ஸ்ரீ கோபால விம்சதி-

ஸ்ரீ கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும் -மம நாத -கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -கண்ணனாம் அமுதக்கடல் திருவாய் மொழி
பும்ஸாம் சித்த அபஹாரிணாம்-ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்-கண்டவர் சிந்தை வழங்கும் கண்ண பிரான் –
சாஷாத் மன்மத மன்மத -கிருஷ்ண –க்-லஷ்மி பதி- ரு ராமன்- ஷாகாரம் –
ஞானாதி ஷட் குணங்கள் -ஸ்வேத தீப வாசி நரசிம்மன் நர நாராயணன் –
நிகம கற்பக தரு -வேதாந்த பழம் -ஸூ க முகமத்– கீழே வந்த பழம் -அம்ருத த்ரவய தாரை -பக்தி ரசம் –

ஸ்ரீ மன் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக்க கேஸரீ
வேதாந்த சார்யோ வர்யோ மே சந்தி தத்தம் சதா ஹ்ருதி

—————————-

வந்தே பிருந்தாவன சரம் வல்லவீ ஜன வல்லபம்
ஜயந்தீ சம்பவம் தாம வைஜயந்தீ விபூஷணம் —-1–

ஸ்ரீ ஜெயந்தி அன்று திரு அவதரித்தவனும் -ஸிம்ஹ ஸ்ராவண –ஆவணி மாதம் -கிருஷ்ண பக்ஷம் அஷ்டமி -ரோஹிணி நக்ஷத்ரம்
பிருந்தாவனத்தில் சஞ்சரித்தவனும் -இடைப்பெண்களுக்கு ப்ரியதமமானவனும்
ஸ்ரீ வைஜயந்தி என்னும் வனமாலையை அலங்காரமாக தரித்தவனுமான கண்ணன் என்னும் ஜோதியை வணங்குகிறேன்

மங்கள ஸ்லோகம் -யாதவாத்யஹ்ருதயம் -இதே ஸ்லோகம் –வந்த -மங்கள வந்தனம் -கோபாலன்
வேத வாக்குகள் -சொற்கள் -பசுக்கள் -ரக்ஷகன் –
சர்வ உபநிஷத் காவா –கீதாம்ருதம் -பார்த்தோ வத்ஸா-நாம் பருக -அன்றோ –
கர கமல-தோழியும் நாமும் தொழுதோம் -அங்கே வேண்டிப் பெறுவான் —
நாதன் -ஸ்வாமி –
வந்தே
எப்பொழுதும் -பிரபத்யே போலே வர்த்தமானம் –அஹம் வந்தே -சொன்னால் அஹங்காரம் வருமே -தன்னாலே அர்த்தாத் சித்தி –
தாஸோஹம் –தாஸ்யம் முன் வைத்து திருவடி –
பிருந்தாவன சரம்-
ஆரண்யகம் வேதமே -காடு -ப்ருஹதராண்யகம் பெரும் காடு -சாரம் -சஞ்சரிப்பவன் -கூட்டம் கூட்டமாக –
ரஷிப்பவன்–புண்யம் பவித்ரம் -திருவடி பட்டு —
வல்லவீ ஜன வல்லபம்-
ஸ்ரீ வல்லபன் -கோபீ வல்லபன் ஆனான் –ஸ்ரீ மறைத்து வாமனன் ஆனாது போலே —
காடுகளூடு –பின்னை மணாளன் –ஆயர் சிங்கம் -காயாம்பூ வண்ணன் –மழை களோ வருகிறதோ —
மங்கையர் சாலக –யூண் மறந்து –ஒழிந்தனரே-
கோவலனாய் குழலூதி கன்றுகள் மேய்த்து –கலந்து உடன் வருவானை தெருவில் கண்டு -இவனை ஒப்பாரை கண்டு
ஜயந்தீ சம்பவம் –
ஒருத்தி மகனாய் –இவரும் மறைத்து அருளிச் செய்கிறார் —வைகுண்ட பர லோகே –பக்தைர் பாகவத ஸஹ –
ஜெயந்தி -மட்டும் சொல்லும் -பெயரை சொல்லாமல் -ஜெயம் புண்யம் வெற்றி கொடுக்கும் நக்ஷத்ரம் –
ஜெ சப்தம் நிறைய அருளிச் செய்வார் இதில்
அஷ்டமி -ரோஹிணி -தாழ்ந்து பழகும் தன்மை -எட்டை பெருக்கி -கூட்டி பார்த்தால் -8 -7-இப்படி குறைந்தே வரும் –
ஒன்பதை பெருக்கி ஒன்பதே வரும் -ராமர் பரத்வம் நவமி –
பாஞ்ச ஜன்யமே கிண்டி –
அத்புதம் பாலகம் –அம்புஷேணம்-சங்கு சக்ர கதாதரம் ஸ்ரீ வத்சம் -கௌஸ்துபம் -பீதாம்பரம் –
பாலகம் பாலாக க யஸ்ய -பாலனாக நான்முகனும் இருந்தானாம் -அம்புஷேணம்- -ஸ்ரீ லஷ்மியைக் காட்டினானாம் -யசோதைக்கு –
தாம
தேஜஸ் -வன சஞ்சாரி தேஜஸ் -ஆயர் குலத்தில் தோன்றும் மணி விளக்கு அன்றோ —
ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்து -சுடர் அடி-
வைஜயந்தீ விபூஷணம்
மற்றவற்றுக்கும் உப லக்ஷணம் -வன மாலை குலுங்க நின்றவனை ப்ருந்தாவனத்தே கண்டோமே
வைஜயந்திக்கு இவன் ஆபரணம் –
சரக் வஸ்திர ஆபரணம் -ஸ்வ அனுரூபம் -சின்மயம் ஸ்வயம் பிரகாரசம் -நித்ய ஸூரிகள்-
வைஜயந்தி மட்டும் மறைக்க வில்லை -வனம் சஞ்சரிக்க –ஸுலப்யம் -தொடங்கி பரத்வம் சொல்லி -முதல் ஸ்லோகம் —

——————————————-

வாசம் நிஜங்கா ரசிகாம் ப்ரஸா மீஷாமாநோ
வக்த்த்ரார விந்த விநிவேசித பாஞ்ச ஜன்ய
வர்ண த்ரி கோண ருசிரே வர புண்டரீகே
பத்தாசநோ ஜயதி வல்லப சக்கரவர்த்தீ –2-

எழுத்துக்கள் கொண்ட -முக்கோண வடிவு இயந்திரத்தால் -எட்டுத்தளமுடைய அழகிய சிறந்த தாமரை வடிவமான
திவ்ய ஆசனத்தில் அமர்ந்து தன் மடியில் மகிழ்ந்த சரஸ்வதி தேவியை நன்கு கடாக்ஷிப்பவனும் –
தாமரை போன்ற தன் திரு வாயில் பாஞ்ச ஜன்யம் வைத்து இருப்பவனும்
இடைக்குலத்தின் சக்கரவர்த்தியாக கண்ணன் விளங்குகிறான் –
மந்த்ர ஸாஸ்த்ர அடிப்படையில் அமைந்த ஸ்லோகம் –

வாசம் நிஜங்கா ரசிகாம் ப்ரஸா மீஷாமாநோ –
சரஸ்வதி வர -நாட்டுப் பெண் -படைக்கப் பட்டவள் பெண் -நெருங்க
தேவர்கள் -சிறிய உரு கொண்டு -மடியில் உட்க்கார சிறிய உரு கொண்டு
உற்று பார்த்து -ஈஷமான -பிராசாமீஷா காண -நன்றாக
அங்கம் -மடியில் / நாமம் என்றுமாம் -கோ பாலன் -பார்த்தும் மகிழ்கிறான்
தாலேலோ பாட -மாணிக் குறளனோ தாலேலோ -கேட்டு ரசிக்கிறான் என்றுமாம் –
வாசம் -சரஸ்வதி -வாக் தேவி உபாசனம் -பரம ஏக காந்தி -பிரகாரி பாவத்தில் –
கோ -வாக்குக்கும் ரக்ஷகன் –ஹயக்ரீவர் இடம் வேதம் உபதேசம் பெற்றால் போலே சரஸ்வதி கண்ணன் இடம் உபதேசம்
யசோதை பால் போட்டும் பொழுது பாட -தாலாட்டு அனுபவிக்கிறான் -மாணிக்கம் கட்டி –
பிரமன் விடு தந்தான் வையம் அளந்தானே தாலேலோ -என்றுமாம்
தான் சரிதை கேட்டு மகிழ்ந்த பெருமாள் போலே

வக்த்த்ராரவிந்த விநிவேசித பாஞ்ச ஜன்ய –
திரு முக மண்டலம் -சங்குபாலாடை வைத்து புகட்ட
பரிபாகம் -தாமரை மலரில் வந்து தேனை பருகுவது போலே
பிராணவாகாரம் -சப்தம் வைத்து உபதேசம் என்கிறது
வாயில் அழுத்தி வைத்த சங்கு -பால் போட்ட தாய் -கற்பூரம், நாறுமோ -சொல்லாழி வெண் சங்கே –
தானே ஸ்பர்ச ஸூகத்தால் -அழுந்தி –
மது சூதன் வாய் அமுதம் ஸ்திரமாக பருகி –

வர்ண த்ரி கோண ருசிரே வர புண்டரீகே –
தாமரை மலர் -வர -சிறந்த -அஷ்டாக்ஷர தளம் உள்ள -சங்கு ஞானம் பிரதம்-
துருவன் விருத்தாந்தம் –சங்க ஸ்பர்சம் மூலம் –
பத்தாசநோ ஜயதி வல்லப சக்கரவர்த்தீ –ஆசனமாக கொண்டு -பல வர்ணங்கள் -முக்கோணம் –

கோபாலமந்த்ரம் -ரக்ஷணம் -சர்வ ரக்ஷகனுக்கும் -த்ருஷ்டிக்கு —
பார்வை குழந்தை மேலே படாமல் இருக்க ஆசனத்தில் எழுத்து –
புண்டரீகம் -தஹராசாகம்-புரிதத் நாடி –

வல்லப சக்கரவர்த்தீ –சக்கரம் எந்திரம் -ஆகிய சக்கரத்தில் வர்த்திக்கிறவன் –
கோபால மந்த்ரம் -உபாசனம் -ஞான உபதேசம் பெறுவோம் –
நின்றவாறும் இருந்தவரும் கிடந்தவாறும் நினைப்பு அரியன-தொட்டிலிலே மூன்றும் நிலைகள் -எம்பெருமானார் –
ஜயதி -இந்திரியங்களை வென்று -நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டு அனுபவிக்கிறார் இந்த நிலைகளை –

——————————————————–

ஆம்நாய கந்தி ருதித ஸ்புரிதாத ரோஷ்டம்
ஆஸ்ரா விலேஷண மநுஷண மந்த ஹாஸம்
கோபால டிம்ப வபுஷம் குஹநா ஜனன்யா
ப்ராண ஸ்தநந்த்யா மவைமி பரம் புமாம்சம் –3-

வேதத்தின் மணம் வீசிக் கொண்டும் – -அழுகையால் துடிக்கும் திரு உதடுகளையும் கொண்டும் –
அழுகையில் வேத மணம் வீசுகிறதாம் -அவன் மூச்சுக்கு காற்றே வேதம் என்று வேதம் சொல்லுமே –
கண்ணீரால் கலங்கிய திருக் கண்களை உடையவனும்
அடிக்கடி ஸ்மிதம் கொண்டவனும் -தாய் போலே வஞ்சித்து வந்த பூதனையின் பாலையும் உயிரையும் ஓக்க பருகியவனுமான
இடைக்குழந்தை கண்ணனை பரம புருஷனாக அறிகிறேன்

ஆம்நாய கந்தி ருதித ஸ்புரிதாத ரோஷ்டம்

ஆம்நாய கந்தி-
வேத மணம் கமழும் -இவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் –
பிராணவாராம் ஓதினார் -சரஸ்வதி கீழே பார்த்தோம் –
பசியினால் அழுதாலும் வேதம்

ஆஸ்ரா விலேஷண மநுஷண மந்த ஹாஸம்
கண்கள் கலங்கி -கண்கள் மலர்ந்து –மந்த ஹாஸம் -பூதனை கிட்ட வரவே –

கோபால டிம்ப வபுஷம் குஹநா ஜனன்யா
இடையர் -முடை நாற்றம் -மாயா -பூதனை -இவனும் மாய குழந்தை –
சத்ரு -இராவணன் இலக்குமனை தூக்க முடிய வில்லை -இங்கோ பூதனை குழந்தையை எடுத்து -அநந்ய-காரியாகி வந்ததால்

ப்ராண ஸ்தநந்த்யா மவைமி பரம் புமாம்சம் –
யசோதை போலே வந்த மாயை –ஜகத் குரு விஷத்தை ரசமாக -உயிர் சக்கரை பாலுக்கு சேர்த்து கொண்டான் –
அவதாரத்தில் முதலில் தாடகை -பூதனை –
பால் பருகி பழகாதவன் -கிடைக்காத லாபம் அன்றோ இவனுக்கு –
இந்த அத்புதம் நினைப்பார் பால் குடிக்க வேண்டாமே -அத்புதம் பாலகம் -விசுவாமித்திரர் வந்ததே அத்புதம் என்பர் சக்ரவர்த்தி
ஸ்தம்பே –அத்யத்புதம் -அவதார கார்யம் நடப்பதே அத்புதம்
பேய் முலை –பித்தன் என்றே பிறர் ஏச நின்றான் –
கள்ளத்தினால் வந்த பேச்சி முலை ஈர்த்து உண்ண சுவைத்தான் –

பரம் புமாம்சம் —
பரம புருஷன் என்று அறிந்தேன் –எந்தாய் என்று நினைந்து நைந்தேன்
இருவராய் வந்தார் –என் முன் நின்றார் –அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே
பரத்வம் பார்த்து அகலுகை இல்லாமல் -இடைச்சிகளை போலே அணுகுவதே -ஆஸ்ரித லக்ஷணம்

———————————————————-

ஆவிர்பவத்வ நிப்ருத்தாபரணம் புரஸ்தாத்
ஆ குஞ்சி தைக சரணம் நிப்ரு தான்ய பாதம்
தத் நா நிமந்த முகரேண நிபத்த தாளம்
நாதஸ்ய நந்த பவனே நவநீத நாட்யம்–4-

ஒரு திருவடியை மடக்கி -மற்று ஒரு திருவடியை நிலையாக வைத்து -திவ்ய ஆபரணங்களை அசைத்து –
தயிரை நன்கு கடைவதால் ஏற்படும் ஒலியால் அமைந்த தாளத்துக்கு ஏற்ப குலுங்க
நந்தகோபரது இல்லத்தில் வெண்ணெய்க்காக தலைவன் கண்ணன் செய்த நடனம்
என் கண் முன்னால் காட்சி தந்து கொண்டே இருக்க வேண்டும் –
வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை நாட்டியம் பிரசித்தம் அன்றோ

ஆவிர்பவத்வ நிப்ருத்தாபரணம் புரஸ்தாத்
மாயை போனவாறே -நிரதிசய அனுபவம் தானே –லீலானுபவம் நேராக பார்க்க ஆசைப்படுகிறார்
காணுமாறு உண்டாகில் அருளே என்றாள் தேவகி அன்றோ –
ஆவிர்பாவம் உண்டாக வேணும் என்கிறார் -நவநீத நாட்யம் அனுபவிக்க வேணும் –
இச்சாம் மோஹம் –ராமம் -சத்ரஜித் -வெண் கொற்றக் கொடையில் மறைந்து தெரியும் திரு முக மண்டலம் சேவிக்க ஆசை

ஆ குஞ்சி தைக சரணம் நிப்ரு தான்ய பாதம் –
திரு ஆபரணங்கள் குலுங்க குலுங்க ஆட -கொலுசு சலங்கை ஒலிக்க-
குஞ்சிதக பாதம் -தூக்கி மடக்கின திருவடி -ஒன்றை ஊன்றிக் கொண்டு

தத் நா நிமந்த முகரேண நிபத்த தாளம் -நாதஸ்ய நந்த பவனே நவநீத நாட்யம்—-
நந்த பவனம் -ஆனந்த பவனத்தில் நவநீத நாட்யம் –
தயிர் கடைவதே தாளம் -நாட்டிய ரெங்கம்
வெண்ணெய் போன்ற ஹ்ருதயம் திருடுவானே –மகா பாலி சக்கரவர்த்தி இடம் யாசகம் பண்ணினவன் இடைச்சிகள்
இடம் யாசகம் பண்ணியோ வெண்ணெய் -உணர்வது -அழகாக திருடி உண்ண வேண்டுமே –
பொத்தை உரலை கவிழ்த்து -அதன் மேல் ஏறி –
அடியேன் -மணி அடிக்க வேண்டியது கர்தவ்யம் -அமுது செய்யும் பொழுது –
மணியை அடிக்காமல் பிடித்து அன்றோ உண்ணுவான் –
கவளம் வெண்ணெய்க்கு –

ஆபீர நாட்டியம் –
தும்புரு நாரதர் ஆடாத நவமான நாட்டியம் -இத்தை சேவிக்க ஆசைப்படுகிறார்

—————————————————————————-

ஹர்த்தும் கும்பே விநிஹித கர ஸ்வாது ஹை யங்க வீனம்
த்ருஷ்ட்வா தாம க்ரஹண சடுலாம் மாதரம் ஜாத ரோஷாம்
பாயா தீஷத் ப்ரச லித பதோ நாப கச்சன் நதிஷ்டன்
மித்யாகோப சபதி நயனே மீலயன் விஸ்வ கோப்தா –5-

இனிய வெண்ணெயை திருடுவதற்கு குடத்தில் தோள் அளவு கை இட்டவனும் -கோபம் அடைந்து கயிற்றை எடுப்பதற்கு
ஆயத்தமான தாயைக் கண்டு அஞ்சி சிறு அடி பெயர்ந்து ஓடி விட நினைத்து ஒரு திருவடியை சிறிது தூக்கி-
செல்லாமலும் நிற்காமலும் -தடுமாறி -உடனே கண்களை மூடிக் கொண்டு –
பெரிய ஆபத்து வர அத்தை பார்க்க அஞ்சி குழந்தை கண்ணை மூடிக் கொள்ளுமே -அதே போலவே இவனும் மூடிக் கொள்ள –
பொய்யான இடைக்கோலம் பூண்ட ஸமஸ்த லோக சர்வ ரக்ஷகன் கண்ணன் நம்மை ரக்ஷிக்கட்டும்

ஹர்த்தும் கும்பே விநிஹித கர ஸ்வாது ஹை யங்க வீனம்-
நாட்டியம் ஆடியும் வெண்ணெய் கிடைக்க வில்லையே -திருடி தானே பெற வேண்டும் —
மாலாகாரர்-உபஜீவனம் -அவன் அன்றோ இவனுக்கு மாலை சாத்தி -சுகர்-இத்தில் ஆழ்ந்து –
திருவடிகளுக்கு கொடுத்த கார்யம் பலன் இல்லை -கைகளுக்கு வேளை திருட -ஸுசீல்யம் அனுபவிக்கிறார் ஸ்வாமி இங்கு –
கும்பத்தில் அன்றோ ஒளித்து வைத்து -தேடி -வேறு ஒரு கலத்திட்டு-விசஜாதீயம்–நிஹித -வி நிஹித –
தடம் தோள்கள் உள் அளவும் கை நீட்டி -அன்றோ –
மோரார் குடம் உருட்டி -அசாரம் தகாத -சாது சங்கமத்தில் கூடாதே –

ஸ்வாது ஹை யங்க வீனம்–
நேற்று கறந்த பாலை காய்ச்சி -கடைந்த புதிய வெண்ணெய் –

த்ருஷ்ட்வா தாம க்ரஹண சடுலாம் மாதரம் ஜாத ரோஷாம்-
தான் கை விட்டு பார்க்க வெண்ணெய் காண வில்லை -பிள்ளைக்கு என்ன ஆகும் –
கயிறு தேடி -யசோதை -சலித்து-தானே சங்கோசித்து–தியானம் -எப்படியோ அப்படியே -கட்டுண்டான் என்றதை
ராஜா எதிரிகளை காட்டுவதும் மஹிஷியால் கட்டுண்ணப் பண்ணிக் கொள்வதும் பும்ஸத்வம் தானே –
நினைக்க கட்டு விடுபட -நியாய சாஸ்திரம் வெட்க்கி -மதுர கவி ஆழ்வார் இத்தை அருளிச் செய்ய
நம்மாழ்வார் ஆறு மாசம் மோஹித்தார் அன்றோ –
எழில் கொம்பு தாம்பு கொண்டு –அழுகையும் அஞ்சு நோக்கும் -அந்நோக்கும் –தொழுகையும்
இவை கண்ட யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்

பாயா தீஷத் ப்ரச லித பதோ –
தாவிக் குதிக்கிறான்

நாப கச்சன் நதிஷ்டன் –
ஓடவும் இல்லை போகவும் இல்லை -தயங்கி –அஞ்சன வண்ண அசல் அகத்தார்
பரிபவம் பேச தரிக்கிலேன் -பாவியேனுக்கு இங்கே போதராயே –

மித்யாகோப சபதி நயனே மீலயன் விஸ்வ கோப்தா –
கோபம் மித்யா -இரு கையால் முகத்தை மூடிக் கொண்டு
தான் காணா விடில் அம்மாவும் பார்க்க முடியாது என்று இருப்பவன் -யார் –
விஷ்வா கோப்தா -சர்வ லோக ரக்ஷகன் அன்றோ –

——————————————————–

வ்ரஜ யோஷி தபாங்க வேத நீயம் மதுரா பாக்ய மநன்ய போக்ய மீடே
வாஸூ தேவ வதூ ஸ்தநந்த்யம் தத் –கிமபி ப்ரஹ்ம சிசோர பாவ த்ருஸ்யம்–6-

கோகுலத்தில் இடைப்பெண்களின் கடைக்கண்களால் பார்க்கப் பட்டவனும் -இப்பார்வை அம்பு போலே
பாய்ந்து இவனை அவர்களுக்கு அடங்கச் செய்கிறதே –
பெரும் தவமே வடிவு எடுத்தால் போலே உள்ள -வடமதுரை நகரின் – புண்ய வடிவானவனும்
வேறு தெய்வத்தை நாடாதவர்க்கு இனிமையானவரும் வஸூ தேவர் மனைவி தேவகியின் பாலைப் பருகியவனும்
குழவிப் பருவத்தால் காண அழகானவனும் அற்புதமான அந்த பரம் பொருளான கண்ணனை ஸ்துதிக்கிறேன் –

வ்ரஜ யோஷி தபாங்க வேத நீயம் –
வ்ரஜை ஸ்திரீகளுக்கு -அனுபாவ்யமான அவன் –கண்ணுக்கு விஷயம் ஆனான் –
ஸ்ரீ முகம் பயத்துடன் நோக்கினானாம் -கடைக்கு கண்ணால் பார்வையால் அடி பட்டானே-
ஊரார்கள் எல்லாரும் காண -அன்றோ கட்டுண்டு அடி பட்டான் -உரலோடு தீராத வெகுளியாய் -ஆய்ச்சியர் –

மதுரா பாக்ய மநன்ய போக்ய மீடே–ஈடே
ஸ்தோத்ரம் பண்ணுகிறேன் -ஏத்தினேன் நான் உய்ய -ஆழ்வார் போலே –
மதுரா பாக்யம் -அநந்ய போக்யம் ஈடே -வடமதுரை அன்றோ பெற்றது -இந்த பாக்யம் –
மதுரா அபாக்யம் என்றுமாம் -திருவாயர்கள் அன்றோ பெற்றார்கள்
ஒருத்தி மகனாய் இத்யாதி –தாண்ட காரண்ய -ரிஷிகள் ஆயர் பெண்கள் –நிரதிசய போக்யம் அனுபவிக்க -பரமை ஏகாந்திகள் –
தன்னைத் தானே அனுபவிக்கும் கண்ணன் -ஜென்ம கர்ம மே திவ்யம் -என்றானே –
சக பதன்யா விசாலாட்சி நாராயணன் -பெருமாள் -ஆராதனம் -மூன்று இடத்தில் வால்மீகி விசாலாட்சி சப்த பிரயோகம்
சுக்ரீவன் இத்யாதி பார்க்கும் பொழுதும் -விசாலாட்சி –
புஷபக விமானம் -இலங்கை கடாக்ஷிக்க பெருமாள் கேட்டதும் -பக்தனை கடாக்ஷிக்க –
அநந்ய போக்யம் -தனக்கும் போக்யம்

வாஸூ தேவ வதூ ஸ்தநந்த்யம் தத் –
வஸூ தேவரையும் தேவகியும் சேர்த்து அருளுகிறார் –இப்படி கோபிகள் கண்ணடி பாடவோ கண்ணனை கொண்டு விட்டார்கள் -என்கிறார் –
தேவகி பால் கொடுத்ததாக சொல்லி -நந்த கோபர் அஷ்ட வசுக்களில் ஒருவன் -யசோதா பாலைப் பருகினான் என்றுமாம் –

கிமபி ப்ரஹ்ம சிசோர பாவ த்ருஸ்யம்–
பர ப்ரஹ்மம் அன்றோ -கண்ணால் சுடும்படியும் -கட்டவும் அடிக்கவும் படி -கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்-
பரமாச்சார்யன் அன்றோ இப்படி -தன்னை ஆக்கிக் கொண்டான் -விலக்ஷணம் அன்றோ –

—————————————————–

பரிவர்த்தித கந்தரம் பயேந ஸ்மித புல்லாதர பல்லவம் ஸ்மராமி
விட பித்வ நிரா சகம் கயோஸ் சித் விபுலோ லூகல கர்ஷகம் குமாரம்-7-

பெரிய உரலை இழுத்தவனும் -பின்னே யசோதை தாய் வருகிறாளா என்று அச்சத்தால் கழுத்தை திருப்பியவனும் –
அவள் தொடரவில்லை -ஏமாற்றி மீண்டோம் என்ற திரு உள்ளத்தால் -ஸ்மிதம் பண்ணி – மலர்ந்த தளிர் போன்ற அதரம் உடையவனும்
அச்சமும் உண்மை இல்லையே -அபிநயம் தானே -இத்தை நினைத்து ஸ்மிதம் என்றுமாம் –
உரலை இழுத்து வரும் பொழுது -மருத மரங்களை முறித்து – யக்ஷர்கள்
குபோரன் புதல்வர்கள் நள கூபரன் -மணிக்ரீவன் ஆடை இல்லாமல் பொய்கையில் நீராட நாரதர் சாபத்தால் மரமானார்கள் –
அந்த சாபம் நீங்கப் பெற்று – இருவருக்கும் — மரப் பிறவியை ஒழித்தவனும்-ஆயர் சிறுவனான கண்ணனை த்யானிக்கிறேன்

பரிவர்த்தித கந்தரம் பயேந –
திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே போனான் -மீண்டும் அடிக்க வருவார்களோ என்று பார்த்து –
திருவடி ப்ரஹ்மாஸ்திரம் கட்டுப் பட்டதாக நடிக்கும் போது அசுரர்கள் தீண்டியது போலே –

ஸ்மித புல்லாதர பல்லவம் ஸ்மராமி –
புன்னகை ஸ்மிதம் உடன் -அர்ஜுன மரங்களை கண்டான் -இளம் தளிர் -பல்லவம் போலே -திரு வதரம்
ஸுசீல்யம் காட்ட வந்த அவதாரம் அன்றோ இது –

விட பித்வ நிரா சகம் கயோஸ் சித் –
மரங்களாக நின்ற நிலைகளை மாற்றி -யவர்கள் அநாதர யுக்தி கயோஸ் சித் -பாகவத அபசாரம் பெற்றவர்கள் அன்றோ

விபுலோ லூகல கர்ஷகம் குமாரம்-
உரலில் கட்டி வைக்க -பெரிய கனமான உரால் -ஆஸ்ரிதர் கட்டினத்தை அவிழ்க்க மாட்டானே -கர்ம பந்தம் முடிப்பவன் –
பக்த பராதீனன் அன்றோ -குமாரன் -பால்ய அவஸ்தையில் -ஸுசீல்யம் நன்றாக காட்டி அருளி -பராகாஷ்டை

————————————————–

நிகடேஷூ நிசாமயாமி நித்யம் நிகமாந்தை ரது நா அபி ம்ருக்யமாணம்
யாமளார் ஜுந த்ருஷ்ட பால கேளிம் யமுநா சாஷிக யுவனம் யுவா நம் -8-

வேதாந்தங்களால் இப்பொழுதும் தேடப் படுபவரும்-யாதோ வாசோ நிவர்த்தந்தே -என்று தொடக்கத்திலே
தடுமாறி பேசவும் முடியாமல் மீண்டதே -இரட்டை மருத மரங்களால் -சாபம் நீங்கிய பின்பு இருந்து சாஷாத்காரித்தார்களே
இவ்வாறு காணப்பட்ட பால லீலைகளை உடையவரும் யமுனா நதி -ப்ரவாகத்திலும் மடுக்களிலும் கரைகளிலும்
மணல் திட்டுக்களிலும் நேராகப் பார்த்த யவ்வனத் திருவிளையாடல்களையும் -இளமை லீலைகளை உடையவருமான
கண்ணன் எனும் வாலிபன் அருகில் எங்கும் எப்பொழுதும் காண்கின்றேன் -மானஸ சாஷாத்காரம் -என்றவாறு –

நிகடேஷூ நிசாமயாமி நித்யம் –
கிட்டே பார்க்கிறேன் -இங்கும் எங்கும் எங்கும் பார்க்கிறேன் -சேவை நித்தியமாக சாதிக்கிறான் –

நிகமாந்தை ரது நா அபி ம்ருக்யமாணம்-
யாதோ வாசோ நிவர்த்தந்தே-வேதம் சொல்ல முடியாமல் -வேதாஸ் சாஸ்திரம் –
ஆரண்யகம் -காட்டிலே திரிகிறான் -பிருந்தாவனம் சரம் –சேவிக்கிறார் -வேதம் பேச முடியாதவனை–

யாமளார் ஜுந த்ருஷ்ட பால கேளிம் –
பால சேஷ்டிதங்களை காட்டி அருளுகிறார் -சாப விமோசனம் -மரமாக இருந்து பால சேஷ்டிதங்களையும் கண்டார்கள் –
நகுல சகாதேவ அர்ஜுனன் நினைவு படுத்த -யாமளா ர்ஜுன-என்கிறார்

யமுநா சாஷிக யுவனம் யுவா நம் –
ராச க்ரீடை சேவை சாதிக்க -யமுனை கரையில் யமுனா தேவி கண்டு அனுபவித்தாள்
கோபிகள் இடம் செய்த க்ரீடை முழுவதும் யமுனா தேவி தானே கண்டாள்
கோபிகள் கண்ணனையே பார்க்க -அடுத்த கோபி யுடன் விளையாடுவதை கண்டார்கள் இல்லையே –
ராச க்ரீடை நிலத்திலும் ஜலத்திலும் பண்ணினான்-யோகேஸ்வரன் -எத்தனை ரூபங்களை கொள்வான் –
சாஷாத் மன்மத மன்மத -மனசை மதனம் பண்ணும் அவன் மனசை மதனம் பண்ணி -நாட்டார் காமன் இடம் படுவதை
காமன் இடம் இடம் படும்படி பண்ணிய திவ்ய மங்கள விக்ரஹன்
நாயகி பாவம் அடைய கோபிகளே காரணம் -மயில் தோகை மகர குண்டலம் அசைய -முக்த அனுபவமே ராச க்ரீடை –
ஜார சோர சிகாமணி இவன் –வேணு கானம் கேட்டு சன்யாசிகளாக வந்தார்கள் -அவ்யபிசார பக்தி யோகம் கொண்ட கோபிமார்கள்-
ராச க்ரீடை தகுமா கேட்க வேண்டாமே-கோபியை முக்தர் துல்யம் ஆக்கும் ஸ்ரீ வேணு கானம் -வேத அபிமான தேவதைகள் -ரிஷிகள் –
காமத்தை ஜெயிப்பதே ராஸ க்ரீடை -ஸ்த்ரீ பிராயர் -பக்தி பெற ராச க்ரீடை ஸ்ரவணம் –

————————————————

பதவீ மதவீ யஸீம் விமுக்தே அடவீ சம்பதமம் புவா ஹயந்தீம்
அருணா தர சாபிலாஷ வம்ஸாம் கருணாம் காரண மாநுஷீம் பஜாமி -9-

மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்று மோக்ஷத்துக்கு மிக அருகில் உள்ள எளிய வழியும் தானே ஆனவனும் –
பிருந்தாவன செல்வத்துக்கு மேகம் போன்றவனும் –
இவனது கருணா கடாக்ஷத்தால் க்ஷேமகரம் அனைத்துக்கும் அன்றோ –
செந்நிறத்த திரு அதரத்தில் ஆசை கொண்ட திருப் புல்லாங்குழலை உடையவனும்
ஸமஸ்த ஜகத்துக்கும் சகல காரணமானவனும் சகல மனுஷ நயன விஷயமாவதற்காக
சாது ரக்ஷணத்துக்கும் பூ பாரம் நீக்கவும் ஆயர் பிள்ளையாக திரு அவதரித்து அருளிய
கண்ணனின் கருணையை தொழுகிறேன் –

பதவீ மதவீ யஸீம் விமுக்தே
முக்தர்கள் -உபாயமே கருணையே -சித்த உபாயம் –

அடவீ சம்பதமம் புவா ஹயந்தீம்
ஆழி மழை –சர மழை போல் –எம்பெருமானே மேகம் இங்கே -நீருண்ட மேகம் போலே -உள்ளேயே புகுந்து -கிருஷ்ண மேகம்
கருணா வார்ஷூக –காலே காலே -சோபையன் தண்ட காரண்யம் -வனம் ஸ்ரீ மத் ஆனதே -சித்ரா கூடம் பெற்ற ஸுபாக்யம்

அருணா தர சாபிலாஷ வம்ஸாம்
மூங்கில் -அதர அம்ருதம் பானம் பண்ண ஆசை கொண்டு -அசேதனங்களும் ஆசைப்படும் சிவந்த அதரம்-கீழே ராச க்ரீடை பேச
அத்தை அனுசந்தித்து சிவந்த -தாம்பூலம் பரிமாறி சிவந்த அதரம் -இத்தை ஆசைப்பட்ட தாம் புல்லாங்குழல் -பரஸ்பர பாகவத பிரபாவம்
சேஷிகளை சேஷிகள் உகக்க வேண்டுமே -தேசிகனும் ஆசை கொண்டார் இதில் –

கருணாம் காரண மாநுஷீம் பஜாமி –
பிரத்யக்ஷமாக சேவை சாதித்து -தரிசன சாமானாகாரம் -ஆன பின்பு கைங்கர்யம் பண்ண வேண்டுமே –
கருணையும் கண்ணனும் ஒன்றே -பரம காருணிகன்-ஜகத் காரணமே மனுஷனாக வந்து -தன் கருணையால் மோக்ஷம்
ஆஸ்ரித ரக்ஷணமே அவதார பிரயோஜனமும் -சர்வ ரக்ஷகத்வம் -அகாரார்த்தம் -கருணையே மூர்த்தியாக அவதரித்து
ஸ்த்ரீ லிங்க பிரயோகம் -கருணை க்ஷமை -யுவா யுவதி -துல்யம் –

பஜாமி –
ராஸக்ரீடை ஆடி களைத்த கண்ணனுக்கு கைங்கர்யம் செய்ய ஆசை கொள்கிறார் –தேசிகர் –
ஆளும் ஆளார்–ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் -பின் செல்வார் மற்று இல்லை —
நாளும் நாளும் -கைங்கர்ய பிரார்த்தனை பராங்குச நாயகிக்கு
இங்கே தேசிகர் பெற்று மகிழ்கிறார் பஜாமி என்று

—————————————————–

அநிமேஷ நிஷே வணீய மஷனோ அஜஹத் யவ்வன மாவி ரஸ்து சித்தே
கல ஹாயிதே குந்தளம் கலாபை கரணோன் மாதக விப்ரமம் மஹோ மே -10-

கண்களால் இமை கொட்டாமல் அனுபவிக்க ஏற்றவனும் -நித்ய யுவா குமாரன் ஆனவனும் –
இமைக்கும் பொழுது உண்டாகும் இழவு பொறுக்க ஒண்ணாதே
மயில்தோகைகளோடு போட்டியிடும் திருக் குழல் கற்றையை உடையவனும் இந்திரியங்களை
பித்துக் கொள்ளச் செய்யும் ஆச்சர்யமான சேஷ்டிதங்களை உடையவனுமான கண்ணனின் தேஜஸ் ஸூ –
பும்ஸாம் திருஷ்ட்டி சித்த அபஹாரிணாம் -கண்டவர் தம் மணம் வழங்கும் கண்ணன் அன்றோ
இப்படி அழகு வெள்ளமிடும் ஜோதிஸ்ஸூ – திரு வடிவம் என் உள்ளத்தில் என்றுமே அகலாமல் தோன்ற வேண்டும்

அநிமேஷ நிஷே வணீய மஷனோ-
கண்ணுக்கு சேவிக்க ஆசை மிக்கு -கண்ணாலே பருக -த்வரை மிக்கு -கண் கொட்டாமல் சேவிக்க -ஆசை கொண்டார் –
சாலோக்யம் சாரூப்பியம் சாயுஜ்யம் -நாம் ஆசைப் பட்டது போலே அவனும் நம்மைப் போலே –
அனுபவிக்க ஆசைப் பட்டு வந்தவன் அன்றோ கிருஷ்ணன் –
யாமளார் ஜூனர் யமுனை நதி அனுபவித்தார்கள் -நாம் இழப்பதோ

அஜஹத் யவ்வன மாவி ரஸ்து சித்தே –
யுவா குமாரா அன்றோ -நித்ய யுவா -அனுபவிக்க இவரும் யுவதி யாக மாறி -மயங்கி –

கல ஹாயிதே குந்தளம் கலாபை
முன் உச்சி மயில் தோகை -நெற்றி மயிர் காந்தி -கலந்து -விஞ்சி -சேவை சாதிக்க -அழகில் ஈடுபட்டு

கரணோன் மாதக விப்ரமம் மஹோ மே
மயக்கும் தேஜஸ் -நீ சேவை சாதிக்க வேண்டும் -என் கரணங்கள் உன்மாதகம் அடைந்தன –
காற்றையும் கழியையும் கட்டி அழுத்த பராங்குச நாயகி போலே
விரஹத்தால் தவிக்க -உன் திரு மேனி சேவை ஒன்றாலே போக்க முடியும் –
ஆவிரஸ்து -கோபிகளுக்கு காட்டி அருளினால் போலே -என்கிறார் –
நீ என்னை அன்றி இல்லையே -சேஷ பூதன் கைங்கர்யம் கொள்ள வேண்டுமே –
சேஷிக்கு அதிசயம் விளைக்கவே சேஷ பூதன் கைங்கர்யம் –

—————————————————-

அநுயாயி மநோஜ்ஞ வம்ச நாளை -அவது ஸ்பர்சித வல்லவீ விமோஹை
அநக ஸ்மித சீத ளைரசவ் மாம் அநு கம்பா சரிதம் புஜைரபாங்கை -11-

இனிய திருக் குழலின் ஓசையைப் பின் தொடர்பவனும் இடைப்பெண்களுக்கு மயக்கம் தருபவனும்
கபடம் அற்ற புன்னகையால் குளிர்ந்து இருப்பவனும் கருணா நதியில் மலர்ந்த அரவிந்தம் போலே உள்ள
கடைக்கண் கடாக்ஷ வர்ஷத்தால் இந்தக் கண்ணன் அடியேனை ரக்ஷிக்கட்டும்

அநுயாயி மநோஜ்ஞ வம்ச நாளை
அழகான குழல் -மனஸ் -அறியும் -அவன் நினைவை அறிந்து -கடைக் கண் அனுசரித்து –
அந்த கோபி இடம் வேணு கானம் ஒலியும் செல்லுமாம்
ஊதும் அத் தீம் குழற்க்கே உய்யேன் -நம்மாழ்வார் –அது மொழிந்து –தூது செய் கண்கள்கொண்டு ஓன்று பேசி
பிரணய ரோஷம் போக்க –நீச பாஷாணங்கள் குழல் வழியே -பேசி —

அவது ஸ்பர்சித வல்லவீ விமோஹை
கண் பார்வை மயக்கும் -குளிர்ந்து -கவர்ந்து -கோ பறவைகள் மரங்கள் மான்களையும் மயக்கும் –
அவது-
கடாக்ஷம் என்னை காக்கட்டும் –

அநக ஸ்மித சீத ளைரசவ் மாம்
குற்றம் அற்ற ஸ்மிதம் -மந்தஹாசம் -வல்லப ஜன வல்லபன் -அசவ் மாம் -எதிரே நிற்கிறான் –

அநு கம்பா சரிதம் புஜைரபாங்கை —
தாமரை கண்கள் -கருணை யாகிய நதியில் தோன்ற அம்புஜம் அன்றோ -கம்பீர -இத்யாதி –
அபாங்கை –
கண் பார்வையை பின் செல்லுமாம் வேணு கானம்
வேணு கானம் -கேட்ப்பார்க்கு மோகம் உண்டாக்கும் –
மருண்டு மான் கண்கள் மேய்க்கை மறந்து –எழுது சித்ரங்கள் போல் நின்றனவே
வேணு கானம் இசைத்தோ கடாஷித்தோ அருளட்டும் நேராக சேவை சாதிக்கா விடில் -என்கிறார்
செவி உணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனை தொடர்ந்து எங்கும் விடாரே –

——————————————————–

அத ராஹித சாரு வம்ச நாளா மகுடா லம்பி மயூர பிஞ்ச மாலா
ஹரி நீல சிலா விபங்க லீலா பிரதிபா சந்து ம மாந்திம ப்ரயாணே-12-

அழகிய திருப் புல்லாங்குழலை திரு அதரத்தில் வைத்து உள்ளவனாகவும் திரு முடியில் சரிந்து இருக்கும்
மயில் பீலியை உடையவனாகவும் இந்திர நீல மணி துண்டம் போலே -வேணு கோபாலனது
நீல நிர திவ்ய மங்கள விக்ரஹ ஸ்ம்ருதி எனது அந்திம காலத்திலும் இருக்க அருள் செய்வாய்

அத ராஹித சாரு வம்ச நாளா
நாரதர் பாடும் ஸ்லோகம் இது என்பர் -புத்திரர் லவகுசர் ஸ்ரீ ராமாயணம் அருளியது போல –
பேரன் நாரதர் பாடும் – இது
உதட்டில் பட்டு அதர அமிருதம் பெற்ற மூங்கில் போலே தனக்கும் பெற வேண்டும் –
ஸ்ரீ சங்கு ஆழ்வானும் அனுபவித்தது போலே -தம் புத்திக்கும் இது வேண்டும் என்கிறார் –

மகுடா லம்பி மயூர பிஞ்ச மாலா
கிரீடத்தில் மயில் தோகை சாத்தி கொண்டு -அழகுடன் சேவை சாதிக்க -அனுபவிக்கிறார்

ஹரி நீல சிலா விபங்க லீலா
இந்திரா நீல கல் வண்ணம் -இந்த சேவை நித்தியமாக இருக்க வேண்டும் -திரு முடி சேவித்து திரு மேனி அனுபவம் இதில் –

பிரதிபா சந்து ம மாந்திம ப்ரயாணே
பகவத் த்யானம் மாறாமல் இருக்க வேண்டும் -பிரபன்னருக்கு அந்திம ஸ்ம்ருதி உபாயமாக வேண்டாம் -பல ரூபம் தானே
அனவதிக அதிசய பிரியா -நித்ய கிங்கரோ பவது —
தாக சாந்திக்கு அதர ஸ்பர்சம் வேண்டும் -வேணு கானம் கரண மந்த்ரம் -கண்ட அம்சம் தானே நான் –
புல்லாங்குழல் உடன் சஜாதீயன் என்கிறார் –
எண்ணங்கள் பிரதிபா உன்னை பற்றியே இருக்க வேண்டும் –
நினைத்து அனுபவித்துக் கொண்டே இருக்க பிரார்த்திக்கார்

————————————————————–

அசிலா நவலோக யாமி காலான் மஹிள தீன புஜாந்த ரஸ்ய யூன
அபிலாஷ பதம் வ்ரஜங்கா நாநாம் அபிலா பக்ரம தூரமாபி ரூப்யம் -13-

ஸ்ரீ மஹா லஷ்மிக்கு கோயில் கட்டணமான-அவள் ஏக போகமாக அனுபவிக்கும் – திரு மார்பு –
யுவா குமாரா -கோபிமார்கள் பிராவண்யத்தை வர்த்திப்பவன் -திவ்ய சேர்த்தி ஸுந்தர்யம் வாசா மகோசரம் அன்றோ –
அழகனை சதா சாஷாத்காரித்து ஈடுபட்டு சேவித்துக் கொண்டு இருக்க அருள வேண்டும்

அசிலா நவலோக யாமி காலான்
எல்லா காலமும் -சதா தத் பாவம் –
அகிலன் காலம் அவலோகயாமி –
ஒவ் ஒரு நொடியும் உன்னையே நான் பார்க்க வேண்டும்
அகிலான் காலான் –
பன்மையில் -தைலதாரா -யோ நித்யம் அச்சுத பாதாம் புஜ யுக்ம ருக்ம -போலே -அவலோகயாமி நிகழ் காலம்
மாரீசனுக்கு ரா ஸ்ம்ருதி போலே இருக்க வேண்டும் –
அன்பினால் தரிசன சமானாகாரம் -அவனுக்கு பயத்தினால்

மஹிள தீன புஜாந்த ரஸ்ய யூன
பிராட்டிக்கு அதீனமான திரு மார்பன் -ஸ்ரீ யபதித்தவம் சொல்லி -யுவா -யூன-ஸ்ரீ யா ஆலிங்கனம் செய்த திரு மார்பு
தத்வ சந்தனம் -ப்ரஹ்மணீ ஸ்ரீ நிவாஸே–ஸ்ரீ ரத்னம் -ஸ்ரீ கௌஸ்துபம் உள்ள திரு மார்பு அன்றோ –
பராதீனம் -பிரணத பரதந்த்ரன் அன்றோ நீயும் –
அரவிந்த பாவையும் தானும் உள்ளே புகுந்து -ஸ்தாவர பிரதிஷ்டையாக வந்து இருப்பானே –

அபிலாஷ பதம் வ்ரஜங்கா நாநாம்
கோபிகள் அனுபவிக்கும் அழகன் -கோபாலன் -பாவனையே நித்தியமாக இருக்கும் படி அருள வேணும்
அன்புக்கு பாத்திரமாக இருப்பானே -ஏகாந்த வல்லபன் -கோபிகள் அனுபவிக்கும் மிதுனம் -ஸுசீல்ய பரா காஷ்டை
பிராட்டி திரு ஆணை தன் திரு ஆணை -கொண்டு பிரார்த்திப்பார்கள் –

அபிலா பக்ரம தூரமாபி ரூப்யம் –
அப்படிப்பட்ட அழகை நித்யமும் சேவிக்க ஆசைப்படுகிறார் -ஆபிரூப்யம் -லாவண்யம் -அச்சோ ஒருவர் அழகிய வா
காவி போல் வண்ணர் வந்து என் கண்ணினுள்ளே தோன்றினார் -கரும்பு அன்னவனை
கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே –
நீல மேனி ஐயோ என்னை சிந்தை கவர்ந்ததவே
தேசிகர் உடன் சேர்ந்த பின்பு அழகு விஞ்சி -கோபிகள் ஆசைப்பட்டு விரும்பும் படி –
ஆசையினால் ஆவியை ஆகுலம் செய்யும் என்பார்கள் –
பூர்ண சம்ச்லேஷம் -அழகில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்

———————————————————————-

ஹ்ருதி முக்த்த சிகண்ட மண்டை நோ -லிகித கேந மமைஷ சில்பி நா
மத நாதுர வல்ல வாங்கநா வத நாம் போஜ திவாகரோ யுவா -14-

அழகிய மயில் தோகையை சூடியவனும் -ப்ரணயத்தால் பீடிக்கப்பட்ட கோபிகளின் முகத்தாமரைக்கு சூர்யன் போன்றவனும்
இந்த யுவா குமாரன் அடியேன் திரு உள்ளத்தில் எந்த சிற்பியால் பிரதிஷ்ட்டிக்கப் பட்டானோ –
தானே அடியேனை இசைவித்து உள்ளம் புகுந்து அத்தாலே பெறாப் பேறு பெற்றால் போலே
ஹ்ருஷ்டனாக சேவை சாதிக்கின்றான்

ஹ்ருதி முக்த்த சிகண்ட மண்டை நோ –
அழகிய -மயில் தோகை -அலங்காரம் கொண்டு

லிகித கேந மமைஷ சில்பி நா
சித்திரம் எழுதப் பட்டதே என் ஹிருதயத்தில் –என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன் –
சஞ்சலம் ஹி மனஸ் –
அறிந்தேன் அவனை நானே –காசி தவள வாஹிந கங்கை- கா சிதள வாஹினி கங்கா -சாடு
ககா கிம் எம்பெருமானை குறிக்கும் -கேன -கண்ணனே தன்னைத் தானே எழுதினான் -பாவனா -எண்ணம் ஆகிய சுவர்
அகண்ட ப்ரஹ்மாண்ட -பிரதம தர சில்பி -மயனோ த்வஷ்டாவோ இல்லை –பத்மா சஹாயா –தத் இங்கித பராதீனன் –
மம ஏஷ சில்பினா -மனசான கண்ணால் சித்திரம் பார்த்தார் –
யோகிகளுக்கு பிரத்யக்ஷம் ஆவான் -தாம் ஆசைப்பட்ட படியே -நித்யம் சேவிக்க –

மத நாதுர வல்ல வாங்கநா
ஆசை கொண்ட கோபிகள் -முகம் தாமரை -மலர –

வத நாம் போஜ திவாகரோ யுவா
நித்ய யுவா -திவாகரன் -அன்றோ இவன் –
இந்த சித்திரம் தான் -வல்லபி ஜன வல்லபன் கோபீ நாதன் -கண்டார் –
மானசீக பாவம் -கோபிகள் ஆசையும் தெரியும் படி அன்றோ கண்டார்
முக விகாசகங்கள் -உதய இளம் சூரியன் -கடாக்ஷங்கள் பட்டு மலரும் முகத்தாமரைகள் –
சமுதாயம் முழுவதையும் கண்டார் –

———————————————————

மஹஸே மஹிதாய மௌலி நா விநதே நாஞ்சலி மஞ்சன த்விஷே
கலயாமி விமுக்த்த வல்லவீ வலயா பாஷித மஞ்ஜு வேணவே -15-

மிகவும் போற்றப்படுபவனும் -மை போன்ற ஒளி உடையவனும் –
மிக அழகிய கோபிமார்களின் கை வளையல்கள் த்வனியுடன் கூடினவனும்
அழகிய திருப் புல்லாங்குழலை உடையவனும் –
இந்த த்வனிக்குத் தக்க தாளம் கோபிகள் கை வளையல்களை ஆட்டி என்றவாறு –
தேஜோ மய ரூபமான கண்ணனை ப்ரணாமத்துடன் அஞ்சலி செய்கிறேன்

மஹஸே மஹிதாய மௌலி நா
ஒளி கொஞ்சம் -ஜோதிஸ்-இவர் ஹிருதயத்தில் -திவ்ய மங்கள விக்ரஹ சேவை –
ராச க்ரீடை நடக்கும் அரங்கமே ஸ்வாமி திரு உள்ளம்

விநதே நாஞ்சலி மஞ்சன த்விஷே
மைப்படி மேனி -தேஜஸ் மிக்கு

கலயாமி விமுக்த்த வல்லவீ
ராச க்ரீடை -கோபிகள் தாளம் -கை வளைகள் குலுங்க -கானத்துக்கு ஏற்ற -கால் ஆட கொலுசு சதங்கை ஒலிக்க-
இதற்கு தக்க வேணு கானம் பண்ணுகிறான் –
குசலப் பிரஸ்னம் -மூங்கில் பெற்ற பாக்யம் என்ன -தாமோதரன் அதர மிருத பானம் பண்ண –
பொறாமை உடன் பேச -தாயாதி போலே -பங்காளிகள் –

வலயா பாஷித மஞ்ஜு வேணவே
வேணு கானம் பண்ணும் சேவை சாதிக்க —
ராச க்ரீடை பங்கு கொள்ள அழைப்பு விடுவதே வேணு கானம் வழியாக தானே
வலையா பாஷிதம் –
மத்தியஸ்தர் வேலை– வளைகள் ஒலி–கோப ஸ்திரீகளுக்கு கொஞ்சம் விட்டு கொடுத்து அமிருத பானம் பெற –

————————————————————-

ஜயதி லளித வ்ருத்திம் சிஷிதோ வல்லவீநாம் –
சிதில வலய சிஞ்ஞா சீதளைர் ஹஸ்த தாளை
அகில புவன ரஷா கோப வேஷஸ்ய விஷ்ணோ —
அதர மணி ஸூதாயா மம்சவான் வம்ச நால-16-

கோபிமார்களின் கை வளையல்கள் த்வனியோடு-குளிர்ந்த கையால் போடும் தாளங்களால்-லளிதம்-என்ற நடனம் கற்பிக்கப் பட்டதும்
ஒரு கோபி ஒரு கண்ணன் -ஒரு கோபி என்று குரவைக் கூத்து ராஸக்ரீடை ஆடி –
ஸமஸ்த லோக ரக்ஷணார்த்தமாக ஆயர் குலத்தினில்-கோவலனாய் கோவலரரோடு – வந்து பிறந்த
ஸ்ரீ மஹா விஷ்ணுவுடைய திருப் பவள அதர ரசத்தில் ஆழ்ந்து அனுபவிக்கும் திருப் புல்லாங்குழல்
மிக பெருமை பெற்று விளங்க -அதற்கு மங்களா சாசனம் -இந்த சேர்த்தி பல்லாண்டு வாழியே -என்றபடி –

ஜயதி லளித வ்ருத்திம் சிஷிதோ வல்லவீநாம்
சிஷை பண்ணும் -வளை ஓசை –வேணுக்கு-லளித்த வ்ருத்தி -அபிநயம் -நாட்டியம் –
புருவ நெறிப்பு-ஸூ குமாரமாக -பரம மோஹனம்

சிதில வலய சிஞ்ஞா சீதளைர் ஹஸ்த தாளை
சிதிலமான வளை ஓசை -குளிர்ந்த -கண்ணாடி வளைகள் -தாளம் –

அகில புவன ரஷா கோப வேஷஸ்ய விஷ்ணோ –
கோப வேஷமே ரஷார்த்தத்துக்கு தானே -கோ பூமி -அரசன் -ஆளும் பொறுப்பும் உண்டே —
விஷ்ணு அன்றோ -அகில புவன ஜென்ம –மங்கள ஸ்லோகம் அடியாக –

அதர மணி ஸூ தாயா மம்சவான் வம்ச நால
ஹஸ்த ஸ்பர்சம் பட்டு மூங்கில் பிரகாசிக்க -ஸ்ரீ தேவிக்கு கிடைக்கும் அதர அமிருதம் -பெற்றதே –
பவளம் -சிவந்த அழகிய திரு அதர அமிர்தம் -குழலுக்கு ஜெயந்தி -பாடுகிறார் –
ஜிதந்தே -என்கிறார் -வேணுக்கு –ராச க்ரீடைக்கு இதுவே முக்கியம் –

——————————————————

சித்ரா கல்ப ஸ்ரவளி கலயன் லாங்கலீ கர்ண பூரம் –
பர்ஹோத் தம்ச ஸ்புரித சிகுரோ பந்து ஜீவம் ததாந
குஞ்ஞா பத்தா முரசி லளிதாம் தாரயன் ஹார யஷ்டிம்-
கோப ஸ்த்ரீணாம் ஜயதி சிதவ கோ அபி கௌமார ஹாரீ -17-

திருக் காதில்-லங்காலீ-என்னும் தென்னம் பாளைப் பூவை ஆபரணமாக சாத்திக் கொண்டு –
திருக் குழல் கற்றையில் மயில் பீலியையும் சூடி– பந்து ஜீவம் என்னும் செம்பருத்திப் பூவையும் அணிந்து
திரு மார்பிலே குந்துமணி கோக்கப் பெற்ற அழகிய ஹார மாலை அணிந்து
இவ்வாறு பல பல ஆபரணங்களை அழகு கொடுத்து கோபிமார்களை கவர்பவன் -விசித்ரன் –
விஷமக் காரக் குறும்பனான கண்ணன் -வாழ்க

சித்ரா கல்ப ஸ்ரவளி கலயன் லாங்கலீ கர்ண பூரம் –
காது அலங்காரம் –தென்னம் பாளை பூ –

பர்ஹோத் தம்ச ஸ்புரித சிகுரோ பந்து ஜீவம் ததாந
மயில் பீலி தலைக்கு அலங்காரம் –
சிவந்த பூவை செம்பரத்தம் பூவை கையில் கட்டி -பூ செண்டு தங்கி

குஞ்ஞா பத்தா முரசி லளிதாம் தாரயன் ஹார யஷ்டிம்-
குந்துமணி -சிவந்து -மாலை மார்பில் சாத்திக் கொண்டு -வனமாலை விட ப்ரீதியுடன் அணிந்து
குறும்புக்கார கண்ணன் வேஷம்

கோப ஸ்த்ரீணாம் ஜயதி சிதவ கோ அபி கௌமார ஹாரீ
யவ்வனம் -கவரும் படி வேஷம் -பும்ஸாம் சித்த த்ருஷ்ட்டி அபஹாரினாம்–யாவர் ஆற்ற வல்லார் ஒருங்கே கண்டால்-
அழகன் -எப்படி இருந்தாலும் அழகு தானே -தீமை செய்யும் சிரீதரன்–
குறும்பு வேஷம் காட்டி என்னையும் வசீகரித்து தனக்கு ஆக்கிக் கொள்ளட்டுமே

——————————————————————

லீலா யஷ்டிம் கர சிசலயே தஷிணே ந்யஸ்ய தன்யாம்
அம்சே தேவ்யா புளக ருசிரே சந்நிதிஷ்ட அந்நிய பாஹு
மேக ஸ்யாமோ ஜயதி லலிதோ மேகலா தத்த வேணு –
குஞ்ஞா பீட ஸ்புரித கிகுரோ கோப கன்யா புஜங்க -18-

வலது திருக் கரத்தில் பாக்யம் செய்த லீலா ஊன்று கொலை பிடித்தவனும்
நப்பின்னைப் பிராட்டியின் மயிர்க் கூச்சு எறிந்த திருத்த தோள்களில் இடது திருக் கையை வைத்தவனும்
அழகனும் திரு யரை நாணில் திருக் குழலை பொருத்தமாக செருகியவனும்
குன்றிமணி மாலையோடு விளங்கும் திருக் குழல் கற்றையை உடையவனும்
கோபிமார்களிடம் அதி வ்யாமோஹம் கொண்டவனும்
நீல மேக ஸ்யாமள திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனுமான கண்ணனுக்கு பல்லாண்டு

லீலா யஷ்டிம் கர சிசலயே தஷிணே ந்யஸ்ய தன்யாம்
வலது கையில் விளையாட்டு குச்சி -நீருண்ட மேகம் நின்ற திருக் கோலம் -இளம் தளிர் போன்ற
திருக் கைகளில் கரடு முரடான குச்சி
பெரும் பாக்யம் அன்றோ இந்த குச்சிக்கு -இயம் சீதா -சீதா கையைப் பிடித்த கை யன்றோ பிடித்தது –
கோபிகளால் வேண்டப்படும் கை -அக்ரூரர் மாருதி பரதர் போன்றவரை அணைத்த கை -என்ன பாக்யம் –

அம்சே தேவ்யா புளக ருசிரே சந்நிதிஷ்ட அந்நிய பாஹு
நப்பின்னை பிராட்டி திருத் தோள்களில் -தழுவி இறுக -சந்நிவிஷ்ட –சீதா பிராட்டிக்கு அஸி தேக்ஷிணா போலே
நப்பின்னை பிராட்டிக்கு திருத் தோள்கள் அன்றோ -துஷ்கரம் ராமா -என்றாரே திருவடி –
வைதிக வேஷம் சீதா பிராட்டிக்கு வன்னிய வேஷம் நப்பின்னைக்கு –இவளுக்காக அன்றோ கோபால வேஷம் –

மேக ஸ்யாமோ ஜயதி லலிதோ மேகலா தத்த வேணு
நீல மேக ஸ்யாமளன் -மின்னு மா மழை தவழும் மேக வண்ணா
ஒட்டியாணம் -மேகலை -வேணு சொருகி

குஞ்ஞா பீட ஸ்புரித கிகுரோ கோப கன்யா புஜங்க
திரு முடியில் குந்து மணி மாலை அலங்க்ருதம் -கறுப்பும் சிவப்பும் பரிபாகம் –
கோபி கன்யிகளுக்கு ஆசை விஞ்சி -இருக்கும் படியான கோப வேஷம் –
லலிதா ஜெயந்தி –
ஸூந்தரன் அழகன் -புஜங்க சயனம் பள்ளி கொள்பவன் புஜங்கத்துடன் இருப்பானே

———————————————————

பிரத்யா லீட ஸ்திதி மதிகதாம் ப்ராப்த காடாங்க பாலிம்-
பஸ்ஸா தீஷன் மிலித நயனாம் ப்ரேயஸீம் ப்ரேஷமாணா
பஸ்திரா யந்த்ர ப்ரணிஹித கரோ பக்த ஜீவாது ரவ்யாத்-
வாரி கிரீடா நிபிட வசநோ வல்லவீ வல்லபோ ந-19-

பின்பக்கம் கண்ணனது இறுகிய ஆலிங்கனத்தைப் பெற்றவளும் -இந்த ஆனந்த சாகரத்தில் மூழ்கி
முழு நோக்காக அன்றி கடைக் கண்ணால்
கண்ணனது கடாக்ஷம் பெற்றவளுமான கோபியையே பார்த்துக் கொண்டே
நீர் பீச்சும் குழலை திருக் கையிலே வைத்து ஜல க்ரீடை செய்ய இறுக்கிய திரு ஆடை அணிந்தவனும்
திருக் கால்களை வசதியான நிலையில்-ஒரு திருக் காலை முன்னும் மற்றொரு திருக் காலை பின்னும் வைத்து –
பிரத்யா லீடமாக -வைத்து அருளும் -பிரணயியான கண்ணன் –
ஆஸ்ரிதர்களை உஜ்ஜீவனம் செய்யும் பேஷஜம் -நம்மை ரக்ஷிக்கட்டும்

பிரத்யா லீட ஸ்திதி மதிகதாம் ப்ராப்த காடாங்க பாலிம்-
பீச்சாம் குழலில் நீரை வைத்து -அடிக்க -தயாராக இருக்க -பின் சென்று இறுக தழுவ

பஸ்ஸா தீஷன் மிலித நயனாம் ப்ரேயஸீம் ப்ரேஷமாணா
திரும்பி பார்க்க -இரு கண்களும் இணைய -ஈஷமானா ப்ரேஷமானா கூரிய பார்வை –

பஸ்திரா யந்த்ர ப்ரணிஹித கரோ பக்த ஜீவாது ரவ்யாத்-
அழுத்தி பிடித்து -துருத்தி வைத்து நீரை பாய்ச்ச –
கோபியை அணைத்து -தண்ணீரும் அடிக்க -மித்யா கோபன் -அகில புவன ராஷா கோப வேஷம் –
சாஷாத் பர ப்ரஹ்மம் -சதுர் புஜம்
பக்த ஜீவாது-கலந்து பழகி தரிக்க -ஆத்மாவை மே மதம் ஞானி அவன் மதம் -என்றுமாம் –
தன்னை அந்தராத்மா என்று நினைப்பார்க்கு தானும் அந்தராத்மா –
ஆத்மாத்மீயங்கள் சமர்ப்பித்தார்க்கு தானும் சமர்ப்பிப்பவன் அன்றோ இவன் –
தேவர்கள் இவன் சொல்லிற்றைச் செய்வார்கள் இவனும் அவர்கள் சொல்லிற்றைச் செய்வான் –
கிம் கார்யம் மம சீதையா என்பவன் அன்றோ –

வாரி கிரீடா நிபிட வசநோ வல்லவீ வல்லபோ ந
ஹிருதயத்தில் இப்படி சேவை சாதிக்க -இரண்டும் தலையும் வாழும் படி கோபிகள் உடன் கலந்து போலே கலக்க வேணும்
எங்களை காக்கட்டும் -சம்பந்திகளாக நம்மையும் சேர்த்து கொள்கிறார்

—————————————————–

வாசோ ஹ்ருத்வா தி நிகர ஸூ தா சந்நிதவ் வல்ல வீ நாம் –
லீலாஸ் மேரோ ஜயதி லலிதா மாஸ்தித குந்த சாகாம்
சவ்ரீடா பிஸ்ததநு வசநே தாபிரப் யர்த்தமாநே –
காமீ கஸ்சித் கர கமலயோர் அஞ்சலிம் யாசமான -20-

ஸூர்ய புத்ரியான யமுனையின் கரையில் கோபிமார்களின் துகில்களை கவர்ந்து
அழகிய குருக்கத்தி மரக் கிளையில் அமர்ந்து -வெட்க்கிய கோபிமார் ஆடையைத் தரும்படி வேண்டிய போது
ஆடை இல்லாமல் நீராடிய பாபத்துக்கு பிராயச்சித்தமாக –
தாமரை போன்ற இரு கைகளாலும் அஞ்சலி செய்ய வேண்டியவனும்
விளையாட்டாய் ஸ்மிதம் பண்ணி அருளும் ஆஸ்ரித வ்யாமோஹன் பல்லாண்டு வாழ்க

வஸ்திரங்கள் அபகரித்ததை காண ஆசைப்படுகிறார் –
வாசோ
பன்மை -ஜலக்ரீடை -சரீரம் அபஹரித்து முக்தி –
பிராகிருதம் நீக்கி –
விரஜை-அங்கு தூய யமுனை இங்கு -ஞான யஜ்ஜம் -கோபால விம்சதி அறிதல் -அனுசந்தானம் –
அஞ்சலிம்-கெஞ்சி கேட்க்கிறார்ன் இவன் -வஸ்திரம் அவர்கள் கேட்க -இரண்டுமே தன் மானம் காக்க –
நந்த கோபிகளை–பக்தி யோகம் வளர்க்க அவதரித்து -ரிஷிகள் கோபிகள் –
பரமாத்வா இடம் பக்தியும் இதர விஷயத்தில் விரக்தியும் வேண்டுமே
பர ப்ரஹ்மம் இவனே அறிவார்கள் -நந்த கோபன் பிள்ளை -பரத்வம் மறந்தாலும் பரத்வம் பீறிட்டு காட்டும்
சர்வ சாக்ஷி -சர்வ அந்தர்யாமி -கோபால வீக்ஷணம் சம்ச்லேஷம் ஆசைப் பட்டு இருப்பீர்கள் –
சர்வ சரீரி -ஸூ சரீர பரிஷுவங்காத்-
தோஷம் இல்லையே -ப்ரஹ்மசர்யம் போகாது –பரிஷத் -அபாண்டவ அஸ்திரம் -ப்ரதிஜ்ஜை –

நாம் -லீலாஸ் மேரோ ஜயதி லலிதா மாஸ்தித குந்த சாகாம்
லீலைகளை எல்லாம் காட்டி அருளினான் தேசிகருக்கு-நாயகி பாவம் —

——————————————————————–

இத்ய நன்ய மனசா விநிர்மிதாம் வேங்கடேச கவிநா ஸ்துதிம் படன்
திவ்ய வேணு ரசிகம் சமீஷதே தைவதம் கிமபி யவ்வத ப்ரியம்–21-

வேறு ஒன்றையும் நாடாத மனத்துடன்-க்யாதி லாப பூஜை ஒன்றுக்கும் இல்லாமல் –
வேங்கடேச கவியால் அருளிச் செய்யப்பட இந்த ஸ்தோத்ர கிரந்தத்தை அப்யசிப்பார்கள்
திருப் புல்லாங்குழல் ரசம் அறிந்தவனுக்கு கோபிமார்களுக்கு பிரிய தமமுமான
அற்புத கண்ணன் நிரந்தர சாஷாத் காரம் காட்டி அருளுவான்

இத்ய நன்ய மனசா விநிர்மிதாம் வேங்கடேச கவிநா ஸ்துதிம் படன்-
திவ்ய வேணு ரசிகம் சமீஷதே தைவதம் கிமபி யவ்வத ப்ரியம்
அதிகரண சாராவாலி நிகமாந்த்ர முனீந்திரர் -கவி முனி -ஆழ்வாரை போலவே -அநந்ய-
வேங்கடேச- பிருந்தாவன சரர்-திவ்ய வேணு -அப்ராக்ருதம் -அதிலே ராசிக்கியம் -பிரத்யக்ஷமாக பார்ப்பார்கள்-
சமீஷதே –
நிகழ் காலம் -யுவதிகள் கோப ஸ்திரீகளுக்கு பிரியன் -ஆவான் -வ்யாமோஹம் அனைவர் இடம் காட்டியவன் –
அனுபவ பரிவாஹம் -தானே இந்த பிரபந்தம் -அனைத்தையும் அவனே காட்டக் கண்டவர் அன்றோ –

———————————–

இதி கோபால விம்சதி சம்பூர்ணம்

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாணகுண சாலிநே –
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: