸ்திதா-உலகத்தில் எவருடைய ஆஞ்ஜையில் இருக்கின்றார்களோ
ததே தததி லங்கித த்ருஹண சம்பு சக்ராதிகம் -ப்ரஹ்மா ருத்ரன் இந்திரன் முதலியவர்களைத் தாண்டியதும்
ரமசா கமதீ -பெரிய பிராட்டிக்கு தோழமை கொண்டதும்
தத் ஏதத் -அந்த இந்த
மஹே கிமபி ரங்க துர்யம் மஹ-ரங்க துரத்தை நிர்வஹிக்கும் தேஜஸை அத்யயனம் -செய்கிறோம் -அனுசந்திக்கிறோம் –

தஞ்சம் என வருவார்க்குத் தந்திடுவான் அஞ்சாமை
தனைச் சேரா தகல்வோர்க்குத் தந்திடுவான் அச்சத்தை
அஞ்சுதலைத் தந்து நம்மை அலைக்கழிப்போர் எல்லாரும்
அஞ்சாமை நமக்கு அளிக்கும் அன்பர்களும் அவன் அடிமை
செஞ்சடையோன் நான்முகத்தோன் தேவர் கோன் முதல்வோரும்
நினைப்பரிய மேலிடத்தோன் திரு மகளார் உடை சேர
விஞ்சுகிற ஒளியாக விரி புகல் சேர் அரங்கத்தில்
விளங்குகிற அத்தேவை விரித்துரைத்து வாழ்த்துவமே –

யத் அனுக்ரஹ சந்தி ந சந்தி யத் உபேஷ்யா–ஸ்ரீ சுகர் / ப்ரஹ்ம நிஷ்டர்க்கு தேவர்களாலும் கெடுதல் செய்ய முடியாதே
கிமபி -அப்ரமேய தேஜஸ் என்றபடி / மகாரஸ்து -தயோர் தாஸ-பிரணவ ஸ்ருதி /
ரங்கம் பிரணவம் -துரத்தை வஹிக்கும் –துர்ய-ஹயமவுஸ் -ஹயக்ரீவ தேஜஸ் சேர்த்து என்றுமாம்

——————————————————-

தயா சிசிரிதாசயா மனசி மே சதா ஜாக்ருயு
ஸ்ரியா அத்யுதிஷ வக்ஷஸே ஸ்ரித மருத் வ்ருதா சைகதா
ஜகத்துரித கஸ்மரா ஜலதி டிம்ப டம்பஸ் ப்ருச
ஸக்ருத் ப்ரணத ரக்ஷண ப்ரதித சம்வித சம்வித –2-

தயா சிசிரிதாசயா மனசி-கிருபையால் குளிர்ந்த திரு உள்ளத்தை யுடையவராயும்
ஸ்ரியா அத்யுதிஷ வக்ஷஸே -அகலகில்லேன் இறையும் என்று பிராட்டி நித்ய வாசம் செய்யும் திரு மார்பு யுடையவனாய்
ஸ்ரித மருத் வ்ருதா சைகதா-காவேரி மணல் மேட்டுத் திட்டில் சயனித்து இருந்து -விபீஷணர் சரணாகதி கடல் கரை மணலில் நடந்தது நினைப்பூட்டி இருப்பவராயும்
ஜகத்துரித கஸ்மரா– ஜகத்தில் பாபங்களை எல்லாம் விழுங்கி விடுபராயும் –
ஜலதி டிம்ப டம்பஸ் ப்ருச— குட்டி சமுத்திரம் போன்றவராயும் -பச்சை மா கடல் போல் மேனி
ஸக்ருத் ப்ரணத ரக்ஷண ப்ரதித சம்வித சம்வித-ஒரே தடவை சரணம் அடைந்தவர்களையும் ரக்ஷிப்பதாக ப்ரதிஜ்ஜை செய்து
அருளுபவர் விஷயமாக புத்தி விருத்திகள்
மே சதா ஜாக்ருயு-என்னுடைய மனசில் ஜாக ரூகமாகக் குடி கொண்டு அருள வேணும் –

கருணை தனின் பெருக்கு எடுப்பால் குளிர்ந்து இருக்கும் உள்ளத்துடன்
திரு மகளே அகலாது திகழ்ந்து உறையும் மார்புடனும்
பிரிந்தோடும் காவேரியின் மணல் திட்டில் கிடந்தது அருளி
பார் வாழும் மக்கள் தனின் பாபங்களை ஒழிப்பவனாய்
ஒரு முறையே அடி பணிய உற்றவரைக் காப்பது என
உலகு அறிய வாக்கதனை உறுதி செய்யும் அரங்கன் தன்
திரு மேனித் தோற்றங்கள் திரளாக எழுந்து எழுந்து
நிறைந்து என் தன் நெஞ்சும் உள்ளே நிலைத்திடட்டும் நித்யமே

——————————————————–

ய தத்ய மித புத்தி நா பஹுள மோஹ பாஜா மயா
குண க்ரதித காய வாங்மனச வ்ருத்தி வை சித்ர்யத
அதர்க்கித ஹிதாஹித க்ரம விசேஷ மார்ப்யதே
தத்ப் யுசிதமர்ச்சனம் பரிக்ருஹாண ரங்கேஸ்வர –3-

மித புத்தி நா பஹுள மோஹ பாஜா மயா -சிறிய புத்தியை யுடைய என்னால் எத்தனையோ மோஹத்தை அடைந்த
குண க்ரதித காய வாங்மனச வ்ருத்தி வை சித்ர்யத-முக்குணங்களால் வரிந்து கட்டப் பட்டு இருக்கும்-தோஷ க்ருஹீத குணம் –
தேஹம் வாக்கு மனஸ் இவற்றின் போக்குகளின் வைசித்ர்யத்தால்
அதர்க்கித ஹிதாஹித க்ரம விசேஷ மார்ப்யதே-எது நல்ல வழி எது தவறானது என்று ஊஹித்து தெரிந்து கொள்ளாமல் ஆரம்பிக்கப் படுகிறதோ
ய தத்ய– தத்ப் யுசிதமர்ச்சனம் பரிக்ருஹாண ரங்கேஸ்வர–எந்த இந்த ஸ்துதி ஆரம்பிக்கப் படுகிறதோ
அதை தகுதியான பூஜையாக ஏற்றுக் கொண்டு அருள வேணும் -அர்ச்சக பராதீனராக கோயில் கொண்டு அருளும் ஸ்ரீ ரெங்கேஸ்வரா –
எவன் அவன் என்று ஸ்ரீ ரெங்கேஸ்வரனின் பெருமையாலும் –எது அது என்று பரிஹாஸமாகத் தன் தாழ்மையைக் காட்டி அருளுகிறார் –

அறிவுதனில் குறையுடையேன் அளவில்லா மோகத்தில்
ஆழ்ந்தவனாய் முக்குண வான் கயிற்றினால் கட்டுண்ட
பருவுடலும் வாய்ச சொல்லும் மனம் தனையும் உடையவனாய்
புரிகின்ற செயல் எல்லாம் பல பல வாய் பயனிலவாய்
இருக்கின்ற இந்நிலையில் இது நன்று இது தீது
என்று அறியா அடியேன் இத்துதியைத் தொடங்குகிறேன்
கருணையுடன் இதனையுமே தகுந்ததொரு வழி பாடாய்க்
கொள்வாயே அரங்கத்தில் குடி கொண்ட பெரும் தேவே –

——————————————————

மருத்தரணி பாவக த்ரிதச நாத காலாதய
ஸ்வ க்ருத்ய மதி குர்வதே த்வத பரா ததோ பிப்யத
மஹத் கிமபி வஜ்ர முத்ய தமி வேத யச்ச்ரூயதே
தரத்யநக தத் பயம் ய இஹ தாவக ஸ்தாவக –4-

மருத்தரணி பாவக த்ரிதச நாத காலாதய –-வாயு சூர்யன் அக்னி இந்திரன் யமன் முதலியவர்கள் –
ஸ்வ க்ருத்ய மதி குர்வதே த்வத பரா ததோ பிப்யத-உமக்கு அபராதிகள் ஆகி விடுமோ என்று பயந்து தங்கள் வியாபாரத்தை நடத்துகிறார்கள் –
மஹத் கிமபி வஜ்ர முத்ய தமி வேத யச்ச்ரூயதே-பெரிய வர்ணிக்க முடியாத அத்தனை கொடிய வஜ்ராயுதம் போன்ற பயம் என்று எது சுருதியில் கேட்கப் படுகிறதோ
தரத்யநக தத் பயம் ய இஹ தாவக ஸ்தாவக -அந்த பயத்தை எவன் இங்கு துதிப்பவனோ அவன் தாண்டுகிறான்
உம்மைத் தவிர வேறு பய நிவர்த்தகர் இல்லையே -உம்மை துதிப்பவனே பயத்தை தாண்டுகிறான் –காலனுக்கு காலனாகிய கால காலன் நீர்
தரதி சோகம் ஆத்மவித் -அதஸோ அபயம் காதோ பவதி
அநக-ஸ்துதிக்கும் நான் குற்றம் உள்ளவனாகவும் என் ஸ்துதியும் குற்றமாய் இருந்தாலும் போக்க வல்லவன் நீ அன்றோ –

ஓங்கியதோர் வச்சிரம் போல் உயர்ந்த உன் தன் தண்டனைக்கு
உறும் என்னும் அச்சத்தால் வளியோனும் கதிரவனும்
வீங்கெரியும் இந்திரனும் வான் காலன் முதலாய
தேவர் எலாம் தம் பணியைத் தவறாமல் ஆற்றுவதாய்
பாங்குடனே மறை முடிகள் பகர்கின்ற அச்சமதை
பாரினிலே எவரேனும் பக்தியுடன் பணிந்தவராய்
தீங்கில்லாத அரங்கன் உனைத் துதி செய்து வழி பட்டால்
தாண்டியராய் நல் கதியைத் தாம் அடைவர் உறுதி அன்றோ–

————————————————————-

பயந்த மிஹ ய ஸ்வ தீ நியத சேதன அசேதனம்
பநாயதி நமஸ்யதி ஸ்மரதி வக்தி பர்யேதி வா
குணம் கமபி வேத்தி வா தவ குணேச கோபாயிது
கதாசன குத்ஸசன க்வசன தஸ்ய ந ஸ்யாத் பயம் –5-

பயந்த மிஹ ய -ஸ்வ தீ நியத சேதன அசேதனம் -தன்னுடைய சங்கல்ப மாத்திரத்தாலே நியமிக்கப்படும்
சேதன அசேதநாத்மகமான உலகம் உடைய தேவரீரை –எவன் –
இஹ -வீற்று இருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல -அங்கு ஏதும் சோராமல் ஆள்கின்ற எம்பிரான் இங்கேயே இருக்க
பநாயதி நமஸ்யதி ஸ்மரதி வக்தி பர்யேதி வா -ஸ்துதிக்கிறானோ -நமஸ்கரிக்கிறானோ -ஸ்மரிக்கிறானோ
-திரு நாம சங்கீர்த்தனம் பண்ணுகிறானோ -பிரதக்ஷிணம் செய்கிறானோ –
குணம் கமபி வேத்தி வா தவ குணேச கோபாயிது -ரக்ஷகரான தேவரீருடைய ஒரு குணத்தையாவது அறிந்து உபாசிக்கிறானோ
-ஸ்ரீ ரங்கம் என்று உச்சரித்தாலும் போதுமே
கதாசன குத்ஸசன க்வசன தஸ்ய ந ஸ்யாத் பயம் -அவனுக்கு எக்காலத்திலும் -எங்கே இருந்தும் -எக்காரணத்தை இட்டும்
எவ்விடத்திலும் பயம் என்பதே உண்டாகாதே -ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குதஸ்ஸனா–ந பிபேதி கதாசன –

அரும் குணங்கள் நிறைந்த திரு வரங்கம் வாழ் பெருமானே
அறிவுடைய உயிர் எல்லாம் அறிவற்ற பொருள் யாவும்
பெரு மதியால் ஆள்கின்ற பெருமை தனை நீ யுடையாய்
பரு யுலகில் எவனேலும் புகழ்ந்து உன்னைத் துதித்தாலும்
சிறு வணக்கம் செய்தாலும் சிந்தனையில் கொண்டாலும்
நினை வலமே வந்தாலும் நலமுறுமுன் குணங்களிலே
ஒரு குணத்தை அறிந்தாலும் ஒருக்காலும் அவன் தானே
ஒருவிடத்தும் எங்கிருந்தும் உற்றிடானே பயம் தானே

———————————————————-

ஸ்திதே மனசி விக்ரஹே குணிநி தாது சாம்யே சதி
ஸ்மரேதகில தேஹிநம் ய இஹ ஜாதுசித் த்வா மஜம்
தயைவ கலு சந்தயா தமத தீர்க்க நித்ரா வசம்
ஸ்வயம் விஹித சம்ஸ்ம்ருதிர் நயசி தாம நை ஸ்ரேயசம்–6-

மனசி ஸ்திதே–மனசானது -ஒரு விஷயத்தில் நிலை நிற்க சக்தமாய் இருக்கும் போதே -விக்ரஹே குணிநி-சரீரம் ஸ்வஸ்தமாய் நல் வழியிலே இருக்கும் போதே
தாது சாம்யே சதி -தாதுக்கள் சமமாய் அரோகமாய் இருக்கும் போதே
தயைவ கலு சந்தயா -அந்த ஒரு நினைவைக் கொண்டே
ஸ்வயம் விஹித சம்ஸ்ம்ருதிர்-நீராகவே உம்மை அவனை நினைக்கச் செய்து
கலு -பிராமண சித்தியை பற்றி அருளிச் செய்கிறார்
ஸ்மரேதகில தேஹிநம் ய இஹ ஜாதுசித் த்வா மஜம்- சர்வ சரீரியாகவும் -பிறப்பு அற்றவருமாக உம்மை எப்பொழுதாவது
ஒரு தடவை ஸ்மரித்து இருப்பான் ஆகில்
தமத தீர்க்க நித்ரா வசம் –பிறகு –நீண்ட துக்கமான மரணத்தின் வசமாய் இருக்கும் போது
எம்பெருமானால் அருள பெற்றவனுக்கு மரணம் என்று சொல்லாமல் தீர்க்கமான நித்திரை என்றே அருளிச் செய்கிறார்
நயசி தாம நை ஸ்ரேயசம்-தனக்கு மேல் பட்ட ஸ்ரேயஸ் இல்லாத மோக்ஷம் என்னும் ஸ்தானத்தை சேர்ப்பித்து அருளுகிறீர்
துப்புடையாரை –எய்ப்பு என்னை வந்து நலியும் போது அப்போதைக்கு இப்பொத்தே சொல்லி வைத்தேன் -அரங்கத்து அரவணைப் பள்ளியானே –

மண்ணுலகில் எவனும் தன் மனம் நல்ல நிலை கொண்டு
மெய்தானும் திடமாக மேன்மையுடன் இருக்கையிலே
நன்னிலையில் உடம்பில் உள்ள நரம்பாதி தாதுக்கள்
நன் முறையில் இயங்கி வரும் நாட்களில் என்றேனும்
எண்ணற்ற பொருள் அனைத்தில் உட் புகுந்த ஆன்மாவாய்
ஏற்றமுடைப் பிறப்பிலியாம் உன் தன்னை ஒரு முறையே
எண்ணுவனேல் அந்நினைவை இறுதியிலே உண்டாக்கி
எட்டரிய முக்தி தனை எய்தி விடச் செய்கின்றாய் –

——————————————-

ரமா தயித ரங்கபூ ரமண க்ருஷ்ண விஷ்ணோ ஹரே
த்ரிவிக்ரம ஜனார்த்தன த்ரியுகே நாத நாராயண
இதீவ ஸூபதாநி ய படதி நாமதே யாநி தே
ந தஸ்ய எம வஸ்யதா நரக பாத பீதி குத–7-

ரமா தயித ரங்கபூ ரமண க்ருஷ்ண –ஸ்ரீ லஷ்மீ காந்தா -ஸ்ரீ ரங்கத்தில் ரமிப்பவனே -உம்மை விட்டு பிரிந்து பெரிய பிராட்டியாரும் ஸ்ரீ பூமிப் பிராட்டியும் இருக்கவோ
ரங்க -நடுவில் வைத்து இரண்டு பக்கம் உபய நாச்சியாரை வைத்து அருளிய அழகு நோக்கவும்
–கண்ணனே -பூர்ண ஆனந்த பூமியே –
விஷ்ணோ -சர்வ வியாபியே –ஹரே-ஆபத்துக்களை ஹரித்து அருளும் ஸ்ரீ ஸிம்ஹமே-பிராணாதார்த்தி ஹரன் அல்லவோ
த்ரிவிக்ரம-மூ உலகு அளந்த சேவடியோனே
ஜனார்த்தன-ஜென்மங்களை முடித்து அருளும் ஜனார்த்தனன்
த்ரியுகே -ஷட் குண பரி பூர்ணனே
நாத நாராயண -ஸ்ரீ நாதனே -ஸ்ரீ மன் நாராயணனே
இதீவ ஸூபதாநி ய படதி நாமதே யாநி தே -இதுவும் இது போல் உள்ள க்ஷேமத்தை அளிக்கும் உம்முடைய திரு நாமங்களை உச்சரிக்கிறானோ
ந தஸ்ய எம வஸ்யதா நரக பாத பீதி குத–அவனுக்கு காலன் வசம் கிடையாதே -நரகத்தில் வீழ்வது என்னும் பயம் எங்கிருந்து வரும் –
அரங்கனை விட்டு பிரிந்தால் நரகம் -கூட இருந்து கைங்கர்யம் செய்து கொண்டே இருப்பதே சுவர்க்கம் என்று நினைக்கும் பிராட்டி போல்வார் அன்றோ இவரும்
தேவரீர் செஞ்சிக் கோட்டையிலும் பெரிய பிராட்டியார் ஸ்ரீ ரெங்கத்திலும் இருப்பதோ அகலகில்லேன் இறையும் என்று இருப்பவளுக்கு சேருமோ –
ஸ்ரீ பூமிப் பிராட்டியும் உம்மை விட்டு பிரிந்து அல்லல் பாடவோ -நாதன் ஒரு இடமும் ஸ்ரீ ரெங்க நாச்சியார் அரங்கம் பூமா தேவி அரங்க நகர் வாசிகள் இங்கும் இருக்கவோ –

பூ மகளின் நல் துணைவா பொழில் அரங்கக் காதலனே
முகில் வண்ண கண்ணாவே மறைந்து எங்கும் நிற்பவனே
தீமைகளை ஒழிப்பவனே திருவடியால் உலகு அளந்த
திரி விக்ரமா ஸ்ரீ ஜனார்த்தன திரு வாறு குணமுடையோய்
நாம் வணங்கும் பெரும் தலைவா நாராயணா என்று என்று
நலம் எல்லாம் தருமூன்றன் நாமங்களைப் பயில்வோனை
நமன் தனக்கு வயமாக்கும் நிலை என்றும் ஏற்படாதே
நரகத்தில் வீழ்கின்ற நடுக்கம் தான் உண்டோ தான் –

———————————————–

கதாசிதாபி ரங்க பூ ரசிக யத்ர தேசே வசீ
த்வ தேக நியதா சயஸ்த்ரிதச வந்திதோ வர்த்ததே
தத ஷத தபோவனம் தவ ச ராஜதா நீ ஸ்திரா
ஸூ கஸ்ய ஸூகமாஸ் பதம் ஸூசரிதஸ்ய துர்க்கம் மஹத் –8-

ரங்க பூ ரசிக –-ஸ்ரீ ரெங்கத்தில் நித்ய வாசம் பண்ணி அருளுபவரே-பரஸ்பரம் ஸ்ரீ ரெங்க வாசிகளுக்கு உமக்கும் ரசிக்காத தன்மை உண்டே
வசீ ஆயஸ-இந்திரியங்களை வசப்படுத்தியவரும்-இந்திரியங்களை அடைக்கு அருளுவர் நித்ய வாசம் செய்யும் இடமே
குருஷேத்ரம் நைமிசாரண்யம் புஷ்கரம் என்று ஸ்தான விசேஷ அதிகாரத்தில் அருளிச் செய்துள்ளார்
த்வ தேக நியதா-தொண்டர் அடி பொடி ஆழ்வாரை போலே உம்மிடையே நிலை நிறுத்திய பக்தியை யுடையவரும்
த்ரிதச வந்திதோ-தேவர்களால் நமஸ்கரிக்கப் படும் பெரிய பெருமாளை -நித்ய சூரிகள் ஏதேனுமாக இருக்க ஆசைப்பட்டு இருக்கும் திவ்ய தேசம் அன்றோ
யத்ர தேசே கதாசிதாபி- வர்த்ததே -எந்த தேசத்தில் ஒரு பொழுதாவது இருக்கிறாரோ
தத ஷத தபோவனம்-அது இடையூறு இல்லாத தபோ வனம்
தவ ச ராஜதா நீ ஸ்திரா -உமக்கும் ஸ்திரமான ராஜ தாநீ
ஸூ கஸ்ய ஸூகமாஸ் பதம் -ஸூ கத்துக்கும் ஸூ கமான இருப்பிடம்
ஸூசரிதஸ்ய துர்க்கம் மஹத்-நல்ல நடத்தைக்கும் ஒரு பெரிய அரண் — கோட்டை
பரமை காந்திகள் உள்ள தேசமே நீர் உகந்த திவ்ய தேசம் என்றவாறு -தர்மத்துக்கு இவர்கள் வாசம் செய்யும் இடமே அரண் அன்றோ
அத்ரைவ ஸூ கமாஸ்க்வா என்று எம் உடையவருக்கு அருளிய பின்பு நீர் இத்தை விட்டு செஞ்சி கோட்டையில் இருக்கவோ –

அரங்கத்தில் அன்புடனே அணைந்து உறையும் பெருமாளே
அலை பாயும் புலன்களை அடக்கி யாளும் திறமுடைத்து உன்
ஒருவனையே மனம் வைத்து ஒழுகுவதால் தேவர்களும்
ஓன்று கூடி போற்றுகிற உத்தமமாம் உயர்வுடையோன்
ஒரு பொழுதே வாழ்ந்திட்ட ஓர் இடமே தடை இன்றி
உயர் தவத்தைப் புரிவதற்கு உறும் இடமாம் உன்னுடைய
உறுதியான தலை நகராம் ஒப்பற்ற சுகத் தலமாம்
உற்ற பெரும் நல் வினைக்கோர் உரிய பெரும் அரணாமே

———————————————

த்ரி வர்க்க பத வர்த்தி நாம் த்ரி குண லங்க நோத்யோசி நாம்
த்விஷத் ப்ரமத நார்த்தி நாமபி ச ரங்க த்ருஸ் யோதயா
ஸ்கலத் சமய காதரீ ஹரண ஜாக ரூகா ப்ரபோ
கர கிரஹண தீக்ஷிதா க இவ தே ந திவ்யா குணா –9-

த்ரி வர்க்க பத வர்த்தி நாம்-தர்ம அர்த்த காமங்களை கோருகிறவர்க்கும்
த்ரி குண லங்க நோத்யோசி நாம் -முக்குண சேர்க்கையான பிரகிருதி மண்டலத்தை தாண்ட நினைத்து பிரயத்தனம் பட்டு
கைவல்யம் -பகவத் புருஷார்த்தம் வேண்டுபவர்க்கும்
த்விஷத் ப்ரமத நார்த்தி நாமபி-பகவத் பாகவத விரோதிகளை நிரசிக்க கோருபவர்களுக்கும்
ச ரங்க த்ருஸ் யோதயா -ஸ்ரீ ரெங்கத்தில் பிரத்யக்ஷமாக சேவிக்க வருபவர்களுக்கும்
ஸ்கலத் சமய காதரீ ஹரண ஜாக ரூகா-தடங்கல் வரும் காலத்தில் சேரும் பயத்தை விளக்க தூங்காமல்
விழித்து ஜாக்ரதையாக ரஷித்துக் கொண்டு இருப்பதுமான
ப்ரபோ -என் ஸ்வாமியே
கர கிரஹண தீக்ஷிதா க இவ தே ந திவ்யா குணா-உம்முடைய திவ்ய குணங்கள் இங்கே எவை கை கொடுத்து ரஷிப்பதையே
தீக்ஷையாக விரதமாக கொண்டவை இல்லாமல் அல்லவே —
உம் கல்யாண குணங்களின் வலிமையால் எங்கள் மநோ ரதம் -விரோதிகள் நிரசிக்கப் பட்டு நீர் மீண்டும்
ஸ்ரீ ரெங்கம் எழுந்து அருளி நித்ய சேவை மீண்டும் சாதித்து அருள வேண்டும் என்றபடி –

அறம் முதலாம் மூன்று தனில் அகம் படிந்து துணிவோர்க்கும்
அல்லல் மிகு வாழ்வு என்னும் ஆழ் கடலைக் கடந்து செலும்
பெரு முயற்சி செய்வோர்க்கும் பணிந்து உன்னை வாழ்வார் தம்
பகைவர்கள் ஒழிந்திடவே மனம் கொண்ட அடியார்க்கும்
நெறி தவறும் சமயத்தில் நேருகின்ற அச்சத்தை
நீக்குவதில் கருத்துடனே நீள் கரத்தால் காத்திடவே
பெரு நகராம் அரங்கத்தில் பள்ளி கொண்ட பெருமான் உன்
பல் குணத்துள் எவையே தாம் விரதத்துடன் நிற்க வில்லை

————————————————-

பிபேதி பவப்ருத ப்ரபோ த்வது பதேச தீவ்ர ஒளஷதாத்
கதத்வ ரஸ துர்வேஷ பளிச பக்ஷவத் ப்ரீயதே
அபத்ய பரிஹார தீ திமுக மித்த மா கஸ்மி கீ
தமப்ய வசரே க்ரமாதவதி வத்சலா த்வத்தயா –10-

பவப்ருத ப்ரபோ த்வது பதேச தீவ்ர ஒளஷதாத் –பிரபுவே -சம்சாரத்தை யுடைய சேதனன்-உம்மால் உபதேசிக்கப் படும் தர்மம் என்னும்
உக்ரமான மருந்தில் இருந்து -உபாயாந்தரங்களின் கடுமையை அனுசந்தித்து –
பவம் -சம்சாரம் -மங்களம் -என்று பிரமிக்க வைக்கும்
பிபேதி -பயப்படுகிறான் –
கதத்வ ரஸ துர்வேஷ பளிச பக்ஷவத் -கெட்ட மார்க்கத்தில் -ரசம் என்னும் கொடிய விஷத்தில் -தூண்டில் உள்ளவற்றை மீன் ரசித்து மாட்டிக் கொள்வது போலே –
ப்ரீயதே-ப்ரீத்தி பண்ணுகிறான்
அபத்ய பரிஹார தீ திமுக மித்தம் -இப்படி தனக்கு கெடுதலை பரிஹரிப்பது என்னும் எண்ணத்தையே நோக்காத படி
ஆபி முக்யம் இருந்தாலுமே போதுமே -அது கூட இல்லாமல் அன்றோ உள்ளோம்
ஆகஸ்மி கீ -காரணம் இன்னது என்று அறியக் கூடாத -நிர்ஹேதுகமாக –
தமப்ய வசரே -இப்படிக்கு கெட்டவனையும் ஒரு கால விசேஷத்தில்
க்ரமாதவதி வத்சலா த்வத்தயா-உம்முடைய தயை வாத்சல்யம் – என்னும் கல்யாண குணமே படிப் படியாக ஜன்ம சன்மாந்தரம் ரஷித்து அருளி
ஜாயமான கடாக்ஷத்தால் சாத்விகனாக்கி தன்னைப் பற்றி சிந்திக்க அருளுகிறார் -யாதிருச்சிக்க ஸூ ஹ்ருதம் போன்று
மடி மாங்காய் இட்டு நடாத்தி கொண்டு அருளுகிறார் –தயா பிரசாத க்ரமங்களை அருளிச் செய்கிறார் –
சரணாகதி மேலே–20/21- ஸ்லோகங்களில் அருளிச் செய்வார் –

பவக் கடலில் சுழன்று உழலும் மானுடவன் நீ வழங்கும்
பரிந்துரையாம் கசப்பான மருந்துக்கு அஞ்சுகிறான்
சுவை என்னும் கொடு விஷத்தை சுரக்கின்ற கீழ்மையிலே
தூண்டில் புழு நாடும் மீன் தனைப் போலே நச்சுகிறான்
இவை போன்ற தீய்மைகளை ஒழித்திடவும் எண்ணிடாதே
இருக்கின்ற மனிதனையும் இரக்கமுடன் திருவரங்கா
தவறாமல் உன் தயை தான் காரணமே ஹேதும் இன்றி
தருணத்தில் பாய்வதனால் நாளடைவில் காத்திடுமே —

—————————————

அபார்த்த இதி நிஸ்ஸிதா ப்ரஹரணாதி யோகஸ்தவ
ஸ்வயம் வஹஸி நிர்பயஸ்ததபி ரங்க ப்ருத்வீ தர
ஸ்வ ரக்ஷண மிபாபவத் ப்ரணத ரக்ஷணம் தாவகம்
யாதத்த பரமார்த்த விந்நியத மந்தராத் மேதி தே -11-

ரங்க ப்ருத்வீ தர -ஸ்ரீ ரெங்க ராஜனே -பூமிக்கு எல்லாம் அதிபதியாய் இருந்தும் பூமியில் ஏக தேசமான ஸ்ரீ ரெங்கம் விட்டு இருக்கலாமோ –
அபார்த்த இதி நிஸ்ஸிதா ப்ரஹரணாதி யோகஸ்தவ -தீய ஆயுதங்கள் உடன் நீ கூடியே இருப்பது வீண் -இது நிச்சயம்
-சதா பஞ்சாயுதம் பிப்ரத் -நீர் ரசிக்காமல் இன்று இருப்பதால் இவை வீண் அன்றோ –
ஸ்வயம் வஹஸி நிர்பயஸ்ததபி–இருந்தாலும் -பயமே இல்லாத நீர் -நீரே இவற்றைத் தரித்து இருக்கின்றீர் –
ஸ்வ ரக்ஷண மிபாபவத் ப்ரணத ரக்ஷணம் தாவகம்-ஆஸ்ரித ரக்ஷணம் -உம் ரக்ஷணம் போலே -உமது சொந்தப பணியாக அன்றோ ஏற்பட்டது –
யாதத்த பரமார்த்த விந்நியத மந்தராத் மேதி தே -ஏன் என்னில்-பகவானே -தனக்கும் மற்ற எல்லா உயிர்களுக்கும் உயிர் என்று அறிந்த ஞானி
-உம்முடைய அந்தராத்மா -உமக்கும் உள்ளான உயிர் என்று அன்றோ நீர் ஸ்ரீ கீதையில் அருளிச் செய்தீர் அன்றோ –

படைக் கலன்கள் தாங்குவதால் பயன் இல்லை உன் தனக்கே
பயமற்று விளங்கும் நீ படைக்கலம் ஏன் தரிக்கின்றாய்
வடிவரங்கத்தலத் தரசே மேம் பொருளை உணர்ந்தவராய்
விளங்கும் நல் ஞானி யுன்தன் யுயிர் என்று விளம்பி யுள்ளாய்
அடியார்கள் அவர் போல் அனைவரையும் காத்திடவே
ஆயுதங்கள் தமைத் தாங்கி ஆயத்தமாய் நிற்கின்றாய்
அடியாரைக் காக்கின்ற அரும் செயல்கள் எல்லாமே
உன்னையே நீ காப்பனவாய் உண்மையிலே ஆயிற்றே –

————————————–

லசிஷ்ட ஸூ க சங்கதை ஸ்க்ருத கர்ம நிர்வர்த்திதை
களத்ர ஸூத சோதரா அநுசர பந்து சம்பந்திபி
தன ப்ரப்ருதி கைரபி பிரசுர பீதி பேதோத்தரை
ந பிப்ரதீ த்ருதிம் ப்ரபோ த்வத் அநு பூதி போகார்த்தின –12-

ப்ரபோ த்வத் அநு பூதி போகார்த்தின –-சர்வ அந்தர்யாமியான பிரபுவே -உம்மை அனுபவிக்கும் இன்பத்தையே ஆசைப்படுகிறவர்கள் –
நீர் ஞானிகளை ஆத்மாவாக கருதினாலும் -நாங்கள் நீரே சர்வ அந்தர்யாமி பிரபு என்று அறிவோம் –
லசிஷ்ட ஸூ க சங்கதை -மிகவும் அற்பமான ஸூ கத்தின் ஸ்பர்சத்தை-சங்கத்தை கொடுப்பதும் -சம்சார பந்தம் உண்டாக்கும் இவை
பிரசுர பீதி பேதோத்தரை-பெரிதான பலவித பயங்களை மேல் மேல் விளைவிப்பதும்
ஸ்க்ருத கர்ம நிர்வர்த்திதை-தான் சிரமப் பட்டுச் செய்த புண்ய கர்மங்களால் சம்பாதிக்கப் பட்டது மான
களத்ர ஸூத சோதரா அநுசர பந்து சம்பந்திபி -கொண்ட பெண்டிர் -மக்கள் உடன் பிறந்தார் வேலைக்காரர் பந்துக்கள் என்று
நன்றாய் நம்மைப் பந்தப் படுத்தும் இவர்களாலும்
தாரம் -சுழல் / மக்கள் முதலைகள் /சம்சாரம் பயங்கர கடல் -முகுந்த மாலை –
தன ப்ரப்ருதி கைரபி-செல்வம் ஆயுள் ஆரோக்யம் முதலியவற்றாலும்
ந பிப்ரதீ த்ருதிம் -சந்தோஷத்தை பெறுகிறது இல்லை –

நின்னையே அகலாது நுகர்கின்ற போகத்தை
நண்ணுகின்ற மனமுடைய நல்லோர்கள் யாவருமே
மின்னனைய அற்ப சார மகிழ்வினையே தருகின்ற
முன்னாளில் தாம் செய்த கருமத்தினால் விளைந்தனவாய்
எண்ணரிய பல்வகையாம் அச்சத்தையே தருவனவாம்
இல்லாளும் மக்களாலும் உடன் பிறந்தார் பணியாளர்
இன்னம் உள்ள உற்றத்தார் இவராலும் தனத்தாலும்
ஏற்படுமாம் இன்பத்தில் உளம் கொள்ள மாட்டாரே –

——————————————-

ந வக்துமபி சக்யதே நரக கர்ப வாஸாதிகம்
வபுஸ்ச பஹு தாதுகம் நிபுண சிந்தநே தாத்ருசம்
த்ரி விஷ்டப முகம் ததா தவ பதஸ்ய தேதீ பத
கிமத்ர ந பயாஸ் பதம் பவதி ரங்க ப்ருத்வீ பதே -13-

ரங்க ப்ருத்வீ பதே —ஸ்ரீ ரங்க பூமிக்கு அரசனே
ந வக்துமபி சக்யதே நரக கர்ப வாஸாதிகம் -நரக கர்ப்ப வாசம் முதலியது-இவ்வளவு கஷ்டம் என்று சொல்வதற்கு கூட சாத்தியம் இல்லை
வபுஸ்ச பஹு தாதுகம் நிபுண சிந்தநே தாத்ருசம் -தேகமும் அப்படியே உன்னி சிந்தித்தால் துஸ் சஹமாய் இருக்கும்
த்ரி விஷ்டப முகம் ததா தவ பதஸ்ய தேதீ பத -ஸ்வர்க்கம்முதலானதும் ஜ்யோதிர் மயமாய் பிரகாசிக்கும்
-உம் ஸ்தானத்தை -உன் சுடர் அடியை -இட்டுப் பார்த்தால் அப்படியே நரக துல்யமாய் இருக்கும்
கிமத்ர ந பயாஸ் பதம் பவதி -இங்கு இப்புவியில் எது தான் பயத்துக்கு இடமாவது இல்லை
உம்மை விட்டு பிரிந்து இருப்பதே நரகம் என்றவாறு -ஸ்ரீ ரெங்கத்தில் நீர் மீண்டும் எழுந்து அருளி
எங்கள் பயத்தை போக்கி நிரதிசய நித்ய -ஸூ கம் தந்து அருள வேண்டும்-

————————————————————————–

பவந்தி முக பேததோ பய நிதான மேவ ப்ரபோ
ஸூப அ ஸூப விகல்பிதா ஜகதி தேச காலாதய
இதி பிரசுர ஸாத்வஸே மயி தயிஷ்யஸே த்வம் ந சேத்
க இத்தம நு கம்பிதா த்வதநு கம்ப நீ யஸ்ஸ க –14-

ப்ரபோ -என் பிரபுவே
ஸூப அ ஸூப விகல்பிதா ஜகதி தேச காலாதய -ஸூபம் அஸூபம் என்று பிரித்துப் பேசப்படும் -தேசம் காலம் முதலியவை
பவந்தி முக பேததோ பய நிதான மேவ -ஒரு ஒரு பர்யாயமாக -பயத்திற்கே காரணமாக ஆகின்றன
இதி பிரசுர ஸாத்வஸே மயி தயிஷ்யஸே த்வம் ந சேத் -இப்படி மிகவும் பரந்த பயத்தை யுடைய என்னிடம் நீர் தயவு செய்யாது போனால்

நல்லவையே தரும் என்றும் தீயவையே தரும் என்றும்
தேசத்தையும் காலத்தையும் திறம்படவே பிரித்தாலும்
எல்லாமே வெவ்வேறு வழிகளிலே தீமையையே
அளிக்கும் படி அமைந்தனவாய் அச்சத்தையே தரும் என்றே
எல்லையில்லா பயம் கொண்ட என் மீதே அரங்கா நீ
இரக்கம் தான் கொள்ளாயேல் இவ்வாறு அருள் புரியும்
நல்லானும் வேறு உளனோ நிலவுலகில் நின்னுடைய
நல்லருளைப் பெறும் தகுதி நிறைந்தவனும் வேறு உளனோ –

—————————————————————

ஸக்ருத் பிரபதன ஸ்ப்ருசாமபய தான நித்ய வ்ரதீ
ந ச த்விர பிபாஷஸே த்வமிதி விஸ்ருத ஸ்வோக்தித
யதோக்த கரணம் விதுஸ்தவ து யாதுதா நாதய
கதம் விதத மஸ்து தத் க்ருபண ஸார்வ பவ்ம மயி –15-

ஸக்ருத் பிரபதன ஸ்ப்ருசாம் -ஒரு தரம் பிரபத்தி என்னும் உபாயத்தை தொட்டவர்க்கும் –ஸக்ருத் ஏவ பிரபன்னாயா -என்பதையே இங்கு அருளிச் செய்கிறார்
விபீஷணன் கூட வந்ததற்கும் பலன் உண்டே -சம்பந்தம் காட்டவே ஸ்ப்ருசாம்-என்று அருளிச் செய்கிறார்
த்வம் அபயதான நித்ய வ்ரதீ -நீர் அபயம் அளிப்பதையே விரதமாக -தீக்ஷையாக -சர்வ பூதேப்ய அபயம் ததாமி–ஏதத் மம விரதம் –
ததாமி நிகழ் காலம் –சர்வ காலிகம் என்றபடி
ந ச த்விர பிபாஷஸே த்வமிதி விஸ்ருத ஸ்வோக்தித –இரண்டாவது வார்த்தை மாற்றி பேச மாட்டீர்
-உம்முடைய உறுதியான பேச்சாலே -நீர் பிரசித்தர் –ராம த்வி ந அபி பாஷதே
யதோக்த கரணம் விதுஸ்தவ து யாதுதா நாதய-ராக்ஷசர் முதலானவர்களை உம்முடைய சொன்ன வண்ணம் செய்வதையே அனுபவித்து உள்ளனர்
யதோத்த காரீ அன்றோ நீர்
கதம் விதத மஸ்து தத் க்ருபண ஸார்வ பவ்ம மயி -அந்த குணம் -கார்ப்பண்ய பூர்த்தி உள்ள -அகிஞ்சனான என் விஷயத்தில் எப்படி பொய்யாகலாம் –
அடியேன் மநோ ரதம் பூர்த்தி யான பின்பு தானே நீர் விஜூரராக இருக்கலாம்
தாசேஷூ சத்யன் -அடியாரவர்க்கு மெய்யன் அன்றோ -உம் பெயர் நிலைத்து இருக்க அருளால் ஒழியக் கூடாதே –

ஒரு முறையே சரணம் என உன்னிடமே உற்றவர்க்கு
அபயம் தனை அளிக்கின்ற அரும் செயலை விரதம் என
நிரந்தரமாய் கொண்டுளதாய் நீ தானே வெளியிட்டாய்
நீயே தான் இரு முறைகள் நான் உரையேன் என்று உரைத்துப்
பெறும் புகழைப் பெற்றுள்ளாய் பகர்வதையே செய்பவனாய்
புவியில் உனை அரக்கர்களும் முதலானோர் அறிந்துள்ளார்
ஒரு புகலும் அற்றவரின் ஒப்பற்ற தலைவன் என
உறும் எனக்கு உன் விரதம் வீணாக ஆகிடுமோ

———————————————–

அநு க்ஷண சமுத்திதே துரித வாரிதவ் துஸ்தரே
யதி க்வசன நிஷ்க்ருதிர் பவதி ஸாஅபி தோஷா விலா
ததித்த மகதவ் மயி ப்ரதி விதா நமா தீயதாம்
ஸ்வ புத்தி பரி கல்பிதம் கிமபி ரங்க துர்ய த்வயா –16-

அநு க்ஷண சமுத்திதே–ப்ரதி க்ஷணமும் பெருகுகிறதும்
துரித வாரிதவ் துஸ்தரே -தாண்டுவதற்கு அரிதானதுமான -பாபம் ஆகிற கடல் விஷயத்தில்
யதி க்வசன நிஷ்க்ருதிர் பவதி ஸாஅபி தோஷா விலா –ப்ராயச்சித்த காண்டங்களில் விதித்த விதி இருந்ததனால்
அந்த பிராயச்சித்தமும் -ப்ரதி க்ஷணமும் பயன்கள் உத்பத்தி ஆகின்றன -என்று முன் சொன்ன காரணத்தாலேயே -அசுத்தமாகவே ஆகிறது –
ததித்த மகதவ் மயி-ஆகையால் இப்படி வேறு கதியே இல்லாத என் விஷயத்தில்
ப்ரதி விதா நமா தீயதாம் –ப்ரதி விதாநம் ஆதீயதாம் -பிராயச்சித்தம் செய்யப் பட வேண்டும்
ஸ்வ புத்தி பரி கல்பிதம் கிமபி ரங்க துர்ய த்வயா –ஸ்ரீ ரெங்க நாதா -உம் புத்தியால் ஆலோசிக்கப் பட்ட பிராய்ச சித்தம் செய்யப் பட வேணும்
நீ இன்றி ஒன்றுமே செய்ய முடியாத அகதி அன்றோ அடியேன் என்றபடி -நீயே கர்த்தாவாய் அடியேனை செய்விக்க வேணும் –
ஸ்ரீ ரெங்க பிரபு -இந்த ஸ்ரீ ரெங்க ரக்ஷண பரத்தை நீர் தானே வஹித்துக் கொண்டு எங்கள்
பயத்தை தீர்த்து அருள வேண்டும் என்பதே இப்பொழுது பிரபதனம் –

கணம் தோறும் பெருகி வரும் கடத்தரிய வினைக் கடலைக்
கடப்பதற்கே நெறி வகுத்த கழுவாயைச் செய்தாலும்
அணை போன்ற குற்றங்கள் அது தனையும் குலைத்திடுமே
ஆதலினால் கதியேதும் அற்றவனாய் நிற்கின்றேன்
கணக்கில்லா என் தீ வினைகள் கழிவதற்கே அரங்கா நின்
கருத்தாலே தக்கதொரு கழி வாயைத் தோற்றுவித்து
எனை அதிலே மூட்டுவித்து எவ்விதமாம் தடையும் அற
எனையதனைச் செய்வித்து ஏற்றம் உறச் செய்வாயே –

————————————————————

விஷாத பஹுளாதகம் விஷய வர்க்கதோ துர் ஜயாத்
பிபேமி வ்ருஜி நோத்தரஸ் த்வதநு பூதி விச்சேததி
மயா நியத நாதவா நயமிதி த்வமர்த்தா பயன்
தயாதன ஜகத் பதே தயித ரங்க சம் ரக்ஷமாம் –17-

விஷாத பஹுளாதகம் –துக்கமே அதிகமாய் உள்ளதும்
விஷய வர்க்கதோ துர் ஜயாத்-ஜெயிக்க முடியாததுமான விஷயாந்தரங்களின் கூட்டத்தின் வலிமையினால்
உண்ணிலாவிய ஐவரால் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம் நண்ணிலா வகையே -என்னுடைய சரீரே வர்த்தமானமாய் -அத ஏவ அவர்ஜ நீயமுமாய் ம்ருத்யு சத்ருசமுமாய் பயங்கரமுமாய் இருந்த
பஞ்ச இந்த்ரியங்களாலும் விஷயங்களில் என்னை ஆகர்ஷிப்பித்து -என்றபடி –
பிபேமி வ்ருஜி நோத்தரஸ் த்வதநு பூதி விச்சேததி-அதிக பாபம் உடைய நான் -உம்மை அனுபவிக்கத் தடை ஏற்பட்டு விடுமோ என்று பயப்படுகிறேன் –
மயா நியத நாதவா நயமிதி த்வமர்த்தா பயன் -என்னால் இவன் கை விடாத நாதனை யுடையவன் என்று திரு உள்ளம் பற்றி
அருளிச் செய்து -அடியேனை ரஷித்து அருள வேண்டும் –
தயாதன ஜகத் பதே தயித ரங்க சம் ரக்ஷமாம் -தயை செல்வம் நிறைந்தவர் -சர்வ லோக ஸ்வாமியே -ஸ்ரீ ரெங்கத்தில் பிரியம் யுடையவர் –
நீர் ஜகத் பதியாய் இருக்க உம் சொத்தை கள்ளர் கொண்டு போகலாமா –

செய்வினையோ மிகப் பெரிதாம் தடையின்றி தொடர்கின்றேன்
சகமிதிலே உறும் சுகங்கள் துயர் தனையே தருவனவாய்
செயிப்பதற்கும் அரியவையாய் திறம் உளதை நான் அறிவேன்
திரு வரங்கத்தை காதல் உற்று தனி இடமாய்க் கொண்டவனே
தயை என்னும் நிதியுடையாய் தரணி தனின் தனித் தலைவா
நின்னுடைய அனுபவத்தில் தடையுறவே அஞ்சுகிறேன்
நயந்து உன்னை அடியேனே நாதன் என வரித்ததனை
நற் பொருளாய்க் கொண்டு என்னை நீ தானே காத்து அருளே –

———————————————————-

நிசர்க்க நிர நிஷ்டதா தவ நிரம்ஹச ஸ்ரூயதே
ததஸ் த்ரியுக ஸ்ருஷ்ட்டிவத் பவதி ஸம்ஹ்ருதி க்ரீடிதம்
ததா அபி சரணா கத ப்ரணய பங்க பீதோ பவான்
மதிஷ்டமிஹ யத் பவேத் கிமபி மா ஸ்ம தஜ்ஜீ ஹபத் –-18-

நிசர்க்க நிர நிஷ்டதா-எப்பொருளும் அநிஷ்டமாகக் கூடாத ஸ்வ பாவமானது உண்டு என்று
தவ நிரம்ஹச ஸ்ரூயதே -பாபம் அற்ற உமக்கு -என்று சுருதியில் கூறப்பட்டு இருக்கிறது –ததஸ் த்ரியுக ஸ்ருஷ்ட்டிவத் பவதி ஸம்ஹ்ருதி க்ரீடிதம் -கலி யுகம் தவிர மற்ற மூன்று யுகங்களிலும் விபவாதாரம் செய்து அருளுபவரே
-ஸ்ருஷ்டியைப் போலவே சம்ஹாரமும் உமக்கு லீலையாகவே இருக்கிறது –
ததா அபி சரணா கத ப்ரணய பங்க பீதோ பவான் -அப்படி இருந்தும் நீர் சரணாகதனுடைய உம் விஷயமான பரிவை திரஸ்கரிக்கப் பயப்படுகிறவர்
மதிஷ்டமிஹ யத் பவேத் கிமபி மா ஸ்ம தஜ்ஜீ ஹபத் -ஆகையால் இவ்வுலகத்தில் எது ஓன்று எனக்கு இஷ்டம் ஆகுமோ அதை நழுவ விடக் கூடாது
உம்முடைய திரு மேனி ரக்ஷை தானே அடியேன் இஷ்டம் -இஷ்ட பங்கம் வராதபடி உம்மை சதா சேவித்துக் கொண்டே இருக்கும் படி
உம்முடைய திவ்ய மங்கள விக்ரஹத்தைநீரே ரஷித்து அருள வேணும் -என்றபடி –
இந்த ஸ்லோகத்திலும் ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்ன ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டே அருளிச் செய்கிறார் –

இழிவேதும் அற்றவன் நீ என்பதனால் துக்கமிலா
இயல்புடையன் என யுன்னை இயம்பிடுமே அரு மறைகள்
செழிப்பான அறு குணங்கள் நிறைந்தனவாம் உன் தனக்கு
ஸ்ருஷ்டியைப் போலே அழித்தலுமோர் திரு விளையாட்டு எனவாகும்
வழி பட்டு உன் அடி அடைந்தோர் விருப்பத்தை மறுப்பதற்கு
மனம் அஞ்சி நீ என் தன் விருப்பத்தில் நல்லவற்றை
ஒழியாமல் மேல் கொண்டு உரியதனைச் செய்வதனால்
உனை யுற்ற எனைக் காத்தே ஊக்கமுடன் அருளிடுவாய் –

———————————————-

கயாது ஸூத வாயச த்வி ரத புங்கவ திரௌபதீ
விபீஷண புஜங்கம வ்ராஜ கணாம் பரீஷாதய
பவத் பத ஸமாச்ரிதா பய விமுக்தி மா புர்யதா
லபே மஹி ததா வயம் சபதி ரங்க நாத த்வயா -19-

கயாது ஸூத வாயச த்வி ரத புங்கவ திரௌபதீ -கயாது புத்திரனான ப்ரஹ்லாதன் -ஜெயந்தன் என்னும் காகம் -கஜேந்திரன் -திரௌபதி
விபீஷண புஜங்கம வ்ராஜ கணாம் பரீஷாதய-விபீஷணன் -ஸூ முகன் என்னும் நாகம் -கோப ஜனங்கள் -அம்பரீஷன் முதலானவர்கள்
பவத் பத ஸமாச்ரிதா பய விமுக்தி மா புர்யதா-உம் திருவடிகளை நன்றாக ஆஸ்ரயித்து -பயத்தில் இருந்து விமோசனத்தை -அடைந்தார்களோ
லபே மஹி ததா வயம் சபதி ரங்க நாத த்வயா -அப்படியே நாங்களும் உடனே உம்மாலே பாபா விமோசனத்தை அடைவோமாக
பரம ஹம்சர்கள் பலர் இங்கே கதற உதவாமல் இருப்பது என் -பயக்ருத் பய நாசனரான நீரே எங்கள் பயத்தை போக்கி அருள வேணும் –
ஸ்ரீ ரங்கம் ஓர் இடமும் ஸ்ரீ ரெங்க நாதன் ஓர் இடமும் இருக்கலாமோ –

அரக்கர் மகன் பிரகலாதன் அக்காக்கள் முதலையிடம்
அகப்பட்ட மதக் களிறு ஐ மன்னர் அரும் துணைவி
அரக்கர் கோன் விபீடணன் ஆய்ச்சியர்கள் காளிங்கன்
அம்பரீஷன் முதலானோர் உன் தனது இணை அடியைச்
சரண் அடைந்து பயம் தன்னைத் தவிர்த்தவராய் ஆயினரே
திருவரங்க நாயகனே நாங்களுமே அவ்வாறே
விரைவாக உன் தன்னால் அச்சத்தின் பிடி இருந்து
விடுதலையை அடைந்திடவே வழி காட்டி அருள்வாயே –

——————————————————————–

பயம் சமய ரங்கதாம்ந்ய அநிதர அபிலாஷ ஸ்ப்ருசாம்
ஸ்ரியம் பஹுளய ப்ரபோ ஸ்ரித விபக்ஷ முன்மூலய
ஸ்வயம் சமுதிதம் வபுஸ்தவ நிசா மயந்த சதா
வயம் த்ரி தச நிர்வ்ருதிம் புவி முகுந்த விந்தே மஹி –-20-

பயம் சமய ரங்கதாம்ந்ய அநிதர அபிலாஷ ஸ்ப்ருசாம் –-மாற்று ஒன்றில் ஆசையைத் தொடாத பரமை காந்திகள் யுடைய பயத்தை தீரும் படி செய்ய வேணும் –
ஸ்ரியம் பஹுளய ப்ரபோ ஸ்ரித விபக்ஷ முன்மூலய-ஆஸ்ரிதர்களுடைய விரோதிகளை வேர் அறுக்க வேண்டும் –
ஸ்ரீ ரெங்க ஸ்ரீ பெறுக வேண்டும் என்று தானே -எங்கு வசிப்பவர்களும் ஆசாசிப்பது –
ஸ்வயம் சமுதிதம் வபுஸ்தவ நிசா மயந்த சதா -நாங்கள் உம்முடைய ஸ்வயம் வ்யக்தமான திரு மேனியை ஸ்ரீ -ரங்க நகரிலேயே எப்பொழுதும்
நிசா மயந்த -என்றோ அரங்கத்தில் அரங்கன் இருந்தார் என்று கேட்டு மட்டும் போக செய்யாமல் நித்யம் சேவை சாதித்து அருள வேணும்
வயம் த்ரி தச நிர்வ்ருதிம் புவி முகுந்த விந்தே மஹி –சாஷாத்தாக அனுபவித்து பூ லோகத்திலேயே
நித்ய ஸூரிகள் யுடைய அனுபவத்தை அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும் –

நினை யன்றி வேறு எதையும் நாடாத அடியார்கள்
தம் நெஞ்சில் தோன்றி யுள்ள தடையாகும் பேர் அச்சம்
தனை ஒழித்து நீ அருள்வாய் திருவரங்க நகரத்தில்
திரு வைணவ செல்வத்தை செழிப்பு அடையச் செய்து அருள்வாய்
உனை வணங்கும் அடியார்க்கு ஏற்பட்ட பகை தன்னை
வேரோடு களைந்து அருள்வாய் தானேயாய் உதித்ததுவாம்
உனதுருவை எப்பொழுதும் உடன் இருந்து வணங்கியராய்
உயர் தேவர் இன்பத்தை உற்றிடுவோம் இங்கேயே

——————————————————–

ஸ்ரிய ப்ரிப்ருடே த்வயி ஸ்ரித ஜநஸ்ய சம்ரக்ஷகே
சதத்புத குணோ ததா விதி சமர்ப்பிதோ அயம் பர
ப்ரதி க்ஷண மத பரம் ப்ரதய ரங்க தாமா திஷூ
ப்ரபுத்வம நு பாதிகம் ப்ரதித ஹேதி பிர்ஹேதிபி–21-

ஸ்ரிய ப்ரிப்ருடே த்வயி –ஸ்ரீ யபதியான தேவரீர் இடம்
ஸ்ரித ஜநஸ்ய சம்ரக்ஷகே-ஆஸ்ரித ஜனங்களை நன்றாக ரஷித்து அருளுபவனாயும் -உபாய திசையிலும் போக திசையிலும் மிதுனம் உத்தேச்யம்
ஞானம் கனிந்த நலம் கொண்டு லஷ்மயா ஸஹ
சதத்புத குணோ ததா விதி சமர்ப்பிதோ அயம் பர-ஆச்சர்யமான குணக் கடலான தேவரீர் இடமே-இந்த உம் திவ்விய மேனி ரக்ஷணம் பரம் சமர்ப்பிக்கப் பட்டது -இது முதல்
ப்ரதி க்ஷண மத பரம் ப்ரதய ரங்க தாமா திஷூ-ஒவ் ஒரு க்ஷணமும் மேல் மேல் கிளம்புகிற
ப்ரபுத்வம நு பாதிகம் ப்ரதித ஹேதி பிர்ஹேதிபி-ஜ்வாலைகளை உடைய திவ்ய ஆயுதங்களால் -ஸ்வயம் ஸித்தமான வல்லமையை
-ஸ்ரீ ரெங்கம் முதலான திவ்ய தேசங்களில் ப்ரகாசப்படுத்தி அருள வேண்டும் –

திருமகளின் மணாளன் நீ சரண் அடைந்த அடியார்க்கு
நல் காப்பை அளிக்கின்றாய் நீச குணம் அற்றவனாய்
அரும் நல்ல திருக் குணங்கள் அனைத்துக்கும் கடலாவாய்
அதனாலே உன்னிடத்தே அர்ப்பணித்தோம் எம் பொறுப்பை
ஒரு செயலே உனக்கு உளது -ஓளி மயமாய் விளங்கும் உன்
ஒப்பற்ற ஆயுதங்கள் உதவியுடன் உனக்கு என்றே
உரித்தான ஆட்சிமையை கணம்தோறும் அரங்கம் போல்
உனக்குற்றத் தலங்களிலே ஊன்றி அருள் பெருமானே –

———————————————————————-

கலி ப்ரணித லக்ஷணை கலித சாக்ய லோகாயதை
துருஷ்கா யவநாதிபிர் ஜகதி ஜ்ரும்ப மாணம் பயம்
ப்ரக்ருஷ்ட நிஜ சக்திபி பிரசபமாயுதை பஞ்சபி
ஷிதி த்ரி தச ரஷகை ஷபய ரங்க நாத ஷணாத்–22–

கலி ப்ரணித லக்ஷணை கலித சாக்ய லோகாயதை--கலிக்கு பிரதிநிதி போன்றவர்களால் -சாக்கியர் நாஸ்திகர் இவர்கள் கலந்த
துருஷ்கா யவநாதிபிர் ஜகதி ஜ்ரும்ப மாணம் பயம் -துருஷ்கர் யவனர் என்ற ஜாதி விசேஷங்களால் உலகில் பெருகும் பயத்தை
ப்ரக்ருஷ்ட நிஜ சக்திபி பிரசபமாயுதை பஞ்சபி -உயர்ந்த தங்கள் சக்தியை யுடையவையாயும் – பஞ்ச ஆயுதங்களால்
ஷிதி த்ரி தச ரஷகை ஷபய ரங்க நாத ஷணாத்-பூ ஸூ ரர் ரக்ஷிப்பவையுமான ஒரு க்ஷணத்தில் பலாத்காரமாக நீக்கி அருள வேணும் –
எங்கள் பிரபத்தி ஆர்த்த பிரபத்தி -ஒரு க்ஷணம் விளம்பத்தையும் சஹியோம் என்றவாறு

கொடும் கலியின் ஏவலர் போல் கிளர்ந்து எழுந்த சாக்கியர்கள்
கடவுள் தனை மறுக்கின்ற சார்வாகர் இவர்களுக்கு
உடன் பிறப்பாம் துருக்க யவனர் ஆகியரால் விளைகின்ற
ஊறுகளால் மறையவர்கள் உற்ற பெறும் அச்சத்தை
திடம் கொண்ட ஐவகையாம் திரு வாயுத கணம் கொண்டு
திருவரங்கத்தில் எழுந்து அருளி திகழ்ந்திடும் எம்பெருமானே
சடக்கென்று ஒழித்திட்டு சத்துக்கள் தமைக் காப்பாய்
தீங்கு ஒன்றும் விளையாமல் துதித்து உன்னை வணங்கிடவே –

———————————————————

திதி ப்ரபவதே ஹபித் தஹந சோமா ஸூ ர்யாத்மகம்
தம ப்ரமதநம் ப்ரபோ சமிதி தாஸ்த்ர ப்ருந்தம் ஸ்வத
ஸ்வ வ்ருத்தி வச வர்த்தித த்ரிதச வ்ருத்தி சக்ரம் புந
ப்ரவர்த்தயது தாம்நி தே மஹதி தர்ம சக்ர ஸ்திதம்–23-

திதி ப்ரபவதே ஹபித்-திதியின் சந்ததிகளான அசுரர்கள் தேஹங்களைப் பிறப்பதும்
தஹந சோமா ஸூ ர்யாத்மகம்-அக்னி சந்திரன் ஸூர்யன் முதலியவற்றை தன்னுள்ளே அடக்கிக் கொண்டு
சமிதித அஸ்த்ர ப்ருந்தம் ஸ்வத -தானாகவே எல்லா அஸ்திரங்கள் சமூகமும் தன்னிடம் இருந்து வெளிப்படும் மஹிமையை யுடையதும்
தம ப்ரமதநம் ப்ரபோ -தமஸ் குணத்தை -உள் இருட்டைப் போக்குவதும் -பிரபுவே –
ஸ்வ வ்ருத்தி வச வர்த்தித த்ரிதச வ்ருத்தி -தேவர்கள் வியாபாரம் எல்லாமே தன் வசமாய் யுள்ளதுமான
சக்ரம் புந -உம்முடைய திருச் சக்கரத் ஆழ்வான் மறுபடியும்
ப்ரவர்த்தயது தாம்நி தே மஹதி தர்ம சக்ர ஸ்திதம்-தர்மம் என்னும் உம்முடைய ஆஞ்ஞா சக்ரத்தின் பரி வ்ருத்தியை நடத்தி வைத்து அருள வேணும்
தேவரீர் உடைய ரக்ஷண சங்கல்பம் தத்துவமே -ஸ்ரீ ஸூ தர்சனம் -சங்கல்ப ஸூர்யோதத்தில் ஸ்ரீ விஷ்ணுவின்
சன்னாஹமும் சங்கல்பமும் முறையே பெரிய திருவடி ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வான் என்று பாஞ்சராத்ர ஆகமங்களில் பிரசித்தம் என்று அருளிச் செய்து உள்ளார்
இந்த ஸ்ரீ ஸூ தரிசனமே ஷோடச திவ்ய ஆயுதங்கள் -சங்கல்ப ஏவ பவதோ நிபுண ஸஹாய -ஸ்ரீ வரதராஜ பஞ்சாசம் –
ஸூ தர்சன மஹா ஜ்வாலா கோடி ஸூ ர்ய ஸமப்ரப /-சோமவத் ப்ரிய தர்சன /
மீண்டும் உம்முடைய ஆஞ்ஜை யான தர்ம சக்கரம் நடை பெற வேணும் என்றதாயிற்று –

அடியவரைத் துன்புறுத்தும் அரக்கர் தம் உடல் பிளக்கும்
ஆற்றலுடன் கதிர் மதியம் அக்னியாம் மூவருமே
உடன் கூடியது போலே ஓளி மயத்தைக் கொண்டதுமாய்
அகவிருளும் புறவிருளும் அகலும்படி திறலுடைத்தாய்
கொடு வல்ல ஆயுதங்கள் கூட்டத்தின் இருப்பிடமாய்
தேவர்கள் வாழ்வுக்கோர் அரணாகி உன் தனது
திடக் கரத்தை அணி செய்யும் சக்கரமே மறுபடியும்
திருவரங்கத்தில் நல்லறமே தழைத்து ஒங்கச் செய்யட்டும் –

————————————————

மனு ப்ரப்ருதி மா நிதி மஹதி ரங்க தாமாதிகே
தனு ப்ரபவ தாருணைர்த்தர முதீர்ய மாணம் பரை
ப்ரக்ருஷ்ட குணக ஸ்ரியா வஸூதயா ச சந்துஷித
ப்ரயுக்த கருணோததி பிரசமய ஸ்வ சக்த்யா ஸ்வயம் –24-

மனு ப்ரப்ருதி மா நிதி மஹதி ரங்க தாமாதிகே--மனு முதலியவர்களால் கொண்டாப்பட்ட சிறந்த ஸ்ரீ ரெங்கம் முதலியவற்றில் –
இத்தால் ஆச்சார்ய பரம்பரையை ஸூ சிப்பித்து -ஆழ்வார் நாத முனிகள் -ஆளவந்தார் -பெரிய நம்பிகள் -எம்பெருமான்
-ஆழ்வான் -பட்டர் -குரு பரம்பரையே ஸூ சிப்பிக்கிறார் –
தனு ப்ரபவ தாருணைர்த்தர முதீர்ய மாணம் பரை-தனு என்னும் அஸூர குலத்தோரான அஸூரர்களைப் போலே
கொடியவர்களான -குரூர்களான -சத்ருக்களால் -வளர்க்கப்பட்டு வரும் -உண்டாகி வளரும் –
ப்ரக்ருஷ்ட குணக ஸ்ரியா வஸூதயா ச சந்துஷித-ப்ரயுக்த கருணோததி பிரசமய ஸ்வ சக்த்யா ஸ்வயம் –
-கருணா தத்துவமான பெரிய பிராட்டியாராலும் ஷாமா தத்துவமான ஸ்ரீ பூமிப் பிராட்டியாராலும் தூண்டப் பட்டு
உத்ஸாகப் படுத்தப் பட்டவனாய் -தன் சக்தியினால் தானே ஒழிப்பாயாக-

உயர்ந்தோங்கும் குணங்களுக்கு உறைவிடமே மனுவாதி
உத்தமர்கள் புகழ்ந்திட்ட உயர்வுடைய அரங்கம் போல்
பெயர் பெற்ற தலங்களிலே பொல்லாத அசுரரையும்
மிஞ்சி நிற்கும் கொடுமை யுள பகைவர்களால் தோன்றி யுள்ள
பயம் தன்னைத் திரு மகளும் மண் மகளும் ஊக்குவிக்க
பெரும் கருணை என விளங்கும் உன் குணமாம் பெரும் கடலை
பயன்படுத்தி நீ தானே பேர் வலிதாம் உன் திறத்தால்
போக்கி யுன் தன் அடியாரைப் பாலித்து அருளிடுவாய் –

————————————-

புஜங்க விஹங்கம ப்ரவர ஸைன்ய நாதா ப்ரபோ
ததைவ குமுதா தயோ நகர கோபுர த்வாரபா
அசிந்த்ய பல விக்ரமா ஸ்தவ மிவ ரங்க சம்ரக்ஷகா
ஜிதம் ந இதி வாதி நோ ஜகத் அநுக்ரஹே ஜாக்ரது -25-

புஜங்க விஹங்கம ப்ரவர ஸைன்ய நாதா -சர்ப்ப ஸ்ரேஷ்டன் -ஆதி சேஷன் -பெரிய திருவடி -சேனை முதலியார் முதல்வர்களும்
ப்ரபோ -பிரபுவே –
ததைவ குமுதா தயோ நகர கோபுர த்வாரபா -அப்படியே நகரம் கோபுரம் துவாரம் இவற்றைக் காப்பவர்களும் –
அசிந்த்ய பல விக்ரமா -எண்ணுதற்கு அரிய பல பராக்கிரமங்களை யுடையவர்களும்
ஸ்தவ மிவ ரங்க சம்ரக்ஷகா -உம்மைப் போலே ஸ்ரீ ரெங்கத்தைக் காக்க வேண்டியவர்களும்
ஜிதம் ந இதி வாதி நோ ஜகத் அநுக்ரஹே ஜாக்ரது -உனக்கு ஜெயம் வருக என்று சொல்லிக் கொண்டே எங்களை அனுக்ரஹிப்பதில் விழித்து இருக்க வேணும் –
இதம் ஹி ரங்கம் பாணவ் ரதாங்கம் சயனே புஜங்கம் –அங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் -ஜிதந்தே -என்று வாக்கால் சொன்னாலே போது ரஷிக்க –
சனத் குமாரர்களைத் தடுக்க ஜெய விஜயர்கள் இருந்தார்களே –

புள்ளரையன் சேனை நாதன் தம்மோடு
அணைத் தலைவர் குமுதர் போல் ஆவாரம் நகரத்தின்
திரு வாயில் கோபுரத்தின் திருக் கதவம் காப்போரும்
திருமால் உன் தனைப் போல் திரு வரங்கத்தைக் காப்போரும்
பெரும் வாகை உனக்கு என்று போற்றுகிற வாயினராய்
பேரரவம் இட்டவராய் பரவி எங்கும் செல்பவராய்
திருவரங்கம் மட்டும் இன்றி திரை கடல் சூழ் உலகினையும்
சிந்தையுடன் நற் காத்துச் செயல் படவே வேண்டுகிறோம் –

————————————————

விதி ஸ்த்ரி புரமர்த்தந ஸ்த்ரிதச புங்கவ பாவக
யம ப்ரப்ருதயோ அபி யத் விமத ரக்ஷணே ந ஷமா
நி ரஷிதி ஷதி யத்ர ச பிரதிபயம் ந கிஞ்சித் க்வசித்
ச ந பிரதிபடான் ப்ரபோ சமய ரங்க தாமா திஷூ -26-

விதி ஸ்த்ரி புரமர்த்தந ஸ்த்ரிதச புங்கவ பாவக –ப்ரஹ்மாவும் -மூன்று புரங்களை எரித்தவரும் -தேவர்கள் தலைவரான இந்திரனும் -அக்னியும்
யம ப்ரப்ருதயோ அபி யத் விமத ரக்ஷணே ந ஷமா -யமன் முதலானோரும் -எந்த உம் விரோதியை -ரஷிப்பதில்-சமர்த்தர் அல்லவோ
நி ரஷிதி ஷதி யத்ர ச பிரதிபயம் ந கிஞ்சித் க்வசித் -எந்த நீர் ரஷிக்க இஷ்டப் பட்ட போது ஓர் இடத்திலும் ஒன்றும் எதுவும் பயங்கரமாக கொஞ்சமேனும் ஆகாதோ –
ச ந பிரதிபடான் ப்ரபோ சமய ரங்க தாமா தி ஷூ -அந்த நீர் ஸ்ரீ ரங்கம் முதலிய திவ்ய தேசங்களில் எங்களுடைய எதிர்படரை அடக்கி அருள வேணும் –
யமனும் யம படர்களும் எங்களைக் கண்டு நடுங்க வேண்டி இருக்க இந்த மனுஷ்ய படர்களைக் கண்டு நாங்கள் நடுங்கும் படி நேரலாமோ –

உன்னிடத்தே அபசாரம் உறுபவனைக் காத்திடவே
உந்தி மலர் நான்முகனும் உருத்திரனும் இந்திரனும்
வன்னியனும் யமதேவு முதலான தேவர்களும்
வலிமையிலோர் என்றைக்குமே ஒருவனை நீ காத்திடவே
எண்ணினாயேல் அவன் தனக்கு எங்கிருந்தும் எவராலும்
எள்ளளவும் அச்சமேதும் ஏற்படாதே நிச்சயமாய்
அன்னவன் நீ அரங்கத்தும் அதுவனைய தலங்களிலும்
அல்லல் தரும் பகைவர் தமை அழித்து ஒழிப்பாய் பெருமானே –

——————————————-

ச கைடப தமோரவிர் மது பராக ஜஜ்ஜா மருத்
ஹிரண்ய கிரி தாரண ஸ்த்ருடித கால நேமி த்ரும
கிமத்ர பஹுநா பஜத் பவ பயோதி முஷ்டிந்தய
த்ரி விக்ரம பவத் க்ரம ஷிபது மங்ஷூ ரங்கத் விஷ — 27-

ச கைடப தமோ ரவிர்-கைடபன் என்னும் இருட்டுக்கு ஸூர்யன் போன்றதும்
மது பராக ஜஜ்ஜா மருத் -மது என்னும் அஸூரனான தூசுக்கு பெரும் காற்று போன்றதும்
ஹிரண்ய கிரி தாரண -ஹிரண்யன் என்னும் மலையைப் பிளப்பதும் -மலையை கிழிக்க உம் திரு உகிர் போதுமே
ஸ்த்ருடித கால நேமி த்ரும -திருடித்த கால நேமி என்னும் வ்ருக்ஷத்தை யுடையதும்
கிமத்ர பஹுநா -இவ்விஷயத்தில் அதிகம் சொல்லுவான் என்
பஜத் பவ பயோதி முஷ்டிந்தய–ஆஸ்ரிதருடைய சம்சார சமுத்திரத்தை ஒரு சிறங்கை ஜலத்தை போலே உறிஞ்சி விடுவதுமான
த்ரி விக்ரம பவத் க்ரம ஷிபது மங்ஷூ ரங்கத் விஷ — த்ரி விக்ரமனே-அவ்விதமான உம் பராக்ரமம் சீக்கிரத்தில்
ரங்க ஷேத்ரத்தின் விரோதிகளை நிரசனம் செய்யட்டும் –
லோக விக்ராந்தமான உம் -உலகளந்த பொன்னடியை சரணம் பற்றினோம் –
காற்றுக்கும் சண்டமாருதமான நீர் தான் பெரும் காற்று -ஜகத்தின் பாபங்களை உண்ணுபவன் என்றார் -5-ஸ்லோகத்தில்
-இங்கு பாபக் கடலை உறிஞ்சுபவன் என்கிறார் -திவ்ய ஆயுதங்கள் வேண்டாம் –திண்ணிய திருவடியே ரக்ஷகம்-

இருளன்ன கைடபனை இரவியைப் போல் அழித்திட்டாய்
சுழல் காற்றில் புழுதியைப் போல் சிதைந்து அழிந்தான் மதுவரக்கன்
இரணியனை மலையைப் போல் பிளந்து அழித்தாய் திரு வரங்கா
மரத்தைப் போல் முறித்திட்டாய் கால நேமி அரக்கன் தனை
உரைக்க மேலும் வேண்டாவே உன் தனது வீரம் தனை
உன் தனையே புகலாக உற்றவரின் துயர்க்கடலை
உறிஞ்சி விடும் உன் வலிமை அரங்கத்தை நலிந்திடவே
உற்ற பகை அனைவரையும் ஒழித்திடட்டும் விரைவினிலே-

————————————-

யதி ப்ரவர பாரதீ ரஸ பரேண நீதம் வய
பிரபுல்ல பலிதம் சிர பரமிஹ சமம் பிரார்த்தயே
நிரஸ்த ரிபு சம்பவே க்வசன ரங்க முக்யே விபோ
பரஸ்பர ஹிதை ஷிணாம் பரி சரேஷூ மாம் வர்த்தயே–28-

யதி ப்ரவர பாரதீ ரஸ பரேண -யதி ராஜனுடைய சார தம ஸரஸ்வதீ ரஸ அனுபவ கனமாகவே -ஸ்ரீ பாஷ்ய கால ஷேபம் எமக்கு நித்யம் –
அரங்கத்துக்கு ஆபத்து வந்தால் இது எப்படி நடக்கும்
யதி ராஜரின் கத்யங்களை அனுபவித்து ரசத்தில் மூழ்கி இருக்க வேண்டாமா
நீதம் வய –யவ்வன வயசானது சென்றது
பிரபுல்ல பலிதம் சிர-தலை மலர்ந்த புஷ்ப்பம் போலே வெளுத்து விட்டது
பரமிஹ சமம் பிரார்த்தயே -இனி இவ் உலகில் எனக்கு தாக்கத்தை வேண்டுகிறேன்
நிரஸ்த ரிபு சம்பவே க்வசன ரங்க முக்யே விபோ–சத்ருக்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கக் கூட அவசியம் இல்லாமல்
நிர்ப்பயமான -அரங்கம் முதலிய க்ஷேத்ரங்களில் பரஸ்பர ஹிதை ஷிணாம் பரி சரேஷூ மாம் வர்த்தயே–ஒருவருக்கு ஒருவர்
ஹிதத்தையே விரும்பி ஸ்நேஹித்து இருப்பவரின் அருகில் அடியேனை இருக்கச் செய்து அருள வேணும்
ஸ்ரீ ரெங்கத்தில் ஸூ கமாக வாழ தேவரீர் ஆஞ்ஜை ஸ்ரீ பாஷ்யகாரருக்கு அருளினீரே
-அவர் திரு நாமத்தை சொல்லி அவர் ஆஞ்ஜையையும் அபி விருத்தியையும்
செய்ய யதி ராஜர் அரங்கம் வாழ வேண்டும் என்று பிரார்த்தித்தால் பெருமாளால் மறுக்க முடியாமல் அருளி தலைக் காட்டுவார்
ஆழ்வானும் ஸ்ரீ ஸூ ந்தர பாஹு ஸ்தவத்தில் யதி ராஜர் உடன் சேர்ந்து வாழ பிரார்த்தித்தால் போலே இவரும் இங்கே அருளிச் செய்கிறார் –

எதிராசர் சொற் சுவையை அனுபவித்தே இளமை செல
என் தலையும் நரைத்ததுவே முற்றிலும் அப்படியே
எது வொன்று என் தனக்கே இனியும் இங்கே ஏற்றதுவோ
அதனை நீயே அளித்திடுவாய் அரங்க நகர் பெருமானே
எதிரிகளாய் எவருமே இருந்திடாதே நிலை கொண்ட
எழில் அரங்கம் போல் ஏதும் இடம் ஒன்றில் ஓர் ஒருவர்
இதம் தனையே விரும்புவரின் இடையினிலே அடியேனை
இருக்க வைத்து வரும் நாளை இனிதாக்கி அருள்வாயே –

———————————————————————

பிரபுத்த குரு வீக்ஷண பிரதித வேங்கடே சோத்பவாம்
இமாம பய ஸித்தயே படது ரங்க பர்த்து ஸ்துதிம்
பயம் த்யஜத பத்ரமித்ய பிததத் ச ச கேசவ
ஸ்வயம் கன க்ருணா நிதிர்க்குணகணேந கோபாயதி–29-

பிரபுத்த குரு வீக்ஷண -சிறந்த ஞானம் உள்ள ஆச்சார்யர் கடாக்ஷத்தினால்
பிரதித வேங்கடே சோத்பவாம் -யசஸைப் பெற்ற வேங்கடேசர் இடம் இருந்து தோன்றிய
இமாம பய ஸித்தயே படது ரங்க பர்த்து ஸ்துதிம்-இந்த ஸ்தோத்ரத்தை -ஸ்ரீ ரெங்க பிரபுவின் அபய சித்திக்காக -ஸ்ரீ ரெங்கம்
திருக் கோயில் நிர்ப்பயமாய் இருப்பதற்காக -படியுங்கோள்
பயம் த்யஜத -பயத்தை விட்டு விடுங்கோள் -அஞ்சேல் அஞ்சேல்
பத்ரமித்ய பிததத் ச ச -சுபம் உண்டாகாட்டும் என்று சொல்லிக் கொண்டு
கேசவ -ஸ்வயம் கன க்ருணா நிதிர்க்குணகணேந கோபாயதி-கருணா நிதியான அந்த கேசவன் –ப்ரஹ்ம ருத்ரர்களுக்கும் ஈசன்
-சர்வ காரணத்வன்-ரஷித்து அருள்வான் -கல்யாண குண அனுபவமே -பிரயோஜனம் -சோஸ்னுதே சர்வான் காமான் –
பேர் அருளாளர் போல் திருச் சோதி வாய் திறந்து அருள வேண்டும் –
கேசவ -ந தைவம் கேஸவாத் பரம்
அரங்கத்துக்கு ரெங்க பர்த்துக்கும் அபய சித்தியே என்னும் விஷயம் இந்த பிரபந்த தாத்பர்யம் என்று
-ரங்க பர்த்து என்ற பதம் -அபய ஸித்தயே -ஸ்துதிம் இரண்டுக்கும் நடுவில் வைத்து அருளிச் செய்கிறார்
பால காண்டத்தில் ப்ரஹ்மாதி தேவர்கள் ஸ்துதிக்கையில் பயம் த்யஜத -பத்ரம் வ –என்று
அபயம் அருளிச் செய்த ஸ்ரீ ஸூ க்திகளையே கொண்டு இங்கே அமைத்து அருளுகிறார்
முதலில் துர்யம் மஹ-என்றும் இறுதியில் –கைடப தமோரவிர் மது பராக ஜஜ்ஜாமருத் -என்று மதச ஹம்ஸ ஹயக்ரீவ -அனுசந்தித்து –
ஹம்ஸ மதச ஹயக்ரீவ நாராயண கீதாச்சார்யாதி அவதாரங்களாலே தானே வெளி நின்று
தத்வ ஹிதங்களை பிரகாசிப்பித்தும் –குரு பரம்பராதிகாரம் -ரகஸ்யத்ரய சாரம் –

உயர் ஞான குருக்கள் தம் உளம் குளிரும் நோக்கு தன்னால்
உறும் புகழோன் வேங்கடேசன் உளத்துதித்த அரங்கனது
வியப்பான இத்துதியை விருப்போடு பயிலுங்கள்
விட்டகலும் பயம் எல்லாம் விரைவாக உமை எல்லாமே
பயம் தன்னை ஒழித்திடுவீர் பெரும் நலனே உறுவீர் என
பரிந்து உரைத்த மிகும் கருணை பெரும் நிதியாம் கேசவனே
உயர்ந்த நல்ல பண்புகளின் ஒருங்கு இணைந்த கூட்டத்தால்
உம்மை எலாம் எவ்விதத்தும் காத்து அருள்வான் தானாவே –

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: