திருப்பாவை -மார்கழி திங்கள் -ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் வியாக்யானம் – ஆறாயிரப்படி –

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கு ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர் வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ் சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர எம்பாவாய்-1-

மார்கழித் திங்கள்
ஓழிவில் காலம் எல்லாம் -என்றும் அநாதிர் பகவான் கால -என்றும் சொல்லுகிறபடியே பகவத் விஷயத்தில் இவனுக்கு ஆபிமுக்யம் பிறந்தால்
பின்னை அவன் தன்னை அல்ல காணும் கொண்டாட அடுத்து -அக்காலத்தை யாய்த்து-
சைத்ர ஸ்ரீ மான் அயம் மாச -என்று ஒரு ஸம்ருத்தியைப் பார்த்து கொண்டாடிற்று இ றே
சைதர-அல்லாரில் காட்டில் பெருமாளுக்கு உள்ள பிராதான்யம் போலே
மாசங்களுக்கு எல்லா வற்றுக்கும் முதலான மாசம்-
ஸ்ரீ மான் –அவர் எல்லாருக்கும் ராஜாவாக பிராப்தர் ஆனாப் போலே
சைத்ர மாசம் சர்வருக்கும் ஸுகககரம் ஆகையாலே மாசங்களுக்கு எல்லாம் ராஜா என்கிறது
அயம் மாச –
அபிஷேக மனோரத சமயத்திலே சந்நிஹிதமான தன்னேற்றம் அங்கு
சேஷியை சேஷ பூதர் லபிக்கைக்கு கொண்டாடுகிற கொண்டாட்டம் இங்கு-சேஷி பூதரை சேஷி லபிக்கைக்கு கொண்டாடுகிற கொண்டாட்டம்-
புண்ய புஷ்பிதகாநந-பாவநஸ்சர்வ லோகாநாம்த்வமேவ -என்றும்
பும்ஸாம் திருஷ்டி சித்தாபஹாரிண்ம் -என்றும்-அவருக்கு இரண்டு ஆகாரம் உண்டானாப் போலே-இக்காலமும் பாவனமாயும் போக்யமுமாயும் இருக்கை
புஷ்பித காநந –
படை வீடு போலே நாம் அலங்கரிக்க வேண்டாதே தானே அலங்கரிக்கை-
புஷ்பித காநந —
பெருமாள் பொன் முடி சூட காடு பூ முடி சூடிற்று
மார்கழி திங்கள் –
நாதி சீதா ந கர்மதா-என்கிற ந்யாயத்தாலே
அதி உஷ்ணமாதல் அதி சீதளமாதல் அன்றிக்கே இருக்கும் மாசம்
மார்கழி திங்கள்-
தேவர்களுக்கு விடிகிற காலம் ஆகையால் விரதங்கள் அனுஷிப்பார் தொடங்கும் காலமாய் இருக்கை –
மார்கழி திங்கள்-
இம்மலட்டு மாசங்களில் இதுவும் ஒரு மாசமே -என்கிறார்கள் -இம்மாசத்துக்கு விசேஷம் என் என்னில்
சர்வேஸ்வரன் இவ்விபூதியில் பருப் பருத்தவற்றை எல்லாம் நான் – என்கிற போது -மாசா நாம் மார்க்க சீர் ஷோஹம் -என்று
மாசங்களில் வைத்துக் கொண்டு மார்கழி மாசம் ஆகிறேன் என்று அருளிச் செய்தான் –
மார்கழி திங்கள்-
குளிருக்கு அஞ்சி கோப வ்ருத்தர்கள் புறப்படாத காலமும் -நாளுக்கு ப்ரஹ்ம முகூர்த்தம் போலே சம்வத்சரத்துக்கு இம்மாஸம் ஆகையால் சர்வ உத்தர காலம் இ றே
சாத்விக பலம் இ றே தாங்களும் கணிசிக்கிறது –
கால க்ருத பரிணாமம் இல்லாமையைக் கொண்டாடும் போலே பரிணாமத்தைக் கொண்டாடுகிறார்கள் இ றே
பரிணாமம் உண்டாகவுமாம்-இல்லை யாகவுமாம் -பகவத் அனுபவத்துக்கு புறம்பானது த்யாஜ்யமாம் அத்தனை இ றே
இனித் தான் பர்வத பரிசரத்திலே கிடந்ததொரு பீஜத்தோடு கடலின் அருகே கிடந்ததொரு பீஜத்தோடு வாசி அற
பருவம் செய்யும் காலமாய்த்து -கைங்கர்யத்துக்கு ஏகாந்தமான காலம் ஆகையால் ஒழிவில் காலம் என்னுமா போலே கொண்டாடுகிறார்கள்
அசாதாரணமான மாசத்தில் அசாதாரணமான பலத்தைப் பெறுவோம் –
சர்வோத்தரமான காலத்திலே சாத்விக பலம் பெறுவோம் –
எல்லாரும் அபி மதம் பெரும் காலத்திலே நாமும் அபிமதம் பெறுவோம் என்கிறார்கள் –

மதி நிறைந்த –
மாசம் நேர் பட்டால் போலே இருந்ததீ -பக்ஷமும் நேர் பட்ட படி -ஆபூர்ய மாணே பக்ஷே புண்யே நக்ஷத்ரே —என்று
மங்கள கார்யம் செய்வார்க்கு விதிக்கிற விதியும் இவர்களுக்குக் கோல் விழுக்காட்டாலே சேர விழுந்தது-பகவத் பிரவணராய்
இருப்பார் உடைய தேக யாத்ரையை-விதி தான் பின் செல்லக் கடவதாய் இ றே இருப்பது
-த்வதீய கம்பீர மநோநுசாரிணா -என்னக் கடவது இ றே
முன்பு இருள் தேட்டமானால் போலே இப்பொழுது நிலா தேட்டமாய்த்து -காமுகர்க்கும் கோபர்க்கும் இருள் திட்டமாய் இருக்கும் இ றே
நள் இருள் கண் என்னை உய்த்திடுமின் -என்று இ றே முன்பு இருப்பது -தாய்க்கும் தகப்பனுக்கும் அஞ்ச வேண்டா
-இருளிலே புறப்பட்டு அணைக்கலாம் என்கிறாள் –
இருள் அன்ன மா மேனி எம்மிறை -இருளோடு சேர்ந்து இ றே வடிவு தான் இருப்பது ஸ்ரீ நந்தகோபர் வாசலில் கிருஷ்ணனால்
புண் பட்ட பெண்கள் கட்டணமாய் கிடக்குமாய்க் கொள்ளீர் -என்று பட்டர் –
அப்படி நிலாவுக்கு இறாய்க்க வேண்டாதே ஊர் இசைந்து மேல் எழுத்து இட்ட நாள் இ றே -ஒருவரை ஒருவர் எழுப்புகைக்கும் கிருஷ்ண முக அவலோகநத்துக்கும் நிலா உண்டாகப் பெற்றது என்கை
-ஷயாதிகள் போய் பூர்ணன் ஆகிறான் இ றே அவனும் -இவர்களும் நாமும் உளோ மாய் பூர்ணை களாக வாரி கோள் என்கிறாள் –

நன்னாள் ஆல்-
மாசத்துக்கும் பஷத்துக்கும் நாயகக் கல் போலே
இருப்பதொரு நாள் நேர்பட்ட படி என்
நன்னாள் ஆல் –
முன்பு கழிந்தவை தீய நாள் போலே- -நம்மை கிருஷ்ணனோடு கிட்ட ஒட்டாதவர்கள் தாங்களே
கிருஷணனோடு சேருகைக்கு பிரமாணம் பண்ணிக் கொடுத்த நாளாக பெற்றதே
பகவத் விமுகனான போன இவனுக்கு பகவல் லாபம் உண்டான நாள் இ றே நல் நாள் ஆகிறது –
அவன் எதிர் சூழல் புக்கு திரிய -இவன் வைமுக்யம் பண்ணுகை தவிர்ந்து அவன் கிருஷி பலித்த நாள் என்கை –
தா நஹம் த்விஷத க்ரூரான் சம்ஸாரேஷூ நராதமான் ஷிபாமி -என்று நானே இவற்றைக் குழியைக் கல்லி மணலை இடுவேன் என்று
என்று ஸர்வேஸ்வரன் தானே ததாமி புத்தி யோகந்தம்-என்னும் நாள் இ றே
அத்யமேசபலம் ஜென்ம ஸூ ப்ரபாத சமே நிசா –என்னுமா போலே கம்சன் சோறுண்டு வளர்ந்த எனக்கு விடியும் நாள் உண்டாவதே என்றான் இ றே
ஸூ ப்ர பாதாத்ய ரஜநீ மதுரா வாஸ யோஷிதாம் -என்று ஸ்ரீ மதுரையில் உள்ளார்க்கு வெளிச் செறித்தால் -விளங்கினது- போலேயும் –
ஸூ ப்ரபாதாச -திருவாய்ப்பாடியினின்றும் எழுந்து அருளின போது அங்குள்ளார்க்கு அஸ்தமித்து ஸ்ரீ மதுரையில் உள்ளார்க்கு விடிந்தது இ றே
அ ஸூர்யமிவ ஸூர் யேண நிவாதமிவ வாயு நா -அப்படி வீட்டில் கண் இல்லாதார்க்கு கண் உண்டானால் போலேயும்
பிராணன் இல்லாதார்க்கு பிராணன் உண்டானால் போலேயும் யாய்த்து இவர்களுக்கும் -நன்னாளால்
திரு அயோத்யையில் உள்ளார் பெருமாளை முடி சூட்டி அனுபவிக்க பாரித்துக் கொண்டு இருக்க வெறும் தறையான நாள் போல் அன்றிக்கே
மீண்டு வந்து திருமுடி சூடி அருளின நாள் போலே –
நன்னாள்பகல் கண்டேன் –
உதிப்பது அஸ்தமிப்பதாக நிற்கச் செய்தே இ றே -பகல் கண்டேன் -என்கிறது -அதாகிறது நாரணனைக் கண்டேன் என்கை –
அஸ்தமியாத ஆதித்யனைக் கண்டேன் -ப்ராதேசிகன் அல்லாத ஆதித்யனைக் கண்டேன் -ப்ராப்த அப்ராப்த விவேகம் பண்ணினால் ஓர் இரவும் ஓர் பகலுமே உள்ளது –
பகவத் ப்ரத்யாசத்திக்கு முன்பு எல்லாம் பகல் விரவாத இரவாய் -பின்பு எல்லாம் இரவு விரவாத பகலாய் யாய்த்து இருப்பது –
சென்ற நாள் செல்லாத இத்யாதி -கையார் சக்கரத்தின் முன்னாள் போலே இ றே முன்பு கழிந்த நாள்
மாசத்தைக் கொண்டாடுவது -பக்ஷத்தைக் கொண்டாடுவது நாளைக் கொண்டாடுவதாய் -இதிலே
இவர்களுக்கு கிடக்கிற த்வரை வெள்ளம் என் தான் -இவர்கள் ப்ராப்ய ருசி இருந்தபடி –

நீராட –
தோழிமார் ஒருவருக்கு ஒருவர் பவ்யயைகளாய் இருந்தார்களே யாகிலும் -பகவத் சம்பந்தத்தைப் பார்த்தவாறே கௌரவைகளாய் இருப்பார்கள் இ றே –
வயிற்றில் பிறந்தவர்கள் என்று பாராதே கணபுரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவாரே-என்றும்
-நேர் இழை நடந்தாள்-என்றும் -சொல்லா நின்றார்கள் இ றே
இப்படியாகை இ றே ஸ்ரீ வைஷ்ணவர்களை -நீராட -என்கிறது -ஆச்சார்யர்களை நம்பி என்கிறதும் -ஸ்ரீ மதுரகவிகள் நம்பி என்கையாலே –
பட்டர் ஸ்ரீ பாதத்தை கழுவி தீர்த்தம் கொள்ளும் ஆண்டாள் -என்பார்கள் இ றே
எம்பெருமானார் ஸ்ரீ வைஷ்ணவர்களும் எழுந்து அருளா நிற்க பெரிய நம்பி தெண்டன் இட்டுக் கிடந்தார் –
நம்மை இங்கனம் செய்து அருளிற்று ஏன் என்று கேட்க -ஆளவந்தார் எழுந்து அருளுகிறார் என்று இருந்தேன் -என்று அருளிச் செய்தார்
இவை இ றே பகவத் சம்பந்தத்தை இட்டு கௌரவிக்கும் படி –
நீராட –
இவர்கள் தங்களுக்கு நீராட -என்று நோயாசை இ றே -யமுனா ஜாலம் ஒருத்தியுடைய விரஹ அக்னியாலே சுவறுமே-
நீராட –
தமிழர் கலவியை -சுனையாடல் -என்று யாய்த்து சொல்வது -கிருஷ்ண சம்ச்லேஷத்தை யாய்த்து இவர்கள் நீராட என்கிறது –
ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோ ஸ்மிக்ரீஷ் மே ஸீதே மிவ ஹ்ரு தம்-என்னுமா போலே –
அல்ப பலமான ஸ்வர்க்க அனுபவத்துக்கு அதிகாரார்த்தமாக பண்ண வேண்டும் தேவைகளுக்கு ஓர் எல்லை இல்லை –
இந்த நிரவதிக சம்பத்தை பெறுகைக்கு எவ்வளவு யோக்யதை வேணும் என்னில் –போதுவீர் போதுமினோ –
நாலு நாள் ஊர்வசி கடாக்ஷம் பெற்று ஸ்வர்க்க அனுபவம் பண்ணி பின்பு -த்வம்ச -என்று தள்ளுகிற இதுக்கு
கூச்மாண்ட கண-பூசணிக்காய் போன்ற மிக பெரிய – ஹோமாதிகள் பண்ண வேண்டா நின்றது –
நசபுனராவர்த்ததே என்று அபு நராவர்த்தி லக்ஷண மோக்ஷத்துக்கு இச்சா மாத்திரமே அமைவான் என் என்னில்
பெறுகிற பேற்றுக்கு சத்ருசாதனம் இல்லாமையால் இங்கு அபிமத சித்திக்கு இச்சையே வேண்டுவது என்கை –
இச்சை சர்வ உபாய சாதாரணமாய் இருக்குமே -அல்லோம் -என்னாதார் எல்லாரும் அதிகாரிகள் –
இவ்விச்சை சாதனத்தில் புகாது -சைதன்ய கார்யமாம் அத்தனை -கூடும் மனமுடையீர் -இ றே
போதுவீர் போதுமினோ
-அதிகாரி சம்பத்தி உண்டாக்கி இழிய வேணும் -இது வகுத்ததாகையாலே இச்சைக்கு மேற்பட்ட வேண்டியது இல்லையே
நெடும் காலம் இழந்ததும் இவன் பக்கல் இச்சை இல்லாமை யாகையாலே -இவன் இச்சையே வேண்டுவது –
சக்தியும் பிராப்தியும் அத்தலையிலே பூர்ணம் ஆகையால் இனி இவன் சேதனன் ஆனதுக்கு வாசி இச்சை இ றே வேண்டுவது –
இது இல்லையாகில் இது இவனுக்கு புருஷார்த்தம் ஆக மாட்டாது இ றே
சூத்திர விஷயத்துக்கு தனித் தேட்டம் ஆனால் போலே
அபரிச்சின்ன விஷயத்துக்கு துணைத் தேட்டம் ஆகையாலே சஹ காரிகளை சேர்க்கிறார்கள் –
போதுமினோ –
பிரதி கூலரையும் அகப்பட தேன மைத்ரீபவதுதே யதிஜீவிது மிச்சசி -என்னுமவர்கள் அபிமுகரைப் பெற்றால் விடுவார்களோ
போதுமினோ-
போவான் போகின்றார் என்று வழிப் போக்கே இ றே ஸ்வயம் பேறு ஆகுமே –
போதுமினோ –
இசைந்தவர்கள் காலில் விழுகிறார்கள் -தங்கள் பேறாய் இருந்தபடி -எங்களை வாழ்வியுங்கோள் என்கிறார்கள் –
அவர்கள் முன்னே போக-அந்நடை அழகு கண்டு
நாங்கள் பின்னே போக இ றே நினைக்கிறது —

நேர் இழையீர்-
இவர்கள் வடிவு தான் ருசிக்கு பிரகாசமாய் இருக்கும் படி -ஸும்ய ரூபம் என்கிறபடியே –
நீராடப் போதுவீர் -என்ற பிரசங்கத்தாலே ஒரு படி ஆபரணம் பூண்டால் போலேயான படி -புனை இழைகள் அணியும் ஆடையுடையும் புதுக் கணிப்பும் நினையும் நீர்மையதன்று -என்னுமா போலே
ஆபரணங்களை மாறாடிப் பூண்டு இருந்த படியாலும் பரியட்ட மாறாட்டத்தாலும் வடிவில் வேறு பட்டாலும் இவள் சர்வேஸ்வரனுக்கு
பிரசாத பாத்திரம் ஆனாள் என்று தோற்றா நின்றது என்றால் போலே –
கிருஷ்ணன் எப்போது அணைக்கும் என்று அறியாமையால் ஒப்பித்த படி இ றே இருப்பது
நேர்மையால் -நினைக்கிறது -வை லக்ஷண்யத்தை / இழை -என்று ஆபரணம் –

சீர் மல்கும் ஆய்ப்பாடி –
பண்டே பலகாலும் வெண்ணையாலும் சம்ருதமாய் இருக்கச் செய்தே-உபய விபூதி உக்தன் பிறந்த ஐஸ்வர்யம் உண்டு இ றே –
பஞ்ச லக்ஷம் குடியை யுடைத்தாய் -அவர்களுக்கு தனமான பசு முதலான சம்பத்தாலே சம்ருத்தமாய் -அது தான்
பிள்ளைகள் கால் நலத்தால் ஓன்று இரட்டியாய் -ப்ரீதிரோதம சஹிஷ்ட சாபுரீ -என்னும் படி இ றே சம்பத்து மிகுத்து இருக்கும் படி –
சீர் மல்கும் ஆய்ப்பாடி –
இங்குத்தை ஐஸ்வர்யத்தை யுடையவர் கால் நலம் காணும் நித்ய விபூதியில் ஐஸ்வர்யம் -குணாதிக்யத்தாலே இ றே வஸ்துவுக்கு ஏற்றம் –
அது உள்ளது இங்கேயே இ றே -தர்மி அதுவாகையாலே மேன்மையும் இங்கே உண்டே -நீர்மை தன்னேற்றமாம்
-அங்கு தான் கும்பீடு கொண்டு இருக்கும் -இங்கு தான் கும்பிடுகிற இடம் இ றே –
தொழுகையும் இவை கண்ட யசோதை -என்னக் கடவது இ றே
இது காண் கைக்காக இ றே வைதிக புத்திரர்கள் வியாஜ்ஜியத்தாலே நாய்ச்சிமார் அழைத்துக் கண்டது –
இங்குத்தைக்கும் அடி அவ்விருப்பு என்னும் இடம் பிரமாணம் சொல்லக் கேட்க்கும் அத்தனை இ றே
இவ்விடத்தில் ஐஸ்வர்யம் அதிலும் விஞ்சி இருக்கும் என்னும் இடம் கண்களால் காணலாகிறது இ றே
மனுஷ்யத்தவே பரத்வம் இ றே இங்கு –
ஆய்ப்பாடி –
இடக்கையும் வழக்கையும் அறியாத வூர் -யுக்தி ஆபாசம் கொண்டு பதக்கம் -யுக்தி ப்ரத்யுத்தரம் -பேசுவார் இல்லை –
தம்பி தீம்புக்குத் தமையன் பெரு நிலை நிற்குமூர்
நராம பரதாராநவை சஷூர் ப்யாமபி பச்யதி-என்கிற குணம் கண்டு பின் தொடருவார் அன்றிக்கே தீம்பு கண்டு மேல் விழுவார் இருக்கிற வூர் –
இந்திரனுக்கு இடும் சோற்றை மலைக்கு இடுங்கோள் அதுக்கு இசையுமூர் இ றே –
ஆய்ப்பாடி –
க்ருதவத்ய ஷீர வத்ய பபூவு புத்ர ஜன்மத யதாச க்ருஷ்ண உத்பூத-ததா ப்ரப்ருதி மே வ்ரஜே–யாவத் துக்தம் சமுத் பூதம் தாவ தேவ க்ருதம் பவேத் –
நாஸ்திகராய் இருப்பார் அநு மானத்தைக் கொண்டு ப்ரத்யக்ஷத்தை விதிக்கப் புக்கால் சம்சயம் வர்த்தியாதே கண்டத்தை இல்லை யாவது என் என்று
கண்டத்துக்கு மேற்பட்ட அறியாமையால் நாஸ்திகர் இல்லாத வூர் –
கிருஷ்ணன் தீம்பு செய்து மூலை படியே நடக்கிலும்-அதுவே அமையும் என்று இருக்குமூர் –

செல்வச் சிறுமீர்காள்
ஆத்மாவுக்கு ஸ்ரீ மத்தாகிறது -பகவத் ஸ்பர்சம் இ றே –
அந்தரிக்ஷ கதச் ஸ்ரீ மான் -என்னக் கடவது இ றே –
ராவண பவனத்தின் நின்றும் நாலடி இட்ட வாறே ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீ மாலை இட்ட படி –
வலி பாதி -வழக்குப் பாதி -தர்மம் பாதியாக -கிருஷ்ணனால் ஸ்பர்சிக்கப் பட்டு இ றே பஞ்ச லக்ஷம் குடியில் உள்ளாறும் இருப்பது –
சிறுமீர்காள் –
பருவம் கழிந்து இருத்தல் -முரட்டு ஆண்களாய் இருத்தல் -செய்யாதே இருக்கை -அஹங்கார ஸ்பர்சமாதல் -தேவதாந்த்ர ஸ்பர்சமாதல் அன்றிக்கே இருக்கை –
இத்தால் சொல்லிற்று ஆயத்து-அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்கள் இன்றிக்கே இருக்கை –

கூர் வேல் கொடும் தொழிலன்-
நமக்கு அவனை நோக்கித் தருமவனைச் சொல்லுங்கோள்-என்கிறார்கள் -சிறியாத்தானைப் போலே
பசும்புல் சாவ மிதியாதவர் -பிள்ளை பிறந்தவாறே வேலை புகர் எழ கடைய விட்டாராய்த்து –
கொடும் தொழிலன் –
தொட்டில் கால் கடையிலே எறும்பு ஊரிலும் வேலைக் கொண்டு தொடரா நிற்பராய்த்து –
பெரியாழ்வார் பெண் பிள்ளை யாகையாலே அங்குத்தைக்கு காவல் உண்டு என்று தரிக்கிறார்கள்-
நந்தகோபன் குமரன் –
ஸ்ரீ நந்தகோபர் சந்நிதியில் கோல் கீழ் கன்றாய் நிற்கும் படி -நாலிரண்டு மாசம் காடு பாய்ந்து
பெண்களோடு இட்டீடு கொண்டு -ஒன்றை சொல்லி ஒன்றை கேட்டுக் கொள்கை
ஆற்றிலிருந்து –
பிள்ளாய் சிலர் எங்களது என்று அபிமானித்து இருக்கும் நிலத்திலே இருந்தோமோ -சர்வ சாதாரண ஸ்தலம் காணும் –
விளையாடுவோங்களை-
தன்னை ஒழிய நாங்கள் அந்நிய பரைகள் அன்றோ -தன்னிடை யாட்டம் பட்டோமோ -நாங்கள் முன் தீமை செய்தோம்
ஆகிலுமாம் இ றே -தன்னைக் கடைக் கண்ணால் கணிசித்தோமோ -தன்னை இங்கு இட்டு எண்ணினார் இல்லை கிடீர்-
சேற்றால் எறிந்து –
பிறர் அறியாத படி கைகளால் ஸ்பர்சித்தல் ஆகாதோ
வளை துகில் கைக் கொண்டு –
இடைப் பெண்கள் ஆகையால் ஆபரணமும் பரியட்டமும் களைந்து இட்டு வைத்து இ றே குளிப்பது -இவற்றைக் கைக் கொள்ளுமாய்த்து
காற்றில் கடியனாய் ஓடி –
தொடர அகப்படாதே ஓடும் படி -தன் ஜீவனத்திலும் ஒன்றும் குறையாதே கொண்டான் -எங்கள் ஜீவனமும் ஒன்றும் குறையுமே கொண்டான்
அகம் புக்கு
வழி பறிப்பது -அசாதாரண ஸ்தலத்தில் இருப்பது –
மாற்றமும் தாரானால் இன்று முற்றும் –
வார்த்தை ஏதேனும் வளையும் துகிலுமோ -வளையும் பரியட்டமும் தரப் பார்த்திலோம் என்றால் ஆகாதோ
இப்படி இ றே தீம்பிலே கை வளர்ந்து திரியும் படி -அவர்கள் வந்து முறைப் பட்டால்
இவனையோ இவர்கள் இப்படி சொல்வது என்னும் படி விநயம் பாவித்து நிற்கும் –

ஏரார்ந்த கண்ணி யசோதை-இளஞ் சிங்கம்–
கிருஷ்ண அனுபவத்தால் பிறந்த ஹர்ஷம் அடைய கண்ணிலே காணலாய் இருக்கை –
நாட்டார்க்கு புண்ய பாபங்கள் கலசி இருக்கையாலே ஒரு வைரூப்பியம் உண்டே கண்ணில் –
இவளுக்கு சர்வேஸ்வரனை பிள்ளையாகப் பெற்ற பாக்யம் அடைய கண்ணிலே தோற்றி இருக்கும் –
அம்பன்ன கண்ணாள் யசோதை தன் சின் கம் -என்னக் கடவது இ றே
பிள்ளைக்கு தாய் வழி யாகாதே கண் -என்று பிள்ளை உறங்கா வல்லி தாசர் வார்த்தை –
ஒரு நாடாக சதா பஸ்யந்தி பண்ணி அனுபவிக்கிற விஷயத்தை தானே ஒரு மடை செய்து அனுபவிக்கிறவளுடைய கண் இ றே
இளஞ் சிங்கம்—
சிங்கக் குருகு -என்று ஆழ்வான் வார்த்தை –
நந்த கோபன் குமரன் -என்று தமப்பனார்க்கு பவ்யனாய் இருக்கும் படி சொல்லிற்று –
இளஞ் சிங்கம்-–என்று தாயாருக்கு அடங்காத படி சொல்கிறது -தன் களவுக்கு பெரு நிலை நின்று அன்றி
அவளுக்கு பிழைக்க ஒண்ணாது இருக்கை-
அஞ்ச உரப்பாள் யசோதை இ றே –கருத்து அறிந்து தீம்பிலே கை வளரும் படி காணும் அவள் நியமிக்கும் படி –
இவள் பார்வை அறிந்து பரிமாறும் பாவஞ்ஞன் இ றே அவனும் –
இவளும் அவன் ஆணாட்டம் கண்டு ஆனந்த நிர்ப்பரையாய் இருக்குமாய்த்து –
அவ்விடம் புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய் –என்று ஒளிக்க வேண்டுவார் புகுந்தால் ஏதேனும்
ஒரு பதார்த்தாலே மறைத்து வைக்கலாம் படி இருக்குமாய்த்து –
இங்கு ஆண்டாள் மந்த்ர லிங்கம் தோற்றாமே சொல்லுகிறாள் காண் -என்றுமாம் –
நில வறையிலே அடையுண்ட பெண்கள் பக்கலிலே புக்கு அவர்கள் புத்யதீனமாக தன்னைச் சமைத்து வைக்குமாய்த்து –
இவற்றை எல்லாம் முன்னிட்டு –இளஞ்சிங்கம் -என்கிறார்கள் –
சிறுமீர்காள் என்றால் இளஞ்சிங்கம் என்ன வேண்டாவோ –
நந்த கோபாலா எழுந்திராய் -என்கைக்கும்- யசோதா அறிவுறாய்  -என்கைக்கும் அடி இருக்கிற படி

கார் மேனி –
தாயும் தமப்பனும் ஒளித்து வைத்தாலும் விட ஒண்ணாத வடிவு அழகு -இவர்கள் விடாய் தீரும் படி யான வடிவு –
மேகஸ்யாமம் மஹா பாஹும் -என்கிறபடியே -வ்ரத கர்சிதைகளான பெண்கள் விடாய் தீர்க்கும் குளிர்ந்த வடிவு அழகு இருக்கிற படி
செங்கண் –
வாத்சல்யத்தை தெரிவிக்கிற கண்கள் -ஒரு மேகத்திலே இரண்டு தாமரை பூத்தால் போலே இருக்கை –
இராத் திரு நாள் சேவித்தார் கண் போலே இருக்கை -இவர்களிலும் இழவு தன்னது என்னும் இடம் கண்ணிலே தோற்ற இருக்கும் –
ஊர்த்வம் மாஸான் நஜீவிஷ்யே -என்னில் -இத்தலை -நஜீவேயம் க்ஷணம் அபி -என்று இருக்குமவன் இ றே
கதிர் மதியம் போல் முகத்தான் –
தத்ர கோவிந்த மாசீம் பிரசன்ன ஆதித்ய வர்ச்சசம்-சந்த்ரனைத் தண்ணளியிலே ஆதித்யன் புகரை யூட்டினால் போலே இருக்கை –
முகத்தான் -என்று உபமேயம் தன்னையே சொல்லுகிறார்கள் -உபமேயத்தை காணும் அளவும் இ றே அது நிற்பது –

ஆனாலும் அனுபவிப்பார்க்கு ஒரு துறை இட்டுக் கொண்டு இழிய வேணுமே –
நாராயணனே –
வடிவு அழகைக் கண்டு -வேறு ஒரு விஷயத்தை பற்றிற்றாக வேண்டாதே ப்ராப்த விஷயமாய் இருக்கை –
அவனாலும் தன்னை அனுபவிக்கத் தாரேன் என்ன ஒண்ணாது காணும் –
இத்தலை வைமுக்யம் பண்ணின வன்றும் தான் ஆபிமுக்யம் பண்ணிப் போருமவன்-
நாராயண அணுவாக ஸித்தமான வஸ்து இடைச்சிகளுக்கும் கூட ஸூலபனான படி –
இந்நோன்பிலே அதிகரிப்பார்க்கு மந்த்ரம் இது என்கிறது –
இவ்வளவுமே யன்று-தமப்பன்மார் சொல்லக் கேட்டிருப்பர்களே-
நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால் -என்றும்
நாராயண சப்த மாத்திரம் என்றும் -நாராயண பர ப்ரஹ்மம் -என்றும் –

நமக்கே –
அத்திரு நாமத்தில் சொல்லுகிறபடியே சர்வ விஷயமாக அன்று -சம்பந்த ஞானம் உடைய நமக்கே –
ஸ்வ ரக்ஷணத்திலே அன்வயம் இல்லாத நமக்கே
நாராயணனே -என்கிற இடத்தில் அவதாரணம் -உபாய நைரபேஷ்யத்தை சொல்லுகிறது –
இதில் அவதாரணம் ப்ராப்தாவினுடைய ஆகிஞ்சன்யத்தை அறிவிக்கிறது
அவனுக்கு உபாய பாவம் ஸ்வரூப அந்தர்கதம்-அத்தலையில் நிறைவாலும் அவனே உபாயம் -இத்தலையில் குறைவாலும் அவனே உபாயம் –
பலி புஜி சிசுபாலே தாத்ருகாகஸ் கரேவா குண லவ ஸஹஸாசா தத் வஷமாசம் குசந்தீ –
போக்கற்றவனுக்கு திறந்து கிடந்த வாசலிலே புக வேணும் -வைக்கிறவனுக்கும் பேர் சொல்லி வைய வேணும்
இத்தனை இ றே காகமும் சிசுபாலனும் செய்தது –
இத்தனை யாகிலும் விஷயீ கரித்தான் இ றே இருவரையும் –
இக்கைம்முதலும் இல்லை என்கிறார்கள் -நமக்கே -என்கிற இத்தால் –
பறை தருவான் –
உக்கமும் தட்டொளியும் -என்று நாட்டுக்கு ஒரு பேர் சொல்லிக் கிட்டின வாறே உன் தன்னோடு உற்றோமே யாவோம்
உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்னா நின்றார்கள் இ றே –
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் -என்கையாலே யாவதாத்மா பாவியான அடிமையை நினைக்கிறது
பாடிப் பறை கொண்டு -என்றதையும் நிஷேதித்திக் கொண்டு இற்றைப் பறை கொள்வான் அன்று காண் -என்றதையும் நினைக்கிறது –

பாரோர் புகழ –
இசையாதவர்களும் கொண்டாடும்படி -ஸ்வரூப ஞானம் உடையாருடைய யாத்திரையை ஸ்வரூப ஞானம் இல்லாதார் நிந்திப்பார்கள் –
அது வேண்டா இ றே இவர்களுக்கு -வர்ஷம் உண்டாகையாலே
படிந்து நீராடப் போதுவீர் போதுமினோ -என்று ஏலோரெம்பாவாய்
ஏல்-இப்படி யாகில் -என்றபடி –ஏல் -என்றது சம்போதனை
ஓர் -புத்தி பண்ணு/ எம்பாவாய் -என்றது எங்கள் சந்தஸைப் பின் செல் என்றபடி
அன்றிக்கே -பாத பூர்ணமான அவ்யயமாக வுமாம் –
எம்பாவாய் -என்றது -மேல் காம ஸமாச்ரயணம் ஆகையால் பாவாய் -என்று ரதியைச் சொல்லிற்று ஆகவுமாம்
எங்கள் சந்தஸ் அனுவ்ருத்தியைப் பண்ணு என்றுமாம் –
ச -வை -து -ஹிக்கள் போலே பாதத்தைப் பூரித்துக் கிடக்கிறது என்று சொல்லுகிறது –

காலத்தைக் கொண்டாடி –பலத்தைச் சொல்லி –அதிகாரிகளை சொல்லி
-இது கேட்ட பின்பு-அவர்களுக்கு பிறந்த புஷ்கல்யத்தை சொல்லி –
கிருஷ்ண சம்ச்லேஷத்துக்கு ஏகாந்தமான ஊரிலே பிறக்கப் பெற்ற நீங்களும் சிலரே என்று-ஸ்ரீ நந்த கோபர்க்கும் யசோதை பிராட்டிக்கு பவ்யனாகையாலே இழக்க வேண்டா என்று-அவர்கள் ஒளித்தாலும் விட ஒண்ணாத படியான வடிவு அழகாய்ச் சொல்லி
விரூபனானாலும் விட ஒண்ணாத படியான ப்ராப்தியைச் சொல்லி
உபாய நைரபேஷ்யம் சொல்லி
ஆகிஞ்சன்யத்தில் நைரபேஷ்யம் சொல்லி
உகவாதாரும் உகந்து கொண்டாடும் படி சொல்லித் தலைக் கட்டுகிறார் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: