அருளிச் செயல்களும் -துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று ஓதிய வாக்கும்–

பெரியாழ்வார் திருமொழி —
தாரித்து நூற்றுவர் தந்தை சொல் கொள்ளாது போருய்த்து வந்து புகுந்தவர் மண்ணாளப்
பாரித்த மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று தேருய்த்த கைகளால் சப்பாணி -தேவகி சிங்கமே சப்பாணி -1-6-6-

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து –அஞ்சன வண்ணனே அச்சோ வச்சோ ஆயர் பெருமானே அச்சோ அச்சோ -1-8-3-

கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி எழலுற்று மீண்டு இருந்துன்னை நோக்கும்
சுழலைப் பெரிதுடைத் துச்சோதனனை அழல விழித்தானே அச்சோ வச்சோ ஆழி யங்கையனே அச்சோ வச்சோ –1-8-5-

போர் ஓக்கப் பண்ணி இப் பூமிப பொறை தீர்ப்பான் தேர் ஓக்க வூர்ந்தாய் செழும் தார் விசயற்காய்
நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று தாழ்ந்த தனஞ்சயர்க்காகி தரணியில்
வேந்தர்களுட்க விசயன் மணித் திண் தேர் ஊர்ந்தவன் என்னைப் புறம் புல்குவான் –உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான் -1-9-4-

மெச்சூது சங்கமிடத்தான் நல்வேயூதி பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னார்க்காய்
பத்தூர் பெறாதன்று பாரதம் கை செய்த அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் -2-1-1-

மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய பார்த்தன்
சிலை வளையத் திண் தேர் மேல் முன்னின்ற செங்கண் அலவலை வந்தப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் -2-1-2-

ஒன்றே யுரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான் துன்று முடியான் துரியோதனன் பக்கல்
சென்று அங்குப் பாரதம் கை எறிந்தானுக்கு கன்றுகள் மேய்ப்பதோர் கோல் கொண்டு வா கடல் நிற வண்ணற்கோர் கோல் கொண்டு வா -2-6-4-

சீரொன்று தூதாய்த் துரி யோதனன் பக்கல் ஊர் ஓன்று வேண்டிப் பெறாத வுரோடத்தால்
பார் ஒன்றிப் பாரதம் கை செய்து பார்த்ததற்குத் தேர் ஒன்றை யூர்ந்தாற்கோர் கோல் கொண்டு வா
தேவ பிரானுக்கோர் கோல் கொண்டு வா –2-6-5-

பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போரேறே என் சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா -3-3-5-

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து —அஞ்சன வண்ணனைப் பாடிப் பற யசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற -3-9-5-

மன்னர் மறுக மைத்துனன்மார்க்கு ஒரு தேரின் மேல் முன்னங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை –தென் திருமாலிருஞ்சோலையே -4-2-7-

பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை –தொல்லை மாலிருஞ்சோலையதே -4-3-6-

திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய் அரசினை யவிய அரசினை யருளும்–கண்டம் என்னும் கடி நகரே -4-7-8-

மருமகன் தன் சன்னதியை உயிர் மீட்டு மைத்துனன் மார் உருமகத்தே வீழாமே குரு முகமாய்க் காத்தானூர் –புனல் அரங்கம் என்பதுவே –4-8-3-

மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி உத்தரை தன் சிறுவனையும்
உய்யக் கொண்ட உயிராளன் யுறையும் கோயில் –திருவரங்கமே –4-9-6-

—————————————————

நாச்சியார் திருமொழி
பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும் சாரங்கவில் நாண் ஒலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ –9-9-

செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பர்
தம்மை யுகப்பாரைத் தாமுகப்பார் என்னும் சொல் தம்மிடையே பொய்யானால் சாதிப்பாரினியே —11-10-

—————————————————-

திருச்சந்த விருத்தம்
பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன் தேர் மிகுத்து மாயமாகி நின்று கொன்று வென்றி சேர்
மாரதர்க்கு வான் கொடுத்து வையமைவர் பாலதாம் சீர் மிகுத்த நின்னலால் ஓர் தெய்வம் நான் மதிப்பனே –89-

—————————————–

பெரிய திருமொழி
பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர் கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் –திருவேங்கடம் அடை நெஞ்சே -1-8-4-

முன் ஓர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன் மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து -அவனே
பின் ஓர் தூது ஆதி மன்னார்க்காகி பெரு நிலத்தார் இன்னார் தூதன் என நின்றான் எவ்வுள் கிடந்தானே –2-2-3-

விற் பெரு விழாவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னை புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-1-

இன் துணைப் பதுமத்து அலர் மகள் தனக்கும் இன்பன் நற் புவி தனக்கு இறைவன்
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-5-

அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசர்க்கு இளையவன் அணியிழையைச் சென்று
எந்தமக்கு உரிமை செய்யெனைத் தரியாது எம்பெருமான் அருள் என்ன
சந்தமல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-6-

பாரேறு பெரும் பாரம் தீரப் பண்டு பாரதத்துத் தூதியங்கி பார்த்தன் செல்வத் தேரேறு சாரதியாய் எதிர்ந்தார்
சேனை செருக்களத்துத் திறல் அழிய செற்றான் தன்னை –திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே -2-10-8-

வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினால் விசயனுக்காய் மணித் தேர் கொள் கைத் தலத்து எந்தை பெம்மானிடம் –திருவயிந்தரபுரமே -3-1-9-

ஏது அவன் தொல் பிறப்பு இளையவன் வளையூதி மன்னர் தூதுவனாய் அவனூர் சொல்லுவீர்கள் சொலீர் அறியேன் –புனலாலி புகுவர் கொலோ -3-7-4-

மல்லரையட்டு மாளக் கஞ்சனை மலைத்து கொன்று பல்லரசு அவிந்து வீழப் பாரதப் போர் முடித்தாய் –-காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -4-6-6-

மூத்தவற்கு அரசு வேண்டி முன்பு தூது எழுந்து அருளி மாத்தமர் பாகன் வீழ மத கரி மருப்பு ஓசித்தாய் —காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -4-6-7-

கரையார் நெடு வேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி–புள்ளம் பூதங்குடி தானே –5-1-8-

வாம்பரியுக மன்னர் தம் உயிர் செய் ஐவர்கட்க்கு அரசளித்த காம்பினார் திரு வேங்கடப் பொருப்ப
நின் காதலை அருள் எனக்கு –திரு வெள்ளறை நின்றானே –5-3-4-

பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது
அறிந்தேன் நீ பணித்த வருள் என்னும் ஒள் வாள் உருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்து வந்து
செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே -6-2-4-

நீ திருவாய் மலர்ந்து அருளின
சரம ஸ்லோகத்தைப் பற்றினேன் -நீ பணித்த அருள்
ஒள வாளுருவி -சரம ஸ்லோகம் ஒள் வாள்
ஐம்புலன்கள் இடர் -வினைத் தூற்றை வேர் அறுத்தேன்
ஒள் வாளுருவி வினைத் தூற்றை வேர் அறுத்தேன் -ஆச்சார்ய ஹிருதயம்-

வெள்ளைப் புரவித் தேர் விசயற்காய் விறல் வியூகம் விள்ள சிந்துக்கோன் விழ ஊர்ந்த விமலனூர் –நறையூர் –6-5-8-

பாரையூரும் பாரம் தீர பார்த்தன் தன் தேரையூரும் தேவ தேவன் சேருமூர் –நறையூரே –6-5-9-

மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவி குடையா வரை யொன்று எடுத்து ஆயர் கோவாய் நின்றான் –நறையூர் நின்ற நம்பியே -6-7-7-

பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்து கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்தான் –நறையூர் நின்ற நம்பியே -6-7-8-

மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர் பண்ணின் மேல் வந்த படையெல்லாம் பாரதத்து
விண்ணின் மீதேறி விசயன் தேரூர்ந்தானை நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே –6-8-8-

உரங்களால் இயன்ற மன்னர் மாளப் பாரதத்து ஒரு தேரை ஐவரக்காய்ச் சென்று இரங்கி யூர்நது அவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை -7-3-4-

பாரித்து எழுந்த படை மன்னர் தம்மை மாள பாரதத்துத் தேரில் பாகனா யூர்ந்த தேவ தேவன் ஊர் போலும் –அழுந்தூரே-7-5-2-

கயம் கொள் புண் தலைக் களிறுந்து வெந்திறல் கழல் மன்னர் பெரும் போரில் மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் –8-5-4-

துவரிக்கனி வாய் நில மங்கை துயர் தீர்ந்துய்ய பாரதத்துள் இவரித்தரசர் தடுமாற
இருள் நாள் பிறந்த அம்மானை –கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-9-

அரவ நீள் கொடியோன் அவையில் ஆசனத்தை அஞ்சிடாதே இட அதற்குப் பெரிய மா மேனி
அண்ட மூடுருவப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன் –திருக் கண்ணங்குடியில் நின்றானே –9-1-8-

பன்னிய பாரம் பார்மகட்க்கு ஒழியப் பாரத மா பெரும் போரில் மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர்
மைத்துனருக்கு உய்த்த மா மாயன் —திருக் கண்ணங்குடியில் நின்றானே –9-1-9-

பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்து ஒரு தேர் முன் நின்று காத்தவன் தன்னை –திரு மால் இருஞ்சோலை நின்ற மூர்த்தியை -9-9-8-

செரு வழியாத மன்னர்கள் மாளத் தேர் வலம் கொண்டு அவர் செல்லும் அரு வழி வானம் அதர் படக் கண்டா ஆண்மை கொலோ -10-9-5-

அன்று பாரதத்து ஐவர் தூதனாய் சென்ற மாயனைச் செங்கண் மாலினை மன்றிலார் புகழ் மங்கை வாட் கலிகன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே –11-1-10-

மன்னிலங்கு பாரதத்து தேரூர்ந்து —தேவர்க்கு இது கண்ணீர் என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே –11-3-1-

கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான் தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் ஆகிலும் ஓத நீர் வையகம் முன்னுண்டு உமிழ்ந்தான் சாழலே–11-5-6-

பார் மன்னர் படை தொட்டு வெஞ்சமத்து தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் காணேடீ
தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் ஆகிலும் தார் மன்னர் தங்கள் தலை மேலான் சாழலே –11-5-7-

——————————————————-

திரு நெடும் தாண்டகம்
ஓர் தேரால் மன்னிலங்கு பாரதத்தை மாள யூர்ந்த வரை யுருவின் மா களிற்றைத் தோழீ –இன்பம் எய்த எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே -28-

—————————————————–

முதல் திருவந்தாதி
மயங்க வலம் புரி வாய் வைத்து வானத்து இயங்கும் எறி கதிரோன் தன்னை –
முயங்கமருள் தேராழியால் மறைத்தது என் நீ திருமாலே போராழிக் கையால் பொருது –8-

வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த வூர் –37-

குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும்
இன்று முதலாக வென்னெஞ்சே -என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித் திரு ——–41-

———————————————

இரண்டாம் திருவந்தாதி
திரிந்தது வெஞ்சமத்து தேர் கடவி அன்று பிரிந்தது சீதையை மான் பின் போய் புரிந்ததுவும்
கண் பள்ளி கொள்ள அழகியதே நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு -15–

————————————————

மூன்றாம் திருவந்தாதி
அடைந்தது அரவணை மேல் ஐவர்க்காய் அன்று மிடைந்தது பாரத வெம்போர் உடைந்ததுவும்
ஆய்ச்சி பால் மத்துக்கே வாள் எயிற்றுப் பீய்ச்சி பாலுண்ட பிரான் –28-

——————————————-

நான்முகன் திருவந்தாதி
நிலை மன்னும் என்நெஞ்சம் அந்நான்று தேவர் தலை மன்னர் தாமே மாற்றாக
பல மன்னர் போர் மாள வெங்கதிரோன் மாயப் பொழில் மறைய தேராழியால் மறைத்தாரால் -16-

நிகழ்ந்தாய் பால் பொன் பசுபுக் கார் வண்ணம் நான்கும் இகழ்ந்தாய் இருவரையும் வீய புகழ்ந்தாய்
சினப் போர்ச்சுசேதனைச் சேனாபதியாய் மனப்போர் முடிக்கும் வகை –24-

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வகை யறிந்தேன் -ஆற்றங்
கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –50-

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன்
அன்று ஓதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலராய் மெய்ஞ்ஞானமில் –71–

—————————————————

பெரிய திரு மடல்
மன்னர் பெரும் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய் தன்னை இகழ்ந்து உரைப்பத் தான் முன நாள் சென்றதுவும் -141/142-

————————————————————————–

திருவாய்மொழி

பிணக்கற அறு வகைச் சமயமும் நெறி உள்ளி உரைத்த
கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதி யம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புற நெறி களை கட்டு
உணக்குமின் பசை அற அவனுடை யுணர்வு கொண்டு உணர்ந்தே–1-3-5-

தீர்த்தான் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தியவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயான் பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –1-8-5-

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர் எல்லாச் சேனையும் இரு நிலத்தவித்த வெந்தாய்
பொல்லா வாக்கையின் புணர் வினை யறுக்கலறா சொல்லாய் யானுன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே -2-2-3-

நீர்மையில் நூற்றுவர் வீய ஐவருக்கு அருள் செய்து நின்று பார்மல்கு சேனையவித்த பரஞ்சுடரை நினைந்தாடி
நீர்மல்கு கண்ணினாராகி நெஞ்சம் குழைந்து நையாதே ஊன் மல்கி மோடு பருப்பார் உத்தமர்கட்க்கு என் செய்வாரே -2-5-7-

அடியோங்கு நூற்றுவர் வீய அன்று ஐவருக்கு அருள் செய்த நெடியோனை -2-7-11-

ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தனை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே–4-5-5-

போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாய போர்த் தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே -4-6-1-

மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று மாயப் போர் பண்ணி நீறு செய்த வெந்தாய் –சிரீ வர மங்கல நகர் ஏறி வீற்று இருந்தாய் –5-7-4-

பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத் திறங்கள் காட்டியிட்டுச் செய்து போன மாயங்களும் -5-10-1-

மண் மிசைப் பெரும் பாரம் நீங்க ஒரு பாரத மா பெரும் போர் பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ் பட நூற்றிட்டுப் போய்
விண் மிசைத் தான தாமமே புக மேவிய சோதி தன் தாள் நண்ணி நான் வாங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே -6-4-10-

மாயம் அறிபவர் மாயவர்க்கு ஆளின்றி யாவரோ -தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்
தேசம் அறிய வோர் சாரதியாய்ச் சென்று சேனையை நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை யறிந்துமே –-7-5-10-

வார்த்தை யறிபவர் மாயவர்க்கு ஆளின்றி யாவரோ போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்து பெரும் துன்பம் வேரற நீக்கித் தன் தாளின் கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே -7-5-11-

பிறந்த மாயா பாரதம் பொருத மாயா –உன்னை எங்கே காண்கேனே –8-5-10-

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் -9-1-10-

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்த வினையாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக பண்டே பரமன் பணித்த பணி வகையே -10-4-9-

வாட்டாற்றான் மன்னஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்காப் படை தொட்டான் நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே-10-6-4-

————————————————————

இராமானுச நூற்றந்தாதி

அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திட தானும் அவ் ஒண் பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமானுசன் தன் படி இதுவே -36 –

அடியைத் தொடர்ந்து எழும் ஐவர்க்காய் அன்று பாரதப் போர் முடிய பரி நெடும் தேர் விடுங்கோனை முழுதுணர்ந்த
அடியர்க்கமுதம் இராமானுசன் என்னை யால வந்து இப்படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே–51-

சரணம் அடைந்த தருமனுக்கா பண்டு நூற்றுவரை மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த கரணம் இவை யுமக்கு
என்று இராமானுசன் உயிர்கட்க்கு அரண் அங்கு அமைத்திலனேல் அரண் ஆர் மற்று இவ்வார் உயிருக்கே–67-

ஆர் எனக்கு இன்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன இராமானுசனைப் பணியும் நல்லோர் சீரினில் சென்று பணிந்தது என் ஆவியும் சிந்தையுமே -68-

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: