திரு விருத்தம் -32-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
கீழில் பாட்டில் -மேகங்களே என்னுடைய தூது வாக்கியத்தை கேட்டுப் போய்ச் சொல்லு கிறிகோள்-உங்கள் திருவடிகளை
என் தலையிலே வைக்கிறிலிகோள் -என்று சொன்ன படியே இவை செய்ய மாட்டி கோளாகில்-இங்கே வந்து ஒரு வார்த்தை
சொல்லிப் போங்கோள் என்ன -எங்களுக்குப் பெருங்கூட்டம் போகா நின்றது -துணை தப்பும் -என்றனவாகக் கொண்டு
அங்கே நின்றாகிலும் ஒரு வார்த்தை சொல்லிப் போங்கோள் -என்கிறாள் –

மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி யொக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருந்துத்தவ மா மருள் பெற்றதே –32-

பாசுரம் -32-மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி -துறையடைவு-தலைவி போலி கண்டு பேசுதல் -வைகல் பூம் கழிவாய் -6-1-

மேகங்களோ -அவற்றைப் பார்த்து தன் ஆற்றாமை எல்லாம் தோற்றக் கூப்பிடுகிறாள் -தன்னுடைய ஆர்த்த த்வனி கேட்டால்
கால் நடை தந்து போவார் இல்லை என்று -இவை போகிறது இந்த த்வனி கேளாமை என்னுமத்தாலே அவற்றுக்கு கேட்கும் அளவும் கூப்பிடுகிறாள்
-தூராதாவாஹனம் பண்ணுகிறாள்
மேகங்கள் சிறிதிடம் போய்ச் சேர்த்து நின்றபடியைக் கண்டு குரல் கேட்டு நின்றதாகக் கொண்டு
உரையீர் -என்கிறாள் –கீழ்ச் சொன்னவை எல்லாம் செய்யாது இருக்கச் செய்தேயும் -உரையீர் -என்கிறது -தன் ஆசையில் குறை இல்லாமை
-அவை ஒரு வார்த்தை சொல்லுமாகில் சத்தை தரிக்கும் என்று இருக்கிறாள் –
வாய் பேச மாட்டாத அசேதனமும் கூட வாய் பேச வேண்டும்படியான தசையைச் சொல்லுகிறாள் –
திருமால் திருமேனி யொக்கும் -யோகங்கள் உங்களுக்கு –பரார்த்தமாய் விலக்ஷணமாய் இருக்கிற இவ்வடிவு எங்கே பெற்றி கோள்
-அவனும் அவளும் பிரிந்து வெளுத்த வடிவு இன்றியிலே அவனும் அவளுமாக கலந்து புகர்த்த வடிவு எங்கே பெற்றி கோள்
-நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்னுமதுக்கு அவ்வருகான வடிவு எங்கே பெற்றி கோள்
-அவர்களுக்கு உள்ளது ப்ரஷீணா சேஷ பாவமே இ றே என்று அத்தையும் வியாவர்த்திக்கிறது -இவ்வடிவைப் பெறுகைக்கு
சாதன அனுஷ்டானம் பண்ணுகைக்கு அதிகார சம்பத்தில் எங்கே பெற்றி கோள் –
எவ்வாறு பெற்றீர் -நாமும் பிரணயித்தவத்தாலே பெற விராதே சாதன அனுஷ்டானம் பண்ண அமையும் அமையும் அத்தனை இனி -என்கிறாள் –
உயிர் அளிப்பான் -மாகங்கள் எல்லாம் திரிந்து -விஷய விபாகம் இன்றிக்கே-சர்வாத்ம ரக்ஷணத்துக்காக -லோகம் எங்கும் திரிந்து
-பஹு வசனம் பிரதேசா நியமத்தைப் பற்ற
நன்னீர் சுமந்து -திரு வீதியிலே செறிந்து சேர்ந்து ஸ்ரமஹரமான தண்ணீரைக் கொண்டு நின்று –
-ஏலக் குழம்பு பேலக் குழம்பு -என்பாரைப் போலே கடலில் உப்பு நீரைப் பருகி அம்ருத ஜலம் ஆக்கிக் கொண்டு
நுந்தம் -ஆகங்கள் நோவ வருந்துத்தவ மா மருள் பெற்றதே –உங்கள் உடம்பு நோவ வருந்திப் பண்ணினான் தபஸின் பலமோ
-இவ்வடிவு எங்கனே யாகப் பெற்றது –

———————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: