ஸ்ரீ யதீந்த்ர மத தீபிகை-1-ஸ்ரீ நிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள்–ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் —

ஸ்ரீ வேங்கடேசம் கரி சைல நாதம் ஸ்ரீ தேவ ராஜம் கடிகாத்ரி ஸிம்ஹம்
கிருஷ்னேன சகம் யதிராஜம் இதே ஸ்வப்னே ச த்ருஷ்டன் மம தேசிகேந்த்ரன் –
யதீஸ்வரம் ப்ராணமாம் யஹம் வேதாந்தர்யம் மஹா குரும் கரோமி
பால போதார்த்தம் யதீந்த்ர மத தீபிகம்

சண்ட மாருதம் -சூறாவளிக்க காற்று -ஸ்வாமி தொட்டாச்சார்யார் –ஸ்ரீ நிவாஸ மகா குரு-சதா தூஷிணி -தேசிகன் -மதி விகற்பத்தால் நூறு –
அனுபவத்தி பொருந்தாமை -உபபத்தி -பொருந்துவது
பஞ்ச மகா விஜயம் -என்ற கிரந்தம் சாதித்தார் –
அப்பையா தீக்ஷிதர் உடன் வாதம் -செய்தவர் –

பராங்குச பரகால யதிவராதிகள் பிரதிஷடை இருந்தால் தான் தீர்த்தம் பிரசாதம் சுவீகரிப்பார்கள் நம் பூர்வர்கள் –
கோவிந்தராஜன் -திருச் சிதம்பரம் –கோயில் பிரதிஷ்டை-மூவாயிரம் -ஆஷேபம் –
சோழ சிம்மபுரம் -யோக நரசிம்மர் -கீழ் கோயில் -இவர் பிரதிஷ்டை -அக்கார கனி -வாதூல ஸ்ரீ நிவாசார்ய -ஸ்ரீ நிவாஸ மஹா குரு –
ஸ்ரீ நிவாஸாச்சார்யார் -திருமலை அடி வாரம் -யோகம்-சிஷ்யர் -1552-1624 / 100 வருஷம் கழித்து –

கிரந்த நிர்மாணம் ஆஞ்ஜை
யதீந்த்ர மத தீபிகை -வைதிக மதம் –பிரகாசப்படுத்தி -சுலபமாக -தெளிவாக –
பின்பு வேதார்த்த தீபம் –ஸ்ரீ பாஷ்யம் —ஸ்ரீ வசன பூஷணம் பர்யந்தம்
ஸ்ரீ வேங்கடேசன் கரி சைல நாதன் கடிகாத்ரி சிம்மம் சுதா வல்லி பரிஷ்வ்ங்க ஸூ ரபி க்ருத வக்ஷஸ் –
கிருஷ்ண -யதிராஜாமீடே -பார்த்தசாரதி தானே ஸ்வாமி –
ஸ்வப்னம் -ஸ்வாமி தொட்டாச்சார்யார்

யதீஸ்வரர் -தேசிகர் -யதீந்த்ர மத தீபிகாம் -பாலருக்கு ஞானம் புகட்ட -த்யான ஸ்லோகம் –
தனியன் போலே -கர்த்தாவே அருளி –
ஸ்ரீமத் நாராயண ஏவ விசிஷ்டதத்வம் -கூடிய சம்ப்ரதாயம் —
சித் அசித் –தத்வம் -இது -விசிஷ்டதத்வம் -விசேஷணங்கள் இவை
-பிரகாரி -பிரகார பாவம் – சரீராத்மா -அப்ருதக் சித்த விசேஷணம் –
பக்தி பிரபத்தி -நாராயணனே உபாயம் -பக்தி பிரபத்தி -அஜீரணம் தொலைய வேண்டுமே அனுபவிக்க –அதிகாரி ஸ்வரூபம்
ச ஏவ உபாயம் -அப்ராக்ருத திவ்ய மண்டலம் தேசத்தில் இருப்பவன் -இதுவே புருஷார்த்தம் –

தத்வம் ஹிதம் புருஷார்த்தம் -வேதாந்தம் இதுவே சொல்லும்
அப்ராக்ருத தேச விசிஷ்டன் -அமரர்கள் அதிபதி -புருஷார்த்தம்
வியாச போதாயன குகை தேவர் —பராங்குச பரகால நாத யமுனா யதீந்த்ராதி -உபய வேதாந்த
மதம் ஸ்தாபித்து –
வேதாந்த அநு சாரிணி
யதா மதி -மகாச்சார்யா கிருபை பற்றி அடியேன் -ஸங்க்ரஹேன பிரகாசிக்கிறேன் -யதீந்த்ர மத தீபிகா
-சா ரீரிகம் பரி பாஷா -20 அத்யாயம் -12 /4 ஜைமினி -பூர்வ மீமாம்சை 12–கர்மம் -4 தேவதா –உத்தர மீமீம்ஸை 4 வேத வியாசர் –
ஜகம் சரீரம் -சரீரமாக கொண்ட ப்ரஹ்ம-விசாரம் –
10 அவதாரங்கள் இதிலும் -பெருமாள் ஆழ்வார் திருவாய் மொழி இதுவும் —

சர்வம் பதார்த்தம் ஜாதம் -பிரமாணம் பிரமேயம்–இரண்டில் அடங்கும்பிரமா
புத்தி ஞானம் -புத்தியால் அறிவது –இதுவோ இதற்குள் உண்டே
நமக்கு பிரமாணம் ஆச்சார்யர் திரு வாக்கு –இதனால்ஞானம் வந்து -ஞானத்துக்கு விஷயம் –
ஒவ் ஒன்றையும் இரண்டாக பிரித்து மேலே
விஸ்வரூபம் பார்த்து தன்னையும் அர்ஜுனன் பார்த்தால் போலே -எல்லாம் பகடைக்காய் -என்று கண்டான்

மூன்று பிரமாணங்கள் —
ப்ரமேயம் இரண்டு வகை -த்ரவ்யம் -அத்ரவ்யம் / கோபம் குணம் ஜாதி த்ரவ்யம்
த்ரவ்யம் -ஜடம் அஜடம் இரண்டு வகை -தனக்கு தான் தெரியாதே -ஸ்வயம் பிரகாசம் -தானே ஒளி விடும் –
விளக்கு – மற்றவற்றை காட்டும் -தனக்கு விளக்கு என்று விளங்காதே -ஆத்மா தான் நான் என்று அறிவான் -ஸ்வைஸ் மை பிரகாசத்வம் –
ஜடம் -பிரகிருதி காலம் -இரண்டு வகை -முக்குணம் சேர்ந்த
பிரகிருதி -சதுர் வித சதுர் விம்சதி தத்வம் -24-கர்மா ஞான இந்திரியங்கள் சப்த தன்மாத்திரைகள் -பூதங்கள்
-மனஸ் -மகான் அஹங்காரம் -மூல பிரகிருதி -23 -பிராகிருதம் -பிரகிருதி இடம் வந்தவை என்றவாறு
தன்னைக் கண்டால்  பாம்பை கண்டால்  போலே -கடித்த பாம்பு கடி உண்ட பாம்பு அனந்தாழ்வான் –
காலம் உபாதி பேதேனே மூன்று -ஸூர்ய கதி -பூத பவிஷ்ய வர்த்தமானம் –
அஜடம் –த்விதம்-வைகுண்டம் தர்ம பூத ஞானம் /பராக்கு ப்ரத்யக்கு -தனக்கு உள் நோக்கி / வெளி நோக்கு –
ஆத்மா பரமாத்மா பிரத்யக் —
வைகுண்டம் தர்ம பூத ஞானம் -பராக் -நித்ய விபூதியும் தர்ம பூத ஞானம் -தானே பிரகாசிக்கும் –
இந்த நான்கும் அஜடம் –

ஜீவன் -பத்த முக்த நித்யர் மூன்று வகை உண்டே
பத்தர் -இரண்டு வகை -புபூஷு முமுஷூ –
புபுஷூ-இரண்டு வகை -அர்த்தக்காம பரர்/ தர்ம பரர்
தசரதர் விசுவாமித்திரர் -அஹம் வேதமி -சொல்லும் பொழுது பிரித்து சொன்னாரே
தர்ம பரர் -தேவதாந்த்ர பரர்கள்/ பகவத் பரர்கள்
முமுஷூ இரண்டு வகை -கைவல்யம் -ஸ்ரீ வைகுண்டம் -பகவத் லாபம்
மோக்ஷ பரர் த்விதம் -பக்தர் பிரபன்னர் –அவலம்பித்து
பிரபன்னர் த்விதம் -ஏகாந்தி பரமை காந்தி
உண்ணும் சோறு இத்யாதி என்று இருப்பார்கள் -பகவத் சாஷாத்காரம் இந்த லீலா விபூதியில் கண்டவர்கள் –
கொடு உலகம் காட்டேல்-இனி இனி என்று துடிப்பார்கள் –பரமை காந்திகள் -த்விதம் -திருப்தன்– ஆர்த்தன்
-தேக அவசனத்தில் திருப்தன் -ஆர்த்தியின் துடித்தாலும் அவன் சங்கல்பத்தால் -இருத்தி வைத்தான் -நின் கண் வேட்க்கை எழுவிப்பான் —
கர்மா சம்பந்தத்தால் இல்லை கிருபா சங்கல்பத்தால் வைத்து அருளினான் —
ஈஸ்வரன் -பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சை -ஐந்து விதம் –
பற்றி -விட வேண்டும் -மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -பற்ற வைத்து விடுவிப்பவனும் அவனே
பர -ஏகதா –இது ஒன்றே ஓன்று
வ்யூஹம் நான்கு–வாசு தேவ -ப்ரத்யும்ன -அநிருத்ய -சங்கர்ஷண -கேசவாதி 12 ஆக
வைபவம் -ஜன்மம் பல பல -மத்ஸ்யாதி
அந்தர்யாமி -பிரதி சரீரம் -உண்டே
அர்ச்சா -ஸ்ரீ ரெங்கம் -வேங்கடாத்ரி -ஹஸ்திகிரி கடிகாசலம் –சகல மனுஜ நயன–சதா – விஷய தாங்க சேவை –
அத்ரவ்யம் -சத்வம் ரஜஸ் தமஸ் /சப்த -5-/ சம்யோக சக்தி -10-
சொன்ன க்ரமத்தில்-விவரித்து அருளுகிறார் -அடையாளங்கள் சொல்லி –

——————————————————–

சர்வம் வஸ்து ஜாதம் -த்ரவ்யம் பாகங்கள் முன்பு பார்த்தோம்
அத்ரவ்யம் -10-
பிரகிருதி-24-தத்வங்கள் -பஞ்ச தன்மாத்ரங்கள் இவற்றுள் சேர்த்து -அஹங்காரம் தத்வம் மூன்றாக -பிரிந்து
-சாத்விக கர்மா ஞான இந்திரியங்கள் மனஸ் -தாமச -அடுத்த -10-சப்த ஸ்பர்ச –தன்மாத்ராங்கள் முதலில்
இடைப்பட்ட நிலை பஞ்ச பூதங்கள் வருவதற்கு முன்—ஆகாசம் -சப்தம் / வாயு -ஸ்பர்சம் /ரூபம் ரசம் கந்தம் -இவையும் த்ரவ்யங்கள் –ராஜஸ –
அத்ரவ்யங்கள் -ஸ்பர்சம் ரூபம் இவை இதிலும் -முன்பு த்ரவ்யம் இதில் குணங்கள் குறிக்கும் -ஆகாசம் உருவான பின்பு குணம் இருக்குமே
பூர்ணமாக உத்பூதங்களாக மலர்ந்து இருக்குமே –தன்மாத்ர ஸ்திதி த்ரவ்யம் –என்றவாறு –

இனி மேல் பிரமாணம் –
பிரத்யக்ஷம் அனுமானம் சப்தம் மூன்றும் –
அஷ-கண் முன்னால் -லக்ஷனையால் -காது மூக்கு நாக்கு தோல்-உள்ளதை உள்ளபடி அறிதல் பிரமாணம்
-வியவஹாரம் -இருக்க வேண்டும் -வாசிக காயிக –யதாவஸ்திதமாக வியாவஹாரமாக இருக்க வேண்டும் –
பக்தி பிரபத்தியில் செயல் பட -அடிப்படை பிரமாணம் –
ப்ரத்யக்ஷம் -கரணம் கொண்டு பிரேமா ஏற்படும் -புத்தி -உள்ளதை உள்ளபடி அறிதல் -பிரமேயம் முன்பு பார்த்தோம் –
அயோக விவச்சேதம் அந்யயோக விவச்சேதம் வாதங்கள்

பிரமாணம் லஷ்யம் -பிரேமா-க்கு கருவி -கரணம் லக்ஷணம் -அடையாளம் -ராமனுக்கு தம்பி ராமானுஜம்
யதா வஸ்தித்த விவகார அனுகுணம் ஞானத்தவம் லக்ஷணம் -உள்ளத்தை உள்ளபடி அறிந்து விவாஹரித்து இருப்பது
முத்துச் சிப்பி வெள்ளி -பிரமிக்கும் ஞானமே பிரமாணம் இருக்காதே -யதா வஸ்தித -வியவஹாரம் இரண்டும் சொல்லி –
பிரமித்து விவாஹரிக்கலாம் -வெளிச்சம் இல்லாமல் வெள்ளியாக பிரமித்து -யதாவஸிதம் இல்லையே
அதனால் வெறும் ஞானமே பிரமாணம் இல்லை –

சம்சயம் அந்யதா ஞானம் -விபர்யயம் -மூன்றும் தள்ளி –
கீழ் வானம் –கோபிகள் முகம் சூர்யன் போலே -கிழக்கே பார்க்க கிழக்கில் பட்டு பிரதிபலிக்க -எருமை மாடு -இருள் விலக-
ஒன்றை மாற்று ஒன்றாக -விபரீதம் தர்மி / ஸ்தம்பமா புருஷனா சம்சயம் / தர்மி மாற்றி கிரஹித்தல் விபரீதம் /
தர்மம் சங்கம் வெண்மை மஞ்சள் -தப்பாக நினைத்தால் அந்யதா ஞானம் –
ரகஸ்யம் -தேகம் ஜீவன் வெவேறாக இருக்க ஒன்றாக -விபரீத ஞானம்
சேஷத்வம் புரியாமல் ஸ்வ தந்திரம் நினைப்பது அந்யதா ஞானம்
இது தான் தெரிந்து கொள்ள வேண்டியது

தர்மி -விருத்த அநேக விசேஷங்கள் ஸ்புரிக்க சம்சயம் ஆகும் –
அஞ்ஞானம் -ஞானத்தின் வகை –
தர்மம் மாற்றி -அந்யதா ஞானம் -பிராந்தி உபபாதனம் -கர்த்ருத்வ -ஜீவன் -கர்த்தா பகவான்
-நம் குற்றம் அவன் மேல் பூர்வ பசி குழப்ப -அந்யதா ஞானம் -இதுவும்
விபரீதம் -தர்மியையே மாற்றி -வஸ்துவை வஸ்வந்தர ஞானம் —
உள்ளதை உள்ளபடி அறிந்து வியாவஹரிப்பது -மூலம் இவை போகும் –

பிரேமா -புத்தி பார்த்தோம் இனி கரணம் –
அடையாளம் மூன்று தூஷணங்கள்-லக்ஷணம் -அடையாளம்
அவ்யாப்தி –அதி வியாப்தி -அசம்பவம்
லக்ஷய ஏக தேசம் —பசு மாட்டுக்கு அடையாளம் நீல நிறம் -அவ்யாப்தி வரும் -வேறு நிற மாடு உண்டே
அதி வியாப்தி -கொம்பு உள்ளது பசு -வேறு மான் இவற்றுக்கும் கொம்பு உண்டே –
அசம்பவம் -கண்ணால் காணப் படுபவன் ஜீவாத்மா -இருக்கவே முடியாதே

மூன்று தூஷணங்கள்
ஜீவன் குணத்ரயம் -வஸ்யம்-சொன்னால் அவ்யாப்தி வரும் -முக்தர் நித்யர் இவர்களுக்கு இல்லையே -பத்த ஜீவர் மட்டும் தகும்
ஞான குணகத்வம் -அதி வியாப்தி வரும் -பரமாத்மா இடமும் உண்டே
சஷூர் மூலம் பார்க்கலாம் அசம்பவம்
இந்த ஆறும் இல்லாமல் -கூரிய ஞானம் -வந்து நிறைய அனுபவிக்க முடியுமே –
நல்ல ஞானம் கால விளம்பம் இல்லாமல் சாதித்து கொடுப்பது -பிரமாணம் -சாதக தமம் கரணம் -சாதகம் -சாதக தரம் -சாதக தாமம் -அதிசயம்
-வேறு பிரமாணத்தால் அறிவிக்கப் படாத அபூர்வ -விஷயம் வேதம் சொல்லும் -ஸ்நாத்வா புஞ்சீத -குளிப்பதும் சாப்பிடுவதும் தெரியும் –
ஜகம் அறிவோம் பரமாத்மா அறிவோம் -ஜகத்தை படைத்தவன் பரமாத்மா வேதம் சொல்லும்

சாஷாத் காரி -நேரே உள்ள படி அறியும் கரணம் பிரத்யக்ஷம் –பிரேமா -உள்ளபடி -அறிவதே முன்பே பார்த்தோம் –
நேரே -அனுமானம் சப்தம் இவற்றில் வேறு படுத்த –
துஷ்ட இந்திரிய ஜன்ய வியாவர்த்தம் -பிரேமா -உள்ளபடி அறிதல் –கண் புரை நோய் போலே –
பிரத்யக்ஷம் த்விதம்
முதல் கிரஹணம் பிரதமம் -நிர்விகல்பிக்க -மனுஷர் வருவதை அறிந்து
த்விதீய சவிகல்பம் -முழு அடையாளங்கள் உடன் அறிதல் -எல்லா வேறுபாடுகள் உடன் கிரஹித்து
குண சமஸ்தானாதி விசிஷ்டா – பிரதம பிண்ட கிரஹணம் -நிர்விகல்பிக்க பிரத்யக்ஷம்

வஸ்து ஜாதி பின்பு அறியும் அறிவு -சவிகல்பிக்க
இரண்டுமே விசிஷ்ட கிரஹணம் -தர்மி தர்மம் சேர்ந்தே
தர்மி இல்லாமல் தர்மம் கிரஹிக்கப் படாதே –
அவிசிஷ்டா கிராஹிணி -ஞானஸ்ய – -தர்மி விட்டு தர்மம் மட்டும் காண்பது லோகத்தில் இல்லையே -அனுபபத்தி
வஸ்து கிரஹணம் என்றால் என்ன –
ஆத்மா -மனசில் -அது இந்த்ரியங்களில் -அவை பிராப்பயம் பொருளில் பட்டு -வேகமாக போய் வரும் -இந்த பாதை –
ஞானம் மழுங்கலாம் -ஆத்மாவிலும் மனசிலும் இந்த்ரியங்களிலும்
அயம் கட பட -கடாதி ரூபம் அர்த்தஸ்ய சஷூராதி இந்திரியங்கள் -சந்நிஹர்க்ஷம்-இடத்திலும் நேரத்திலும்
-சந்நிதி இருக்க வேண்டுமே –சஷூஷா பிரத்யக்ஷம் / ஸ்பர்ஸனா போல்வன –

த்ரவ்யம் கிரஹணம் சம்யோகம் -அர்த்த இந்திரிய வஸ்து -சம்பந்தம் –குடம் பார்த்து குடம் என்று அறிந்து
த்ரவ்ய கத குண குண கிரஹணம் -சமவாய அநஅங்கீகராத் –
சமவாயம் ஏற்றுக் கொள்ளாமல் சம்யுக்த ஆஸ்ரியிக்கும் குணம் -குடத்தில் பச்சை வர்ணம் –
பச்சை குடம் -தனியாக குடம் பச்சை கிரஹணம் இல்லையே
ஸ்வரூபத்தால் சம்பந்தம் -சிகப்பும் நூலும் –சமவாயம் தார்க்கீகன் -மூன்றாவது -ஏழு வகை சொன்னான்
த்ரவ்யம் குண –சமவாயம் தனி பதார்த்தமாக கொள்வான்
அர்வாசீனம் -அநர்வாசீனம் பிரத்யக்ஷம் -தாழ்ந்த உயர்ந்த -வெறும் இந்திரிய பலத்தால் அறிவது தாழ்ந்த –

இந்திரியங்கள் இல்லாமல் யோகம் / அதற்கு மேல் பகவத் கிருபையால் -மூன்று வகை –
மயர்வற மதி நலம் அருள பெற்றது போலே
மயர்வு உடன் இருந்தால் தாழ்ந்த பிரத்யக்ஷம் —
அர்வாசீனம்
இந்திரிய சாபேஷம் -அ நபேஷம் -ஸ்வயம் சித்தம் /திவ்யம் தாதாமி -அவன் கிருபையால் -நூற்றுவர் வீய
ஆழ்வார் -தத்வ தர்ச வசனம் ஐ ஐந்து முடிப்பான் -ப்ரீத்தி காரிய கைங்கர்யம் புருஷார்த்தம் காட்ட –
கீதை விட திருவாய்மொழி ஏற்றம் –

அருளின பக்தியால் –மூவாறு மாசம் மோஹித்து-வால்மீகி போல்வாரில் வாசி –

இருத்தும் வியந்து மூன்று தத்துக்கு பிழைத்த ஆழ்வாரை பார்த்துக் கொண்டே இருந்தானே –
இந்திரிய / யோக / பகவத் கிருபையால் லப்த -பர்வதம் பரம அணு–கோதை ஆண்டாள் ஏற்றம்
பிரத்யக்ஷம் படி ப்ரஹ்மம் கண்டவர் ஆழ்வார்கள்
மாறன் அடி -பூ மன்னு மாது பொருந்திய மாறன் அடி பணிந்து உய்ந்தவர் அடி பற்றி –
ஆதாரம் புரிந்து -பண்ணினாலும் புரியாமல் பற்றினாலும் உஜ்ஜீவனம் –
ஆச்சார்யர் குணம் ஞானத்துக்கு இலக்காக்கி தோஷம் இருந்தால் அஞ்ஞானத்துக்கு இலக்காக்கி –
அடிப்படை மாறாமல் பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள்

இந்திரிய அநபேஷ நித்ய முக்தர்கள் —சங்கல்ப மாத்ரத்தால் -அநர்வாசீனம் -இந்திரியங்கள் உதவி இல்லாமல் –
ப்ராசங்கிக்கமாக சேர்த்து இங்கு அருளி –
இது பிரத்யக்ஷத்தில் சேராது -என்றவாறு –

அனுஷ்டானம் முடித்து வந்தோம் -சுருக்கமாக சொல்லி -விவரித்து சொல்லியும் -ஸ்ம்ருதி தனியாக சொல்லலாமோ
முன்பே பார்த்த -பிரத்யக்ஷ ஞானம் -மனம் பதிவு –காலப் போக்கால் நோய் வாய் பட்டு போகலாம் -மீண்டும் பார்த்தால் நினைவு வரலாமே
உள்ளதை உள்ளபடி அறிய இது உதவுவதால் தனியாக சொன்னால் என்ன -ஸ்ம்ருதிக்கும் —ஸம்ஸ்கார சாபேஷ்த்வாத்
-முன்பே பார்த்த பதிவு இப்பொழுது உத்பூதம்-பிரத்யஷத்துக்கு மூலம் -சம்ஸ்காரம் இதை எதிர் பார்க்கும்
பூர்வ அனுபவ ஜன்ய ஸம்ஸ்கார மாத்ர ஜன்ய ஞானம் –ஸ்ம்ருதி – என்பதால் -அதிலேயே சேர்க்கலாம்
தோன்றி இருக்கும் சமஸ்காரம் காரணம் -ஸ்ம்ருதி -நினைவு கொள்ளுதல் –
சத்ருச பதார்த்தம் பார்த்து சம்ஸ்காரம் நினைவு வரும்
அதிருஷ்ட-பகவத் கிருபையால் -ஸ்ம்ருதி வரலாம்

சிந்தை மூலம் வரலாம்
யஞ்ஞதத்தன் தேவதத்தன் பிரியாமல் வருவதால் -சஹச்சர்யம் நாலாவது காரணம் –ஸ்ம்ருதிக்கு
எங்கேயோ இருந்து ஸ்ரீ ரெங்கம் திவ்ய தேச சிந்தனை வருமே -கமனீய திவ்ய மங்கல விக்ரஹ ஸ்ம்ருதி
அனுபூதி விஷயம் தான் ஸ்ம்ருதி -பிரத்யக்ஷம் அனுமானம் சப்தம் இவற்றுக்குள் சேறும் –
பிரத்யபிஞ்ஞா
-அக்ஷம் மாறி –பார்த்த பதார்த்தம் மீண்டும் கண் முன்னால் வருவது -சோயம் தேவ தத்தன் போலே
-இது ஸ்ம்ருதி இல்லை -அதே -என்ற நினைவு -ஆள் இல்லாமல் இல்லை -அவரே நேரே வர –இதுவும் அந்தர்பாவம் –

—————————————————

குறையல் பிரான் திருவடிக் கீழ் விள்ளாத அன்பன் இராமானுசன் -இன்றும் திருவடியில் சேவை யுண்டே திரு நகரியில் —
வியாசம் நாராயணன் வித்தி -வேதாந்தம் உள்ளபடி சொல்லி -அத்தையே ஸ்ரீ பாஷ்யத்தில் காட்டி அருளி
-அருளிச் செயல்களைக் கொண்டே ஸூ த்ரங்களை ஒருங்க விடுவார் –
சொப்பனமும் பிரம்மமும் உண்மை -தத்வ த்ரயங்களும் சத்யம் நித்யம் -எந்த ஞானமும் ஸத்ய ஞானமாகவே இருக்க வேண்டும் –
பொய் நின்ற ஞானம் -மாயை -ஜகம் மித்யா சொல்வார்கள் நடுவில் –

சாத்ருஸ்யம்-அதிருஷ்டம் -சிந்தா –சாஹசர்யம் -நான்கு காரணங்களால் ஸ்ம்ருதி -சம்ஸ்காரம் ஏற்பட்டு –
பிரத்யக்ஷம் இருந்தால் தான் சம்ஸ்காரம் வரும்
ப்ரத்ய பிஞ்ஜை ஜை –மீண்டும் பார்த்து -அவரே இவர் -ஸ்ம்ருதி விட கொஞ்சம் மாறி-அபாவம்-   –
நையாகிகன்-த்ரவ்யங்கள் -50-பிரித்து
பதார்த்தங்கள் -சொல் பொருள் -பதமும் அர்த்தமும் -ஏழு -த்ரவ்யம் குணம் கர்மம் -இத்யாதி —சமவாயம் -அபாவம்
சமவாயம் நூல் பச்சை வர்ணம் -ஸ்வரூபேண சேர்ந்து இருக்கும் வேதாந்தம்
அபாவம் இல்லாமை தனி பொருள் என்பான்
பிரத்யக்ஷம் கண்ணாலும் காதலும் -இல்லாமை வெறுமை –தனி பதார்த்தம் -உபலப்தி -எதிர்பதம் அநு பலப்தி காணாமை என்பான் –
காணாமை பிரமாணத்தால் இல்லாமை அபாவம் சாதிப்பான் –
அபாயமும் பிரத்யக்ஷத்தில் சேரும் -என் எண்ணில் வாஸ்து இங்கு இருந்து இருந்தால் பார்த்து இருப்பேன் –
நான் பார்க்காததால் இங்கே இந்த பொருள் இல்லை
இல்லாமைக்கும் நான் பார்க்காததற்கும் சம்பந்தம் இல்லை –

கடத்தவம் -பாவம் கட பாவம் -வேஷ்ட்டி படத்துவம்-மாற்று ஒரு வாஸ்துவில் இருந்து வேறு பாடு படுத்த –
பின்னமாக கிரஹிப்போம் -பாவத்துக்கு  பாவாந்தரம் அபாவம் -தனியாக இல்லையே -கடத்துவத்தின் இல்லாமை பூமி -பூதலம் -தனியாக இல்லை –
பிராக பாவம் -கடம் கடத்துக்கும் உன் நிலைமை கடம் இல்லாமை
பிரதவம்ஸா பாவம்
உடைத்து துகள் -ஊகம்–ஊகித்து அறிவது –இதுவும் பிரத்யக்ஷத்தில் சேரும் -பிரத்யக்ஷம் இருப்பதால் தானே ஊகம் -கை
கிரஹணம் -பேதம் வைத்து -இவரை பார்த்து அவர் இல்லை -இவருக்கு உண்டான அசாதாரண அடையாளம் கொண்டே கிரஹிக்கிறோம்

விசேஷணம் வியாவர்த்த அர்த்தம்
உயரம் வெளுப்பு பருமன் -ஒவ் ஒரு விசேஷங்களுக்கும் உதவி உண்டு -மாற்றி உள்ள வஸ்துக்களை விலக்க-
ஆகார பேதங்கள் உடனே குழந்தை கூட செப்புக்களை -கன்று குட்டி தனது தாய் பசுவை நோக்கி போவதும் பேதம் அறிந்தே
தர்சனம் பேத ஏவ ச -தேவ பெருமாள் இத்தையே அருளிச் செய்தார்
பிராக பாவம் மண் தான் -பிரத்யக்ஷத்தால் பார்த்தோம் -பிரதவம்ஸா பாவம் மடக்கு-கபாலம் –
ஆகையால் அபாயமும் பிரத்யக்ஷத்தில் சேரும் -சாஸ்த்ர அநுக்ரஹியத்தமாகவே வாதம் இருக்க வேண்டும் –

ஞானம் பேதத்துடனே -கடத்தில் பட பேதம் -படத்தில் கட பேதம் -கடத்தில் -பல பேதங்கள் -மனுஷ்ய ரத்ன பேதம் –
இவை எல்லாம் கடம் -கடத்தவம் – பேதமும் கடத்வமும் ஓன்று என்பதே சித்தாந்தம் –
பேதத்வமும் கடத்வமும் ஒன்றே -நம் சித்தாந்தம் –
பட பின்னம் சொன்ன உடன் -பிரதி யோகி அபேக்ஷை -எதில் இருந்து –
கடம் சொன்னதும் இந்த எதில் இருந்து அபேக்ஷை வர வில்லை -ஓன்று சொல்ல முடியாதே பூர்வ பஷி
பத ஸ்வபாவம் எதிர்பார்க்கும் -தாசாரதி புத்ரன் -யாருக்கு பிரத்யோகி எதிர் பார்க்கும் -ராமன் சொன்னதும் எதிர் பார்க்காதே –
தசாரதி புத்ரன் பல பொருள்கள் இருக்கலாம் ராமனைக் குறிக்கும்
அடுத்து சம்சயம்
இதுவோ அதுவோ -சங்கை -பிரத்யக்ஷத்தில் சேர்க்கலாம் -மா மரம் தென்னை மரம் ஆகாரம் அறிந்தால் தான் சங்கை வரும்
புண்ய ஆத்மா -காளிதாசர் -ஸ்த்ரீ வர்ணனை -மாற வர்ணனை கவிகளுக்கு பிரதிபா –தனி தத்வம் என்பான் பூர்வ பஷி –

நமக்கு அறியாதவற்றை அறிபவர் -திரு மஞ்சன கட்டியம் -64-மந்த்ர பர்வம் மேகம் போலே நினைத்து –
பிரத்யக்ஷம் இல்லாமல் பிரதீபை வேலை செய்யாதே
புது பிரமாணம் இல்லை -புண்ணியம் ஆச்சர்ய கடாக்ஷத்தால் வந்த சிறப்பு –

அனைத்து அறிவும் யதார்த்தம் நம் சம்ப்ரதாயம் -பொய் -உண்மை கொஞ்சம் மங்கி -மேகம் மூடி
ஸூர்ய பிரகாசம் மறைப்பது போலே -ஸூர்ய பிரகாசம் இல்லாமை பதார்த்தம் இல்லையே
மோக்ஷம் -என்பதே ஆத்மாவின் ஸ்வரூப ஆவிர்பாவம் -கர்மம் மூடி ஞான ஆனந்க்ங்கள் மங்கி
மணி -சேற்றில் மூட –ஒளி ஊட்ட வேண்டாம்
கல் எடுத்து -நீர் வரும் -தடங்கல் நீக்கி தானே இருப்பது மிளிரும் –
பிரமம் போன்ற பிரமிப்பும் யதார்த்தம் -முத்துச் சிப்பி வெள்ளி என்பதும் உண்மை -கயிறு பாம்பு
க்யாதி -அக்யாதி அந்யதா கியாதி ஆத்ம கியாதி அசத் கியாதி – அமிர் வாசனாதி

இவை எல்லாம் பொய் என்றும் -சத் கியாதி உண்மை அறிவு -அறிவும் உண்மை அறிவால் அறியப் படும் பொருள்களும் உண்மை பூர்வ பஷி –
அக்யாதி -முத்துச் சிப்பி வெள்ளி –நத்தை பார்த்து வெள்ளி சொல்ல வில்லை -ஏதோ ஆகாரம் இருக்கவே சொல்கிறான் –
பஞ்சீ கரணம் -மூலம் இவை சாத்தியம் -கலப்பாடு -நீல வானம் சொல்கிறோம் –
ரூபம் அக்னிக்கு -ஆகாசத்துக்கு சப்தம் குணம் -பஞ்சீ  கரணத்தால் ஒவ் ஒன்றின் தன்மை மற்று ஒன்றில் இருக்குமே –
அதனால் கிரஹணம் பொய் இல்லையே –
பிரமம் ஞானம் வந்த பின்பு பிரேமா ஆகும் -வியவகாரம்-பண்ணலாம் -அம்சம் கொஞ்சம் இருப்பதால் தான் பிரமம் உண்டாயிற்று
அக்யாதி –அறிவே ஏற்படாமல் -ராஜதம் -வெள்ளி -முத்துச் சிப்பியில் இல்லை என்று –
ராஜ பேத ஞானம் ஏற்பட வில்லை அக்யாதி என்பான் மீமாம்சை
நாம் சாக்யாதி எல்லாம் என்கிறோம் -தன்மையை குறைவாக கிரஹிப்பதால்
ஜரிகை புடவை –வெள்ளித் தன்மை -உண்டே –
அந்யாத க்யாதி நையாயிகன் -தனியான ஞானம் என்பான் இத்தை –
ஆத்ம க்யாதி -எல்லா பொருளும் இல்லை -ஆத்மா ஒன்றே உண்மை -இதனால் குடம் தொற்றுகிறது என்பார் –
அனிர்வசனிய வாதம் –எது என்று சொல்ல முடியாது -மித்யா ராஜதம் –
பொய்யான வெள்ளி -அவித்யையால் -அது அநிர் வசனீயம் -அசத் க்யாதி என்றும் சொல்வர்

இவற்றை தள்ளி சத் க்யாதி -இது தான் ஞானத்துக்கு விஷயம் எல்லாம் சத்
மருள் என்பது என்ன எல்லாம் சத்
மருள் -பிரமை –தெருள் -பிரேமா -தெளிவான ஞானம் –தெளிவுற்ற ஆழ்வார்கள்
புதுசாக கல்பிக்க வேண்டாம் -விஷய விபாக -வியவஹாரம் பாதம் இருப்பதால் பிரமம் –
பஞ்சீ கரணமே காரணம் அம்சங்கள் கலந்து இருக்கும் -ரஜத  அம்சம் ஸ்வல்பமாக இருப்பதால் விவகாரத்துக்கு வராது –
அந்த வியவஹாரம் பாதிக்கப் படுவதால் பிரமம் மருள் உண்டாகும் -சிப்பி  அம்சம் கூட இருப்பதை அறிந்ததும் பிரமம் போகும் –
வெள்ளி இல்லை என்பது இல்லை -கொஞ்சம் அம்சம் உண்டு –
சிப்பி அம்சம் கூட – வெள்ளி என்கிற வியவஹாரம் எடுத்து வளையல் பண்ணுவது தடுக்கப் படும்
சரீரம் -ஆத்மா -மோக்ஷ சாதனம் புரிந்து அதுவே சாத்தியம் என்று இருக்கக் கூடாது என்பதே -வேண்டும் –

சர்வம் விஞ்ஞானம் யதார்த்தம்
சொப்பனம் முதலிய ஞானங்களும் சத்யம் -கர்மா  அனுகுணமாக ப்ரஹ்மமே படைக்கும் -கருணையால் நடக்கும் -தூங்கும் பொழுதும் கர்மம் தொலைக்க வழி இது
சின்ன பாபத்துக்கு பாம்பு கடிப்பதால் -சொப்பனத்தில் -கொஞ்சம் துக்கம் பட்டு பாபங்கள் கொஞ்சம் போகுமே –
வெளுத்த சங்கம் பார்த்து மஞ்சள் -காமாலை கண்ணால் -இதுவும் உண்மை -உள்ளே பித்தம் தலைக்கு ஏறி –
கண்ணில் ஒளி -தெளிவாக இல்லாமல் -பித்தம் மஞ்சள் உடன் தொடவே இதில் உள்ளவற்றை அதில் ஏற்றி உணர்கிறான் –
விளக்கில் வர்ண காகிதம் ஒட்டி மாறுவது போலே -பித்த கத பீதிமா -மஞ்சள் தன்மை -நிரம்பி -அப்படி பார்க்கிறான் –
செம் பருத்தி பூ -ஜெபா குசும்பன் – படிகம் -சிகப்பில் –பிரதிபலிக்கும் தன்மை
ஸ்படிகத்தில் உள்ளதே -அதுவும் சிகப்பு என்று நினைக்கும் ஞானமும் சத்யம்
ஸூர்யன் நீரில் பிரதி பலித்து -படம் எடுத்து பரிசு வாங்குகிறர்களே இதுவும் உண்மை
கானல் நீரும் உண்மை ம்ருக த்ருஷ்ணிகா –மரீஷிகயா–சூர்யா கிரணம் பட்டு -நீர் இருப்பதாக –
இதுவும் பஞ்சீ கரணத்தால் வந்தது
இதுவும் உண்மை –

திக் மோகம் -காட்டில் தெற்கு வடக்கு தெரியாமல் -இதுவும் உண்மை –
குண திசை –திசைகளை படைத்த பலன் -திக்  மோகம் -தெற்கே வடக்காக்குமே இடம் மாறினால் -திக் அந்தரம் -உண்டே அதனால் திகப்பிரமமும் உண்மை
திக்கு தனி த்ரவ்யம் இல்லை வேதாந்தத்தில் -தனி த்ரவ்யம் இல்லை -வரை அறுத்து சொல்வது ஒரு இடத்தை வைத்து
கொள்ளிக் கட்டை –சக்கரம் சுத்த -இடை வெளி கிரகிக்க முடியாதே -எல்லா இடத்திலும் நெருப்பு இருப்பதாக காட்டும் பிரமும் உண்மை
கண்ணுக்கு கிரஹிக்கும் சக்தி இல்லை வேறு பாட்டை-
கண்ணாடி பிரதிபிம்மமும் உண்மை பொய் இல்லை -பெருமாளுக்கு ஆராதனம் செய்து நம்மையே உயர்த்திக் கொள்வது -போலே
நம் முகம் தயிரில் தண்ணீரில் பார்க்கிறோம் –பிரதிபலிக்கும் சக்தி -பிரதிகதம் தடங்கல் – –
கண்ணாடி கிரஹிக்கும் முன் முகம் –நயன தேஜஸ் பேதம் மாறி இரண்டாக -காட்டும் -ஸாமக்ரி பேதத்தால் -சர்வம் யதார்த்தம் –
பேதம் சொன்னதும் எதில் இருந்து பேதம் பிரதி யோகம் எதிர்பார்க்கும் –தன்னை விட்டு எண்ணி —
தசம் அஸ்து-பிரத்யக்ஷ ஞானம் ஏற்படும் -வாக்ய ஜென்ம ஞானம் இல்லை
– இல்லாத வாஸ்து அறிய தான் வாக்ய ஜன்ய ஞானம் –
நீ தான் பத்தாவது ஆள் -காட்டியது -பிரத்யக்ஷம் -புரியும்
தத்வம் அஸி ஸ்வேதகேது -வாக்ய ஜென்ம ஞானத்தால் மோக்ஷம் என்பர் அத்வைதி
பக்தி ரூபாபன்ன ஞானத்தால் தான் மோக்ஷம்
பிரத்யக்ஷம் –
விஷயம் –

ஆத்மாவில் உள்ள ஞானம் அந்தக்கரணம் -செயல் படும் சைதன்யம் -விஷயத்தில் உள்ள ஞானம் -மூன்றும் ஐக்கியம் ஏற்பட்டால் –
சம்பந்தத்தால் ஞானம் –அபேதமே சித்தாந்தம் என்றபடி –
ஏதோ இது -முதல் ஞானம் இது இது இரண்டாவது ஞானம் என்று இல்லை -வாசி கொண்டே கிரகிக்கிறோம்
கநாதர் -தர்க்க சாஸ்திரம் பாணினி வியாகரண சாஸ்திரம் -உதவும் அம்சம் இவை -யுக்தமான இவை
தடாகம் சேறு –தப்பை விட்டு நல்லது மட்டும் எடுப்பது போலே –பரம அணு காரணம் வேத புருஷனால் சொன்னது
ஈஸ்வரன் அநு மானத்தால் ஸ்தாபனம் -ஜீவன் விபு -சாமான்ய விசேஷ பதார்த்தங்கள் -உவமானம் தனி பிரமாணம் —
இவை போல்வன அவி விருத்தங்கள் என்றவாறு –
பிரத்யக்ஷம் இது வரை பார்த்தோம் மேலே ஒன்பது விஷயங்கள் உண்டே –

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ரீனிவாச மஹா குரு ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: