ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –
கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –
சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –
———————————————————————
ஸ்ரீ ராமானுஜருடைய காலத்திற்குப் பிறகு விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்திற்கு உள்ளும் புறம்பும் தோன்றிய விரோதிகளைப் போக்கி
அதை நிலை நிறுத்த திருவேங்கடமுடையான் தன் திருமணியை இவ்வுலகில் அவதரிப்பித்தான்.
அதுவே தூப்புலில் ஸ்ரீ வேங்கட நாதனாக அவதரித்தது.
இந்த கவிதார்க்கிக சிம்மம் பல வாதக்கிரந்தங்களைச் செய்தது போலவே தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் பல ஸ்தோத்ரங்களையும் செய்தருளினார்.
ஸ்ரீ தேசிகன் இந்த ஸ்தோத்ரங்களில் மந்த்ரங்களையும் மந்த்ராக்ஷரங்களையும் இசைத்து வைத்திருக்கிறபடியால்,
மந்திரத்தை அறியாத நம்போலியரும் இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்வதினாலேயே மந்திரம் கைவந்தார் பெறும் பலனையடையலாம்.
அதனாலேயே ஒவ்வொரு ஸ்தோத்ரத்தின் முடிவிலும் “இதைப் படிப்போர் பெறும் பயன் இது” என்று பல ச்ருதியைக் கூறியிருக்கிறார்.
எல்லாம் பகவத் பிரீதியின் பொருட்டு என்று செய்வோருக்கு எல்லாப் பலமும் கிடைக்கும்.
இவற்றுள் “அபீதிஸ்தவம்” என்ற ஸ்தோத்ரம் தன் பெயருக்கேற்ப ஸகல பயத்தையும் போக்கி
பகவதனுக்ரஹத்தால் ஸகல ஹிதத்தையும் அளிப்பதோடு,
பயன் கிடைப்பதாகச் சொன்னது பொய்யன்று என்பதையும் ருஜுப்படுத்துகிறதாயும் இருக்கிறது.
ஸ்ரீதேசிகன் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருந்த காலத்தில் மாலிக்காபூர் என்ற மஹம்மதியத் தலைவனின் ஸைன்யம் ஸ்ரீரங்கத்தின்மீது படையெடுத்து வந்தது.
அதைக்கண்டு பயந்த கோவிலதிகாரிகள் கதவைமூடி ஸந்நிதிக்கு முன் வேறொரு விக்ரஹத்தைப் பூஜிப்பதாகக் காட்டிவிட்டு,
ஸ்ரீரங்கநாதனையும் உபயநாச்சிமார்களையும் பல்லக்கில் எழுந்தருளுவித்துக்கொண்டு ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியேறினார்கள்.
வயது முதிர்ந்தவரான ஸுதர்சனாசார்யர் என்னும் ஆசார்யர் தான் செய்த சுருதப்ரகாசிகையையும் தன் மக்கள் இருவரையும்
ஸ்ரீ தேசிகனிடம் ஒப்பித்து, “உம்மால் நம் தர்சநத்திற்கு நன்மை ஏற்படப் போகிறது, ஆதலால் நீர் தப்பிச் செல்லும் ” என்று கூறி அவரை அனுப்பினார்.
பிறகு தங்கள் உயிருள்ளவரையும் விரோதிகள் உட்புகாமைக்காகவும் பெருமாளை எடுத்துச் செல்வோரை
அவர்கள் பின்தொடராமைக்காகவும் மஹம்மதிய ஸைன்யத்தை எதிர்த்துப் போர் புரிந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் உயிர் நீத்தனர்.
ஸ்ரீதேசிகனும் ஸ்ரீரங்கத்தை விட்டது முதல் பல இடங்களில் தங்கி, கடைசியாக திருநாராயணபுரம் வந்து சேர்ந்தார்.
வந்ததுமுதல் ஆச்ரித ரக்ஷணத்தின் பொருட்டுவந்த ஸர்வேச்வரனான ஸ்ரீரங்கநாதனுக்கும் ஸூர்யனும் பார்த்தறியாத
நாச்சிமார்களுக்கும் தங்கள் வாஸஸ்தலத்தை விட்டு இடம் தேடித்திரிய வேண்டியிருந்த நிலைமையையும்
ராமனைப் பிரிந்த அயோத்யைபோல அரங்கம் தன் நாதனைப் பிரிந்து பொலிவற்று நிற்பதையும்,
தனக்கும் தன்னைப்போனற பரமைகாந்திகளுக்கும் ஸ்ரீரங்க வாஸமும் பகவத் ஸேவையும் இல்லாததால் உயிரேயற்றது போல்
இருக்கும் நிலைமையையும் எண்ணி எண்ணி மனம் நொந்து ஏங்கினார்.
முடிவில் தன்னைக் காத்துத் தன்னடியார்களுக்கு அளிக்கும் பொருட்டு அவனையே துதித்துச் சரணமடைய வேண்டுமே யொழிய
வேறு கதியில்லை என்று நிச்சயித்து “துருஷ்கயவநாதிகளால் அரங்கத்திற்கும் அரங்கனுக்கும் அரங்கனடியார்களுக்கும்
ஏற்பட்ட பயத்தைப் போக்கி, மறுபடியும் தன்னையும் தங்களையும் ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டிதமாக்கி அபயமளிக்க வேண்டும்” என்று
“அபீதிஸ்தவம்” எனற இந்த ஸ்தோத்ரத்தைச் செய்து, பெருமாள் திருவடிகளைச் சரணமடைந்தார்.
இந்த ஸ்தோத்ரத்தின் பயனாகவே கொப்பணார்யன் என்னும் செஞ்சிக் கோட்டையின் தலைவனான பரம பக்தன்
துருஷ்கர்களை ஸ்ரீரங்கத்திலிருந்து விரட்டி விட்டு ஸ்ரீரங்கத்தை நிர்ப்பயமாக்கி ஸ்ரீரங்கத்தை விட்டதுமுதல் சுற்றித் திரிந்து
கடைசியில் திருப்பதியில் எழுந்தருளியிருந்த ஸ்ரீரங்கநாதனையும் உபய நாச்சிமார்களையும் தன் ஊரான செஞ்சியில்
கொஞ்ச நாள் எழுந்தருளுவித்து ஆராதித்து மறுபடியும் ஸ்ரீரங்கத்தில் தானே பிரதிஷ்டை செய்வித்தான்.
மானிடத்தைக் கவி பாடாத தேசிகன் இந்தப் பெரிய கைங்கர்யம் செய்து வைத்த கொப்பணார்யனைக் கொண்டாடி எழுதின
சுலோகங்கள் இரண்டும் ஸ்ரீரங்கத்தில் விஷ்வக்ஸேனர் ஸந்நிதிக்கு முன்பு பெரியபெருமாள் ஸந்நிதியின்
கீழ்ப்புறத்துச் சுவரில் கல்லில் வெட்டப்பட்டு இன்னும் காணப்படுகின்றன.
முதல் வரி இந்த ச்லோகங்கள் வெட்டப்பட்ட வருஷமான சகாப்தம் 1293 (கி.பி. 1371)ஐக் காட்டுகிறது.
ஸ்வஸ்தி ஸ்ரீ:– (முகில் வண்ணன் இருப்ப) முகில்கள் தவழ கறுத்துத் தோன்றும் தன் சிகரங்களால் உலகத்தையே
மகிழ்வூட்டும் அஞ்ஜனாத்ரியிலிருந்து லக்ஷ்மி பூமி இருவருடன் கூடிய ஸ்ரீரங்கநாதனை செஞ்சிக்கு
எழுந்தருளுவித்துக் கொண்டுவந்து அங்கு சில காலம் ஆராதித்து, பிறகு வில்லாளிகளான துருஷ்கர்களை வென்று,
பெருமாளையும் பிராட்டிமார்களையும் அவர்களுடைய நகரமான ஸ்ரீரங்கத்திலேயே பிரதிஷ்டை செய்து,
கீர்த்திக்கோர் கண்ணாடியான கொப்பணார்யன் மறுபடியும் சிறப்பாகத் திருவாராதனத்தைச் செய்தான்.
விருஷபகிரியிலிருந்து ஸர்வேச்வரனான ஸ்ரீரங்கநாதனை தன் ராஜதானிக்குக் கொண்டு சென்று,
கர்விகளான துருஷ்க ஸேனா வீரர்களை தன் ஸைன்யத்தால் கொல்லுவித்து,
அதன்பின் ஸ்ரீரங்கத்தை கிருதயுகத்தோடு கூடியதாகச் செய்து, ஸ்ரீ பூமிகளோடுகூட பெருமாளையும் அதில்
மறுபடி பிரதிஷ்டை செய்வித்து அம்புயத்தோனான சதுர்முகன்போல நல்லோர் கொண்டாடும் முறையில்
கொப்பணார்யன் என்ற பிராமணன் நம்பெருமாளை ஆராதித்து வருகிறான்.
இந்த சுலோகங்களிலிருந்து திருநாராயணபுரத்திலிருந்து தாயைப் பிரிந்த கன்றைப் போலக் கதறி அநுஸந்தித்த
அபீதிஸ்தவத்தின் பயனாக மனோரதம் நிறைவேறிவிட்டது என்பதை அறிகிறோம்.
பயநிவிருத்தியைப் பிரார்த்திக்கப் பிறந்த இந்தச் சிறிய ஸ்தோத்ரத்திலும் தேசிகனுடைய மற்ற ஸ்தோத்ரங்களில் போல
தத்வஹித புருஷார்த்த விஷயமான ஸூக்ஷ்மமான வேதாந்தார்த்தங்கள் பொதிந்து கொண்டிருப்பதைக் காணலாம்.
கோலத்திருமாமகளோடு கூடிய நாராயணனோ ஸகல ஜகத்காரணமான பரதத்வம் என்பதும் (சுலோகம் 1)
ப்ரஹ்மாதி ஸகல தேவதைகளும் அவனுக்குப் பயந்து தங்கள் தொழில்களைச் செய்து வருகிறார்கள் என்பதும் (சுலோகங்கள் 4, 26),
ஸர்வேச்வரன் ஒருவனை ரக்ஷிக்க விரும்பினால் மற்ற எந்தப் புதுத் தெய்வமும் எதிராக ஒன்றும் செய்ய முடியாதென்பதும் (7),
பிராட்டியைப் புருஷகாரமாகக் கொண்டு பரதத்வமான இவ்விருவரிடமுமே சரணாகதியை அநுஷ்டிக்க வேண்டுமென்பதும் (2),
ஒரே தடவை அனுஷ்டிக்கவேண்டியது முதலான சரணாகதியின் பெருமைகளும் (2,5,15,21),
நாமஸங்கீர்த்தனத்தின் பெருமைகளும் சுருக்கமாகவும் அழகாகவும் காட்டப்படுகின்றன.
இருபத்தோராவது சுலோகத்தில் பிரபத்தி அனுஷ்டிக்கப்படுகிறது.
20, 22, 24 முதலான சுலோகங்களில் இந்த ஸ்தோத்திரத்திற்குக் காரணமான சத்ரு பயத்தைப் போக்க வேண்டுமென்பது
மறுபடியும் மறுபடியும் “ஶமய” “ப்ரஶமய” என்று ப்ரார்த்திக்கப்படுகிறது.
பிரபத்தி ஸகலபல ஸாதநம் என்பது விபீஷணன் பிரஹ்லாதன் காகம் முதலான பலருடைய அனுஷ்டானத்தை எடுப்பதால் குறிப்பிடப் படுகிறது.
இத்துடன் பிரபத்தியை அனுஷ்டிப்பதற்கு பரம் வ்யூஹம் விபவம் என்று ஒரு இட நியமமில்லை.
அர்ச்சாவதாரத்திலேயே சரணாகதி செய்யலாம் என்பது ஸ்ரீரங்கநாதனிடத்தில் சரணம் புகுவதால் காட்ட்ப்படுகிறது.
அர்ச்சாவதாரத்தில் ஸௌலப்யம் அதிகம் என்ற ஏற்றமே உண்டு. மற்றப்படி ஸர்வஜ்ஞத்வ ஸர்வசக்தித்வாதி கல்யாண குணங்கள்
எங்கும் துல்யம் என்பதும் அறியத் தக்கது. ஆனால் அர்ச்சாவதாரத்தில் சக்திக்கு ஏற்றத் தாழ்வு இருப்பதாகத் தோன்றுவதற்கு
ஆச்ரிதர்களின் புண்ய பாபங்களே காரணம். ஆகையால் ஸ்ரீவைகுண்டத்தில் பூமகளும் மண்மகளும் இருபாலும் திகழ வீற்றிருக்கும்
பரந்தாமனிடத்தில் செய்யும் பக்தியை நமக்காக நம் நாட்டிலும் இல்லத்திலும் தோன்றி நாம் இட்டதை ஏற்று மகிழும்
அர்ச்சையிடம் செய்வதே விவேகமுடையார் செய்யத் தக்கது. அர்ச்சாவதார ஸேவையே நமக்குச் சிறந்த உபாயம்.
ஆலயங்களுக்கும் எம்பெருமான்களுக்கும் மற்றும் தேசத்திற்கும் தனக்கும் ஏற்பட்டபோது இந்த அபீதிஸ்தவத்தை அநுஸந்தித்தால்,
ஆபத்து நீங்கி இது அபயத்தை நிச்சயமாய் அளிக்கும் என்பது ஸ்ரீ தேசிகன் சரித்ரத்தால் ப்ரத்யக்ஷஸித்தம்.
கோலத்திரு மா மகள் உடன் கூடிய ஸ்ரீ நாராயணனே சகல ஜகாத் காரண பரத்வம் –
ப்ரஹ்மாதி தேவர்களும் இவன் ஆஜ்ஜைக்கு அஞ்சி கார்யம் செய்வதை முதல் ஸ்லோகத்தாலும் –
சர்வேஸ்வரன் ஒருவரை ரஷிக்க விரும்பினால்
எந்த தெய்வமும் எதிராக ஒன்றும் செய்ய முடியாது என்று ஸ்லோகங்கள் -4-முதல் -26-
பிராட்டியை புருஷகாரமாகக் கொண்டு மிதுனமான இந்த பரத்வ தத்வம் இடம்
சரணாகதி அனுஷ்ட்டிக்க வேண்டும் என்று -7-ஸ்லோகத்தாலும்
ஒரே தடவை செய்ய வேண்டிய சரணாகதியின் பெருமைகளை -2-ஸ்லோகத்தாலும்
திரு நாம சங்கீர்த்தனத்தின் பெருமைகளை -2-5–15–21-ஸ்லோகங்களிலும்
பிரபத்தி -21-ஸ்லோகத்தில் சரணாகதி அனுஷ்ட்டித்தும்
சத்ரு பயங்களை போக்கி அருள -20–22–24-ஸ்லோகங்களில் சமய பிரசமய என்றும் மீண்டும் பிரார்த்திக்கிறார்
-பிரபத்தி சகல பல சாதனம் அன்றோ –
———————————————–
அபீதி ரிஹ யஜ்ஜூஷாம் யதவதீ ரிதா நாம் பயம்
பயாபய விதாயிநோ ஜகதி யந்நி தேச ஸ்திதா
ததே தததி லங்கித த்ருஹண சம்பு சக்ராதிகம்
ரமசா கமதீ மஹே கிமபி ரங்க துர்யம் மஹ–1-
யஜ்ஜுஷாம் — எவருடைய ப்ரீத்யநுக்ரஹருடையவர்க்கு,
இஹ — இங்கேயே,
அபீதி — பயமில்லாமையும்,
யதவதீரிதாநாம் — எவரால் உபேக்ஷிக்கப் பட்டவர்களுக்கு,
பயம் — பயமும் (உண்டோ),
ஜகதி — உலகத்தில்,
பயாபய விதாயிந: — பயத்தையும் அபயத்தையும் கொடுப்பவர்கள்,
யந்நிதேஶே — எவருடைய ஆக்ஞையில்,
ஸ்திதா — இருக்கின்றார்களோ,
அதிலங்கித த்ருஹிண ஶம்பு ஶக்ராதிகம் — ப்ரஹ்மா, ஈச்வரன், இந்திரன் முதலியவர்களைத் தாண்டியதும்,
ரமாஸகம் — பெரியபிராட்டியாருடைய தோழமை கொண்டதும்,
தத் — அந்த,
ஏதத் — இந்த,
கிமபி — சொல்லுக்கு அடங்காததையும்,
ரங்கதுர்யம் — ரங்கதுரத்தை நிர்வஹிக்கும்,
மஹ: — தேஜஸ்ஸை,
அதீமஹே — அத்யயநம் செய்கிறோம் (அநுஸந்திக்கிறோம்)
அபீதி ரிஹ யஜ்ஜூஷாம்ய-எவருடைய ப்ரீத்தி அனுக்ரஹம் உடையோருக்கு இங்கேயே பயம் இல்லாமையும்
தவதீ ரிதா நாம் பயம் -எவரால் உபேக்ஷிக்கப் பட்டவர்களுக்கு பயம் உண்டோ
பயாபய விதாயிநோ-பயத்தையும் அபயத்தையும் கொடுப்பவர்கள்
ஜகதி யந்நி தேச ஸ்திதா-உலகத்தில் எவருடைய ஆஞ்ஜையில் இருக்கின்றார்களோ
ததே தததி லங்கித த்ருஹண சம்பு சக்ராதிகம் -ப்ரஹ்மா ருத்ரன் இந்திரன் முதலியவர்களைத் தாண்டியதும்
ரமசா கமதீ -பெரிய பிராட்டிக்கு தோழமை கொண்டதும்
தத் ஏதத் -அந்த இந்த
மஹே கிமபி ரங்க துர்யம் மஹ-ரங்க துரத்தை நிர்வஹிக்கும் தேஜஸை அத்யயனம் -செய்கிறோம் -அனுசந்திக்கிறோம் –
பெரியதோர் பயத்திலிருந்து விமோசநமாகும்படி அபய ப்ரார்த்தனை செய்வதால் பெருமாளுடைய ரக்ஷணத்தை
“ஸ்வாஶ்ரிதாபயப்ரதம்” என்று துவக்குகிறார். அந்வயவ்ய திரேகங்களாக முதலடியில் லக்ஷணங்கள் ஸாதிக்கிறார்.
எங்களுக்கு அபயமே தான் நியாய்யம். பயத்திற்கு ப்ரஶக்தியே இல்லை.
பெருமாள் க்ருபைக்குப் பாத்திரமான எங்களுக்கு அபீதி நியதமாயிருக்க வேண்டுமே.
பெருமாளுடைய உபேக்ஷைக்கு (அவதீரணத்திற்கு, திரஸ்காரத்திற்கு) விஷயமானோருக்கல்லவா பயம் வரலாம்.
நாம் அவரால் அவதீரிதரல்லவே. பயம் வந்த காரணம் அறிகிலோம். வந்திருக்கும் பயத்தை உடனே போக்கவேணும்.
(யதநுக்ரஹத: ஸந்தி ந ஸந்தி யதுபேக்ஷயா) என்று நித்மான பொருள்கள்கூட எவர் அனுக்ரஹத்தால் இருக்கின்றனவோ,
எவர் உபேக்ஷித்தால் இல்லாமற்போமோ என்று சுகர் ஸாதித்ததை அநுஸரித்தது இந்த முதலடி லக்ஷணம்.
இந்த லக்ஷணத்தை மனதிற் கொண்டே இவரை நாம் ப்ரீதியோடு ஸேவித்தால், நம்மிடம் இவருக்கு அநுக்ரஹம் உண்டாகி
நம் பயம் தீரும் என்று தீர்மானித்து, இவரை ஸேவித்து மல்லுக்கட்டி அபயம் பெறுவோம் என்று முதலிலேயே தேற்றிக் கொள்ளுகிறார்.
அபயஸித்தி என்னும் ப்ரயோஜனத்திற்காக அவனை ஸேவித்து, அவனை ஜுஷ்டனாக (ப்ரீதனாக)ச் செய்வோம்.
பெருமாளுடைய ப்ரீதியுமிருக்கட்டும், அவர்பேக்ஷையும் இல்லாமலிருக்கட்டும். உலகத்தில் பயமுண்டாக்கக்கூடிய
அதிகாரிகளான வாயு, ஸூர்யன் முதலியவர் பயமுண்டாக்கினால், என் செய்வோம் என்று கேட்பீரோ?
அவர்களிடமிருந்து பயத்திற்கு பிரஸக்தி இல்லை.
உலகத்தில் பயாபய காரணர்களான அவர்கள் இவருடைய ஆக்ஞையில் (ப்ரஶாஸநத்தில்) நிற்பவர்.
இதுவும் ஒரு லக்ஷணமாகப் பணிக்கப்படுகிறது. இரண்டாமடியைத் திருப்பி மாற்றி அந்வயிப்பதில் மிக ரஸமுண்டு.
எவருடைய கட்டளைப்படி நடக்கும் பக்தர்கள் உலகத்திற்கு பயத்தையும் அபயத்தையும் கொடுக்கவல்லரோ,
பகவதாஶ்ரிதராய், அவர் கட்டளையில் நிற்பவர் இட்டது சட்டம் உலகத்தில் பயாபயங்கள்.
ப்ரஹ்மநிஷ்டருக்கு தேவர்களும் கெடுதல் செய்யமுடியாது.
தேவர்கள் அவர்களுக்கு பலி ஸமர்ப்பித்துப் பூஜை செய்கிறார்கள் என்று உபநிஷத்துக் கூறுகிறது.
இதனால் வாயு, ஸூர்யன் முதலிய தேவர்களிடமிருந்து பயம் வராதென்று கைமுத்யத்தால் ஸித்தம்..
“எவனுடைய, எவனுடைய, எவனுடைய” என்று மும்முறை படித்துவிட்டு “அந்த இச்சுடர்” என்கிறார்.
“அதை இதைப்போல் பார்த்தார் ரிஷிவாமதேவர்” என்று உபநிஷத்து மூன்று லக்ஷணங்களால் குறித்து, “அது ப்ரஹ்மம்” என்றது போல,
இங்கு “அது இந்த ரங்க ஜ்யோதிஸ்” என்கிறார். ப்ரஹ்மா, ருத்ரன், இந்திரன் முதலானவர்களால் பயம் வந்தாலென்ன செய்கிறது என்றும் பயப்பட வேண்டாம், அது இதையெல்லாம் மீறிய மஹஸ். இது அப்ரமேயமான தேஜஸ். “கிமபி” என்பதற்கு “மாநாதீதம்”, “அப்ரமேயம்” என்று கருத்து.
அந்த தேஜஸ் (ராமன்) அப்ரமேயமே, ஏனென்றால் ஜானகி அதனுடையவளல்லவோ” என்ற மாரீசன் வார்த்தையை நினைத்து,
ரமாஸகமான ஏதோ ஒரு அப்ரமேயமான தேஜஸ் என்கிறார். சரணாகதியான இந்த ஸ்தவத்தில் ப்ரணவாந்தஸ் ஸ்திதமான
ப்ரஹ்ம தேஜஸ்ஸிடம் பரத்தை ஸமர்ப்பிக்கையில், லக்ஷ்மீ ஸஹாயமான தேஜஸ் என்கிறார்.
சரணாகதியைப் பண்ணினதாகச் சொல்லும் இருபத்தோராவது சுலோகத்திலும் ஸ்ரீகாந்தனிடம் பரத்தை ஸமர்ப்பித்தோம் என்கிறார்.
(மகாரஸ்து தயோர்தாஸ:) என்ற ப்ரணவ சுருதியை நினைக்கிறார். எந்த மஹஸ் என்றால், ரங்க துரத்தை (ரங்க பாரத்தை) வஹிக்கும் தேஜஸ்,
ரங்கமென்பது ப்ரணவம். ப்ரணவதுரத்தை நிர்வஹிக்கும் தேஜஸ். ப்ரணவத்திலுள்ள தேஜஸ்ஸைப் பணிக்கையில், “அதீமஹே” என்கிறார்.
ப்ரணவ தேஜஸ்்ஸான ரங்க தேஜஸ் அத்யயனம் செய்ய யோக்யமானது. வேதம் முழுவதும் ப்ரணவத்திற்குள் உள்ளது.
ரங்கதுரத்தை நிர்வஹிக்கும் தேஜஸ் என்பதில் வேறு ரஸமுண்டு.
ரங்கத்தை ரக்ஷித்து அதற்கு அபாயமில்லாமல் நிர்வஹிக்க வேண்டும் என்பதுதான் இந்த ஸ்தவத்திற்குப் பயன்.
ரங்கத்தின் பாரத்தை அவரை வஹிக்க ப்ரார்த்திக்கிறோம் என்றும் ஸூசகம். மற்றொன்றும் வேண்டாம்.
ரங்க துரந்தரன் என்னும் திருநாமம் அந்வர்த்தமாக இருக்க வேணும். “துர்ய” என்பது அச்வத்தையும் சொல்லும்.
“ஹயமஹஸ்” என்று தமக்குப் பிரியமான ஹயக்ரீவ தேஜஸ்ஸையும் சேர்த்து அபிந்நமாக நினைக்கிறார்.
யத் அனுக்ரஹ சந்தி ந சந்தி யத் உபேஷ்யா–ஸ்ரீ சுகர் / ப்ரஹ்ம நிஷ்டர்க்கு தேவர்களாலும் கெடுதல் செய்ய முடியாதே
கிமபி -அப்ரமேய தேஜஸ் என்றபடி / மகாரஸ்து -தயோர் தாஸ-பிரணவ ஸ்ருதி /
ரங்கம் பிரணவம் -துரத்தை வஹிக்கும் –துர்ய-ஹயமவுஸ் -ஹயக்ரீவ தேஜஸ் சேர்த்து என்றுமாம்-
தஞ்சம் என வருவார்க்குத் தந்திடுவான் அஞ்சாமை
தனைச் சேரா தகல்வோர்க்குத் தந்திடுவான் அச்சத்தை
அஞ்சுதலைத் தந்து நம்மை அலைக்கழிப்போர் எல்லாரும்
அஞ்சாமை நமக்கு அளிக்கும் அன்பர்களும் அவன் அடிமை
செஞ்சடையோன் நான்முகத்தோன் தேவர் கோன் முதல்வோரும்
நினைப்பரிய மேலிடத்தோன் திரு மகளார் உடை சேர
விஞ்சுகிற ஒளியாக விரி புகல் சேர் அரங்கத்தில்
விளங்குகிற அத்தேவை விரித்துரைத்து வாழ்த்துவமே –
——————————————————-
தயா சிசிரிதாசயா மனசி மே சதா ஜாக்ருயு
ஸ்ரியா அத்யுதிஷ வக்ஷஸே ஸ்ரித மருத் வ்ருதா சைகதா
ஜகத்துரித கஸ்மரா ஜலதி டிம்ப டம்பஸ் ப்ருச
ஸக்ருத் ப்ரணத ரக்ஷண ப்ரதித சம்வித சம்வித –2-
தயா – க்ருபையால்,
ஶிஶிரித – குளிர்ந்த,
ஆஶயா – திருவுள்ளத்தையுடையவர் மயமாயும்,
ஶ்ரியா – பிராட்டியால் அத்யுஷித – வாஸம் செய்யப்படும்,
வக்ஷஸ: – திருமார்பு மயமாயும்,
ஶ்ரித ம்ருத்வ்ருதாஸைகதா – காவேரி மணலில் சயனித்திருப்பவர்மயமாயும்,
ஜகத் – உலகத்தின்,
துரித – பாபத்தையெல்லாம்,
கஸ்மரா: – விழுங்கிவிடுபவர் மயமாயும்,
ஜலதிடிம்ப டம்ப ஸ்ப்ருஶ: – குட்டி ஸமுத்ரம் போன்றவர் மயமாயும்,
ஸக்ருத் – ஒரு தடவை,
ப்ரணத – சரணமடைந்தவரையும்,
ரக்ஷண ப்ரதிதஸம்வித: – ரக்ஷிப்பதாகப் பிரஸித்தமாக ப்ரதிக்ஞை செய்தவர் விஷயமாயும்,
ஸம்வித: – புத்திவ்ருத்திகள்,
மே மநஸி – என்னுடைய மனதில்,
ஸதா – எப்பொழுதும்,
ஜாக்ருயு: – ஜாகரூகமாகக் குடி கொண்டிருக்க வேண்டும்.
தயா சிசிரிதாசயா மனசி-கிருபையால் குளிர்ந்த திரு உள்ளத்தை யுடையவராயும்
ஸ்ரியா அத்யுதிஷ வக்ஷஸே -அகலகில்லேன் இறையும் என்று பிராட்டி நித்ய வாசம் செய்யும் திரு மார்பு யுடையவனாய்
ஸ்ரித மருத் வ்ருதா சைகதா-காவேரி மணல் மேட்டுத் திட்டில் சயனித்து இருந்து –
விபீஷணர் சரணாகதி கடல் கரை மணலில் நடந்தது நினைப்பூட்டி இருப்பவராயும்
ஜகத்துரித கஸ்மரா– ஜகத்தில் பாபங்களை எல்லாம் விழுங்கி விடுபராயும் –
ஜலதி டிம்ப டம்பஸ் ப்ருச— குட்டி சமுத்திரம் போன்றவராயும் -பச்சை மா கடல் போல் மேனி
ஸக்ருத் ப்ரணத ரக்ஷண ப்ரதித சம்வித சம்வித-ஒரே தடவை சரணம் அடைந்தவர்களையும் ரக்ஷிப்பதாக ப்ரதிஜ்ஜை செய்து
அருளுபவர் விஷயமாக புத்தி விருத்திகள்
மே சதா ஜாக்ருயு-என்னுடைய மனசில் ஜாக ரூகமாகக் குடி கொண்டு அருள வேணும் –
இந்த சரணாகதியை மிகவும் கெட்டியாய்ச் செய்யவேணும். இந்த சரணாகதிக்குப் பலம் உடனே தப்பாமல் கிடைக்கவேணும்.
ஸமுத்ரக்கரையில் புளிநத்தில் (மணலில்) நடந்த விபீஷண சரணாகதி அவஸரத்தை நினைத்து,
அத்தொடொக்கப் பெருமாளுடைய ரங்கசயநத்திலுள்ள அம்சங்களை மனதில் பாவனை செய்கிறார்.
அங்கே கடற்கரை மணல், இங்கே ஸமுத்ர பத்நியாகிய காவேரியின் மணலில் சயநம்.
பதியாகிய ஸமுத்ரத்தைக் காட்டிலும் பத்நிகளான யமுனை போன்ற புண்யநதிகளுக்கு சுத்தி அதிகம்.
“தூயபெருநீர் யமுனைத் துறைவனை” “மருத் வ்ருதா” என்று காவேரிக்கு சுருதியில் திருநாமம்.
வேதப் பிரஸித்தமான புண்யநதி என்று வ்யஞ்ஜநம். ப்ரணவப் பெருமாள் வேதப் பிரஸித்த நதியில் சயனித்தார்.
கடற்கரையில் நீர்க்கடலுக்கு எதிரில் ஓர் நீல தேஜோ வெள்ளமாய் பெருமாள் ப்ரதிஶயனம் செய்ததை நினைக்கிறார்.
இங்கே அரங்கன் ஓர் குட்டிக் கடலாகப் பிரகாசிக்கிறார். “பச்சைமா கடல்போல் மேனி” என்று இங்கே ஒருவாறு அனுபவம்.
(அர்ணவதர்ணகம்) என்றார் ஸ்ரீ பட்டர். ஆச்ரிதர்களின் பாபக்கடலை அப்படியே உறிஞ்சி விடுவதாக ஸங்கல்பம்.
உலகத்தின் பாபக்கடலுக்கு எதிரியாக இக்குட்டிக் கடலின் சயனம்.
(ஸக்ருதேவ ப்ரபந்நாய ………… அபயம் ஸர்வபூதப்யோததாமி ஏதத் வ்ரதம் மம) என்று ப்ரதிக்ஞை செய்த அவஸரத்தையும் காட்டுகிறார்.
கடற்கரையில் எல்லோரும் பார்க்கும்படி பிராட்டியின் ஸந்நிதாநம் இல்லை. பிராட்டி அக்கரையிலும் பெருமாள் இக்கரையிலுமாக இருந்த அவஸரம்.
ஆனால பிரிந்திருந்த பிராட்டியைச் சேர்த்து வைப்பதற்காகவே தம்மை அங்கீகரிக்கும்படி விபீஷணன் பிரார்த்தித்தான் என்றும் சொல்லலாம்.
இருவரையும் சேர்த்துவைத்து இருவருயிரையும் காப்பாற்றி, தாமும் பிழைக்க அங்கே ஆஶ்ரயணம்.
“ப்ரதீயதாம் தாஶரதாய மைதிலீ” என்று தம்பதிகளைக் கூட்டவே அவர் மநோரதம். இங்கு இருவர் திருமேனியையும் காப்பாற்ற சரணாகதி.
அங்கும் அது உண்டு. ஸ்ரீ உறையும் திருமார்பை உடையவர். “பூமன்னும் மாது உறை மார்பன்”.
பிராட்டி திருமார்பை ஆஶ்ரயித்திருப்பதால் தான் ஹ்ருதயம் தயையினால் குளிர்ந்திருக்கிறது.
பெருமாள் திருவுள்ளம் சீதளமானதுதான். நாம்தான் அதன் பிரயோஜனத்தை அடையாமல், அந்த்த் தயையைத் தகைகிறோம்.
“ஸம்வித்” என்னும் புத்திகள் என் மனதில் தூங்காமல் விழித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை.
பெருமாள் தூங்குவது போலிருந்தாலும் அவர் விஷயமான என்னுடைய பாவனைகள் தூங்காமல் ஸதா விழித்திருக்க வேண்டும்.
பெருமாளுக்கு விசேஷணங்களாகக் கூறப்பட்டதெல்லாம், நம்முடைய பாவனையில் ஆகாரங்களாகக் கூடி, ஸமாநாதிகரணமாகின்றன.
விஶிஷ்டமான ஸம்வித்துகளே. நிர்விஶேஷ நிராகார புத்தி யல்ல. இந்த விசேஷணங்களையுடைய பெருமாளால் உபரக்தமான புத்திகள்.
திருக்காவேரியில் பள்ளிகொண்ட பெருமாள் விஷயமான பாவனை எனக்கு எப்போதும் இருக்க வேண்டும் என்று ப்ரார்த்திப்பதால்,
பாவனைக்கு விஷயமான பெருமாள் திருமேனியும் விசேஷணங்களும் நித்யமாய் நிரபாயமாயிருக்க வேண்டும் என்று முக்கியக் கருத்து ஸூசிதமாகிறது.
இந்த மநோரதத்தைப் பூர்த்தி செய்ய பெருமாள் க்ருபை செய்யவேண்டும் என்று ஆசையை விளக்குகிறார்.
காயத்ரியில் சுபமான புத்தி வ்ருத்திகளின் ப்ரசோதநத்தின் ப்ரார்த்தனை போல் இங்கும் முன் ச்லோகத்தில் “அதீமஹே” என்று பேசி,
அடுத்தாற்போல் அங்கு போல இங்கே **தீகளாகிய ஸம்வித்துக்களின் ஜாகரணத்தையும் பிரார்த்திக்கிறார்.
காயத்ரீ ஜபம் எப்படி நித்யமோ, அப்படியே ஸ்ரீரங்கஸ்ரீயின் வ்ருத்தியின் பிரார்த்தனையும் நித்யம்.
அதற்கு லோபம் வருவதை ஸஹிக்க மாட்டோமல்லவா?
கருணை தனின் பெருக்கு எடுப்பால் குளிர்ந்து இருக்கும் உள்ளத்துடன்
திரு மகளே அகலாது திகழ்ந்து உறையும் மார்புடனும்
பிரிந்தோடும் காவேரியின் மணல் திட்டில் கிடந்தது அருளி
பார் வாழும் மக்கள் தனின் பாபங்களை ஒழிப்பவனாய்
ஒரு முறையே அடி பணிய உற்றவரைக் காப்பது என
உலகு அறிய வாக்கதனை உறுதி செய்யும் அரங்கன் தன்
திரு மேனித் தோற்றங்கள் திரளாக எழுந்து எழுந்து
நிறைந்து என் தன் நெஞ்சும் உள்ளே நிலைத்திடட்டும் நித்யமே
——————————————————–
சரணாகதி பூர்ணமாயின் பலிக்குமென்பது திண்ணம்.
பெருமாள் திருமேனியின் க்ஷேமத்திற்காகச் செய்யும் சரணாகதி ரூபமான அர்ச்சனை ஸ்துதி
குறைவில்லாமல் பூர்ணமாயிருக்க வேண்டுமே என்று அபாரமான கவலை.
எங்கே குறைவு வந்து சரணாகதி அபூர்ணமாகி, கோரிய பலம் தவறிவிடுமோ என்று பயம்.
பெருமாளுடைய தயாதி கல்யாண குணங்களைப் பூர்ணமாய் நெஞ்சில் தரிக்க வேணும்.
என் அல்ப விஷயமான மதி எங்கே? பெருமாளின் எண்ணிறந்த கல்யாண குணங்களெங்கே?
பெருமாளுடைய தயை என்னும் குணம் என் புத்தியில் நிரம்பியிருக்க வேண்டும் என்கிறார்.
அவர் தயை எல்லையற்றது. என் புத்தி பரிமிதமானது. அதுதான் சூந்யமாக இருக்கிறதோ?
அவ்விதமிருந்தால் அதில் பெருமாள் தயை கொஞ்சமேனும் புகுரலாம். புத்தி மிதம்;
அதில் மோஹத்திற்குக் கணக்கில்லை என்கிறார்.
மிக்க மோஹத்தால் நிரம்பின சிறு புத்தியில் பெருமாள் அளவற்ற பெரும் குணம் புகுந்து நிற்க இடமில்லையே.
நிரந்தரமாகப் பெருமாளைப் பஜிக்கப் பெறவில்லை. மோஹ பஜநத்திற்குக் குறைவில்லை.
அதிகம் மோஹத்தால் மூடப்பட்டிருப்பதற்குக் காரணம் என்ன? குணம். என்ன குணம்?
நல்ல குணமாயின் பெருமாள் குணம் குடியேற விரோதமில்லை. அவர் குணத்திற்கும் என் குணத்திற்கும் நாமம் மட்டும்தான் ஒன்று.
என் தோஷத்திற்கே என் குணம் என்று பெயர். முக்குணப் பிரகிருதி என் குணம்.
“தோஷக்ருஹீதகுணாம்” என்று ச்ருதி கீதை தொடக்கத்தில் சுகர் “அஜை” என்னும் பிரகிருதிக்குத் த்ரிகுணம் என்று பெயர் மட்டுமே;
தோஷத்திற்கே குணம் என்று பெயர் க்ரஹிக்கப்படுகிறது என்று வேடிக்கையாய்க் காட்டினார்.
குணத்தால் என் உடலம், வாக்கு, மனஸ் எல்லாம் விசித்திரமாய்க் கட்டப்பட்டு, ஒன்றோடொன்று விசித்திரமாய்க் காடு பாய்கிறது.
ய தத்ய மித புத்தி நா பஹுள மோஹ பாஜா மயா
குண க்ரதித காய வாங்மனச வ்ருத்தி வை சித்ர்யத
அதர்க்கித ஹிதாஹித க்ரம விசேஷ மார்ப்யதே
தத்ப் யுசிதமர்ச்சனம் பரிக்ருஹாண ரங்கேஸ்வர –3-
ரங்கேஶ்வர — ஸ்ரீரங்கராஜரே! ,
அத்ய — இன்று,
குண — முக்குணங்களால்,
க்ரதித –வரிந்து கட்டப் பட்டிருக்கும்,
காய வாங் மனஸ — தேஹம், வாக்கு, மனசு,
வ்ருத்தி — இவற்றின் போக்குகளின்,
வைசித்ர்யத: — வைசித்ர்யத்தால்,
பஹுள ரோஹ பாஜா — எத்தனையோ மோஹத்தை அடைந்த,
மிதபுத்திநா — சிறிய புத்தியையுடைய,
மயா — என்னால்,
அதர்க்கித ஹிதாஹித க்ரம விசேஷம் — எது நல்ல வழி எது தவறானது என்று ஊஹித்துத் தெரிந்து கொள்ளாமல்,
யத் — எது (எந்த இந்தத் துதி),
ஆரப்யதே — ஆரம்பிக்கப் படுகிறதோ,
தத் அபி — அதையும்,
உசிதம் — தகுதியான,
அர்ச்சனம் –பூஜையாக,
பரிக்ருஹாண .. ஏற்றுக் கொள்ள வேணும்.
மித புத்தி நா பஹுள மோஹ பாஜா மயா -சிறிய புத்தியை யுடைய என்னால் எத்தனையோ மோஹத்தை அடைந்த
குண க்ரதித காய வாங்மனச வ்ருத்தி வை சித்ர்யத-முக்குணங்களால் வரிந்து கட்டப் பட்டு இருக்கும்-தோஷ க்ருஹீத குணம் –
தேஹம் வாக்கு மனஸ் இவற்றின் போக்குகளின் வைசித்ர்யத்தால்
அதர்க்கித ஹிதாஹித க்ரம விசேஷ மார்ப்யதே-எது நல்ல வழி எது தவறானது என்று ஊஹித்து
தெரிந்து கொள்ளாமல் ஆரம்பிக்கப் படுகிறதோ
ய தத்ய– தத்ப் யுசிதமர்ச்சனம் பரிக்ருஹாண ரங்கேஸ்வர–எந்த இந்த ஸ்துதி ஆரம்பிக்கப் படுகிறதோ
அதை தகுதியான பூஜையாக ஏற்றுக் கொண்டு அருள வேணும் -அர்ச்சக பராதீனராக கோயில் கொண்டு அருளும் ஸ்ரீ ரெங்கேஸ்வரா –
எவன் அவன் என்று ஸ்ரீ ரெங்கேஸ்வரனின் பெருமையாலும் –எது அது
என்று பரிஹாஸமாகத் தன் தாழ்மையைக் காட்டி அருளுகிறார் –
முன் ச்லோகத்தில் ப்ரார்த்தித்தபடி பெருமாள் சுப விக்ரஹ குணாதிகள் புத்தியில் எப்படிப் புகுந்து நிரம்பும்?
இத்தனை விக்நங்கள் உளவே. செய்யும் சரணாகதியை ஓர் பாமாலையால் ஸமர்ப்பிக்க உத்தேசம்.
பூமாலை போன்றதான பாமாலையாயிருப்பது உசிதம். குணமென்னும் நாரில் விசித்திரமாய்த் தொடுக்கப்பட்ட
புஷ்ப மாலை போன்ற சப்த குணங்களாலும் அர்த்த குணங்களாலும் வைசித்ர்யம் என்னும் அலங்காரங்களாலும்
பல சித்ரங்களாலும் க்ரதிதமான பாமாலையைக் கொண்டு தேவரீரை அர்ச்சிப்பது உசிதம்.
“குணக்ரதித” என்பதாலும், “வாங் மநோவ்ருத்தி வைசித்ர்யத:” என்றதாலும் அர்ச்சநம் இப்படி இருப்பதல்லவோ உசிதம்
என்று வ்யஞ்ஜநம் செய்கிறார். அதற்கு விரோதமாக என் சரீரம், வாக்கு, மனம் எல்லாம் முக்குணங்களாலும்
விந்தையாகக் கட்டப்பட்டு எனக்கு ஸ்வாதீனமேயில்லாமல் இருக்கிறதே என்கிறார்.
தேஹமும் அசுசி, வாக்கும் மனமும் சுத்தமல்ல, இப்படி இருந்தும் “எது ஹிதம் உசிதம், எது அஹிதம், அநுசிதம்” என்று
ஆலோசிக்காமலே பயஸம்ப்ரமத்தினாலே க்ரம விசேஷமெல்லாம் தடுமாறி ஏதோ ப்ரார்த்தநா ஸ்துதி பிதற்ற ஆரம்பிக்கப் படுகிறது.
அதை உசிதமான அர்ச்சனமாகக் கொள்ள வேணும்.
“ஆரம்பிக்கப் படுகிறது” என்பதால் பயபாரவஶ்யத்தால் பலாத்கரிக்கப்பட்டு அதிஸம்ப்ரமத்துடன் ஆரம்பிக்கப் படுவதை வ்யஞ்ஜநம் செய்கிறார்.
“ரங்கேஶ்வர” என்பதாலும், “உசிதம் அர்ச்சநம்” என்பதாலும் “அர்ச்சக — பராதீநராக”க் கோயிலில் எழுந்தருளியிருக்கும்
கருணையை அத்துதி விஷயத்திலும் ஆவிஷ்கரிக்க வேண்டும் என்று வ்யஞ்ஜனம்.
இங்கே காவ்யக்ரதநத்திற்கும் ஒட்டும்படி, “குண, க்ரதித, காய, வாக், வ்ருத்தி, வைசித்ர்யம், உசித” சப்தங்களின்
பிரயோகத்தின் அழகை காவ்யரஸிகர் ரஸிக்கவேணும். “ரீதிராத்மா காவ்யஸ்ய” — காயம் என்பது ரீதி.
வ்ருத்தி என்பது “வ்ருத்திபிர் பஹுவிதாபிராஶ்ரிதா” என்பதுபோல காவ்ய வ்ருத்தி.
“எவன், எவன், அவன், அவன்” என்று பெரிய பெருமாளின் ஏற்றத்திற்கேற்ற லக்ஷணங்களைக் காட்டி,
தன் ஸ்தோத்ரத்திற்கும், “எது, அது” என்று பரிஹாஸமாய்த் தாழ்மையைக் காட்ட, லக்ஷணம் அமைக்கிறார்.
அப்பெருமானுக்கு இத்துதி. “ரங்கேஶ்வர” — எத்தனையோ அரும்பெரும் காவ்யங்கள் உம் முன்னிலையில்
அரங்கேற்றப் பட்டிருக்கின்றன. இது ஒரு த்ருஷ்டி பரிஹாரம்
அறிவுதனில் குறையுடையேன் அளவில்லா மோகத்தில்
ஆழ்ந்தவனாய் முக்குண வன் கயிற்றினால் கட்டுண்ட
பருவுடலும் வாய்ச சொல்லும் மனம் தனையும் உடையவனாய்
புரிகின்ற செயல் எல்லாம் பல பல வாய் பயனிலவாய்
இருக்கின்ற இந்நிலையில் இது நன்று இது தீது
என்று அறியா அடியேன் இத்துதியைத் தொடங்குகிறேன்
கருணையுடன் இதனையுமே தகுந்ததொரு வழி பாடாய்க்
கொள்வாயே அரங்கத்தில் குடி கொண்ட பெரும் தேவே –
——————————————————
பயம், பயம் என்றும், மஹத்தான பயம் என்றும், வஜ்ரம் என்றும், இடி மேல் விழுவதாக பயமுறுத்துவது போலவும்,
மிக்க பயத்தை ஆங்காங்கு பேசிக்கொண்டு வருகிறார்.
“என் விக்ரஹத்திற்கு வரும் அபாயத்தை விலக்கிக் கொள்ள வேறு யாரையாவது ப்ரார்த்திக்கலாகாதா?”
“ஸாத்யமில்லை. நானும் மற்றொருவரை யாசிக்க மாட்டேன். உம்மைத்தவிர வேறு பயநிவர்த்தகருமில்லை.
உலகமே உம்மிடமிருந்து பயந்து நடக்கிறது.
பயத்தைக் கொடுக்கக் கூடிய வாயு முதலிய தேவர்களும் ம்ருத்யு வென்னும் தேவனும் உமக்கு நடுங்கி நடக்கிறார்கள்.
தைத்திரீய சுருதியில் ஆநந்தமயப் பொருளின் ஆநந்தத்தைப் பற்றி ஆநந்தமீமாம்ஸை செய்யப் போகும் அவஸரத்தில், அ
தற்கு அடுத்த முன்வாக்யம் “இவரிடமிருந்து பயத்தால் வாயு வீசுகிறான். (உலகத்தைப் பரிசுத்தமாக்குகிறான்.)
இவரிடமிருந்து பயத்தால் சூரியன் உதிக்கிறான். இவரிடமிருந்து பயத்தால் அக்நியும் இந்திரனும் ம்ருத்யுவும்
(நால்வரோடு) ஐந்தாவதாக ஓடுகிறார்கள் ” என்றது.
பெருமாள் ரங்கத்தில் “ரதிம்கத:” “ஆநந்தபூர்ணர்” என்பதால் ரங்கத்திற்கு “ரங்கம்” என்று பெயர்.
(ப்ரஹ்மண கோஶோஸி) என்று ப்ரணவம் ப்ரஹ்மத்திற்குக் கோசம் (பெட்டி) என்றது சுருதி.
ப்ரணவ – விமாந – கோசத்தில் காணப்படும் ப்ரஹ்மம் இப்பெருமாள்.
பயவிஷயமான தைத்திரீய சுருதியை இப்பெருமாள் விஷயமாகக் கொள்கிறார்.
கடசுருதியில் “எந்த ஜகத்ப்ராணனிடமிருந்து இவ்வுலகமெல்லாம் ஓங்கப்பட்ட பயங்கரமான வஜ்ரத்தினிடமிருந்து
பயப்படுவது போல் நடுங்கி நடக்கிறதோ, அந்த இப்பிராணனை அறிந்தவர் அமிருதராவர்.
இவர் பயத்தால் அக்நி தன் வ்யாபாரமான தபநத்தைச் செய்கிறான். பயத்தால் சூரியன் ஜ்வலிக்கிறான்.
பயத்தால் இந்திரனும், வாயுவும், நால்வரோடு ஐந்தாமவனாக ம்ருத்யுவும் ஓடித் திரிகிறார்கள்.” என்று உள்ளது.
இந்த சுலோகத்தில் முன் பாதியில் தைத்திரீய சுருதியையும்,
பின்பாதியில் கடசுருதியின் பின்வாக்யத்தையும்,
முன்பாதியில் கடசுருதியின் முன்வாக்யத்தையும் ஸ்வல்ப வேறுபாட்டோடு அமைக்கிறார்.
சுருதியில் பயம் பயம் என்று திருப்பித் திருப்பிப் பேசுவது போல, இத்துதியிலும் இம்மஹத்தான பயாவஸரத்தில் பேசுகிறார்.
“கம்பநாத்” என்னும் சூத்திரத்தில்
“அங்குஷ்டமாத்ரமாக ஹ்ருதய குஹையில் இருக்கும் பெருமாளுக்கு உலக மெல்லாம் நடுங்கி நடக்கிறது” என்று அழகாக ஸூசிப்பித்தார்.
அப்படி உலகம் நடுங்கி நடப்பது ப்ரஹ்மத்திற்கு நிச்சயமான அடையாளம் (லிங்கம்) என்றார்.
“எனக்கல்லவோ அது அடையாளம்” என்று ப்ரஹ்லாதாழ்வானை ஹிரண்யன் வெருட்டினான்.
“எவன் கோபிக்கும்போது மூன்று லோகங்களும் அவற்றின் ஈச்வரர்களும் நடுங்குகிறார்களோ (கம்பந்தே)
அந்த என்னுடைய ஆஜ்ஞையை எந்த பலத்தைக்கொண்டு நீ மீறினாய்?” என்று கோபத்தோடு கேட்டான்.
அம்மதயானைக்கு நீர் ஸிம்ஹமானீர்.” சுருதியின் பேச்சுத்தான் ஸத்யம். அஸுரன் பேச்சு ஸத்யமாகுமோ?
சுருதி ஸூத்ரங்களின் பேச்சை ந்ருஸிம்ஹப் பெருமாள் ஸத்யமாக்கினார். எமக்கு வந்திடும் பயத்தை நீர்தானே நிவர்த்திக்க வேணும்!
மருத்தரணி பாவக த்ரிதச நாத காலாதய
ஸ்வ க்ருத்ய மதி குர்வதே த்வத பரா ததோ பிப்யத
மஹத் கிமபி வஜ்ர முத்ய தமி வேத யச்ச்ரூயதே
தரத்யநக தத் பயம் ய இஹ தாவக ஸ்தாவக –4-
அநக — மாசற்ற பிரபுவே!, மருத், தரணி, பாவக, த்ரிதஶநாத, காலாதய: — வாயு, சூர்யன், அக்னி, இந்திரன், யமன் முதலியவர்கள், த்வரபராதத: — உமக்கு அபராதிகள் ஆகிவிடுவோமோ என்று, பிப்யத — பயந்து, ஸ்வக்ருத்யம் — தங்கள் வ்யாபாரத்தை, அதிகுர்வதே — நடத்துகிறார்கள், உத்யதம் — ஓங்கின, மஹத் — பெரிய, கிமபி வஜ்ரமிவ — வர்ணிக்க முடியாத அத்தனை கொடிய வஜ்ராயுதம் போன்ற, பயம் இதி — பயம் என்று, யத்ஶ்ரூயதே — எது சுருதியில் கேட்கப் படுகிறதோ, தத் பயம் — அந்த பயத்தை, ய: – எவன், இஹ — இங்கே, தாவக: — உன்னைத் துதிப்பவனோ, தாதி — (அவன்) தாண்டுகிறான்.
மருத்தரணி பாவக த்ரிதச நாத காலாதய –-வாயு சூர்யன் அக்னி இந்திரன் யமன் முதலியவர்கள் –
ஸ்வ க்ருத்ய மதி குர்வதே த்வத பரா ததோ பிப்யத-உமக்கு அபராதிகள் ஆகி விடுமோ என்று பயந்து
தங்கள் வியாபாரத்தை நடத்துகிறார்கள் –
மஹத் கிமபி வஜ்ர முத்ய தமி வேத யச்ச்ரூயதே-பெரிய வர்ணிக்க முடியாத அத்தனை கொடிய
வஜ்ராயுதம் போன்ற பயம் என்று எது சுருதியில் கேட்கப் படுகிறதோ
தரத்யநக தத் பயம் ய இஹ தாவக ஸ்தாவக -அந்த பயத்தை எவன் இங்கு துதிப்பவனோ அவன் தாண்டுகிறான்
உம்மைத் தவிர வேறு பய நிவர்த்தகர் இல்லையே -உம்மை துதிப்பவனே பயத்தை தாண்டுகிறான் –
காலனுக்கு காலனாகிய கால காலன் நீர்
தரதி சோகம் ஆத்மவித் -அதஸோ அபயம் காதோ பவதி –
அநக-ஸ்துதிக்கும் நான் குற்றம் உள்ளவனாகவும் என் ஸ்துதியும் குற்றமாய் இருந்தாலும் போக்க வல்லவன் நீ அன்றோ –
காற்றைப்பற்றி சுருதி எடுத்த “வாத:”, “வாயு” என்ற சப்தங்களை எடுக்காமல் “மருத்” என்று முதலில் வைத்ததில் ரஸமுண்டு.
“மருத்” என்பது தேவர்களைப் பொதுவில் சொல்லும். “தேவர்” என்று பொதுப் பொருளையும் கொள்ள வேணும்.
தேவர்களான இவர்களும், நீர் யுத்தத்தில் ஜாதரோஷரான போது நடுங்குவாரே; விரோதிகளான அஸுரர்கள் நடுங்க வேண்டாவோ ?
(ராமாயண ஸங்க்ஷேபச் சுலோகத்தை நினைக்க வேண்டும்)
ஸூர்யனை “தரணி” என்பார். ஸம்ஸார பயத்தைத் தாண்ட அவருக்கு வேறு தரணி ( = ஓடம்) வேண்டும்.
தன் பயத்திற்குத் தான் தரணியாகார். நீர்தான் எல்லோருக்கும் பயதரணத்திற்கு (பயத்தைத் தாண்ட) தரணி.
உம்மைத் துதிப்பவன் பயத்தைத் தரணம் செய்வான் என்று இங்கே கடைசி அடியில் பேசுகிறார்.
“பாவகன்” என்றால் பரிசுத்தி செய்பவன். “பாவநம்:” பரிசுத்தி செய்வது.
இவனையும் பெருமாள் பாவநம் செய்து அபஹதபாப்மாவாக்க வேணும். இந்த ரஸங்களை வ்யஞ்ஜிப்பிக்கச் சுருதி பதங்களை மாற்றினது.
“இந்திரன்” என்று சுருதி பதம். எல்லோருக்கும் மேற்பட்ட ஈச்வரனைச் சொல்லும் சப்த சக்தியைக் குறைத்து ஒடித்து அவனுக்கு அப்பெயர்.
பெருமாளுக்குத்தான் அப்பெயர் தகும். அதுபோலவே, இங்கே அவன் விஷயத்தில் “த்ரிதஶநாதன்” என்று பேசுகிறார்.
இதுவும் சப்த சக்தியைக் குறைத்துப் பேச்சு. “காலன்” என்பதால் “காலனுக்கும் காலனாகிய காலகாலன் நீர்” என்பது வ்யஞ்ஜநம்.
தாங்கள் செய்யவேண்டிய தங்கள் அதிகாரக்ருத்யத்தைச் செய்கிறார்கள்.
எங்கே உம் ஆஜ்ஞையை மீறும் அபராதம் வருமோ என்று நடுங்கிச் செய்கிறார்கள்.
இதில் மிக்க ரஸமுண்டு. அத்வைதாசிரியராகிய ஸுரேச்வரர் இந்த ரஸத்தை தைத்திரீயோபநிஷத்தில் ஸூசிப்பித்தார்.
ஸூரேச்வரருடைய நைஷ்கர்ம்யஸித்தியை ஸ்வாமி தத்வடீகையில் உதாஹரித்தார்.
ஆநந்த மயனுடைய எல்லையற்ற ஆநந்தத்தைப் பேசுவதற்குமுன் க்ஷணத்தில் வாயு முதலிய தேவர்கள் பயந்து நடுங்கி
ஸ்வ க்ருத்யத்தைச் செய்கிறார்கள் என்று சொல்லி
ஆநந்த மயனுடைய ஆநந்தத்திற்கு எல்லையில்லை என்று சொல்லி முடிக்கையில், இந்த ப்ரஹ்மத்தின் எல்லையற்ற
ஆநந்தத் தன்மையை அறிந்தவர் ஒன்றுக்கும் பயப்படார்கள் என்று முடித்தது.
இப்படி ஆநந்தமயமானது ப்ரஹ்மம் என்று அறிந்தவர் பயப்படாமல் ஸந்தோஷமாய், ஆநந்தமாய், ஸ்வயம்ப்ரயோஜநமாய்,
தம் கைங்கர்யங்களைச் செய்யலாமே என்று சுருதியின் உட்கருத்து. இதை ஸுரேச்வரர் ஸூசிப்பித்தார்.
ஸ்வாமிக்கும் இந்த ரஸம் திருவுள்ளம். “ஸ்வக்ருத்யத்தை அதிகரிப்பதை பயப்பட்டுக்கொண்டே செய்கிறார்கள்.
ஆநந்தப்பட்டுக்கொண்டே செய்யலாமே! பயநிவர்த்தமும் ஆநந்தமயமுமான ப்ரஹ்மத்தினிடமிருந்து ஏன் பயப்பட வேண்டும்?”
என்று பா(भा)வம். அடுத்த சுலோகத்திலும் உம்முடைய ஆநந்தத் தன்மை என்னும் ஓர் வர்ணிக்கமுடியாத குணத்தை
அறிந்தவனுக்கு ஒரு பயமும் இல்லை என்று இதைக் காட்டுகிறார். “கிமபி” என்பதை மட்டும் இங்கே மூன்றாமடியால் சேர்த்தார்.
இப்போது நேர்ந்திருக்கும் பயம் வாக்குக்கும் நினைப்புக்கும் சக்யமல்லாதது என்கிறார். எம் தலையில் இடி விழுந்தாலென்ன?
அதனால் எமக்குத்தானே அபாயம் வரும்; எம்முயிரான உமக்கல்லவோ அபாயம் இப்போது ப்ரஸக்தம்.
எம்மை நீர் ரக்ஷிப்பீர். எமக்கு எம் ரக்ஷணவிஷயமான பயமில்லை. உம் திருமேனியை ரக்ஷிப்பாரார்?
உம்மைத் தவிர வேறு ரக்ஷகர் இக்காசினியில் இல்லையே? “சுருதி நம் காதில் ஓதும் பயம்” என்கிறார்.
சுருதி ஓதக் கேட்டிருக்கிறோம். இப்போது மஹத்தான பயத்தை நேரில் அனுபவிக்கிறோம்.
உம்மைத் துதிப்பவன் பயங்களைத் தாண்டுவான். கோர ஸம்ஸார பயத்தைத் தாண்டுவான் என்று வேதம் ஓதுகிறது.
“தரதி ஶோகம் ஆத்மவித்” “அத ஸோऽபயம் கதோ பவதி” —
| – நானும் உம்மைத் துதித்து இப்பெரும் பயத்தைத் தாண்ட விரும்புகிறேன்.
அநக — மாசறு சோதியே! துதிக்கும் நான் தேஹவானாயிருந்தால் என்ன?
என் துதி குற்றமுடையதானாலென்ன? உன் அநகத்வம் போதாதோ? என்று திருவுள்ளம்
ஓங்கியதோர் வச்சிரம் போல் உயர்ந்த உன் தன் தண்டனைக்கு
உறும் என்னும் அச்சத்தால் வளியோனும் கதிரவனும்
வீங்கெரியும் இந்திரனும் வான் காலன் முதலாய
தேவர் எலாம் தம் பணியைத் தவறாமல் ஆற்றுவதாய்
பாங்குடனே மறை முடிகள் பகர்கின்ற அச்சமதை
பாரினிலே எவரேனும் பக்தியுடன் பணிந்தவராய்
தீங்கில்லாத அரங்கன் உனைத் துதி செய்து வழி பட்டால்
தாண்டியராய் நல் கதியைத் தாம் அடைவர் உறுதி அன்றோ–
————————————————————-
பயந்த மிஹ ய ஸ்வ தீ நியத சேதன அசேதனம்
பநாயதி நமஸ்யதி ஸ்மரதி வக்தி பர்யேதி வா
குணம் கமபி வேத்தி வா தவ குணேச கோபாயிது
கதாசன குத்ஸசன க்வசன தஸ்ய ந ஸ்யாத் பயம் –5-
குணேஶ — குணங்களுக்கு ஈசனே (உடையவனே),
ஸ்வதீ நியத சேதநாசேதநம் –தன்னுடைய ஸங்கல்ப மாத்ரத்தாலே நியமிக்கப்படும் சேதநா சேதநாத்மகமான உலகத்தை உடைய,
பவந்தம் — தேவரீரை,
ய: — எவன்,
பநாயதி — துதிக்கிறானோ,
நமஸ்யதி — நமஸ்கரிக்கிறானோ,
ஸ்மரதி — ஸ்மரிக்கிறானோ,
வக்தி — பேர் சொல்லுகிறானோ,
பர்யேதிவா — ப்ரதக்ஷிணம் செய்கிறானோ,
கோபாயிது: — ரக்ஷகரான,
தவ — தேவரீருடைய,
கமபி — ஒரு, குணம் — குணத்தையாவது,
வேத்தி — அறிகிறானோ (உபாஸிக்கிறானோ),
தஸ்ய — அவனுக்கு,
கதாசந — எக்காலத்திலும்,
குதஶ்சந — எங்கேயிருந்தும் (எக்காரணத்தையிட்டும்),
க்வசந — எவ்விடத்திலும்,
பயம் — பயமென்பது,
ந ஸ்யாத் — உண்டாக மாட்டாது.
பயந்த மிஹ ய -ஸ்வ தீ நியத சேதன அசேதனம் -தன்னுடைய சங்கல்ப மாத்திரத்தாலே நியமிக்கப்படும்
சேதன அசேதநாத்மகமான உலகம் உடைய தேவரீரை –எவன் –
இஹ -வீற்று இருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல -அங்கு ஏதும் சோராமல் ஆள்கின்ற எம்பிரான் இங்கேயே இருக்க
பநாயதி நமஸ்யதி ஸ்மரதி வக்தி பர்யேதி வா -ஸ்துதிக்கிறானோ -நமஸ்கரிக்கிறானோ -ஸ்மரிக்கிறானோ
-திரு நாம சங்கீர்த்தனம் பண்ணுகிறானோ -பிரதக்ஷிணம் செய்கிறானோ –
குணம் கமபி வேத்தி வா தவ குணேச கோபாயிது -ரக்ஷகரான தேவரீருடைய ஒரு குணத்தையாவது அறிந்து உபாசிக்கிறானோ
-ஸ்ரீ ரங்கம் என்று உச்சரித்தாலும் போதுமே
கதாசன குத்ஸசன க்வசன தஸ்ய ந ஸ்யாத் பயம் -அவனுக்கு எக்காலத்திலும் -எங்கே இருந்தும் -எக்காரணத்தை இட்டும்
எவ்விடத்திலும் பயம் என்பதே உண்டாகாதே -ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குதஸ்ஸனா–ந பிபேதி கதாசன –
உம்மைத் துதி செய்பவனுக்கு எல்லா பயமும் போய்விடும்.
நீர் நிரபாயராக எழுந்தருளியிருக்க உம்மைத் துதி செய்யக்கூட வேண்டிய தில்லை. நமஸ்காரம் செய்தால் போதும்.
ஸ்மரித்தாலும் திருநாமத்தை உச்சரித்தாலும் ஒரு ப்ரதக்ஷிணத்தைச் செய்தாலும் கூடப் போதும்.
உம்முடைய திருமேனி குஶலமாய் எழுந்தருளியிருக்க வேண்டும் என்ற ஆசையையும்
“பவந்”நாக இருக்கும்படியான உம்மை என்று பொருள் கொள்ளுவதையும் உத்தேசிக்கிறார்.
நீர் “பவந்”நாக (இருப்பவராக) இருக்க வேண்டும்.
ராமகிருஷ்ணாதி விபவங்கள் போலே பூததசையாகாமல் நித்ய — பவந்நாய் எழுந்தருளியிருக்கும் பாக்கியத்தை உலகம் பெறவேணும்.
இஹபவந்தம் — இங்கேயே இருக்கிற உம்மை. வைகுண்டத்திலிருக்கிறோமே போதாதோ என்னவொண்ணாது.,
இப்பூலோக வைகுண்டத்தில் இருக்க வேண்டும்.
“வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல” என்றபடி இங்கே இருந்துகொண்டே சேதனாசேதனாத்மகமான
உலகங்களை எல்லாம் உம்முடைய ஸங்கல்ப மாத்ரத்தால் நியமிப்பவரல்லவோ?
இந்த சுபாஶ்ரயத் திருமேனியோடு கூடிய உம்மை, “விபந்யவ:” என்று பரமபதப் பெருமாளைத் துதிப்பது போல எவன் பநாயதி துதிக்கிறானோ?
பாடத் தெரியாதாயினும், துதிபாடுமத்தனை சிரமப்பட ஸௌகர்யமில்லையாயினும்,
(நமஸ்யதி) நமஸ்காரம் செய்தாலும் போதுமே.
ஸ்மரதி — தூரத்திலிருந்து ஸ்மரித்தாலும் போதும்,
வக்தி — ஸ்மரிக்கும் புத்தி சிரமம் கூட வேண்டாம்.
“ரங்கம்” என்று வாக்கினால் உச்சரித்தாலும் போதும்.
பர்யேதி வா — கோவிலையோ, திருவீதிகளையோ சுற்றி வந்தால் போதுமே.
அப்படிச் சுற்றி வருவது (ஸ தத்ர பர்யேதி ஜக்ஷத் க்ரீடந் ரமமாண:) என்பது போல் ஆநந்தாநுபவ மாயிருக்குமே.
குணங்களோடு கூடிய உம்மை இவ்வளவு செய்யவேண்டு மென்பதும் இல்லை.
உம்முடைய ஒரு குணத்தை அறிந்தாலும் (உபாஸித்தாலும்) போதும்.
“கம் அபி” என்பதால் “வாய் மனதிற்கு எட்டாத” என்று கொண்டு, “ஆநந்த: குணத்தை வாங்குவது உசிதம்.
அந்த குணத்தை உபாஸிப்பவரைப் பற்றி ஸாக்ஷாத்தாக
(“ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஶ்சந”, “ந பிபேதி கதாசந”) என்று சுருதி பேசிற்று.
“கதாசந” “குதஶ்சந” என்பதோடு “க்வசந” என்று சேர்த்து இங்கே பலத்தைப் படிக்கிறார்.
அரும் குணங்கள் நிறைந்த திரு வரங்கம் வாழ் பெருமானே
அறிவுடைய உயிர் எல்லாம் அறிவற்ற பொருள் யாவும்
பெரு மதியால் ஆள்கின்ற பெருமை தனை நீ யுடையாய்
பரு யுலகில் எவனேலும் புகழ்ந்து உன்னைத் துதித்தாலும்
சிறு வணக்கம் செய்தாலும் சிந்தனையில் கொண்டாலும்
நினை வலமே வந்தாலும் நலமுறுமுன் குணங்களிலே
ஒரு குணத்தை அறிந்தாலும் ஒருக்காலும் அவன் தானே
ஒருவிடத்தும் எங்கிருந்தும் உற்றிடானே பயம் தானே –
———————————————————-
எல்லா பயங்களும் தொலைய “ஸ்மரதி வா” என்று உம்மை நினைத்தால் போதும் என்று முன்பு ஸாதித்தார்.
கோயிலில் வஸிக்கும் உம்முடைய திருமேனியை ஒருக்கால் நன்று நினைத்திருந்தால் போதும்
அந்திம ஸ்ம்ருதியை உண்டாக்கி அவனை மோக்ஷம் சேர்க்க.
“கலு” என்று இந்த விஷயத்தில் ப்ரமாண ப்ரஸித்தியைக் காட்டுகிறார்.
அதற்காக பெருமாள் திருவாக்கிலிருந்து வந்த ப்ரமாண வசநங்களின் பதங்களாலேயே சுலோகத்தை அமைத்து,
பெருமாளுக்கு அவர் உக்தியையே நினைப்பூட்டுகிறார்.
“உம்மை” என்பதற்கு இங்கே, கோயிலில் எழுந்தருளியிருக்கும் அரங்கனை என்று கருத்து.
“துப்புடையாரை” என்னும் பாசுரத்தில் “எய்ப்பென்னை வந்து நலியும்போது அங்கேதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக் கிப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே” என்று பெரியாழ்வார் அருளிச் செய்ததை இங்கே நினைக்கிறார்.
உம்மை ஸேவித்தாலல்லவோ உம் ஸ்மரணம் அந்திம காலத்தில் நேரும்?
தேவரீர் எழுந்தருளியிருந்தாலல்லவோ எல்லாரையும் தேஹ வியோக காலத்தில் ஸ்மரணத்தை அநுக்ரஹித்துக் காப்பாற்ற முடியும்?
தேவரீர் இங்கே எழுந்தருளியிருந்தே எம்மை அங்கே அனுப்பிச் சேர்ப்பிக்க வேணும்.
ஸ்திதே மனசி விக்ரஹே குணிநி தாது சாம்யே சதி
ஸ்மரேதகில தேஹிநம் ய இஹ ஜாதுசித் த்வா மஜம்
தயைவ கலு சந்தயா தமத தீர்க்க நித்ரா வசம்
ஸ்வயம் விஹித சம்ஸ்ம்ருதிர் நயசி தாம நை ஸ்ரேயசம்–6-
இஹ — இங்கே (கோயிலில், பூலோகத்தில், இவ்வாயுளில்),
ய: — எவன்,
மனஸி — மனதானது,
ஸ்திதே — ஒரு விஷயத்தில் நிலைநிற்க சக்தமாயிருக்கும்போது,
விக்ரஹே — சரீரம்,
குணிணி — ஸ்வஸ்தமாய் நல்வழியில் இருக்கும்போது,
தாது ஸாம்யே ஸதி — தாதுக்கள் ஸமமாய் அரோகமாயிருக்கும்போது,
தம் — அவனை,
தயைவ சந்தயா — அந்த ஒரு நினைப்பைக் கொண்டே,
ஸ்வயம் — நீராகவே,
விஹிதஸம் ஸ்ம்ருதி — அவனை உம்மை நன்றாய் நினைக்கச் செய்து,
அகில தேஹிநம் — ஸர்வ சரீரியாயும்,
அஜம் — பிறப்பற்றவருமான
த்வாம் — உம்மை,
ஜாதுசித் — எப்பொழுதாவது ஒரு தடவை,
ஸ்மரேத் — ஸ்மரிப்பானோ (ஸ்மரித்திருப்பானாகில்),
அத — பிறகு,
தீர்க்க நித்ராவசம் — நீண்ட துக்கமான மரணத்திற்கு வசமாயிருக்கும்போது,
நைஶ்ரேயஸம் தாம — தனக்கு மேற்பட்ட ஶ்ரேயஸ்ஸில்லாத மோக்ஷம் என்னும் ஸ்தாநத்தை,
நயஸி — சேர்ப்பிக்கிறீர்.
மனசி ஸ்திதே–மனசானது -ஒரு விஷயத்தில் நிலை நிற்க சக்தமாய் இருக்கும் போதே –
விக்ரஹே குணிநி-சரீரம் ஸ்வஸ்தமாய் நல் வழியிலே இருக்கும் போதே
தாது சாம்யே சதி -தாதுக்கள் சமமாய் அரோகமாய் இருக்கும் போதே
தயைவ கலு சந்தயா -அந்த ஒரு நினைவைக் கொண்டே
ஸ்வயம் விஹித சம்ஸ்ம்ருதிர்-நீராகவே உம்மை அவனை நினைக்கச் செய்து
கலு -பிராமண சித்தியை பற்றி அருளிச் செய்கிறார்
ஸ்மரேதகில தேஹிநம் ய இஹ ஜாதுசித் த்வா மஜம்- சர்வ சரீரியாகவும் -பிறப்பு அற்றவருமாக உம்மை எப்பொழுதாவது
ஒரு தடவை ஸ்மரித்து இருப்பான் ஆகில்
தமத தீர்க்க நித்ரா வசம் –பிறகு –நீண்ட துக்கமான மரணத்தின் வசமாய் இருக்கும் போது
எம்பெருமானால் அருள பெற்றவனுக்கு மரணம் என்று சொல்லாமல் தீர்க்கமான நித்திரை என்றே அருளிச் செய்கிறார்
நயசி தாம நை ஸ்ரேயசம்-தனக்கு மேல் பட்ட ஸ்ரேயஸ் இல்லாத மோக்ஷம் என்னும் ஸ்தானத்தை சேர்ப்பித்து அருளுகிறீர்
துப்புடையாரை –எய்ப்பு என்னை வந்து நலியும் போது அப்போதைக்கு இப்பொத்தே சொல்லி வைத்தேன் –
அரங்கத்து அரவணைப் பள்ளியானே –
“ஸ்திதே குணிநி விக்ரஹே” என்று “உம்முடைய திருமேனி நிரபாயமாய் எழுந்தருளியிருக்கையில்”
என்றும் காட்டுவதில் திருவுள்ளமாய் முதலில் “ஸ்திதே” என்கிறார்.
முன் சுலோகத்தில் “பவந்தம்” என்று தொடங்கியதுபோல்,
இந்தக் கவலையே நெஞ்சில் ஓடிக்கொண்டிருப்பது ஓரொரு சுலோகத்திலும் தெரிகிறது.
“அமில தேஹிநம் த்வாம்” — கிலத்திற்குப் பிரஸக்தியில்லாமல், பூர்ணமான திருமேனியுடைய உம்மை.
அகில தேஹியான உம்முடைய திருமேனிக்குக் கிலம் ப்ரஸக்தமானால் எந்த தேஹியின் தேஹம் நிற்கும்?
அஷம் த்வாம் — பிறந்தவனுக்கல்லவா அபாயம் த்ருவம் ! பிறவாத தேவரீர் திருமேனிக்கு அபாயம் வர ஸஹிப்போமோ?
உம்மை ஆச்ரயித்தவனுக்கு ஒருக்கால் தேஹ வியோகம் வருவதை “மரணம்” என்று பேசோம்.
“தீர்க்கமான நித்ரை” என்போம். ஒரு தரம் எக்காலத்திலோ உம்மை ஸ்மரித்ததை நினைத்துக்கொண்டே இருந்து
அவன் தேஹத்திற்கு அபாயம் வருங்கால் அவனுக்கு ஸ்மரணத்தைக் கொடுத்து ரக்ஷிக்கும் தயாளுவாயிற்றே.
நாங்கள் இப்பொழுது கதறுவதைத் திருவுள்ளத்தில் கொள்ளாமல் திரஸ்கரிக்கலாமோ??
“உம் திருவுள்ளம் மட்டும்தான் வேண்டும் எம் மனோரதத்தைப் பூர்த்தி செய்ய” என்று ”
ஸ்வதீநியதசேதநாசேதநம்” என்பதால் வ்யஞ்ஜனம் செய்கிறார்.
ஒரு விரோதி தன் கை கால்களை அசைக்க முடியுமோ?
“நான் அர்ச்சை, நான் பராதீநன்” என்று நீர் பேசவொண்ணாது.
“உம்முடைய அப்பெரிய வீட்டிற்கு எங்களைக் கொண்டு போய்ச் சேர்க்கத் தானே நீர் இங்கே கோயில் கொண்டிருப்பது” என்பதைக் காட்ட
“நயஸி தாம” “வீட்டுக்குக் கொண்டு போகிறாய்” என்கிறார்.
உம்மையல்லால் எம்மை வீடு சேர்ப்பார் ஆர்?
மண்ணுலகில் எவனும் தன் மனம் நல்ல நிலை கொண்டு
மெய்தானும் திடமாக மேன்மையுடன் இருக்கையிலே
நன்னிலையில் உடம்பில் உள்ள நரம்பாதி தாதுக்கள்
நன் முறையில் இயங்கி வரும் நாட்களில் என்றேனும்
எண்ணற்ற பொருள் அனைத்தில் உட் புகுந்த ஆன்மாவாய்
ஏற்றமுடைப் பிறப்பிலியாம் உன் தன்னை ஒரு முறையே
எண்ணுவனேல் அந்நினைவை இறுதியிலே உண்டாக்கி
எட்டரிய முக்தி தனை எய்தி விடச் செய்கின்றாய் –
——————————————-
முன் ஸ்லோகத்தில் “துப்புடையாரை” நினைத்தார். அத்திருமொழியில் மேல்பாசுரங்களில்
“என்னை அநேக தண்டம் செய்வதா நிற்பர் நமன் தமர்கள்”,
“நமன் தரம் பற்றும்போது”,
“நமன்தமர் பற்றலுற்ற அன்றைக்கு” என்று யமவச்யதா பயமில்லாமல் காப்பவராக அரங்கத் தரவணைப் பள்ளியானைத் துதிக்கிறார்.
பல விஷயங்கள் சேர்ந்து ஸ்வாமி நெஞ்சில் ஓட இங்கே இந்த சுலோகம் அமைக்கப் பட்டுள்ளது.
நம்பெருமாள் திவ்யமங்கள விக்ரஹம் கோவிலை விட்டு வெளியே எழுந்தருளியிருந்த ஸமயம், ஸ்ரீரங்கநாய்ச்சியாரை விட்டுப் பிரிவு நேர்ந்திருந்தது.
ஸ்ரீரங்க பூமியை விட்டுப் பிரிவு, ஸ்ரீரங்க பூமியிலுள்ள மனுஜ திர்யகாதி விஷய வாஸிகளை விட்டுப் பிரிவு,
ஸ்வாமியைப்போல் ததேகநியதாசயராய் ஸ்ரீரங்கநாதனையே த்யானம் செய்து ரமிப்பவரோடும் பிரிவு.
“உம்மோடு கூட இருப்பதே ஸ்வர்க்கம். உம்மை விட்டுப் பிரிவே நரகம்” என்று ஸ்வர்க்க நரக லக்ஷணம் சீதை லக்ஷ்மணன் போன்ற சேஷ ஜனங்களுக்கு.
நம் பெருமாளைவிட்டுப் பிரிவு நரகபாத துல்யம்.
“விஷ்ணு பக்தருக்கு, வைஷ்ணவருக்கு, நமன் தமர் பயமில்லை. நமனுக்கு வசமாவதில்லை.
அவர்கள் இவர்களைக் கண்டு பயந்து ஓடுவார்கள்” என்று விஷ்ணு புராணத்தில்
பீஷ்மர் நகுலனிடம் யமனுக்கும் அவன் படர்களுக்கும் நடந்த ஸம்வாதத்தை வர்ணித்தார்.
அவர்கள் ஸம்வாதத்தை நரகத்தில் அப்போது அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்த காளிங்கர் நேரில் கேட்டார்.
அவர் ஜாதிஸ்மரர். அதாவது ஒரு சக்தி விசேஷத்தால் பூர்வ ஜன்மங்களில் தாம் அனுபவித்ததை யெல்லாம் ஸ்மரிப்பவர்.
பூர்வ ஜன்மத்தில் தாம் நரகத்தில் கூட இருந்து கேட்ட பேச்சை அப்படியே அவர் தம்முடைய பிராமண ஜன்மத்தில் பீஷ்மருக்கு வர்ணித்தார்.
பீஷ்மர் நகுலனுக்கு வர்ணித்ததைப் பராசரர் வர்ணித்தார்.
இந்த ஸம்வாதத்தில் ஸ்ரீசங்கரர் முதலிய அத்வைதப் பெரியார்களுக்கு விசேஷ ஈடுபாடு.
யமன் பாடினான் என்று “ஹரிகுருவஶகோऽஸ்மி ந ஸ்வதந்த்ர: ப்ரபவதி ஸம்யமதே மமாபி விஷ்ணு:” என்ற சுலோகத்தை
பரமதீ க்ரந்தம் உதாஹரித்தது. “மது ஸூதன ப்ரபந்நரைப் பரிஹரிப்பாயாக. வைஷ்ணவர்கள் பேரில் எனக்கு அதிகாரமில்லை.
வைஷ்ணவர்களல்லா தாருக்கே நான் ப்ரபு” என்ற சுலோகத்தை மதுஸூதனர் தம் அழகான கீதா வ்யாக்யானத்தில் உதாஹரித்தார்.
ஹரி, விஷ்ணு, ஜநார்த்தனன், மதுஸூதனன், வாஸுதேவன் முதலிய திருநாமங்களை தர்மராஜர் அங்கே அடிக்கடி கீர்த்தனம் செய்கிறார்.
இந்தத் திருநாமங்களை உச்சரிப்பவர்களைக் கண்டு யமபடர்கள் நடுங்க வேண்டும்.
“நமன்தமர் தலைகள் மீதே ………….. நின் நாமம் கற்ற ஆவலிப்புடைமை கண்டாய் அரங்கமா நகருளானே” என்று
அரங்கனையே அத்யந்தம் ஐகாந்த்யத்தோடு பற்றிய (ததேக நியதாஶயரான) தொண்டரடிப்பொடிகளும்
யமனுடைய கானத்தை அநுகானம் பண்ணினார்.
காதோடு ரஹஸ்யமாகச் சொல்லுகிறேன் என்று தொடங்கிய யமன் போகப்போக ஸந்தோஷ பாரவச்யத்தால் மெய் மறந்து
உரக்கப் பாடினான் என்னும் ரஸத்தை பாமதி அநுபவித்தது. பீஷ்மரும் பராசரரும் அநுபவித்தார்கள்.
(சிந்தி, பிந்தி) (கிழி, பிள) என்று கொடுமையே பேசுபவர் பாடினார் என்றும் ரஸம்.
(கீதம் வைவஸ்வதேந யத்) என்று கடைசியில் யமன் இப்படிப் பாடினான் என்று பீஷ்ம பராசரர்கள் ரஸித்தார்கள்.
யமன் பாட்டுக்களில் கடைசிப் பாட்டு
கமலநயந வாஸுதேவ விஷ்ணோ தரணிதர அச்யுத சங்கசக்ரபாணே |
பவ ஶரணம் இதீரயந்தி யே வை த்வஜ பட தூரதரேண தாந் அபாபாந் ||என்பது.
“இந்தத் திருநாமங்களைச் சொல்லி நீயே அடைக்கலம் என்று பேசுபவரிடமிருந்து, அதி தூரம் விலகிச் செல்லுங்கள்”
முன் “விலகு” “தூர விலகு” என்று பாடிற்று.
இங்கு திருநாமத்தைச் சொல்லி “அடைக்கலம்” என்று பேசுபவர் விஷயத்தில் “தூரதரம் விலகு” என்று பாடப்பட்டது.
முன் பாதியில் திருநாமங்கள் அடுக்காகப் படிக்கப்பட்டது.
இந்த சுலோகத்திலும் அதே ரீதியாக முன்பாதியில் திருநாமங்களை மட்டும் அடுக்கி அமைத்து :
“இதி ஈரயந்தி” என்றதுபோல் “இதீவ படதி நாமதேயாநி தே” என்று இங்கும் பின்பாதியின் அமைப்பு.
“இதீவ” “இதுபோன்ற நாமதேயங்களை”. யமனுடைய சுலோகத்திலும் அதே நாமங்களையோ மற்ற நாமங்களையோ என்று
தாத்பர்யம் என்பதை ஸ்வாமி “இவ” என்று காட்டியருளுகிறார்.
யமன் பாடினபடியும் தொண்டரடிப்பொடிகள் பாடினபடியும் உம் திருநாமங்களைச் சொல்லி
நீரே சரணம் என்று வாயாலேயாவது சொல்லும் எம்போல்வார்க்கு யமவஶ்யதை என்பதே ஸம்பவிக்க மாட்டாது.
“த்வயா விநா” உம்மைவிட்டுப் பிரிவினால் நாங்கள் நரகத்தையே அனுபவிக்கிறோம்.
யமவஶ்யதை இல்லாதார்க்கு நரகாநுபவம் வர ந்யாயமில்லை.
உம் பிரிவால் ரௌரவாதி ஸப்த நரகங்களை நாங்கள் இப்போது அனுபவிப்பது உண்மை.
எங்களுக்கோ யமவஶ்யதை கிடையாது என்பது திண்ணம். யமவஶ்யதை நரகாநுபவத்திற்குக் காரணம்.
காரணமில்லாமல் காரியம் உண்டாகிறதே, இது என்ன அந்யாயம் என்று கடைசிப் பாதத்தில் கைமுத்யத்தால் விளக்கும் அழகு ரஸிக்கத் தக்கது.
ரமா தயித ரங்கபூ ரமண க்ருஷ்ண விஷ்ணோ ஹரே
த்ரிவிக்ரம ஜனார்த்தன த்ரியுகே நாத நாராயண
இதீவ ஸூபதாநி ய படதி நாமதே யாநி தே
ந தஸ்ய எம வஸ்யதா நரக பாத பீதி குத–7-
ய: எவன்,
ரமாதயித — லக்ஷ்மீகாந்த! ,
ரங்கபூரமண –ஸ்ரீரங்கத்தில் ரமிப்பவனே!,
க்ருஷ்ண — கண்ணா ! (பூர்ணாநந்த பூமியே!,),
விஷ்ணோ — எங்கும் நிறைந்தவனே!,
ஹரே — ஹரியே (ஆபத்தை ஹரிப்பவனே, சிங்கமே ),
த்ரிவிக்ரம — மூவுலகளந்த சேவடியோனே!,
ஜநார்த்தன — ஜனார்த்தனனே!,
த்ரியுக — ஆறுகுணத்தோனே!,
நாத — நாதனே!,
நாராயண — நாராயணனே!!,
இதீவ — இதுவும், இதுபோலுள்ளவுமான,
ஶுபதாநி — க்ஷேமத்தை அளிக்கும்,
தே — உம்முடைய,
நாமதேயாநி — திருநாமங்களை ,
படதி — உச்சரிக்கிறானோ,
தஸ்ய — அவனுக்கு,
யமவஶ்யதா — காலனுக்கு வசமாவதென்பது,
ந: — கிடையாது,
நரக – பாத – பீதி — நரகத்தில் வீழ்வதென்னும் பயம்,
குத: — எங்கிருந்து வரும்.
ரமா தயித ரங்கபூ ரமண க்ருஷ்ண –ஸ்ரீ லஷ்மீ காந்தா -ஸ்ரீ ரங்கத்தில் ரமிப்பவனே –
உம்மை விட்டு பிரிந்து பெரிய பிராட்டியாரும் ஸ்ரீ பூமிப் பிராட்டியும் இருக்கவோ
ரங்க -நடுவில் வைத்து இரண்டு பக்கம் உபய நாச்சியாரை வைத்து அருளிய அழகு நோக்கவும்
–கண்ணனே -பூர்ண ஆனந்த பூமியே –
விஷ்ணோ -சர்வ வியாபியே –ஹரே-ஆபத்துக்களை ஹரித்து அருளும் ஸ்ரீ ஸிம்ஹமே–
பிராணாதார்த்தி ஹரன் அல்லவோ
த்ரிவிக்ரம-மூ உலகு அளந்த சேவடியோனே
ஜனார்த்தன-ஜென்மங்களை முடித்து அருளும் ஜனார்த்தனன்
த்ரியுகே -ஷட் குண பரி பூர்ணனே
நாத நாராயண -ஸ்ரீ நாதனே -ஸ்ரீ மன் நாராயணனே
இதீவ ஸூபதாநி ய படதி நாமதே யாநி தே -இதுவும் இது போல் உள்ள க்ஷேமத்தை அளிக்கும் உம்முடைய திரு நாமங்களை உச்சரிக்கிறானோ
ந தஸ்ய எம வஸ்யதா நரக பாத பீதி குத–அவனுக்கு காலன் வசம் கிடையாதே -நரகத்தில் வீழ்வது என்னும் பயம் எங்கிருந்து வரும் –
அரங்கனை விட்டு பிரிந்தால் நரகம் -கூட இருந்து கைங்கர்யம் செய்து கொண்டே இருப்பதே சுவர்க்கம் என்று நினைக்கும் பிராட்டி போல்வார் அன்றோ இவரும்
தேவரீர் செஞ்சிக் கோட்டையிலும் பெரிய பிராட்டியார் ஸ்ரீ ரெங்கத்திலும் இருப்பதோ
அகலகில்லேன் இறையும் என்று இருப்பவளுக்கு சேருமோ –
ஸ்ரீ பூமிப் பிராட்டியும் உம்மை விட்டு பிரிந்து அல்லல் பாடவோ –
நாதன் ஒரு இடமும் ஸ்ரீ ரெங்க நாச்சியார் அரங்கம் பூமா தேவி அரங்க நகர் வாசிகள் இங்கும் இருக்கவோ –
ஸ்வாமி திருவுள்ளப்படி ஒவ்வொரு பதத்தின் ரஸத்தைக் கொஞ்சம் காட்டுவோம்.
ரமாதயித — தேவரீர் செஞ்சிக்கோட்டையிலும், ஸ்ரீரங்கநாச்சியார் கோயிலிலுமாக இருப்பது ந்யாயமோ?
“நிரயோ யஸ்-த்வயாவிநா” “விஷ்ணோ: ஸ்ரீ: அநபாயிநீ” “அகலகில்லேன் இறையும்” என்னும்
உம் பிரிய காந்தைக்காகவாவது நீர் கோயிலுக்குத் திரும்பி எழுந்தருள வேண்டாமோ?
(நிவர்த்ய ராஜா தயிதாம் தயாளு) என்று ரகுவம்சம். தயிதை விஷயத்திலும் தயாளுவல்லவோ ?
ரங்கபூரமண — பிராட்டி விபுவாக நம்மோடு எங்கும் எப்போதும் (காடோபகூட)மாய் அணைந்தே இருப்பவள்.
அவளை விட்டுப் பிரிவு என்பதே இல்லை என்பீரோ, ரங்கபூ என்னும் அரங்கநகர் (அயோத்யை) நோவு படுகிறதே.
அதற்கு நீர்தானே ரமணன். அதற்குப் பொறுக்காத அரதி.
அதில் வஸிக்கும் மநுஜ – திர்யக் – ஸ்தாவரமெல்லாம் ராம விரஹத்தில் அயோத்தியில் சராசரம்போலக் கதறுகின்றனவே.
ரமணனில்லாமல் ரங்கபூமி நாயகனற்ற ஸ்திரீபோல் துக்கப்படுகிறதே.
“ரங்கம்” என்னும் நகர், “பூ” என்னும் பூமிதேவி, இருவருக்கும் “ரமண” என்றும் கொள்ளலாம்.
ரங்கம் பூமியிலே ஏகதேசமானாலும், ரங்கத்தை மட்டும் தனித்து எடுத்துப் பேசுவது ரஸம்.
அரங்கமும் கதறுகிறது. பூமிப் பிராட்டியும் கதறுகிறாள்.
(அஶ்ருமுகீ₂ கி₂ந்நா- க்ரந்த₃ந்தி கருணம்) உபயநாச்சிமாரும் அவர்களிருக்கும் நகரமான ரங்கமும் கதறுகிறார்கள் என்பதைக் காட்ட,
“ரங்க” என்பதை இரண்டு நாச்சிமாருக்கும் நடுவில் வைத்தார்.
தாய்களும் ப்ரஜைகளும் நோவுபடுகின்றன என்றபடி. அடைக்கலம் கொள்ளுவதற்கு இந்தத் திருநாமங்கள் ஸப்ரயோஜனம்.
க்ருஷ்ண – “ஹா க்ருஷ்ணா” என்று த்ரௌபதி கூப்பிட்ட திருநாமம்.
பத்தொன்பதாவது சுலோகத்தில் அவள் வ்ருத்தாந்தத்தைப் பேசப் போகிறார்.
“க்ருஷ்ண” என்பதற்கு “ஆனந்தத் தின் எல்லை பூமி” என்று பொருள். “க்ருஷி” என்று பூமிக்குப் பெயர்.
“ரங்கபூ” என்று பேசியதும் “பெருமாளே நிர்வ்ருதிபூமி” “ஆனந்தத்திற்கு எல்லைபூமி” என்று ரஸமாய்ச் சேர்க்கிறார்.
ரங்கபூமியில் நிர்வ்ருதிபூமியான நீர் சேர்ந்திருந்தால் பரஸ்பர ரஸம்.
“ரங்கம்” என்பதற்கு “ரதிம் கத:” “ரதியை அடைந்தார்” என்று பொருள். அதிலிருப்பதால் ரதி அடையப் படுகிறது
(ரதிம் கதோ யதஸ் தஸ்மாத் ரங்கம் இதி அபிதீயதே)
விஷ்ணோ! ஹரே ! — யமன் பாடிய திருநாமங்கள். யமபடருக்கு பயமுண்டாக்குபவை.
(ரகாராதீநி நாமாநி, அகாராதீநி நாமாநி) உலகத்தின் ஆபத்தை யெல்லாம் ஹரிப்பவராயிற்றே. ப்ரணதார்த்தி ஹரனல்லவோ?
த்ரிவிக்ரம –(லோக விக்ராந்த சரணௌ ஶரணம் தே அவ்ரஜம் ப்ரபு ) —
உலகளந்த உம் சேவடிகளைச் சரணம் புகுந்தேன் என்று சரண் புகும் வகை. ( விஷ்ணும் க்ராந்தம் வாஸுதேவம் விஜாநந்) என்றபடி.
ஜநார்த்தன — இதுவும் யமன் பாடல்களிலுள்ளது.
த்ரியுக — மூவிரண்டான ஆறு குணங்களை உடையவரே ! முதல் மூன்று யுகங்களில் மட்டும் மத்தியில் அவதாரம் செய்பவர்.
கலியில் அதன் முடிவில் தான். விபவாவதாரம் கலி மத்தியில் கூடாதென்று இருக்கிறீரோ?
நாத — “ரங்கநாத” என்று கூப்பிடக் கூடாமலிருக்கிறதே, இதனிலும் எங்களுக்குக் கஷ்டமுண்டோ?
நாராயண — இடராயினவெல்லாம் நிலம்தரம் செய்யும் நாமம் பெருமாள் சக்ரபாணியாய் ஆகாசத்தில் எழுந்தருளி
தன்னைக் காட்டக் கண்ட போது, “நாராயண! அகிலகுரோ! பகவந் ! நமஸ்தே ” என்று கஜேந்த்ராழ்வார் முதலில் கூப்பிட்ட நாமம்.
திருவஷ்டாக்ஷரத்திலும் த்வயத்திலும் விளங்கும் திருநாமம்.
இதீவ — இப்படி, இதுபோன்ற. இவ என்பதால் முழுவதும் சரியாகச் சொல்லாவிடினும், சொல்லுவது போலிருந்தாலும் போதும்.
படதி இவ — வேறு ஏதோ ப்ரஸ்தாவத்தில் இந்த ஸப்தத்தை மட்டும் உச்சரித்தாலும்.
“நாராயண” என்னும் திருநாமத்தால் அஜாமிளன் கதையை நினைத்து,
“படதீவ” — பாடம் படிக்கிறது போலிருந்தாலும் என்று கருத்து.
(ஆக்ருஶ்ய புத்ரம் அகவாந் யதஜாமிளோபி நாராயண இதி ம்ரியமாண அவாப முக்திம்) இந்த நாமத்தின் ப்ரபாவத்தை
ரஸித்த ஸ்ரீவித்யாரண்ய ஸ்வாமி பஞ்சதசியில் இந்த சுலோகத்தை உதாஹரித்தார்.
நாமதேயாநி — திருநாம சப்தத்தை மட்டும். அர்த்தம்கூட வேண்டியதில்லை.
வாச்யனான உம்முடைய நினைப்பில்லாமல், உம் பேராயிருப்பது மாத்ரமே போதும்.
“பவ ஶரணம்” என்று பேசுவார் என்றான் யமன்.
“இதி ஈரயந்த” (ஶரணாகதி ஶப்தபாஜ) என்று ஆழ்வான் “ஸ்வார்த்தே தேயட் ப்ரத்யயம்” என்பர்.
தே — உம் திருநாமமாதலால் சப்தத்தின் படந மாத்ரத்திற்கு இத்தனை ப்ரபாவம்.
ந தஸ்ய யமவஶ்யதா — அவர்கள் விஷயத்தில் தனக்கும் தன் படர்களுக்கும் அதிகாரமில்லை என்று
அதிகாரி புருஷனான தர்மராஜனே சொல்லி இருப்பதால், அதில் ஸந்தேஹமில்லை.
இதைக் காட்டவே அந்த சுலோகத்தின் ரீதி இங்கே அனுஸரிக்கப் பட்டது.
யமவஶ்யதை வராமல் நரகபாதம் ஸம்பவிக்க ந்யாயமில்லையே. ஸப்த நரகங்களிலும் யமனுடைய அதிகாரம் (வ்யாபாரம்) தான்
என்று ஸூத்ரகாரர் தீர்மானித்தார். ஸூத்ரப் பிரஸித்தியைக் கொண்டு இங்கே கைமுதிக ந்யாயத்தை வைக்கிறார்.
நரகாநுபவத்திற்குக் காரணமான யமவஶ்யதை இல்லாமலே நாங்கள் நரகதுல்யமான யாதனைகளை உம் பிரிவினால் அனுபவிக்கிறோம்.
இதையெல்லாம் உடனே நிவர்த்திக்க வேணும்.
ஸ்ரீரங்க நாச்சியார், அரங்கம், பூதேவி, அரங்கவாஸிகள் எல்லோரும் நாதனுடன் கூடியிருக்க வேணும்.
நாதனோரிடம், அரங்கமோரிடமாக இருக்கலாகாது என்கிறார்.
பூ மகளின் நல் துணைவா பொழில் அரங்கக் காதலனே
முகில் வண்ண கண்ணாவே மறைந்து எங்கும் நிற்பவனே
தீமைகளை ஒழிப்பவனே திருவடியால் உலகு அளந்த
திரி விக்ரமா ஸ்ரீ ஜனார்த்தன திரு வாறு குணமுடையோய்
நாம் வணங்கும் பெரும் தலைவா நாராயணா என்று என்று
நலம் எல்லாம் தருமூன்றன் நாமங்களைப் பயில்வோனை
நமன் தனக்கு வயமாக்கும் நிலை என்றும் ஏற்படாதே
நரகத்தில் வீழ்கின்ற நடுக்கம் தான் உண்டோ தான் –
———————————————–
யமவச்யதை யில்லாமலே நரகாநுபவம் வருகிறதே என்று காட்டி, நீர் இப்படி சாஸ்த்ர மரியாதையைக் குலைக்கலாமோ
என்று த்வனிக்கும்படி முன் சுலோகத்தில் பேசினார்.
உம்மிடம் பாரமைகாந்த்யமுடைய ஒரு பக்தர் ஏதோ ஒரு காலத்தில் ஒரு தேசத்திலிருந்தால்
அந்த தேசம் பகவானுக்கு ஸ்திரமான ராஜதானியாகும். தவம் செய்வதற்கு இடையூறில்லாத தபோவனமாகும்.
நல்லொழுக்கத்திற்கு அழிவற்ற கோட்டையாகும் என்பரே.
தொண்டரடிப் பொடிகளிலும் உம்மிடம் பாரமைகாந்த்ய முடையவருண்டோ?
(அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகம் ஆஸ்ஸ்வ) என்றல்லவோ இத்தகைய வடியார்களுக்கு உம்முடைய ஆக்ஞை!
“அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே” என்று பரமபதத்து வைகுண்டநாதனையும் ஒதுக்கி உம்மிடம் நியதாஶயராய் இருந்தனர்.
“இங்கே ஸ்ரீரங்கத்தில் ஸுகமாயிரு” என்று எங்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு, நீர் இவ்விடமிருந்து வெளியேறுவது தகுதியோ?
பெரிய பெருமாள் ஓரிடமும் நீர் ஓரிடமுமானால், எங்களுக்கு ஸ்ரீரங்கத்தில் ஸுகமான இருப்பு எப்படி ஏற்படும்?
கதாசிதாபி ரங்க பூ ரசிக யத்ர தேசே வசீ
த்வ தேக நியதா சயஸ்த்ரிதச வந்திதோ வர்த்ததே
தத ஷத தபோவனம் தவ ச ராஜதா நீ ஸ்திரா
ஸூ கஸ்ய ஸூகமாஸ் பதம் ஸூசரிதஸ்ய துர்க்கம் மஹத் –8-
ரங்கபூரஸிக –ஸ்ரீரங்கத்தில் வஸிப்பவரே!,
வஶீ – இந்திரியங்களை வசப்படுத்திய வரும்,
த்வதேக -நியத – ஆஶய — (தொண்டரடிப்பொடிகள்போல) உம்மிடத்திலேயே நிலைநிறுத்திய பக்தியை யுடையவரும்,
த்ரிதஶ வந்தித — தேவர்களால் நமஸ்கரிக்கப் படுபவருமான (பெரியவர்),
யத்ர தேஶே — எந்த தேசத்தில்,
கதாசிதபி — ஒரு பொழுதாவது,
வர்த்ததே — இருக்கிறாரோ,
தத் — அது,
அக்ஷத — இடையூறில்லாத,
தபோவநம் — தபோவநம்,
தவ ச — உமக்கும்,
ஸ்திரா — ஸ்திரமான,
ராஜதாநீ — நகரம்,
ஸுகஸ்ய (ச) — ஸுகத்திற்கும்,
ஸுகம் — ஸுகமான,
ஆஸ்பதம் — இடம்,
ஸுசரிதஸ்ய — நல்லொழுக்கத்திற்கும்,
மஹத் — பெரிய,
துர்கம் — அரண் (கோட்டை)
ரங்க பூ ரசிக –-ஸ்ரீ ரெங்கத்தில் நித்ய வாசம் பண்ணி அருளுபவரே-
பரஸ்பரம் ஸ்ரீ ரெங்க வாசிகளுக்கு உமக்கும் ரசிக்காத தன்மை உண்டே
வசீ ஆயஸ-இந்திரியங்களை வசப்படுத்தியவரும்-இந்திரியங்களை அடைக்கு அருளுவர் நித்ய வாசம் செய்யும் இடமே
குருஷேத்ரம் நைமிசாரண்யம் புஷ்கரம் என்று ஸ்தான விசேஷ அதிகாரத்தில் அருளிச் செய்துள்ளார்
த்வ தேக நியதா-தொண்டர் அடி பொடி ஆழ்வாரை போலே உம்மிடையே நிலை நிறுத்திய பக்தியை யுடையவரும்
த்ரிதச வந்திதோ-தேவர்களால் நமஸ்கரிக்கப் படும் பெரிய பெருமாளை –
நித்ய சூரிகள் ஏதேனுமாக இருக்க ஆசைப்பட்டு இருக்கும் திவ்ய தேசம் அன்றோ
யத்ர தேசே கதாசிதாபி- வர்த்ததே -எந்த தேசத்தில் ஒரு பொழுதாவது இருக்கிறாரோ
தத ஷத தபோவனம்-அது இடையூறு இல்லாத தபோ வனம்
தவ ச ராஜதா நீ ஸ்திரா -உமக்கும் ஸ்திரமான ராஜ தாநீ
ஸூ கஸ்ய ஸூகமாஸ் பதம் -ஸூ கத்துக்கும் ஸூ கமான இருப்பிடம்
ஸூசரிதஸ்ய துர்க்கம் மஹத்-நல்ல நடத்தைக்கும் ஒரு பெரிய அரண் — கோட்டை
பரமை காந்திகள் உள்ள தேசமே நீர் உகந்த திவ்ய தேசம் என்றவாறு -தர்மத்துக்கு இவர்கள் வாசம் செய்யும் இடமே அரண் அன்றோ
அத்ரைவ ஸூ கமாஸ்க்வா என்று எம் உடையவருக்கு அருளிய பின்பு நீர் இத்தை விட்டு செஞ்சி கோட்டையில் இருக்கவோ –
ரங்கபூ ரஸிக — பாற்கடல், ஸூர்ய மண்டலம், வைகுண்டம் எல்லாவற்றைக் காட்டிலும் உமக்கு
ஸ்ரீரங்கத்திலே (ரதி) இன்பம் இருக்கிறது.
“ரதிம் கதோ யதஸ்தஸ்மாத்” என்று ரிஷிகள் பொருள் கூறினார்கள்.
அரங்கத்தில் அரங்கனாகிய நீர் ஸபாநாயகராக வீற்றிருந்து காவ்யங்களை ரஸித்து அரங்கேற்றுவது,
(ரங்காஸ்தாநே ரஸிகமஹிதே ரஞ்ஜிதாஶேஷசித்தே).
ரங்கபூரஸிக — ரங்கபூமிக்கும் ரங்கநகரவாஸிகளுக்கும் உம்மிடம் ரஸமிருப்பது போல, உமக்கும் அவர்களிடம் ரஸம்.
இப்படிப் பரஸ்பர ரஸமிருப்பதால் ரஸபூர்த்தி.
ப்ரஹ்மா வினால் ஸத்ய லோகத்தில் சிலகாலம் ஆராதிக்கப்பட்டு, அதை விட்டு அயோத்தி வந்தீர்.
அங்கு நீண்ட காலமிருந்து அதை விட்டு ஸ்ரீரங்கத்திற்கு எழுந்தருளினீர்.
இனி ஓரிடமும் போகமாட்டீராதலால் இங்கே உமக்கு நிரதிசய ப்ரீதி என்று பாதுகா ஸஹஸ்ரத்தில் உம் பாதுகை என்னையிட்டுப் பாடுவித்தது.
த்யால்லோகாத் பரமமஹிதாத் ஸ்தாநதோ வா ரகூணாம் — என்று கூறினது பொய்யாகலாமோ?
யத்ர தேஶே — எந்த தேசத்தில், “யத்ர” என்று மட்டும் ப்ரயோகித்தார். “யத்ரைகாந்த்ய” என்ற ஸ்தாந விசேஷாதிகார சுலோகத்தில்.
வஶீ — “இந்த்ரியங்களை எல்லாம் அடக்கினவர் எங்கே எங்கே வஸிக்கிறாரோ, அங்கங்கே குருக்ஷேத்ரமும் நைமிசமும் புஷ்கரமுமுள”
என்ற சுலோகம் ஸ்தாந விசேஷாதி காரத்தில் எடுத்துக் காட்டப்பட்டது.
த்வததேகநியதாஶய — வ்யவஸித திய — என்று அதிகார ச்லோகம்.
கதாசிதபி — ஸ்ய கஸ்யாபி லாப — என்று அங்கு இரண்டிடத்திலும் இரண்டையும் அபி என்பதைக் கொண்டு சேர்த்துக் கொள்ள வேணும்.
த்ரிதஶவந்திதோ வர்த்ததே — தேவர்கள் இவருக்குப் பலி ஸமர்ப்பித்துப் பூஜிக்கிறார்கள்.
தஸ்மை தேவா பலிமா வஹந்தி . “நித்யஸூரிகளும் கோயிலில் வாஸத்தைத் தேடி மனுஷ்யர்களோடும் திர்யக்குகளோடும்
சேர்ந்து தொழுகிறார்கள்” என்று பட்டர் ஸாதித்தார்.
பரமைகாந்திகளும், அவர்களைப் பூஜிக்கவும் உம்மை ஸேவிக்கவும் வரும் நித்யஸூரிகளும் ஏமாறும்படி செய்யலாமோ?
“த்ரிதசவந்திதராக இருக்கிறார் ” என்பதால் அவர்களோடு தேவர்களும் வஸிக்கிறார்கள் என்று காட்டப்படுகிறது.
“தஸ்மை தேவா பலிமாவஹந்தி” பெருமாளை அவர்கள் ஸேவிக்க வருவது ராகப்ராப்தம்.
இவர்களை வந்தனம் செய்து பலி ஸமர்ப்பிப்பது வைதம், சுருதி விதித்த ஆக்ஞா கைங்கர்யம்.
ஸா ச ராஜதாநீ ஸ்திரா — விதேயம் முக்கியமானதால் அதை அநுஸரித்து “ஸா” என்று ஸ்திரீலிங்கம் உபயோகிக்கப் படுகிறது.
ராஜதானிக்கே ஆபத்துக்கள் அதிகம். சத்ருக்கள் பலர் இருப்பார்கள். யுத்தமும் முற்றுகையும் வந்து கொண்டேயிருக்கும்.
பரமைகாந்தி வஸித்த அல்லது வஸிக்கும் ரங்கராஜதாநீ ஸ்திரமாயிருக்க வேண்டும்.
ராஜா வஸிக்கும் இடம் ராஜதாநியாகையால், நம்பெருமாள் வேறொரிடத்தில் இருந்தால் அதுவும் ராஜதாநியாகிலும், அது ரங்கராஜதானி யாகாதல்லவா?
ஸுகஸ்ய ஸுகமாஸ்பதம் — ஸுகமென்பதற்கே இது ஸுகமான இருப்பிடம்.
மற்ற இடங்களில் ஸுகமும் இத்தனை ஸுகமாக இருக்காது.
ஸுசரிதஸ்ய துர்கம் மஹத் — தர்மம் உலகத்தைக் காக்கும் என்பர்.
தர்மத்திற்குப் பரமைகாந்தி வஸிக்கும் க்ஷேத்ரம்தான் பெரிய அரண். இத்தனைக்கும் ஹாநி வரலாமோ?
அரங்கத்தில் அன்புடனே அணைந்து உறையும் பெருமாளே
அலை பாயும் புலன்களை அடக்கி யாளும் திறமுடைத்து உன்
ஒருவனையே மனம் வைத்து ஒழுகுவதால் தேவர்களும்
ஓன்று கூடி போற்றுகிற உத்தமமாம் உயர்வுடையோன்
ஒரு பொழுதே வாழ்ந்திட்ட ஓர் இடமே தடை இன்றி
உயர் தவத்தைப் புரிவதற்கு உறும் இடமாம் உன்னுடைய
உறுதியான தலை நகராம் ஒப்பற்ற சுகத் தலமாம்
உற்ற பெரும் நல் வினைக்கோர் உரிய பெரும் அரணாமே–
———————————————
பரமைகாந்தி ஒருவர் ஒருக்கால் வஸித்தால் ஏற்படும் ரக்ஷையைக் கூறினார்.
அந்த ரக்ஷையும் ரங்கத்தில் நித்ய வாஸம் செய்ய விரும்பும் எமக்கே ரக்ஷை.
எம்மைக்காத்து எம் இஷ்டத்தைப் பூர்த்தி செய்ய உம்முடைய திவ்ய குணங்களே போதும் என்கிறார்.
த்ரி வர்க்க பத வர்த்தி நாம் த்ரி குண லங்க நோத்யோசி நாம்
த்விஷத் ப்ரமத நார்த்தி நாமபி ச ரங்க த்ருஸ் யோதயா
ஸ்கலத் சமய காதரீ ஹரண ஜாக ரூகா ப்ரபோ
கர கிரஹண தீக்ஷிதா க இவ தே ந திவ்யா குணா –9-
ப்ரபோ — என் ப்ரபுவே!,
த்ரிவர்க்கபதவர்த்திநாம் — தர்ம அர்த்த காமங்களைக் கோருகிறவருக்கும்,
த்ரிகுண லங்கநோத்யோகிநாம் — ப்ரகிருதி மண்டலத்தைத் தாண்ட வேண்டுமென்ற எண்ணத்துடன் ப்ரயத்தனப்பட்டு
கைவல்யத்தையும் மோக்ஷத்தையும் கோருகிறவருக்கும்,
த்விஷத் ப்ரமதநார்த்திநாம் அபி — (பெருமாளுடையவோ அல்லது தன்னுடையவோ) சத்ருக்களின் நிரஸகத்தைக் கோருகிறவருக்கும்,
ரங்கத்ருஶ்யோதயா — அரங்கத்தில் ப்ரத்யக்ஷமாக அனுபவத்திற்கு வருமவையும்,
ஸ்கலத்ஸமய காதரீ ஹரண ஜாகரூக — தடங்கல் வரும் காலத்தில் சேரும் பயத்தை விலக்குவதில் தூங்காமல் விழித்து
ஜாக்கிரதையாய்க் காத்துக்கொண்டிருப்பதுமான,
தே திவ்யா: குணா — உம்முடைய திவ்ய குணங்கள்,
இஹ — இங்கே,
க — எவை,
கர க்ரஹண தீக்ஷிதா — கை கொடுத்து ரக்ஷிப்பதையே தீக்ஷையாக (வ்ரதமாகக்) கொண்டவையல்ல
த்ரி வர்க்க பத வர்த்தி நாம்-தர்ம அர்த்த காமங்களை கோருகிறவர்க்கும்
த்ரி குண லங்க நோத்யோசி நாம் -முக்குண சேர்க்கையான பிரகிருதி மண்டலத்தை தாண்ட நினைத்து பிரயத்தனம் பட்டு
கைவல்யம் -பகவத் புருஷார்த்தம் வேண்டுபவர்க்கும்
த்விஷத் ப்ரமத நார்த்தி நாமபி-பகவத் பாகவத விரோதிகளை நிரசிக்க கோருபவர்களுக்கும்
ச ரங்க த்ருஸ் யோதயா -ஸ்ரீ ரெங்கத்தில் பிரத்யக்ஷமாக சேவிக்க வருபவர்களுக்கும்
ஸ்கலத் சமய காதரீ ஹரண ஜாக ரூகா-தடங்கல் வரும் காலத்தில் சேரும் பயத்தை விளக்க தூங்காமல்
விழித்து ஜாக்ரதையாக ரஷித்துக் கொண்டு இருப்பதுமான
ப்ரபோ -என் ஸ்வாமியே
கர கிரஹண தீக்ஷிதா க இவ தே ந திவ்யா குணா-உம்முடைய திவ்ய குணங்கள் இங்கே எவை கை கொடுத்து ரஷிப்பதையே
தீக்ஷையாக விரதமாக கொண்டவை இல்லாமல் அல்லவே —
உம் கல்யாண குணங்களின் வலிமையால் எங்கள் மநோ ரதம் -விரோதிகள் நிரசிக்கப் பட்டு நீர் மீண்டும்
ஸ்ரீ ரெங்கம் எழுந்து அருளி நித்ய சேவை மீண்டும் சாதித்து அருள வேண்டும் என்றபடி –
“ஆர்த்தன், கைவல்யத்தை விரும்புமவன், அர்த்தத்தை விரும்புமவன், மோக்ஷத்தில் ஆசையுள்ளவன்,
என்ற நால்வர் என்னைப் பஜிக்கிறார்கள்” என்றார் கீதையில்.
இவ்்விடத்திற் கேற்ப இங்கே ஒருவகையான விபாகம்.
(1) தர்மம் அர்த்தம் காமம் மூன்றையும் விரும்புகிறவர்கள்
(2) ப்ரக்ருதியை விலக்கி (ஜயித்து) கேவலாத்மாநுபவத்தை ஆசைப் படுகிறவர்கள்
(3) ப்ரக்ருதியைத் தாண்டி மோக்ஷம் செல்ல இச்சிப்பவர்கள்
(4) (பெருமாளுக்கு விரோதத்தைச் செய்வதால்) நமக்கு விரோதியானவர்களை நிரஸிக்கக் கோரும் நாம்.
பெருமாள் திருமேனிக்கு வரும் கெடுதியே நமக்கு ஆர்த்தி. அவர் திருமேனிக்குச் சத்ருக்களே நமக்குச் சத்ருக்கள்.
அவர் திருமேனி தீங்கின்றி விளங்குவது நம் காமம்.
பிரகிருதி வியுக்தமாகப் பிரகிருதி ஸம்பந்தமில்லாமல் கேவலாத்மாநுபவம் இருப்பதால்,
கைவல்யார்த்தி களையும் “ப்ரக்ருதிலங்கநார்த்திநாம்” என்பதால் சேர்த்து ஸங்க்ரஹிக்கலாம்.
நீர் தூங்குகிறதுபோல் பாவனை செய்தாலும், உம் குணங்கள் விழித்துக்கொண்டே இருந்து எங்களைக் கைதூக்கி ரக்ஷிக்கும்.
ரக்ஷணைக தீக்ஷிதரான பெருமாள்போல, அவர் திவ்ய குணங்கள் கரக்ரஹண தீக்ஷிதங்கள்.
தர்மார்த்த காமங்களும் கைவல்ய யோகமும் மோக்ஷதசையில் அங்குரமான அனுபவமும் இந்த அரங்கத்தில் உம்மை பஜிப்பதால்
உம் குணங்கள் கொடுக்கக் கிடைக்கின்றன.
அப்படியே இதற்கு விரோதிகளை நிரஸிக்க வேண்டும் என்ற எங்கள் மனோரதமும் உம் குணங்களின் வலிமையினால் நிறைவேறி,
நீர் கோயிலில் நித்யமாக எழுந்தருளியிருந்து ஸேவை ஸாதிக்க வேண்டும்
அறம் முதலாம் மூன்று தனில் அகம் படிந்து துணிவோர்க்கும்
அல்லல் மிகு வாழ்வு என்னும் ஆழ் கடலைக் கடந்து செலும்
பெரு முயற்சி செய்வோர்க்கும் பணிந்து உன்னை வாழ்வார் தம்
பகைவர்கள் ஒழிந்திடவே மனம் கொண்ட அடியார்க்கும்
நெறி தவறும் சமயத்தில் நேருகின்ற அச்சத்தை
நீக்குவதில் கருத்துடனே நீள் கரத்தால் காத்திடவே
பெரு நகராம் அரங்கத்தில் பள்ளி கொண்ட பெருமான் உன்
பல் குணத்துள் எவையே தாம் விரதத்துடன் நிற்க வில்லை –
————————————————-
அரங்கத்தில் பஜித்தால் பலன்களைக் கொடுத்துக் கை தூக்கி விட பகவத் குணங்கள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றன என்றார்.
இதில் நாம் பஜிப்பதற்குப் பிரதியாக நமக்குத் தெரியாமலே நாம் ஸுக்ருதமென்று புத்தி பூர்வமாக
இதற்கென்று செய்யாம லிருக்கையிலேயே பகவத் தயை தானாக அதிஸ்நேஹத்தால் நம்மை ஜாயமான தஶையில் கடாக்ஷித்து,
ஸாத்விகனாக்கி, மோக்ஷப்பொருளைச் சிந்திப்பவனாகச் செய்கிறது என்கிறார்.
பிபேதி பவப்ருத ப்ரபோ த்வது பதேச தீவ்ர ஒளஷதாத்
கதத்வ ரஸ துர்வேஷ பளிச பக்ஷவத் ப்ரீயதே
அபத்ய பரிஹார தீ திமுக மித்த மா கஸ்மி கீ
தமப்ய வசரே க்ரமாதவதி வத்சலா த்வத்தயா –10-
ப்ரபோ — ப்ரபுவே,
பவப்ருத் — ஸம்ஸாரத்தையுடைய சேதனன்,
த்வத் உபதேச தீவ்ர ஔஷதாத் — உம்மால் உபதேசிக்கப் படும தர்மம் என்னும் உக்ரமான மருந்திலிருந்து,
பிபேதி — பயப்படுகிறான்.
கதத்வ ரஸ துர்விஷே — கெட்ட மார்க்கத்தில் ரஸம் என்னும் கொடிய விஷத்தில்,
படிஶ பக்ஷவத் — தூண்டிமுள்ளை பக்ஷிப்பதில் (மீன் ரஸிப்பது போல),
ப்ரீயதே — ப்ரீதி பண்ணுகிறான்.,
இத்தம் — இப்படி,
அபத்ய பரிஹார தீ விமுகம் — தனக்குக கெடுதலைப் பரிஹரிப்பது என்னும் எண்ணத்தையே நோக்காதபடி,
தமபி — அப்படிக் கெட்டவனையும்,
அவஸரே — ஒரு கால விசேஷத்தில்,
ஆகஸ்மீகி — காரணமின்னது என்று அறியக்கூடாத (எங்களுக்குத் தெரிந்தவரையில் நிர்ஹேதுகம் என்று நினைக்கப்படும்),
வத்ஸலா — ஸ்நேஹமயமான,
த்வத் தயா — உம்முடைய தயை,
க்ரமாத் — படிப்படியாக (சன்ம சன்மாந்தரம் காத்து),
அவதி — ரக்ஷிக்கிறது.
பவப்ருத ப்ரபோ த்வது பதேச தீவ்ர ஒளஷதாத் –பிரபுவே -சம்சாரத்தை யுடைய சேதனன்-உம்மால் உபதேசிக்கப் படும் தர்மம் என்னும்
உக்ரமான மருந்தில் இருந்து -உபாயாந்தரங்களின் கடுமையை அனுசந்தித்து –
பவம் -சம்சாரம் -மங்களம் -என்று பிரமிக்க வைக்கும்
பிபேதி -பயப்படுகிறான் –
கதத்வ ரஸ துர்வேஷ பளிச பக்ஷவத் -கெட்ட மார்க்கத்தில் -ரசம் என்னும் கொடிய விஷத்தில் –
தூண்டில் உள்ளவற்றை மீன் ரசித்து மாட்டிக் கொள்வது போலே –
ப்ரீயதே-ப்ரீத்தி பண்ணுகிறான்
அபத்ய பரிஹார தீ திமுக மித்தம் -இப்படி தனக்கு கெடுதலை பரிஹரிப்பது என்னும் எண்ணத்தையே நோக்காத படி
ஆபி முக்யம் இருந்தாலுமே போதுமே -அது கூட இல்லாமல் அன்றோ உள்ளோம்
ஆகஸ்மி கீ -காரணம் இன்னது என்று அறியக் கூடாத -நிர்ஹேதுகமாக –
தமப்ய வசரே -இப்படிக்கு கெட்டவனையும் ஒரு கால விசேஷத்தில்
க்ரமாதவதி வத்சலா த்வத்தயா-உம்முடைய தயை வாத்சல்யம் – என்னும் கல்யாண குணமே படிப் படியாக ஜன்ம சன்மாந்தரம் ரஷித்து அருளி
ஜாயமான கடாக்ஷத்தால் சாத்விகனாக்கி தன்னைப் பற்றி சிந்திக்க அருளுகிறார் -யாதிருச்சிக்க ஸூ ஹ்ருதம் போன்று
மடி மாங்காய் இட்டு நடாத்தி கொண்டு அருளுகிறார் –தயா பிரசாத க்ரமங்களை அருளிச் செய்கிறார் –
சரணாகதி மேலே–20/21- ஸ்லோகங்களில் அருளிச் செய்வார் –
உம்முடைய ஆக்ஞையாகிய சுருதியால் உபதேசிக்கப்படும் தர்மத்தை அநுஷ்டிக்க நடுங்கி,
நிஷேதிக்கப்படும் கெட்ட மார்க்கத்தில் ப்ரீதி பண்ணுகிறோம்.
செய்த பாபத்திற்குப் பிராயச்சித்தத்தைத் தேடும் எண்ணத்தையே தூர விலக்குகிறோம்.
இப்படி க்ருத்யாகரண அக்ருத்யாகரண தோஷங்களைப் பரிஹரிக்கக்கூடிய அநுதாபம் பிராயச்சித்தம் முதலிய
வழிகளைக் கண்ணெடுத்தும் பாராமலிருக்கிறோம்.
இப்படியிருந்தும், அஜ்ஞாத ப்ராஸங்கித யாத்ருச்சிக ஸுக்ருதம் என்று சிலவற்றை ஸுக்ருதக் கணக்கில் வைத்துக் கொண்டு,
எங்கள் தோஷங்களைப் பாராட்டாமல் உம் தயை எங்களை ரக்ஷிக்கிறது.
இப்படித் தானாக ரக்ஷிக்கும் உம்முடைய தயை உம் திருமேனியை ரக்ஷித்து அரங்கத்தில் நித்யமாக நீர் எழுந்தருளியிருக்க வேண்டும்
என்ற எங்கள் மனோ ரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டாமோ?
கேட்காமலே ரக்ஷிக்கும் தயை கதறிக் கேட்டும் ரக்ஷிக்க வேண்டாமோ?
பவப்ருத் — ஸம்ஸாரத்தை மங்களமென்று நினைத்து கிடையாதது கிடைத்ததென்று இருக்கிறான்.
“பவம்” என்பது ஸம்ஸாரத்தையும் மங்களத்தையும் சொல்லும்.
சத்ய ஞானம் உபதேஶ: என்றார் ஜைமிநி. உபதேச பதம் தர்மத்தைச் சொல்லுகிறது.
ச்ருத்யுபதேசம் — சுருதி என்பது உம்முடைய ஆஜ்ஞை. அதை மீறினவன் உமக்குத் துரோஹி.
“செய்யாதனவற்றை” விரும்பிச் செய்கிறோம்.
அபத்ய பரிஹார தீ விமுகம் — அபத்யத்தை விலக்க வேண்டும் என்று எண்ணுவதில் ஆபிமுக்யம் இருந்தாலும் போதும்,
எண்ணுவதில் கூட விமுகராயிருக்கிறோம்.
இருபதாவது இருபத்தொன்றாவது சுலோகங்களில் சரணாகதி செய்யப் போகிறபடியால்
முன்புள்ள தயா ப்ரஸா க்ரமங்களை ஸூசிப்பிக்கிறார்.
பவக் கடலில் சுழன்று உழலும் மானுடவன் நீ வழங்கும்
பரிந்துரையாம் கசப்பான மருந்துக்கு அஞ்சுகிறான்
சுவை என்னும் கொடு விஷத்தை சுரக்கின்ற கீழ்மையிலே
தூண்டில் புழு நாடும் மீன் தனைப் போலே நச்சுகிறான்
இவை போன்ற தீய்மைகளை ஒழித்திடவும் எண்ணிடாதே
இருக்கின்ற மனிதனையும் இரக்கமுடன் திருவரங்கா
தவறாமல் உன் தயை தான் காரணமே ஹேதும் இன்றி
தருணத்தில் பாய்வதனால் நாளடைவில் காத்திடுமே —
—————————————
அபார்த்த இதி நிஸ்ஸிதா ப்ரஹரணாதி யோகஸ்தவ
ஸ்வயம் வஹஸி நிர்பயஸ்ததபி ரங்க ப்ருத்வீ தர
ஸ்வ ரக்ஷண மிபாபவத் ப்ரணத ரக்ஷணம் தாவகம்
யாதத்த பரமார்த்த விந்நியத மந்தராத் மேதி தே -11-ரங்க₃ப்ருத்₂வீபதே -என்று பாடபேதம்
ரங்கப்ருத்வீபதே — ரங்கராஜனே!
ப்ரஹரணாதியோக — ஆயுதம் முதலியவை இருப்பது,
அபார்த்த: — அநாவச்யம் (வீண்),
இதி — என்று,
நிஶ்சித — நிச்சயிக்கப் பட்டிருக்கிறது,
நிர்ப்பய — பயமில்லாத நீர்,
ததபி — ஆயினும் (அவற்றை),
ஸ்வயம் வஹஸி — நீரே தரிக்கிறீர் (சுமக்கிறீர்),
ப்ரணதரக்ஷணம் — ஆச்ரிதரக்ஷணம்,
ஸ்வரக்ஷணம் இவ — உம் ரக்ஷணம் போல,
தாவகம் — உம் சொந்தப் பணியாக,
அபவத் — ஏற்பட்டது,
யத் — ஏனெனில்,
பரமாத்ம வித் — பகவானே! தனக்கும் மற்ற எல்லா உயிர்களுக்கும் உயிர் என்று அறிந்த ஞானி,
தே அந்தராத்மா இதி — உம்முடைய அந்தராத்மா ,
உமக்கும் ஆந்தரமான (உள்ளான) உயிர் என்று,
ஆத்த — நீர் (கீதையில்) சொன்னீரல்லவா?
ரங்க ப்ருத்வீ தர -ஸ்ரீ ரெங்க ராஜனே -பூமிக்கு எல்லாம் அதிபதியாய் இருந்தும் பூமியில் ஏக தேசமான ஸ்ரீ ரெங்கம் விட்டு இருக்கலாமோ –
அபார்த்த இதி நிஸ்ஸிதா ப்ரஹரணாதி யோகஸ்தவ -தீய ஆயுதங்கள் உடன் நீ கூடியே இருப்பது வீண் -இது நிச்சயம்
-சதா பஞ்சாயுதம் பிப்ரத் -நீர் ரசிக்காமல் இன்று இருப்பதால் இவை வீண் அன்றோ –
ஸ்வயம் வஹஸி நிர்பயஸ்ததபி–இருந்தாலும் -பயமே இல்லாத நீர் -நீரே இவற்றைத் தரித்து இருக்கின்றீர் –
ஸ்வ ரக்ஷண மிபாபவத் ப்ரணத ரக்ஷணம் தாவகம்-ஆஸ்ரித ரக்ஷணம் -உம் ரக்ஷணம் போலே -உமது சொந்தப பணியாக அன்றோ ஏற்பட்டது –
யாதத்த பரமார்த்த விந்நியத மந்தராத் மேதி தே -ஏன் என்னில்-பகவானே -தனக்கும் மற்ற எல்லா உயிர்களுக்கும் உயிர் என்று அறிந்த ஞானி
உம்முடைய அந்தராத்மா -உமக்கும் உள்ளான உயிர் என்று அன்றோ நீர் ஸ்ரீ கீதையில் அருளிச் செய்தீர் அன்றோ –
(ஆகையால் உம் ரக்ஷணத்தைப் போல உம்முடைய உயிரான ஞானியின் ரக்ஷணமும் உம் சொந்த ரக்ஷணமாய் விட்டது.
உம் ஆத்ம ரக்ஷணம் உம்முயிரின் ரக்ஷணம் இரண்டும் உம் சொந்த ரக்ஷணம்தானே!)
ரங்கப்ருத்வீபதே — ரங்கராஜ என்னாமல் ரங்க ப்ருத்வீபதே என்பதால் ப்ருத்வீக்கெல்லாம் (பூமிக்கெல்லாம்) பதியாயிருந்தும்,
பூமியில் ஏகதேசமான ஸ்ரீரங்கநகரத்திற்கு மட்டும் பதியாயில்லாமல் இருக்க வேண்டுமோ? என்னும் அர்த்தம் த்வனிக்கிறது.
நிர்பய: உமக்கு உம் நிமித்தம் பயமில்லை. உம்மைக் காக்க உமக்கு ஆயுதமும் வேண்டாம்.
நரஸிம்ஹ தசையில் உமக்கு ஆயுதங்களே இல்லையே!
ததபி ஸ்வயம் வைஸி — ஆயினும் ஆயுதங்களை நீரே எப்போதும் சுமக்கிறீர்.
(ஸதா பஞ்சாயுதம் பிப்ரத்) இப்படிச் சும்ப்பது எங்களை ரக்ஷிக்கவல்லவோ? இல்லாவிடில் நிஷ்ப்ரயோஜனமாம்.
பரமாத்மவித் — ஞானி த்வாத்மைவ மே மதம் — ஞானியை பரமாத்மாவான உமக்கு அந்தராத்மா என்று நீர் சொல்லுவது
உம்முடைய அபிமான மாத்ர ஸாரமான நினைப்பு (க்ருஷ்ண மதம்) என்று சந்த்ரிகை.
ஆகையால் ஞானியை ரக்ஷிப்பதும் உம் ரக்ஷணம் போன்றது. ஆச்ரிதர் பயப்படாமலிருக்கவே நீர் ஆயுதம் தரிக்கிறீர்
படைக் கலன்கள் தாங்குவதால் பயன் இல்லை உன் தனக்கே
பயமற்று விளங்கும் நீ படைக்கலம் ஏன் தரிக்கின்றாய்
வடிவரங்கத்தலத் தரசே மேம் பொருளை உணர்ந்தவராய்
விளங்கும் நல் ஞானி யுன்தன் யுயிர் என்று விளம்பி யுள்ளாய்
அடியார்கள் அவர் போல் அனைவரையும் காத்திடவே
ஆயுதங்கள் தமைத் தாங்கி ஆயத்தமாய் நிற்கின்றாய்
அடியாரைக் காக்கின்ற அரும் செயல்கள் எல்லாமே
உன்னையே நீ காப்பனவாய் உண்மையிலே ஆயிற்றே –
————————————–
“நான் ஞானிக்கு அத்யந்தம் ப்ரியன். அவனும் எனக்கு அத்யந்தம் ப்ரியன்.
ஞானி எனக்கு அந்தராத்மா என்று நான் அவனை அபிமானிக்கிறேன்” என்ற கீதா ச்லோகத்தைக் காட்டி நின்றார் கீழ்.
அப்படியே நீரே எங்களுக்கு அத்யந்தம் ப்ரியமான வஸ்து. மற்றவை எதுவும் பிரியமானதல்ல,
ஸுகத்தைக் கொடுப்பதுமல்ல, அவை மேன்மேலும் பயத்தையே தருவன என்கிறார்.
அல்லது,
“முன்பே நீர் செய்த சரணாகதிக்குப் பலமாக இத்தேஹத்தின் முடிவில் உமக்கு மோக்ஷம் நிச்சயம்.
ஆகையால் இங்கே உள்ளவரையில் கொண்டபெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரோடு ஸுகமாயிருமே என்றால்,
இவையெல்லாம் துக்கமும் பயமுமே” என்று விவரிக்கிறார் என்னவுமாம்.
லசிஷ்ட ஸூ க சங்கதை ஸ்க்ருத கர்ம நிர்வர்த்திதை
களத்ர ஸூத சோதரா அநுசர பந்து சம்பந்திபி
தன ப்ரப்ருதி கைரபி பிரசுர பீதி பேதோத்தரை
ந பிப்ரதீ த்ருதிம் ப்ரபோ த்வத் அநு பூதி போகார்த்தின –12-
ப்ரபோ –ஸர்வாந்தர்யாமியான ப்ரபுவே!
த்வத் அநுபூதி போக அர்த்திந: உம்மை அநுபவிப்பது என்னும் இன்பத்தையே ஆசைப்படுகிறவர்கள்,
லகிஷ்ட ஸுக ஸங்கதை — மிகவும் அற்பமான ஸுகத்தின் ஸ்பர்சத்தைக் (ஸங்கத்தைக்) கொடுப்பதும்,
ப்ரசுர பீதி பேதோத்தரை — பெரிதான பலவித பயங்களை மேல்மேல் விளைவிப்பதும்,
ஸ்வ க்ருத கர்ம நிர்வர்த்திதை –தான் சிரமப்பட்டுச் செய்த (புண்ய) கர்மங்களால் ஸம்பாதிக்கப்பட்டதுமான,
களத்ர ஸுத ஸோதர அநுசர பந்து சம்பந்திபி — கொண்ட பெண்டிர், மக்கள், உடன்பிறந்தார், வேலைக்காரர்,
பந்துக்கள் என்று நன்றாய் நம்மை பந்தப் படுத்தும் இவர்களாலும்,
தந ப்ரப்ருதிகை: அபி — செல்வம், ஆயுள், ஆரோக்யம் முதலியவற்றாலும்,
த்ருதிம் — சந்தோஷத்தை,
ந பிப்ரதி — பெறுகிறதில்லை.
ப்ரபோ த்வத் அநு பூதி போகார்த்தின –-சர்வ அந்தர்யாமியான பிரபுவே -உம்மை அனுபவிக்கும் இன்பத்தையே ஆசைப்படுகிறவர்கள் –
நீர் ஞானிகளை ஆத்மாவாக கருதினாலும் -நாங்கள் நீரே சர்வ அந்தர்யாமி பிரபு என்று அறிவோம் –
லசிஷ்ட ஸூ க சங்கதை -மிகவும் அற்பமான ஸூ கத்தின் ஸ்பர்சத்தை-சங்கத்தை கொடுப்பதும் -சம்சார பந்தம் உண்டாக்கும் இவை
பிரசுர பீதி பேதோத்தரை-பெரிதான பலவித பயங்களை மேல் மேல் விளைவிப்பதும்
ஸ்க்ருத கர்ம நிர்வர்த்திதை-தான் சிரமப் பட்டுச் செய்த புண்ய கர்மங்களால் சம்பாதிக்கப் பட்டது மான
களத்ர ஸூத சோதரா அநுசர பந்து சம்பந்திபி -கொண்ட பெண்டிர் -மக்கள் உடன் பிறந்தார் வேலைக்காரர் பந்துக்கள் என்று
நன்றாய் நம்மைப் பந்தப் படுத்தும் இவர்களாலும்
தாரம் -சுழல் / மக்கள் முதலைகள் /சம்சாரம் பயங்கர கடல் -முகுந்த மாலை –
தன ப்ரப்ருதி கைரபி-செல்வம் ஆயுள் ஆரோக்யம் முதலியவற்றாலும்
ந பிப்ரதீ த்ருதிம் -சந்தோஷத்தை பெறுகிறது இல்லை –
ப்ரபோ — நீர் ஞானியை அந்தராத்மாவாகக் கருதினாலும், நாங்கள் நீரே ஸர்வாந்தர்யாமி, எங்கள் ப்ரபு என்று அறிவோம்.
லகிஷ்ட ஸுக ஸங்கதை — உம்மை அனுபவிப்பதே பேரின்பம் மற்றவை சிற்றின்பம் என்பர்.
ஆனால் இவற்றை — லகிஷ்டம் — மிகவும் அல்பமான (அதைக் காட்டிலும் சிறியதில்லாத) இன்பம் என்ன வேண்டும்.
அதிலும் ஸுகத்தையும் கொடுப்பதில்லை. அத்ருப்தியை, மேல் மேல் அனுபவிக்க ஆசை என்னும் ஸங்கத்தையே கொடுக்கிறது.
(ஸுகஸங்கேன பத்நாதி) என்ற கீதா சுலோகத்தை ஸூசிப்பிக்கிறார்.
“ஸுகத்தில் ஆசையைக் கொடுத்து (பாசங்களால்) கட்டுகிறது.
இங்கு மேன்மேலும் பந்தம் உண்டாகிறது என்பதைக் காட்ட “பந்து” “சம்பந்தி” என்கிற பதங்களைச் சேர்க்கிறார்.
ஸ்வக்ருத கர்ம நிர்வர்த்திதை — இப்படி அத்யல்பமான போலி இன்பத்தை அடைய எவ்வளவு பாடுபட்டு புண்ய கர்மம் செய்திருக்க வேண்டும்?
ஓர் அஞ்ஜலிக்குக் கிங்கரரகும் நீர் இருக்கையில், ஓர் சரண நினைப்புக்கு சாச்வதமான பேரின்பத்தை
தாயக் கிரமமாக அளிக்க நீர் காத்துக் கொண்டிருக்கையில், அல்பால்ப ஸுகத்தைத் தேடுகிறோம்.
களத்ர — இது நிதம்பத்திற்கும் இல்லாளுக்கும் பெயர். பெரிய நிதம்பத்தையிட்டு ஸ்திரீயைக் கூறும்.
ஊன்றிப் பார்த்தால் இந்தப் பெயரே வெறுப்பைக் கொடுக்க வேண்டுமே?
(“சந்த்ரமூர்த்தியைப் போல அழகிய விலாஸத்தால் கவரும் குருகளத்ரத்தை யுடையவன்” என்று காதம்பரியில் வர்ணனம்.
இங்கு குருகளத்ரம் என்பதற்கு பெரும் நிதம்பம் என்றும் குருபத்னியான தாரை என்றும் பொருள்.)
ஸுத — கர்ப்பத்திலிருந்து வெளியே நழுவவிடப்பட்ட சிசு, எத்தனை ஸோம ஸுதங்களான கர்மங்கள் செய்யவேண்டும் ஒரு ஸுதனைப் பெற.
“தாரமென்னும் சுழல், மக்கள் ஸயுஜர் என்னும் முதலைகள், இவற்றோடு கூடிய ஸம்ஸாரம் என்னும் பயங்கரமான கடல்” என்று முகுந்தமாலை.
ஸோதர — பங்காளிகள். “ஞாதியிருந்தால் நெருப்பு வேறு வேண்டுமோ?”
அநுசர — உமக்கு நாங்கள் அடிமை செய்ய வேண்டியிருக்க, அடிமையான எங்களுக்கு அடிமைகளா?
(குருஷ்வ மாமநுசரம்) என்பதன்றோ எங்கள் நிலை?
பந்து — பாசங்களால் கட்டுகிறவர்கள். ஸம்பந்திகள் என்பதால் இவர்கள் எல்லாருமே நன்றாய்க் கட்டுகிறவர்கள்.
தந ப்ரப்ருதிகைரபி — தனம் முதலியவற்றாலும், புத்ரனைக் காட்டிலும் ப்ரியம், வித்தத்தைக் காட்டிலும் ப்ரியம் என்றது உபநிஷத்.
புத்ரனைக் காட்டிலும் பணத்தில் ப்ரீதி வைப்பர். அது ஆபத்தே.
(மஹதபி தநம் பூரி நிதநம்) என்று ப்ரபோத சந்த்ரோதயம்
(ஐஶ்வர்யம் ஶத்ரு ஶாலிதா) என்று பாரதம்.
ப்ரசுர — கொஞ்சம் ஸுகம் இருப்பதை மறுக்கவில்லை. ஆனால் பயமே அதிகம்.
பீதிபேதோத்தரை — பலவகையான பயங்களில் மிகவும் அதிகமான பயங்கள். மேலும் பயத்தை விளைவிப்பன.
த்வத் அநுபூதி போக அர்த்திந –(அபயம் ப்ரதிஷ்டாம் விந்ததே) என்று உம்மிதமே அபயத்திற்கு நிஷ்டையை விரும்புமவர்கள்.
த்ருதிம் — ஸந்தோஷத்தை, அபயத்தை, தரிப்பை
நின்னையே அகலாது நுகர்கின்ற போகத்தை
நண்ணுகின்ற மனமுடைய நல்லோர்கள் யாவருமே
மின்னனைய அற்ப சார மகிழ்வினையே தருகின்ற
முன்னாளில் தாம் செய்த கருமத்தினால் விளைந்தனவாய்
எண்ணரிய பல்வகையாம் அச்சத்தையே தருவனவாம்
இல்லாளும் மக்களாலும் உடன் பிறந்தார் பணியாளர்
இன்னம் உள்ள உற்றத்தார் இவராலும் தனத்தாலும்
ஏற்படுமாம் இன்பத்தில் உளம் கொள்ள மாட்டாரே –
——————————————-
ந வக்துமபி சக்யதே நரக கர்ப வாஸாதிகம்
வபுஸ்ச பஹு தாதுகம் நிபுண சிந்தநே தாத்ருசம்
த்ரி விஷ்டப முகம் ததா தவ பதஸ்ய தேதீ பத
கிமத்ர ந பயாஸ் பதம் பவதி ரங்க ப்ருத்வீ பதே -13-
ரங்கப்ருத்வீபதே — ரங்கபூமிக்கு அரசனே!
நரக கர்ப்ப வாஸாதிகம் — நரகம் கர்ப்பவாஸம் முதலியது,
வக்துமபி — (இவ்வளவு கஷ்டமென்று) சொல்வதற்குக்கூட,
ந ஶக்யதே — சக்யமல்லை: (ஸாத்யமில்லை),
வபு:ச — தேஹமும்,
நிபுண சிந்தநே — உன்னி ஆலோசித்தால்,
தாத்ருஶம் — அப்படியே துஸ்ஸஹமானது,
த்ரிவிஷ்டபமுகம் — ஸ்வர்க்கம் முதலியதும்,
தேதீபத — ஜ்யோதிர்மயமாய் ப்ரகாசிக்கும்,
தவ பதஸ்ய — உம் ஸ்தாநத்தை (உம் சுடரடியை) (யிட்டுப் பார்த்தால்),
ததா — அப்படியே (நரக துல்யமாகும்),
அத்ர — இங்கே (இப்புவியில்),
கிம் — எதுதான்,
பயாஸ்பதம் ந — பயத்திற்கிடமாவதில்லை?
ரங்க ப்ருத்வீ பதே —ஸ்ரீ ரங்க பூமிக்கு அரசனே
ந வக்துமபி சக்யதே நரக கர்ப வாஸாதிகம் -நரக கர்ப்ப வாசம் முதலியது-இவ்வளவு கஷ்டம் என்று சொல்வதற்கு கூட சாத்தியம் இல்லை
வபுஸ்ச பஹு தாதுகம் நிபுண சிந்தநே தாத்ருசம் -தேகமும் அப்படியே உன்னி சிந்தித்தால் துஸ் சஹமாய் இருக்கும்
த்ரி விஷ்டப முகம் ததா தவ பதஸ்ய தேதீ பத -ஸ்வர்க்கம் முதலானதும் ஜ்யோதிர் மயமாய் பிரகாசிக்கும்
-உம் ஸ்தானத்தை -உன் சுடர் அடியை -இட்டுப் பார்த்தால் அப்படியே நரக துல்யமாய் இருக்கும்
கிமத்ர ந பயாஸ் பதம் பவதி -இங்கு இப்புவியில் எது தான் பயத்துக்கு இடமாவது இல்லை
உம்மை விட்டு பிரிந்து இருப்பதே நரகம் என்றவாறு -ஸ்ரீ ரெங்கத்தில் நீர் மீண்டும் எழுந்து அருளி
எங்கள் பயத்தை போக்கி நிரதிசய நித்ய -ஸூ கம் தந்து அருள வேண்டும்-
தேஹ ஸம்பந்திகளான சுற்றத்தார் வேண்டாம், தேஹத்தோடாவது ஸுகமாயிருக்க லாமோவென்னில், அதுவும் ஸாத்யமில்லை.
(விபத் கேஹம் தேஹம்) , விபத்துக்களுக் கெல்லாம் இல்லம் சரீரம் என்று ப்ரபோத சந்த்ரோதயம். நரகம் பெருந் துக்கமயமானது.
அதில் அடைபடுவதிலும் கர்ப்பப் பைக்குள் அடைபடுவது அதிகக் கஷ்டம் என்பதை அதற்குப் பிறகு கர்ப்பவாஸத்தைக் கூறுவதால் ஸூசிப்பிக்கிறார்.
ஆதிகம் — முதலியது. உள்ளேயிருக்கும் துன்பம் ஒரு புறமிருக்க, வெளியே வருவதற்கு எவ்வளவு கஷ்டம்.
(யோநே: ஶரீரம்) என்று ஸூத்ரகாரர் வைராக்ய பாதத்தை முடித்தார்.
அதற்கு முன் ஸூத்ரத்தில் ரேதஸ் ஸிக் யோகத்தைப் பேசினார்.
கர்ப்பப்ப் பையின் யோகம் கிடைக்க ரேதோயோகம் கிடைக்க வேண்டும் என்று ஜுகுப்ஸையைக் காட்டினார்.
வபுஶ்ச — நரகத்திலும் கொடியது தேஹம் என்றார் ப்ரஹ்லாதாழ்வான்–
தேஹே சேத் ப்ரீதிமாந் மூட: நரகே பவிதா ச ஸ) தேஹமென்னும் நரகக் குழியில் ப்ரீதி வைப்பானாகில்,
அந்த மூடனுக்கு நரகத்திலும் ப்ரீதியே ஏற்படும். தேஹத்திலும் நரகம் கொடியதோ ? அவனுக்கு நரகவாஸம் தண்டனை ஆகாது என்பது கருத்து.
பஹுதாதுகம் –ப்த தாதுமயம் த்ரிமலம் என்பர்
நிபுண சிந்தநே — ப்ரஹ்லாதன் நிரூபித்தது போல் ஆழ்ந்து யோசித்தால்,
தாத்ருஶம் — நரகாதிகள் போன்றதே.
தவ பதஸ்ய தேதீ பத: அத்யர்க்காநலதீப்தமாய் சுடர்ச் சோதியான பரமபதமென்னும் உம் ஸ்தானம் ப்ரகாசிக்கையில்,
அதை உத்தேசித்து உம் சுடரடியின் இன்பத்தை ஆலோசிக்குங்கால் என்று அரங்கன் விஷயமுமாகலாம்.
அரங்கமென்பது மற்ற திவ்யதேசங்களுக்கு உபலக்ஷணம்.
த்ரிவிஷ்டபமுகம் ததா ஸ்வர்க்கமும் மற்ற ஸத்யலோகமும் அப்படியேயாகும்.
(நிரயோ யஸ் த்வயா விநா) உம்மை விட்டுப் பிரிவு நரகமே.
அத்ர கிம் ந பயாஸ்பதம் — இந்தப் பூமண்டலத்தில் எதுதான் பயத்திற்கு இடமில்லை?
ரங்கப்ருத்வீபதே — தப்பிச் சொன்னேன். இந்தப் பூமண்டலத்தில் ரங்கமென்னும் ப்ருத்வீ பாகம் ஸுகத்தைத் தருவதே, பயமற்றதே.
இந்தப் பூமியில் இருந்தாலும், அரங்கமும் அரங்கம் போன்ற திவ்ய தேசங்களும் அபயத்தையும் ஸுகத்தையும் தருபவையே.
ஆகையால ப்ருத்வீபதியான நீர் அவற்றை ரக்ஷித்துத் தரவேண்டும்.
தேதீபத: என்ற பாடம் சுத்தம்.
————————————————————————–
பவந்தி முக பேததோ பய நிதான மேவ ப்ரபோ
ஸூப அ ஸூப விகல்பிதா ஜகதி தேச காலாதய
இதி பிரசுர ஸாத்வஸே மயி தயிஷ்யஸே த்வம் ந சேத்
க இத்தம நு கம்பிதா த்வதநு கம்ப நீ யஸ்ஸ க –14-
ப்ரபுவே — என் ப்ரபுவே!,
ஶுபாஶுப விகல்பிதா — சுபம் அசுபம் என்று பிரித்துப் பேசப்படும்,
தேஶகாலாதய — தேசம் காலம் முதலியவை,
முகபேதத — ஓரொரு பர்யாயமாக,
பயநிதாநமேவ — பயத்திற்கே காரணமாக,
பவந்தி — ஆகின்றன,
இதி — என்று (இப்படி),
ப்ரதிதஸாத்வஸே — மிகவும் பரந்த பயத்தையுடைய,
மயி — என்னிடம்,
த்வம் — நீர்,
ந தயிஷ்யஸே சேத் — தயவு செய்யாது போனால்,
இத்தம் — இப்படி,
க: அனுகம்பிதா — வேறு யார் தயை செய்வாருளர்?,
த்வதுகம்பநீய: ச — உம் தயைக்குத் தக்க பாத்ரம்,
க: — (என்னிலும்) யாருளர்?
ப்ரபோ -என் பிரபுவே
ஸூப அ ஸூப விகல்பிதா ஜகதி தேச காலாதய -ஸூபம் அஸூபம் என்று பிரித்துப் பேசப்படும் -தேசம் காலம் முதலியவை
பவந்தி முக பேததோ பய நிதான மேவ -ஒரு ஒரு பர்யாயமாக -பயத்திற்கே காரணமாக ஆகின்றன
இதி பிரசுர ஸாத்வஸே மயி தயிஷ்யஸே த்வம் ந சேத் -இப்படி மிகவும் பரந்த பயத்தை யுடைய என்னிடம் நீர் தயவு செய்யாது போனால்
20-வது சுலோகத்தில் தன் சரணாகதிக்குப் பலத்தைக் குறிப்பிட்டு ப்ரார்த்திக்கிறார்.
அதற்கு முன் பெருமாளுக்கு தயை உண்டாகி வளரும்படி தம் பயத்தையும் கோயில் முதலிய திவ்ய தேசங்களில்
திவ்யமங்கள விக்ரஹங்களை ஸதா ஸேவித்துக் கொண்டிருப்பதே தனக்கு ஸுகத்தைத் தரும் என்பதையும்,
அதை அளிக்க பெருமாளைத்தவிர வேறு கதி இல்லை என்பதையும் சொல்லி வருகையில்
இதில் ஆளவந்தாருடைய ஸ்தோத்ர ரத்னத்தின் பதங்களையே அமைத்துப் பிரார்த்திக்கிறார்.
பெரியோர்கள் பாசுரத்தை அநுஸரித்துப் பிரார்த்தித்தால், பெருமாள் திருவுள்ளம் சீக்கிரம் உகக்கலாம் என்று ஆசை.
ஆளவந்தார், (யதி மே ந தயிஷ்யஸே ததோ தயநீய: தவ நாத துர்லப:) என் விஷயத்தில் நீர் தயை செய்யாவிடில்,
உமக்கு தயை செய்யத் தக்கவனே கிடைக்க மாட்டான்.
உம்மலால் நான் நாத சூன்யன்.
என்னலால் நீர் தயாபாத்ர சூன்யர்,
தைவத்தால் எற்பட்டிருக்கும் இந்த ஸம்பந்தத்தை நீர் காப்பாற்ற வேணும்.
(மா ஸ்ம ஜீஹப:) நழுவ விடக்கூடாது என்றார்.
இவரும் பதினெட்டாவது சுலோகத்தில் மாஸ்ம தஜ்ஜீஹபத் என்று அதையே கூறுகிறார்.
உலகத்தில் தேசம் காலம் முதலியவற்றில் சிலவற்றை சுபமென்றும், சிலவற்றை அசுபமென்றும் பிரிப்பது வீணே.
எல்லாம் பயத்தையும் துக்கத்தையும் தருவதால், உண்மையில் எல்லாம் அசுபமே.
ஸ்வர்க்கம் சென்றால் தேவர்கள் இவனை “பசு” என்று எண்ணுகிறார்கள்.
அங்கு ஏறவிட்ட கர்மம் விசையற்றவளவிலே கீழே விழுந்து விடுவோம் என்ற பயமுமுண்டு.
நல்லவையே தரும் என்றும் தீயவையே தரும் என்றும்
தேசத்தையும் காலத்தையும் திறம்படவே பிரித்தாலும்
எல்லாமே வெவ்வேறு வழிகளிலே தீமையையே
அளிக்கும் படி அமைந்தனவாய் அச்சத்தையே தரும் என்றே
எல்லையில்லா பயம் கொண்ட என் மீதே அரங்கா நீ
இரக்கம் தான் கொள்ளாயேல் இவ்வாறு அருள் புரியும்
நல்லானும் வேறு உளனோ நிலவுலகில் நின்னுடைய
நல்லருளைப் பெறும் தகுதி நிறைந்தவனும் வேறு உளனோ –
—————————————————————
ஸக்ருத் பிரபதன ஸ்ப்ருசாமபய தான நித்ய வ்ரதீ
ந ச த்விர பிபாஷஸே த்வமிதி விஸ்ருத ஸ்வோக்தித
யதோக்த கரணம் விதுஸ்தவ து யாதுதா நாதய
கதம் விதத மஸ்து தத் க்ருபண ஸார்வ பவ்ம மயி –15-
ஸக்ருத் ப்ரபதா ஸ்ப்ருஶாம் — ஒரு தரம் ப்ரபத்தி என்னும் உபாயத்தைத் தொட்டவர்க்கும்,
த்வம் — நீர்,
அபயதாந நித்ய வ்ரதீ — அபயமளிப்பதை நித்ய வ்ரதமாக உடையவர் (என்று நீர் உத்கோஷித்திருக்கிறீர்),
த்வி — இரண்டாம் தடவை,
க ச அபிபாஷஸே — பேசமாட்டீர்,
இதி — என்று,
ஸ்வோக்தித — உம்முடைய உறுதியான பேச்சாலேயே,
விச்ருத — (நீர்) ப்ரஸித்தர்,
யாது தாநாதய — ராக்ஷஸர் முதலியவரும்,
தவ — உம்முடைய,
யதோக்த கரணம் — சொன்னவண்ணம் செய்வதை,
விது — அனுபவித்துளர்,
தத் — அந்த குணம்,
க்ருபண ஸார்வபௌமே — கார்ப்பண்ய பூர்த்தியுள்ள அகிஞ்சநரில் முதன்மையான,
மயி — என் விஷயத்தில்,
கதம் — எப்படி,
விததம் அஸ்து — பொய்யாக ஆகலாம். ?
ஸக்ருத் பிரபதன ஸ்ப்ருசாம் -ஒரு தரம் பிரபத்தி என்னும் உபாயத்தை தொட்டவர்க்கும் –
ஸக்ருத் ஏவ பிரபன்னாயா -என்பதையே இங்கு அருளிச் செய்கிறார்
விபீஷணன் கூட வந்ததற்கும் பலன் உண்டே -சம்பந்தம் காட்டவே ஸ்ப்ருசாம்-என்று அருளிச் செய்கிறார்
த்வம் அபயதான நித்ய வ்ரதீ -நீர் அபயம் அளிப்பதையே விரதமாக -தீக்ஷையாக -சர்வ பூதேப்ய அபயம் ததாமி–ஏதத் மம விரதம் –
ததாமி நிகழ் காலம் –சர்வ காலிகம் என்றபடி
ந ச த்விர பிபாஷஸே த்வமிதி விஸ்ருத ஸ்வோக்தித –இரண்டாவது வார்த்தை மாற்றி பேச மாட்டீர்
-உம்முடைய உறுதியான பேச்சாலே -நீர் பிரசித்தர் –ராம த்வி ந அபி பாஷதே
யதோக்த கரணம் விதுஸ்தவ து யாதுதா நாதய-ராக்ஷசர் முதலானவர்களை உம்முடைய சொன்ன வண்ணம் செய்வதையே அனுபவித்து உள்ளனர்
யதோத்த காரீ அன்றோ நீர்
கதம் விதத மஸ்து தத் க்ருபண ஸார்வ பவ்ம மயி -அந்த குணம் -கார்ப்பண்ய பூர்த்தி உள்ள -அகிஞ்சனான என் விஷயத்தில் எப்படி பொய்யாகலாம் –
அடியேன் மநோ ரதம் பூர்த்தி யான பின்பு தானே நீர் விஜூரராக இருக்கலாம்
தாசேஷூ சத்யன் -அடியாரவர்க்கு மெய்யன் அன்றோ -உம் பெயர் நிலைத்து இருக்க அருளால் ஒழியக் கூடாதே –
பெருமாளைத் தவிர தனக்கு வேறு கதியில்லை என்று கூறிவிட்டு, இதில் தன்னிலும் க்ருபணனில்லை என்கிறார்.
தனக்கு வேறு கதியில்லாதது போலவே பெருமாளுடைய தயைக்கும் தன்னைத் தவிர வேறு கதியில்லை.
அதாவது தயையைக் காட்ட தானே உத்தமமான பாத்ரம்.
முலைக் கடுப்பாலே கன்றுக்குப் பாலைக் கொடுத்தல்லது பசு நிற்கவொண்ணாதாற் போலே
ரக்ஷ்யனை ரக்ஷித்தல்லது தரிக்கமுடியாது பெருமாளுடைய தயையினால்.உம் அபயப்பிரதான வ்ரதம் நித்யம்.
ஒரு தடவை உபாய ஸ்பர்சம் ஒருவனுக்கு ஏற்பட்டால் அவனைக் காப்பாற்றும் வரையில் நீர் கடனாளியாய் ஸஜ்வரராய் இருக்கிறீர்.
மனோரதத்தைப் பூர்த்தி செய்த பிறகே விஜ்வரராய் ப்ரமோதத்தை (ஆனந்தத்தை) அடைகிறீர்.
ஸேதுக் கரையில் வந்து (ஸக்ருதேவ ப்ரபந்நாய) “ஒருக்காலே சரணாக அடைகின்றார்க்கும்” என்று தன் விரதத்தை உத்கோஷித்தார்.
அதையே இங்கு ஸக்ருத் — ப்ரபதந — ஸ்ப்ருஶாம் என்று அநுவதிக்கிறார்.
(ஸர்வபூதேப்ய, அபயம் ததாமி, ஏதத் மம வ்ரதம்) என்றதையும் இங்கு அநுஸரிக்கிறார்.
ததாமி என்பதில் “லட்” (நிகழ்காலத்தைக் குறிப்பது) ஸார்வகாலிகம். ஆகையால் மூன்று காலங்களையும் சொல்லுகிறது.
இந்த விரதத்தை ஸ்வபாவிகமாக உடையவர். (ராம: த்வி:ந அபிபாஷதே) என்று உமது வார்த்தை.
உம்முடையது வெறும் பேச்சல்ல, ராக்ஷஸர்களுக்கும் அவர்களுக்குத் தலைவனான விபீஷணனுக்கும் மெய்யரானீர்.
“அவர் ஸார்வ பௌமன்” என்றால் நானும் அப்படியே. அடியேன் க்ருபண ஸார்வபௌமன்.
நீர் “யதோக்தகாரீ” என்று ப்ரஸித்தரல்லவா? “யதோக்தகாரணம்” என்று நம்பெருமாள் திருநாமத்தையும் நினைப்பூட்டுகிறார்.
என்னை ரக்ஷியாவிட்டால் திருநாமமே பொய்யாய்விடும்.
“தாஸேஷு ஸத்யன்” “அடியவர்க்கு மெய்யன்” என்னும் திருநாமத்தைத் தரிக்கச் செய்யும் என்று தேவநாயகன் துதி.
ஸ்ப்ருஶாம் — ப்ரபத்தியில் ஸம்பந்தப்படும் க்ஷணத்திலேயே அபயதானம் ஸங்கல்பிக்கப் படுகிறது.
உபாய ஸ்வரூபம் க்ஷணஸ்பர்சமாயுள்ளது. செய்யும் ப்ரபதநத்தில் தொட்டுக்கொள்ளும் அநுபந்திகளும் ரக்ஷிக்கப் படுகிறார்கள்.
விபீஷணாழ்வானோடு கூட வந்த நாலு ராக்ஷஸர்களும் ரக்ஷிக்கப் பட்டார்கள்.
அதற்கு இவர் செய்த ப்ரபத்தியில் அவர்களுக்கும் ஸ்பர்சம் ஏற்பட்டதே காரணம்.
ஒரு முறையே சரணம் என உன்னிடமே உற்றவர்க்கு
அபயம் தனை அளிக்கின்ற அரும் செயலை விரதம் என
நிரந்தரமாய் கொண்டுளதாய் நீ தானே வெளியிட்டாய்
நீயே தான் இரு முறைகள் நான் உரையேன் என்று உரைத்துப்
பெறும் புகழைப் பெற்றுள்ளாய் பகர்வதையே செய்பவனாய்
புவியில் உனை அரக்கர்களும் முதலானோர் அறிந்துள்ளார்
ஒரு புகலும் அற்றவரின் ஒப்பற்ற தலைவன் என
உறும் எனக்கு உன் விரதம் வீணாக ஆகிடுமோ –
———————————————–
அநு க்ஷண சமுத்திதே துரித வாரிதவ் துஸ்தரே
யதி க்வசன நிஷ்க்ருதிர் பவதி ஸாஅபி தோஷா விலா
ததித்த மகதவ் மயி ப்ரதி விதா நமா தீயதாம்
ஸ்வ புத்தி பரி கல்பிதம் கிமபி ரங்க துர்ய த்வயா –16-
ரங்கதுர்ய — ரங்கநாத!,
அநுக்ஷண ஸமுத்திதே — ப்ரதிக்ஷணமும் பெருகுகிறதும்,
துஸ்தரே — தாண்டுவதற்கு அரிதானதுமான,
துரிதவாரிதௌ — பாபமாகிற கடல் விஷயத்தில்,
க்வசந — (பிராயச்சித்த காண்டங்களில்) எங்காவது,
நிஷ்க்ருதி — பிராயச் சித்த விதி,
யதி — இருந்ததானால்,
ஸா அபி — அந்தப் பிராயச் சித்தமும்,
தோஷாவிலா — (ப்ரதிக்ஷணமும் பயங்கள் உற்பத்தியாகின்றன என்று முன் சொன்ன காரணத்தாலேயே) அசுத்தமாகவே,
பவதி — ஆகிறது,
தத் — ஆகையால் ,
இத்தம் — இப்படி,
அகதௌ — வேறு கதியேயில்லாத,
மயி — என் விஷயத்தில்,
த்வயா — உம்மால்,
ஸ்வபுத்தி பரிகல்பிதம் — உம் புத்தியாலேயே ஆலோசிக்கப்பட்ட,
ப்ரதிவிதாநம் — ப்ராயச் சித்தம்,
ஆதீயதாம் — செய்யப்பட வேண்டும்.
அநு க்ஷண சமுத்திதே–ப்ரதி க்ஷணமும் பெருகுகிறதும்
துரித வாரிதவ் துஸ்தரே -தாண்டுவதற்கு அரிதானதுமான -பாபம் ஆகிற கடல் விஷயத்தில்
யதி க்வசன நிஷ்க்ருதிர் பவதி ஸாஅபி தோஷா விலா –ப்ராயச்சித்த காண்டங்களில் விதித்த விதி இருந்ததனால்
அந்த பிராயச்சித்தமும் -ப்ரதி க்ஷணமும் பயன்கள் உத்பத்தி ஆகின்றன -என்று முன் சொன்ன காரணத்தாலேயே -அசுத்தமாகவே ஆகிறது –
ததித்த மகதவ் மயி-ஆகையால் இப்படி வேறு கதியே இல்லாத என் விஷயத்தில்
ப்ரதி விதா நமா தீயதாம் –ப்ரதி விதாநம் ஆதீயதாம் -பிராயச்சித்தம் செய்யப் பட வேண்டும்
ஸ்வ புத்தி பரி கல்பிதம் கிமபி ரங்க துர்ய த்வயா –ஸ்ரீ ரெங்க நாதா -உம் புத்தியால் ஆலோசிக்கப் பட்ட பிராய்ச சித்தம் செய்யப் பட வேணும்
நீ இன்றி ஒன்றுமே செய்ய முடியாத அகதி அன்றோ அடியேன் என்றபடி -நீயே கர்த்தாவாய் அடியேனை செய்விக்க வேணும் –
ஸ்ரீ ரெங்க பிரபு -இந்த ஸ்ரீ ரெங்க ரக்ஷண பரத்தை நீர் தானே வஹித்துக் கொண்டு எங்கள்
பயத்தை தீர்த்து அருள வேண்டும் என்பதே இப்பொழுது பிரபதனம் –
ப்ரபத்தியை ‘ஒருக்கால் அநுஷ்டித்தவனுக்கு நான் அபயப்ரதானம் செய்கிறேன்’ என்றும்,
‘நீ ஒரு கைமுதலற்றவன்’ என்றும் சொல்லுகிறாய்.
ஆனால் நீ ஸகல பாபங்களுக்கும் பிராயச்சித்தமான பிரபதனமென்னும் ந்யாஸவித்யையை அனுஷ்டித்தா லல்லவோ
நான் உன்னை ரக்ஷிக்கலாம் என்றால்,
இந்த சுலோகத்தால் தான் அவனன்றி ஒன்றும் செய்ய முடியாத அகதி என்கிறார்.
பிரபத்தி என்னும் பிராயச்சித்தத்தை அனுஷ்டிப்பதில் எவ்வளவோ தோஷங்கள் வரக்கூடும்.
உலகத்தில் ஒரு பாபத்துக்காக ஒரு பிராயச்சித்தத்தை ஆரம்பித்தால், இடையில் நேரும் தோஷங்களுக்காக வேறு பிராயச்சித்தங்கள்!
இப்படி பிராயச்சித்தங்களின் தொடர்ச்சி எல்லையில்லாமல் போய்க்கொண்டேயிருக்கும்.
ஸமுத்ரம் ஓய்ந்தவன்றுதான் எங்கள் பாபங்களும் ஓய்வது.
ஆகையால் நான் செய்யப்போகும் ப்ரபத்தி என்னும் உபாயத்தையும் உம்முடைய சுபமான ஸங்கல்பத்தால் நிர்தோஷமாயும்,
பூரணமாகவும் செய்து, நீர் காரயிதாவாய் (செய்விப்பவராய்) என்முகமாய் நடத்தி வைக்க வேணும்.
நாங்கள் செய்வது கிலமாயும் அபூர்ணமாயுமிருக்கும்.
கிலமில்லாமல் பூரணமாகச் செய்வதில் நீர்தான் நிபுணர்.
(நிதானம் தத்ராபி ஸ்வயமகில நிர்மாண நிபுண:) ப்ரபத்தி முதலிய உபாயங்களில் எங்களுக்கு அந்வயம் உம்மால்தான் ஏற்படவேண்டும்.
ஆகையால் அவ்வுபாயத்தைக் குறைவற நீரே செய்து வைக்கவேண்டும்.
ரங்கதுர்ய — ரங்கத்தின் ரக்ஷண பாரத்தை வஹிப்பவர் நீரல்லவா? அந்த ரக்ஷணப் பொறுப்பை நீர் ஏற்றுக்கொண்டு
எங்கள் பயத்தைத் தீர்க்க வேண்டும் என்று தானே இப்போது செய்யும் பிரபதனம்.
கணம் தோறும் பெருகி வரும் கடத்தரிய வினைக் கடலைக்
கடப்பதற்கே நெறி வகுத்த கழுவாயைச் செய்தாலும்
அணை போன்ற குற்றங்கள் அது தனையும் குலைத்திடுமே
ஆதலினால் கதியேதும் அற்றவனாய் நிற்கின்றேன்
கணக்கில்லா என் தீ வினைகள் கழிவதற்கே அரங்கா நின்
கருத்தாலே தக்கதொரு கழி வாயைத் தோற்றுவித்து
எனை அதிலே மூட்டுவித்து எவ்விதமாம் தடையும் அற
எனையதனைச் செய்வித்து ஏற்றம் உறச் செய்வாயே –
————————————————————
விஷாத பஹுளாதகம் விஷய வர்க்கதோ துர் ஜயாத்
பிபேமி வ்ருஜி நோத்தரஸ் த்வதநு பூதி விச்சேததி
மயா நியத நாதவா நயமிதி த்வமர்த்தா பயன்
தயாதன ஜகத் பதே தயித ரங்க சம் ரக்ஷமாம் –17-
வ்ருஜினோத்தர — அதிக பாபமுடைய (நான்),
விஷாத பஹுளாந் — துக்கமே அதிகமாயுள்ளதும்,
துர்ஜயாத் — ஜயிக்க முடியாததுமான,
விஷயவர்கத — (சிற்றின்ப) விஷயங்களின் கூட்டத்தின் வலிமையினால்,
த்வதனுபூதி விச்சேத — உம்மை அநுபவிப்பதற்குத் தடை ஏற்பட்டு விடுமோ என்று,
பிபேமி — பயப்படுகிறேன்,
தயாதந — தயைச் செல்வம் நிறைந்தவரே,
ஜகத்பதே — லோகத்திற்கு ஸ்வாமியே,
தயிதரங்க — ரங்கத்தில் ப்ரீதியை உடையவரே,
மயா — என்னால்,
அயம் — இவன்,
நியத நாதவாந் — கைவிடாத நாதனை உடையவன்,
இதி — என்று,
த்வம் — நீர்,
அர்த்தாபயந் — சொல்லிக்கொண்டு,
மாம் — என்னை,
ஸம்ரக்ஷ: — நன்றாக ரக்ஷித்தருள வேணும்.
விஷாத பஹுளாதகம் –துக்கமே அதிகமாய் உள்ளதும்
விஷய வர்க்கதோ துர் ஜயாத்-ஜெயிக்க முடியாததுமான விஷயாந்தரங்களின் கூட்டத்தின் வலிமையினால்
உண்ணிலாவிய ஐவரால் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம் நண்ணிலா வகையே -என்னுடைய சரீரே வர்த்தமானமாய் –
அத ஏவ அவர்ஜ நீயமுமாய் ம்ருத்யு சத்ருசமுமாய் பயங்கரமுமாய் இருந்த
பஞ்ச இந்த்ரியங்களாலும் விஷயங்களில் என்னை ஆகர்ஷிப்பித்து -என்றபடி –
பிபேமி வ்ருஜி நோத்தரஸ் த்வதநு பூதி விச்சேததி-அதிக பாபம் உடைய நான் –
உம்மை அனுபவிக்கத் தடை ஏற்பட்டு விடுமோ என்று பயப்படுகிறேன் –
மயா நியத நாதவா நயமிதி த்வமர்த்தா பயன் -என்னால் இவன் கை விடாத நாதனை யுடையவன் என்று திரு உள்ளம் பற்றி
அருளிச் செய்து -அடியேனை ரஷித்து அருள வேண்டும் –
தயாதன ஜகத் பதே தயித ரங்க சம் ரக்ஷமாம் -தயை செல்வம் நிறைந்தவர் –
சர்வ லோக ஸ்வாமியே -ஸ்ரீ ரெங்கத்தில் பிரியம் யுடையவர் –
நீர் ஜகத் பதியாய் இருக்க உம் சொத்தை கள்ளர் கொண்டு போகலாமா –
இந்த சரீரத்தின் முடிவில் மோக்ஷம் கிடைப்பது நிச்சயமாயிருந்தாலும், இங்கிருந்த நாள் உன் திருவடிகளில் பக்தி விச்சேதமின்றி இருக்க வேணும்.
பக்தியாவது இடைவிடாமல் ப்ரீதியுடன் உன் திவ்யமங்கள விக்ரஹத்தை தியானிப்பது.
‘அப்படி அனுபவிக்கும் பேரின்பம் கிடைக்குமானால் வைகுண்டவாஸத்திலும் ஆசையில்லை’ என்றல்லவோ எங்கள் துணிபு.
ஆனால் அந்த பக்திக்கு விஷயங்கள் என்னும் ரூப ரஸாதிகள் விரோதிகள்.
எங்கள் தியானத்திற்கு விஷயமான (ஆலம்பநமான) உம் திவ்யமங்கள விக்ரஹத்துக்கு ஆபத்து வந்தால் அதுவும் தியானத்திற்கு விரோதி.
ஆகையால் விஷயங்களை அடியோடு விலக்க வேண்டும். இந்த விஷயமான உம் விக்ரஹத்தோடு நித்ய யோகம் வேணும்.
உம்மை தியானிப்பதில் விச்சேதம் வந்தால் அதுவே எங்களுக்கு பயம்.
“உண்ணிலாவிய ஐவரால் குமைதீற்றி என்னை உன் பாதபங்கயம் நண்ணிலாவகையே”.
அநாதி காலமெல்லாம் விஷய ப்ரவணமாய் பகவதனுபவ விரோதியாகையாலும்,
“என்னுடைய சரீரே வர்த்தமானமாய் அத ஏவ அவர்ஜநீயமுமாய் ம்ருத்யு ஸத்ருஶயமுமாய் பயங்கரமுமாயிருந்த
பஞ்சேந்திரியங்களாலும் விஷயங்களிலே என்னை ஆகர்ஷிப்பித்து” என்று பிள்ளான் பணித்தார்.
விஷாத பஹுளாத் — துக்கமயமான; பகவான் ஆனந்தமயமாயிருப்பதற்கு எதிராக இவை துக்கப்ர சுரம்.
துர்ஜயாத் — பெருமாளையும் வசப்படுத்தலாம் போலிருக்கிறது. விஷயங்களை ஜயித்து இந்திரியங்களை வசப்படுத்துவது அரிதாயிருக்கிறது.
வ்ருஜினோத்தர — நான் உத்தரன் (உயர்ந்தவன்) ஆவது வ்ருஜினத்தாலேயே;
‘க்ருபண ஸார்வபௌமன்’, ‘அபராத சக்ரவர்த்தி’ என்றல்லவோ நான் பெருமையடைவது!
ஜகத்பதே! — நீர் ஸ்வாமியாய், எல்லாம் உம்முடையதன்றோ? உம் ஸொத்தைக் கள்ளர் கொண்டுபோக விடலாமோ?
செய்வினையோ மிகப் பெரிதாம் தடையின்றி தொடர்கின்றேன்
சகமிதிலே உறும் சுகங்கள் துயர் தனையே தருவனவாய்
செயிப்பதற்கும் அரியவையாய் திறம் உளதை நான் அறிவேன்
திரு வரங்கத்தை காதல் உற்று தனி இடமாய்க் கொண்டவனே
தயை என்னும் நிதியுடையாய் தரணி தனின் தனித் தலைவா
நின்னுடைய அனுபவத்தில் தடையுறவே அஞ்சுகிறேன்
நயந்து உன்னை அடியேனே நாதன் என வரித்ததனை
நற் பொருளாய்க் கொண்டு என்னை நீ தானே காத்து அருளே –
———————————————————-
நிசர்க்க நிர நிஷ்டதா தவ நிரம்ஹச ஸ்ரூயதே
ததஸ் த்ரியுக ஸ்ருஷ்ட்டிவத் பவதி ஸம்ஹ்ருதி க்ரீடிதம்
ததா அபி சரணா கத ப்ரணய பங்க பீதோ பவான்
மதிஷ்டமிஹ யத் பவேத் கிமபி மா ஸ்ம தஜ்ஜீ ஹபத் –-18-
த்ரியுக — (கலியுகம் தவிர மற்ற) மூன்று யுகங்களில் விபவாவதாரம் செய்பவரே!
ஷாட்குண்யபூர்ணரே!;
நிரம்ஹஸ — பாபமற்றவரான;
தவ — உமக்கு;
நிஸர்க நிரநிஷ்டதா — எப்பொருளும் அநிஷ்டமாகக் கூடாத ஸ்வபாவமானது;
ஶ்ரூயதே — சுருதியில் கூறப்பட்டிருக்கிறது.
தத: — ஆகையால்;
ஸ்ருஷ்டிவத் — ஸ்ருஷ்டியைப் போல;
ஸம்ஹ்ருதி — ஸம்ஹாரமும்;
தவ — உமக்கு;
க்ரீடிதம் — விளையாட்டாக;
பவதி — இருக்கிறது;
ததாபி — அப்படியிருந்தும்;
பவாந் — நீர்;
ஶரணாகத ப்ரணய பங்க பீத — சரணாகதனுடைய உம் விஷயமான பரிவைத் திரஸ்கரிக்க பயப்படுகிறவர்
இஹ — (ஆகையால்) இவ்வுலகில்;
யத் கிமபி — எது ஒன்று;
மதிஷ்டம் — எனக்கு இஷ்டமாகுமோ;
தத் — அதை;
மாஸ்ம ஜீஹபத் — நழுவ விடக்கூடாது..
நிசர்க்க நிர நிஷ்டதா-எப்பொருளும் அநிஷ்டமாகக் கூடாத ஸ்வ பாவமானது உண்டு என்று
தவ நிரம்ஹச ஸ்ரூயதே -பாபம் அற்ற உமக்கு -என்று சுருதியில் கூறப்பட்டு இருக்கிறது –
ததஸ் த்ரியுக ஸ்ருஷ்ட்டிவத் பவதி ஸம்ஹ்ருதி க்ரீடிதம் -கலி யுகம் தவிர மற்ற மூன்று யுகங்களிலும் விபவாதாரம் செய்து அருளுபவரே
ஸ்ருஷ்டியைப் போலவே சம்ஹாரமும் உமக்கு லீலையாகவே இருக்கிறது –
ததா அபி சரணா கத ப்ரணய பங்க பீதோ பவான் -அப்படி இருந்தும் நீர் சரணாகதனுடைய உம் விஷயமான பரிவை திரஸ்கரிக்கப் பயப்படுகிறவர்
மதிஷ்டமிஹ யத் பவேத் கிமபி மா ஸ்ம தஜ்ஜீ ஹபத் -ஆகையால் இவ்வுலகத்தில் எது ஓன்று எனக்கு இஷ்டம் ஆகுமோ அதை நழுவ விடக் கூடாது
உம்முடைய திரு மேனி ரக்ஷை தானே அடியேன் இஷ்டம் -இஷ்ட பங்கம் வராதபடி உம்மை சதா சேவித்துக் கொண்டே இருக்கும் படி
உம்முடைய திவ்ய மங்கள விக்ரஹத்தை நீரே ரஷித்து அருள வேணும் -என்றபடி –
இந்த ஸ்லோகத்திலும் ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்ன ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டே அருளிச் செய்கிறார் –
‘என் விக்ரஹத்தை ரக்ஷித்துக்கொள்ள வேண்டும் என்று நீர் ப்ரார்த்திக்கிறீர் என்று தெரிகிறது.
ஆனால் என்னுடையதை நான் ரக்ஷித்துக் கொள்ளாமல் விடுவேனா?
வராஹ நாரஸிம்ம ராமாத்யவதாரங்களில் சத்ருக்கள் என் விக்ரஹத்தை ஹிம்ஸிக்கும்படி விட்டேனா?
ஆதலால் நீர் ப்ரார்த்திப்பானேன்?’ என்று பெருமாள் சங்கை ஸூசிதமாக,
அந்த ஆக்ஷேபத்தை அழகாகப் பரிஹரிக்கிறார்.
‘உமக்கு ஸ்ருஷ்டியைப்போல, ஸம்ஹாரமும் விளையாட்டே.
தன்னுடையதைத் தான் அழிப்பானோ என்று உம் விஷயத்தில் கேட்க முடியாது.
நீர் ஸம்ஹாரம் செய்வதும் உம்முடையதைத்தானே! உமக்கு அநிஷ்டத்தை நீர் தடுப்பீர்.
விரோதிகள் உம் விக்ரஹத்தை உதைத்தாலும் அது உமக்கு அநிஷ்டமாகாது.
உம்மைப் பற்றி (நிரநிஷ்டோ நிரவத்ய:) என்று ஏகாயந சுருதி கூறுகிறது.
(நிரநிஷ்டோ நிரம்ஹஸ:) என்றும் சுருதி. ஒரு பொருள் அநிஷ்டமாவதற்கு பாபமே காரணம்;
காரணமான பாபமில்லாத முக்தனுக்கு ஒரு வஸ்துவும் அநிஷ்டமில்லை, எல்லாம் ஸுகரூபமே.
இது முக்தனுக்கு நீர் கொடுக்க வந்தது. உமக்கு இது ஸ்வபாவம்.
உலகத்தில் பயமேயில்லாத உமக்கு ஆச்ரிதனுடைய இஷ்டத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்று ஒரு பயமுண்டு.
உம்முடைய திருமேனி ரக்ஷை என் இஷ்டம் (மதிஷ்டம்). உம் திருமேனியின் லயம் எனக்கு அநிஷ்டம்.
உமக்கு ஸ்வயம் இஷ்டாநிஷ்டங்கள் இல்லாது போனாலும், ஆச்ரிதனான எனக்கு இஷ்டபங்கம் வராதபடி
உம்மை ஸதா ஸேவித்துக் கொண்டிருக்கும்படி உம் திருமேனியை ரக்ஷித்தருள வேண்டும்.
அதனால் ஆச்ரிதர்களுடைய ப்ரணயபங்கம் வந்துவிடுமோ என்கிற பயம் உமக்கும் ஏற்படாது.
இங்கும் ஆளவந்தார் ஸ்தோத்ரத்தின் வார்த்தையையே அநுஸரிக்கிறார்.
இழிவேதும் அற்றவன் நீ என்பதனால் துக்கமிலா
இயல்புடையன் என யுன்னை இயம்பிடுமே அரு மறைகள்
செழிப்பான அறு குணங்கள் நிறைந்தனவாம் உன் தனக்கு
ஸ்ருஷ்டியைப் போலே அழித்தலுமோர் திரு விளையாட்டு எனவாகும்
வழி பட்டு உன் அடி அடைந்தோர் விருப்பத்தை மறுப்பதற்கு
மனம் அஞ்சி நீ என் தன் விருப்பத்தில் நல்லவற்றை
ஒழியாமல் மேல் கொண்டு உரியதனைச் செய்வதனால்
உனை யுற்ற எனைக் காத்தே ஊக்கமுடன் அருளிடுவாய் –
———————————————-
கயாது ஸூத வாயச த்வி ரத புங்கவ திரௌபதீ
விபீஷண புஜங்கம வ்ராஜ கணாம் பரீஷாதய
பவத் பத ஸமாச்ரிதா பய விமுக்தி மா புர்யதா
லபே மஹி ததா வயம் சபதி ரங்க நாத த்வயா -19-
ரங்கநாத — ரங்கநாதனே;
யதா — எப்படி;
கயாதுஸுத — கயாதுதேவியின் புத்ரனான ப்ரஹ்லாதன்;
வாயஸ — (ஜயந்தன் என்னும்) காகம்;
த்விரதபுங்கவ — கஜேந்த்ரன், த்ரௌபதி, விபீஷணன்;
புஜங்கம — ஸுமுகன் என்னும் நாகம்;
வ்ரஜகண –கோப ஜனங்கள்;
அம்பரீஷாதய — அம்பரீஷன் முதலியவர்கள்;
பவத்பதஸ்மாஶ்ரிதா — உம் திருவடிகளை நன்றாக ஆச்ரயித்து;
பயவிமுக்திம் — பயத்திலிருந்து விமோசனத்தை;
ஆபு — அடைந்தார்களோ;
ததா — அப்படியே;
வயம் — நாங்களும்;
ஸபதி — உடனே;
த்வயா — உம்மாலே;
லபேமஹி — (பய விமோசனத்தை) அடைவோமாக.
கயாது ஸூத வாயச த்வி ரத புங்கவ திரௌபதீ -கயாது புத்திரனான ப்ரஹ்லாதன் -ஜெயந்தன் என்னும் காகம் -கஜேந்திரன் -திரௌபதி
விபீஷண புஜங்கம வ்ராஜ கணாம் பரீஷாதய-விபீஷணன் -ஸூ முகன் என்னும் நாகம் -கோப ஜனங்கள் -அம்பரீஷன் முதலானவர்கள்
பவத் பத ஸமாச்ரிதா பய விமுக்தி மா புர்யதா-உம் திருவடிகளை நன்றாக ஆஸ்ரயித்து -பயத்தில் இருந்து விமோசனத்தை -அடைந்தார்களோ
லபே மஹி ததா வயம் சபதி ரங்க நாத த்வயா -அப்படியே நாங்களும் உடனே உம்மாலே பாபா விமோசனத்தை அடைவோமாக
பரம ஹம்சர்கள் பலர் இங்கே கதற உதவாமல் இருப்பது என் -பயக்ருத் பய நாசனரான நீரே எங்கள் பயத்தை போக்கி அருள வேணும் –
ஸ்ரீ ரங்கம் ஓர் இடமும் ஸ்ரீ ரெங்க நாதன் ஓர் இடமும் இருக்கலாமோ –
பெருமாள் தன் அபய ப்ரதான வ்ரதத்தை உத்கோஷித்ததைப் பேசினார்.
உத்கோஷணம் இருக்கட்டும். கோடிக்கணக்கான உம் அனுஷ்டானங்களை நீர் அனுஸரிக்க வேண்டாவோ என்கிறார்.
கயாதுஸுத — முதலில் அஸுரசிசுவான ப்ரஹ்லாதாழ்வான்.
கயாது என்ற தாயின் பெயரையிட்டு அவரையே காயாதவர் என்பர்.
அவர் ஸாதுக்களில் தலைவர் வைஷ்ணவர்களுக்கு முதலானவர்.
பகவானுடைய அகடிதகடனாஶக்தியை வெளிப்படுத்துகிறது என்பதற்காக ந்ருஸிம்ஹாவதாரத்தை எடுக்கிறார்.
மஹாஸுரன் வீட்டுத்தூண்தான் வேண்டுமோ?
இங்கோர் மண்டபத்தில் ஆயிரம் தூண்களில் ஒன்றும் நீர் அவதரிக்க உதவாததோ?
அஸுரனின் சிறுவனுக்காகத்தான் அவதரிக்க வேண்டுமோ?
தலை நரைத்த கிழவனானால் அடியேனுக்காக ஆகாதோ என்று திருவுள்ளம்.
வாயஸ — ஜகன்மாதாவான பிராட்டியிடம் அபசாரப்பட்ட இந்த்ர புத்ரனான ஜயந்தன்.
இந்த்ரன் ‘ஹவிர்புக்’; அவன் பிள்ளை ‘பலிபுக்’ (பலியைச் சாப்பிடும் காக) ரூபத்துடன் வந்தான்.
நீர் கிருபை செய்வதற்கு ஒரு வாயஸமாயே இருக்க வேண்டுமோ? (பரம) ஹம்ஸர்கள் இத்தனை பேர் கதறுகிறார்களே?
த்விரத புங்கவ — கஜேந்த்ரன் ஒரு நீர்ப்புழுகல்ல,
(பரமாபதம் ஆபந்ந:) என்று ஆர்த்தியின் காஷ்டையில் இருந்தவன்.
‘நீர் உண்டு; வேக ஸம்ரம்பத்திற்கு கருடனுண்டு; கூர் நேமியுண்டு; ரக்ஷிக்க நானுண்டு.
அத்திகிரியரசே! நீர் எல்லா ஜந்துக்களுக்கும் பொதுவாயிருக்க, யானையென்றும் மனிதன் என்றும் பேதம் கூடுமோ?’ என்று பேரருளாளனைக் கேட்டார்.
(ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி …. பண்டிதா: ஸமதர்ஶிந:) என்று பாடவில்லையோ?
‘விபஶ்சித்’தான நீர் பண்டிதராய், ப்ராஹ்மணனான உம் வேதாந்தாசிரியனையும் ஒரு பசுவையும் ஒரு யானையையும் ஸமமாகப் பார்க்கவேண்டாமோ?
புங்கவ என்று ச்ரேஷ்டத்தைச் சொல்லும் பதம் மாடு ஜாதியையும் சொல்லுமாதலால் அதையும் எடுப்பது போல் அமைந்திருக்கிறது.
த்ரௌபல — ‘நிர்தீஜ்ஜர் ஸபை நடுவே லஜ்ஜையைத் துறந்து சரணாகதி சாஸ்த்ரத்தை மூதலிப்பித்துப் பெற்ற மஹாபாக்யவதி’
என்று ஸ்ரீலோக தேசிகன் புகழ்ந்தார். ரங்கமத்யத்தில் எங்கள் உயிரான உம் திருமேனியின் நித்யஸேவையைத் தந்தருள வேணும்.
விபீஷண — பாரதத்திற்கு த்ரௌபதியைப் போல ராமாயணத்திற்கு விபீஷணன்.
புஜங்கம — காளியன் என்னும் ஸர்ப்பம், உம் திருவடி அவன் தலை மேலேயிருந்த ஸம்பந்தத்தினால் அவனுக்கும்
உம் பத ஸமாஶ்ரயணம் உண்டு. அவன் பத்னிகள் சரணம் புகுந்தார்கள்.
‘ஸுமுகன்’ என்னும் நாகம் என்றும் சொல்வார்கள். ‘ஒருக்கால் பகவான் பெரிய திருவடிமேல் ஏறியருளி ஸஞ்சரிக்கும்போது
பெரிய திருவடி பசியால் பூமியில் ஸஞ்சரித்த ‘ஸுமுகன்’ என்கிற ஸர்ப்பத்தைப் பக்ஷிக்கவர,
ஸுமுகன் பயாக்ரந்தனாய் பெருமாளை சரணம் புக, அவர் வைந்தேயன் ஸர்ப்பத்தை புஜிக்கவொட்டாமல் மேலே இழுக்க,
அதற்குள் ஸுமுகன் புற்றில் நுழைந்து விட்டான்’ என்று பெரியார் வ்யாக்யானத்திலுள்ளது.
‘புஜங்கம விஹங்கம’ என்று மேலே 25வது சுலோகத்தில் பேசுகிறது வேறு.
இந்த ஸுமுக வ்ருத்தாந்தத்தில் ஒருவாறு இரண்டும் இங்கு சேரும்.
வ்ரஜ கண — கோகுல வாஸிகளான ஆண் பெண் அடங்கலும் (வ்ரஜ ஜநார்த்திஹந்) என்று கோபிகா கீதைக்கு “வ்ரஜ ஜன” என்ற பாடம் பொருந்தும்.
அங்கு கோபர்கள் ஐந்து லக்ஷம்; இங்கு கோடிக்கணக்காக எல்லா ஜாதிகளான ஆண் பெண்கள் ப்ரார்த்திக்கின்றனர்.
அம்பரீஷ — ‘அம்பரீஷ சக்கரவர்த்தியினிடம் துர்வாஸ மஹரிஷி த்வாதசியன்று பிக்ஷைக்கு வருகிறோம் என்று சொல்லி
ஸ்நானத்திற்குச் சென்று விளம்பித்து வர, பாரணாகாலம் கழிவதைக் கண்டு, ஜலபாரணம் பண்ணி
அம்பரீஷன் துர்வாஸருக்காகக் காத்துக் கொண்டிருந்தான். துர்வாஸர் வந்து ஜலபாரணம் பண்ணின ராஜாவைப் பார்த்துக் கோபித்து
அவரை ஸம்ஹரிக்கத் தொடங்க, ஸுதர்னாழ்வானும் பகவதாக்ஞையால் துர்வாஸஸ்ஸைத் துரத்தி
ராஜாவின் காலிலே விழும்படி செய்து அவ்வரசனைக் கொண்டே ரக்ஷித்தார்.
பக்தனுக்கு வந்த பயம் எதிரியான மஹரிஷி பேரிலேயே திரும்பி, அவரை புவனத்ரயமும் ஓட வைத்தது.
ரிஷி பகவானைச் சரணம்புக, ‘நாபாக புத்ரனான அம்பரீஷனையே சரணமடையும்; நான் பக்த பாரதீனன்.
அஸ்வதந்த்ரன்போல இருக்கிறேன்’ என்று நீர் அவரைத் திருப்பி விட்டீர்.
‘பக்த பராதீனன்’ என்பதை எங்கள் ஆசை விஷயத்திலும் உண்மையாக்க வேண்டும்.
பய விமுக்திம் ஆபு — ஸம்ஸார பயத்திலிருந்து விமோசனம் என்னும் மோக்ஷத்தை இப்போது ப்ரார்த்திக்கவில்லை.
எங்கள் உயிரான உம்மைப் பற்றிய பயத்தின் நிச்சேஷ நிவ்ருத்தியையே கோருகிறோம்.
பயநாஶன: என்கிறபடி பயத்தைச் செய்வித்த நீரே எங்கள் பயத்தைப் போக்க வேண்டும்.
ஸபதி — உடனே பயம் நீங்கவேண்டும்.
(த்ருடி யுகாயதே த்வாம் அபஶ்யதம்) என்று கோபீஜனங்களின் விரஹதாகம்(க்ஷணம் யுக ஶதம் இவ யாஸாம் யேந விநா அபவத்) என்றார் சுகர்.
அப்படியே உம் விரஹம் எங்களுக்கு துஸ்ஸஹமாயிருக்கிறது.
ரங்கநாத ரங்கம் ஓரிடம் நாதன் ஓரிடமாயிருப்பது நீங்கி, ரங்கத்தின் நாதன் ரங்கத்திலேயே இருக்க வேண்டும் என்று
அடுத்த சுலோகத்தில் ப்ரார்த்திப்பது இங்கே அழகாக வ்யஞ்ஜிக்கப் படுகிறது.
அரக்கர் மகன் பிரகலாதன் அக்காக்கள் முதலையிடம்
அகப்பட்ட மதக் களிறு ஐ மன்னர் அரும் துணைவி
அரக்கர் கோன் விபீடணன் ஆய்ச்சியர்கள் காளிங்கன்
அம்பரீஷன் முதலானோர் உன் தனது இணை அடியைச்
சரண் அடைந்து பயம் தன்னைத் தவிர்த்தவராய் ஆயினரே
திருவரங்க நாயகனே நாங்களுமே அவ்வாறே
விரைவாக உன் தன்னால் அச்சத்தின் பிடி இருந்து
விடுதலையை அடைந்திடவே வழி காட்டி அருள்வாயே –
——————————————————————–
பயம் சமய ரங்கதாம்ந்ய அநிதர அபிலாஷ ஸ்ப்ருசாம்
ஸ்ரியம் பஹுளய ப்ரபோ ஸ்ரித விபக்ஷ முன்மூலய
ஸ்வயம் சமுதிதம் வபுஸ்தவ நிசா மயந்த சதா
வயம் த்ரி தச நிர்வ்ருதிம் புவி முகுந்த விந்தே மஹி –-20-
ப்ரபோ — ப்ரபுவே;
ரங்கதாம்நி — அரங்கமாநகரில்;
அநிதரபிலாஷ ஸ்புருஶாம் — மற்றொன்றில் ஆசையைத் தொடாத பரமைகாந்திகளுடைய;
பயம் — பயத்தை;
ஶமய – தீரும்படி செய்யவேணும்;
ஶ்ரிதவிபக்ஷம் — ஆச்ரிதருக்கு விரோதிகளை;
உந்மூலய – வேரறுக்க வேண்டும்;
(புவி) முகுந்த – இப்புவியிலுள்ளபோதே; முக்திச்சுவையை அளிப்பவரே;
வயம் — நாங்கள்;
தவ – உம்முடைய;
ஸ்வயம் ஸமுதிதம் — ஸ்வயம் வ்யக்தமான;
வபு — திருமேனியை;
(ரங்கதாம்நி — அரங்கமாநகரிலேயே)
ஸதா — எப்பொழுதும்;
நிஶாமயந்த – ஸாக்ஷாத்தாக அனுபவித்துக் கொண்டு;
புவி — பூலோகத்தில்;
த்ரிதஶநிர்வ்ருதிம் — நித்யஸூரிகளின் அனந்தத்தை ;
விந்தேமஹி — அடைவோமாக.
பயம் சமய ரங்கதாம்ந்ய அநிதர அபிலாஷ ஸ்ப்ருசாம் –-மற்று ஒன்றில் ஆசையைத் தொடாத பரமை காந்திகள் யுடைய பயத்தை தீரும் படி செய்ய வேணும் –
ஸ்ரியம் பஹுளய ப்ரபோ ஸ்ரித விபக்ஷ முன்மூலய-ஆஸ்ரிதர்களுடைய விரோதிகளை வேர் அறுக்க வேண்டும் –
ஸ்ரீ ரெங்க ஸ்ரீ பெறுக வேண்டும் என்று தானே -எங்கு வசிப்பவர்களும் ஆசாசிப்பது –
ஸ்வயம் சமுதிதம் வபுஸ்தவ நிசா மயந்த சதா -நாங்கள் உம்முடைய ஸ்வயம் வ்யக்தமான திரு மேனியை ஸ்ரீ -ரங்க நகரிலேயே எப்பொழுதும்
நிசா மயந்த -என்றோ அரங்கத்தில் அரங்கன் இருந்தார் என்று கேட்டு மட்டும் போக செய்யாமல் நித்யம் சேவை சாதித்து அருள வேணும்
வயம் த்ரி தச நிர்வ்ருதிம் புவி முகுந்த விந்தே மஹி –சாஷாத்தாக அனுபவித்து பூ லோகத்திலேயே
நித்ய ஸூரிகள் யுடைய அனுபவத்தை அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும் –
இதுதான் கோரிய பலம். மீமாம்ஸையின் இருபதாவது அத்தியாயத்தில் எல்லையற்ற மோக்ஷானந்தமான
நித்ய ஸூரிகளின் ஆனந்தத்தைக் காட்டியுள்ளது.
இவரும் இருபதாவது சுலோகத்தில் மோக்ஷச் சுவை போன்ற இச்சுவைக்கு அபாயமில்லாமல் நித்யாநுபவத்தை ப்ரார்த்திக்கிறார்.
இந்த பர ஸமர்ப்பணமே இந்த அபீதி ஸ்தவத்தின் விஷயம்.
இதை ‘இதி பரஸமர்ப்பித:’ என்று அடுத்த சுலோகத்தில் அநுவதிப்பதாலும் இது தெரிகிறது.
பயம் ஶமய –
கீழ் ஒவ்வொரு சுலோகத்திலும் ‘பயம்’ ‘பீதி’ என்று பயத்தையே ப்ரஸ்தாவித்தார்.
இதில் அந்த பயத்தின் சாந்தியைச் செய்யும் என்கிறார்.
அநிதர அபிலாஷ ஸ்ப்ருஶாம் —
மற்றொரு பொருளின் ஆசையைக்கூடத் தொடமாட்டார்கள்; வஸ்துவைத் தொடுவது எங்கே?
ஶ்ரியம் பஹுளய —
‘ஸ்ரீரங்கஸ்ரீ பெருகவேண்டும்’ என்றல்லவோ எங்கு வஸிப்பவர்களும் ஆசாஸிப்பது!
ஸ்ரீசங்கரரும் ததநுஸாரிகளும் (இதம் ஸ்ரீரங்கம்) என்று தினமும் த்யானம் செய்கிறார்கள்.
ப்ரபோ —
இந்த ப்ரார்த்தனையை நிறைவேற்ற நீர் ஸமர்த்தரல்லவோ!
ஶ்ரித விபக்ஷம் உந்மூலய –
(ந மே த்வேஷ்யோ அஸ்தி) என்றபடி உமக்கு விபக்ஷமில்லாவிடினும், எங்கள் விபக்ஷத்தை இனிக் கிளம்பாதபடி வேருடன் பிடுங்கி எறியவேணும்.
ஸ்வயம் ஸமுதிதம் வபு —
(யத் யத் தியா த உருகாய விபாவயந்தி தத் தத் வபு : ப்ரணயஸே மதநுக்ரஹாய ) என்ற பாகவத வசனத்தையும்,
‘தமர் உகந்த தெவ்வுருவம் தானாய்’ என்பதையும், நினைக்கிறார்.
இதனால் பராசர சுகாதிகள் ஸம்ப்ரமாயமும் இதுவே என்று காட்டப்படுகிறது.
நிஶாமயந்த: ஸதா —
(ஸதா பஶ்யந்தி ஸூரய) என்பதுபோல அடியோங்களும் உம்மை அரங்கத்தில் ஸதா ஸேவித்து
‘ஜிதம்தே’, ‘பல்லாண்டு’ என்று பாடிக் கொண்டிருக்க வேண்டும்.
‘நிஸமயந்த’ என்றால் கேட்பதைச் சொல்லும்.
“அரங்கத்தில் அரங்கன் எழுந்தருளியிருக்கிறார்” என்று கதை கேட்பது போறாது.
“நிஶாமயந்த” என்றால் பார்ப்பது. நாங்கள் நேரில் பார்த்து ஸேவிக்கும்படி நீர் அநுக்ரஹிக்க வேண்டும்.
த்ரிதஶ நிர்வ்ருதிம் — (இந்த்ர லோகத்தியதான அச் சுவையை) பரமபத சுவையை
புவிமுகுந்த – இங்கேயே எல்லையற்ற வைகுண்ட ஸுகத்தைக் கொடுக்குமவர்.
விந்தே மஹி — அடைவோமாக.
இதை ஆத்மநே பதமாகப் பிரயோகித்திருப்பதால், பெருமாளுக்கு இதனால் வரும் ப்ரயோஜனத்தில் விருப்பமில்லாவிட்டாலும்
அவர் அடியார்களின் ப்ரயோஜனத்தைக் கருதி அவர் செய்யவேண்டும் என்பது ஸூசிப்பிக்கப் படுகிறது.
நினை யன்றி வேறு எதையும் நாடாத அடியார்கள்
தம் நெஞ்சில் தோன்றி யுள்ள தடையாகும் பேர் அச்சம்
தனை ஒழித்து நீ அருள்வாய் திருவரங்க நகரத்தில்
திரு வைணவ செல்வத்தை செழிப்பு அடையச் செய்து அருள்வாய்
உனை வணங்கும் அடியார்க்கு ஏற்பட்ட பகை தன்னை
வேரோடு களைந்து அருள்வாய் தானேயாய் உதித்ததுவாம்
உனதுருவை எப்பொழுதும் உடன் இருந்து வணங்கியராய்
உயர் தேவர் இன்பத்தை உற்றிடுவோம் இங்கேயே –
——————————————————–
ஸ்ரிய ப்ரிப்ருடே த்வயி ஸ்ரித ஜநஸ்ய சம்ரக்ஷகே
சதத்புத குணோ ததா விதி சமர்ப்பிதோ அயம் பர
ப்ரதி க்ஷண மத பரம் ப்ரதய ரங்க தாமா திஷூ
ப்ரபுத்வம நு பாதிகம் ப்ரதித ஹேதி பிர்ஹேதிபி–21-
ஶ்ரித ஜநஸ்ய — ஆச்ரித ஜனங்களுடைய;
ஸம் ரக்ஷகே — நன்றாய் ரக்ஷிப்பவனாயும்;
ஸத் — ஸத்யமும் (நல்லதும்);
அத்புத – ஆச்சர்யமுமான;
குணோததௌ — குணக் கடலான;
ஶ்ரிய பரிப்ருடே — ஶ்ரிய:பதியான
த்வயி — உம்மிடம்;
அயம் பர – இந்த (உம் திருமேனியின் ரக்ஷண) பரம்;
இதி — இப்படி;
ஸமர்ப்பித – ஸமர்ப்பிக்கப் பட்டது;
அத:பரம் — இது முதல்;
ப்ரதி க்ஷணம் — ஒவ்வொரு க்ஷணமும்;
ப்ரதித – மேல் மேல் கிளம்புகிற;
ஹேதிபி — ஜ்வாலைகளை உடைய;
ஹேதிபி — திருவாயுதங்களால்;
அநுபாதிகம் — ஸ்வயம் ஸித்தமான;
ப்ரபுத்வம் — வல்லமையை ;
ரங்கதாமாதிமத – ஸ்ரீரங்கம் முதலான திவ்ய தேசங்களில் ;
ப்ரதய – ப்ரகாசப்படுத்தும்.
ஸ்ரிய ப்ரிப்ருடே த்வயி –ஸ்ரீ யபதியான தேவரீர் இடம்
ஸ்ரித ஜநஸ்ய சம்ரக்ஷகே-ஆஸ்ரித ஜனங்களை நன்றாக ரஷித்து அருளுபவனாயும் -உபாய திசையிலும் போக திசையிலும் மிதுனம் உத்தேச்யம்
ஞானம் கனிந்த நலம் கொண்டு லஷ்மயா ஸஹ
சதத்புத குணோ ததா விதி சமர்ப்பிதோ அயம் பர-ஆச்சர்யமான குணக் கடலான தேவரீர் இடமே-
இந்த உம் திவ்விய மேனி ரக்ஷணம் பரம் சமர்ப்பிக்கப் பட்டது -இது முதல்
ப்ரதி க்ஷண மத பரம் ப்ரதய ரங்க தாமா திஷூ-ஒவ் ஒரு க்ஷணமும் மேல் மேல் கிளம்புகிற
ப்ரபுத்வம நு பாதிகம் ப்ரதித ஹேதி பிர்ஹேதிபி-ஜ்வாலைகளை உடைய திவ்ய ஆயுதங்களால் -ஸ்வயம் ஸித்தமான வல்லமையை
ஸ்ரீ ரெங்கம் முதலான திவ்ய தேசங்களில் ப்ரகாசப்படுத்தி அருள வேண்டும் –
இதில் ஆழ்வார், எம்பெருமானார், வடக்குத் திருவீதிப்பிள்ளை லோக தேசிகன் எல்லாரும்
ஏககண்டமாக “உபாய தசையில் ஒரு மிதுனமே உத்தேச்யம்” என்று அறுதியிட்டதை அநுஸரித்து,
‘திருமேனி ரக்ஷணம்’ என்னும் மஹோரதத்தை ஸாதித்துக் கொடுக்கும் பரம் ஶ்ரிய:பதியான உம்மிடமே வைக்கப்படுகிறது’ என்கிறார்.
முதல் சுலோகத்தில் रमासखमधीमहे என்றார்.
இரண்டாவதில் श्रियाध्युषित वक्षस என்று ஆழ்வார் சரணாகதி பண்ணின
‘அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்மங்கை உறைமார்பா’ என்னும் பாசுரத்தை ஸூசிப்பித்தார்.
“மிதுநாயநர்” என்றல்லவோ இவர்களுக்கு ப்ரஸித்தி!
ஶ்ரிய: பரப்ருடே — ‘பரிப்ருடம்’ என்பது பதியையும் பெருமையையும் சொல்லும்.
(ப்ரஹ்ம பரிப்ருடம் ஸர்வத:) என்பர். எல்லையற்ற பெருமையுள்ளது என்பதுதான் ப்ரஹ்ம லக்ஷணம்.
‘இந்த ப்ரஹ்மத்வமும் ஸ்ரீயின் அதிகமான கடாக்ஷங்கள் விழுவதால் கிடைப்பது’ என்றார் பட்டர்.
(அபாங்கா பூயாம்ஸோயதுபரி பரம் ப்ரஹ்ம ததபூத்) ‘ஶ்ரிய’ என்று ஐந்தாம் வேற்றுமையாகக் கொண்டு
ஸ்ரீயிடமிருந்து ‘பரிப்ருடத்வம்’ என்றும் ‘ப்ரஹ்மத்வம்’ கிடைத்தது.
ஸம்ரக்ஷகே — லக்ஷ்மீயுடன் சேர்ந்தே ஸஹ ரக்ஷகனான உம்மிடம், ஸர்வ ஸித்தாந்தங்களும் இதை ஏக ரூபமாக உத்கோஷிக்கின்றன.
“ஞானங்கனிந்த நலங்கொண்டு நாடோறும் நைபவர்க்கு வானங்கொடுப்பது மாதவன்” என்ற அந்தாதிப் பாசுரத்தின் உரையில்
ஸ்ரீ பிள்ளை லோகஞ்ஜீயரும்
‘லக்ஷ்ம்யா ஸஹ’ என்ற சுலோகத்தை உதாஹரித்து, ஸர்வேச்வரன் சேதனரைக் கைக் கொள்ளும் போது
பெரிய பிராட்டியாரோடே கூடியிருந்தே கைக்கொள்வது என்று ஸகல வேதாந்த ஸித்தமாகையாலே
அவளுக்கு வல்லபனான ஸர்வேச்வரன்’ என்று ஸாதித்தார்.
அத:பரம் — இது முதல்; இந்த க்ஷணம் முதல் என்றபடி.
ரங்க தாமாதிஷு — எல்லா திவ்ய தேசங்களும் இப்படியே ரக்ஷிக்கப்பட வேணும்.
திருமகளின் மணாளன் நீ சரண் அடைந்த அடியார்க்கு
நல் காப்பை அளிக்கின்றாய் நீச குணம் அற்றவனாய்
அரும் நல்ல திருக் குணங்கள் அனைத்துக்கும் கடலாவாய்
அதனாலே உன்னிடத்தே அர்ப்பணித்தோம் எம் பொறுப்பை
ஒரு செயலே உனக்கு உளது -ஓளி மயமாய் விளங்கும் உன்
ஒப்பற்ற ஆயுதங்கள் உதவியுடன் உனக்கு என்றே
உரித்தான ஆட்சிமையை கணம்தோறும் அரங்கம் போல்
உனக்குற்றத் தலங்களிலே ஊன்றி அருள் பெருமானே –
———————————————————————-
கலி ப்ரணித லக்ஷணை கலித சாக்ய லோகாயதை
துருஷ்கா யவநாதிபிர் ஜகதி ஜ்ரும்ப மாணம் பயம்
ப்ரக்ருஷ்ட நிஜ சக்திபி பிரசபமாயுதை பஞ்சபி
ஷிதி த்ரி தச ரஷகை ஷபய ரங்க நாத ஷணாத்–22–
ரங்கநாத – ரங்கநாதனே!
கலி ப்ரணிதி லக்ஷணை — கலிக்குப் பிரதிநிதி போன்றவர்களால்;
கலித ஶாக்ய லோகாயதை — சாக்கியர், நாஸ்திகர் இவர்கள் கலந்த;
துருஷ்க யவநாதிபி — துருஷ்கர், யவனர் என்ற ஜாதி விசேஷங்களால்,;
ஜகதி — உலகத்தில்;
ஜ்ரும்பமாணம் — பெருகும்;
பயம் — பயத்தை;
ப்ரக்ருஷ்ட நிஜ சக்திபி — உயர்ந்த தங்கள் சக்தியை உடையவையும்;
க்ஷிதி த்ரிதஶ ரக்ஷகை — பூஸுரரை ரக்ஷிப்பவையுமான;
பஞ்சபி ஆயுதை — ஐந்து ஆயுதங்களால்;
க்ஷணாத் — ஓர் க்ஷணத்தில்;
ப்ரஸபம் — பலாத்காரமாக;
க்ஷபய – நீக்க வேணும்..
கலி ப்ரணித லக்ஷணை கலித சாக்ய லோகாயதை--கலிக்கு பிரதிநிதி போன்றவர்களால் -சாக்கியர் நாஸ்திகர் இவர்கள் கலந்த
துருஷ்கா யவநாதிபிர் ஜகதி ஜ்ரும்ப மாணம் பயம் -துருஷ்கர் யவனர் என்ற ஜாதி விசேஷங்களால் உலகில் பெருகும் பயத்தை
ப்ரக்ருஷ்ட நிஜ சக்திபி பிரசபமாயுதை பஞ்சபி -உயர்ந்த தங்கள் சக்தியை யுடையவையாயும் – பஞ்ச ஆயுதங்களால்
ஷிதி த்ரி தச ரஷகை ஷபய ரங்க நாத ஷணாத்-பூ ஸூரர் ரக்ஷிப்பவையுமான ஒரு க்ஷணத்தில் பலாத்காரமாக நீக்கி அருள வேணும் –
எங்கள் பிரபத்தி ஆர்த்த பிரபத்தி -ஒரு க்ஷணம் விளம்பத்தையும் சஹியோம் என்றவாறு
கலிப்ரணிதி லக்ஷணை —
ரங்கராஜனுக்குப் பயமுண்டாக்குகிறவர் யார்?
வேத விப்ரரையும், ஆலயங்களில் திவ்யமங்கள விக்ரஹங்களையும் ஸஹியாத கலி மஹாராஜனுக்குப் பிரதிநிதிகளான சிலர்.
ஜ்ரும்பமாணம் பயம் —
(ஸ்ரீரங்க ஸ்ரீஶ்ச வர்த்ததாம்) என்ற எங்கள் கோரிக்கைக்கு நேர் விரோதமாக
அங்கேயே பயம் வ்ருத்தியடைந்து கொண்டேயிருப்பது உசிதமோ?
க்ஷிதி த்ரிதா —
(பகவத் பக்தி மிகுந்த) ப்ராஹ்மணர்கள். பஞ்சபி: ஆயுதை — சங்கம், சக்கரம், கதை, வில், கத்தி என்ற ஐந்து திவ்யாயுதங்கள்.
பாஞ்சஜன்யம், ஸுதர்ஶநம், கௌமோதகி, ஶார்ங்கம், நந்தகம் என்று முறையே அவைகளின் பெயர்கள்.
க்ஷணாத் —
எங்கள் ப்ரபத்தி, ஆர்த்தப்பிரபத்தி, பலம் உடனே கிடைக்கவேணும். ஒரு க்ஷண விளம்பத்தையும் ஸஹியோம்.
கொடும் கலியின் ஏவலர் போல் கிளர்ந்து எழுந்த சாக்கியர்கள்
கடவுள் தனை மறுக்கின்ற சார்வாகர் இவர்களுக்கு
உடன் பிறப்பாம் துருக்க யவனர் ஆகியரால் விளைகின்ற
ஊறுகளால் மறையவர்கள் உற்ற பெறும் அச்சத்தை
திடம் கொண்ட ஐவகையாம் திரு வாயுத கணம் கொண்டு
திருவரங்கத்தில் எழுந்து அருளி திகழ்ந்திடும் எம்பெருமானே
சடக்கென்று ஒழித்திட்டு சத்துக்கள் தமைக் காப்பாய்
தீங்கு ஒன்றும் விளையாமல் துதித்து உன்னை வணங்கிடவே –
———————————————————
திதி ப்ரபவதே ஹபித் தஹந சோமா ஸூ ர்யாத்மகம்
தம ப்ரமதநம் ப்ரபோ சமிதி தாஸ்த்ர ப்ருந்தம் ஸ்வத
ஸ்வ வ்ருத்தி வச வர்த்தித த்ரிதச வ்ருத்தி சக்ரம் புந
ப்ரவர்த்தயது தாம்நி தே மஹதி தர்ம சக்ர ஸ்திதம்–23-
ப்ரபோ — ப்ரபுவே!
திதி ப்ரபவதே ஹபித் — திதியின் ஸந்ததிகளான அசுரர்கள் தேஹங்களைப் பிளப்பதும்;
தஹந ஸோம ஸூர்யாத்மகம் — அக்னி, சந்த்ரன், சூர்யன் முதலியவற்றைத் தன்னுள்ளடக்கிக் கொண்டு;
ஸ்வத — தானாகவே;
ஸமுதித அஸ்த்ர ப்ருந்தம் — எல்லா அஸ்திரங்களின் ஸமூஹமும் தன்னிடமிருந்து வெளிப்படும் மஹிமையை உடையதும்;
தம: ப்ரமதநம் — தமோ குணத்தை (உள்ளிருட்டை)ப் போக்குவதும்;
ஸ்வ வ்ருத்தி வஶ வ்ருத்தித த்ரிதஶ வ்ருத்தி — தேவர்கள் வ்யாபாரமெல்லாம் தன் வசமாயுள்ளதுமான;
தே சக்ரம் — உம்முடைய சக்ரம்;
தே — உம்முடைய;
மஹதி தாமநி — உயர்ந்த இடமாகிய கோயிலில்;
புந: — மறுபடியும்;
தர்ம சக்ர ஸ்திதிம் — தர்மம் என்னும் உம்முடைய ஆக்ஞா சக்ரத்தின் பரிவ்ருத்தியை;
ப்ரவர்த்தயது — நடத்தி வைக்க வேணும்.
திதி ப்ரபவதே ஹபித்-திதியின் சந்ததிகளான அசுரர்கள் தேஹங்களைப் பிறப்பதும்
தஹந சோமா ஸூ ர்யாத்மகம்-அக்னி சந்திரன் ஸூர்யன் முதலியவற்றை தன்னுள்ளே அடக்கிக் கொண்டு
சமிதித அஸ்த்ர ப்ருந்தம் ஸ்வத -தானாகவே எல்லா அஸ்திரங்கள் சமூகமும் தன்னிடம் இருந்து வெளிப்படும் மஹிமையை யுடையதும்
தம ப்ரமதநம் ப்ரபோ -தமஸ் குணத்தை -உள் இருட்டைப் போக்குவதும் -பிரபுவே –
ஸ்வ வ்ருத்தி வச வர்த்தித த்ரிதச வ்ருத்தி -தேவர்கள் வியாபாரம் எல்லாமே தன் வசமாய் யுள்ளதுமான
சக்ரம் புந -உம்முடைய திருச் சக்கரத் ஆழ்வான் மறுபடியும்
ப்ரவர்த்தயது தாம்நி தே மஹதி தர்ம சக்ர ஸ்திதம்-தர்மம் என்னும் உம்முடைய ஆஞ்ஞா சக்ரத்தின் பரி வ்ருத்தியை நடத்தி வைத்து அருள வேணும்
தேவரீர் உடைய ரக்ஷண சங்கல்பம் தத்துவமே -ஸ்ரீ ஸூ தர்சனம் -சங்கல்ப ஸூர்யோதத்தில் ஸ்ரீ விஷ்ணுவின்
சன்னாஹமும் சங்கல்பமும் முறையே பெரிய திருவடி ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வான் என்று பாஞ்சராத்ர ஆகமங்களில் பிரசித்தம் என்று அருளிச் செய்து உள்ளார்
இந்த ஸ்ரீ ஸூதர்சனமே ஷோடச திவ்ய ஆயுதங்கள் -சங்கல்ப ஏவ பவதோ நிபுண ஸஹாய -ஸ்ரீ வரதராஜ பஞ்சசம் –
ஸூதர்சன மஹா ஜ்வாலா கோடி ஸூ ர்ய ஸமப்ரப /-சோமவத் ப்ரிய தர்சன /
மீண்டும் உம்முடைய ஆஞ்ஜை யான தர்ம சக்கரம் நடை பெற வேணும் என்றதாயிற்று –
ஸ்ரீகாந்தனிடம் ப்ரபத்தியைச் செய்து
இப்போது பஞ்சாயுதங்களின் உயர்ந்த சக்தியைக் கொண்டு எதிரிகளை அடக்கி ரக்ஷிக்க வேண்டும் என்கிறீர்;
ஆயுதங்களின் ஸஹாயமில்லாமல் ஶ்ரிய:பதியால் ரக்ஷிக்க முடியாதோ என்று சங்கை வர அதைப் பரிஹரிக்கிறார்.
நாங்கள் செய்யும் ப்ரபத்திக்கு தேவரீர் தத் க்ஷணமே எங்கள் பயத்தை நீக்கி எங்களுக்கு அபயம் அளிக்க ஸங்கல்பிக்க வேணும்.
தேவரீர் ரக்ஷண ஸங்கல்பம் என்னும் தத்வமே ஸ்ரீஸுதர்ஶநம் என்னும் சக்ரம்.
‘விஷ்ணுவின் ஸந்நாஹமும் ஸங்கல்பமும் முறையே பக்ஷீஸ்வரனும் ஸுதர்ஶனமும் என்று பாஞ்சராத்ர ஆகமங்களில் ப்ரஸித்தம்’ என்று
ஸ்ரீ ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் ஸாதித்தார்.
ஆகையால் ஸுதர்ஶனம் என்பது ஈச்வர ஸங்கல்பம்;
தர்மமென்பதும் ஈஸ்வரனுடைய ஆக்ஞாசக்ரமான ஶ்ருதி ஸ்ம்ருதிகள்.
ஸுதர்ஶனமாகிய உமது சக்ரம் ஆக்ஞையான தர்ம சக்ரத்தை சரியாக சுழன்று சுழன்று வரும்படி செய்ய வேணும்.
இந்த ஸுதர்ஶனமே பதினாறு (ஷோடஶ) ஆயுத ரூபமாகவும் இருக்கிறார் என்பது ஷோடஶாயுத ஸ்தோத்ரத்தில் ஸ்வாமியால் காட்டப் பட்டது.
தம் ஸங்கல்பத்தின் அம்ஶங்களான பதினாறு ஆயுதங்களோடு கூடின ஆயுதேஶ்வரரான
பரம புமான் உங்களை ரக்ஷிக்கட்டும்’ என்று முதல் ஸ்லோகம்.
‘எல்லா அஸ்த்ரங்களும் எந்த ஸுதர்ஶனத்திடமிருந்து கிளம்புகிறதோ அந்த ஷோடஶாயுதமயரான
ஸுதர்ஶனம் நம்மை ரக்ஷிக்கட்டும் என்று பதினேழாவது சுலோகம்.
இப்படி எல்லா ஆயுதங்களும் ஸுதர்ஶனத்தின் ரூபங்களாகையாலும்,
ஸுதர்ஶனமும் உம்முடைய ஸங்கல்பமானதாலும்,
‘ஆயுதங்கள் உமக்கு ஸஹாயம்’ என்றதுவும் ‘உம்முடைய ரக்ஷண ஸங்கல்பமே உமக்கு ஸஹாயம்,
உம்மைவிட வேறான ஒன்றை நாங்கள் உபாயமாக வேண்டவில்லை’ என்று சொன்னதாகும்.
(ஸங்கல்ப ஏவ பவதோ நிபுண: ஸஹாய) என்று வரதராஜ பஞ்சாசத்தில் சொன்னதும் இதை விளக்குகிறது.
திதி ப்ரபவ தேஹபித் — உம் திவ்யமான திருமேனியை பேதிக்க எண்ணும் அசுரர்களின் தேஹத்தைப் பிளப்பது உம் ஸுதர்ஶனம். (உம் ஸங்கல்பம்)
அக்னி ஸோம ஸூர்யாத்மகம் — அக்னி, சந்த்ரன், ஸூர்யன் என்னும் தேஜஸ்ஸுகளெல்லாம் ஸ்ரீஸுதர்ஶன தேஜஸ்ஸில் அடங்கியவை.
(ஸுதர்ஶன மஹாஜ்வால கோடி ஸூர்ய ஸமப்ரப) ஆஸுரத்தைப் கொளுத்துகையிலும்,
அனுகூலர்க்கு சந்த்ரனைப் போல ஸௌம்யராயிருப்பவர்.
(ஸோமவத் ப்ரியதர்ஶன) உள்ளிருட்டை நீக்குவது மற்ற தேஜஸ்ஸுக்களால் இயலாது. ஸுதர்ஶனம் அதையும் நீக்கும்.
‘மறுபடியும் கோயிலில் உம்முடைய ஆக்ஞையான தர்மசக்ரம் நடைபெற வேணும்’ என்பதால்
அப்பொழுது தர்மாநுஷ்டானத்திற்கு விக்னமிருந்தது காட்டப்படுகிறது.
அடியவரைத் துன்புறுத்தும் அரக்கர் தம் உடல் பிளக்கும்
ஆற்றலுடன் கதிர் மதியம் அக்னியாம் மூவருமே
உடன் கூடியது போலே ஓளி மயத்தைக் கொண்டதுமாய்
அகவிருளும் புறவிருளும் அகலும்படி திறலுடைத்தாய்
கொடு வல்ல ஆயுதங்கள் கூட்டத்தின் இருப்பிடமாய்
தேவர்கள் வாழ்வுக்கோர் அரணாகி உன் தனது
திடக் கரத்தை அணி செய்யும் சக்கரமே மறுபடியும்
திருவரங்கத்தில் நல்லறமே தழைத்து ஒங்கச் செய்யட்டும் –
————————————————
மனு ப்ரப்ருதி மா நிதி மஹதி ரங்க தாமாதிகே
தனு ப்ரபவ தாருணைர்த்தர முதீர்ய மாணம் பரை
ப்ரக்ருஷ்ட குணக ஸ்ரியா வஸூதயா ச சந்துஷித
ப்ரயுக்த கருணோததி பிரசமய ஸ்வ சக்த்யா ஸ்வயம் –24-
ப்ரயுக்த கருணா உததே — கருணை நிறைந்தவனே!
ப்ரக்ருஷ்ட குணக — சிறந்த குணங்களை உடையவனே!
மநு பரப்ருதி — மனு முதலியவர்களால்;
மாநிதே — கொண்டாடப்பட்ட;
மஹதி — சிறந்த;
ரங்க தாம ஆதிகே — ஸ்ரீரங்கம் முதலியவற்றில்;
தநு ப்ரபவ –தநுவென்னும் அஸுர குலத்தோரான அஸுரர்களைப் போல்;
தாருணை — குரூரர்களான, கொடியவர்களான,
பரை: — சத்ருக்களால்;
உதீர்யமாணம் — வளர்க்கப்பட்டு வரும், உண்டாகி வளரும்;
தரம் — பயத்தை;
ச்ரியா — பெரிய பிராட்டியாராலும்,
வஸுதயா ச — க்ஷமா தத்வமாகிய பூமிப் பிராட்டியாலும்,
ஸந்துக்ஷித — தூண்டப்பட்டு உத்ஸாகப் படுத்தப் பட்டவனாய்;
ஸ்வ சக்த்யா — தன் சக்தியினால்;
ஸ்வயம் — தானே;
ப்ரசமய — ஒழிப்பாயாக.
மனு ப்ரப்ருதி மா நிதி மஹதி ரங்க தாமாதிகே--மனு முதலியவர்களால் கொண்டாப்பட்ட சிறந்த ஸ்ரீ ரெங்கம் முதலியவற்றில் –
இத்தால் ஆச்சார்ய பரம்பரையை ஸூ சிப்பித்து -ஆழ்வார் நாத முனிகள் -ஆளவந்தார் -பெரிய நம்பிகள் -எம்பெருமான்
ஆழ்வான் -பட்டர் -குரு பரம்பரையே ஸூ சிப்பிக்கிறார் –
தனு ப்ரபவ தாருணைர்த்தர முதீர்ய மாணம் பரை-தனு என்னும் அஸூர குலத்தோரான அஸூரர்களைப் போலே
கொடியவர்களான -குரூர்களான -சத்ருக்களால் -வளர்க்கப்பட்டு வரும் -உண்டாகி வளரும் –
ப்ரக்ருஷ்ட குணக ஸ்ரியா வஸூதயா ச சந்துஷித-ப்ரயுக்த கருணோததி பிரசமய ஸ்வ சக்த்யா ஸ்வயம் –
-கருணா தத்துவமான பெரிய பிராட்டியாராலும் ஷாமா தத்துவமான ஸ்ரீ பூமிப் பிராட்டியாராலும் தூண்டப் பட்டு
உத்ஸாகப் படுத்தப் பட்டவனாய் -தன் சக்தியினால் தானே ஒழிப்பாயாக-
கருணை முதலிய சிறந்த குணங்களுடையோனே!
மனு முதலியவர் கொண்டாடிவரும் ஸ்ரீரங்கம் முதலிய க்ஷேத்ரத்தில் அசுரர் போல் பயங்கரர்களான
சத்ருக்கள் வளர்த்து வரும் பயத்தை ஸ்ரீ, பூமி தேவிகளின் ப்ரேரணத்தைக் கொண்டு, தன் சக்தியினாலே ஒழித்தருள வேணும்.
ப்ரக்ருஷ்ட – குணம் — உம்முடைய உயர்ந்த குணங்களோடு கூடியிருந்து நீர் ரக்ஷகராகிறீர்.
அதனால் உமக்கு எப்படி அத்விதீயத்வத்திற்குக் குறைவில்லையோ, அப்படியே தேவிமாரோடு கூடி ரக்ஷகரானாலும்
பாஹ்ய ஸஹாயாபேக்ஷை அற்றவர் என்று சொல்லக் குறைவில்லை.
ஸ்ரீதேவியே கருணாதத்வம். பூதேவி க்ஷமா தத்வம். இதெல்லாம் தயா சதகத்தில் கூறப்பட்டிருக்கிறது.
உம் தேவிமார் தான் உம்முடைய தயை முதலிய கல்யாண குணங்களை ஸந்துக்ஷணம் செய்பவர்.
(த்வத் கருணா நிரீக்ஷணா ஸுதா ஸந்துக்ஷணாத்) என்பதைக் காட்ட ‘ஸந்துக்ஷித’ என்கிறார்.
‘பிராட்டி உம்முடைய ப்ரபை, உம் ஶக்திபோல் உமக்கு அநந்யை’ என்பதை ஸ்வ ஶக்த்யா என்று காட்டுகிறார்.
இந்த சேர்த்தியைத் தானே மனு முதலானோர் பூஜித்தனர்.
முதலில் மனுவும் பின்பு மைதிலீ ரமணனாக அக் குலத்தில் மனுஷ்யனாகவே அவதரித்து நீரும் உம்மையே பூஜித்தீர்.
ஆகையால் மனுஷ்யராகிய எங்களுக்கு நீர் ஸ்வந்தமான பெருமாள்.
‘மனுவிடமிருந்து பிறந்தவர் மனுஷ்யர், மாநவர்’ என்றார் பாணிணி.
பெருமாள் ஸூர்யனுக்கும், ஸூர்யன் மனுவுக்கும், மனு இக்ஷ்வாகுவுக்கும் உபதேசித்தார்கள் என்று உபதேச பரம்பரை.
இங்கு மனு ப்ரப்ருதி என்பதால் அந்த ஆசார்ய பரம்பரையை ஸூசிப்பித்து,
ஆழ்வார். நாதமுனிகள், ஆளவந்தார், பெரிய நம்பிகள், எம்பெருமானார், ஆழ்வான், பட்டர் முதலிய பெரியோரையும் ஸூசிப்பிக்கிறார்.
உயர்ந்தோங்கும் குணங்களுக்கு உறைவிடமே மனுவாதி
உத்தமர்கள் புகழ்ந்திட்ட உயர்வுடைய அரங்கம் போல்
பெயர் பெற்ற தலங்களிலே பொல்லாத அசுரரையும்
மிஞ்சி நிற்கும் கொடுமை யுள பகைவர்களால் தோன்றி யுள்ள
பயம் தன்னைத் திரு மகளும் மண் மகளும் ஊக்குவிக்க
பெரும் கருணை என விளங்கும் உன் குணமாம் பெரும் கடலை
பயன்படுத்தி நீ தானே பேர் வலிதாம் உன் திறத்தால்
போக்கி யுன் தன் அடியாரைப் பாலித்து அருளிடுவாய் –
————————————-
புஜங்க விஹங்கம ப்ரவர ஸைன்ய நாதா ப்ரபோ
ததைவ குமுதா தயோ நகர கோபுர த்வாரபா
அசிந்த்ய பல விக்ரமா ஸ்தவ மிவ ரங்க சம்ரக்ஷகா
ஜிதம் ந இதி வாதி நோ ஜகத் அநுக்ரஹே ஜாக்ரது -25-
ப்ரபோ — ப்ரபுவே!;
அசிந்த்ய பல விக்ரம — எண்ணுதற்கரிய பல பராக்ரமங்களை உடையவர்களும்;
த்வமிவ — உம்மைப் போல;
ரங்க ஸம் ரக்ஷகா — அரங்கத்தைக் காக்க வேண்டியவர்களும்;
புஜங்கம விஹங்கம ப்ரவர ஸைந்யநாதா — ஸர்ப ச்ரேஷ்டன் ({சேஷன்), பக்ஷிராஜன், ஸேனை நாதன் ஆகியவர்களும்;
ததைவ — அப்படியே;
நகர கோபுர த்வார பா: — நகரம், கோபுரம், த்வாரம் இவற்றைக் காப்பவர்களும்,
ஜிதம்தே — உனக்கு ஜயம் வருக;
இதி வாதிந — என்று சொல்லிக் கொண்டு;
ஜகதநுக்ரஹே — எங்களை அனுக்ரஹிப்பதில்;
ஜாக்ரது — விழித்திருக்க வேணும்.
புஜங்க விஹங்கம ப்ரவர ஸைன்ய நாதா -சர்ப்ப ஸ்ரேஷ்டன் -ஆதி சேஷன் -பெரிய திருவடி -சேனை முதலியார் முதல்வர்களும்
ப்ரபோ -பிரபுவே –
ததைவ குமுதா தயோ நகர கோபுர த்வாரபா -அப்படியே நகரம் கோபுரம் துவாரம் இவற்றைக் காப்பவர்களும் –
அசிந்த்ய பல விக்ரமா -எண்ணுதற்கு அரிய பல பராக்கிரமங்களை யுடையவர்களும்
ஸ்தவ மிவ ரங்க சம்ரக்ஷகா -உம்மைப் போலே ஸ்ரீ ரெங்கத்தைக் காக்க வேண்டியவர்களும்
ஜிதம் ந இதி வாதி நோ ஜகத் அநுக்ரஹே ஜாக்ரது -உனக்கு ஜெயம் வருக என்று சொல்லிக் கொண்டே
எங்களை அனுக்ரஹிப்பதில் விழித்து இருக்க வேணும் –
இதம் ஹி ரங்கம் பாணவ் ரதாங்கம் சயனே புஜங்கம் –அங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் –
ஜிதந்தே -என்று வாக்கால் சொன்னாலே போது ரஷிக்க –
சனத் குமாரர்களைத் தடுக்க ஜெய விஜயர்கள் இருந்தார்களே –
பள்ளி கொண்டிருக்கும் எம்மை தாஸரான நீங்கள் எழுப்பலாமோ?
‘பயத்தினால் இப்படிச் செய்கிறோம்’ என்றால் உங்களைக் காக்க நம் காவல்காரர்களில்லையோ என்று சங்கை வர,
அவர்கள் விழித்து இருந்து தங்கள் சேஷத்வத்திற்கு ஏற்றபடி
“ஜிதம்தே” என்று மங்களம் பாடினால் போதும். அவர்களும் தூங்குகிறார்களோ என்று தான் கவலை.
புஜங்கம — ஸ்ரீசங்கராசாரியாரும் இவ்வரங்கத்தை (இதம் ஹி ரங்கம்) என்கிற சுலோகத்தையிட்டு தினமும் மங்களாசாஸனம் செய்தார்.
(பாணௌ ரதாங்கம் ஶயநே புஜங்கம்) என்று கையார் சக்கரத்தையும் நாக ஶயனத்தையும் கீர்த்தனம் செய்வர்.
भुजङ्गमाङ्गशायिने विहङ्गमाङ्गगामिने तुरङ्गमाङ्गभेदिने नमो रथाङ्गधअरिणे ॥ என்று ஸர்வஜ்ஞமுனியின் ஸம்க்ஷேப ஶாரீரகத்தின் முடிவு மங்களம்.
அவர் கிரந்தத்தை ஸ்ரீசங்கரர் பார்த்துப் புகழ்ந்தாரென்பர்.
புஜங்கமப்ரவர — “ஆங்கு ஆரவாரமது கேட்டு” என்றபடி சீற்றம் வேண்டாம்.
வாதிந என்பதால் “ஜிதம்தே” என்று நாக்கினால் உச்சரித்தால் போதும்.
ஸைந்யநாத — இவர் விஷ்வக்ஸேநர். இவர் இல்லாத இடமில்லை. ஸேனைத் தலைவரும் ஸேனை வீரரும் தூங்குவரோ?
நகர கோபுர த்வார பா — நகரவாசல், கோபுர வாசல், ஸந்நிதி வாசல் எங்கும் காவல்.
இந்தக் காவலரெல்லாம் தூங்க வேணுமோ?
ஸநத் குமாரர்களைத் தடுத்த காவல்காரர்கள் சத்ருக்களைத் தடுக்க வேண்டாவோ?
புள்ளரையன் சேனை நாதன் தம்மோடு
அணைத் தலைவர் குமுதர் போல் ஆவாரம் நகரத்தின்
திரு வாயில் கோபுரத்தின் திருக் கதவம் காப்போரும்
திருமால் உன் தனைப் போல் திரு வரங்கத்தைக் காப்போரும்
பெரும் வாகை உனக்கு என்று போற்றுகிற வாயினராய்
பேரரவம் இட்டவராய் பரவி எங்கும் செல்பவராய்
திருவரங்கம் மட்டும் இன்றி திரை கடல் சூழ் உலகினையும்
சிந்தையுடன் நற் காத்துச் செயல் படவே வேண்டுகிறோம் –
————————————————
விதி ஸ்த்ரி புரமர்த்தந ஸ்த்ரிதச புங்கவ பாவக
யம ப்ரப்ருதயோ அபி யத் விமத ரக்ஷணே ந ஷமா
நி ரஷிதி ஷதி யத்ர ச பிரதிபயம் ந கிஞ்சித் க்வசித்
ச ந பிரதிபடான் ப்ரபோ சமய ரங்க தாமா திஷூ -26-
விதி — ப்ரஹ்மாவும்;
த்ரிபுர மர்த்தந — மூன்று புரங்களை எரித்தவரும்;
த்ரிதஶபுங்கவ — தேவர்கள் தலைவனான இந்திரனும்;
பாவக — அக்னியும்;
யம பரப்ருதய அபி — யமன் முதலானோரும்;
யத்விமத ரக்ஷண –எந்த உம் விரோதியை ரக்ஷிப்பதில்;
ந க்ஷமா — ஸமர்த்தரல்லவோ ;
யத்ர — எந்த நீர்;
ரிரக்ஷிஷதி — ரக்ஷிக்க இஷ்டப்பட்ட போது;
க்வசித் — ஓரிடத்திலும்;
கிஞ்சித் — ஒன்றும் (எதுவும்);
ப்ரதிபயம் ந — பயங்கரமாக கொஞ்சமேனும் ஆகாதோ;
ஸ: — அந்த நீர்;
ரங்கதாமாதிஷு — அரங்கம் முதலிய திவ்ய தேசங்களில்;
ந: — எங்களுடைய; ப்ரதிபடாந் — எதிர்படரை; ஶமய — அடக்கவேணும்.
விதி ஸ்த்ரி புரமர்த்தந ஸ்த்ரிதச புங்கவ பாவக –ப்ரஹ்மாவும் -மூன்று புரங்களை எரித்தவரும் –
தேவர்கள் தலைவரான இந்திரனும் -அக்னியும்
யம ப்ரப்ருதயோ அபி யத் விமத ரக்ஷணே ந ஷமா -யமன் முதலானோரும் –
எந்த உம் விரோதியை -ரஷிப்பதில்-சமர்த்தர் அல்லவோ
நி ரஷிதி ஷதி யத்ர ச பிரதிபயம் ந கிஞ்சித் க்வசித் -எந்த நீர் ரஷிக்க இஷ்டப் பட்ட போது
ஓர் இடத்திலும் ஒன்றும் எதுவும் பயங்கரமாக கொஞ்சமேனும் ஆகாதோ –
ச ந பிரதிபடான் ப்ரபோ சமய ரங்க தாமா தி ஷூ -அந்த நீர் ஸ்ரீ ரங்கம் முதலிய திவ்ய தேசங்களில்
எங்களுடைய எதிர்படரை அடக்கி அருள வேணும் –
யமனும் யம படர்களும் எங்களைக் கண்டு நடுங்க வேண்டி இருக்க இந்த மனுஷ்ய படர்களைக் கண்டு நாங்கள் நடுங்கும் படி நேரலாமோ –
உம் திருமேனியைக் காட்டிலும் எங்களுக்குப் பிரியமான வஸ்து இல்லை;
அதற்குக் கெடுதலைச் செய்பவர்கள் எங்கள் சத்ருக்கள். எங்களுடைய சத்ருக்கள் உம் சத்ருக்களாக வேணும்.
“என் பஞ்ச ப்ராணரான பாண்டவர்களை நீ த்வேஷிக்கிறாய். ஆகையால் நீ எனக்கு த்வேஷி” என்றார் ஸ்ரீ கிருஷ்ணன்.
இப்படி உமக்கு விரோதியாயிருப்பவனை நீர் கொல்ல நினைத்தால் ப்ரஹ்மா, ருத்ரன், இந்த்ரன், யமன் முதலான
ஒருவரும் அவனை ரக்ஷிக்க முடியாது. ஆகையால் எங்கள் ப்ரதிபடரை அடக்க வேண்டும்.
விதி: — ஊருக்கெல்லாம் விதிப்பவர் ப்ரஹ்மா; அவருக்கும் விதிப்பவர் நீர்;
ஸம்ஹரிப்பவனுக்கும் ஸம்ஹாரகர். ஸுரநாயகனையும் நியமிப்பவர். அக்னியைக் கொளுத்துபவர்.
ஜலரூபியாயிருந்து ஸம்ஹரிப்பவர். யமனுக்கும் யமன் என்று யமனே சொன்னான்.
ராவணனிடம் ब्रह्मा स्वयंभुः என்று திருவடி பாடிய சுலோகமும் இங்கே கொள்ளப்பட்டது.
சிறிய திருவடியும் கோயிலில் காவலிருக்கிறார்.
முன் சுலோகத்தில் பெரிய திருவடியினுடையது போல இங்கு சிறிய திருவடியின் ஜிதந்தே.
ப்ரதிபயம் ந கிஞ்சித் –(கதாசந, குதஶ்சந) பயமில்லையென்றது சுருதி.
க்வசந என்று முன்பு சேர்த்தார். இங்கு கிஞ்சித் என்கிறார்.
ஒன்றும் பயத்தை உண்டாக்க மாட்டாது என்று ஒரு பொருள்.கிஞ்சித்தும் (துளிக்கூட) பயமில்லை என்னவுமாம்.
ந: ப்ரதிபடாந் — யமனும் யமபடர்களும் எங்களைக் கண்டு நடுங்க வேண்டியிருக்க,
இம் மனுஷ்ய படர்களைக் கண்டு நாங்கள் நடுங்கும்படி நேரலாமோ?
உன்னிடத்தே அபசாரம் உறுபவனைக் காத்திடவே
உந்தி மலர் நான்முகனும் உருத்திரனும் இந்திரனும்
வன்னியனும் யமதேவு முதலான தேவர்களும்
வலிமையிலோர் என்றைக்குமே ஒருவனை நீ காத்திடவே
எண்ணினாயேல் அவன் தனக்கு எங்கிருந்தும் எவராலும்
எள்ளளவும் அச்சமேதும் ஏற்படாதே நிச்சயமாய்
அன்னவன் நீ அரங்கத்தும் அதுவனைய தலங்களிலும்
அல்லல் தரும் பகைவர் தமை அழித்து ஒழிப்பாய் பெருமானே –
——————————————-
ச கைடப தமோரவிர் மது பராக ஜஜ்ஜா மருத்
ஹிரண்ய கிரி தாரண ஸ்த்ருடித கால நேமி த்ரும
கிமத்ர பஹுநா பஜத் பவ பயோதி முஷ்டிந்தய
த்ரி விக்ரம பவத் க்ரம ஷிபது மங்ஷூ ரங்கத் விஷ — 27-
த்ரிவிக்ரம — த்ரிவிக்ரமனே!;
கைடப தமோ ரவி — கைடபன் என்னும் இருட்டுக்கு ஸூர்யன் போன்றதும்;
மது பராக ஜஞ்ஜா மருத் — மது என்னும் அஸுரனான தூசிக்குப் பெருங்காற்றுப் போன்றதும்;
ஹிரண்ய கிரி தாரண — ஹிரண்யன் என்னும் மலையைப் பிளப்பதும்;
த்ருடித காலநேமி என்னும் வ்ருக்ஷத்தையுடையதும்;
அத்ர — இவ்விஷயத்தில்;
கிம் பஹுநா — அதிகம் சொல்லுவானேன் (சுருக்கமாக);
பஜத் பவ பயோதி முஷ்டிம்தய — ஆச்ரிதருடைய ஸம்சார ஸமுத்ரத்தை ஒரு சிறங்கை ஜலத்தைப் போல் உறிஞ்சி விடுவதுமான;
ஸ: — அந்த (அவ்விதமான);
பவத் க்ரம — உம் பராக்ரமம்;
மங்க்ஷு — சீக்கிரத்தில்;
ரங்கத்விஷ — ரங்க க்ஷேத்ரத்தின் விரோதிகளை;
க்ஷிபது — நிரஸநம் செய்யட்டும்.
ச கைடப தமோ ரவிர்-கைடபன் என்னும் இருட்டுக்கு ஸூர்யன் போன்றதும்
மது பராக ஜஜ்ஜா மருத் -மது என்னும் அஸூரனான தூசுக்கு பெரும் காற்று போன்றதும்
ஹிரண்ய கிரி தாரண -ஹிரண்யன் என்னும் மலையைப் பிளப்பதும் -மலையை கிழிக்க உம் திரு உகிர் போதுமே
ஸ்த்ருடித கால நேமி த்ரும -திருடித்த கால நேமி என்னும் வ்ருக்ஷத்தை யுடையதும்
கிமத்ர பஹுநா -இவ்விஷயத்தில் அதிகம் சொல்லுவான் என்
பஜத் பவ பயோதி முஷ்டிந்தய–ஆஸ்ரிதருடைய சம்சார சமுத்திரத்தை ஒரு சிறங்கை ஜலத்தை போலே உறிஞ்சி விடுவதுமான
த்ரி விக்ரம பவத் க்ரம ஷிபது மங்ஷூ ரங்கத் விஷ — த்ரி விக்ரமனே-அவ்விதமான உம் பராக்ரமம் சீக்கிரத்தில்
ரங்க ஷேத்ரத்தின் விரோதிகளை நிரசனம் செய்யட்டும் –
லோக விக்ராந்தமான உம் -உலகளந்த பொன்னடியை சரணம் பற்றினோம் –
காற்றுக்கும் சண்ட மாருதமான நீர் தான் பெரும் காற்று -ஜகத்தின் பாபங்களை உண்ணுபவன் என்றார் -5-ஸ்லோகத்தில்
இங்கு பாபக் கடலை உறிஞ்சுபவன் என்கிறார் -திவ்ய ஆயுதங்கள் வேண்டாம் –திண்ணிய திருவடியே ரக்ஷகம்-
ஸங்கல்ப ஸூர்யோதயம் இரண்டாம் அங்கத்திலும் இந்தச் சுலோகம் உளது.
உம் திருவடிகளில் அடைக்கலம் புகுந்தவர் அத் திருவடியாலேயே அபயம் பெறுவது உசிதமாகையால்,
உம் உலகளந்த திருவடி பலத்தால் எங்கள் சத்ருக்கள் அடங்கி நாங்கள் அபயம் பெற வேணும்.
“லோகவிக்ராந்தமான உம் சரணங்களை ஶரணம் பற்றினோம்”
முன்பு மருத் தரணி பாவக என்றார். இங்கு ஸூர்ய ஸூர்யனான நீர்தான் ஸூர்யன்.
காற்றுக்கும் சண்ட மாருதமான நீர் தான் பெருங்காற்று என்கிறார்.
முன் இரண்டாம் சுலோகத்தில் ஜகத்தின் பாபங்களையெல்லாம் உண்ணும் பெருவாயன் என்றார்.
இங்கு பாபக் கடலை உறுஞ்சுபவன் என்கிறார். தொடங்கியது போல முடிக்கிறார்.
எங்கள் பாபக் கடலை உம் திருவடி யல்லால் மற்றொன்று கடக்க வல்லதல்ல.
ஆயுதங்களும் வேண்டாம். யுத்தமும் வேண்டாம். உம் திருவடி பலமே போதும்.
ஹிரண்ய கிரி தாரண — மலையைக் கிழிக்க நகங்களே ஆயுதம்.
இருளன்ன கைடபனை இரவியைப் போல் அழித்திட்டாய்
சுழல் காற்றில் புழுதியைப் போல் சிதைந்து அழிந்தான் மதுவரக்கன்
இரணியனை மலையைப் போல் பிளந்து அழித்தாய் திரு வரங்கா
மரத்தைப் போல் முறித்திட்டாய் கால நேமி அரக்கன் தனை
உரைக்க மேலும் வேண்டாவே உன் தனது வீரம் தனை
உன் தனையே புகலாக உற்றவரின் துயர்க்கடலை
உறிஞ்சி விடும் உன் வலிமை அரங்கத்தை நலிந்திடவே
உற்ற பகை அனைவரையும் ஒழித்திடட்டும் விரைவினிலே-
————————————-
யதி ப்ரவர பாரதீ ரஸ பரேண நீதம் வய
பிரபுல்ல பலிதம் சிர பரமிஹ சமம் பிரார்த்தயே
நிரஸ்த ரிபு சம்பவே க்வசன ரங்க முக்யே விபோ
பரஸ்பர ஹிதை ஷிணாம் பரி சரேஷூ மாம் வர்த்தயே–28-
விபோ — ப்ரபுவே! ;
யதி ப்ரவர பாரதீ ரஸ பரேண — யதிராஜனுடைய ஸார தம ஸரஸ்வதீ ரஸாநுபவ கனமாகவே;
வய: — யௌவன வயதானது;
நீதம் — சென்றது;
சிர — தலை;
ப்ரபுல்ல பலிதம் — மலர்ந்த புஷ்பம் போல் வெளுத்து விட்டது.;
பரம் — இனி;
இஹ — இவ்வுலகில்;
க்ஷமம் — (எனக்குத்) தக்கதை;
ப்ரார்த்தயே — வேண்டுகிறேன்;
நிரஸ்த ரிபு ஸம்பவே — சத்ருக்கள் இருக்கலாம் என்று ஸந்தேஹிக்கக் கூட அவச்யமில்லாமல் நிர்ப் பயமான;
ரங்க முக்யே — அரங்கம் முதலிய க்ஷேத்ரங்களில்;
பரஸ்பர ஹிதைஷிணாம் — ஒருவருக்கொருவர் ஹிதத்தையே விரும்பி ஸ்நேஹித்திருப்பவரின்;
பரிஸரேஷு — அருகில்;
மாம் — அடியேனை;
வர்த்தய — இருக்கச் செய்ய வேணும்.
யதி ப்ரவர பாரதீ ரஸ பரேண -யதி ராஜனுடைய சார தம ஸரஸ்வதீ ரஸ அனுபவ கனமாகவே –
ஸ்ரீ பாஷ்ய கால ஷேபம் எமக்கு நித்யம் –
அரங்கத்துக்கு ஆபத்து வந்தால் இது எப்படி நடக்கும்
யதி ராஜரின் கத்யங்களை அனுபவித்து ரசத்தில் மூழ்கி இருக்க வேண்டாமா
நீதம் வய –யவ்வன வயசானது சென்றது
பிரபுல்ல பலிதம் சிர-தலை மலர்ந்த புஷ்ப்பம் போலே வெளுத்து விட்டது
பரமிஹ சமம் பிரார்த்தயே -இனி இவ் உலகில் எனக்கு தாக்கத்தை வேண்டுகிறேன்
நிரஸ்த ரிபு சம்பவே க்வசன ரங்க முக்யே விபோ–சத்ருக்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கக் கூட அவசியம் இல்லாமல்
நிர்ப்பயமான -அரங்கம் முதலிய க்ஷேத்ரங்களில் பரஸ்பர ஹிதை ஷிணாம் பரி சரேஷூ மாம் வர்த்தயே–ஒருவருக்கு ஒருவர்
ஹிதத்தையே விரும்பி ஸ்நேஹித்து இருப்பவரின் அருகில் அடியேனை இருக்கச் செய்து அருள வேணும்
ஸ்ரீ ரெங்கத்தில் ஸூ கமாக வாழ தேவரீர் ஆஞ்ஜை ஸ்ரீ பாஷ்யகாரருக்கு அருளினீரே
அவர் திரு நாமத்தை சொல்லி அவர் ஆஞ்ஜையையும் அபி விருத்தியையும்
செய்ய யதி ராஜர் அரங்கம் வாழ வேண்டும் என்று பிரார்த்தித்தால் பெருமாளால் மறுக்க முடியாமல் அருளி தலைக் கட்டுவார்
ஆழ்வானும் ஸ்ரீ ஸூ ந்தர பாஹு ஸ்தவத்தில் யதி ராஜர் உடன் சேர்ந்து வாழ பிரார்த்தித்தால் போலே இவரும் இங்கே அருளிச் செய்கிறார் –
அரங்கம் மட்டுமல்ல, நம் திவ்ய தேசங்கெல்லாம் சத்ரு ஹிம்ஸை இல்லாமல் இருக்க வேணும்.
கச்சியை விட்டு அரங்கம் வந்த எனக்கு ஸ்ரீபாஷ்யாதி ப்ரவசநம் செய்வதிலேயே நீண்ட காலம் இன்பமாய் வயதெல்லாம் சென்றது.
பரஸ்பர ஹிதைஷிகளும் பரம பாகவதர்களுமான பெரியோர்களுடைய ஸத் ஸங்க ரஸமும் அனுபவிக்கப் பட்டது.
இந்த ரஸங்களுக்கு விச்சேதமில்லாமல் ஆயுளின் மிகுதியும் அரங்கத்திலேயே கழிய வேணும்.
யதி ப்ரவர பாரதீ ரஸ பரேண — ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் எமக்கு நித்யம்.
(ப்ரபத்யே ப்ரணவாமாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம்)
(த்ருஷ்டம் ஸ்ரீரங்கதாமநி) என்று சொல்லாமல் ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் கூடுமோ?
அரங்கத்திற்கு ஆபத்து வந்தால் பாஷ்ய காலக்ஷேபம் இன்பமாக எப்படி நடக்கும்?
நிர்ப்பரராயினும் பாஷ்யத்தின் ரஸபரம் அளவேயில்லை.
யதிராஜனுடைய கத்யங்களை தினமும் அனுஸந்தித்து ரஸத்தில் முழுகுகிறோம்.
இங்கேயே ஸ்ரீரங்கத்தில் ஸுகமாக வஸிப்பாய் என்று தேவரீர் நியமனத்தைச் சொல்லிக் கொண்டே யிருக்கிறோம்.
யதிராஜன் திருநாமத்தைச் சொல்லி, அவர் ஆக்ஞையை விருத்தியும் அபிவிருத்தியும் செய்ய வேண்டுமென்றும்,
யதிராஜனுடைய அரங்கம் வாழவேண்டுமென்றும் பிரார்த்தித்தால் பெருமாள் மறுக்க மாட்டார் என்று முடிவில் அதைப் பிரார்த்திக்கிறார்.
ஸுந்தரபாஹு ஸ்தவத்தில் முடிவில் ஆழ்வானும் யதிராஜனோடு அரங்கத்தில் வஸிப்பதைப் பிரார்த்தித்தார்.
எதிராசர் சொற் சுவையை அனுபவித்தே இளமை செல
என் தலையும் நரைத்ததுவே முற்றிலும் அப்படியே
எது வொன்று என் தனக்கே இனியும் இங்கே ஏற்றதுவோ
அதனை நீயே அளித்திடுவாய் அரங்க நகர் பெருமானே
எதிரிகளாய் எவருமே இருந்திடாதே நிலை கொண்ட
எழில் அரங்கம் போல் ஏதும் இடம் ஒன்றில் ஓர் ஒருவர்
இதம் தனையே விரும்புவரின் இடையினிலே அடியேனை
இருக்க வைத்து வரும் நாளை இனிதாக்கி அருள்வாயே –
———————————————————————
பிரபுத்த குரு வீக்ஷண பிரதித வேங்கடே சோத்பவாம்
இமாம பய ஸித்தயே படது ரங்க பர்த்து ஸ்துதிம்
பயம் த்யஜத பத்ரமித்ய பிததத் ச ச கேசவ
ஸ்வயம் கன க்ருணா நிதிர்க்குணகணேந கோபாயதி–29-
ப்ரபுத்த — சிறந்த ஞானமுள்ள;
குரு — ஆசார்யனுடைய;
வீக்ஷண — கடாக்ஷத்தால்;
ப்ரதித — யஶஸ்ஸைப் பெற்ற;
வேங்கடேச — வேங்கடேசரிடமிருந்து;
உத்பவாம் — தோன்றிய;
இமாம் — இந்த;
ஸ்துதிம் — ஸ்தோத்ரத்தை;
ரங்கபர்த்து — ரங்கப்பிரபுவின்;
அபயஸித்தயே — அபயம் ஸித்திப்பதற்காக; (கோயில் நிர்பயமாயிருப்பதற்காக);
படத — படியுங்கோள்;
பயம் — பயத்தை;
த்யஜத — விட்டுவிடுங்கள்;
(அஞ்சல் ! அஞ்சல்!);
வ — உங்களுக்கு;
பத்ரம் — சுபம் (உண்டாகட்டும்);
இதி — என்று;
அபிததத் — சொல்லிக் கொண்டு;
கன க்ருணா நிதி — கருணாநிதியான ;
ஸ — அந்த;
கேஶவ — (ப்ரஹ்ம, ஈசாதிகளுக்குக் காரணமான) கேசவன்;
குணகணேன — தம் கல்யாண குணங்களால்;
கோபாயதி — ரக்ஷிப்பான்.
பிரபுத்த குரு வீக்ஷண -சிறந்த ஞானம் உள்ள ஆச்சார்யர் கடாக்ஷத்தினால்
பிரதித வேங்கடே சோத்பவாம் -யசஸைப் பெற்ற வேங்கடேசர் இடம் இருந்து தோன்றிய
இமாம பய ஸித்தயே படது ரங்க பர்த்து ஸ்துதிம்-இந்த ஸ்தோத்ரத்தை -ஸ்ரீ ரெங்க பிரபுவின் அபய சித்திக்காக -ஸ்ரீ ரெங்கம்
திருக் கோயில் நிர்ப்பயமாய் இருப்பதற்காக -படியுங்கோள்
பயம் த்யஜத -பயத்தை விட்டு விடுங்கோள் -அஞ்சேல் அஞ்சேல்
பத்ரமித்ய பிததத் ச ச -சுபம் உண்டாகாட்டும் என்று சொல்லிக் கொண்டு
கேசவ -ஸ்வயம் கன க்ருணா நிதிர்க்குணகணேந கோபாயதி-கருணா நிதியான அந்த கேசவன் –ப்ரஹ்ம ருத்ரர்களுக்கும் ஈசன்
சர்வ காரணத்வன்-ரஷித்து அருள்வான் -கல்யாண குண அனுபவமே -பிரயோஜனம் -சோஸ்னுதே சர்வான் காமான் –
குணகணேன கோபாயதி — அவருடைய கல்யாண குணங்களின் கூட்டங்களின் அனுபவமே உங்களுக்கு ப்ரயோஜனம் .
அந்த குணங்களை அனுபவிக்கத் தருவதே எங்களுக்கும் ரக்ஷணம்.
(ஸோ ஶ்நுதே ஸர்வாந் காமாந்) ஸ்வயம் அபிததத் — யதிராஜனுடைய திருநாமத்தையும் ஸரஸ்வதீரஸத்தையும் பேசவே,
பெருமாளும் வாய்திறந்து பேசுவார்.
‘பேரருளாளர்’ போல் சோதி வாய் திறந்து பேசுவார் என்பதைக் காட்ட கனக்ருணாநிதி — அருள்நிரம்பிய நிதி என்கிறார்.
இந்த ஸ்துதி ஸ்ரீரங்கபர்த்தாவான ரங்கநாதன் விஷயமென்றும்,
இதன் ப்ரயோஜனம் அரங்கத்திற்கும் ரங்க பர்த்தாவுக்கும் அபய ஸித்தியே என்றும்
விஷயம் ப்ரயோஜனம் இரண்டிலும் வரவேண்டும் என்பதற்காக “ரங்கபர்த்து” என்னும் பதம்
‘அபயஸித்தயே’, ‘ஸ்துதிம்’ என்ற இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது.
அவன் விஷயமான நமது அச்சம் தீருவதும் அவனைத் துதித்தை தான் ஸித்திக்க வேணும்.
அரங்கத்துக்கு ரெங்க பர்த்துக்கும் அபய சித்தியே என்னும் விஷயம் இந்த பிரபந்த தாத்பர்யம் என்று
ரங்க பர்த்து என்ற பதம் -அபய ஸித்தயே -ஸ்துதிம் இரண்டுக்கும் நடுவில் வைத்து அருளிச் செய்கிறார்
பாலகாண்டத்தில் அஶ்வமேதத்தில் ப்ரஹ்மா முதலிய தேவர்கள் துதிக்கையில்,
(பயம் த்யஜத, பத்ரம் வ:) என்று அபயமளித்த வார்த்தையையே இங்கே அமைக்கிறார்.
முதலில் துர்யம் மஹ என்று ஆரம்பித்தது போல்
முடிவில் கைடபதமோரவி மதுபராகஜஞ்ஜாமருத் என்று
மத்ஸ ஹம்ஸ ஹயக்ரீவாவதாரங்களைப் பேசுகிறார்.
(மத்ஸ்ய அஶ்வ கச்சப) என்று சுகரும் மத்ஸ்யாவதாரத்தோடு ‘அஶ்வ”அவதாரத்தையும் அனுஸந்தித்தார்.
“ஹம்ஸ மத்ஸ்ய ஹயக்ரீவ நாராயண கீதாசார்யாத் யவதாரங்களாலே தானே வெளி நின்று
தத்வ ஹிதங்களைப் பிரகாஶிப்பித்தும்” என்று ஸ்ரீரஹஸ்யத்ரயஸாரம் குருபரம்பராதிகாரம்.
கேஶவ — அதிலங்கித த்ருஹிண ஶம்பு ஶக்ராதிகம் என்று முதல் சுலோகத்தில் விஸ்தரித்துக் கூறியதை
இந்த ஒரு பதத்தால் சுருங்கக் காட்டுகிறார்.
(ந தைவம் கேஶவாத் பரம்) என்று மஹரிஷிகளின் ஸபையில்
வேதாசார்யன் தம் கையைத் தூக்கி சபதம் செய்தது ஸூசிப்பிக்கப் படுகிறது.
அப்படியே “க:” என்ற ப்ரஹ்மாவின் பெயர், நான் ஸர்வதேஹீக்களுக்கும் ஈசன்,
நாங்கள் இருவரும் உம் திருமேனியிலிருந்து பிறந்தவர்கள். ஆகையால் உமக்குக் “கேஶவன்” என்று திருநாமம் என்று
எதிரிகையாலே வீடு தீட்டானபடி அவர்கள் சொன்ன பாசுரங்களையே ஸூசிப்பித்து ஸ்திரப் படுத்துகிறார்.
அபீதி: என்று தொடங்கி ஓபாயதி என்று முடிப்பதால்,
அபயத்தை விரும்புவோருக்கு இந்த ஸ்தோத்திரத்தால் த்ருப்தனான ஸர்வேஶ்வரன்
அபய ப்ரதானம் செய்து ரக்ஷிக்கிறான் என்ற ப்ரஸித்தி சொல்லப் படுகிறது.
உயர் ஞான குருக்கள் தம் உளம் குளிரும் நோக்கு தன்னால்
உறும் புகழோன் வேங்கடேசன் உளத்துதித்த அரங்கனது
வியப்பான இத்துதியை விருப்போடு பயிலுங்கள்
விட்டகலும் பயம் எல்லாம் விரைவாக உமை எல்லாமே
பயம் தன்னை ஒழித்திடுவீர் பெரும் நலனே உறுவீர் என
பரிந்து உரைத்த மிகும் கருணை பெரும் நிதியாம் கேசவனே
உயர்ந்த நல்ல பண்புகளின் ஒருங்கு இணைந்த கூட்டத்தால்
உம்மை எலாம் எவ்விதத்தும் காத்து அருள்வான் தானாவே –
——————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –