திரு விருத்தம் -பாசுரங்கள்–81-90–திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

உறுகின்ற கன்மங்கள் மேலன ஒர்ப்பிலராய் இவளைப்
பெறுகின்ற தாயர் மெய்ந்நொந்து பெறார் கொல் துழாய் குழல் வாய்த்
துறு கின்றிலர் தொல்லை வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்
இறுகின்ற தாலிவாளகம் மெல்லாவி எரி கொள்ளவே – – -81 –

வெறி விலக்கு-ஒர்ப்பிலராய் -இனி இவளுக்கு ஆகக் கடவது-நிலைமைகளை ஆராயத்தவர்களாய்
வேங்கடமாட்டவும் -திவ்ய தேசமே இவள் தாபம் தீர்க்கும் தடாகம் என்றவாறு
வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்-திருவேங்கடமலை யாத்திரை கூட்டிச் செல்ல பிரார்த்தித்து அத்தை நிறைவேற்றாமல் உள்ளீர்களே
-திருவேங்கடத்தில் இவளை நடையாடச் செய்ய எண்ணு கின்றிலரே-
இவர் ஆற்றாமையைத் தணிக்கும் வழிகளில் இழியாமல் -வேறு வழிகளில் இழிவதே –
பகவத் பிரசாதமும் திவ்ய தேச வாஸமுமே இவர் ஆற்றாமைக்கு பரிஹாரம்
இவை செய்யாமல் இவர் தளர்ச்சி மேன்மேல் மிகுகின்றது -என்றவாறு-

————————————————————

எரி கொள் செந்நாயிறு இரண்டுடனே உதயமலைவாய்
விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள் மீண்டவற்றுள்
எரி கொள் செந்தீ வீழ் அசுரரைப் போலே எம்போலியர்க்கும்
விரிவ சொல்லீர் இதுவோ வையமுற்றும் விளரியதே – – – 82- –

உரு வெளிப்பட்டால் -நாயகி நாயகன் கண் அழகுக்கு இரங்கி உரைக்கும் பாசுரம்
-ஏக காலத்திலே இரண்டு சூரியன்கள் போலே -அபூத உவமை – தாப ஹேதுவாய் -சர்வ லோக ரக்ஷகராய் விரும்பி
தன் பேறாக காத்து அருளும் தன்மைக்கு இப்படி உதவாமை ஒவ்வுமோ –
மந்தேஹாருணம் த்வீபத்தில் உள்ள அசுரர்கள் தவம் செய்து பிரமன் இடம் வரம் பெற்று ஸூர்யனை வளைத்து
போர் செய்ய சந்த்யா காலத்தில் மந்த்ர பூர்வகமாக விடும் தீர்த்தங்கள் வஜ்ராயுதம் போலே ஆகி அவர்களை தள்ளியது போலே –
-விளக்கில் விட்டில் போலே -அர்க்ய நீரால் எழுந்த செந்தீயில் விழுந்து மாண்டனர் -என்பர் –
இதையே மீண்டு -சூர்யன் அவர்கள் தீய சக்திகளில் இருந்தும் மீண்டு என்றும் -இப்படி அசுரர்கள் மீண்டும் மீண்டும் மாய்ந்து போவதையும் குறிக்கும்
பூர்ண அனுபவம் பெறாமல் மானஸ அனுபவ மாத்திரமே வருந்தும் அளவு பரிதாப ஹேதுவானதே
திருமேனி மைப்படி மலை போலே சோதி மயமாய் இருந்து அனுபவம் கொடுக்காமல் இருப்பதே –
எம்போலியர்க்கும்-விரிவ சொல்லீ-அநு கூலரான எம் போல்வாருக்கும் தாபம் செய்வனவாய் பரவுகின்றன –
இதுவோ வையமுற்றும் விளரியதே– உலகம் முற்றும் விருப்பத்தோடு ரஷிக்கும் விதம் இதுவோ
-ஆழ்வார் ஆற்றாமை அவன் ரக்ஷகத்வத்திலும் அதி சங்கை பண்ணும் படி பண்ணிற்றே

—————————————————————–

விளரிக் குரலன்றில் மென்பெடைமேகின்ற முன்றிற் பெண்ணை
முளரிக் குரம்பையிதுயிதுவாக முகில் வண்ணன் பேர்
கிளறிக் கிளறிப் பிதற்றும் மெல்லாவியும் நைவும் எல்லாம்
தளரிற் கொலோ அறியேன் உய்யலாவது இத் தையலுக்கே – – -83 –

அன்றில் -கிரௌஞ்சம் -காம உத்தீபகமாய் -விரக வேதனையை வளர்ச்சி செய்யுமே
-காவார் மடல் பெண்ணை அன்றில் அரி குரலும் -என்றும் -பெண்ணை மேல் பின்னும்
அவ்வன்றில் பெடை வாய்ச் சிறு குரல் -என்றும் திருமங்கை ஆழ்வார் –
சமஸ்க்ருதம் -சப்த ஸ்வரங்கள் -ஷட்ஜம் -ரிஷபம் -காந்தாரம் -மத்தியமம் -பஞ்சமம் -தைவதம் -நிஷாதம் -போலெ
தமிழில் குரல் -துத்தம் -கைக்கிழை-உழை-இளி-விளரி -தாரம் -என்னும் ஏழு இசை
விளரி -தைவதம் -என்பர் -/ கிரௌஞ்சம் -க்வணதி -மத்யமம் -என்பதால் -விளரி -மத்யமம் ஸ்வரம் என்றும் சொல்வர்
விளரி என்னும் ஒரு பண்ணும் உண்டு
மென் பெடை-பிரிவு பொறாத ஸுகுமார்யத்தை யுடைய பெடை –
முளரிக் குரம்பை-முட்களை அரிந்து செய்யப்பட கூடு -/தாமரை இலை பூக்களையும் கொண்டு வந்து செய்த கூடு என்றுமாம்
இது இது -கடபுலனாகும் பலவற்றை சொன்னபடி –
விளரிக் குரலன்றில் மென்பெடைமேகின்ற முன்றிற் பெண்ணை-முளரிக் குரம்பையிதுயிதுவாக-என்றதை பின் பற்றியே
திரு மங்கை ஆழ்வாரும் -முன்றில் பெண்ணை மேல் முளரிக் கூட்டகத்து அன்றிலின் குரல் அடரும் என்னையே -பெரிய திரு மொழி -11-1-6-
ஆவியும் நைவும் -ஆவியின் நைவும் –
பாகவதர்கள் எம்பெருமான் திரு நாமங்களை சொல்லி புலம்ப ஆழ்வார் நெஞ்சம் தளர்ந்து நைந்த தன்மையைக் கண்டு –
இவருக்கு தேஹ விநியோகம் ஆனபின்போ எம்பெருமான் வந்து இவரைச் சேர்த்துக் கொள்வது -என்று வெறுத்து கூறுகிறார்கள் –

———————————————————————–

தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்கங்கெல்லாம்
கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்
மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே – – – 84-

மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே--அவனையே முன்னிலை படுத்தி பேசி -நாயகனையே இடையூறாக நினைத்து பேசி
குரவைக் கூத்தாடும் மகளிர் கூட்டத்திலும் -தர்ம புத்திரர் ராஜ சோயா யாகம் செய்யும் மஹா புருஷர்கள் குழாங்களிலும் இருப்பவன் ஆகையால்
தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்கங்கெல்லாம்-கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்-என்கிறார் –
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவ்வம் ஏறி துவரை எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் –
காந்தள் முகிழ் விரல் சீதைக்காக்கிக் கடுஞ்சிலை சென்று இறுக்க வேந்தர் தலைவன் சனகராசன் தன வேள்வியில் கண்டார் உளர் -பெரியாழ்வார் பாசுரங்கள் –
மணியே முத்தமே என் தன் மாணிக்கமே – –முத்தினை மணியை மணி மாணிக்க வித்தினை சென்று விண்ணகர்க் காண்டுமே -திருமங்கை ஆழ்வார்
தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு-பரதந்த்ரராய் இருக்கும் -பிரபன்ன கோஷ்ட்டி /
ஐய நல்லார்கள் குழு-யாகம் பல செய்யும் கைங்கர்ய கோஷ்ட்டி
புறம்பே திரள்களில் ஆகிலும் காண ஆசைப்பட்ட நாயகி பாசுரம் –குழாங்கள் குழிய குழு-என்கையாலே சமூகம் பலவாய்ச் சேர்ந்த சமுதாயம் –

————————————————————————-

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி
ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை உலகு அளந்த
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப் பொன்னே அடியேன் அடி யாவி யடைக்கலமே – – -85- –

காலை அரும்பி பகல் எல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய்–திருக்குறள் -ஆற்றாமை மிக்கு தலைவி
தலைவனை உனக்கே என் உயிர் தஞ்சம் -நீயே சடக்கென வந்து அருள வேணும் -என்கிறாள்
அடியேன் அடி யாவி -திருத் தாயார் வார்த்தை என்பற்கு என் அடிமையான மகள்-ஆவி -உயிர் போலே அருமையான பெண்
-அடியேனுடையாவி -பாட பேதம் –
ஒருவரால் எறிய பட்டு குரங்கு மேல் விழுந்த மாணிக்கம் அதன் கையில் அகப்பட்டு அழிந்து திரும்ப மாட்டாது போலே
இருளை அளிக்க அதன் மேல் விழுந்த சூ ரியான் மீலாது இரவே யாக நீண்டு போனதே -சூர்ய மண்டலம் -மாணிக்கம் -இருள் -குரங்கு –
மாணிக்கம் -செந்நிறமான -கரு மாணிக்கம் அபூத உவமை / இங்கு குரங்கு -இருள் என்பதால் கருங்குரங்கு என்ற வாறு
அன்றியே மாணிக்கம் கொண்டு குரங்க எறிந்தால் போலே என்றுமாம் -குரங்க-என்றது வளைதலாய்-உதித்த ஆதித்யன்
உயர எழுந்து விழுந்து அஸ்தமித்த கடுமையைச் சொன்னன படி –
ஆற்றாமை மிக்கு ஆத்மாவை சமர்ப்பிப்பதும் -மோஹ அந்தகாரம் விவேகம் -மாறி மாறி வர -சமர்ப்பித்தது அவனது அன்றோ
-சர்வ ரக்ஷகன் நீயே அன்றோ -வந்து காத்து அருள் என்கிறார் –

—————————————————————

அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் சென்னி என்னும்
முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை ஆழி சங்கம்
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்
புடைக் கலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே – – 86- – –

ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாயும் இருந்து -ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்கு பரிகரமும் கொண்டு -ஆஸ்ரித ஸூலபனாயும்-
பிரம்மா ருத்ராதிகள் துயரங்களையும் தீர்த்து அருளிய சர்வ ஸ்மாத் பரனாயும் இருந்து வைத்து –
அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் -தாமரைப் பூ பசிய இலையின் மீது உயர்ந்து விகஸிப்பது போலே
திரு நாபித் தாமரை மலர் பசிய திருமேனி மீது எழுந்து தோன்றி இருக்குமே
அடைக்கமலமாக புகுந்த சிவனுக்கு நீக்கி -ரக்ஷகமாக இருந்து நீக்கினவன் என்றுமாம் – அடைக்கலத்தோங்கு அயன் -என்று
தன்னிடம் அடைக்கலமாக வந்த நான் முக்கண் என்றுமாம் -அடைக்கலம் என்றால் ரஷிப்பதற்கு உரிய பொருளும் ரக்ஷகனையும் குறிக்கும்
-கமலத்து அலர் -தாமரைப் பூ என்று கொண்டால் தோன்றிய -வருவித்திக் கொள்ள வேண்டும் / முடை -கெட்ட நாற்றம்
புடைக் கலந்தானை-புடைக்க அலர்ந்தானை -பட்டர் திருகி கோஷ்ட்டியூரில் இருக்கும் பொழுது நஞ்சீயர் -பொருள் உரைக்க
ஆழ்வார் திரு உள்ளத்துக்கு உகந்த அர்த்தம் என்று புகழ்ந்தார் -அவதார பிரயோஜனம் பெற்றோமே என்று மகிழ்வான்
ஆற்றாமை மிக்கு ஆழ்வார் திருக் கல்யாண குணங்களையும் திரு நாமங்களையும் சொல்லி முறையிடுகிறார் –
என் சொல்லிப் புலம்புவனே-அவனது குண சேஷ்டிதங்களில் ஒன்றும் குறை இல்லாமல் எனது குறையே--வல் வினையேன் -என்றே சொல்லக் கடவேன் –

————————————————————

புலம்பும் கனகுரல் போழ் வாயவன்றிலும் பூம் கழி பாய்ந்து
அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும் ஆங்கவை நின்
வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக வையம்
சிலம்பும்படி செய்வதே திருமால் இத்திருவினையே – — 87- –

ஆற்றாமை மிக்கு துயரம் தணியும் பொருட்டு பெரிய திருவடியின் சிறப்பை பாராட்டி நிற்க -அன்றிலின் குரலும்
கடல் ஓசையும் சேர்ந்து நலிய -விரஹ வேதனை வளர்ந்து –
பெண்ணை மேல் பின்னும் அவ் வன்றில் பெடை வாய்ச் சிறு குரலும் என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன்-பெரிய திருமடல் –
பூம் கழி பாய்ந்து-அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும்-நதி பதியாகிய கடல் அழகிய கழியின் உள்ளே புகப் பாய்ந்து
அலை மறிந்து பெரு முழக்கம் செய்வது மனைவியை கைகளால் ஆரத் தழுவி ஆரவாரம் செய்வது போலே இருக்க விரஹ தாபம் விஞ்சும்
புள்ளது நலம் -எம்பெருமானை ஆஸ்ரிதர்கள் இருக்கும் இடம் எழுந்து அருள பண்ணுவதே நலம் -உனக்கு அடிமை செய்து
தழும்பு கொண்டால் போலே இவளும் சம்ச்லேஷ அடையாளங்களை தரிக்க ஆசைப்பட்டு பாடின இது குற்றமாக –
பாதகங்கள் நலிய இவள் நோவு பட்டாள் என்று நாட்டார் பழி சொல்லும் படி நீர் விட்டு வைப்பதே
வையம்-சிலம்பும்படி செய்வதே-இவள் தளர்ச்சிக்காக -தாயார் தோழியர் உற்றோர் உறவினர் ஊரார்-அனைவரும் முறையிடுதல்
திருமால் இத்திருவினையே -ஒருத்திக்கு அப்படி இவளுக்கு இப்படியா -இவள் நிழல் போலே என்றாலும் இவளையும் நீ பார்க்க வேண்டாவோ
-உன் மஹிஷி நோவு பட பார்த்தல் உனக்கு குறை அன்றோ
-திருமால் ! நான் முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென்
ஒரு மா முதல்வா ! ஊழிப் பிரான் ! என்னை யாளுடை கரு மா மேனியன் ! என்பன் என் காதல் கலக்கவே –திருவாய் -8-3-9-போலே –
இங்கும் திருமால் -அண்மை விளி
ஆங்கவை-பிரிந்து இருப்பிற்கு மற்றும் பாதகமான சேக்கள் கழுத்தில் மணியோசை என்ன -சந்திரோதயம் என்ன -தென்றல் என்ன
-இப்படிப் பட்ட பாதகங்களை சொல்லிற்று ஆதல்
ஸ்வா பதேசம் -அன்றில் குரல் துன்பத்துக்கு ஸ்மாரகம் -ஆழி முழக்கம் சேர்க்கை இன்பத்துக்கு ஸ்மாரகம்
திருவடி இருப்பதால் நம்மிடம் கூட்டி வருவான் -இழக்க வேண்டியது இல்லை என்று பாராட்டி பேசினதே குற்றமாக –
அடிமைச் செல்வம் மிக்க ஆழ்வாரை இத்திரு -என்கிறது -அத்திரு அவனைப் பற்றும் இத்திரு இருவரையும் பற்றுமே –
எம்பெருமான் உடன் நித்ய அனுபவம் செய்யத் தக்கவராய் இருந்தும் இப்பாடு படுவதே –

———————————————————————

திருமாலுரு வொக்கும் மேரு அம்மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக்கைத் திருச் சக்கர மொக்கும் அன்ன கண்டும்
திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர்
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே – – -88- –

இடைவிடாமல் நாம உச்சாரணம் பண்ணி வருகிற நல்லோமான நமக்கு தீவினை எங்கிருந்து வந்தது என்று தலைவி வெறுத்து பேசும் பாசுரம்
திருமாலுரு வொக்கும் மேரு-அவளது பொன்னிறமான திருமேனி கலப்பதால் தானும் பொன்னிறம் பொலியப் பெற்று
எம்பெருமான் பெரிய திரு மேனி பொன்னிறமான மேருவை ஒக்கும்
அன்ன கண்டும்-நேரில் கண்டால் போலே -அன்பு மிகுதியால் பரவசம் அடைந்து இத்தனை பேரிட்டுக் கூவும்படியான
வ்யாமோஹம் பெற்ற நமக்கு பிரிவுக்கு அடியான பாவம் எங்கனே உண்டாயிற்றோ –
-செய்யதோர் நாயிற்றைக் காட்டி சிரீதரன் மூர்த்தி இது என்னும் -போல அன்றோ வாய் பிதற்றுகிறாள் –
ஜன்மாந்தர சகஸ்ரேஷூ தபோ ஞான சமாதிபி-நாராணாம் ஷீண பாபா நாம் கிருஷ்ணே பக்தி ப்ரஜாயதே -என்கிறபடி
பாபம் கழிந்தால் தானே பக்தியே பிறக்கும் -பக்தியின் மேல் எல்லையில் இருந்தும் –
பேறு பெறாமைக்கு காரணமான பாபங்கள் வர வழி என்னவோ -என்று வருந்தி உரைக்கிறார் –

—————————————————————-

தீ வினைக்கரு நஞ்சை நல் வினைக்கின்ன முதத்தினை
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது
ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுலகீரடியால்
தாவின வேற்றை எம்மானை எஞ்ஜான்று தலைப் பெய்வனே – – 89- – –

பேற்றுக்கு விரைந்து பேசுகிற படி
தீய கருமங்களை ஒழித்து – –கைங்கர்யம் செய்பவர்க்கு இன்ப மயமாய் இருந்து -பக்தியை வளர்ச்சி செய்பவன்
-நல் வினை-என்றது முக்திக்கு வியாஜ்ய காரணமான பிரபத்தியை
புன்மை எள்காது-ஆவினை மேய்க்கும் வல்லாயனை -திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனிவாய்-எங்கள் ஆயர் தேவே–எள்காது-பெறாப் பேறு பெற்றால் போன்று அன்றோ உகப்பான் –

———————————————————————

தலைப்பெய்து யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால்
நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும் மாயம் செவ்வே
நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு அசுரர் குழாம்
தொலைப் பெய்த நேமி எந்தாய் தொல்லை யூழி சுருங்கலதே – – – 90- –

ஆற்றாமையால் காலம் மிக தோன்றுகிறதே –சுருங்கலதே-சுருங்குகிறது இல்லை -இப்படியே என் காலம் கழிந்து விடுகிறதே
நோற்ற விம்மாயமும்-பூர்வ ஜென்ம தவ பலனாகவே நாயகனைப் பெற இயலும் -உன் திருவடிகளில் அடிமையால் அல்லது
செல்லாத படியான சரீரத்தைப் பெற்ற படியையும்-அப்படி இருக்கச் செய்தே-அவ்வடிமையை இழந்து இருக்கிற இருப்பையும்
அனுசந்திக்கக் காலம் போருகிறது இல்லை -என்கிறார் -அப்பிள்ளை ஸ்ரீ ஸூ க்திகள்
ஆயிரம் ஜென்மங்கள் செய்த நோன்பின் பயனாகவே ஸ்ரீ வைஷ்ணவ ஜென்மம் கிட்டும்
மாயம் செவ்வே-நிலைப் பெய்திலாத நிலைமையும்-இந்த ஆச்சர்யம் ஒரு படியாக நிலை நின்று முடிவு பெற மாட்டாத நிலைமையையும் -அன்றிக்கே
இவ்வுடம்பு நிலை இல்லாது இருக்கும் தன்மை -என்றும் பிரகிருதி சம்பந்தத்தால் இருப்பதால் உண்டான
சேஷத்வம் நிலை பெறாமல் சளிக்கக் கூடிய தன்மையையும் என்றுமாம் –
திருவடிச் சூடும்-கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே
அசுரர் குழாம்-தொலைப் பெய்த நேமி எந்தாய் -என்னுடைய பிராப்தி பிரதிபந்தகங்களைப் பாற்றுதல் உமக்கு ஒரு கார்யமோ –

————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: