-ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த ஸ்ரீ பரமார்த்த ஸ்துதி –

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தாசார்யோ மே சந்நிதத்த்தாம் சதா ஹ்ருதி —

திருப்புட் குழி -ஸ்ரீ விஜயராகவ -போரேற்று நாயனார்
திருப் புட் குழி அம் போரேறு -கலியன் -திரு விட வெந்தை -பதிகத்திலும் -திருமடலிலும் மங்களா சாசனம் –
அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற்கு அழியுமால் என்னுள்ளம் என்னும்
-புலன் கெழு பொரு நீர்ப் புட் குழி பாடும் போதுமோ நீர் மலைக்கு என்னும்
குலம் கெழு கொல்லி கோமள வல்லி கொடியிடை நெடு மழைக் கண்ணி
-இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே –2-7-8-
-புலன் கெழு பொரு நீர்ப் புட் குழி பாடும் –புஷ்கரணியே நமது இந்திரியங்களை கொள்ளுமே -இங்கு –
மரகதத்தை -புட் குழி எம் போர் ஏற்றை -திரு மடலில் –
மரகத வல்லி தாயார் -கமலா –மின்னை -இரு சுடரை –வெள்ளறை யுள் கல்லறை மேல் –
-பொன்னை மரகதத்தை புட் குழி எம் போர் ஏற்றை -தாயார் உடன் சேர்த்து மங்களா சாசனம் –
வறுத்த பயர் முளை யிட்டு -புத்ர பாக்யம் -இறந்த குழந்தையை மீட்டு கொடுத்த -பரீக்ஷித் -குரங்கு முதலைகளை உயிர் கொடுத்து மீட்ட –
தன்னடையே வரும் பலன்கள் -மோக்ஷம் ஒன்றே நமது குறிக்கோள் -வியர்வை தானே வருமே –
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அவதார ஸ்தலம் -கீல் குதிரை -உண்டே -ஸ்ரீ -எம்பெருமானார் எழுந்து அருளி கற்ற ஸ்தலம் –

அவனே பரமார்த்தம் -அர்த்தம் -உபாயம் -பரமமான உபாயம் -உபாயாந்தரங்கள் பிரபத்தி -ஆச்சார்ய அபிமானம் -சரம பர்வ நிஷ்டை
-பஞ்சமோ உபாய நிஷ்டர்கள் -அவனும் இதில் அந்தரகதம்—உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் என்று
இருப்பவர்களுக்கு ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்பது இதனாலே தானே –
கையைப் பிடித்து கார்யம் கொள்ளாமல் காலை-திருவடியில் விழுந்து கொள்வது போலே தானே -உதர முடியாதே -மோக்ஷ ஏக உபாயம் –
சரணாகதி பிரபத்தி ஸ்தோத்ரம் என்றபடி —
ஸ்ரீ ராமாயணம் தானே சரணாகதி சாஸ்திரம் -தேவர்கள் சரணாகதி தொடங்கி விபீஷணன்
–சரணாகதி வரை உண்டே –விஜயராகவன் தானே இங்கே –
சர்வாதிகாரம் -விளம்பம் இல்லா பலன் -யாருக்கும் கிட்டும் -ஜடாயுவுக்கும் -காட்ட -திருப் புள்ளம் பூதங்குடி -இங்கும் உண்டே
க்ருத்ர புஷ்கரணி இங்கு தான் –சம்ஸ்காரம் வெப்பம் தாங்காமல் -நாய்ச்சியார் இடது வலது மாறி -சற்றே ஒதுங்கியும் சேவை இங்கே உண்டே
ரண புங்கவர் திரு நாமம் சொல்லி அருளுகிறார் இதில்
அர்த்தம் -பிரயோஜனம் -பரம புருஷார்த்தம் -இதுவே -அத்தை பற்றிய ஸ்தோத்ரம் -என்றுமாம் –
ப்ரீதி காரித கைங்கர்யம் தானே பரம புருஷார்த்தம் -மீளுதலாம் ஏதம் இலா -மாக வைகுந்தம் –
கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ புல் பா முதலா புல் எறும்பாதி ஒன்றும் இல்லா –நற்பாலுக்கு உய்தனன் அன்றோ –
உபாய உபேய ஐக்கியம் -இயற்கையாகவே –
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் -ஸ்துதியே பரமார்த்தம் -பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவ வேண்டுமே –
பிரணவம் -பிரகர்ஷனே ஸ்த்துத்யே நன்றாக ஸ்துதிக்கிறோம் –
கால ஷேபம்-பரமார்த்தம் என்றபடி -பாட்டின் இன்னிசை பாடித் திரிவனே –ஸ்துவன் நாம சகஸ்ரரேண –
பரமார்த்தம் புருஷார்த்தம் ஸ்துதி சரணாகதி -மானஸ காயிக வாசிக -மூன்றாலும் -அவனாலே அவனைப் பெறுவதே -ஒரே சப்தத்தில் அடக்கி
ஸ்துதி முதலிலா பரமார்த்தம் முதலிலா -படித்தால் நூற்று நூறு -நூற்றுக்கு நூறு விளக்கி படிக்கச் சொல்வது போலே
புருஷார்த்தம் முதலில் சொல்லி -ஸ்தோத்ரம் அப்புறம் -/அனுஷ்டானத்தில் ஸ்தோத்ரம் முதலில் –
அவன் உபேயம் தான் நமக்கு வேறே வழி இல்லாமல் அன்றோ உபாயமாக போற்றுகிறோம் -கருமுகை மாலை சும்மாடு
பரம -பரம ஸ்வாமி –பரா மா யஸ்ய யாருடையவளோ அவன் -அஸ்ய -அர்த்தம் -அவதார பிரயோஜனம் –
அமுதினில் வரும் பெண்ணைக் கொள்ள அன்றோ –
முமுஷுக்களை உருவாக்க -மிதுனமாக -இதுவே பரமார்த்தம்
முமுஷுக்களை உருவாக்கும் பெருமாள் பற்றிய ஸ்துதி என்றுமாம் –

———————————————-

ஸ்ரீ மத் க்ருத்ர ஸரஸ்தீர பாரிஜாதம் உபாஸ்மஹே
யத்ர துங்கை ரதுங்கைஸ் ஸ ப்ரண தைர்க்ருஹ்யதே பலம் -1-

ஸ்ரீ மத்-மங்களம் -சோபை உள்ள –
க்ருத்ர ஸரஸ்தீர -க்ருத்ர புஷ்காரணியில் உள்ள சரஸ் -பொய்கை-தீர கரையில்
பாரிஜாதம் உபாஸ்மஹே -கல்பக வ்ருக்ஷம் போன்ற போரேற்று நாயனார் -ஸ்ரீ விஜய ராகவனை –
வண் த்வரை நட்டான் -இங்கே அவனே -பன்மையில் உபாசனத்தின் பெருமையால் -இனிமை தனி அருந்த மாட்டாரே
-அடியோமோடும் நின்னோடும் பல்லாண்டு போலே
யத்ர துங்கை ரதுங்கைஸ் ஸ ப்ரண தைர் -சரணாகதி பண்ணினவர்களால் –யார் ஒரு பெருமாள் இடம்
-உயர்ந்த தாழ்ந்த அனைவரும் -துங்கை அதுங்கை -ஸ -உம்மைத் தொகை -தாழ்ந்தவர்களாலும் –
க் ருஹ்யதே பலம் -பயனைப் பெற்றுக் கொள்வோம் –
பாரிஜாத மரத்தை விட வியாவருத்தி -குகன் சுக்ரீவன் ஜடாயு போல்வாரும் –வால்மீகி வசிஷ்டர் விசுவாமித்திரர் ஜாபாலி மட்டும் இல்லையே
ப்ரணதன்- பிராக்வீ பாவம் -நம கை கூப்பி -விநயத்துடன் -வணங்குடை தவ நெறி -ப்ரணத பரதந்த்ரன் அன்றோ
கைங்கர்யத்தால் உயர்ந்தவர் ஜடாயு –
திர்யக் கூட மோக்ஷம் கொடுத்தாய் -யோகம் செய்ய -யோக்யதை இல்லை -ப்ராஹ்மண ராக்ஷஸரை -கையால் அடி பட்டால்
மோக்ஷம் இல்லை என்னும் சாஸ்திரம் -புலஸ்திய குலம்–இரண்டும் இருந்தாலும் கொடுத்தாய் -ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் அன்றோ
நீ செய்த கார்யம் -விரோதி பரிகாரம் பண்ணி இது சர்வம் சம்ஜயம் -செய்ய வேணும்
கைங்கர்ய சிகாமணி அன்றோ -பிறப்பியத்துக்கு இளைய பெருமாள் பெரிய உடையார் சிந்தையந்தி பிள்ளை திரு நறையூர் அரையர் போலே –
சம்பாதி காதுக்கு எட்டிற்றே ஜடாயு -வானர முதலிகள் மூலம் -கடல் கரையில்
வ்ருக்ஷம் -வாஸி பார்க்காதே -மனுஷ்யன் தானே பார்ப்பான் -நதியோ மரமோ உயர்ந்தவன் தாழ்ந்தவன் பார்க்காதே –
பரமார்த்தம் நீ ஒருவனே –நாம் அனைவரும் வில்லாண்டான் ஒருவனே தஞ்சம் என்று இருப்போம் –
அகில புவன -ஜென்ம ஸ் தேமா–அங்கு –
அனுஷ்டுப் எட்டு எழுத்தாம் -திருமந்தார்தம் -இந்த முதல் ஸ்லோகம்
புங்கவ -ஆண் பசு காளை-சமர – போர் ஏறு -போர் ஏற்று நாயனார் –

——————————————–

குருபி த்வத் அந்நிய சர்வ பாவை -குண சிந்தவ் க்ருத சம்ப்ல வஸ்வதீயே
ரண புங்கவ வந்தி பாவமிச்சன் அஹமஸ்யேகம் அநுக் ரஹாஸ் பதம் தே -2-

குருபி த்வத் அந்நிய சர்வ பாவை -உன்னை தவிர வேறு ஒன்றிலும் பேச்சு நினைவு செயல் இல்லாத
-சிந்தை செயல் சொல்லாலும் உன்னையே அடைந்த எனது ஆச்சார்யர்கள்
-குண சிந்தவ் க்ருத சம்ப்ல வஸ்வதீயே-குணக்கடலில் விழுந்தேன் -சம்சாரக் கடலில் இருந்தேன் மற்றவர் சொல்ல
-இவரோ கவி ஸிம்ஹம் அன்றோ -ஆச்சார்யர் கிருபையால் அன்றோ அவனது -சீர் என்னும் கடலில் அழுந்த –
ப்லவம் கப்பல் சம்ப்லவம் தாண்ட முடியாத -க்ருத -அழுந்தி –
ரண புங்கவ வந்தி பாவமிச்சன்-யுத்தத்தில் சாமர்த்யம் -பும் கவ காளை -வந்தி பாவம் -வணங்கும் -இச்சன் ஆசை உண்டு
நெஞ்சு வாய் கை அனைத்தும் காணேன் -கடல் கொண்டதே –
அடியேன் ஆச்சார்யர்களும் இங்கே அழுந்தி இருக்க
ரண புங்கவ -ராமர்- -கண்ணன் தேரோட்டி தோஷங்களால் நம்மை ஆள் கொள்வான் –
குணங்களால் வென்றவர் பெருமாள் –
ஒரு வில்லால் –செருவிலே அரக்கர் கோனை செற்ற சேவகனார் -அணை காட்டியது கோதண்டம் பிடித்த பிடியில் –
ஓர் வெங்கணை உய்த்தவன் -ஒரே -அமோஹ பாணம்-மராமரம் ஏழும் எய்தாய் ஒரே அம்பால்-
ஒரு சொல் ஒரு வில் ஒரு மனைவி -ஒரே செயல் -அன்றோ பெருமாளுக்கு –
சஸ்திரம் தரித்தவர்களில் ராமனாக இருக்கிறேன் என்பான் கீதாச்சார்யனும்
கச்சாமி–ரண-சண்டையில் அயர்ந்த -ரஜனீயன் -பெருமாள் – -ரணத்தாலா ராமனாலா-
சத்ருக்களும் வாழ்த்தும் படி -பெருமை பெருமாளுக்கு –மண்டோதரி சதுஸ்லோகி /தாரை / சூர்ப்பணகை–
ஸ்தோத்ரம் பண்ண ஆசை -கிளி போலே ஆச்சார்யர்கள் பயிற்று வைக்க –
அஹமஸ்யேகம் அநுக் ரஹாஸ் பதம் தே–அஹம் -அடியேன்-உன்னுடைய அனுக்ரஹத்துக்கு பாத்திரமாக உள்ளேன் –
ஞானக்கை கொடுத்து -மீட்டு அருள வேணும் –
ஜனன மரண சக்ர நகர -அகதி சரண்யன் ஆளவந்தார் -அநந்த சாகரம் அந்தர் நிமக்நன் -குமிழ் நீர் உண்ணும் படி -குணக்கடலில் ஆழ்ந்து —
சிந்தை மற்று ஒன்றில் திறத்தினில் இல்லாமல் -சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் -தேவ பிரானே தந்தை தாய் என்று
அடைந்தவர் சடகோபன் -our-நம்மாழ்வார்
கைங்கர்ய நித்ய நிராதயை பவத் ஏக போகை -நிதியை அநு க்ஷண –நவீனம் ருசாந்தர பாவை -நீச பாவை பரஸ்பரம்
-மத் தெய்வம் -இப்படி உள்ளவர்களே -சிறந்த மருந்து நமக்கு சம்சாரத்தில் –
உன் அடியார்க்கு என் செய்வான் என்றே இருத்தி –நின் புகழில் வைக்கும் சிந்தையிலும் மற்று இனிதோ — நீ கொடுக்கும் வைகுந்தம் என்று அருளும் வான்
கார் கலந்த மேனியான் -கை கலந்த ஆழியான் -பாம்பணையான் -சீர் கலந்த சொல் நினைந்து போக்காரேல் –என் நினைத்து போக்குவார் இப்போது –
சீலம் கொள் நாதமுனி –
குண அனுசந்தானம் அபய ஹேது -ஸூவ தோஷ அனுசந்தானம் பய ஹேது
வெளியில் வராமல் அனுபவித்து ஸ்தோத்ரம் பண்ண வேண்டும்
ஆயர் கொழுந்தாய் அவரால் புடை யுண்ணும் –தூய அமுதை பருகி பருகி மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே –

———————————————-

புவநாஸ்ரய பூஷணாஸ்திர வர்க்கம் -மநசி தவன்மயதாம் மமதாநோது
வபுராஹவ புங்கவ த்வதீயம் மஹிஷீணாம் அநிமேஷ தர்ச நீயம் -3-

புவநாஸ்ரய பூஷணாஸ்திர வர்க்கம் -அஸ்திரம் பூஷணங்களுக்கு ஆஸ்ரயம் -புவனங்களுக்கு ஆஸ்ரயம்
அஸ்திர பூஷண அத்யாயம் -நமக்கு பிரதி நிதி -கௌஸ்துப மணி ஸ்வரூபம் -நீல நாயக கல் -பகவான் ஹரி -ஜீவாத்மா வர்க்கம் –
ஸ்ரீ வத்சம் -மறு-பிரகிருதி மண்டலம் -/ கதை -தர்ம பூத ஞானம் புத்தி
அஹங்காரம் சாத்விக இந்திரியங்கள் -தாமச பூதங்கள் தன்மாத்திரை -சங்கம் சார்ங்கம் இவை
ஞானம் கத்தி -அஞ்ஞானம் உறை/ வைஜயந்தி -பஞ்ச தன்மாத்திரைகள் –
மயிர்க்கால் ஒன்றால் புவனம் தாங்குகிறேன் -கீதை
க்ரீடாதி –நூபுராதி அநந்த திவ்ய ஆபரணம் -சங்கம் -கடகம் -ஷோடசாயுதங்கள் –
-மநசி தவன்மயதாம் மமதாநோது -அதுவாகவே இருக்கும் தன்மை –திருமேனி மனஸ் நிறையும் படி
வபுராஹவ புங்கவ த்வதீயம்-த்வதீயம் வபுஸ்
மஹிஷீணாம் அநிமேஷ தர்ச நீயம் – அகலகில்லேன் இறையும் திரு பூமி நீளா தேவிகள் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே
–திரு மேனியும் சுத்த சத்வமயம் -தியானத்துக்கு விஷயம் ஆகட்டும்
மையார் கருங்கண்ணி –செய்யாள் -கறுத்தவனை பார்த்து -செய்யலை பார்த்து -சிவந்த கண்கள் அவனுக்கு –
சதா பஸ்யந்தி ஸூ ரய –இருந்து இருந்து -அரவிந்தலோசனா என்று என்றே
-கரும் தடம் கண்ணி -தாயார் திரு நாமம் -தொலை வில்லி மங்கலம் -வட கரையில் –
தம் த்ருஷ்ட்வா பர்த்தாராம் -பரிஷஸ் வஜே -நம் பெருமாள் நிற்க -பெரிய பெருமாள் தாயார் பருகி பருகி –
உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் –
என் நெஞ்சத்துள் இருந்து இவை மொழிந்து –
யமம் நியமம் –அஷ்டாங்க யோகம் -நெஞ்சில் நிறைய தியானம் சமாதி நிலைக்கு
மஹிஷிகளுக்கு சேவை சாதிப்பது போலே எங்களுக்கும் வேண்டுமே என்கிறார் –

——————————————–

அபி ரஷிது மக்ரத ஸ்திதம் த்வாம் ப்ரணவே பார்த்த ரதே ஸ பாவ யந்த
அஹித ப்ரசமைர யத்ன லப்யை கத யந்த்யாஹவ புங்கவம் குணஜ்ஞா -4-

அபி ரஷிது மக்ரத ஸ்திதம் த்வாம் –
அக்ரே -முன்னே -ரக்ஷணம் ஒரே செயலுக்கு -ஸ்திதம் த்வாம் எழுந்து அருளி -காக்கும் இயல்வினன் கண்ணன் –
ஸூ பிரயத்தன நிவ்ருத்தி -அஹம் மத் ரக்ஷண பரன் பலன் அனைத்தும் என்னது அல்ல ஸ்ரீ யபதி உன்னதே -புத்திசாலிகள் சொல்வார்கள் –
அடியார்களை ரஷிப்பதே சோறு அவனுக்கு -உணவைப் பறிக்க கூடாதே -ஈஸ்வர பிரவ்ருத்தி விரோதி – ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருத்தி –
தமேவ சரணம் -ஆட்டு வாணியன் இடம் முலை குடிக்கும் குழந்தையை தாய் இடம் பிடுங்கி கொடுப்பது போலே –
-கழுத்துக்கு கட்டி நாமே ரசிப்போம் -களைவாய் துன்பம் களை யாது ஒழிவாய் களை கண் மாற்றிலம் –
குரங்கு முதலிகளை இரவில் காத்த -வில் நழுவாது சொல் நழுவாது –
ப்ரணவே பார்த்த ரதே ஸ பாவ யந்த-
-அகாரத்தில்-பார்த்தன் ரதத்திலும் முன் தட்டிலும் –அவ ரக்ஷனே தாது -மந்த்ரத்திலும் –
அஹித ப்ரசமைர யத்ன லப்யை
-அயத்தனம் லப்தை முயலாமலே அடைய -அஹிதர்கள் அழியவும்
கத யந்த்யாஹவ புங்கவம் குணஜ்ஞா
ஆஹவ புங்கவர் -ஆஹவம் சண்டைக் களம் யஜ்ஜம் -என்றுமாம் –ஏத்துமின் -போர் பாகு தான் செய்து அன்று
ஐவரை வெல்வித்த தேர்ப்பாகன் – -பாகில் பிடிபட்ட பாவை –பராங்குச நாயகியை பிடிக்க பக்குவமான பாகு இவன்
–பிரயத்தனம் செய்யாமல் -பீஷ்மாதி கள் அழிய –
அழல விழித்தான் அச்சோ அச்சோ -பால் வர வில்லை உதைத்தால் சகடாசுரன் மாய -பால் வர உறிஞ்ச பூதனை மாள –

———————————————

கமலா நிரபாய தர்மபத்நீ கருணாத்யா ஸ்வயம் ருத்விஜோ குணாஸ்தே
அவநம் ஸ்ரயதா மஹீந மாத்யம் ஸ ஸ தர்ம ஸ்த்வதநன்ய சேவ நீய -5-

கமலா நிரபாய தர்மபத்நீ –
இயம் சீதா மம சுதா சக தர்ம சரிதவ —சரணாகத வத்சலன் -இதுவே தர்மம் இவனுக்கு –
புருஷகார பூதை -நீரிலே நெருப்பு பூத்தால் போலே –கல்யாண குணங்களை கிளப்பி விட வேண்டுமே -உருவகம்
யஜ்ஜம் -அவன் சரணாகத ரக்ஷணம் -நிரபாய -பிரியாமல் அகலகில்லேன் இறையும்–சக தர்ம சாரிணி
–ஈஸ்வரன் கார்யம் செய்யான் இவள் புருஷகாரம் இல்லாத பொழுது –
மரகத வல்லி தாயார் -கமலா –மின்னை -இரு சுடரை –வெள்ளறை யுள் கல்லறை மேல் –பொன்னை மரகதத்தை
புட் குழி எம் போர் ஏற்றை -தாயார் உடன் சேர்த்து மங்களா சாசனம் –
க ம லாதி -கொடுக்கிறாள் வாங்குகிறாள் -நம்மை அவன் இடம் –
கருணாத்யா ஸ்வயம் ருத்விஜோ குணாஸ்தே
–குணங்கள் ருத்துக்கள் -தயை கருணை போல்வன -நெய் பால் தயிர் ஹோமம் வேண்டுமே
அவநம் ஸ்ரயதா மஹீந மாத்யம்-
சரணாகதர்களை காப்பதே யாகம் -அஹீன யாகம் ஒருவரே செய்யலாம் -16 கல்யாண குணங்கள் –ஆத்யம் உயர்ந்தது –
ஸ ஸ தர்ம ஸ்த்வதநன்ய சேவ நீய-
உன்னை தவிர வேறு யார்க்கும் செய்ய முடியாதே -ராவணன் இடம் -சீதை -கையைப் பிடி சரணாகத வத்சலன்
-சர்வ லோக சரண்யா ராகவாய மஹாத்மனே -விபீஷணன்
குற்றம் பார்க்காமல் இருக்க பிராட்டி -கல்யாண குணங்கள் -இரண்டும் வேண்டுமே
-த்ரிஜடை சொப்பனம் -ராஜசிகள் -லகுதர ராமஸ்ய கோஷ்ட்டி –

——————————————–

க்ருபணா ஸூ திய க்ருபா ஸஹாயம்-சரணம் த்வாம் ரண புங்கவ ப்ரபந்நா
அபவர்க்க நயாதநத்ய பாவா வரிவஸ்யா ரஸ்மேகம் ஆத்ரியந்தே -6-

க்ருபணா ஸூ திய க்ருபா ஸஹாயம்
கிருபையால் -துணை -ஸஹாயம் -லஷ்மி ஸஹாயம் -வறுமையில் தவிப்பவர்கள் -நல்ல புத்தி உள்ளவர்கள்
உபாயாந்தரங்கள் இல்லாதவர்கள் என்றவாறு -முக்கிய அதிகாரம் -சரணாகதிக்கு –
அதிகாரி நியமம் கால தேச நியமம் இல்லை -கேவலம் விஷய நியமமே உண்டு
நோற்ற நோன்பிலேன் -இத்யாதி -/ குளித்து மூன்று அனலை ஓம்பும் –இத்யாதி /சர்வ தர்மான் பரித்யஜ்ய /
மாம் ஏகம் சரணம் வ்ரஜ –விட்டே பற்ற வேண்டும் –
அறிவு ஒன்றும் இல்லாத -கர்மா ஞான பக்தி உபாயமாக இல்லாமல் -கைங்கர்யத்தில் புகும் –
ப்ரஹ்மாஸ்திரம் மஹிமை அறிந்த புத்திமான்கள் என்றபடி -பிரபத்திக்கு ஹேது சோகம் -பலன் சோக நிவ்ருத்தி
கர்மாதீனம் ஒழிந்து கிருபாதீனம் அந்த பேரின்பம் அடைவோமே
தயா ஷாந்தி –ஆச்ரித ஸூ லபன் ஸுந்தர்யம் -ஸஹாயம்
எதுவே என் பணி என்னாது அதுவே ஆட் செய்யுமீடே –
ச ஏகதா பவதி-அங்கு உண்டே -அநந்தம்-அநந்த கைங்கர்யங்களும் செய்யப் பாரித்து இருக்க வேணும்
குண அனுபவ கைங்கர்யங்களே பொழுது போக்காக -உகந்து அருளினை தேசங்களில் இருக்க வேண்டுமே –
-சரணம் த்வாம் ரண புங்கவ ப்ரபந்நா
உம்மையே சரணமாக பற்றி –
அபவர்க்க நயாதநத்ய பாவா
ஸ்ரீ வைகுண்டம் -நடக்கும் ரீதி -அனைத்து கைங்கர்யம் கிடைக்கும் என்று கேள்விப்பட்டு -அநந்ய பாவம் –
வரிவஸ்யா ரஸ்மேகம் ஆத்ரியந்தே
கைங்கர்ய ரசம் -ஆனந்தம் அடைகிறார்கள் -இங்கேயே –
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம் -கடமை உந்த இல்லை –
குணங்களையம் திரு மேனி அழகையும் அனுபவிக்க அனுபவிக்க –
ப்ரீதி உந்த -மேலும் கைங்கர்யம் செய்ய வேண்டுமே —
குழந்தைக்கு தாய் போலே –அனுபவம் –ப்ரீதி -கைங்கர்யம் மூன்றுமே வேண்டும் –
மானஸ காயிக வாசிக கைங்கர்யம் மூன்றும் –ஸுஹார்த்தம் -பரஸ்பர ஹிதைஷிகளாய் இருக்க வேண்டுமே

——————————————–

அவதீர்ய சதுர்விதம் புமர்த்தம் பவதர்த்தே விநியுக்த ஜீவித சன்
லபதே பவத பலாநி ஐந்து நிகிலான் யத்ர நிதர்சனம் ஜடாயு -7-

அவதீர்ய சதுர்விதம் புமர்த்தம்-நான்கையும் விட்டு
பவதர்த்தே-உன் பொருட்டே
விநியுக்த ஜீவித சன் -உயிர் உடல் அனைத்தையும் உனக்கே விட்டவனாய்
லபதே பவத பலாநி ஐந்து நிகிலான்-ஸமஸ்த பலன்களை உன்னிடம் அடைகிறான் -சர்வ தர்மான் பரித்யஜ்ய –
கொள் என்ற பெரும் செல்வம் நெருப்பாக –வையம் தன்னோடு கூடாமல் -மாறனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்யும் பாரினார் –
மோக்ஷம் வேண்டாம் -அச்சுவை பெறினும் வேண்டேன் -பாவோ நான்யத்ர கச்சதி –கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே
-ரங்க தனம் -திருவடி /ஸ்ரீ விபீஷண ஆள்வான் -திருப் பாண் ஆழ்வார் /தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்
எம்மா வீட்டுத் திறமும் செப்பேன் —நின் செம்மா மா பற்பு தலை சேர்த்து ஒல்லை -திருப் பொலிந்த சேவடி
என் சென்னியின் மேல் பொறித்தாய் -இளையவர்க்கு கவித்த மௌலி -அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசு
உன்னை விட்டு மற்றவற்றை வேண்டுபவன் ஒன்றுமே பெற மாட்டானே –
சேஷத்வம் சித்திக்கும் -அவனுக்கும் -கலந்து -ஆவி நலம் கொள் -சேஷத்வம் கொண்டான் -அவனுக்கு சேஷித்வம் ஸ்வரூபம்
நிலை நிற்க–புலன் கொள் மாணாய் நிலம் கொண்டானே -ஜீவனையும் கைங்கர்யமும் நமக்கே தெரியாமல் கொள்வானே-
யத்ர நிதர்சனம் ஜடாயு-சாக்ஷி -கைங்கர்யமே புருஷார்த்தம் என்பதற்கு -ஜடாயு க்ஷேத்ரம் அன்றோ இது -திருப் புட் குழி –
ப்ரீதி உடன் ராவணனை எதிர்த்து சீதை பிராட்டி காத்து -ஆயுஷ்மன் -அந்த நிலையிலும் பல்லாண்டு –
நித்ய யுக்தானாம் யோக க்ஷேமம் வஹாம் யஹம் –கச்ச லோகம் -என்று அருளினான்

—————————————-

சரணாகத ரக்ஷண வ்ரதீ மாம் ந விஹாதும் ரண புங்க வார்ஹஸி த்வம்
விவிதம் புவனே விபீஷனோ வா யதி வா ராவண இத்யுதீ ரிதம் தே -8-

சரணாகத ரக்ஷண வ்ரதீ மாம்-
கருணை -விரதமாக கொண்டாய் –சக்ருதேவ –அபயம் சர்வ பூதேப்யோம் ஏதத் விரதம் மம -பிராணனை விட்டும் -அழிய மாறியும்
தாண்ட காரண்யம் -சீதை -வில்லா பொம்மையா -அழகுக்காக-ரக்ஷணம் தீஷிதம் -என்னையும் அகல கில்லான்
வெட்டிக் கொண்டு போகும் பொழுதும் -நெஞ்சம் அகல்விக்க கில்லான் -என்னை நெகிழக்கிலும் –
ஞானம் சக்தி கருணை தயை இருக்க பாபம் வெல்லுமா – பிடித்தார் பிடித்தாரை பற்றி பெறுவோம்
ந விஹாதும் ரண புங்க வார்ஹஸி த்வம் –
என்னை கை விட தகுதி இல்லையே -என் பாவம் உன் கருணைக்கு விஞ்சாதே
விவிதம் புவனே -லோகமே அறியும் -உமது வாக்கியம் -மித்ர பாவேந–நத்யஜேயம் கதஞ்சன –
தோஷாவானாக இருந்தால் தான் கைக்கு கொள்வேன்
குற்றம் உண்டா பார்க்க வில்லை -நல்லது ஏதாவது உண்டோ பார்க்கிறேன் வித்வான் -வேலை தப்பை கண்டு பிடிக்க
பெருமாள் தோஷம் தேடி கைக் கொள்ள -அன்றோ –
வசிஷ்டர் விஸ்மாமித்ரர் பெற்றது பெருமை இல்லையே –
விபீஷனோ வா யதி வா ராவண இத்யுதீ ரிதம் தே-அவனே -தானே -ஸ்வயம் – வந்து இருந்தால் ஊரே வாழ்ந்து போகும் –
வார்த்தை நினைவு படுத்துகிறார்

பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஓடுகின்றவர்களையும் தேவரீர் மெய்யே சரணாகதர்களாகவே
திரு உள்ளம் பற்றி ரக்ஷணம் பண்ணி அருளுவீர் அன்றோ –
சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை அரக்கனான விட இல்லையே
கிம் புநர் நியாய சித்தம் படி அடியேனையும் திரு உள்ளம் பற்றி அருள வேணும் என்கிறார் ஆயிற்று –

——————————————–

புஜ கேந்திர கருத்மாதித லப்யை த்வதநுஜ்ஞாநுபவ ப்ரவாஹி பேதை
ஸ்வ பதே ரண புங்கவ ஸ்வயம் மே பரிசர்யா விபவை பரிஷ் க்ரியேதா –9-

புஜ கேந்திர கருத்மாதித லப்யை- த்வதநுஜ்ஞாநுபவ ப்ரவாஹி பேதை
ஆஜ்ஜை -கடைமை -ப்ரீதி அனுக்ஜ்ஜா கைங்கர்யம் -விருப்பத்துடன் -பார்த்த பார்வைக்கு –
கருதும் இடம் பொருதும் சக்கரத் தாழ்வான
கண் கொத்திப் பாம்பு –
ஸ்வ பதே ரண புங்கவ ஸ்வயம் மே -மாம் –பரிசர்யா விபவை பரிஷ் க்ரியேதா-
வைத்து அலங்கரித்துக் கொள்ளும் ஸ்வ பதத்தில் சென்றால் குடையாம் –இத்யாதி
ஸ்ரீ வைகுண்டம் அருளி நித்யர் திருவடி திரு அநந்த ஆழ்வான்-பெற்ற கைங்கர்யம் -கண்ணே உன்னைக் காணக் கருதும்
ஓன்று ஒன்றின் செயலை விரும்ப உள்ளது எல்லாம் தான் விரும்ப -பை கொள் பாம்பணையான்
கட்ச்செவி-ஒரே இந்திரியம் இரண்டு வேலை படுத்து கொண்டு உள்ளாய் -சஷூஸ் ஸ்ரவணம் –
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி -வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் –
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே -கிம் கரவாணி -என்ன அடுத்தது நியமனம் –
அணைய–பெரு மக்கள் -விரும்புவார்கள் -அனந்தாழ்வான் -எறும்பு -இன்றும் வகுள வ்ருக்ஷமாக சேவிக்கிறோமே –

பகவத் கைங்கர்யங்கள் -ஆஜ்ஜா கைங்கர்யம் என்றும் அநுஜ்ஜா கைங்கர்யம் என்றும் இரண்டு வகைகள் –
தேவதா அந்தர்யாமியாய் நின்ற இடங்களில் – ஆஜ்ஜா கைங்கர்யம் –
நல்லதோர் அருள் தன்னாலே காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம் -என்று
கேவல ஸ்வ கிருபையால்-அத்யந்த ஸூ லபனாய்க் கொண்டு
அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ -என்று மண்டும்படியான அர்ச்சாவதாரத்தில் நிற்கிற இடம்
அநுஜ்ஜா கைங்கர்யத்துக்கு இலக்கு –

ஸ்வயம் பரிஷ் க்ரியேதா-கதாஹமை காந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி -என்று
ஸ்தோத்ர ரத்னத்தில் ஸத் சம்பிரதாய சாரார்த்தத்தையே இங்கும் அருளிச் செய்கிறார்

—————————————

விமலா சய வேங்கடேச ஜன்மா ரமணீயா ரண புங்கவ ப்ரஸாதாத்
அநாஸூயு பிராத ரேண பாவ்யா பரமார்த்த ஸ்துதி ரன்வஹம் ப்ரபந்நை-10-

விமலா சய வேங்கடேச ஜன்மா ரமணீயா ரண புங்கவ ப்ரஸாதாத்
ஸ்ரீ போரேற்று நாயனார் பிரசாதத்தால் -குற்றம் அற்ற நெஞ்சு-உபாயாந்தர ப்ராப்யாந்தர சம்பந்தம் இல்லாத
அருளிச் செய்த ஜன்மா -பெண் பால் -ஸ்ரீ தேசிகன் பெண் -கல்யாண ராமன் –கன்னிகா தானம் செய்து அருளுகிறார்
அநாஸூயு பிராத ரேண பாவ்யா பரமார்த்த ஸ்துதி ரன்வஹம் ப்ரபந்நை
பிரபன்னர்களால் தினம் அனுசந்தித்து -புருஷார்த்தம் -பொறாமை இல்லாமல் -தாழ்வாக மற்றவரை
நினையாமல் ஆசை யுடன் நித்ய அனுசந்தானம் செய்ய வேண்டும் -சரணாகத வத்சலன் -குண கடல் அன்றோ –
முதல் ஸ்லோகமே பல ஸ்ருதி போல் அமைந்ததால் இங்கே பலன் சொல்லித் தலைக்கட்டிற்று இலர் –

——————————————

இதி பரமார்த்த ஸ்துதி சம்பூர்ணம்

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

—————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: