திரு விருத்தம் -பாசுரங்கள்–31-40-திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல்
அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் அம் பொன் மா மணிகள்
திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து வன் தாட்சி மயம்
மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே – –31-

பதவுரை

அம்பொன்–அழகிய பொன்னும்
மா மணிகள்–சிறந்த ரத்னங்களும்
திசை–திக்குகள் தோறும்
மின் மிளிரும்–மின்னல்போல ஒளி வீசப்பெற்று
திருவேங்கடத்து–திருவேங்கட மலையினது
மேகங்கள்–மேகங்களானவை
தூது இசைமின்கள் என்று இசைத்தால்–(நீங்கள் எமக்காகத்) தூதுக்கு இசைந்து சென்று சொல்லுங்கள்’ என்று சொல்லி வேண்டினால்
இசையிலம்–(அதற்கு உடனே) உடன் பட்டுச் செல்லக் காண்கிறோமில்லை;
வல்தாள் சிமயம் மிசை–வலிய அடிவாரத்தையுடைய சிகரத்தின் மேலே (சிகரத்தை நோக்கி).
மின் மிளிரிய போவான்–மின்னல்கள் விளங்கச் செல்லும் பொருட்டு
வழிகொண்ட–பிரயாணப்பட்ட
என் தலைமேல் அசைமின்கள் என்றால்-நீங்கள் என் தலையின்மேல் பொருந்துங்கள் என்று வேண்டினால்
அசையும் கொல் ஆம்–(அவை அங்குச்) செல்லக் கூடுமோ?

கைம்மாறு கருதாமல் உதவும் மேகங்களை -தூது -அவையும் உடன் படாமையாலே -திருமலைக்குச் செல்லும் பாக்யம் உள்ள நீங்கள்
உங்கள் பாதத்தை என் தலை மேல் வைத்தாவது போகுமுன் –
திரு மலை நோக்கி போகும் மேகங்காள் !-என் உடைய தூது வாக்யங்களை கொண்டு போகுங்கள் என்றால்-சொல்லுகிறிலி கோள்-
-திரு மலைக்கு போகிற பராக்கிலே பேசாதே போகிற்றவற்றை கண்டு சொல்ல மாட்டி கோள் ஆகில்உங்கள் திரு அடிகளை
என் தலையில் வையும் கோள் என்றால் வைப்புதிகளோ ?திரு மலைக்கு போவோர் திரு அடிகள் தலையில் வைக்க கிடைக்குமோ ?
திரு அடியை பிராட்டி -இங்கே ஒரு இரா தங்கி போக வேணும் -ஸுந்தர காண்டம் -விஸ்ராந்த -68-3-என்று
அருளி செய்ய ஒண்ணாது ஒண்ணாது என்று அவன் மறுத்து போனால் போல போகா நின்றன–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூ க்திகள்
சிரசில் அவை காள் படும்படி பிரார்த்தித்து சரணம் செய்தால் பலிக்கும் என்று -விஸ்வஸித்து-
யாரேனும் வழி நடந்து செல்வாராம் திவ்ய தேச யாத்திரை செல்கிறார் என்று இருப்பாரே ஆழ்வார்
வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என் திரு வாழ் மார்பற்கு என் திறம் சொல்லார் செய்வது என் –
என் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும் செங்கால மட நாராய் -திரு மூழிக் களத்து-உறையும் கொங்கார் பூந்துழாய் முடி எம் குடகு கூத்தற்கு என் தூதாய் நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ னுமாரோடு -போலே
தூது போவாரைத் திருவடி தன் தலை மேல் சொல்வது உண்டே
ஸ்வா பதேசம் -சர்வசக்தன் இடம் சென்ற நெஞ்சை மீட்க்கப் போமோ என்று கை விட திவ்ய தேச யாத்திரை செல்லும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை அவன் இடம் தம் குறை விண்ணப்பம் செய்ய -புருஷகாரமாக அவர்களை வரிக்க-அவர்கள் உடன்படாமல் இருக்க
-எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே –என்கிறபடி
அவர்கள் திருவடிகளை தம் தலை மேல் வைப்பதும் புருஷார்த்தம் ஆகும் -என்கிறார் –

————————————————————————–

மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி யொக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருந்துத்தவ மா மருள் பெற்றதே –32-

பதவுரை

மேகங்களே–ஓ மேகங்களே!,
திருமால் திருமேனி ஒக்கும் யோகங்கள்–எம்பெருமானது திருமேனியை யொத்திருக்கும்படியான உபாயங்களை
உங்களுக்கு எவ் ஆறு பெற்றீர்–உங்களுக்கு (ஸித்திக்கும்படி) எவ்விதமாய் அடைந்தீர்கள்?
உரையீர்–சொல்லுங்கள்;
உயிர்–உயிர்களை
அளிப்பான்–பாதுகாக்கும் பொருட்டு
நல் நீர்கள் சுமந்து–நல்ல ஜலத்தைத் தரித்து
மா கங்கள் எல்லாம் திரிந்து–பெரிய வானங்களிலெல்லாம் ஸஞ்சரித்து
நும் தம்–உங்களுடைய
ஆகங்கள் நோவ–உடம்புகள் நோகும்படி
வருந்தும்–(அவ்வுடம்புகளை) வருந்திச் செய்த
தவ ஆம்–தபஸ்ஸோ
அருள் பெற்றது–(அவ் வெம்பெருமான) அருளை நீங்கள் பெற்ற காரணம்?.

பொய்கையார் -மாலும் காருங்கடலே என் நோற்றாய் வையகமுன்டு ஆலின் இலைத் துயின்ற ஆழியான் –
கோலாக் கரு மேனி செங்கண் மால் கண் படையுள் என்றும் திருமேனி தீண்டப் பெற்று -என்றால் போலே இங்கே மேகங்களே என்ன தவம் புரிந்தீர் –
கரும் பெரும் மேகங்கள் காணில் கண்ணன் என்று ஏறப் பறக்கும் -நன்று பெய்யும் மழை காணில் நாரணன் வந்தான் என்று ஆலும்-
ஒக்கும் அம்மான் உருவம் என்று உள்ளம் குலைந்து நாளும் நாளும் தொக்க மேக்கப் பல் குழாங்கள் காணும் தோறும் தொலைவன் நான் –
மேகங்களோ -ஓ தூரமாக இருந்தாலும் கேட்க்கும்படி கூப்பிடுகிறாள் -நாராயணா ஓ மணி வண்ணா நாகணையாய்
யோகம் -ஒத்து இருக்க காரணமான உபாயம் –/ மாகங்கள் -ஒரு பொருளின் பல இடங்களைக் குறிக்கும் –
நீர்கள் -பன்மை மிகுதி -மேகம் பல நீரும் பல
-ஸ்வா பதேசம் –ஆழ்வார் பாவனையால் முக்தர்களைக் கண்டு சாரூப்பியம் எவ்வாறு பெற்றீர்
அத்யந்த அனந்த அற்புதமான வானவர் தம் பிரான் பாதமா மலர் சூடும் பக்தி இல்லா பாவிகள் உய்ந்திட-
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே காதல் செய் தொண்டர் -பெருமாள் திருமொழி -2-6–
கைம்மாறு கருதாமல் உலாவுதலால் பெற்ற பேறு அன்றோ –

————————————————————————–

அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண் பால்
பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
தெருளோம் அரவணையீர் ! இவள் மாமை சிதைக்கின்றதே –33-

பதவுரை

அரவு அணையீர்–ஆதிசேஷசயனத்தை யுடையவரே!
அருள் ஆர் திரு சக்கரத்தால்–கருணை நிறைந்த திருவாழியைக் கொண்டு
அகல் விசும்பும்–பரந்த விண்ணுலகத்திலும்
நிலனும்–மண்ணுலகத்திலும்
இருள் ஆர்வினை கெட–இருளையொத்த கொடிய தொழில்கள் நிகழாதபடி
(துஷ்ட நிக்ரஹஞ் செய்து)
செங்கோல் கடாவுதீர்–உமது கட்டளையைத் தடையன்றிச் செலுத்துகிறீர்.
(அப்படி லோகங்களை ரக்ஷிக்கிற நீர்)
இவள்–இப்பராங்குச நாயகியினுடைய
மாமை–மேனி நிறத்தை
சிதைக்கின்றது–அழிப்பதானது
ஈங்கு–‘இவ்வுலகத்தில்
ஓர் பெண்பால்–ஒரு பெண்ணைக் காப்பது
பொருளோ எனும்–புருஷோத்தமோ’ என்கிற
இகழ்வோ–அவதாரமோ?
(அல்லது)
இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ–(உம்மால் ரக்ஷிக்கப்படுகின்ற) விண்மண்ணுலகங்களுக்கு உள்ளாகாமல் வெளியாயிருப்பவளொருத்தியிவள்’ என்ற எண்ணமோ?
தெருளோம்–அறிகின்றிலோம்

தம்மால் காக்கப் படும் உலகங்களுக்கு உட்படாமல் பஹிர்ப்பூதையோ நான் –
அருளார் திருச்சக்கரம் -அருளாழி புள் கடவீர் போலே அருளே வடிவமான –
அரவணையீர் -இத்தசையிலும் உமக்கு படுக்கை பொருந்துவது -படுக்கைக்கு மேல் விரி வேண்டாவோ -தனிக்கிடை கூடுமோ
இவள் மாமை -இவன் தானே கை தொட்டு அழிக்கிறான் என்னும் படி
இவனோட்டை சம்பந்தம் -பிராப்தியை திரு தாயார் அறிந்து-உணர்ந்து இருந்த படி
பிரஜை கினற்றினில் விழுந்தால் வாங்காத தாய் தள்ளினாள் என்னுமோ பாதி
ரஷகன் ஆனவன் ரஷியாது ஒழிந்தால் அவ்வளவும் சொல்லலாம் இறே ,-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூ க்திகள் –
ஸ்வா பதேசம் -ஆழ்வார் நிலை கண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் எம்பெருமான் இடம் விண்ணப்பம்
கையும் திருவாழி யுமான அழகைக் காட்டி பிரியாமையாலே ரஷிக்கும் அங்குள்ளாரை -அத்தைக்கு கொண்டு
விரோதிகளை இரு துண்டாக்கி ரஷிக்கும் இங்குள்ளாரை -நம்பிள்ளை ஸ்ரீ ஸூ க்திகள் -அசக்தியும் பாரதந்தர்யமும் அநாதரத்துக்கு உறுப்பு இல்லாமையாலும் விபூதி த்வய வ்யாவ்ருத்தி
வைலஷண்யத்துக்கு உறுப்பாகையாலும் அங்கீகார ஹேது உண்டு என்றபடி
அரவணையீர் என்கையாலே அங்கே நித்ய சம்ச்லேஷம் நடக்கிற படி சொல்லுகிறது –

———————————————————–

சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி தன் சீர் அடியால்
உதைக்கின்ற நாயகம் தன்னொடு மாலே உனது தண்டார்
ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்
பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற் பால் அதுவே -34-

பதவுரை

மாலே–எம்பெருமானே
ஆழி–கூடல் வட்டமானது
சிதைக்கின்றது–காரியத்தைக் கெடுக்கின்றது
என்று–என்ற காரணத்தினால்
ஆழியை–அக்கூடல் வட்டத்தை
சீறி–கோபித்து
தன் சிறுஅடியால்–தனது சிறிய கால்களால்
உதைக்கின்ற–உதைக்கும் படியான மேம்பாடுடனே
உனது–உன்னுடையதான
தண் தார் ததைக்கின்ற–வாடாத மலர்கள் நிறைந்த
தண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய திருத்துழாயை
அணிவான் அதுவே மனம் ஆய்பதைக்கின்ற–சூடும் பொருட்டு அதிலேயே கருத்தாய் வருந்துகிற
மாதின் திறத்து–இம்மங்கை விஷயத்தில்
செயல் பாலது–செய்யததக்கதை
அறியேன்–யான் அறிகின்றிலேன்.

தெள்ளியார் பலர் கை தொழும் தேர்வானார் -ஆண்டாள் கூடல் இழைக்கும் பதிகம் –
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே -கூட்டுமாகில் நீ கூடிடு கூடிலே -கோ மகன் வரில் கூடிடு கூடிலே –
கூடலாவது -வட்டமாக கோட்டைக் கீறி -அதுக்குள்ளே சுழி சுழியாகச் சுற்றும் சுழித்து-இவ்விரண்டு சுழியாகக் கூட்டினால்
-இரட்டைப் பட்டால் கூடுகை -ஒற்றைப் பட்டால் கூடாமை -என்று ஸங்கேதம்
பிரிந்தார் இறங்குவது நெய்தல் நிலம் -ஆகையால் கடல் கரையில் கூடல் இழைப்பர்
சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி-அதனைச் சீறி -என்னாமல்-ஆழியை -சுட்டுப் பெயர்
ஆழி சிதைக்கின்றது -கூடல் வட்டம் கார்யம் கெடுப்பதாக -தன் கார்யம் கை கூடாமை –வெறுப்புக்கு கொண்டு
காலால் உதைக்கின்ற -சீறடி -சீற்றம் கொண்ட அடி -சிறிய அடி
தண்டார்-ததைக்கின்ற–மாலையாகத் தொடுக்கப் பட்ட – வாடாத மலர்கள் நிறைந்த
ஸ்வாபதேசம் –ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆழ்வார் ஆற்றாமை கண்டு விண்ணப்பம் செய்கிறார்கள் –
சிதைக்கின்ற தாழி -தம் கையால் செய்யும் தொழில் முயற்சி பேற்றுக்கு காரணம் ஆகாது என்று அறிந்து
ஆழியைச் சீறி -அவ்வுபாயத்தைக் கைக்கு கொள்ளாது வெறுத்து
தன் சீர் அடியால்-உதைக்கின்ற -அவ்வுபாயத்தை கால் கடைக்கு கொண்டு தள்ளிவிடுகிற
ஆழ்வார் ஆற்றாமையை தணிக்கும் உபாயம் நீயே அறிவாய் மாலே -மகா புருஷனான நீ இப்படி உபேக்ஷிப்பது உன் பெருமைக்கு சேருமோ
தனது கூடலை அழிக்கும் கடலை சீறி என்றுமாம்
அவன் வரும் அளவும் ஆறி இருக்க ஒண்ணாமை யாலேகூடல் இழைக்க தொடங்கினாள்–அது தப்பின படியை கண்டு ,
நாயகன் தன்னை கண்டால் கோபிக்குமோ பாதி கூடலோடே கோபிகிறாள்-
முன்புள்ளார் கூடல் இழைக்க புக்கவாறே-அது சிதறி வருகிற படியை கண்டு-அத்தோடு சீறி அருளா நின்றாள் என்பார்கள்
பட்டர்–இது கூடுகைக்கு ஏகாந்தம் இன்றியே-பிரிகைக்கும் ஒரு புடை உண்டாய் இருக்கையாலே ,-சீறி உதையா நின்றாள் -என்று .
.கூடல் இழைக்க புக்கவாறே-கடல் ஆனது திரை ஆகிய கையால் அழிக்க புக்க வாறே -அத்தோடு சீறா நின்றாள்-
நாயகனும் வரவு தாழ்ந்தவாறே ,கடலோடு சீரும் அத்தனை இறே-
-சாபமானாய /ராமோ ரக்தாந்த லோசன -என்ன-கண் சிகப்பாய் வில்லை கொடு வா என்னும் இத்தனை இறே-

———————————————————————–

பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த
மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை உலகு அளந்த
மால் பால் துழாய் க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்
சோல்வான் புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே –35-

பதவுரை

பால் வாய் பிறை பிள்ளை–அமிருத கிரணத்தை வெளியுமிழகிற தன்மையையுடைய இளம் விறைச் சந்திரனாகிய பால்மாறத வாயையுடைய (தனது) இளங் குழந்தையை
ஒக்கலைகொண்டு-தனது இடைப்புறத்திலே (ஒரு பக்கத்திலே) வைத்துக்கொண்டு
பகல் இழந்த மேல் பால் திசை பெண்–ஸூர்யனாகிய கணவனையிழந்த மேற்கு பக்கத்துக் திக்காகிய பெண்
புலம்பு உறும்–வருந்தி அழப்பெற்ற மாலைப் பொழுதானது
உலகு அளந்த மால் பால்–உலகங்களை அளவிட்ட திருமாலினிடத்து உள்ள
துழாய்க்கு–திருத்துழாய்க்கு
மனம் உடையார்க்கு–ஆசைப்பட்ட நெஞ்சையுடையவர்களுக்கு
நல்கிற்றை எல்லாம்–அருள் செய்த உதவியை முழுவதும்
சோல்வான்–கவர்ந்து கொள்ளும் பொருட்டு
புகுந்து–வந்து
இது ஓர் பணிவாடை–இந்தக் குளிர்ந்ததொரு காற்று.
துழாகின்றது–(என்மேல்) தடவுகின்றது; அந்தோ!

இது வோர் பனி வாடை-வாடையின் கொடுமையை வாய் கொண்டு கூற முடியாமல் –இது -சுட்டிக் காட்டுகிறார்
-ஓர் -வேறு துணை இன்றி தானே அஸஹாய ஸூரனாய் நலியும் படி /
பனி வாடை-முன்பு குளிர்ந்த நிலை இன்றோ வெவ்வியதாய் இருக்கும் -ஸ்திரீகளை நடுங்கவைக்கும் வாடை என்றுமாம் /
துழா கின்றதே-மர்ம ஸ்தானத்தில் கை வைத்து வாட்டும்
ஓர் வாடை -நிலா மாலைப் பொழுது கடலோசை சேர்ந்து நெளிவதை தானே பண்ண வற்றாய் இருக்கை
பகல் இழந்த-மேல் பால் இசை பெண் புலம்புறு மாலை -மாலைப் பொழுதும் தம்மைப் போலே வருந்தும்
சந்திரன் ஆகிய பால் மாறாத வாயை யுடைய இளம் குழந்தையை இடுப்பில் வைத்து கணவனை இழந்ததை சொல்லி கதறி அழுவது போலே அன்றோ மாலைப் பொழுது –
உலகு அளந்த-மால் பால் துழாய் க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்-சோல்வான் புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே –
மாலை இவளை முடிக்காமல் உயிரை விட்டுப் போக அத்தையும் கொண்டு போக வந்ததே இவ்வாடை
மனம் உடையார்க்கு -தம்மைப் போலே உள்ளார்க்கு
ஸ்வாபதேசம் -பால் வாய் பிறைப் பிள்ளை–ஞானத்தின் சிறு பகுதி
பகல் இழந்த-விவேகம் குலைந்த நிலை –
மேல் பால் திசை பெண்-மற்றையோர்க்கு மேன்மை வழி காட்டும் பர தந்த்ரர் /புலம்புறு-ஆற்றாமை மிக்கு / மாலை -உரிய காலம் /
ஆற்றாமைக்கு மேலே சம்சார பதார்த்தங்களும் நலிய -உலகு அளந்த மால் -தானே தீண்டியவன் வேண்டுகின்ற என்னை ஆள் கொள்ளாமல் ஒழிவதே

———————————————————————–

துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தராது பெயரா
எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –36–

பதவுரை

துழா நெடு சூழ் இருள் என்று–(கண்ணுக்குப் பொருள்கள் புலப்படாமையால் கைகளால்) தடவித் தேட வேண்டும்படியான முடிவில்லாத நிறைந்த இருட் பொழுதென்று (ஒரு பேரிட்டுக் கொண்டு)
எழா நெடு ஊழி எழுந்த–(முன்பு ஒருகாலும்) தோன்றியறியாத நீண்ட கல்பம் தோன்றின.
இக்காலத்தும்–இச்சமயத்திலும்
ஈங்கு இவளோ–இவ்விடத்துத் தனிமை பொறுக்க மாட்டாதிருக்கிற இவளோ
தம் தண் தார் அது பெயர் ஆ–நமது குளிர்ந்த திருத்துழாய் மாலை விஷயமாக (துழாய் மாலை யென்னும் பெயரையே உருவிட்டுச் சொல்லிக்கொண்டு)
வழா நெடு துன்பந் தன்–தவறுதலில்லாத மிக்க (முடிவில்லாத) துன்பமுடையவன்
என்று–என்று இவள் நிலைமையைத் திருவுள்ளத்திற்கொண்டு
இரங்கார்–(தலைவர்) இரக்கங் கொண்டு வந்து அருளுகிறாரில்லை;
அம்மனோ–அந்தோ!
இலங்கை–இலங்காபுரியிலுள்ள
குழாம்–கூட்டமான
நெடுமாடம்–பெரிய மாளிகைகளை
இடித்த–(தம் சேனையைக் கொண்டு இடித்துத் தள்ளின
பிரனார்–தலைவருடைய
கொடுமைகளே–கொடுந்தன்மைகள் இருந்தபடி என்னே!.

சந்த்யா காலமும் வாடையும் கீழே சொல்லி மேலே இருளும் வந்து தோன்ற -நான் முன்னே நான் முன்னே என்று நலியும் படி –கொடுமைகள் -பன்மை
அம்மனோ -ஐயோ என்பது போலே
கடல் வழி விட நிசிசரர் பொடி பட விரு கண் சீறி வட கயிலையில் எழு விடை தழுவியது மறந்தாரோ
அடல் அரவம் அமளியில் அறி துயில் அமரும் அரங்கேசர் இடர் கெட வருகிலர் முருகலர் துளவும் இரங்காரே
இவை செய்தது தம் பிரபுத்வம் நிலை பெற பிராட்டியை ரஷிக்க அன்று
இலங்கைக் -குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –-ஒருத்திக்காக கடலை யடைத்து-இலங்கையை ராமன் என்றும் லஷ்மணன் என்றும்
எழுத்து வெட்டின அம்புகளை புக விட்டுகே குட்டிச் சுவரும் மட்டைத் தெங்குமாக்கி மூலையடி போகப் பண்ணின இந்த உபகாரகனுடைய
இந்த நீர்மை எல்லாம் எங்கே குடி போயிற்றோ -என்று எம்பார் அருளிச் செய்தார் –
இதுவும் அழகியது ஒன்றாய் உண்டாய் இருக்கலாகாது என்று அ ஸூ யையாலே அழித்தான் அத்தனை காண் –
ஒருத்திக்காக உதவினன் அல்லன் காண் -என்பர் திருமலை நம்பி –
துழா-பிரிந்த நாயகியின் உயிரை கை விட்டுத் துழா கின்ற / சூழ் இருள் -தப்ப ஒண்ணாத இருள்
தம் தண் தராது பெயரா–வழா நெடும் துன்பத்தள்-திருத் துழாய் மாலை நிமித்தமாக துன்பப்படுகிறாள்
தம் தண் தராது பெயரா–வூழி எழுந்த-இவளை வருத்தவே இருள் என்னும் கல்பம் என்றவாறு
இருள் என்ற வூழி எழுந்த விக்காலத்தும்-வருகிற பொழுது சந்நியாசி எழும் பொழுது ராவணன் போலே இருளாக வந்து கல்பமாக ஆனதே
இரங்கார் -பிரணயித்தவம் இல்லா விடிலும் ஐயோ என்னவாவது வேண்டாவோ
நெடு ஊழி-கல்பத்துக்கும் எல்லை உண்டே -/ இக்காலத்திலும் -பிரளய காலத்தில் உதவினவன் இக்காலத்தில் முகம் காட்டாது இருக்கலாமோ –
ஸ்வாபதேசம் -துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தராது பெயரா-எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் கால விளம்பம் சஹியாத
மோஹ அந்தகாரம் உண்டு பண்ணும் காலம் நீடிக்க
ஈங்கு இவளோ-வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார்-இருள் தரும் மா ஞாலத்தில் சக்தி அற்ற ஆழ்வார் தம் போக்யத்தையே
கூறிக் கொண்டே அது பெறாமல் துடிக்க இரக்கமும் காட்ட வில்லையே
திருவவதரித்து அநிஷ்டங்களை போக்கி இஷ்டங்களை அருளும் நீர் இவர் பக்கல் இறங்காது இருப்பது என்னே

————————————————————————–

கொடும் காற் சிலையர் நிரை கோள் உழவர் கொலையில் வெய்ய
கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து அருவினையேன்
நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கால் ஓசியும் இடை இள மான் சென்ற சூழ் கடமே –37-

பதவுரை

அரு வினையேன்–அநுபவிக்க முடியாத தீவினைப் பயனையுடைய யான்
நெடு காலமும்–வெகு காலம்
கண்ணன்–கண்ணபிரானுடைய
நீள் மலர் பாதம்–நீண்ட தாமரை மலற்போன்ற திருவடிகளை
பரவி–வழிபட்டு
பெற்ற–அந்த ஆராதனையின் பயனாக ஈன்ற
தொடுங்கால் ஒசியும் இடை இனமான்–தொட்டால் ஒடியும்படியான (மிக மெல்லிய) இடையை யுடையவளும் இளமை தங்கிய மான் போன்ற பார்வை யுள்ளவளுமான மகள்
சென்ற–நடந்துபோன
சூழ்கடம்–பரந்த பாலைநிலம். (எப்படிப்பட்டதென்னில்)
கொடு கால் சிலையர்–வளைந்த விற்கழுந்தை யுடையவர்களும்
நிரை கோள் உழவர்–பசுக்கூட்டங்களைக் கவர்ந்து கொள்வதையே தொழிலாக வுடையவர்களும்
கொலையில் வெய்ய–கொலைத் தொழிலில் கொடியவர்களும்
சுடு கால்–நடை விரைந்த கால்களை யுடையவர்களுமாகிய
இளைஞர்–இளைவீரர்களது
துடி–பறைகள்
படும்–ஒலித்தலாகிற
கவ்வைத்து–ஆரவாரமுடையது.

அருவினையேன்-நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற-தொடுங்கால் ஓசியும் இடை இள மான் சென்ற சூழ் கடமே
கொடும் காற் சிலையர் நிறை கோள் உழவர் கொலையில் வெய்ய-கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து -என்று அந்வயம்
ஸூ குமாரமான இவள் கொடிதான் வழியிலே நடந்து செல்கிறாள் என்று வயிறு எரிந்து திருத் தாயார் பேசுகிறாள்
நிரை கோள் உழவர்-ஜீவன உபாய விருத்திகள் உடையவர் -பசுக்களை ஹிம்சிப்பதை தொழிலாக உடையவர்
சூழ் கடம் -சூழ்ச்சியை யுடைய வழி -வெம்மையால் துயர் விளைத்தல்
துடி -பாலை நிலப் பறை / கண்ணன் நீண் மலர் பாதம் –உலகளந்தான் திருவடி -அன்பர் மனசில் சேர்ந்த திருவடி என்றுமாம் –
ஸ்வாபதேசம் –இள மான் -பருவத்தையும் பெண்மையும் -அடிமை பூண்ட விசேஷ ஆழ்வார் பக்தி தொடுங்கால் ஓசியும் இடை–வைராக்யத்தின் முதிர்ச்சி
-இடை அழகு ஒன்றும் பொறாத வைராக்யம் –
நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற-பல பிறப்புக்களில் தவம் ஞானம் யோகம் இவற்றால்
தீவினை ஒழிந்தால் அல்லது இவர் நம்மவர் என்று அபிமானிக்க மாட்டார் -தமக்கு சித்தித்த அருமையை சொன்னபடி
சென்ற சூழ் கடமே-சம்சாரம் ஆகிய பெரும் காடு
மேல் எல்லாம் ஆழ்வார் இருள் தரும் மா ஞாலத்தில் கிடந்தது துடிப்பதை அந்யாபதே சத்தால் அருளிச் செய்கிறார் –

————————————————————————–

கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்
குடமாடி யிம் மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்த
நடமாடிய பிரான் உரு ஒத்தன நீலங்களே -38-

பதவுரை

கடன் ஆயினகள் கழித்து–காடுகளாகவுள்ள வற்றைக் கடந்து ஒழித்து
கடம் ஆயின புக்கு–தடாகங்களாக வுள்ளவற்றில் பிரவேசித்து (அங்கு)
தம் கால் வன்மையால்–தமது கால்களின் வலிமையால்
பல நாள்–அனேக காலம்
நீர் நிலை நின்ற–நீரிலே நீங்காது நின்று செய்த
தவம் இது கொல்–இத் தவத்தினாலேயோ
நீலங்கள்–நீலோற்பல மலர்கள்–கரு நெய்தல்கள்
குடம் ஆடி–(கிருஷ்ணாவதாரத்தில்) குடக் கூத்தாடினவனும்
(த்ரிவிக்ரமாவதாரத்தில்)
இ மண்ணும்–இந்த மண்ணுவகமும்
விண்ணும்–விண்ணுலகமும்
குலுங்க–நெகிழும்படி
உலகு–உலகங்களை
அளந்து–அளவிட்டு
நடம் ஆடிய–(இங்ஙனம்) திருவிளையாடல் செய்தருளினவனுமான
பெருமான்–எம்பெருமானுடைய
உரு ஒத்தன–திருமேனி நிறம்போன்ற நிறம் பெற்றன.

போலி கண்டு மகிழ்ந்து அருளிச் செய்யும் பாசுரம் -போலி கண்டு மகிழ்வதும் உண்டு -வருந்துவதும் உண்டே –
பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற காவி மலர் என்றும் காண் தோறும் பாவியேன் மெல்லாவி மெய் மிகவே பூரிக்கும்
அவ்வவை எல்லாம் பிரான் உருவே என்று -பெரிய திருவந்தாதி
ஒக்கும் அம்மான் உருவம் என்று உள்ளம் குழைந்து நாள் நாளும் தொக்க மேகப் பல் குழாங்கள் காணும் தோறும் தொலைவன் நான் -திருவாய் -8-5-8-
பைம்பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கரு விளை காள் வம்பக் களங்கனிகாள் வண்ணப் பூவை நறு மலர்காள்
ஐம் பெரும் பாதகர்காள் அணி மாலிருஞ்சோலை நின்ற எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கு என் செய்வதுவே -நாச் திரு -9-4-
கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்-தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்-கருங்குவளைகள்
காடுகளை இடம் கொள்ளாமல் நீர் நிலைகளை கொண்டமையால் தவப்பயன் என்கிறார் -நீண்ட நாள் அனுபவித்து கழிக்கும் கடன்களை தவிர்த்தவாறு
இம் மண்ணும் விண்ணும் குலுங்க -குடமாடி -உலகு அளந்து நடமாடிய பெருமான் -விளையாட்டாகச் செய்தமை தோன்ற
-வாமனனாய்ச் செய்த கூத்துக்கள் காண்டுமே –
இம் மண்ணும் விண்ணும் குலுங்க-மனம் இளகும் படி -நடுங்கும் படி அன்று -சம்கார காரணன் ந்ருத்யம் ஆகில் இறே லோகம் நடுங்கிற்று என்னாலாவது –
அங்கன் அன்றிக்கே -லோகம் அடைய அச் செயலுக்கு நெஞ்சு உளுக்கின படி -புஷ்ப்பம் போன்ற திருவடி அன்றோ –
ஸ்வா பதேசம் -ஆழ்வார் முக்தர்கள் ஸாரூப்யம் பெற்றதை சாஷாத் கரித்து-அவர்கள் இடைவிடா முயற்சியின் பலன் –தன் கால் வன்மை-என்றும்
பல நாள்-தடமாயின புகுதல் -மரகத மணித் தடாகம் போன்றவன் இடம் ஈடுபட்டு
முக்தரை நீல மலர் என்றது யாவரும் மகிழ்ந்து சிராஸ் மேல் கொள்ளும் படியான சிறப்புக்கும் மேன்மைக்கும் முக மலர்ச்சிக்கும் ஆம் –

————————————————————————–

நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம்கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே -39-

பதவுரை

நீலம்–நீலமணிமயமான
தடவரை மேல்–பெரியதொரு மலையின் மேலுள்ள
புண்டரீகம் நெடு: தடங்கல் போல பொலிந்து–பெரிய செந்தாமரைப்பூப் பொய்கைகள் போல விளங்குகின்றவைகளும்
எமக்கு எல்லாத இடத்தவும்–எமக்குக் காணுமிடந்தோறும் தோன்றுகின்றவை யுமாயுள்ளவை
(எவையென்னில்)
பொங்கு முந்நீர்–கிளர்கிற கடல்சூழ்ந்த மண்ணுலகத்துக்குத் தலைவனும்
விசும்புக்கும் பிரான்–விண்ணுலகத்துக்குத் தலைவனும்
மற்றும் நல்லோர்பிரான்–மற்றுமுள்ளவர் யாவர்க்கும் தலைவனும்
கோலம் கரிய பிரான்–திருமேனி நிறம் கறுத்திருக்கப் பெற்ற பிரபுவுமான
எம்பிரான்–எம்பெருமானுடைய
கண்ணின்–திருக்கண்களினுடைய
கோலங்களே–அழகுகளேயாம்.

நீல ரத்னமயமான மலை மேலே பெரிய தாமரைத் தடாகங்கள் போல உள்ள திருக் கண்களில் ஈடு பட்டு அருளிச் செய்கிறார்
திருக் கண்களின் அழகில் ஈடுபட்டார்க்கு மற்ற எவையும் பொருளாகாது தோன்றாதே –கோலங்களே-
தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார் ஊழ் கொண்ட சமயத்தன்னான் உருவு கண்டாரை ஓத்தார் –
இனி ஏவகாரத்தை -இரக்கமாக கொண்டு கண்ணுக்கு புலப்படும் வடிவு கைகளால் தழுவ எட்டாமல் வருந்துகின்ற படி யாகவுமாம்
ஞாலம் –லீலா விபூதி / விசும்பு -நித்ய விபூதி –/ மற்றும் நல்லோர் -முமுஷுக்கள் /
அன்றி தேவ லோகம் நித்ய முக்தர் -என்பதை விசும்பும் மற்றும் நல்லோர்
ஸ்வாபதேசம் –-அவனால் காட்டக் கண்டு அனுபவித்த திருக்கண் அழகை ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆழ்வார் அருளிச் செய்கிறார்
ஏழையராவி உண்ணும் இணைக் கூற்றாங்கொலோ அறியேன் ஆழி யம் கண்ண பிரான் திருக் கங்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோற்றும் காண்டீர் தோழியர்கள் அன்னைமீர் என் செய்கேன் துயராட்டியேனே
மிளிர்ச்சி குளிர்ச்சி மலர்ச்சி பெருமை செம்மை –கோலங்களே
கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப் பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே
எமக்கு எல்லா இடத்தவும் -நின்று தோன்றி கண்ணுள் நீங்கா என் நெஞ்சுள்ளும் நீங்காவே போலே -தம் திரு உள்ளம் அழிந்த படி சொல்லிற்று –

————————————————————————–

கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய குழாம் விரிந்த
நீல கங்குல் களிறு எல்லாம் நிரைந்தன நேரிழையீர்
ஞால பொன் மாதின் மணாளன் றுழாய் நாங்கள் குழல் சூழற்க்கே
ஏலப் புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று கொலோ -40–

பதவுரை

கோலம்–அலங்காரத்தையுடைய
பகல்–ஸூர்யனாகிய
களிறு ஒன்று–ஒப்பில்லாததொரு யானை
கல் புய்ய–அஸ்தமன பர்வதத்தில் மறைய,
குழாம் விரிந்த–திரளாகப் பரந்த
நீலம்–நீலநிறத்தையுடை
கங்குல்–இரவாகிய
களிறு எல்லாம்–யானைகளெல்லாம்
நிரைந்தன–அடைவே எதிரில் வந்து சேர்ந்தன.
நேர் இழையீர்–தகுதியான ஆபரணங்களை யுடையவர்களே!
ஞாலம்–பூ தேவிக்கும்
பொன் மாதின்–ஸ்ரீ தேவிக்கும்
மணாளன்–நாயகனான எம்பெருமான்
துழாய்–(தனது) திருத்துழாய் மாலையை
நங்கள் சூழ் சூழற்கே–எமது அடர்ந்த தலை மயிரிலே
ஏல புனைந்து–தகுதியாகச் சூட்ட
என்னைமார்–எமது தாய்மார்
எம்மை நோக்குவது–என்னைப் பார்ப்பது
என்று கொலோ–என்றைக்கோ?

சூர்யன் யானை அஸ்தமிக்க இருள் பொழுது வர -யானைக் கூட்டங்கள் வர -விரக விசனம் அஸஹ்யமாய் இருக்கையாலே
மிதுன எம்பெருமான் திருத் துழாய் சூடுமாறு அன்னைமார் என்று அருள் செய்வார்கள்
மற்று ஒருவருக்கு என்னைப் பேசல் ஓட்டேன் மாலிருஞ்சோலை எம்மாயர்க்கு அல்லால் -கொற்றவனுக்கு இவளாம் என்று எண்ணி-கொடுமின்கள் கொடீராகில் கோழம்புமே-போலே
கோல பகல் களிறு ஓன்று-– உத்தம ஜாதி யானை இயற்க்கையிலே உத்தம செம்புள்ளி லக்ஷணம் கொண்டும்
செயற்கையாக செந்நிற முகப்படாம் அலங்காரம் கொண்டு இருக்குமே -பகல் -லக்ஷனையால் சூரியன் -ஆறி இருக்க பட்ட காலம் என்பதால் கோலப் பகல் –
இருட்சியாலும் திரட்சியாலும் -களிறு எல்லாம் – நிரைந்தன-அணி வகுத்து ஏறுமா போலே -நிரந்தன-கூடின -என்ற பாட பேதம் –
ஞால பொன் மாதின் மணாளன்–ஞால மாது -பொன் மாது -இன் மணாளன் -மனத்துக்கு இனிய மணாளன்
நில மகள் திரு மகள் போன்ற அனுபவம் இழந்தேன்- உரித்தாக இருந்தாலும் -என்கிறாள்
ஸ்வாபதேசம் -எம்பெருமான் பிரசாதத்துக்கு ஆளாம்படி கால விளம்பம் செய்வதே
கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய-பக்தி மேலிட்டு செவ்வியதான விவேக பிரகாசம் மறையும் படியாக
குழாம் விரிந்த-நீல கங்குல் களிறு எல்லாம் நிரைந்தன-மோஹ அந்தகாரம் மிக மேலிட்டது
என்னைமார்-பகவத் பக்தர்களில் தம்மிலும் மூத்தவரை / நேரிழையீர்-ஆத்ம குணங்கள் நிறைந்த -ஞான வைராக்ய பூஷணம்

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: