ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை 50-99–தாத்பர்ய சாரம் -ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் —

50-இயற்பா மூன்றும் – நம்மாழ்வார் உடைய பிரபந்தங்கள் நான்கின் உள்ளும் இயற்பா என்னும் ஆயிரத்தில் சேர்ந்த மூன்றில்
முதலதான திரு விருத்தம் ருக்வேத ஸ்தாநீயம்-இரண்டாவதான திருவாசிரியம் யஜுர் வேத ஸ்தாநீயம்
-மூன்றாவதான பெரிய திருவந்தாதி அதர்வண வேத ஸ்தாநீயம் -சரம பிரபந்தமான திருவாய் மொழி சாம வேத ஸ்தாநீயம் –

51-ருக்கு சாமத்தாலே -சாம சங்க்ரஹமான ருக்கானது -தனக்கு விவரணமுமாய் ரசமுமாய் இருந்துள்ள காந ரூபமான சாமத்தாலே
ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு-இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமானால் போலே
ருக்வேத ஸ்தாநீயமான திரு விருத்தம் நூறு பாட்டும் இசையில் கூட்டின வாறே சாம வேத ஸ்தாநீயமாய்
சரசமாய் இருந்துள்ள திருவாய்மொழி யாயிரமும் பாட்டாகப் பரம்பிற்று –

52-சந்தோகன் என்று -சாமம் அநேக விதம் ஆகையால் திருவாய்மொழி எந்த சாமத்தோடு ஒக்கும் என்னில் சாந்தோக்ய சாமத்தோடு ஒக்கும்
சாம வேத கீதனாய-என்று திரு மழிசை பிரானும் -சாமி அப்பன் என்று திருமங்கை ஆழ்வாரும் சாம வேதோஸ்மி என்று
கீதாச்சார்யானும்-சொன்ன சாமம் சாமான்யம் ஆகாமல்
சந்தோகன் பவ்ழியன் ஐந்து அழல் ஒப்பு தைத்ரியன் சாமவேதி என்று மேலே சொல்லா நிற்க முதலிலே சந்தோகன் என்று சிறப்புற பிரித்து உரைத்து
யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவை -என்று யாழ் விஷயமாக அப்யஸிக்கப் படுவதாக சாஸ்திரத்தில் சொன்ன லக்ஷணத்தை யுடைய
நரம்பில் பிறந்த பண் பட்ட ரசம் என்னும் படி காந ஸ்வரூபம் போலே பரம போக்யனானவன் என்று
காந சாமான்யம் ஆகாமல் பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி -பெரிய திருமொழி -என்று
அந்த சந்தோக சாமத்தின் நிறமான பாலை யாகிற பண்ணை இட்டு விசேஷிக்கையாலே -பஸ்வதி கரண நியாயத்தாலே
-பசு நா யஜேத-வேதம் சாகபசு-ஆட்டை சொல்லுவது போலே –சாம வேத கீதன் – சாமி -சாமவேதோஸ்மி -என்ற இடங்களில்
பொதுப்படையாகச் சொல்லப்பட்ட சாம சப்தமும் -கீழ்ச சொன்ன சாந்தோக சாமமும் அதன் கீதமும் ஆகிற விசேஷத்திலே பர்யவசிக்கும்
-ஆனபின்பு -சந்தோக சாமமே இத்திருவாய்மொழி-
உத்கீத -பிரணவத்தை முதலிலே மாறாடி-சாமத்துக்கு ஐந்து பாகங்கள் உண்டே –ப்ரஸ்தாவம்-உத்கீதம்
-ப்ரதிஹாரம்-உபத்ரவம்-நிதனம் -ஐந்து பாகங்கள் உண்டே -சாம்ந உத்கீதோ ரஸ -என்று சாமத்துக்கு ரசமாக சொல்லப்படும்
பிரணவத்தை முன்னிட்டு கானம் பண்ணப் படுமதாய் இருப்பது -உத்கீதமாய் இருப்பது ஆகையால்
-உயர்வற -உகாரத்தில் உபக்ரமித்து பிறந்தார் உயர்ந்தே -தகாரத்தில்-உபசம்ஹரித்தார் –
அர்ச்சிராதி கதி -சாந்தோக்யத்தில் சொன்ன படியை சூழ் விசும்பு -பதிகத்தில் அருளி -ஏதத் சாம காயன் நாஸ்தே
-அஹம் அன்னம் –அஹம் அந்நாத -என்பதையே தொண்டர்க்கு அமுது உண்ண சொல்மாலைகள் சொன்னேன்
-பாடு நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க -என்றும் எங்கும் எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு -என்றபடி
-சாந்தோக்யத்துடன் ஒக்கும் என்றபடி -சிறிய திரு அத்யயனம் -பகல் பத்து உத்சவம் -என்றும்
பெரிய திரு அத்யயனம் இராப் பத்து உத்சவம் -திருவாய் மொழி அன்றோ –

53-புரவி ஏழு ஒரு கால் –ஏழு குதிரைகளும் ஒரு சக்கரத்தையும் உடைத்தாகையாலே -விலக்ஷணமான பெருமை வாய்ந்த தேரிலே
-தேஜோ விசேஷத்தாலே திரு வாழி உடன் ஒத்து -கால சக்ர நிர்வாஹகனான -எம்பெருமான் ஆஞ்ஜையை நடத்தி –
நக்ஷத்ரம் முதலிய சோதி மண்டலம் தேஜஸை குறைத்து -அக்னியினுடைய தேஜஸ் ஸூ க்கும் சந்திரன் உடைய அம்ருதத்துக்கும் பிறப்பிடமாயும்
மந்தேஹர் என்னும் ராக்ஷஸர்களுக்கு சிவந்த நெருப்பாயும் -அர்ச்சிராதி கதிக்கு முதல் வாசலையும் -அனைவருக்கும் கண் போன்ற
சர்வேஸ்வரன் திருகி கண்ணிலே பிறந்த கண் மணியாயும் -வேதமயமுமாய் இருக்கும் ஸூர்ய மண்டலத்தில் –
சீர் பூத்த செழும் கமலத் திருத் தவிசில் வீற்று இருப்பவனாய் -தோள் வளையும் மகரக் குண்டலங்களும் கிரீடமும் ஹாரமும்-
திரு வாழி திருச் சங்கும் பொன்னிறமான திரு மேனியும் -செந்தாமரைக் கண்களும் உடையனாய் -பகவத் விக்ரஹத்தையும்
ஆதித்ய மண்டலத்தையும் தன்நிறம் ஆக்குகின்ற சிவந்த திரு நிறத்தை உடையளான பிராட்டியோடே கூட ஆதித்யன் உள்ளே இருப்பவனாய்
எப்போதும் சிந்திக்க யுரிய தேஜோ ரூபியாய் இருக்கிற விலக்ஷண பரம புருஷனை ப்ரதிபாதிக்கின்ற சந்தோக சாமத்துக்கு ரசமாய் இருந்துள்ள
உத் கீதம் -உகாரம் -ஆதியாகவும் -உயர்வற / பிறந்தார் உயர்ந்தே -தகாரம்-அந்தமாகவும் -ஒரு திரு நாமமே ஆயிரம் முகமாக நின்று
உலகு ஏழும் அளிக்க வல்ல -ஒன்றான கங்கை ஆயிரம் முகமாக பெருகினால் போலே
-லோக பாவனமாக ஆயிரம் பாட்டாக விஸ்தரித்து அருளுகிறார் என்பர் வேதாச்சார்ய பட்டர் –

ஆக இவ்வளவாலே ஆழ்வாருடைய நான்கு திவ்ய பிரபந்தங்களும் வேத ரூபம் என்பதும் –
அங்க உபாங்க சகிதம் என்பதும் –
வேதத்துக்கு உள்ள லக்ஷணங்களும் அமைய பெற்றன என்றும் –
நித்யமாயும் அபவ்ருஷேயமாயும் இருக்கும் என்பதும் –
இவற்றில் இன்ன பிரபந்தம் இந்த வேத ஸ்தாநீயம் என்பதும் –
சாம வேத ஸ்தாநீயமான திருவாய் மொழி சாம வேத ஸ்ரேஷ்டமான சந்தோக சாம உபநிஷத்துக்கு சமம் என்றும் நிரூபிக்கப் பட்டன –
இனி ஆழ்வாருடைய நான்கு பிரபந்தகங்களுக்கும் வேத சாம்யம் தவிர வேத உப ப்ரும்ஹண சாம்யமும் உண்டு என்கிறது –

54-அன்றிக்கே ஸ்வரூப குண –வேத உப ப்ரும்ஹண சாம்யம் சொல்லுவது எங்கனம் என்னில்
எம்பெருமான் உடைய ஸ்வரூப குண விபூதி சேஷ்டிதங்களை ப்ரதிபாதியா நின்றுள்ள சுருதியில் சொல்லப்பட்ட ஸ்வரூபத்தையும்
குணங்களையும் விஷாதம் ஆக்குவதற்காக அவதரித்த பாஞ்சராத்ர ஆகமம் போலேயும்
விபூதியை விஷாதம் ஆக்குவதற்காக அவதரித்த புராணங்களை போலேயும்
சேஷ்டிதங்களை விசதமாக்க அவதரித்த இதிகாசங்கள் போலேயும்
எல்லை அற்ற தேஜோ ராசி மயமான ஸ்ரீ மன் நாராயண மங்கள விக்ரஹத்தை ப்ரதிபாதியா நின்றுள்ள வேத பாகங்களை
விசதப்படுத்த இந்த நான்கு பிரபந்தங்களும் திரு அவதரித்தன-
ஸ்வரூபம் குணம் விபூதி சேஷ்டிதம் ஆகிய எல்லாமே அனைத்திலும் உண்டே என்றாலும் -பாஞ்ச ராத்ரங்களுக்கு ஸ்வரூப குணங்களில் நோக்கு என்றும்
புராணங்களுக்கு-திரு விருத்தம் உபக்ரமத்தில் -முழு நீர் முகில் வண்ணன் -என்று திரு மேனியை பிரஸ்தாவித்து –
மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் -என்று அதனையே பிரஸ்தாவிக்கையாலும்
திருவாசிரியத்தில் -மீதிட்டுப் பச்சை மேனி மிகப்பகைப்ப -என்று உபக்ரமத்திலே திருமேனியை பிரஸ்தாவித்து மேலேயும்
தாமரைக் காடு மலர்க்கண்ணோடு கனிவாயுடையதுமாய் என்று அதனையே பிரஸ்தாவிக்கையாலும்
பெரிய திருவந்தாதியிலும் -நற்பூவைப் பூவீன்ற வண்ணன் -என்று உபக்ரமித்து -முடிவிலும் கார் கலந்த மேனியான் -என்று அதனையே பேசுகையாலும்
திருவாய் மொழியிலும் -துயரறு சுடரடி -என்று உபக்ரமித்து -புனக்காயா நிறத்த -என்று தலைக் கட்டுகையாலும்
நம்மாழ்வார் திவ்ய பிரபந்தங்களை திவ்ய மங்கள விக்கிரஹத்திலே பெறும் பான்மையான நோக்கு என்பது மிகவும் பொருந்தும் –

55-கல்பாதியிலே தோற்றிற்று-ஆழ்வார்கள் அருளிச் செயல்களும் -மகரிஷிகளின் கிரந்தங்களும் -உத்பத்தி மூலம் அருளிச் செய்து -இதன் ஏற்றம் அருளிச் செய்கிறார் –
சங்கீர்ணங்கள்-ஸாத்விகங்கள் -ராஜசங்கள் -தாமஸங்கள் -என்றும் சொல்லப்படும் அஹஸ் ஸூக்கள் ஆகிற கல்பங்களினுடைய ஆதிகளிலே கிளர்கின்ற குணங்களுக்கு ஏற்ப
தாமச கல்பங்களிலே -அக்னி சிவன் -மஹாத்ம்யத்தையும் –
ராஜஸ கல்பங்களில் நான்முகன் -தன்னுடைய மஹாத்ம்யத்தையும் –
சாத்விக கல்பங்களிலே சர்வேஸ்வரனுடைய மஹாத்ம்யத்தையும்
மூன்றும் கலசினா சங்கீர்ண கல்பங்களில் -பித்ருக்கள் சரஸ்வதி தன்னுடைய -பேசும் நான் முகனுடைய -மஹாத்ம்யத்தையும்
ஆகமம் முதலிய மோஹ சாஸ்திரங்கள் பிரவர்ப்பித்த ருத்ரன் -சுடுகாடுகளில் திரிந்து -பிணங்களின் நீற்றை உடம்பில் பூசி எலும்பு மாலை தரித்து
-புலித் தோல் உடுத்து -கங்கை சர்ப்பம் சந்திரன் தலையில் தரித்து -ரிஷப வாஹனாய் நீல கண்டனாய் -ஈஸ்வரனாய் நினைத்து இருப்பவன்
-சத்வ குணம் தலை எடுத்து -சர்வேஸ்வரனை தான் உபதேசிக்கும் வகையை -அகஸ்தியர் புலஸ்தியர் தக்ஷன் மார்க்கண்டேயர்
-நால்வரில் ஒருவனான புலஸ்தியன் பண்ணின வர பிரதானம் ஆர்ஷ கிரந்தங்களில் உத்பத்திக்கு மூலம்
-வால்மீகி பகவானுக்கு நான்முகன் அனுக்ரஹமும் -பராசர பகவானுக்கு புலஸ்திய பிரசாதமும் -இப்புடைகளிலே அறியலாம் –

56-பரம சத்வத்தோடே – ரஜஸ் தமஸ் கலசாமல் சுத்த சத்வ குணத்தோடு கூடி வேத மார்க்கங்களை நன்கு விசாரித்து
அருள் செய்யுமவனாய் பரிபூர்ண ஞானத்தை நிரூபகமாக யுடையனாய் -ப்ரஹ்மாதிகளுக்கு அந்தர்யாமியாய் அந்த அந்த கார்யங்களை
நிர்வஹிக்கையாலே அவர்களை சொல்லும் சப்தத்தாலும் சொல்லப் படுமவனாய் -சர்வ ஸ்மாத் பரனான திரு மகள் கொழுநனாலே
மயர்வற மதி நலம் அருள பெற்றவராய் -அந்த அத்வாரக சாஷாத் -பகவத் பிரசாதத்தை மூலமாகக் கொண்டு ஆழ்வார் திவ்ய பிரபந்தங்கள் என்றபடி –

57-கருவுள் வேறு அலாமை -ஆழ்வார் எம்பெருமான் அருள் அடியாகவே பாடினார் என்பதற்கு பிரமாணம் –
ப்ரஹ்மாதிகளுக்கு அந்தர்யாமியாக இருந்து அவர்கள் கார்யம் பண்ணா நிற்கச் செய்தே
ஜகத் ஸ்ருஷ்ட்டி வேத உபதேசம் ஜகாத் சம்ஹாரம் திரிபுர தஹநம்-போன்றவற்றை இவர்களே செய்தவர்களாக லோகத்தார் சொல்லும் படி
த்ருணத்தையும் கொண்டு கார்யம் செய்ய வல்ல சாமர்த்தியம் யுடையவன் ஆகையால் -கவி பாட வல்ல வால்மீகி பராசர
முதல் ஆழ்வார்களை இட்டு பாடுவித்திக் கொள்ளாமல் -என்னையும் தன்னோடு ஒத்த ஞான சக்திகளை யுடையனாம் படி பண்ணி
வாய் முதல் அப்பனாய் வந்து -என் தோஷம் தட்டாத படி நான் புகழ்ந்தமையாலே
ஸ்ரீ வைகுண்ட நாதனாக தான் ஆனால் போலே -குருகூர்ச் சடகோபன் சொல் -என்று ஆழ்வார் தாமே பாடும் படி
நாடு எல்லாம் அஞ்சலி பண்ணும் படி -பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி -என்றால் போலே –

58-தர்ம வீர்ய ஞானத்தாலே–ரிஷிகளில் காட்டில் ஆழ்வாருக்கு உண்டான வாசி மேலும் அருளிச் செய்கிறார்
-ரிஷிகள் தாம் தாம் அனுஷ்டித்த தபோ ரூபமான தர்மத்தின் சக்தியினால் ஜனித்த ஞானத்தினால்
அறிய வேண்டுமவற்றை தெளிய அறிந்து மகிழ்ச்சி கொண்டவர்களாய் -அந்த தெளிவும் மகிழ்ச்சியும் அடியாக
மேன்மேலும் ஸ்லோகங்களை தொடுத்துக் கொண்டே சென்றார்கள் –
ஆழ்வாரோ என்னில் அதற்கு எதிர் தட்டாக -அயர்வறும் அமரர்கள் அதிபதியால் மயர்வறும் மதி நலம் அருள பெற்று
ஞானம் பரிபக்குவமான நிலைமை யாகிய பக்தியால் பிரிவாற்றாமையாலே ஞானம் எல்லாம் அடி மண்டியோடே கலங்கி
நினைத்த படி எம்பெருமானை அனுபவிக்கப் பெறாமையாலே சோகித்து-
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே-என்று சொல்லி ஆறு மாசமும் -பிறந்தவாறும் வளர்ந்தவாறும் -என்று சொல்லி
ஆறு மாசமும் -கண்கள் சிவந்து பெரியவாய் -என்று சொல்லி ஆறு மாசமும் மோஹித்துக் கிடந்தது
ஒரு சொல் எடுக்க ஒரு மலை எடுக்குமா போலே வருந்தி ஈரச் சொற்களால் பிரபந்தங்களை அருளிச் செய்தார் அன்றோ –

59-ஸ்வாத்யாய யோகங்களை –வேதத்தையும் அஷ்டாங்க யோகத்தையும் அப்யஸித்து -அவ்வழியாலே பரமாத்மாவை இப்டிப்பட்டவன் என்று தெளிந்து
இப்படி தன் முயற்சியால் கண்ட காட்சியில் விளக்கம் இன்மையால் இன்று அளவும் சம்சார போக விஷயங்களான ஆசை என்கிற
பல பல பாசங்களாலே கட்டுப் பட்டு இருப்பர் ஓதி உணர்ந்த ரிஷிகள் -ஆழ்வாரோ என்னில் தன்னைக் காண்கைக்கு உறுப்பாக
அப்பெருமான் கொடுத்து அருளினை திவ்ய ஞான ரூபமான கண்ணாலே பிரமன் சிவன் முதலானோர்க்கும் அறியனான
சர்வேஸ்வரனை மிக விளக்கமாக சாஷாத் கரித்த போதே -இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று
அவனைக் கால் காட்டும்படி தம் முயற்சியால் கழிக்க ஒண்ணாமை பிரபலங்களான புறம்பு உண்டான
பற்றுக்கள் அவன் அருளாலே அடியோடு விட்டு நீங்கப் பெற்றார் –

60-அவர்களுக்கு காயோடு –ரிஷிகளுக்கு கனி காய் கிழங்கு சருகு காற்று தண்ணீர் ஆகிய இவையே தாரக போஷாக்கை போக்யங்களாய் இருக்கும்
ரிஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவோதிதம் -என்னும்படி எம்பெருமான் பக்கல் உள்ள காதலே வடிவு எடுத்தவரான
ஆழ்வார்க்கோ என்னில் உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் –

61-அழு நீர் துளும்ப -எம்பெருமானைப் பிரிந்த வருத்தத்தினால் கண்ணும் கண்ண நீருமாய் கடலோடு மலையோடு ஆகாசத்தோடு
வாசி அற எங்கும் தேடி நெஞ்சு கலங்கி திருமாலே என்று கூப்பிட்டு எங்கே காணக் கடவேன்-என்று இவ்விதமாக எம்பெருமான்
விஷயத்தில் ஆழ்வார் படும் ஆற்றாமை எல்லாம் ரிஷிகளுக்குப் புத்ர விரஹத்திலே யாய் இருக்கும் –
வசிஷ்ட பகவான் புத்ரன் இறந்த வருத்தத்தினால் மரணத்தை விரும்பி மலையில் ஏறி விழுவது நெருப்பிலே குதிப்பது கழுத்திலே
கல்லைக் கட்டிக் கொண்டு கடலிலே விழுவது ஆக இப்படி எல்லாம் தடுமாறினார் என்பதும்
வேத வியாச பகவான் புத்திர வியோகம் பொறுக்க மாட்டாமல் புத்திரனே என்று வாய் விட்டுக் கூப்பிட்டு
அழுது கொண்டு காணப் பெறாமையாலே அலமந்து திரிந்தார் என்பதும் புராண சித்தம் –

62-பல சாதன தேவதா –கீழ்ச் சொன்னவை மாத்திரம் அன்றியே -பலன் சாதனம் தேவதாந்த்ரம் -ஆகிய இவ்விஷயங்களில் ரிஷிகளின்
பிரபத்தியில் காட்டிலும் ஆழ்வாருடைய பிரதிபத்திக்கு நெடு வாசி உண்டு -எம்பெருமானை அடைவதே பலனாகவும் கர்ம ஞானாதிகளே உபாயமாகவும்
இந்திரன் முதலிய தேவதைகளுக்கு அந்தர்யாமியான ஈஸ்வரனே உத்த்ஸ்யன் ஆகையால்
அந்த தேவதைகள் அனுவர்த்திக்க யுரியர் ஆகவும் யாயிற்று ரிஷிகள் பேசுவது
ஆழ்வார் அருளிச் செய்வதோ என்னில் -கைங்கர்யமே புருஷார்த்தம் ஆகவும் அதனைப் பெறுவிப்பது
பிரபத்தியாகவும் -இதர தேவதைகள் அநு வர்த்திக்க யுரியர் அல்லராகவும் –

63-ராமாயணம் நாராயண -அருளிச் செயல் வை லக்ஷண்யம் –
ராம கதையைச் சொல்லுவதாக ராமாயணம் என்று தொடங்கி-கங்கையின் உத்பத்தி -ஸூ ப்ரஹ்மணியன் உத்பத்தி -புஷ்பக வர்ணனம்
-முதலான கதைகளை பரக்க பேசுவதால் -அஸத் கீர்த்தனம் பண்ணி வாக்கில் அசத்தி படைத்தான் வால்மீகி –
நாராயணன் கதை -என்று தொடங்கி சம்பவ பர்வத்திலே பீஷ்மர் முதலான பல் பலர் உத்பத்தி பிரகாரங்களை விரிவாக பேசி –
பூசல் பட்டோலை என்னும்படி பாரத போர் வகைகளையே பரக்க நின்று வர்ணித்த படியாலும் -அஸத் கீர்த்தனத்திலே மிகவும் பரந்து அசுத்தமான வாக்கை
பகவத் கதை மொழி யாகிற கங்கையாலே சுத்தம் ஆக்குகிறேன் என்று சுத்தி பண்ணினான் வேத வியாச பகவான்
இப்படி இல்லாமல் திருமால் அவன் கவி யாது கற்றேன் -என்ற படி திருமால் விஷயமான கவி என்று வாயோலை இட்ட படியே
இதர விஷய சம்பந்தம் உள்ள சொல் ஒன்றும் கலசாத படி விஷயத்துக்கு தக்க சொற்களால் சொல்லப்பட்ட சர்வேஸ்வரனுக்கு வாய்த்த நம்மாழ்வார் அருளிச் செயல்
வேதங்களில் புருஷ ஸூ க்தம்-தர்ம சாஸ்திரங்களில் மனு ஸ்ம்ருதி -மஹா பாரதத்தில் ஸ்ரீ கீதை -புராணங்களில் ஸ்ரீ விஷ்ணு புராணம் –
சாரமாய் இருக்குமா போலே வேறு பேசின் வாசனையும் அற்ற மற்ற திவ்ய பிரபந்தங்களுக்குள் இதுவும் சாரமாய் இருக்கும் -என்றபடி –

64-குரு-சிஷ்ய -ஆழ்வார் அருளிச் செயலோடு இணங்காதவை தள்ளுபடி என்றல் -திவ்ய பிரபந்தங்களுக்குள் சாரமான நம்மாழ்வார் ஸ்ரீ ஸூ க்திகளின்
பிராமண்ய அதிசயத்தை விளக்க -ஆழ்வார்கள் ஏக கண்டர் என்றும் -அவர்களில் தலைவரான நம்மாழ்வார் அருளிச் செய்த பிரபந்தங்கள் மேம்பாட்டையும்
தெரிவித்துக் கொண்டு -இவற்றுக்கு சேராத சாஸ்திரங்கள் விலக்கப் படுபவையே என்கிறபடி
ஜைமினி உடைய பூர்வ மீமாம்சைக்கு நிரீஸ்வர வாதம் மூலம் வந்த விரோதத்தை பர மத வாத அந்நிய பரதவ வாதங்களால் பரிஹரிக்க வேண்டினால் போலே இல்லாமல்
செஞ்சொல் கவிகாள் என்றும் -செந்தமிழ் பாடுவார் என்றும் -இன்கவி பாடும் பரம கவிகாள் -என்றும் -பதியே பரவித் தொழும் தொண்டர் என்றும் –
ஆடிப்பாடி அரங்காவோ என்று அழைக்கும் தொண்டர் என்றும் -ஒருவர் ஒருவரை ஸ்லாகித்துக் கொண்டு பேசுவதே பேசும் ஏக கண்டர்கள் –
இதில் சிறந்த நம்மாழ்வாருடைய அதி விலக்ஷண திவ்ய ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டே தெளியாத மறை அர்த்தங்களை தெளிய பெறலாம்
ப்ரதிபாத்ய வஸ்துவை உள்ளபடியே பிரதிபாதிக்கும் சாமர்த்தியம் உள்ள இவர் திவ்ய பிரபந்தங்களை சேராத சாஸ்திரங்கள் கழிக்கப் படுவனவாம் –

65-பாஷ்ய காரர் இது கொண்டு -அருளிச் செயல்கள் கொண்டே சாஸ்திர அர்த்தங்கள் நிர்ணயித்தார் உண்டோ என்னில்
ஸ்ரீ பாஷ்ய காரர் ஸ்ரீ பாஷ்யம் செய்து அருளும் போழ்து ஸூத்ர வாக்கியங்களில் சந்தேக கோசாரமான அர்த்தங்களை எல்லாம்
ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்திகளைக் கொண்டே நிர்ணயித்து ஒருங்க விட்டு அருளுகிறார் என்றபடி –

66-அதுக்கு மூலம் -ஸ்ரீ பாஷ்ய காரர் இப்படி ஒருங்க விடுவதற்கு மூலம் ஏது என்னில் -விதயச் ச வைதிகா-த்வதீய கம்பீர மநோ அநு சாரிண -என்று
ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னத்தில் ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்ததே -ஆழ்வார் போல்வார் நினைவையே சாஸ்திரங்கள் பின் செல்லும் என்றபடி –

67-ஆப்திக்கு இவர் -இப்படி மஹா வித்வான்கள் இது கொண்டு சாஸ்த்ரார்த்தங்கள் நிர்ணயிக்க வேண்டும் படி மிக பிரபலமாயும்
வேத சாம்யமுமாய் ஆப்த தமமுமாய் இருக்கும் இதில் வேறே சில பிரமாணங்களை -ஸாக்ஷியங்களை எடுப்பான் என்
-உளன் சுடர் மிகு சுருதியில் -என்றும் -மார்கண்டேயனும் கரியே -என்றும் -பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயான் பெருமை -என்றும்
-வேதம் மார்க்கண்டேயன் அர்ஜுனன் சாஷிகளாக சொல்வது என் என்னில் -பரம ஆப்தமான வேதமும் ஆப்திக்கு உறுப்பாக
வியாஸரையும் மனுவையும் ப்ரஹ்ம வாதிகளையும் சொன்னால் போலே என்றபடி –

68-பாரத கீதைகளின் -ஆழ்வார் அருளிச் செயலை உபப்ரும்ஹணமாக சொன்ன பக்ஷத்தில் வேதத்துக்கு இது வியாக்யானம் என்றது ஆகும்
ஒழிய -வேத ரூபம் இதம் க்ருதம் -என்றும் -த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம் -என்று மஹான்கள் இதை வேதமாக சொல்லக் கூடுமோ என்னில்
வேதான் அத்யாபயாமாச மஹா பாரத பஞ்சமான்-என்றும் -பகவத் கீதா ஸூ உபநிஷத் ஸூ -என்றும் சொல்லுகிறபடியே
வேதமும் உப நிஷத்தும் ஆகிறாப் போலே
இதுவும் வேத வியாக்யமான உப ப்ரும்ஹணம் ஆனாலும் வேத ரகஸ்யமும் ஆகக் குறையில்லை –
வேத ரகஸ்யம் என்றது -வேதத்தில் ரகசியமான உபநிஷத் -சாந்தோக்யம் சமம் என்றபடி –

69-உதாத்தாதி –வேதத்துக்கும் உப ப்ரும்ஹணங்களுக்கும் உள்ள அலங்காரங்கள் அருளிச் செயலுக்கும் ஒக்கும் என்றல் –
வேதத்துக்கும் உப ப்ரும்ஹணங்களுக்கும் -உதாத்த -அநு தாத்த-ஸ்வரித-ப்ரசயங்கள்-என்கிற ஸ்வர விசேஷங்களும் /
க்ரம ஜடா பஞ்சாதிகளும் ப்ரஸ்ன அஷ்டகங்களும் / அத்யாயம் அம்சம் பர்வம் ஸ்கந்தம் -முதலானவைகளும்/
பத வாக்ய பாத வ்ருத்த காண்ட அத்தியாயங்களும் ஆகிற / பல அலங்காரங்கள் உண்டானால் போலே அருளிச் செயல்களுக்கும்
-குற்று எழுத்து முதலான பதின் மூன்று எழுத்தும் /-நேர் அசை நிரை அசை என்கிற இரண்டு அசையும் -/
ஆசிரிய யுரிச்சீர் முதலான முப்பது சீரும் -/ குறள் அடி முதலான ஐந்து அடியும் / மோனை முதலான நாற்பத்து மூன்று தொடையும் /
சேர் நிரை நிரை நிரை முதலானவையும் /செப்பலோசை முதலான ஓசையும் / நேர் ஓன்று ஆசிரியத் தளை முதலான ஏழு தளையும்/
தாழ் இசைத் துறை என்கிற பாக்கள் இனம் மூன்றும் /பிரபந்த ரூபத்வம் ஆகிற யாப்பும் வெண்பா முத
பத்து என்கிற அவாந்தர பரிச்சேதமும் / நூறு என்கிற பிரதான பரிச்சேதமும் /ஆயிரம் என்கிற மஹா பரிச்சேதமும்
-ஆகிற கவிக்குச் சொல்கிற சகல அலங்காரங்களும் உண்டு –

70-அதவா வேத வேத்ய–அருளிச் செயல் அபூர்வமான ஒரு வேத ஆவிர்பாவம் -என்றல் -கீழ் சொல்லியபடி அருளிச் செயலுக்கு வேத சாம்யமும்
உப ப்ரும்ஹண சாம்யமும் உண்டு என்று உபபாதித்த வழி அன்றியே -வேதத்தின் ஆவிர்ப்பாவ விஷயமாய் இவ்வாழ்வாரால் நிர்மிதமாக
பிரசித்தமாய் இருப்பது ஓன்று என்று மற்று ஒரு யோஜனையும் சொல்லப்படுகிறது –
வேத வேத்யே பரே பும்சி ஜாதே தசரதாத் மஜே வேத ப்ரா சேதஸா தாஸீத் சாஷாத் ராமாயணாத்மநா -என்று
வேத ப்ரதிபாத்யனான பரம புருஷன் சக்கரவர்த்தி திரு மகனாய் அவதரித்த அளவில் -அபவ்ருஷேயமான வேதமும்
ஸ்ரீ வால்மீகி பகவான் பக்கல் நின்றும் ஸ்ரீ ராமாயணமாக திரு அவதரித்தது என்கிற நியாயத்தினால்
பல இடங்களிலும் எம்பெருமானுடைய பரத்வ நிலையைப் பேசுகையாலே -பரத்வத்தில் நோக்கான வேதமானது அப்பெருமானுடைய
வ்யூஹ அவஸ்தையில் -அதன் குணம் ரூபம் க்ருத்யம் முதலியவற்றைப் பேச பாஞ்சராத்ரமாக அவதரித்தது –
அந்தர்யாமி -நிலையில் வியாப்தியை பேச மனு ஸ்ம்ருதி முதலிய ஸ்ம்ருதிகளாக அவதரித்தது
ராம கிருஷ்ணாதி விபவ நிலையில் அவதார சேஷ்டிதம் போன்றவற்றை பேச ஸ்ரீ ராமாயண மஹா பாரத இதிஹாசங்களாக ஆவிர்பவித்தது –
பிற்பட்டார் இறவாத படி அர்ச்சையாக-அதன் பெருமையை பேச சர்வ ஸூ லபமாய் சர்வாதிகாரமாய் தமிழ் வடிவாய் திராவிட வேதமாக ஆவிர்பவித்தது
எல்லாவற்றிலும் எல்லாம் சொல்லிற்றே ஆகிலும் ஒவ் ஒன்றிலே ஊற்றம் என்றதாயிற்று –

71-மண்ணாடின ஸஹ்ய ஜலம் -அபவ்ருஷேயமான வேதமே இப்படி அருளிச் செயலாக நிலைமை அடைந்ததாகில் -கலங்கினதாய்
உட் பொருளை ஸ்பஷ்டமாக வெளிக்காட்டும் தன்மை குன்றப் பெறாதோ என்னில் -ஆழ்வார் வக்தாவாக அமைந்த விசேஷத்தால்
அது வேறுபடியாக ஆயிற்று என்பதை த்ருஷ்டாந்ததுடன் மூதலிக்கிறார் –
உயர்ந்த நிலத்தில் நின்றும் வேகத்தோடு வந்து பூமியில் விழுகையாலே மண்ணோடு கூடியதாய் கலங்கி ஸஹ்ய பர்வதத்தில் நின்றும் வருகிற ஜலமானது –
தோதவத்தித் தூய் மறையோர் துறையிலும் –ஸ்ரீ ரெங்கத்தில் திருக் காவேரி துறை –
பொருநல் சங்கணி துறையிலும் -ஆழ்வார் திரு நகரி தாமிர பரணி துறை -வந்தவாறே துறை வாசியால்
தெளிந்த நீராய் தன்னுள்ளே கிடக்கிற பொருள்களை நன்றாக பிரகாசிக்குமா போலே –
பிபேத் அல்ப ஸ்ருதாத் வேதோ மா மாயம் ப்ரதரிஷ்யதி-என்று வேதம் தான் நடுக்கும் படி -அதன் கருத்து அறியாமல்
தம் நெஞ்சில் தோன்றுகிற வற்றையே சொல்லும் சிற்று அறிவாளர் கலைக்காக கலங்கின வேதமானது -யதார்த்த ஞானத் துறையான
ஆழ்வார் பக்கலிலே வந்து சேர்ந்து கலக்கம் தீர்ந்து தெளிவை அடைந்து பரம அர்த்த விசேஷங்களை எல்லாம் அறிவிக்க வல்லதாயிற்று
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிக்கின்றோமே -ஸ்ரீ தேசிகன் -வேதாந்தாசார்யரும் அருளிச் செய்தார் –

72-மேகம் பெருகின -வேதத்துக்கு போலே அருளிச் செயல்களுக்கும் சில நியமங்கள் இல்லாமைக்கு காரணம் கூறுதல் –
வாயில் வைக்க வழங்காத படி விரஸமாயும் -ஸ்பர்ச காலாதி நியமங்களோடு கூடினதாயும் இருக்கின்ற கடல் நீரானது மேகத்தாலே உட் கொள்ளப் பட்டு
வர்ஷிக்கப் படும் அளவில் அந்த மேக ஸ்பர்சத்தாலே வைரஸியம் நீங்கி எல்லாக் காலத்திலும் எல்லார்க்கும் போக்யம் ஆவது போலே
அத்யயன கால நியமத்தையும் -அதிகாரி நியமத்தையும் யுடைய வேத வித்யா சமுத்திர வசனமானது ஆழ்வாருடைய திரு வாக்கில் புகுந்து
கால நியம அதிகாரி நியமங்கள் இல்லாத தன்மையை அடைந்து திருத்தம் பெற்றவாறே எப்போதும் எல்லாரும் அதிகரிக்கலாம் படி யாயிற்று –

73-ம்ருத்கடம் போல் அன்றியே -வடமொழி வேதம் போல் அன்றியே -அருளிச் செயல் சர்வாதிகாரமாய் இருப்பதனால் இதற்கு யாதொரு குறையும் வாராது –
மண் குடம் நியத அதிகாரிகளே தொட யுரியதாய் எல்லார்க்கும் தொட ஒண்ணாதாய் இருக்க -பார்த்திவமாய் இரா நிற்கச் செய்தே
பொற் குடம் எல்லாருக்கும் தொட யுரியதாய் இரா நின்றது அன்றோ –
இத்தால் காரணமான வேதம் அதிக்ருதாதிகாரம் ஆனாலும் அதின் கார்யமான திவ்ய பிரபந்தம் ஸம்ஸ்கார விசேஷத்தாலே
சர்வாதிகாரமாய் இருக்கக் குறை இல்லை என்பதும் இந்த சர்வாதிகாரத்வம் சிறப்புக்கே உறுப்பு என்பதும் தேறிற்றாம்-

74-பெறும் புறக் கடலும் -வ்யூஹ அந்தர்யாமி விபவ நிலைமைகளில் அவகாஹிக்கப் பெறாதார்க்கு ஸூலபமாக அர்ச்சாவதாரம் அமைந்தது போல்
பாஞ்ச ராத்ர ஸ்ம்ருதி இதிகாசங்களில் அதிகாரம் அற்றவர்களுக்கு எளிதாக அருளிச் செயல் அமைந்தது என்றல்-
ப்ரமாணமான வேதமும் ப்ரமேயமான எம்பெருமானும் பல பல அவதாரங்களை செய்கின்ற விஷயம் முன்னமே சொல்லப் பட்டது -அதாவது
வேதம் -பாஞ்ச ராத்ரமாகவும் -ஸ்ம்ருதியாகவும் -இதிஹாச புராணமாகவும் -அருளிச் செயலாகவும் -வடிவு எடுத்தது என்றும்
வேத வேத்யனான பரம புருஷனும் -வ்யூஹமாகவும் விபவமாயும் -அந்தர்யாமியாயும் -அர்ச்சையாயும் வடிவு எடுத்தனன் என்றும் -சொல்லிற்று
அளவிட முடியாமையாலே வேதமும் ஒரு கடல் -எம்பெருமானும் ஒரு கடல் -அவகாஹிக்க முடியாத
சில பாகங்களும் அவகாஹிக்க கூடிய ஒரு பாகமும் கடலுக்கு உண்டு –
அலை எறிந்து கிடைக்கும் இடமும் நிலை காண ஒண்ணாத படி ஆழ்ந்து இருக்கும் இடமும் அவகாஹிக்க முடியாத பாகமும் ஆகும் –
கழிகளாய்க் கொண்டு ஓடுமிடம் அவகாஹிக்கக் கூடிய இடமாகும் -அளவிட முடியாமை பற்றி
பெறும் புறக் கடல் என்று சொல்லப்பட்ட எம்பெருமான் ஆகிற பிரமேயம் ஆனது
கடல் அலை செறிந்து நிற்கும் இடம் போலே ஞானாதி ஷட் குணங்கள் நிறைந்த தான் அவற்றிலே இரண்டு இரண்டு
குணங்களை பிரகாசிப்பித்துக் கொண்டு சங்கர்ஷணாதி ரூபத்தாலே வ்யூஹித்து இருக்கும் இடத்திலும்
கடலில் நிலை காண ஒண்ணாத படி ஆழ்ந்து இருக்கும் இடம் போலே கண்ணால் காண ஒண்ணாம் அந்தர்யாமியாய் நிற்கும் இடத்திலும்
கடலானது கழிகளாய் கொண்டு ஓடும் இடம் போலே கண் காண வந்து தோன்றி ஞாலத்தூடே நடந்து திரிந்த அவதாரமான இடத்திலும்
தேச தூரத்தாலும் -இந்திரிய தூரத்தாலும் -கால விபர்யயத்தாலும் கிட்டி அனுபவிக்க முடியாதவர்களுக்கு அதிலே தேங்கின மடுக்கள் போலே
அர்ச்சாவதார என்கிறபடியே தேச காலாதி விப்ரகர்ஷ லவ கேசமும் இல்லாதபடி கல்பிக்கப் பட்ட மிகவும் ஸூலபமான விஷயம்
பிரமேயத்தின் ஆவிர்ப்பாவ பரம்பரையில் கடைசி அவஸ்தையான அர்ச்சாவதாரம் –
இப்படியே அளவிட முடியாததாய் பரத்வ பரமான வேத சமுத்ரமானது –
கடலின் அலை செறிந்த இடம் போலே வ்யூஹ ப்ரதிபாதகமாய்க் கொண்டு வேறு ஒரு நிலைமை எய்தி பாஞ்ச ராத்ரமான இடத்திலும்
கடலில் ஆழ்ந்த இடம் போலே அந்தர்யாமித்வ ப்ரதிபாதகமாகி அவகாஹித்து அர்த்தம் காண ஒண்ணாத படி மன்வாதி ஸ்ம்ருதி ரூபமான இடத்திலும்
சமுத்திரம் கழிகளாய் ஓடுமா போலே அவதார ப்ரதிபாதகமாகி இதிஹாச ரூபமாய் பரம்பின இடத்திலும்
ஞான சக்தி முதலியவற்றின் சங்கோசத்தினால் அவகாஹித்து விடாய் தீர மாட்டாதவர்களுக்கு சாய்க்கரகம் போலே
சிரமம் இல்லாமல் உப ஜீவிக்கலாம் படி மிகவும் எளிதான சாஸ்திரம் –
பிராமண பூதமான வேதத்தின் உடைய ஆவிர்ப்பாவ பரம்பரையின் கடைசி அவஸ்தையான திருவாய்மொழி –

75-வீட்டின்ப -ஆழ்வார் பக்கலிலே ஜாதி நிரூபணம் பண்ணலாகாது என்றல் -கீழே பிராமண ப்ரமேய வைபவம் விரித்து அருளி
பிரமாதாவான ஆழ்வார் உடைய வைபவம் மேலே விரித்து அருளுகிறார் -விலஷணரே என்றாலும்
நான்காம் வருணத்தவர் -என்று சங்கித்தாலும் மஹா பாபம் உண்டு என்னப் படுகிறது
-பகவத் விஷயம் என்றால் உள் கனிந்து இருக்கும் அவர்களுடைய திரு மாளிகைகளில் அவர்கள் உகந்த தொரு த்ரவ்யத்தை
திருமேனியாகக் கொண்டு இருந்து இன்பம் விளைக்கிற அர்ச்சாவதாரத்தை பார்த்து இது இன்ன இன்ன லோகம் அன்றோ என்றால்
எப்படிப்பட்ட பாபம் உண்டோ -அதே போலே –
விசேஞ்ஞர்களுக்கு பரமானந்தத்தை விளைப்பதான திருவாய் மொழியை நோக்கி இது தமிழ் பாஷை அன்றோ என்று இகழ்தல்
எப்படிப் பட்ட பாபம் உண்டோ -அப்படிப்பட்ட பாபம் ஆழ்வார் பக்கல் ஜாதியைப் பற்றின இகழ்ச்சி செய்தலால் உண்டாகும் -என்றபடி –

76-பேச்சுப் பார்க்கில் -அருளிச் செயலின் பாஷையையும் ஆழ்வாருடைய ஜாதியையும் கணிசிக்க லாகாது என்பதை திடப்படுத்தல் –
விஷய வைலக்ஷண்யத்தை நோக்காமல் -சம்ஸ்க்ருத பாஷையில் உள்ளதும் -ஜென்ம கௌரவம் உடையார் சொல்லுவதும் தான் ஆதரிக்கத் தக்கது -என்று
கொள்ளுகிற பக்ஷத்தில் -கள்ள நூல் -பொய் நூல் -என்று கழிக்கப் பட்ட சம்ஸ்க்ருத பாஷா மயமான பாஹ்ய சாஸ்திரம் முதலானவையும்
பரிக்ரஹிக்க வேண்டியவைகளாக பிரசங்கிக்கும் -அப்படியே மத்ஸ்ய கந்தையான மகனான வியாசர் சொன்ன ஐந்தாம் வேதமான மஹா பாரதமும்
கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்று காடு வாழ் சாதியுமாகப் பெற்ற கிருஷ்ணன் சொன்ன கீதா உபநிஷத்தும் த்யாஜ்யமாகவும் பிரசங்கிக்கும் –

77-கிருஷ்ண க்ருஷ்ண த்வைபாயன –வியாசர் உடையவும் -கண்ணன் யுடையவும் உத்பத்தியில் காட்டிலும் ஆழ்வார் அவதாரத்துக்கு உண்டான சிறப்பு –
கண்ண பிரான் ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் இருந்தவன் -வியாசனோ கன்னிகையின் மகனாகப் பிறந்தவன் –
இவர்கள் உடைய உத்பத்தி போல் அன்று ஆழ்வாருடைய திருவவதாரம் -ஏன் என்னில்
நெடும் காலமும் கண்ணன் நீண் மலர்ப்பாதம் பரவிப் பெற்ற -என்று திரு விருத்தத்தில் தாமே பேசலாம் படி யாய்
ரிஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவோதிதம் –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -படியே பகவத் விஷயமான ஆசையே ஒரு வடிவு
கொண்டால் போலே இருக்கிறவர் ஆயிற்று ஆழ்வார்
ஆகையால் இடைச்சி வயிற்றில் பிறந்த கிருஷ்ணனுடையவும் வலைச்சி வயிற்றில் பிறந்த கிருஷ்ண த்வைபாய னுடையவும்
உத்பத்தியில் காட்டிலும் ஆழ்வார் அவதாரம் மிகச் சிறந்ததே -என்றபடி –

78-பெற்றும் பேர் இழந்தும் -ஆழ்வார் அவதாரச் சிறப்பை நன்கு நிலை நாட்டுவதற்காக ஸ்ரீ கிருஷ்ண வியாச மாதாக்களின் யுடையவும்
-ஆழ்வாரது திருத் தாயார் யுடையவும் தன்மைகளைத் தெரிவித்தல் –
திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற என்கிறபடியே -கிருஷ்ணனைப் பிள்ளையாகப் பெற்று இருக்கச் செய்தேயும் -அவனுடைய
பால்ய ரசம் ஒன்றும் அனுபவிக்கப் பெறாமையாலே -திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் என்று பேர் இழந்தவளான தேவகியும் –
த்வீபே பதரிகாமிஸ்ர் பாதராயண மச்யுதம் பராசராத் ஸத்யவதீ புத்ரம் லேபே பரந்தபம்-என்கிறபடியே வியாசனைப் பிள்ளையாகப்
பெற்று இருக்கச் செய்தேயும் அவனால் உள்ள ரசம் ஒன்றும் அனுபவிக்கப் பெறாத படி -புன கன்யா பவிஷ்யதி -என்று என்ற
பராசர வசனத்தாலே மீண்டும் கன்னிகையான மத்ஸ்ய கந்தையும்-
எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாள்-என்னும் படி கிருஷ்ணனுடைய பால சேஷ்டிதங்கள் எல்லாம் அனுபவிக்கப் பெற்று இருக்கச் செய்தேயும் –
தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ என்றும் -இம்மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார் -என்றும்
அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்கள் அடியாக தானும் பிறரும் சங்கிக்கும் படியான மாத்ருத்வத்தை யுடைய யசோதையும்
ஆக மூன்று தாய் மார்களும் -நெடும் காலமும் கண்ணன் நீண் மலர்ப்பாதம் பரவிப் பெற்ற -என்றும் -நங்கைமீர் நீரும் ஒரு பெண் பெற்று
நல்கினீர் எங்கனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை -என்றும் சொன்ன ஆழ்வார் திருத் தாயாருக்கு இறையும் ஒப்பாக மாட்டார்களே –

79-மீன நவ நீதங்கள் –மீன் வெறி நாறுகிற வியாசர் பிறப்பிடமும் -வெண்ணெய் முடை நாறுகிற கண்ணன் பிறப்பிடமும்
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற -என்றும் –
அன்றி மற்று ஓர் உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல் குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கித்
தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப்புலியூர் நின்ற மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே -என்றும்
தாமே அருளிச் செய்யுமாறு பகவத் சம்பந்த பிரகாசகமான திருத் துழாய்ப் பரிமளம் கமழப் பெற்ற
ஆழ்வார் அவதார ஸ்தலத்துக்கு ஈடாகுமோ-ஆகாது -என்றவாறு –

80-ஆற்றில் துறையில் -வியாசர் பிறப்பிடம் -ஆறு தான் அசிஷ்ட பரிக்ரஹம் யுடைய கங்கையாய் -துறை ஒடத் துறையாய் -ஊர் வலைச் சேரியாய் இருக்கும் –
கண்ணன் பிறப்பிடம் -ஆறானது கிருஷ்ண ஜல பிரவாஹம் யுடைத்தாகையாலே தமோ மயமான யமுனையாய் -துறையும் அதில்
காளிய விஷ தூஷிதமான துறையாய் -ஊர் தானே அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலமாய் இருக்கும் –
இனி இவ்வாழ்வாருடைய உத்பத்தி ஸ்தலத்தை ஆராய்ந்தாலோ -ஆறு -பவள நன் படர்க் கீழ் சங்குறை பொருநல் -என்று
விலக்ஷண பதார்த்தங்களுக்கு ஜென்ம பூமியாய் மிகச் சிறந்ததான தாம்ர பரணியாய் -துறை சுத்த ஸ்வபாவமாய் இருக்கிற
சங்குகள் வந்து சேர்கிற திருச் சங்கணி துறையாய் -ஊர் -நல்லார் நவில் குருகூராய் இருக்கும் –
ஆகையால் வியாச கிருஷ்ணர்கள் யுடைய ஆறுகளையும் துறைகளையும் ஊர்களையும் காட்டில் ஆழ்வாருடைய
ஆற்றுக்கும் துறைக்கும் ஊருக்கும் உள்ள வைஷம்யம் வாய்க்கு நிலம் அல்ல என்றவாறு –

81-தேவத்வமும் -ஆழ்வாருக்கு யுண்டான சதுர்த்த வருணப் பிறப்பு அடிமைச் சுவடு அறிந்தவர்கட்க்கு தேஜஸ் கரம் என்பதை த்ருஷ்டாந்தத்தோடு மூதலித்தல் –
ராவண சம்ஹாரம் தலைக் கட்டின பின்பு பிரமன் முதலான தேவர்கள் வந்து -பவான் நாராயணோ தேவ -என்று மேம்படச் சொல்லி போற்றினது அஸஹ்யமாய் –
ஆத்மாநம் மானுஷம் மன்யே ராமம் தசாரதாத் மஜம்-என்று தன்னை தயரதன் மகனாகவே சொல்லிக் கொள்ளுகையாலும் –
கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடை எடுத்து கோ நிரை காத்த பின் அந்த அதி மானுஷ சேஷ்டிதங்களை கண்டு ஆச்சர்யப்பட்ட இடையர்
கண்ணா நீ தேவனா அசுரனா யக்ஷனா கந்தர்வனா சொல்ல வேணும் -எங்கள் இழி குலத்தையும் உன் தன் செயல் வன்மையையும் நோக்கும் இடத்து
எங்களுக்கு மிக்க அதி சங்கையாய் இருக்கின்றதே என்று சங்கித்துச் சொல்ல -அது அஸஹ்யம் என்பது தோன்றச் சிறிது போது வாய் திறவாமல் இருந்து பின்பு
நான் தேவனும் அல்லன்-கந்தர்வனும் அல்லன் -யக்ஷனும் அல்லன் -அசுரனும் அல்லன் -உங்களில் ஒருவனே ஆவேன்-
-வேறு விதமாக ஒன்றும் எண்ண வேண்டா என்கையாலும் -தேவர்க்கும் தேவனான தான் லோக சம்ரக்ஷண அர்த்தமாக மனுஷ்ய சஜாதீயனாய்
அவதரித்த அளவில் தேவனாகச் சொல்லுகையும் தனக்கு நிந்தையாம் படி புரை யறப் பிறக்கும் சீலவானான ஈஸ்வரனுக்கு கல்யாண குணங்கள்
ஓளி பெற்று வரும் தாழ்ந்த ஜென்மங்கள் போலே -ப்ராஹ்மண்யத்துக்கு எல்லை நிலமான ப்ரஹ்மாவும் பிறக்கையும் சேஷத்வ விரோதியான
அஹங்காரத்துக்கு ஹேது வாகையாலே -ஆத்மாவுக்கு அவத்யம் என்று இகழும் படி அடிமைச் சுவடு அறிந்தவர்களுக்கு
-பண்டை நாளாலே -என்கிற திருவாய் மொழியில் பல் படி கால் குடி குடி வழி வந்து ஆட் செய்யும் -என்று இது முதலாகச் சொன்ன படியே
தாஸ்யத்துக்கு விரோதியான ஜென்மாதி அபிமானம் இன்றிக்கே கைங்கர்ய அநு ரூபமான குடிப் பிறப்பானது
பரம பதத்தில் பகவத் கைங்கர்யத்துக்கு தகுதியாக பரிக்ரஹிக்கும் தேகம் போலே சேஷ வஸ்துவான ஆத்மாவுக்கு தேஜஸ் கரமாம் –

82-ஜனக தசரத -ஆழ்வார் அவதாரம் பர உபகாரகம் என்றல்- ஜனக குலத்துக்கு மூத்த பெண்ணான -பிராட்டி பிறந்து –
ஜனகா நாம் குலே கீர்த்திம் ஆஹரிஷ்யதி மே ஸூ தா –என்கிறபடி தான் பிறந்த குலத்துக்கு கீர்த்தி உண்டாக்கினால் போலேயும் –
தசரத குலத்துக்கு நடுவில் பிள்ளையான -பரதாழ்வான் பிறந்து -மூத்தார் இருக்க இளையோர் முடி சூடக் கடவது அன்று என்கிற –
குல மரியாதையை நடத்தின அளவும் அல்லாமல் மூத்தவரான பெருமாளுடைய பிரிவில் சடை புனைந்து மரவுரி யுடுத்து
கண்ண நீரால் யுண்டான சேற்றிலே தரைக் கிடை கிடந்துகுலத்துக்கு முன்பு இல்லாத ஏற்றங்களை யுண்டாக்கினால் போலேயும் –
வ ஸூ தேவ குலத்துக்கு கடைக் குட்டியான கிருஷ்ணன் பிறந்து தாய் தந்தையரின் கால் விலங்கு அறுத்தால் போலேயும்
இவ்வாழ்வார் திரு வவதரித்து மலி புகழ் வண் குருகூர் -என்னும் படி தாம் பிறந்த ஊருக்கு புகழ் உண்டாக்கி -குடிக்கிடந்து ஆக்கம் செய்து -என்று
சேஷத்வ குல மரியாதை தப்பாத படி நின்ற அளவே அல்லாமல் எம்பெருமானை பிரிந்த வருத்தத்தை கனத்தால்
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து -கண்ண நீர் கைகளால் இறைத்து இட்ட கால் இட்ட கையாகத் தரைக் கிடை கிடந்த
பிரேம விசேஷத்தாலே -இக்குடிக்கும் முன்பு இல்லாத ஏற்றத்தையும் உண்டாக்கி -அறுவர் தம் பிறவி யஞ்சிறையே -என்கிறபடியே
தம்முடைய திவ்ய பிரபந்த அப்யாஸ முகத்தால் தம்மோடு அந்வயம் யுடையாருடைய சம்சாரம் ஆகிற சிறையும் அறுத்தார் —
த்ருஷ்டாந்த பூதரான மூவர் செய்ததும் இவர் ஒருத்தரே செய்கையாலும் -இத்தனையும் ஸ்வரூப அநு கூலமாகச் செய்கையாலும்
இவரது அவதாரம் மிகவும் பர உபகாரகம் ஆயிற்று என்கை –

83-ஆதித்ய ராம திவாகர -ஆழ்வார் திரு அவதாரத்தால் உலகுக்கு உண்டான நன்மைகளை பேசுதல் –
யத் கோ சகஸ்ரம் அபஹந்தி தமாம்ஸி பும்ஸாம் நாராயணோ வசதி யத்ர ச சங்க சக்ர —
யன் மண்டலம் சுருதி கதம் பிரணமந்தி விப்ரா தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய -என்று அருளிச் செய்த
முன்னோர்கள் நம்மாழ்வாரை ஸூர்யனாகவே உருவாக்கப் படுத்தினார்கள்
திருவாய் மொழி ஆயிரம் ஆகிற ஆயிரம் கிரணங்களை யுடையராய் -மஹிஷீ பூஷண ஆயுத விசிஷ்டனான நாராயணனை
கண்கள் சிவந்து பெரியவாய் -என்கிற பாசுரத்தில் படியே உள்ளே உடையராய் -வேத வித்துக்களான சகல சிஷ்டர்களும் கேட்ட போதே
தாம் இருந்த தேசத்தை நோக்கி வணங்கும் படியான வைபவத்தை யுடையராய் -ஆக இப்படிப் பட்ட தன்மைகளால்
ஸூ ர்யனாகச் சொல்லலாம் படி இரா நின்ற ஆழ்வாரை தொழுகிறேன் -என்பதே இந்த ஸ்லோகம்
இந்த வகுள பூஷண பாஸ்கரன் தவிர வேறே மூன்று ஸூ ர்யர்கள் உலகில் உண்டே –ப்ரசித்தனான ஸூர்யன்
சரஜாலாம்சுமான் ஸூர கபே ராம திவாகர சத்ரு ரஷோமயம் தோயம் உபசோஷம் நயிஷ்யதி -என்கிறபடியே
அம்புகளாகிற கிரணங்களை யுடையனாய்க் கொண்டு சத்ரு ராக்ஷஸ சமூகம் ஆகிற சமுத்திரத்தை வற்றப் பண்ணின ராம ஸூர்யன்
ததோகில ஜகத் பத்ம போதாய அச்யுத பானு நா தேவகீ பூர்வ சந்த்யாம் ஆவிர்ப்பூதம் மஹாத்மநா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்கிறபடியே
சகல லோகம் ஆகிற தாமரைப் பூ மலரும் படி தேவகி யாகிற கீழ்த் திசையிலே ஆவிர்ப்பவித்த ஸ்ரீ கிருஷ்ண ஸூர்யன்
ஆக இப்படி பிரசித்தர்களான -மூன்று ஸூர்யர்களுக்கும் ஆகாத கார்யங்கள் வகுள பூஷண பாஸ்கரன் உதயமான வாறே ஆயின -எங்கனே என்னில்
கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான் கனவிருள் அகன்றது -என்னும் படி ஸூர்யன்
வெளி இருளை மாத்திரம் போக்கிக் கொண்டு உதிப்பான் -உள் இருள் அவனால் நீங்காது -ஆழ்வார் ஆகிய ஸூ ர்யனால் அது நீங்கப் பெற்றது
ஸ்ரீ இராமாயண சித்த ராம ஸூ ர்யன் -சத்ரு ராக்ஷசர் ஆகிய சமுத்திரத்தை வற்றைப் பண்ணின அளவே அல்லது
சம்சார சமுத்திரத்தை வற்றப் பண்ணின படி இல்லை -சம்சார சமுத்திரமும் வற்றிற்று ஆழ்வார் ஆகிய ஸூர்யனால் –
ஸ்ரீ விஷ்ணு புராண சித்த கிருஷ்ண ஸூர்யன் -அகில ஜகத் பத்மத்தை விகசிக்கத் செய்தான் அத்தனை அல்லது ஹ்ருதய புண்டரீகத்தை
விகசிக்கச் செய்தான் என்று இல்லையே -போதில் கமல வன்னெஞ்சமும் விகசிக்கப் பெற்றது ஆழ்வார் ஆகிற ஸூரய்னாலே தானே –
இத்தால் அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்கி -சம்சார சாகரத்தை சோஷிப்பித்து -ஹிருதய புண்டரீகத்தை விகசிக்கச் செய்த
வகுள பூஷண பாஸ்கரருடைய வைபவம் வாசா மகோசரம் என்றதாயிற்று –

84- வம்ச பூமிகளை உத்தரிக்க -இப்படி பரம விலக்ஷணரான ஆழ்வார் மூன்று வருணங்களுள் ஒன்றிலே அவதரியாமல்
நான்காம் வருணத்தில் தாழ விழிந்ததற்கு ஹேது கூறுதல் –
யயாதி சாபத்தால் ராஜ்ய அர்ஹம் இல்லாத படி இழிவாய்க் கிடந்த யாது வம்சத்தை உத்தரிக்கைக்காக ஆய்க்குலம் புக்க கோபாலனைப் போலேயும்-
ஹிரண்யாக்ஷ பலத்தால் நிலை குலைந்து கிடந்த பூமியை உத்தரிக்கைக்காக பாதாளத்தில் தாழ இழிந்த வராஹ ரூபியைப் போலேயும்
இவ்வாழ்வாரும் குலம் தாங்கும் அபிமானத்தாலே சம்சாரத்திலே மூக்கிக் கிடப்பார்களை அந்நிலையில் நின்றும் பேதித்து
-அபிமான துங்கன் என்னும் உயர்த்தியை யுடையவர் ஆக்குகைக்காக -அகங்கார ஹேதுவான வருணங்கள் அநர்த்த கரம் என்று
தோற்றும் படி அஃது இல்லாத சதுர்த்த வருணத்திலே தாழ இழிந்தார்-

85-மிலேச்சனும் பக்தனானால் -இன்னமும் ஆழ்வாரது வைபவத்துக்கு உறுப்பாக பொதுவில்
பாகவத வைபவத்தை பல உதாஹரன்களாலும் வெளியிட்டு அருளுகிறார் –

மத் பக்த ஜன வாத்சல்யம் பூஜா யாஞ்ச அநு மோதனம்-ஸ்வயம் அப்யர்ச்ச நஞ்சைவ மதர்த்தே டம்ப வர்ஜனம் -மத்கதா ஸ்ரவணே பக்தி –
ஸ்வ நேத்ர அங்க விக்ரியா மம அநு ஸ்மரணம் நித்யம் யச்ச மாம் நோப ஜீவதீ பக்திர் அஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மின் மிலிச்சேபி வர்த்ததே
ச விப்ரேந்தரோ முனி ஸ்ரீ மான் ச யதிஸ் ச ச பண்டித -தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ச ச பூஜ்யோ யதா ஹ்யஹம்
என்று மிலேச்ச ஜாதியில் பிறந்தவனும் அஷ்ட வித பக்தியை யுடையவன் ஆகில் அவனை உத்க்ருஷ்ட வர்ணத்தவரான
சதுர்வேதிகள் அபிஜநாதி அபிமான தூஷிதமான ஸ்வ ஸ்வரூபத்தின் சுத்திக்காக அநு வர்த்திக்கலாம் -அவன் இடத்தில் ஞானம் பெறலாம்
குல தைவ துல்யமாக அவனை பூஜித்து ஸ்ரீ பாத தீர்த்தம் ஸ்வீகரிக்கலாம் -அவனுடைய தளிகை பிரசாதம் ஸ்வீகரிக்கலாம்
பரம பாவனமாம் -என்று அருளிச் செய்த எம்பெருமானுடைய திரு முகப் பாசுரத்தையும் –

அபர ராத்திரியிலே சென்று பாடித் திருக் குறுங்குடி நம்பியை திருப்பி பள்ளி உணர்த்துகையாலே முன்பு இராமபிரானையும்
கண்ணபிரானையும் அரங்கத்தம்மானையும் திருப்பள்ளி உணர்த்தின விச்வாமித்ரன் பெரியாழ்வார் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் ஆகிற
இவர்களோடு ஸகோத்ரியாய்-அனன்யா பிரயோஜன வ்ருத்தியிலே அன்விதனாய உள் கலந்து ஜென்ம ஸித்தமான நைச்சியத்தை
யுடையனான நம்பாடுவான் -சோமா சர்மா வாகிற ப்ராஹ்மணனுடைய யாக வைக்கலய தோஷத்தால் வந்த
ப்ரஹ்ம ராக்ஷ சத்வத்தை கைசிகப் பண்ணாலே போக்கி யாக்கத்தைத் தலைக் கட்டின படியையும் –

ஜென்ம வ்ருத்த ஞானங்களால் தண்ணியரான குஹப் பெருமாள் சகல பிரகாரங்களாலும் உத்க்ருஷ்டனான சக்கரவர்த்தி திரு மகனுக்கு
சமான ஸ்நேகிதராய் அந்த ராம வசனத்தாலே -இளைய பெருமாளுக்கு தமையன் என்ற விருதை பெற்றவராய் இங்கனம் தம்மை அங்கீ கரித்தவன்
அன்று இரவே சித்திர கூடத்தில் பெருமாள் பள்ளி கொண்டு அருளா நிற்க பரிவாலே கண் உறக்கம் அற்று கையும் வில்லுமாக
காத்துக் கொண்டு இருக்கிற இளைய பெருமாளையும் அதி சங்கை பண்ணி தாம் ஆயுத பாணியாய்க் கொண்டு அவர் மேலே கண்ணாய் நின்று
அவருடைய நினைவை சோதித்து ராம விக்ரஹ கிலேசத்தோடே சித்ர கூடத்து என்ற வந்த பரத ஆழ்வானுக்கு
இளைய பெருமாள் திருத் தமையனார் பக்கல் பிரேம பார தந்தர்யங்களே நிரூபகமாம் படி இருக்கும் இருப்பை –
தான் -குஹன் -சொல்லும்படி இஷ்வாகு வம்சத்தவர்களோடு ஏக குலம் ஆனபடியையும் –

முன்னோர் தூது வானரத்தின் வாய் மொழிந்து -என்கிறபடியே பிராட்டிக்குத் தூது மொழியைத் திருவடி வாயிலே சொல்லி விட்ட
சக்கரவர்த்தி திருமகன் -சபர்யா பூஜிதஸ் சம்யக் ராமோ தசாரதாத்மஜ-என்று சபரியின் கையில் பண்ணின சம்யக் போஜனத்தையும் –

கோதில் செங்கோல் குடை மன்னரிடை நடந்த தூதா -என்னும்படி பாண்டவர்களுக்காகத் தூது போன கண்ண பிரான்
பீஷ்மர் துரோணர் முதலானோருடைய க்ருஹங்களை விட்டு -விதுரான் அன்னானி புபுஜே சுசீநீ குண வந்தி ச -என்கிறபடியே
பாவனத்தவ போக்யத்வங்கள் கண்டு உகந்து ஸ்ரீ விதுரர் திரு மாளிகையில் பண்ணின ச குண போஜனத்தையும் –

ஓத மா கடலைக் கடந்தேறி உயர் கொள் மாக் கடிகாவை இறுத்துக் காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடி இலங்கை மலங்க
வெரித்துத் தூது வந்த குரங்கு -என்று சொல்லப் பெற்ற திருவடி -த்ருஷ்டா சீதா -என்று வந்த ப்ரீதியாலே -தத் துல்யம் சக போஜனம் -என்று
திரு உள்ளம் பற்றி -கோதில் வாய்மை யினாயோடும் உடனே யுண்பன் நான் என்ற பெருமாளோடே பண்ணின ஸஹ போஜனத்தையும் –

யது குலத்தில் இறந்து இடைக் குலத்திலே வளருகையாலே ஒரு பிறவியிலே இரு பிறவியான
கிருஷ்ணனுக்கு தரும புத்திரர் தம்முடைய யாகத்தில் அக்ர பூஜை கொடுத்த படியையும் –

ரிஷி புத்ரராய் பிறந்து பொருந்தர் இடத்திலே தஜ் சஜாதீயராய் வளருகையாலே ஒரு பிறவியிலே இரு பிறவியான
திரு மழிசைப் பிரானுக்குப் பெரும் புலியூர் அடிகள் தம்முடைய யாகத்தில் அக்ர பூஜை கொடுத்த படியையும்-

பஞ்ச பாண்டவர்களில் முதல்வரான தர்ம புத்திரர் விதுரர்க்கு ஞானப் பெருமையையும் அசரீரி வாக்கையும் கொண்டு
ஸந்தேஹியாமல் புத்ர க்ருத்யம் -சரம கைங்கர்யம் – செய்த படியையும் –

தயரதன் புதல்வரில் நால்வரில் முதல்வரான பெருமாள் சஹஜரான இளைய பெருமாளும் கூட நிற்கச் செய்தே-
அவர் கையிலும் காட்டிக் கொடுக்காமல் தானே பெரிய உடையார்க்கு -ஜடாயு மஹா ராஜர்க்கு – புத்ர க்ருத்யம் செய்த படியையும் –

பெரிய நம்பி திருக் கோஷ்டியூர் நம்பி பெரிய திருமலை நம்பி என்று ச ப்ரஹ்மசாரிகளாய் -ஆளவந்தார் திருவடிகளாய் –
உடையவருக்கு ஆச்சார்யர்களாய் பிரசித்தரான நம்பிகள் மூவரிலும் பிரதானரான பெரிய நம்பிகள் மாறனேர் நம்பிக்கு
புரோடாசத்தை நாய்க்கு இடாதே கொள்ளும் என்று ஆளவந்தார் அருளிச் செய்து
போன படியே புரோடாசமாக நினைத்து புத்ர க்ருத்யம் செய்த படியையும் –

சிந்து பூ மகிழும் திருவேங்கடம் ஆகையால் புஷப மண்டபமான திருமலையில் பணிப் பூவும் கையுமாய் திரு உள்ளம் அறியப்
பரிமாறுகையாலே திருவேங்கடமுடையானுக்கு அந்தரங்கரான குறும்பு அறுத்த நம்பியைத்
தொண்டைமான் சக்கரவர்த்தி அனுவர்த்தித்த படியையும்

வேகவத் யுத்தரே தீரே புண்ய கோட்யாம் ஹரிஸ் ஸ்வயம் வரதஸ் சர்வ பூதாநா மத்யாபி பரித்ருச்யதே -என்கிறபடியே தியாக மண்டபமான
பெருமாள் கோயிலிலே திருவால வட்டமும் கையுமாய் பேர் அருளாளனுக்கு அந்தரங்கராய நின்ற திருக் கச்சி நம்பியை
வைதிக சிகாமணியான உடையவர் அனுவர்த்தித்த படியையும் –

தெண்ணீர்ப் பொன்னி திரைக் கையால் அடி வருடப் பள்ளி கொள்ளும் என்கிறபடியே போக மண்டபமான கோயிலிலே வீணையும் கையுமாய்
பெரிய பெருமாளுக்கு அந்தரங்கராய் வர்த்தித்த திருப்பி பாண் ஆழ்வாரை லோக சாரங்க மஹா முனிகள் அனுவர்த்தித்த படியையும்

தேவ பூஜாயாம் -என்கிற தாதுவின் படியே -யாகம் என்னப் படுகிற திருவாராத நத்திலே-பிள்ளை யுறங்கா வல்லி ஸ்பர்சத்தாலே காய சுத்தி பண்ணின உடையவரும்
அநு யாக சப்த வாஸ்யமான பிரசாத சுவீகாரத்திலே பிள்ளை ஏறு திரு உடையார் தாசருடைய கர ஸ்பர்சத்தாலே அன்ன சுத்தி பண்ணின நம்பிள்ளையும்
உத்தர வீதி குடி புகுகிற போது பிள்ளை வான மா மலை தாசர் சஞ்சாரணத்தாலே ஸ்தல சுத்தி பண்ணின நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டரும் ஆகிற
ஞான வ்ருத்தர்கள் உடைய ஆசார க்ரமத்தையும் அறிய வல்லவர்களுக்கு அன்றோ
இன்ன ஜென்மம் உத்க்ருஷ்டம் இன்ன ஜென்மம் அபக்ருஷ்டம் என்று ஜென்மத்தின் யுடைய ஏற்றத் தாழ்வுகள் தெரியக் கூடும் –

86-அஞ்ஞர் பிரமிக்கிற -பகவத் விஷய ஸ்பர்சம் அற்ற வர்ணாஸ்ரமங்களும் ஞான வ்ருத்தங்களும் ஹேயம் என்றல்-
எம்பெருமானுக்கு அடிமை பட்டு இருத்தலே ஆத்மாவுக்கு நிரூபகம் என்று நிஷ்கர்ஷித்து -அதற்குத் தகுதியாக
த்யாஜ்ய உபாதேயங்களை பகுத்து உணரத் தக்க ஞானம் இல்லாதவர்கள் எம்பெருமான் உடைய சம்பந்தம் இன்மையால்
நிஷ்க்ருஷ்டங்களாய் இருக்கிற வர்ண ஆஸ்ரம வித்யா வ்ருத்தங்களை உத்தம வர்ணம் என்றும் -உத்தம ஆஸ்ரயம் என்றும்
-சத் வித்யை என்றும் -சத் வ்ருத்தம் என்றும் உத்க்ருஷ்டமாக நினைத்து இருப்பார்கள் -ஆனால் ஞானிகள் அவற்றை இகழ்வார் -எங்கனே என்னில் –
சதுர் வேத தரோ விப்ரோ வாஸூ தேவம் ந விந்ததி வேத பார பராக்ராந்தஸ் ச வை ப்ராஹ்மண கர்த்தப-என்று
நான்கு வேதங்களையும் அதிகரித்து வைத்தே வேத விழுப் பொருள் ஆகிய எம்பெருமானை அறியாதவன் –
குங்குமம் சுமந்த கழுதை போலே தான் சுமந்து கொண்டு திரிகிற வேதத்தின் பரிமளம் அறியாத பிராமணாக் கழுதை என்றும்
ஸ்வபசோபி மஹீ பால -விஷ்ணு பக்தோ த்விஜாதிக -விஷ்ணு பக்தி விஹீ நஸ்து யதிச் ச ஸ்வபசாதம-என்று உத்தம
ஆஸ்ரமியானாலும் எம்பெருமான் இடத்தில் பக்தி இல்லாதவன் சண்டாளனில் காட்டில் கீழ்ப் பட்டவன் என்றும்
தத் கர்ம யன் ந பன்னாய சா வித்யா யா விமுக்தயே அபரம் கர்ம வித்ய அந்நியா சில்ப நை புணம்-என்று மோக்ஷ அர்த்தமாக
உபயோகப்படும் வித்யை எதுவோ அதுவே வித்யை யாகும் -அப்படி அல்லாதது செருப்புக் குத்தக் கற்ற கல்வி போன்றதே யாகும் -என்றும் –
ஆம் நா யாப்யச நானி அரண்ய ருதிதம் வேத வ்ரத அந்நிய அன்வஹம் மேதச்சேதபலாநி பூர்த்த விதயஸ் சர்வே ஹூதம் பஸ்மநி தீர்த்தா
நாமவகாஹநாநி க கஜஸ்நா நம் வி நா யத் பதத் வந்த்வாம் போருஹ சம்ஸ்ம் ருதீர் விஜயதே தேவஸ் ச நாராயண –முகுந்த மாலை –என்று
எம்பெருமானுடைய சிந்தனை இல்லாதவர்கள் செய்கின்ற கர்ம அனுஷ்டானம் சாம்பலில் இட்ட ஆ ஹூதி போலே பிரயோஜனம் அற்றது என்றும்
யஸ்ய அகிலாம் இவஹபிஸ் ஸூ மங்கலை வாசோ விமிச்ரா குண கர்ம ஜன்மபி -ப்ராணந்தி சும்பந்தி
புநந்தி வை ஜகத் யாஸ் தத்வி யுக்தாச் சவசோப நா மதா-என்றும்
விஷ்ணு பக்தி விஹீ நஸ்ய வேதச் சாஸ்திரம் ஜபஸ் தப அபிராணஸ் ஏவ தேஹஸ்ய மண்டநம் லோக ரஞ்சனம் -என்று –
பகவத் விஷயத்தில் அந்வயம் பெறாத உக்திகளும் -பகவத் பக்தி இல்லாதவனுடைய அறிவும் நடத்தையும் பிணக் கோலம் செய்வது ஒக்கும் என்றும்
ப்ராதுர்ப் பாவைஸ் ஸூ ர நர சமோ தேவ தேவஸ் ததீயா -ஜாத்யா வ்ருத்தைரபி ச குணதஸ் தாத்ருசோ நாத்ர கர்ஹா-
கிந்து ஸ்ரீ மத் புவன பவன த்ராணத-அன்யேஷு வித்யா வ்ருத்த ப்ராயோ பவதி விதவா கல்ப கல்ப ப்ரகர்ஷ -என்று
பகவத் விஷயத்தில் அந்வயம் அற்றவர்கள் உடைய கல்வி ஒழுக்கச் சிறப்புக்கள் பகவத் சம்பந்த ஞானம் ஆகிற
ஸூமங்கலி விலக்ஷணம் இல்லாமை பற்றி -விதவ அலங்காரம் துல்யம் என்றும் ஞானிகள் இகழ்வார்கள்-
ஆக இப்படி பகவத் விஷய சம்பந்தம் அற்ற வர்ண ஆஸ்ரமங்களும் ஞான ஒழுக்கங்களும் ஹேயம் என்கையாலே
கீழே தாழ்ந்த ஜென்மமாகக் கருதப்பட்ட ஜென்மம் இன்னது -என்று நிரூபிக்கப் பட்ட தாயிற்று –

—————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ .வே. காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: