ஸ்ரீ நாராயண ஸூ க்தம் —

ஸ்ரீ புருஷ ஸூ க்தத்தில் ஸ்ருஷ்ட்டி க்ரமம் சொல்லி -நாராயண ஸூ க்தத்தில் ரக்ஷண க்ரமமும்-உபாஸனா க்ரமமும் –
அவனுடைய மேன்மையும்-அவன் சர்வ -அந்தர்யாமி யாய் இருக்கும் தண்மையையும் சொல்லி
சர்வ பர வித்யைகளிலும் நாராயணனே உபாசிக்கப்படுகிறவன் என்று அருளிச் செய்யப்படுகிறது –

சகஸ்ர சீர்ஷம் தேவம் விஸ்வாஷம் விஸ்வ சம்புவம்
விஸ்வம் நாராயணம் தேவம் அக்ஷரம் பரமம் ப்ரபும் –1-

சகஸ்ர சீர்ஷம்
ஆயிரம் தலை -கால் கை கண் மற்ற எல்லாவற்றுக்கும் உப லக்ஷணம் -ஆனந்தமான ஞான சக்திகளை யுடையவன் -என்றவாறு
புருஷ ஸூ க்தத்தில் சொல்லப் பட்டவன் நாராயணன் என்றவாறு
விச்வாஷம் –
சஹஸ்ராக்ஷயா -அனைத்தையும் அறிபவன் என்றவாறு -உள்ளூர் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி-
விசுவதஸ் சஷூருத விச்வதோ-சர்வ சக்தன் -சர்வ இந்த்ரியங்களாயும் இருப்பவன் –
சஷூர் தேவா நாமுத மர்த்யா நாம் -கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
விஸ்வ சம்புவம்
அனைவருக்கும் எல்லா வித நன்மைகளையும் கொடுப்பவன் -மம மாயா துரத்யயா — அதஸோ பயங்கதோ பவதி –
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் விரதம் மம —
விஸ்வம்
உலகம் எல்லாம் சரீரமாகக் கொண்டவன் -விஸ்வம் விஷ்ணு என்றதையே விஸ்வம் நாராயண என்கிறது –
நாராயணம்
சரணம் கதி நாராயணம் -நார சப்தேன ஜீவா நாம் ஸமூஹ ப்ரோச்யதே புதை –கதிர் ஆலம்பனம் தஸ்ய தேன நாராயணஸ் ஸ்ம்ருத
ஆபோ நார இதி ப்ரோக்தா ஆபோ வை நர ஸூநவே–தா யதஸ் யாயநம் பூர்வம் தேன நாராயணஸ் ஸ்ம்ருத
தரிப்பவன் –சர்வ வியாபி -சர்வ காரணன் -சர்வ செத்தனர்க்கும் உபாய உபேயன்
தேவம்
புகரை யுடையவன் -அழகன் -அமலன் -நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன்-அன்பன் -அச்சுதன் –
அக்ஷரம்
அழிவற்றவன் –நித்ய ஸ்வரூபம் குணங்கள்
பரமம்
ஓத்தார் மிக்காரை இலையாய மா மாயன் -மிகுநர் இல்லாதவன்
தமீஸ்வரனாம் பரமம் மஹேஸ்வரம் தம் தேவதா நாம் பரமம் ச தைவதம் –
ப்ரபும்
அனைவரையும் நியமிப்பவன் -ஈஸ்வர சர்வேஸ்வரன் -கர்மாதீனம் இல்லாதவன்
பரமம் ப்ரபும் நாராயணம் -சமாதிக தரித்ரன் -சகாதேவன் வியாதிரேகத்தில் சொல்ல பூ மாரி பொழிந்ததே –
நஹி பாலன சாமர்த்தியம் ருதே ஸர்வேச்வரம் ஹரீம்

——————————–

விச்வத பரமம் நித்யம் விஸ்வம் நாராயணம் ஹரிம்
விஸ்வமே வேதம் புருஷஸ் தத் விஸ்வ முபஜீவதி–2
பதிம் விஸ்வஸ் யாதமேஸ்வரம் சாஸ்வதம் சிவமச்யுதம்
நாராயணாம் மஹாஜ்ஜேயம் விச்வாத்மநாம் பாராயணம் -3

விச்வத பரமம்
அசேதன சேதனங்களில் வேறுபட்ட -மேலானவன் -இல்லத்துக்கு உள்ளதும் அல்லது அவன் உரு –
அந்யச்ச ராஜன் ச பர தத் அந்நிய பஞ்ச விம்சக
உலகு உயிரும் தேவும் மற்றும் படைத்த பரம மூர்த்தி அன்றோ
நித்யம்
அசேதனங்களுக்கு ஸ்வரூபத்திலும் குணங்களிலும் மாறுபாடு உண்டே -சேதனர்கள் கர்ம அனுகுணமாக ஞானாதி குணங்களில் ஏற்றது தாழ்வு உண்டே
விச்வத பரமம் விஸ்வம்
அத்யந்த விலக்ஷணன்-மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை
நாராயணம்
சர்வ வியாபகம் -தாரகன் -சர்வம் ஸமாப் நோஷி ததோசி சர்வ -சத்யம் சத்யம் புனஸ் சத்யம் என்று மீண்டும் மீண்டும் நாராயணம் சப்த பிரயோகம்
கிம் தத்ர பஹுபிர் மந்தரை கிம் தத்ர பஹுபிர் வ்ரதை-
நமோ நாராயணா யேதி மந்த்ரஸ் ஸர்வார்த்த சாதக
திருமந்திர பாராயண மகிமைக்காக மீண்டும் மீண்டும் சொல்லிற்று என்றுமாம்
ஹரிம் நாராயணம்
சர்வ காரணன் -சர்வ ரக்ஷகன் -சர்வ சம்ஹாரகன் –
ப்ராஹ்மணம் இந்த்ரம் ருத்ரம் ச யமம் வருணமேவ ச
நிக்ருஹ்ய ஹரதே யஸ்மாத் தஸ்மாத் ஹரிரி ஹோச்யதே
ஹரிர் ஹரதி பாபாநி ஜன்மாந்தர க்ருதானி ச -குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே –
இவன் உகந்த திரு நாமம் என்பதாலே ஹரி ஓம் முதலிலும் முடிவிலும் வேதம் சொல்லும்
விஸ்வமே வேதம் புருஷஸ்
சர்வ வியாபி -எல்லாம் இவனே -எங்கும் நிறைந்தவன் -பூர்ணத்வாத் புருஷ –
தானேயாகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானேயாய் தானே யான் என்பானாகி
இதம் விஸ்வம் புருஷம் ஏவ -அநேந ஜீவேன ஆத்மனா அநு பிரவிசய
தத் விஸ்வ முபஜீவதி
இவன் அந்தர்யாமியாய் இருப்பதாலே உலகு இவனை அடைந்து ஜீவிக்கும் -விஸ்வம் வா ஸூ தேவன் ஸ்வரூப ஐக்கியம் இல்லை என்றதாயிற்று –
பதிம் விஸ்வஸ்
தேன வினா த்ருணம் அபி நசலதி–அவன் அன்றி ஒரு அணுவும் அசையாது –நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணன் நீ என்னை அன்றி இல்லை –
தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து -தானே உண்டு உமிழ்ந்து தானே யாள்வானே —
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடத்தும் நின்றும் கொண்ட கோலத்தோடு வீற்று இருந்தும் மணம் கூடியும் கண்ட வாற்றால் தனதே உலகு யென நின்றானே –
யாதமேஸ்வரம்
ஸ்வாமி மாத்ரம் இல்லாமல் -நியமித்தும் அருள்பவன் -ஆத்ம சப்தம் அசேதனத்துக்கும் உப லக்ஷணம் –
தனக்குத் தானே ஈஸ்வரனாய் இருப்பவன் என்றுமாம்
சாஸ்வதம்
ஆதியும் அந்தமும் இல்லாதவன் -ப்ரஹ்மாதிகள் போலே அழிவு இல்லையே
சிவம்
மங்கள கரமாய் இருப்பவன்
சாஸ்வதம் சிவம்
எப்பொழுதும் பரிசுத்தன்-ருத்ரன் போலே இல்லையே
பாவனஸ் சர்வ லோகாநாம் த்வமேவ ரகு நந்தன
அச்யுதம்
நழுவ விடாதவன் -வாணன் ஆயிரம் கரம் கழித்த ஆதிமால் –
நாராயணாம் மஹாஜ்ஜேயம்-
அறியத் தக்கவர்களுள் பெரியவன் –
அச்சுதன்-நாராயணாம் மஹாஜ்ஜேயம்-
காரணம் து த்யேய-இவனே அறியத் தக்கவன் -என்றவாறு
யதா சோம்யா ஏகேன மருத் பிண்டேண சர்வம் ம்ருண் மயம்
விஞ்ஞாதம் ஸ்யாத் –ஏவம் சோம்ய ச ஆதே சோ பவதி
விச்வாத்மநாம் பாராயணம் –சாந்தோக்யம் ஸ்வேதா கேதுவுடன்
அறிய முடியாதவன் வேதம் சொல்ல இங்கே –
நாராயணாம் மஹாஜ்ஜேயம்-என்றது -அறிய முடியாதவன் என்று அறிவதே அறிவாகும்
மேலை வானவரும் அறியார் -ப்ரஹ்மாபி நாவேத நாராயணம் ப்ரபும்
ஞாதா –ஞானம் -ஜ்ஜேயம் -மூன்றும் உண்டு என்றதாயிற்று
ஓர் உயிரேயோ உலகங்கட்க்கு எல்லாம் -/ பதிம் விசுவஸ்ய ஆதமேஸ்வரம் -விச்வத பரமம் -பேத சுருதிகள் /
விஸ்வம் -விஸ்வ மே வேதம் புருஷ –அபேத சுருதிகள் / விச்வாத்மநாம் கடக்க சுருதி
நித்யோ நித்யா நாம் சேதனச் சேதநா நாம் / ப்ருதக் ஆத்மாநாம் ப்ரேரிதாரம் -/த்வா ஸூ பர்ணா சயுஜா
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம /ய ப்ருத்வீம் அந்தரே சஞ்சரந் யஸ்ய ப்ருத்வீ சரீரம் ப்ருத்வீ நவேத
ய ஆத்மனி திஷ்டன் ஆத்மநோ அந்தர யமாத்மா ந வேத யஸ்யாத்மா சரீரம்
பாராயணம்
பரமமான உபாயமும் உபேயமும் -கிம் வாப்யேகம் பாராயணம்– யுதிஷ்ட்ரன் கேட்க -பரமம் யா பாராயணம் ஜகந்நாதன் என்று ஸ்ரீ கிருஷ்ணனை காட்டினார் பீஷ்மர்
புருஷான் ந பரம் கிஞ்சித் ஸா காஷ்டா ஸா பராகதி
நகர்மணா நப்ரஜயா தநேந த்யாகேன ஏகேன அம்ருதத்வமா நசு-
சர்வ லோக சரண்யாய ராகவாய மஹாத்மனே
கோவிந்தேதி யதா க்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாஸினம்
ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயான் நாபஸர்ப்பதி —
பரமாபதமா பன்ன மனசா சிந்தயத் ஹரிம் -ச து நாக வரச் ஸ்ரீ மான் நாராயண பாராயண
ரஷ்ய அபேக்ஷாம் பிரதீஷதே –
புக்கடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே –

——————————————————————–

நாராயண பரம் ப்ரஹ்ம தத்துவம் நாராயண பர
நாராயண பரோ ஜ்யோதி ராத்மா நாராயண பர-4
யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ஸ்ரூய தேபி வா
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித-5

இவனே பரஞ்சோதி –பர தத்வம் -பரமாத்மா பர ப்ரஹ்மம் –
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்-பரேசம் பரமாத்மநாம் அநாதி நிதானம் பரம் –
த்வம் ஹி ப்ரஹ்ம பரம் ஜ்யோதி கூடம் ப்ரஹ்மணி வாங்மயே-

நாராயண பரம் ப்ரஹ்ம
ப்ரஹ்ம வா இதமக்ர ஆஸீத் -முதலில் பர ப்ரஹ்மமாகவே இருந்தது இவனே -த்வம் ப்ரஹ்ம ஹி ப்ருஹதி ப்ரும்ஹயதீதி தஸ்மாத் —
ஆஸ்ரிதர்களை பெரியதாகச் செய்பவனும் நீயே -பரமம் சாம்யம் உபைதி —மம சாதாரம்ய மாகதா-தன்னாகவே கொண்டு -தம்மையே ஓக்க அருள் செய்வார் –
தத்துவம் நாராயண பர
நாராயணனே பர தத்வம் -நித்ய முத்தர்களும் இவனுக்கு பரதந்த்ரர்கள் –

நாராயண பரோ ஜ்யோதிர்
ஏஷ ஸம்ப்ரஸாத அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே
என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே
ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம்-நேம வித்யுதோ பாந்தி குதோயமக்னி
தமேவ பாந்தமநுபாதி சர்வம் -தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி —
பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர் -பரஞ்சோதி இன்மையின் படியோவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம் பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே –
மிகும் சோதி மேல் அறிவார் யவரே -ஸ்வ பாவிக அனவதிக அதிசய ஈஸீத்ருத்வம் நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக
ஆத்மா நாராயண பர
ஆதமைவேதம் அக்ர ஆஸீத் புருஷவித-
பரமாத்மா ஸர்வேஷாம் ஆதார பரமேஸ்வர -விஷ்ணு நாம ச வேதேஷூ வேதாந்தேஷூ ச கீயதே
அவிகாராய ஸூ த்தாய நித்யாய பரமாத்மனே –அவிகாராய -அசேதன வியாவ்ருத்தி -அக்ஷரம் / தேவம் சேதனம் வியாவ்ருத்தி/
-சுத்தாய -/ நித்யம் முக்தர் வியாவ்ருத்தி -பரமாத்மா நித்யர் வியாவ்ருத்தி –
யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ஸ்ரூய தேபி வா -அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித-
உள்ளும் புறமும் வியாபித்து இருக்கிறான் -ஆக்கை உள்ளும் ஆவி உள்ளும் அல்ல புறத்தின் உள்ளும் நீக்கம் இன்றி எங்கும் நின்றாய்
–முற்றக் கரந்து ஒளித்தாய்-விச்வாத்மநாம் -என்று முன்பு சொன்னதை விவரிக்கிறது
நாராயண -அஷ்டாவ்ருத்தி -ஒப்புயர்வற்ற அநந்ய பரமுமான திரு நாமம் அன்றோ இது –

—————————————-

அநந்தம் அவ்யயம் கவிம் சமுத்ரேந்தம் விஸ்வ சம்புவம்–6

எண்ணிறந்த அவதார ரூபங்கள் -குறைவற்ற -அழகாகப் பேசி -பாற் கடலிலே பள்ளி கொண்டு -உலகுக்கு நன்மை செய்பவன்
அமரர் ஏறாய் இருந்து -பகல் விளக்காய் இருந்து -ஆயர் கொழுந்தானவன் அன்றோ –
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே
அநந்தம்
கணக்கற்ற அவதாரங்களை யுடையவன் -அநந்த ரூபம் என்கிற முதல் அணுவாகம் -விவரணம்
அந்தஸ் சமுத்திர நிலையம் யம நந்த ரூபம் -ஸ்ரீ கூரத் தாழ்வான்-அஜாய மா நோ பஹுதா விஜாயதே
பிறப்பில் பல் பிறவிப் பெருமான் – சன்மம் பல பல செய்து -பஹு நி மே வியதீ தானி ஜன்மானி –
உயிர் அளிப்பான் என்நின்ற யோனியுமாய் பிறந்தவன்
அர்ச்சை -ஹ்ருதா மநீஷா மனஸாபிக் லுப்தா –
யத் ஸ்வரூபோ யத் ரூபோ யத் குணோ யத் விபூதிகோ யத் பிராமணகோ யத் த்ரவ்யோயம் சர்வேஸ்வர கலப்யதே ச ததா பவேதி தி பாவ
யே யதா மாம் -பிரபத்யந்தே தாம் ஸ்ததைவ பஜாம்யஹம்
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே -நெஞ்சினால் நினைப்பான் யவன் அவனாகும் நீள் கடல் வண்ணனே
அநந்தம்
தேச கால வஸ்து பரிச்சேதய ரஹிதன் என்றுமாம் -நித்யம் -கால பரிச்சேதய ரஹிதன் / விஸ்வம் -வஸ்து பரிச்சேதய ரஹிதன் /
யச்ச கிஞ்சித் ஸ்தித -தேச பரிச்சேதய ரஹிதன் –சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -என்றவாறு
அவ்யயம்
குறைவற்றவன் -பிறக்கப் பிறக்க பெருமை விஞ்சி -விஜாயதே -விசேஷமாக பிறந்து -ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமான-
நிலை வரம்பில பல பிறப்பாய் ஒளி வரு முழு நிலம் -ஜென்ம கர்ம ச மே திவ்யம் –
கவிம்
நன்றாக பேசி -அவதரித்து செய்து அருளும் சேஷ்டிதங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம் ஹசித்தம் பாஷிதம் சைவ
நின் செங்கனி வாயின் கள்வப் பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
அனவதிக தயாசவ் ஹார்த்த அநுராக கர்ப்ப அவலோகநாலாம்பாருதை விஸ்வமாப்யா யயன் -ஸ்ரீ பாஷ்யகாரர்
கவிம்
வேத உபதேசம் -யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் –யோ வை வேதாம்ச்ச ப்ராஹினோதி தஸ்மை –
பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி –
நும் இன் கவி கொண்டு நும் நும் இட்ட தெய்வம் ஏத்தினால்-செம்மின் சுடர் முடி என் திரு மாலுக்குச் சேருமே
சமுத்ரேந்தம்
ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகாதோ மதுராம் புரீம்
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே –பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் –பய் அரவின் அணைப் பாற் கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி –
சமுத்ரேந்தம்
குறைவில் தடம் கடல் -யசோதை பிராட்டி போலே மடியில் இட்டுக் கொண்டு உகந்து இருக்குமே
சமுத்ரேந்தம் விஸ்வ சம்புவம்
சாபம் உள்ளன நீக்குவானை தடம் கடல் கிடந்தான் தன்னை -கூப்பீடு கேட்க்கும் இடம் அன்றோ
குறைவில் தடம் கடல் கோள் அரவு ஏறித் கோலச் செந்தாமரைக் கண் உறைபவன் போல் ஒரு யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன்
ஆத்மாநாம் வா ஸூ தேவாக்யம் சிந்தையன் -தன்னைத் தானே த்யானிப்பவன் -அவதார சிந்தனை என்றுமாம் –

————————————————————————–

பத்ம கோச பிரதீ காசம் ஹ்ருதயம் சாப்யதோ முகம்
அதோ நிஷ்ட்யா விதஸ் த்யாம் து நாப்யா முபாரி திஷ்ட்ட்தி-7
ஹ்ருதயம் தத் விஜா நீயாத் விஸ்வஸ் யாயதனம் மஹத்
சந்ததம் சிரா பிஸ்து லம்பத்யா கோச ஸந்நிபம்
தஸ் யாந்தே ஸூ ஷிரம் ஸூஷ்மம் தஸ்மிந் சர்வம் ப்ரதிஷ்ட்டிதம்-8
தஸ்ய மத்யே மஹா நக்நிர் விச்வார்ச்சிர் விச்வதோமுக
சோக்ர புக் விப ஜந்திஷ் ட்ட ன் ஆஹார மஜர கவி
சந்தா பயதி ஸ்வம் தேஹ மாபாத தலமஸ்தகம் -9

அந்தர்யாமி அவஸ்தையை அருமறை அனுபவிக்கிறது –பரத்வம் வ்யூஹம் வைபவம் அர்ச்சை அனுபவித்த பின்பு –
மறை முடி தேடிக் காணா மாதவன் மனத்தே அன்றோ மன்னி உறைகின்றான் –ஹ்ருதி திஷ்ட்ட்தி யோகி நாம் —

பத்ம கோச பிரதீ காசம் ஹ்ருதயம்
தாமரை மொக்கைப் போல் இருக்கும் ஹிருதயம் -போதில் கமல வன்னெஞ்சம் –
சாப்யதோ முகம்
தலை கீழாய் இருக்கும் ஹிருதயம்
அதோ நிஷ்ட்யா விதஸ் த்யாம் து நாப்யா முபாரி திஷ்ட்ட்தி
கழுத்தின் மூலத்துக்கு கீழும் நாபிக்கு மேலும் கட்டை விரல் அளவுள்ள இந்த ஹ்ருதயம் இருக்கிறது –
அங்குஷ்ட மாத்ர புருஷ –
கட்டை விரல் பரிமாணம் உள்ள புருஷன்
ஹ்ருதயம் தத் விஜா நீயாத் விஸ்வஸ் யாயதனம் மஹத்
அந்த ஹ்ருதயத்தை உலகுக்கு எல்லாம் ஓர் உயிரான நாராயணனுடைய பெரிய கோயிலாக அறிய வேணும் –
ஆயதனம் மஹத்
நெஞ்சமே நீள் நகராக இருந்த
வடதடமும் வைகுந்தமும் மதிள் துவாராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே
கல்லும் கனை கடலும் வைகுண்ட வானாடும் புல் என்று ஒழிந்தன கோல்-ஏ பாவம்
வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான் அடியேனது உள்ளத்தகம்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுள்ளே
அன்ஸனான் அந்யோ அபிசாக சீதி-வாத்சல்ய குணம் பிரகாசிக்கும் அந்தர்யாமியிலே
சந்ததம் சிரா பிஸ்து லம்பத்யா கோச ஸந்நிபம்
சிறிது அலர்ந்த தாமரையை ஒக்கும் அந்த ஹிருதயம் எப்பொழுதும் நரம்புகளோடு தொங்குகிறது
கமல ஆசனி கேள்வன் ஆகையால் ஹிருதய கமலத்தை விரும்புகிறான் போலும்
தஸ் யாந்தே ஸூ ஷிரம் ஸூஷ்மம்
அந்த ஹ்ருதயத்தில் நடுவில் நுட்பமான ஒரு துவாரம் இருக்கிறது
தஸ்மிந் சர்வம் ப்ரதிஷ்ட்டிதம்
அதில் சர்வாத்மாவான நாராயணன் நிலை நிற்கிறான் -சர்வ அந்தர்யாமி அன்றோ
தஸ்ய மத்யே மஹா நக்நிர் விச்வார்ச்சிர்-விச்வதோமுக
அந்த ஹிருதயத்தின் நடுவில் எங்கும் பரவி இருப்பதும் -எங்கும் ஜ்வாலை உள்ளதுமான -ஜாடராக்கினி -என்னும் பெரிய அக்னி உள்ளது
சோக்ர புக் விப ஜந்திஷ் ட்ட ன் ஆஹாரம்
அது ஆகாரத்தை மூன்று விதமாகப் பிரித்துக் கொண்டு முதலில் சாப்பிட -ஜீரணித்து தேகத்துக்கு தருகிறது என்று தாத்பர்யம்
அஜர
எப்பொழுதும் விழித்துக் கொண்டே இருக்கும் இந்த அக்னி
கவி
எப்பொழுதும் சப்தம் இட்டுக் கொண்டே இருக்கும் இந்த அக்னி
சந்தா பயதி ஸ்வம் தேஹ மாபாத தலமஸ்தகம்
உள்ளங்கால் முதல் தலை வரை தேகத்தை சூடுபடுத்தவும் -ஆழ்வார்கள் திருமலையில் மரம் செடி கொடி அருவி அனுபவிப்பது போலே
ஆதார அதிசயத்தாலே அச்சுதன் இருப்பிடமான ஹிருதயத்தில் அக்னியையும் அருமறை அனுபவிக்கிறது –

——————————————————————–

தஸ்ய மத்யே வன்ஹி சிகா அணீ யோர்த்வா வ்யவஸ்தித
நீல தோயதா மத்யஸ்தா வித்யுல்லேகவ பாஸ்வரா
நீவார ஸூகவத் தன்வீ பீதாபா ஸ்யாத் தநூபமா -10

தஸ்ய மத்யே
தஹா புண்டரீக மத்யஸ்தாகாச வர்த்தி நீ -என்று ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தார்
வன்ஹி சிகா அணீ யோர்த்வா வ்யவஸ்தித
ஹிருதய ஆகாசத்தில் நடுவில் மெல்லியதாகவும் மேல் நோக்கினதாகவும் வஹ்னி சிகை இருக்கிறது
யுக்தம் தத்துவ ஜாதம் ஆத்மதயா ஸ்திதவா வஹதி தாரய தீதி வன்ஹி –பரமாத்மா தஸ்ய சிகா வன்ஹி சிகா
தத்வ ஸமூஹத்தை ஆத்மாவாக நின்று வகிக்கிறவன் ஆகையால் வஹ்னி என்று பரமாத்மாவை சொல்லி -அவனது சிகை வஹ்னி சிகை -என்றவாறு
ஒப்பற்ற பிரகாசம் யுடையதாய் அக்னி சிகை போலே இருப்பதால் –
நீல தோயதா மத்யஸ்தா வித்யுல்லேகவ பாஸ்வரா
நீல மேகத்தை நடுவில் கொண்ட மின்னல் கொடி போன்ற ஒளியுடன்
ஸ்வ அந்தர் நிஹித நீல தோயதாப பரமாத்மா ஸ்வரூபா –ஸ்வ அந்தர் நிஹித நீல தோயதா வித்யுதிவ ஆபா தீத்யர்த்த -ஸ்ரீ பாஷ்யகாரர்
நீலமுண்ட மின்னன்ன மேனிப் பெருமான் –நீல மேகத்தை விழுங்கின மின்னல் போன்ற திருமேனி என்றும் நீல மேகம் விழுங்கின மின்னல் போன்ற திருமேனி
மின்னிலங்கு திரு உரு என்றும் கரு முகில் ஒப்பர் என்றும் சொல்வாரே
சேதனனை பெறாத போது உடம்பு வெளுத்தும் -பெற்ற போது இயற்கையான நீல மேக ஸ்யாமள வர்ணன் -என்றவாறு –
நீவார ஸூகவத் தன்வீ
நெல் நுனி போலே சிறியதாய் இருக்கும் திவ்ய மங்கள விக்ரஹம்
பீதாபா
மஞ்சள் நிறமான ஒளியுடன் கூடியது -உருக்கிய தங்கம் போலே -நிறத்தை காட்டிலும் ஒளியே விஞ்சி இருக்கும்
தேஜஸாம் ராஸிம்–ஹிரண்ய வர்ணாம்
பீதாபா
என்று ஸ்வ தேஜஸ் ஸை விக்ரஹம் தான் பானம் பண்ணிக் கொண்டு இருக்கும் என்றபடி -ஸ்வயம் பிரகாசம் என்றுமாம்
ஸ்யாத் தநூபமா
உவமானம் ஆகலாம் -வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாத பிரகாசம் அன்றோ -உவமானம் அற்றது என்றுமாம்
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா -சுட்டுரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது –

———————————————-

தஸ்யாச் சிகாயா மத்யே பரமாத்மா வியவஸ்தித
ச ப்ரஹ்மா –ச சிவஸ் சேந்த்ரஸ் சோஷர பரமஸ் ஸ்வராட்–11

தஸ்யாச் சிகாயா மத்யே பரமாத்மா வியவஸ்தித
ஆத்மா நாராயண பர -என்னும் பரமாத்மா -விசேஷண அவஸ்தித -விசேஷமாக எழுந்து அருளி இருக்கிறார்
வாத்சல்யாதி குணங்களால் –
த்வா ஸூ பர்ணா சயுஜா சகாய சமானம் வ்ருக்ஷம் பரிக்ஷஸ்வ ஜாதே
தயோர் அந்நிய பிப்பலம் ஸ்வாத் வத்தி அன்ஸனன் அந்யோ அபிசாக சீதி
ஈச்வரஸ் சர்வ பூதானாம் ஹ்ருத்தேச அர்ஜுன திஷ்ட்ட்தி
பிராமயன் சர்வ பூதாநி யந்த்ர ரூடானி மாயயா–ஸ்ரீ கீதை
ச ப்ரஹ்மா –ச சிவஸ் சேந்த்ரஸ் சோஷர பரமஸ் ஸ்வராட்
அனைவருக்கும் அந்தர்யாமி -அவனே அவனும் அவனும் அவனும் -அவனே மாற்று எல்லாமும் அறிந்தனமே
ப்ரஹ்மா சிவாஸ் சதமக பரமஸ் ஸ்வராட் இத் யேதே அபி யஸ்ய மஹி மார்ணவ விப்ருஷஸ் தே -ஆளவந்தார்
-இவனது ஐஸ்வர்யா கடலில் துளி யாவார்கள்
இவர்கள் ஸ்திதியும் அவனாலே -இருந்து படைக்கும் ஆசனம் போன்றே நான்முகன் -சிவனாய் அயனாய்
சோஷர
-இவர்களும் சிறந்த முக்தாத்மாக்களுக்கும் அவனே அந்தர்யாமி
பரமஸ் ஸ்வராட்
கர்ம வஸ்யன் இல்லாத பரமாத்மா -ச ஸ்வராட் பவதி -ஸ்வ தந்த்ரன் ஆகிறான் அவன் ஒருவனே –
ஏகோ ஹை வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நே சான

———————————————————————-

ருதம் சத்யம் பரம் ப்ரஹ்மம் புருஷம் க்ருஷ்ண பிங்களம்
ஊர்த்வ ரேதம் விருபாக்ஷம் விஸ்வ ரூபாய வை நம–12

பரம புருஷார்த்தம் கைங்கர்யம் பிரார்த்திக்கப் படுகிறது –

ருதம்
சர்வகதன்-சர்வ வியாபகத்வத்தை ஆதார அதிசயத்தால் மீண்டும் அனுவதிக்கிறது -சர்வ வியாபி யாகையாலே நாம் இருந்த இடத்திலே கைங்கர்யம் செய்யலாமே
சத்யம்
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம / ஏக ரூபி / ஆஸ்ரித ரக்ஷணம் தீக்ஷிதன் /
பரம் ப்ரஹ்மம்
பரமமானவன் -தன்னை ஆசிரியத்தாரையும் பெரியவனாக ஆக்குபவன்
புருஷம்
நாம் எல்லாரும் ஸ்த்ரீ பிராயர் -கைங்கர்யம் செய்வதே ஸ்வரூப அனுரூபம்
க்ருஷ்ண பிங்களம்
கறுப்பும் மஞ்சளும் கலந்த திருமேனி -கைங்கர்யத்துக்கு விஷயமான திரு மேனி -காள மேக ஸ்யாமளன் -திரு ஆழி தேஜஸ் வியாபித்து இருப்பதால் –
அதஸீ புஷப ஸங்காசா பீத வாசா ஜனார்த்தன -வ்யப் ராஜத சபா மத்யே ஹேம நீவோ பஹிதோ மணி –
இத்தால் பிராட்டியும் அவனுமான சேர்த்தியிலே கைங்கர்யம் என்றதாயிற்று -ஹரீச்ச் தே லஷ்மீச்ச பத்நயவ்
ஊர்த்வ ரேதம்
ப்ராக்ருதமான ஸ்த்ரீ சங்காதிகள் அற்றவன் -விகாரம் அற்றவன் -உயர்ந்த வீர்யத்தை யுடையவன்
விருபாக்ஷம்
மாறு பட்ட ரூபங்களை யுடைய திருக் கண்களை யுடையவன் -சஷூஷீ சந்த்ர சூர்யவ்
விசேஷமான ரூபமுடைய திருக் கண்கள் என்றுமாம் -யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ
வன் காற்றறைய ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த மென் கால் கமலத் தடம் போல் பொழிந்தன –எம்பிரான் தடம் கண்களே
விஸ்வ ரூபாய வை நம
உலகத்தை எல்லாம் சரீரமாகக் கொண்டவனுக்கு நமஸ்காரம் -ஆய -கைங்கர்ய பிரார்த்தனை -அவன் முக மலர்த்திக்காகவே –

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: