ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை- 201-234—தாத்பர்ய சாரம் -ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் —

201-என்னதுன்னதாவியிலே அறிவார் ஆத்மா என்று அவன் மதம் தோன்றும் -அவன் நினைவாலே ஆழ்வார் அவன்
உயிர் அன்றோ -தீங்கு வர பொறுக்கார்உ-ன்னதென்ன தாவியும் என்ன உன்னதாவியும் –என்று அருளிச் செய்கையாலே
–என் ஸ்வரூபம் நீ இட்ட வழக்கு -உன் ஸ்வரூபம் நான் இட்ட வழக்கு –
அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய் -என்றும் அருளிச் செய்கிறார் -அறிவாரை உயிராக யுடையவன் என்றபடி-
-ஞானீ து ஆத்மைவ மே மதம் -என்றான் இ றே -இதனாலும் அவனுக்குத் துக்கம் வர பொறுக்க மாட்டார் என்றபடி –

202-இருத்தும் எண் தானாய் –எம்பெருமானுக்கே சிஷ்ய லக்ஷண பூர்த்தி யுண்டு -என்கிறார் -ஆச்சார்யனை அபிமதமான ஸ்தலத்தில் வைத்து
-இஷ்டப்படி நடந்து -அவன் திருமேனியில் விருப்பம் கொண்டு -சகல ஸ்நேஹத்தையும் அவன் இடம் பண்ணி -இதர விஷயங்களில் பற்று அற்று
-தரித்ரன் செல்வம் பெற்றால் போலேயும்-பசியால் சோறு பெற்றால் போலேயும் -விடாய்த்தவன் தண்ணீர் பெற்றால் போலேயும்
மிக்க அபி நிவேசத்துடன் அனுபவித்து ஆத்மாத்மீயங்களை ஆச்சார்யனுக்கு சமர்ப்பித்து -எல்லாம் செய்தாலும் ஆச்சார்யன் செய்து அருளிய மஹா உபகாரத்துக்கு
பிரதியுபகாரம் செய்ய முடியாமல் தடுமாறி குறைவாளனாய் இருந்து ஆச்சார்யர் உடைய தேஹ யாத்ர பாரம் எல்லாம் சுமந்து
அல்லும் பகலும் அவனைப் பிரியாமே இருந்து ஆச்சார்யன் நிக்ரஹத்து தள்ளினாலும் போகாதே இருந்து
அவனுக்கு அநிஷ்டமானால் உகப்பானவற்றையும் கை விட்டு ஆச்சார்யன் நியமனப்படியே நடந்து -இருக்க வேண்டுமே சிஷ்யன்
-எம்பெருமான் ஆழ்வார் விஷயத்தில் நடப்பதும் இப்படியே –

203-நண்ணாதார் மெய்யில் -ஆழ்வார் அறிவிலிகளான சம்சாரிகளுக்கு உபதேசிக்கும் ஹேதுக்கள்-விரக்தர்களாய் -ஆத்மகுணங்கள்
நிரம்பியவராய் அணுகி வந்து ஆதாரத்தோடு அபேக்ஷிக்குமவர்களுக்கு உபதேசிக்க வேண்டிய அர்த்தங்களை -பகவத் விமுகர்களாய்
பிரயோஜனாந்தர பரர்களாய் அனுவர்த்திப்பதும் இல்லாதவர்களான சம்சாரிகளுக்கு வழியாய் பிடித்து உபதேசித்து அருள மூன்று காரணங்கள் –
ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமான் -நித்ய சூரிகள் போலே நித்ய சம்சாரிகளுக்கும் சம்பந்தம் ஒத்து இருக்க
இழந்து கிடக்க ஒண்ணாது என்கிற சம்பந்த உணர்ச்சி ஒரு காரணம் –
கண்டு ஆற்றேன் உலகு இயற்க்கை -என்று அநர்த்தம் கண்டு பொறாமை இரண்டாவது காரணம்
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -என்கிறபடி எம்பெருமான் கை விட்டவர்களையும் திருத்தி அல்லது
நிற்க மாட்டாத கரை புரண்ட காருண்யம் மற்று ஒரு காரணம் –

204-தாய்க்கும் மகனுக்கும் –தாய் –சர்வ லோக ஜனனியான சீதா பிராட்டி / மகன் -பிள்ளையான ப்ரஹ்லாதன் -/ தம்பியான விபீஷண ஆழ்வான்-
பிரக்ருதரான நம்மாழ்வார் / மாறன் அடி பணிந்து உயந்த இராமானுசன் -ஆகிய இவர்களுக்கே கீழ் சொன்ன மூன்றும் உண்டு –
அபேக்ஷை இன்றிக்கே காருண்யமே கொண்டு உபதேசித்து அருளுபவர் இந்த ஐவரே —

205-க்யாதி லாப –தமக்கு ஒரு பிரசித்தி உண்டாக வேணும் என்றாவது -லாபம் உண்டாக வேணும் என்றாவது
-பூஜிக்கப் பெற வேணும் என்றாவது அபேக்ஷை இல்லாத ஆழ்வார் சேஷத்வ பரிமள யுக்தமான ஆத்ம புஷபங்களைத் தேடி –
ஆட் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன் -என்கிறபடியே கைங்கர்ய ரூபமாக உபதேசிக்கையாலே-உலகம் எல்லாம் திருந்திற்று
-அதனால் ஆழ்வாருடைய மூன்று இழவுகள் தீர்ந்தனவாயின – எங்கனே என்னில்
திருக் குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக் கொண்டு போகுறிலே -சம்சாரிகள் உஜ்ஜீவிக்கப் பெறாத இழவு தீரப் பெற்றது –
இழந்த வெம்மாமைத் திறத்துப் போன என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் -உழந்து இனி யாரைக் கொண்டு என் உசாகோ -உசாத் துணை இல்லாத இழவும் தீர்ந்தது –
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை -பரிகைக்கு யாரும் இல்லை என்கிற இழவும் தீர்ந்தது –
தம்முடைய உத்தேச்ய பலமாக -எல்லாரும் உஜ்ஜீவித்தும் –தமக்கு உசாத் துணையுமாயும் இருந்தும் -அவனுக்கு
மங்களா சாசனமும் பண்ணுகையாலே மூன்று இழவுகளும் தீர்ந்தன -என்னக் குறை இல்லையே –

206-ப்ரஹ்ம நிஷ்டரும் -ஆழ்வாருடைய நிர்ஹேதுக கருணையை நிலை நாட்டுதல் -ஆழ்வாருடைய உபதேசம் சபலமாயிற்று என்று கொள்ளும் அளவில் –
இவர் இடத்தில் உபதேசம் கேட்ட சம்சாரி சிஷ்யர்கள் -சாஸ்த்ர முறையின் படியே உபசத்தி பண்ணினார்கள் என்றும்
-இவரும் அந்த உபசத்திகளினால் பிரசன்னராகி சாஸ்திரம் விதித்த கட்டளையில் நின்று உபதேசித்தார் என்றும் கொள்ளலாமே –
ஞாலத்தார் பந்த புத்தியும் -அநர்த்தம் கண்டு ஆற்றாமையும் மிக்க கிருபையும் அடியாகவே உபதேசித்தார் என்றும் சம்சாரிகள் விமுகர்களாகவே
இருந்தார்கள் என்றும் ஏன் கொள்ள வேணும் என்னில் -இங்கனம் கொள்ள வேண்டிய ஆவசியக்கதைக்கு நிதானம் சொல்லுகிறது
ஆழ்வார் ப்ரஹ்ம நிஷ்டர் ஆகில் –ஏ பாவம் பரமே -என்கிற பாசுரம் சேராது –
ஆழ்வார் பக்கல் உபதேசம் கேட்டவர்கள்-சம்வத்சர வாசிகள் ஆகில் -பயன் அன்றாகிலும் பங்கலர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் -என்ற பாசுரம் சேராது -என்று இங்கனமே யோஜித்துக் கொள்வது –

207-மெய்ந்நின்று மங்க வொட்டுக்கு–பர உபதேச திசையிலும் பகவத் அனுபவம் இடையறாது என்னல்-ஆழ்வார் பர உபதேச
பரராம் அளவில் இவர்க்கு அக்காலத்தில் -பகவத் அனுபவம் இடையற்றது ஆகாதோ என்னில் -ஆகாது
-மெய்ந்நின்று கேட்டு அருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே-என்றது முதல் -மங்க வொட்டு உன் மா மாயை -என்கிறது அளவாக
நடுவுள்ள-நான்கு திவ்ய பிரபந்தங்களும் -அனுபவம் உள்ளே செல்லா நிற்கச் செய்தே யுண்டான பர உபதேசம் –
ஆழ்வார் தமக்கு அனுபவ கர்ப்பமான உபதேசமும் -உபதேச கர்ப்பமான அனுபவமுமாகவே செல்லும் என்று இ றே
நம் முதலிகள் அருளிச் செய்வது -ஆகையால் இவருக்கு அனுபவ விச்சேதம் ஒரு காலும் இல்லை –

208-இவற்றுக்கு மந்த்ர விதி அனுசந்தான ரஹஸ்யங்களோடே சேர்த்தி -இவருடைய நான்கு திவ்ய பிரபந்தங்களும் ரகஸ்ய த்ரயத்தோடே சேர்த்தி –
ரகஸ்ய த்ரயத்தில் சங்க்ரஹமாயும் நுட்பமாயும் -காட்டப் படும் பொருள்களே இவற்றில் விரித்து அருளிச் செய்கிறார் –
மந்த்ர ரகஸ்யம் -திரு மந்த்ரம் / விதி ரகஸ்யம் -சித்த உபாய வரணத்தை சாங்கமாக விதிக்கும் சரம ஸ்லோகம் –
அனுசந்தான ரகஸ்யம் உபாய வரணத்தையும் -உபேயே பிரார்த்தனையையும் சக்ரமமாக பிரகாசிப்பியா நின்று கொண்ட
கால ஷேபத்துக்கும் போகத்துக்கும் சாரஞ்ஞரால் சதா அனுசந்தானம் செய்யப் படும் திவ்ய ரகஸ்யம் –

209-அளிப்பான் அடியேன் -திரு விருத்தமும் திருவாசிரியமும் சேர்ந்து திருமந்த்ரார்த்த விவரணம் –
பிரணவம் நமஸ் பதார்த்த விவரணம் திரு விருத்தம் –
நாராயணாயா பதார்த்த விவரணம் திருவாசிரியம்
சரம ஸ்லோக விவரணம் பெரிய திருவந்தாதி –

210-த்வயார்த்தம் -சரம பிரபந்தமான திருவாய் மொழி -த்வயார்த்தம் தீர்க்க சரணாகதி என்றது சாரா சங்க்ரஹத்திலே -அதிலே கண்டு கொள்வது –

211-மூன்றில் சுருக்கிய -திருமந்திரம் சரம ஸ்லோகம் -இரண்டிலும் சங்க்ரஹமாக அருளிச் செய்ததை த்வயம் விவரித்தால் போலே
திரு விருத்தம் திருவாசிரியம் பெரிய திருவந்தாதி -ஆகிற மூன்று பிரபந்தங்களிலும் சுருக்கமாகச் சொல்லப் பட்ட அர்த்த பஞ்சகத்தை
இருபது பதிகங்களில் விசதமாக உரைத்து -மற்ற எண்பது பதிகங்களாலும் அது தன்னையே விஸ்தரிக்கும் படி -அர்த்த பஞ்சகமே திருவாய் மொழிக்கு பிரமேயம்
அந்த ஐந்து அர்த்தங்களிலும் பிரதானமான உபாய உபேயங்கள் இரண்டும் பிரமேயம் என்றும்
அவ்விரண்டிலும் உபேயம் ஒன்றையுமே பிரமேயமாக நிர்வஹிக்கும் புடையும் உண்டு –

212-ரகஸ்யத்துக்கு ஓர் எழுத்தும் –நான்கு பிரபந்தங்களிலும் -முதல் பாட்டுக்களில் ப்ரதிபாதிக்கப் பட்டுள்ள அர்த்த விசேஷங்கள் பலவும் நிரூபிக்கப் படுகின்றன –
ரகஸ்யம் -திருமந்திரம் ஓர் எழுத்து -ஓமித்யேகாக்ஷரம் -ஓர் எழுத்தாகிற பிரணவம் சங்க்ரஹமாய் இருப்பது போலே
அதுக்கு ஓர் உருவும் போலே -ஓர் அவயவமாய் இருக்கிற அகாரம் சங்க்ரஹமாய் இருப்பது போலே
ஆனவற்றிலே -நூறு பாட்டுக்களுக்கு சங்க்ரஹமாய் இருக்கின்ற போய் நின்ற ஞானத்திலும்
ஆயிரம் பாட்டுக்களுக்கு சங்க்ரஹமாய் இருக்கின்ற உயர்வற உயர் நலம் -பாட்டிலும்
அர்த்த பஞ்சகமும் –அவித்யாதி ஸ்வரூப ஸ்வபாவம் -ஆதமேஸ்வர பந்தம் -ரக்ஷண க்ரமம்-குண யோகம் -விக்ரஹ யோகம் –
விபூதி யோகம் -ததீய அபிமானம் -உபதேச விஷயம் -அந்யாபதேச ஹேது -இவை போல்வன சங்க்ரஹங்கமாக இருக்கின்றனவே –

213-அடி தொழுது எழ -ஆசீர் நமஸ்கார வாஸ்து நீர்த்தேசங்கள் -மங்களாசரணமும் உண்டு என்கிறார் –
ஆழ்வார் தாம் திவ்ய பிரபந்தம் பண்ண வேணும் என்று கருதி இருந்து நிருமித்தது அன்றிக்கே-நிரம்பின ஏரி நெளிக்குமா போலே
நிமிகிற வாய்க்கரை மிடைந்து புறப்பட்ட சொற்கள் -இவர் பாசுரத்தாலே லோகத்தை திருத்த திரு உள்ளம் பற்றிய எம்பெருமான் நினைவாலே
சகல லக்ஷண சம்பன்னமாய் தலைக் கட்டின பிரபந்தம் ஆகையால் இந்த மங்களாசரணமும் கோல் விழுக்காட்டாலே பலித்தது -எங்கனே என்னில்
துயர் அறு சுடர் அடி -என்பதால் வஸ்து நிர்தேச ரூபமான மங்களம்
தொழுது என்பதால் நமஸ்கார ரூப மங்களம்
ஏழு -என்பதால் ஆஸீஸ் எனப்படும் மங்களம் –

214-சாது சனம் நண்ணா-பத்து திருவாய்மொழிகளும் தசாவதாரங்கள் போலே -அவதார பிரயோஜனங்கள்
எல்லாமே திருவாய் மொழியின் ப்ராதுர்பாவத்துக்கும் உள்ளன –

215- ஐந்தினோடு ஒன்பதினோடு –நிகமன பாசுரங்களில் -ஐந்தினோடு ஐந்தும் வல்லார் -ஒன்பதோடு ஒன்றுக்கும் -இவையும் ஓர் பத்தும் –
நூறே சொன்ன ஓர் ஆயிரம் -தெரியச் சொன்ன ஓர் ஆயிரம் -மிக்க ஓர் ஆயிரம் -அவாவில் அந்தாதிகள் இவை ஆயிரம் –
என்பதற்கு அபிப்ராய விசேஷம் உண்டே -அவை ஆழ்ந்து ஆராயாது தக்கன –

216-பாட்டுக்கு கிரியையும் -பாட்டுக்கள் தோறும் கிரியா பதம் வினைச் சொல்லும் -ஒவ்வொரு திருவாய் மொழிக்கும் ஒரு உயிர் பாசுரமும் –
அஞ்சிறைய மட நாராய் -என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு -பாசுரம் போலே-நூறு பாட்டுக்கும் உபதேச பதிகம் –
செய்யுளுக்கு வினை முற்றில் நோக்கு போலே -பாதிக்கத்துக்கு நிதானப் பாசுரம் போலே -நூறு பாட்டுக்கு பர உபதேச பதிகம் என்றவாறு –
முதல் பத்தில் -வீடுமின் முற்றவும் / இரண்டாம் பத்தில் கிளர் ஒளி இளமை / மூன்றாம் பத்தில் சொன்னால் விரோதம் / நான்காம் பத்தில் -ஒன்றும் தேவும்
ஐந்தாம் பத்தில் -பொலிக பொலிக / ஆறாம் பத்தில் -நல்குரவும் செல்வமும் / ஏழாம் பத்தில் -இன்பம் பயக்க
எட்டாம் பத்தில் -எல்லியும் காலையும் / ஒன்பதாம் பத்தில் -மாலை நண்ணி / பத்தாம் பத்தில் கண்ணன் கழலிணை –

217-பகவத் பக்த பரங்கள்-பயிலும் சுடர் ஒளி -போன்ற பாகவத பரங்களான திருவாய் மொழிகள் -பகவத் ஆஸ்ரயண விதிக்கு சேஷ பூதங்கள் –
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ -என்ற விதி -பகவத் ஆஸ்ரயணம்-பாகவதர்களை அடி பணிந்தால் அல்லது சித்திக்காது
எனவே பகவத் ஆஸ்ரயண விதிக்கு பாகவத சேஷத்வம் சேஷ பூதங்கள் -என்கை –

218-பரத்வ காரணத்வ -ஒவ்வொரு பத்திலும் எம்பெருமானுக்கு இன்ன இன்ன குணம் ப்ரதிபாதிக்கப் படுகின்றது என்றும்
அந்த குணத்தோடு கூடியவனாக அனுசந்திக்கப்பட்ட எம்பெருமான் ஆழ்வாருக்கு உண்டாக்கி அருளிய பேறு இன்னது என்றும் காட்டப்படுகிறது –

மூன்றாம் பிரகரணம் முற்றிற்று –

———————————————-

219-பரபரனாய் நின்ற -முதல் பத்தின் கருத்து -பராத்பரனான எம்பெருமான் தன்னுடைய நிர்ஹேதுக கிருபையினால் ஆழ்வாருக்கு அகவிருளைப் போக்கி
பக்தியாக வடிவு எடுத்த ஞானத்தைக் கொடுத்து -இன்னமும் இவர் நம்மை மறந்து போய் விடும் என்று எண்ணி அங்கனம் மறவாமைக்காக
இடைவிடாதே தம்முடைய ஹிருதயத்திலே நிரந்தர வாஸம் பண்ணினான் -அத்தாலே நிஷ் களங்கமான தத்வ ஞானத்தை யுடையரான ஆழ்வார்
அவனுடைய திருக் கல்யாண குணங்களை தமது திரு உள்ளத்தோடு அனுபவிக்கிறார் -அவ்விஷயம் தனி இருந்து அனுபவிக்க ஒண்ணாமையாலே
சம்சாரிகளையும் கூட்டிக் கொண்டு பெரும் திரளாய் இருந்து அனுபவிக்க விரும்பினார் ஆகையால் அவர்களை நோக்கி த்யாஜ்யமான சம்சாரத்தின் தோஷத்தையும் –
உபாதேயமான பகவத் விஷயத்தின் குணத்தையும் -அவனை பஜிக்க வேண்டிய பிரகாரத்தையும் -பஜனத்துக்குப் பற்றுக் கோடான திரு மந்திரத்தையும் உபதேசித்து
பாஜ நீயானான அவனுடைய ஸுலப்ய குணம் என்ன -அபராத சஹத்வம் என்ன -நீசர்கள் உடனும் கலக்கும் ஸுசீல்யம் என்ன
எளிதாக ஆஸ்ரயணம் பண்ணும் குணம் என்ன -ஆஸ்ரயணம் போக்யமாய் இருக்கும் தன்மை என்ன -கோணல் வடிவெடுத்த
சம்சாரிகள் இடமும் செவ்வியனாய் பரிமாறும் ஆர்ஜவ குணம் என்ன -போகங்களை பொறுக்க பொறுக்க ஸாத்மிக்கும் படி அருளும் குணம் என்ன
பரமபக்திக்கும் பரிகண னைக்கும் ஓக்க முகம் காட்டும் சாம்ய குணம் என்ன – ஆகியவற்றை ஒவ்வொரு திருவாய் மொழியாலும் காட்டி அருளி
அவ்வழியாலே பஜனத்தினுடைய ஸுகர்ய போக்யதைகளையும் காட்டி
பஜிக்கவே சகல பலன்களும் கை கூடும் என்றும் பஜ்ஜிக்கத் தொடங்கின போதே பஜனை விரோதிகள் எல்லாம் தொலைந்து ஒழியும்
என்பதையும் அறிவித்து -ஸ்ரீ கீதையில் அருளிச் செய்த பக்தி மார்க்கத்தையும் -தேவதாந்த்ரங்களில் பரத்வ சங்கை தவிர்ந்து அவன் விஷய
ஞானம் கைக்கொண்டு அநந்ய பிரயோஜன பக்தியை பண்ண -அவன் தமக்கு மயர்வற மதி நலம் அருளினது போலே தாமும் சம்சாரிகளுக்கு
அஞ்ஞான நிவ்ருத்தி பூர்வகமாக ஞான பக்திகளை உபதேசத்தால் உண்டாக்கி பஜனத்திலே மூட்டுகிறார் –

220-சோராத மூவா –இரண்டாம் பாத்தாள் -அனைத்தைக்கும் காரண பூதனான எம்பெருமான்
தமக்கு அறியாதவற்றை அறிவித்து அருள -அதனாலே அறிவு பெற்ற ஆழ்வார்
அந்த அறிவுக்கு பலனாக மோக்ஷத்தை அப்போதே பெற வேணும் என்று ஆசைப்பட்டு பெறாமையாலே விஷண்ணரானார்-
அந்த விஷாதம் எல்லாம் தீரும்படி எம்பெருமான் வந்து சம்ச்லேஷித்து ப்ரீதனானான் -அந்த ப்ரீதி இவர் ஓர் அளவிலே நில்லாதே
இவரோடு சம்பந்த சம்பந்தம் உடையார் அளவும் வெள்ளமிட்டு-அந்த ப்ரீதியாலே இவருக்கு அவன் மோக்ஷத்தைக் கொடுக்கப் புகுந்தான்
ஆழ்வார் அந்த மோக்ஷத்தை அவனுடைய சேஷித்வத்துக்கும் தம்முடைய சேஷத்வத்தைக்கும் தகுதியாம் படி நிஷ்கர்ஷித்தார்-
அதன் பிறகு ஆசிரணீயனான அவனுக்கு கீழ்ப் பத்தில் சொன்ன பரத்வத்தை நிலை பெறுத்துவனான லக்ஷணங்களை வெளியிட்டு
அவற்றுக்கு பொருத்தமான வசன ப்ரத்யக்ஷங்களையும் காட்டினார் -ஆஸ்ரயிப்பார்க்கு ருசி பிறக்கைக்காக த்யாஜ்யமான சம்சாரத்தின் உடைய
துக்க பாஹுள்யத்தையும் ப்ராப்யமான மோக்ஷத்தினுடைய ஆனந்த பிராசுர்யத்தையும் -சம்சார நிவ்ருத்தி பூர்வக மோக்ஷ ப்ராப்திக்கு உறுப்பான
சாதனத்தினுடைய சாரஸ்யத்தையும் முன்னிட்டுக் கொண்டு -ச குண ப்ரஹ்ம உபாசனத்தை விதித்து அதுக்கு அங்கமாக
நிஷித்த அனுஷ்டான தியாகமும் க்ஷேத்ர வாஸம் முதலானவையும் செய்ய வேணும் என்று அருளிச் செய்தார் –

221-முழுதுமாய் எங்கணும் மூன்றாம் பத்தில் -கார்ய வர்க்கங்களான சகல சேதன அசேதனங்களையும் வியாபித்து அவற்றில் உள்ள
தோஷங்கள் அணு அளவும் தன்னை ஸ்பர்சிக்கப் பெறாத படி சர்வ வியாபகனாய் இருக்கின்ற எம்பெருமான் -கீழ்ப் பத்தில்
இருவருடையவும் ஸ்வரூபத்துக்கு தகுதியாக ஆழ்வார் நிஷ்கர்ஷித்த மோக்ஷத்துக்கு பலனாக தன்னுடைய திவ்ய மங்கள விக்ரஹ அனுபவத்தை
இவர்தாம் பெற்றாராம் படி செய்த அளவில் -இவரும் அவ்வனுபவத்தை பெற்று தரித்து -அதனால் உண்டான உகப்பின் மிகுதியால்
எல்லா அடிமைகளும் செய்ய வேண்டும்படியான ஆவல் கிளர்ந்தவராய் -அந்த ஆவலுக்குத் தகுதியாக அப்பெருமான் காட்டிக் கொடுத்த
தன்னுடைய விபூதி விஸ்தாரத்தைப் பேசி -அத்தாலே கரை புரண்ட ப்ரேமம் யுடையவராய் -அந்த ப்ரேமம் அவ்வெம்பெருமான் அளவிலே
அடங்கி நில்லாமல் எல்லையான பாகவத சேஷத்து அளவும் சென்று -அந்த பாகவதர்களுக்கு நிரூபகம் பகவானுடைய வை லக்ஷண்யம் ஆகையால்
அத்தை அனுசந்திக்கவே ஒரு கரணத்தினுடைய செயலை மற்றொரு கரணம் ஆசைப்பட வேண்டும்படியான பேறு விடாய் படைத்தவராய்
எம்பெருமானை அன்றி மாற்று எவரையும் துதிக்க மாட்டாத தம்முடைய வை லக்ஷண்யத்தை வெளியிட்டவராய்
எம்பெருமானை அனுபவிப்பதற்கு ஒரு வகையான இடையூறும் இன்றிக்கே அபரிமிதமான ஆனந்தத்தை அடைந்தவராய்
சம்சாரிகள் எம்பெருமானுடைய பரத்வத்தை கண்டு அஞ்சிப் பின் வாங்காமல் மேல் விழுந்து ஆஸ்ரயிக்கும் படி அர்ச்சாவதார ஸுலப்யத்தை
அவர்களுக்கு உபதேசித்து அர்ச்சிராதி கதியாலே திரு நாட்டைப் பெறுவிக்குமவனான எம்பெருமானை ஒழிய பிறருடைய
ஸ்தோத்ரத்திலே கை வைப்பது பயன் அற்றது என்றும் எம்பெருமான் விஷயத்திலே வாக்கு சபலமாம் படி அடிமை செய்வதே உரியது என்றும்
உபதேசித்து அவர்களைத் தம்மைப் போலவே கைங்கர்ய பரராம் படி செய்து அருளுகிறார் –

222-ஈசனை ஈசனை –மூன்றாம் பத்தாலேவ்யாபகத்வம் சொல்லி -அது நிறம் பெறும் படி -அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜனா நாம் -என்கிறபடி
சகல வஸ்துக்களின் பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் தன் அதீனமாம் படி சர்வ நியாந்தாவான எம்பெருமான் –
ஆழ்வார் ஒழி வில் காலம் எல்லாம்
வழு விலா அடிமை செய்யப் பாரித்து -கால உபாதியைக் கழித்து சமகாலம் ஆக்கி அனுபவிப்பித்து இவர் இழவைத் தீர்த்து
இவருடைய த்ரிகரண வியாபாரங்களை போக்யமாகக் கொள்ள ஆழ்வார் அவனுடைய பிரணயித்தவ குணத்திலே தோற்று
விரஹ அவஸ்தையில் எம்பெருமானுக்கு போலியான பொருள்களையும் அவனோடு சம்பந்தம் உண்டான பொருள்களையும் அவனாகவே கருதும் படி பித்தேறி
திரு நாட்டில் அனுபவத்தையும் ஆசைப்பட்டுக் கூப்பிட
அந்த இழவும் தீரும்படி பெரிய பிராட்டியாரும் தானுமான -போக்தாக்களாக -இருக்கும் இருப்பை தர்சிப்பித்து பிரத்யக்ஷமாம் படி அனுபவிப்பிக்க –
இப்படி முக்த போகத்தை மாநஸமாக பிறப்பித்து அதற்குப் பலனாக தேவதாந்த்ர விரக்தியை யுடைய ஆழ்வார் ஐஸ்வர்ய
கைவல்யங்களின் அல்ப அஸ்திரத்தவாதி சாவாதிகத்வ தோஷங்களை யும்
ஆடு கள் இறைச்சி போன்ற நிந்தித்த பதார்த்தங்களால் ஸூத்ர தெய்வங்களை பஜிப்பதன் நிஹீனத்வத்தையும்
ப்ரஹ்மாதி தேவதைகள் உடைய அஞ்ஞனாதிகளையும் பாஹ்ய குத்ருஷ்ட்டி மதங்களின் தாமஸத்வத்தையும் வெளியிட்டு –
சர்வேஸ்வரன் ரக்ஷகன் அல்லாதார் ரஷ்ய பூதர்கள் என்று கண்டு வைத்தும் தெளியாமல்-இருப்பதற்கு பிரகிருதி சம்பந்தமே காரணம் –
இத்தை அறுக்க உபாயமும் அவன் திருவடிகளே -இவற்றை ஆஸ்ரயித்து சீரிய புருஷார்த்தம் திருவடிகளில் கைங்கர்யம் –
என்று உபதேசித்து பகவத் ஸமாச்ரயணத்தை ருசிப்பிக்கிறார் –

223-ஆவா வென்று -பரத்வம் -காரணத்வம்-வியாபகத்வம் -நியாமகத்வம் -குணங்களால் வந்த ஏற்றத்தையும் தங்கள் தாழ்வையும் அனுசந்தித்து
அகன்று போக நினைப்பவர்களும் மேல் விழுந்து விஷயீ கரிக்கும் பரம காருணிகனான எம்பெருமான் கீழே இவருக்கு
தேவதாந்த்ர-லோக யாத்திரை ஐஸ்வர்ய -அக்ஷரங்களிலும் ஆத்மாத்மீயங்களிலும் வைராக்யம் பிறப்பித்த பலனாக
ஸ்வவிஷயமான பக்தியை பரம்பரையா வளர்ச்சி செய்ய -அந்த பக்தியையும் பாகவத சமாகத்தையும் உடைய ஆழ்வார்
தாம் திருத்த திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களையும் நிறுத்தின தம்மையும் காண வந்த நித்ய ஸூரிகளையும்
ஸ்வேத தீபவாசிகளான சித்தரையும் கண்டு மங்களா சாசனம் பண்ணி -திருந்தாத அஸூர ராக்ஷஸ ப்ரப்ருதிகளையும் உபதேச முகத்தால் திருத்தி
-பாகவத சமாஜ தர்சனம் இனிதாம்படியான ஞானம் பிறந்தவர்களுக்கு ப்ராப்ய த்வரைக்கு அடியான பக்தியையும் உபதேசித்து தலைக் கட்டினார் –

224-என்னையும் யாவர்க்கும் -பரம கிருபையால் அனைவரும் ஆஸ்ரயிக்கும் படி இருக்கிற சர்வ சரண்யன் -பக்தி பாரவசியத்தாலே-
அநந்யகதியான ஆழ்வாருக்கு தன் திருவடிகளை நிரபேஷ உபாயமாக காட்டிக் கொடுக்க -அந்த சித்த -உபாயத்தில் விச்சேதம் இல்லாதபடி
வியவசாயம் கொண்ட ஆழ்வார் -தம்முடைய விவசாயத்தை தூது செய்யும் திருவாய் மொழி மூலம் அவனுக்கு அறிவிக்க
-அறிவித்தும் அவன் கால தாமதித்து எழுந்து அருள பிரணய ரோஷம்
கொண்ட ஆழ்வார் உடைய பிரணய ரோஷத்தை பரிஹரித்த அவன் சாமர்த்தியம் அனுசந்தித்தார் -பிறந்தவாற்றில் குண அனுசந்தானம்
தரித்து நின்று அனுபவிக்க செய்த பிரதிபத்தியும் -குரவை ஆய்ச்சியரிலே பலித்தது -அது பலித்தவாறே பிராப்திக்கு பிரபத்தி பண்ணுவதாக கோலினார்
சித்த உபாய வரணம் பண்ணும் போது இதரங்களை பரித்யஜித்தே வேண்டுகையாலே உபாய விரோதிகளான த்யாஜ்ய அம்ஸங்களை சவாசனமாக விட்டார் –
விட்டதை எல்லாம் தமக்கு போற்றுகிற விஷயமாகவே நினைத்து தமக்கு உபாயமாக நினைத்து இருக்கும் சர்வ ஸூலபனான உலகு அளந்தவன்
திருவடிகளை நித்ய ஸூ ரிகளும் வந்து அனுபவிக்கும் படி நிற்கிற திரு மலையிலே கண்டு த்வய பூர்வ வாக்ய ப்ரக்ரியையாலே
சரணம் புகுந்தார் -பத்துடை அடியவர் தொடங்கி உபதேசித்த பக்தி உபாயத்தின் துஷ் கரத்வாதி தோஷ யுணர்ச்சி காரணமாக
சோகிக்கும் படியான நிலைமை பிறந்தவர்களுக்கு தம்முடைய பிரபத்தி நிஷ்டையை பிரகாசிப்பிக்கிறார் –

225-எண்ணிலாக் குணங்கள் -விசித்திர சக்தி உக்தனான சர்வேஸ்வரன் -க்ஷண காலமும் பிரிய மாட்டாமே பிரபத்தி பண்ணிய தம்மை
இந்திரியங்கள் -விஷயாந்தரங்கள் நடமாடும் சம்சாரத்திலே வைத்து இருக்கக் கண்டு வருந்திக் கூப்பிட்டு தளர்ந்து பிறரால் மீட்க ஒண்ணாத படி
நெஞ்சு பறி யுண்டவராக அவன் தன் விஜய பரம்பரைகளைக் காட்டி இவரைத் தரிப்பிக்க அந்த தரிப்பும் சம்சாரிகள் இழவை நினைத்து சுவறிப் போய்
பழைய ஆர்த்தியே தலை எடுத்து -அவனுடைய அவயவங்கள் எல்லாம் ஸ்ம்ருதி விஷயமாகி ஒரு முகம் செய்து நலிய நோவு பட்டு
இப்படி எடுப்பும் சாய்ப்புமாக வருத்தம் செல்லச் செய்தே-நீயோ சர்வஞ்ஞன் சர்வ சக்தன் – நானோ ஆகிஞ்சன்யன் அநந்ய கதி -ஆற்றாமையும் மிக்கு இருக்க
சம்சாரத்தில் வைக்கும் காரணம் என்ன –நமக்கும் நம்முடையாருக்கும் திருவாய் மொழி பாடுவிக்க என்ன
வியாசாதிகள் முதல் ஆழ்வார்கள் போல்வார் இருக்க நம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்வதே -என்று உபகாரத்தை அனுசந்தித்து
-பிரதியுபகாரம் பண்ணாத தேடி ஒன்றும் காணாமையாலே
திருவாறன் விளையிலே பெரிய பிராட்டியார் உடன் பேர் ஓலக்கத்தில் திருவாய் மொழி கேடப்பித்து அடிமை செய்வது தவிர வேறு கைம்மாறு இல்லை
என்று துணிந்து அங்கனம் செய்ய திரு உள்ளம் திருவாறன் விளையே ப்ராப்யம் -அங்கே எழுந்து அருளி நிற்கிறவனே உபாயம் -என்று அறுதி யிட்டு
தம் ப்ராப்ய பிராப்பகங்களின் முடிவை உகந்து வெளியிட்டு அருளுகிறார் –

226-தேவிமார் பணியா –கீழ் பத்தில் –குணம்-சர்வ சக்தி யோகத்தால் -நித்யமாகக் கல்பிக்கப் பட்ட போக்ய போக உபகரண போக ஸ்தானங்களை யுடையவன் –
சத்ய காமன் -சர்வேஸ்வரன் ஆழ்வாரை தரிப்பிக்க நினைத்து -உபகார பரம்பரையை நினைவூட்டினான்
ஆழ்வாரும் க்ருதஞ்ஞராய் ஆத்ம சமர்ப்பணம் பண்ண -அதனால் பெறாத பேறு பெற்றவனாய் இவர்க்கு உண்டான ஆத்மகுணங்களால்
அவன் மிக மகிழ்ந்து ஆழ்வார் திரு உள்ளத்தே இருந்து அனுபவித்து -அயோக்யதா அனுசந்தானம் பண்ணி அகலாமைக்காக
ஆத்மாவின் வை லக்ஷண்யம் காட்டி அருள -யாதாம்யா ஞானம் அனுசந்தித்த ஆழ்வார்
தம்முடைய ப்ராப்ய ப்ராபகங்கள் கேட்டு உகந்தவர்கள் ப்ராப்யம் ஒன்றும் ப்ராபகம் ஒன்றுமாய் இரு கரையராய் அலையாத படி
ப்ராப்யமாகச் சொன்ன ஒன்றிலேயே அவர்களை ஊன்றச் செய்து அருளுகிறார் –

227-எண் திசையும் அகல் ஞாலம் -அவாப்த ஸமஸ்த காமனாகையாலே ஒன்றையும் உபேஷியாமல் நிர்ஹேதுகமாக ரஷித்து அருளும் ஆபத் சகனான
சர்வேஸ்வரன் கீழ் பிரகாசிப்பித்த ஆத்ம ஸ்வரூப யாதாம்யத்தைக் கண்டதற்கு பலன் ஸ்வரூப அனுரூபமான
ப்ராப்யத்தை அனுபவிக்கையாலே -அவ்வனுபவத்தால் உண்டான த்வரையாலே-விளம்பம் பொறுக்க மாட்டாமல் துடிக்க
சரீர அவசனத்தில் பேறு தப்பாது என்று நாள் அவதி இட்டுக் கொடுக்க -அங்கனம் நாள் இடப பெற்ற ஆழ்வார் கீழ் தம் உபதேசத்தால்
திருந்தினவர்களை ஒழிய அல்லாதாராய்யும் விட மாட்டாத பரம கிருபையால் அதிகார அனுகுணமாக எல்லா உபாயங்களையும் அருளிச் செய்கிறார் –

228-சுரி குழல் அஞ்சனப் புனல் -இப்படி ஆபத்சகன் -ஆபத்தை தவிருக்கைக்கு தகுதியாக சிறந்த வை லக்ஷண்யம் உடைய
திவ்ய மங்கள விக்ரஹத்துடன் வந்து தோன்றி தன் அடியார்கள் சம்சார அடிக் கொதிப்பாலும் -திருவடிகளைக் கிட்டி அனுபவிக்கப் பெறாத தாலும்
ஆர்த்தியை தீர்க்க வல்லவன் -தம்முடைய த்வரைக்குத் தக்கபடி நாள் இட்டுக் கொடுத்ததுக்கு பலன்
அர்ச்சிராதி கதியாலே தேச விசேஷத்துக்கு ஏறப் போகையாலே-அதுக்கு ஆப்த தமனான அவன் தன்னை வழித் துணையாகப் பற்றி
இனி பிராப்தியில் தடை இல்லை என்று தமக்குள் நிச்சயித்தவர் மறைத்து வைத்த அர்த்தம் உள்ளதும் வெளியிட வேண்டும்படியான தசையானவாறே
பிரதம உபதேச பாத்திரமான தம் திரு உள்ளத்துக்கு க்ருத்ய அக்ருத்யங்களை விதித்து -அந்த திரு உள்ளம் போலே விதேயரான
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு கர்த்தவ்யம் முதலியவற்றை வெளியிட்டு
முதல் பத்தில் பிணக்கற அறு வகை பாசுரத்தில் உபக்ரமித்த பக்தி யோகத்தை -சார்வே தவ நெறி யோடே உப சம்ஹரித்து –
சம்சாரிகளுக்கு ஸூ கரமாக ஆச்ரயணத்தை உபதேசித்து அனுபவ கைங்கர்யங்களில் நிற்கிறவர்களுக்கு சீல குணம் ஆகிற ஆழங்காலைக் காட்டி
ஜாக ரூகதையை விதித்து தம் பக்கல் விருப்பத்தால் திருமேனியில் அதி வ்யாமோஹம் பண்ணுமவனுக்கு அதன் தோஷத்தை உணர்த்தி –
தமக்கு பரதந்த்ரனாய் தம்மை பரமபதத்தில் கொண்டு போக ஆதரம் பண்ணுமவனை அநாதி காலம் தம்மை சம்ஹரிக்கப் பண்ணி உபேக்ஷித்தத்துக்கு ஹேது என் என்று கேட்க
அவன் இந்திரிய வஸ்யத்தை முதலான ஹேது பரம்பரையை எண்ணி அதுவும் நம் அதீனம் என்று அறியும் சர்வஞ்ஞரான இவர்க்கு போக்கடி சொல்லுகை அரிது என்று
நிருத்தரனாய் அர்ச்சிராதி மார்க்கத்தையும் அங்குள்ளவருடைய ஸத்காரத்தையும் அவ்வழி யாலே போய்ப் பெறும்
ஸ்வ சரண கமல பிராப்தி அளவாகக் காட்டிக் கொடுக்க அத்தை சாஷாத் கரித்து-அது மானஸ அனுபவ மாத்ரமாய்
பாஹ்ய கரண யோக்யம் அல்லாமையாலே
அத்தை உள்ளபடி பிராபிக்க வேணும் என்று பதறி அவனுக்கு மறுக்க ஒண்ணாத படி திரு வாணை இட்டு தடுத்து
அது பெறா வாணை இல்லாமைக்கு ஹேதுக்களையும் சொல்லும்படியான
தம்முடைய பரம பக்தி எல்லாம் மிகச் சிறிது என்னும் படி கரை புரண்ட அபி நிவேசத்தோடே
வந்து தம்முடைய தாபங்களை போக்கினை படியை வெளியிட்டு அருளுகிறார் –

229-உறாமையோடே -இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று ஆர்த்தராய் சரணம் புகுந்த போதே பிராப்தி விரோதிகளைக் கழித்து
உற்றேன் உகந்து பணி செய்து உனபாதம் பெற்றேன் -என்னும் படியாய் திருவடித் தாமரைகளில் சேர்த்துக் கொள்ளாமல்
அவனுடைய சர்வ சக்தாதிகளும் இருக்கச் செய்தே -இவர் ஆர்த்தியிலும் குறை இல்லாமல் இருக்கச் செய்தேயும் இருள் தரும் மா ஞாலத்தில் வைத்து
துடிக்கப் பண்ணினது -நாடு திருத்த -தன்னுடைய ஸ்ருஷ்ட்டி அவதாராதிகளாலும் திருந்தாத உலகத்தை
-நாடும் ஊரும் தன்னைப் போலே பேரும் தாரும் பிதற்றும் படியாக திருந்த தான் வைத்தான் என்பர் –
நச்சுப் பொய்கை ஆகாமைக்காக என்பாரும் உண்டு -ஆள் கொல்லி பிரபத்தி என்று இழிய மாட்டார்களே
திவ்ய பிரபந்தம் தலைக் கட்டுகைக்காக என்பர் –
வேர் சூடுபவர்கள் பரிமளத்தின் ஆசையினால் மண் உடன் பற்றுவாரை போலே ஞான பிரேம பரிமளம் நிறைந்த ஆழ்வார் திருமேனியில்
தனக்கு உண்டான அபி நிவேசத்தால் வைத்தான் என்பாரும் உண்டு
இனி இனி என்று இருப்பதின் காள் கூப்பிட்டு ஆர்த்தி பரம்பரையை விளைவித்து
பரமபக்தி பர்யந்தமான அதிகாரி பூர்த்தி உண்டாக்குகைக்காகவே கால தாமதம் –

230-கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான் என்று தொடங்கி -கண்ணுள் நின்று அகலான்-என்னுமது அளவாக
பத்துச் சந்தையாலும் சொன்ன சாஷாத் காரம்
நெஞ்சு என்னும் உட் கண் என்கிற ஆந்தர சஷூஸ் சான மனசாலே யுண்டானதாய்
பாஹ்ய சஷூஸ் சாலே அவனைக் காண ஆசைப்பட்டு கூப்பிட்ட சந்தைகள் இருபது உண்டாகையாலே
கண்டு களிப்பக் கண்ணுள் நின்று அகலான் -என்கிற பாசுரம் வரையில் பர ஞானத்தை உள்ளே கொண்டு இருக்கிற பரபக்தி
அதாவது உள்ளே அனுபவம் செல்லா நிற்க பெற்று அல்லது தரியாத பாஹ்ய அனுபவ
அபேக்ஷை நடக்கையாலே பர ஞான கர்ப்பமான பர பக்தி என்கை –

231-இருந்தமை என்றது -அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று ஆழ்வார் முதலிலே ஆசைப்பட்ட படியே
அர்ச்சிராதிகதியாலே தேச விசேஷத்திலே சென்று பகவத் ஸ்வரூபம் முதலானவற்றை பறி பூர்ண அனுபவம் பண்ணுகிற
நித்ய ஸூரிகள் திரளில் கூடி இருந்தாராகக் கண்டு பேசின -அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை
என்கிற பாசுரத்தை உட் கொண்டதான சூழ் விசும்பு அணி முகில் திருவாய் மொழி பூர்ணமான பர ஞானம் –

232-அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமையாகக் கண்டது தான் மானஸ அனுபவமே
மாத்ரமாய் பாஹ்ய அனுபவ யோக்யம் இல்லாமையால்
பெரு விடாய் பிறந்து கூப்பிட்டு தரிக்க மாட்டாமல் திரு வாணை இட்டுத் தடுத்து பெற்றோடே தலைக் கட்டின –
முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து என்கிற முனியே நான் முகன் திருவாய்மொழி பக்தியினுடைய சரம அவதியான பரம பக்தி –

233-பர பக்தி பர ஞான பரம பக்திகள் -பக்த்யா த்வன் அந்யயா சக்ய அஹமேவம் விதோர்ஜுன ஞாதும் த்ரஸ்டுஞ்ச ச
தத்வேன பிரவேஷ்டுஞ்ச ச பரந்தப-என்று அர்ஜுனனைக் குறித்து திருத் தேர் தட்டிலும் –
பரபக்தி பர ஞான பரம பத்தி ஏக ஸ்வபாவம் மாம் குருஷ்வ -என்று பிராரத்த எம்பெருமானாரைக் குறித்து
மத் ஞான தரிசன பிராப்தி ஷூ நிஸ் சம்சயஸ் ஸூகமாஸ்வ -என்று சேர பாண்டியன் எனும் சீரிய சிங்காசனத்தில்
அவன் அருளிச் செய்த ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள்
எம்பெருமானுடன் கூடுவதும் பிரிவதும் இன்ப துன்பங்களாம் படியான பர பக்தி -ஞான அவஸ்தை
அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதியை மிகவும் விசதமாக சாஷாத் கரிக்கும் பர ஞானம் தர்சன அவஸ்தை –
அப்படி சாஷாத் கரித்த வஸ்துவை அப்போதே கிட்டி அனுபவிக்கப் பெறா விடில் முடியும்படியான பக்தி யானது பிராப்தி அவஸ்தை –

224-கீழே நூறே சொன்ன பத்து ஓர் ஆயிரம் என்றதும் சா அபிப்ராயம் -என்ற சூரணையில்ஓ
ர் ஆயிரம் என்றதின் கருத்தை அருளிச் செய்து நிகமிக்கிறார்
மயர்வற மதி நலம் அருளினான் என்று தொடங்கி -அவா வெற்று வீடு பெற்ற -என்று தலைக் கட்டி அருளி
சம்சார காரணமான அஞ்ஞானத்தை போக்கும் ஞான பூர்த்தியை அபகரித்த பகவான் நிர்ஹேதுக கிருபையால்
சம்சார நிவ்ருத்தி பூர்வகமான பகவத் பிராப்தி ரூப மோக்ஷ லாபம் என்று தெளித்தல் ஒரே தாத்பர்யம் இந்த திவ்ய பிரபந்தத்துக்கு –
எந்த பகவத் பிரசாதம் ஞானத்தை அருள்கின்றதோ அதுவே மோக்ஷத்தையும் அருள வல்லது என்பதே திருவாய் மொழியின் திரண்ட பொருள் –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ .வே. காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: