திருப்பாவை -வையத்து வாழ்வீர்காள் – -ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் வியாக்யானம் – ஆறாயிரப்படி –

அவதாரிகை –
முதல் பாட்டு ப்ராப்ய ப்ராபக சங்க்ரஹம் –
இரண்டாம் பாட்டில் க்ருத்ய அக்ருத்ய விவேகம் பண்ணுகிறார்கள்
மூன்றாம் பாட்டு ப்ராபக சங்க்ரஹம்
இதர விஷயங்களில் விடுமவற்றோடு பற்றுமவற்றோடு வாசி இல்லை -துல்ய பலமாய் இருக்கும் –
ஆயாசத்தாலே பெறுமதாகையாலும் -நிலை இல்லாமையாலும் –
இங்கு மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு இ றே

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மை இட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்–2-

வியாக்யானம் –
வையத்து வாழ்வீர்காள்-
புத்தி நாஸாத் ப்ரணச்யதி -என்கிறபடியே இதர விஷயத்தில் மண்டி முடியும் நிலத்திலே வகுத்த விஷயமே அனுபவிக்கப் பெற்றவர்கள் அன்றோ –
பல நீ காட்டிப் படுப்பாயோ -என்றும் -இன்னம் கெடுப்பாயோ -என்றும் -உணர்ந்தவர்கள் கூப்பிடும் நிலம் இ றே –
நாட்டார் பெறா விடில் முடியும்படியான விஷயங்களினுடைய தர்சனத்திலே முடிக்கிறார்கள் இ றே இவர்கள் –
வையத்து வாழ்வீர்காள்-
இந்நிலத்திலே தாமரை போலே –
வையத்து வாழ்வீர்காள்-
கிருஷி பூமியிலே பலம் புஜிப்பதே-
வானிலே போல் சிறை இராதே -கிருஷ்ண குணங்கள் திருவாய்ப்பாடியிலே ஆழி மூழையாய் பரிமாறா நிற்க
வானில் இருப்பாகிறது -பெருமாள் காடேற எழுந்து அருள திரு அயோத்யையில் இருப்பு போலவும்
கிருஷ்ணன் திருவாய்ப்பாடியிலே வளர்ந்து அருளா நிற்க ஸ்ரீ மதுரையில் இருப்பு போலவும் இ றே
அயோத்யா மடவீம் வித்தி என்று திரு அயோத்தியை பட்டது பட்டு இ றே அங்கு கிடக்கிறது
அங்கே மேன்மை –இங்கு நீர்மை -குணாதிக்யத்தாலே இ றே வஸ்துவுக்கு ஏற்றம்
நசப்புனராவர்த்ததே–மீட்சி இன்றி -ஏற்றி வைத்து ஏணி வாங்கி -என்றும் சொல்லுகிறபடி -அங்கு உள்ளார்க்கு இங்கே வர ஒண்ணாதே
இங்கு உள்ளார்க்கு மேன்மையும் காணலாம் -ஆகை இ றே விண்ணுளாரிலும் சீரியரே என்கிறது –
முழுதும் இத்யாதி இறுதி கண்டாளே -நித்ய அஞ்சலி புடா –என்று நாம் தொழும் அத்தனை இ றே அங்கு –
சீல குணத்துக்கு அகப்பட்டார் மற்றொரு குணத்துக்கு ஆளாகார் இ றே
-ஸ்நேஹோமே பரம -அங்குப் போரும் அளவுள்ள காணும் என்னது ஸ்நேஹம் என் படுத்தாது தான் –
என் தன் அளவன்றால் யானுடைய அன்பு -என்கிறது -ஆஸ்ரயத்தின் அளவுள்ள காணும் ஸ்நேஹம் –
ராஜந்த்வயி-இது தான் பரத்வத்திலோ என்னில் -பிரதிகூலரானவர்களும் ரஞ்ஜநீயஸ் விக்ரமை -என்று மடல் எடுக்கும் உம்முடைய பக்கலிலே –
இப்போது தவறி இருந்தோம் ஆகில் இனி ஒருக்கால் ங்குகி கொள்ளுகிறோம் என்றார்
நித்யம் ப்ரதிஷ்டித-காதா சித்கம் அன்று காணும் -ஸ்வரூப அந்தர்கதம் காணும்
பக்திஸ்ஸஸ்நேஹம் ஆகிறது ஏது பக்தி ஆகிறது ஏது என்னில் -நில் என்ன -முடிந்தேன் -என்று முறை அழிய பரிமாறின இளைய பெருமாள் படி பக்தி
ஸ்நேஹம் ஆகிறது -ஓன்று அறிந்து அன்றிக்கே வ்யதிரேகத்தில் மூச்சு அடங்கும் படியான சக்கரவர்த்தி படி
இப்படி வியதிரேகத்தில் முடியும்படியானவன் மோக்ஷ பலம் பெறாது ஒழிவான் என் என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க
இவனுக்கு உள்ளது நரகமே -பெருமாள் ஆன்ரு சம்சயத்தாலே ஸ்வர்க்கஸ்தன் ஆனான் -என்று அருளிச் செய்தார் –
ச சத்ய வஸனாத் -ராமோ விக்ரஹவான் தர்ம -என்று பர தர்மத்தை விட்டு வசனத்தைப் பற்றினான் ஆகையால்
வீர -இவர் தாம் தோற்ற துறை இருக்கிற படி –
பாவோ நான்யத்ர கச்சதி -அந்யத்ர-என்கிறான் -பேரும் கூட அஸஹ்யமாம் படி
வாழ்வீர் காள்-
பெருமாள் ஏகாம் தரணிம் ஆஸ்ரிதவ் -என்றால் போலே ஒரு பூமியிலே ஆகப் பெறுவதாம்-சம காலத்திலே பிறக்கப் பெறுவதாம் –
ஒரு ஊரிலே ஆவதாம்-அதிலும் அவன் காண வேண்டாத ஆண்களாகவும் -பருவம் கழிந்த பெண்களாகவும் அன்றிக்கே -ஒத்த பருவமாக பெறுவதாம் –
திரு அயோத்யையில் உள்ளார்க்கு போலே விஸ்லேஷ வியஸனம் இல்லாதாவையாகப் பெறுவதாம் –
இது ஒரு வாழ்ச்சி இருந்தபடி என் தான் -என்கிறார்கள் –
வாழ்வீர்காள் –
என்ற பன்மைக்குக் கருத்து -அதொரு விபூதியாக பகவத் அனுபவமே யாத்ரையாய் இருக்குமா போலே இதுவும் ஒரூராக இதுவே யாத்திரையாக பெறுவதே –
ஓரூருக்கு ஒருவனை இ றே பெற்றது -விபீஷணஸ்து தர்மாத்மா -என்று
வக்தாஸ்ரோதா ச துர்லப-என்று சொல்லுவான் ஓருவனேயாய்க் கேட்ப்பார் இல்லாத இலங்கை போல் அன்றிக்கே
த்ரிபாத் விபூதி ஒரு நாடாகச் சமைந்தால் போலே இது ஒரு ஊராகச் சமையப் பெறுவதே -நாமும் –
நம்மில் நாம் வக்தாக்களும்-ஸ்ரோத்தாக்களுமாக -இருந்தோமே யாகிலும் -லாப அலாபங்களில்-சம துக்க ஸூகராம் படி இருக்கிற நாமும் –
நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் –
ப்ராப்ய ப்ராபகங்கள் அவனே என்று அறுதியிட்ட பின்பு செய்யுமவை ப்ராப்யத்தில் புகுரும் அத்தனை இ றே –
இனி பேற்றுக்கு உடலாகச் செய்வது ஓன்று இல்லை –அச்சம் உறுத்திக் கார்யம் கொள்ளப் பார்க்கிறார்கள் இ றே –
த்வரை இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே -ப்ராப்ய பிரதிபத்தி பண்ணியே ப்ராபக சுவீகாரம் பண்ணுகிறது –
ஆறி இருந்தான் ஆகில் பிரதிபத்தி பண்ணிற்று இலனாம் அத்தனை இ றே –
அதிகாரி தான் முமுஷுவே -ஞானம் பலம் உண்டாக வேணும் –
தியாக மாத்ரத்தையே சுவீகரித்து -ப்ராப்யத்திலே ருசி இன்றிக்கே தான் நினைத்த படி நடக்கில் நாஸ்திகத்வமே பலித்து விடும் அத்தனை இ றே
ஷூத்ர விஷயத்தில் பிறந்த ஸ்ரத்தை செயல் அளவும் பலியா நின்றது -அது பகவத் விஷயத்தில் வேண்டா தன்று இ றே
செய்யும் கிரிசைகள்
என்கையாலே அவனும் அவனுடையாரும் வாழும் படியாய் இருக்கை –

கேளீரோ –
கிருஷ்ணன் கிடாய் பெண்கள் கிடாய் -என்கிற வூரிலே கோப வ்ருத்தர்கள் அனுமதி பெற்று கிருஷ்ணனோடு கூட அனுபவிக்கப் பெறுவதே –
என்கிற ப்ரீதி அதிசயத்தாலே பரவச காத்ரைகளாய்க் கிடக்க-கேளீரோ -என்கிறார்கள் –
மேய்ச்சல் தலையிலே அசையிடுவார் உண்டோ -பெற்ற அம்சத்துக்கு த்ருப்தராம் எத்தனையோ –
மேன்மேல் என பரகு பரகு -என்று வர வேண்டாவோ -கேட்க்கையே உத்தேஸ்யமாய் இருந்தபடி –
நாங்களும் வாய் படைத்த லாபம் பெற்று நீங்களும் செவி படைத்த லாபம் பெற வேண்டாவோ –
புருஷார்த்ததோயம் ஏவை கோயத்கதா ஸ்ரவணம் ஹரே –சபாத லக்ஷ க்ரந்தத்தாலே தர்மார்த்த காம மோக்ஷங்களைச் சொல்லி
-இவற்றில் உன் நெஞ்சில் பட்டது என் என்ன -நாலிலும் ஓன்று அன்று –
பகவத் குண வித்தராய் இருக்கும் உன் போல்வாரைப் பேச விட்டு -தென்றலும் சிறு துளியும் பட்டாப் போலே
குளிரச் செவி மடுத்துக் கேட்டுக் கிடக்க அமையும் என்று பட்டது -என்றான் –
ஸம்ஸ்ரவே மதுரம் -ஞான பிரசார த்வாரா இந்திரியங்கள் புறப்பட்டு பாஹ்ய விஷயங்களை கிரஹித்து பின்பு இ றே ரசிப்பது
அங்கன் இன்றிக்கே தென்றலும் சிறு துளியும் பட்டால் போலே பட்ட இடமே பிடித்து ரசிக்கை-கேட்டாரார் -என்னுமா போலே –
மதுரம் -அறிவு கொடுத்து ரசிப்பிக்க வற்றாய் இருக்கை / வாக்யம்-பூர்வாபர சங்கதி வேண்டாதே தனியே இனிதாய் இருக்கை –
வைதேஹ்யா-குடி பிறப்பு வாசி தோற்ற உடம்பு பேணாதே இருந்த படி
வ்யாஜஹார -உடம்பு இல்லாதார்க்கு செவி இல்லை இ றே -செவி கொடுத்து வார்த்தை சொன்னான் என்கிறது
கேளீரோ
செவி படைத்த லாபம் பெற வேண்டாவோ

பாற் கடலுள்
சொல்லுகிற படி தான் -கீழே நாராயணன் -என்றார்களே -அந்த நாராயண சப்த வாச்யனான ஸர்வேஸ்வரன் திருப் பாற் கடலிலே
ப்ரஹ்மாதிகளுடைய கூக்குரல் கேட்க்கும் படி குடில் கட்டிப் பயிர் நோக்கும் கிருஷிகனைப் போலே
தோள் தீண்டியாக வந்து கண் வளர்ந்து அருளுகிறான் என்கிறார்கள் –
மன்னு வடமதுரை மைந்தன் -என்று மேலே சொல்லப் புகுகிறார்கள் ஆகையால் -நாராயணன் -எண்பது –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் என்பதாகா நின்றார்கள் –
ஸ்ரீ பீஷ்மர் பரத்வமே பிடித்து உபபாதித்திக் கொண்டு வாரா நிற்க -ச ஏஷ ப்ருது தீர்க்கா ஷஸ் சம்மந்தீ தே ஜனார்த்தன -என்று
மூதலித்துக் காட்டினால் போலே –
அபரம்பவதோ ஜென்ம பரம் ஜென்ம விவஸ்தத-என்று அர்ஜுனனுக்குத் தானும் அருளிச் செய்தான்
பைய –
மெள்ளத் துயின்றானை என்னுமா போலே ஆர்த்த நாதம் கேட்க்கும் படி அசங்காதே கிடக்கிற படி
துயின்ற –
தமோ குண அபிபவத்தாலே வந்த உறக்கம் அன்றே -ஆர்த்த நாதம் கேளாத போது காணும் பிராட்டிமார் போகமும்
மதுரா மதுரா லாபா -என்று பிச்சேறப் பண்ணுமவள் பேச்சும் அஸஹ்யமாம் –ஜகத் ரக்ஷணத்தில் திரு உள்ளம் பற்றின போது –
பரமன் –
இருந்து அருளின போதையிலும் சாய்ந்து அருளின போது காணும் அங்க ப்ரத்யங்கங்களில் புக்கு அநுபவிக்கலாவது-
நாட்டார்க்கு மற்றப்படியே -இங்கு கிடந்ததோர் கிடக்கை -என்றும் –கோலம் திகழக் கிடந்தாய் என்றும் சொல்லலாம் படி இருக்கும் –
சர்வாதிகன் என்று -தோற்றுமாய்த்து கண் வளர்ந்து அருளும் போதை –
–அழகில் பிரசித்தி –
மயா போதித-காகம் என்று ஒரு வியாஜ்யம் இடுகிறேன் அத்தனை -என்னாலே கெட்டேன்
ஸ்ரீ மான் -கண் வளர்ந்து அருளுகிற போதை காந்தி பிராசர்யம்
ஸூக ஸூப்த -படுக்கைக்கு ஈடாய் இ றே உறக்கம் இருப்பது
பரந்தப -எழுப்பிக் கொள்ள நினைத்த காரியத்துக்கும் உறக்கமே அமையும் கிடீர்
சிம்மம் உறங்கும் போதும் துஷ்ட மிருகங்கள் அணைய மாட்டாதே –
கௌசல்யா ஸூ ப்ரஜா ராம –உண்ணப் புக்கு வாயை மறப்பாரை போலே -வந்த காரியத்தை மறந்தான் –
ஒரு திருவாட்டி பிள்ளை பெறும் படியே என்கிறான் -படுத்த பைந்நாகணை —
பரமன்
கிட்ட வந்து கிடக்கிற குணாதிக்யத்தாலே வந்த ஏற்றம் ஆகவுமாம்

அடிபாடி –
பரமன் என்கிறார்களே -அவனுடைய சேஷித்வத்தை அனுசந்தித்தால் நடுவு தங்குமவர்கள் அல்லாமை திருவடிகளில் விழுகிறார்கள்
அவன் உறக்கம் புருஷோத்தமத்வத்துக்கு ஸூ சகமானால் போலே இவர்களும் நாரீணாம் உத்தமைகள் ஆனமைக்கு ஸூ சகம் திருவடிகளைப் பாடுகை-
அவன் சேஷித்வத்துக்கு சமைந்தால் போலே இவர்கள் சேஷத்வத்துக்கு சமைந்த படி
ஸ்தநந்த்ய பிரஜை முலையிலே இ றே வாய் வைப்பது -செவ்வடி செவ்வி திருக்காப்பு என்னுமவர்கள் இ றே

அடி பாடி நெய் உண்ணோம்
அடி பாடுவதுக்கு முன்பு போலே அவை தாரகமாவது
எல்லாம் கண்ணன் என்று இ றே பின்னை இருப்பது -வா ஸூ தேவஸ் சர்வம் இ றே -எல்லாம் அவனே என்று இருக்கையாலே
கூறை சோறு இவை வேண்டுவது இல்லை என்றார் தமப்பனார் -இவள் அவரிலும் உள் புக்கு -இடைச்சியான
முறுக்கத்தாலே-நெய் உண்ணோம் பால் உண்ணோம் -என்கிறாள் –
அடி பாடி நெய் உண்ணோம் பால் உண்ணோம் –
உண்டார்க்கு உண்ண வேண்டாவே -குடிக்கக் கடவது உண்ணக் கடவது -என்று அறிகிறிலள் முதல் தன்னிலே வ்யுத்புத்தி இல்லாமையால்
இவர்கள் ஸுகுமார்யம் தான் திருவடிகளை பாடுதல் நெய்யும் பாலும் குடித்தால் போலே
நெய் உண்ணோம்
அவன் ஜீவனம் வாங்கோம் என்கிறார்கள்
நெய் உண்ணோம்
இவர்கள் ஆரைத் தான் பட்டினி கொள்ளப் பார்க்கிறது -இவர்கள் உண்டால் பசி கெடுவது அவனுக்குப் போலே
சரீரத்துக்கு வரும் நன்மை சரீரிக்கு இ றே -யஸ்யாத்மா சரீரம் –

நாட் காலே நீராடி –
ப்ரஹ்ம முஹூர்த்தத்திலே குளிக்கக் கடவோம் –
அவன் திருப் பாற் கடலிலே கிடந்த கிடக்கை என்னாச்சு தான் –
மஹிஷியானவள் குளித்து விரல் முடக்குமதில் காட்டிலும் மடல் உண்டோ -ஓதி நாமம் -அவனை அழிப்பார் வார்த்தைகள் இ றே
நாட் காலே நீராடி –
அதிலே அவனை பிற்பாடானாக ஆக்கக் கடவோம் -நமே ஸ்நானம் -பார்த்தாவின் அசந்நிதியிலே குளிக்க இறாய்க்கும் பார்யைப் போலே –
வஸ்திராண்யா பரணா நிச-உடம்பு தானே மிகையாய் இருக்க -அதுக்கு மேலே அந்தரமானவற்றைச் செய்யவோ
உடம்பினால் குறைவிலமே என்று ஆகாதே இருக்கிறது
தம்விநா -குளிப்பார்க்கு பிரதான உபகரணம் வேண்டாவோ
கைகயீ புத்ரம் -நடுவில் ஆய்ச்சி பிள்ளையை நலிந்தாள் என்னா நாமும் அவனை நலியவோ
கைகயீ புத்ரம் -ரிஷிகளோடே சம்பாஷிக்கவும் -அவர்கள் விரோதிகளை போக்கவும் -அத்தால் வந்த புகழும்
-அவளால் வந்தது அன்றோ -அவள் பெற்ற பிள்ளை அன்றோ –
பரதம் -அவள் சம்பந்தம் மிகை என்னும் படி அன்றோ அவன் தன் படி
தர்ம சாரிணம்-நம்மை பிரிந்தால் அவன் இருக்கும் படி இருந்தால் -அவனைப் பிரிந்தால் நாம் இருக்கும் படி இருக்க வேண்டாவோ
இப்படி சேஷ பூதர் அசந்நிதிகளிலே சேஷிகள் குளிக்கு இறாய்ப்பர்கள் இ றே –
அத்தைப் பொய்யாக்கி அவனை ஒழிய நாங்கள் குளிக்கக் கடவோம் என்கிறார்கள்
நாட் காலே நீராடி
ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே -அத்யந்த ஸூ க சம்வ்ருத்த -இத்யாதி
-சேதே சீதே மஹீதலே பரதஸ்யவதே தோஷம் என்றவன் வார்த்தை -இ றே –
அநு கூலன் என்று அறிந்தவாறே நாம் தழை முறித்திட்டாகிலும் கிடப்புதோம்-அவன் தறைக்கிடை கிடக்கிறான் என்கிறார் –

மை இட்டு எழுதும் –
மைய கண்ணாள் இ றே -இனி அது தனக்கு நிறம் கொடுக்கை இ றே உள்ளது -அவனைக் கெடுக்கிறாள் காணும் –
இவர்கள் தொடங்கினால் இ றே அவன் குறையும் கற்ப்பிப்பது-அவன் கிஞ்சித் காரத்துக்கு அவகாச பிரதானம் பண்ணோம் என்கிறார்கள் –
சேஷிக்கு கிஞ்சித் கரியாத போது சேஷத்வம் இல்லை –அவன் நிரபேஷன் ஆகையால் கிஞ்சித் காரத்துக்கு இடம் இல்லை
இவன் ஸ்வரூப லாபத்துக்காகவே அவன் சாபேஷரைப் போலே இவர்கள் கிஞித்காரம் கொள்ளக் கடவன்
இவன் சேஷத்வம் தன்னுடைய சேஷித்வத்திலே சேருகையாலே இது ஸ்வரூப அந்தர்கதம்-

மலரிட்டு நாம் முடியோம் –
சுரும்பார் குழல் கோதை இ றே -அப்போது அலர்ந்த செவ்விப் பூவினின்றும் வண்டுகள் கால் வாங்கி
இவள் குழலிலே படியும் படி இ றே திருக் குழலில் செவ்வி இருப்பது –
தான் மாலை சூட என்று தொடங்கினால் -குறையும் அவன் வந்து சூட்டி அலங்கரிக்கும் இறே -அதுக்கு அவனுக்கு அவகாசம் வையோம் என்கை –
நாம் முடியோம் –
அவன் தானே வந்து சூட்டில் செய்யலாவது இல்லையே
செய்யாதன செய்யோம் –
வசன சித்தமே யாகிலும் பூர்வர்கள் அனுஷ்டானமே ஒழிய வேறு செய்யக் கடவோம் அல்லோம் –
ப்ரசக்த்துக்கு இ றே ப்ரதிஷேதம் உள்ளது -இது இப்போது என் என்னில் ஸ்வரூப கதனம்-
ஆழ்வான் -எங்கள் பூர்வர்கள் தேவதாந்த்ர பஜனம் பண்ணாமையாலே என்றானாம் -பிரதிபுத்தா நசே வந்தே இ றே
-ப்ராப்ய ப்ராபகங்கள் அவனே யாகிலும் அநாத்ம குணங்கள் தவிருகையும் ஆத்ம குணங்கள் உண்டாகையும் தவிராதே -சேதனன் ஆகையால் –
சர்வ பூதாத்ம கேதாத-கார்ய காரணங்களினுடைய அநந்யத்வத்தைச் சொல்லுகிறது
ஜெகன்நாதே-ஜகத்துக்கும் அவனுக்கும் சம்பந்தம் -சேஷ சேஷி பாவத்தால் என்கிறது –
ஜெகன் மயே -சரீர சரீரீ பாவத்தால் இஸ் சம்பந்தம் என்கிறது –
பரமாத்மனி-இவற்றுக்கு தானே வியாபகனானால் போலே தனக்கு வியாபகாந்தரம் இல்லை என்கிறது
கோவிந்த்தே – – இவ் வைச்வர்யத்தைக் கொண்டு -கடக்க இராதே கிட்ட நிற்குமவன் -என்கிறது
-மித்ர அமித்ர கதா குத-சம்பந்தம் இதுவான பின்பு மித்ரத்வ மித்ரத்வ பிரதிசம்பந்தியான அமித்ரத்வமும் இல்லை என்கிறது –
முக்தனுக்கு ததீய ஆகாரத்துவத்தாலே லீலா விபூதி உத்தேச்யம் ஆகா நிற்கச் செய்தே த்யாஜ்யமும் ஆகிறது இ றே –
விபூதி மாத்திரமே உத்தேச்யமாம் அன்று -அவனுக்கு தனுபூதரான ப்ரஹ்மாதிகளோடு ஓக்க நீராய் நிலனாய் என்கிறதுவும் உத்தேச்யமாம் இ றே
இவை ஆஸ்ரயணீயம் ஆனாலும் ஈஸ்வர அபிமானிகள் த்யாஜ்யர் இ றே
அக்னிஹோத்ர அக்னிக்கும் ச்மசா அக்னிக்கும் அக்னி சாம்யம் உண்டாய் இருக்கச் செய்தும்
விதித்தரந்தங்களிலே ஓன்று நிஷித்தமாகவும் ஓன்று சுத்தமாகவும் சொல்லா நின்றது இ றே
இப்படி பூர்வர்கள் அனுஷ்டானமும் உண்டு இ றே -ஸூ ஹ்ருதம் சர்வ பூதா நாம் -என்கிறபடியே பிராப்தி உண்டாகிலும்
ஒருவர் ஒருவரை எழுப்பி எல்லாரும் திரள வல்லது அவன் முன்பு நிற்க்க கடவோம் அல்லோம் -நாம் தனியே சென்று நிற்கில் வைரூப்பிய அவஹமாம் –
செய்யாதன செய்யோம் –
சர்வாத்மான அபர்ய நுநீயமாக -என்ற இளைய பெருமாளை போலேயும் சக்கரவர்த்தியும் பெருமாளும் கொடுக்கையாலே
ராஜ்ஜியம் பண்ணுகை சாஸ்த்ரார்த்தமாக இருக்க
இவ்வம்சத்தில் முறை தப்புவார் இல்லை என்று ஸ்ரீ பரதாழ்வான் முடிக்கு இறாய்த்தால் போலேயும்
தீக் குறளை சென்றோதோம்
பேய்ப் பெண்ணே -என்று வையவும் கடவோம் -நாயகப் பெண் பிள்ளாய் -என்று காலிலே விழவும் கடவோம் –
அவன் செவிப் படுத்தோம் -பத்து மாசம் சுற்றி இருந்து ராக்ஷஸிகள் பண்ணின தர்ஜன பத்சநா திகளை ஏகாந்தத்திலும்-
பெருமாளுக்கு விண்ணப்பம் செய்யாத பிராட்டியைப் போலே –
சென்று ஓதோம்
அவன் தான் கலந்து நின்று அறியுமாகில் செய்யலாவது இல்லை –
சென்று ஓதோம் –
பிறர் செய்யுமவை அறிவிக்கச் சென்றாலும் அவன் முகத்தில் தண்ணளி கண்டால் அறிவிக்க ஒண்ணாத படி இருக்குமே
சச நித்யம் ப்ரசாந்த்தாத்மா -என்று இ றே இருப்பது –

ஐயமும் பிச்சையும்
ப்ராப்த காலங்களில் ஆர்த்தரையும் யோக்யரையும் பார்த்து இடுமவை
ஆந்தனையும்
அவர்கள் கொள்ள வல்லராந்தனையும் கொடுத்து
கை காட்டி
எல்லாம் கொடுத்தாலும் கொடுத்தது உண்டோ என்று இருக்கை –
அதாவது -ஒருவரை ஒருவர் எழுப்புகையும் -அவர்களுக்கு சர்வ ஸ்வதானமாக தங்களைக் கொடுக்கையும்
எல்லாரையும் கொண்டு போகையும்-கிருஷ்ண அனுபவம் பண்ணி வைகையும் இவை எல்லாம் செய்தாலும்
ஒன்றையும் செய்யப் பெற்றிலோம் என்று இருக்கையும் –

உய்யுமாறு எண்ணி –
அசன்னேவச பவதி -என்று இ றே முன்பு கிடந்தது –
சந்த மேனம் ததோ வித்து என்கிறபடி யாகை
எண்ணி உகந்து
மநோ ரதமே பிடித்து நித்தியா நிற்கும் போலே -நின் புகழ் இத்யாதி -உன்னுடைய கல்யாண குணங்களை அநுஸந்திக்கும்
அனுசந்தானத்தோடு ஒக்குமோ நீ போரப் பொலியக் கொடுக்கும் பரம பதம்
மாலே படிச் சோதி மாற்றேல் இனி –மறப்பின்மை யான் வேண்டும் மாடு –
உகந்து செய்யும் கிரிசைகள் கேளீர் -என்கிறார்கள் -விதி பூர்வகமாகச் செய்கை அன்றிக்கே ப்ரீதி பூர்வகமாகச் செய்கை –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: