ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — -அதிகாரம் -28–ஸ்ரீ த்வயதிகாரம் –ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

——————————————————————————–

ஆகர்ணிதோ வித நுதே க்ருதக்ருத்ய கஷ் யாம்
ஆம் நே டிதோ திசதி யச்ச க்ருதார்த்த பாவம்
பிரத்யூஷதாம் பஜதி ஸம்ஸ்ருதி காலராத்ரே
பத்மா ஸஹாய சரணாகதி மந்த்ர ஏஷ–

திரு மந்திரத்தில் மத்யம பதத்தில் ஆர்த்தமாகவாதல் -சாப்தமாகவாதல் சொன்ன உபாய விசேஷத்தையும்
இதன் பலமாக த்ருதீய பதத்தில் புருஷார்த்த விசேஷத்தையும் விசதமாக பிரகாசிப்பிக்கிறது த்வயம் –

இது கட வல்லியில் பிரிய ஓதிச் சேர்த்து அனுசந்திக்க விதிக்கையாலும் –
பகவத் சாஸ்திரத்தில்-ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஆகமத்தில் –
ஸ்ரீ ப்ரஸ்ன ஸம்ஹிதாதிகளிலே வரணோத்தராதிகளும் பண்ணிப் பிரதிபாதிக்கையாலும்
சுருதி மூலமான தாந்த்ரிக மந்த்ரம் –
இத்தை பூர்வாச்சார்ய வாக்கியம் என்று சிலர் சொன்னதும் ஆப்தர் உபதேசித்தார் என்று ஆதரிக்கைக்காக வாதல்
பரமாச்சார்யனான சர்வேஸ்வரன் பகவத் சாஸ்திரத்தில் அருளிச் செய்கையாலே யாதல் ஆமத்தனை
இதுக்கு ருஷ்யாதிகளும் மூல மந்த்ராதிகளில் போலே அபேக்ஷமாணற்கு
மந்த்ர வ்யாகரணாதிகளில் படியே கண்டு கொள்ளலாம் –

இம்மந்திரம் –
ச ப்ராதுச் சரணவ் காடம்-அயோத்யா காண்டம் -2-31-2-
பவாம்ஸ்து சக வைதேஹ்யா—அயோத்யா காண்டம் 2-31-27-
என்கிற ஸ்லோகத்தில் விவஷிதமான உபாய உபேய ரூபமான
அர்த்த த்வ்யத்தை ப்ரதிபாதிக்கையாலே -த்வயம் என்று பேர் பெற்றது -இப்படி இருக்கையாலே
உபாயாந்தரங்களிலும் உபேயாந்தரங்களிலும் துவக்கு அற்றவன் இம் மந்திரத்துக்கு பூர்ண அதிகாரி
இம் மந்திரம் வரண சமர்ப்பணங்களை அடைவே ப்ரதிபாதிக்கையாலே
த்வயம் என்று சொல்லப் படுகிறது என்றும் சிலர் சொல்லுவார்கள்
இப்படி ஸ்ரீ மன் நாராயண ஸ்வாமின் ந அநந்ய சரணஸ் தவ சரணவ் சரணம் யாத -தவ ஏவ அஸ்மி அஹம் அச்யுத
இத்யாதி மந்த்ராந்தரத்திலும் த்வய சப்த பிரயோகத்துக்கு இவையே நிமித்தம் –

மந்த்ர ராஜ இமம் வித்யாத் குரு வந்தன பூர்வகம்
குரு ரேவ பரம் ப்ரஹ்ம குரு ரேவ பரா கதி
குரு ரேவ பரா வித்யா குரு ரேவ பாராயணம்
குரு ரேவ பர காமோ குரு ரேவ பரம் தானம்
யஸ்மாத் தத் உபதேஷ்டா சவ் தஸ்மாத் குரு தாரோ குரு
நாநு கூல்யம் ந நக்ஷத்ரம் ந தீர்த்தாதி நிஷேவணம்
நபுரஸ் ஸ்ரவணம் நித்யம் ஜபம் வா அபேக்ஷதே ஹி அயம்
நமஸ்க்ருத்ய குரும் தீர்க்க ப்ராணாமைஸ் த்ரி பிராதித
தத் பாதவ் க்ருஹ்ய மூர்த்நி ஸ்வே நிதாய வினயான்வித
க்ருஹ்ணீயான் மந்த்ர ராஜாநாம் மாம் கச்சேச் சரணம் நர
அநேநைவ து மந்த்ரேண ஸ்வாத்மானம் மயி நிஷிபேத்
மயி நிஷிப்த கர்தவ்ய க்ருத க்ருத்யோ பவிஷ்யதி –சாத்யகி தந்த்ர ஸ்லோகம்
என்று பிரபத்தி மந்த்ராந்தரத்தில் சொன்ன குரு உபஸத்த்யாதிகள் இங்கும் வர பிராப்தம் –

ஆஸ்திகனுக்கு இம்மந்திரத்தினுடைய சமுதாய ஞான பூர்வக ஸக்ருத் உச்சாரணமே உத்தாரகம் என்னும் இடம் சாஸ்த்ர சித்தம்
இந்த மந்த்ரத்தை யேன கேநாபி பிரகாரேண த்வய வக்தா த்வம்-என்று
மந்த்ராந்தரங்களில் காட்டில் வியாவ்ருத்தி தோற்ற அருளிச் செய்தார் –

அவசே நாபி யந்நாம்நி கீர்த்திதே ஸர்வபாதகை
புமான் விமுச்யதே சத்ய ஸிம்ஹ த்ரஸ் தைர் ம்ருகைரிவ–ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-8-19-

நாம் நஸ்தே யவதீ சக்தி பாப நிர்ஹரணே ஹரே
ஸ்வபசோபி நர கர்தும் ஷமஸ்தா வன்ன கில்பணம் –ஸ்ரீ விஷ்ணு ஸ்ம்ருதி -6–இத்யாதிகளிலே
திரு நாம சங்கீர்த்த மாத்ரத்தினுடைய பிரபாவம் இருக்கும் படி கண்டால்
சரண்ய சரணாகதி தத் பல விசேஷங்களைப் பூர்ணமாய்
பிரகாசிப்பிக்கிற இம் மந்திர விசேஷத்தினுடைய ஸக்ருத் உச்சாரண மாத்ரத்து அளவிலும் உள்ள பிரபாவம்
ஸ்ருதியாதி பிராமண பலத்தால் ஸூக்ரஹம்
இப்பிரபாவ நிபந்தத்தையும் இங்கே பிராமண ஸம்ப்ரதாயங்களாலே கண்டு கொள்வது
இப்படிப்பட்ட ரகஸ்ய தமார்த்தங்களில் ஹேது நிரூபணம் பண்ணக் கடவது அன்று -சாஸ்திரத்தைக் கொண்டு
விஸ்வஸிக்கும் அத்தனை என்னும் இடம் மஹாபாரதாதிகளிலே
தேவ குஹ்யேஷூ சாந்யேஷூ ஹேதுர் தேவி நிரர்தக
பதி ராந்தவ தேவாத்ர வர்த்தி தவ்யம் ஹிதைஷிணா —அனுசாநிக பர்வம் -228-60–இத்யாதிகளாலே சொல்லப் பட்டது

இம் மந்த்ரத்திலே விவஷிதமான ஆத்ம சமர்ப்பணம்
சர்வோபாதி விநிர்முக்தம் ஷேத்ரஞ்ஞம் ப்ரஹ்மணி ந்யசேத்
ஏதத் த்யானம் ச யோகச்ச சேஷோன்யோ க்ரந்த விஸ்தரித-இத்யாதிகளாலே
பிரகரண அந்தரங்களிலும் ஸ்துதிக்கப் பட்டது
ஏதத் ஞானம் ச ஜ்ஜேயம் ச என்று பாடாந்தரம் –
இஸ் ஸ்லோகம் ஸ்வரூப சமர்ப்பண பரமானாலும் இங்கு சொல்லுகிற பர சமர்ப்பண
நிவேதயீத ஸ்வாத் மானம் விஷ்ணவா மல தேஜஸி
ததாத்மா தன்மனா சாந்த தத் விஷ்ணோ ரிதி மந்த்ரத-என்று
வியாச ஸ்ம்ருதியாதிகளிலும் ஸ்வேதாச்வராதிகளிலும் சொன்ன மந்த்ராந்தங்கள்
இப்படி சரண்ய சரணாகதி தத் பலன்களை விசத்தமாகப் பிரகாசிப்பியாது
யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ரஹினோதி தஸ்மை தை ஹ தேவமாத்ம
புத்தி பிரகாசம் முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே –ஸ்வேதார உபநிஷத் –6-18-
திரு மந்த்ரத்திலும் இவை மூன்றும் ஷங்ஷிப்ப்தங்கள்
ஆகையால் பிராப்ய ப்ராபக விசேஷங்களை சம்பூர்ணமாக பிரகாசிப்பிக்கிற இது
த்வயமே பிரபத்தி மந்த்ரங்கள் எல்லாவற்றிலும் பிரதானம் –

இதன் அர்த்தத்தை -ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராண பகவத் சாஸ்திரங்களில் பிரசித்தமான படியே –
சதாசார்ய சம்பிரதாய க்ரமத்தாலே சரணாகதி கத்யத்திலே விவரித்து அருளினார் -எங்கனே என்னில்
பகவன் நாராயண அபிமத அநு ரூப ஸ்வரூப ரூப -என்று தொடங்கி ஸ்ரீ மச் சப்த அபிப்ரேதத்தை அருளிச் செய்தார் –
அகில ஹேய ப்ரத்ய நீக-இத்யாதியாலே ஸ்வரூப ரூப குண விபூதிகளை பரக்க அருளிச் செய்கையாலே
நாராயண சப்தார்த்தம் வியாக்யாதம் யாயிற்று
முற்படப் பிராட்டியை சொல்லச் செய்தே புருஷகாரத்வ நிர்வாஹ அர்த்தமாக விபூதி மத்யத்திலே நிலை தோற்றுகைக்காக
மீண்டும் நாராயண சப்த வியாக்யானத்திலும் அருளிச் செய்தார்
அனந்தரம் ஸ்ரீ மன் நாராயண என்று பல உபாய வாக்கியங்களில் ப்ரயுக்தமான வியாக்யேய சப்தத்தை உபாதானம் பண்ணி அருளினார்
ப்ரபத்யே என்கிற இடத்தில் உத்தமனாலே விவஷித்தமான அதிகாரி விசேஷம் அநந்ய சரணம் அஹம் -என்று விவ்ருத்தமாயிற்று
த்வத் பாதாரவிந்தம் யுகளம் சரணம் ப்ரபத்யே -என்கையாலே
சரணவ் என்கிற சப்தமும் சரண சப்தமும் க்ரியா பதமும் ப்ரதர்ஸிதமாயிற்று-
அனந்தரம் த்வயம் என்று வியாக்யேயத்தை பூர்ணமாக நிர்தேசித்தார்-

அடியிலே யாதல் முடிவிலே யாதல் த்வயம் என்று நிர்த்தேசியாதே-இவ்வளவில் சொல்ல வேண்டுவான் என் என்னில்
உபாய ப்ராப்யங்களில் இங்கு பிரதான பூதன் ஸ்ரீ மானான நாராயணன் ஆகையால் இரண்டு இடத்திலும் கிடக்கிற
ச விசேஷண நாராயண சப்தம் வ்யாக்யாதமாய் நின்ற அளவிலே இம் மந்திரத்துக்கு பிரதிபாத்யமான சாத்ய உபாயத்தோடே கூட
பிரதான உபாயமும் பிரதான ப்ராப்யமும் வியாக்யாதம் என்று தோற்றுகைக்காக இங்கே த்வயம் என்று அருளிச் செய்தார்

அனந்தரம் பிதரம் மாதரம் என்று தொடங்கி ஜிதந்தா விசேஷ பகவத் கீதாதி ஸ்திதமான சம்வாத வாக்ய முகத்தால்
அநந்ய பிரயோஜனனாய் அநந்ய உபாயனாய்க் கொண்டு உபாய பரிக்ரஹம் பண்ணின படியையும்
சரண்ய ஸ்வபாவ அனுசந்தான பூர்வகமாக அபராத ஷமணம் பண்ணுகிற படியையும்
த்வயத்துக்கு சமுதிதார்த்தமாக அருளிச் செய்தார் –

மேல் அர்த்த க்ரமத்தாலே முற்பட நமஸ்ஸாலே பிரார்த்திக்கிற அநிஷ்ட நிவ்ருத்தியை வியாக்யானம் பண்ணி
பின்பு இங்குள்ள பரபக்த்யாதி புருஷார்த்த பூர்வகமாக சதுர்த்யந்த பதங்களில் விபக்த்யபிப்ரேதமான
பரம புருஷார்த்த லாபத்தை வெளியிட்டு அருளினார்
இப்படி அனுஷ்டித்த உபாயனான அதிகாரி விஷயத்தில் இங்கும் அங்கும் உள்ள சித்தியைப் பற்ற
சரம ஸ்லோகத்தில் உத்தரார்த்தில் படியே
ஸ்வாபாவிக தயார்த்தமான பகவத் அபிப்ராயம் இருக்கும் படியைத் தத் வ்யஞ்ஜக பகவத் வாக்ய ப்ரக்ரியையாலே
அருளிச் செய்து காட்டினார்
ஆகையால் கத்யத்தில் அருளிச் செய்தது எல்லாம் த்வயத்தில் விவஷிதம்
இது த்வயம் அர்த்த அனுசந்தாநேந ஸஹ சதைவம் வக்தா -என்கிற பாசுரத்தாலும் ஸூசிதம் –

பரபக்த்யாதி மூலத்வம் கைங்கர்யஸ்ய யதுச்யதே
கத்யாதி ஷூ தத்ப்யாஹூ அபவர்கதசாஸ்ரயம்

உத்தர உத்தரேயோ ஸ்வாமி சாஷாத் கரண போகயோ
பூர்வ பூர்வ ஷணேஷ் டத்வாத் தன் மூலத்தவ மூதிரிதம்

சரீர பாத காலே து ஹார் தஸ்யா நுக்ரஹ ஸ்வயம்
பரிபாகம் ப்ரபந்நானாம் பிரயச்சத்தி தாதாவிதம்

அங்கோலதைல சிக்தா நாம் பீஜா நாம சிராத்யதா
விபாக பல பர்யந்த ததா அத்ரேதி நிதர்சிதம்

துஷ்டேந்திரிய வசாத்சித்தம் ந்ருணாம் யத்கல்மஷைர் வ்ருதம்
ததந்தகாலே சம்சுத்திம் யாதி நாராயணாலயே
இதி வ்ரத விசேஷ யத் ஸாத்வதா திஷூ சிஷ்யதே
தத் வதத்ரோ பபத்யதே கத்யோக்தாந்த்ய தசாகமே

அனுக்ரஹ விசேஷண கேநசித் பரமாத்மன
குருகாதீச நாதாத்யா பிராகப் யன்வ பவன் ப்ரபும் –

இது த்வயத்தின் அர்த்தத்தை நம்மாழ்வாரும் –
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ -என்றும்
முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் -என்றும் –
அகலகில்லேன் -முதலான பிரதேசங்களிலும் அருளிச் செய்தார் –

இதில் முற்பட -ஸ்ரீ மன் நாராயண -என்று சர்வ சரண்யமான பரதத்வத்தைச் சொன்ன படி –
ஸ்ரீ யபதித்தவ லிங்கத்தாலும் நாராயண சப்தத்தாலும் இறே ஸ்ருதிகளிலே பர தத்வ விசேஷ நிர்ணயம் பண்ணப் பட்டது –
நாராயணன் சரண்யனாம் போது லஷ்மீ விசிஷ்டானாய் இருக்கும் என்கைக்காகப் பூர்வ கண்டத்தில் ஸ்ரீ மச் சப்தம் –

ஆகாரிணஸ்து விஞ்ஞானம் ஆகார ஞான பூர்வகம்
தேநாகாரம் ச்ரியம் ஞாத்வா ஞாதவ்யோ பகவான் ஹரி -என்று அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்தார்
இது உத்தர கண்டத்தில் போலே பூர்வ கண்டத்திலும் விசேஷம் என்னும் இடமும்
உபாய விசேஷணங்களால் உபாயத்வம் வாராது என்னும் இடமும் சித்த உபாய சோதனத்திலே சொன்னோம் –

ஸ்ரீ சப்தம் -ஸ்ரீயதே -ச்ரயதே –ஸ்ருனோதி-ஸ்ராவயதி -ஸ்ருணாதி -ஸ்ரீணாதி-என்று ஆறு படியாக
பகவத் சாஸ்திரங்களில் நிர்வசனம் பண்ணப் பட்டு இருக்கும்

அவற்றில் அபேக்ஷித பதார்த்தங்கள் ஒவ் சித்யத்தாலும்-அவ்வோ பிராமண பலத்தாலும் விசேஷித்து அறிய வேண்டும் –
அவ்விடத்தில் ஸ்வ உஜ்ஜீவ நார்த்திகளாலே ஆச்ரயிக்கப் படும் என்றும் -இவர்களை உஜ்ஜீவிப்பிக்கைக்காக
சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து இருக்கும் என்றும் பொருளான போது –

பிதா இவ த்வத் ப்ரேயான் ஜநனி பரி பூர்ணாகசி ஜநே
ஹித ஸ்ரோதா வ்ருத்யா பவதி ச கதாசித் கலுஷ தீ
கிம் ஏதத் நிர்தோஷ க இஹ ஜகதி இது த்வம் உஸிதை
உபாயை விஸ்மார்ய ஸ்வ ஜன யசி மாதா தத் அசி ந —ஸ்ரீ குணரத்னகோசம் -52–என்கிறபடியே

சாபராத்தாரானார்கள் பக்கலில் ஸ்வயம் ஹிதைஷையாய்-தண்ட தரனான சர்வேஸ்வரன் உடைய சீற்றத்தை ஆற்றி –
அவனுடைய சஹஜ காருண்யம்
இவர்களுக்கு உஜ்ஜீவகமாம் படி பண்ணிக் கொடுக்கையாலே மாத்ருத்வ ப்ரயுக்த வாத்சல்ய அதிசயத்தாலே
புருஷகார பூதையாய் நிற்கிற ஏற்றம் சொல்லிற்றாம் –
அவ்விஞ்ஞாதா இத்யாதிகளில் போலே இங்கு விஸ்மார்ய என்றத்துக்கும்
அல்லி மலர் மகள் போக மயக்குகள்-இத்யாதிகளுக்கும்
சதா சர்வஞ்ஞனனா ஈஸ்வர னுடைய நிக்ரஹ அபிசந்தி நிவ்ருத்தியிலே தாத்பர்யம் –

சாபேஷனான புருஷனுக்கு அபேக்ஷிதம் தலைக் கட்டிக் கொடுக்க வல்ல சேதனன் அபிகம்யனாகைக்கு
உபாயமாக வரிக்கப் பட்ட
சேதனாந்தரத்தை புருஷகாரம் என்று வியவஹரிப்பார்கள் -இப் புருஷகாரம் பலத்துக்கு பரம்பரையா காரணம்

அர்த்த ஸ்வாபாவ அனுஷ்டான லோக த்ருஷ்ட்டி குரூக்திபி
ஸ்ருத்யா ஸ்ம்ருத்யா ச சம்சித்தம் கடகார்த்தா வலம்பனம் —என்று இப்புருஷார்த்த பாவத்துக்கு பிரமாணம்
நிஷேப ரஷையிலே சொன்னோம் –

இவற்றில் அர்த்த ஸ்வபாவமாவது –
பிராட்டியின் இயல்பான தன்மை –ஈஸ்வரனைப் போலே பித்ருத்வ அனுரூபமான பிராதாபோஷ் மலத்வம் கலசாதே
மாத்ருத்வ ப்ரயுக்தங்களான வாத்ஸல்யாதிகள் அதிசயித்து –
ந கச்சின் ந பராத்யதி -யுத்த காண்டம் -116-44–
க குப்யேத்வா நரோத்தம -யுத்த காண்டம் –116-38-
மர்ஷயா மீஹ துர்பலா –யுத்த காண்டம் –116-40-என்கையை ஸ்வபாவமாய் இருக்கையும் –
வால்லப்யதி சாயத்தாலே இவளை முன்னிட்டால் அவன் மறுக்க மாட்டாது ஒழிகையும் –
இவ்வர்த்த ஸ்வபாவத்தால் இவளைப் பற்றுவார்க்கு புருஷகாந்தர அபேக்ஷை யுண்டாய் அநவஸ்தை வராது –

அனுஷ்டானம் ஆவது —
ப்ரஹ்லாத விஷயத்தில் பிரேம அதிசயத்தால் பிரதிகூல விஷயத்தில் பிறந்த சீற்றத்தின் கனத்தைக் கண்டு
அணுக அஞ்சின ப்ரஹ்மாதிகள் இவளை சரணமாகப் பற்றி இவள் முன்னிலையாக
ஸ்ரீ நரசிம்ம ரூபனான சர்வேஸ்வரனைக் கிட்டி
ஸ்தோத்ரம் பண்ணினார்கள் என்று புராண பிரசித்தம் —
ஸீதாம் உவாச அதிசயா ராகவும் ச மஹாவ்ரதம்—அயோத்யா -31-2-என்றும்
சீதா சமஷம் காகுத்ஸ்தம் –அயோத்யா -15–6-இத்யாதிகளிலும் கண்டு கொள்வது –

லோக த்ருஷ்டியாவது உலக வழக்கம் —
அந்தப்புர பரிஜனத்தை அபராத பூயாஸ்த்தை யுண்டானாலும் ராஜாக்கள் அல்பங்களான பிரசானங்களாலே க்ஷமிக்க காண்கை
இவ்வர்த்தம் -மாதர் லஷ்மி யதைவ மைதிலி ஜன -ஸ்ரீ குண ரத்னகோசம் -51-என்கிற ஸ்லோகத்திலும் விவஷிதம்

குரூக்தி யாவது –
பூர்வர்கள் அருளிச் செயல்கள் –நம்மாழ்வார் முதலான ஆச்சார்யர்களுடைய அகலகில்லேன் முதலான பாசுரங்கள்
இவற்றுக்கு மூலமான ஸூக்த விசேஷ ரூபைகளான ஸ்ருதிகளையும் கண்டு கொள்வது —
இவை அடியாக வந்த ஸ்ம்ருதிகளான வாச பரம பிரார்த்தயிதா பிரபத்யேன் நியத ஸ்ரியம் –
இத்யாதிகளான ஸுநகாதி வாக்கியங்கள்-

இப்படி இவளுக்கு சர்வேஸ்வரன் திருவடிகளில் கடகத்வம் பஹு பிராமண சித்தம் ஆகையால்
இங்கும் இவ் விவஷை கொள்ள உசிதம் –
இப்படி புருஷகார பூதையுமாய் சித்த உபாய விசேஷணமுமாய்க் கொண்டு ஆஸ்ரயிக்கப் படும்
ஸ்வரூபம் ஸ்வாதந்தர்யம் பகவத இதம் சந்த்ர வதன–ஸ்ரீ குண ரத்னகோசம்-28–
ஸ்வத ஸ்ரீ ஸ்தவம் விஷ்ணோ ஸ்வமஸி -ஸ்ரீ குண ரத்னகோசம்-31-என்கிற ஸ்லோகங்கள் படியே
ஆதித்யாதிகளுக்கு ப்ரபாதிகள் போலே அதிசய காரிணியாய்க் கொண்டு சித்த உபாயத்தை ஆஸ்ரயித்து இருக்கும்
எல்லார்க்கும் சேவ்யையாய்-சர்வேஸ்வரனை சேவித்து இருக்கும் என்ற பொருளான போது எல்லார்க்கும் ஸ்வாமிநீயாய்-
காந்தஸ் தே புருஷோத்தமே –சேஷித்வே பரம புமான் -ஸ்ரீ குண ரத்னகோசம்-22-என்கிறபடியே
அவனுக்கு சேஷமான நிலை சொல்லிற்றாம்
ஜகத் சமஸ்தம் யதபாங்க ஸம்ஸராயம் -இத்யாதிகள் படியே
எல்லா வஸ்துக்களாலும் ஆஸ்ரயிக்கப் பட்டு எல்லாவற்றையும் தான் ஆஸ்ரயித்து இருக்கும் என்று
பொருளான போது நாராயணாதி சப்தங்கள் ஸ்ரீ யபதிக்கு சொல்லும் கட்டளையை விஷ்ணு பத்னிக்கும் சொல்லிற்றாம்
ஸ்ரீ பாஷ்ய காரரும் பகவன் நாராயண என்கிற நேரிலே பகவதீம் ஸ்ரீயம் -என்று அருளிச் செய்தார் –

ஸ்ருனோதி ஸ்ராவயதி -என்கிற வ்யுத்பத்திகளில்
சாபராதரான அடியோங்களை சர்வேஸ்வரன் திருவடிகளில் காட்டிக் கொடுத்து அருள வேணும் என்று
இப் புடைகளிலே ஆஸ்ரிதருடைய ஆர்த்த த்வனியைக் கேட்டு சர்வேஸ்வரனுக்கு விண்ணப்பம் செய்து
இவர்களுடைய ஆர்த்தியை சமிப்பிக்கும் என்றதாம் –
புருஷகார க்ருத்யத்தைச் சொல்லுகிற இதுக்கும் புருஷகார பாவத்தில் நோக்கு –

மத் பத த்வந்த்வமேகம் பிரபத்யந்தே பாராயணம்
உத்தரிஷ்யாம் யஹம் தேவி சம்சாராத் ஸ்வயமேவ தான் -என்றும் –
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம –என்றும் -இத்யாதிகளை அவன் பக்கலிலே கேட்டு

ச்ருணு சாவஹித காந்த யத்தே வஹ்யாம் யஹம் ஹிதம்
பிராணைரபி த்வயா நித்யம் சமரஷ்ய சரணாகத –என்று
கபோதத்தை கபோதி கேட்பித்தால் போலே அவசரத்தில் கேட் பிக்கும் என்னவுமாம்
சர்வேஸ்வரன் பக்கல் லோக ஹிதத்தைக் கேட்டு மித்ர மவ்பயிகம் கருத்தும் இத்யாதிகளில் படியே
விபரீதரையும் கூடக் கேட்பிக்கும் என்னவுமாம் –

ஸ்ருணாதி நிகிலான் தோஷான் -என்று வ்யுத்புத்தி யானபோது –
லஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீ கேசா தேவ்யா காருண்ய ரூபயா ரஷக-
சர்வ சித்தாந்தே வேதாந்தேபி ச கீயதே -என்றும் –
வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே-என்றும்
சொல்லுகிறபடியே உபாய அதிகாரிகளுக்கு விரோதிகளான கர்மாதிகளைக் கழிக்கும் என்றதாம் –

ஸ்ரீர்ணாதி ச குணைர் ஜகத் -என்று நிருக்தியில்
தன் காருண்யாதி குணங்களால் -நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு
இத்யாதிகளில் படியே ஆஸ்ரிதற்கு கைங்கர்ய பர்யந்த குண பரிபாகத்தை உண்டாக்கும் என்றதாம் –

இவ் வ்யுத்பத்திகள் ஆறிலும் உள்ள வைபவத்தை கணிசித்து –
ஸ்ரீ ரித்யேவ ச நாம தே பகவதி ப்ரூம கதம் த்வாம் வயம் -என்று ஸ்ரீ ஆளவந்தார்
ஸ்ரீ சதுஸ் ஸ்லோகியில் அருளிச் செய்தார் –
ஸ்ரீ பட்டரும் நிரூபாதிக மங்களத்தை நினைத்து ஸ்ரீ ரசி யத -ஸ்ரீ குணரத்ன கோசம் -29-என்று அருளிச் செய்தார் –
இவ்வர்த்தங்கள் ஈஸ்வரனுடைய உபாய பாவத்துக்கு உபயுக்தங்கள் ஆனவை பூர்வ கண்டத்திலும்
ப்ராப்யத்தைக்கு உபயுக்தங்கள் ஆனவை உத்தர கண்டத்திலும் அனுசந்தேயங்கள்-

ஸ்வாம் யுபாய உபேயச்ச ஸ்வரூபாதி சமர்ப்பண
பிரதித பிரதி சம்பந்தீ ஸ்ரீ மான் நிக்காம சஷூஷாம் –

ஸ்ரீ மான் என்று பொதுவில் சொன்னாலும் -பிராமண அநு சாரத்தாலே இங்கு ஸ்ரீ யப்பதி என்றபடி –
சாமான்யமாகத் தோற்றின சம்பந்தம் ஸ்ரீ பதி பலத்தாலே விசேஷிதம்-
சர்வருக்கு ஆஸ்ரயணீயையாய்-ஜெகன் மாதாவான இவளுக்கு பதி என்னவே பரத்வமும் ஸுலப்யமும் தோற்றும் –
இங்குப் பிராட்டியை விசேஷித்து எடுக்கையாலே நார சப்தார்த்தங்களான வஸ்த்தாந்தரங்களில் வ்யுத்புத்தியும்
விசேஷணமாக நிர்த்தேசிக்கையாலே யதா பிரமாணம் பதி பாரார்த்தமும் ஸூசிதம் –

பூம நிந்தா பிரசம் சாஸூ நித்ய யோகே அதிசாயநே
சம்ஸர்க்கே அஸ்தி விவஷாயம் பவந்தி மதுபாதயா –என்று
அநேக அர்த்தமாய் இருந்ததே யாகிலும் இங்கே மைத்துப் உபயோக விசேஷத்தாலே
பிராமண ஸித்தமான நித்ய யோகத்தை சொல்லுகிறது –
விக்ரகத்தில் ப்ரஹ்மச்சாரிய அவஸ்தையிலும் உள்பட –
கிருஷ்ணா ஜிநேந சம்வ்ருண்வன் வதூம் வஷ ஸ்தலாலயாம் -என்னும் படி இறே நித்ய யோகம் இருப்பது –

அப்ருதக் சித்த வஸ்துவுக்கு -ஸ்ரீ மான் -என்று
மத் வர்த்தீய ப்ரத்யயம் சா பேஷமாக சாமானாதி கரண்யம் கூடுமோ என்றும்
ப்ருதக் சித்தமாகில் -கீர்த்தி –ஸ்ரீ வாக்ச நாரீணாம்-ஸ்ரீ கீதை -10-34-என்றும்
பூவில் வாழ் மகளாய்-திருவாய் -6-3-6- என்றும் மத் வர்த்தீய ப்ரத்யயம்
நிரபேஷமாக சாமானாதி கரண்யம் கூடுமோ என்றும் சிலர் சொல்லும் சோத்யங்கள் இரண்டும்
மனத்தாங்கல் –எங்கனே என்னில்
தத் குண சாரத்வாத்து தத் வியபதேச ப்ராஞ்ஞவத் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம்-2- 3-29-என்கிற நியாயத்தாலே
ஞான குணத்தை இட்டு ஆத்மாவை ஞானம் என்று சொல்லலாம் இருக்கச் செய்தே-
ஞானவான் -என்று மத்வர்தீய ப்ரத்யய அன்விதாமாகவும் சாமானாதி கரண்யம் உண்டாகிறாப் போலே
இங்கும் குறை இல்லை
ஆகையால் மத்வர்த்தீய ப்ரத்யய மாத்ரத்தைக் கொண்டு ப்ருதக் சித்தம் என்று நிச்சயிக்கப் போகாது –

நரபதி ரேவ சர்வே லோகா -இத்யாதிகளில் போலே
விவஷாந்தரம் சம்பாவிதமான இடத்தில் இப் பிரத்யயம் இல்லாத சாமானாதி கரண்யத்தைக் கொண்டு
ப்ருதக் சித்தம் அன்று என்னவும் ஒண்ணாது -ஆன பின்பு விசதமாகப் ப்ரதிபாதிக்கும் பிரமாணந்தரங்களைக் கொண்டு
இவ் வஸ்து ஸ்திதி இருக்கும் படி தெளியப் பிராப்தம் –
இங்கு உபாய தசையிலும் பல தசையில் பிரமாணங்கள் நித்ய யோகத்தை சொல்லுகையாலும் –
இம் மந்த்ரத்தில் இவ் வர்த்தம் பிரகாசிப்பிக்கை
அபேக்ஷிதம் ஆகையால் பூர்வ உத்தர கண்டங்களில் மதுப்பாலே –
ச ப்ராதுச் சரணவ் காடம் –பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா –
என்கிறபடி பிரிவற்ற படி சொல்லிற்று ஆயிற்று –

நம்மாழ்வாரும் –
அகலகில்லேன் இறையும் என்றும் அலர் மேல் மங்கை உறை மார்பா – என்றும்
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப -என்றும் –
இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு -என்றும்
உபாய தசையிலும் பல தசையிலும் ஸ்ரீமத் சப்தத்தில் சொன்ன நித்ய யோகத்தை அனுசந்தித்தார் –
இவ் வநுஸந்தானம்
சாபராதர்க்கு அணி இடாதே நினைத்த போது ஆஸ்ரயிக்கைக்கு உறுப்பாம் –
இப்படி அபேக்ஷிதமான புருஷகாரம் தானும் தன்னேற்றமாம் படி இருக்கின்றன -நாராயண சப்தத்தில்
தோற்றுகிற சம்பந்தமும் குணங்களும் -இது தன்னடியார் -என்கிற பாட்டிலும் காணலாம் –

ஸ்ரீ தர ஸ்ரீ கர ச்ரேய ஸ்ரீ மான் லோகத்ரய ஆஸ்ரய –இத்யாதிகளில்
பகவான் நாமமாக பிரசித்தமான ஸ்ரீ மச் சப்தமே அமையாதா என்னில்
பூர்வ கண்டத்தில்
உபாய பாவத்துக்கு உறுப்பான குண விசேஷ அனுசந்தான அர்த்தமாகவும் –
உத்தர கண்டத்தில்
சர்வ விசிஷ்டனான சேஷி ப்ராப்யனாகத் தோற்றுகைக்காகவும் நாராயண சப்தம் அபேக்ஷிதம் ஆகையால்
இங்கு ஸ்ரீ மச் சப்தம் விசேஷணம் —

இங்குற்ற நாராயண சப்தத்துக்கு மூலமந்த்ர அதிகாரத்தில் வ்யுத்பத்திகளாலே சொன்ன அர்த்தங்கள்
எல்லாம் விவஷிதங்கள் ஆகிலும்
பூர்வ கண்டத்தில் நாராயண சப்தத்துக்கு சரண்யத்தையிலே நோக்கான படியால்-
நிகரில் புகழாய்-இத்யாதிகளிலே சங்க்ருஹீதங்களான
வாத்சல்ய -ஸ்வாமித்வ -ஸுசீல்ய -ஸுலப்ய -சர்வஞ்ஞத்வ-சர்வசக்தித்வ-சத்ய சங்கல்பத்வ-
பரம காருணிக்கத்வ-க்ருதஞ்ஞத்வ-ஸ்திரத்வ-
பரிபூர்ணத்வ -பரம உதாரத்வாதிகள் இங்கு அனுசந்தேயங்களில் பிரதான தமங்கள்–

இவற்றில் –
1-வாத்சல்யமாவது -தோஷயத்யபி தஸ்ய ஸ்யாத் சதா மேதத கர்ஹிதம்-என்கிறபடியே ஆஸ்ரிதருடைய அபராதத்தைப் பாராதே
அங்கீ கரிக்கைக்கு ஈடான இரக்கம் -இது தன் தோஷங்களைப் பார்த்து அகலாமைக்கு உறுப்பாம்

2-ஸ்வாமித்வமாவது -ப்ரணவாதிகளிலே சிஷிதமான சம்பந்த விசேஷம் -இது தன் பேறாக ரஷிக்கும் என்கிற தேற்றத்துக்கு உறுப்பாம்

3-ஸுசீல்யமாவது -தான் சர்வாதிகனாய் வைத்து தண்ணியரான நிஷாத வானர கோபாலாதிகளோடே நிரந்தர சம்ச்லேஷம் பண்ணுகை –
இது அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் யான் யார் என்று அகலாதே-
சாரத்ய தூத்யாதி பர்யந்தமாக அபேக்ஷிக்கும் படி விஸ்வச நீயதைக்கு உறுப்பாம் –

4-ஸுலப்யமாவது-சனக சனந்தாதி மஹா யோகிகளும் கூட கிட்ட நிலம் இல்லாத தன்னை -சகல மனுஜ நயன விஷயதாம் கத —
என்னும் படி பண்ணுகை -இது கிட்ட அரியன் என்கிற நிஸ்ப்ருஹத்தை வாராமைக்கு உறுப்பாம் –

5-சர்வஞ்ஞத்வம் ஆவது -அஞ்ஞாதம் நாஸ்தி தே கிஞ்சித் -யோ வித்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா ஸ்வத -என்கிறபடியே
சர்வத்தையும் சாஷாத் கரிக்கை-இது ஆஸ்ரிதற்கு கொடுக்க வேண்டும் நன்மைகளிலும் கழிக்க வேண்டும்
விரோதிகளிலும் இவன் அறியாதது இல்லை என்னும் அனுசந்தானத்துக்கு உறுப்பாம் –

6-சர்வ சக்தித்வமாவது-அகடிதகடநா சாமர்த்தியம் -இது சம்சாரிகளான நம்மை நினைத்த போது
நித்ய ஸூரி பரிஷத்திலே நிவேசிப்பிக்க வல்லன் என்கிற நிச்சயத்துக்கு உறுப்பாம் –

7-சத்ய சங்கல்பமாவது -தன் சந்தர்ப்பத்துக்கு தன்னாலும் ப்ரதிஹதி இன்றிக்கே ஒழிகை -இது
அஹம் சர்வ பாபேப்யோமோக்ஷயிஷ்யாமி -என்கிற பாசுரம் பழுதாகாது என்கிற விஸ்ரம்பத்துக்கு உறுப்பாம்

8-பரம காருணீகத்வம் ஆவது -ஸ்வார்த்த நிரபேஷையான பர துக்க நிராகரண இச்சை -இது அநந்த அபராதங்களை யுடையவர்களையும் –
மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் — யதி வா ராவண ஸ்வயம் என்கிறபடியே ஒரு வ்யாஜ மாத்திரத்தாலே ஷமிக்கும் என்கிற தெளிவுக்கு உறுப்பாம் –

9-க்ருதஞ்ஞத்வம் ஆவது -ந ஸ்மரத்யப காரணாம் சதமப்யாத் மாவத்தயா கதஞ்சிதுப காரேண க்ருதே நை கேன துஷ்யதி-என்றும்
ருணம் ப்ரவ்ருத்தமிவ ஹ்ருதயான் நாபஸர்ப்பதி-என்கிறபடியே
அத்யல்ப அனுகூல வியாபாரத்தையும் பரம உபகாரம் -பண்ணினால் போலே மறவாது ஒழிகை
இது தன் பக்கல் ஏதேனும் ஒரு வல்ல குறி கண்டால் இனி நம்மை ஒருக்காலும் கை விடான் என்று இருக்கைக்கு உறுப்பாம் –

10-ஸ்திரத்வம் ஆவது ஆஸ்ரித ரக்ஷணத்தில் நிலையுடைமை -இது அத்யந்த அந்தரங்கர் விலக்கிலும்
நத்யஜேயம் கதஞ்சன -என்கிறபடி நம்மை விடான் என்று நம்புக்கைக்கு உறுப்பாம் –

11-பரிபூர்ணத்வம் ஆவது -அவாப்த ஸமஸ்த காமத்வம்-இது -அண்வப்யுபஹ்ருதம் பக்தை பிரேம்ணா பூர்யேவ மே பவேத் –
பத்ரம் புஷபம் பலம் தோயம் யோ மே பக்த்யா பிரயச்சதி-இத்யாதிகளில் படியே பாவ பந்தம் பார்க்குமது ஒழிய மற்று நாம்
இடும் பச்சையில் வரிசை பாரான் என்று வல்ல கிஞ்சித் காரத்திலே முயற்க்கைக்கு உறுப்பாம் –

12-பரம உதாரத்வம் ஆவது உபாய லாகவமும் உபேய கௌரவமும் மாத்ர அபகர்ஷமும் பாராதே சர்வ ஸ்வதானம் பண்ணியும்
நாம் செய்தது போராது என்று இருக்கும் வதான்யதை -இது ததி பண்டாதிகளைப் போலே ஹடாத் காரம் பண்ணியும்
அனுபந்தி பர்யந்தமாகப் பரம புருஷார்த்தத்தை அபேக்ஷிக்கைக்கு உறுப்பாம்

இப்படி மற்றும் சரண்யத்தைக்கு உபயுக்தமான குணங்களையும் அவற்றின் உபயோக விசேஷங்களையும்
இங்கே அனுசந்தித்திக் கொள்வது –

உபாய அனுஷ்டான தசையில் அவ்வோ வித்யைகளுக்கு அடைத்து கதிபய குண விசிஷ்டன் அனுசந்தேயனாய்
பிராப்தி தசையில் ஸமஸ்த குண விபூதி விசிஷ்டன் அனுபாவ்யனானாலும்-இங்கு உத்தர கண்டத்தில் நாராயண சப்தத்துக்கு
ஸ்வரூப க்ருதமாயும் குண க்ருதமாயும் வரும் கைங்கர்ய பிரதி சம்பந்தித்தவத்திலே நோக்கான படியால் அதுக்கு உபயுக்தங்களான
சேஷித்வ நிரதிசய போக்யத்வாதிகள் பிரதானங்கள்
இங்கே சம்பந்த விசேஷாதி முகத்தாலே ஆனுகூல்ய சங்கல்பமும் பிரதிகூல்ய வர்ஜனமும் ஸூசிதமான படி
அதிகாராந்தரத்திலே பரிகர விபாக அதிகாரத்தில் –11-சொன்னோம் –

இவ்விடத்தில் ஸ்ரீ மன் நாராயண சரணவ் -என்று சமஸ்தமாகவும் யோஜிப்பார்கள் —
கமல நயன வா ஸூ தேவ விஷ்ணோ தரணி தராஸ்யுத சங்க சக்ர பாணே பவ சரணம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-33-
என்கிற பிரயோகத்தையும்
த்வமேவ உபாய பூதோ மே பவ -என்கிற வாக்கியத்தையும் –
அகலகில்லேன் -என்கிற பாட்டையும் –
அகிஞ்சன அநந்ய கதி சரண்ய -என்கிற ஸ்தோத்ர வாக்கியத்தையும் –
இத்யாதி மந்த்ராந்தங்களையும் -த்வய விவரணமான கத்யத்தையும் பார்த்து
ஸ்ரீ மன் நாராயண என்று இரண்டு சம்புத்திகள் ஆக்கி தவ என்ற ஒரு பதத்தை அத்யாஹரித்தும் யோஜிப்பார்கள் –
இப்படி வியஸ்தமானாலும் சமஸ்தமானாலும் விசேஷண விஷேஷ்யங்கள் நிற்கும் நிலைக்கு வைஷம்யம் இல்லை
இந் நிலை பூர்வ உத்தர கண்டங்களிலும் ஒக்கும் –

சரணவ்-என்கிற சப்தம் நித்தியமான திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு உப லக்ஷணம்
ஸ்ரீ யபதியினுடைய சர்வ ஸ்மாத் பரத்வமும் – நித்ய விக்ரஹ யோகமும் ஞாதவ்யங்களில் பிரதானமாம் என்னும் இடம்
நித்ய சித்தே ததா காரே தத் பரத்வே ச பவ்ஷ்கர
யஸ் யாஸ்தி சத்தா ஹ்ருதயே தஸ்யாசவ் சந்நிதிம் வ்ரஜேத்–இத்யாதிகளிலே பிரசித்தம்
ஆகையால் ஸ்ரீ மன் நாராயண என்கிற இடத்தில் ஸுலப்ய அந்விதமான பரத்வமும்
சரணவ் என்கிற இடத்தில் நித்ய விக்ரஹ யோகமும் அனுசந்தேயம் –

திவ்யாத்மா ஸ்வரூபத்திலும் -கீழ் சொன்ன குணாதிகளிலும் தெளிவு இல்லாதார்க்கும் -சுத்த சத்வ த்ரவ்ய மாயமாய்
ஸ்வ விஷய ஞானத்திலே ஞான சங்கோசத்துக்கு நிவர்த்தகமாய் –
பரத்வ ஸுலப்ய வியஞ்சகமான திவ்ய மங்கள விக்ரஹமே இலக்காம்-
இப் பிரதான்யத்தை பற்றியே கத்யத்திலே குணங்களுக்கு முன்னே திவ்ய மங்கள விக்ரஹத்தை அருளிச் செய்தார்
திவ்யாத்மா ஸ்வரூபத்தில் தெளிவுடையராய் இருக்கச் செய்தேயும் –
மூர்த்தம் ப்ரஹ்ம ததோபி தத் ப்ரியதரம் ரூபம் யதத்தத்புதம்-என்னும் படி
ஈஸ்வரன் தனக்கும் போக்யமான நித்ய விக்ரஹ அனுபவத்தில் ஊற்றத்தாலே
திரு மங்கை ஆழ்வார் தம்மை ஈஸ்வர விஷயத்தில் தேஹாத்மவாதிகளாக அருளிச் செய்வர் –

சர்வேஸ்வரனுடைய திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு
பாபம் ஹரதி யத் பும்ஸாம் ஸ்ம்ருதம் சங்கல்பம நாமயம்
தத் புண்டரீக நயனம் விஷ்ணோர் த்ரஷ்யாம் யஹம் முகம் -என்றும்
ரூப ஒவ்தார்ய குணை பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணம்-என்றும் இத்யாதிகளில் படியே
ஸூபத்வமும் ஆஸ்ரயத்வமும் உண்டு –

பத்தருக்கு ஆஸ்ரத்யவம் யுண்டாகிலும் ஸூபத்துவம் இல்லை –
பகவத் ஸ்வரூபத்துக்கு ஸூபத்துவம் யுண்டாகிலும் ஆஸ்ரயத்வம் இல்லை
சம்சார பந்த ரஹிதமான பரிசுத்தாத்ம ஸ்வரூபத்துக்கு சம்சாரிகைக்கு சஹகாரி யோக்யதை இல்லையே யாகிலும்
பரதந்த்ர சேதனன் ஆகையால் சம்சரிக்கைக்கு ஸ்வரூப யோக்ய வஸ்து வாகையாலே
அதுக்கு ஹேய ப்ரத்ய நீகத்வ ரூப ஸூபகத்வமும் இல்லை -ஆஸ்ரயத்வமும் இல்லை
முக்தருடைய விக்ரஹ பரிக்ரஹ தசையிலும் நித்ய விக்ரஹரான நித்யருக்கும் ஆஸ்ரயத்வம் யுண்டே யாகிலும்
சம்சார நிவர்த்தனமான ஷமமான சுபத்துவம் இல்லை
ஆகையால் திவ்ய மங்கள விக்ரஹத்துக்கே முமுஷூ உபயுக்தமான சுபத்வமும் ஆஸ்ரயத்வமும் உள்ளது –
பராவர ஸூ கக்ராஹ்யம் ப்ரமபோத ப்ரசாவகம்
ஸ்வரூபாத் ஸ்வாமிநோ ரூபம் உபாதேயதமம் விது
சரணாகதி விதாயக வாக்யத்திலும் -மாமேகம் சரணம் வ்ரஜ -என்று விக்ரஹ விசிஷ்டன் இலக்காயத் தோற்றினான்
இது திவ்ய விக்ரஹ பர வ்யூஹாதி அவஸ்த்யா பஞ்சகத்திலும் ஸூபாஸ்ரயம் என்னும் இடம் சாஸ்த்ர சித்தம் –

சிதா லம்பன ஸுகர்ய க்ருபோத்தம்ப கதாதிபி
உபாயத்வமிஹ ஸ்வாமி பாத யோர நு சம்ஹிதம்
இங்கு தாஸ புதன் ஓவ்சித்திய அதிசயத்தாலும் –
அநதி க்ரமணீய ஹி சரண க்ரஹணம் -என்கிறபடியே
க்ருபோத்தம்பகத்வ அதிசயத்தாலும்
தவாம்ருதஸ் யந்தின-இத்யாதிகளில் படியே போக்யத்வ அதிசயத்தாலும் திருவடிகளை அவலம்பிக்கிறான்

இவ் வர்த்தம் ஸர்வதா சரண த்வந்த்வம் —
த்வத் பாத கமலா தந்யத்–மம தே பாதயோ -ஸ்திதம் —
லோக விக்ராந்த சரணவ் தேவ்ரஜம் விப
ச ப்ராதுஸ் சரணவ் காடம் -தஸ்ய தாம்ரதலவ் தாத சரணவ் ஸூ ப்ரதிஷ்டித்தவ் –
ஸூ ஜாத ம்ருது ரக்தாபி அங்குலீ பிரலங்குருத்வ் –
பிரயதேன மாயா மூர்த்தனா க்ருஹீத்வா ஹி அபிவந்திதவ் —
சரணவ் சரணம் யத –ப்ரபந்நா கௌக வித்வம்ஸி சரணவ் சரணம் கத -இத்யாதிகளிலும் பிரசித்தம்

இவற்றை அடி ஒற்றினவர்களும் –
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன் – என்றும் –
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே -என்றும் அருளிச் செய்தார்கள்
ஸுகந்திய ஸுகுமார்யாதி குண விக்ரஹவான் ஹரி -தஸ்ய ஸ்வாத்ம பிரதாநே து சாதனம் ஸ்வபத த்வயம் -என்று
அபியுக்தரும்-ஸ்வாமி பராசர பட்டரும் – பிரதிபாதித்தார்கள்-

சரணவ் என்கிற இடத்தில் –
தமேவ சரணம் கச்ச —
கழல்களையே சரணாக –
நாகணை மிசை நம்பிரான்
சரணே சரண் -இத்யாதிகளில் படியே அவதாரணம் விவஷிதம் –

சரணாவிதி நிர்த்தேச பத்னீ விசிஷ்டய பாதக
இதி மந்தைரிதம் ப்ரோக்தம் ஸ்ரீ மச் சப்த விரோதத

சப்தஸ்வ ரஸத பிராப்தம் வைசிஷ்டயம் பிரதம ஸ்ருதம்
விசேஷிய சரண த்வித்வம் ந ஹி பாதிது மர்ஹதி

சரணா நிதி வக்தவ்ய இதி யச்ச ப்ர சஞ்சிதம்
க்ரந்தஞ்ஜைரபா ஹாஸ்யம் தத் ப்ரதிபாதாந்யத அன்வயாத்

ந சம்ராஜி ஸபத்நீகே சாத்வி தீ யோக்தி சாஹசம்
தத் அத்ரேத்ய பராம்ருச்ய தர்சிதம் குரு சாஹசம் –

சர்வ சக்தியானவன் உபாயமாம் போது
இவ் விசேஷணத்தால் அபேக்ஷை ஏன்-சாபேஷன் ஆகில் சர்வ சக்தன் அன்றிக்கே ஒழியானோ என்னில்
இச் சோத்யம் நாராயண சப்தத்தாலும் சரண சப்தத்தாலும் சொல்லப் பட்ட குண விக்ரஹ யோகத்திலும் பண்ணலாம் –
அவை இவனுக்கு விசேஷணங்கள் ஆகையாலும் அவற்றுக்கு வஸ்து அனுரூபமாக உபயோக விசேஷங்கள் உண்டாகையாலும்
அவற்றில் சர்வ சக்தித்வ விரோதம் இல்லை என்று யதா பிரமாணம் கொள்ளில் இது பஹு பிராமண பிராப்தமாய்
இங்கு ஸ்ரீ மச் சப்தத்திலும் ஸ்வ ரசிக விசேஷண பாவமான பத்னீ சம்பந்தத்திலும் துல்யம் –

இப்படி இருக்க சரணவ் என்கிற த்விவசன மாத்ரத்தைக் கொண்டு ஸ்ரீ சம்பந்தத்தை உப லக்ஷணம் என்னில்
குணாதி சம்பந்தத்தையும் இப்படிச் சொல்லப் பிரசங்கிக்கும்
சரண சப்தத்தில் உபாய வாசி சப்த சமபி வியாஹாரத்தால் உபயுக்த குண விக்ரஹ விசிஷ்டன்
உபாயம் ஆகிறான் என்று விலஷிதம் என்னில் இது இங்கும் துல்யம் –
இப்படி இருக்க இவளை விசேஷணமாகக் கொள்ளில் சர்வ சக்தித்வ விரோதம் வரும் என்பார்க்கு-
இப்புருஷகார அபேக்ஷையிலும் சர்வ சக்தித்வ விரோதம் பிரசங்கிக்கும் –
யுவாத் வாதவ் துல்யே–ஸ்ரீ குணரத்ன கோசம் -14-என்கிற ஸ்லோகத்தில் சொன்ன குண விபாகத்தின் படியே
பும்ஸத்வ பித்ருத்வ ப்ரஸாஸித் ருத்வாதிகளாலே பிராதபோத்தரானாய்-தண்ட கரனாய் நிற்கிற ஈஸ்வரனைப் பற்ற இழிவார்க்கு
ஸ்த்ரீத்வ மாத்ருத்வாதிகளாலே வந்த மார்த்வ வாத்சல்யாதி குணாதிசயத்தாலே இவள் அவனைப் பற்ற நமக்கு
புருஷகாரம் ஆகையும்
ஈஸ்வர ஸ்வாதந்தர்ய நியதம் என்று சொல்லில் இப்படியே ஸஹ தர்ம சாரிணியான இவளாலே
விசிஷ்டானாய்க் கொண்டு சரண்யன் ஆகையும்
ஈஸ்வர ஸ்வா தந்தர்ய நியதம் என்று கொண்டால் ஒரு பிரமாணத்துக்கும் விரோதம் இல்லை –

இவ்விடத்தில் சரண சப்தம்
உபாயே க்ருஹ ரஷித்ரோ சப்த சரணம் இத்யயம்
வர்த்ததே சாம்ப்ரதம் த்வேஷ உபாயர்த்தைக வாசக –என்று விசேஷிக்கையாலே உபாய பரம் –
பர ந்யாஸ பலாதேவ ஸ்வ யத்ன விநிவ்ருத்தயே
அத்ர உபாயாந்தர ஸ்தானே ரக்ஷகோ விநிவேசித –
சர்வாதிகாரிகளுக்கும் அவ்வோ சாஸ்த்ரங்களாலே ஆராதினான சர்வேஸ்வரன் பல உபாயமாய் இருக்க
இங்கே விசேஷித்து உபாயம் என்ன வேண்டிற்று
உபாயாந்தர ஸ்தானத்திலே சஹஜ காருண்யாதி விசிஷ்டனான ஈஸ்வரனை நிறுத்துகிற
பிரபத்தி பிரகாரம் தோற்றுகைக்காக வாம் அத்தனை –
இங்கு பக்தி யோக ஸ்தானத்தில் பிரபத்தி நில்லா நிற்க ஈஸ்வரன் உபாயாந்தர ஸ்தானத்தில் நிற்கையாவது என் என்னில்
அங்கமாக பிரபத்தியும் பண்ணி உபாயமாக உபாசனமும் அனுஷ்ட்டித்துப் பெற வேண்டும் பலத்தை
அவ்வுபாயம் ஒழியவே பிரபத்தி மாத்திரத்திலே பெறுகைக்கு அடி
ஈஸ்வரனுடைய சஹஜ காருண்யாதி ஸ்வ பாவ விசேஷம் ஆகையால்
அகிஞ்சனனுக்கு ஈஸ்வரன் உபாயாந்தர ஸ்தானத்தில் நின்றான் என்கிறது –

அபிமத பலத்துக்கு உபாயமாக விஹிதமான பரம் சுமக்க மாட்டாத அகிஞ்சனன்
கோப்தாவாய் நிற்கிற அவனை நீ எனக்கு உபாயமாக வேணும் என்று
உபாயாந்தர ஸ்தானத்தில் நிவேசிப்பிக்கை யாவது –
என் தலையில் உபாயாந்தரத்தை சுமத்தாதே -அவற்றைச் சுமந்தால்
மேல் வரும் அபிமதம் எல்லாம் தருகை-சமர்த்த காருணிகனான உனக்கே பரமாக ஏறிட்டுக் கொள்ள வேணும் என்கை –
இவ் வம்சத்தை நிஷ்கர்ஷித்து நிக்ஷேபத்தை அங்கி என்று சொல்லுகிறது -இதுஸ்வ நிரபரத்வ பர்யந்தரம் –
இந்த நிஷ் கர்ஷத்தை நினைத்து -சாம்ப்ரதம் த்வேஷ உபாயர்த்தைக வாசக -என்கிறது –
உபாய பிரார்த்தனையும் நிக்ஷேபத்தையும் ஓரிடத்தில் பிரியச் சொல்லும் இடங்களிலே
உபாய சப்தத்தில் இவ் விவஷிதையைத் தவிருதல்
பர சமர்ப்பணாதிகள் ஸூவ்யக்தங்களாகப் பிரியச் சொல்கிறதாதல் –
இங்கு ஸ்வரூபமும் பரமும் பலமும் சமர்ப்பணீயம் ஆகையால்
அநேகாம்ச விசிஷ்டனான சமர்ப்பணத்தில் அம்சாந்தர பரமாதல் ஆகக் கடவது –
இவை மூன்று பிரகாரத்துக்கும் புநக்ருதி தோஷம் இல்லை –
இவ் உபாயத்வம் ந்யாஸ வித்யைக்கு விசேஷித்து வேத்யாகாரம்-இதுக்கு அபேக்ஷிதமாய்க் கொண்டு
ஞான சக்த்யாதிகள் வருகின்றன –

ப்ரபத்யே -என்கிற இடத்தில்
கதி வாசியான தாது கத்யர்த்தங்கள் புத்த்யர்த்தங்கள் ஆகையால் இங்கு அபேக்ஷித புத்தி
விசேஷத்தைச் சொல்கிறது –
புத்தி யாவது இவ்விடத்தில் -ரஷிப்யதீதி விச்வாஸ என்கிற அத்யாவசயாம் –
அங்கங்களில் சாரமான விசுவாசத்தை முன்னிட்டுக் கொண்டு சபரிகரமான சாத்திய உபாயம்
இங்கே தோற்றுகிறது-எங்கனே என்னில்
இங்கு -பர -என்கிற உப சர்க்கம்
விசுவாசத்தினுடைய பிரகர்ஷ ரூபமான மஹத்தையைக் காட்டும்
இவ் விசுவாச பிரகர்ஷம் ஸ்ரீ மச் சப்தத்திலும் நாராயண சப்தத்திலும் உள்ள
புருஷகார ச பந்த குணாதிகளை அனுசந்தித்தவாறே வரும் –
இத்தாலே தன் அபசார ப்ராசுர்யாதிகள் அடியாக வரும் சங்கைகள் எல்லாம் கழியும் –
இவ் விச்வாஸ தாடர்யம் வேணும் என்னும் இடத்தை
ராக்ஷஸா நாம் அவிஸ் ரம்பாத் ஆஞ்சனேயஸ்ய பந்த நே
யதா விகலித்தா தஸ்ய த்வமோகா அப்யஸ்த்ர பந்த நா
ததா பும்ஸாம விஸ்ரம்பாத் பிரபத்தி ப்ரச்யுதா பவேத்
தஸ்மாத் விஸ்ரம்ப யுக்தா நாம் முக்திம் தாஸ்யதி சாஸிராத் –என்று சொல்லிற்று –

இவ் விவசாயத்தினுடைய பிரபாவம்
வியவசாயாத் ருதே ப்ரஹ்ம நாசா தாயாதி தத் பரம் –நிஸ் சம்சயேஷூ சர்வே ஷூ நித்யம் வசதி வை ஹரி
ச சம்சயான் ஹேது பலான் நான்யா வசதி மாதவ -இத்யாதிகளிலும் பிரசித்தம் –
இம் மஹா விசுவாசம் யுண்டானால் பின்பு விமர்ச காலத்தில் ஒரு காலும் சம்சயம் பிறவாது -ஆகையால் பின்பு ஒரு காலும்
இவ்விஷயத்தில் சம்சயம் பிறவாத படியான பிரதம க்ஷணத்தில் மஹா விசுவாசம் பிரபத்திக்கு அங்கம்
இது மந்தமாய் இருந்தாலும் விசேஷித்துக் கடாக்ஷிக்கத் தொடங்கின ஈஸ்வரன் சேஷ பூரணம் பண்ணும்
மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன -என்று சரண்யன் அருளிச் செய்தான் இறே
அஞ்சலியாதிகளும் அகப்பட நஜாது ஹீயதே -என்னும் படி இறே இருப்பது –
ஆகையால் மந்த விசுவாசமும் மஹா விச்வாஸ பர்யந்தமாம் –

இப்படி உபாயமாக அத்யவசிக்கிறேன் என்று மஹா விசுவாசத்தைச் சொல்ல –
அநந்ய சாத்தியே ஸ்வா பீஷ்டே மஹா விச்வாஸ பூர்வகம்
ததே ஏக உபாயதா யாச்சா பிரபத்தி சரணாகதி -என்றும்
த்வமேவ உபாய பூதோ மே பவதி பிரார்த்தனா மதி சரணாகதி –இத்யுக்தா –பவ சரணம் –இத்யாதி
பிராமண அனுசாரத்தாலே உபாய பிரார்த்தனையும் இங்கே சொல்லிற்று ஆயிற்று –
இவ் உபாய பிரார்த்தனையில் கோப்த்ருத்வ வரணம் அந்தர்கதம்-ப்ருதக்பூதம் அன்று
இஷ்ட பிராப்தி அநிஷ்ட நிவ்ருத்தி ரூபமான பலத்தினுடைய பிரார்த்தனையை உத்தர கண்டத்தில் பண்ணா நிற்க
இங்கும் பல பிரார்த்தனையைப் பண்ணினால் புநருக்தி யுண்டாம் –
பிரபத்திக்கு பலமாக பக்தி ரூப உபாயத்தை பிரார்த்திக்குமா போலே
ஸ்வ தந்த்ர பிரபத்தி நிஷ்டனுக்கு இங்கு சாத்யமாய் பிரார்த்த நீயமாய் இருபத்தொரு உபாயம் இல்லை –

ஆன பின்பு இங்கும் பிரார்த்தனையைச் சொல்லுகிறபடி என் என்னில் –
பல பிரதானம் பண்ணுகிற இடம் சர்வாதிகாரி விஷயத்திலும் பொதுவாய் இருக்க
அகிஞ்சனனாய் சர்வ பர ந்யாஸம் பண்ணுகிறவன் பக்கல் பிரபத்தி வேறோர் உபாயத்துக்கு
அங்கமாக நில்லாத படி சரண்யன் தான்
உபாயாந்தர ஸ்தானத்தில் நின்று பலம் கொடுக்கிற அம்சம் ஏற்றமான படியால்
அவ்வேற்றமான பர ஸ்வீகார அம்சம் இங்குப் பிரார்த்திக்கப் படுகிறது –
ஆனால் இப்படி உபாயமாய் நிற்க வேணும் என்று அபேக்ஷிக்கவே அபிமத பல விசேஷத்தை
உபாயாந்தர வியவதானம் அறத் தர வேணும் என்று
பிரார்த்தித்தது ஆகாதோ -ஆகையால் -உத்தர கண்டத்தில் பிரார்த்தனை மிகுதி அன்றோ என்னில்
உக்த ப்ரகாரத்தாலே பிரார்த்தனா விஷயத்தில் அம்ச பேதம் தோற்றுகைக்காக
பிரிய அபேக்ஷிக்கிறது ஆகையால் மிகுதி இல்லை –
உத்தர கண்டத்தில் அபேக்ஷணீய பல விசேஷ வியஞ்சகமான
வாக்யத்தினுடைய அன்வய மாத்திரத்துக்காக பிரார்த்தனா பதம் அத்யாஹரித்தாலும்
பல ஸ்வரூப மாத்திரத்தில் தாத்பர்யம் என்று பரிஹாரம் ஆகவுமாம் –

பூர்வ உத்தர கண்டங்கள் இரண்டுக்கும் திரண்ட பொருள் நிஷ்கர்ஷிக்கும் இடத்தில்
அகிஞ்சனான எனக்கு நீ உபாயாந்தர
ஸ்தானத்தில் நின்று பல விசேஷத்தைத் தருகைக்காக யதோக்தமான
ஆத்மரஷா பர நிஷேபம் பண்ணுகிறேன் என்று ஒரு விசிஷ்டா பிரார்த்தன அன்வித பர சமர்ப்பணமாம் –
இஸ் சமர்ப்பணமும் அத்யாவசிய சப்தார்த்தமாம்
இப்படி சபரிகரமான பர சமர்ப்பணமே பிரபத்தி சாஸ்த்ரார்த்தம் என்னும் இடம்
பிராமண ஸம்ப்ரதாயங்களாலே பல இடத்திலும் சமர்த்தித்தோம்
அநே நைவ து மந்த்ரேண ஸ்வாத்மாநம் மயி நிஷிபேத்-மயி நி ஷிப்த கர்தவ்ய க்ருதக்ருத்யோ பவிஷ்யதி என்று
பிரபத்தி மந்த்ராந்தரத்தில் சொன்ன கர்தவ்ய நிஷேப ப்ராதான்யம் இங்கும் துல்யம் –
மோக்ஷ பிரதமான சித்த உபாயத்துக்கு முமுஷுவின் பக்கலிலே உள்ளதொரு சாஸ்த்ரீயமான சாத்திய வியாஜம்
வசீகரணம் என்னும் இடம் தன்னைக் கர்த்தாவாகக் காட்டுகிற உத்தமனாலே சித்தம்

இதில் ஒவ்சித்யத்தாலே –
புகல் ஒன்றில்லா அடியேன் –
அஹம் அஸ்மி அபராதா நாம் ஆலயோ அகிஞ்சனோ அகதி –
ந தர்மநிஷ் டோஸ்மி ந சாத்மவேதீ-இத்யாதிகளில் படியே
அதிகாரி விசேஷமும் கார்ப்பண்யம் ஆகிற பரிகரமும் ஸூசிதம்

இது கத்யத்தில்
அநந்ய சரண -என்கிற பாதத்திலும் –
சிறு கத்யத்தில் -ஸ்வாத்ம நித்ய நியாமிய -என்கிற சூர்ணிகையிலும்
ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் -தத் ப்ராப்தயே ச தத் பாதாம் புஜ த்வய பிரபத்தேர் அந்யன்ன மே கல்ப கோடி
ஸஹஸ்ரேணாபி சாத நமஸ் தீதி மன் வான -என்கிற சூர்ணிகையிலும் பிரபஞ்சிதமாயிற்று –

அருளாள பெருமாள் எம்பெருமானாரும் -ஸ்வா பீஷ்டே பர சம் பந்தே ஸ்வா சக்தத்யா ஹீன சாதன
தத் ப்ராப்த்யுபாயம் க்ருத்வா விச்வாஸ பூர்வகம் -என்று அருளிச் செய்தார்

இப்படி அகிஞ்சன அதிகாரமாய் பர சமர்ப்பண ரூபமான உபாயத்தைச் சொல்லுகையாலே
சரா சராணி பூதாநி சர்வாணி பகவத் வபு
அதஸ் ததாநுகூல்யம் மே கார்யமித்யேவ நிச்சய –என்றும்
ஸ்வஸ்ய ஸ்வாமிநி வ்ருத்திர்யா பிராதி கூலஸ்ய வர்ஜனம் -என்றும் இத்யாதி பிரமாணங்களின் படியே
ஸ்வாமித்வாதி நிபந்தங்களைச் சொல்லுகிற ச விசேஷணமான நாராயண சப்தத்தில்
ஆனு கூல்ய சங்கல்பமும் பிராதி கூல்ய வர்ஜனமும் ஸூசிதம் என்னும் இடம் முன்பே சொன்னோம்
இப் பரிகரங்களும் உபாயார்த்தமாக ஸக்ருத் கர்தவ்யங்கள் என்னும் இடம்
அதிகாராந்தரத்திலே -பரிகர விபாக -அதிகாரத்தில் -சொன்னோம் –

ப்ரபத்யே -என்கிற க்ரியா பதத்தில்
வர்த்தமான வியபதேசம் பர்ஹிர்வநாதி மந்திரங்களில் போலே அனுஷ்டான கால அபிப்ராயம் –
இங்கன் அன்றிக்கே இவ் வர்த்தமான வியபதேசம் வர்த்தமான தேஹ அவதியாய் பிரபத்ய அனுஷ்டா
பலம் வரும் அளவும் பிரபத்தி பரிகரமான விச்வாஸ அனுவ்ருத்தியை விவஷிக்கிறது என்றும் -பிரபத்தி காலத்தில் தான்
சங்கல்ப்பித்த படியே ஆனுகூல்யாதிகள் பிரபத்தி பரிகரமாகவே மேல் அனுவர்த்திக்க வேண்டும் படியை காட்டுகிறது
என்றும் சொல்லும் பக்ஷங்கள்
இவ் உபாயம் ச பரிகரமாக ஸக்ருத் கர்தவ்யம் என்று காட்டுகிற பிரமாணங்களோடு விரோதிக்கும்
த்வரை அதிசயத்தாலும் போக ரூபதையாலும் வரும் ஆவ்ருத்திக்கும் பூர்வ கண்டத்தில் சொன்ன படியே
அனுஷ்டிதமான உபாய சரீரத்தில் பிரவேசம் இல்லை
ஆகையால் இவ் உபாய வாக்கியத்தில் வர்த்தமான வியபதேசம் –
த்வயம் அர்த்தாநுசந்தேநேன ஸஹ சதைவம் வக்தா -என்கிற
ராக ப்ராப்த போக ரூப அநு விருத்தியை விவஷிக்கிறதும் அன்று –

இப்படி சர்வ சரண்யத்வமும் -சரணாகதி ஸ்வரூபமும் -இதில் பரிகரங்களும் -அதிகாரி விசேஷமும் –
பூர்வ கண்டத்தில் பிரகாசமாயிற்று -இத்தாலே அநந்ய உபாயத்வம் சித்தித்தது —

இப்படி தோற்றின சரணாகதி –
தாவ தார்த்திஸ் ததா வாஞ்சா தாவன் மோஹஸ் ததா அஸூகம் ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-73—இத்யாதிகளில் படியே
சகல பல சாதனம் ஆகையாலும் –
தத் அந்நிய கோ மஹோதார -என்கிறபடியே பரம உதாரரான சரண்யன் -அர்த்திதார்த்த பரிதான தீஷிதனாய்
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும்-என்னும் படி நிற்கையாலும்
இங்கு என்ன பலத்துக்காக பிரபத்தி பண்ணுகிறது என்கிற அபேக்ஷையில்
மஹா உதாரனான சரண்யனுக்கும் சர்வ உத்க்ருஷ்ட விஷயமான
இவ் வசீகரண விசேஷத்துக்கும் சேஷதைக ரசனான தன் ஸ்வரூபத்துக்கும் அநு ரூபமான பல விசேஷத்தை உத்தர கண்டம்
தனக்கே யாக என்னைக் கொள்ளுமீதே-என்கிறபடியே
ஸமஸ்த விரோதி நிவ்ருத்தி பர்யந்தமாக பிரார்த்திக்கிறது –
இத்தாலே அநந்ய ப்ரயோஜனத்வம் சித்திக்கிறது –

இவ்விடத்தில் ச விசேஷணமான நாராயண சப்தம்
ப்ராப்யதைக்கு அநு ரூபமான ஸ்வாமி த்வாதிகளும் அநந்த குண விபூதி விசிஷ்டனான
ஸ்வாமியினுடைய சர்வ பிரகார நிரதிசய போக்யத்தையும் ஆகிற ஆகாரங்களை
யதா பிரமாணம் ப்ராதன்யேன காட்டுகிறது –

இப்படி உபய விபூதி விசிஷ்டம் ப்ராப்யமாய் இருக்கச் செய்தேயும்
ஆத்ம ஹவிருத்தேச்ய ரூபமாய் -சேஷத்வ பிரதி சம்பந்திகளுமாய் அது அடியாக வருகிற
கைங்கர்யத்துக்கும் இலக்காகக் கொண்டு பிரதான ப்ராப்யருமாய் இருப்பார்
இவ் விசிஷ்ட தம்பதிகள் என்று தோற்றுகைக்காக இங்கு ஸ்ரீ மச் சப்தம்
இவ்வர்த்தம் –
வைகுண்ட து பரே லோகே ஸ்ரீ யா சார்தம் ஜகத் பதி –தயா சஹாஸீ நம் அநந்த போகி நீ –
ஆத்ம அநு ரூபயா ஸ்ரீ யா சஹாஸீநம் —
ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப –
கோலத் திரு மா மகளோடு உன்னை -இத்யாதிகளிலும் விலஷிதம் —

இங்குற்ற ஸ்ரீ சப்தம் —
ஸ்ருணாதி நிகிலான் தோஷான் ஸ்ரீ ணாதி ச குணைர் ஜகத் –
ஸ்ரீ யதே ச அகிலைர் நித்யம் ச்ரயதே ச பரம் பதம் -என்றும் –இத்யாதிகளில் படியே
அநேக அர்த்தங்கள் உண்டே யாகிலும் ஸ்ரீஞ்சேவாயாம் -என்கிற தாதுவிலே
சேவ்யத்வாதிகளைச் சொல்லிக் கொண்டு கைங்கர்ய பிரதிசம்பந்தித்வ பரம் –
ஸ்ரீ மதே என்கிற சப்தம் தன்னாலே
விசிஷ்டமான பிரதி சம்பந்தி தோற்றிற்றே ஆகிலும் சர்வவித கைங்கர்யத்துக்கும் ப்ரயோஜனமான ப்ரீதி
விசேஷத்தைப் பிறப்பிக்கும் சம்பந்த குண விபூத்யாதி பரிபூர்ண அனுபவ சித்திக்காக
இங்கு நாராயண சப்தம் ப்ரயுக்தமாகிறது –

ஆய -இங்கு சதுர்த்தீ
தாத்பர்ய முகத்தாலே கைங்கர்யத்தை கணிசிக்கிறது –
தாதர்த்யம் மாத்ரம் நித்யம் ஆகையால் -தத் சேஷத்வ அநு சந்தான பூர்வ
தச் சேஷ வ்ருத்திக -என்றும் –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்றும் இத்யாதிகளில் படியே
இங்கு பரிபூர்ண அனுபவ பூர்வகமான கைங்கர்யம் பிரார்த்த நீயம்-
சரணாகதனாம் போது சரண்யனை அபிமத பிரார்த்தனை பண்ணுகிறான்
ஆகையால் இங்கே பவேயம் என்று ஒரு பதம் அத்யாஹார்யம்
இப்படி ப்ராதான்யத்தாலே முற்பட இஷ்ட பிராப்தியை அபேக்ஷித்து
இதுக்காக அனந்தரம் நமஸ் ஸாலே அநிஷ்ட நிவ்ருத்தியையும் பிரார்த்திக்கிறது –
அப்ராப்தித பரிஹரன் ஸ்வ பரை ஸ்வ ரஷாம்
தாதார்த்யதீ பரிஹ்ருத ஸ்வ பரார்த்த பாவ
அந்யோ ப போக விரஹா தநக பிரபன்னோ
புங்க்தே ஸ்வ போக மகிலம் பதி போக சேஷம் —

இந்த நமஸ் ஸூ க்கும்
க்ரியா பதம் அத்யாஹரித்துக் கொள்ள வேணும் –
ந மம ஸ்யாம் என்றது -எனக்காவேன் அல்லேன் என்றபடி
ந மம கிஞ்சித் -என்று சர்வ விஷய மமகார நிவ்ருத்தி முகத்தாலே சர்வ அநிஷ்ட நிவ்ருத்தியை பிரார்த்திக்கிறது ஆகவுமாம்
திரு மந்திரத்தில் இஷ்ட பிராப்தி அநிஷ்ட நிவ்ருத்தி சொன்ன சோத்ய பரிஹாரங்கள் இங்கும் அனுசந்தித்துக் கொள்வது –
இந்த நமஸ் சப்தத்தால் அவித்யா கர்ம ததுபய வாஸனா ருசி ப்ரக்ருதி சம்பந்தாதி ரூபங்களான
சர்வ விரோதிகளையும் கழியா நிற்கச் செய்தேயும்
இதுக்கு நிர்வசனம் பண்ணுகிற ஸ்ருதியின் படியே பரிபூர்ண கைங்கர்ய ரூப பல தசையில் பலாந்தர அனுபவ ந்யாயத்தாலே
சங்கிதமான ஸ்வாதீன ஸ்வார்த்த கர்த்ருத்வம் -ஸ்வாதீன ஸ்வார்த்த போக்த்ருத்வம் ஆகிற களைகளைக் கழிக்கையாலே
இங்கு பிரதான தாத்பர்யம் என்று அனுசந்திப்பார்கள்
இத்தால் பலாந்தர அனுபவ தசையில் யுண்டாம் ஸ்வாதீன ஸ்வார்த்த கர்த்ருத்வ போக்த்ருத்வ பிரமங்கள்
முக்த தசையில் கைங்கர்யத்தில் இல்லாத படி கண்டு அக் கட்டளையிலே பிரார்த்திக்கிறான் என்றதாயிற்று –

பரமாத்மனி நாராயணாம் சர்வ பார சமர்ப்பணாத்
சம்ஜாதாம் நைர பேஷ்யம் து நம இத்யுச்யதே புதை -என்று
இங்குத்தை நமஸ்ஸை அருளாள பெருமாள் எம்பெருமானார் வியாக்யானம் பண்ணினார் –
இந்த ஸ்லோகத்தில் சொன்ன நைர பேஷ்யம்
ஸ்வ ரக்ஷணத்தில் நிர்பரத்வம்-இந்த நிர்பரத்வத்தாலே பர சமர்ப்பணம் ஸூசிதமாதல்
ஸ்வ நிர்பரத்வ பர்யந்தமான பர சமர்ப்பணம் இவ்விடத்தில் விவஷிதமாதல் ஆகக் கடவது –
ஹவி சமர்ப்பணத்தில் -இதம் இந்த்ராயா ந மம-என்னுமா போலே
அஹம் ஸ்ரீ மதே நாராயணாய என்று இங்கு பரகர்ப்பமாக சமர்ப்பித்து
ந மம என்று தன்னுடனே துவக்கு அறுக்கிறது என்றால் இஸ் சமர்ப்பண யோஜனைக்கு ஸ்வ ரசம் –
இந்த யோஜனையில்
பூர்வ கண்டம் அங்க பஞ்சக பரம் –
உத்தர கண்டம் அங்கி ப்ரதிபாதகம் –
அஹமத் ஏவ மாயா சமர்ப்பிதா-என்கிறபடியே இவ்விடத்தில் நான் ஸ்ரீ மானான நாராயணனுக்கு என்று சமர்ப்பிக்க
யத் சமரஷ்யத்தயா அர்ப்பயதே –தவை வாஸ்மி ஹி பர -இத்யாதிகளில் படியே ஸ்வ ரக்ஷண பரமும்-
ஸ்வ ரக்ஷண பலமும் அவனது என்று இங்கே அபி பிரேதமாகவுமாம் –

நம -என்கிற இத்தால்
ஆத்ம ஆத்மீயங்களோடும் -ஸ்வ ரக்ஷண -தத் பலங்களோடும் தனக்கு துவக்கு அற்றமை காட்டுகிறது –
பர சம்பந்த விதியிலும்-ஸ்வ சம்பந்த நிஷேதத்திலும் தாத்பர்யம் ஆகையால்
இச் சதுர்த்தீ நமஸ் ஸூ க்கள் இரண்டுக்கும் பலமுண்டு
இஸ் சமர்ப்பணம் தன்னிலும் பர நிரபேஷ கர்த்ருத்வாதிகளை நிஷேதிக்கைக்காக -நம -என்கிறது ஆகவுமாம் –
ஸ்தூல ப்ரக்ரியைக் கொண்டாலும் -நமாமி -என்கிற பதத்தை ஆத்ம சமர்ப்பணார்த்தம் என்று
வியாக்யானம் பண்ணின பாத ஸ்தோத்ர ப்ரக்ரியையாலே
இந்த நம சப்தம் சமர்ப்பண பொருளுக்கு சங்கதம் –
இப்படி உத்தர கண்டத்தை ஆத்ம சமர்ப்பண பரமாக அனுசந்திப்பார்க்கு –
இதுக்கு அநு ரூபமாய் ஸ்வரூப அநு பந்தியான பல விசேஷம் இங்கே ஸ்வத பிராப்தம்
பூர்வ யுக்தமான படியே பல பரமாக உத்தர கண்டத்தை அனுசந்திப்பார்க்கு இவ் வாத்ம ரஷா –

இப்படி த்வயத்தில் பதங்களில் அடைவே சப்த அர்த்த ஸ்வ பாவங்களால் –
புருஷகார யோகமும்
அதின் நித்யத்வமும்
உபாய வைசிஷ்ட்யமும்
சரண்ய குண பூர்ணத்வமும்
சம்பந்த விசேஷமும்
திவ்ய மங்கள விக்ரஹ யோகமும்
அதில் சேஷ பூதன் இழியும் துறை யும்
அதின் உபாயத்வ பிரகாரமும்
வசீகரண விசேஷமும்
தத் பரிகரங்களும்
அதிகாரி விசேஷமும்
ப்ராப்ய வைசிஷ்ட்யமும்
குண விபூதி விசிஷ்ட ப்ராப்யத்வமும்
கைங்கர்ய பிரதிசம்பதித்வமும்
கைங்கர்ய பிரார்த்தனையும்
சர்வ விதி கைங்கர்ய லாபமும்
சர்வ அநிஷ்ட நிவ்ருத்தியும்
அதனுடைய ஆத்யந்த்திக்கத்வமும்
பராதீன பரார்த்த கர்த்ருத்வமும்
ததாவித போக்த்ருத்வமும் —
என்று இவை பிரதானமாய் இவற்றுக்கு அபேக்ஷிதங்களும் எல்லாம்
சித்த சாத்திய விபாகவத்தான உபாயம் என்றும் உபேயம் என்றும்
இரண்டு பிரதான ப்ரதிபாத்யங்களோடே துவக்குண்டு ப்ரகாசித்தங்கள் ஆயிற்று –

இப்படி சாரீரிக சாஸ்திரத்தில் போலவே
தத்வ விசேஷமும்
உபாய விசேஷமும்
பல விசேஷமும்
இம் மந்த்ரத்திலே ப்ரதிபாதிதம் ஆனாலும் -இது ஸ்வேதாஸ்வர மந்த்ரம் போலே
பல அபேக்ஷ பூர்வகமான உபாய அனுஷ்டான பிரதானம் ஆகையால்
உபாய பலங்களுடைய உத்பத்தி க்ரமத்தோடே சேர்ந்த பாட க்ரமத்தாலே பல ப்ரதிபாதக வாக்கியம் பிற்பட்டாலும்
அர்த்த க்ரமத்தாலே இது முற்பட அனுசந்தேயம் என்று பூர்வர்கள் அருளிச் செய்வார்கள்
புருஷன் புருஷார்த்தத்தை விமர்சித்துக் கொண்டு அன்றி உபாய விமர்சமும் உபாய அனுஷ்டானமும் பண்ணான் இறே
இப்படி திரு மந்த்ரத்திலும் உபாய பல ப்ரதிபாதக அம்சங்களில் க்ரம பிரகாரங்களைக் கண்டு கொள்வது
பலார்த்தியாய் அதிகாரி யானால் இறே இவனுக்கு இவ் உபாய அனுஷ்டானம் வருவது –
த்வயேன சரணம் வ்ரஜேத்–த்வயார்த்த சரணாகதி –என்கிற அபியுக்தர் பாசுரங்களாலும்
த்வயம் உபாய அனுஷ்டானத்தை பிரதானமாக பிரகாசிக்கிறது –

இங்கு பூர்வ கண்டமும் -சதுர்த்யந்த பதங்களும்-நமஸ் ஸூ மாக -மூன்று அவாந்தர வாக்கியங்கள் ஆனாலும்
திரள உபாய பிரதானமான ஒரே வாக்யமாகத் தலைக் கட்டக் கடவது -எங்கனே என்னில் –
சர்வ ஸ்வாமியாய் –
சர்வ பிரகார -நிரதிசய போக்யனாய்
பெரிய பிராட்டியாரோடு பிரிவில்லாத நாராயணன் திருவடிகளில்
ஸ்வரூப பிராப்தமான -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தோசித சர்வ வித கைங்கர்யத்துக்கும்
விரோதியான சர்வமும் கழிந்து பரிபூர்ண கைங்கர்யம் பெறுகைக்கு
அகிஞ்சனான அடியேன்
ஸ்வ ரக்ஷண பராதிகளில் எனக்கு அந்வயம் யறும் படி
ஸ்ரீ மானான நாராயணன் திருவடிகளிலே
அங்க பஞ்சக சம்பந்தமான ஆத்ம ரஷா பர சமர்ப்பணம் பண்ணுகிறேன் என்று த்வயத்தின் திரண்ட பொருள் –

வைராக்ய விஜித ஸ்வாந்தை ப்ரபத்தி விஜி தேச்வரை
அநுக் ரோசைக விஜிதை இத்யுபாதேசி தேசிகை

இதமஷ்ட பதம் வ்யாஸே சமாஸே ஷட்பதம் விது
வாக்யம் பஞ்ச பதைர் யுக்தம் இத்யாக்யாத பிரதாநகம்

ஏகம் த்வயம் த்ரய வயம் ஸூக லப்ய துர்யம்
வ்யக்த அர்த்த பஞ்சகம் உபாத்த ஷடங்க யோகம்
சப்தார்ண வீ மஹிமவத் விவ்ருத அஷ்ட வர்ண
ரங்கே சதாமிஹ ரசம் நவமம் ப்ரஸூத –

ஓதும் இரண்டை இசைத்து அருளால் உதவும் திருமால்
பாதம் இரண்டும் சரண் எனப் பற்றி நம் பங்கயத்தாள்
நாதனை நண்ணி நலம் திகழ் நாட்டில் அடிமை எல்லாம்
கோதில் உணர்த்தி யுடன் கொள்ளுமாறு குறித்தனமே –

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: