திரு விருத்தம் -பாசுரங்கள்–91-100–திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை வையமுற்றும்
ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை மாவலி மாட்டு
இருங்குறளாகி இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற
பெரும்கிறி யானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே – – -91 – –

ஸுலப்ய பரத்வ பசும் கூட்டம் அன்றோ அவன் –
சுருந்குறி-கள்ளக் கயிற்றை உருவி விரல் நுழைக்க ஒண்ணாத படி நெருக்கப் பட்ட உறி-
இருங்குறளாகி-மிகக் குறுகிய வடிவம் / பெரிய வடிவத்தை உட்க்கொண்ட சிறிய வடிவம் / மஹிமை யுடைய வடிவம் / கரிய குறள் வடிவம்
பெரும்கிறி யானை–வடிவு அழகு பேச்சின் இனிமையாலே மாயையை மயக்கி -சுக்கிராதிகள் விலக்கினாலும்-உடன் படாதே மூவடி நிலம் பெற்ற சமர்த்தன்
சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை -உடம்பாகிய சிக்கத்திலே கட்டுப் பட்டுள்ள வெண்ணெயின்
தன்மையதான முமுஷுவாகிய ஆத்மாவை யாவரும் அறியாத படி விரும்பிக் கைக்கு கொண்டு அனுபவிப்பவன் –
மா வலி மாட்டு -மாடு -பொன் பக்கம் செல்வம் -நிகண்டு –

—————————————————————–

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய்
நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர்
நாள் நிலந்தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று
காண லுமாங்கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே – – 92- –

தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே -என்று இல்லாமல்
பிரயோஜனாந்தர பரர்கள் உன்னை சரண் அடைந்து அவர்கள் கார்யம் செய்ய இரப்பதே
அனன்யா பிரயோஜனரான எங்களுக்கு ஒரு பிரயாசமும் படாமல் சேவை சாதிப்பதை உபேக்ஷித்து அவர்களுக்காக உடம்பு நோவக் கார்யம் செய்வதே-
நின்னை விண்ணோர்-காணலுமாங்கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே-நாள் நிலந்தோய்ந்து தொழுவர் -என்று
தான் நாயகன் மூர்த்தியின் பல கூறுகளையும் ஆசைப் பட்டமையை தெரிவிக்கிறார் –
நிலம் தோய்ந்து தாள் தொழுவர் -பூமியில் கால் பட அறுவறுப்பவர்கள் தங்கள் காரியத்துக்காக சாஷ்டாங்க
நமஸ்காராதிகளை ஷீராப்தி நாதனுக்கு செய்வார்கள்
உன்னை நோவு படுத்தி கார்யம் கொண்டு போவார்கள் -அன்றி -இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதுமே என்றும்
-சென்று அங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி -என்றும் வாயில் தானும் சொல்லுவார்களோ அப்பாவிகள் –
அமிர்தம் கிளர்வதையே கீழ் நோக்கிப் பார்க்கும் அப்பாவிகள் -மந்த்ரம் நாட்டி அன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
சுந்தரத் தோளுடையான்-தோளும் தோள் மாலையுமான அழகை பார்த்திலரே
காண லுமாங்கொல் என்றே -என்று அல்ல என்றபடி –

————————————————————————-

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் வன்மைப்படியே – – -93 –

உலகில் அநேகர் -வைகலும் வைகல் வரக் கண்டும் அஃது உணரார் -நாலடியார் —
ஆழ்வார்கள் தான் பொழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுவார்கள்
இங்கனம் வாள்களாகி நாள்கள் செல்லுகின்றனவே -பொழுதே பல பகலும் போகின்றனவே
-ஊமனார் கண்ட கனவிலும் பழுதா ஒழிகின்றனவே நாள்கள் -என்று
கவலைப் படுவார் யாரும் இலை -ஒரு க்ஷணம் பொழுதாகிலும் பகவத் விஷயத்தில் செலுத்துவார் இல்லையே
பிறர் இழவுக்கு பரிகிறார் –
காலை –சத்வ குண பிரதானம் –
நன் ஞானத் துறை படிந்தாடிக் -சிறந்த ஆத்ம ஞானத்துக்கு இறங்கு துறையான ஆச்சார்யரை வணங்கி -அவர் உபதேசங்களில் ஆழ்ந்து
-பெருமானை இலக்காகக் கொண்ட ஞானமே நல் ஞானம் –
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
கண் போது செய்து-விஷயாந்தரங்களிலே அறிவு செல்லாத படி உள்ளடக்கி
எம்பெருமான் பக்கலிலே-ஞானம் என்னும் உட் கண் மலர்ந்து –
போது செய்து என்று மொட்டிகைக்கும் பேர் -அலருகைக்கும் பேர் -புறம்புள்ள விஷயங்களில் கண் செம்பளித்து என்னுதல்-
பகவத் விஷயத்திலே விழித்து என்னுதல் –
மாலை நல் நாவில் கொள்ளார் -தம் பக்கல் வ்யாமோஹம் கொண்டவனை நாவால் ஸ்துதியாதார் –
நல் நா -எம்பெருமானை ஸ்துதிப்பதற்கு என்றே அமைந்த நா -நாராயணா என்னா நா என்ன நாவே –
நினையார் வன்மைப்படியே-அவன் மைப்படி நினையார் -அவனது கரிய திருமேனியை தியானிப்பதும் செய்யார் -லௌகிகரைப் பழித்த படி
பெயரினையே புந்த்தியால் சிந்தியாது ஓதி யுரு என்னும் அந்தியால் ஆம் பலம் எங்கனம் என்பதால்
மாலை நல் நாவில் கொள்ளார் என்று மாத்திரம் சொல்லாமல் மேலே நினையார் வன்மைப்படியே – என்கிறார்
முந்தின வாக்யத்தால் இருளின் கொடுமையையும் -மேலே அது அவன் திருமேனிக்கு ஸ்மகரமாய் வருத்துகிற படியை
தோழிமார் சிந்தியாமையும் -அந்த நோய் தணிக்கும் உபாயத்தையும் செய்யாமையும் பழித்தவாறு –

———————————————————————

மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் வைதிகரே
மெய்ப்படியால் உன் திருவடிச் சூடும் தகைமையினார்
எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்
அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே — – 94- – –

விலக்ஷணமான அதிகாரிகள் உன்னை உள்ளபடி அறிந்து பேச -நான் அவர்கள் வழி தொடர்ந்து செல்வேன் –
கண் தெரிந்த பசுக்கள் ஊர் புகுந்து சேர -அந்த மகிழ்ச்சிக்கு ஈடாக கனைத்தலும் செய்ய -கண் இல்லாத குருட்டுப் பசுவும் கனைப்பது போலே
வேத வைதிக புருஷர்கள் சொன்ன பாசுரங்களைக் கேட்டு நானும் சொன்னேன்-சொல்லுவதற்கு அடியான
சம்பந்தம் -பக்தி பாரவஸ்யம் உள்ள நான் ஞானம் சக்தியால் பேசினேன் அல்லேன்-
இந்த பாசுரம் ஒட்டியே ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ குண ரத்ன கோசத்தில்-இத்யுக்தி கைதவச தேன விடம்பயாமிதா நம்ப
-ஸத்ய வஸஸ புருஷான் புராணான்-யத்வா நமே புஜபலம் தவ பாத பத்ம லாபே-ஸ்லோகம் அருளிச் செய்தார் –
தலைவியைக் கண்ட பங்கன் மீண்டு தலைவனை அடுத்து வியந்து கூறல்
மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும்-என்று அவளுக்கு ஏற்ற வடிவு அழகு உடையாய் நீ என்றும் –
வைதிகரே-மெய்ப்படியால் உன் திருவடிச் சூடும் தகைமையினார்-அவளைக் கண்டு ஆறி இருந்த நீ வைதிகரால் கொண்டாடப் படுபவன் என்றும் –
எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்-அப்படி யானும் சொன்னேன் -என்று அவ் வடிவின் சிறப்பையும் உன் திண்மையும் உணராது நாட்டார் போலே
முன்பு உன்னை பழித்தேன்-குருட்டுப் பசு கனைப்பது போலே என்றும்
அடியேன் -அந்த பிழையை ஷாமிப்பதற்கு ஏற்ற நிலை யுடையேன் நான் என்றும்
மற்று யாது என்பனே –அவள் வடிவு அழகைக் கண்டும் கலக்கம் அடையாது திண்மையாய் இருக்கும் இத்தை
பாராட்டிக் கூறும் விதத்தால் அன்றி எங்கனம் வர்ணிப்பேன் -என்றவாறு –

————————————————————————-

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – -95 – –

சகலவித பந்து -ஆப்த பந்து -ஆப்த பந்து -ஸ்ரீ யபதி-சரண் அடைந்து -பிரபத்தி அனுஷ்டானம் -உறுதி நிலையை வெளியிட்டு அருளுகிறார் –
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு-இயற்கை இல்லையே -கர்மா பயனாகவே என்பதால் புக்கு
அங்கு ஆப்புண்டும்-அங்கு அஹங்கார மமகாரங்கள் -அபிமானங்களை விடாமல் இருந்து –
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே-ஆத்மாவுக்கு சம்சார சம்பந்தமும் அநாதி -எம்பெருமான் சம்பந்தமும் அநாதி -என்பது நூல் கொள்கை
இருந்தாலும் ஆழ்வார்கள் அசித் சம்பந்தம் விட நாராயண சம்பந்தமே பழையது என்பர் –முன்னமே-என்கிறார்
திருவாய்மொழியிலும்-சோர்ந்தே புகல் கொடாச் சுடரை யரக்கியை மூக்கரித்தாயை அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே -என்பார்
ஏதன் நிமித்தம் முன்னமே முதல் முன்னமே யான அசித் அயன அநாதி சம்பந்தங்கள் -ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூ க்திகள் –

————————————————————————–

வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பல வாக்கி அவையவை தோறு
அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின் கண் வேட்கை எழுவிப்பனே – -96 – –

உபாயாந்தரங்களைக் காட்டி வைத்து -ஒன்றே பொருள் எனின் வேறு என்ப வேறு எனின் அன்று என்ப ஆறு சமயத்தார்
பல சமயங்களையும் தேவதைகளையும் நாட்டி வைத்து -அனைத்தும் உன் சரீரமே -உன்னால் அல்லாது வேறு யாராலும் ஒன்றும் செய்ய முடியாதே
இருந்தாலும் ஸ்ரீ வைஷ்ணவ சமயம் ஒன்றே பரவச் செய்வேன் -பிரபத்தி மார்க்கம் ஒன்றையே பரவச் செய்வேன்
-ஸ்ரீ மன் நாராயண ரூபியான உன் வடிவத்திலேயே பக்தி செலுத்தும் படி பண்ணுவேன்
குலமகட்க்கு தெய்வம் கொழுநன் -என்றவாறு –

————————————————————————–

எழுவதும் மீண்டே படுவதும் படு எனை யூழிகள் போய்க்
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே – – 97- –

எம்பெருமானை கண் களிப்பைக் கண்டு முடிக்க வேணும் என்று அன்புற்ற நித்ய ஸூ ரிகள்-இமைக்க மாட்டார்களே
உலகப் பொருள்களை இகழ்ந்து எம்பெருமானையே சேவித்து காலம் கழியும்படியான ஆசை கொண்டார்க்கு அவனை உபேக்ஷிக்க காரணம் இல்லையே
பூர்ண அனுபவம் செய்யும் ஆழ்வாராதிகளுக்கு ஞானம் குவியாதே
கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே -கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே –
காதல் உற்றார்க்கு எள்கல் அல்லால் –கண் துஞ்சல் உண்டோ -என்று அன்வயம்
ஸ்வ தந்தரரான பெருமாள் உறங்கினார் என்று கேட்க்கும் அத்தனை போக்கி இளைய பெருமாளுக்கு கண் உறங்கிற்றோ
-பகவத் விஷயத்தில் கை வைத்தாரில் இதுக்கு முன் கண் உறங்கினார் என்று கேட்டு அறிவார் உண்டோ
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் -அன்றோ
தொல்லை மால் -சம்ச்லேஷம் பழையது என்றவாறு -அநாதியான வியாமோஹம் கொண்டவன் -என்றும்
அனைத்துக்கும் பழைய பெரியவன் என்றுமாம் –

————————————————————————–

துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற
எஞ்சாப் பிறவி இடர் கடிவான் இமையோர் தமக்கும்
தன்சார்விலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே
நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே – -98 – –

பரத்வத்தை எல்லை கண்டாலும் காணலாம் -ஸுலப்யத்தை எல்லை காண முடியாதே –
சர்வேஸ்வரனாய் -ப்ரஹ்மாதிகளுக்கும் கூட ஆஸ்ரயணீயனாய்-அவாப்த ஸமஸ்த காமனாய் இருக்கிறவன் -ஆச்ரித ஸ்பர்சம் உள்ள
த்ரவ்யமே தனக்கு தாரகமாய் -அது தான் நேர் கொடு நேர் கிட்டப் பெறாதே இப்படி களவு கண்டாகிலும் புஜிக்க வேண்டும் படி
-அது தானும் தலைக் கட்டப் பெறாதே வயது கையதாக அகப்பட்டுக் கொண்டு -கட்டுண்டு -அடியுண்டு
-பிரதிகிரியை அற்று உடம்பு வெளுத்து பேகணித்து நின்ற நிலை சிலர்க்கு நிலமோ -நம்பிள்ளை ஸ்ரீ ஸூ க்திகள்
நித்ய ஸூ ரிகளுக்கே முடியாதே
சனகாதி யோகிகளும் -ப்ரஹ்மாதி தேவதைகளும் -சரண் அடையும் படி நிற்கும் முழு முதல் கடவுள் இவன் ஒருவனே அன்றோ
நல்ல வென் தோழி நாகணை மிசை நம் பரர் செல்வர் பெரியர் சிறு மானிடர் நாம் செய்வது என்-என்று
கை வாங்கி இருக்காமல் ஸுலப்யன் என்று அறிந்து
அவன் நம்மை உடைமையாக்கிக் கொள்ளாது ஓழியான்-அஞ்ச வேண்டாம் என்றபடி –

————————————————————————–

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – – 99- –

ஆழ்வார் திரு உள்ள உறுதியை வெளியிட்டு அருளுகிறார்
எல்லாயவர்க்கும் -பறவை விலங்காதி/ அல்லாதவர்க்கும் -நித்ய ஸூ ரிகளுக்கும் /
மற்று எல்லாயவர்க்கும் – நிஹினமான மநுஷ்யர்களுக்கும் என்றுமாம்
ஞானப்பிரானே நம்மை சம்சார பிரளயத்தில் இருந்தும் உத்தாரணம் செய்து அருளுவான் –

————————————————————————–

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே – – 100- –

கருமம் ஒழிந்து பிறப்பு அற்று முக்தி பெறுவார் என்று பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார்
குருகூர் திவ்ய தேச மகிமையால் ஆழ்வார் தாம் பெற்ற பேறு என்கிறார்
திரு மால் திருப்பேர்-வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன்-பாகவத பக்தி நிஷ்டை –
பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை திருவாய் மொழிகளில் வெளியிட்டு அருளியது போலே
வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த-என்று உபசம்ஹரித்து –அடியேன் செய்யும் விண்ணப்பம் என்று தொடங்கியது போலே
மஹா பாரதம் போலே பரந்து இருத்தல் -பிரணவம் போலே சுருங்கி இருத்தல் -செய்யாதே நூறு பாட்டாய்
-ஞாதவ்ய அம்சம் அடைய உண்டாய் இருக்கை-
மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே -மஹா விவேகிகளையும் முழுக வைக்கும்
-எம்பெருமானும் வந்து பிறந்தால் மயக்கி இழுக்கும் சம்சாரம் அன்றோ
பிரபந்தம் முழுவதுமே சம்சார நிவ்ருத்தியை விண்ணப்பம் செய்த வாறு
நல்லார் நவில் -விசேஷணம் ஆழ்வாருக்கும் திருகி குருகூருக்கும் -ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர் சடகோபன் -என்கிற பிரபாவம் அன்றோ
சம்சாரிகள் உண்டியே உடையே என்று உகந்து இருக்க –
ஆழ்வாரோ உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -என்பதாலே மாறன் –

————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: