ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை- 150-200—தாத்பர்ய சாரம் -ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் —

150-சேர்ப்பாரை -எம்பெருமானிடம் தூது விடப் படுகிற பக்ஷிகளுக்கு ஸ்வா பதேசம் -இனி வருவது –
விண்ணோர் பிரானார் மாசில் மலரடிக் கீழ் எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே-திரு விருத்தம் -என்று ஆழ்வார் தாமே அருளிச் செய்கையாலே
பகவத் விஷயத்திலே கொண்டு சேர்க்குமவர்கள் பஷிகளாகக் கொள்ளப் படுவர்கள் –
சிறகாகச் சொல்லப் படுபவை ஞானமும் அனுஷ்டானமுமாம் -ஆங்கு ஆங்கு உள்ள பதச் சேர்த்திகளுக்குத் தகுதியாக
ஆச்சார்யர்களையோ ச ப்ரஹ்மச்சாரிகளையோ புத்ரர்களையோ சிஷ்யர்களையோ ஸ்வாபதேசமாகக் கொள்க –

151-விவேகமுகராய்–இனி பஷிகளான உட் பிரிவான அன்னம் கிளி பூவை குயில் மயில் முதலானவற்றுக்கு ஸ்வாபதேசம்
க்ரமேண கூறப்படுகிறது –
செல்வ நம்பி பெரியாழ்வார் நாதமுனிகள் ஆளவந்தார் போல்வாரை அன்னம் என்று கொள்ளலாம் –
நீரையும் பாலையும் கலந்து வைத்தால் அவற்றை பிரிக்க வல்லது அன்னம் -அது போலே ஆச்சார்யர்கள் சார அசார விவேக குசலர்கள்-
வேத சாஸ்திரங்களை வெளியிட்டது பகவத் அவதாரமான ஹம்சம் -அது போல் சிஷ்யர்களைக் குறித்து சாஸ்திர உபதேசம் பண்ணுவார்கள் –
ஹம்சம் சேற்றில் பொருந்தாது -அது போலே மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலத்து அழுந்தார்கள்-
அன்னம் மாதர் நடை அழகைக் கண்டு அப்படியே தானும் நடை பயிலும் -அது போலே அன்ன நடைய அணங்கான
பிராட்டியின் புருஷகாரத்வம் ஆகிற நடத்தையை அநுசரிப்பர்கள் –
அன்னமானது மேலே எழுந்த தாமரை இலையைக் குடையாகவும் பக்குவமான செந்நெல் பயிர் அசைந்து ஆடுவதை சாமரம் வீசுதலாகவும்
சங்குகளின் முழக்கத்தை விஜய கோஷமாகவும் வண்டுகளின் மிடற்று ஓசையைப் பாட்டாகவும் கொண்டு
மானஸ சரஸ் சிலே உள்ள தாமரையை ஆசனமாகக் கொண்டு வீற்று இருக்குமே
அப்படியே தாமரை இலை போலே சாமளமான பகவானது திரு மேனியை தமக்கு சம்சார தாப ஹரமாகவும்
செந்நெல் பயிர் போலே அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் என்னும்படி பரிபக்குவ ஞானம் உடையவர்கள்
அநு கூல வ்ருத்தி செய்யவும் -சங்கு போல் சுத்த ஸ்வபாவம் யுடையவர்கள் ஸ்தோத்ரம் செய்யவும் –
வண்டு போலே சார க்ராஹிகளாய் இருப்பார் போற்றவும் செய்து -குரு பாதாம் புஜம் த்யாயேத் -என்கிறபடியே ஆச்சார்யர் திருவடி இணையை
எப்பொழுதும் நெஞ்சுக்குள்ளே கொண்டு இருக்கும் சிஷ்யர்கள் யுடையதாயும் பிரம்மகுருவுக்கு இருப்பிடதாயுமான
போதில் கமல வன்னெஞ்சம் -என்கிற மானஸ பத்மத்தை வாசஸ் ஸ்தானமாக யுடையராய் இருப்பார்கள்
விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள் என்கையால் சாஸ்திர முறைப்படி க்ருஹஸ்த ஆஸ்ரமத்தில் இருப்பவர்கள் ஆகவுமாம் –
அந்தரம் ஓன்றும் இன்றி அலர் மேல் அசையும் அன்னங்காள் என்கையாலே சம்சார பற்று அற்ற யுத்திகள் ஆகவுமாம் –

152-என் பெறுதி என்ன –வண்டுகளாகவும் தும்பிகளாகவும் சொல்லுகிறது -நாரத முனிவர் -திருப் பாணாழ்வார் -தம்பிரான்மார் -அரையர்கள்-போல்வாரை –
வண்டுகள் அலைந்து கொண்டே இருக்கும் -ஆச்சார்யர்கள் அப்படி அன்றியே ஒரே பொருளில் ஊன்றி இருப்பர்கள் என்கிற இது ஒன்றே வியாவ்ருத்தி –
மற்ற அம்சங்களில் சாம்யம் நிரூபிக்கப் படுகிறது -மதுவிரதம் என்ற பேர் பெற்ற வண்டு தேன் தவிர மற்று ஒன்றை உணவாகக் கொள்ளாதது போலே
உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேனான பகவத் விஷய அனுபவத்தையே விரதமாக கொண்டவர்களாய்
பரிசுத்தமான வாயைக் கொண்டு மகிழ் மாலை மார்பினனுடைய சொல் மாலையின் சாரத்தை க்ரஹிக்கும் அவர்களாய்
வண்டுகள் தென தென என்று ஆலாபனை பண்ணுமா போலே -தே தே என்று -உனக்கே நாம் -என்ற மமகாரம் ஒழிந்து –
இதையே வாய் வெருவுகின்றவர்களாய் காலோசிதமான பண்களை பாடுகிறவர்களாய் -திரு வாசல்களில் பிரமன் சிவன் இந்திரன் முதலான சேவகர்கள்
நிறைந்து தலை நுழைக்க ஒண்ணாத படி நெருக்க திரு வாசல் காப்பானை கதவு திறக்க வேணும் என்று அபேக்ஷித்து
சிரமப்பட்டு உள்ளே புக வேண்டாதபடி தகை ஒன்றும் இன்றிக்கே தாராளமாக உள்ள புகும் அந்தரங்கராய் எம்பெருமானது
தலை மேலும் ஏற வல்லவர்களாய் அவனோடே சேர்ப்பிக்குமவர்களாய் -நாரதாதிகள் வண்டாகவும் தும்பியாகவும் கொள்வது தக்கவர்கள் –

153-கண் வலைப்படாதே –கிளி பூவை முதலானவை யாகச் சொல்வது –
-ஸ்ரீ மதுர கவிகள் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -ஆழ்வான் ஆண்டான் எம்பார் அருளாள பெருமாள் எம்பெருமானார் போல்வாரை –
கிளிகள் வலையில் அகப்படுமா போலே இவர்கள் எம்பெருமானது தாமரைத் தடம் கண் விழிகள் ஆகிற வலையில் ஆகப்படுவார்கள்-
மாதரார் கயல் கண் என்னும் வலையில் அகப்பட மாட்டார்கள் -வளர்த்து எடுப்பார் கையில் விதேயராய் இருப்பார்கள் –
தயிர்ப் பழம் சோற்றோடு பால் அடிசில் நெய்யமர் இன்னடிசில் பாலமுது இவை போலே பரம போக்யமான பகவத் குணங்களை அனுபவிக்க
அனுபவிக்குமவர்களாய் -சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளை என்னுமா போலே
-முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டுப் பின்னோர்ந்து தாமதனைப் பேசுமவர்களாய்
ஆச்சார்யனுடைய நிக்ரஹ அனுக்ரஹங்கள் இரண்டையும் சமமாகப் பாவிக்குமவர்களாய் -கற்பித்தவர்கள் தளர்ந்து இருக்கும் போது
அவர்களுக்கு செவிக்கு இனிதாகச் சொல்லி அவர்களும் கை கூப்பி வணங்கும்படி இருப்பவராய்
மயில்கள் ஆலிப்பதும் அழைப்பதும் செய்யுமா போலே எம்மானை சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளுமவர்களாய்
குயில்கள் பரப்ருதம் என்கிற பேருக்குத் தக்கபடி பிறரால் வளர்க்கப் படுவது போலே
பர அபிமானத்திலே ஒதுங்கி இருப்பாரான மதுர கவிகள் போல்வாரை சொல்லுவது பொருந்தும் –

154-ஆசறு தூவி என்னும் -நாரை கொக்கு குருகு என்று சொல்கிறது -ஸ்ரீ குலசேகர பெருமாள் போல்வாரை –
உள்ளும் புறமும் ஒக்கப் பரிசுத்தர்களாய் -நாரையானது திரைகள் வந்து கிட்டி மேலே தாவிப் போகா நிற்கிற கானலிலே அசையாமல் இருக்குமா போலே
சம்சார சமுத்திர தரங்களான தாபத்ரய ரூப வியசனங்கள் வந்து மிடைந்து மேலிடா நின்றாலும் எம்பெருமான் பக்கலிலே சிந்தை ஊன்றி இருக்கப் பெறுகையாலே
அந்த வியசனங்களுக்கு கலங்காதே இருப்பவர்களாய் கொக்கானது தன் வாயாலே எடுத்துக் கொடுக்க ஜீவித்து இருக்கும் தன் பிள்ளைக்கு
வாய்க்கு அடங்கும் இரை தேடி இடுமா போலே தங்கள் வாக்காலே உதவும் பகவத் விஷயத்தை கொள்ளும் இளைய சிஷ்யர்களுக்கு
அதிகார அநு குணமாக சாத்மிக்கப் கூடிய பகவத் விஷயார்த்தங்களை சாஸ்திரங்களில் ஆராய்ந்து உபகரிக்கும் அவர்களாய்
இடைவீடின்றி கால ஷேப கூடங்களில் தாங்களே சென்று தங்களை பிரிவில் தரியாத ப்ரேமம் உடைய சிஷ்யர்களுடன் பகவத் குண அனுபவம்
பண்ணுமவர்களாய் தங்களால் உஜ்ஜீவித்த சிஷ்யர்கள் உபகார ஸ்ம்ருதியாலே சிரஸா வஹிக்கை யாகிற ப்ரஹ்ம ரதம் பண்ணி
யதா சக்தி சமர்ப்பித்தவற்றை அங்கீ கரிக்குமவர்களாய் நல்ல பதத்தால் மனை வாழ்வர் என்று பாகவத கைங்கர்யத்துக்கு உறுப்பான
க்ருஹஸ்த தர்மத்தையும் சம்சார வெக்காயம் அடியான பயத்தால் இன்ப மருஞ்செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன் என்று
உபேக்ஷிக்குமவர்களாய் உள்ள ஸ்ரீ குலசேகர பெருமாள் போல்வார் இங்கு கொள்ளப் படுவது பொருத்தம் –

155-பூண்ட நாள் சீர்க் கடலை –மேகமாகச் சொல்லுகிறது முதல் ஆழ்வார்கள் திரு மழிசைப் பிரான் கலியன் ஸ்ரீ பாஷ்யகாரர் போல்வாரை -என்கை –
பெய்ய வேண்டிய காலங்களில் கடலிலே புக்கு அதில் நீரைப் பருகிக் கொள்ளும் மேகம் போலே பகவத் குண சாகரத்தை
உள்ளே அடக்கிக் கொண்டு இருப்பவர்களாய் -மேகமானது அவன் திருமேனியோடு ஒத்த நிறத்தை யுடைத்தாய் இருக்குமா போலே
உள்ளுறையும் பெருமாளுடைய நிழலீட்டாலே அவனோடே சாம்யம் பெற்றவர்களாய் -மேகமானது பிராணிகளை ரஷிக்க ஆகாசப் பரப்பு எங்கும் சஞ்சரிக்குமா போலே
சம்சாரி சேதனர்களை ரஷிக்கைக்காக உலகம் எங்கும் சஞ்சாரம் பண்ணுபவர்களாய்
மேகம் வர்ஷத்தாலே தடாகம் முதலியவற்றை நிறைக்குமா போலே ஞானம் ஆகிற தடாகத்தை தாங்கள் வர்ஷிக்கிற பகவத் குண தீர்த்தங்களாலே நிறைக்குமவர்களாய்
மேகமானது தீங்கின்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து வாழ உலகினில் பெய்து மா முத்த நிதி சொரியுமா போலே
அநர்த்த லேசமும் இன்றிக்கே அனைவரும் உஜ்ஜீவிக்கும் படி பகவத் குண ரத்தினங்களை வர்ஷிக்குமவர்களாய்
மேகமானது எவ்வளவு வர்ஷித்தாலும் வர்ஷித்தோம் என்று நினையாதாப் போலே தங்களுடைய உதார குண அதிசயத்தை நினையாதவர்களாய்
அவ்வளவும் அன்றிக்கே இன்னமும் உபகரிக்கப் பெற்றிலோமே -நாம் செய்தது போருமோ என்று வெள்கி இருப்பாராய்
உபகரிக்கப் பெறாத போது உடம்பு வெளுத்து ஒளித்து இருப்பாராய் எதிர்த்தலை வாழ்வதே தங்களுக்கு பேறாக நினைத்து
இருப்பவர்களான தன்மையினால் அன்னவர்களுக்கு மேக சாம்யம் பொருந்தும் –

ஆக இது வரையில் தூது விடப் படுகிற அன்னம் முதலானவற்றுக்கு ஸ்வாபதேசம் அருளிச் செய்யப் பட்டதாயிற்று –
இனி பல கால் தூது விட வேண்டும்படி முகம் காட்டாமைக்கு ஹேதுவும் -தூது விடுகைக்கு பற்றாசும் –
-அதுக்கு விஷயமும் வகையிட்டு அருளிச் செய்யப்படுகிறது –
156-தம் பிழையும் –அஞ்சிறைய மட நாராய் –வைகல் பூங்கழிவாய் -பொன்னுலகு ஆளீரோ-எங்கானல் அகம் கழிவாய் –
-நான்கும் தூது விடும் திருவாய் மொழிகள் –
அஞ்சிறைய மட நாரையில் -கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் அடல் ஆழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி -என்று
அருளிச் செய்கையாலே -வ்யூஹ ஷீராப்தி நாதனுக்கு தூது –
–வைகல் பூங்கழிவாய் –மாறில் போர் அரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார்க்கு –என்பதால் அது வைபவத்தில் தூது –
பொன்னுலகு ஆளீரோ–வானவர் கோனைக் கண்டு யாம் இதுவோ தக்கவாறு என்ன வேண்டும் -என்கையாலே
-அது பரமபத நிலைய பர வாஸூதேவனுக்கு தூது அதிலேயே -எங்குச் சென்றாகிலும் கண்டு -என்று அருளிச் செய்வதால் அந்தர்யாமித்வத்திலும் தூது
-எங்கானல் அகம் கழிவாய் –திரு மூழிக் களத்து உறையும் -குடக் கூத்தர்க்கு என் தூதாய் –என்று அருளிச் செய்கையாலே அர்ச்சையிலே தூது –

இப்படி தூது விட வேண்டும்படி முகம் காட்டாமைக்கு ஹேதுக்கள் –
தம் பிழையும் -என் பிழையே நினைந்து அருளி அருளாத திரு மாலார்க்கு -என்பதால்
சிறந்த செல்வம் -சிறந்த செல்வம் மல்கு திரு வண் வண்டுறையும் என்னும் படி ஆர்த்த ரக்ஷணத்தில் எம்பெருமானை தடை செய்து
கால் தாழப் பண்ணின திரு வண் வண்டூரின் சிறந்த செல்வமும்
படைத்த பரப்பும் -முன் உலகங்கள் எல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன் என்னலம் கொண்ட பிரான் தனக்கு -என்றபடி
படைத்த ஜகத்தின் பரப்பை ரஷிக்கிற பராக்கும்-
தமரோட்டை வாசமும் -தமரோடு அங்கு உறைவார்க்கு தக்கிலமே கேளீரே-என்னும் படி உகந்த பாகவதர்கள் உடன்
கூடி வாழ்க்கையால் -தம்மை மறந்தான் -என்கிறார் –

தூது விடுகைக்கு பற்றாசு அடைவே –
என் பிழைத்தால் திருவடியின் தகவினுக்கு -அபராத சஹத்வமும்
புணர்த்த பூம் தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு -ஆர்த்த ரக்ஷண தீஷித்வம்
தம் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் -அடியார்கள் உடன் ஏக ரசனாய் இருக்கும் தன்மையும்
செக்கமலத் தலர் போலும் கண் கை கால் செங்கனிவாய் அக்கமலத் திலை போலும் திருமேனி அடிகளுக்கு தக்கிலமே கேளீர்கள்–வடிவழகும்-

ஆக தம் பிழை மறப்பித்த ஷமா குணத்தை உணர்த்தப் பெற்ற வ்யூஹம் முதல் தூதுக்கு விஷயம்
சிறந்த செல்வம் மறப்பித்த ரஷா தீஷா குணத்தை உணர்த்தப் பெற்ற விபவ அவதாரம் இரண்டாம் தூதுக்கு விஷயம்
தாம் படைத்த பரப்பில் பராக்கு மறப்பித்த சாரஸ்ய குணத்தை உணர்த்தப் பெற்ற பரத்வமும் அதற்குத்
தோள் தீண்டியான அர்ச்சாவதாரமும் மூன்றாம் தூதுக்கு விஷயம்
தமரோட்டை வாசம் மறப்பித்த ஸுந்தர்யத்தை யுணர்த்தப் பெற்ற அர்ச்சாவதார நான்காம் தூதுக்கு விஷயம் –

பகல் ஓலக்கம் இருந்து -இப்படி பல இடங்களிலும் தூது விட்டாலும் இடங்களிலே பேதமே அன்றி வாஸ்துவில் பேதம் இல்லை என்று த்ருஷ்டாந்ததுடன் நிரூபிக்கிறார் –
சகல பரிஜனங்களும் சேவிக்க தன் வீறு தோற்ற பகல் ஓலக்கம் இருக்கையும் –
ராஜ்யத்தில் உள்ளாருடைய குண தோஷங்களை அறிகைக்காக இரவிலே பிறர் அறியாத படி கறுப்பு உடுத்து நகர சோதனம் பண்ணுகையும்
ராஜ்யத்தில் சிஷை ரஷைகளுக்காக ஏகாந்தமாக இருந்து கார்ய விசாரம் செய்கையும்
துஷ்ட ஜந்துக்களை வதைக்க வேட்டையாடுகையும்
அந்த சிரமம் தீர பூம் தோப்புகளில் அபிமத விஷயங்களோடு விளையாடுகையும் –
ஆகிற இந்து ஐந்து பிரகாரங்கள் அரசனுக்கு இருக்குமா போலே
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் செங்கோலுடைய
திருவரங்கச் செல்வனார் -என்றே ராஜாதி ராஜாவான சர்வேஸ்வரனுக்கும் -விண் மீது இருப்பாய் மலை மேல் நிற்பாய்
கடல் சேர்ப்பாய் மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்-என்றபடி
பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சவதாரங்கள் ஆகிற ஐந்து நிலைகளிலும் இவ்வைந்து பிரகாரங்களை காணலாம் –
பகல் ஓலக்கம் இருக்கும் பிரகாரம் -பரத்வத்திலும்
கறுப்பு உடுத்து சோதிக்கும் பிரகாரம் அந்தர்யாமித்வத்திலே
கார்யம் மந்திரிக்கும் பிரகாரம் வ்யூஹத்திலே
வேட்டையாடும் பிரகாரம் விபவத்திலே
ஆராமங்களிலே விளையாடும் பிரகாரம் அர்ச்சாவதாரங்களிலே
இத்தால் பரத்வாதிகளிலே ஸ்தல பேதமே ஒழிய வஸ்து பேதம் இல்லை என்றதாயிற்று –

158-தமர் உகந்த அடியோமுக்கே -ஆழ்வார் அர்ச்சாவதாரத்தில் மண்டி இருப்பது குண பூர்த்தியாலே என்கிறது –
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே தமர் உகந்தது எப்பேர் அப்பேர் மாற்றப் பேர் -என்கிறபடியே
அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே -அநந்யகதிகள்-ருசி பிறந்த போதே நினைத்த வகைகளில
அனுபவம் செய்ய நித்ய சந்நிதி -பின்னானார் வணங்கும் சோதி –எல்லாக் குளங்களிலும் பூர்ணன் இங்கே தானே –

159-வன் பெரு -எல்லா குணங்களிலும் பூர்ணன் -எல்லா அர்ச்சா திவ்ய தேசங்கள் என்றாலும் ஆழ்வாருக்கு ஒவ்வொரு குணம் பிரகாசமாக காட்டி அருள –
அவற்றை அடைவே சகல திவ்ய தேச பிரதானமான கோயிலில் தொடங்கி அருளிச் செய்கிறார் –
பாற் கடல் யோக நித்திரை செய்யும் வ்யூஹ குணமான ஸுஹார்த்தம் கோயிலிலே பிரதானமாகப் பிரகாசிக்கும் –
யோக நித்திரை செய்பவன் -திருவரங்கத்தாய் இவள் திறத்து என் சிந்தித்தாயே –என் கொலோ முடிகின்றது இவட்கே -என்கிறார் அன்றோ –
வன் பெரு வானக முதலுய்ய இனிதாகத் திருக் கண்கள் வளர்கின்ற திருவாளன் திருப்பதி -வடிவுடை வானோர் தலைவனே -என்பதால்
பர வாஸூதேவன் அனுபவமும் -கடல் இடம் கொண்ட கடல் வண்ணா -வ்யூஹ அனுபவமும் -கட் கிலீ உன்னைக் காணுமாறு அருளாய்
-அந்தர்யாமி அனுபவமும் -காகுத்தா கண்ணனே -விபவ அனுபவமும் -உண்டே -இருந்தாலும்
ஆழ்வாருக்கு வ்யூஹ ஸுஹார்த்தம் பிரதானம் – இங்கே உறைக்கும் படி பிரகாசிப்படுத்தி அருளினான் –

160-மண்ணோர் விண்ணோர் வைப்பில் -உபய விபூதியில் உள்ளார்க்கும் சேமித்து வைத்த நிதி போலே ப்ராப்யமாய் இருக்கும்
-திருமலையில் நிகரில் வாத்சல்யம் உஜ்வலம் – வாத்சல்யம் குணம் விளங்கும் –
போகின்ற காலங்கள் –தாய் தந்தை உயிராகின்றாய் –தண் வேங்கடம் மேகின்றாய் —
கண்ணாய் ஏழ் உலகுக்கும் உயிராய எம் கார் வண்ணனை –வேங்கட வேதியனை –என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே —
நிகரில் புகழாய்–திருவேங்கடத்து எம்பெருமானே –என்கையாலே –

161-உபய பிரதான –ஜீவன் என்ன ஈஸ்வரன் என்ன ஆக இருவருக்கும் வாசகமாய்க் கொண்டு இருவருடையவும் ப்ராதான்யத்தை தோற்றுவிக்கிற
பிரணவம் போலே ஆழ்வாருடையவும் -பொலிந்து நின்ற பிரானுடையவும் ப்ராதான்யம் தோற்ற நின்ற திருக் குருகூரிலே –
உறுவதாவது எத்தேவும் எவ்வுலகங்களும் மற்றும் தன்பால் மறுவில் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும்
நின்ற வண்ணம் நிற்கவே -என்கிறபடி பரே சத்வம் பொலியும் — பரத்வ லக்ஷணம் விளங்கும் –

162-வைஷ்ணவ வாமனத்தில் –நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம் –
திருக் குறுங்குடியிலே ஆழ்வார் திரு உள்ளத்தில் வேறு ஒன்றுக்கும் இடம் அறும் படி விளங்கா நின்ற காளமேக நிபஸ்யாமமான
திவ்ய மங்கள விக்ரஹ அனுபவ ருசியை மேன்மேலும் விளைவிக்குமதாய்-ஸ்ரீ வாமன ராம கிருஷ்ணாதி விபவதாரங்களில்
பிரகாசிக்கும் சமுதாய சோபையான லாவண்யம் பரி பூரணமாய் இருக்கும் -எங்கனேயோ அன்னைமீரில் பாசுரம் தோறும் இதுவே அருளப் பட்டது

163-ருசி விவசர்க்குப் பாதமே சரணாக்கும் உதார குணம் வானமா மலையிலே கொழுந்து விடும் –
கீழ்ச சொன்ன லாவண்யத்தாலே ஒருவராலும் நிவர்த்திப்பிக்க ஒண்ணாத படி பிறந்த ருசியாலே பரவசராய் அநந்ய கதியானவர்களுக்கு
திருவடிகளையே உபாயமாகக் கொடுக்கும் -ஆறு எனக்கு நின் பாதமே சரணாகதி தந்து ஒழிந்தாய் உனக்கொரு கைம்மாறு
நான் ஒன்றிலேன் -எனதாவியும் உனதே -வந்து அருளி என்னெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே –

164-களை கண் அற்றாரை யுருக்கும் மாதுர்யம் குடமூக்கிலே ப்ரவஹிக்கும் -வேறு ஒரு ரக்ஷகனை யுடையோம் அல்லோம் என்று இருப்பாரை –
ஆராவமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே -சிதிலராம் படி மாதுர்யம் பெருகா நிற்கும்
ஆராவமுதம் -திருவாய் மொழிக்கும் எம்பருமானுக்கும் பெயர் அன்றோ –

165-மெலிவிலும் சேமம் கோள்விக்கும் க்ருபை தென்னகரிலே நித்யம் —கீழ்ச சொன்ன பரம போக்யமான விஷயத்தை விரைவில் கிட்டி
அனுபவிக்கப் பெறாமையாலே நாள் தோறும் மெலியும் அளவிலும் அவனே ரக்ஷகன் என்று அத்யவசித்து இருக்கும் படி
பண்ணுமதான கிருபை திருவல்ல வாழிலே நித்தியமாய் இருக்கும் -வைகலும் வினையேன் மெலிய –திருவல்ல வாழ் சூழலின்
மலி சக்கர பெருமானது தொல்லருளே –திருவல்ல வாழ் சேமம் கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே –பாசுரங்களில் நோக்கு-

166-வியவசாயஜ்ஞர் ரக்ஷண ஸ்தைர்யம் பம்போத்தர தேசஸ்த்தம்-ஆர்த்தர்களை ரஷிப்பதில் தன்னுடைய ஊற்றத்தை உள்ளபடி
அறிந்து இருக்குமவர்களுடைய ரக்ஷணத்தில் அனுகூலராலும் சலிப்பிக்க ஒண்ணாத படி இருப்பதான அவனுடைய ஸ்தைரிய குணம்
திரு வண் வண்டூரில் நிலை பெற்று நிற்கும் -வைகல் பூங்கழி வாயில் -ஏறு சேவகனார்க்கு -என்றதில் நோக்கு –

167-விளம்ப விரோதம் அழிக்கும் விருத்த கடநா சாமர்த்தியம் நன்னகரிலே விஸ்தீரணம் –
வைகல் பூங்கழி வாயில் தூது விட்ட இடத்தும் கடுக வந்து முகம் காட்டாமல் -தாமதித்து வருகையால் -போகு நம்பீ -கழகம் ஏறேல் நம்பீ -என்ற
பிரணய ரோஷ விரோதத்தை -அழித்தாய் உன் திருவடியால்-
விருத்த விபூதித்வம் பரப்ப பிரகாசித்த திரு விண்ணகர் -விருத்த கடநா சாமர்த்தியம் -காட்டி அருளினான் –

168-கடிதகடகவிகட நா பாந்த்வம் அவ்வூரிலே த்வி குணம் -குலையும் வாண் முகத்து ஏழையைத் துலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழை கொள் சோதிச் செந்தாமரைகே கண் பிரான் இருந்தமை காட்டினீர் -என்னும் பாசுரத்தில் சொல்லப் பட்ட கடகராலே
தன் பக்கலிலே கடிதரானார்க்கும் கடகரானார்க்கும் -துவளில் மா மணி மாடம் ஓங்கு துலை வில்லி மங்கலம் தொழும் இவளை நீர் இனி அன்னைமீர்
உமக்கு ஆசையில்லை விடுமினோ என்னும்படி விகடனையைப் பண்ணுமதான பந்துத்வ குணம் துலை வில்லி மங்கலத்திலே விளங்கும் –
கடிதர் -ஆழ்வார் –கடகர் -தோழிமார் -இவர்களுக்கு பரஸ்பரம் பொருந்தாமை விலைத்திட்டது பகவத் பந்துத்வம் –
இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசையில்லை விடுமினோ -என்கிற பாசுரத்தினால் இந்த பொருந்தாமை ஸ்ப்ஷ்டம் –

169-கைம்முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் ஸகத்வம் புகுமூரிலே சம்ருத்தம் -திருக் கோளூர் எம்பெருமான் – வைத்த மா நிதி பெருமாள் –
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை -ஆபத் ஸகத்வம் -எல்லாம் கண்ணன் –

170-சென்று சேர்வார்க்கு –உசாத் துணை யறுக்கும் ஸுந்தர்யம் மா நகரிலே கோஷிக்கும் -நெஞ்சை கொள்ளை கொள்ளும் -தென் திருப் பேரை –
வெள்ளைச் சுரி சங்கு –ஏன் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் –இனி யாரைக் கொண்டு என் உசாகோ
-செங்கனி வாயின் திறத்ததாயும் -கண்டு உகந்து அற்று தீர்ந்து -பாசுரங்களில் நோக்கு –

171-ப்ரவண சித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆனந்த வ்ருத்தி நீணகரிலே-தன் பக்கல் பிரவணர் ஆனவர்களுடைய சித்தத்தை –
சிந்தை மற்று ஒன்றின் திறத்தல்லாத் தன்மை -என்றபடி பரமபதத்தில் பேர் சொல்லுவதும் அஸஹ்யமாம் படி
பரத்வத்தில் விமுகமாகப் பண்ணும் ஆனந்தப் பெருக்கம் திரு வாறன் விளையில் வியக்தம் –

172-சாதரரைப் பரிசு அழிக்கும் சேஷ்டித ஆச்சர்யம் குளத்தே கொடி விடும் -பல் வளையார் முன் பரிசு அழிந்தேன் என்னும் படி ஸ்த்ரீத்வ பிரகாரமான
லஜ்ஜை முதலியவற்றை அழிக்கும் மாயக் கூத்தன் என்கிற சேஷ்டித ஆச்சர்யம் பெரும் குளம் என்கிற திருக் குளந்தையிலே விளங்கும் –

173-சிரம மனம் சூழும் ஸுகுமார்ய பிரகாசம் ஆய்ச்சேரியிலே –எம்பெருமானுடைய சிரமத்தை அனுசந்தித்த ஆழ்வாருடைய திரு உள்ளமானது
சுழற்சி அடைவதற்கு உறுப்பான பகவத் ஸுகுமார்ய பிரகாசம் திரு வண் பரிசாரத்திலே விளங்கும் -கொடியார் மாட –ஆளுமாளார் -பாசுரங்களில் நோக்கு –

174-மஹா மதிகள் அச்சம் கேட்டு அமரும் ஸுர்யாதிகள் சிற்றாற்றிலே கொழிக்கும் -வார் கடா வருவி -பாசுரப்படி
-திருச் செங்குன்றூர் திருச் சிற்றாற்றிலே எம்பெருமானுடைய ஸுர்ய வீர்ய பராக்ரமங்கள் விளங்கும் –

175-ஸாத்ய ஹ்ருதிஸ்த்தனாயும் சாதனம் ஒருக்கடுக்கும் க்ருதஜ்ஜநாத கந்தம் தாயப் பதியிலே –
தனக்குத் தாயப் ப்ராப்தமான ஸ்தானமாக நினைத்து இருக்கும் திருக் கடித்தானத்திலே எம்பெருமானுடைய க்ருதஞ்ஞத்வம் பரிமளிக்கும் –
திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்துள்ளே யுறையும் பிரான் -ஆழ்வார் திரு உள்ள வாசமே பரம ப்ராப்யம் –
ஸாத்ய ஹ்ருதிஸ்த்தனாயும்-சாத்தியமான -பலமான -ஹ்ருதய வாசம் லபித்து இருக்கச் செய் தேயும் –
சாதனம் ஒருக்கடுக்கும் க்ருதஜ்ஜநாத-திருக் கடித்த தானது திருப்பதியில் -அநு ராகம் கொண்டு வர்த்திக்கும் படி
கந்தம் என்றது –கடி திரு மணம் என்பதால் –

176-அவகாஹித்தரை அநந்யார்ஹமாக்கும் நாயக லக்ஷணம் வளம் புகழுமூரிலே குட்டமிடும்-தன் பிரசாதத்திலே மூழ்கினவர்களை
மற்றொருவர்க்கு ஆகாத படி ஈடுபடுத்துமதான அவயவ சோபை ஆபரண சோபை போன்ற நாயக லக்ஷணம் குட்ட நாட்டு திருப் புலியூரில் பூர்ணம் –
கரு மாணிக்க மலை மேல் மணித் தடம் தாமரைக் காடுகள் போல் –குட்ட நாட்டுத் திருப் புலியூர் அரு மாயன் பேர் அன்றிப் பேச்சிலள் –

177-போக்ய பாக த்வரை–தெளிந்த சந்தைக்கு முன்னிலை மூன்றிலும் ப்ரகடம்-கனத்த பசியை யுடையவன் அன்னம் பக்குவம் ஆவதற்கு முன்னே
பதற்றித்தினால் அதன் அருகே வந்து கிடப்பது இருப்பது நிற்பதாமா போலே-போக்ய பூதரான ஆழ்வாருக்கு பரமபக்தியாகிற பாகம் பிறக்கும் அளவும்
அநு போக்தாவான எம்பெருமானுக்கு உண்டான பதற்றம் திருப் புளிங்குடியிலும் ஸ்ரீ வர குண மங்கையிலும் ஸ்ரீ வைகுண்டத்திலும் விளங்கும் –
இம்மூன்று திருப்பதிகளில் நின்றும் இருந்தும் கிடந்தும் போருவதற்கு இதுவே கருத்து –

178-போகத்தில் தட்டு மாறும் சீலம் காட் கரையிலே கரை அழிக்கும் -இப்படி போக்ய பூதரான ஆழ்வாருடன் கலந்து பரிமாறும் இடத்தில்
ஆட் கொள்வான் ஒத்து என்னாருயிர் உண்ட மாயன் –வாரிக் கொண்டு என்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை ஒழிய
என்னில் முன்னம் பாரித்து தான் என்னை முற்றப் பருகினான் கார் ஒக்கும் காட் கரையப்பன் கடியனே –
அத்தலை இத்தலையாய் சேஷி சேஷ பாவம் மாறாடிப் பரிமாறும் சீல குணம் திருக் காட் கரையிலே கரை அழிய பெருகும் –

179-மகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்த்வம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் -பாகவதர்களை விட்டுப் பிரிந்து இருக்க மாட்டாத ஸுகுமார்யம்
திரு மூழிக் களத்தில்–அணி மூழிக் காலத்து உறையும் –தமரோடு அங்கு உறைவார்க்குத் தக்கிலமே கேளீரே-பாசுரம் உயிரானது –

180-பிரிந்த துன்பக் கடல் கடத்தும் விஷ்ணு போத ஆன்ரு சம்சயம் நாவாயிலே நிழல் எழும் -மேன்மேல் தூது விட வேண்டும் படியான
விரஹ துக்க சாகரம் கடத்தும் விஷ்ணு போதமான அவனுடைய பரம கிருபை திரு நாவாயிலே நிழல் எழும் –

181-சரண்ய முகுந்தத்வம் -உத்பலா வதகத்திலே பிரசித்தம் -திருக்கண்ண புரத்திலே-சரண்யனுடைய முக்தி பூமி பிரதத்வம் –
நன்றாக விளங்கும் – மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -அன்றோ –

182-மார்க்க பந்து சைத்யம் மோஹனத்தே மடுவிடும் -திரு மோகூரிலே வழித்துணைவன் -எம்பெருமானுடைய சீதளத்வம் -குணம் விளங்கும் –
தயரதன் பெற்ற மரகத மணித்தடம் –திரு மோகூர் நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி யாமே -உயிரான பாசுரங்கள் –

183-சைஸன்ய புத்ர சிஷ்ய ஸாத்ய சித்த பூ ஸூ ரார்ச்ச நத்துக்கு முக நாபி பாதங்களை த்வார த்ரயத்தாலே காட்டும் சாம்யம் அனந்த சயனத்தில் வ்யக்தம் –
அனந்தபுரத்து அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அப்பணி செய்வர் விண்ணோர் -நித்ய சூரிகளுக்கு -திரு முக மண்டல திரு வாசல் –
அமரராய்த் திரிகின்றார்க்கு ஆதி -ப்ரஹ்மாதி தேவர்களுக்காக திரு நாபி கமல திரு வாசல்
படமுடை இரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர் -நாமும் உமக்கு அறியச் சொன்னோம் -நமக்கு பிராப்யமான திருவடி திரு வாசல் –
பாதம் காண நடப்பார்க்கு பாத வாசல் –உந்தி மேல் வந்து உதித்த நான்முகனுக்கு நாபி வாசல் -முகம் நோக்கி பேசும் சேனாபதி ஆழ்வானுக்கு திரு முக வாசல் என்றபடி –

184-மோக்ஷ தாநத்தில் ப்ரணத பாரதந்தர்யம் வளம் மிக்க நதியிலே கரை புரளும் -திரு வாட்டாற்றிலே எம்பெருமான் ஆஸ்ரித பரதந்த்ரனாய்
மோக்ஷம் தரும் அளவில் அவர்கள் விதித்த படி செய்வானாய் -ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே –
இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் –விதி வகையே -பாசுரங்களின் படியே –

185-த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் மருள்கள் கடியும் மயல் மிகு பொழிலிலே தழைக்கும்-மஹிஷியின் உச்சிஷ்டத்தை விரும்பும்
ராஜகுமாரனைப் போலே முமுஷுக்களுக்கு த்யாஜ்யமான தேஹத்திலே எம்பெருமானுக்கு உண்டான வியாமோஹ சாலித்தவம்
-திரு மாலிருஞ்சோலை வஞ்சக் கள்வ–மாய வாக்கை இதனுள் புக்கு –
திருமாலிருஞ்சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே -உகந்து அருளினை தேசங்களில் காட்டும் விருப்பத்தை
இதில் ஏக தேசத்தில் பண்ணி -மங்க வொட்டு உன் மா மாயை -என்று கால் கட்டி விடுவிக்க வேண்டும் படி
அவனுக்கு உண்டான வியாமோஹத்தை -த்யாஜ்ய தேஹ வியாமோஹம் -என்கிறார் –

186-அங்கீ கரிக்க அவகாசம் பார்க்கும் ஸ்வாமித்வம் பெரு நகரிலே பேர் பெற்றது -அப்பக்குடத்தான் -திருப் பேர் நகர் -ஸூ ஹ்ருத லேசம்
இல்லாதாரையும் மடி மாங்காய் இடுமா போலே என் பேரைச் சொன்னாய் -என்னூரைச் சொன்னாய் -அஞ்ஞாத ஸூ ஹ்ருதங்களை ஆரோபித்தும்
இதற்காகவே திருப் பேர் நகர் -என்ற திரு நாமம் -பேர் சொல்வார்களே எதற்க்காகவாவது -அஞ்ஞாத ஸூஹ்ருதங்களை ஆரோபித்து
அங்கீ கரிக்க இடம் பார்க்கும் ஸ்வாமித்வம் -திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்னத் திருமால் வந்து என் நெஞ்சம் நிறையப் புகுந்தான் –

187-இவற்றில் ப்ராவண்யம் -இத்திருப்பதிகளில் ஆழ்வாருக்கு ப்ராவண்யம் உண்டானது எப்போது -இவர் ஸ்ரீ ஸூ கத்தி
அருளிச் செய்யத் தொடங்கினது எத்தனை பிராயத்தில் –
இவர் ஸ்ரீ ஸூ க்திகளுக்கு போக்தாக்கள் யார் -போக்யதை இருக்கும் படி யாது என்னில்
அர்ச்சாவதார திவ்ய தேசங்களில் ஊற்றம் மிக்க இளம் பிராயத்திலே-பிரபந்தம் அருளிச் செய்யத் தொடங்கினது
பதினாறு கலைகளாலும் பரி பூரணமான சந்த்ர மண்டலம் போலே பதினாறு திரு நக்ஷத்ரம் நிரம்பியதும் –
அந்த சந்த்ர மண்டல அம்ருதம் தேவர்களுக்கு மாத்திரம் போக்யம்-ஆனால் இவற்றுக்கோ அருளிச் செய்யும் தாமும் -கற்பவர்களான
சம்சாரிகளும் -கேட்பவர்களான நித்ய ஸூ ரிகளும் -பாட்டு உண்பவனான சர்வேஸ்வரனும் -உபய விபூதியும் -உபய விபூதி நாதனும் -என்றவாறு
முகம் செய்தது -முகத்தில் நின்றும் வெளிவந்தது என்றபடி –

188-நீர் பால் –திருவாய் மொழி அவதரித்த கிராமம் -நீர் பாலாய் -பால் நெய்யாய் -ணெய் அமிருதமாய் -பாத்தாலே நிரம்பின ஒரு ஏரியாக ஆழ்வார் –
மயர்வற மதி நலம் அருளினன் -கர்ம ஞான அனுக்ருஹீதையான பக்தியின் ஸ்தானத்தில் பகவத் பிரசாதமாய் -அது அடியாக
பர பக்தி தொடக்கி பிறக்கையாலே -ஞானம் முதலிலே பர பக்தி ரூபமாய் -பர பக்தி பர ஞானமாய் -பர ஞானம் பரம பக்தியாய் முதிர்ந்த படியை நோக்கும் கால்
நீர் –பால் –நெய் -அமுது -நிரம்பின ஏரியாகவே ஆழ்வார் -நீரின் ஸ்தானம் ஞானம் / பால் -பர பக்தி / நெய் பர ஞானம் / அமுது பரம பக்தி
-ஆஸ்ரயம் அழியாமைக்காக பரிவாஹ அபேக்ஷை பிறந்து வாய் கரை நெளியத் தொடங்கி-வாய் கரையாலே அருளிச் செயல் அவதாரம்
சொற்கள் கிஞ்சித் கரிக்க என்னைக் கொள் என்று மேல் விழ -மிடைந்த சொல் தொடை யாயிரம் -தேங்கி இருக்கும் அமுத வெள்ளமே ஸ்ரீ ஸூ க்திகள்
-அவாவில் அந்தாதிகளால் இவை யாயிரமும் -பக்தி பலாத்காரத்தாலே பிறந்த ஆயிரம் என்று நிரூபகமாம் படி யாயிற்று –

189-மனம் செய் -பகவத் தத்துவத்தை கை இலங்கு நெல்லிக் கனியாக சாஷாத் கரித்த ஆழ்வார் -சம்சாரிகளுக்கு உஜ்ஜீவன அர்த்த விசேஷங்களை
உபதேசம் பண்ணி அருளினது கீதா உபநிஷத்துக்கு சமம் -ஜீவா பரமாத்மா பேதம் -ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதம் –
அசித்தில் காட்டில் சித்துக்கு உண்டான வாசி -ஆத்மாக்களின் நித்யத்வம் -தேஹங்களின் அநித்யத்வம் -சர்வேஸ்வரனுடைய நியாமகத்வம்
அவனது ஸுலப்யம் -சர்வ ஆசிரயணீத்வம் -அஹங்கார தோஷம் -இந்த்ரியங்களின் ப்ராபல்யம் -மனசின் ப்ராதான்யம் –
மநோ வாக் காயங்களை அடக்க வேண்டிய அவசியம் -ஸூ கருத்துக்களின் பேதம் -தேவா ஸூர விபாகம் -விபூதி யோகம் -விஸ்வரூப தர்சனம்
சங்க பக்தி அங்க பிரபத்தி ஸ்வதந்த்ர பிரபத்தி -போன்றவை கீதா ஸ்லோகங்களில் அருளிச் செய்தது போலவே திருவாய்மொழி அருளிச் செயல்களும் என்றவாறு

190-அது தத்வ உபதேசம் -வக்த்ரு வை லக்ஷண்யத்தால் உண்டான ஏற்றம் உண்டே இதற்கு -சாஷாத் தத்வம் எம்பெருமான்
-தத் வித்தி ப்ரணிபாதேன-என்று தத்வ தர்சிகள் உபதேசத்தை எம்பெருமான் தானே ஸ்ரீ கீதையில் புகழ்ந்து அருளுகிறானே –

191-அது ஐவரை வெல்வித்தது-அர்ஜுனனை யுத்தத்தில் மூட்டி ஐவரை வெல்வித்து நூற்றுவரை பொடி படுத்த கீதை அவதாரம்
தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு -நெஞ்சு பறியுண்டு போம்படி முடிப்பான் சொன்ன ஆயிரம் –
-ஸ்வரூப விரோதி சங்கம் முடிக்க திருவாய்மொழி அவதாரம்
இரண்டுமே மோக்ஷ சாஸ்திரமே யாகிலும் அன்யார்த்த மாக அவதாரம் இல்லாத ஏற்றமும் உண்டு –

192-அங்கு நம்பி சரண் என்று -உபக்ரம உபஸம்ஹார என்றங்களும் உண்டே -கீதை தொடங்கும் போது-நாந்தகம் ஏந்திய நம்பி சரண்
என்று தாழ்ந்த தனஞ்சயருக்காக-சிஷ்யஸ்தே ஹம் சாதி மாம் த்வாம் ப்ரபன்னம் -அர்ஜுனனுடைய அனுவர்தனம் கண்டு ப்ரீதி யுடன் ஆரம்பம்
நஸூ மச்ரத்ததா நோ சி துர்மேதாச் சாசி பாண்டவ அப்புத்தயா என்ன ஜா நீ ஷே தன்மே ஸூ மஹத்பரியம் -என்று அப்ரீதிரோடே தலைக் கட்டிற்று
திருவாய் மொழி பரம கிருபையால் -ஏ பாவமே பரமே என்று தொடங்கி பொலிக பொலிக பொலிக என்று மங்களா சாசனம் பண்ணி
உற்றேன் உகந்து பனி செய்து என்று ப்ரீதியுடன் தலைக் கட்டிற்று -உபதேசம் பலித்தது இங்கு தானே -என்ற ஏற்றம் இதுக்கு உண்டு என்றவாறு –

193-அதில் சித்த தர்ம விதி -அர்த்த கௌரவத்தால் வந்த ஏற்றம் இதற்கு -மாம் ஏகம் சரணம் வ்ரஜ -சித்த தர்மம் பற்ற விதித்தமையே அங்கு
இங்கு -திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்மினோ -என்ற விதியும் –
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்ற அனுஷ்டானமும் இரண்டும் உண்டே இங்கு –

194-பகவன் ஞான விதி -கீதைக்கும் உதகர்ஷம் ஆழ்வார் அங்கீ காரத்தாலே-அந்தமில் ஆதியம் பகவன் வணக்குடை தவ நெறி வழி நின்று -என்றும்
ஞான விதி பிழையாமே -என்றும் -பண்டே பரமன் பணித்த பணி வகையே -கண்டேன் கமல மலர்ப்பாதம் -போன்று ஆழ்வார்
பிரமானமாகக் கொள்ளுகையாலே கீதைக்கு உதகர்ஷம் -புத்த முனி கபில முனி -பவுத்த சாஸ்திரம் சாங்கிய சாஸ்திரம் அவன் தானே அருளிச் செய்தமை என்றாலும்
வைதிகர்கள் பரிக்ரஹிக்காமையால் அவை அப்ரமாணங்கள் ஆயின –

195-வேத வேத்ய வைதிக –ஹித அநு சான பரமான வேதம் உபதேசிப்பதும் -வேத வேத்யனான எம்பெருமான் உபதேசிப்பதும் –
வைதிக மகரிஷிகள் உபதேசிப்பதும் தத்வ ஹித புருஷார்த்தங்களில் அறிவு இல்லாத சம்சாரிகளுக்கு மாத்திரத்திலே யாம்
அறிவிலியான சம்சாரிகளுக்கும் -எம்பெருமானே உபாயம் என்று இருக்கும் ஞானிகளுக்கும் -எம்பெரு
அவன் அனுபவமே போது போக்காய் இருக்கும் ஞான விசேஷ உக்தர்களுக்கும் சர்வஞ்ஞனான சர்வேஸ்வரனுக்கும்
ஆக அனைவருக்கும் வேண்டிய அம்சங்களை உபதேசித்து அன்றோ ஆழ்வார் அருளிச் செய்கிறார் –

196-அறியாதார்க்கு–எம்பெருமானை பற்றிய ஞானமே இல்லாத சம்சாரிகளுக்கு -அஃதே உய்யப் புகுமாறு -என்று
திரு நாரணன் தாள்களே சம்சார நிஸ்தரண உஜ்ஜீவன உபாயம் என்றும் -அக்கரை என்னும் மனத்தகக் கடஇருந்தேனே -என்று
எம்பெருமானே உபாயம் என்று ஸ்வ ப்ரவ்ருத்தியில் நிவ்ருத்தராய் இருப்பவர்களுக்கு அந்த விவசாயம் குலைந்து பதற்றம் உண்டாம் படி
-முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேர் இன்ப வெள்ளத்தே -என்னும்படியான ப்ராப்ய வை லக்ஷண்யம் உபதேசிக்கிறார்
செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆட் செய்மின் -என்று சீல குணமாகிய ஆழங்கால் அறிவித்தும்
மங்க வொட்டு உன் மா மாயை -என்று எம்பெருமானுக்கும் உபதேசித்து –
ஆக அறிவு கேடரை உபாயத்திலே மூட்டி -உபாயத்தில் ஊன்றுவாரை உபேய பரராக்கி -உபேயத்தில் அவகாஹிப்பார்களுக்கு
ஆழங்கால் அறிவித்து -ப்ராப்தியை உபண்டாக்குமவனுக்கும் த்யாஜ்யத்தை அறிவிப்பவர் ஆயிற்று –

197-அவன் முனிந்தார்க்கு -எம்பெருமானுடைய முனிவுக்கு -நிக்ரஹத்துக்கு -இலக்கான சம்சாரிகளுக்கு –
ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -என்று தாம் கண்டதைக் காட்டி –
எங்கனேயோ அன்னைமீர்காள் என்னை முனைவது நீர் -என்கிற தாய்மாற்கு என் நெஞ்சினால் நோக்கிக் கண்ணீர் –
என்று ப்ராப்ய வைலக்ஷண அவகாஹியான நெஞ்சை காட்டி ஞானத்தை உண்டு பண்ணுவார் –
செஞ்சொல் கவி காள் உயிர் காத்து ஆட் செய்மின் -என்று புறம்பு ஒருவர் காணாததையும் காண
வல்லார்களுக்கு அவன் சீல குணத்தில் கண் வையாமல் கண் மாறி வைக்கவும்
தம்மிடம் அநு ராகத்தாலே தேஹ தோஷம் காண மாட்டாத எம்பெருமானுக்கு மங்க வொட்டு உன் மா மாயை -என்று பிரகிருதி தோஷம் காட்டுவார்
சம்சாரிகளுக்கு நிக்ரஹம் மாற்றும் வழியையும் -தாய்மார்கள் அவன் வை லக்ஷண்யம் அறியாமல் இருக்க அவர்களுக்கும் உபதேசித்தும்
செஞ்சொல் கவிகளுக்கு சீல குணம் அறியாமல் இழிந்தால் வரும் பேராபத்தை உபதேசித்து -சர்வஞ்ஞனுக்கும் தேஹ தோஷம் உபதேசித்தார் அன்றோ –

198-சாதன சாத்யஸ்த -அதிகமாக உபதேசிப்பது சம்சாரிகளுக்கும் எம்பெருமானுக்கும் என்றபடி -உபாயம் உபேயம் கை புகுந்தவர்களுக்கு சிறிதே உபதேசம் –
கர்மா பரவசரான சம்சாரிகளுக்கும் -பிரேம பரவசனான எம்பெருமானுக்குமே அதிக உபதேசம் –
அஞ்ஞர் ஞானிகள் ஞான விசேஷ யுக்தர் சர்வஞ்ஞன் -நால்வருள்ளும் சாதனஸ்தரும் சாத்தியஸ்தர் -ஆகிய இரண்டு மத்ஸ்யர்களை விட்டு
அஞ்ஞர் -சர்வஞ்ஞன் -இருவருக்கும் பல காலம் ஹித அஹிதங்களை சொல்லுவார் -என்றபடி
தாய்மார் உபாய அத்யாவஸ்யர் என்பதால் -அதி பிராவண்யம் ஆகாது என்று ஹிதம் சொல்பவர்கள் ஆதலால் இவர்களே சாதனஸ்தர் –
செஞ்சொற் கவிகள் அனுபவத்தில் இழிந்து கால ஷேபம் செய்வதால் சாத்தியஸ்தர் ஆவார் –

199-கதிர் ஞான மூர்த்திக்கு -கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தியினாய் -என்கிற சர்வஞ்ஞனுக்கு
திண் சக்கர நிழறு தொல் படையாய் உனக்கு ஓன்று உணர்த்துவன் நான் -என்று உபதேசிப்பது ப்ரேமத்தால்-
கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பாகக் கொள் என்று தமமூடும்-தமஸ் மேலிட்ட சம்சாரிகளுக்கு
நின் கண் வேட்கை எழுவிப்பேன்-என்று திருத்தி பகவத் அனுபவ பரராக்க வேணும் என்ற ஞானத்தால் –

200-உயிர் மாய்தல்-ஆளும் என்னாருயிர் என்னும் பர துக்கம் சஹியாமை இரண்டிலும் உண்டு –பர துக்க அஸஹிஷ்ணுத்வமே ஹேது-என்கிறது –
சர்வேஸ்வரனைக் குறித்து ப்ரேமத்தாலும்-சம்சாரிகளைக் குறித்து ஞானத்தாலும் உபதேசித்தார் -என்பதற்கு பின்
இரண்டுமே பர துக்க அஸஹிஷ்ணுத்வம் ஒழிந்து இராதே –
கொண்டாட்டம் குலம் புனையும் தமர் உற்றார் விழு நிதியும் வண்டார் பூங்குழளாலும் மனை ஒழிய உயிர் மாய்தல் கண்டு ஆற்றேன் -என்பதால்
சம்சாரிகளைக் குறித்து உபதேசிக்காய்க்கு பர துக்க அஸஹிஷ்ணுத்வம் ஹேது என்றும் –
அசுரர்கள் தலைப் பெய்யில் யவம் கொலாம் என்று ஆழும் என்னுயிர் -அவனை குறித்து உபேதசிக்கைக்கும் இது ஹேது என்று அருளிச் செய்கிறார் –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ .வே. காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: