சிறிய திருமடல் -திவ்யார்த்த தீபிகை சாரம் –

ஸ்ரீ மன் நாத முனிகள் வகுத்து அருளினை அடைவில் மூன்றாவது ஆயிரமான இயற்பாவில் ஒன்பதாவது திவ்ய பிரபந்தம் -சிறிய திருமடல்
திருக் குறும் தாண்டகத்திலே அனுபவித்த அனுபவம் பழைய அபி நிவேசத்தைக் கிளப்பிப் பெரிய ஆர்த்தியை யுண்டாக்கவே
நின்னடியிணை பணிவன் வரும் இடர் அகல மாற்றோ வினையோ என்று ஆர்த்தராய் சரணம் புகுந்தார் திரு எழு கூற்று இருக்கையில்
சமுத்திர ராஜனை சரணம் அடைந்தும் கால்ஷியம் செய்து கிடைக்க -சீறிச் சிவந்த கண்ணினராய் –
சாகரம் சோக்ஷயிஷ்யாமி சாபமானாய ஸுமித்ரே பத்ப்யாம் யந்து ப்லவாங்கமா -போலே
அவன் ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் உகந்து அருளினை தேசங்களையும் அழிக்கப் புகுகிறார் –
மடலூர்வன் -என்று சொல்லி அச்சம் உறுத்தி -மாசறு சோதீ -தோழீ உலகு தோறு அலர் தூற்றி ஆம் கோணைகள் செய்து குதிரியாய் மடலூர்துமே –
யாம் மடம் இன்றி தெருவு தோறு அயல் தையலார் நா மடங்கப் பழி தூற்றி நாடும் இரைக்கவே-
யாம் மடலூர்ந்தும் எம் ஆழி யங்கைப் பிரானுடைத் தூ மடல் தண்ணம் துழாய் மலர் கொண்டு சூடுவோம் -அச்சமூட்டி -பெற்றார்கள் -மடலூர வில்லை
ஆசையை யாராலும் வரம்பு அறுக்க முடியாதே -அரசர் ஆணைக்கு கடப்படுமோ -வேலி யடைத்தால் நிற்குமோ வேட்க்கை
ஞானம் கனிந்த நலம் -விவேக விரஹத்தால் வரும் பிரவ்ருத்தி விசேஷங்கள் எல்லாம் ஆதரித்திக்க தக்கனவே
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் –மடலூர்வதும் இவனது உபாய கிருஷி பலம் –
அவனது முக மலர்த்திக்கு உறுப்பாக பண்ணும் பிரவ்ருத்திகளில் இதுவும் அந்தரகதம்-
இலக்கணப்படி ஒரே பாசுரம் -கலி வெண்பா -ஒரே எதுகை யாக அமைந்தும் ஈற்றடி முச்சீராக முடிந்தும் –
தேசிகன் -40-பாடல்களாகவும் சிறிய திரு மடலையும் -78-பாடல்களாக பெரிய திருமடலையும்
-ராமானுஜ நூற்றந்தாதி சேர்த்து நாலாயிரம் வரவும்
அப்புள்ளார் -ராமானுஜ நூற்றந்தாதி சேர்க்காமல் வர -77 .5 -பாடல்களாக சிறிய திருமடலையும் —
-148 .5 -பாடல்களாகவும் -பிரித்து அருளிச் செய்துள்ளார்கள் –
155–அடிகள் கொண்ட பிரபந்தம் இது-
———————————————————————–

தனியன் -பிள்ளை திரு நறையூர் அரையர் அருளிச் செய்தது –

முள்ளிச் செழு மலரோர் தாரான் முளை மதியம்
கொள்ளிக் கென்னுள்ளம் கொதியாமே –வள்ளல்
திருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி
மருவாளன் தந்தான் மடல் –

விரஹ தாப ஹரமான பிரபந்தம் -என்றவாறு -போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் -மேவு தண் மதியம் வெம் மதியமாலோ —
முளை மதியம் -மல்லிகை கமல் தென்றல் அனைத்துக்கும் உப லக்ஷணம்
இந்த பிரபந்தத்தை ஒரு கால் அனுசந்தித்தவாறே அரை குலைய தலை குலைய ஓடி வந்து முகம் காட்டி
நம் விரஹ தாபம் தவிர்த்து அணைத்து அருள்வான் என்றவாறு
கலியனுக்கு முள்ளிப்பூ மாலை -ஜாதிக்கு ஏற்ற மாலை -இன்றும் திரு நகரியில் முள்ளிச் செழு மலர்த் தார் வடிவமான-ஸ்வர்ண திவ்ய ஆபரணம் சேவிக்கலாம்
-தாமரை என்னும் பொருளதான முளரி என்பதே முள்ளி என மருவி -தாமரை மாலையை அணிந்தவர் என்றும் சொல்வர்
மலரோ தாரான் –மலரோர் தாரான் –மலரான தாரான் -பாட பேதங்கள் –

————————————————–

ஸ்ரீ பூமிப்பிராட்டி உத்தம ஸ்த்ரீகள் லக்ஷணம் -நுனியில் கறுத்த இரண்டு கொங்கைகள் -திருமாலிருஞ்சோலை திருவேங்கடம் –
கடல் தன்னையே வஸ்திரமாக கொண்டு –ஸூ ர்யனைச் சுட்டியாக கொண்டு -மணிகளைக் கொழித்து வரும் நதிகளை ஹாரம் பூண்ட மார்பிலே கொண்டு
நீர் கொண்டு எழுந்த கார் மேகங்களை கூந்தலாகக் கொண்டு ஆவரண ஜலத்தை கட்டும் காவலுமாக கொண்டு இருக்க
இதில் வாழும் மனுஷர்கள் -தர்மம் அர்த்தம் காமம் மூன்றுமே புருஷார்த்தம் என்றாலும் காமமே பிரதானம்-மற்றவை இத்தை பெற்றார் எளிதில் அடைவார் என்றபடி
மோக்ஷம் பரோக்ஷ புருஷார்த்தம் இருப்பதாக சொல்ல மாட்டார்கள் -என்று நீங்கள் அறிய -அத்தை சொல்பவர்கள் விவேகம் அற்ற கூற்றை பார்ப்போம்
ஸூ ர்ய மண்டலத்தை பிளந்து கொண்டு அதனூடு போவதாம்-அந்த ஸூ ர்யன் ஒற்றைச் சக்கர தேரில் இருப்பானாம்
-அத்தேருக்கு ஏழு குதிரைகள் பூட்டி இருக்குமாம் -அக்குதிரைகள் மேக மண்டலத்தில் சஞ்சரிக்குமாம் –
நம்மால் கண் கூசும் படி காணவே ஒண்ணாத அத்தை பிளந்து போவதாக சொல்வது பொருந்துமோ
அப்படிப் போவார்க்கு மீள வைகுந்தம் கிட்டுமாம் -அதிலே ஆராவமுதம் அனுபவிக்கப்படுமாம் –
அப்படியே இருந்தாலும் இருட்டறையில் விளக்குபோலே சகல குணங்களும் விளங்கும் அர்ச்சாவதாரம் இருக்க
-உண்டோ இல்லையோ -சங்கை -உள்ள அத்தை பற்றுவது கையில் உள்ள முயலை விட்டு பறந்து போகும் காக்கை பின் போவது போன்றது அன்றோ
இது வரையிலே தாமான தன்மையில் அருளி மேலே குடக் கூத்தில் ஈடுபட்டு அனுபவிக்கப் பெறாத இடைச்சி பாவத்தில் அருளுகிறார்
முற்றும் நாயகி பாவனை -என்பதே பூர்வர்கள் நிர்வாகம் –
—————————————-

நான் சம்சார வாழ்வில் பெண்கள் போலே தலை முடியை எடுத்துக் கட்டி கச்சு அணிந்து கொண்டு -அரையிலே மேகலையை தரித்து
கண்ணிலே மையிட்டு அலங்கரித்து பந்தடித்து விளையாடிக் கொண்டு இருக்க -தாமரைக்கு கண்ணன் என்ற பேர் கொண்டவன்
அனைவரும் மகிழ பறை அறைந்து கொண்டு இக் கூத்துக்குத் தப்பி பிழைக்க வல்லார் உண்டோ என்று சொல்லிக் கொண்டு
குடக் கூத்தாடா நிற்க -பெண்டிர் என்னையும் அழைக்க போராத காலத்தால் நானும் சடக்கென எழுந்து அங்கே சென்றேன் –
சென்றதும் மேனி நிறம் இழந்தேன் -கை வளைகள் கழன்றன -அறிவு அழிந்தது -ஹித ப்ரியங்கள் கேட்க முடியாமல் ஒழிந்தேன்
சரீரம் ஒழியாமல் பேதைமை மிகுத்து இருக்க என் தாய் ஸ்ரீ பாகவத ஸ்ரீ பாத தூளி இட்டு செங்குறிஞ்சி மாலையை யுடைய
சாஸ்தாவுக்கு அஞ்சலியும் செய்தாலும் மீள வில்லை -பழங்கதை பேசும் பாட்டிமார்கள் குறத்தியை கேட்டு குறி கேட்கலாமே என்ன
ஒரு குறத்தி தானாகவே வர -தைவாவிஷடையாகி-சிறு முறத்தில் நெற்களை எடுத்து குறி பார்த்து சொன்னதாகச் செல்கிறது மேலே –

காரார் வரைக் கொங்கை கண்ணார் கடலுடுக்கை
சீரார் சுடர்ச் சுட்டிச் செங்கலுழிப் பேராற்று -பேரார மார்வில்
பெரு மா மழைக் கூந்தல் -நீரார வேலி நிலமங்கை என்னும்
இப் பாரோர் சொல்லப் பட்ட மூன்றன்றே
அம் மூன்றும் ஆராயில் தானே -அறம் பொருள் இன்பம் என்று –

தான் வை வர்ணியம் அடைந்து வருந்த பூமிப பிராட்டி சந்நிவேசம் இப்படி இருப்பதே –ஆறு விசேஷணங்கள்
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும் என்னும் இவையே முலையா வடிவமைத்த –பெரிய திருமடல்
-நாயகன் விரும்பிப் படுகாடு கிடக்கும் இடம் -முதல் விசேஷணம்
சமுத்ராம்பரா -கடலே வஸ்திரம் -இரண்டாவது விசேஷணம்
நெற்றிச் சுட்டி ஸ்தானத்தில் ஸூ ர்யன் -மூன்றாவது விசேஷணம்
மார்பின் ஸ்தானத்தில் பெரிய ஆறுகளும் -அதில் அணியும் ரத்னமயமான ஆபரணங்ககள் ஸ்தானத்தில்
அதில் கலங்கிய செந்நீர்ப் பெருக்கும்-நான்காவது விசேஷணம்
நீர் கொண்டு எழுந்த காளமேகம் -கூந்தல் -என்றும் ஐந்தாவது -விசேஷணம்
-ஆவரண ஜலம் சூழ்ந்த கட்டுக் காப்பு -ஆறாவது விசேஷணம் -நீர் ஆரம் வேலி -ஆவரணம் –

ஆரார் இவற்றினிடை அதனை எய்துவார் –
சீரார் இரு கலையும் எய்துவர் –
ஆரானும்உண்டு என்பார் எனபது தான் அதுவும் ஒராமை யன்றே –
அது ஒராமை ஆம் ஆறு உரைக்கேன் -கேள் ஆமே
கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழித் தேரார் –
நிறை கதிரோன் -மண்டலத்தைக் கீண்டு புக்கு –
ஆராவமுதம் அங்கு எய்தி -அதில் நின்றும் வாராது ஒழிவது ஓன்று உண்டே -அது நிற்க
-ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே –

ஆரார் இவற்றினிடை -இம்மூன்று புருஷார்த்தங்களுக்குள்
அதனை எய்துவார் -தமக்கு உத்தேசியமான காம புருஷார்த்தைச் சுட்டிக் காண்பிக்கிறார்
சீரார் இரு கலையும் எய்துவர் –காமமே -சாத்தியம் -அறமும் பொருளும் சாதனம் என்றபடி
காமமே பிரதானம் -அதின் கலா மாத்திரமே இவை -ஏக தேசம் என்றபடி -பகவத் விஷய காமமே வேதாந்த சித்தம் –
மேலே நஹி நிந்தா நியாயம் -நீள் விசும்பு அருளும் -இறந்தால் தங்குமூர் அண்டமே கண்டு கொண்மின் –என்பவர் அன்றோ
-அர்ச்சாவதார ப்ராவண்யத்தை சிறப்பித்துச் சொல்வதில் நோக்கு இங்கு இவருக்கு
அன்வாருஹ்ய வாதம் -தமக்கு அபிமதம் இல்லாத பொருளை ஒரு கார்யார்த்தமாக ஏற்றுக் கொண்டு சொல்லுகை —
ஓராமை –ஆராய்ச்சி இல்லாமை / கேளாமே –கேளுங்கோள் என்றபடி –

ஏரார் இள முலையீர் –என் தனக்கு உற்றது காண் –
காரார் குழல் எடுத்துக் கட்டி -கதிர் முலையை -வாரார வீக்கி -மணி மேகலை திருத்தி –
ஆராயில் வேற்கண் –
அஞ்சனத்தின் நீர் அணிந்து –
சீரார் செழும் பந்து -கொண்டு அடியா நின்றேன் நான் –
நீரார் கமலம் போல் செங்கண் மால் -என்று ஒருவன் –
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க –
-சீரார் குடம் இரண்டு -ஏந்தி -செழும் தெருவே –
ஆராரெனச் சொல்லி -ஆடுமது கண்டு
எராரிள முலையார் என்னையரும் எல்லாரும் –
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல் வினையால் –
காரார் மணி நிறமும் கை வளையும் காணேன் நான் –
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் –

எனது அலங்காரம் கண்டு ஈடுபட்டு அவன் மடல் எடுக்க வேண்டி இருக்க நான் அன்றோ மடல் எடுக்க நேர்ந்தது –
ஆராயில் வேற்கண் –அயில் -கூர்மை
சீரார் செழும் பந்து -கொண்டு அடியா நின்றேன் நான் –பிராகிருத பதார்த்தங்களிலே மண்டிப் போது போக்கு கொண்டு இருந்த –
அஜாமேகாம் லோஹித சுக்ல கிருஷ்ணம் -செந்நூல் வெண்ணூல் கருநூல்களாலே கடாபி பட்டு கீழ் விழுவது மேல் எழுவது சுழன்றும் போகும்
அந்நிய பரையாய்க் கிடந்த என்னை வீதியார வருகின்ற விமலன் தன்னை காண வாராய் என்றதும் வல் வினையால் போனேன்
இங்கு வல் வினை என்றது பகவத் பக்தியால் என்றவாறு
சென்ற க்ஷணத்தில் நிறம் இழந்தேன் வளையல்கள் கழலப் பெற்றேன்

அறிவழிந்து –
தீரா வுடம்போடுபேதுறுவேன்கண்டிரங்கி
ஏரார் கிளிக் கிளவி-எம்மனைதான் வந்து என்னை –
சீரார் செழும் புழுதிக் காப்பிட்டு –
செங்குறிஞ்சித் தாரார் நறு மாலைச் சாத்தற்கு
தான் பின்னும் நேராதன ஓன்று நேர்ந்தாள்
அதனாலும் தீராது என் சிந்தை நோய்
தீராது என் பேதுறவு வாராது மாமை
அது கண்டு மற்று ஆங்கே
ஆரானும் மூதறியும் அம்மனைமார் சொல்லுவார்
பாரோர் சொல்லப்படும் கட்டுப் படுத்திரேல்
ஆரானும் மெய்ப்படுவான் என்றார்

சீரார் செழும் புழுதிக் காப்பிட்டு –ஸ்ரீ பாகவத ஸ்ரீ பாத தூளி யைக் கொண்டு ரக்ஷை இட்டு
மாயன் தமர் அடி நீறு கொண்டு அணிய முயலில் மாற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே–தவள பொடி கொண்டு நீர் இட்டுடுமின் தணியுமே
செங்குறிஞ்சித் தாரார் நறு மாலைச் சாத்தற்கு-சாஸ்தா என்னும் தேவதாந்தரத்துக்கு –சாத்திக் கொள்கிறவன் அர்த்தம் இல்லை -சாஸ்தா -என்றவாறு
தான் பின்னும் நேராதன ஓன்று நேர்ந்தாள்-இது காணும் செய்து அறியாத அஞ்சலியையும் செய்து -மறந்தும் புறம் தொழா மாந்தர் –
வகுத்த விஷயத்தில் ஒரு அஞ்சலி பண்ணினால்-அது சாதனத்தில் அந்வயிக்கில் செய்வது என் -என்று இருக்கக் கடவ
தான் திருத் துழாய் பரிமாறாத ஒரு தேவதைக்கு ஒரு அஞ்சலியும் அகப்படப் பண்ணினாள் காணும் –
மூதறியும் அம்மனைமார் சொல்லுவார் –
இந்திரன் படிகள் இருக்கும் படி என் என்று ஒருத்தி ஒருத்தியைக் கேட்க 98–இந்த்ராதிகளை சேவித்தேன் -இந்திரன் படி கேட்க்கிறாய் –
வேணுமாகில் சொல்லுகிறேன் என்றாள் இ றே-அப்படியே பழையராய் நோய்களும் அறிந்து நோய்க்கு நிதானமும் அறிந்து
பரிகாரமும் பண்ணுவித்துப் போரும் மூதறிவாட்டிகள் சொல்லுகிறார்கள் –
பாரோர் சொல்லப்படும் கட்டுப் படுத்திரேல் –கட்டுப் படுத்துதலாவது குறி கேட்பது

அது கேட்டு-காரார் குழல் கொண்டைகட்டுவிச்சி கட்டேறி
சீரார் சுளகில் சில நெல் பிடித்து எறியா
வேரா விதிர் விதிரா மெய் சிலிரா
அங்கு ஆரலங்கல் ஆனமையால் ஆய்ந்து கை மோவா
பேர் ஆயிரம் உடையான் என்றாள்
பேர்த்தேயும் -காரார் திருமேனி காட்டினாள் –
கையதுவும் சீரார் வலம் புரியே என்றாள்
திருத் துழாய்த் தாரார் நறு மாலை கட்டுரைத்தாள் -கட்டுரையா

கட்டேறி--தெய்வ ஆவேசம் கொண்டு –
சுளகு -முறம் -பதரையும் மணியையும் பிரித்து புதரை நீக்கி -மணியே -மணி மாணிக்கமே -மதுசூதா
-நன் மணியாகிய எம்பெருமானை பிரகாசிப்பதால் சீரார் சுளகு –
கடல் வண்ணர் இது செய்தார் என்று நேராக சொல்லக் கூடிய விஷயம் இல்லையே –
மொய்த்துக் கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்ற என்றபடி -வேர்வை அடைந்தாள் -உடல் நடுங்கினாள் மயிர்க்கூச்சு எறிந்தாள்
பேர் ஆயிரம் உடையான் என்றாள்–ஆயிரம் திருநாமங்களை யுடைய எம்பெருமானே இந்நோய் செய்தவன் என்று எண்ணினாள்
பேர்த்தேயும் -காரார் திருமேனி காட்டினாள் -அதற்கு மேலே திரு மேனியைப் படி எடுத்துக் காட்டினாள்
கையதுவும் சீரார் வலம் புரியே என்றாள்–திருத் துழாய்த் தாரார் நறு மாலை கட்டுரைத்தாள் –விரை குழவு நறும் துளவம்
மெய்ந்நின்று கமழும்-அதுக்கும் மேலே அபிநயித்துக் காட்டினாள் –
கையதுவும் சீரார் வலம் புரியே என்றாள்-திருச் சக்கரத்துக்கும் உப லக்ஷணம் -தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி
மேலும் தாளிணை மேலும் புனைந்த-தண்ணம் துழாய் யுடை எம்மான் -என்று அபிநயித்துக் காட்டினாள்
கட்டுரையா -ஆக இவ்வளவும் அங்க சேஷ்டிதங்களாலே காட்டிய பின்பு வாய் விட்டுச் சொன்னதாவது
ஸூஸ் பஷ்டமாக நீங்கள் தெரிந்து கொள்ளுமாறு மேலே சொல்லாத தொடங்குகிறாள் –
கீழே என்றாள் கட்டுரைத்தாள் – என்றது ஸ்வகதமாக சொன்னவை –
எறியா-வேரா -விதிர் விதிரா-சிலிரா-மோவா –வினை எச்சங்கள்
எறிந்து-வேர்த்து -விதிர் விதிர்த்து -சிலிர்த்து -மோந்து என்றபடி
கட்டுரையா -இதுவும் வினை எச்சம் -உரையா -உரைத்து என்றபடி –

நும் மகளை நோய் செய்தான் ஆரானும் அல்லன்
அறிந்தேன் அவனை நான்
கூரார் வேல் கண்ணீர் உமக்கு அறியக் கூறுகேனோ –
ஆரால் இவ்வையம் அடியளப்புண்டது காண் –
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது –
மற்று ஆராலே கல்மாரி காத்தது தான்
ஆழி நீர் ஆரால் கடைந்திடப் பட்டது -அவன் காண்மின்
ஊராநிரை மேய்த்து உலகம் எல்லாம் உண்டும் உமிழ்ந்தும்
ஆராத தன்மையனாய்-ஆங்கு ஒரு நாள் ஆய்ப்பாடி
சீரார் கலையல்குல் சீரடி செந்துவர் வாய்
வாரார் வனமுலையாள் மத்தாரப் பற்றிக் கொண்டு
ஏரார் இடை நோவ எத்தனையோர் போதுமாய்
சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேரார் நுதல் மடவாள் வேரோர் கலத்திட்டு
நாரார் உறி ஏற்றி நன்கமைய வைத்ததனை
போரார் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய்யுறக்கம்
ஒராதவன் போல் உறங்கிஅறிவுற்று
தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகிருந்த
மோரார் குடமுருட்டிமுன் கிடந்த தானத்தே
ஒராதவன் போல் கிடந்தானை கண்டவளும்
வராத் தான் வைத்தது காணாள் வயிறு அடித்து
இங்கு ஆரார் புகுதுவார் ஐயர் இவர் அல்லால்
நீராம் இது செய்தீ தென்று ஓர் நெடும் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே
தீரா வெகுளியாய் சிக்கென ஆர்த்தடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் –

1-எம்பெருமான் உலகு அளந்தது / 2-இலங்கையை பாழ் படுத்தி -/ 3-கோவர்த்தன மலை எடுத்து கல் மழை காத்து
/ 4-கடல் கடைந்து /5-பசு மேய்த்து / 6-உலகம் உண்டு உமிழ்ந்து –
-இவ்வளவும் பரத்வம் காட்டி -ஆராத தன்மையனாய் -ரஷ்ய வர்க்கத்தை எல்லாம் ரஷித்தாலும்-
தான் ஒன்றும் செய்யா தானாய் இருக்கிற படி
7-வெண்ணெய் களவு கண்டு கட்டுப்பட்டு /8- காளியன் நிரசனம்/ 9-சூர்ப்பணகை அங்க பங்கம் /
10-கரன் இராவணன் நிரசனம்  / 11- இரணியன் நிரசனம் / 12-கஜேந்திர ஆழ்வான் ரக்ஷணம் —

சீரார் கலையல்குல் சீரடி செந்துவர் வாய்-வாரார் வனமுலையாள் மத்தாரப் பற்றிக் கொண்டு-யசோதை பிராட்டி பெயரைச் சொல்லாமல்
விசேஷணங்களை மட்டும் இட்டு அருளிச் செய்தது -ஞாலத்துப் புத்ரனைப் பெற்றார் நங்கை மீர் நானே மாற்று ஆரும் இல்லை -என்றும்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவரைப் பெற்ற வயிறு உடையாள் -என்று விலக்ஷணம் ஆனவள் என்பதால் –
தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி-ஆழ வமிக்கு முகக்கினும் ஆழ் கடல் நீர் நாழி முகவாது நானாழி -என்னும் அறிவில்லா சிறு பிள்ளைத் தனம் –
கோயில் சாந்தைக் குடத்தின் விளிம்பில் கண்டாள் கொலோ -என்று ரஸோக்தியாக பட்டர் நஞ்சீயர் இடம் அருளிச் செய்தாராம் –
நெடும் கயிற்றால் -விபரீத லக்ஷணை-பெரு மேன்மை -திரு மேனி தீண்டப் பெற்றதால் -நீண்ட கயிற்றை துண்டு துண்டாக வெட்டி விடுவானாம்
ஊரார்கள் எல்லாரும் காண-பரிபவத்தை காண -என்பது அல்ல -அவதார பிரயோஜனம் அறிந்து -யசோதை பிராட்டிக்கு
இது தெரியும் போலும் -கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் அன்றோ
தீரா வெகுளியாய்-இது வெறும் அபிநயம் –அஞ்ச யுரைப்பாள் யசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் -கோபம் மெய்யே உண்டாக மாட்டாது இ றே
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் -உரலோடு கட்டுண்டதுக்கும் தாம்பால் அடித்ததற்கு இல்லை -வெண்ணெயையும் பெண்களையும்
களவு காண ஒட்டாமல் போயிற்றே என்றே ஆரா வயிற்று -வெண்ணெய் குழந்தைக்கு -ஜீரணம் ஆகாது என்றுமாம் –

அன்றியும்
நீரார் நெடும் கயத்தை சென்று அலைக்க நின்று உரப்பி
ஓராயிரம் பண வெங்கோ வியல் நாகத்தை
வாராய் எனக்கென்று மற்றதன் மத்தகத்து
சீரார் திருவடியால் பாய்ந்தான்

அலைக்க நின்று உரப்பி-நாலு பக்கங்களிலும் கரைக்கு மேலே நீர் வழியும் படி கலக்கி -என்றபடி
ஓராயிரம் பண வெங்கோ வியல் நாகத்தை-காளியின் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன் நீண் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து -பெரியாழ்வார்
பயங்கரத்தின் மிகுதியால் இங்கு ஆயிரம் -அதிசய யுக்தி -கல்ப பேதத்தாலும் என்றுமாம் –
வெங்கோ வியல் –கொடுமையே ஸ்வபாவமாகக் கொண்ட பிரபு யமன் -என்றவாறு
மற்றதன் மத்தகத்து–மற்று அதன் -மஸ்தகம் –
சீரார் திருவடியால் பாய்ந்தான்-மேலைத்த தலை மறையோர்களுக்கு சென்னிக்கு அணியாக வேண்டிய-திருவடி இவனுக்கு வாய்த்ததே -வயிறு எரிந்து அருளிச் செய்கிறார்

தன் சீதைக்கு நேராவன் என்று ஓர் நிசாசரி தான்வந்தாளை
கூரார்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெந்நரகம்
சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர்வாய்
வாரார் வனமுலையாள் வைதேவி காரணமா
ஏரார் தடம் தோளி ராவணனை ஈரைந்து
சீரார் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால்-

சூர்பணாகாவைச் செவியோடு மூக்கு அவளார்க்க அரிந்தானைப் பாடிப் பற அயோத்தியைக்கு அரசனைப் பாடிப் பற -பெரியாழ்வார்
மலை போல் உருவ தோர் இராக்கத்தி மூக்கு அரிந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவன் -கலியன்
ராமஸ்ய தாஷினோ பாஹூ —
அவட்கு மூத்தோனை–கரனை-என்றவாறு -ஸூ மாலி அரக்கன் உடைய மகள் –இராவணன் தாய் கேகேசி யுடைய தங்கை
-இராவணன் தந்தை விஸ்வரன் முனியை கொழுநனாக அடைந்தவள் –இராவணனுக்கு சிறிய தாய் கும்பீ நசி யுடைய குமாரன்
– இராவணனுக்கு தம்பி கரன் என்றவாறு –
இராவணன் கும்ப கர்ணனுக்கு பின் விபீஷணனுக்கு முன் பிறந்தவள் சூர்ப்பணகை-ஜனஸ்தான அரக்கர் தலைவன் கரன் –
கரன் அறுபது லக்ஷம் படை வீரர்கள் உடனும் -சேனைத் தலைவர் பதினால்வரோடும்-தூஷணன் த்ரி சிரஸ் -முக்கிய சேனாதிபதிகளோடும் புறப்பட்டு
அகம்பனன்-அரிவாளால் சொல்லி தடுத்தும் கெடுக்காமல் -வர பெருமாள் இளைய பெருமாளை சீதா பிராட்டிக்கு காவல் வைத்து தானே நிரசித்த வரலாறு
வெந்நரகம்-சேரா வகையே சிலை குனித்தான் -கண்ட காட்சியில் எல்லா நன்றாக வேதனையும் இங்கேயே அனுபவித்தான்
-குடல் மறுக்கும் படி இங்கேயே பட்டானே -நஞ்சீயர் இத்தை பட்டர் அருளிச் செய்வார் என்று கேட்டு விஸ்மயப் பட்டார் என்பார் -முந்திய ஆஸ்ரமத்தில்
சிலை குனித்தான்–கொன்றான் என்ற படி -மங்கள வழக்கு

போரார் நெடு வேலோன் பொன் பெயரோன் ஆகத்தை
கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு குடல் மாலை
சீரார் திரு மார்வின் மேற்கட்டிசெங்குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆரா எழுந்தான் அரி யுருவாய் அன்றியும்
பேர் வாமனாகிய காலத்து மூவடி மண்
தாராய் எனக்கு என்று வேண்டிச் சலத்தினால்
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை-

பேர் வாமனன் ஆகிய காலத்து -வெண்டளை பிறழும் –வாமனாகிய -என்பதே சரியான பாடம் –
சீரால் பிறந்து சிறப்பால் வளராது பேர் வாமனாகாக் கால் பேராளா-பெரிய திருவந்தாதி பாசுரம் போலெ
பேர் வாமன் -வாமனர்களுக்குள் பெருமை பெற்றவன் -மிகச் சிறிய வாமனன் என்றதாயிற்று
சலத்தினால் -கிரித்திரிமத்தினால்-கபடத்தால் என்றபடி –

ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
காரார் வரை நட்டு நாகம் கயிறாக
பேராமல் தாங்கிக் கடைந்தான் திருத் துழாய்
தாரார்ந்த மார்வன்

கடல் கடைந்த போது தோளும் தோள் மாலையாக இருக்கும் இருப்பில் ஆழங்கால் பட்டு -தேவர்கள் -திவ்ய அலங்காரத்தில் கண் வைக்காமல் –
கவிழ்ந்து உப்புச் சாறு வருவது எப்போதோ என்று கவிழ்ந்து பார்த்து இருந்தார்கள் –

தடமால் வரை போலும்
போரானை பொய்கை வாய் கோட்பாட்டு நின்று
நீரார் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடும் கையால்
நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய்
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு
தீராத சீற்றத்தாலே சென்று இரண்டு கூறாக
ஈராஅதனை இடர் கடிந்தான் எம்பெருமான்–

இந்த்ரத்யும்னன் -அரசன் -அகஸ்தியர் சாபத்தால் -கஜேந்திரன் –ஹூ ஹூ கந்தர்வன் -தேவலன் முனி சாபத்தால் முதலை –
போரானை -யுத்த உன்முகனாய் திரிகிறான் அல்லன்-செருக்கால் மலைகளோடு பொருது திரிகிற படி
நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய்
வாராய் –பதக முதலை வாய்ப்பட்ட களிறு கதறி கை கூப்பி என் கண்ணா கண்ணா –இதற்கு மா முனிகள் வியாக்யானம்
நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய்
வாராய் -என்று கூப்பிட்டானாக அருளிச் செய்தார் திரு மங்கை ஆழ்வார் -இவர் கண்ணா கண்ணா என்று கூப்பிட்டானாக அருளிச் செய்கிறார்
மூலேதி முக்தபத மாலபதி த்வி பேந்த்ரே-என்று கொண்டு மூலமே என்று கூப்பிட்டானாக பவ்ராணிகர் சொன்னார்கள்
இவை தன்னில் சேரும்படி என் என்னில் மூலம் என்கிற இடத்தில் அசாதாரண விக்ரஹ விசிஷ்டன் ஆகிற ஆகாரத்தை நினைத்து கூப்பிட்டானாகையாலே
அதற்கு பர்யாய சப்தங்களை இட்டு ஆழ்வார்கள் அருளிச் செய்தார்கள் ஆகையால் எல்லாம் தன்னில் சேரக் குறை இல்லை –
என் ஆர் இடரை நீக்காய்-நாஹம் களே பரஸ்ய யாஸ்ய த்ராணார்த்தம் மது ஸூ தனா-கரஸ்த கமலான் ஏவ பாதயோர் அர்ப்பித்தும் ஹரே –
தாமரைப் பூக்களை திருவடிகளில் ஏற்றுக் கொண்டே இடரைக் களைந்தான் என்றபடி –

பேர் ஆயிரம் உடையான் பேய்ப்பெண்டிர் நும் மகளை
தீரா நோய் செய்தான் என வுரைத்தாள்-

சர்வேஸ்வரன் அடியாக வந்த நோய் அன்றோ -நித்தியமாக செல்ல வேண்டும் என்பதால் தீரா நோய் என்கிறாள் –
கட்டுவிச்சி பேச்சு முற்றிற்று -மேல் பரகால நாயகியின் நிர்வேதம் –

சிக்கென மற்று
ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்
போரார் வேல் கண்ணீர் அவனாகில் பூம் துழாய் தாராது ஒழியுமே மற்று
ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள்-

தாய்மார் இத்தை திடமாக தெரிந்து கொண்டு -புவனி எல்லாம் நீர் ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே
தாஸ பூதையான இவளுக்கு -தம் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் -இனி என்ன கவலை என்று
விசாரம் அற்று -போரார் வேல் கண்ணீர்-என்று அசல் பெண்டிர்களைப் பார்த்து சம்போதிக்கிறாள் –

நான் அவனை
காரார் திருமேனி கண்டதுவே காரணமா
பேராபிதற்றா திரி தருவான் பின்னையும்
ஈராப் புகுதலும் இவ்வுடலைதண் வாடை
சோரா மறுக்கும் வகை யறியேன்சூழ் குழலார்
ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை
வாராமல் காப்பதற்குவாளா விருந்து ஒழிந்தேன்

ஆனால் நான் கவலை தீர பெற்றிலேன் -சகல தாபங்களையும் தீர்க்கும் அவன் திரு மேனியைக் கண்டா அன்றுமுதலாக அன்றோ
நிலை குலைந்து பிதற்றி -மேலே வாடைக்கு காற்றும் சித்ரவதை பண்ணா நின்றது –அன்றே மடலூராமல்-லோக அபவாதத்துக்கு அஞ்சி இது வரை வீணாக காலம் கழித்தேனே-

வாராய் மட நெஞ்சே வந்து மணி வண்ணன்
சீரார் திருத் துழாய் மாலை நமக்கு அருளி
தாரான் -தரும் -என்று இரண்டத்தில் ஒன்ற்றதனை
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்
ஆராயுமேலும் பணி கேட்டுஅது அன்று எனிலும்
போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு
காரார் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும்
வாராதே என்னை மறந்தது வல்வினையேன்
ஊரார் உகப்பதே யாயினேன்-

சக்கரைப் பந்தலில் தேன் மழை பொழிந்தது என்று மகிழ்ந்து போன என் நெஞ்சம் -கடல் புக்கது திரும்பாது என்று-அறியாமல் கடல் வண்ணனுக்கு தூது அனுப்பி தனியேன் ஆனேனே -அந்த கடல் வண்ணனே சிந்தா விஷயம் ஆனான் என்றபடி –
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்-சத்ருக்களுக்கு தெரியாமல் —ஒன்றாதார் -மனம் பொருந்தாதார்
-அவன் வாராமல் இருக்க அவனை தூஷிப்பார்களே -அவனது தயா வாத்சல்யாதி குணங்களை அழிப்பார்களே என்று
ஆராயுமேலும் பணி கேட்டுஅது அன்று எனிலும்–உன்னைக் கண்ட போதே அவள் என் பட்டாள்-அவள் உளாளோ -அவ்வாஸ்ரயம் நமக்கு இன்னம் கிடைக்குமோ –
என்று திரு உள்ளம் ஆனானேயாகிலும் -அன்றிக்கே துஷ்யந்தனைப் போலே-அங்கணம் ஒப்பாள் ஒருத்தியை அறிகிறிலோம்-என்றான் ஆகிலும்
ஊரார் உகப்பதே யாயினேன்–சாதனம் இல்லாமல் பலம் கிட்டாது என்பர் ஊரார் -சாதன அனுஷ்டானம் கால் கட்டு
-அவனாலே தான் பேறு-என்று சொல்லிக் கொண்டு இருந்த நானே
மடலூரும் படி நேர்ந்த படியால் எனது அத்யவசாயம் குலைந்து ஊரார் கொள்கையே பலித்ததே
-மடலூர்வேன் என்ற போதே சித்த உபாய நிஷ்டை குலைந்ததாம் இ றே-

மற்று எனக்கு இங்கு
ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல்
நீராய் யுருகும் என்னாவிநெடும் கண்கள்
ஊரார் உறங்கிலும் தான் உறங்கா உத்தமன்
பேராயினவே பிதற்றுவன் பின்னையும்
காரார் கடல் போலும் காமத்தர் ஆயினார்
ஆரே பொல்லாமை அறிவார் –

உசாவ யாருமே இல்லையே -உண்டியே உடையே உகந்தோடும் இம்மண்டலத்துக்கும் -உண்ணும் சோறு –எல்லாம் கண்ணன் -என்று
இருக்கும் எனக்கும் என்ன சேர்த்தி யுண்டு -நெஞ்சமும் இழந்த பின்பு உசாத் துணை யாவார் உண்டோ
ஆத்மவஸ்துவும் சிதிலமாகா நிற்க -உறக்கமும் இல்லாமல் -முகம் காட்டி உதாவாதவனை மறக்காமல் வாய் மட்டும் அவன் திரு நாமங்களை வெருவா நிற்கிறதே
ஸ்வரூப ஹானியை நினைந்து ஆறி இருக்கும் ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் போலே ஆறி இருக்க வல்லேன் அல்லேன் –
காரார்ந்த திருமேனியை காண ஆசை கரை புரண்டு இருக்க எவ்வாறு ஆறி இருப்பேன் –

அது நிற்க
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர்
வாரார் வனமுலை வாசவத்தை என்று
ஆரானும் சொல்லப் படுவாள் அவளும்பெரும் தெருவே
தாரார் தடம் தோள் தளைக் காலன் பின் போனாள்
ஊரார் இகழ்ந்திடப் பட்டாளே மற்று எனக்கு இங்கு
ஆரானும் கற்பிப்பார் நாயகரே –

ஸூ பந்து மஹா கவியால் புகழப் பட்ட வாஸவதத்தை-அர்வாசீனம் என்கிற நூலில் கற்பிக்கப் பட்ட கதா நாயகி –
இவள் சாபத்தால் கல்லாகி தன காதலன் கந்தர்ப்ப கேதுவின் கர ஸ்பர்சத்தால் சாபம் நீங்கி பெண் உறுப்பு பெற்று கலந்து மகிழ்ந்தாள் –
இவளை அல்ல பரகால நாயகி காட்டுகிறாள் -இவள் தோழிமார் பெரும் திரளை கடுக விட்டு விலங்கிட்டு இருக்கும் வத்ஸ ராஜன் பின்னே போனாள்
திரௌபதி ஸ்வயம் வரத்தில் வந்த அரசர்களில் -வத்ஸாராஜச மதிமான் -இவனையே -தாரார் தடம் தோள் தளைக் காலன்-என்கிறாள்
அரும் பதத்தில் -வாசவத்தையான ராஜ புத்ரி வத்ஸாராஜன் என்பான் உடன் சங்கதையாக -அவனை ராஜா சிறையில் வைக்க
அவனைக் கூட்டிக் கொண்டு அவன் பின்னே போனாள் –
ஆரானும் கற்பிப்பார் நாயகரே -எனக்கு எதிர்த்தட்டாக வார்த்தை சொல்லி என்னை சிஷிப்பார் எனக்கு நியாமகர் அல்லர்
மேலே தன் உறுதியை வெளிப்படையாக அருளிச் செய்கிறாள் –

நான் அவனை-
காரார் திருமேனி காணும் அளவும் போய்
சீரார் திருவேங்கடமே பேரகமே
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெக்காவே
பேராலி தண் கால் நறையூர் திருப் புலியூர்
ஆராமம் சூழ்ந்த வரங்கம் கண மங்கை
காரார் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்
சீரார் கணபுரம் சேறை திருவழுந்தூர்
காரார் குடந்தை கடிகை கடல் மலை
ஏரார் பொழில் சூழ் இட வெந்தை நீர் மலை
சீராரும் மால் இரும் சோலை திரு மோகூர்
பாரோர் புகழும் வதரி வட மதுரை
ஊராய வெல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓரானை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள் விடுத்த
சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்த்
தாரானை தாமரை போல் கண்ணானை எண்ணரும் சீர்ப்
பேராயிரமும் பிதற்றி பெரும் தெருவே
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வாரார் பூம் பெண்ணை மடல்-

காரார்ந்த திரு மேனியைக் கண்டு களிக்கப் பெரும் அளவும் அவன் குணங்கள் கொண்டாடி இருக்கும் தேசம் எங்கும் நுழைந்து
விரஹம் தின்ற என் வடிவைக் காட்டி அவன் குணங்களை அளித்து வழி எல்லா வழி யாகிலும் அவனைப் பெறக் கடவேன் என்கிறாள்
பேரா மருது இறுத்தான்-அஸூராவேசத்தாலே ஸ்திரமாக நின்ற யாமளார்ஜுனங்களை -தான் பேருந்து -தளர் நடை இட்டு மருந்துகளை இறுத்தானே
ஒருங்கொத்த இணை மருதம் உன்னிய வந்தவரை –பொய்ம்மாய மருதான வசுரரை
எண்ணரும் சீர்ப்-பேராயிரமும் பிதற்றி –குண கதனம் பண்ணுகைக்கு சகஸ்ர நாமம் போலே குண ஹானிக்கும் ஒரு சகஸ்ர நாமம் பண்ணுகிறேன்
நாட்டாரும் நகரத்தாரும் நன்கு அறிய நெடு வீதி ஏறிப் புறப்பட்டு -அவர்கள் இகழ்ந்தார்களே யாகிலும் மடலூர்வேன் –
வாரார் பூம் பெண்ணை மடல்–பெண்ணை பனை மரத்துக்கு பெயர் -என் கையிலே சிறந்த ப்ரஹ்மாஸ்திரம் இருக்கிறபடி பாருங்கோள்-
இனி எனக்கு என்ன குறை -என் கார்யம் கை புகுந்ததேயாம் – என்று பரிக்ரஹித்த சாதனத்தின் உறைப்பைக் காட்டின படி –

—————————————————-

திரு கம்ப நாட்டு ஆழ்வார் அருளிச் செய்த தனிப் பாடல்-

ஊராது ஒழியேன் உலகு அறிய ஒண் நுதலீர்
சீரார் முலைத் தடங்கள் சேரளவும் –பாரெல்லாம்
அன்று ஓங்கி நின்று அளந்தான் நின்ற திரு நறையூர்
மன்று ஓங்க வஊர்வன் மடல்-

——————————————————–

மேல் பெரிய திருமடலில் மடலூரும் திருப்பதியை சொல்லும் இடத்து இறுதியாக நறையூரை அருளிச் செய்து
இரும் பொழில் சூழ் மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல் -என்று தொடங்கி
திரு நறையூரில் தளர்ச்சி உண்டானதாக அருளிச் செய்த படியாலும்
பொன்னுலகில் வானவரும் பூ மகளும் போற்றி செய்யும் நல் நுதலீர் நம்பி நறையூரார் மன்னுலகில்
என்னிலைமை கண்டும் இரங்காரே யாமாகில் மன்னு மடலூர்வன் வந்து -பெரிய திருமடல் தனியன் -படியாலும்
திரு நறையூர் பிரதான லஷ்ய ஸ்தலம் என்றதாயிற்று

—————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: