திரு விருத்தம் -பாசுரங்கள்–41-50–திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை
ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் ஓங்கு அசுரர்
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்
மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே–41-

வாடைக்கு வருந்தின நாயகி வார்த்தை -நான் வாடைக்கு வருந்துவதைக் கண்டு ஊரார் அலர் தூற்றும் படி ஆனதே –
இப்படி அன்றோ இவ்வாடை என்னை கொலை செய்கிறது –நிறை பழி –நாயகியையும் நாயகனையும் பற்றிய பழி –
புன் வாடை -மந்த மாருதம் –
ஸ்வாபதேசம்என்றும் புன் வாடை இது கண்டு அறிதும்-எப்பொழுதும் வருத்தும் தன்மையான இவ்வுலகப் பொருளை கண்டு அறிவோம் –
இவ்வாறு வெம்மை-ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் -இப்படிப் பட்ட பொருளின் தன்மையும் கூறியும் ஒரு படியாலும் எம்மால் கூற முடியாத படி மிக்கு உள்ளன
சரண் அடைந்தும் இங்கனம் பரிபவப் படுகிறேன் என்று உலோகர் பழி இடும் படி
பேற்றுக்குத் தான் ப்ரவர்த்திக்கையும் பழி இ றே -நம்பிள்ளை –

————————————————————————–

வன் காற்றறைய வொருங்கே மறிந்து கிடந்தலர்ந்த
மென் கால் கமலத் தடம் போல் பொலிந்தன மண்ணும் விண்ணும்
என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒருத்து வான் நிமிர்ந்த
தன் பால் பணிந்த என் பால் எம்பிரான் தடக் கண்களே -42-

நாயகன் நோக்கில் ஈடுபட்ட நாயகி அருளிச் செய்யும் பாசுரம் -இப்பாசுரம் ஒட்டியே -ஸ்ரீ ரெங்கராஜா உத்தர சாதகத்தில் –
ஸ்ரீ ரெங்கேசய சரணம் மமாசி வாத்யாவ்யா லோலாத் கமல தடாக தாண்டவேந -என்பர் ஸ்ரீ பட்டர்
தம் பக்கல் பரிபூர்ண கடாக்ஷம் பண்ணி அருளியதை அனுபவித்து அருளிச் செய்த பாசுரம்
வன் காற்றறைய-தடையில்லாத நடையையுடைய கருணையால் தூண்டப பட்ட கடாக்ஷ வீக்ஷணம் -காருண்ய மாருத நீதை -என்பர் திருக் கச்சி நம்பிகள்
வொருங்கே மறிந்து கிடந்தலர்ந்த-ஆழ்வார் பக்கல் அபிமுகமாய் நோக்கி மலர்ந்தமை -எங்கும் பக்கம் நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே
மென் கால் ஆவது -அருள் நோக்குக்கு மூலமான திரு உள்ள நெகிழ்ச்சி
கமலத் தடம் போல் -நிறம் குளிர்ச்சி பிறப்பால் உண்டான போக்யதை –
மண்ணும் விண்ணும் எம்பெருமான் பாதங்களுக்கு இடம் இல்லாமையை கம்பரும் -நின்ற கால் மண் எல்லாம் பரப்பி
யப்புறம் சென்று பாவிற்றிலை சிறிது பாரென ஒன்ற வானகம் எல்லாம் ஒடுக்கி யும்பரை வென்ற கால் மீண்டது
வெளி பெறாமையே -என்றும் உலகெல்லாம் உள்ளடி அடக்கி –
தன் கால் பணிந்த -தன்னிடத்தில் ஈடுபட்ட என்றுமாம் –

————————————————————————–

கண்ணும் செம் தாமரை கையும் அவை அடியோ அவையே
வண்ணம் கரியதோர் மால் வரை போன்று மதி விகற்பால்
விண்ணும் கடந்தும் பரப்பால் மிக்கு மற்று எப்பால் யவர்க்கும்
எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே -43-

கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண்ணனையும் அரவிந்தம் அடியும் அஃதே -ஆழ்வார் அக கண்ணுக்கு புலப்பட்ட எம்பெருமான் வடிவு அழகில் ஈடுபட்ட இது எமக்கே அன்றி நித்ய ஸூரிகளுக்கும் நிலம் அல்ல என்கிறார் –
யாவர்க்கும் என்பது யவர்க்கும் என்று குறுகி உள்ளது –

————————————————————————–

நிறமுயர் கோலமும் பேருமுருவமும் இவை இவை என்று
அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கு அங்கு எல்லாம்
உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி யொன்றும்
பெற முயன்றார் இல்லையால் எம்பிரான் பெருமையே -44-

நாயகன் பெருமையை நாயகி அருளிச் செய்யும் பாசுரம் -வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்-ஊழ் கொண்ட சமயத் தன்னான் உருவு கண்டாரை ஓத்தார் -கம்பர் –
அறமுயல் ஞானச் சமயிகள்-தர்ம மார்க்கத்தால் முயன்றும் என்றும் அற முயல் -மிகவும் முயன்று என்றுமாம் –
அளவிட ஒண்ணாத தன் பெருமையையும்   மகிமையையும் அவன் காட்டக் கண்டு மகிழ்ந்து பேசுகிறார் –
நிறமுயர் கோலமும் பேருமுருவமும் இவை இவை என்று-நிறம் -முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும்-நிலை நின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் /
கோலம் -கௌஸ்துபாதிகள் / பேர் – பேரும் ஓர் ஆயிரம் கொண்ட பீடுடையான் / உரு –மத்ஸ்ய கூர்மாதி ரூப பேதங்கள்

————————————————————————–

பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல்
ஒருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவருளரே தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும்
மறுங்கே வர பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே -45–

நீரிடை உதவியை நினைத்து-எண்பது கோடி நினைத்து எண்ணுவன் – நாயகி அருளிச் செய்யும் பாசுரம் –
பூமிப பிராட்டிக்கு செய்து அருளின-உபகாரம் தமக்கு -தானே -அன்றியும்
பின்னை கொல்-நிலா மா மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள்-அன்றோ பராங்குச நாயகி
ஒருங்கே -எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –
இவ்வகாலம்-தம்மை மதியாமல் அழிய மாறி-என்றோ பண்ணி அருளினாலும் அன்பின் மிகுதியால் இப்பொழுது நடப்பது போலே –
சம்சார பிரளய வெள்ளம் தாண்ட பூர்ண காடாக்ஷம் வைத்து அருளினான் -நெஞ்சே கலக்கம் தெளிந்து வாழ்வாயாக -என்கிறார் –

————————————————————————–

மட நெஞ்சம் என்றும் தமது என்றும் ஓர் கருமம் கருதி
விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் அப் பொன் பெயரோன்
தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக் கீழ் விடப் போய்
திட நெஞ்சமாய் எம்மை நீத்தன்று தாறும் திரிகின்றதே -46-

விட நெஞ்சை உற்றார்-விஷம் போலே கொடிதான மனத்தை உற்றார் -அதற்கு உரியவர் /விடவோ அமையும்–விட அமையுமோ -தூது விடத் தகுமோ -தகாது என்றும் உரைக்கலாம்
ஓர் கருமம் கருதி–நெஞ்சை உற்றார்-விட அமையுமோ–ஒரு காரியத்தைக் குறித்து மனத்தைத் தூது விடத் துணிந்தவர்கள்
-அப்படி விடுவதில் காட்டிலும் அந்த காரியத்தை கை விடவே அமையும் -என்றவாறு
மறந்து அங்கேயே இருந்ததே -போய்-திட நெஞ்சமாய் -போகும் பொழுது எனது பிரிவாற்றாமையை நோக்கி நெகிழ்ச்சி கொண்டு இருக்க
-அங்கே போன பின்பு அவனைப் போலவே வன்மை கொண்டு விட்டதே –
திரிகின்றதே-நம்மை அல்லது தஞ்சம் இல்லாதவரை தனியே விட்டு வந்தோமே அனுதாபித்து ஓர் இடத்தில்
விழுந்து கிடாமல்-உல்லாசம் தோற்ற தான் நினைத்தபடி திரிந்து கொண்டு இருக்கின்றதே –
கீழ் பாட்டில் ஸ்ரீ வராஹ அவதாரத்தில் ஈடுபட்டு இதில் ஸ்ரீ நரசிம்ஹ அவதாரத்தில் ஈடுபட்டு மீட்க முடியாத படி ஆழ்ந்தபடியை அருளிச் செய்கிறார் –

————————————————————————–

திரிகின்றது வடமாருதம் திங்கள் வெந்தீ முகத்து
சொரிகின்றது அதுவுமது ,கண்ணன் விண்ணூர் தொழவே
சரிகின்றது சங்கம் தண்ணம் துழாய்க்கு வண்ணம் பயலை
விரிகின்றது முழு மெய்யும் என்னாம் கொல் என் மெல்லியற்கே –47–

திரிகின்றது வடமாருதம்-மத களிறு ஆளைக் கணிசித்து உலாவுமா போலே -வருத்தம் செய்வதில் கருத்தை வைத்து
-திரிதல் -விகாரப்படுகிறது என்றுமாம் -இயற்கையான குளிர்ச்சி மாறி வெவ்விதாயிற்றே
திங்கள் வெந்தீ முகத்து-சொரிகின்றது -வெவ்விய நெருப்பை குடத்தையிட்டு மொண்டு சொரியுமா போலே –
வெந்தீ –லோகத்தில் உள்ள தீயில் வியாவர்த்திக்கிறது
அதுவுமது -மீண்டும் சொல்ல வாய் கூசி -அதுவும் –அது என்கிறாள் -படியின் மேல் வெம்மையைப் பகரினும் பகரு நா முடிய வெம் -கம்பர் –என்னலாம் படி
கண்ணன் விண்ணூர் தொழவே-சரிகின்றது சங்கம் –செயற்கை அழகு குலைந்தமை-
தண்ணம் துழாய்க்கு வண்ணம் பயலை-விரிகின்றது முழு மெய்யும்-இயற்க்கை அழகு குலைந்தமை
வாடை திங்கள் சொரியும் வெப்பத்துக்கு ஆற்றாமல் தண்ணம் துழாயை நாடி –துயரங்களை பொறுக்க மாட்டாத மென்மை உடையவள் –மெல்லியற்கே-
ஸ்வாபதேசம் -திரிகின்றது வடமாருதம் திங்கள் வெந்தீ முகத்து-சொரிகின்றது அதுவுமது-இனிய பொருள்கள் எல்லாம்
அவனை நினைவு படுத்தி ஆழ்வாரை இப்பாடு படுத்துகின்றனவே –
கண்ணன் விண்ணூர் தொழவே-சரிகின்றது சங்கம் -சர்வ ஸூலபன் எம்பெருமான் பரம பதத்தில் விருப்பம்-உண்டானதால் பார தந்தர்யம் இழக்க வேண்டி வருமே
தண்ணம் துழாய்க்கு வண்ணம் பயலை-விரிகின்றது முழு மெய்யும் –போக்யதையில் ஈடுபட்டு ஸ்வரூபமும் மாறி ஆற்றாமை விஞ்சிய படி
என்னாம் கொல் என் மெல்லியற்கே-எங்களுக்கு உரியரான ஆழ்வாருக்கு இது என்னாய் முடியுமோ –

————————————————————————–

மெல்லியல் ஆக்கைக் கிரிமி குருவில் மிளிர் தந்தாங்கே
செல்லியசெல் கைத்துலகை என் காணும் என்னாலும் தன்னைச்
சொல்லிய சூழல் திருமாலவன் கவியாது கற்றேன்
பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு பண்டு பண்டே-48 –

நல் நிமித்தம் கண்டு தலைவி ஆறி இருந்தமை –பல்லி குரல் கேட்டு -கொட்டாய் பல்லி குட்டீ -குடமாடி உலகு அளந்த
மட்டார் பூங்குழல் மாதவனை வரக் கொட்டாய் பல்லிக் குட்டீ -கலியன் -10 -10 – 4 –
புருஷோத்தமன் இடம் ஈடுபட்ட தனக்கு புண்ணில் வெளிப்பட்ட புழுவை உபமானமாக கூறியது அதனை யன்றி வேறு ஒன்றை அறியாமை சாதரம்யம்
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது அடியேன் நான் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் -கலியன் -11-8-7-நிஹிந உவமை குற்றத்தின் பால் படாது –
என்னாலும் தன்னைச்-சொல்லிய சூழல் திருமாலவன் –உம்மை உயர்வு சிறப்பு உம்மை -காமுற்ற பெண்ணுக்கு அணிகலம் நாணுடைமை
-பரவசப்பட்டு அவன் விஷயமாக வாய் பிதற்றும்படி மோகத்தை உண்டாக்கியவன் -பிதற்றும் படி காம வேதனை படுத்தினவன்
-பெரிய பிராட்டியார் பக்கல் வேட்க்கை மிக்கு உள்ளவன்
பல்லியின் சொல்லும்-இழிவு சிறப்பு உம்மை -விவேக உணர்ச்சி இல்லாத ஐந்து
ஆழ்வீர் இப்படி த்வரை விஞ்சி பரம பதத்துக்கு விரைய துடிக்க வேண்டுமோ -உம்மைக் கொண்டு கவி பாடுவித்து
உலகத்தை திருத்த அன்றோ வைத்துள்ளான் -என்ன
தம் தாழ்வை –மெல்லியல் ஆக்கைக் கிரிமி குருவில் மிளிர் தந்தாங்கே-செல்லியசெல் கைத்துலகை என் காணும்
அல்ப ஞானம் சக்தி கொண்ட நான் -நைச்யத்துக்கு புழுவை உதாரணம் காட்டி
என்னாலும் தன்னைச்சொல்லிய சூழல் –நீசனான என்னைக் கொண்டும் -வியாஜமாக கொண்டதை சூழல் என்கிறார்
ஈஸ்வரன் தானே லோகத்தைத் திருத்துகைக்கு இவர் ஆவார் என்று அங்கீ கரித்து –என்னாலும் தன்னைச்-சொல்லிய சூழல் திருமாலவன் கவியாது கற்றேன்-என்னும் படி இவர் திரு உள்ளத்திலும் நாக்கிலும் நின்று இவர்
தம்மைக் கொண்டு தானே பிரவர்த்திப்பிக்கை யாலும் அத்யந்த வியாவருத்தராய் இருப்பார் ஒருவர் -என்பர் வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்
திருமாலவன் கவி -அவனும் பிராட்டியுமான சேர்த்தி போலே அவனும் கவியும் பொருந்தி -அவன் முன்னுருச் சொல்லி கொண்டு போக
நான் பின்னுருச் சொல்லிக் கொண்டு வந்த அவ்வளவே -நான் என் உணர்வால் கவி பாடினேன் ஆலன் -என்பதை –யாது கற்றேன் -என்கிறார்
நான் என் வசம் இழந்து பக்தி பரவசப் பட்டு வாய்க்கு வந்த படி பாடினேன் அவ்வளவே –
பரதந்த்ரமாக கூறும் சொல்லையும் என் இழிவு பாராது அங்கீ கரித்து பாராட்டுகிறார்கள் -என்பதை -பல்லியின் சொல்லும்
சொல்லாக் கொள்வதோ வுண்டு பண்டு பண்டே-அடுக்கு மிகுதியைக் காட்டும் -மிகு வெகு நாளாக -என்றவாறு –

————————————————————————–

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும் இப்பாயிருள் போல்
கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம் காள வண்ண
வண்டுந்துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய மண்ணேர் அன்ன ஒண்ணுதலே -49 –

காள வண்ணம் -வண்டுக்கும் எம்பெருமானுக்கு விசேஷணம் –மண்ணேர் அன்ன –ஒண் நுதலுக்கும் ஒண் நுதலாளுக்கும் விசேஷணம்
-பூமிப் பிராட்டி போன்ற சிறந்தவள்
உண்ணாது கிடந்தது ஓர் மாயையினால் என்னும் வீறுடைய முடிக்கு உரியவரோடு இத்திரு–மண்ணேர் அன்ன ஒண்ணுதல் பின்னை கொல் என்கிற ஒப்பு —ஆச்சார்ய ஹிருதயம் சூர்ணிகை -123-
கலந்து பிரிந்து பிரிவாற்றாத தலைமகள் ராத்திரி வியாசனத்தாலே தான் நோவு படுகிறபடியை தானே சொல்லுகிறாள் ஆதல் -தோழி வார்த்தை யாதல் –
ஸ்வாபதேசம் –எம்பெருமான் பல வகையாலும் பாது காத்த லீலா விபூதியை ஒரு புடை ஒப்புமை சொல்லத் தக்க
ஞான பிறப்பை திரு முகத்தில் விளங்கப் பெற்ற ஆழ்வார் -என்றும் திரு மண் காப்பைத் தரிக்க தகுந்த திரு நெற்றி உடையவர் -என்றுமாம் –
வியாமோஹ அதிசயத்தை வியந்து கண்டும் இல்லோம் கேட்பதும் இல்லோம் அறிவதும் இல்லோம் -என்று பாகவதர்கள் சொல்வதாக கொள்ள வேண்டும் –

————————————————————————–

ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நன் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ கடா கின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே – 50-

பொருள் ஈட்டி வரும் நாயகன் தேர் பாகனை விரைந்து தேரை நடத்த கட்டளை இடுகிறான் -ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை-விரைந்து நன் தேர்நண்ணுதல் வேண்டும் வலவ -ஆகையால் விரைந்து கடாக -என்று அந்வயிப்பது -பசலை நிறம் படர்ந்து விட்டால்
அது தன்னாலும் மீட்க ஒண்ணாதே –-வலவ கடாக இன்று -என்றும் கடாகின்றி நண்ணுதல் வேண்டும் -என்றுமாம்
திரு வேங்கட மலையை நோக்கி கடாக வேண்டும் -இத்தால் பராங்குச நாயகி திரு வேங்கடத்தில் ஆழ்ந்தமை காட்டும் –
கீழே -8- பாட்டில் இது எல்லாம் அறிந்தோம் மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்து உம்பர் நம்பும் சேண் குன்றம் சென்று
பொருள் படைப்பான் காட்டாது திண்ணனவே -பொருள் ஈட்டச் சென்றது -திரு வேங்கட மலைக்கு என்று அருளிச் செய்தார்
-இதில் திரும்பி வந்து அங்கு நோக்கி செல்வதாக சொல்வதில் முரண் இல்லை
அழகிய மணவாளர் ஜீயர் -இவ்விடத்தில் மா மலைக்கே என்கிற இடம் ஆழ்வாருக்கு அணித்தான-தெற்குத் திருமலை ஆகவுமாம்-திரு மாலிருஞ்சோலையை சொன்னபடி
தேன் நவின்ற-விண் முதல் நாயகன் நீண் முடி –தேன் நவின்ற முடி என்று அந்வயம் -இயற்கையிலே பரிமளம் மிக்க
திருக் குழல் -செண்பக மல்லிகை இத்யாதி நல் மலர்களை எப்பொழுதும் தரித்து உள்ளதாகையாலும் –
மிக்க போக்யத்தையால் எம்பெருமானே தேன் -திருவரங்கத்தே வளரும் தேன் –அன்றிக்கே தேன் நவின்ற மா மலைக்கே -என்று திரு மலைக்கு என்றுமாம்
தேன் -மதுவும் வண்டும்/ விண் முதல் நாயகன்-விண்ணுலகத்துக்கு முதன்மையான நாயகன் -வின் முதலிய உலகண்டகு எல்லாம் நாயகன் என்றுமாம்
திருமுடி முதல் திருவடி வரை தொங்கும் முத்து மாலை வெள்ளருவிக்கு வாய்த்த உவமை
மா மலைக்கு நண்ணுதல் வேண்டும் -கூடும் இடம் குறிஞ்சி -குறிஞ்சி நிலத்து தலைமகள் –
ஸ்வா பதேசம் -ஆழ்வார் ஆற்றாமை உணர்ந்து தேசாந்திர ஸ்ரீ வைஷ்ணவர்கள் விரைகின்றார்கள் -எம்பெருமானையும்
எம்பெருமான் அடியாரையும் பிரிதலாகிய துயரை ஆற்றி ஆழ்வாரை தேற்ற மநோ ரதம் கொண்டு மநோ ரதத்தை சொல்ல வல்ல -தம் நெஞ்சை தூண்டுகிறார்கள்
ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை-திவ்யமான ஊர்த்தவ புண்டரத்தால் விளங்கும் நெற்றி உடைய ஆழ்வார் இயற்க்கை வண்ணம் கெடாத படி
மலை -ஆழ்வார் எழுந்து அருளும் மேலான இடம் -உயர்த்தி தோன்ற மா மலை என்கிறார் –

———————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: