திரு விருத்தம் -36-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை
நன்மைகள் உள்ள தத் தலையாலே என்று இருக்கையும் -தீமைகள் உள்ளது நம் தலையாலே என்று இருக்கையும்-
-ஸ்ரீ ஜனகராஜன் திரு மகளுக்கும் நம்மாழ்வாருக்கு ஸ்வரூபம் –
இப்படி அத்தலை அல்லது அறியா இருக்கச் செய்தேயும் இவனுடைய ரக்ஷகத்வத்திலே அதி சங்கை பண்ணும் படிக்கு
ஈடாகப் பிறந்த தசா விபாகத்தைச் சொல்லுகிறது –
ஏஷை வாசம் சதே லங்காம் ஸ்வே நாநீகே நமர்திதும் -என்று முதலிகள் -நான் அழிக்க நான் அழிக்க-என்று
சொல்லுமா போலே -வாடையும் ராத்ரியும்-நான் நான் என்று நலிகிற படி –

துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தராது பெயரா
எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –36–

பாசுரம் -36-துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தார் -துறையடைவு-தோழி தலைவனின் கொடுமையைக் கூறல் –ஆடி ஆடி அகம் கரைந்து -2-4-

துழா நெடும் சூழ் இருள் என்று –இருள் துழாவிப் கொண்டு வருகிறபடி சத்தையை அழித்துக் கொண்டு வருகிற படி –
பதார்த்தங்களைத் துழாவிக் கொண்டு வருகிறபடி என்றுமாம் -பற்றுகிற இடம் விடாதே மேல் விழுந்து பற்றுகிற படி –
சூழ் இருள்-ஓர் அருகே ஒதுங்க என்றாலும் ஒண்ணாத படி சூழுத்துக் கொண்டு வாரா நின்றது -தீர்க்கயாமா த்ரியாமா-என்று இ றே பிரிந்தார் எல்லார்க்கும் வார்த்தை –
இருள் என்று -வருகிற போது -சன்யாசியாய் கிட்டினவாறே ராவணன் ஆனால் போலே
தம் தண் தராது பெயரா -தன் தோளில் இட்ட திருத் துழாய் மாலையை யாசைப்பட்ட இத்தைக் கொண்டு –
எழா நெடு வூழி–பேராத கல்பம் -மலையாளர் வளைப்பு போலே வைத்த கால் வாங்காதே இருக்கிறபடி
எழுந்த-தோற்றின -சம்வர்த்த பிரளய கல்ப என்னும் படியே பிரளயமாய்க் கொண்டு பெருகா நின்றது-
-தயமா நமநா -என்று சர்வேஸ்வரன் தயை பண்ணின வாறே -அந்த பிரளயத்துக்கு முடிவு உண்டு
-அவன் பக்கல் கிருபை இல்லாமையால் இப்பிரளயத்துக்கு முடிவு இல்லை
விக்காலத்தும்–ஸீ தாதா வேண் யுத்க்ரதநம் க்ருஹீத்வா -என்று பிராட்டி தன் திருக் குழலை சிம்சுபா வ்ருக்ஷத்திலே
பிணைக்கப் புக்க தசையாய் இ றே இருக்கிறது
ஈங்கு இவளோ -இப்படிப் பட்ட இவள் -அவர்களையும் அவர்கள் தசையும் போலேயோ-இவளும் இவள் தசையும்
-அவர்கள் அங்கு கரண களேபர விதுரராய் இ றே இருப்பது -இங்கு இவள் சத்தையைப் பற்றி நலிகிற படி –
அங்கு பிரகிருதி அளவிலே -இங்கு ஆத்மா அளவிலே -அங்கு நீர் பிரளயம் -இங்கு ராத்திரி பிரளயம்
-மூர்த்தமான ஜலம் மூர்த்தமான உடம்பை அழிக்கிறது அங்கு -இங்கு அமூர்த்தமான ராத்திரி அமூர்த்தமான ஆத்மாவை அழியா நின்றது
-அங்கு அவற்றினுடைய ஆபத்து தான் அறிந்ததுவே -இங்கு ஆபத்தையும் அறிந்து ரக்ஷக அபேக்ஷையும் உண்டாய் இரா நின்றது
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார்
வழுவாத நெடும் துன்பத்தவள் என்று இரங்குகிறிலர்-துக் கேந புபுதே ஸீதாம்-திருவடி இவள் தாபம் கண்டு பிராட்டி என்று
அறியாதாப் போலே அறிதல் ஒழிதல் செய்யும் அத்தனை இ றே -கர்மம் அனுபவ விநாஸ்யமாய் இருக்கும் -இது அனுபவிக்க அனுபவிக்க வர்த்தியா நிற்கும்
-பகவத் ருசி அடியாக வருகிற துக்கமாகையாலே -பகவத் ருசி மாறுவது சைதன்யம் இல்லையாதல் -விலக்ஷணம் அன்றியிலே ஒழிதல் செய்யில் இ றே
-ஹேய ப்ரத்ய நீகரான தமக்கு தம்மை உகந்தாருடைய ஹே யத்தையும் போக்கிக் கொண்டு அருள வேண்டாவோ
-பிரணயித்வம் வேண்டாவாகில் ஸ்வரூபமும் வேண்டாவோ -ஆபத்து நிமித்தமாக தாம் இரங்காது ஒழி கைக்கு பரதந்த்ரரோ
-எங்களுக்குப் புறப்படில் குற்றம் -தங்களுக்கு புறப்படாது ஒழி யில் குற்றம் -வரில் எங்கள் சேஷத்வம் அழியும்
-வராது ஒழி யில் தம்முனைய சேஷித்வம் அழியும் -சேஷியைக் குறித்து சேஷ பூதன் அதிசயத்தை விளைக்கக் கடவன் இ றே-
பூர்ண விஷயத்துக்கு அதிசயத்தை நினைக்கையாவது -ஸ் வரக்ஷணத்துக்கு புறப்படாது ஒழி யுமது -வைதர்ம யன்நேஹ வித்யதே -என்னும் படியே
பெருமாள் தோள் வலியை நினைத்த படியால் சர்ப்பத்தின் வாயிலே புக்கால் போலே ராவண சந்நிதியில் இருந்து -த்வன் நீச சசவத் ஸ்ம்ருத-என்று
சசத்தோடு உன்னோடு வாசி என் என்று சொல்லக் கடவள் இப்போது சர்வேஸ்வரனுடைய ரக்ஷையை
அதி சங்கை பண்ண வேண்டும் படி காணும் ஸ்வரூப விபரியாஸம் இருந்த படி -இவளுக்கு அவன் பக்கல் குண ஞானமே காணும் உள்ளது
-ஸ்வரூப ஞானம் இல்லை -ஸ்வரூப ஞானம் உண்டாகில் அத்தலை பட்டதும் அறியாளோ – அத்தலை -நைவ தம் சாந்ந மஸகான்ன-ஆயிறே கிடக்கிறது
-த்வத் கதே நாந்தராத்மனா -என்னும்படியே குளப்படி கலக்கினால் போலே அன்று இ றே-கடல் கலங்கும் படி
-அத்தலை ஊர்த்வம் மாசான்ன ஜீவிஷ்யே -என்று இருந்தால் -இத்தலை -நஜீவேயம் க்ஷணம் அபி -என்று இ றே இருப்பது
-இரண்டு தலையும் அந்யோன்யம் அபேக்ஷிதமாய் இ றே இருப்பது
இன்றாக நாளையாக இத்யாதி –நான்முகன் -7-நின் அருள் என்பாலதே-உன் கிருபை என் பக்கல் அதே -அதில் சந்தேகம் இல்லை –
நன்றாக நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே–சேஷ பூதனாய் உன்னை ஒழிய ஸ்திதி இல்லாமையால் -உனக்கு சேஷ பூதனை ஒழிய
சேஷித்வம் இல்லாமையால் இரண்டுக்கும் அடி இது தான் என்கிறது –
நாற்றங்காலை ஒழிந்த நாராயணன் இல்லாமையால் -நாராயணன் என்று ஸ்வரூபத்தையும் குணத்தையும் சொல்லுகிறது
-குறைவாளனை ஒழிய நிறைவாளனாக மாட்டான் -சேஷ பூதனை ஒழிய சேஷியாக மாட்டான் –
இரங்கார் -வாராது ஒழிந்தால் -பூசுவனவும் புலர்த்துவனவும் இரட்டிக்க வேணுமோ
அம்மனோ -புலி என்னுமா போலே -ஸூ ஹ்ருதம் சர்வ பூதா நாம் -என்கிற தத்துவத்தை அம்மே என்று அஞ்ச வேண்டும்படி
இவளுக்குப் பிறந்த ஸ்வரூப அந்யதா பாவம்-ஆனந்தோ ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதத்ஸ்ஸன-என்று
புத்தி பூர்வம் பண்ணின பாபத்துக்கு அஞ்ச வேண்டாத படி இருக்க -ப்ரஹ்மத்தினுடைய ஆனந்தத்தை அறிந்தவனுக்கு ப்ரஹ்மம் தன்னையே
அறியச் செய்தேயும்-அஞ்ச வேண்டும்படி இ றே இவள் தசை – என்று க்ரூர்யத்தைச் சொல்லுகிறது -ஆசை என்றுமாம் –
இலங்கைக் -குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –ஒருத்திக்காக கடலை யடைத்து-இலங்கையை ராமன் என்றும் லஷ்மணன் என்றும்
எழுத்து வெட்டின அம்புகளை புக விட்டுகே குட்டிச் சுவரும் மட்டைத் தெங்குமாக்கி மூலையடி போகப் பண்ணின இந்த உபகாரகனுடைய
இந்த நீர்மை எல்லாம் எங்கே குடி போயிற்றோ -என்று எம்பார் அருளிச் செய்தார் –
இதுவும் அழகியது ஒன்றாய் உண்டாய் இருக்கலாகாது என்று அ ஸூ யையாலே அழித்தான் அத்தனை காண் –
ஒருத்திக்காக உதவினன் அல்லன் காண் -என்பர் திருமலை நம்பி –

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: