திரு விருத்தம் -பாசுரங்கள்–51-60–திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

மலை கொண்டு மத்தா வரவாற் சுழற்றிய மாயப் பிரான்
அலை கண்டு கொண்ட வமுதம் கொள்ளாது கடல் பரதர்
விலை கொண்டு தந்த சங்கமிவை வேரித் துழாய் துணையாத்
துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே -51 –

கடலோசைக்கு இரங்கி -வலியார் இடத்தே வலிமை காட்ட முடியாமல் -அமுதம் எடுத்த எம்பெருமான் இடம் காட்ட முடியாமல்
-எளியோரை வலிந்து நலியுமா போலே -சங்கு வளைகளை கவர்ந்து சென்று -தன் வலிமை போதாது என்று
திருத் துழாயையும் கூட்டி மிக்க ஒலியால் அறை கூவுகின்றதே
வேரித் துழாய் துணையாத்--திருத் துழாய் மேலே ஆசைப் பட்டு கிடைக்காமையால் தளருவது போலே –
வாலி-ஸூ க்ரீவன் -நாமி பலம் /தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் நாம பலம் -போலே
துலை தலைக் கொண்டும் -என்னை தொலைப்பதற்காக
தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து-தாயாதிகள் வழக்கு தொடர்ந்து சொத்து பறிப்பது போலே-அழைக்கின்றதே-அவன்திருமேனிக்கும் கம்பீரமான குரல் ஒலிக்கும் போலியாக வருத்தும்
ஸ்வாபதேசம் -சம்சார கோலாஹலத்தைக் கண்டு தளர்தல் –கடல் என்று சம்சாரத்தை –
சம்சார சாகரம்-மன உறுதி -மந்தர மலை –அன்பாகிய கயிற்றைக் கொண்டு -கடைந்து ஆத்மாவை கொண்டு சென்று அனுபவிக்க-மீட்டுக் கொள்ள சம்சாரத்துக்கு சக்தி இல்லையே-
எம்பெருமான் போக்யதையில் விருப்பம் கொண்டதால் –கண்டு ஆற்றேன் உலகு இயற்கை கடல் வண்ணா அடியேனை-பண்டே போல் கருதாது உன்னடிக்கே கூய்ப் பணி கொள் -திருவாய் -4–9–3-
பரதர்-விலை கொண்டு தந்த சங்கமிவை கொள்வான் ஒத்து -ஆச்சார்யர்களால் பெற்ற சுத்த ஸ்வபாவத்தை சம்சார கடல் மீட்க ஒண்ணாது என்றபடி
பரதர் -நெய்தல் நில புருஷர் -வலையர் -நுளையர்-என்றும் சொல்வர் –

————————————————————————–

அழைக்கும் கரும் கடல் வெண் திரைக்கே கொண்டு போய் அலர்வாய்
மழைக் கண் மடந்தை யரவணை ஏற மண் மாதர் விண் வாய்
அழைத்து புலம்பி முலை மலை மேல் நின்றும் ஆறுகளாய்
மழைக் கண்ண நீர் திருமால் கொடியேன் என்று வார்கின்றதே – 52-

கால மயக்கு துறை –7-/-18-/52-/-68-பாட்டுக்களிலும் இதே துறை -ஆற்றாமை மிக்கு -விரக காலம் நீடிப்பதால் மீண்டும் மீண்டும் இதே துறை வரும்
கடல் தன் மகளான ஸ்ரீ தேவியை இனிய குரலால் அழைத்து அலைகள் ஆகிற கையால் நீட்டி அவன் இடம் சேர்க்க
-பூ தேவி கொங்கைகள் மலைகள் மேல் ஆறாக பெருக-காரார் வரைக் கொங்கை -திரு மடல்
திருமால் கொடியேன் என்று வார்கின்றதே -திருமகள் மேல் காதல் பித்து -பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு –
பல நாயகிகள் உடையவனும் இது இயல்பு காண் -பூ தேவி போலே பராங்குச நாயகி உன்னையும் உபேக்ஷித்தான் -என்று சொல்லி
-நாயகி ஆராயாது தொடங்கி ஆற்றாமை குறையுமே
திருப் பாற் கடல் –கருங்கடல் என்னலாமோ என்னில் -நீல ரத்னத்தை பாலில் இட்டால் அப்பால் முழுவதும் மணி நிறம் ஆகுமே –
-பிராணவாகார விமானம் நிறம் மாறியது போலே -பெரிய பெருமாள் நிழலீட்டாலே
-கருங்கடல்- பெரிய கடல் என்றுமாம் –கருமை -பெருமை –ஸ்வாபதேசம் –எம்பெருமானுடைய ஸ்வாதந்தர்யம் -காட்டுமே
-இத்தால் -நாமும் தேவிமார் போலே அனுபவிக்கப் படுபவர் -கால விளம்பத்துக்கு ஆறி இருக்கவே வேண்டும் -என்றவாறு –

————————————————————————–

வாராயின முலையாள் இவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நல் நல் நோயிது தெய்வத் தண் அம் துழாய்
தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே -53 –

21 -பாட்டு போலே இதுவும் வெறி விலக்கு துறை / கட்டு விச்சி கூறல் -தலைவி ஆற்றாமையால் வந்த நோவுக்கு பரிஹாரம் ஏதோ
என்று வினவின் செவிலி முதலானோர்க்கு கட்டு விச்சி நோய் நாடி பரிஹாரம் சொன்ன பாசுரம் –
கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும் எங்கும் திரிந்து இன்றே மீள்வேனை யார் இங்கே அழைத்ததூஉ –
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று மண்டிய திரிவேனை யார் இங்கே அழைத்ததூஉ –
விண்ணகரம் வெக்கா விரி திரை நீர் வேங்கடம் மண்ணகரம் மா மாட வேளுக்கை தென் குடந்தை எங்கும் திரிந்து இன்றே மீள்வனை யார் இங்கே அழைத்ததூஉ –
நாகத்தணைக் குடந்தை வெக்காத் திரு எவ்வுள் நாகத்தணை அரங்கம் பேர் அன்பில் நாவாயும் எங்கும் திரிந்து இன்றே மீள்வனை யார் இங்கே அழைத்ததூஉ –
வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும் அக்காத பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும் பூதூரும் எங்கும் திரிந்து இன்றே மீள்வனை யார் இங்கே அழைத்ததூஉ
என்று கூவிக் கொண்டு —தெய்வ நன்நோய்-நோ ன்பு நோற்று பெற பெண்டியது -பேரின்பம் -பகவத் விஷயத்தில் ஈடுபாடு காரணம் –
அவனை அனுபவிக்க கரணமான பக்தியே -முலை -வாராயின முலையாள்-பக்குவமாய் முதிர்ந்த பக்தி உடையவள் என்றவாறு –

————————————————————————–

வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது
பேசும்படி யன்ன பேசியும் போவது நெய் தொடு வுண்
டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்
மாசின் மலரடிக் கீழ் எம்மை சேர்விக்கும் வண்டுகளே -54 –

வண்டு விடு தூது -அமரர்கள் அதிபதி என்று -பிற்காலியாதே-நெய் தொடு வுண்டேசும்படி யன்ன செய்யும் –என்று அவனது ஸுலப்யம் காட்டி –
நெய் யைச் சொன்னது பால் தயிர் வெண்ணெய் அனைத்துக்கும் உப லக்ஷணம்
ஏசும்படி யன்ன செய்யும்–இல்லம் புகுந்து என் மகளைக் கூவி கையில் வளையைக் கழற்றிக் கொண்டு கொல்லையில் நின்றும்
கொணர்ந்து விற்று -அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து நல்லன நாவல் பழங்களைக் கொண்டு நான் அல்லேன் என்று
சிரிக்கின்றானே-போன்ற ஏச்சுக்குரிய கார்யங்களை உட் கொண்டு –
எம்மை சேர்விக்கும் வண்டுகளே-சேர்விக்க வல்ல சக்தி உள்ளவை உங்களுக்கே என்று புகழ்ந்து உரைத்த வாறு –
ஸ்வாபதேசம் -ஆழ்வார் தம் ஆற்றாமையை ஆச்சார்யர் மூலம் -புருஷகாரமாக -அவனுக்கு தெரிவிக்கிறார் –
விண்ணாடு நுங்கட்கு எளிது-ஞானம் அனுஷ்டானம் இவை நன்றாக உடையனான குருவை அடைந்தக்கால் மாநிலத்தீர்
தேனார் கமலத்து திரு மா மகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும் -பரமபதம் உங்கள் கை வசம் உள்ளதே –
பேசும்படி யன்ன பேசியும் போவது-அப்பெருமான் இடம் விண்ணப்பம் செய்யும் வார்த்தைகளை இப்பொழுது எனக்குச் சொல்லிப் போக வேணும் –
அவற்றைக் கேட்டாகிலும் ஆறி இருப்பேன் –
ஆறு மாசம் மோகித்து கிடந்தார் எத்திறம் என்று -அந்த ஸுலப்ய குணத்தை பாராட்டி அருளிச் செய்கிறார் –
எம்மீசர் விண்ணோர் பிரானார்-மாசின் மலரடிக் கீழ் எம்மை சேர்விக்கும்
அடியாருடைய குற்றங்களை கணிசியாமையே எம்பெருமான் மலர் அடிக்கு மாசு இல்லாமை யாகும் –

————————————————————————–

வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–55-

நாயகன் தன் அன்பை அந்யாபதேச முகமாக புகழ்ந்து உரைத்தல் -நீர்ப்பூ நிலப்பூ கோட்டுப்பூ -இவை எல்லா வற்றிலும் இல்லாத
நறு மணம் இவள் கூந்தலில் இயற்கையாகவே உள்ளதே –
மருங்கு உழலும் களி வண்டினங்காள் உரையீர் மடந்தை -கருங்குழல் நாறும் என்போதுடைத்தோ நும் கடி பொழிலே -என்றும் –
மருங்கு உழல்வாய் நீ யறிதி வண்டே சொல் எனக்கு மங்கை கருங்குழல் போல் உளவோ விரை நாறு கடி மலரே -என்றும் பிறரும் அருளிச் செய்வார்களே –
நிலப்பூ வகையில் கொடிப் பூவும் புதற்பூவும் அடங்கும்
ஏனம் ஒன்றாய்-மண்டுகளாடி–மன் துகள் ஆடி –மஹா வராஹமாய் -/ வைகுந்த மன்னாள் -அழியாத நலம் உடையவள் என்றவாறு இங்கே
ஸ்வாபதேசம்வண்டுகளோ வம்மின் -பரம் பொருளை நடித்த திரியும் சாரக் க்ராஹிகள்-
நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ-உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம்-நீர்ப்பூ -திருப் பாற் கடல் வ்யூஹ மூர்த்தி
நிலப்பூ — ராம கிருஷ்ணாதி விபவாதாரங்கள் -/ மரத்தில் ஒண் பூ –வேதாந்த சிரஸில் உள்ள பரம பாத நாதன்
இப்படி இடைவிடாமல் அனுபவித்து தடை இல்லாமல் திரியும் -பாகவதர்கள் –ஆழ்வாரது பக்தி -அழிவற்ற வைகுண்ட நாடு போலே
-பேரானந்தம் தரும் சிரோபூஷணம் -எங்கும் கண்டோம் அல்லோம் என்று புகழ்ந்து கொண்டாடின படி –

————————————————————————–

வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திரு அருளால்
உயலிடம் பெற்று உய்ந்தும் அஞ்சலம் தோழி ஓர் தண் தென்றல் வந்து
அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூம் துழாயின் இன் தேன்
புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே -56 –

தலைவி இரவிடத்து தலை மகன் கலந்தமையை தென்றல் மேல் வைத்து உரைத்த பாசுரம் –
குளிர்ந்த தென்றல் அயல் அறியாமல் ஏகாந்தமாக நாயகியின் திருத் துழாயின் தேனைத் துளித்துக் கொண்டு எனது
அவயவங்களிலும் ஆபரணங்களிலும் பட்டு ஆற்றாமை தீர்த்தது காண் -என்கிறாள் –
நேராக கலந்ததை கூட வெட்க்கி தென்றல் மேலே வைத்து அருளிச் செய்கிறாள் -இனி வாடை போன்றவற்றுக்கு அஞ்ச வேண்டாம் -என்கிறாள் –
வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திரு அருளால்-பிரளய ஆபத்தில் திரு வயிற்றிலே வைத்து அருளியது போலே
துக்க சாகரத்தில் மூழ்கித் தவிக்கின்ற என்னை ரக்ஷித்ததால் –உய்ந்தும்-உய்ந்தனம் -என்றபடி –
ஆற்றாமை தீரும் படி குளிர்ந்த புதுமையான தென்றல் –ஓர் தண் தென்றல் வந்து-
தோழி நாம் அஞ்ச வேண்டாம் -கலவியை அயலார் அறிந்திலர் –அயலிடை யாரும் அறிந்திலர்-
நாயகன் கருணை திறத்தை –  -என்கிறாள் –
தடவிற்று என் புலன்கலனே
புலன்களையும் கலங்களையும் –
எல்லா வித இந்திரியங்களையும் எல்லா ஆபரணங்களையும் –
இந்திரியங்கள் விடாய் தீரவும் -ஆபரணங்கள் கழலாத படியும் -தடவிற்றுப் போலே காணும்-
இத்தால் சம்ச்லேஷம் வ்ருத்தமான படியை தோழிக்கு சொன்னபடி இறே –
ஸ்வாபதேசம் -கலங்கின அன்பரை நோக்கிக் கூறும் ஆழ்வார் -லௌகிக பதார்த்தங்களை அஞ்ச வேண்டாம் –
பிறர் ஒருவருக்கும் புலன் ஆகாமல் வந்து தன் போக்யதையை வெளிக்காட்டி என் துயரம் எல்லாம் தீர்க்கும்படி என் உறுப்புக்கள்
ஞானம் போன்ற அலங்காரங்களையும் விரும்பி ஆட் கொண்டான் என்கிறார் –

——————————————————————–

புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வல்லி யொன்றால்
விலக்குண்டுலாகின்று வேல் விழிக்கின்றன கண்ணன் கையால்
மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்றவற்றால்
கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே – -57-

நாயகன் நாயகி வலையில் அகப்பட்டதை சொல்வது
கடல் போன்ற கம்பீர ஸ்வபாவனான நீயோ இப்படி என்ன –
பரம விலக்ஷண-வ்யக்தி அன்றோ -துஷ் கரம் க்ருதவான் ராமோ ஹீ நோ யத நயா பிரபு -தாரயத் யாத்ம நோ தேஹம் ந சோகே
நாவ ஸீததி-நான் கண்ட நாயகியை நீ காணப் பெறில் திருவடி பட்ட பாடு படுவாய் –
புலக் குண்டலம் -புலப்படும் குண்டலம் / பொலக் குண்டலம் -பொன்னாலாகிய குண்டலம்
குண்டலம் என்பதை கெண்டைக்கு அடை மொழி யாக்கி காதணி வரை நீண்ட திருக் கண்கள்
குண்டலப் புண்டரீகம் -வட்ட வடிவமான முக மண்டலம் -புண்டரீகம் போன்ற முகம் –
கெண்டை போன்ற கண்கள் கொடி போன்ற மூக்கு -உபமான பதங்களையே சொல்லி -உவமை ஆகு பெயர் –
வல்லி யொன்றால்விலக்குண்டுலாகின்று–இரண்டு மத்த கஜம் தன்னிலே பொர உத்யோகித்து நடுவிலே கணையம் இட்டவாறே
தாம் நினைத்த படி பொராப் பெறாது ஒழிந்து பெரும் சீற்றத்தோடு சஞ்சரிக்குமா போலே நின்று -பூர்வர்கள் ஸ்ரீ ஸூ க்தி-
கொடுமை இன்னம் மாறாமல் இருப்பதை –வேல் விழிக்கின்றன-என்கிறான்
ஆழ் கடலைக் கடைந்து -கலக்கி – சாரமான அம்ருதத்தை கொண்டால் போலே நாயகியின் கண்களும் ஆழ்ந்த
என் நெஞ்சைக் கலக்கி சாரமான அறிவைக் கவர்ந்து கொண்டன
அவள் கண்ணின் வைலக்ஷண்யம் அனுபவித்தற்கு அன்றி மற்றை யாருக்கும் அரிய ஒண்ணாது –யாரும் -எவ்வளவு வைராக்யம் கொண்டவர்களுக்கும் –
மறி கடல் போன்றவற்றால்-போன்று அவற்றால் -பிரிக்காமல் போன்றவற்றால் ஒரே சொல்லாக கொண்டு -கடையய் பட்டு
அமிருதத்தை சுரந்த அலை எறி கடல் போன்ற அக் கண்கள் –
தன் அழகைக் கண்டு கலங்கி மருண்டு நோக்கிய கண்ணுக்கு கண்ணன் கையால் கலக்குண்ட கடல் உவமை -என்றும் கூறுவார் –
கண்டார் எம்மை யாரும் கழறலரே -தன்னைப் போலே பித்தேறிப் போவார்கள் –
ஸ்வாபதேசம் -ஆழ்வார் உடைய ஞானக் கண் கண்டு ஈடுபட்ட பாகவதர் -அத்தை குறைவாக பேசிய சுற்றத்தார்களை நோக்கி மறுத்து சொல்லும் வார்த்தை –
முக்திக்கு காரணமான முதல் பொருளை அரிய மூன்று உபாயம்-கேள்வி -சிந்தனை -காட்சி -ஆச்சார்யர் பக்கல் கேட்டு
-பிரமாணம் உக்தியால் உள்ளத்தில் தெளிந்து -ஐயம் திரிபறத் தெளிதல்-
புலக் குண்டலம்-செவிக்கு அணி -கேள்வி / புண்டரீகம் ஹிருதய கமலம் -சிந்தனை –
போர்க் கெண்டை-சிந்தனை -பூர்வ பக்ஷ உக்திகளால் விரோதியை உண்டாக்கி -/ வல்லி யொன்றால்-விலக்குண்டுலாகின்று–மத்யஸ்த சித்தாந்த உக்தியால் அவ்விரோதம் தீர்ந்தமை –
வேல் விழிக்கின்றன-சஞ்சலம் இல்லாமல் நிலை நின்ற ஞானத்தால் நுண்மையான நெடிய திருமாலை தர்சித்தமை –
கண்ணன் கையால்-மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்ற-சபல சித்தரான யாம் பரவசப்பட்டு இனிய பக்தியைச் சுரந்து
நிலை மாறிய பொழுது -ஆழ்வார் ஞான விசேஷம் அறிந்தார் யாவரும் எம்மை இங்கனம் கூறார் -என்கிறார்
கண்டார் எம்மை யாரும் கழறலரே -புறம்புள்ளாரும் புகுந்தால் தாங்களும் ஈடுபடும்து ஒழிய பிறரை நியமிக்காமல்
தேவு மற்று அறியேன் -மதுரகவி நிலைமையை பெறுவார் என்றபடி –

———————————————————————–

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே – 58-

சர்வ சக்தன் அன்றோ -அவன் பிரதிபந்தகங்கள் எவ்வளவு இருந்தாலும் அவற்றை களைந்து சம்ச்லேஷிக்க விரைந்து வருவான்
என்று தோழி சொல்லி தலைவியை ஆற்றுகிறாள் –
தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே -என்ன ஆச்சர்யம் -என்றும் எப்படி பொருந்தும் என்றுமாம் –
அளந்தால் வரும் விகாசம் காணா நின்றோம் இறே
அளக்கைக்கு ஓர் அவகாசம் காண்கிறிலோம்
நின்ற நிலையிலே நின்றாரை -அளந்தார் -என்ன ஒண்ணாது இறே
அடிமாறி இடில் இறே அளந்தது ஆவது –
இவன் இங்கு அளந்தானாக ஒன்றும் காண்கிறிலோம் என்னுதல்
-நீண்ட வண்டத்து உள்ளவன் -மேலும்
உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லாதவன் -அழறலர் தாமரைக் கண்ணனாய் இருப்பவன் –
அழறலர் தாமரை-பங்கஜம் -சேற்றுத் தாமரை -நீர் நிலையிலே இருந்து அலர்ந்து செவ்வி குன்றாத இருக்கும் தாமரை போன்ற திருக் கண்கள்
ஸ்வாபதேசம் –– பாகவதர்கள் ஆழ்வாரை தேற்றுகிறார்கள் -சர்வ சக்தனைப் பற்றி சொல்லி
-த்ரிவிக்ரமனாக உடைமையை உடையவன் சேர்த்துக் கொள்வான் -சம்பந்தம் சக்தி விசேஷங்களை-எடுத்துக் கூறி ஆழ்வாருடைய ஆற்றாமையை தணித்தனர்-

————————————————————

அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல் அந் தண் அம் துழாய்க்கு
உளப் பெரும் காதலின் நீளிய வாயுள ஓங்கு முந்நீர்
வளப் பெரு நாடன் மது சூதன் என்னும் வல்வினையேன்
தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே -59 –

தலைமகள் ஆற்றாமை மிக்கு அலறுவதை திருத் தாய் சொல்லுகிற பாசுரம் -காதலுக்கு முடிவு இல்லாதது போலே
இரவுக்கும் முடிவு இல்லையே –நீளிய வாயுள-என்னும் -வினை முற்று -என்னும் என்பது இப்பாட்டுக்கு வினை முற்று –
அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல்–ஊழி ஆகிற ராத்திரி களானவை -அளக்க அரியத்தை-அளந்த திருவடிகளாலும்
அளக்கப் போகிறதில்லை -அளக்கல் ஆகில் வந்து தோற்றானோ -அளக்க அரிதாகையை ஸ்வபாவமாக உடையவன்-பெரியவாச்சான் பிள்ளை
ஓங்கு முந்நீர்-வளப் பெரு நாடன் -கடல் விழுங்காமல் நோக்கி ரஷிப்பவன்/ மது சூதன் -துஷ்ட நிக்ரஹன்/
ஊழி யங்கங்குல்-கங்குலுக்கு அழகாவது கல்பத்தினும் நெடிதாகை –
வல்வினையேன்-கங்குலை நீட்டவோ -அவனைக் கூட்டவோ முடியாத பாவியேன்
காதலின் நீளிய வாயுள-ஒப்பு பொருளில் இல்லை -காதல் போலே நீண்டது என்ற படி / தள-தளவு -முல்லை அரும்பு -என்றபடி
ஸ்வாபதேசம் -ஆழ்வார் ஆற்றாமையைக் கண்டு கால தாமதத்தை வெறுத்துப் பேசும் பாகவதர்கள் –சர்வ சக்தனாய் இருக்கச் செய்தேயும்
இருள் தரும் மா ஞாலத்தில் இருப்பு நெடுகத் தோற்றுகையாலே-ஆற்றாமை விஞ்சி அத்தன்மையை வாய் விட்டுக் கூறினமை
-ஆழ்வாருடைய திரு முக மண்டலமும் சொல் திறமும் பக்தி வளமும் ஈற்றடியில் சொல்லிற்றாம் –

————————————————————————–

முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60- –

உண்மையில் நாயகி யவ்வன பருவத்தை அடைந்து இருந்தும் அன்பு மிகுதியால் இவளது இளமையை தோற்றுகிறது-
செய்ய நூலின் சிற்றாடை செப்பன் உடுக்கவும் வல்லள் அல்லள் –வாயில் பல்லும் எழுந்திலே -மயிரும் முடி கூடிற்று இல-
-மாயன் மா மணி வண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே –கொங்கை இன்னம் குவிந்து எழுந்திலே –போன்ற பெரியாழ்வார் பாசுரங்களும் –
முள் எயிறு ஏய்ந்தில கூழை முடி கொடா- தெள்ளியள் என்பதோர் தேசு இலள் -திரு மங்கை ஆழ்வார் பாசுரமும் காண்க –
கடல் மண்ணெல்லாம் விலையோ -ரத்நாகரமான கடல்களும் பூ லோகமும் மற்று எல்லா உலகங்களும் விலை போதா -பருவத்தின் மிக்க இளமையை சொன்னவாறு
நாயகனை வசப்படுத்தும் சாதனங்கள் இல்லை என்றவாறு
ஸ்வாபதேசம் -ஆழ்வாருடைய ஆற்றாமையைக் கண்ட ஞானிகள் –எம்பெருமானை அடைய பக்தி முதலியன நிறையாமல் இருக்க -த்வரிப்பது ஏனோ –
முலை -பக்தி முதிர்ந்து பேற்றுக்கு சாதனமான பரம பக்தி அடைய வில்லை
மொய் பூம் குழல் குறிய-தலையால வசப்படுத்தும் பிரணாமம் பூர்ணமாகத் தோன்ற வில்லை
கலையோ அரையில்லை-மடிதற்று தான் முந்துறும் -திருக் குறள்-அரையில் ஆடையை இறுக உடுத்திக் கொண்டு முந்துற்று
கிளம்பும் முயற்சியில் இல்லை -முயற்சியை அதன் காரணத்தால் கூறின படி
நாவோ குழறும் -இடை விடாத பகவத் திரு நாம சங்கீர்த்தனம் இல்லை
கடல் மண்ணெல்லாம்-விலையோ வென மிளிரும் கண் -ஞானத்தின் சிறப்பு -மிளிரும் -த்யானம் -அவ்வறிவை
ஓர் இடத்தில் நிலை நிறுத்தி -த்யான ரூபமான ஞானம் இல்லை
இவள் பரமே-பரதந்த்ரராய் இருப்பார்க்கு -சாதனம் ஒன்றுமே இன்றி இருக்க இத்தனை விரைவு த்வரை கூடுமோ –
பெருமான்-மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே -வெருவதாள் வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
-என்கிறபடியே திருமலையையே வாய் புலத்தும் –
ஆழ்வார் திருவவதரித்தது முதலே எம்பெருமானால் அல்லது தரியாமையைச் சொன்னவாறு –

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: